Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: போய்ப்பாடு (14 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
139ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 1
போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை யுண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்–2-3-1
பாடு உடைய,Paadu Udaiya - பெருமையை உடைய
நின் தந்தையும்,Nin Thandaiyum - உன் தகப்பனும்
போய்,Poi - (வெளியே) போய்
தாழ்த்தான்,Thaazhthaan - (திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்,Poru Thiral - போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்,Kanjan - கம்ஸனோ
கடியன்,Kadiyan - (உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்;
கடல்,Kadal - கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா,Vannaa - வடிவை யுடையவனே!
உன்னை,Unnai - உன்னை
காப்பாரும்,Kaapaarum - பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை,Illai - (இங்கு இப்போது) இல்லை;
தனியே போய்,Thaniye Poi - (நீயோவென்றால்) அஸஹாயனாய்ப் போய்
எங்கும்,Engum - கண்ட விடங்களிலும்
திரிதி,Thirithi - திரியா நன்றாய்;
பேய்,Pey - பூதனையினுடைய
முலை பால்,Mulai Paal - முலைப்பாலை
உண்ட,Unda - உட்கொண்ட
பித்தனே,Piththane - மதி மயக்கமுள்ளவனே!
கேசவ,Kesava - கேசவனே
நம்பி,Nambi - பூர்ணனானவனே!
உன்னை காது குத்த,Unnai Kaathu Kutha - உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்,Aai Paalar - இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்,Pendumkal Ellarum - எல்லாப் பெண்களும்
வந்தார்,Vandhaar - வந்திரா நின்றார்கள்;
நான்,Naan - நானும்
அடைக்காய்,Adaikkai - (அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்,Thiruthi Vaithen - ஆய்ந்து வைத்திருக்கிறேன்.
140ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 2
வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப் பாதக் கிங்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா–2-3-2
நண்ணி தொழுமவர்,Nanni Thozhumavar - கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை,Sindhai - மநஸ்ஸில் நின்றும்
பிரியாத,Priyaadha - விட்டு நீங்காத
நாராயணா,Narayana - நாராயணனே!
வண்ணம்,Vannam - (நீ) (மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்,Pavalam - பவழ வடத்தை
மருங்கினில்,Marunginil - திருவரையிலே
சாத்தி,Saathi - சாத்திக் கொண்டு
மலர்,Malar - தாமரை மலர் போன்ற
பாதம்,Paadham - பாதங்களிலணிந்த
கிண் கிணி,Kin Kini - சதங்கை
ஆர்ப்ப,Aarpa - ஒலிக்கும்படி
இங்கே வாராய்,Inge Vaarai - (நீ) இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே,Ennarukku Ariya Piraane - (உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு) நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை,Thiriyai - நூல் திரியை
எரியாமே,Eriyaame - எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு,Kaadhukku - (உன்) காதுகளுக்கு
இடுவன்,Iduvan - இடுவேன்;
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய,Kannukku Nindrum Azhagu Udaiya - (அப்படித் திரியையிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான) கண்களுக்கு மிகவும் அழகையுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்,Kanagam Kadippum - பொற் கடிப்பும்
இவை,Ivai - இவையாகும்;
ஆ,Aa - ஆச்சர்யம்.
141ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 3
வையமெல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை யிடுவன் நீ வேண்டிய தெல்லாம் தருவன்
உய்ய இவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடராயர் கொழுந்தே
மையன்மை செய்து இள வாய்ச்சிய ருள்ளத்து மாதவனே இங்கே வாராய்–2-3-3
உய்ய,Uyya - (நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய,E Aayar Kulathinil Thondriya - இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒன் சுடர்,On Sudar - மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே,Aayar Kozhundhe - இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்,Vaiyam Ellaam Perum - இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை,Vaar Kadal Vaazhum Magaram Kuzhai - பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக்குழையை
கொண்டு வைத்தேன்,Kondu Vaithen - (உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
வெய்யவே,Veyyave - (உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு) வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்,Kaadhil Thiriyai Iduvan - (உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்,Vendiyathu Ellaam - நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
தருவன்,Tharuvaan - கொடுப்பேன்;
மாதவனே,Madhavane - ச்ரியபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து,Ina Aaychiyar Ullathu - மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸி லே
மையன்மை செய்து,Maiyanmai Seidhu - வ்யாமோஹத்தைச் செய்துகொண்டு
இங்கே வாராய்:-.,Inge Vaarai - இங்கே வாராய்.
142ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 4
வண நன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன் றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நின் றழகிய இக் கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து
சுண நன் றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய்–2-3-4
இ கோபாலர் பிள்ளைகள், E Gopalar Pillaiyar - இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது,Vaar Kaadhu - (தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி,Thaazha Perukki - (தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய,Vanam Nindru Udaiya - நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு,Vairam Kadippu - வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு,Ittu - அணிந்து கொண்டு
நன்று குணம் உடையர்,Nandru Gunam Udaiyar - (இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து) ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா,Govindha - கோவிந்தனே!
நீ,Nee - நீயோ வென்றால்
சொல்லு,Sollu - (தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்,Kollai - கேட்கிறாயில்லை;
இணை,Inai - (இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு) ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய,Nandru Azhagiya - மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு,I Kadippu - இக் கடிப்பை
இட்டால்,Ittaal - அணிந்து கொண்டால்
நான்,Naan - நான்
இனிய பலாப்பழம் தந்து,Iniya Palaappazham Thandhu - தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை,Sunam Nindru Ani Mulai - சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண,Unna - (நீ) பருகும்படி
தருவன்,Tharuvaan - கொடுப்பேன்;
பிரான்,Piraan - ஸ்வாமியே!
சோத்தம்,Soththam - (உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.,Inge Vaarai - இங்கே வாராய்.
143ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 5
சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழ லாரொடு நீ போய்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங் கொண்டிடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே நீ இங்கே வாராய்–2-3-5
பிரான்,Piraan - தலைவனே!
சோத்தம்,Soththam - உனக்கு ஓரஞ்ஜலி
என்று,Endru - என்று சொல்லி
இரந்தாலும்,Irandhaalum - (வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும்
கொள்ளாய்,Kollai - (நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ,Nambi - பூர்ணனே!
நீ,Nee - நீ
சுரி குழலாரொடு,Suri Kuzhalarodhu - சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு
போய்,Poi - (ஏகாந்த ஸ்தலத்திலே) போய்
கோத்து,Kothu - கை கோத்து
குரவை பிணைந்து,Kuravai Pinaindhu - குரவைக் கூத்தாடி
இங்கு வந்தால் ;,Ingu Vandhaal - (பின்) இங்கே வந்தால்
குணம் கொண்டிடுவனோ,Gunam Kondiduvano - (நீ அப்படி செய்ததை)(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ?
பிரானே,Piraane - உபகாரகனே!
திரி இட ஒட்டில்,Thiri Ida Otti - திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால்
பேர்த்தும்,Perthum - மறுபடியும் மறுபடியும்
பெரியன அப்பம்,Periyana Appam - பெரிய பெரிய அப்பங்களை
தருவன்,Tharuvaan - கொடுப்பேன்;
வேய் தட தோளார்,Vey Thada Tholar - மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர்
விரும்பு,Virumbu - விரும்புகைக்கு உரிய
கரு குழல் விட்டுவே,Karu Kuzhal Vittuve - கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே!
(நீ இங்கே வாராய்).,Nee Inge Vaarai - நீ இங்கே வாராய்
144ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 6
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே யஞ்சி மதுசூதனே யென்றறிந்தேன்
புண்ணேது மில்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல் வண்ணா காவலனே முலை யுணாயே–2-3-6
விண் எல்லாம் கேட்க,Vin Ellam Ketka - மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்,Azhuthittai - அழுதாய்;
நான்,Naan - (நீ அப்படி அழுகையில்) (தாயாகிய) நான்
விரும்பி,Virumbi - ஆதரங்கொண்டு
உன் வாயில்,Un Vaayil - உன் வாயிலே
அதனை,Adhanai - (நீ மண் உண்ட) அதை
நோக்கி,Nookki - பார்க்கும் போது
மண் எல்லாம் கண்டு,Man Ellam Kandu - (அவ் வாயில்) லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி,En Manathulle Anji - என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று,Madhusudane Endru - ‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்,Arindhen - தெரிந்து கொண்டேன்;
புண் ஏதும் இல்லை,Pun Edhum Illai - (உன்னுடைய காதிலே) புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்,Un Kaadhu Mariyum - (கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
இறை போது,Irai Podhu - (அதை மாத்திரம்) க்ஷண காலம்
பொறுத்து இரு,Poruththu Iru - பொறுத்துக் கொண்டிரு;
நம்பி,Nambi - பூர்ணனே!
கண்ணா,Kanna - கண்ணனே!
கார் முகிலே,Kaar Mugile - காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா,Kadal Vannaa - கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே,Kaavalaney - ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.,En Mulai Unai - என் முலை உணாய்.
145ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 7
முலை யேதும் வேண்டேனென் றோடி நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு
மலையை யெடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை யொன்று இறுத்தாய் திரி விக்கிரமா திரு வாயர் பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே–2-3-7
முலை,Mulai - ‘முலையையும்
ஏதும்,Edhum - (மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்,Venden - (நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி,Endru Odi - என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை,Nin Kaadhil Kadippai - (நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு,Pariththu Erindhittu - பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை,Malaiyai - கோவர்த்தன மலையை
எடுத்து,Eduthu - (குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து,Magizhndhu - திருவுள்ளமுகந்து
கல் மாரி,Kal Maari - கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து,Kaathu - (இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை,Pasu Nirai - பசுக்களின் திரளை
மேய்த்தாய்,Meythaai - மேய்த்தவனே!
ஒன்று சிலை,Ondru Silai - ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்,Muriththai - (பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா,Thirivikramaa - த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி,Thiru Aayarpadi - திரு வாய்ப்பாடிக்கு
பிரானே,Piraane - உபகாரகனே!
தலை நிலா போதே,Thalai Nila Poadhe - தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது,Un Kaadhai Perukkaadhu - உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்,Vittitten - விட்டு வைத்தேன்;
குற்றமே அன்றே,Kutrame Andre - (அப்படி விட்டு வைத்தது) என்னுடைய அபராதமன்றோ?
146ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 8
என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் ணுண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி யிட்டுச் சொல்லுகேன் மெய்யே–2-3-8
என் குற்றமே என்று,En Kutrame Endru - (நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது) ‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்,Sollavum Venda Kaan - நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
நான் மண் உண்டேன் ஆக,Naan Man Unden Aaga - (ஏனெனில்;) நான் மண் உண்டதாகச் சொல்லி
என்னை,Ennai - (மண் திண்ணாத) என்னை
பிடித்தும்,Pidiththum - பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று,Anbu Utru - அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி,Nookki - (என் வாயைப்) பார்த்து
அடித்தும்,Adiththum - (என்னை) அடித்தும்
அனைவர்க்கும்,Anaivarkkum - எல்லார்க்கும்
காட்டிற்றிலையே,Kaattitrilaiye - காட்டின தில்லையோ?
வல் புற்று அரவின்,Val Putru Aravin - (என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை) வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை,Pagai - விரோதியான கருடனை
கொடி,Kodi - கொடியாக வுடைய
வாமந நம்பி,Vaamana Nambi - வாமந மூ­ர்த்தியே!
உன் காதுகள் தூரும்,Un Kaadhugal Thoorum - (இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்) உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
உற்றன,Uttrana - (உன்னை யடுத்தவர்கள்) அடைந்தனவான
துன்பு எல்லாம்,Thunbu Ellam - துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்,Theerppai - போக்குமவனே!
பிரானே,Piraane - உபகாரகனே!
திரி இட்டு,Thiri Ittu - (உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்,Meyye Sollugean - (உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன் (என்கிறாள். )
147ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 9
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று
கையைப் பிடித்துக் கரை யுரலோடு என்னைக் காணவே கட்டிற் றிலையே
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரிதரா உன் காது தூரும்
கையில் திரியை யிடுகிடாய் இந் நின்ற காரிகையார் சிரி யாமே–2-3-9
சொல்லுவார் சொல்லை,Solluvaar Sollai - சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி,Mey Endru Karuthi - (நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை,Vennaiyai - வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்,Thoduppu Undaai - களவு கண்டு உண்டாய்
என்று,Endru - என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து,Kaiyai Pidiththu - (என்) கையைப் பிடித்து
காண்,Kaan - (பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு,Karai Uralodu - விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை,Ennai - (ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே,Kattitrilaiye - நீ கட்ட வில்லையா? (என்று கண்ணன் யசோதைமேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
சிரிதரா,Siridharaa - (அதற்கு யசோதை சொல்லுகிறாள்) ஸ்ரீதரனே!
செய்தன,Seidhanai - (நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி,Solli - சொல்லிக் கொண்டு
சிரித்து,Siriththu - புன் சிரிப்புச் செய்து
அங்கு,Angu - அங்கே (தூரத்தில்)
இருக்கில்,Irukkil - (பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது,Un Kaadhu - உன் காதுகள்
தூரும்,Thoorum - தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே,I Nindra Kaarigaiyaar Siriyame - (உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை,Kaiyil Thiriyai - (என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்,Idukidai - இட்டுக் கொள்வாயாக.
148ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 10
காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்
தாரியா தாகில் தலை நொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியிற் பிள்ளைகளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங் கன்று எறிந்திட்ட இருடீகேசா என் தன் கண்ணே–2-3-10
காதுகள்,Kaadhugal - (என்னுடைய) காதுகள்
வீங்கி,Veengi - வீங்கிப் போய்
எரியில்,Eriyil - எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்,Kaarigaiyaarkkum - (பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்,Unakkum - (என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து),Uttrathu - நேரிட்டதான
இழுக்கு,Ilukku - சேதம்
என்,En - ஏதேனுமுண்டோ? (என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)
தாரியாது ஆகில்,Thaariyaadhu Aagil - (நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்தபோது) ('திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று,Thalai Nondhidum Endru - (குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்,Vittitten - (முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன்
குற்றமே அன்றே,Kutrame Andre - (அன்பினால் அப்படி விட்டிருந்தது) (என்னுடைய) குற்றமேயாமல்லவா?
ஏர் விடை,Er Vidai - அழகிய ரிஷபத்தின் வடிவுகொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று,Setru - அழித்து
இள கன்று,Ila Kanru - சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட,Erindhitta - (குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்,Irudheekesar - ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே,Endran Kanne - எனக்குக் கண் போன்றவனே’
சேரியில்,Seriyil - இவ் விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்,Pillaigal Ellarum - எல்லாப் பிள்ளைகளும்
காது பெருக்கி,Kaadhu Perukki - காதைப் பெருக்கிக் கொண்டு
திரியவும்,Thiriyavum - திரியா நிற்பதையும்
காண்டி,Kaandi - நீ காணா நின்றாயன்றோ
149ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 11
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடி கமழ் பூங் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்க ளமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய்–2-3-11
குளிர,Kulira - மனங்குளிரும்படி
கண்ணை,Kannai - (உன்) கண்ணை
கலந்து,Kalandhu - (இடைப் பெண்களுடைய கண்களோடு) சேர்த்து,
எங்கும்,Engum - (அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி,Nookki - பார்த்து,
கடி கமழ்,Kadi Kamazh - வாஸனை வீசுகின்ற
பூ,Poo - புஷ்பங்களணிந்த
குழலார்கள்,Kuzhalaarkal - கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்,Ennaththul - மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து,Endrum Irundhu - எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்,Thithikkum - ரஸிக்கின்ற
பெருமானே,Perumaane - பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே,Engal Amudhe - எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண,Unna - தின்பதற்கு
கனிகள்,Kanigal - (நாவல் முதலிய) பழங்களை
தருவன்,Tharuvaan - கொடுப்பேன்
கடிப்பு,Kadippu - காதணியை
ஒன்றும் நோவாமே,Ondrum Novamae - சிறிதும் நோவாதபடி
காதுக்கு,Kaadhukku - (உன்னுடைய) காதிலே
இடுவன்,Iduvan - இடுவேன்
சகடம்,Sakadam - (அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட,Pannai Kizhiyuthaiththitta - கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா,Pathmanabha - பத்மநாபனே
இங்கே வாராய்,Inge Vaarai - இங்கே வாராய்
150ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 12
வாவென்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச்
சாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய்–2-3-12
வா என்று சொல்லி,Vaa Endru Solli - (கண்ணன் யசோதையைப் பார்த்து) ‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து,En Kaiyai Pidiththu - என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்,Kaadhil - காதிலே
நோவ,Nova - நோம்படி
கடிப்பை,Kadippai - காதணியை
இங்கு,Ingu - இப்போது
வலியவே,Valiyave - பலாத்காரமாக
தரிக்கில்,Tharikkil - இட்டால்
உனக்கு,Unakku - உனக்கு
இழுக்கு உற்ற(து) என்,Ilukku Utthru En - சேதமுண்டானதென்ன?
காதுகள்,Kaadhugal - (என்) காதுகள்
நொந்திடும்,Nondhidum - நோவெடுக்கும்
கில்லேன்,Killean - (அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன் (என்று மறுத்துச் சொல்ல)
நம்பீ,Nambi - யசோதை சொல்லுகிறாள்-) பூர்ணனே
நாவல் பழம்,Naaval Pazham - (உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்,Kondu Vaiththaan - கொண்டு வைத்திருக்கிறேன்
இவை,Ivai - இவற்றை
காணாய்,Kaanai - பார்ப்பாயாக
முன்,Mun - முன்பு
வஞ்சம் மகள்,Vancham Magal - வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ,Saava - மாளும்படி
பால்,Paal - (அவளது) முலைப் பாலை
உண்டு,,Undu - பாநம் பண்ணி,
சகடு,Sakadu - சகடாஸுரன்
இற,Ira - முறியும்படி
பாய்ந்திட்ட,Paandhitta - (கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய்,Thaamodhara Inge Vaarai - தாமோதரா’ இங்கே வாராய்
151ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து -மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு) (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.) 13
வார் காது தாழப் பெருக்கி யமைத்து மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடி யாரே–2-3-13
அசோதை,Ashodai - யசேதையானவள்
வார்,Vaar - (ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது,Kaadhu - காதுகளை
தாழ,Thaazha - தொங்கும்படி
பெருக்கி,Perukki - வளர்த்து
அமைத்து,Amaiththu - ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி,Magaram Kuzhai Idu Vendi - மகர குண்டங்களை இடவிரும்பி
திருமாலை,Thirumalai - ச்ரிய பதியான கண்ணனை
சீரால் சொன்ன,Seeraal Sona - சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்,Soll - சொற்கள்
சிந்தையுள்,Sindhaiyul - (தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று,Nindru - நிலையாகப் பொருந்தி
திகழ,Thigazha - விளங்க,
பார் ஆர் தொல் புகழான்,Paar Aar Thol Pugazhaan - பூமியில் நிரம்பிய வழமையான யசஸ்ஸையுடையவரும்
புதுவை,Puduvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்,Mannan - நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன,Panniru Naamaththaal Sona - த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த
ஆராத,Aaraadha - (ஓத ஓத) த்ருப்தி பிறவாத
அந்தாதி,Andhaadi - அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்,Pannirandum - பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள்
அச்சுதனுக்கு,Achuthanukku - எம்பெருமானுக்கு
அடியார்,Adiyaar - அடிமை செய்யப் பெறுவர்.
499திருப்பாவை || 26
மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
மாலே, maale - (அடியார் பக்கலில்) வியாமோஹ முடையவனே!
மணிவண்ணா, maṇivanna - நீல மணி போன்ற வடிவை உடையவனே!
ஆலின் இலையாய், aalin ilaiyaay - (ப்ரளய காலத்தில்) ஆலந்தளிரில் பள்ளி கொள்பவனே!
மார்கழி நீராடுவனான், maargazhi neeraduvanaan - மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார், melaaiyaar - உத்தம புருஷர்கள்
செய்வனகள், seyvangaḷ - அநுட்டிக்கும் முறைமைகளில்
வேண்டுவன, venduvana - வேண்டியவற்றை
கேட்டி ஏல், ketti ael - கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்)
ஞாலத்தை எல்லாம், nyaalathai ellaam - பூமியடங்கலும்
நடுங்க, nadunga - நடுங்கும்படி
முரல்வன, muralvana - ஒலி செய்யக் கடவனவும்
பால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன, paal anna vaṇṇathu unpaanja sanniyame poalvana - பால் போன்ற நிறமுடையதான உன்னுடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை ஒத்திருப்பனவுமான
சங்கங்கள், sangangal - சங்கங்களையும்
போய் பாடு உடையன, poi paadu udaiyana - மிகவும் இடமுடையனவும்
சாலப் பெரு, saalap peru - மிகவும் பெரியனவுமான
பறை, parai - பறைகளையும்
பல்லாண்டு இசைப்பார், pallandu isaippar - திருப்பல்லாண்டு பாடுமவர்களையும்
கோலம் விளக்கு, kolam vilakku - மங்கள தீபங்களையும்
கொடி, kodi - த்வஜங்களையும்
விதானம், vidaanam - மேற்கட்டிகளையும்
அருள், arul - ப்ரஸாதித்தருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம் பாவாய்