Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: நங்கள் (19 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2760திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இப்படி எனக்காக ஸகல யோனிகளிலும் வந்து பிறந்தருளுகிறவன் தனது திருக்கைகளில் அழகிய திருவாழியும் திருச்சங்கும் ஏந்தி அவ்வழகோடுகூட வந்து பிறப்பவனென்கிறார்) 9
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9
Engum - எவ்விடத்தும்
Thaanaaya - (அவதார முகத்தால்) தானே வியாபித்த
Nangal Naadhan - எம்பெருமான்
Am Kaiyil - அழகிய திருக் கைகளில்
Sangu Chakkaram - திருவாழி திருச் சங்குகளை
Kondaan - தரித்துள்ளான்.
2987திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (பரம விலக்ஷணனாய் மஹோபகாரகனான எம்பெருமானிருக்க அவனை விட்டு அற்ப மனிசரைக் கவி பாடி என்ன பலன்? என்கிறார்.) 3
ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3
ஒழிவு ஒன்று இல்லாத,Ozhivu ondru illaadha - ஒழிவு சிறிதுமில்லாத
பல ஊழி ஊழிதோறு,Pala oozhi oozhithooru - காலத்துவமுள்ளதனையும்
நிலாவ,Nilaava - நிலைநின்று அநுபவிக்கும்படி
போம்,Pom - செல்லக்கடவதான
வழியை,Vazhiyai - வழிபாடாகிய கைங்கரியத்தை
தரும்,Tharum - தந்தருள்கின்ற
நங்கள் வானவர் ஈசனை நிற்க போய்,Nangal vaanavar eesanai nirka poay - நமது தேவாதி தேவனான பெருமானிருக்க, அவனையுமேக்ஷித்து
கழிய மிக நல்ல,Kazhiya miga nalla - மிகவும் இனிய
வான் கவி கொண்டு,Vaan kavi kondu - திவ்யாமன கவிகளைக் கொண்டு
புலவீர்காள்,Pulaveerkaal - பண்டிதர்களே!
இழிய கருதி,Izhiya karuthi - அதோகதியையடைய நினைத்து
ஓர் மானிடம்,OrMaanidam - அற்ப மனிதர்களை
பாடல்,Paadal - பாடுதலால்
ஆவது என்,Aavadhu en - (உங்கட்கு) உண்டாகும் பயன் யாது?
3161திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (தாய்மார்களே! என்னை நீங்கள் சீறுவது எதற்கு? சீறிப் பயனென்? வேணுமாகில் திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகைச் சீறுங்கோள்! ‘எதற்கு நீ இப்படிப்பட்ட வடிவழகு கொண்டாய்?” என்று நம்பியைச் சீறில் சிறுமந்தனையொழிய என்னைச் சீறுவது முறைமையன்று. நான் ஏதேனும் ஒரு கா புருஷனை கண்டு மோஹித்துப் படுகிறோனோ? அழகுதானே உருக்கொண்ட திருகுருங்குடி நம்பியையன்றோ நான் ஸேவிக்கப் பெற்றது. அப்படி ஸேவிக்கப்பெற்ற க்ஷணமே தொடங்கிச் சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயுமே என் முன்னே தோன்றாநிற்க, நான் அவற்றை வாய் பெவருவாதே பின்னை எதை வாய்பெருவுவேன்? ஆதலால் என்னை நீங்கள் முனிவது முறைமையன்று என்றாளாயிற்று.) 1
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1
அன்னைமீர்காள்,Annaimeerkaal - தாய்மார்களே!
நீர்,Neer - நீங்கள்
என்னை முனிவது,Ennai munivathu - என்னை சீறுவது
திருக்குறும் குடி நம்பியை,Thirukkurum kudi nambiyai - திருக்குறுங்குடிப் பெருமானை
நான் கண்ட பின்,Naan kanda pin - நான் ஸேவிக்கப் பெற்ற பின்பு
என் நெஞ்சம்,En nenjam - என் மனமானது
சங்கினோடும் நேமினோடும்,Sanginodum neminodum - சங்கு சங்கரங்களோடும்
எங்ஙனேயோ,Enganeyo - எப்படிப் பொருந்தும்?
எங்கள்,Engal - நாம் அநுபவிப்பதற்குரிய
கோலம்,Kolam - அழகிய
தாமரை கண்களோடும்,Thaamarai kangalodum - தாமரைபோன்ற திருக்கண்களோடும்
செம் கனி வாய் ஒன்றினோடும்,Sem kani vaai ondrinodum - சிவந்த கனிபோன்ற ஒப்பற்றதான அதரத்தோடும்
செல்கின்றது,Selginrathu - நடவாநின்றது. (என்னெஞ்சில் இவையே திகழ்கின்றனவென்றபடி.)
3361திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (நங்காய்! இப்படியும் நானமற்றுச் சொல்லுவது தகுதியேவென்று தோழி கேட்க: தோழீ! நான் என்செய்வேன்? எனது நெஞ்சானது தென் திருப்பேரை யெம்பெருமானுடைய திருப்பவளத்தழகிலே போய்ப்படிந்தும் திருவபிஷேகத்தினழலே தாழ்ந்தும், திருவாழி திருச்சங்குகளே யேந்தியிருக்குமழகுகண்டு உகந்தும், மற்றோரழகுக்கு உரித்தரல்லாதபடி தாமரைக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் நங்கள் பிரானுக்கு நாணும் நிறைவுமிழந்தது; இனி யெனக்கு நாணும் நிறைவுமுண்டாவதற்கு வழியேது? என்கிறாள் தலைவி.) 3
செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3
தோழீ,Thozhi - வாராய் தோழியே!
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது
செம் கனி வாயின் திறத்தது ஆயும்,Sem kani vaayin thirathadhu aayum - செவ்விய கனி போன்ற திருப்பவளத்திலே அபிநிவேசம் கொண்டதாயும்
செம் சுடர் நீள்முடிவு தாழ்ந்தது ஆயும்,Sem sudar neelamudivu thaazhndhadhu aayum - செவ்விய சுடரையுடைய நீண்ட கிரீடத்திலே ஈடுபட்டதாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்,Sangodu chakkaram kandu ukanthum - திருவாழி திருச்சங்குளைக் கண்டு உவந்ததாயும்
தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும்,Thaamarai kangalukku atru theerndhum - தாமரை போன்ற திருக்கண்களுக்கு அநந்யார் ஹமாகியும்
திங்களும் நாளும் விழா அறாத,Thingalum naalum vizha araadhu - மாஸோத்ஸவர்களும நித்யோத்ஸவங்களும் இடையறாத
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த,Then thiruppereyil veettrirundha - தென் திருப்பேரைப் பதியிலே யெழுந்தருளியிருக்கின்ற
நங்கள் பிரானுக்கு,Nangal piranuku - எம்பெருமான் விஷயத்திலே
நாணும் நிறையும் இழந்தது,Naanum niraiyum izhandhadhu - வெட்கமும் அடக்கமும் தொலையப் பெற்றது.
3458திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமானை ஆசைப்பட்டு அவன் உகந்து அருளின இடங்களிலே சென்றும் அபேக்ஷிதம் பெறாமையாலே மிகவும் அவசன்னையாய் இருக்கிற இப்பிராட்டியை தோழிமாரானவர்கள்-யுகாவாதார் எதிர் அன்றோ லஜ்ஜிக்க வேண்டுவது -எங்களுக்கு லஜ்ஜிக்க வேணுமோ - உனக்கு ஓடுகிற தசையைச் சொல்லு -என்ன -அவர்கள் எதிர் லஜ்ஜித்து சொல்லாதே உங்களுக்கு சொல்லாமல் வார்த்தை பார்த்த இடத்திலும் ஒன்றும் காண்கிறிலேன்-என்கிறார் .) 1
நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1
வரி வளை நங்கன் ஆயங்காளோ,Vari valai nangan aayangkaalo - அழகியவனையணிந்த நம்முடைய தோழிகளே!
நம்முடை ஏதலர் முன்பு நாணி,Nammudai yethalar munbu naani - நம்மிடத்துப் பகைபாராட்டுகின்ற தாய்மாரின் முன்புசொல்ல வெட்கப்பட்டு
நுங்கட்கு யான் உரைக்கும் மாற்றம் ஒன்றுநோக்குகின்றேன்,Nungadkku yaan uraikkum maattram ondrunookkugiren - உயிர்த் தோழிகளான வுங்களுக்கு மாத்திரம் செவிப்படும்படி நான் ஒரு வார்த்தை சொல்லப்பார்க்கின்றேன்,
எனக்கும் காணமாட்டேன்,Enakkum kaanamaaten - ஆனாலும், என்னுடைய நிலைமையை நான் ஒரு விதத்திலும் பாசுரமிட்டுச் சொல்லும் வழி அறிகின்றிலேன், (ஆகிலும் சொல்லுகேன் கேண்மின்)
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன்,Vem kan paravayin paagan em koon - வெவ்வியபார்வையையுடைய பெரிய திருவடியை நடந்துமவனாய் அஸ்மத்ஸ்வாமியான
வேங்கடம் வாணனை வேண்டிசென்று,Vengadam vaananai vendi sendru - திருவேங்கடமுடையானைக் காணவாசைப்பட்டுப் புறப்பட நினைத்ததுவே காரணமாக
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்,Sangam sarindana saai izhandhen - கைவளைகள் கழன்றனவென்னும்படி இளைத்தேன், மேனியொளியை இழக்கப்பெற்றேன்
தடமுலை பொன்நிறம் ஆய் தளர்ந்தேன்,Thadamulai ponniram aay thalarnthen - தடமுலைகள் பசலைநிறம்பூச்சுப்பெற்று உடலும் தளர்ந்தவளாளேன்.
3459திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உனக்கு அத்யந்தம் அந்தரங்கைகளாய் இருக்கிற எங்களுக்கு உன்னுடைய நோவு சொல்லலாகாததும் உண்டோ -என்ன - என் துக்கத்தின் மிகுதியாலே உங்களுக்குச் சொல்லும் பாசுரம் அறிகிலேன் என்கிறாள்.) 2
வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2
ஒன்று வேண்டி சென்று,Onru vendi sendru - என்னிடத்தில் ஒன்றைய்யே க்ஷித்து வந்து
பெறுகின்றவரில்,Perugindravaril - பெறுகின்றவர்களுக்குள்ளே
என்னுடைய தோழியர்,Ennudaiya thozhiyar - தலைமைபெற்ற உயிர்த்தோழிகளான
நுங்கட்கேலும்,Nungatkkaelum - உங்களுக்குங்கூட
ஈண்டு இது உரைக்கும் படியை,Eendu idhu uraikkum padikai - இப்போது எனக்கு ஓடும் நிலைமையைப் பாசுரமிட்டுச் சொல்லக்கூடிய பிரகாரத்தை
இடராட்டியேன் கான் அந்தோ காண்கின்றிலேன்,Idaraattiyen kaan andho kaangindrilen - இடருற்றிருக்கிற நான் ஐயோ! அறிகின்றிலேன்,
காண்தகு தாமரை கண்ணன்,Kaandhaku thamarai kannan - காணவினிய தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவனாய்
கள்வன்,Kalvan - பார்த்த பார்வையிலே ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ண வல்ல வஞ்சகனாய்
விண்ணவர்கோன் எங்கள் கோனை,Vinnavarkon engal konai - நித்யஸூரிகளைப் போலே என்னை யடிமை கொண்வனான எம்பெருமானை
கண்டால்,Kandaal - காணப்பெற்றால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்,Eendiya sangum niraiyum kolvaan - அவன் பக்கலிலேதிரண்ட வளைகளையும் அடக்கத்தையும் மீட்டுக் கொள்ளலாமென்று
எத்தனைகாலம் இளைக்கின்றேனே,Ethanaikalam ilaikkindren - எத்தனையோகாலமாக ப்ரயாசைப்படுகின்றேனே.
3460திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நாங்கள் சொல்ல விட்டிலையே யாகிலும் நீயே இளைத்து விடுகிறாய் இ றே -என்ன நித்ய கால தத்வம் முடியிலும் நான் அவனைக் கண்டு அல்லது விடேன் -என்கிறாள்.) 3
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3
நீலம் மலர் நெடு சோதி சூழ்ந்த,Neelam malar nedu sothi soozhntha - நீலநிறத்தாய் எங்கும் வியாபித்ததாய் எல்லைகாண வொண்ணாத்தான தேஜஸ்ஸாலே சூழப்பட்ட
நீண்ட முகில்வண்ணன் கண்ணன்,Neenda mukilvannan kannan - மஹா முகம்போலே இருக்கிற நிறத்தையுடைய கண்ணபிரான்
கொண்ட,Konda - அபஹரித்துக்கொண்ட
கோலம்வளையொ,Kolamvalaiyo - அழகிய வளைகளையும் மேனி நிறத்தையும்
எத்தனை காலமும் கூட சென்றே கொள்வான்,Eththanai kaalamum kooda sendru kolvaan - அநேக காலம் கூடவே சென்றாகிலும் மீட்டுக் கொள்ளுகைக்காக
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர்,Njaalam ariya pazhi sumandhen nal nudhalir - உலகமெல்லா மறியும்படிபடி கடந்து புறப்பட்டாளென்கிறபழியைப் பெற்றேன்,
இனி நாணி தான் என்,Ini naani thaan en - விலக்ஷணமான நெற்றியை யுடைய தோழிகளே!
இனி நாணி தான் என்,Ini naani thaan en - இனி லஜ்ஜித்துத் தான் பயனுண்டோ?
காலம் இளைக்கில் அல்லால்,Kaalam ilaikkil allaal - காலம் முடிந்துபோமித்தனை யல்லது.
வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள் மின்,Vinaiyen naan ilaikkindrilan kandukolmin - விளையாட்டியேனான நான் இளைத்து மீளமாட்டேன் இதை அனுபவத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.
3461திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஆழ்வார்திருநகரியைச் சார்ந்த நவதிருப்பதிகளுள் நிருக்குளந்தை யென்பது ஒரு திருப்தி. இது பெருங்குளமென்று வழங்கப்படும். அத்தலத்திலுள்ள எம்பெருமான் மாயக்கூத்தன், அப்பெருமானிடத்து ஆழ்வார் தமக்குள்ள ஈடுபாட்டைச் சொல்வது இப்பாசுரம்.) 4
கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4
மாடம் கொடி மதிள் தென் குளந்தை,Maatam kodi madil then kulandhai - மாடங்கயும் கொடியணி மதிள்களையுடைய்ய பெருங்குளமென்னுந்திருப்பதியிலே
வண் குடபால் நின்ற மாயக்கூத்தன்,Van kudapaal ninra maayakkooththan - அழகிய மேற்பக்கத்திலே நின்ற மாயக்கூத்தப் பெருமானாய்
ஆடல் பறவை உயர்ந்த,Aadal paravai uyarntha - மகிழ்ச்சியினால் களித்தாடுகிற கருடனாலே வஹிக்கப்பட்டிருப்பவனாய்
வெல் போர் ஆழிவலவனை,Vel poar aazhi valavanai - போர்க்களத்தில் வெற்றிபெறுமியல்வின்னான திருவாழி யாழ்வானை வலத்திருக்கை யிலுடையனான பெருமானை
ஆதரித்து,Aadhariththu - ஆசைப்பட்டு
கூட சென்றேன்,Kooda sendren - அவனோடு ஸம்ச்லேஷிக்கச் சென்றேன்,
கோல்வனை நெஞ்சம் தொடக்கம் எல்லாம்,Kolvanai nenjam thodakkam ellam - அழகியவளையும் நெஞ்சும் முதலானவையெல்லாம்
பாடு அற்று ஒழிய இழந்து,Paadu attru ozhiya izhandhen - என்பக்கல் சேஷியாமல் விட்டுப்போம்படியாக இழந்து
பல வளையார் முன் வைகல் பரிக அழிந்தேன்,Pala valaiyaar mun vaikil pariga azhindhen - பல வளைகளையுடைய பெண்டுகள் முன்னே நெடுங்கால மாகவே என் இயல்புமாறப் பெற்றேன்
இனி என் கொடுக்கேன்,Ini en kodukkaen - (எல்லாமிழந்த நான்) இனி என்ன இழக்கக் கடவேன்
3462திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அறியவும் எட்டவும் அரிதான நிலத்தை ஆசைப் பட்டு அதுக்கு துக்கப் படுகிறாய் என்று தோழிமார் சொல்ல -அவன் எத்தனையேனும் விசஜாதீயனாய் துர்ஜ்ஜேயனாய் இருந்தானே யாகிலும் -அவனை ஆஸ்ரயிக்கையும் அவனாலே விஷயீ கரிக்கப் படுகையும் இம்மரியாதை தான் தோற்றி யுண்டாயிற்றோ -இது அநாதி அன்றோ என்கிறாள்.) 5
ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5
தோழியர்காள்,Thozhiyarkal - தோழியர்களே!
நினைக்குங்கால,Ninaikkungal - ஆராய்ந்து பார்க்குமளவில்
நன்று உணர்வர்க்கும் ஒருவன் ஆக உழிதோறு ஊழி உணரல் ஆகா,Nandru unarvarkkum oruvan aaga uzhidhoru oozhi unaral aaga - நன்றாக உள்ளபடி அறியவல்லார்க்கும் காலமுள்ளதனையும் அறிய முயன்றாலும் இத்தகையனென்று அறிய வொண்ணாதபடி
சூழல் உடைய,Soozhal udaiya - அடியார்களை அகப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சியாகிற சேஷ்டிதங்களையுடையனாய்
சுடர் கொள் ஆதி,Sudar kol aadhi - மிகுந்த தேஜஸ்ஸையுடைய காரணபூதனாய்
தொல்லை அம்சோதி,Thollai amsothi - நித்ய அஸாதாரண அப்ராக்ருத ஜ்யோதிர்மயரூபத்தை யுடையனாய்
ஆழி வலவனை,Aazhi valavanai - திருவாழிவலவனான ஸர்வேச்வரனை
ஆதரிப்பும்,Aadharippum - விரும்பி பணிகையும்
ஆங்கு,Aangu - அப்படிப்பணியுமிடத்து
அவன் நம்மில் வரவும் எல்லாம்,Avan nammil varavum ellam - அவன் நம்பக்கதில் வந்து சேருகையும் ஆகிய இவையெல்லாம்
நம்முடையமே தான்,Nammudaiyamae thaan - நம்மைத் தோற்றிப் புதிதான உண்டாகப் பெற்றிருக்கிறோமோ?
இங்கு சொல்லுவதோ! அரியதுதான்,Ingu solluvathO! Ariyathuthaan - அவன் விஷயத்தில் எதையாவது அவத்யமாகச் சொல்லிவிடுவது தகாது.
3463திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (மறுபடியும் தோழியானவள் “நங்காய்! நீ சொல்லுகிறபடியே அவன் எளியனல்லன், அருமைப்பட்டவனே“ என்று சொல்ல, தோழீ! அவன் அரியனானாலென்ன? எளியனானாலென்ன? எந்த நிலையில் அவன் தன்னையே வாய்வெருவும்படியன்றோ நம்மைப்பண்ணிவிட்டான், அப்படிப்பட்டவன் வாசலிலே கூப்பிடாதே ஸம்பந்தமில்லாதார் வாசலிலே கூப்பிட ப்ரஸக்தியுண்டோ? என்கிறாள் தலைவி.) 6
தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6
நினைக்குங்கால்,Ninaikkungal - ஆராயப்புகுமளவில்
தொல்லை அம்சோதி என்சொல் அளவு அன்று,Thollai amsothi en sol alavu anru - அஸாதாரணமாய் அழகியதான அவனுடைய தேஜஸ்ஸானது என்னுடைய சொல்லில் அடங்கும்மதன்று
இமையோர் தமக்கும்,Imayor thamakkum - தேவர்களுக்குங்கூட (நிஷ்கர்ஷிக்கவொண்ணாதபடி)
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அதிறம் நிற்க,Ellai ilaadhana koozhppu seyyum athiram nirka - அளவிறந்த ஸம்சயங்களை விளைக்கும்படியான அப்பெருமேன்மை கிடக்க,
வல்லிவளம்வயல் சூழ குடந்தை மாமலர் கண் வளர்கின்ற மால் எம்மாமை கொண்டான்,Vallivalam vayal soozha kudandhai maamalai kannu valarkindra maal emmaamai kondaana - பூங்கொடியும் அழகிய வயல்களுஞ் சூழ்ந்த திருக்குடந்தையிலே சிறந்த தாமரை போன்ற திருகண்கள் வளரும்படி சாய்ந்தருளின பெருமான் எம்மேனி நிறத்தைக்கொள்ளை கொண்டான்,
அல்லி மலர் தண் துழாயும்,Alli malar than thuzhaayum - பூந்தாரினுடைய விகாஸத்தை யுடைத்தான திருத்துழாய் மாலையையும்
தாரான்,Thaaran - அருள் செய்கின்றினை,
இனி,Ini - இப்படியான பின்பு
ஆர்க்கு பூசல் இடுகோ,Aarkku poosal idukko - (இத்துயரத்தை) வேறு யார் பக்கலிலே சென்று முறை யிடக்கடவோம்?
சொல்லீர்,Solliir - நீங்களே சொல்லுங்கள்.
3464திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (அப்பெருமானைக் காண்பது அரிது, ஆகவே அவனை விட்டு விடுதலை நன்று என்று உறவு முறையார் அலைக்க, அவனுடைய திருக்குணங்களிலே அகப்பட்ட நான் எத்தனை காலமானாலும் அவனைக் கண்டல்லதுவிடேன், அதற்கு இடையூறான வுங்களோடு ஸம்பந்தம் எனக்கு வேண்டாவென்று உறவறுத்து உரைக்கின்றாளிப்பாட்டில்.) 7
மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7
ஏலம் மலர் சூழல் அன்னைமீர்காள்,Elam malar soozhal annai meerkaal - நறுமணம்மிக்க பூவையணிந்த குழலையுடைய தாய்மார்களே!
என்னுடை தோழியர்காள்,Ennudai thozhiyarkal - என்னுடைய தோழிமார்களே!
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று,Maal ari kesavan naaranan seemadhavan govindan vaikundan enru enru - மாலே! ஹரியே! கேசவனே! நாராயணனே! ஸ்ரீமாதவனே! கோவிந்தனே! வைகுண்டனே! என்றிப்படி பலகாலுஞ் சொல்லி
ஓலமிட என்னை பண்ணி விட்டு இட்டு,Olamida ennai pannni vittu ittu - கூப்பிடும்படியாக என்னைப்பண்ணி கைவிட்டு (எம்பெருமானானவன்)
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்,Onrum uruvum suvadum kaattaaana - ஒருபடியாலும் தன் வடிவையும் தன்னைக் கிட்டுவ தோரடையாளத்தையும் காட்டுகின்றிலன்,
என் செய்கேன்,En seigai - இதற்கு நான் என்ன பண்ணுவேன்!
பல காலம் சென்றும் காண்பது ஆணை,Pala kaalam sendrum kaanbadhu aanai - காலமுள்ளதனையும் சென்றாகிலும் காணக்கடவே ளென்பது ஸத்யம்
உங்களோடு எங்கள் இடை இல்லை,Ungaloodu engal idai illai - (இந்த அத்யவஸாயத்தைக் குலைக்கப் பார்க்கிற) உங்களுக்கு மெனக்கும் ஒரு ஸம்பந்தமுமில்லை.
3465திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (இப்பதிகத்திற்கு இப்பாடே உயிர்நிலையாயிருக்கும். புறம்புண்டான பற்றுக்கள் சிறிது மில்லாமையைத் தெறிவிப்பதேயன்றோ இத்திருவாய்மொழிக்கு முக்யமான ப்ரமேயம், அஃது இப்பாட்டிலுள்ளது.) 8
இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–8-2-8
யான் வளர்த்த கிளிகாள்,Yaan valartha kilikaal - நான் வளர்த்து வந்த கிளிகளே!
பூவைகள் காள்,Poovaikal kaal - பூவைகளே!
குயில்காள்,Kuyilkaal - குயில்களே!
மயில்காள்,Mayilkaal - மயில்களே!
இடை இல்லை,Idai illai - (என்னிடத்தில் உங்களுக்கு) ஓர் அவகாசமில்லை,
நம் உடைய மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய ஒட்டாது,Nam udaiya maamaiyum sangum nenjum onrum ozhiyattoṭṭaadhu - நம்முடையதான நிறத்தையும் வளையையும் நெஞ்சையும் ஒன்றும் மிச்சப்படவொட்டாதே
கொண்டான்,Kondaana - கொள்ளை கொண்டவன்
அடையும்,Adayum - இங்கிருந்து சென்று சேர்ந்த
வைகுந்தமும்,Vaikundhamum - திருநாடும்
பால் கடலும்,Paal kadalum - திருப்பாற்கடலும்
அஞ்சனம் வெற்பும் அவை,Anjanam verppum avai - திருவேங்கடமலையுமாகிய அத்தலங்கள்
நணிய,Naniya - அருமையற்று எளியவையே (ஆனால்)
பாசங்கள்,Paasangal - புறம்புண்டானபற்றுக்கள்
கடை அற,Kadai ara - ஸவாஸநமாக
விட்ட பின்னை அன்றி,Vitta pinnai anri - விட்டொழிந்தால்லலது
அவன்,Avan - அப்பெருமான்
அவை காண் கொடான்,Avai kaan kodaan - அத்தலங்களைக் காணக் கொடான்
3466திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (கீழ்ப்பாட்டில் * கடைபறப்பாசங்கள் விட்ட பின்னையன்றி அவனவைகாண் கொடானே * என்று கூறின தலைவியை நோக்கி நங்காய்! எங்களோடு உறவை வேணுமாகில் நீ விட்டுத் தொலைக்கலாமேயொழிய அவன் காட்சி கொடுப்பதென்பது சொல்ல, எல்லாம் பண்டே இழந்தாயிற்றன்றோ, இன்னமும் இழக்க என்னவிருக்கிறது? என்று அவர்களுக்குச் சொல்லுகிறாள்.) 9
காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9
ஆர்க்கும்,Aarkkum - எப்படிப்பட்ட பேரளவுடையார்க்கும்
தன்னை காண் கொடுப்பான் அல்லன்,Thannai kaan koduppaan allan - தன்னைக் காணக் கொடாத வனாயிருந்து வைத்து
மாயம் தன்னால்,Maayam thannal - தனது வஞ்சனத்தினாலே
கை செய் அப்பாலது ஓர்,Kai sei appaaladhu oor - அக்ருத்ரிம்மாய் அத்னிதீயமான
கோலம் மாண் குறள் வடிவு,Kolam maan kural vadivu - ஸௌந்தரியத்தையுடைய யாசகவாமன வேஷத்தை
காட்டி,Kaatri - (மஹாபலிக்கு) வெளிக்காட்டி (உடனே)
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,Mannum vinnum niraiya malarntha - மண்ணுலகும் விண்ணுலகும் நிறையும்படியாக வியாபிதவனாய்
சேண் சுடர் பல தோள்கள் தழைத்த,Seen sudar pala tholgal thazhaiththa - ஓங்கி விளங்காநின்ற பல திருத்தோள்களும் தழைத்திருக்கிற
தேவபிராற்கு,Devapiraarku - தேவபிரானான எம்பெருமானுக்கு
என் நிறைவினோடு,En niraivinaalodu - என்னுடைய ஸ்த்ரீத்வபூர்த்தியோடே கூட
நாண் கொடுத்தேன்,Naan koduththen - லஜ்ஜையையும் இழந்தேன்,
நல் நுதல் என்னுடைய நங்கைமீர்காள்,Nal nudhal ennudaiya nangai meerkaal - விலக்ஷணமான திருமுக மண்டலத்தையுடையீர்களாயிருக்கிற என்னுடைய தோழிகளே!
இனி என் கொடுக்கேன்,Ini en kodukkaen - இன்னமும் என்ன இழக்கக்கடவேன்?
3467திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (“நங்காய்! எது எப்படியிருந்தாலும் உனக்கு ஹிதமே கோருமவர்களான நாங்கள் சொல்லுமதை நீ கேட்கவேணுமே“ என்று தாய்மார் சொல்ல “ஆமாம், கேட்க வேண்டியது அவசியந்தான், உங்கள் வார்த்தை கேட்கைக்கு நெஞ்சுவேணுமே, அது இங்கில்லையே, அவன் பக்கல் போயிற்றே, என் செய்வேன்? என்கிறாள் தலைவி.) 10
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10
என்னுடைய நல்,Ennudaiya nal - நுதல் நங்கைமீர்காள்!
என் நெஞ்சு,En nenju - எனக்கு வீதேயமாயிருந்த நெஞ்சானது
நின் இடையேன் அல்லேன் என்று,Nin idaiyen allaan enru - உனக்கு நான் உறுப்பாலேனல்லேன்“ என்று சொல்லி
என்னை நீங்கி,Ennai neengi - என்னை விட்டகன்று,
கேமியும் சங்கும் இரு கை கொண்டு,Kaemiyum sangum iru kai kondu - திருவாழி திருச்சங்குகளை இரண்டு திருக்கையிலுமேந்திக் கொண்டு
ஓர் கோலம் நீலம் நல் நெடு குன்றம,Oru kolam neelam nal nedu kunRam - ஓர் அழகிய நீல மஹாபர்வதம்
நெடு சூழ் பல்சுடர் நாயிற்றோடு பால் மதி ஏந்திவருவது ஒப்பான்,Nedu soozh pal sudar naayittruodu paal madhi aendhivazhththu oppaan - பரந்து சூழ்ந்த பல சுடரையுடைத்தான் ஸூர்யனோடு கூடவெளுத்த சந்திரனையும் (தன் சிகரத்திலே) தாங்கிக் கொண்டு நடந்துவருவது போன்றுள்ளவனுடைய
நாள் மலர் பாதம் அடைந்தது,Naal malar paadam adainthathu - அப்போதலர்ந்த செந்தாமரை போன்ற திருவடிகளையடைந்திட்டது.
இனி யான் என் செய்வது,Ini yaan en seyvadhthu - இப்படி நான் நெஞ்சிழந்த பின்பு எதைச் செய்வது?
3468திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது, உபயவிபூதியிலும் பகவதநுபவமே யாத்திரையாயிருப்பதே இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் என்கிறது.) 11
பாதமடைவதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11
பாதம் அடைவதன் பாசத்தாலே,Paadam adainvadhane paasaththaale - திருவடியை யடைவதிலுண்டான ஆசையினால்
மற்ற வல் பாசங்கள் முற்ற விட்டு,Matra val paasangal muttra vittu - புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடேவிட்டு
கோது இல் புகழ் கண்ணன் தன் அடிமேல்,Koothu il pugazh kannan than adimael - கோதற்ற புகழையுடைய கண்ணபிரானது திருவடி விஷயமாக.
வண் குருகூர் சடகோபன் சொன்ன,Van kurukoor sadagopan sonna - உதாரரான ஆழ்வார் அருளிச்செய்த
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Theethu il andhaadhi oor aayiraththul - தீதற்றதாய் அந்தாதித் தொரடையாயமைந்த ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்து,Ivaiyum oor paththu - இவை பத்தையும்
இசையோடும் வல்லார் தாம்,Isaiyodum vallaar thaam - இசையோடுங்கூடப் பயிலவுல்லவர்கள்
ஆதும் ஓர் தீது இலர் ஆகி,Aadhum oor theethu ilar aagi - ஒருவகைக்குற்றமுமற்றவர்களாகி
இங்கும் அங்கும்,Ingum angum - உபய விபூதியிலும்
எல்லாம் அமைவார்கள்,Ellam amaivargal - எல்லாவகை நிறைவும் பெற்று விளங்குவர்
3579திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (அவன் நாராயணனாகையாலே நம் அபேக்ஷிதம் செய்து தலைக்கட்டுமை நிஸ்ஸந்தேஹமென்று தம்முள் தாமே அநுஸந்தித்துக் கொள்ளுகிறார்.) 1
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1
ஓர் ஆயிரம் ஆய்,Or aayiram aai - ஒரு திருநாமமே ஆயிரம் திருநாமமாய்க் கொண்டு
உலகு எழ் அளிக்கும்,Ulaku ezh alikkum - ஏழுலகங்களையும் ரக்ஷிக்கும் படியான்
ஆயிரம் பேர் கொடது ஓர்பீடு உடையன்,Aayiram per kodadhu orpeedu udaiyan - ஆயிரந் திருநாமங்களை யுடையனாயிரு க்கையாகிற விலக்ஷணமான பெருமையை யுடையனும்
நாளம் கார் ஆயின,Naalam kaar aayin - காளமேகம்போலே சாமளமான
நல்மேனியினன்,Nal meniyinan - அழகிய திருமேனியையுடையனுமான
நாராயணன் அவனே நாங்கள் பிரான்,Naarayanan avane naangal praan - நாராயணனே நமக்கு உபகாரகண்
3582திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (நித்ய ஸுரிகளுக்குப் பரம போக்யனாயிருந்து வைத்து அங்கு நின்றும் போந்து க்ருஷ்ணனாயவதரித்து நம்மையும் நித்யஸுரிகள் நடுவே கொண்டு வைக்குமவனாயிருக்கிற எம்பெருமானை ஒருவாறு கிட்டப்பெற்றோம், நெஞ்சே அவனை விடாதேகொள் என்று தம்திருவுள்ளத்தை நோக்கி யருளிச்செய்கிற பாசுரமிது.) 4
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4
நங்கள் போகம் மகிழ்ச்சிக்கு மருந்தே என்று,Nangal pogam magizhchikku marundhe endru - உன்னுடைய அநுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்தை ஸாத்மிப்பிக்கும் மருந்தானவனே என்று
பெருந்தேவர் குழாங்கள்,Perundhevar kuzhaangal - நித்பஸுரிகணங்கள்
பிதற்றும் பிரான்,Pithatrum piraan - வாய்வெருவும்படியான ஸ்வாமியாய்
கருதேவன்,Karudhevan - கரிய திருமேனியை யுடையனாய்
எல்லாம் கண்ணன்,Ellam Kannaan - எமக்கு ஸ்வாமியான க்ருஷ்ணனாய்
விண் உலகம் தருமதேவனை,Vin ulagam dharumadhevanai - பரமபத போகத்தைத் தரவானான பெருமானை
மனனே சோரேல் கண்டாய்,Manane sorel kandai - நெஞ்சே நழுவவிடாதே கொள்
3736திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமாளுக்குத் தம்மிடத்திலுண்டான வியாமோஹாதிசயத்தைச் சொல்லி;க்கொண்டுவந்த ஆழ்வார் இப்பாட்டில் அப்பெருமாளுக்குத் திருமாலிருஞ் சோலைமலையிலுண்டானவொரு வியாமோஹத்தைப் பேசுகிறார்.) 4
என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4
உலகும் உயிரும் தானே ஆய்,Ulagum uyirum thaane aay - ஸகலலோகங்களும ஸகலப்ராணிகளும் தானேயென்னலாம்படி அந்தரியாமியாய்
நண்ணா அசுரர்நலிய,Nannaa asurarnaliya - (அவ்வளவோடும் நில்லாதே) விமுகர்களான ஆஸூரப்ரக்ருதிகள நசிக்கும்படியாக
ஞாலத்தூடே நடந்து உழக்கி,Gnaalaththoode nadandhu uzhakki - பூமியெங்கும் நடையாயடியுலாவி
தென்கொள்திசைக்கு நிலதம்ஆய் நின்ற திருமாலிருஞ்சோலை,Thenkolthisaikku nilatham aay nindra thirumaalirunj solai - தெற்குத் திக்குக்குத் திலகமாயிராநின்ற திருமாலிருஞ்டசோலையாகிற
நாங்கள் குன்றம் கைவிடான்,Naangal kunram kaividaan - நமது திருமலையைக் கைவிடாதவனா யிருக்கிறான்;
என் உடலம் நன்கு கைவிடான்,En udalum nangu kaividaan - என்னுடம்பிலே மிகவும் விருப்பம் பண்ணா நின்றான்;
அம்மான் திரு அருள் என்கொல்,Ammaan thiru arul enkol - எம்பெருமானுடைய வியாமோஹத்தின்படி என்னே!
3742திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (கீழ்ப்பாட்டில் “உடலுமுயிரும் மங்கவொட்டே” என்று பிரார்த்திக்கச் செய்தேயும் இவருடைய திருமேனியிலுள்ள விருப்பத்தினாலே எம்பெருமான் பின்னையும் மேல் விழுந்து ஆதாரிக்க, ஐயோ! ஸர்வஜ்ஞனான இவனுக்கு இவ்வுடலின் ஹேயத்வம் தெரியவில்லையே! ஹேயங்களா இருப்பத்துநான்கு த்ததுவங்களினால் புணர்க்கப்பட்டது இது என்று உண்மையை யெடுத்துக்காட்டினால் இந்த நப்பாசை தவிரக்கூடம் என்று நினைத்து அரை யெடுத்துரைக்கிறாரிப்பட்டில்.) 10
மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10
திருமாலிருஞ் சோலை மேய,Thirumaalirunj solai meya - தெற்குத் திருமலையில் வாழ்கின்ற
நங்கள் கோனே,Naangal koonae - எம்பெருமானே!
யானே நீ ஆகிஎன்னை அளித்தானே,Yaanae nee aagi ennai aliththaanae - நமக்குள் ஐக்கியமாம்படி என்னை ரகூஷித்தவனே!
பொங்கு ஐம்புலஎம்,Pongu aim pulam - கிளர்ந்து வருகின்ற சப்தாதி விஷயங்கள் ஐந்தும்
பொறி ஐந்தும்,Pori aindhum - ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தும்
கருமேந்திரிமம்,Karumeendhri mam - கருமேந்திரியங்கள் ஐந்தும்
ஐம்பூதம்,Aim boodham - பஞ்ச பூதங்களும்
இங்கு,Ingu - ஸம்ஸார நிலைமையில்
இவ் உயிர் ஏய் பிரகிருதி,Ivv uyir eyy pragiruthi - ஜீவனோடே கலசின மூலப்ரக்ருதியும்
மான ஆங்காரம் மனங்கள்,Maan aangaara manangal - மஹாஎம் அஹங்காரமும் மனஸ்ஸூமாகிற
உன் மா மாயை மங்க ஒட்டு,Un maa maayai manga ottu - உனது பெரிய மாயையைக் கழித்துத்தர ஸம்மதித்தருள வேணும்.