| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3240 | திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி யருளிச்செயல் காண்மின். – “உன்னுடைய திருக் கண்களினுடையவும் திருப் பவளத்தினுடையவும் அழகு இருந்தபடி என்!, கண்டும் கேட்டுமறியாத்தொருபடியான இவ்வழகு திருப்பாற்கடலிலே அம்ருத மதந ஸமயத்திலே அவதிர்ணையான பெரிய பிராட்டியோடு அன்று கலந்த கல்வியாலும் பிறந்ததில்லை, இப்படி பெரிய பிராட்டியிற்காட்டிலும் உனக்கு அபிமதைகளாய் உன்னை புஜிக்கப் பிறந்தவர்கள் ஆரோ வென்கிறாள்“ என்று.) 3 | போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின் செய்ய வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள்; வேயிருந் தடந் தோளினார் இத் திருவருள் பெறுவார் எவர் கொல், மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3 | இத்திரு அருள் பெறுவார்,Ithiru Arul Peruvaar - இப்படிப்பட்ட திருவருளைப் பெறுமவர்களான |
| 3722 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (நெஞ்சே! எம்பெருமான் இன்று நமக்குப் பேரருள் செய்யக் கோலா நின்றான் அதுவும் நாம் விதித்தபடியே செய்யவேணுமென்று நம்முடைய நியமனத்தை யெதிரிபாரா நின்றான்; அந்தோ! இஃது என்ன குணம்! இக்குணத்தையநுபவிக்க இந்நிலவுலகில் ஆளில்லாமையாலே நாம் திருநாட்டிலேபோய் மூதுவரோடு கூடியநுவிக்கலாமா? வருகிறாயா? என்று தம் திருவுள்ளத்தோடே உசாவுகிறார்.) 1 | அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1 | அருள் பெறுவார் அடியார் தம்,Arul peruvaar adiyaar tham - எம்பெருமானருளைப் பெறுவதையே நிரூபமாகவுடைய பாகவதர்களுக்கு நமது விதி வகையே,Namadu vidhi vagaiyae - நாம் வித்ததபடியே யாம்; (ஆன பின்பு) இனி,Ini - இனியொருநாளும் அடியனேற்கு,Adiyanekku - அடிமைப் பட்டிருக்கு மெனக்கு இருள் தருமா ஞாலத்துள் பிறவி,Irul tharumaa nyaalaththul piravi - இவ்விருள்தருமா ஞாலத்திற் பிறப்பை யான் வேண்டேன் நான் இச்சிக்கமாட்டேன் ஆழியான்,Aazhiyaan - திருவாழியை யுடையனான எம்பெருமான் மட நெஞ்சே,Mada nenjae - சபலமான மனமே! அருள் தருவான் அமைகின்றான்,Arul tharuvaan amaikindraan - க்ருபை பண்ணுவானாகப் பொருந்தியிரா நின்றான்; நீ மருள் ஒழி,Nee marul ozhi - இங்கேயிருந்து அநுபவிக்க வேணுமென்கிற வொரு மருளைத் தவிரப்பார் அது,Adhu - அப்படி க்ருபை பண்ணுவது வாட்டாற்றான் அடி வணங்கு,Vaattattraan adi vanangu - திருவாட்டாற்றொம் பெருமானது திருவடிகளை வணங்கு. |
| 3723 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இப்பாட்டும் நெஞ்சோடே ஸம்வாதமாயிருக்கிறது.) 2 | வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப் பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2 | மாஞாலம்பிறப்பு அறுப்பான்,Maanjaalampirappu aruppaan - இருள் தருமா ஞாலத்தில் ஜன்ம ஸம்பந்தத்தைத் தொலைப்பதற்காக பழ வினைகள் பற்று அறுத்து,Pazha vinaihal patru aruththu - அவித்யை கருமம் முதலான அநாதியான தொல்லைகளை யறுத்து வாட்டாற்றான் அடி வணங்கி,Vaattattraan adi vanangi - திருவாட்டாற் றெம்பெருமானுடைய திருவடிகளை வணங்கி நாட்டாரோடு இயல்வுஒழிந்து,Naattaarodu iyalvuzhinthu - உலகத்தாரோடு ஸஹவாஸத்தையும் தவிர்த்து நாரணனை,Naaranana - ஸ்ரீமந் நாராயணனை நண்ணினம்,Nanninam - கிட்டப்பெற்றோம் கேசவன் எம்பெருமானை,Kesavan emperumaanai - கேசவனான பெருமானை பாட்டு ஆயபலபாடி,Paatu aayapadapaadi - பாட்டானவை பலவும்பாடி மடநெஞ்சே கேட்டாயே,Mada nenjae kaettaiye - நெஞ்சே! பெற்ற பேற்றின் கனத்தைக் கண்டாயே. |
| 3724 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இப்பாட்டும் நெஞ்சோடே கொண்டாடிச் சொல்லுகிறது. நம்முடைய பேற்றுக்கு அவன் விரையும்படியாயிற்றே! இப்படியாகுமென்று நாம் கனவிலாவது எண்ணினதுண்டோ? நாமெண்ணினதொன்று, நிகழ்ந்தது மற்றொன்றாயிற்றே! இதுவென்! என்று வியக்கிறார்.) 3 | நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3 | என் நெஞ்சே,En nenjae - என்னுடைய அனுபவத்திற்கு வாய்த்தநெஞ்சே! வளம் மிக்க வாட்டாற்றான் வந்து,Valam mikka vaattattraan vandhu - திருக்கல்யாண குணம் ருத்தி பொருந்திய திருவாட்டாற்றெம்பெருமான் தானே வந்து பல நாமங்கள் சொல்லி,Pala naamangal solli - பல திருநாமங்களையுஞ் சொல்லி இன்று விதிவகையே விண் உலகம் தருவான் ஆய்,Inru vidhi vagaiyae vin ulagam tharuvaan aay - இப்போது நமது நியமனப் படியே திருநாடு தருபவனாகி நாராயணனை நண்ணினம்,Naarayananai nanninam - பரமபந்துவான ஸ்ரீமத் நாராயணனைக் கிட்டப்பெற்றோம் விரைகின்றான்,Virainkinraan - துர்தனாயிரா நின்றான் இக்கருமங்கள்,Ikkaarumangal - இக்காரியங்கள் மண் உலகில்,Man ulakil innilaththil - இந்நிலத்திலே எண்ணின ஆறு ஆகா,Ennin aaru aakaa - நாம் எண்ணினபடிக்கு மேற்பட்டு விட்டதே. |
| 3725 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (கீழ் முதற்பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும் “விதிவகையே” என்று, எம்பெருமான் நியாமகனாயிருக்கு மிருப்புத்தவிர்ந்து நியாமகனா யிருக்கும்படியை யருளிச்செய்தாரே, ஸர்வேச்வரனிடத்தில் இது ஸம்பவிக்குமோ வென்று சிலர்சங்கிப்பர்களென்று கருதி அந்த சங்கைக்குப் பாரிஹாரமாக இப்பாட்டு அருளிச் செய்கிறபடி.) 4 | என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான் நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே–10-6-4 | நல் நெஞ்சே!,Nal nenjae! - நல்ல மனமே! படைதொட்டான்,Padaiththottan - ஆயுதமெடுத்த பஷபாதியாய் வல் நெஞ்சத்து இரணியனை,Val nenjaththu iraniyanai - வலிய நெஞ்சையுடையனான இரணியாசுரனது நம்பெருமான்,Namberumaan - நமக்கு ஸ்வாமியானவன் மார்பு இடந்த,Maarpu idandha - மார்பை இருபிளவாக்கி முடித்தவனாய் என் நெஞ்சத்துள் இருந்து,En nenjaththul irundhu - என்னெஞ்சினுள்ளே பொருத்தியிருந்து இங்கு,Ingu - இவ்விருப்பிலே வாட்டாற்றான்,Vaattattraan - திருவாட்டாற்றிலே ஸன்னிதி பண்ணியிருப்பவனாய் இரு தமிழ் நூல் இவை,Iru thamizh nool ivai - பெரிய தமிழ் நூலாகிய இத்திருவாய்மொழியை மன் அஞ்ச,Man anja - அரசர்களெல்லாரும் அஞ்சும்படி மொழிந்து தானே யருளிச்செய்து பாரதத்து,Bharathaththil - (அவ்வளவோடு நில்லாமல்) பாரதப் போரிலே பாண்டவர்க்கு ஆய்,Pandavarkku aay - தன்னடியர்களான பாண்டவர்களுக்காக நமக்கு அருள் தான் செய்வானே,Namakku arul thaan seivaane - நமக்கு மேன்மேலு முதவிகளைச் செய்வானாயிராநின்றான். |
| 3726 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (அர்ச்சிராதி மார்க்கத்தாலே போகப் பெறுகை தமக்கு ஸமீபித்து விட்டதென்பதை மிகுந்த களிப்புடன் கூறுகிறார்.) 5 | வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே–10-6-5 | வான் ஏற வழி தந்த,Vaan era vazhi thantha - அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக விருக்கிற பணி வகையே,Pani vakaiye - பண்டு பணித்திருந்தபடியே வாட்டாற்றான்,Vaataatraan - திருவாட்டாற்றெம்பெருமான் நான் ஏற பெறுகின்றேன்,Naan era perugindraen - நான் மேலே செல்லப் பெறாநின்றேன். நெஞ்சே நரகத்தை நகு,Nenjae naragaththai nagu - மனமே! ஸம்ஸார பூமியை நோக்கிச் சிரித்திடுசெழு பறவை தான் ஏறி,Sirithiduselu paravai than eri - அழகிய கருடன் மீதேறித் திரியுமவனான பெருமானுடைய தேன் ஏறு மலர்துளபம் திகழ் பாதன்,Then eru malarthulabam thigal paathan - தேன் மிகுந்த துளவமலர்விளங்கும் திருவடிகளை யுடையனாய் திரிவான தாள் இணை என் தலை மேலே,Thirivaan thaal inai en thalai maelae - உபயபாதங்கள் என் தலை மேலாயின |
| 3727 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (தாம் பெற்ற பேறுகளை ஒன்றிரண்டு மூன்றென்று எண்ணுகிறார். திருவடிகளை என் தலைமேலே வைத்தருளினான், அழகிய திருக்கண்களாலே என்னைக் குளிர நோக்கி யருளா தின்றான்; ஒருகாலும் என்னெஞ்சில் நின்றும் நிலை பேரான் – இவையன்றோ நான்பெற்ற பேறுகளென்கிறார்.) 6 | தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான் நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான் மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6 | தாள் இணைகள் தலை மேல,Thaal inaihal thalai mel - அவனது உபய பாதங்கள் எனது தலைமேலுள்ளன மலை மாடத்து வாட்டாறு,Malai maadaththu vaattaaru - மலைபோன்ற மாடங்களையுடைய திருவாட்டாற்றிலே தாமரை கண் என் அம்மான்,Thaamarai kan en ammaan - புண்டாரிகாஷனான அஸ்மத் ஸ்வாமியாய் அரவு அணைமேலான்,Aravu anaimelaan - சேஷசயனத்தின் மீது கண் வளர்ந்தருள்பவனாய் என் நெஞ்சத்து,En nenjaththu - எனது நெஞ்சிலே எம்பொழுதும் நிலை பேரான்,Empozhuthum nilai peraan - ஒரு போதும் நிலைபெயராது நிரந்தரவாஸம் செய்பவனாய் மதம்மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான்,Madammikha kolaiyaanai maruppu osiththaan - மதமிகுதியினால் கொலையிலே முயன்ற குவலயாபீட யானையின் கொம்பை முறித்தவானான பெருமானுடைய எம்பெருமான்,Namberumaan - தன்னுடைய பெருமைய எமக்குக் காட்டிக் கொடுத்தவனாய் குரை கழல்கள்,Kurai kazhalgal - வீரக்கழலினோசை பொருத்திய திருவடிகளை குறுகினம்,Kuruginam - கிட்டப் பெற்றோம். |
| 3728 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (கீழ் எட்டாம்பத்தில் குட்டநாட்டுத் திருப்புலியூரெம்பெருமானுடைய திருவருள் தமக்குப் பலித்தபடியைத் தோழிபேச்சாலே வெளியிடுமளவில் *அன்றி மற்றொருபாயமென்? இவளந்தண்டுழாய் கமழ்தல் * என்ற திருத்துழாய்ப் பரிமளம் திருமேனியிலே கமழ்வதையிட்டு நிரூபித்தாராழ்வார்; இப்போது திருவாட்டாற்றெம்பெருமானுடைய திருவருள் பலித்தபடியையும் அந்த நிரூபகத்தையிட்டே தம் வாயாலே பேசுகிறார்.) 7 | குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான் திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல் விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7 | கோவிந்தன்,Govindan - கண்ணபிரான் நம் குடி கொண்டான்,Nam kudi kondaan - (அப்படி குடி கொண்டதனால்) நம்மையே தனக்குக் குடியிருப்பாகக் கொண்டான் . திரை குழுவு கடல் புடை சூழ்,Thirai kuzhuvu kadal pudai soozh - அலைத்திரட்சியை யுடைய கடலாலே புடை சூழப் பட்டு தென் நாடு நிலதம் அன்ள,Then naadu nilatham anla - தென்னாட்டுக்குத் திலகம் போன்றிருப்பதாய் மலர்அடி மேல்,Malar adi mel - திருவடித் தாமரைகளின் மீது சாத்தின வரை குழுவு மணி மாடம்,Varai kuzhuvu mani maadam - மலைகள் திரளவிருந்தாற் போன்றுள்ள மாடங்களை யுடைத்தான விரை குழுவு நறு துளபம்,Virai kuzhuvu naru thulabam - பரிமளம் திரண்டு கமழ்கிற திருத்துழாயானது வாட்டாற்றான்,Vaattattraan - திருவாட்டாற்றி லெழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய மெய் நின்று கமழும்,Mey nindru kamazhum - என்னுடம்பிலே நிலைநின்று வாஸிக்கின்றது. |
| 3729 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (தாம்பெற்ற பேற்றின் கனத்தை யாராய்ந்தார்; அந்தோ! இப்படிப் பட்ட விஷயீகாரம் என் திறத்தேயுண்டாகுமாறு நான் என்ன ஸுக்ருதம் செய்தேன்! ஒன்றும் செய்திலேன்! அப்படியிருக்கவும் இது என்ன விலக்ஷண விஷயீகாரம்! என்று நெஞ்சு குழைகிறார்.) 8 | மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன் கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல் மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8 | மெய்நின்று கமழ்,Mey nindru kamazh - திருமேனியிலே நிலைநின்று கமழா நின்ற புனல் மை நின்ற வரை போலும் திரு உருவன்,Punal mai nindra varai polum thiru uruvan - புனலையும் அஞ்சனத்தையும் நிலை நிற்கும் மலையையு மொத்திருக்கின்ற திருவுருவத்தை யுடையனான துலபம்,Thulabam - திருத்துழாயினுடைய வாட்டாற்றாற்கு,Vaattattraarkku - திருவாட்டாற்றெம்பெருமாளுக்கு விரை ஏறு திரு முடியன்,Virai eru thiru mudiyan - பரிமளம் மிகப் பெற்ற திருமுடியை யுடையவனாய், கருதும் இடம் பொருது,Karuthum idam porudhu - திருவுள்ளம் நினைத்த விடத்தே சென்று போரை நடத்தி எந்நன்றி செய் தேன் ஆ நான்,En nandri sei then aa naan - என்ன நன்மை செய்தேனாகக் கொண்டு கை நின்ற,Kai nindra - உடனே திருக்கையிலே வந்து சேருகிற சக்கரத்தன்,Sakkarathan - திருவாழிப்படையை யுடையனாய் என் நெஞ்சில் திகழ்வது,En nenjil thigazhvadhu - அவன் எனது நெஞ்சில் விளங்குவது |
| 3730 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இகழுகைக்கு வேண்டுவனவுண்டான வென்னிடத்தில் சிறிது மிகழ்வின்றியே எப்பொழுதும் பிரியாதே யிராநின்றானே! இது என்ன வியாமோஹமென்று தம்மிலே தாம் வியக்கிறார்.) 9 | திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான் இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9 | திகழ்கின்ற திருமார்வில்,Thigazkindra thirumaarvil - விளங்குகின்ற திருமார்பிலே புள் ஊர்தி,Pul oorthi - பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு திருமங்கை தன் னோடும்,Thirumangai than nodum - பெரிய பிராட்டியாரோடுங்கூட போர் அரக்கர் குலம் கெடுத்தான்,Por arakkar kulam keduththaan - போர்லேமுயன்ற ராக்ஷஸர்களின் கூட்டங்களைத் தொலைத்த அப்பெருமான் திகழ்கின்ற திருமாலார்,Thigazkindra thirumaalar - விளங்குகின்ற லஷிமீநாதன் சேர்வு இடம்,Saervu idam - நித்யவாஸம் பண்ணுமிடம் என் நெஞ்சத்து எனது நெஞ்சிலே நண் வாட்டாறு,Nan vaattaaru - குளிர்ந்த திருவாட்டாற்றுப் பதியாம் இகழ்வு இன்றி எப்பொழுதும் பிரியாள்,Ikazhvu inri eppozhuthum priyaal - வெறுப்பின்றியே ஓகு போதும் பிரியாதேயுளன் நின்ற புகழ்,Nindra pugazh - நிலைநின்ற புகழையுடைய |
| 3731 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாதபயன் பெறலாகும்’ என்றொரு பழமொழி யுண்டாம்; அதனைத் திருவாட்டாற்றெம்பெருமான் அநுஷ்டாந பரியவஸாயி யாக்கினானென்று ஆனந்தம் பொங்கி யருளிச் செய்கிறார்.) 10 | பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான் அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே–10-6-10 | பிரியாது ஆள் செய் என்று,Priyaadhu aal sei endru - ஒருகணமும் பிரியாதிருந்து அடிமை செய்யக் கடவாயென்று அநுக்ரஹித்து ஆகம் கீண்டான்,Aagam keendaan - உடலைப் பளிந்தவனாய் (அந்த சிரமம் தீர) வாட்டாறு,Vaattaaru - திருவாட்டாற்றிலே பிறப்பு அறுத்து அற ஆள் கொண்டான்,Pirappu aruththu arra aal kondaan - ஸம்ஸாரப் பற்றைப்போக்கி மிகவும் அடிமை கொண்டவனாய் வாரி வாள் வாய் அரவு அணை மேலான்,Vaari vaal vaai aravu anai melaan - சேஷசாயியாயிருக்கு மெம் பெருமான் அன்று,Andru - முன்பொரு காலத்தில் அர் ஆகி,Ar aagi - நரசிங்க மூர்த்தியாகி இரணியனை,Iraniyanai - இரணியாசுரனுடைய பெரியார்க்கு ஆள்பட்டக்கால் பெறாத பயன் பெறும் ஆறு காட்டினள்,Periyaarkku aal pattakkaal peraadha payan perum aaru kaattinaal - பெரியவர்களுக்கு அடிமைப்பட்டால் பெறுதற்காரிய பயனையும் பெற லாகுமென்பதைக்காட்டி விட்டான் |
| 3732 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைக்குமதான இப்பாட்டில் ஆயிரத்துளிப்பத்துங் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்கிறார்; இது பயனுரைத்ததாக எங்ஙனே யாகுமென்று சிலர்சங்கிப்பர்கள்; கேண்மின்; நித்யஸூரிகள் இப்பாசுரங்களைக் கேட்பது எவ்விதமாக? என்று பார்க்க வேணும். இங்கிருந்து போரும் முக்தர்கள் சொல்ல, அவர்களது வாய்வழியே கேட்கவேணும். ஆகவே இப்பதிகம் வல்லார் நித்யஸூரிகளைக் கேட்பிக்க வல்லவராவர் என்று பயனுரைத்ததாகவே ஆயிற்று.) 11 | காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11 | தள் கனைகழல்கள் காட்டி,Thal kanaikazhalgal kaatti - தன் திருவடிகளைக் காட்டியருளி பாட்டு ஆய தமிழ் மாலை ஆயிரத்துள்,Paatu aaya thamizh maalai aayirathul - பாட்டாயிருக்கிற தமிழ்த் தொடையான அயிரத்துள் கடு நரகம் புகல் ஒழித்த,Kadu naragam pugal ozhiththa - கடுமையான ஸம்ஸாரநரக ப்ரவேசத்தை யொழித்த செவிக்கு இனிய செம் சொல் இப்பத்தும்,Sevikku iniya sem sol ippaththum - கர்ணம்ருதமான செவ்விய சொற்களினாலாகிய இப்பதிகத்தை வாட்டாறு எம்பெருமானை,Vaattaaru emperumaanai - திருவாட்டாற் றெம்பெருமானைக் குறித்து வளம் குருகூர் சடகோபன்,Valam kurukoor sadagopan - ஆழ்வார் (அருளிச்செய்த) வானவர்கள் கேட்டு ஆரா,Vaanavargal kaettu aaraa - நித்ய ஸூரிகள் முக்தர்கள் வாயிலாகக் கேட்டு திருப்தி பெறமாட்டார்கள். |