Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: உயர்வற (13 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2675திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (இதில், மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.) 1
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1
என் மனனே, En manane - எனது மனமே!
உயர்வு அற, Uyarvu ara - (தன்னைப் பார்க்கிலும்) உயர்த்தி இல்லதாபடி
உயர், Uyar - உயர்ந்த
நலம், Nalam - (ஆனந்தம் முதலிய) கல்யாண குணங்களை.
உடையவன், Udayavan - (சுயமாக) உடையனானவன்
யவனவன், Yavanavan - யாவனொருவனோ
மயர்வு அற, Mayarvu ara - அஜ்ஞானம் நசிக்கும்படி
மதி நலம், Mathi nalam - ஞானத்தையும் பக்தியையும்
அருளினன், Arulinan - (அடியேனுக்குக்) கிருபை பண்ணினவன்
யவனவன், Yavanavan - யாவனொருவனோ.
அயர்வு அறும், Ayarvu arum - மறப்பு இல்லாத
அமரர்கள், Amaragal - நித்ய ஸூரிகளுக்கு
அதிபதி யவன், Adhipathi yavan - ஸ்வாமி யாவனொருவனோ
அவன், Avan - அந்த எம்பெருமானது
துயர் அறு சுடர் அடி, Thuyar aru sudar adi - துயர் அறப் பெற்ற சோதி மயமான திருவடிகளை
தொழுது, Thozhudhu - வணங்கி
எழு, Ezhu - நீ கடைத்தேறக் கடவை.
2676திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (எம்பெருமான் இவ்வாழ்வாரை வசப்படுத்திக் கொண்டது தனது திருக் கல்யாண குணங்களைக் காட்டி யாதலால் அக் குணங்களிலே முற்படி இழிந்து பேசினார். அக்குணங்கள் ஸ்வரூபத்தைப் பற்றி நிற்குமே யொழிய நிராச்ரயமாய் நில்லாது; ஆகவே அக் குணங்களுக்கு ஆச்ரயமான ஸ்வரூபத்தை அவள் அவன் என்று கீழ்ப்பாட்டிலேயே ப்ரஸ்தாவித்தார். அந்த திவ்ய ஸ்வரூபமானது சித்து அசித்து என்கிற இரண்டு தத்துவங்களிற் காட்டிலும் விலக்ஷணமாயிருக்கிற படியை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.) 2
மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2
மனனகம், Mananakam - மனத்திலே யிருக்கிற
மலம் அற, Malam ara - (காமம் கோபம் முதலிய) தீக்குணங்கள் கழியக் கழிய (அதனால்)
மலர், Malar - மலர்ந்ததாகி
மிசை எழ தரும், Misai ezha tharum - மேலே மேலே விருத்தி யடைகிற
மனன் உணர்வு, Manan unarvu - மாநஸ ஜ்ஞான மென்கிற யோக வுணர்ச்சியால்
அளவிலன், Alavilan - அளவிடப்படாதவனும்
பொறி உணர்வு, Pori unarvu - (மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும்) வெளியிந்திரியங்களின் ஞானத்தினால் அளவிடப்படாத’வனுமாய்
இனன், Inan - இப்படிப்பட்டவனும்
முழு உணர் நலம், Muzhu unar nalam - பரிபூர்ண ஞானானந்த ஸ்வரூபியும்
எதிர் நிகழ் கழிவினும், Edhir nigazh kazhivinum - எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகாலம் என்ற மூன்று காலங்களிலும்
இனன் இலன், Inan ilan - ஒப்பு இல்லாதவனும்
மிகுநரை இலன், Migunarai ilan - மேற்பட்டவரில்லாதவனுமா யிருப்பவன்
என் நன் உயிர், En nan uyir - எனக்கு நல்ல ஆத்மா.
2677திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (கல்யாண குணமுடைமையையும் நித்ய விபூதி யாட்சியையும் திவ்ய மங்கள் விக்ரஹ முடைமையையும் முதற் பாட்டிலே அநுஸந்தித்து, அவற்றிக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தின் வைலக்ஷண்யத்தை இரண்டாம் பாட்டிலே அருளிச் செய்து, அவற்றோடே சேர்த்து ஒரு கோர்வையாக அநுபவிக்கத் தக்கதான லீலா விபூதி யுடைமையை இப் பாட்டிலே அருளிச் செய்கிறார்.) 3
இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3
அது இலன் (என), Adhu ilan (Ena) - அந்தப் பொருள் (தனக்கு) இல்லாதவனென்றும்
இது உடையன் என, Idhu udaiyan ena - இந்தப் பொருளை யுடையவன் என்றும்
நினைவு அரியவன், Ninaivu ariyavan - நினைப்பதற்கு அருமைப் பட்டவனாகியும்
நிலன் இடை, Nilan idai - பூமி முதலான (கீழ்) உலகங்களிலும்
விசும்பிடை, Visumbidai - ஆகாசம் முதலான (மேல்) உலகங்களிலும் (உள்ள)
உருவினன், Uruvinan - ரூபியான அசேநப் பொருள்களை யுடையவனாகியும்
அருவினன், Aruvinan - ரூபியல்லாத சேதனர்களை யுடையவனாகியும்
புலனொடு, Pulanodu - விஷயமாகிற பொருள்களோடு (கலந்து நின்றாலும்)
புலன் அலன், Pulan alan - (தான்) புலன்களுக்கு விஷயமாகாதவனாகியும்
ஒழிவு இலன் பரந்த, Ozhivu ilan parandha - எபபொழுதும் எங்கம் வியாபித்திருக்கிற
அ நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே, A nalan udai oruvanai nanuginam naame - முன் சொன்ன கல்யாண குணங்களை யுடைய ஒப்பற்ற எம்பெருமானை நாம் கிட்டப் பெற்றோம்.
2678திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (பன்னீராயிரப்படி - அநந்தரம் மூன்று பாட்டுக்களாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப -ஸ்திதி -ப்ரவ்ருத்த்யாதிகள் பகவத் அதீனங்கள் என்கிறார் – அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூபமும் தத் அதீனம் என்று சாமாநாதி கரண்யத்தால் அருளிச் செய்கிறார்.) 4
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4
நாம், Naam - நாம் முதலான தன்மைப் பொருள்களும்
அவன் இவன் உவன், Avan ivan uvan - அவன் இவன் உவன் என்கிற ஆண் பால் சுட்டுப் பொருள்களும்
அவள் இவள் உவள், Aval ival uval - அவள் இவள் உவள் என்னும் பெண் பால் சுட்டுப் பொருள்களும்
எவள், Eval - எவள் என்கிற பெண் பால் வினாப் பொருளும்
தாம், Thaam - தாம் என்னும் பன்மைப் பொதுப் பொருளும்
அவர் இவர் உவர், Avar Ivar Uvar - அவர் இவர் உவர் என்னும் பலர் பால் சுட்டுப் பொருள்களும்
அது இது உது, Athu idhu udhu - அது இது உது என்னும் ஒன்றன் பால் சுட்டுப் பொருள்களும்
எது, Edhu - எது என்னும் ஒன்றன் பால் வினாப் பொருளும்
வீம் அவை, Veem avai - நசிக்குந் தன்மையுள்ள பொருள்களும்
இவை உவை அவை, Ivai uvai avai - இவை உவை அவை என்னும் பலவின் பால் சுட்டுப் பொருள்களும்
நலம் அவை, Nalam avai - நல்ல வஸ்துக்களும்
தீங்கு அவை, Theenghu avai - கெட்ட வஸ்துக்களும்
ஆம் அவை, Aam avai - எதிர் காலப் பொருள்களும்
ஆய அவை, Aaya avai - இறந்த காலப் பொருள்களும்
ஆய் நின்ற, Aay nindra - ஆகி நின்ற எல்லாப் பொருள்களும்
அவரே, Avare - அந்த ஊர்வேச்வரனேயாம்
2679திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –கர்மங்களுக்கு ஆராத்ய ஸ்வரூபம் பகவத் அதீனம் என்று சொல்லுகிறது.) 5
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5
அவர் அவர், Avar avar - அந்தந்த அதிகாரிகள்
தம தமது, Tham thamadhu - தங்கள் தங்களுடைய
அறிவு, Arivu - ஞானத்தாலே
அறி, Ari - அறியப் படுகிற
வகை வகை, Vagai vagai - பல பல படிகளாலே
அவரவர், Avar avar - அந்தந்த தெய்வங்களை
இறையவர் என, Iraiyavar ena - ஸ்வாமிகளென்றெண்ணி
அடி அடைவர் தன், Adi adaivar than - ஆச்ரயிப்பர்கள்;
அவரவர் இறையவர், Avar avar iraiyavar - அந்தந்த அதிகாரிகளால் தொழப்படுகிற தெய்வங்கள்
குறைவு இலர், Kuraivu ilar - அவரவர்கள் விரும்பின பலன்களைக் கொடுப்பதில் குறையற்றனவே; (எதனாலே என்னில்)
இறையவர், Iraiyavar - ஸர்வ ஸ்வாமியான ஸ்ரீமந் நாராயணன்
அவரவர், Avaravar - அந்தந்த அதிகாரிகள்
விதி வழி, Vidhi vazhi - தங்கள் தங்கள் அத்ருஷ்டாநுஸாரமாக
அடைய, Adaiya - பலன் பெறும்படியாக
நின்றனர், Nindranar - அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக எழுந்தருளி யுள்ளான். (அதனாலே காண்மின்.)
2680திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (லீலாவிபூதியின் ஸ்வரூபமும் ரக்ஷணமும் எம்பெருமானுடைய அதீநமென்பது கீழிரண்டு பாசுரங்களில் அருளிச்செய்யப்பட்டது; அதனுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனுடைய அதீநமே யென்கிறது இப்பாட்டில். இதில் முதலடியில் ப்ரவ்ருத்திகளைச் சொல்லுகிறது; இரண்டாமடியில் நிவ்ருத்திகளைச் சொல்லுகிறது.) 6
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6
நின்றனர், Nindranar - நிற்பவர்கள்
இருந்தனர், Irundhanar - இருப்பவர்கள்
கிடந்தனர், Kidandhanar - கிடப்பவர்கள்
திரிந்தனர், Thirindhanar - திரிபவர்கள் (ஆக இப்படிப் பட்டவர்களினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதலாகிற ப்ரவ்ருத்திகளெல்லாம் அப் பெருமானுடைய அதீநமே)
நின்றிலர், Nindrilnar - நில்லாதவர்கள்
இருந்திலர், Irundhilar - இராதவர்கள்
கிடந்திலர், Kidandhilar - கிடவாதவர்கள்
திரிந்திலர், Thirindilar - திரியாதவர்கள் (ஆக இப்படிப் பட்டவர்களினுடைய நில்லாமை இராமை கிடவாமை திரியாமை யாகிற நிவ்ருத்திகளெல்லாமும் அப் பெருமானுடைய அதீநமே.)
என்றும், Endrum - எப்போதும்
ஓர் இயல்வினர் என் நினைவு அரியவர், Or iyalvinar en ninaivu ariyavar - ஒரே விதமான இயற்கையை யுடையவரென்று நினைக்க முடியாதவரும் (அவரே) (அவர் தாம் யாவரென்னில்;)
என்றும், Endrum - எப்போதும்
ஓர் இயல்வொடு நின்ற, Or iyalvodu nindra - ஒரே விதமான இயற்கையோடு கூடி யிருக்கின்றவராய்
எம் திடர், Em thidar - திடமான பிரமாணத்தினால் ஸித்தாமன நம்முடையவர்.
2681திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (பன்னீராயிரப்படி -அநந்தரம் இந்த சாமாநாதி கரண்யம் சரீராத்மா பாவ சம்பந்த நிபந்தநம்-என்கிறார்.) 7
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7
திடம், Thidam - உறுதியான
விசும்பு, Visumbu - ஆகாசமென்ன
எரி, Eri - அக்நியென்ன
வளி, Vali - வாயுவென்ன
நீர், Neer - ஜலமென்ன
நிலம், Nilam - பூமியென்ன
அவை அவை தொறும், Avai avai thorum - அந்தந்த பதார்த்தங்களெல்லாவற்றிலும்
உடல் மிசை உயிர் என், Udal misai uyir en - சரீரத்தில் ஆத்மா வியாபிப்பதுபோல
கரந்து, Karandhu - மறைந்து
எங்கும் பரந்து, Engum parandhu - உள்ளிலும் வெளியிலும் வியாபித்து
இவைமிசை, Ivai misai - ஆகிய இவற்றை ஆதாரமாகக் கொண்டு
படர் பொருள் முழுவதும் ஆய், Padar porul muzhuvadhum aay - படர்ந்த பதார்த்தங்கள் யாவும் தானம்படி அவற்றுக்கு உபாதாநமாய் (அவற்றை உண்டாக்கி)
சுடர்மிகு சுருதியுள் உளன், Sudarmigu suruthiyul ulan - தேசு பொலிந்த வேதத்தில் உள்ளவனான எம்பெருமான்
இவை உண்ட சுரன், Ivai unda suran - (ஸம் ஹார காலத்தில்) இவற்றையெல்லாம் தன் பக்கலிலே யாக்கிக் கொள்ளும் தேவனாவான்.
2682திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஒன்பதினாயிரப்படி -இப் பாட்டில் இப்படி ஸ்ருதி சித்தனான சர்வேஸ்வரன் ஆகிறான் சிருஷ்டி சம்ஹார கர்த்தாக்களாக பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளிலே ஒருவன் ஆனாலோ என்று சொல்லுகிற குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள்.) 8
சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8
சுரர் அறிவு அரு நிலை, Surar arivu aru nilai - (பிரமன் முதலிய) தேவர்களுக்கும் அறிவொண்ணாத நிலைமையை உடைத்தான்
விண் முதல் முழுவதும், Vin mudhal muzhuvadhum - மூல ப்ரக்ருதி முதலாகவுள்ள ஸகல வஸ்துக்களுக்கும்
வரன் முதல் ஆய், Varan mudhal aay - சிறநத் காரண பூதனாய் (அவற்றை யெல்லாம் படைத்தவனாயும்)
அவை முழுது உண்ட, Avai muzhudhu unda - அவற்றை யெல்லாம் (பிரளய காலத்தில்) திரு வயிற்றிலே வைத்து நோக்குபவனாயுமுள்ள
பரபரன், Paraparan - பரம் புருஷன்
அரன் என, Aran ena - ருத்ர மூர்த்தியின் உருவத்தைத் தரித்தவனாகி
ஒரு மூன்று புரம் எரித்து, Oru moondru puram erithu - இணை யில்லாத திரி புரங்களை எரித்தும்
உலகு அழித்து, Ulagu azhithu - உலகங்களை அழித்தல் செய்தும்
அயன் என, Ayan ena - நான் முகக் கடவுள் என்னும் படியாக நின்று
அமரர்க்கு, Amararku - தேவர்களுக்கு
அறிவு இயந்தும், Arivu iyandhum - ஞானத்தைக் கொடுத்தும்
அலகு அமைத்து, Alagu amaithu - உலகங்களைப் படைத்தல் செய்தும்
உளன், Ulan - அவர்களுக்குள்ளே ஆத்மா வாயிருக்குமவன்
2683திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி -அநந்தரம் ஈஸ்வர தத்துவத்தை இசையாதே வேத பாஹ்யரில் பிரதம கண்யராய்-சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார் .) 9
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9
உளன் எனில், Ulan enil - ஈச்வரனுண்டென்று (வைதிகர்கள் சொல்லுகிறாப் போலே) சொன்னாலும்
உளன் அலன் எனில், Ulan alan enil - ஈச்வரனில்லை யென்று (நாஸ்திகர்களின் படியே) சொன்னாலும்
உளன், Ulan - ஈச்வரனுண்டென்பதாகவே தேறும்;
அவன் உருவம் அவன் அருவம், Avan uruvam avan aruvam - அப் பெருமானுக்கு ஸ்தூல சரீரங்களும் ஸூக்ஷ்ம சரீரங்களுமாம்;
இரு தகைமையோடு, Iru thagaimaiyodu - இரண்டு தன்மையோடும் (அதாவது ரூபியும் அரூபியுமான ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரபஞ்சங்களை வடிவாகக் கொண்டு)
உளன் என இலன் என், Ulan ena ilan en - உளனென்றும் இலனென்றுஞ் சொல்லப் படுகிற
இவை குணம் உடைமையின், Ivai gunam udaimaiyin - அஸ்தித்வ நாஸ்தித்வங்களை ப்ரகாரமாக வுடையனாகுந் தன்மையினாலே
இவ்வுருவுகள் இவ்வருவுகள், Ivvuruvugal ivvaruvugal - உருவமுடையனவாயும் உருவமில்லாதனவாயு மிருக்கின்ற உலகப் பொருள்கள் யாவும்
ஒழிவு இலன் பரந்து உளன், Ozhivu ilan parandhu ulan - எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலுமுள்ளவனாகவே ஸித்திப்பன்
2684திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) ((பரந்தண்பரவையுள்) பரத்துவத்தைப் பேசுவதான இப் பதிகத்தில் ஸ்ரீமந்நாராயணனுக்கே பரத்வமுள்ளதாக ஸ்தாபித்தல் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலுள்ளது. அந்த நாராயணத் திருநாமத்தை மேற்பதிகங்களிலே ஸ்பஷ்டமாகப் பேசியருளுகிற ஆழ்வார் இந்தப் பதிகத்திலே ஒருவாறு மறைத்தே காட்டினார்.) 10
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10
பரந்த, Parandha - எங்கும் வியாபித்த
தண் பரவையுள், Than paravaiyul - குளிர்ந்த கடலினுள்
நீர் தொறும், Neer thorum - ஜல பரமாணு தோறும்
பரந்த அண்டம், Parandha andam - விஸ்தாரமான இவ் வண்டத்தி லிருக்குமா போலே
இது என பரத்து உளன், Idu ena parathu ulan - நெருக்குண்ணாமல் இருப்பவனாய் (இப்படி)
நிலம், Nilam - பூமியிலும்
விசும்பு, Visumbu - மேலுலகங்களிலும்
ஒழிவு அற, Ozhivu ara - ஒன்றொழியாமே
கரந்த சில் இடம் தொறும், Karandha sil idam thorum - அதி ஸூக்ஷ்மமாய் அற்பமான இடங்கள் தோறும்
இடம், Idam - அவ் வவ் விடஙக்ளிலே
திகழ், Thigazh - விளங்கா நின்ற
பொருள் தொறும், Porul thorum - ஆத்ம வஸ்துக்கள் தோறும்
கரந்து, Karandhu - (வ்யாப்ய வஸ்துக்களும் அறியாதபடி) மறைந்து
எங்கும் பரந்து உளன், Engum parandhu ulan - எல்லா விடங்களிலும் வியாபித்திரா நின்றான் (யாவரெனில்;)
இவை உண்ட கரன், Ivai unda karan - இவ் வஸ்துக்களை ஸம்ஹார தசையிலும் தனக்குள்ளே யடக்கி, தான் ஸ்திரமாயிருக்கு மெம் பெருமான்.
2685திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (இப் பதிகம் கற்பார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிறது இது இவை பத்தும்வீடே யென்றது இப்பத்துப் பாசுரமும் வீடாகிய மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைத் தரவல்லது என்றபடி.) 11
கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11
கரம், Karam - திடமான
விசும்பு, Visumbu - ஆகாசமென்ன
எரி, Eri - அக்னியென்ன
வளி, Vali - வாயுவென்ன
நீர், Neer - ஜலமென்ன
நிலம், Nilam - பூமியென்ன (ஆகிய)
இவை மிசை, Ivai misai - இவற்றின் மீதுள்ள (இவற்றிற்கு ஸ்வபாவங்களாயுள்ள)
வரன், Varan - சிறந்த
நவில், Navil - சப்தமென்ன
திறல், Thiral - (கொளுத்தும்) சக்தி யென்ன
வலி, Vali - (எதையும் தூக்க வல்ல) பலமென்ன
அளி, Ali - குளிர்ச்சி யென்ன
பொறை, Porai - எதையும் பொறுத்துக் கொண்டிருப்பதாகிற க்ஷமையென்ன
ஆய் நின்ற, Aay ninra - ஆகிய இத் தருமங்களெல்லாம் தன் வசமாயிருக்கப் பெற்ற
பரன், Paran - ஸர்வேச்வரனுடைய
அடிமேல், Adimel - திருவடி விஷயமாக
குருகூர் சடகோபன் சொல், Kurukoor Sadagopan Sol - திருநகரியில் திருவவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த
நிரல் நிறை, Niral nirai - சப்த பூர்த்தியும் அர்த்த பூர்த்தியுங்கொண்ட
ஆயிரத்து, Ayirathu - ஆயிரம் பாசுரங்களிலே
இவை பத்தும், Ivai pathum - இப் பத்துப் பாசுரமும்
வீடு, Veedu - மோஷ பிராபகம்.
2699திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமானுடைய அவதாரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியவொண்ணாததென்கிறது இப்பாட்டில்) 3
அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-
அமைவு உடை, Amaivu udai - நல்ல பல பரிபாகத்தை யுடைத்தான
அறம் நெறி முழுவதும், Aram neri muzhu vadhum - தரும மார்க்கம் எல்லாவற்றாலும்
உயர்வு அற உயர்ந்து, Uyarvu ara uyarnthu - இதற்கு மேல் உயர்த்தி யில்லை என்னும் படியாக மிக வுமுயர்ந்தவர்களாகி
அற, Ara - மிகவும்
நிலம் அது ஆம், Nilam adhu aam - கை வந்திருக்கப் பெறுவதாகிற
அமைவு உடை, Amaivu udai - சதிரை யுடையரான
அமரரும், Amararum - பிரமன் முதலிய தேவர்களும்
யாவையும், Yaavaiyum - எல்லா அசேதனங்களும்
அமைவு உடை, Amaivu udai - (ஆச்சரியப் படத் தகுந்த அமைதியை யுடைய
கெடல், Kedal - முதல் ஸ்ருஷ்டியென்ன
ஸம்ஹாரமென்ன

யாவரும், Yaavarum - எல்லாச் சேதனர்களும்
தான் ஆம், Thaan aam - தானே யாம்படியான
அமைவு உடை, Amaivu udai - பொருத்தம் பொருந்திய
நாரணன், Naaranan - நாராயணனுடைய
மாயையை, Maayaiyai - அவதார ரஹஸ்யத்தை
யாரே அறிபவர், Yaare arivabar - ஆர் தாம் அறியவல்லார்? (ஆருமில்லை)
2861திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (மிகவும் விலக்ஷணனாய் மிகவும் எளியனாய் என்னை யடிமை கொண்ட எம்பெருமான், என்னைத் தவிர வேறொன்றையும் அறியாத படியானான், என்கிறார்) 11
பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11
பற்பநாபன்,Parpanaban - (உலகமெல்லாம் தோன்றுவதற்குக் காரணமான) தாமரையைத் திருநூபியிருடையவனும்
உயர்வு அற உயரும் பெருதிறலோன்,Uyarvu Ara Uyarum Peruthiralon - வேறு எங்கும் உயர்த்தியில்லை யென்னும்படி அபாரசக்தியையுடையவனும்
என்பான்,Enpaan - என்னிடத்து ஊற்றமுடையவனும்
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னை தந்த கற்பகம்,Ennai Aakkikondhu Enakke Thannai Thandha Karppagam - என்னை யுண்டாக்கி அங்கீகாரித்து எனக்கே அஸாதாரணமாம்படி தன்னைத் தந்த கல்ப வ்ருக்ஷராயனும்
என் அமுதம்,En Amudham - எனக்குப் பரம போக்யனும்
கார்முகில் போலும்,Kaarmugil Polum - காளமேகம் போன்றவனும்
வேங்கடம் நல்வெற்பன்,Vengadam Nalveppan - திருவேங்கடமென்கிற நல்ல திருமலையை இருப்பிடமாகவுடையவனும்
விசும்போர்பிரான்,Visumbor Piran - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
தாமோதரன்,Thaamodharan - ஆச்ரித விதேயனுமான எம்பெருமான்
எந்தை,Endhai - எனக்கு ஸ்வாமி.