Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: மாலுக்கு (15 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2078திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் ஒரு வண்டைத் தூதுவிட்டாள்; அது போய்த் தூதரைத்துத் திரும்பி வருமளவும் தரித்திருக்கமாட்டாமையாலே பின்னையும் ஒருநாரையைத் தூது விடுகிறாள். “திக்ஷு ஸர்வஸு மார்க்கந்தே“ என்கிறபடியே பிராட்டியைத் தேடுதற்கு எல்லாத் திசைகளிலும் வாநர முதலிகளை ஏவினாப்போலே இவளும் கண்ணாற் கண்டவற்றை எல்லாம் ஏவுகிறாள். ராமாவதாரத்திலே வாநர ஜாதி வீறு பெற்றது போலே ஆழ்வார்களவதரித்துப் பக்ஷிஜாதி வீறு பெற்றது என்பர். 27
செங்கால மடநாரா யின்றெ சென்று திருக்கண்ணபுரம்புக்கென்செங்கண்மாலுக்கு
என்காதலென்துணைவர்க்குரைத்தியாகில் இதுவொப்பதெமக்கின்பமில்லை*நாளும்
பைங்கானமீதெல்லாமுனதேயாகப் பழனமீன்கவர்ந்துண்ணத்தருவன்*தந்தால்
இங்கேவந்தினிதிருந்துன்பெடையும்நீயும் இருநிலத்திலினிதென்பமெய்தலாமே. - 27
செம் கால,Sem Kaala - சிவந்த கால்களையுடைய
மட நாராய்,Mada Naaraay - அழகிய நாரைப்பறவையே!
இன்றே சென்று,Indrae Senru - இன்றைக்கே புறப்பட்டுப்போய்
திருக்கண்ணபுரம் புக்கு,Thiruk Kannapuram Pukku - திருக்கண்ணபுரத்தில் புகுந்து
என் செங்கண் மாலுக்கு,En Senkan Maalukku - செந்தாமரைக் கண்ணராய் என்மீது வியாமோஹங் கொண்டவரும்
என் துணைவர்க்கு,En Thunaivarkku - எனக்குத் துணைவருமான சௌரிப் பெருமாள் பக்கலிலே
என் காதல்,En Kaadhal - எனது விருப்பத்தை
உரைத்தி ஆகில்,Uraiththi Aagil - சொல்லுவாயாகில்
எமக்கு,Emakku - (அவரைப் பிரிந்து வருந்திக் கிடக்கின்ற) நமக்கு
இது ஒப்பது இன்பம் இல்லை,Idhu Oppadhu Inbam Illai - (இதற்காக உனக்கு நான் செய்யக்கூடிய உதவி யாதெனில்;) இதுபோன்ற ஆனந்தம் வேறொன்றுமில்லை;
2990திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (ஜீவனம் உஜ்ஜீவனம் என்று இரண்டுண்டு; எம்பெருமான் திறத்துக் கவிபாடினால் உஜ்ஜீவிக்க வழியுண்டெனினும், ஜீவிக்கவழி தேடுகிற நாங்கள் வரஸ்துதிகளிலே இழிகிறோம் என்று சிலர் சொல்லுவதாகக் கொண்டு நீசரைக் கவிபாடி ஜீவிப்பதிற் காட்டிலும் உடம்பு நோவத் தொழில் செய்து ஜீவித்தல் நன்று என்கிறார்.) 6
வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6
புலவீர்,Pulaveer - புலவர்களே!
வம்மின்,Vammin - (நரஸ்துதியை விட்டு) வாருங்கள்;
நும் மெய்,Num mei - உங்களது உடலை
வருத்தி,Varuththi - சிரமப்படுத்தி
கை செய்து,Kai seithu - தொழில் செய்து
உய்ம்மின்,Uymmmin - ஜீவியுங்கோள்:
மன்,Man - (ப்ரவாஹரூபேண) நித்யமாயிருக்கின்ற
இ உலகினில்,I ulagil - இந்த லோகத்தில்
செவ்வர்,Sevvar - (உங்களுக்குப் போதுமானவை கொடுக்கவல்ல) ஸ்ரீமான்கள் கிடையார்;
இப்போது நோக்கினோம்,Ippoathu nokkinom - (இதனை) இப்போது ஆராய்ந்து அறிந்தோம்;
நும்,Num - உங்களுடைய
இன் கவி கொண்டு,In kavi kondu - மதுரமான கவிகளைக் கொண்டு
நும் நும்,Num num - உங்களுங்களுடைய
இட்டா தெய்வம்,Ittaa deivam - இஷ்ட தெய்வத்தை
ஏத்தினால்,Yaeththinaal - துதி செய்தால் (அந்தத் துதிமொழிகளிற் கூறும் குணங்கள் அவர்களிடத்து இல்லாமையாலே அவை)
செம் மின் சுடர் முடி,Sem min sudar mudi - செவ்வனே மின்னுகின்ற வொளி பொருந்திய திருமுடியை யுடைய
என் திருமாலுக்கு,En thirumaalukku - எனக்கு ஸ்வாமியான லக்ஷ்மீநாதனுக்கு
சேரும்,Serum - அந்வயிக்கும்.
3281திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (இத்திருவாமொழி கற்பவர் கைங்கர்ய ஸாம்ராஜ்யமாகிற மஹாபலத்தைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11
திருமாலுக்கு அடிமை செய்வார்,Thirumalukku adimai seyvaar - பரவாஸு தேவனுக்கு நித்யகைங்கர்யம் பண்ணப் பெறுவர்கள்.
3282திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இவன் உலகு அளந்து அருளின எம்பெருமானுடைய குண சேஷ்டிதாதிகளிலே அகப்பட்டு வளை இழந்தாள் என்கிறாள்.) 1
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1
மாலுக்கு,Maalukku - அடியார் பக்கலில் வியாமோஹமுள்ளவரும்
வையம் அளந்த மனாளற்கு,Vaiyam alanda manaalarukku - பூமி முழவத்தையும் (த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட மணவாளரும்
நீலம கருநிறம் முகம் நியாயற்கு,Neelama karuniram mugam niyaayarkku - நெய்த்துக் கறுத்த நிறத்தையுஐடய மேகத்தை யொத்தவரும்
கோலம் செம் தாமரை கண்ணற்கு,Kolam sem thaamarai kannarkku - அழகிய செந்தாமரை போன்ற திருக்கண் களையுடைவனாவருமான எம்பெருமான் விஷயத்தில் ஈடுபட்டதனால்
என் கொங்கு அவர் ஏலம் குழலி இழந்து சங்கு,En kongu avar yaelam kuzali izhandhu sangu - தேனொழுகும் மலர்களணிந்து நறுமணம் மிக்க கூந்தலை யுடையனாள என்மைகள் இழந்த்து கைவளையாம்.
3283திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திரு உலகு அளந்து அருளின எம்பெருமானுடைய ஸ்ரீ பஞ்சாயுத தாரணத்தாலே வந்த அழகிலே அகப்பட்டு என் மகள் தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் -என்கிறாள்.) 2
சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் கையற்கு,Sangu vil vaal thandu chakkaram kaiyarkku - பஞ்சாயுதங்களையும் திருக்கையிலே உடையவரும்
செம் கனி வாய் செய்ய தாமரை கண்ணற்கு,Sem kani vaai seyya thaamarai kannarkku - சிவந்த கனிபோன்ற அதரத்தையும் செந்தாமரைக் கண்களையுமுடையவரும்
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு,Kongu alar than am thuzhaai mudiyaanukku - தேனொழுகப் பெற்றுக் குளிர்ந்தழகிய தருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவருமான எம்பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
எள் மங்கை இழந்த்து,El mangai izhandhu - என்பெண்பிள்ளை யிழந்தது
மாமை நிறம்,Maamai niram - அழகிய நிறமாம்.
3284திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (நிறங் கரியானுக்கு – நான் பிரிவாற்றாமையாலே உடம்பு வெளுத்துக் கிடக்க அவர் மேனி நிறம் குறியழியாமே பசுகுபசுகென்றிருக்கிற அழகு என்னே! என்று நைகின்றாளென்கை.) 3
நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3
நிறம் கரியானுக்கு,Niram kariyaanukku - கருநிற முடையவரும்
நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய்,Needu ulagu unda thiram kilar vaai - (பிரளய காலத்தில்) ஸகல லோகங்களையும் அமுது செய்தபடி தோற்றுகிற திருப்ப வளத்தையுடையராய்க்கொண்டு
சிறு கள்வர் அவற்கு,Siru kalvar avarkku - சிறியவடிவிலே பெரியவுலகங்களை மறைத்துவைத்தவரும்
கறங்கிய சக்கரம் கையவனுக்கு,Karangiya chakkaram kaiyavanukku - சுழலும் திருவாழியைக் கையிலே உடையவருமான பெருமான் விளயத்தி லீடுபட்டதினால்
என் பிறங்கு இரு கூந்தல்,En pirangu iru koondhal - விளங்குகின்ற அடர்ந்த கூந்தலை யுடையளான என்மகள்
இழந்த்து பீடு,Izhandhu peedu - இழந்த்து பெருமையாம்.
3285திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் தன்மகன் பண்பிழந்தாளாகக் கூறுகின்றாள் பண்பாவது இயற்கையான தன்மை எம்பெருமானது ஒரோ குணங்களை நினைத்து விகாரப்படுகின்றாளென்றவாறு.) 4
பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4
பீடு உடை நான்முகனை,Peedu udai naan muganai - பெருமைபொருந்திய பிரமனை
படைத்தானுக்கு,Padaiththaanukku - (தனது திருநாபிக்கமலத்தில்) படைத்தவனும்
மாடு உடை வையம்,Maadu udai vaiyam - வஸுமதியான பூமயை
அளந்த மணாளற்கு,Alanda manaalarukku - (திரிவிக்கிரமனாகி) அளந்துகொண்ட மணவாளனும்
நாடு உடை மன்னர்க்கு,Naadu udai mannarukku - நாட்டுக்கு கடவரான பாண்டவர்களுக்காக
தூது செல் நம்பிக்கு,Thoothu sel nambikku - தூது சென்றவனுமான பெருமான் விஷயத்தி லீடுபட்டதனால்
என் பாடு உடை அல்குல்,En paadu udai algul - பரந்தநிதம் பத்தையுடையளான என்மகள்
இழந்த்து பண்பு,Izhandhu panbu - இழந்த்து தன் இயற்கையை.
3286திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் தன்மகள் கற்பிழந்தாளாகக் கூறுகின்றாள். “கற்பு – கல்வி, அதாவது ஜ்ஞானம்“ என்பது ஈடு. தன்னறிவையிழந்தாளென்றபடி) 5
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5
பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு,Panbu udai vedham payantha paranukku - சீர்மைமிக்க வேதங்களை (ப்பிரமனுக்கு) உபகரித்தருளின பரம புருஷனும்,
மண்புரை இடந்தவராகற்கு,Manpurai idanthavararkku - மண்மிக்க பூமியை யிடந்தெடுத்த வராஹமூர்த்தியும்,
தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு,Then punal palli em deva praanukku - தெளிந்த நீரையுடைய ஏகார்ணவத்திலே பள்ளிக்கொண்ட தேவபிரானுமான எம்பெருமான் விஷயத்தில் (ஈடுபட்டு)
என் கண்புனை கோதை இழந்தது,En kanpunai kodhai izhandhadhu - கண்ணைக்கவர்கின்ற கூந்தலையுடையளான என் மகள் இழந்தது.
கற்பு,Karpu - அறிவுடைமை.
3287திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் “தோற்றது மெய்யே“ என்று, தன்மகள் சரீரத்தை இழந்தாளாகச் சொல்லுகிறாள்) 6
கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற் பல தாமரை நாண் மலர்க் கையற்கு என்
விற் புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6
கற்பகம் கா அனநல் பல தோளற்கு,Karpagam kaa ananal pala tholarkku - கற்பகச்சோலைபோன்ற நல்ல பல திருத்தோள்களையுடையவனும்
சுடர் பொன் குன்று அன்ன பூ தண் முடியற்கு,Sudar pon kundru anna poo than mudiyarkku - சுடர்மிக்க பொற்குன்றம் போன்ற மிகவழகிய திருவபிஷேகத்தை யுடையவனும்
நல் பல தாமரை நான் மலர் கையற்கு,Nal pala thaamarai naan malar kaiyarkku - அப்போதலர்ந்த தாமரைப் பூப்போன்று விலக்ஷணமான பல திருக்கைகளையுடையவனுமான எம்பெருமான் திறத்திலீடுபட்டதனால்
என் வில் புருவம் கொடி,En vil puruvam kodi - வில்போன்ற புருவத்தை யுடையளான என் பெண்கொடி
தோற்றது,Thoatradhu - இழந்தது
மெய்,Mey - தன்னுடம்பையாம்.
3288திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் “என்தையலிழந்த்து தன்னுடைச் சாயே“ என்கிறாள். சாயா என்னும் வடசொல் எனத் திரிந்த்து. சாயை யாவது ஒளி. லாவண்ய மிழந்தாளென்கை. உரு வேறுபாடுற்ற ளென்றவாறு.) 7
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7
மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு,Mei amar pal kalannku aninthaanukku - திருமேனிக்குபொருத்தமன பல திருவாபரணங்களை நன்றாக அணிந்து கொண்டிருப்பவனும்
பை அரவு இன் அணை பள்ளியினானுக்கு,Pai aravu in anai palliyinaanukku - படமெடுத்த ஆதிக்ஷேனாகி இனிய படுக்கையிலே துயிலமர்ந்தவனும்
கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு,Kaiyodu kaal seyya kannapiraanukku - திருக்கைகளும் திருவடிகளும் சிவந்திருக்கப்பெற்றவனுமான கண்ணபிரான விஷயத்திலீடுபட்டதனால்
என் தையல் இழந்த்து,En thaiyal izhandhu - என் மகள் இழந்தது
தன்னுடை சாயே,Thannudai saaye - தனது ஒளியாம்.
3289திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில், என்னுடைய பெண்பிள்ளை தன்னுடைய மாட்சியை யிழந்தா ளென்கிறாள். எவ்வளவோ பெருமையாக வாழ்ந்தவள் அப்பெருமையெல்லாம் போய் இங்ஙனே தரைப்பட்டுக்கிடக்கின்ற பரிதாபம் என்னே! என்கிறாள்.) 8
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8
ருந்தம் சாய ஒசித்த தமிபற்கு,Rundham saaya ositha thamiparku - குருந்தமரம் வேரோடுபறியுண்டு சாயும்படி அதனை முறித்த அத்விதீயனும்
மாயம் சகடம் உதைத்த மணாளற்கு,Maayam sakatam udhaitha manaalarku - க்ருத்ரிம்மான (அஸுராவேசங்கொண்ட) சகடத்தைப் பொடிபடுத்தின மணவாளனும்
பேயை பிணம் படபால் உண்பிரானுக்கு,Peayai pinam padapaal unpiraanukku - பூதனையென்கிற பேய்ச்சி பிணமாகும்படி அவளது முலைப்பாலை யுண்டவனுமான எம்பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
என் வாசம் குழலி,En vaasam kuzhali - வாசனைபொருந்திய கூந்தலையுடையளான என்மகள்
இழந்தது மாண்பு,Izhandhadhu maanpu - இழந்தது தன் மாட்சிமை யாம்.
3290திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் என்மகள் அழகிழந்தாளென்கிறாள். தன்னழகாலே அவனைவசப்படுத்திக் கொள்ள பிறந்தவிவள் அவனழகிலே யீடுபட்டுத் தன்னழகை யிழந்தாளென்று வருந்துகிறாள்.) 9
மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9
மாண்பு அமை கோலத்து,Maanpu amai kolaathu - அழகமைந்த வடிவையுடையனான
எம் மாயம் குறளற்கு,Em maayam kuralarku - எம்மையீடுபடுத்திக்கொள்ளும் மாயவாமனமூர்த்தியும்
சேண் சுடர் குன்று அன்ன,Senn sudar kunru anna - உயர்ந்த சோதிமயமான குன்று போன்ற
செம் சுடர் மூர்த்திக்கு,Sem sudar moorthikku - செவ்விய சுடரையுடைய வடிவு கொண்டவனும்
காண் பெருதோற்றத்து,Kaan perudhoatrrathu - அனைத்துலகும் காணப்பர்வத்தையுடைய
என் காகுத்தன் நம்பிக்கு,En kaakuthan nambikku - இராமபிரானுமான பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
என் பூண் புனைமென் முலை,En poon punaimen mulai - ஆபரணங்களையணிந்தமெல்லிய முலைகளை யுடையளான என்மகள்.
தோற்றது பொற்பு,Thoatrrathu porupu - இழந்தது அழகாம்
3291திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்ல் “என் கற்புடையாட்டி யிழந்தது கட்டே“ என்கிறாள் திருத்தாய். கட்டு என்பதற்கு ஸ்த்ரீத்வமர்யாதை என்றும் பொருள், “எல்லாம்“ என்றும் பொருள். ஸ்த்ரீ த்வமர்யாதையையிழக்கையாவது – லஜ்ஜையோடும் அடக்கத் தோடும் கூடியிருக்கவேண்டிய தன்மையை இழத்தலாம். இப்பதிகத்தில் ஒவ்வொரு பாசுரத்தில் ஒவ்வொன்றை யிழந்தாளாகச் சொல்லிவந்தான். பலசொல்லியென்? இழவாதது ஒன்றுண்டோ? எல்லாமுமிழந்தாள் என்கிறாள்.) 10
பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10
பொற்பு அமை நீள் முடி,Porpu amai neel mudi - அழகமர்ந்து உயர்ந்த கிரீடத்திலே
பூ தண் துழாயற்கு,Poo than thulaayarukku - அழகியகுளிர்ந்த திருத்துழாயையுடையவனும்
மல் பொரு தோள் உடை,Mal poru thol udai - மல்லர்களோடு போர்செய்த திருத்தோள்களையுடையவனும்
மாயம் பிரானுக்கு,Maayam pirankku - அற்புதச் செயல்களைச் செய்யும் மஹோபகாரகனும்
நிற்பன பல் உரு ஆய் நிற்கும்,Nirpana pal uru aai nirukkum - ஸ்தாவர ஜங்கமங்களாய் நிற்கின்ற பலவகைப் பதார்த்தங்களுமாயுள்ளவனும்
மாயற்கு,Maayarkku - (அப்படியிருக்கச் செய்தேயும் அவற்றின் குற்றங்கள் தன்மீது ஏறப்பெறாமலிருக்கும்) மாயனுமான பெருமான் திற திலீடுபட்டதனால்
என் கற்புடையாட்டி,En karputaiyaatti - தக்க அறிவுடையளான என் மகள்
இழந்தது கட்டு,Ilandhadhu kattu - இழந்தது எல்லாமுமாம்.
3292திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பதிகம் கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது. முழுதுமும் மிக அழகாக விளங்குகின்ற சோலைகளையுடைத்தான திருவேங்கட மலையிலே நித்ய வாஸம் செய்தருளா நின்ற பெருமான் விஷயமாக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரத்தினுள்ளும் இப்பதிகம் வல்லார் ஸ்வரூபாநுபமான திவ்ய போகத்தை அநுபவிக்கப்பெறுவர்களென்று பயனுரைத்ததாயிற்று. கீழ்ப் பத்துப் பாசுரங்களிலும் திருவேங்கட முடையானுடைய ப்ரஸ்தாவமே இல்லாமலிருக்க இப்போது நிகமத்தில் “நல் வேங்கடவாணனை“ என்று கூறினவிது என்னே? எனின், கிழே மூன்றாம் பத்தில் * சொன்னால் விரோதத்தில் * தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து என்னானையென்னப்ப னெம்பெருமானுளனாக – என்னாவிலின்கவி யானொரு வர்க்குங் கொடுக்கிலேன் * என்றருளிச் செய்தவராகையாலே இங்ஙனே கூறக்குறையில்லை யென்பர்) 11
கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சட கோபன் சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.–6-6-11
கட்டெழில் சாலை,Kattezhil saalai - நறுமணம் மிக்க சோலையையுடைத்தான
நல் வேங்கடம் வாணனை,Nal vengadam vaananaai - திருவேங்கட மலையிலே வாழ்பவனான எம்பெருமான் விஷயமாக
கட்டெழில் தென்குருகூர் சடகோபன்சொல்,Kattezhil thengurukoor sadagopan sol - அரணழகு பொருந்திய தென்குருகூரில் அவதரித்த ஆழ்வார் அருளிச்செய்த
கட்டெழில் ஆயிரத்து,Kattezhil aayiraththu - தொடையழகையுடைத்தான ஆயிரத்தினுள்ளே
இ பத்தும் வல்லவர்,ePathum vallavar - இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்
கட்டெழில் வானவர் போகம்,Kattezhil vaanavar pogam - பரமவிலக்ஷணமான நித்யஸூரிபோகத்தை
உண்பார்,Unbaar - அனுபவிக்கப் பெறுவர்கள்.
3325திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (இத் திருவாய்மொழியானது தன்னோடு அந்வயமுடையாரை ஸர்வரக்ஷகனான எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷ பூதராக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11
தெரித்தல் நினைதல் எண்ணல் ஆகா,Teriththal ninaiththal ennall aakaa - சாஸ்த்ரஜ்ஞானத்தாலும் மனனத்தாலும் த்யானத்தாலும் பரிச்சேகதிக்க முடியாத
திரு மாலுக்கு,Thiru Maalukku - ஸ்ரீமந்நாராயணனுக்கு
தொண்டர் தொண்டர்,Thondar thondar - உரிய அநந்யார்ஹ சேஷ பூதர்களான பக்த பக்தர்களுக்கு
தொண்டன்,Thondan - பக்தரான
சடகோபன்,Sadagopan - நம்மாழ்வார்
தெரிய சொன்ன,Theriyat sonna - விசதமாக அருளிச்செய்த
ஓர் ஆயிரத்துள்,Oor aayiraththul - விலக்ஷணமான ஆயிரத்தினுள்ளே
இ பத்தும்,ePaththum - இந்தத் திருவாமொழி (தன்னைக் கற்குமவர்களை)
உலகம் உண்டாதற்கு,Ulagam undaatharku - உலக முண்டவனான எம்பெருமான் விஷயத்திலே
உரிய தொண்டர் ஆக்கும்,Uriya thondar aakum - அநந்யார்ஹ சேஷ பூதாரக்கும்.