| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 97 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 1 | பொன்னியல் கிண் கிணி சுட்டி புறம்கட்டி தன்னிய லோசை சலஞ்சல னென்றிட மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற் போல் என்னிடைக் கோட்டரா அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோ–1-8-1 | பொன் இயல்,Pon iyal - பொன்னாற்செய்த கிண்கிணி,Kinkini - அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும் சுட்டி,Sutti - சுட்டியையும் புறம்,Puram - (அதற்கு உரிய) இடங்களிலே கட்டி,Katti - அணிந்து தன்,Than - சதங்கைக்கு இயல்,Iyal - பொருந்திய இசை,Isai - சப்தமானது சலன் சலன் என்றிட,Salan salan endrida - சலன் சலனென்று ஒலிக்க மின் இயல்,Min iyal - மின்னலோடு பொருந்திய மேகம்,Megam - மேகமானது விரைந்து,Viraindhu - வேகமாக ஓடி வந்து எதிர் வந்தால் போல்,Ethir vanthal pol - எதிரே வந்தாற் போலே என் இடைக்கு ஒட்டரா,En idaiyku ottara - என் இடையிலிருக்க (விரும்பி) ஓடிவந்து அச்சோ அச்சோ,Achcho achcho - (என்னை) அணைத்துக் கொள்ள வேணும் அணைத்துக் கொள்ள வேணும் எம்பெருமான்,Emperuman - எங்களுடைய தலைவனே! வாரா,Vaara - வந்து அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 98 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 2 | செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல் பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப சங்கு வில் வாள் தண்டு சக்கர மேந்திய அங்கைகளாலே வந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ–1-8-2 | செங்கமலம்,Sengamalam - செந்தாமரைப் பூவில் தேன் உண்ணும்,Then unnum - தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற வண்டே போல்,Vande pol - வண்டுகளைப் போல பங்கிகள் வந்து,Pangigal vandhu - (உனது) கூந்தல் மயிர்கள் வந்து உன் பவளம் வாய்,Un pavalam vai - பவளம்போற் செந்நிறமான உனது வாயில் மொய்ப்ப,Moippa - மொய்த்துக் கொள்ளும்படி வந்து,Vandhu - ஓடி வந்து சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும் வில்,Vil - ஸ்ரீசார்ங்கத்தையும் வாள்,Val - நந்தகத்தையும் தண்டு,Thandu - கௌமோதகியையும் சக்கரம்,Chakkaram - ஸ்ரீஸூதர்சநாழ்வானையும் ஏந்திய,Enthiya - (பூவேந்தினாற்போல) தரித்துக் கொண்டுள்ள அம் கைகளாலே,Am kaigalale - அழகிய கைகளாலே அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ வந்து,Vandhu - ஓடிவந்து ஆர தழுவா,Ara thazhuvaa - திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 99 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 3 | பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ–1-8-3 | பஞ்சவர்,Panjavar - பாண்டவர்களுக்காக தூதன் ஆய்,Thoodhan aay - (துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய் பாரதம்,Paaratham - (அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்) பாரத யுத்தத்தை கை செய்து,Kai seythu - அணி வகுத்துச் செய்து நஞ்சு,Nanju - விஷத்தை உமிழ்,Umizh - கக்குகின்ற நாகம்,Naagam - (கானிய) ஸர்ப்பம் கிடந்த,Kidandha - இருந்த நல் பொய்கை,Nal poigai - கொடிய மடுவிலே புக்கு,Pukku - புகுந்து அஞ்சு,Anju - (ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி பணத்தின் மேல்,Panathin mel - (அப்பாம்பின்) படத்திலே பாய்ந்திட்டு,Paindhittu - குதித்து அருள்செய்த,Arulseytha - (நடமாடி அக்காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க) (அப்பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;,Anjanam vannane Achcho achcho - அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-; ஆயர்,Aayar - இடையர்களுக்கு பெருமானே,Perumane - தலைவனானவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 100 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 4 | நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன தேறி அவளும் திரு வுடம்பில் பூச ஊறிய கூனினை உள்ளே யொடுங்க அன்று ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோ வச்சோ–1-8-4 | நாறிய,Naariya - ‘நல்ல வாசனை வீசுகின்ற சாந்தம்,Santham - சந்தனத்தை நமக்கு,Namakku - எங்களுக்கு இறை,Irai - கொஞ்சம் நல்கு என்ன,Nalku enna - கொடு என்று (நீ) கூனியைக் கேட்க அவளும்,Avalum - அந்தக் கூனியும் (‘இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்) தேறி,Theri - மனம் தெளிந்து திரு உடம்பில்,Thiru udambil - (உனது) திருமேனியிலே பூச,Poosa - சாத்த ஊறிய,Ooriya - வெகுநாளாயிருக்கிற கூனினை,Kooninai - (அவளுடைய) கூனை உள்ளே,Ulle - (அவள்) சரீரத்திற்குள்ளே ஒடுங்க,Odunga - அடங்கும்படி அன்று,Andru - அக் காலத்திலே ஏற,Era - நிமிர்த்து உருவினாய்,Uruvinai - உருவினவனே! அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.,Emperumaan! vandhu achcho achcho - எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ. |
| 101 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 5 | கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ–1-8-5 | கழல்,Kalal - வீரக் கழலை யணிந்த மன்னர்,Mannar - ராஜாக்கள் சூழ,Sool - தன்னைச் சுற்றியிருக்க (அவர்கள் நடுவில்) கதிர்போல்,Kathirpol - ஸூரியன்போல விளங்கி,Vilangi - ப்ரகாசமாயிருந்து (‘கண்ணனுக்கு எழுந்திருத்தல் குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலிய மர்யாதை எழல் உற்று,Ezhal utru - (ஒன்றும் செய்யக்கூடாது’ என்று கட்டளையிட்டிருந்த தானே தனக்கும் தெரியாமல்)(முதலில்) எழுந்திருந்து மீண்டு,Meendu - மறுபடியும் இருந்து,Irundhu - (தானெழுந்தது தெரியாதபடி) உட்கார்ந்து கொண்டு உன்னை,Unnai - உன்னை நோக்கும்,Nokkum - (பொய்யாஸநமிடுதல் முதலியவற்றால் கொல்வதாகப்) பார்த்த பெரிது கழலை உடை,Perithu kalalai udai - மிகவும் (வஞ்சனையான) ஆலோசனையை யுடைய துச்சோதனனை,Thuchchodhananai - துர்யோதநினை (திருவுள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி) அழல விழித்தானே,Azhal vizhiththane - உஷ்ணமாகப் பார்த்தவனே! அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை அம் கையனே,Am kaiyane - அழகிய கையிலேந்தியவனே! அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-; |
| 102 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 6 | போரொக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான் தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய் காரொக்கும் மேனிக் கரும் பெருங் கண்ணனே ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ–1-8-6 | இ பூமி, E poomi - இந்தப் பூமியினுடைய பொறை,Porai - பாரத்தை தீர்ப்பான்,Theerppan - தீர்ப்பதற்காக போர்,Por - யுத்தத்தை ஒக்க,Okka - (துர்யோதநாதிகளோடு) ஸமமாக பண்ணி,Panni - செய்து செழு,Sezhu - செழுமைதாங்கிய தார்,Thar - மாலையை யுடைய விசயற்கு ஆய்,Vijayarku aay - அர்ஜுநனுக்காக தேர்,Ther - (அவனுடைய) தேரை ஒக்க,Okka - (எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி ஊர்ந்தாய்,Oorndhai - பாகனாய்ச் செலுத்தினவனே! கார் ஒக்கும்,Kaar okkum - மேகத்தோடு ஒத்த மேனி,Meni - திருமேனியில் கரும்பெருங் கண்ணனே,Karumperum kannane - கரியவாகிப் புடைபரந்து கண்களையுடையவனே! வந்து,Vandhu - ஓடிவந்து ஆர,Aara - நின்றாக தழுவா,Thazhuvaa - தழுவிக்கொண்டு அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு (அடங்கி நற்கின்ற) போர் ஏறே,Por ere - போர் செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே! அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-; |
| 103 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 7 | மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கது அன்று என்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ–1-8-7 | மிக்க பெரும்புகழ்,Mikka perumpugazh - (ஔதார்யத்தால்) மிகுந்த கீர்த்தியை யுடைய மா வலி,Maa vali - மஹாபலி (செய்த) வேள்வியில்,Velviyil - யாகத்திலே (வாமநனாய்ச் சென்ற உனககு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொöடுக்க முயன்ற வளவிலே) இது,Ithu - நீ கொடுக்கிற விது தக்கது அன்று,Thakkathu andru - தகுதியானதன்று’ என்று,Endru - என்று முறையிட்டு தானம்,Thaanam - பூமி தானத்தை (அவன் தத்தம் பண்ணும் போது நீர் விழ வொட்டாமல்) விலக்கிய,Vilakkiya - தடுத்த சுக்கிரன்,Sukiran - சுக்கிராச்சாரியனுடைய கண்ணை,Kannai - ஒரு கண்ணை துரும்பால்,Thurumpaal - (உன் கையிலணிந்திருந்த) தர்ப்ப பவித்ரத்தின் நுனியால் கிளறிய,Kilarriya - கலக்கின சக்கரம் கையனே,Chakkaram kaiyane - சக்ராயுதமேந்திய கையை யுடையவனே! அச்சோ அச்சோ-;,Achcho achcho - அச்சோ அச்சோ-; சங்கம்,Sangam - பாஞ்ச ஜன்யத்தை இடத்தானே,Idaththane - இடக்கையிலேந்தினவனே! அச்சோ அச்சோ-.,Achcho achcho - அச்சோ அச்சோ-; |
| 104 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 8 | என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ–1-8-8 | இது,Ithu - (வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடிவந்து) (யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி யளக்கிற) இது என் மாயம்,En maayam - என்ன மாயச் செய்கை!; என் அப்பன்,En appan - என் தகப்பன் அறிந்திலன்,Arinthilan - (நீ செய்யும் இந்தமாயத்தை) அறியவில்லை முன்னைய வண்ணமே கொண்டு,Munnaiya vanname kondu - நீ யாசிக்க வந்த போதிருந்த வடிவத்தையே கொண்டு அளவாய்,Alavaay - அளப்பாயாக என்ன,Enna - என்று சொல்ல மன்னு,Mannu - (இப்படி) பிடிவாதமாய் நின்ற நமுசியை,Namusiyai - (அந்த) நமுசி யென்பவனை வானில்,Vaanil - ஆகாசத்திலே சுழற்றிய,Suzharriya - சுழலச் செய்த மின்னு முடியனே,Minnu mudiyane - விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ-; வேங்கடம்,Vengadam - திருமலையிலே வாணனே,Vaanane - வாழுமவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 105 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 9 | கண்ட கடலும் மலையும் உலகேழும் முண்டத்துக் காற்றா முகில் வண்ணா ஓ ஒ வென்று இண்டைச் சடை முடி ஈசன் இரக்கொள்ள மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ–1-8-9 | கண்ட,Kanda - கண்ணாற்கண்ட கடலும்,Kadalum - ஸமுத்ரங்களும் மலையும்,Malayum - மலைகளும் உலகு ஏழும்,Ulaku ezhum - கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்) முண்டத்துக்கு,Mundaththukku - (என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு ஆற்றா,Aatraa - போதாவாம்; முகில் வண்ணா,Mugil vanna - மேக வண்ணனே! ஓஒ!,Ooo - ஓஒ! (ஹாஹா!) என்று,Endru - என்று கூப்பிட்டு இண்டை,Indai - நெருங்கின சடை முடி,Sadai mudi - ஜடா பந்தத்தை யுடைய ஈசன்,Eesan - சிவன் இரக்கொள்ள,Irakkolla - பிச்சை யெடுக்க மண்டை,Mandai - (அவன் கையிலிருந்த ப்ரஹ்ம) கபாலத்தை நிறைத்தானே,Niraiththane - (மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால்) நிறையச் செய்தவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ மார்வில்,Maarvil - திரு மார்பிலே மறுவனே,Maruvane - ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை யுடையவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 106 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 10 | துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்ன மதானானே அச்சோ வச்சோ அரு மறை தந்தானே அச்சோ வச்சோ-1-8-10 | மன்னிய,Manniya - நித்ய ஸித்தமான நால் மறை,Naal marai - சதுர் வேதங்களும் முற்றும்,Mutrum - முழுவதும் மறைந்திட,Maraindhida - மறைந்து விட (அதனால்) அன்னிய,Anniya - நெருங்கிய பேர் இருள்,Per irul - பெரிய அஜ்ஞாநாந்தகாரம் சூழ்ந்து,Soozhndhu - பரவி உலகை,Ulakai - லோகங்களை மூட,Mooda - மறைத்துக் கொள்ள பின்,Pin - பின்பு உலகினில்,Ulakinil - இந்த லோகங்களில் பேர் இருள்,Per irul - (அந்த) மிகுந்த அஜ்ஞாகாந்தகாரமானது நீங்க,Neenga - நீங்கும்படி என்று,Endru - அக் காலத்தில் அன்னம் அது ஆனானே,Annam adhu aanane - ஹம்ஸமாய் அவதரித்தவனே! அரு மறை தந்தானே,Aru marai thanthane - (அந்த ரூபத்தோடு) அருமையான வேதங்களை உபகரித்தவனே! அச்சோ அச்சோ,Achcho achcho - அச்சோ அச்சோ |
| 107 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-எட்டாம் திருமொழி -- பொன்னியல்) (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) 11 | நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக வென்று ஆய்ச்சி யுரைத்தன மச்சணி மாடப் புதுவை கோன் பட்டன் சொல் நச்சலும் பாடுவார் நீள் விசும்பாள்வரே–1-8-11 | நச்சுவார் முன்,Nachchuvaar mun - (தன்னை) விரும்பிப்ப பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே நிற்கும்,Nirkum - வந்து நிற்குந் தன்மையுள்ள நாராயணன் தன்னை,Narayanan thannai - நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை ஆய்ச்சி,Aaychchi - இடைக் குலத்தவளான யசோதை அச்சோ வருக என்று உரைத்தன,Achcho varuga endru uraiththana - (அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி) ‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை மச்சு அணி,Machchu ani - பல நிலைகளால் அழகிய மாடம்,Maadam - மாளிகைகளை யுடைய புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattan - பெரியாழ்வார் சொல்,Sol - சொன்ன இப் பத்துப் பாசுரங்களையும் பாடுவார்,Paaduvaar - பாடுபவர்கள் நிச்சலும்,Nichchalum - எப்போதும் நீள் விசும்பு,Neel visumbu - பரமாகாசமாகிற பரமபதத்திற்கு ஆள்வர்,Aalvar - நிர்வாஹகராவர். |
| 626 | நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 10 | மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும் தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே | தாழ் குழலாள், Thaazh kuzhalaal - தாழ்ந்த கூந்தலை யுடையளாய் பொன் இயல்மாடம் பொலிந்துதோன்றும் புதுவையாகோன் விட்டு சித்தன் கோதை, Pon iyalmaadam polindhu thondrum Pudhuvaiyaakon Vittu chithan kodhai - பொன் மயமான மாடங்களினால் விளங்கித் தோன்றுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய (திருமகளான) ஆண்டாள் மன்னு மதுரை தொடக்கம் ஆக வண் துவராபதி தன் அளவும் தன்னை, Mannu mathurai thodakkam aaga van Thuvarapathi than alavum thanai - ஸ்ரீமதுரை முதற்கொண்டு ஸ்ரீத்வாரகை வரைக்கும் (சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில்) தன்னை (ஆண்டாளை) தமர், Thamar - தன் உறவினர் உய்த்து பெய்ய வேண்டி, Uythu peiya vendi - கொண்டு போய்ச் சேர்க்க வேண்டி துணிந்த துணிவை, Thunindha thunivai - கொண்ட அத்யவஸாயம் விஷயமாக இன் இசையால் சொன்ன, In isaiyaal sonna - இனிய இசையுடன் அருளிச் செய்த செம் சொல் மாலை, Sem sol maalai - அழகிய சொல்மாலை யாகிய இத்திருமொழியை ஏத்த வல்லார்க்கு, Etha vallaarku - ஓத வல்லவர்களுக்கு இடம், Idam - வாழுமிடம் வைகுந்தம், Vaikundham - பரமபதமேயாம் |