Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: செய்ய தாமரை (19 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
517நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 4
பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
பெய்யும், Peiyum - வர்ஷியா நின்றுள்ள
மா முகில் போல் வண்ணா, Maa Mukil Pol Vanna - காள மேகம் போன்ற திரு நிறத்தை யுடையவனே!
உன் தன், Unn Than - உன்னுடைய
பேச்சும் செய்கையும், Pechum Seikaiyum - (தாழ்ந்த) வார்த்தைகளும், (தாழ்ந்த) வியாபாரங்களும்
எங்களை, Engalai - எங்களை
மையல் ஏற்றி, Mailal etri - பிச்சேறப் பண்ணி
மயக்க, Mayakka - அறிவு கெடுக்கைக்கு
உன் முகம், Unn Mugam - உன்னுடைய முகமானது
மாயம் மந்திரம் தான் கொலொ, Maayam Manthiram Thaankolo - சுக்குப் பொடியோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு, Noiyar Pillaigal Enbatharku - அற்பத்தனமுடைய சிறுமியர் இவர்கள்’ என்று நீ சொல்லுவாய் என்று பயப்பட்டு
நாங்கள், Naangal - நாங்கள்
உன்னை, Unnai - உன்னைக் குறித்து
நோவ உரைக்கிலோம், Nova Uraikilom - நெஞ்சு புண்படும்படி (ஒன்றும்) சொல்லுகிறோமில்லை
செய்ய தாமரை கண்ணினாய், Seiya Thamarai Kanninai - புண்டாரிகாக்ஷனே!
எங்கள் சிற்றில், Engal sitril - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை
வந்து , Vandhu - (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து
சிதையேல், Sidhaiyel - நீ அழிக்க வேண்டா.
2709திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாடடில் நாரையைத் தூது போகுமாறு இரத்த தலைவி, அங்குப் போனால் சொல்ல வேண்டிய செய்தியைச் சில குயில்களுக்குச் சொல்லுகின்றாள். ஒருவரை யழைத்து விட்டு மற்றொருவர்க்கும் ஸமாச்சாரஞ் சொல்லுகிற விதனால் மிக்க கலக்கம் விளங்கும். இத்தகைய கலக்கத்தை யுண்டு பண்ணுவதே யாயிற்று விஷயாந்தரங்களிக் காட்டில் பகவத் விஷயத்திற்குண்டான ஏற்றம். 2
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2
inam kuyil kaal,இனம் குயில் காள் - கூட்டமான குயில்களே!
en,என் - என்னுடைய
seyya thaamarai kan,செய்ய தாமரை கண் - செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடைய
perumaanukku,பெருமானுக்கு - எம்பெருமானுக்கு
en thootu aay,என் தூது ஆய் - நான் விட்ட தூதாகி
uraithakkaal,உரைத்தக்கால் - சென்று சமாசாரமறிவித்தால்
en seyyum,என் செய்யும் - (அந்தச் செயல் உங்களுக்கு என்ன தீமையை விளைவிக்கும்?
neer alire,நீர் அலிரே - (நெடு நாளாகப் பழகிப் போந்த) நீங்களல்லீர்களோ?
mun seytha,முன் செய்த - முற்பிறப்பில் பண்ணின
muzhuvinaiyaal,முழுவினையால் - பெரும் பாவத்தினால்
thiruaṭi keel,திருஅடி கீழ் - திருவடிகளிலே
kutreval seyya,குற்றேவல் செய்ய - கைங்கரியம் பண்ணுவதற்கு
mun muyaladhen,முன் முயலாதேன் - முன்னம் முயற்சி செய்யாத நான்
inam,இனம் - இன்னமும்
agalvadhuvo vidhi,அகல்வதுவோ விதி - விலகி யிருப்தேயோ முறைமை?
2859திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (கீழ் ஆடியாடி யென்கிற நான்காந் திருவாய்மொழியில் நான்பட்ட துயரமெல்லாம் தொலைந்து மகிழ்ந்தேனாம்படி என்னுள்ளே வந்து பேராதபடி புகுந்தருளி என்னுடைய இந்திரியங்களை அடக்கி ஆண்டனையே! என்று உகக்கிறார்.) 9
சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9
என் இருடீகேசனே,En IrudiKesane - அம்பெருமானான ஹ் ரு ஷீ கேசனே!
சிரீ இதரன் என்று,Sreedharan Endru - ஸ்ரீதரனே! என்றும்
செய்ய தாமரை கண்ணன் என்று,Seyya Thaamarai Kanni Nan Endru - செந்தாமரைக் கண்ணனே! என்றும்
இரா பகல்,Ira pagal - இரவும் பகலும்
வாய் வொரி இ,Vaai Vori e - வாய் பிதற்றி
அலமந்து,Alamandhu - சுழன்று
கண்கள் நீர்மல்கி,Kangal Neermalgi - கண்களில் நீர்ததும்பப் பெற்று
வெம் உயிர்த்து உயிர்த்து,Vem Uyiruthu Uyiruthu - வெப்பமாக நெடுமூச் செறிந்து
மாரி இய தீவினை மாள,Maari Iya Theevinai Maala - சேர்ந்திருக்கின்ற பாவங்கள் தொலையும்படியாகவும்
இன்பம் வளர,Inbam Valara - ஆனந்தம் பெருகும்படியாகவும்
வைகல் வைகல்,Vaigal Vaigal - ஷணந்தோறும்
உன்னை,Unnai - உன்னை
என் உள்,En Ul - என் நெஞ்கினுள்ளே
இரி இவைத் தனை,Iri Ivaith Thanai - இருத்தி வைத்தாய்; (இப்படியும் ஒரு உபகாரமுண்டோ!)
2952திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (புண்டரீகாக்ஷத்வம் ஜகத் காரணத்வம் முதலிய குணங்களையுடைய எம்பெருமானே ஆச்ரயணீய னென்கிறார்.) 1
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1
செய்யதாமரை கண்ணன் ஆய் உலகு ஏழும்,Seyyaathamarai kannan aai ulagu ezhum - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையனாய்
உலகு ஏழும்,Ulagu ezhum - ஸகலலோகங்களையும்
உண்ட அவன்,Unda avan - (ஒரு சமயத்தில்) திருவயிற்றிலே வைத்து நோக்கினவனாய்
வையம்,Vaiyam - பூமியும்
வானம்,Vaanam - விண்ணுலகங்களும்
மனிசர் தெய்வம்,Manisar deivam - (முறையே அவற்றில் வாழ்கின்ற) மனிதரும் தேவதைகளும்
மற்றும்,Matrum - மற்ற விலங்குகளும்
மற்றும்,Matrum - மற்ற ஸ்தாவரங்களும்
மற்றும்,Matrum - மற்றுமுள்ள பஞ்ச பூதங்களும்
முற்றும் ஆய்,Mutrum aai - மற்றுமுள்ள ஸகலமும் (காரணதசையில்) தன்னுள்ளே அடங்கப்பெற்றவனாய்
செய்ய சூழ் சுடர் ஞான ஆய்,Seyya oozh sudar nyana aai - சிறந்ததும் வியாபகமும் ஒளிமயமுமான ஸங்கல்பஜஙஞானத்தை யுடையனாய்
வெளிப்பட்டு,Velippattu - ஸ்ருஷ்டியை உத்தேசித்துத் தோற்றி
இவை,Ivai - முன்சொன்ன இவை யெல்லாவற்றையும்
படைத்தான்,Padaitthaan - ஸ்ருஷ்டித்தவனாய்
பின்னும்,Pinnum - அதற்குமேலும்
மொய் கொள் சோதியோடு ஆயினாள்,Moy kol sothiyodua aainal - செறிந்த தேஜோமயமான பரமபதத்தை நிலயமாகவுடையனாயிருக்கின்ற எம்பெருமான்
ஒரு மூவர் ஆகிய மூர்த்தி கண்டீர்,Oru moovar aagiya moorthi kandir - ப்ரஹம் விஷ்ணு சிவரூபியாய் நின்ற ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நிர்வஹிப்பவன் காண்மின்
2953திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் நிரூபித்த பரத்வத்தைக் கேட்டவர்கள் ‘இப்படிப்பட்ட பராத்பரனானவனை நாங்கள் ஆச்ரயிக்க எங்ஙனே கூடும்? என்று சங்கிக்க, அப்படிப் பட்டவன் தானே உங்களோடு ஸஜாதீயனாய் சக்ரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்தான் என்ற அவதார வெளிமையை இப்பாட்டில் உணர்த்துகின்றார்.) 2
மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியைப்
பாவநாசனைப் பங்கயத் தடங்கண்ணனைப் பரவுமினோ.–3-6-2
மூவர் ஆகிய மூர்த்தியை,Moovar aagiya moorthiyai - மூவரும் தானே என்னலாம் படி யுள்ளவனாய்
முதல் மூவர்க்கும்,Mudhal moovarkkum - முதல்வராகச் சொல்லப்படுகின்ற அந்த இந்திரன் பிரமனீசன் என்ற மூவர்க்கும்
முதல்வன் தன்னை,Mudhalvan thannai - காரண பூதனாய்
சாவம் உள்ளன நீக்குவாளை,Saavam ullana neekkuvaalai - (அவர்களுக்கு நேரும்) துன்பங்களை யெல்லாம் போக்குபவனாய்
தட கடல்,Thada kadal - விசாலமான திருப்பாற்கடலிலே
கிடந்தான் தன்னை,Kidanthaan thannai - கண்வளர்ந்தருள்பவனாய்
தேவதேவனை,Devadhevanai - தேவாதி தேவனாய்
தென் இலங்கை,Then ilankai - தென்னிலங்கையில்
எரி எழ,Eri ezha - அக்னி தலையெடுக்கும்படி
செற்ற,Setra - பகைவரை அழித்த
வில்லியை,Villiyai - சார்ங்கத்தை யுடையவனாய்
பாவநாசனை,Paavanasanai - பரம பாவநனாய்
பங்கயம் தட கண்ணனை,Pangayam thada kannanai - தாமரை போன்ற பரந்த திருக்கண்களை யுடையவனான எம்பெருமானை
பரவுமின்,Paravumin - புகழ்ந்து பாடுங்கள்.
2954திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (கீழ்பாசுரத்தில் ப்ரஸ்தாவித்த இராமபிரானிற்காட்டிலும் எளியனாய் வந்து திருவவதாரம் பண்ணி யருளின கண்ண பிரானை ஆச்ரயிக்கப் பாருங்களென்கிறார்.) 3
பரவி வானவர் ஏத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணிவண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அமரும் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3
வானவர்,Vaanavar - தேவர்கள்
பரவி ஏத்த நின்ற,Paravi yetha nindra - வாயாரத் துதிக்கும்படி அமைந்த
பரனை,Paranaai - பராத்பரனாய்
பரம் சோதியை,Param sothiyai - மேலான ஒளியுருவனாய்
குரவை கோத்த,Kuravai kotha - (கோபிமார்களோடு) ராஸக்ரீடை செய்த
குழகனை,Kulzaganai - ரஸிகனாய்
மணிவண்ணனை,Manivannanai - நீலமணிவண்ணனை
குடக்கூத்தனை,Kudakkoothanai - குடக்வத்தாடினவனாய்
அரவம் ஏறி,Aravam aeri - சேஷசயனத்தின் மீதேறி
அலை கடல்,Alai kadal - அலையெறிகின்ற திருப்பாற்கடலில்
அமரும் துயில் கொண்ட,Amarum thuyil konda - பொருத்தமான நித்திரையைக் கொண்டவனான
அண்ணலை,Annalai - பெருமானை
நல் இரவும் பகலும்,Nal iravum pagalum - நல்ல இரவும் பகலும்
விடாது,Vidaathu - இடையறாமல்
என்றும் ஏத்துதல்,Endrum yaethudhal - எந்நாறம் தோத்திரம் பண்ணுதலில்
மனம் வைம்மின்,Manam vaimmin - சிந்தை செலுத்துங்கள்.
2955திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (மிகவும் அபிமாந யுக்தர்களான பிரமன் சிவன் முதலானரும் தடையின்றியே வந்து பணியலாம்படி யிருக்கிற எம்பெருமானுடைய சீலாதிசயத்தைப் பேசுகிறார்) 4
வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க; நாடொறும்
வானவர் தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4
நும் மனத்து,Num manaththu - உங்கள் நெஞ்சிலே
வைம்மின் என்று,Vaimmin endru - வையுங்கள் என்று
யான் உரைக்கின்ற,Yaan uraikindra - என்னால் சொல்லப்படுகின்ற
மாயவன்,Maayavan - மாயோனுடைய
சீர்மையை,Seermaiyai - சீல குணத்தை
எம்மனோர்கள்,Emmanorkal - என்னைப் போன்றவர்கள்
உரைப்பது என்,Uraippadhu en - சொல்லுவது என்னோ?
அது நிற்க,Adhu nirka - அது கிடக்க:
வானவர் தம்மை ஆளுமவனும்,Vaanavar thamai aalumavanum - தேவர்களை ஆள்பவனான இந்திரனும்
நான்முகனும்,Naanmuganum - பிரமனும்
சடை முடி அண்ணலும்,Sadai mudi annalum - ஜடாதரக் கடவுளான சிவனும்
செம்மையால்,Semmaiyaal - முறைமை தவறாது
பாத பங்கயம்,Padha pankayam - திருவடித் தாமரைகளை
நாள்தொறும்,Naaldhorum - எப்போதும்
சிந்தித்து,Sindhiththu - சிந்தனை செய்து
ஏத்தி,Yaethi - துதித்து
திரிவர்,Thirivar - இதுவே காரியமாக இருப்பர்.
2956திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (எம்பெருமானுடைய விபூதிவிஸ்தாரங்களை அநுபவித்துப்பேசுகிறார்.) 5
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5
கரிய மேனி,Kariya meni - சாமளமான வடிவை யுடையனாய்
செய்ய தாமரை கண்ணன்,Seyya thamarai kannan - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களை யுடையனாய்
விண்ணோர் இறை,Vinnor irai - நித்யஸூரி நாதனாய்
சுரியும் பல் கரு குஞ்சி,Suriyum pal karu kunji - சுருண்டு அலகலகாய்க் கருமையாகிறகுழற் கற்றையையுடையனாய்
சுடர் முடி,Sudar mudi - ஒளி பொருந்திய திருமுடியையுடையனாய்
எங்கள் அண்ணல்,Engal annal - எமக்கு ஸ்வாமியான
கண்ணன் தோற்றம் திரியும் காற்றோடு,Kannan thotram thiriyum kaatrodu - கண்ணபிரானடைய விளக்கமானது, இடையறாது உலாவுகின்ற வாயு வென்ன
அகல்,Agal - விசாலமான
விசும்பு,Visumbu - ஆகாசமென்ன
திணிந்த,Thinindha - கடினமான
மண்,Mann - பூமியென்ன
கிடந்த,Kidantha - கரைகடவாமல் கிடந்த
கடல்,Kadal - ஸமுத்ரமென்ன
எரியும்,Eriyum - ஜ்வலிக்கிற
தீயோடு,Theeyodu - அக்னி யென்ன
இரு சுடர்,Iru sudar - சந்திர ஸூரியர்களென்ன
தெய்வம்,Deivam - மற்றுள்ள தெய்வங்களென்ன
மற்றும்,Matrum - மற்றுள்ள மானிடர்களென்ன
மற்றும்,Matrum - மற்றுள்ள திர்யக் ஸ்தாவரம் முதலியவைகளென்ன (ஆகிய)
முற்றும் ஆய்,Mutrum aai - ஸகலஸ்வரூப மாயிருக்கும்.
2957திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (ஆச்ரித விஷயத்தில் எல்லை கடந்த வாத்ஸல்யமுடைய நரஸிம்ஹ மூர்த்தியை யொழிய மற்றொருவரை யானுடையேனல்லேனென்கிறார்) 6
தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6
தோற்றம் கேடு அவை,Thotram kedu avai - ஜனன மரணங்களாகிற அவைகள்
இல்லவன்,Illavan - இல்லாதவனும்
உடையான்,Udaiaan - அவற்றையுடையவனும்
அவன்,Avan - ப்ரமாண ப்ரஸித்தனும்,
ஒரு மூர்த்தி ஆய்,Oru moorthi aai - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய்
சீற்றத்தோடு அருள் பெற்றவன்,Seetrathodu arul petravan - சீறியிருக்கும் நிலைமையிலேயே கருணைக்கு இலக்கான ப்ரஹ்லாதன்
அடி கீழ் புக நின்ற,Adi keezh puga nindra - தன் திருவடிவாரத்தில் கூசாது நிற்கப்பெற்றவனும்,
செம் கண் மால்,Sem kan maal - சிவந்த திருக்கண்களையும் ஆச்ரித பக்ஷபாதத்தையுமுடையவனும்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற,Naatram thotram suvai oli ural aagi nindra - கந்தம் ரூபம் ரஸம் சப்தம் ஸ்பர்சம் என்கிற பஞ்ச விஷயங்களுமாய் நிற்பவனும்
எம் வானவர் ஏற்றையே அன்றி,Em vaanavar yetriyai andri - தேவாதி தேவனுமான எம்பெருமானையே யன்றி
எழுமைக்கும்,Ezhumaikkum - எல்லாக் காலத்திலும்
மற்று ஒருவரை,Matru oruvarai - வேறொருவரை
யான் இலேன்,Yaan ilein - நான் புகலாகவுடையேனல் லேன்
2958திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (எம்பெருமான் இப்படி ஆச்ரித ஸுலபனாகையாலே அவன் பக்கலில் நீங்கள் பண்ணின துர்லபத்வ சங்கையைத் தவிர்த்து அவனை ஆச்ரயியுங்கள்; உங்கள் துயரங்கள் தொலைந்து போம் என்கிறார்.) 7
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7
எழுமைக்கும்,Ezhumaikkum - எல்லா நிலைமைகளிலும்
எனது ஆவிக்கு,Enadhu aavikku - என் ஆத்மாவுக்கு
இன் அமுதத்தினை,In amudhathinai - இனிய அங்குதம் போன்வனும்
எனது ஆர் உயிர்,Enadhu aar uyir - என்னுடைய அருமையான உயிரோடே
கெழுமிய,Kezhumiya - கலந்து நிற்கிற
கதிர் சோதியை,Kathir sothiyai - பரஞ்சோதியுருவனும்
மணி வண்ணனை,Mani vannanai - நீலமணி நிறத்தனும்
குடக் கூத்தனை,Kudak koothanai - குடக் கூத்தாடினவனும்
விழுமிய அமரர்,Vizhumiya amarar - சிறந்த தேவர்களாலும்
முனிவர்,Munivar - முனிவர்களாலும்
விழுங்கும்,Vizhungum - அநுபவிக்கப்படுகிற
கன்கல் கனியினை,Kankal kaniyinai - கன்னற்கனி போன்றவனுமான எம்பெருமானை
தூய மனத்தர் ஆய்,Thooaya manathar aai - அழுக்கற்ற மனமுடையீர்களாய்
தொழுமின்,Thozhumin - தொழுங்கள் (தொழுதால்)
துயரங்கள்,Thuyarangal - துன்பங்களானவை
இறையும்,Iraiyum - சிறிதேனும்
நில்லா,Nillaa - நிற்கமாட்டா.
2959திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (மற்றுள்ளாரும் தம்முடைய பக்ஷத்தை யறிந்து ருசி பண்ணுகைக்காக ‘நான் சக்ரவர்த்தி திருமகனை யல்லது மற்றொருவரை ஆபத் தனமாகப் பற்றி யிரேன்’ என்று தமது உறுதியை வெளியிடுகிறார்.) 8
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8
துயரமே தரு,Thuyarame tharu - பரிதாபத்தையே தாக்கடவதான
துன்பம் இன்பம் ஆய்,Thunbam inbam aai - புண்யாபாபரூப கருமங்களுக்கு நியாயமகான்
அவை அல்லன் ஆய்,Avai allan aai - அவற்றுக்குத்தான் வசப்படாதவனாய்
உயர நின்றது ஓர் சோதி ஆய்,Uyara nindradhu or sothi aai - உயர்ந்த நிலமாகிய பரமபதந்தனில் லெழுந்தருளி யிருக்கின்ற விலக்ஷண தேஜோமய விக்ரஹ யுக்தனாய்
உலகு ஏழும்,Ulagu ezhum - எல்லா உலகங்களையும்
உண்டு உமிழ்ந்தான் தன்னை,Undu umizhndhaan thannai - (பிரளயத்தில்) உண்டு (மீண்டும்) வெளிப்படுத்தி ரக்ஷிப்பவனாய்
அயர வாங்கும்,Ayara vaangum - மோஹிக்கும்படி உயிரை அபஹரிக்கின்ற
நமன் தமர்க்கு,Naman thamarkku - யமபடர்களுக்கு
அரு நஞ்சினை,Aru nanjinai - மீட்கமுடியாத விஷமாய்
அச்சுதன் தன்னை,Acchuthan thannai - (தன்னைப் பணிந்தாரை) நழுவ விடாதவனாய்
தயரதற்கு மகன் தன்னை அன்றி,Thayaratharku magan thannai andri - சக்ரவர்த்தி திருமகனான எம்பெருமானை வல்லது
மற்று,Matru - மற்றொரு தெய்வத்தை
தஞ்சம் ஆக இலேன்,Thanjam aaga ilein - சரணமாகவுடையேனல்லேன்.
2960திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தி லெழுந்தருளியிருக்குமிருப்பு எங்களுக்கு உபயோகப்படுவதன்று; ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் பண்ணின காலத்தில் நாங்கள் அணுகியிருந்து வாழப்பெற்றிலோம்; ஆனபின்பு எங்ஙனே அவனைக் கண்டு ஆச்ரயிக்கும்படி?’ என்று ஸம்ஸாரிகள் வினவுவதாகக் கொண்டு, அவர்களுக்கு உத்தரமுரைக்கிறார்; நீங்கள் ஏதேனுமொருபடி உகந்தருளப்பண்ணி ஆச்ரயிப்பது; அத்திருமேனியையே அப்ராக்ருத திவ்யஸம்ஸ்தானமாக விரும்பியருளக் குறையில்லை யென்கிறார். இப்பதிகத்திற்கு இப்பாசுரமே உயிராயிருக்கும். இப்பாட்டின் பிரமேயத்திற்கு அவதாரிகை போன்றனவே கீழ்ப்பாசுரங்கள்.) 9
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9
உலகத்து உள்ளீர்கள்,Ulagathu ullirgal - உலகத்தவர்களே!
தஞ்சம் ஆகிய,Thanjam aagiya - ரக்ஷிக்குந் தன்மை பொருந்திய தந்தையும்
தந்தையொடு,Thandaiyodu - தந்தையும்
தாய்தானும் ஆய்,Thaithanum aai - தாயுமாய்
அவை அல்லன் ஆய்,Avai allan aai - அவ்வளவோடும் நில்லாத ஸகலவித பந்துவுமாய்
எஞ்சல் இல்,Enjal il - (பகவதநுபவத்தில்) குறைதல் இல்லாத
அமரர் குலம்,Amarar kulam - நித்யஸூரிகளின் திரளுக்கு
முதல்,Mudhal - தலைவனாய்
மூவர் தம் உள்ளும்,Moovar tham ullamum - மும்மூர்த்திகளுக்கும்
ஆதியை,Aadhiyai - முதல்வனான எம்பெருமானைக் குறித்து
நீர்,Neer - நீங்கள்
அஞ்சி,Anji - மேன்மை கண்டு கலங்கி
அவன் இவன் என்று,Avan ivan endru - எல்லை கடந்த மஹிமையையுடைய அந்த எம்பெருமான் வேறு, இந்த அர்ச்சாரூபாயான எம்பெருமான் வேறு என்று கொண்டு
கூழேல்மின்,Koolzelmin - கலங்கியிருக்க வேண்டா;
நெஞ்சினால்,Nenjinal - நெஞ்சாலே
நினைப்பான் யவன்,Ninaippan yavan - நினைந்து உகந்தருள்விக்கப்பட்டவன் யாவன்
அவன்,Avan - அவனே
நீள் கடல் வண்ணன் ஆகும்,Neel kadal vannan aagum - விசாலமான கடல்போன்ற நிறத்தையுடைய ஸர்வேச்வரனாவன்
2961திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (ஆழ்வார் தாம் உபதேசிக்கத் தொடங்கின ஸௌலப்ய காஷ்டையை அர்ச்சாவதார பர்யந்தமாக அருளிச் செய்து முடித்து, தாம் அகப்பட்ட துறையான க்ருஷ்ணாவதாரத்தை அநுபவிக்க ஆசைப்படுகிறாரிப்பாட்டில். இவ்வாழ்வார் அச்ச்சாவதார ஸௌலப்ய மறிந்திருக்கச் செய்தேயும் க்ருஷ்ணாவதாரத்திலே எத்திறம்! என்று மோஹிக்கு மியல்வினராதலால் அவ்வவதாரந்தன்னிலேயே இப்போதிவர் ஈடுபட்டுப் பேசுவதும் பொருந்தும்.) 10
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10
கடல் வண்ணன்,Kadal vannan - கடல் போன்ற நிறத்தையுடையவனாயும்
கண்ணன்,Kannan - கண்ணபிரானாயும்
விண்ணவர்,Vinnavar - பரமபத்திலுள்ளவர்கட்கு
கரு மாணிக்கம்,Karu manikkam - நீலமணிபோலே போக்யனாயும்
எனது ஆர் உயிர்,Enadhu aar uyir - எனது அருமையான உயிராயும்
படம் அரவு இன் அணை கிடந்த,Padam aravu in anai kidandha - படங்களையுடைய ஆதி சேஷனாகிற இனிய படுக்கையில் சயனித்த
பரம் சடர்,Param sudar - பரஞ்சோதியாயும்
பண்டு,Pandu - முன்பொருகால்
அட,Ada - கொல்வதற்காக
வரும்,Varum - திரண்டு வருகின்ற
நூற்றவர் படை,Nootruvar padai - துரியோதனாதிகளின் சேனை
மங்க,Manka - தொலையும்படியாக
ஐவர்கட்கு ஆகி,Aivarkadku aagi - பாண்டவ பக்ஷபாதியாகி
வெம் சமத்து,Vem samathu - கொடிய பாரத யுத்தத்தில்
அன்று,Andru - பகைவர் மேலிட்டு வந்த அந்நாளில்
தேர் கடவிய,Ther kadaviya - (அர்ஜுநனுக்குத்) தேர் செலுத்திய
பெருமான்,Perumaan - பெருமானாயுமிருக்கின்ற எம்பெருமானுடைய
கனை,Kanai - (வீரத்தண்டையினால்) ஒலிக்கின்ற
கழல்,Kazhal - திருவடிகளை
கண்கள் காண்பது,Kangal kaanbadhu - (என்) கண்கள் ஸேவிக்கப் பெறுவது
என்று கொல்,Endru kol - என்றைக்கோ!.
2962திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (இத்திருவாய்மொழியை ஓத, பழுதில்லாத பக்தியுடையராகை திண்ணம்; ஆனபின்பு இத்திருவாய்மொழியை ஓதுங்கள் என்கிறார்) 11
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11
கண்கள் காண்டற்கு,Kangal kaandarku - கண்களால் பார்ப்பதற்கு
அரியன் ஆய்,Ariyan aai - அருமைப்பட்டவனாகி
கருத்துக்கு,Karuthukku - தியானத்திற்கு
நன்றும் எளியன் ஆய்,Nandrum eliyan aai - மிகவும் சுலபனாய்
மண் கொள் ஞாலத்து,Man kol gnaalathu - பூமண்டலத்திலுள்ள
உயிர்க்கு எல்லாம்,Uyirkku ellaam - பிராணிகளுக்கெல்லாம்
அருள் செய்யும்,Arul seyyum - (அர்ச்சாவதார முகத்தாலே) க்ருபைபண்ணுகிற
வானவர் ஈசனை,Vaanavar esanai - தேவாதிதேவனைக் குறித்து,
பண் கொள் சோலை,Pan kol solai - (வண்டு முதலியவற்றின்) இசைமிகுந்த சோலைகளையுடைய
வழுதி நாடன்,Vazhudi naadan - திருவழுதி நாட்டை யுடையராய்
குருகை கோன்,Kurugai kon - திருநகரிக்குத் தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
சொல்,Sol - அருளிச்செய்த
பண் கொள் ஆயிரத்து,Pan kol aayirathu - ராகப்ரதாநமான இவ்வாயிரத்தினுள்ளும்
இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால்
பத்தார் ஆக கூடும்,Paththaar aaga koodum - பக்தியை யுடையவராகக் கூடும்:
பயிலுமின்,Payilumin - (ஆதலால் இப்பதிகத்தை) அப்யஸியுங்கோள்.
3039திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (இத்திருவாய் மொழியை ஓதுமவர்கள் உபய விபூதியையும் தாம் இட்ட வழக்காக நிர்வஹிக்கப் பெறுவர்களென்கிறார்.) 11
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11
மற்று,Matru - வேறு வழியினால்
உய்வு உபாயம் இன்மை,Uyvupayam inmai - தரிக்கவிரகில்லாமையை
தேறி,Theri - துணிந்து
கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய
ஓண் கழல்கள் மேல்,On kazhalgal mel - அழகிய திருவடிகள் விஷயமாக,
செய்ய தாமரை பழனம்,Seyya tamarai pazhanam - செந்தாமரைகள் நிறைந்த நீர்நிலங்களையுடைய
தென் நன் குருகூர்,Then nan kurugoor - தென் திசையிலுள்ள அழகிய திருக்குருகூர்க்குத் தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார் (அருளிச் செய்ததான)
பொய் இல் பாடல் ஆயிரத்துள்,Poi il paadal aayirathul - யதார்த்தம் பொருந்திய ஆயிரத்தினுள்ளும்
இவை பத்தும்,Ivai patthum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்கள்,Vallargal - ஓதவல்லவர்கள்
வையம்,Vaiyam - இப்பூமண்டலத்திலே
மன்னி வீற்றிருந்து,Manni veetrirundhu - நெடுங்காலம் பொருந்தியிருந்து
மண்ணூடே,Mannude - இந்நிலத்திலேயே
விண்ணும் ஆள்வர்,Vinnum aaluvar - பரம பதத்தையும் ஆளப் பெறுவர்கள்.
3122திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (கீழ்ப்பாட்டில் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை நினைத்து வருத்தமுற்ற ஆழ்வாருடைய இழவு ஒருவாறு தீரும்படி எம்பெருமான் தன வடிவழகைக் காட்டியருள, அதை ஸேவித்தவாறே தம் உடம்பை மறந்து மகிழ்ந்து போகிறார். இவரை மெய்மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு.) 6
புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6
இரு,Iru - புண்யபாபங்களென்று இருவகைப்பட்ட
வல் விளையர்,Val Vilaiyar - பிரபல கருமங்கள்
புறம் அற,Puram Ara - புச்சம் தோன்றாதபடி
முறை முறை,Murai Murai - தோல் மாறுங் கணக்கிலே
புகல் ஒழிய,Pugal Ozhia - புகுவது தவிரும்படியாக
நிறம் உடை நால் தட தோள்,Niram Udai Naal Thada Thol - அழகு பொருந்திய விசாலமான நான்கு திருத்தோள்களையும்
செய்ய வாய்,Seyya Vaai - சிவந்த திருப்பவளத்தையும்
செய்ய தாமரைகள்,Seyya Thaamaraigal - செய்தாமரைக் கண்களையும்
கட்டிக்கொண்டு,Kattikondhu - ஒன்றோடொன்று பிசிறிக்கொண்டு
குமைக்கும்,Kumaikkum - நலிவதற்கு இடமான
ஆக்கை,Aakkai - சரீரத்தில்
அறம் முயல் ஆழி அம் கை,Aram Muyal Aazhi Am Kai - ரக்ஷணமாகிற தருமத்திலே ஊக்கமுடைய திருவாழியினாலே அழகுபெற்ற திருக்கைகளையும் உடைய
கரு மேனி,Karu Meni - கரிய திருமேனியை யுடையவான
அம்மான் தன்னை,Ammaan Thannai - எம்பெருமானை
கண்டு கொண்டு ஒழிந்தேன்,Kandu Kondu Ozhindhen - ஸேவித்து அநுபவித்து விட்டேன்.
3140திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (கீழ்ப்பாட்டில், ஊரார் சொல்லுபழி நமக்கென்ன செய்யப் போகிறதென்றால்; ‘இப்படியும் ஒரு வார்த்தையுண்டோ? பழிக்கு அஞ்சாதே யிருக்கவொண்ணுமோ? பழி பரிஹரிக்கவேண்டியது அவசியமாயிற்றே’ என்ன, நான் பழி பரிஹரிக்க வேண்டாவென்று சொல்லுகின்றேனல்லேன்; பழி பரிஹரிக்கும்படியான நிலைமையில் இல்லையே! என்கிறாளிப்பாட்டில்.) 2
என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2
என் செய்ய தாமரை கண்ணன்,En seyya thaamarai kannan - சிவந்ததாமரை போன்ற திருக்கண்களையுடையனான என்னாதன்
3168திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அழகிய குழல் தாழ்ந்த தோள்களோடே கூடின மற்றும் உண்டான திவ்ய அவயவங்களிலே அழகுகள் என் முன்னே நின்று நலியா நின்றன என்கிறாள் ) 8
கை யுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8
நல் முகம் கையுள் வைக்கும் என்று,Nal mugam kaiyul vaikkum endru - (இப்பெண் பிள்ளையானவள்) அழகிய முகத்தைக் கையிலே இட்டு வைக்கின்றாள்’ என்றும்
நையும் என்று,Naiyum endru - நைகின்றாள் என்றும் சொல்லி.
அல்குலும்,Algulum - கடிப்ரதேசமும்
சிறு இடையும்,Siru idaiyum - சிறுசிறு இடையும்
வடிவும்,Vadivum - திருமேனியும்
மொய்ய நின் சூழல்தாழ்ந்த தோள்களும்,Moyya nin soozhal thaazhndha tholgulum - செறிந்து நீண்ட நேச பாசங்கள் தாழ்ந்துவரப்பெற்ற திருத்தோள்களும்
அன்னையரும்,Annaiyarum - தாய்மாரான நீங்களும்
முனிதிர் கை கொள்,Munithir kai kol - சீறிப் பொடிகின்றீர்கள்;
மை கோள் மாடத் திருக்குறங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Mai kol maadat thirukkudungudi nambiyai naan kanda pin-; - மை கோள் மாடத் திருக்குறங்குடி நம்பியை நான் கண்ட பின்-;
செய்ய தாமரை கண்ணும்,Seyya thaamarai kannum - செந்தாமரை போன்ற திருக்கண்களும்
பாலியேன் முன் நிற்கும்,Paaliyaen mun nirkum - பாவியான என்னுடைய கண்முன்னே புலப்படா நின்றன.
3283திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திரு உலகு அளந்து அருளின எம்பெருமானுடைய ஸ்ரீ பஞ்சாயுத தாரணத்தாலே வந்த அழகிலே அகப்பட்டு என் மகள் தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் -என்கிறாள்.) 2
சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் கையற்கு,Sangu vil vaal thandu chakkaram kaiyarkku - பஞ்சாயுதங்களையும் திருக்கையிலே உடையவரும்
செம் கனி வாய் செய்ய தாமரை கண்ணற்கு,Sem kani vaai seyya thaamarai kannarkku - சிவந்த கனிபோன்ற அதரத்தையும் செந்தாமரைக் கண்களையுமுடையவரும்
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு,Kongu alar than am thuzhaai mudiyaanukku - தேனொழுகப் பெற்றுக் குளிர்ந்தழகிய தருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவருமான எம்பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
எள் மங்கை இழந்த்து,El mangai izhandhu - என்பெண்பிள்ளை யிழந்தது
மாமை நிறம்,Maamai niram - அழகிய நிறமாம்.