Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: அஞ்சிறைய (14 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
932அமலனாதிபிரான் || 6
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே
துண்டம், Thundam - ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான)
வெண் பிறையன், Ven Piraiyan - வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய
துயர், Thuyar - (பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை
தீர்த்தவன், Theerthavan - போக்கினவனும்
அம் சிறைய வண்டு, Am Siraiya Vantu - அழகிய சிறகை யுடைய வண்டுகள்
வாழ், Vaazh - வாழ்தற்கிடமான
பொழில் சூழ், Pozhil Soozh - சோலைகள் சூழப் பெற்ற
அரங்கம் நகர், Arangam Nagar - திருவரங்கப் பெரு நகரிலே
மேய, Mae, Meya - பொருந்தி யிரா நின்ற
அப்பன், Appan - ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய
அண்டர், Andar - அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம், Andam - அண்டங்களையும்
பகிரண்டம், Pakirandam - அண்டாவரணங்களையும்
ஒரு மா நிலம், Oru Maa Nilam - ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும்
எழு மால் வரை, Ezh Maal Varai - ஏழு குல பர்வதங்களையும்
முற்றும், Muttrum - சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்
உண்ட, Undu - அமுது செய்த
கண்டம் கண்டீர், Gandam Kandeer - திருக் கழுத்துக் கிடீர்
அடியேனை, Adiyenai - தாஸனான என்னை
உய்யக் கொண்டது, Uyyak Kondadhu - உஜ்ஜீவிப்பித்தது
2063திரு நெடும் தாண்டகம் || ழ்ப் பாட்டில் ‘கடல்வண்ணர்‘ என்று கட்டுவிச்சி சொன்ன திருநாமத்தைத் திருத் தாயர் வினவ வந்தார்க்குச் சொல்லி அநுவதிக்கையாலும், எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்று தானும் வாய் வெருவுகையாலும் முந்திய அவஸ்தையிற் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்தது; அவ்வளவிலும் காதலன் வந்து முகங்காட்டப் பெறாமையாலே ஆற்றாமை மீதூர்ந்து இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்; அதனை வினவ வந்தார்க்குச் சொல்லி க்லேசப்படுகிறாள் திருத்தாய். இப் பெண் பிள்ளை நின்ற நிலை இது; இவளுடைய ஸ்வரூப ஹாநி இது; எனக்கு இவள் அடங்காதபடியானது இது; இத்தனைக்கும் நான் செய்த பாபமே காரணமாயிற்றென்று சொல்லி யிரங்குகிறாளாயிற்று. கீழ்ப்பாட்டில் “அயர்த்து இரங்கும்“ என்று சொன்ன இரக்கத்தின் வகைகளை “நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்“ இத்யாதியாலே விவரிக்கிறபடி. 12
நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்,
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே. - 12
நெஞ்சு,Nenju - (இப் பெண்பிள்ளை) மனமானது
உருகி,Urugu - நீர்ப்பண்டமாயுருகி
கண் பனிப்ப நிற்கும்,Kan Panippa Nirkum - கண்ணீர் பெருக நிற்கின்றாள்;
சோரும்,Sorum - மோஹிக்கின்றாள்;
நெடிது உயிர்க்கும்,Nedidhu Uyirkkum - பெருமூச்சுவிடுகின்றாள்;
உண்டு அறியாள்,Undru AriyaaL - போஜனம் செய்தறியாள்;
உறக்கம் பேணாள்,Urakkam PaenaaL - உறங்க விரும்புகின்றிலன்;
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்,Nanju Aravil Thuyil Amarntha Nambee Ennum - விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வான் மீது யோக நித்திரைபுரிகின்ற நம்பீ! என்கின்றாள்;
வம்பு ஆர் பூ வய்ல் ஆலி மைந்தா என்னும்,Vambu Aar Poo Vayl Aali Maindhaa Ennum - பரிமளம் மிக்க பூக்களை யுடைய கழனிகள் சூழ்ந்த திருவாலியிலுள்ள நித்யயுவாவே! என்கிறாள்;
அம் சிறைய புள் கொடியே ஆடும்,Am Siraiya Pul Kodiyae Aaduum - அழகிய சிறகையுடைய கொடியாகிய பெரிய திருவடியை அநுகரித்து ஆடுகின்றாள்;
பாடும்,Paaduum - பாடுகின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்,Thozhi Ani Arangam Aadudhumo Ennum - ‘தோழீ! (நாம்) திருவரங்கத் துறையிலே படிந்தாடப் பெறுவோமோ?‘ என்கின்றாள்;
என் சிறகின் கீழ் அடங்கா,En Siragin Keezh Adangaa - என் கைக்கடங்காத
பெண்ணை பெற்றேன்,Pennai Petren - பெண்மகளைப் பெற்ற நான்
இரு நிலத்து,Iru Nilathu - விசாலமான இப்பூமண்டலத்திலே
ஓர் பழி படைத்தேன்,Or Palzi Padathen - ஒப்பற்ற பழியை ஸாம்பாதித்துக் கொண்டேன்;
ஏபாவம்,E Paavam - அந்தோ!.
2707திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (இத்திருவாய்மொழி வல்லவர்கள் நித்யஸூரிகளோடொக்க உயர்த்தியைப் போய்ப்பெற்று ஸம்ஸார ஸம்பந்தமறப் பெறுவரென்று பலன் சொல்லிக்காட்டுகிற பாசுரம் இது) 11
அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

அமரர், Amarar - தேவர்கள்
தொழுது எழ, Tholuthu elu - ஸேவித்து விருத்தியை யடைய
அமரர், Amarar - பொருந்தின
பொழில் வளம், Pozhil valam - சோலை வளமுள்ள
குருகூர், Kurugoor - திருக் குருகூரில் அவதரித்த
சடகோபன், Sadagopan - ஆழ்வாருடைய
குற்றேவல்கள், Kurraevalgal - (வாக்கினாலாகிய) கைங்கரியமான
அமரர் சுவை, Amarar suvai - சுவையமைந்த
ஆயிரத்து அவற்றினுள், Aayirathu avatrinul - ஆயிரம் பாடலுக்குள்
அலைகடல், Alaikadal - அலையெறிகின்ற திருப்பாற்கடலை
கடைந்தவன் தன்னை, Kadaindavan thanai - கடைந்தவனான ஸர்வேச்வரனைக் குறித்து
இவை பத்தும், Ivai pattum - இந்தப் பத்துப் பாசுரமும்
வல்லார், Vallar - கற்க வல்லவர்கள்
அமரரோடு, Amararodu - நித்யஸூரிகளோடு
உயர்வில், Uyarvil - பரமபதத்தில்
சென்று, sendru - சேர்ந்து
தம்பிறவி, Thambiravi - தம் பிறப்பாகிற
அம் சிறை, Am sirai - உறுதியான பந்தத்தில் நின்றும்
அறுவர், Aruvar - நீங்கப் பெறுவர்கள்.
2708திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) பிரிவாற்றாமையோடு கூடியிருக்கின்ற பராங்குசநாயகி “பிரிந்தாரிரங்குவது நெய்தல் நிலத்திலே” என்ற தமிழர்களது கொள்கையின்படி இப்போது நெய்தல் நிலத்திலே யிருக்கின்றாளென்று கொள்ள வேணும் 1
அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1
am siraiya,அம் சிறைய - அழகிய சிறகுகளை யுடைய
madam,மடம் - இளமை தங்கிய (அல்லது, விதேயமான)
naray,நாராய் - நாரைப் பறவையே!
aliyathai,அளியத்தாய் - தயை பண்ணுதற்கு உரியாய்!
niyum,நீயும் - நீயும்
nin,நின் - உன்னுடைய
am siraiya sevalum aai,அம் சிறைய சேவலும் ஆய் - அழகிய சிறகுகளை யுடைய ஆணுமாய் (இருவருங்கூடி)
avan,அவன் - அந்த எம்பெருமான்
van siraiyil vaikkil,வன் சிறையில் வைக்கில் - கடினமான சிறையிலே வைத்திட்டால்
aa endru enakku aruli,ஆஆ என்று எனக்கு அருளி - ஐயோவென்று என் விஷயத்தில் கருணை கூர்ந்து
vemsirai pul uyarntharku,வெம்சிறை புள் உயர்ந்தார்க்கு - விரோதி பயங்கரமான சிறகுகளை யுடைய பெரிய திருவடியைக் கொடியாக வெடுத்த பெருமானுக்கு
en vidu thootu aai,என் விடு தூது ஆய் - என்னால் விடப்பட்ட தூதாய்
sendrakal,சென்றக்கால் - போனால்,
vaippundal,வைப்புண்டால் - அதை நீ அநுபவித்திருப்பாயானால்
en seyyum,என் செய்யும் - என்ன கெடுதலுண்டாகும்?
2709திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாடடில் நாரையைத் தூது போகுமாறு இரத்த தலைவி, அங்குப் போனால் சொல்ல வேண்டிய செய்தியைச் சில குயில்களுக்குச் சொல்லுகின்றாள். ஒருவரை யழைத்து விட்டு மற்றொருவர்க்கும் ஸமாச்சாரஞ் சொல்லுகிற விதனால் மிக்க கலக்கம் விளங்கும். இத்தகைய கலக்கத்தை யுண்டு பண்ணுவதே யாயிற்று விஷயாந்தரங்களிக் காட்டில் பகவத் விஷயத்திற்குண்டான ஏற்றம். 2
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2
inam kuyil kaal,இனம் குயில் காள் - கூட்டமான குயில்களே!
en,என் - என்னுடைய
seyya thaamarai kan,செய்ய தாமரை கண் - செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடைய
perumaanukku,பெருமானுக்கு - எம்பெருமானுக்கு
en thootu aay,என் தூது ஆய் - நான் விட்ட தூதாகி
uraithakkaal,உரைத்தக்கால் - சென்று சமாசாரமறிவித்தால்
en seyyum,என் செய்யும் - (அந்தச் செயல் உங்களுக்கு என்ன தீமையை விளைவிக்கும்?
neer alire,நீர் அலிரே - (நெடு நாளாகப் பழகிப் போந்த) நீங்களல்லீர்களோ?
mun seytha,முன் செய்த - முற்பிறப்பில் பண்ணின
muzhuvinaiyaal,முழுவினையால் - பெரும் பாவத்தினால்
thiruaṭi keel,திருஅடி கீழ் - திருவடிகளிலே
kutreval seyya,குற்றேவல் செய்ய - கைங்கரியம் பண்ணுவதற்கு
mun muyaladhen,முன் முயலாதேன் - முன்னம் முயற்சி செய்யாத நான்
inam,இனம் - இன்னமும்
agalvadhuvo vidhi,அகல்வதுவோ விதி - விலகி யிருப்தேயோ முறைமை?
2710திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாட்டில் “முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல், முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே” என்றதற்கு மேல் ‘ஆழ்வீர்! இங்ஙனஞ் சொல்வது தகாது, செய்த பாபம் அனுபவித்தே தீரவேண்டுங்காணும்’ என்று எம்பெருமான் திருவுள்ளமாகக் கூடுமென்று கருதி, ‘நான் பன்ணின பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது? என்று சொல்லுங்கோள்’ என்று சில அன்னங்களைக் குறித்துச் சொல்லுகிற பாசுரம் இது 3
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3
vidhiyinaal,விதியினால் - பாக்ய வசத்தினால்
pedai manakkum,பெடை மணக்கும் - பேடையோடு கூடிக் களித்திருக்கின்ற
mel nadaiya,மெல் நடைய - மெல்லிய நடையை யுடைய
kalvarku,கள்வர்க்கு - கபடமுடைய பெருமானுக்கு,
madhiyilen,மதியிலேன் - புத்தியில்லாத என்னுடைய
val vinaiye maalaathu,வல் வினையே மாளாது - பெரிய பாவந்தானே முடியாதிருப்பது!
endru,என்று - என்று சொல்லி,
annangal,அன்னங்காள் - அன்னப் பறவைகளே!
madhiyinaal,மதியினால் - புத்தியினால்
kurai maan aay,குறள் மாண் ஆய் - வாமந ப்ரம்மசாரியாய்
ulaga irandha,உலக இரந்த - உலகங்களை யாசித்த
oruthi,ஒருத்தி - ஒரு பெண்ணாவள்
madhi ellaam ul kalangi,மதி எல்லாம் உள் கலங்கி - புத்தி முழுதும் அடி மண்டி யோடே கலங்கப் பெற்று
mayangum,மயங்கும் - அறிவழிந்து கிடக்கின்றாள்
aal,ஆல் - அந்தோ!
enneer,என்னீர் - என்று சொல்லுங்கோள்.
2711திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) (என்னீர்மைகண்டிரங்கி) பராங்குசநாயகி பல பறவைகளை விளித்துச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்ட சில மகன்றில் பறவைகள் ‘நமக்கும் கைங்கரியம் செய்யச் சிறித அவகாசம் நேர்ந்தது’ என்று மகிழ்ந்து அருகே வந்து எங்களுக்கு ஏதேனும் நியமனமுண்டோ?, என்று கேட்பனபோல நிற்க, அவற்றைக் கண்டு, ‘அந்தோ! எனது நிலைமையைப் பலகாலும் கண்டுவைத்தும் இரங்காதே போனவர்க்கு நான் என்ன ஸமாசாரம் சொல்லியனுப்புவது?’ என்று நசையற்றவளாய், பின்னையும் வெறுமனிருக்கமாட்டாமையினாலே, ‘மகன்றில்களே! என்னிலைமையை அவர்க்குச் சொல்லுவீர்களோ? மாட்டீர்களோ? என்கிறாள். 4
என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4
en neermai kandu,என் நீர்மை கண்டு - எனது ஸ்வபாவத்தை (நேரில்) பார்த்திருந்தும்
irangi,இரங்கி - (பிரிவு காலத்தில்) மனமிரங்கி
idhu thagadhu ennaadha,இது தகாது என்னாத - இப்படி நாம் பிரிந்திருப்பது தகுதியன்று என்றிராத
en neela mugil vannarkku,என் நீல முகில் வண்ணர்க்கு - நீல மேகத்தின் நிறம் போன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு
en sollai,என் சொல்லி - என்ன வார்த்தையைச்
yaan sollu kaeno,யான் சொல்லு கேனோ - சொல்லி நான் சொல்லப்போகிறேன்!;
ini,இனி - இனிமேல்
avargal,அவர்கள் - (பராங்குச நாயகியாகிய) அவளிடத்தில்
nal neermai,நல் நீர்மை - நல்லுயிர்
thangaadhu,தங்காது - தங்கி யிருக்க மாட்டாது
endru oru vaay soll,என்று ஒரு வாய்ச் சொல் - என்றொரு வாய்ச் சொல்லை
nal neelam maganril kaal,நல் நீலம் மகன்றில் காள் - நல்ல நீலநிறமான மகன்றிற் பறவைகளே!
nalguthiroo nalgheero,நல்குதிரோ நல்கீரோ - (எம்பெருமானிடத்துச் சென்று) சொல்லுவீர்களோ மாட்டீர்களோ
2712திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) நான் எக்கேடாவது கெட்டுப்போகிறேன்; நாராயணனென்றும் ஸகல லோக ஸம்ரக்ஷகனென்றும் விருது சுமக்கின்ற அவர்க்கு ஒரு கெடுதல் இல்லாமலிருக்க வேண்டுமே; என்னொருத்தியை ரக்ஷியாமையினாலே, அவர் படைத்த பெயரெல்லாம் மழுங்கிப் போகுமன்றோ; அங்ஙனம் போகாமே நோக்கிக் கொள்ளும்படி சொல்ல வேணுமென்று ஒரு குருகை நோக்கி இரக்கின்றாள். ஒருவடைய அபேக்ஷையையும் எதிர்பாராமல் உலகங்களுக்கெல்லாம் அபீஷ்டங்களை அளிக்கின்றாரே; அப்படிப்பட்டவர் பாவியான எனக்குத் தானே உதவலாகாது. அவர் நாராயணரன்றோ. நார பதத்தின் அர்த்தத்தில் நான் சேர்ந்தவளல்லேனோ? என்னை விட்டால் அவர்க்கு நாராயணத்வம் எங்ஙனே நிரம்பும்? என்ற கருத்து உள்ளுறையும். 5
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5
malgu,மல்கு - நிறைந்த
neer,நீர் - குளிர்ச்சியாகிய ஸ்வபாவத்தையுடைய
punal,புனல் - நீர்வாய்ந்த
padappai,படப்பை - பூந்தோட்டங்களிலே
iraidther,இரைதேர் - இரை தேடுகின்ற
van siru kuruke,வண் சிறு குருகே - அழகிய சிறிய குருகே!.
thaann nalgi,தான் நல்கி - தானே அநுக்ரஹித்து
kaathu,காத்து - அநிஷ்டங்களையெல்லாம் போக்கி
pozhil ezum,பொழில் எழும் - ஏழுலகங்களையும்
alikkum,அளிக்கும் - ரக்ஷித்துக் கொண்டிருக்கின்றானெம்பெருமான்;
vinaiyeerkaeyo nalgathaanaa aagaaathu,வினையேற்கேயோ நல்கத்தான் ஆகாது - (அப்படிப்பட்ட அவன்) பாபியான எனக்கு மாத்திரமேயோ தான் கிருபை பண்ணலாகாது;
naarannanai kandakkaal,நாரணனை கண்டக்கால் - (அந்த) நாராயணனை கண்ட பொழுதில்,
malgum neer kannaeerku,மல்கும் நீர் கண்ணேற்கு - நீர் நிறைந்த கண்களை யுடைய (அழு கண்ணியான) எனக்கு
or vaasagam kondoo,ஓர் வாசகம் கொண்டு - (அப்பெருமாளிடத்தில் நின்று) ஒரு வார்த்தையைக் கொணர்ந்து
arulaay,அருளாய் - கிருபை பண்ண வேணும்
2713திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) என்னுடைய வருத்தத்தைப் பரிஹரியாதொழிந்தாலும், தம்முடைய நாராயணத்வத்தையாவது காப்பாற்றிக்கொள்ளச் சொல்ல வேணுமென்றாள் கீழ்ப்பாட்டில்; இதற்கு எம்பெருமான் ‘நம்முடைய நாராயணத்வம் தொலைந்தாலும் தொலையட்டும்; ஒருவிதத்திலும் நமக்கு ஈடல்லாத இந்தப் பராங்குசநாயகியோடு கலந்து அவத்யம் பொறுவதிற்காட்டிலும் நாராயணத்வம் அழிய நிற்பதே அமையும் என்று திருவுள்ளமாகக் கூடுமென்று கருதிய தலைவி, அவருக்கும் அவத்யம் வராமல் எனக்கும் ஸத்தை கிடக்கும்படியாக ஒரு வழியுண்டு; தாம் திருவீதி உலாவப்புறப்படுதல், ஆனைக்கு அருள் செய்ப்புறப்படுதல், என்றிப்படிப் சில யாத்திரைகள் செய்வதுண்டே; அப்படி ஏதேனுமொரு வியாஜங்கொண்டு எங்கள் தெருவே போனால் தமக்கும் அவத்யம் வாராது. நானும் சாலக வாசல் பற்றி நோக்கி ஜீவிப்பேன்; இதை அவர்க்குச் சொல்லாய் என்று ஒரு வண்டை இரக்கிறாள் 6
அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6
Aazhi vazhi vandae,ஆழி வழி வண்டே - வட்டமான ரேகைகளை யுடைய வண்டே!
Arul aazhi ammaanai,அருள் ஆழி அம்மானை - அருட்கடலான எம்பெருமானை
Kandakkaal,கண்டக்கால் - காணும் பொழுது (அவரை நோக்கி)
Arulaadha neer,அருளாத நீர் - (இவ்வளவில்) கிருபை பண்ணாத நீர்
Aruli,அருளி - கிருபை பண்ணி
Avar aavi thuvara mun,அவர் ஆவி துவரா முன் - அவருடைய (ஆழ்வாருடைய) உயிர் நீர்மை கெடுவதற்கு முன்னே
Arul aazhi pul,அருள் ஆழி புள் - கருணைக் கடலான பெரிய திருவடியை
Avar veedhi orunaal,அவர் வீதி - அவரிருக்கிற வீதியில்
Orunaal,ஒருநாள் - ஒரு நாளாயினும்
kadaveer endru,கடவீர் என்று - நடத்துவீராக என்று
Idhu solli,இது சொல்லி - இந்த வார்த்தையைச் சொல்லி
arul,அருள் - கிருபை பண்ண வேணும்;
Yaamum,யாமும் - நாமும்
En pilaitthoom,என் பிழைத்தோம் - என்ன குற்றம் செய்தோம்?
2714திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) (என் பிழை கோப்பதுபோல.) இத்திருவாய் மொழிக்கு இப்பாட்டு உயிர் நிலையாயிருக்கும். பிழைகளைப் பொறுத்தருளுந் தன்மையாகிற அபராத ஸஹத்வமென்னுங் குணம் பற்றாசாகத் தூது விடுகிறாளென்று அவதாரிகையிற் கூறினது இப் பாட்டைக் கணிசித்தேயாம். பிழைகளை அளவின்றிச் செய்துவைதபுது ‘அருளாழிப்புட்கடவீர் அவர்வீதி யொருநாள்’ என்றால் இது எப்படி ஸாத்யமாகும்? என்று எம்பெருமானுக்குக் கருத்தாகக் கூடுமென்று நினைத்த பராங்குசநாயகி, எங்கள் குற்றத்தை மாத்திரமேயோ பார்ப்பது. குற்றங்களைப் பொறுத்தருள்பவர் என்று அவர் தாம் விருது பெற்றிருக்கின்றாரே, அதனைச் சிறிது பார்க்க வேண்டவோவென்று சொல்” என்று தன்கிளியை இரக்கின்றாள். 7
என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7
Enbu,என்பு - எலும்பிலே
Izhai,இழை - நூலிழையை
Koappathu pol,கோப்பது போல் - நுழைத்தாற்போல
Pani vaadai,பனி வாடை - குளிச்சி பொருந்திய வாடைக் காற்று
Eerkinra,ஈர்க்கின்ற - வருத்துகின்றது;
En,என் - (இப்படி வருத்தப் படுகின்ற) என்னுடைய
Pizhaiye,பிழையே - குற்றங்களையே
Ninaintharuli,நினைந்தருளி - எண்ணி
Oruvaai,ஒருவாய் - ஒரு வார்த்தை
Sol,சொல் - சொல்ல வேணும்;
Enbu,என்பு - எலும்பை
Izaikkum,இழைக்கும் - செதுக்குகிற
Arulaadha,அருளாத - கிருபை பண்ணாமலிருக்கிற
Thiru maalaarkku,திரு மாலார்க்கு - லக்ஷ்மீ நாதனுக்கு (லக்ஷ்மீ நாதனிடம் சென்று)
Thiruvadiyin,திருவடியின் - ஸ்வாமியான தேவரீருடைய
Thakavinukku,தகவினுக்கு - கிருபைக்கு (பாங்காகும்படி)
En pizhaitthaal endru,என் பிழைத்தாள் என்று - (பராங்குச நாயகி) என்ன பிழை செய்து விட்டாள்? என்று
Ila kiliye,இள கிளியே - கிளிப்பிள்ளாய்!
Yaan valartha nee alaiye,யான் வளர்த்த நீ அலையே - நான் வளர்த்த நீ அல்லையோ? (வேறு பட்டாயோ)
2715திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) தன்னுடைய நிலைமையைப் பூவென்னும் ஒரு பக்ஷிக்குக் காட்டி ‘ஏற்கெனவே உன்னை நான் வேண்டிக்கொண்டிருக்கும் எனக்காகத் தூது செல்லாதே உபேஷித்திருப்பாய்; நானோ இப்போது முடியப் புகா நின்றேன்; இனிமேல் உனக்கு இரையிடுவாரை நீயே தேடிக்கொள்ளாய் என்று சரம ஸமயத்தில் வார்த்தைபோல சொல்லுகின்றாள் 8
நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8
Siru poovaai,சிறு பூவாய் - சிறிய பூவையே!
Nee alaiye,நீ அலையே - நீ அல்லவோ? (இப்போது வேறுபட்டாயோ?)
Nedumaalaarkku,நெடுமாலார்க்கு - ‘புருஷோத்தமனுக்கு
En thoodu aay,என் தூது ஆய் - என் தூதாகிச் சென்று
Enathu noi,எனது நோய் - எனது பிரிவாற்றாமையை
Nuval enna,நுவல் என்ன - ‘சொல்’ என்று வேண்டச் செய்தேயும்
Nuvalaadhe,நுவலாதே - (போய்ச்) சொல்லாதே
Irundhozhindhaay,இருந்தொழிந்தாய் - வாளா இருந்திட்டாய்,
Naan,நான் - யான்
Saayalodu,சாயலொடு - ஒளியோடு கூடின
Mani maamai,மணி மாமை - அழகாகிய நிறத்தை
Thalarndhaen,தளர்ந்தேன் - இழந்தேன்;
Ini,இனி - இப்படியான பின்பு
Unadhu,உனது - உன்னுடைய
Vaai alagil,வாய் அலகில் - வாயலகுக்குள்ளே
In,இன் - மதுரமான
Adisil,அடிசில் - இரையை
Vaipparai,வைப்பாரை - ஊட்ட வல்லவர்களை
Naadaay,நாடாய் - தேடிக் கொள்
2716திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாட்டில் “சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான்” என்றாரே. அப்படி மேனி மெலிந்திருக்கிற ஸமயத்திலே ஒரு வாடைக் காற்று வந்து உடம்பிலே பட்டது; “என்றும் புன்வாடை: யிதுகண்டறிதுமிவ்வாறு வெம்மை, ஒன்று முருகவுஞ் சுவடுந் தெரியலம்” (திருவிருத்தம்) என்றாப்போலே அதனுடைய அபூர்வமான கொடுமையைக் கண்டு அரசர்கள் ராஜ த்ரோஹஞ் செய்தவர்களை ஹிம்ஸிக்க வேற்காரை அனுப்பி யிருக்க வேணும்’ என நினைத்து அந்த வாடையை நோக்கிச் சொல்லுகின்றாள்- ‘ வாடையே! நான் சொல்லுகிறவொரு வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்து விட்டு, பின்னை அவசியம் வந்து என்னை முடித்திடாய்’ என்கிறாள். 9
நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9
Oodu aadu,ஊடு ஆடு - அங்குமிங்கும் நடையாடுகிற
Pani vaadaay,பனி வாடாய் - குளிர் காற்றே!
Naadaatha malar naadi,நாடாத மலர் நாடி - தேட வொண்ணாத புஷ்பங்களைத் தேடி
Naal thoarum,நாள் தோறும் - தினந்தோறும்
Naaranan than,நாரணன் தன் - ஸ்ரீமந் நாராயணனுடைய
Vaadaadha malar adi keezh,வாடாத மலர் அடி கீழ் - வாடாத தாமரை மலர் போன்ற திருவடிகளில்
Vaikkave,வைக்கவே - ஸமர்ப்பிப்பதற்காகவே
Vagukkinra,வகுக்கின்ற - (அவயங்களை) ஏற்படுத்தி யிருக்க,
Veetu aadi veettrindhal,வீடு ஆடி வீற்றிருந்தல் - (இப்படி) பிரிவிலே மூழ்கி யிருப்பதாகிற
Vinai yatradhu,வினை யற்றது - தௌர்பாக்கியம்
En seyvadho,என் செய்வதோ - எதற்காக நேர்ந்ததோ!;
Vaadaay,வாடாய் - காற்றே!
Uraiththaeraay,உரைத்தீராய் - (அப் பெருமானுக்குத்) தூது சொல்லி (அனுகூலமான மறு மொழி பெறா விடின்)
Enathu udal,எனது உடல் - என் சரீரத்தை
Eeraay,ஈராய் - இரு பிளவாக்கி விடு
2717திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாட்டில் “நாரணன்றன் வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று” என்று கைங்கரிய ப்ரஸ்தாவம் வந்ததனால், தாய் முலையை நினைத்த கன்று போலே திருவுள்ளமானது பதறி உடலை விட்டுப் புறப்படத் தொடங்கிற்று; அதனை நோக்கி நெஞ்சே! நம் காரியம் ஒரு விதமாக சபலமாகுமளவும் நீ என்னை விடாதே யிருக்கவேணு’ மென்று கேட்டுக் கொள்ளுகிறாள். அன்றியே, தூதுவிடுகிற பிரகரணமாதலால் நெஞ்சைத் தூதுவிடுகிறாள் என்பாரு முளர். அப்போது, விடல் என்றது- அவனை விடவேண்டா என்றபடி 10
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10
Aazhi mada nenje,ஆழி மட நெஞ்சே - ஆழ்ந்த மடநெஞ்சே!
Udal,உடல் - சரீர ஸம்பந்தம் பெற்று
Aazhi,ஆழி - சக்ராகாரமாக
Pirappu,பிறப்பு - மாறி மாறிப் பிறக்கிற ஸம்ஸாரி நிலமும்
Veetu,வீடு - மோக்ஷமும்
Uyir,உயிர் - (இவற்றை அடைவதற்கு உரிய) ஆத்மாவும்
Mudhal aam mutrum aay,முதல் ஆம் முற்றும் ஆய் - ஆகிய இவை முதலான ஸகல பதார்த்தங்களும்
தானிட்ட வழக்காம்படி ஸர்வ நிர்வாஹகனாய்
ஆழ்ந்த நீரை யுடைய ஸமுத்திரத்திலே

Thootri,தோற்றி - ஆவிர்ப்பவித்து
Adhan ullam,அதன் உள்ளே - அக் கடலினுள்ளே
Kan valarum,கண் வளரும் - சயனித் தருள்கின்ற
Adal vizhi ammaanai,அடல் வழி அம்மானை - தீக்ஷ்ணமான சக்கரப் படையை யுடைய பெருமானை
Kantakkaal,கண்டக்கால் - கண்டால்
Idhu,இது - இந்த நிலைமையை
Solli,சொல்லி - அவனுக்குச் சொல்லி
Vinaiyom,வினையோம் - பாபிகளாக நாம்
Ondru aam alavu,ஒன்று ஆம் அளவு - அவனோடு ஒன்றுபடும் வரையில்
Vidal,விடல் - விடாதே.
2718திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டும் பாசுரம் இது. இத் திருவாய்மொழியில் சொல் மாத்திரத்தைக் கற்றாலும் திருநாட்டைப் பெறுதற்குப் போதும் என்கிறார். 11
அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11
Alavu iyanra,அளவு இயன்ற - எல்லையைக் கடந்த
Ezh ulagathavar perumaan,ஏழ் உலகத்தவர் பெருமான் - ஏழுலகங்களிலுமுள்ள சேதநர்களுக்கும் தலைவனான
Kannanai,கண்ணனை - எம்பெருமானைக் குறித்து,
Valam vayal soo,வளம் வயல் சூழ் - வளர்ப்ப முள்ள கழனிகள் சூழ்ந்த
Van kurukoor,வண் குருகூர் - அழகிய திருநகரிக்குத் தலைவராகிய
Sadagopan,சடகோபன் - ஆழ்வார்
Vainthu uraitha,வாய்ந்து உரைத்த - அன்பு பூண்டு அருளிச் செய்த
Alavu iyanra,அளவு இயன்ற - கட்டளைப் பட்ட (ஸகல லக்ஷண ஸம்பந்தமான)
Andhaathi,அந்தாதி - அந்தாதித் தொடையான
Aayiraththul,ஆயிரத்துள் - ஆயிரத்துக்குள்ளே
Ippaththin,இப் பத்தின் - இப் பதிகத்தினுடைய
Valam uraiyaal,வளம்உரையால் - வளமாகிய சொல்லளவினாலே
Vaan oongu peruvalam,வான் ஓங்கு பெருவளம் - பரம பதத்தில் சிறந்த செல்வமாகிய கைங்கரிய ஸம்பத்து
Peral aagum,பெறல் ஆகும் - அடையலாகும்