| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3347 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (இத்திருவாய்மொழியைப் பாடவல்லார்க்கு இந்திரியங்களால் நலிவு படவேண்டிய பாவங்கள் தொலையுமென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11 | கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப் புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும் கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11 | கங்குலும் பகலும்,Kangulum pagalum - ஸதாகாலமும் |
| 3348 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 1 | கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்; ‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்; ‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்; செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1 | செம் கயல் பாய் நீர் திரு அரங்கத்தாய், Sem kayal paay neer thiru arangaththai - அழகிய மீன்கள் துள்ளி திருக்காவேரி சயனித்த தருள்பவனே! கங்குலும் பகலும், Kangulum pagalum - இரவும் பகலும் கண் துயில் அறியாள், Kan thuyil ariyaal - கண்ணுறங்கப் பெறுகின்றிலள்; கண்ண நீர் கைகளால் இறைக்கும், Kanna neer kaigalaal iraikkum - கண்ணீரைக் கைகளாலே இறைக்க வேண்டும்படி தாரை தாரையாய்ப் பெருகவிடாநின்றாள்; சங்கு சக்கரங்கள், Sangu chakkarangal - திருவாழி திருச்சங்குகள் இதோ ஸேவை ஸாதிக்கின்றன என்று கை கூப்பும், Endru kai kooppum - என்று சொல்லி அஞ்ஜலி பண்ணி நின்றாள்; தாமரை கண் என்றே தளரும், Thaamarai kan endrae thalarum - (என்னைக் காடக்ஷித்த) தாமரைக் கண்களன்றோ இவை! என்று சொல்லித் தளர்கன்றாள்; உன்னைவிட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும், Unnaivittu engganae tharikken endrum - (பிரானே) உன்னைவிட்டுப் பிரிந்து தரிக்கவும் முடியுமோ? என்கின்றாள்; இரு நிலம், Iru nilam - விஸ்தீர்ணமான பூதலத்தை கை துழவிருக்கும், Kai thuzhavirukkum - கைகளாலே துழாவாநின்றாள் (ஸ்ரீ ரங்காநாதனே!) இவள் திறந்து, Ival thirandhu - இப் பெண்பிள்ளை விஷயத்தில் என் செய்கின்றாய், En seikindraai - ஏது செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறாய்? |
| 3349 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 2 | என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும் என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும் முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும் முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2 | என் தாமரை கண்ணா, En thamarai kanna - என்னை யீடுபடுத்திக் கொண்ட செந்தாமரைக் கண்ணனே! என் செய்கின்றாய் என்னும், En seikindraai ennnum - என்னை என் செய்வதாக விருக்கிறாய்? என்று சொல்லுகின்றாய்; கண் நீர் மல்க இருக்கும், Kan neer malga irukkum - கண்ணீர் ததும்பநின்று ஸ்தப்தையாயிருக்கின்றாள்; எறி நீர் திரு அரங்கத்தாய், Eri neer thiru arangaththaai - அலையெறிகின்ற திருக்காவேரி சூழந்த திருவரங்கந்தில் துயில்பவனே! என் செய்கேன் என்னும், En seiken ennum - (உன்னைப் பெறுதற்கு) என்ன செய்வேன்? என்கிறாள்; வெவ்வு யிர்த்து உயிர்த்து, Vevvu yirthu uyirthu - வெப்பமாகப் பலகாலும் பெரு மூச்சு விட்டு உருகும், Urugum - கரைகின்றாள்; முன் செய்த வினையே, Mun seitha vinaiye - முற்பிறவிகளிலே நான் பண்ணி வைத்த கருமமே! முகப்படாய் என்னும், Mugappadaai ennum - என் கண்முன்னே வந்து நில் பார்ப்போம் என்கிறாள்; முகில் வண்ணா, Mugil vanna - காளமேகவண்ணனான எம்பெருமானே! இது தகவோ என்னும், Idhu thagavo ennum - இதுதானோ உன்னுடைய க்ருபைக்கு லக்ஷ்ணம்! என்கிறாள்; இவ்உலகம், Ivulagam - இந்த ப்ரபஞ்சங்களை யெல்லாம் முன் செய்து , Mun seithu - முற்காலத்தில் ஸ்ருஷ்டித்து உண்டு உமிழ்ந்து ,undu umizhndhu - (காலவிசேஷங்களிலே) உண்பதும் உமிழ்வதும் செய்து அளந்தாய், Alaandhaai - அளப்பதும் செய்து பல முகமாக ரக்ஷித்தருளும் பெருமானே! இவட்கு, Ivatku - இங்ஙனே துடிக்கிற எபெண் பிள்ளைக்கு முடிகின்றது என் கொலோ, mudikindradhu en kolo - இந்தப் பரிதாபமெல்லாம்) என்னாய் முடியப்போகிறதோ? |
| 3350 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 3 | வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும் ‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்; ‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்; திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3 | இறையும் வட்கு இலள், Iraiyum vatku ilal - சிறிதும் வெட்கமில்லா தவளாகி மணிவண்ணா என்னும், Manivanna ennum - நீல மணிவண்ணனே! என்று கூப்பிடா நின்றாள்! வானமே நோக்கும், Vaaname nokkum - (யானைக்கு உதவவந்தாப்போல நமக்கும் உதவ வரக்கூடு மென்று வானத்தையே நோக்குகின்றாள்; மையாக்கும், Maiyaakkum - (எதிர்பார்த்தபடி வந்து தோன்றக் காணாமையினால்) மோஹமடைகின்றாள்; உட்கு உடை அசுரர், Utku udai asurar - வலிமையுடையவர் களான அசுரர்களினுடைய உயிர் எல்லாம் உண்ட, Uyir ellaam undu - பிராணன்களை யெல்லாம் கவர்ந்த ஒருவனே என்னும், Oruvane ennum - அத்விதீயனே! என்கின்றாள்; உள் உருகும், Ul urugum - உள்ளம் நீர்ப்பண்டமாய் உருகப் பெறுகின்றாள்; கட்கு இலீ, Katku ilee - கண்களுக்கு விஷயமாக மாட்டாதவனே! காகுத்தா கண்ணனே, Kaakutha kannane - ஸ்ரீ ராம க்ருஷ்ணாவதாரங்கள் செய்து எல்லார் கண்ணுக்கும் விஷயங்மானவனே! உன்னை காணும் ஆறு அருளாய் என்னும், Unnai kaanum aaru arulaai ennum - உன்னை நான் கண்ணா ரக்காணும் விதம் அருளவேணுமென்கின்றாள்; திண்கொடி மதிள்சூழ் திரு அரங்கக் தாய், Thin kodi madhil soozh thiru arangaththaai - திடமான கொடிகள் விளங்கும் மதிள்களாலே சூழப்பட்ட திருவரங்கத்தில் துயிலும் பெருமானே! இவள் திறந்து, Ival thirandhu - இப் பெண்பிள்ளை விஷயமாக என்செய்திட்டாய், En seithitaai - நீ செய்தது என்னே! |
| 3351 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 4 | இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்; ‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்; ‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்; ‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்; சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4 | இடக்கால் இட்டகையள் ஆய் இருக்கும், Idakkal ittakaiyal aai irukkum - (சில சமயங்களிலே) கையும் காலும் இட்டது இட்டபடியேயிராநின்றாள்; எழுந்து உலாம், Ezhundhu ulam - எழுந்து உலாவுகின்றாள்; மயங்கும், Mayangum - மயங்கா நின்றாள்; கை கூப்பும், Kai kooppum - (அப்படி மயங்கின தசையிலும்) கைகூப்புதல் தவிர் கின்றிலள்; காதல் கட்டமே என்றுடமே என்று மூர்ச்சிக்கும், Kaadal kattame endrudame endru moorchikkum - (பகவத் விஷயத்திலே) காதலைத் தாங்குவது வெகு கஷ்டமென்று சொல்லி மூர்ச்சை யடைகின்றாள்; கடல்வண்ணா கடியை காண் என்னும், Kadal vanna kadiyai kaan ennnum - கடல் வண்ணனே! என் விஷயத்தில் நீ கடுமை கொண்டிருக்கின்றாயே! என்கிறாள்; வட்டம் வாய் நேமி வலம் கையா என்னும், Vattam vaai nemi valam kaiya ennnum - வட்டமான விளிம்பையுடைய திருவாழியை வலத்திரக்கையிலுடையவனெ! என்கிறாள்; வந்திடாய் என்று என்றே மயங்கும், Vandhidai endru endre mayangum - வாராய் வாராய் என்று பலகாலுமழைத்தும் வரக்காணாது மயங்கு கின்றாள்; சிட்டனே!, Sittane! - பரமபவித்திரனே! செழு நீர் திரு அரங்கத்தாய், Sezhuneer thiru arangkaththaai - நீர்வளம் பொருந்திய கோயிலிலே கண்வளர்ந்திரளுமவனே! இவள் திறத்து, Ival thiraththu - இப்பெண்பிள்ளை விஷயமாக என்சிந்தித் தாய், Ensindhithaai - நீ சிந்தித்திருப்பது என்ன? |
| 3352 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 5 | சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்; வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்; ‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே! சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5 | அந்தி போது, Andhi podhu - மாலைபொழுதிலே அவுணன் உடல் இடந்தானே, Avunan udal idandhaane - (நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி) இரணியனது உடலைப் பிளந்தவனே! அலை கடல் கடைந்த ஆர் அமுதே, Alai kadal kadaindha aar amudhe - அலையெறிகின்றகடலை (த்தேவர்களுக்காக)க் கடைந்தா ஆராவமுதமே! சந்தித்து உன் சரணமே சாலீவது வலித்த தையலே மையல் செய்தானே, Sandhithu un saraname saaleevadhu valitha thaiyale maiyal seithaane - உன்னோடே கலந்து உன் திருவடிகளிலேயே லயிக்கவேணுமென்கிற திடமானஅத்யவ ஸாயங்கொண்ட இப்பெண்பிள்ளையை மதிகெடுத்தவனே! சிந்திக்கும், Sindhikkum - (ஏற்கனவே விதிவசமாக நேர்ந்திருந்த கலவியைப் பற்றிச்) சிந்தனை செய்கின்றாள்; திசைக்கும், Thisaikkum - அறிவு அழியா நின்றாள்; தேறும், Therum - (திடீரென்று) தெளிவு பெறுகின்றாள் கைகூப்பும், Kaikooppum - அஞ்சலி பண்ணாநின்றாள்; திரு அரங்கத்து உள்ளாய் என்னும், Thiru arangathu ullaai ennum - கோயிலிலே கண்வளர்ந்;தருளுமவனே! என்கிறாள்; வந்திக்கும், Vandhikkum - தலைவணங்கா நின்றாள்; ஆங்கே, Aange - அவ்வளவிலே மழை கண் நீர் மல்க, Mazhai kan neer malga - கண்ணீர் தாரை தாரையாகப் பெருகநின்று வந்திடாய் என்று என்றே மயங்கும், Vandhidaai endru endre mayangum - (எம்பெருமானே!) வாராய் வாராய் என்று பலகாலுஞ் சொல்லி (வரக்காணாது) மோஹிக்கின்றாள். |
| 3353 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 6 | ‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்; ‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்; ‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்; பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6 | என்னை மையல் செய்து, Ennai maiyal seidhu - என்னை வியாமோஹப்படுத்தி மனம் கவர்ந்தானே யென்னும், Manam kavarndhaane ennum - மனதைக் கொள்ளை கொண்டவனே! என்கிறோள்; மா மாயனே என்னும், Maa maayane ennum - மிகப் பெரிய மாயங்களை யுடையவனே! என்கிறாள்; செய்யவாய் மணியே என்னும், Seyyaavaai maniye ennum - சிவந்த அதரசோபையை உடையயையாக் கொண்டு நீலமணி போன்றவனே; என்கிறாள்; தண் புனல் சூழ் திருஅரங்கத் துள்ளாய் என்னும், Than punal soozh thiru arangath thullaai ennum - குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்த கோயிலில் கண்வளர்ந்தருள் பவனே! என்கிறாள்; வெய்யவான் தண்டு சங்கு சக்கரம்வில் ஏந்தும், Veyyaavaan thandu sangu sakkaram vil endhum - (ஆச்ரித விரோதி விஷயத்தில்) வெப்பமே வடிவெடுத்த பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கிற விண்ணோர் முதல் என்னும், Vinnor mudhal ennum - நிதயஸூரிநாதனே! என்கிறாள்; பை கொள் பாம்பு அணையாய், Pai kol paambu anaiyaai - படமெடுத்த ஆதிசேஷன் மீது சயனித்தருள்பவனே! இவள் திறத்து, Ival thiraththu - இப்பெண்பிள்ளை விஷயமாக பாவியேன் செயல் பாலது , Paaviyen seyal paaladhu - பாவியேனான நான்செய்யக் கூடியது இருந்தால் அதை அருளாய், Arulaai - அருளிச்செய்யவேணும் |
| 3354 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 7 | ‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே! கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்; ‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்; கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7 | என்னுடை கோமளம் கொழுந்து, Ennudaiya komalam kolundhu - மிக மெல்லியலாளான என்மகள் பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் என்னும், Paala thunbangal inbangal padaitthaai ennum - அவ்வவ்விடங்களுக்குத் தகுதியாக இன்பங்களையும் துன்பங்களையும் படைத்கவனே! என்கிறாள்: பற்று இலார் பற்ற நின்றானே என்னும், Patru ilaar patra nindraane ennum - அசரண்ய சரண்யனே! என்கிறாள்; கால சக்கரத்தாய் என்னும், Kaala sakkaraththaai ennum - காலசக்ரத்திற்கு நிர்வாஹகனானவனே! என்கிறாள்; கடல் இடம் கொண்ட கடல் வண்ணா என்னும், Kadal idam konda kadal vanna ennum - திருப்பாற் கடலை இடமாகக் கொண்ட கடல்; வண்ணனே! என்கிறாள்; கண்ணனே என்னும், Kannane ennum - ஸ்ரீகிருஷ்ணா என்கிறாள்; சேல் கொள்தண் புனல் சூழ் திருஅரங்கத் தாய் என்னும், Sel kolthan punal soozh thiru arangath thaai ennum - மீன்கள் நிரம்பிய குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்தா கோயிலில் வாற்பவனே! என்கிறாள்; என்தர்த்தானே என்னும், Entharthaane ennum - என்னைப் பவித்திரனாக ஆக்குமவனே! என்கிறாள்; கோலம் மாமழை கண்பனி மல்க் இருக்கும், Kolam maamazhai kanpani malga irukkum - அழகு பொருந்திப் பெருத்துக குளிர்ந்த கண்கள் நீர்பெருகநிற்கின்றாள். |
| 3355 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 8 | கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்; அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்; ‘அஞ்சன வண்ணனே!’ என்னும்; எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்; ‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்; செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்! என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8 | வானவர்கட்கு கொழுந்து என்னும், Vaanavargatku kozhundhu ennum - நித்ய ஸூரிகளுக்குத் தலையானவனே! என்கிறாள்; குன்று ஏந்தி, Kunru endhi - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்று கோ நிரை காத்தவன் என்னும், Ko nirai kaathavan ennum - பசுக்களின் கூட்டத்தைக் காத்திருளினவனே! என்கிறாள்; ஆழும், Aazhum - கண்ணுங் கண்ணீருமாயிருக்கின்றான்; தொழும், Thozhum - அஞ்ஜலி பண்ணா நின்றான்; ஆவி அனல் வெவ்வுயிர்க்கும், Aavi anal vevvuyirkkum - ஆத்மாவஸ்து கொளுந்தும்படி வெப்பமாகப் பெருமூச்சுவிடாநின்றாள்; அஞ்சனம் வண்ணனே என்னும், Anjanam vannane ennum - அஞ்சனனேமனியனே! என்கிறாள்! மேல் எழுந்து நோக்கி, Mel ezundhu nokki - (இக் கூக்குரலைக்கேட்டு நினைத்து) மேலே தலையெடுத்துப் பார்த்து இமைப்பு இலள் இருக்கும், Imaippu illal irukkum - இமையாத கண்ணினளாய் இருக்கின்றாள்; எங்ஙனே நோக்கு கேன் என்னும், Engane nokku ken ennum - எந்த பிரகாரத்தாலே உன்னைக் காண்பேன்? என்கின்றாள்; செழு தடம் புனல் சூழ்திரு அரங்கத் தாய், Sezhu thadam punal soozh thiru arangath thaai - மிகச் சிறந்த தீர்த்தம் கண் வளாந்தருளுமவனே! என் திருமகட்கு, En thiru magatku - பிராட்டியோ டொத்து என் பெண்மகள் விஷயத்திலே என் செய்கேன், En seiken - எதைச் செய்வனே? |
| 3356 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 9 | என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்; ‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்; ‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்; தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9 | என் திருமகள் சேர்மார்பனே என்னும், En thirumagal sermaarbane ennum - எனக்குப் புருஷகார பூதையான பிராட்டி சோந்த திருமார்பை யுடையவனே! என்கிறாள்; என்னுடை ஆவியே என்னும், Ennudai aaviyae ennum - எனக்கு உயிராயிருப்ப வனே! என்கிறாள்; நின் திருஎயிற்றால் இடந்து நீ கொண்ட , Nin thiru eyirraal idandhu nee konda - உனது கோரப் பற்களாலே இடந்து ஏற்றுக்கொண்ட நிலம் மகள் கேள்வனே என்னும், Nilam Magal kelvanae ennum - பூமிப்பிராட்டிக்கு நாயகனே! என்கிறாள்; அன்று , Andru - முன் பொருகால் உரு ஏழும் , uru ezhum - இடிபோன்ற குரலையுடையரிஷபங்களேழையும் தழுவி, thazhuvi - மதமொழித்து நீ கொண்ட, nee konda - மணந்து கொண்ட ஆய் மகள், aai magal - நப்பின்னைப் பிராட்டிக்கு ப்ரியனே! என்கிறாள்; தென் திருஅரங்கம் கோயில் கொண்டானே, Then thiru arangam koyil kondane - ஸ்ரீ ரங்கநாதனே! இவள் தனக்கு, Ival thanakku - இவளுக்கு முடிவு தெளிகிலேன், mudivu thelikilen - ஆர்த்தி முடியுமாறு அறிகின்றிலேன். |
| 3357 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 10 | ‘முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்; ‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்; ‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்; அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10 | இவள் , Ival - இப்பெண்பிள்ளையானவள், தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்னும், thanakku mudivu ondru arikilen ennum - தனது ஆர்த்திக்கு முடிவு ஒன்றும் தெரியவில்லையே! என்கிறாள்; கடி கமழ் கொன்றை சடையனே என்னும், Kadi kamazh kondrai sadaiyane ennum - பரிமளம் மிக்க கொன்றைமாலையைச் சடையிலணித்த சிவனுக்கு அந்தர்யாமியே என்கிறாள்; நான்முகக்கடவுளே என்னும், Naanmuga kadavulae ennum - தன்னோடொத்த வடிவுடையரான நித்ய ஸூரிகளுக்கு நாதனே! என்கிறாள்; வண் திருஅரங்கனே என்னும், Van thiru arangane ennum - ஸ்ரீ ரங்கநாதனே! என்கிறாள்: அடி அடையாதாள் போல் இவள், Adi adaiyaadhal pol ival - திருவடிகளைக் கிட்டமாட்டாள் போலும் என்னும்படி யிருந்த விவள் முகில் வண்ணன் அடி், Mugil vannan adi - மேகவண்ணனான அவனது திருவடிகளை அணுகி அடைந்தனள், anugi adaindhanal - கிட்டியடையப்பெற்றாள். |
| 3358 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 11 | முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல் துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன் முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11 | முகில் வண்ணன் அடியை அடைந்து, Mugil vannan adiyai adaindhu - மேகவண்ணனான் எம்பெருமானுடைய திருவடிகளை யடைந்து அருள் சூடி உயந்தவன், Arul soodi uyandhavan - அவனுடைய திருவருளைத் தலைக்கொண்டு உஜ்ஜீவிததவரும், மொய் புனல் பொருநல், Moi punal porunal - உத்தமதீர்த்தனான தாமிரப்ரணியினுடைய துகில் வண்ணம் தூ நீர் சேர்ப்பன், Thugil vannam thoo neer serppan - துகிலின் நிறம்போலே பரிசுத்தமான ஜலத்தின் கரையிலே சேர்ந்திருப்பவரும் வண் பொழில் சூழ் வண் குருகூர், Van pozhil soozh van kurukoor - வளம்மிக்க சோலைகள் சூழந்த திருநகரிக்குத் தலைவருமான் முகில் வண்ணன் அடிமேல் சொன்ன, Mukil vannan adimel sonna - மேகவணணனான எம்பெருமானது திருவடிகளை நோக்தியருளிச் செய்த சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார், Sol maalai aayirathu ippathum vallaar - சொல் தொடையான ஆயிரத்தினுள் இப்பதிகத்தை ஒதவல்லவர்கள் முகில் வண்ணம் வானத்து, Mukil vannam vaanathu - முகில் வண்ணனுடைய நிழலீட்டாலே முகில் வண்ணமாயிருக்கின்ற பரமபதத்திலே இமையவர் சூழ, imaiyavar soozha - நித்தியசூரிகள் புடைசூழ பேர் இன்பம் வெள்ளத்தே, Per inbam vellathe - ப்ரஹமானந்த ப்ரவாஹித்தில் இருப்பர், iruppar - மூழ்கியிருக்கப்பெறுவர்கள். |