| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 137 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -இரண்டாம் திருமொழி - அரவணையாய்) (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) (கலிவிருத்தம்) 10 | ஓட வோடக் கிங்கிணிகள் ஒலிக்கு மோசைப் பாணியாலே பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாப னென்றிருந்தேன் ஆடி யாடி யசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தை யாடி ஓடி யோடிப் போய் விடாதே உத்தமா நீ முலையுணாயே–2-2-10 | ஓடஓட,Odaoda - (குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால் ஒலிக்கும்,Olikkum - சப்திக்கின்ற கிண் கிணிகள்,Kin kinigal - பாதச் சதங்கைகளினுடைய ஓசைப் பாணியாலே,Osai paaniyale - ஓசையாகிற சப்தத்தால் பாடிப் பாடி,Paadi paadi - இடைவிடாது பாடிக் கொண்டு அதனுக்கு ஏற்ற கூத்தை,Athanukku etra koothai - அப் பாட்டிற்குத் தகுந்த ஆட்டத்தை அசைந்து அசைந்திட்டு,Asaindhu asaindhittu - வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அசைந்து ஆடி ஆடி,Aadi aadi - ஆடிக் கொண்டு வருகின்றாயை,Varugindraiyai - வருகின்ற உன்னை பற்பநாபன் என்று இருந்தேன்,Parpanapan endru irundhen - (வேறோபரணம் வேண்டாதபடி) பத்மத்தை நாபியிலுடையவனென்று எண்ணி யிருந்தேன்; நீ,Nee - நீ ஆடி,Aadi - ஆடிக்கொண்டே ஓடிஓடிபோய் விடாதே,Odi odipoi vidaathe - (என் கைக்கு எட்டாதபடி) ஓடிப் போய் விடாதே முலை உணாய்.,Mulai unai - முலை உணாய். |
| 2818 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (ப்ரஹ்லாதாழ்வான் அபேக்ஷரித்த ஸமயத்திலே நரசிங்கமாய் வந்து தோன்றி உதவியருளின பெருமான் அந்தோ! எனக்கு உதவுகின்றிலனே யென்று பெண் பிள்ளை வருந்துவதாகத் திருத்தாய் சொல்லுகிறாள்.) 1 | ஆடியாடி யகம் கரைந்து இசை பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1 | இ வாள் நுதல்,e vaal nuthal - ஒளி பொருந்திய நெற்றியை யுடையளான இப்பராங்குச நாயகி ஆடி ஆடி,Aadi aadi - பலகாலும் ஆடி அகம் கரைந்து,Agam karainthu - மனமுருகி இசை பாடி பாடி,Isai paadi paadi - பகவத் கீர்த்தனங்களைப் பலகாலும்பாடி கண் நீர்மல்கி,Kan neermalgi - கண்களில் நீர்நிரம்பப் பெற்று எங்கும்,Engum - எவ்விடத்தலும நாடி நாடி,Naadi naadi - அவன் வரவைப் பலகாலும் ஆராய்ந்து பார்த்து நரசிங்கா என்று,Narasinga endru - நரசிங்கமூர்த்தியே! என்று கதறி வாடி வாடும்,Vaadi vaadum - (அவன் வரக்காணமையாலே) மிகவும் வாடுகின்றாள் |
| 2819 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (வாணனுடைய ஆயிரந்தோள்களையுந் துணித்து உகக்கும் அநிருத்தாழ்வானுக்கும் அத்தனைகாரியஞ் செய்தருளின நீர்இப்பெண்பிள்ளை திறத்தில் இரங்காதிருப்பது என்னோவென்கிறாள்.) 2 | வாணுதல் இம்மடவரல் உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக் காண நீர் இரக்கமிலீரே–2-4-2 | வாள் நுதல்,Vaal nuthal - ஒளிமிக்க நெற்றியையுடைய இ மடவரல்,e madavaral - (பராங்குசநாயகி யென்னும்) இம்மடத்தை உம்மை,Ummai - (அழகிற்சிறந்த) உம்மை காணும் ஆசையுள்,Kaanum aasaiyul - காணவேணுமென்ற ஆசையிலகப்பட்டு நைகின்றாள்,Naikindraal - சிதிலையாகின்றாள்; விறல்,Viral - வலிமையையுடைய வாணன்,Vaanan - பாணாஸசரனுடைய ஆயிரம் தோள்,Aayiram thol - ஆயிரம் புஜங்களையும் துணித்தீர்,Thuniththir - அறுத்தொழித்தவரே! உம்மை காண,Ummai kaana - (இவன்) உம்மைக்காணுமாறு நீர்இரக்கம் இலீர்,Neerirakkam ileer - நீர் தயை செய்யாமலிருக்கின்றீர் |
| 2820 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (பிரானே! நீர் ஜனகராஜன் திருமகள் திறத்திலே செய்த செயல்களை வால்மீகி போல்வார் ஸ்ரீராமாயணாதிகளாக எழுதி வைத்தமையாலன்றோ இப்பெண்பிள்ளை துடியாநின்றாள்; ஒரு பிராட்டிக்கு அத்தனை பாடுபட்டுக் காரியஞ் செய்தவர் நம்மை இப்படித் துடிக்க விட்டிருக்கிறாரே, இது நீதியோ என்று கதறாநின்றாள்- என்கிறாள் திருத்தாய். இன்று இவளை இப்படிக் கைவிட நினைத்த நீர் அன்று உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்து அத்தனை செயல்கள் செய்தது ஏதுக்கு என்கிறாள் என்னவுமாம்.) 3 | இரக்க மனத்தோடு எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3 | இரக்கம் மனத்தோடு,Irakkam manathodu - நெகிழ்ச்சியை யுடைய நெஞ்சோடு (கூடிய) இவள்,eval - இப்பெண்பிள்ளை எரி அணை,Eri anai - நெருப்போடு ஸம்பந்தப்பட்ட அரக்கும்,Arakkum - (வன்மையான) அரக்கையும் மெழுகும்,Melugum - மெழுகையும் ஒக்கும்,Okkum - ஒத்திருக்கின்றாள்; இரக்கம் எழீர்,Irakkam ezeer - (இவள் திறத்து) இரக்கம் உண்டாகப் பெறுகின்றிலீர்; அரக்கன்,Arakkan - இராவணனுடைய இலங்கை,Ilangai - லங்காபுரியை செற்றீருக்கு,Setreerukku - (ஒரு பிராட்டிக்காக) த்வம்ஸம் செய்தருளின உமக்கு இதற்கு,Idharku - இவள் திறத்திலுண்டான உபேக்ஷைக்கு என் செய்தேன்,En seydhen - என்ன பரிஹாரம் பண்ணுவேன்? |
| 2821 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (மகளே! பதாறாதே எம்பெருமான்ப்ரணயிநிகளுக்குக் காரியம் செய்வது தவறமாட்டார்; ஜனகராஜன் திருமகளுக்காகத் காரியஞ் செய்தருளினாரென்பது வாஸ்தவமே. அப்பிராட்டி எத்தனை மாதம் தனிச் சிறையிலிருந்து துவண்டாள் தெரியுமோ? பத்துமாதம் பொறுத்தன்றோ அவளுக்கும் காட்சிதந்தது; ப்ராப்திகாலம் வர வேண்டாவோ? அ வளுக்குப் போலே உனக்கும் ஒருநாளிலே காட்சி தரத் தடையிராது; *சரைஸ் துஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந” மாம்நயேத் யதிகாகுத்ஸ்த; தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று அப்பிராட்டி ஆறியிருந்தது போலவே நீயும் ஆறியிருப்பதே தகுதி; அவன் இலங்கை செற்றவன் என்பதையே நீ சொல்லிக்கொண்டிரு-என்று நான் (என் மகளைத்) தேற்றினேன்; அவளும் அப்படியே “இலங்கை செற்றவனே!” என்றே சொல்லிக் கொண்டு ஒருவாறு தரித்திருந்தவள் மீண்டும் கதறத் தொடங்கவிட்டாளென்கிறாள் திருத்தாய்.) 4 | இலங்கை செற்றவனே யென்னும் பின்னும் வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக் கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4 | இவள்,Ival - இப்பராங்குசநாயகி. இலங்கை செற்றவனே என்னும்,Ilangai setravane ennum - (என்னோடொத்த ஒருத்திக்காக) லங்காபுரியை யழித்தவனே! என்கிறாள் பின்னும்,Pinnum - அதற்குமேலும் வலம் கொள்புற் உயர்த்தாய் என்னும்,Valam kolpur uyarthai ennum - வலிமைமிக்க கருடனைக் கொடியாகக் கொண்டவனே! என்கிறாள். உள்ளம் மலங்க,Ullam malang - மனம் சுழலும்படி வெவ்வுயிர்க்கும்,Vevviyirkkum - உஷ்ணமாக மூச்சுவிடுகின்றாள்; கண் நீர்,Kan neer - கண்ணீரானது மிக,Miga - அதிகமானவாறே கலங்கி,Kalanggi - (அதனால்) அறிவுகலங்கப் பெற்று நின்று,Nindru - ஸ்தம்பித்து நின்று கைதொழும்,Kaidhozhum - அஞ்ஜலிபண்ணா நின்றாள் |
| 2822 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (பெண்பிள்ளையின் தயநீயதசையைச் சொல்லி, இந்த நிலைமையிலும் நீர் இவள் திறத்து இரங்குகின்றீலீரே! உம்முடைய தயை எங்கே போயிற்று? என்கிறாள்.) 5 | இவள் இராப் பகல் வாய் வெரீஇத் தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என தவள வண்ணர் தகவுகளே –2-4-5 | இவள்,Ival - இப் பெண்பிள்ளை இரா பகல்,Iraa pagal - இரவும் பகலும் வாய் வொரி இ,Vaai vori e - வாய்பிதற்றி தன்,Than - தன்னுடைய குவலை ஒண் கண்,Kuvalai on kan - நெய்தல் மலர்போன்றழகிய கண்களில் நீர்கொண்டாள்,Neer kondaal - நீரையுடையளானாள்; வண்டு,Vantu - வண்டுகள் திவளும்,Thivalum - படிகின்ற தண் அம் துழாய்,Than am thuzhaay - குளிர்ந்தழகிய தருத் துழாய் மாலையை கொடீர்,Kodeer - தருகின்றீரில்லை; தவளம் வண்ணா,Thavalam vanna - பரிசுத்தாத்மாவான தேவரீருடைய தகவுகள்,Thagavugal - கிருபைமுதலிய குணங்கள் என,Ena - என்னே! |
| 2823 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் “எனதவளவண்ணர் தகவுகளே” என்று எம்பெருமானுடைய தயவில் குறையிருப்பதாகத் தாய் சொன்ன வார்த்தையைக் கேட்ட மகள் அந்த வார்த்தையைப் பொறாமல் ‘என் கொழுநனுக்குத் தயவில்லையென்று சொல்லலாமோ? கடலில் நீர்வற்றிப் போயிற்று என்பாருமுண்டோ? நம்முடைய பாவமென்று நம்மை நொந்துகொள்ளலாமே யல்லது அவருக்குக் கருணையில்லை யென்று வாய்திறக்கலாமோ? என்று சொன்னாளாக, அதை அநுவதிக்கிறாள் திருத்தாய்.) 6 | தகவுடையவனே யென்னும் பின்னும் மிக விரும்பும் பிரான் என்னும் என தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம் உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6 | உள்ளம்,Ullam - தன் நெஞ்சு உக,Uga - அழியுமாறு உருகி,Urugi - நீர்ப்பண்டமாகி உள்ளுள்ளே நின்று,Ullulle nindru - தன்னில் தான் நின்று தகவு உடையவனே என்னும்,Thagavu udaiyavanee ennum - தயவு குறைவற்றவனே! என்கிறாள். பின்னும்,Pinnum - மேலும் மிக விரும்பும்,Miga virumbum - மிகவும் குதூஹலங் கொள்ளா நின்றாள்; பிரான் என்னும்,Piran ennum - உபகாரனே! என்று சொல்லுகின்றாள்; எனது அகம் உயிர்க்கு அமுதே என்னும்,Enadhu agam uyirkku amudhe ennum - ‘எனது உள்ளுயிர்க்கு அம்ருதமே!’ என்கின்றாள் |
| 2824 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (தன் மகளுடைய வருத்தங்களையும், அவன் தன் குணங்களாலே இவளை வஞ்சித்தபடியையும் தாய் சொல்லுகிறாள்.) 7 | உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என் வள்ளலே கண்ணனே என்னும் பின்னும் வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என் கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7 | என் கள்வி,En kalvi - என்னிடத்திலும கூட உண்மையை மரைப்பவளான இப்பெண்பிள்ளைதான் அகப்படும்படி அவன் செய்த தான்பட்ட,Thaanpatta - தான் அகப்படும்படி அவன் செய்த வஞ்சனை,Vanjanaai - வஞ்சகம் (பலித்தபடி என்னென்னில்) உள்ளுள் ஆவி,Ullulle aavi - உள்ளுயிரானது உலர்ந்து உலர்ந்து,Ularndhu ularndhu - மிகவுமுலர்ந்து என வள்ளலே,En vallale - என்னுடைய பெருங்கொடையாளனே! கண்ணனே,Kannane - க்ருஷ்ணனே!’ என்னும்,Ennum - என்கிறாள்; பின்னும்,Pinnum - அதற்கு மேலே வெள்ளம் நீர்,Vellam neer - (திருப்பாற்) கடலிலே கிடந்தாய்,Kidandhaay - கண்வளர்ந்தருளினவனே! என்னும்,ennum - என்கிறாள். |
| 2825 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (உம்மை ஆச்ரயமாகப் பற்றியிருக்கமிவள் பிரதிகூலர் பட்டபாட்டைப்படுவது தகுதியோ? என்கிறாள்.) 8 | வஞ்சனே என்னும் கை தொழும் தன் நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8 | வஞ்சனே என்னும்,Vanjane ennum - எனக்குத் தெரியாமலே என்னை அடிமைப்படுத்திக் கொண்டவனே ! என்கிறாள்; கை தொழும்,Kai thozhum - (அந்த நன்றிக்குத் தோற்றுக்) கைகூப்புகின்றாள் தன நெஞ்சம்,Thana nenjham - தனது நெஞ்சு வேவ,Veva - வேகும்படியாக நெடிது உயிர்க்கும்,Nedithu uyirkkum - பெருமூச்செறிகின்றாள்; விறல் கஞ்சனை,Viral kanjane - மிடுக்கனான கம்ஸனை வஞ்சனை செய்தீர்,Vanjane seydheer - கொன்றொழித்த பெருமானே! உம்மை,Ummai - உம்மை தஞ்சம் என்று,Thanjam endru - புகலாகப்பற்றி இவள் பட்டன ஏ,Ival pattana ae - இவள் பட்டபாடு என்னே ! |
| 2826 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (உம்மைப் பிரிந்ததுமுதல் இடைவிடாது நோவுபடுகின்ற இவ்வேழையின் விஷயத்திலே நீர் செய்ய நினைத்திருப்பது என்ன? என்று எம்பெருமானைக் கேட்கிறாள்.) 9 | பட்டபோது எழுபோது அறியாள் விரை மட்டலர் தண் துழாய் என்னும் சுடர் வட்ட வாய் நுதி நேமியீர் நும் திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9 | சுடர்,Sudar - ஒளி பொருந்திய வட்டம் வாய்,Vatam vaai - வட்டமான வாயையும் நுதி,Nuthi - கூர்மையையுமுடைய நேமியீர்,Nemiyeer - திருவாழியையுடையவரே! (பெண்பிள்ளை) பட்டபோது,Pattapothu - ஸூர்யாஸ்தமன காலத்தையும் எழு போது,Ezu pothu - ஸூர்யோதய காலத்தையும் அறியாள்,Ariyaal - அறிகின்றாளில்லை; விரை மட்டு அலர் –,Virai mattu alar – - பரிமளமும் தேனும் பரவின தண் துழாய் என்னும்,Than thuzhaay ennum - குளிர்ந்த திருத்துழாய் என்று வாய்வெருவுகின்றாள்; இ ஏழைக்கு,I yezhaikku - இப்படிப்பட்ட ஏழையின் திறத்திலே நுமது இட்டம் என் கொல்,Numadhu ittam en kol - உம்முடைய இஷ்டம் என்ன? (நீர்என்ன செய்ய நினைத்திருக்கிறீர்!) |
| 2827 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (இப்பெண்பிள்ளை திறத்திலே பெரும்பாலும் எல்லாம் ஒடுங்கிப் போயிற்று; இவளுடைய நோக்கு ஒன்றுதான் சேகூஷித்துக் கிடக்கிறது; அஃதொன்றுமாவது குலையாதபடி நீர் நோக்கிக் கொள்ள வேணுமென்று பிரார்த்திக்கின்றாள்.) 10 | ஏழை பேதை இராப்பகல் தன் கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –-2-4-10 | கிளர்,Kilar - விஞ்சின வாழ்வை,Vaazhvai - (இராவணனது) செல்வம் வேவ,Veva - நீறாகும்படி இலங்கை,Ilankai - லங்காபுரியை செற்றீர்,Setreer - அழித்தவரே! எழை பேதை,Ezhai paedhai - எழையும் பேதையுமான இவள் இரா பகல்,Iraa pagal - இரவும் பகலும் தன்,Than - தன்னுடைய கேழ் இல்,Kael il - ஒப்பற்ற ஒண் கொண்டாள்,On kondaal - நீரைக்கொண்டாள்; இவள்,Ival - இவளுடைய மாழை நோக்கு ஒன்றும்,Maalzai nokku ondrum - இளநோக்கு ஒன்றையுமாவது வாட்டேன் மின்,Vaatten min - வாடச்செய்யாமல் தளிர்ப்பிக்க வேணும். |
| 2828 | திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (இத் திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக் கட்டுகிறது. ஆழ்வார் பட்ட கிலேசமொன்றும் படாதே எம்பெருமான் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறலாமென்கிறது. --இங்கு வாமனன் என்றது தன்பொருளை விடமாட்டாதவன் என்பதைக் காட்டுதற்காக.) 11 | வாட்டமில் புகழ் வாமனனை இசை கூட்டி வண் சடகோபன் சொல் அமை பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11 | வாட்டம் இல் புகழ்,Vaattam il pugazh - வாட்டமற்ற புகழுடையனான வாமனனை,Vaamananai - வாமனனைக்குறித்து வண்சடகோபன்,Vancha sadagopan - உதாரரான ஆழ்வார் இசை கூட்டி,Isai kooti - இசையோடே சேர்த்து சொல்,Sol - அருளிச்செய்த அமை,Amai - இலக்கணமமைந்த பாட்டு ஓர் ஆயிரத்து,Paattu or aayiraththu - ஓராயிரம் பாசுரங்களுள் இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால் அடி,Adi - (அந்த வாமனமூர்த்தியின்) திருவடிகளில் அம் தாமம்,Am thamam - அழகிய புஷ்பங்களை சூட்டல் ஆகும்,Suttal aagum - ஸமாப்பிக்கும் படியான பேறு உண்டாகும். |