| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2974 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (தம்முடைய திருவுள்ளம் எம்பெருமானைக்காண வேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிர்வேதம் கொண்டு கிடக்கிறபடியை அருளிச் செய்கிறார்.) 1 | முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானே! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர் கொடியானே! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானே! என்று கிடக்கும் என் நெஞ்சமே. –3-8-1 | என் நெஞ்சம்,En nenjam - எனது மனமானது முடியானே,Mudiyanae - (உபய விபூதி நாயகத்வ லக்ஷணமான) திருவபிஷேகத்தை யுடையவனே! மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே,Moo ulagum thozhudhu yaeththum seer adiyanae - மூவுலகத்தவர்களும் வணங்கித் துதிக்கப் பெற்ற சிறப்புள்ள திருவடிகளை யுடையவனே! ஆழ் கடலை கடைந்தாய்,Aazh kadalai kadaindhaai - (தேவர்களுக்கு அமுதமளிப்பதற்காக) அழமான கடலைக் கடைந்தவனே! புள் ஊர் கொடியானே,Pul oor kodiyanae - கருடப்பறவையை ஊர்தியாகவும், கொடியாகவுமுடையவனே! கொண்டல் வண்ணா,Kondal vanna - நீலமேகம் போலும் நிறத்தையுடையவனே! அண்டத்து உம்பரின் நெடியானே,Andhathu umbarin nediyanae - பரமபதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு மஹாபருஷனே! என்று கிடக்கும்,Endru kidakkum - என்று அநுஸந்தித்து உருகிக் கிடக்கின்றது. |
| 2975 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (வாக்கானது எம்பெருமானை நோக்கி ‘ஸ்வாமி! நெஞ்சு தேவரீரை நினைக்க அதற்கு அருள் செய்தாப்போலே நானும் தேவரீரை நினைக்க அருள் செய் வேணும்’ என்று அலற்றாநின்றது என்கிறார்.) 2 | நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச்செற்ற நஞ்சனே! ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2 | என் வாசகம்,En vaasagam - எனது வாக்கானது நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் தஞ்சனே,Nenjamae neel nagar aaga irundha en thanjanae - மனத்தையே பெரிய நகரமாகக் கொண்டு அதிலே தங்கியிருக்கின்ற எனது நற்றுணைவனே! தண் இலங்கைக்கு இறையை செற்ற நஞ்சனே,Than ilangaiyku iraiai setra nanjanae - தண்ணிதான இலங்காபுரிக்குத் தலைவனாயிருந்த இராவணனைத் தொலைக்கும் விஷயத்தில் நஞ்சானவனே! ஞானம் கொள்வான் குறள் ஆகிய,Gnanam kolvaan kural aagiya - (மாவலியிடமிருந்து) பூமியைக் கொள்ளும் பொருட்டு வர்மன் மூர்த்தியான வஞ்சனே,Vanchanae - வஞ்சகனே! என்னும் எப்போதும்,Ennum eppodhum - என்று எப்போதும் சொல்லா நின்றது |
| 2976 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (தமது கைளுக்கு வாக்கின் வ்ருத்தியிலும் தம் வ்ருத்தியிலுண்டான சாபலத்தை அருளிச் செய்கிறார்.) 3 | வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3 | என் கைகள்,En kaigal - எனது கைகளானவை. வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நயாகனே,Vaasagame yaettha arul seyyum vaanavar tham nayaagane - வாக்கு மாத்திரமே துதிக்கும்படியாக அதற்கு அருள் செய்கின்ற தேவாதி தேவனே! நான் இள திங்களை கோள்விடுத்து,Naan ila thingalai kolviduthu - புதிய இளை உதய சந்திரன் போலப் பற்களின் ஒளியைப் பரவிட்டு வேய் அகம்பால் வெண்ணெய் தொடு உண்ட,Vey agampaal vennai thodu unda - மூங்கிலால் செய்த வீடுகளில் வெண்ணெயைக் களவு கெய்து அமுது செய்த ஆன் ஆயர் தாயவனே,Aan aayar thaayavane - கோபால க்ருஷ்ணனே! என்று தடவும்,Endru tadavum - என்று தடவுகின்றன |
| 2977 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (கண்களானவை ‘கைகளுடைய பரிமாற்றமும் வேணும், தம் வ்ருத்தியான காட்சியும் வேணும்’ என்னாநின்றன வென்கிறார்.) 4 | கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடின்றி பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4 | பைகொள் பாம்பு ஏறி உறை பரனே,Paikol paambu aeri urai parane - படங்கொண்ட திருவனந்தாழ்வான் மீதேறி உறையும் பரமபுருஷனே! என் கண்கள்,En kangal - எனது கண்களானவை உன்னை,Unnai - தேவரீரை கைகளால் ஆர தொழுது தொழுது,Kaigalal aara thozhudhu thozhudhu - கையாரப் பரிபூர்ண நமஸ்காரம் செய்து மாத்திரை போதும் ஓர் வீடு இன்றி,Maathirai podhum orveedu indri - க்ஷணகாலமும் இடைவிடாமல் வைகலும்,Vaigalum - நாள்தோறும் உன்னை மெய் கொள்ள காண்,Unnai mei kolla kaan - உன்னை மெய்யாகவே காண்பதற்கு விரும்பும்,Virumbum - விரும்புகின்றன. |
| 2978 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (காணவும் வேணும், கேட்கவும் வேணுமென்று செவிகள் ஆசைப்படுகின்றன வென்கிறார்.) 5 | கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5 | என் செவிகள்,En sevigal - எனது காதுகளானவை கண்களால் காண வரும் கொல் என்று ஆசையால்,Kangalal kaana varum kol endru aasaiyal - கண்களால் காணும்படி வருவனோ வென்று ஆசையினால் மண் கொண்ட வாமனன் ஏற,Mann konda vaamanan aera - (மாவலியிடம்) பூமியைக் கவர்ந்த வாமனன் (தன் மீது) ஏறுதலால். மகிழ்ந்து செல்,Magizhndhu sel - மகிழ்ச்சியோடு செல்கின்ற புள்ளின்,Pullin - கருத்மானுடைய பண்கொண்ட,Pankonda - ஸாம்வேத ஸ்வரப்ரசுரமான சிறகு ஒலி,Siragu oli - சிறகின் தொனியை பாவித்து,Paavithu - நினைத்து கிடந்து,Kidandhu - பரவசமாய் கிடந்து திண்கொள்ள ஓர்க்கும்,Thingolla oarkkum - உறுதியாக நிரூபிக்கின்றன. |
| 2979 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (என்னுடைய ஆவியானது உன்னுடைய கீர்த்தியைக் கேட்க வேணுமென்று விரும்புகிறதென்கிறார்.) 6 | செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப் பத்துற்றுப் புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவின்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6 | எனது ஆவி,Enadhu aavi - என் பிராணனானது. நின்,Nin - உன்னுடைய கீர்த்தி கனி என்னும் கவிகளே,Keerthi kani ennum kavigale - கீர்த்தியாகிய பழம் என்னலாம்படியான கவிகளையே காலம்,Kaalam - காலத்திற்கு ஏற்ற பண்,Pan - பண்களாகிற தேன்,Then - தேனிலே உறைப்ப,Uraippa - மிகவும் செறிய துற்று,Thutru - கலந்து செவிகளால் ஆர,Sevigalal aara - காதுகளால் பூர்ணாமக அநுபவிக்க புவியின் மேல்,Puviyin mel - பூமியின் மீது பொன் நெடு சக்கரத்து உன்னையே,Pon nedu sakkarathu unnaiyae - அழகிய பெரிய திருவாழியையுடைய தேவரீரையே அவிவு இன்றி,Avivu indri - இடையறாமல் ஆதரிக்கும்,Aadharikkum - விரும்பா நிற்கும். |
| 2980 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (மஹாபாபியாகையாலே நெஞ்சின் விடாய் தீர்க்கவும் பெற்றிலேனான நான் நெடுநாள் கூப்பிட்ட விடத்திலும் உன்னுடையவழகு காணவும் பெற்றிலேன் என்கிறார். அதாவது- கரணங்களையொழியத் தம்முடைய இழவு சொல்லுகிறபடி- “ப்ரஜைகளின் இழவும் பசியும் சொன்னார் கீழ்; தமிழவும் பசியும் சொல்லுகிறார் மேல்” என்பது ஈடு) 7 | ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்! சுடர் நேமியாய்! பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7 | ஆவியே,Aaviyae - என் உயிராயிருப்பவனே! ஆர் அமுதே!,Aar amudhe - அருமையான அமுதம் போன்றவனே! என்னை ஆள் உடை,Ennai aal udai - என்னை அடிமை கொண்ட அம் தூவி புள் உடையாய்,Am thoovi pul udaiyaai - அழகிய சிறகுள்ள கருத்மானை வாகனமாக வுடையவனே! சுடர் நேமியாய்,Sudar naemiyaai - ஒளிமிக்க திருவாழியையுடையவனே! உனகோலம்,Unakolam - உனது வடிவழகை பாவியேன்,Paaviyaan - பாவியாகிய நான் நெஞ்சம் புலம்ப பலகாலும் கூவியும்,Nenjam pulamba palakaalum kooviyum - மனம் துடிக்கப் பலகால் கூப்பிட்டும் காணப்பெறேன்,Kaanapperaen - கண்டு அநுபவிக்கப்பெற்றிலேன் |
| 2981 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (“பலகாலும் கூவியுங் காணப்பெறேனுன கோலமே” என்ற தம்மைக் குறித்து எம்பெருமான் ‘உம்முடைய அபேக்ஷிதம் பூர்த்திசெய்கைக்கீடான காலம் வரவேண்டாவோ? என்று அருளிச் செய்ததாகக்கொண்டு, ‘காலமும் நீயிட்ட வழக்கன்றோ? நான் இழக்கக் தகுமோ?’ என்கிறார்.) 8 | கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8 | கோலமே,Kolamey - அழகு தானே வடிவெடுத்தாற்போன்றுள்ளவனே! தாமரைக் கண்ணது,Thaamaraik kannathu - தாமரை போன்ற திருக்கண்களையுடையதாகிய ஓர் அஞ்சனம் நீலமே,Or anjanam neelamae - ஒப்பற்ற அஞ்சனமலைபோன்ற நீலநிறமுடையவனே! நின்று,Nindru - நிலை நின்று எனது ஆவியை,Enadhu aaviyai - என் ஆத்மாவை ஈர்கின்ற,Eerkinra - ஈடுபடுத்துகின்ற சீலமே,Seelamae - சீலகுணமே வடிவெடுத்திருப்பவனே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே,Senru sellaadhana mun nilaam kaalamae - இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்னும் முக்காலங்களுக்கும் நியாமகனே! உன்னை,Unnai - உன்னை எந்நாள்,Ennaal - என்றைக்கு கண்டு கொள்வன்,Kandu kolvan - கண்டு அநுபவிப்பேன். |
| 2982 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (அடியவர்களைக் காத்தருளு முபாயத்தை நன்குணர்ந்தவனும் ப்ரதிகூல நிரஸகத்தில் வல்லவனுமான உன்னை நான் சேருவது என்றைக்கு? என்கிறார்.) 9 | கொள்வன்நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை உள்வன்மை தீர, ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9 | மாவலி,Maavali - ‘மஹாபலியே! நான்,Naan - நான் மூ அடி,Moo adi - மூன்றடி நிலத்தை கொள்வன்,Kolvan - ஏற்றுக் கொள்வேன், தா,Thaa - கொடுப்பாயாக’ என்ற,Endra - என்ற சொன்ன கள்வனே,Kalvane - வஞ்சகனே! கஞ்சனை,Kanjanai - கம்ஸனை வஞ்சித்து,Vanjiththu - தொலைத்து வாணனை,Vaananai - பாணாசுரனை உள் வன்மைதீர,Ul vanmaitheera - மன உறுதியானது அழியும்படி ஓர் ஆயிரம் தோள் துணித்த,Or aayiram thol thuniththa - ஆயிரம் புயங்களையும் அறுத்த புள் வல்லாய்,Pul vallaai - கருடவாஹனனே! உன்னை,Unnai - உன்னை எஞ்ஞான்று,Ennyaanru - எக்காலம் பொருந்துவன்,Porundhuvan - அடையப்பெறுவேன்? |
| 2983 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (உன்னுடைய குணங்களுக்குத் தோற்று உன்னைக் காணப்பெறாத வ்யஸனத்தாலே துக்கப்படுகிற நான் இன்ன மெத்தன காலம் துக்கப்படக்கடவேனென்கிறார்.) 10 | பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10 | பொருந்திய,Porundhiya - ஒன்றோடொன்று பொருந்தி நின்ற மா மருதின் இடை,Maa marudhin idai - பெரிய மருத மரங்களின் நடுவே போய,Poya - தவழ்ந்து சென்று அவற்றைத் தள்ளி முறித்த எம் பெரும்தகாய்,Em perumthagaai - எம்பெருமானே! நான்,Naan - அடியேன் உன் கழல்,Un kazhal - உனது திருவடிகளை நாணிய,Naaniya - காணும் பொருட்டு பேதுஉற்று,Paethu utrru - ஈடுபாடுடையேனாய் வருந்தி,Varundhi - துக்கித்து வாசகம் மாலை கொண்டு,Vaasagam maalai kondu - சொல் மாலைகளைக்கொண்டு உன்னையே,Unnaiyae - உன்னையே நோக்கி இருந்து இருந்து,Irundhu irundhu - இடைவிடாது எத்தனை காலம்,Eththanai kaalam - எவ்வளவு காலம் புலம்புவன்,Pulambuvan - கதறுவேன்? |
| 2984 | திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (இத்திருவாய்மொழியின் இயல்மாத்திரத்தைத் தரித்தவர்கள் ஆரேனுமாகிலும் இதில் ஆஸாஸித்தபடியே அநுபவிக்கையில் தட்டில்லாத பரம போக்யமான திருநாட்டிலே செல்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள்சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல் வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11 | புலம்பு சீர்,Pulambu seer - (அனைவரும்) கொண்டாடுதற்குரிய திருக்குணங்களையுடையனாய் பூமி அளந்த பெருமானை,Bhoomi alandha perumaanai - பூமியை அளந்தவனான எம் பெருமானைக் குறித்து நலம் கொள் சீர்,Nalam kol seer - ஞானபக்தி முதலிய சிறப்பு வாய்ந்த நன் குருகூர் சடகோபன்;,Nan kurugoor Sadagopan - நன் குருகூர் சடகோபன்; சொல்,Sol - அருளிச்செய்த வலம் கொண்ட,Valam konda - மிக்க ஆற்றலையுடைய ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களுள் இவை ஓர் பத்தும்,Ivai or paththum - இப்பத்துப் பாசுரத்தையும் சொன்னால்,Sonnal - ஓதினால் யாவரும்,Yaavarum - (இன்னார் இனையார் என்னும் வாசியற) எல்லாரும் இலங்கு வான்,Ilangu vaan - சோதிமயமான பரமபதத்தை ஏறுவர்,Yeruvar - ஏறப்பெறுவர். |
| 3100 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (பரமஹிம்ஸையே போதுபோக்கான இந்த லோக யாத்ரையை நான் காணாதபடி என்னை யழைத்துக் கொண்டருளவேணுமென்கிறார். ஆழ்வார் திருப்புளியாழ்வாரடியிலே திருக்கண்களை மூடிக்கொண்டு எழுந்தருளியிரா நிற்கச் செய்தேயும் லோக யாத்ரை யுள்ளது உள்ளபடி யுணர்ந்து பேசுகிறது என்னே! என்று வியக்க வேண்டும் படியிராநின்றது.) 6 | மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்; அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை! வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6 | மறுக்கி,Marukki - பயமூட்டி வல் வலைபடுத்தி,Val valaipaduthi - தங்களது கொடிய வலையிலே சிக்கிக்கொள்ளும்படி செய்து குமைத்திட்டு கொன்று,Kumaittu konru - சித்ரவதம் பண்ணி உண்பர்,Unpar - தங்கள் வயிற்றை வளர்ப்பர்கள்; அறம் பொருளை அறிந்து ஓரார்,Aram porulai arindhu orar - தருமதத்துவத்தை யறிந்து கவனிப்பாரில்லை; (இவை என்ன உலகு இயற்கை!) வெறி துவளம் முடியானே,Veri thuvulam mudiyane - பரிமளம்மிக்க திருத்துழாயைத் திருமுடியிலணிந்துள்ளவனே ((இப்படிப்பட்ட ஒப்பனையழகைக்காட்டி) வினையேனை,Vinaiyene - பாவியான என்னை உனக்கு அற,Unakku ara - உன் விஷயத்திலேயே அற்றுத் தீரும்படி அடிமை கொண்டாய்,Adimai kondai - ஏற்கனவே அடிமைகொண்டிருப்பவனே! என் ஆர் அமுதே,En ar amudhe - எனக்கு பரிபூர்ணமான அமுதமே! இனி,Ini - உடனே கூய் அருளாய்,Kuy arulaye - அழைத்துக் கொண்டருள வேணும். |
| 3573 | திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உன்னுடைய அபி லஷிதங்கள் செய்ய ஒண்ணாத படி பிரதிபந்தகங்கள் உண்டு என்னில் –ஆஸ்ரிதருடைய ஆபத்து போக்குகைக்காக திவ்ய ஆயுதங்கள் ஏந்தி இருக்கிற நீ மாலி ப்ரப்ருதிகளான ராக்ஷஸரை முடித்தது போலே என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் -என்கிறார்.) 6 | காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல் மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற காய்சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப் புளிங்குடியாய் காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே–9-2-6 | பொன்மலையின் மீ மிசை,Ponmalaiyin mee misai - பொன்மயமான மஹாமேருமலையின் மேலே படிந்த கார்முகில் போல,Kaarmugil pola - காள மேகம் போலே காய் சினம் பறவை ஊர்ந்து,Kai sinam paravai oornthu - வெல்லிய சினத்தையுடைய பக்ஷி ராஜனை நடத்தி மா சினம் மாலி,Maa sinam maali - பெரிய சினத்தை யுடையனாய்க் கொண்டு வந்த மாலி யென்ன மான் மாலி,Maan maali - சமாலி யென்ன என்றவர் அங்கு பட,Enravar angu pada - இப்படிப்பட்டவர்கள் அங்கே முடியும் படியாக கனன்று முன் நின்ற,Kanandru mun ninra - சீறி அவர்கள் முன்னே நின்ற காய் சின யேந்தே!,Kai sina yenthe! - காய்சின வேந்தென்னுச் திரு நாமமுடைய பெருமானே! கதிர் முடியானே,Kathir mudiyane - விளங்காநின்ற திருவபிஷேகத்தை புடையவனே! கலி வயல் திரு புளிங்குடியாய்,Kali vayal thiru pulingudiyai - செழித்த வயலையுடை திருப் புளிங்குடியில் வாழ்பவனே! காய்சினம்,Kaisinam - வெவ்விய சினத்தை யுடைய ஆழி சங்கு வாள்வில் தண்டு,Aazhi sangu vaalvil thandu - திருவாழி முதலான பஞ்சாயு தங்களையும் வந்தி,Vandi - திருக்கைகளில் தரித்துக் கொண்டு எம் இடர் கடிவானே,Em idar kadi vaane - எமது இடங்களைப் போக்குமவனே. (திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் என்று கீழ்ப்பாட்டோடே அந்வயம்) |