| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2837 | திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (கீழ்ப்பாட்டில் “சொல்முடிவு காணேன் நான் சொல்லுவதென் சொல்லீரே” என்று தமக்கு எம்பெருமானைப் பேச முடியாமையாலே பேசவுந் தவிர்ந்த ஆழ்வார் பின்னையும் தம்முடைய நப்பாசையினால் ஸம்ஸாரிகளை யழைத்து என்னாயனான ஸர்வேச்வரனை எல்லாருங் கூடியாகிலும் ஒருவடிசொல்லுவோமே! என்கிறார்.) 9 | சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய் அல்லிமலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9 | என் அம்மானை,En ammaanai - எனக்கு ஸ்வாமியாய் என் ஆவி ஆவி தனை,En aavi aavi thanai - என் ஆத்மாவுக்கும் ஆத்மாவாயிருப்பவனாய் எல்லை இல் சீர்,Ellai il seer - எல்லையற்ற குணங்களையுடைய என் கரு மாணிக்கம் சுடதை சொல்லீர்-,En karu manikam suthathai solleer - எனது நீலரத்னம் போன்ற வொளியுருவையுடையனான பெருமானை சொல்லுங்கள். நல்ல அமுதம்,Nalla amudham - நல்ல அம்ருதமாய் பெறற்கு அரிய வீடும் ஆய்,Perarku ariya veedum aay - எளிதாகப் பெறுவதற்கு முடியாத மோக்ஷ நிலத்திற்கும் தலைவனாய் அல்லி மலர் விரை ஒத்து,Alli malar virai otthu - தாமரைப் பூவிலுள்ள பரிமளம் போல் பரமபோக்யனாய் ஆண் அல்லன் பெண் அல்லன்,Aan allan penn allan - ஆணுருவ மல்லாதவனாய்ப் பெண்ணுருவமு மல்லாதவனாயிருக்கின்றனவன். |
| 2921 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 3 | அண்ணல் மாயன் அணிகொள் செந் தாமரைக் கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம் தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே. –3-3-3 | கருமாணிக்கம், Karumaanikkam - நீலரத்னம்போல் திருமேனி விளக்கத்தை யுடையவனும் |
| 2961 | திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (ஆழ்வார் தாம் உபதேசிக்கத் தொடங்கின ஸௌலப்ய காஷ்டையை அர்ச்சாவதார பர்யந்தமாக அருளிச் செய்து முடித்து, தாம் அகப்பட்ட துறையான க்ருஷ்ணாவதாரத்தை அநுபவிக்க ஆசைப்படுகிறாரிப்பாட்டில். இவ்வாழ்வார் அச்ச்சாவதார ஸௌலப்ய மறிந்திருக்கச் செய்தேயும் க்ருஷ்ணாவதாரத்திலே எத்திறம்! என்று மோஹிக்கு மியல்வினராதலால் அவ்வவதாரந்தன்னிலேயே இப்போதிவர் ஈடுபட்டுப் பேசுவதும் பொருந்தும்.) 10 | கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர் பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர் அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10 | கடல் வண்ணன்,Kadal vannan - கடல் போன்ற நிறத்தையுடையவனாயும் கண்ணன்,Kannan - கண்ணபிரானாயும் விண்ணவர்,Vinnavar - பரமபத்திலுள்ளவர்கட்கு கரு மாணிக்கம்,Karu manikkam - நீலமணிபோலே போக்யனாயும் எனது ஆர் உயிர்,Enadhu aar uyir - எனது அருமையான உயிராயும் படம் அரவு இன் அணை கிடந்த,Padam aravu in anai kidandha - படங்களையுடைய ஆதி சேஷனாகிற இனிய படுக்கையில் சயனித்த பரம் சடர்,Param sudar - பரஞ்சோதியாயும் பண்டு,Pandu - முன்பொருகால் அட,Ada - கொல்வதற்காக வரும்,Varum - திரண்டு வருகின்ற நூற்றவர் படை,Nootruvar padai - துரியோதனாதிகளின் சேனை மங்க,Manka - தொலையும்படியாக ஐவர்கட்கு ஆகி,Aivarkadku aagi - பாண்டவ பக்ஷபாதியாகி வெம் சமத்து,Vem samathu - கொடிய பாரத யுத்தத்தில் அன்று,Andru - பகைவர் மேலிட்டு வந்த அந்நாளில் தேர் கடவிய,Ther kadaviya - (அர்ஜுநனுக்குத்) தேர் செலுத்திய பெருமான்,Perumaan - பெருமானாயுமிருக்கின்ற எம்பெருமானுடைய கனை,Kanai - (வீரத்தண்டையினால்) ஒலிக்கின்ற கழல்,Kazhal - திருவடிகளை கண்கள் காண்பது,Kangal kaanbadhu - (என்) கண்கள் ஸேவிக்கப் பெறுவது என்று கொல்,Endru kol - என்றைக்கோ!. |
| 3121 | திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) ((கண்ண பிரானை.) கீழ்ப்பாட்டில் மலினம் என்று பிரஸ்தாவிக்கப்பட்ட ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பார்க்க அருளிச் செய்கிறாரிதில்.) 5 | நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத் திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால் புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5 | விண்ணோர் கருமாணிக்கத்தை,Vinnor Karumanikkathai - நித்யஸூரிகளுக்கு ஸேஸ்யமான விலக்ஷண விக்ரஹத்தையுடையவனும் |
| 3191 | திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (கீழ்ப்பாட்டில் “அகற்றி யென்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்” என்னக் கேட்ட எம்பெருமான், ‘ஆழ்வீர்! உம்முடைய வினைகளாகிற பிரபல விரோதிகள் காரணமாக நீர் அருஞ்சேற்றில் விழுந்து கிடந்திராகில் இதற்கு நான் என் செய்வது? என்ன; அதற்கு ஆழ்வார், ‘பிரானே! இதற்கு மேற்பட்ட பிரபல விரோதிகளையெல்லாம் அநாயாஸமாக அழிந்திருக்கிற வுனக்கு இது ஒரு வார்த்தையோ? இப்படியும் ஒரு கள்ளத்தனமான பேச்சுண்டோ?’ என்கிறார்.) 9 | புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என் கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே! தெள்ளியார் திரு நான் மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9 | புள்ளின் வாய் பிளந்தாய்,Pullin vaai pilandhaay - பகாஸுரனையழித்தவனே! மருது இடைபோயினாய்,Marudhu idai poyinaay - இரட்டை மருதமரங்களினிடையே தவழ்ந்து சென்றவனே! ஏழ் எருது அடர்ந்த,Ezhu erudhu adarntha - ஏழு ரிஷபங்களையும் கலிதொலைத்தன்னாயும் என்,En - என் நிறத்திலே கள்ளம் மாயவனே,Kallam maayavaney - கள்ள மாயங்களைச் செய்து போருமவனே! கரு மாணிக்கம் சுடரே,Karu maanikam sudarey - கரியமாணிக்கத்தின் ஒளிபோன்ற வடிவையுடையவனே! தெள்ளியார்,Thelliyaar - தெளிந்தவர்களாயும் திரு நால்மறைசன் வல்லார்,Thiru naal maraichan vallaar - வீலக்ஷணமான நான்கு வேதங்களிலும் வல்லவர்களாயுமிருப்பார் மலி,Mali - நிறைந்திருக்கப்பெற்ற தண்,Than - குளிர்ந்த கிரீவரமங்கை உன்,Sreevaramangai un - வானமாமலைப்பதியிலே இருந்த எந்தாய்,Irundha endhaay - எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியே! எனக்கு,Enakku - அடியேனுக்கு உய்யும் ஆறு,Uyyum aaru - உஜ்ஜீவநோபாயத்தை அருளாய்,Arulaay - அருளிச் செய்ய வேணும். |
| 3534 | திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இத்திருவாய்மொழி பகவத் ப்ராப்தியைப் பண்ணி தருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ் அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால் அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11 | நம் அண்ணல் கருமாணிக்கம்,Nam annal karumaanikkam - கரியமாணிக்கம் போன்ற நம் ஸ்வாமி |
| 3535 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (திருப்புலியூர்ப் பெருமானுடைய திவ்யாவயவஸௌந்தரியத்தைக் கண்டு, அவ்வடிவழகல்லது மற்றொன்று அறியாதபடி யீடுபட்டாள் இத்தலைவி –என்று தோழியானவள் தாய்மார்க்கு உரைக்கின்றாள்.) 1 | கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல் திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான் திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர் அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1 | கரு மாணிக்கம் மலைமேல்,Karu manikkam malaimel - கரிய மாணிக்க மலையின் மேலில் மணி தட தாமரை காடுகள் போல்,Mani thada thaamarai kaadugal pol - அழகியெ பெரிய தாமரைக்காடுகள் போலே திருமார்பு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான்,Thirumaarbu vaay kan kai undhi kaal udai aadaigal seiyya piraan - திருமார்பு திருப்பவளம் திருக்கண் திருக்கை திருவுந்தி திருவடி திருப்பீதாம்பரம் ஆகிய இவை சிவந்திருக்கப்பெற்ற ஸ்வாமியாய் திருமால் எம்மான்,Thirumaal emmaan - திருமகள் கொழுநனான வழியாலே எனக்கு நாயகனாய், செழு நீர் வயல்,Sezhu neer vayal - செழிந்த நீர் நிறைந்த வயலையுடைய குட்டநாடு திருபுலியூர்,Kuttanaadu thirupuliyoor - குட்டநாட்டுத் திருப்புலியில் எழுந்தருளியிருப்பவனான அரு மாயன்,Aru maayan - பெறுதற்கரிய ஆச்சரிய பூதனுடைய பேர் அன்றி பேச்சு இலள்,Per anri peechu illal - திருநாமப்பேச் சொழிய வேறொரு பேச்சு மறியாள் (இத்தலைவி) அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே! இதற்கு என் செய்கேனோ,Idharku en seigai - இதற்கு யாது செய்வேனோ? |
| 3536 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (தலைவியின் இந்நிகழ்ச்சிக்குத் தோழியானதான் உடன்பட்டவளல்லள் என்பதைத் தாய்மார்க்கு மெய்ப்பிக்கவேண்டி அன்னைமீரிதற்கென் செய்கேனென்று அடிக்கடி சொல்லுகிறாள் (தோழி)) 2 | அன்னைமீரிதற் கென் செய்கேன் அணி மேருவின் மீதுலவும் துன்னு சூழ் சுடர் நாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல் மின்னு நீண் முடி யாரம் பல்கலன் தானுடை யெம்பெருமான் புன்னை பூம் பொழில் சூழ் திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2 | அன்னைமீர்! இதற்கு என் செய்கேன்-,Annayameer! Idharku en seykken - அன்னைமீர்! இதற்கு என் செய்கேன்- அணி மேருவின் மீது உலவும்,Ani meruvin meethu ulavum - அழகிய மேருமலையின் மேலே யிருப்பதாய், துன்னு சூழ் சுடர்,Thunnu sooz sudar - செறித்து சூழ்ந்த சுடரை யுடைத்தான் நாயிலும்,Naayilum - ஸூர்யனும் அன்றியும்,Andriyum - அவ்வளவே யல்லாமல் பல் சுடர்களும் போல்,Pal sudarkalum pol - பலவகைப்பட்ட க்ரஹநக்ஷத்ரங்களினுடைய தேஜஸ்ஸும்போலே யிருக்கிற மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான் உடை எம்பெருமான்,Minnu neel mudi aaram pal kalan than udai emperumaan - ஒளி பொருந்தி ஓங்கின திருவபிஷேகம் ஹாரம் முதலான பல திருவாபரணங்களை யுடையனான எம்பெருமானுடைய புன்னை அம்பொழில் சூழ் திருப்புலியூர்,Punnai ampozhil sooz thiruppuliyoor - அழகிய புன்னைச் சோலைகளாலே சூழப்பட்ட திருப்புலியூரை இவள் புகழும்,Eval pugazhum - இத்தலைவி (நிரநதரமாகப்) புகழ்ந்து கொண்டிராநின்றாள். |
| 3537 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருப் புலியிரிலே எம்பெருமானுடைய ஆண் பிள்ளைத் தனத்திலே இவள் அகப்பட்டு அவனுடைய ஸுர்யாதி களுக்கு வாசகமான திரு நாமங்களை பெரும் கிளர்த்தியோடே பேசா நின்றாள் என்கிறாள்.) 3 | புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான் திகழும் மணி நெடு மாடம் நீடு திருப் புலியூர் வளமே–8-9-3 | பொரு நீர் கடல் தீப்பட்டு,Poru neer kadal theepattu - அலையெறிகின்ற கடலானது நெருப்புக் கொளுத்தி எஙகும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப,Engum thigalum eriyodu selvathu oppa - எங்கும் விளங்குகின்ற ஜ்வாலைகளோடேகூடி நடந்து வருவதுபோலே செழு கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்தி,Sezhu kathir aazhi mudhal pugazhum poru padai endhi - மிக்க வொளியையுடைய திருவாழி முதலன புகழ்மிக்க திவ்யாயுதங்களை தரித்து போர் புக்கு,Poor pooku - போர்க்களத்திலே புகுந்து அசுரரை பொன்று வித்தான்,Asurarai ponru vittaan - அஸுரர்களை யழியச் செய்த பெருமானுடைய திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளம்,Thigalum mani nedu maadam needu thiruppuliyoor valam - விளங்குகின்ற ரத்னமயமான உயர்ந்த மாடங்களை வரிசையாக வுடையதிருப்புலியூரியழகை இவள் இராப்பகல் நின்று புகழும்,Eval iraapagal ninru pugazhum - இத்தலைவி இரவும் பகலும் ஓவாது புகழா நின்றாள். |
| 3538 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -வெறும் ஆண் பிள்ளைத் தனமே அன்றிக்கே -குணவானாய் ஆபத்சகனாய் -இருக்கிறவனுடைய குணாதிக்யத்திலே இவள் ஈடுபட்டாள் என்கிறாள்.) 4 | ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட நாட்டுத் திருப் புலியூர் சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் தேவ பிரான் பேர் வளம் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள் இன்று இப் புனை இழையே–8-9-4 | ஊர் வளம் கிளர் சோலையும்,Oor valam kilar soalayum - ஊரின் வளத்தைத் தெரிவிக்கின்ற சோலைகளும் கரும்பும் பெருசெந்நெலும் சூழ்ந்து,Karumbum perucennanellum soozhndhu - கரும்புகளும் பெரிய செந்நெற் பயிர்களும் சூழப்பெற்றிருப்பதாய் ஏர் வளம் கிளர் தண் பணை,Yer valam kilar than panai - செல்லு மழகுமிக்க குளிர்ந்த நீர் நிலங்களை யுடைத்தான குட்டநாடு திருப்புலியூர்,Kuttanaadu thiruppuliyoor - திருப்புலியூரில் சீர் வளம் கிளர்,Seer valam kilar - திருக்குணங்களின் சிறப்பு விளங்கப் பெற்ற மூ உலகு உண்டு,Moo ulagu undu - த்ரிலோக ரக்ஷகனான எம்பெருமானுடைய பேர் வளம்,Per valam - திருநாமங்களின் சிறப்பை இன்று,Enru - ஆபரணமணிந்த இந்நாளில் இப் புனையிழை,Ep punaiyizhai - இத்தலைமகள் கிளர்ந்தன்றி பேச்சு இலள்,Kilarndhanri peechu illal - ஓவாது சொல்லா நின்றாள். |
| 3539 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (ஸ்ரீஆறாயிரப்படியருளிச் செயல்காண்மின், “அவன் ஸௌந்தர்ய சீலாதிகுணங்களை உடையனானாலென், வேறேயொருவனை அந்வேஷித்து அவனுக்கும் கொடுக்கக் கடவதாய்ச் சொல்லாநின்றபின்பு இனிச் செய்யலாவதில்லை யென்று தாயர் சொல்ல, தோழியானவள், இயற்கையிற்புணர்ச்சியைச் சொல்லுகை ஈடன்றியேயிருக்கச் செய்தே “இவளயிழக்கிறோம் என்னும் பயத்தாலே முன்னமே திருப்புலியூர் முனைவனான ஸர்வேச்வரனிவளோடே புணர்ந்தருளினானென்கிறாள்“ என்று.) 5 | புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும் நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால் சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர் முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5 | புனை இழைகள் அணிவும்,Punai izhaigal anivum - ஆபரணங்கள் பூணும்மழகும் ஆடை உடையும்,Aadai udaiyum - சேலையுடுக்குமழகும் புதுக்கணிப்பும்,Puthukkanippum - வடிவில் பிறந்த புதுமையும் இவட்கு நின்று நினைக்க புக்கால்,Ivatku ninru ninaikka pukkaal - இத்தலைவிக்கு இருக்கும்படியை ஆராய்ந்தால் இது நினையும்,Ithu ninaiyum - இந்த வைலக்ஷண்யம் (லோகமர்யாதையில் நினைக்கக் கூடியதாக இல்லை, (ஆதலால்) சுனையினுள் தட தாமரை மலரும்,Sunaiyinul thada thamarai malarum - சுனைகளுக்குள்ளே பெரிய தாமரைகள் மலரப்பெற்ற தண் திருப்புலியூர்,Than thiruppuliyoor - குளிர்ந்த திருப்புலியூர்க்குத் முனைவன்,Munaivan - தலைவனும் மூ உலகு ஆளி அப்பன்,Moo ulagu aali appan - த்ரிலோகாதிபதியுமான எம்பெருமானுடைய திரு அருள் மூழ்கினள்,Thiru arul moozhginanl - திருவருளிலே இவள் அவகாஹிக்கப் பெற்றிருக்கவேண்டும். |
| 3540 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (இப்பெண்பிள்ளையின் அதரம் இதற்கு முன்பிருந்தபடியும் இப்போதிருக்கிறபடியும் காணமாட்டீர்களோ? அதரத்தில் பழுப்புக்கு அடியறியீர்களோ? திருப்புலியூர்ச்சோலைகளில் வளரும் கமுகம்பழத்தின் பழுப்புப்போலே யிராநின்றபடி பாரீர், அவ்வூர்ப்பெருமான் தன்னுடைய ஸௌந்தர்ய ஸௌலப்யாதிகளைக் காட்டி இவளையீடுபடுத்திக் கொண்டானென்பதற்கும் இவளுக்கு அவனோடு கலவி ப்ராப்தமாயிற்றென்பதற்கும் அடையாளம் ஒன்றிரண்டல்லவே, நீங்களே நன்கு ஆராய்ந்து பார்க்கலாமே யென்கிறாள் தோழி.) 6 | திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான் திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடை யாளம் திருந்த உள திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர் திருவருள் கமுகு ஒண் பழத் தது மெல்லியல் செவ்விதழே–8-9-6 | செழுநீர் நிறம் கண்ணபிரான் திருஅருள்,Sezhu neer niram kannapiraan thiru arul - கடல் வண்ணனான கண்ணபிரானுடைய திருவருளிலே வைகலும் மூழ்கி,Vaikalum moozhgi - நிரந்தரமாக அவகாஹித்து திரு அருள்களும் சேர்ந்தமைக்கு,Thiru arulgalum serndamaiyku - (அவனது) ஸகலவித அநுக்ரஹங்களையும் பெற்றமைக்கு அடையாளம் திருந்த உள,Adaayaalam thirundha ula - அடையாளங்கள் மறைக்க வொண்ணாதபடியுள்ளன.(அவற்றுள் முக்கியமான அடையாளம் மொன்று கேளீர்) திரு அருள் அருளால்,Thiru arul arulal - தன்னுடைய திருவருளை அருளுகைக்காக அவன் சென்று சேர் தண் திருப்புலியூர்,Avan sendru ser thaan thiruppuliyoor - அப்பெருமான் வந்துறையுமிடமான குளிர்ந்த திருப்புலியூரில் திரு அருள் கழுகு ஒண் பழத்தது,Thiru arul kazhugu on pazhaththu - அவனதருளால் வளரும் கமுகினுடைய அழகிய பழம் போன்றுள்ளது. மெல் இயல் செம் இதழ்,Mel iyal sem idhazh - இத்தலைவியின் சிவந்த அதரம். |
| 3541 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (திருப்புலியூரிலுள்ள அஃறிணைப் பொருள்களுங்கூட ஒன்றோடொன்று கலந்து பரிமாறி வாழாநிற்கு மியல்வைக்கண்டு இத்தலைவியும் அத்திருப்பதி யெம்பெருமானோடே கலந்துவாழப்பெற்றாளென்கிறாள் தோழி.) 7 | மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க வீங்கிளந்தான் கமுகின் மல்லிலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து புல்லிலைத் தெங்கினூடு காலுலவும் தண் திருப் புலியூர் மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே–8-9-7 | மெல் இலை செல்வம் வண் கொடி புல்க,Mel ilai selvam van kodi pulka - மெல்லிய இலைத்தழைப்பையும் அழகையுமுடைய வெற்றிலைக்கொடி சூழ்ந்தணைக்க வீங்கு இள தாள் கமுகின்,Veengu ila thaal kamukin - அத்தாலே முதிர்ந்து இளகிப்பதித்த அடியுரத்தை யுடைய கமுகினருகேயுள்ள மல் லை மடல் வாழை,Mal lai madal vazhai - செறிந்த இலைகளையும் மடல்களையுமுடைய வாழைகளினுடைய ஈன் கனி சூழ்ந்து,Ean kani soozhndhu - பழக்குலைகள் சூழ்ந்திருக்கப்பெற்றதனால் மணம் கமழ்ந்து,Manam kamazhnthu - பரிமளம் விஞ்சி புல் இலை தெங்கி னூடு,Pul ilai thengki noodu - செறிந்த ஓலைகளையுடைய தென்னை மரங்களின் நடுவே கால் உலவும்,Kaal ulavum - தென்றற்காற்று உலாவும்படியான தண் திருப்புலியூர்,Than thiruppuliyoor - குளிர்ந்த திருப்புலியூரில் மல்லல் அம் செல்வம் கண்ணன் தாள்,Mallal am selvam kannan thaal - ப்ரணயித்வமாகிற பெருஞ்செல்வத்தையுடையனான எம்பெருமானது திருவடிகளை இ மடவரல் அடைந்தாள்,EMadavaral adaindhaal - இத்தலைவி அடைந்தாள் போலும். |
| 3542 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (திருப்புலியூரின் வைதிக ஸம்ருத்தியையுங்கண்டு இத்தலைவி அவ்வூர்த்தலைவன் பக்கலிலேயீடுபாடு கொண்டாளென்கிறான் தோழி.) 8 | மடவரல் அன்னை மீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ வடமொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய் திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர் படவர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே–8-9-8 | அன்னைமீர்கட்கு மடவரல் என் சொல்லி சொல்லுகேன்,Annayameer kadku madavural en solli sollugeen - தாய்மாரான உங்களுக்கு இவளது நலத்தைப்பற்றி என்ன பாசுரத்தைச் சொல்லிச் சொல்லுவேன், மல்லை செல்வம் வடமொழி மறைவாணர்,Mallai selvam vadamozhi maraivaanar - மஹாஸம்பந்நர்களான ஸம்ஸ்க்ருத வேதாத்யயன பர்ர்களினுடைய வேள்விபுள்,Velvipul - யாகங்களிலே நெய் அழல் வான் புகை,Ney azhal vaan pugai - நெய்யிடப்பெற்ற அக்னியினுடைய பெரிய புகையானது போய்,Poi - கிளம்பிச்சென்று திடம் விகம்பில் அமர்ர் நாட்டை மறைக்கும்,Thidam vikambil amarr naattai maraikkum - திடமான ஆகாசத்தில் தேலோகத்தை மறைக்கும்படியான தண் திருப்புலியூர்,Than thiruppuliyoor - குளிர்ந்த திருப்புலியூரிலே படம் அரசு அணையான் தன் நாம்ம் அல்லால்,Padam arasu anaiyaan than naam allaal - படமொடுத்த அரவாகிற சயன்த்திலே சயனித்தவனுடைய திருநாம்மல்லது (வேறொன்றையும்) இவள் பரவாள்,Ival paravaal - இத்தலைவி சொல்லுகின்றிலள். |
| 3543 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (பாட்டினடியிலுள்ள பரவாளிவள் என்பதற்கு, பாட்டின் முடிவிலுள்ள திருப்புலியூர்ப்புகழன்றிமற்றே என்பதோடு அந்வயங்காண்க. திருப்புலியூரின் புகழை வாய்விட்டுச் சொல்லுவதுதவிர வேறொன்றுமறியாளித்தலைவி –என்கிறாள் தோழி.) 9 | பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான் விரவாரிசை மறை வேதியரொலி வேலையின் நின்று ஒலிப்ப கரவார் தடந்தொறும்தாமரைக்கயம் தீவிகை நின்றலரும் புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9 | பனி நீர் நிறம் கண்ணபிரான்,Pani neer niram kannapiraan - குளிர் நீர் நிறத்தனான கண்ணபிரானுடைய, விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி,Viravu aar isai marai vedhiyar oli - கலந்து நிரம்பின இசையையுடைய வேதங்களை வைதிகர் சொல்லுவதாலுண்டான ஒலியானது வேலையின் நின்று,Velaaiyin ninru - கடல்போல் முழங்க கரவு ஆர் தடம் தொறும்,Karavu aar thadam thorum - முதலைகள் மிக்கிருந்துள்ள பொய்கைக்ள் தோறும் தாமரை கயம்,Thaamarai kayam - தாமரைத் திரள்கள் தீவிகை நின்று அலரும்,Theevigai ninru alarum - நிலைவிளக்குப்போலே அலராநிற்குமிடமாய் புரவு ஆர் கழனிகள் சூழ்,Puravu aar kazhaneegal soozh - ஸாரம் மிக்க கழனிகளாலே சூழப்பட்டதான திருப்புலியூர்,Thiruppuliyoor - திருப்புலியூரினுடைய புகழ் அன்றி,Pugazh andri - புகழொழிய இவள் இராப்பகல் நின்று மற்று பரவாள்,Ival iraapagal ninru matru paravaal - இத்தலைவி இரவும் பகலும் வேறொன்றைச் சொல்லுகின்றாள். |
| 3544 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (இத்தலைவி திருப்புலியூர்ப் பெருமானுடைய கலவியைப் பெற்றாளென்னுமிடத்திற்கு ஒருவிதமான அந்யதாஸித்தியும் சொல்லமுடியாத நல்லடையாளமுண்டென்று மூதலிக்கிறாள் தோழி.) 10 | அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல் குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர் நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10 | இவள் அம் தண் துழாய் கமழ்தல்,eval am than thuzhaai kamazhdhal - இத்தலைவி அழகிய குளிர்ந்த திருத்துழாய்ப் பரிமளம் கமழப்பெற்றிருப்பதற்கு அன்றி மற்று ஓர் உபாயம் என்,Andri matru or upaayam en - இப்போது நான் சொல்லப்போகிற காரணமொழிய வேறு என்ன காரணமிருக்க்க்கூடும்? (அஃது என்ன வென்றால்) குன்றம் மா மணி மாடம் மாளிகை கோலம் குழாங்கள் மல்கி,Kunram maa mani maadam maaligai kolam kuzhaangal malki - குன்றம்போல் சிறந்த மணிமாட மாளிகைகளின் அழகிய திரள்கள் நெருங்கப்பெற்று தென்திசை திலகம் புரை,Then thisai thilagam purai - தென் திசைக்குத் திலகம் போன்றுள்ளதான குட்டநாடு திருப்புலியூர்,Kuttanaadu thiruppuliyoor - திருப்புலியூரிலே நின்ற,Ninru - எழுந்தருளியுள்ள மாயன் பிரான்,Maayan piraan - மாயப்பெருமானுடைய திரு அருள் இவள் நேர்பட்டது ஆம்,Thiru arul ival nerpatthathu aam - திருவருளை இத்தலைவி பெற்றிருத்தல் வேண்டும் |
| 3545 | திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (இப்பதிகம் கற்றவர்கள் இவ்வாத்மாவுக்குச் சிறந்த புருஷார்த்தமான பகவத்கைங்கரியத்தைப் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11 | நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல் நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும் நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11 | நின்ற மூ உலகுக்கும் நேர்பட்ட நாயகன் தன்,Ninra moo ulakukkum nerpatta naayagan than - உலகங்களெல்லாவற்றுக்கும் வாய்த்த ஸ்வாமியானவனுடைய அடிமை,Adimai - கைங்கரியத்திற்கு நேர்பட்ட,Nerpatta - தகுதியையுடைய தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,Thondar thondar thondar thondan sadagopan - தாஸ தாஸ தாஸாநு தாஸரான ஆழ்வாருடைய சொல் நேர்பட்ட,Soll nerpatta - சொல்வாய்ப்பையுடைய தமிழ் மாலை,Tamizh maalai - தமிழ் மாலையான ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்திலுள்ளே இவை பத்தும் நேர்பட்டார் அவர்,Ivai pathum nerpattaar avar - இப்பதிகத்தைப் பயிலப்பெற்றவர்கள் நெடுமாற்கு அடிமை செய்ய நேர்பட்டார்,Nedumarku adimai seiyya nerpattaar - ஸர்வேச்வரனுக்கு அடிமை செய்ய வாய்த்தவராவர். |
| 3766 | திருவாய்மொழி || 10-10 முனியே (நிர்ஹேதுகமாக வடிவழகைக் காட்டி என்னை யீடுபடுத்திவைத்து உன்னையொழியச் செல்லாதபடி பண்ணிவைத்து இப்படி ஸம்ஸாரத்திலே இன்னமும் தள்ளி வைப்பது தகுதியன்று என்கிறார்.) 1 | முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1 | என் பொல்லா கருமாணிக்கமே, En polla karu maanikkame - துளையாத கருமாணிக்கம் போன்ற திருவுருவத்தை எனக்கு அநுபவிப்பித்தவனே! |
| 3768 | திருவாய்மொழி || 10-10 முனியே (தாஹித்தவன் தாஹ சாந்தி பிறக்கும் அளவும் தண்ணீர் தண்ணீர் -என்னுமா போலே மீண்டும்– கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ-என்கிறார்) 3 | கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம் நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3 | மேவி தொழும், mevi thozhum - விரும்பித் தொழுகின்ற பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம், Biraman sivan indiran aadhiku ellaam - பிரமன் சிவன் இந்திரன் முதலானார்க்கும் முதல், mudhal - மூலநாரணமான நாவி கமலம், naavi kamalam - திருநாபிக்கமலத்திற்கு கிழங்கே, kizhange - இருப்பிடமானவனே! ளும்பர்அந்ததுவே, lumbar andhadhuve - அவர்களிஎம் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் பரம ப்ராப்யனானவனே! ஆவிக்கு, aavikku - ஆத்மாவுக்கு ஒர் பற்று கொம்பு, or patru kombu - ஓர் கொள்கொம்பு நின் அலால், nin alaal - உன்னைத் தவிர யான் அற்கின்றிலேன், yaan arkinrilen - நான் காண்கின்றிலேன்; (ஆதலால்) அந்தோ! வந்து கூவிக்கொள்ளாய். |