Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: நல்லதோர் (12 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
8திருப்பல்லாண்டு || 8
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை
வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்
பல்லாண்டு கூறுவனே
நெய் இடை, Nei Idai - நெய்யின் நடுவிலிருக்கும்
நல்லது ஓர் சோறும், Nalladhu Or Sorum - பாவசுத்தியுடன் இடப்பட்டதாய்(ஒப்பற்ற சுவையை உடையதான ப்ரஸாதத்தையும்)
நியதமும், Niyadhamum - எப்போதும்
அத்தாணிச் சேவகமும், Athaanich Sevakamum - பிரிவில்லாத ஸேவையையும்
கை, Kai - (எம்பெருமான் தன்) திருக்கையாலே இட்ட
அடைக்காயும், Adaikkaayum - வெற்றிலைப் பாக்கையும்
கழுத்துக்குப் பூணொடு, Kazhuthukkup Poonodu - கழுத்துக்கு ஆபரணமான குண்டலத்தையும்
காதுக்குக் குண்டலமும், Kaadhukkuk Kundalamum - காதுக்கு ஆபரணமான குண்டலத்தையும்
மெய்யிட, Meyyida - உடம்பிலே பூசத்தக்க
நல்லது ஓர் சாந்தமும், Nalladhu Or Saanthamum - பரிமளம் நிறைந்த ஒப்பற்ற சந்தனமும்
தந்து, Thandhu - கொடுத்து
என்னை, Ennai - (மிகவும் நிஹீனனான) என்னை
வெள் உயிர் ஆக்கவல்ல, Vel Uyir Aakkavalla - சுத்த ஸ்வபாவனாக ஆக்கவல்ல
பை உடை, Pai Udai - படங்களை உடைய
நாகம், Naagam - ஸர்ப்பத்துக்கு
பகை, Pagai - விரோதியான கருடனை
கொடியானுக்கு, Kodiyaanukku - கொடியாக உடையவனுக்கு
பல்லாண்டு கூறுவன், Pallaandu Kooruvan - மங்களாசாஸனம் பண்ணக்கடவேன்
297ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1
நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தா லொத்த தாலோ
இல்லம் வெறியோடிற் றாலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை யட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ–3-8-1
நல்லது ஓர் தாமரைப் பொய்கை,Nalladhu Or Thaamaraip Poigai - அழகிய ஒரு தாமரைக் குளமானது (தன்னிடத்துள்ள)
நாள் மலர் மேல்,Naal Malar Mel - அப்போதலர்ந்த பூவின் மேல்
பனி சோர,Pani Soora - பனி பெய்ததனால்
அல்லியும் தாதும்,Alliyum Thaadhum - (அம் மலரினது) உள்ளிதழும் புறவிதழும் உதிரப் பெற்று
அழகு அழிந்தால் ஒத்தது,Azhagu Azhindhaal Oththathu - அழகு அழியப் பெறுவது போல
இல்லம்,Ellam - (இவ்)வீடானது
வெறி ஓடிற்று,Veri Odidritru - வெறிச்சென்றிருக்கிறது;
என் மகளை,En Magalai - என் பெண் பிள்ளையை
எங்கும்,Engum - ஓரிடத்திலும்
காணேன்,Kaanen - காண்கின்றிலேன்;
மல்லரை அட்டவன் பின் போய்,Mallarai Attavan Pin Poi - மல்லர்களை அழித்த கண்ணபிரான் பின்னே போய்
மதுரைப் புறம்,Mathuraip Puram - மதுரைக்கு அருகிலுள்ள திருவாய்ப்பாடியில்
புக்கார்கொல் ஓ,Pukkaar Kol O - புகுந்தாளாவள் கொல்?.
298ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2
ஒன்றும் அறிவொன்றில்லாத உருவறைக் கோபாலர் தங்கள்
கன்று கால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்கு ஓரேச்சுக் சொலாயிடுங் கொலோ–3-8-2
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத,Ondrum Arivu Ondru Illaatha - பொருந்திய ஞானம் சிறிதுமில்லாதவர்களும்
உரு அறை,Uru Arai - ரூப ஹீநர்களுமான
கோபாலர் தங்கள்,Gopaalar Thangal - இடையரானவர்கள்
கன்று கால் மாறும் ஆ போலே,Kanru Kaal Maarum Aa Pole - கண்ணுக்கழகிய கன்றுகளை உடையவர்களறியாமல் களவிலே கொண்டு போவது போல,
கன்னி இருந்தாளை,Kanni Irundhaalai - கன்னிகைப் பருவத்தளாய் எனக்கடங்கி யிருந்த பெண்ணை
நன்றும் கிறி செய்து,Nandrum Kiri Seidhu - நல்ல உபாயங்களைப் பண்ணி
கொண்டு போனான்,Kondu Ponnaan - (தெரியாமல்) அபஹரித்துக் கொண்டு போன
நாராயணன்,Naaraayanan - கண்ண பிரான்
செய்த தீமை,Seidha Theemai - செய்த தீம்பானது
எமர்கள் குடிக்கு,Emargal Kudikku - எங்கள் குலத்துக்கு
என்றும்,Endrum - சாச்வதமான
ஓர் ஏச்சு ஆயிடும் கொல் ஓ,Or Echu Aayidum Kol O - ஒரு பழிப்பாகத் தலைக் கட்டுமோ?.
299ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3
குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத் திருத்தி
தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கென்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி அரசாணியை வழி பட்டு
துமில மெழப் பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ–3-8-3
குமரி மணம் செய்து கொண்டு,Kumari Manam Seidhu Kondu - கன்னிகை யவஸ்தையிற் செய்ய வேண்டிய மங்கள விசேஷத்தைச் செய்து
கோலம் செய்து,Kolam Seidhu - (ஆடை ஆபரணங்களால்) அலங்கரித்து
இல்லத்து,Ellathu - விவாஹ மந்திரத்தில்
இருத்தி,Eruthi - உட்கார வைத்து
தமரும்,Thamarum - பந்து வர்க்கங்களும்
பிறரும்,Pirarum - மற்றுமுள்ள உதாஸீநர்களும்
அறிய,Ariya - அறியும்படி
தாமோதரற்கு என்று சாற்றி,Thaamodhararku Endru Saatri - (இவள்) கண்ண பிரானுக்கு (க்கொடுக்கப் பட்டாள்) என்று சொல்லி,
அமரர் பதியுடைய தேவி,Amarar Padhiyudaiya Devi - (பிறகு) தேவாதி தேவனான கண்ண பிரானுக்கு மனைவியாகப் பெற்ற என் மகள்
அரசாணியை,Arasaani - (ஜாதிக்குத் தக்க ஒழுக்கமாக) அரசங்கிளையை
வழிபட்டு,Vazhipattu - பிரதக்ஷிணம் பண்ண
துமிலம் எழப் பறை கொட்டி,Thumilam Ezha Parai Kotti - பேரொலி கிளம்பும்படி பறைகளை முழக்கி
தோரணம் நாட்டிடும் கொல் ஓ,Thoranam Naattidum Kol O - மகா தோரணங்களை (ஊரெங்கும்) நாட்டி அலங்கரித்துக் கொண்டாடுவர்களோ?.
300ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4
ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்
பெருமகளாய்க் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறம் செய்யுங் கொலோ–3-8-4
ஒரு மகள் தன்னை உடையேன்-,Oru Magal Thannai Udaiyen - ஒரே மகளை உடையளாகிய நான்
உலகம் நிறைந்த புகழால்,Ulagam Niraindha Pugazhal - உலகமெங்கும் பரவின கீர்த்தியோடு.
திரு மகள் போல,Thiru Magal Pola - பெரிய பிராட்டியாரைப் போல்
வளர்த்தேன்,Valarththen - சீராட்டி வளர்த்தேன்;
செம் கண் மால்,Sem Kan Maal - (இப்படி வளர்ந்த இவளை) செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன்
தான்,Thaan - தானே (ஸாக்ஷாத்தாக பந்து)
கொண்டு போனான்,Kondu Ponaan - (நானறியாமல்) கொண்டு போனான்;
பெரு மகளாய் குடி வாழ்ந்து,Peru Magalaai Kudi Vazhndhu - (போனால் போகட்டும்;) (இடைச்சேரியில்) ப்ரதாந ஸ்த்ரீயாய்க் குடி வாழ்க்கை வாழ்ந்து
பெரும் பிள்ளை பெற்ற அசோதை,Perum Pillai Petra Asothai - பெருமை தங்கிய பிள்ளையைப் பெற்றவளான யசோதைப் பிராட்டியானவள்
மருமகளை,Marumagalai - (தன்) மருமகளான என் மகளை
கண்டு உகந்து,Kandu Ugandhu - கண்டு மகிழ்ந்து
மணாட்டுப் புறம் செய்யும் கொல் ஓ,Manattup Puram Seyyum Kol O - மணவாட்டிக்குச் செய்யக் கடவதான சீர்மைகளைச் செய்வளோ?
301ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5
தம் மாமன் நந்த கோபாலன் தழீஇக் கொண்டு என் மகள் தன்னை
செம் மாந்திரே யென்று சொல்லிச் செழுங் கயற் கண்ணும் செவ் வாயும்
கொம்மை முலையும் இடையும் கொழும் பணைத் தோள்களும் கண்டிட்டு
இம் மகளைப் பெற்ற தாயர் இனித் தரியாரென்னுங் கொலோ–3-8-5
தம் மாமன்,Tham Maaman - என் மகள் தனக்கு மாமனாரான
நந்த கோபாலன்,Nandha Gopalan - நந்த கோபரானவர்
என் மகள் தன்னை,En Magal Thannai - என் பெண்ணை
தழீஇக் கொண்டு,Thazheei Kondu - (அன்புடன்) தழுவிக் கொண்டு
செம்மாந்திரு என்று சொல்லி,Semmanthiru Endru Solli - (வெட்கத்தாலே தரையைக் கீறி முகங்கவிழ்ந்து நிற்காமல்) செவ்வனே நில் என்று சொல்லி
செழு கயல் கண்ணும்,Sezhu Kayal Kannum - (பிறகு ஸர்வாங்க ஸெளந்தர்யத்தையுங் காணலாம்படி அவள் ருஜுவாக நிற்க)அழகிய மீன் போன்ற (அவளது) கண்களையும்
செம் வாயும்,Sem Vaayum - சிவந்த அதரத்தையும்
கொம்மை முலையும்,Kommai Mulaiyum - (கச்சுக்கு அடங்காமல்) பெருத்திருக்கின்ற முலையையும்
இடையும்,Edayum - இடுப்பினழகையும்
கொழு பணை தோள்களும்,Kozhu Panai Tholgalum - பெருத்த மூங்கில் போன்ற தோள்களையும்
கண்டிட்டு,Kandittu - நன்றாகப் பார்த்து
இ மகளை பெற்ற தாயர்,E Magalai Petra Thaayar - “இப் பெண் பிள்ளையைப் பெற்ற தாயானவள்
இனி,Eni - இவளைப் பிரிந்த பின்பு
தரியார் என்னும் கொல் ஓ,Thariyaar Ennum Kol O - உயிர் தரித்திருக்க மாட்டாள்” என்று சொல்லுவரோ?.
302ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6
வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்து என் மகளை
கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடி வாழுங் கொலோ
நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து சாடிறப்
பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொலோ–3-8-6
சாடி இற பாய்ந்த பெருமான் ,Saadi Ira Paayndha Perumaan - சகடாஸுரனை முறித்து தள்ளின திருவடிகளை யுடைய கண்ணபிரான்,
வேடர்,Vedhar - வேடர்களையும்
மறக் குலம் போலே,Marak Kulam Pole - மறவர் என்கிற நீச ஜாதியரையும் போலே
என் மகளை,En Magalai - (ஸத் குலத்திற் பிறந்த) என் பெண் பிள்ளையை
வேண்டிற்று செய்து,Vendritru Seidhu - தன் இஷ்டப்படி செய்து
கூடிய கூட்டமே ஆகக் கொண்டு,Koodiya Koottaame Aaga Kondu - தம்பதிகளாகிய இருவரும் நெஞ்சு பொருந்திக் கூடின கூடுதலையே விவாஹமாஹக் கொண்டு
குடி வாழும் கொல் ஓ,Kudi Vaalum Kol O - குடிவாழ்க்கை வாழ்வனோ?
நாடும்,Naadum - (அன்றி) ஸாமாந்ய ஜனங்களும்
நகரும்,Nagarum - விசேஷஜ்ஞ ஜனங்களும்
அறிய,Ariya - அறியும்படி (பஹிரங்கமாக)
நல்லது ஓர் கண்ணாலம் செய்து,Nalladhu Or Kannaalam Seidhu - விலக்ஷணமானதொரு விவாஹோத்ஸவத்தை (விதிப்படி) செய்து
தக்க ஆ,Thakka Aa - (ஜாதி தர்மத்துக்குத்) தகுதியாக
கைப்பற்றும் கொல் ஓ,Kaippatrum Kol O - பாணி க்ரஹணம் பண்ணுவனோ?
303ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7
அண்டத் தமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொலோ–3-8-7
அண்டத்து அமரர்,Andhathu Amarar - பரம பதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு
பெருமான்,Perumaan - தலைவனும்
ஆழியான்,Aazhiyaan - திருவாழி யாழ்வானை யுடையனுமான கண்ணபிரான்
என் மகளை,En Magalai - என் பெண் பிள்ளையை
இன்று,Endru - இப்போது
பண்டம் பழிப்புக்கள் சொல்லி,Pandham Pazhippukal Solli - பதார்த்தங்களுக்குக் குறை சொல்வது போல் (இவளது) ரூப குணங்களிற் சில குறைகளைச் சொல்லி
பரிசு அற,Parisu Ara - வரிசை கெடும்படி
ஆண்டிடும் கொல் ஓ,Aandidum Kol O - ஆளுவனோ?(அன்றி,)
பண்டை மணாட்டிமார் முன்னே,Pandai Manaattimaar Munne - முன்பே பட்டங்கட்டித் தனக்குத் தேவியாயிருப்பவர்களின் முன்னே
கொண்டு,Kondu - இவளைக் கொண்டு
குடி வாழ்க்கை வாழ்ந்து,Kudi Vaalvazh Vaalndhu - (தனது) க்ருஹ க்ருத்யமெல்லாம் நடத்தி
கோவலர் பட்டம் கழித்து,Kovalar Pattam Kazhiththu - “இவள் இடைகுலத்துக்குத் தலைவி” என்று (தன் மனைவியானமை தோற்றப்) பட்டங்கட்டி,
பாதுகாவல் வைக்கும் கொல் ஓ,Paadhukaaval Vaikkum Kol O - அந்தப்புறக் காவலிலே வைப்பனோ?
304ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8
குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ
நடை யொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன்
இடை யிருபாலும் வணங்க இளைத்திளைத்து என் மகள் ஏங்கி
கடை கயிறே பற்றி வாங்கிக் கை தழும்பேறிடுங் கொலோ–3-8-8
நங்காய்,Nangai - பூரணையாயிருப்பவளே;
நந்தகோபான மகன் கண்ணன்,Nandagopaana Magan Kannan - நந்தகோபருடைய பிள்ளையாகிய கண்ணன்
குடியில் பிறந்தவர் செய்யும் குணம்,Kudiyil Pirandhavar Seyyum Gunam - உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் (குல மர்யாதைக்குத் தக்கபடி) செய்யும் குணங்களில்
ஒன்றும்,Ondrum - ஒருவகைக் குணத்தையும்
செய்திலன்,Seydhilan - செய்தானில்லை;
நடை,Nadai - உலகத்துக்குப் பொதுவான நடத்தைகளிலும்
ஒன்றும் செய்திலன்;,Ondrum Seydhilan - ஒன்றும் செய்திலன்;
அந்தோ!,Andho - அஹஹ!
என் மகள்,En Magal - என் மகளானவள்
இடை,Edai - (தயிர் கடையும் போது) இடுப்பானது
இரு பாலும்,Eru Paalum - இரு பக்கத்திலும்
வணங்க,Vananga - துவண்டு போவதனால்
ஏங்கி,Eangi - மூச்சுப்பிடித்துத் கடைய மாட்டாள்) நடுநடுவே எக்கமுற்று
இளைத்து இளைத்து,Elaiththu EIaiththu - மிகவும் இளைத்து
கடை கயிறே,Kadaikayire - கடைகிற கயிற்றையே
பற்றி வாங்கி,Patri Vaangi - பிடித்து வலித்திழுப்பதனால்
கை தழும்ப ஏறிடும் கொல் ஓ,Kai Thazhumpa Eraidum Kol O - (தனது ஸுகுமாரமான) கைகள் தழும்பேறப் பெறுமோ?.
305ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9
வெண்ணிறத் தோய் தயிர் தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து
கண்ணுறங்காதே யிருந்து கடையவும் தான் வல்லள் கொலோ
ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்தான் என் மகளை
பண்ணறையாப் பணி கொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ–3-8-9
என் மகள் தான்,En Magal Thaan - என் மகளானவள்
வெளிவரைப் பின் முன் எழுந்து,Velivarai Pin Mun Ezhandhu - கிழக்கு வெளுப்பதற்கு முன்பாக எழுந்திருந்து
கண் உறங்காதே இருந்து,Kan Urangaadhe Irundhu - கண் விழித்துக்கொண்டிருந்து
வெள் நிறம் தோய் தயிர் தன்னை,Vel Niram Thoy Thayir Thannai - வெளுத்தை நிறுத்தையுடைத்தாய் தோய்ந்த தயிரை
கடையவும் வல்லன் கொல் ஓ,Kadaiyavum Vallan Kol O - கடையும் படியான சக்தியைத் தான் உடையவனோ?
ஒண் நிறம் செம் தாமரை கண்,On Niram Sem Thamarai Kan - அழகிய நிறத்தையுடைய செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடையவனும்
உலகு அளந்தான்,Ulagu Alandhaan - (திரிலிக்ரமாவதாரத்தில்) உலகளந்தருளினவனுமான கண்ணபிரான்
என் மகளை,En Magalai - என் பெண்ணை
பண் அறையாய் கொண்டு,Pan Arayai Kondu - தர்ம ஹாநியாக இழி தொழில்களைச் செய்வித்துக் கொண்டு
பரிசு அற,Parisu Ara - (அவளுடைய) பெருமை குலையும்படி
ஆண்டிடும் கொல் ஓ,Aandidum Kol O - ஆளுவனோ?
306ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10
மாயவன் பின் வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமு மெல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைத் தண் புதுவைப் பட்டன் சொன்ன
தூய தமிழ்ப் பத்தும் வல்லார் தூமணி வண்ணற் காளாரே–3-8-10
வழி இடை,Valee Idai - போகிற வழியிலே
மாற்றங்கள் கேட்டு,Maattrangal Kettu - (அபூர்வ வஸ்துக்களைக் கண்டால் இவை என்?” என்று அவ் விஷயமாக) வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு
மாயவன் பின் வழி சென்று,Maayavan Pin Vali Sendru - கண்ணபிரான் பின்னே போய்
ஆயர்கள் சேரியிலும் புக்கு,Aayargal Seriyilum Pukku - திருவாய்ப்பாடியிலும் சென்று புகுந்த பின்பு
அங்குத்தை மாற்றமும் எல்லாம்,Anguththai Maatramum Ellaam - அங்குண்டாகும் செயல்கள் சொலவுகள் முதலிய எல்லாவற்றையுங் குறித்து
தாய் அவள்,Thaai Aval - தாயானவள்
சொல்லிய,Solliya - சொன்ன
சொல்லை,Sollai - வார்த்தைகளை
தன் புதுவைபட்டன் சொன்ன,Than Pudhuvaipattan Sonnan - குளிர் தன்மையை யுடைய ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் அருளிச் செய்தவையாகிய
தூய,Thooya - பழிப்பற்ற
தமிழ் பத்தும்,Tamil Paththum - தமிழ் பாட்டுக்கள் பத்தையும்
வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள்
தூ மணிவண்ணனுக்கு,Thoo Manivannanukku - அழகிய மணி போன்ற நிறத்தையுடைய கண்ணபிரானுக்கு
ஆளர்,Aalar - ஆட்செய்யப் பெறுவர்.
881திருமாலை || (விபவ அவதாரங்களுக்கு பிற்பட்டவருக்கும் உதவும்படி திருவரங்கம் பெரிய கோயிலிலே வந்து கிடக்கிறான் என்கிறார்) 10
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச்
சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே
engum,எங்கும் - எல்லா விடங்களிலும்
Deivam,தெய்வம் - (அம்மன் பிடாரி முதலான தாமஸ) தேவதைகளை
naattinaan,நாட்டினான் - (ராஜஸர்க்கும் தாமஸர்க்கும் ஆஸ்ரயிக்கலாம்படி எம்பெருமான்) நிலை நிறுத்தி
uybhavargku,உய்பவர்க்கு - உஜ்ஜீவிக்க விரும்புமவர்கட்கு
uyum vannam,உய்யும் வண்ணம் - உஜ்ஜீவிக்கலாம்படி
nallathu or arul thannaale,நல்லது ஓர் அருள் தன்னாலே - தனது ஒப்பற்றதொரு க்ருபையினால்
thiruarangam,திருஅரங்கம் - அரங்க மா நகரை
kaattinaan,காட்டினான் - காண்பித்தருளினான்
nambimeerkaal,நம்பிமீர்காள் - ‘நமக்கு ஒன்றாலும் குறையில்லை’ என்று நினைந்திருப்பவர்களே!
ketrae,கேட்டிரே - (நான் சொல்வதைக்) கேட்டீர்களா?
garuda vaaganan nirgavum,கெருட வாகனன் நிற்கவும் - கருடனை வாஹநமாக வுடைய பெருமான் விளங்கா நிற்கச் செய்தேயும்
saettai than madiyagathu,சேட்டை தன் மடியகத்து - (தேவதாந்தரங்களைப் பற்றுகிற நீங்கள்) மூதேவியிடத்தினின்றும்
selvam paarthu irukkireer aishwaryam pera ninaithirukkiral polum,செல்வம் பார்த்து இருக்கின்றீர் - ஐஸ்வர்யம் பெற நினைத்திருக்கிறீர்கள் போலும்