Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: தெள்ளியார் (12 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
534நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 1
தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
தெள்ளியார் பலர், Thelliyar palar - தெளிவுடைய பக்தர்கள் பலர்
கை தொழும், Kai thozhum - கைகளார வணங்கப் பெற்ற
தேவனார், Thevanaar - ஸ்வாமியாய்
வள்ளல், Vallal - பரமோதாரனாய்
மாலிருஞ்சோலை மணாளனார், Maalirunjolai manaalanar - திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரம புருஷன்
பள்ளி கொள்ளும் இடத்து, Palli kollum idathu - பள்ளி கொண்டருளுமிடத்திலே
அடி கொட்டிட, Adi kottit - (அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக
கொள்ளும் ஆகில், Kollum aagil - (அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில்
நீ கூடிடு, Nee koodidu - நீ கூட வேணும்
535நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 2
காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
காட்டில் வேங்கடம், Kaatil vengadam - காட்டிலுள்ள திருவேங்கடமலையில
நகர் கண்ணபுரம், Nagar kannapuram - நகரமாகிய திருக்கண்ண புரத்திலும்
வாட்டம் இன்றி, Vaatam indri - மனக் குறை யில்லாமல்
மகிழ்ந்து, Magizhndhu - திருவுள்ளமுகந்து
உறை, Urai - நித்ய வாஸம் செய்தருளுகிற
வாமனன், Vaamanan - வாமநாவதாரம் செய்தருளிய எம்பெருமான்
ஒட்டரா வந்து, Ottaraa vandhu - ஓடி வந்து
என் கை பற்றி, En kai patri - என்னுடைய கையைப் பிடித்து
தன்னொடும், Thanodum - தன்னொடு
கூட்டும் ஆகில், Kootum aagil - அணைத்துக் கொள்வனாகில்
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
536நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 3
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே
பூ மகன், Poo magan - பூலிற் பிறந்த பிரமனும்
வானவர், Vaanavar - நித்யஸூரிகளும்
புகழ் போற்றுதற்கு, Pugazh potrudharku - கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு
ஆம், Aam - தகுந்த
மகன், Magan - புருஷோத்தமனாய்,
அணி வாள் நுதல் தேவகி, Ani vaal nuthal Dhevaki - மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய
மா மகன், Maa magan - சிறந்த புத்திரனாய்,
மிகு சீர் வசுதேவர் தம், Migu seer Vasudevar tham - மிகுந்த, நற் குணங்களை யுடையரான வசுதேவருடைய
கோ மகன், Ko magan - மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணபிரான்
வரில், Varil - (என்னை அணைக்க) வருவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
537நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 4
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே
ஆய்ச்சிமார்களும், Aaichimaargalum - இடைச்சிகளும்
ஆயரும், Aayarum - இடையரும்
அஞ்சிட, Anjida - பயப்படும்படியாக
பூத்த நீள் கடம்பு ஏறி, Pootha neel kadambu eri - புஷ்பித்ததாய் உயர்ந்திருந்த கடப்ப மரத்தின் மேல் ஏறி
புக பாய்ந்து, Puga paaindhu - அங்கு நின்றும் எழும்பிக் குதித்து
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய, Vaaitha kaaliyan mel nadam aadiya - பாக்கியசாலியான காளியநாகத்தின் மேல் நாட்ய சாஸ்த்ர நிபுணனான நர்த்தனஞ் செய்த
கூத்தனார் வரில், Koothanaar varil - கண்ணபிரான் வரக்கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
538நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 5
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே
ஓடை, Odai - நெற்றிப் பட்டத்தை யுடைத்தாய்
மா மதம், Maa madham - மிக்க மதத்தை யுடைத்தான
யானை, Yaanai - (குவலயா பீடமென்னும்) யானையை
உதைத்தவன், Udhaithavan - உதைத்து முடித்த கண்ண பிரான்
மாடம் மாளிகை சூழ் மதுரை பதி, Maadam maaligai soozh mathurai pathi - மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே
நாடி, Naadi - (நம் வீட்டைத்) தேடிக் கொண்டு
நம் தெருவின் நடுவே வந்திட்டு, Nam theruvin naduve vandhitu - நம்முடைய வீதியின் நடுவிலே வந்து
கூடும் ஆகில், Koodum aagil - (நம்மோடு) கட்டுவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
539நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 6
அற்றவன் மருத முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே
அற்றவன், Attravan - (ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய்
மருதம் முறிய, Marutham muriya - (யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக
நடை கற்றவன், Nadai katravan - தவழ் நடை நடக்கக் கற்றவனாய்
கஞ்சனை, Kanjanai - கம்சனை
வஞ்சனையில், Vanjanaiyil - வஞ்சனையிலே
செற்றவன், Setravan - கொன்று முடித்தவனாய்
திகழும் மதுரை பதி கொற்றவன், Thigazhum mathurai pathi kotravan - விளங்குகின்ற மதுரைமா நகர்க்கு அரசனான கண்ணபிரான்
வரில், Varil - வந்திடுவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
540நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 7
அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே
அன்று, Andru - முற் காலத்தில்
இன்னாதன செய் சிசுபாலனும், Inaadhana sei sisubalanum - வெறுக்கக் கூடிய கெட்ட காரியங்களையே செய்து வந்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும், Nindra neel marudhum - வழியிடையே நின்ற பெரிய இரட்டை மருத மரங்களும்
எருதும், Erudhum - ஏழு ரிஷபங்களும்
புள்ளும், Pullum - பகாஸுரனும்
வென்றி வேல் விறல் கஞ்சனும், Vendri vel viral kanjanum - வெற்றியை விளைவிக்க வல்ல வேலாயுத மென்ன (அதைப் பிடிக்கத்தக்க) மிடுக்ககென்ன இவற்றை யுடையவனான் கம்சனும்
வீழ, Veezha - முடிந்து விழும்படியாக
முன், Mun - எல்லார் கண்ணெதிரிலும்
கொன்றவன், Kondravan - கொன்றொழித்த கண்ண பிரான்
வரில், Varil - வரக்கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
541நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 8
ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்துவிளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே
ஆவல் அன்பு உடையார் தம், Aaval anbu udaiyaar tham - ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய
மனத்து அன்றி மேவலன், Manathu andri mevalan - நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும்
விரை சூழ் துவராபதி காவலன், Virai soozh Dhuvaraapathi kaavalan - நல்ல வாஸனை சூழ்ந்த த்வாரகாபுரிக்கு நிர்வாஹகனும்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன், Kanru meithu vilaiyaadum kovalan - கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமாகிய கண்ணபிரான்
வரில், Varil - வரக் கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
542நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 9
கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே
பண்டு, Pandu - முற் காலத்திலே
கோலம் கொண்ட குறள் உரு ஆய், Kolam konda kural uru aai - (முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும் முஞ்ஜியும் பவித்ரமும் தண்டுமான) கோலம் பூண்ட வாமந ரூபியாய்
மாவலி தன், Maavali than - பெரு வேள்வியில் சென்று
அண்டமும், Andamum - மேலுலகங்களையும்
நிலனும், Nilanum - கீழுலகங்களையும்
அடி ஒன்றினால், Adi ondrinaal - ஒவ்வோரடியாலே
கொண்டவன், Kondavan - அளந்து கொண்ட த்ரிவிக்ரமன்
வரில், Varil - வருவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
543நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 10
பழகு நான் மறையின் பொருளாய் மத
மொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே
பழகு நால்மறையின் பொருள் ஆய, Pazhagu naalmaraiyin porul aaya - அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த, Madham ozhugu vaaranam uyya alitha - மத ஜலம் பெருகா நின்ற கஜேந்த்ராழ்வான் (துயர் நீங்கி) வாழும்படி க்ருபை செய்தருளினவனாய்
எம் அழகனார், Em azhaganaar - எம்மை ஈடுபடுத்த வல்ல அழகை யுடையனாய்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார், Ani aaichiyar sindhaiyul kuzhaganaar - அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருக்கு மவனான கண்ணபிரான்
வரில், Varil - வரக் கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
544நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 11
ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே
ஊடல் கூடல், Oodal koodal - ஊடலோடே கூடியிருக்கை யென்ன, (அதாவது ப்ரணய ரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன)
உணர்தல், Uṇardhal - குறைகளை உணர்த்துகை யென்ன
புணர்தல், Puṇardhal - (பிறகு) ஸம்ச்லேஷிக்கை யென்ன (இப்படிப் பட்ட காரியங்களிலே)
முன், Muṉ - அநாதி காலமாக
நீடு நின்ற, Needu nindra - நீடித்துப் பொருந்தி நின்ற
நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலை, Nirai pugazh aaichiyar koodalai - நிறைந்த புகழையுடைய ஆய்ப் பெண்கள் (இழைத்த) கூடலைப் பற்றி
குழல் கோதை, Kuzhal kothai - அழகிய மயிர் முடியை யுடையனான ஆண்டாள்
கூறிய , Kooriya - அருளிச் செய்த
பாடல் பத்தும், paadal pathum - பத்துப் பாட்டுக்களையும்
வல்லார்க்கு, vallarkku - ஓத வல்லவர்களுக்கு
பாவம் இல்லை, paavam illai - (எம்பெருமானைப் பிரிந்து துக்கிக்கும்படியான) பாவம் இல்லையாம்
3191திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (கீழ்ப்பாட்டில் “அகற்றி யென்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்” என்னக் கேட்ட எம்பெருமான், ‘ஆழ்வீர்! உம்முடைய வினைகளாகிற பிரபல விரோதிகள் காரணமாக நீர் அருஞ்சேற்றில் விழுந்து கிடந்திராகில் இதற்கு நான் என் செய்வது? என்ன; அதற்கு ஆழ்வார், ‘பிரானே! இதற்கு மேற்பட்ட பிரபல விரோதிகளையெல்லாம் அநாயாஸமாக அழிந்திருக்கிற வுனக்கு இது ஒரு வார்த்தையோ? இப்படியும் ஒரு கள்ளத்தனமான பேச்சுண்டோ?’ என்கிறார்.) 9
புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான் மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9
புள்ளின் வாய் பிளந்தாய்,Pullin vaai pilandhaay - பகாஸுரனையழித்தவனே!
மருது இடைபோயினாய்,Marudhu idai poyinaay - இரட்டை மருதமரங்களினிடையே தவழ்ந்து சென்றவனே!
ஏழ் எருது அடர்ந்த,Ezhu erudhu adarntha - ஏழு ரிஷபங்களையும் கலிதொலைத்தன்னாயும்
என்,En - என் நிறத்திலே
கள்ளம் மாயவனே,Kallam maayavaney - கள்ள மாயங்களைச் செய்து போருமவனே!
கரு மாணிக்கம் சுடரே,Karu maanikam sudarey - கரியமாணிக்கத்தின் ஒளிபோன்ற வடிவையுடையவனே!
தெள்ளியார்,Thelliyaar - தெளிந்தவர்களாயும்
திரு நால்மறைசன் வல்லார்,Thiru naal maraichan vallaar - வீலக்ஷணமான நான்கு வேதங்களிலும் வல்லவர்களாயுமிருப்பார்
மலி,Mali - நிறைந்திருக்கப்பெற்ற
தண்,Than - குளிர்ந்த
கிரீவரமங்கை உன்,Sreevaramangai un - வானமாமலைப்பதியிலே
இருந்த எந்தாய்,Irundha endhaay - எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியே!
எனக்கு,Enakku - அடியேனுக்கு
உய்யும் ஆறு,Uyyum aaru - உஜ்ஜீவநோபாயத்தை
அருளாய்,Arulaay - அருளிச் செய்ய வேணும்.