| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2850 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (இப்பதிகத்தை இனிதாக அநுஸந்திக்குமவர்கள், பாகவதர் என்ற போக்கு உரியவராவர் என்று, இது கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11 | கண்ணித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ் நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும் பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11 | கேசவன் தமர்,Kaesavan Thamar - எம்பெருமானடியாராகப் பெறுவர்ர்கள். |
| 2851 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (பின்னடிகளை முத்துற அந்வயித்துக்கொண்டு முன்னடிகளைப் பிறகு அந்வயித்துக் கொள்க. ஸர்வேச்வரனாய், அழகு நிறைந்த திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டனாய், நித்யஸூரி நாதனாய் எனக்கு ஸ்வாமியாயிருக்கின்ற நாராயணனாலே, என்னோடு ஏதேனுமொருபடி ஸம்பந்தமுடையாரெல்லாரும், கேசவன்தமர் என்னும் படியான சிறப்புப் பெற்றார்கள்; அதனாலே நம்முடைய ஸ்ரீவைஷ்ணவஸ்ரீவிலக்ஷணமாகவுள்ளது என்கிறார்.) 1 | கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும் மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1 | ஈசன்,Eesan - எல்லார்க்கும் ஸ்வாமியாய் என்,En - என்னுடைய அனுபவத்திற்கு உரிய கரு செம்கோலம் கண்ணன்,Karu Sem Kolam Kannan - சிவந்து அழகிய திருக்கண்களை நான் அநுபவிக்கும்படி செய்தவனாய் விண்ணோர்நாயகன்,Vinnor Nayagan - நித்யஸூரிநாதனாய் எம்பிரான்,Empiran - எனக்கு உபகாரகனாய் எம்மான்,Emman - எனது ஸ்வாமியாய் நாராயணனாலே,Naaraayananaale - நாராயணனாலே எமர்,Emar - என்னைச் சேர்ந்தவர்கள் கீழ் மேல் ஏழ் ஏழு பிறப்பும்,Keel Mel Yezh Yezhu Pirappum - கீழும் மேலுமுள்ள ஏழேழ் பிறப்புக்களிலும் கேசவன் தமர்,Kesavan Thamar - பகவத் பக்தராகப் பெற்றார்கள் இது,Idu - இப்படிப்பட்ட மா சதிர்,Ma Sadir - பெரிய சிறப்பை பெற்று,Petru - அடைந்து நம்முடை வாழ்வு வாய்க்கின்ற ஆ,Nammudai Vaazhvu Vaaykinraa Aa - நமது வாழ்ச்சி வளருகிறபடி என்னே!; |
| 2852 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (கீழ்ப்பாட்டில், நாராயணன் என்கிற திருநாமம் ப்ரஸ்துதாமகவே அதனுடைய அர்த்தாநுபவம் பண்ணுவதாக இப்பாசுரம் அமைகின்றது.) 2 | நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன் காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2 | நாரணன்,Naaranan - நாராயணனும் முழு எழ் உலகுக்கும்நாதன்,Muzhu Yezh Ulakukkum Naadhan - எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும் காரணம் கிரிசை கரமம் இவை முதல்வன்,Kaaranam Kirisai Karamam Ivai Mudhalvan - காரணப் பொருள்கள் காரியப் பொருள்கள் பிரயோஜனங்கள் ஆகிய இவற்றுக்கு நிர்வாஹகனும் சீர்அணங்கு அமரர்,Seer Anangu Amarar - சீர்மை பொருந்திய திவ்யர்களான ந்த்யஸூரிகளாலும் பிறர் பலரும்,Pirar Palarum - மற்றும் பலபேர்களாலும் தொழுது ஏத்த நின்று,Thozhudhu Aeththa Nindru - வணங்கித் துதிக்கப்பட்டு வாரணத்தை,Vaaranathai - (கம்ஸனது)யானையினுடைய மருப்பு,Maruppu - கொம்பை ஒசித்த,Ositha - முறித்த பிரான்,Piran - உபகாரகனும் என் மாதவன்,En Madhavan - எனக்கு உரியவனுமான திருமால் எந்தை,Endhai - என்னை யடிமை கொண்டவன் |
| 2853 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (எம்பெருமான் என்னிடத்தில் இவ்வளவு கனத்த விஷயீகாரஞ் செய்வதற்கு அடியாக நான் செய்த ஸாதாநுஷ்டாநம் பெரிதாக வொன்றுமில்லை; மாதவன் என்று வெறுமனே வாயாற் சொன்னவளவையே கொண்டு என்னுடைய தீமைகளெல்லாவற்றையும் போக்கி ஆட்கொண்டானென்கிறார்.) 3 | மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம் கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3 | எம்மான் என் கோவிந்தன்,Emman En Govindhan - எனக்காகக் கண்ணனாயவதரித்த எம்பெருமான் மாதவன் என்றதே கொண்டு,Madhavan Endrathe Kondhu - ‘மாதவன்’ என்று நான் வாயினாற் சொன்ன வளவையே கொண்டு என்னை,Ennai - என் விஷயத்தில் இனி இப்பால் பட்டது,Ini Ippaal Pattadhu - இனிமேலுள்ள காலமெல்லாம் அவங்கள் யாதும்,Avangal Yaadhum - ஒருவிதமான குறையும் சேர்கொடேன் என்று,Serkoden Endru - சேரவொட்டேள் என்று ஸங்கல்பித்துக்கொண்டு என் உள் புகுந்து இருந்து,En Ul Pugundhu Irundhu - என்னுள்ளே பிரவேசித்திருந்து தீது அவம் கெடுக்கும்,Theedhu Avam Kedukkum - பலவகைப் பாவங்களையும் போக்கி யருள்கினாய் செம் தாமரை கண்,Sem Thaamarai Kan - செந்தாமரை போன்ற திருக் கண்களையுடையனாய் குன்றம்,Kunram - குன்றம் போல் நிலைபெயராமலிருந்து கோது அவம் இல் என் கன்னல் கட்டி,Godhu Avam Il En Kannal Katti - கோதும் அவமுமில்லாத கன்னல் கட்டிபோலே எனக்கு இனியனாயிருக்கின்றான். |
| 2854 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (என்னை மாத்திரமன்றியே என்னோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரையுங்கூட என்னைப்போலே யாக்கின எம்பெருமானுடைய ஸாமாத்தியம் என்னே! என்று வியந்து பேசும் பாசுரமிது.) 4 | கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4 | வல்லன்,Vallan - ஸர்வகக்தனும் எம்பிரான்,Empiran - எமக்கு உபகாரங்கள் செய்பவனுமான விட்டு,Vittu - விஷ்ணுபகவான் (எமக்குச் செய்ததுயாதெனில்) கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து,Govindhan Kudakoothan Kovalan Endru Endrae Kunithu - கோவிந்தன் என்றும் குடக் கூத்தாடுபவன்; என்றும் கோவலன் என்றும் இத்தகைய திருநாமங்களையே சொல்லிக் கூத்தாடி தேவும்,Thevum - பரத்வத்தையும் தன்னையும்,Thannaiyum - தானான தன்மையாகிய ஸௌலப்யத்தையும் பாடி,Paadi - புகழ்ந்துபாடி ஆட,Aada - திரியும்படி திருத்தி,Thiruththi - கடாக்ஷத்து கொண்டு,Kondu - அடியேனை என் பாவம் தன்னையும்,En Paavam Thannaiyum - எனது பாவங்களையும் பாற கைத்து,Paara Kaithu - ஓடவடித்து எமர் ஏழ் எழு பிறப்பும்,Emar Yezh Yezhu Pirappum - எம்மைச் சேர்ந்தவர்கள் ஏழேழ் பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்,Mevum Thanmaiyam Aakinaan - (தன்னை) அடையும்படியான தன்மையை யுடையோமாம்படி செய்தான். |
| 2855 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (தம்மையும் தம்முடைய ஸம்பந்த ஸம்பந்திகளையும் எம்பெருமான் வைஷ்ணவராக்கினது, வடிவத்தைக் காட்டி யென்கிறார்.) 5 | விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள் விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5 | விட்டு இலங்கு முடி அம்மான்,Vittu Ilanku Mudi Ammaan - நன்றாக விளங்குகின்ற திரு வபிஷேகத்தை யுடைய ஸ்வாமியான மதுசூதனன் தனக்கு,Madhusudhanan Thanukku - மதுவைக் கொன்ற பெருமானுக்கு பாதம் கைகள் கண்கள்,Padham Kaigal Kangal - திருவடிகளும் திருக்கைகளும் திருக்கண்களும் விட்டு இலங்கு செம் சோதி தாமரை,Vittu Ilanku Sem Sodhi Thaamarai - விரிந்து விளங்குகின்ற சிவந்த சுடரை யுடைய தாமரைப் பூக்களேயாம் திருஉடம்பு,Thiru Uthampu - திரு மேனியோ வென்றால். விட்டு இலங்கு கரும் சுடர் மலையே,Vittu Ilanku Karum Sudar Malaiye - நன்கு விளங்குகின்ற நீலவர்ணப்ரபையை யுடைய மலைபோன்றது; சீர்சங்கு,Seer Sangku - சிறந்த சங்கானது விட்டு இலங்கு மதியம்,Vittu Ilanku Mathiyam - மிக விளங்குகின்ற சந்திரனைப் போன்றது; சக்கரம்,Chakkaram - திருவாழி பரிதி,Parithi - ஸூர்யனைப்போன்றது; |
| 2856 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (எம்பெருமான் பக்கலிலே நான் ஊன்றுகைக்காக அவன்றான் நெடுங்காலம் க்ருஷி பண்ணினதுண்டு அதுவும் பரமக்கிருபையாலே யென்கிறார்.) 6 | மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும் எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6 | மது சூதனை அன்றி,Madhusudhananai Andri - மதுவை முடித்த எம்பெருமானைத்தவிர மற்று இலேன் என்று,Matru Ilaindru Endru - வேறொரு பற்றுடையேனல்லேன் என்று அநுஸந்தித்து எத்தாலும்,Ethaalum - எந்தவஸ்துவினாலும் கருமம் இன்றி,Karumam Indri - ஒரு காரியமில்லாமல் (அநந்யப்ரயோஜநமாக) சூழ்ந்த,Soozhnda - அவனது திருக்குணங்களை வளைந்த பாடல்கள்,Padalgal - பாசுரங்களை நின்று பாடி ஆட,Nindru Paadi Aada - நிலை நின்று பாடியாடும்படி ஊழி ஊழி தொறும்,Oozhi Oozhi Thorum - ஸதாகாலமும் எனைத்து ஓர்பிறப்பும்,Enaithu Orpirappum - (நான் பிறந்த) எல்லாப் பிறவிகள் தோறும் எதிர்,Edhir - எனக்கெதிரே சூழல் புக்கு எனக்கே,Soozhal Pukku Enakke - சூழ்ச்சியோடே அவதாரித்து என்பொருட்டே அருள்கள் செய்ய,Arulkal Seyya - க்ருபை பண்ணுதற்கு எனக்கு ஏல்,Enakku Ael - எனக்கென்னலே அம்மான் திரி விக்கிரமனை விதி சூழ்ந்துத,Ammaan Thiri Vikkiramanaai Vithi Soozhnthudh - ஸ்வாமியான த்ரிவிக்ரமனை விதி சூழ்ந்து கொண்டது |
| 2857 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (எம்பெருமானே! உன்னுடைய குணாநுஸந்தாந பூர்வகமாக உன்னைத் துதித்துவணங்கி யநுபவிக்கு மிவிவளவையே பிரயோஜனமாகக் கொண்டிருக்கும் படியான மனத்தை எனக்குத் தந்தருளினாய்; உன்னுடைய ஸாமாத்தியமே ஸாமாத்தியம்! என்று கொண்டாடுகிறார்.) 7 | திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய் உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7 | என் வாமனனே,En Vaamanane - எனக்காக வாமனாவதாரமெடுத்த பகவானே! திரிவிக்கிரமன் என்று,Thiruvikraman Endru - மூவடியாலே உலகங்களையெல்லாமளந்தவன் என்றும் செம் தாமரை கண் எம்மான் என்று,Sem Thaamarai Kan Emman Endru - செந்தாமரை போன்ற கண்களையுடைய ஸ்வாமியென்றும் என் செம் கனிவாய உருவில் பொலிந்த வெள்ளை பளிங்கு நிறத்தனன் என்று,En Sem Kanivaai Uruvil Polindha Vellai Palingu Nira Thanan Endru - எனக்கு போக்யமாய்ச் சிவந்து கனிந்த அதரத்தினுடைய அழகுபொலிந்த சுத்த ஸ்படிக வர்ணமான திரு முத்துக்களையுடையவன் என்றும். உள்ளி,Ulli - அநுஸந்திந்து பரவி,Paravi - துதித்து பணிந்து,Panindhu - வணங்கி பல் ஊழி ஊழி,Pal Oozhi Oozhi - நெடுங்காலம் நின் பாத பங்கயமே,Nin Paadha Pangayame - உனது பாதாரவிந்தங்களிலேயே மருவி தொழும் மனம்,Maruvi Thozhum Manam - பொருந்தி அடிமை செய்தற்குறுப்பான மனத்தை தந்தாய்,Thandhaai - கொடுத்தருளினாய் வல்லை காண்,Vallai Kaan - நீ ஸமர்த்தனன்றே? |
| 2858 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (தம் விஷயத்தில் எம்பெருமான் பண்ணிந மஹோபகாரத்திற்கு இன்னது கைம்மாறு செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றமையைத் தெரிவிக்கும் பாசுரமிது, அவன் செய்த உபகாரம் யாதெனில், தன்னை யநுபவிப்பதற்கு உறுப்பாகாமலிருந்த நெஞ்சை மாற்றிப் பதஞ்செய்வித்த விதுவே மஹோபகார மென்கிறார்.) 8 | வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன் காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8 | என் சிரீதரனே,En Sreedharane - எனது திருமாலே! வாமனன் என்று,Vaamanan Endru - வாமன மூர்த்தியே யென்று சொல்லியும் என் மரதகம் வண்ணன் என்று,En Maradhagam Vannan Endru - மரதகம் போன்ற வொளியையுடைய எம்பெருமானேயென்று சொல்லியும் தாமரைக் கண்ணினன் என்று,Thaamarai Kanninan Endru - புண்டாரிகாக்ஷனே யென்று சொல்லியும் காமனை பயந்தாய் என்று,Kaamanai Payanthai Endru - மன்மதனை மகனாகப் பெற்றவனே யென்று சொல்லியும். உன் கழல்,Un Kazhal - உன் திருவடிகளில் பாடி பணிந்து,Paadi Panindhu - பாடிவணங்கி தூ மனத்தனன் ஆய்,Thoo Manathanaan Aay - பரிசுத்தமான மனத்தையுடையேனாய் பிறவி துழதி நீங்க,Piravi Thuzhadi Neenga - பிறவித் துயரம் தீரும் படியாக என்னை தீ மனம் கெடுத்தாய்,Ennai Thee Manam Keduthaai - என்னைத் தீய மனம் அற்றவனாக ஆக்கினாய்; உனக்கு,Unakku - இப்பெரு நன்றி செய்தவுனக்கு என் செய்கேன்,En Seykaen - என்ன கைம்மாறு செய்வேன்? |
| 2859 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (கீழ் ஆடியாடி யென்கிற நான்காந் திருவாய்மொழியில் நான்பட்ட துயரமெல்லாம் தொலைந்து மகிழ்ந்தேனாம்படி என்னுள்ளே வந்து பேராதபடி புகுந்தருளி என்னுடைய இந்திரியங்களை அடக்கி ஆண்டனையே! என்று உகக்கிறார்.) 9 | சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9 | என் இருடீகேசனே,En IrudiKesane - அம்பெருமானான ஹ் ரு ஷீ கேசனே! சிரீ இதரன் என்று,Sreedharan Endru - ஸ்ரீதரனே! என்றும் செய்ய தாமரை கண்ணன் என்று,Seyya Thaamarai Kanni Nan Endru - செந்தாமரைக் கண்ணனே! என்றும் இரா பகல்,Ira pagal - இரவும் பகலும் வாய் வொரி இ,Vaai Vori e - வாய் பிதற்றி அலமந்து,Alamandhu - சுழன்று கண்கள் நீர்மல்கி,Kangal Neermalgi - கண்களில் நீர்ததும்பப் பெற்று வெம் உயிர்த்து உயிர்த்து,Vem Uyiruthu Uyiruthu - வெப்பமாக நெடுமூச் செறிந்து மாரி இய தீவினை மாள,Maari Iya Theevinai Maala - சேர்ந்திருக்கின்ற பாவங்கள் தொலையும்படியாகவும் இன்பம் வளர,Inbam Valara - ஆனந்தம் பெருகும்படியாகவும் வைகல் வைகல்,Vaigal Vaigal - ஷணந்தோறும் உன்னை,Unnai - உன்னை என் உள்,En Ul - என் நெஞ்கினுள்ளே இரி இவைத் தனை,Iri Ivaith Thanai - இருத்தி வைத்தாய்; (இப்படியும் ஒரு உபகாரமுண்டோ!) |
| 2860 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (இங்ஙனம் மஹோபகாரகனான எம்பெருமானை ஒருநாளும் விடலாகாதென்று நெஞ்சுக்கு உரைக்கும் முகத்தால். தம்முடைய அத்யவஸாயத்தை வெளியிடுகிறார்) 10 | இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10 | நெஞ்சே,Nenje - மனமே! தெருடி ஆகில்,Therudi Aagil - நீ அறிவுடையை யாகில் இருடீகேசன் என்று,IrudiKesane Endru - ஹ்ருஷீகேசனே யென்றும் எம்பிரான் என்று,Empiran Endru - எம்பிரானே யென்றும் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த,Ilankai Arakkar Kulam Murudu Theertha - இலங்கையிலிருந்த ராக்ஷ குலத்திற்கு முருடான ராவணனைத் பிரான் என்று,Piran Endru - தொலைத்த பிரானே யென்றும் எம்மான் என்று,Emman Endru - எம்பெருமானே யென்றும் அமரர் பெம்மான் என்று,Amarar Pemman Endru - நித்யஸூரிநாதனே யென்றும் சொல்லி வணங்கு,Vanangu - அவனை வணங்கு; திண்ணம் அறி,Thinnam Ari - இதைத் திடமாக அறிவாயாக; அறிந்து,Arindhu - அறிந்தபின் மருடி ஏலும்,Marudi Yelum - (மீண்டும்) சுலங்குவாயாகிலும் நம்பி பற்பநாபனை,Nambi Parpanabanai - குணபரிபூர்ணனான பத்மநாபனை விடேல் கண்டாய்,Videl Kandaai - விடாதே கொள். |
| 2861 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (மிகவும் விலக்ஷணனாய் மிகவும் எளியனாய் என்னை யடிமை கொண்ட எம்பெருமான், என்னைத் தவிர வேறொன்றையும் அறியாத படியானான், என்கிறார்) 11 | பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன் எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11 | பற்பநாபன்,Parpanaban - (உலகமெல்லாம் தோன்றுவதற்குக் காரணமான) தாமரையைத் திருநூபியிருடையவனும் உயர்வு அற உயரும் பெருதிறலோன்,Uyarvu Ara Uyarum Peruthiralon - வேறு எங்கும் உயர்த்தியில்லை யென்னும்படி அபாரசக்தியையுடையவனும் என்பான்,Enpaan - என்னிடத்து ஊற்றமுடையவனும் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னை தந்த கற்பகம்,Ennai Aakkikondhu Enakke Thannai Thandha Karppagam - என்னை யுண்டாக்கி அங்கீகாரித்து எனக்கே அஸாதாரணமாம்படி தன்னைத் தந்த கல்ப வ்ருக்ஷராயனும் என் அமுதம்,En Amudham - எனக்குப் பரம போக்யனும் கார்முகில் போலும்,Kaarmugil Polum - காளமேகம் போன்றவனும் வேங்கடம் நல்வெற்பன்,Vengadam Nalveppan - திருவேங்கடமென்கிற நல்ல திருமலையை இருப்பிடமாகவுடையவனும் விசும்போர்பிரான்,Visumbor Piran - நித்யஸூரிகளுக்குத் தலைவனும் தாமோதரன்,Thaamodharan - ஆச்ரித விதேயனுமான எம்பெருமான் எந்தை,Endhai - எனக்கு ஸ்வாமி. |
| 2862 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (தம் விஷயத்தில் அம்பெருமான் பண்ணின உபகாரம் மாஞானிகளாலும் அளவிட வொண்ணாதது என்கிறார். அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு இலக்காயிருக்கின்ற தம்மைப்போன்றவர்கள் அவனைக் காணக்கூடுமேயல்லது, ‘நம்முயற்சியாலே யறிவோம்’ என்றிருப்பார்க்கு அறியலாகாது என்கிறாராகவுமாம்.) 12 | தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை, ஆமோதரமறிய வொருவ ர்க்கென்றெதொழுமவர்கள், தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும், ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே.–2-7-12 | தாமோதரனை,Dhamodharanai - தாமோதரனென்கிற திரு நாமமுடையனும் தனி முதல்வனை,Thani Mudhalvanai - ஒப்பற்ற ஸகல ஜகத்காரண பூதனும் ஞாலம் உண்டவனை,Gnalam Undavanai - (பிரளயகாலத்தில்) உலகங்களைத் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனுமான எம்பெருமானை தரம் அறிய,Tharam Ariya - பகுத்து அறிவதற்கு ஒருவர்க்கு ஆமோ என்று,Oruvarukku Aamo Endru - ஒருவராலும் ஸாத்யமாகாதென்று துணிந்து தொழுமவர்கள் தாமோதரன்,Thozhumavaragal Dhamodharan - வணங்குகின்றவர்களான உரு ஆகிய சிவற்கும் திசை முகற்கும்,Uru Aakiya Sivargum Thisai Mukargum - எம்பெருமானுக்கு அவயவபூதர்களான சிவனுக்கும் பிரமனுக்கும் என் ஆழி வண்ணனை எம்மானை,En Aazhi Vannanai Emmanai - கடல் வண்ணனான எம்பெருமானை தரம் அறிய ஆமோ,Tharam Ariya Aamo - அளவிட்டு அறிதல் கூடுமோ? |
| 2863 | திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (இத்திருவாய்மொழி வல்லார் எம்பெருமானைப் பெறுவர்ரென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 13 | வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை, கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன், பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும், பண்ணில்பன்னிரு நாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே.–2-7-13 | வண்ணம் மாமணி சோதியை,Vannam Maamani Sodhiyai - நல்ல நிறமுடைய நீலமணியின் ஒளியை யுடையனாய் கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனாகத் திருவவதாரித்தவனாய் நெடு மாலை,Nedu Maalai - (ஆச்ரிதர் பக்கலில்) அளவு கடந்து செல்லுகின்ற வியாமோஹத்தை யுடையவனான எம்பெருமானைக் குறித்து தென் குருகூர்சடகோபன்,Then Kurugoor Sadagopan - ஆழ்வார் அமரர் தலை மகனை,Amarar Thalai Maganai - நித்யஸூரி நிர்வாஹகனாய் பண்ணிய,Panniya - அருளிச்செய்த தமிழ்மாலை ஆயிரத்துள்,Thamizh Maalai Aayirathul - தமிழ் மாலையாகிய இவ்வாயிரத்தினுள்ளும் பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு இவை பன்னிரண்டும்,Pannil Panniru Naamap Pattu Ivai Pannirandu - பண்ணோடு கூடின த்வாதச நாம கர்ப்பிதமர்ன இப் பன்னிரண்டு பாசுரங்களும் அண்ணல்,Annal - ஸர்வேச்வரனுடைய தாள்,Thaal - திருவடிகளை அணைவிக்கும்,Anaivikum - சேர்ப்பிக்கும் |