Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: சீதக்கடல் (21 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
23ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 1
சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே –1-2-1
சீதம்,Seetham - குளிர்ந்திரா நின்றுள்ள
கடல்,Kadal - திருப்பாற்கடலிலே
உன் அமுது அன்ன,Un amuthu anna - உள்ளமுதாகப் பிறந்த பிராட்டியோடொத்த
தேவகி,Devaki - தேவகிப் பிராட்டியால்
கோதை குழலான் அசோதைக்கு போத்தந்த,Kothai kuzhalan asothai ku pothantha - பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட கேச பாசத்தை யுடைய யசோதைப் பிராட்டிக்குப் போகவிடப்பட்டவனாய்
பேதை,Pethai - அறிவின்மையை யுடையனாய்
குழவி,Kuzhavi - சிசுவான கண்ணபிரான்
பிடித்து,Pidithu - (தன் கைகளால்) பிடித்து
சுவைத்து,Suvaithu - ருசி பார்த்து
உண்ணும்,Unnum - திருப்பவளத்தில் வைத்து புஜியா நின்றுள்ள
பாதம் கமலங்கள்,Paatham kamalangal - திருவடித் தாமரைகளை.
காணீர்,Kanneer - வந்து காணுங்கோள்.
பவளம்,Pavalam - பவளம் போல் சிவந்த
வாயீர்,Vaayir - அதரத்தையுடைய பெண் காள்! வந்து காணீர்!
24ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 2
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள்
ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே–1-2-2
முத்தும்,Muttum - முத்துக்களையும்
மணியும்,Maniyum - ரத்நங்களையும்
வயிரமும்,Vairamum - வஜ்ரங்களையும்
நல் பொன்னும்,Nal ponnum - மாற்றுயர்ந்த பொன்னையும்
தத்திப்பதித்து,Tattippatitthu - மாறி மாறிப் பதித்து
தலைப்பெய்தாற்போல்,Talaippeydaarpol - சேர்த்தாற்போலே
எங்கும்,Engum - திருமேனி யெங்கும்
மணி வண்ணன்,Mani vannan - மணி போன்ற வர்ணத்தை யுடையனான கண்ணனுடைய
பாதங்கள்,Paathangal - திருவடிகளிலுள்ள
பத்து விரலும்,Pathu viralum - விரல் பத்தும்
ஒத்திட்டிருந்வா,Ottittirunva - ஒன்றோடொன்றெத்து அமைந்திருக்கும்படியை
காணீர் ஒண் நுதலீர்,Kaanir onnudhalieer - ஒளிபொருந்திய நெற்றியை யுடையீர் காண்!
வந்து காணீர்!,Vandhu kaanir! - வந்து காணீர்!
25ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 3
பணைத் தோளிள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்த இப் பிள்ளை
இணைக் காலில் வெள்ளித் தளை நின்றிலங்கும்
கணைக் கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3
பணை,Panai - மூங்கில்போன்ற
தோள்,Thol - தோள்களை யுடையளாய்
இள,Ila - இளமைப் பருவத்தை யுடையளான
ஆய்ச்சி,Aaychi - யசோதையினுடைய
பால் பாய்ந்த,Paal paayndha - பால் சொரிகிற
கொங்கை,Kongai - முலையை
அணைத்து,Anaiththu - (திருக்கையால்) அணைத்துக்கொண்டு
ஆர,Aara - வயிறு நிரம்ப
உண்டு,Undu - (பாலை) அமுது செய்து
கிடந்த,Kidandha - (களித்துக்) கிடக்கின்ற
இ பிள்ளை,I pillai - இந்தக் கண்ண பிரானுடைய
இணை,Inai - சேர்த்தி யழகு அமைந்த
காலில்,Kaalil - திருவடிகளில்
வெள்ளி தளை நின்று,Velli thalai nindru - வெள்ளித் தண்டை நின்று
இலங்கும்,Ilangum - விளங்கா நிற்கிற
கணைக்கால் இருந்த ஆ,Kanaikkaal irundha aah - கணைக்காலிருந்தபடியை காணீர்!
காரிகையீர்,Kaarigaiyer - அழகுடைய பெண்காள் வந்து காணீர்!!
26ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 4
உழந்தாள் நறு நெய் ஒரோ தடா வுண்ண
இழந்தா ளெரிவினா லீர்த்து எழில் மத்தின்
பழந் தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே–1-2-4
உழந்தாள்,Uzhandhaal - (நெய் முதலியவற்றை) பிரயாஸப்பட்டுத் தடாவிலே சேர்த்த யசோதையினுடைய
நறு நெய்,Naru nei - மணம் மிக்க நெய்யை
ஒரோ தடா,Oro thadaa - ஒவ்வொரு தடாவாக
உண்ண,Unna - (கண்ணன்) அமுது செய்த வளவில்
இழந்தாள்,Izhandhaal - (பிள்ளையைத்) தான் இழந்தவளாக நினைத்த யசோதை
எரிவினால்,Erivinaal - வயிற்றெரிச்சலாலே
ஈர்த்து,Eerththu - கையைப் பிடித்திழுத்து
எழில் மத்தின்,Ezhil maththin - அழகிய மத்தினுடைய
பழ தாம்பால்,Pazha thaambaal - சுற்றிக் கடைந்தமையாலுண்டான) பழமை பொருந்திய தாம்பை
ஒச்ச,Ocha - (அடிப்பதாகக்) கையிலெடுக்க
பயத்தால்,Payaththaal - அச்சத்தாலே
தவழ்ந்தான்,Thavazhnthaan - (அதைத் தப்பிப் போவதாக) தவழ்ந்த கண்ணனுடைய
முழந்தான் இருந்த ஆ காணீரே,Muzhandhaan irundha a Kaanire - முழங்கால்களிருந்தபடியை காணீர்!
முகிழ் முலையீர் வந்து காணீரே,Mukhil mulaiyer vandhu kaanire - முகிழ்த்த முலையையுடைய பெண்காள்! வந்து காணீர்!!
27ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 5
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத் துண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப் பிள்ளை
மறங்கொ ளிரணியன் மார்பை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5
முன்,Mun - முற்காலத்திலே
மறம்கொள்,Maramkol - த்வேஷங்கொண்ட
இரணியன்,Eranian - ஹிரண்யனுடைய
மார்வை,Maarvai - மார்பை
கீண்டான்,Keendan - பிளந்தவனாய்,
பிறங்கிய,Pirangiya - (கொடுமையால் வந்த) ப்ரகாசத்தை யுடைய
பேய்ச்சி,Peychchi - பூதனையினுடைய
முலை,Mulai - முலையை
சுவைத்து,Suvaiththu - (பசையறும்படி) ஆஸ்வாதித்து
உண்டிட்டு,Undittu - அமுது செய்து
உறங்குவான் போலே,Uranguvaan pole - (ஒன்றுமறியாமே) உறங்குமவனைப் போலே
கிடந்த,Kidandha - படுத்திருப்பவனான
இ பிள்ளை,E pillai - இந்தக் கண்ணனுடைய
குறங்குகளை வந்து காணீர்!,Kurangugalai vandhu kaanire - திருத்துடைகளை வந்து காணீர்!
குவி முலையீர் வந்து காணீரே,Kuvi mulaiyer - குவிந்த முலைகளை யுடைய பெண்காள்! வந்து காணீர்!!
28ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 6
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே–1-2-6
மத்தம்,Maththam - மதத்தையுடைய
களிறு,Kaliru - யானைகளை நிர்வஹிக்குமவரான
வசுதேவர் தம்முடை,Vasudevar thammudai - ஸ்ரீவஸுதேவருடைய
சித்தம் பிரியாத,Siththam priyadha - மனத்தை விட்டுப் பிரியாத
தேவகி தன்,Devagi than - தேவகியினுடைய
வயிற்றில்,Vayitrril - வயிற்றிலே
அத்தத்தின் பத்தாம் நாள்,Aththaththin paththaam naal - ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திரு நாளிலே
தோன்றிய,Thonriya - திருவவதரித்த
அச்சுதன்,Achchuthan - கண்ண பிரானுடைய
முத்தம் இருந்த ஆ காணீரே,Muththam irundha aa kaanire - சண்ணமிருந்த படியை காணீர்!!
முகிழ் நகையீர் வந்து காணீரே,Mugil nagaiyeer vandhu kaanire - புன் சிரிப்பை யுடைய பெண்காள்! வந்து காணீர்!!
29ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 7
இருங்கை மத களிறு ஈர்க்கின் றவனை
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடு பரமன் தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே–1-2-7
இரு கை மத களிறு,Eru kai matha kaliru - பெரிய துதிக்கையையுடைய மத்த கஜமான குவலயாபீடத்தை
ஈர்க்கின்றவனை,Eerkkindravanai - தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை
பருங்கி,Parungi - கொன்று
பறித்துக்கொண்டு,Pariththukkondu - (யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு
ஓடு,Odu - (கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின
பரமன் தன்,Paraman than - பரமபுருஷனான கண்ணனுடைய
நெருங்கு,Nerungu - செறியக் கோத்த
பவளமும்,Pavalamum - பவள வடமும்
நேர் நாணும்,Ner naanum - அழகிய அரை நாணும்
முத்தும்,Muththum - முத்துவடமும் (இவற்றோடே சேர்ந்த)
மருங்கும் இருந்த ஆ,Marungum irundha aa - திருவரையும் இருந்தபடியை காணீர்!
வாள் நுதலீர் காணீர்!,Vaal nudhaleer kaanire - ஒளி பொருந்திய நெற்றியை யுடைய பெண்காள்! வந்து காணீர்!!
30ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 8
வந்த மதலைக் குழாத்தை வலி செய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்று மழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி யிழையீர் வந்து காணீரே–1-2-8
வந்த,Vanda - (தன்னோடு விளையாட) வந்த
மதலை குழாத்தை,Mathalai kuzhaaththai - சிறு பிள்ளைகளின் கூட்டத்தில்
வலி செய்து,Vali seydhu - தன் வல்லமையைக் காட்டிக் கொண்டு
தந்தம் களிறு போல்,Thandham kaliru pol - கொம்பு முளைத்த யானைக் குட்டி போல்
தானே,Thaane - தானே முக்கியனாய் நின்று
விளையாடும்,Vilayaadum - விளையாடுமவனாய்
நந்தன்,Nandhan - நந்தகோபர்க்கு
மதலைக்கு,Mathalaikku - (விதேயனான) பிள்ளையாகிய கண்ணனுடைய
நன்றும் அழகிய,Nandrum azhagiya - மிகவுமழகிதான
உந்தி இருந்த ஆ காணீரே,Undhi irundha aa kaanire - நாபி இருக்கிறபடியை காணீர்!
ஒளி,Oli - ஒளியால் விஞ்சின
இழையீர் வந்து காணீரே,Ezhaiyeer vandhu kaanire - ஆபரணங்களணிந்த பெண்காள்! வந்து காணீர்!!
31ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 9
அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை யூட்டி வஞ்சித்து வைத்து
பதறப் படாமே பழந் தாம்பா லார்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளை யீர் வந்து காணீரே–1-2-9
அதிரும்,Athirum - கோஷிக்கின்ற
கடல்நிறம்,Kadalniram - கடலினது நிறம்போன்ற
வண்ணனை,Vannanai - நிறத்தை யுடைய கண்ணனுக்கு
ஆய்ச்சி,Aaychchi - யசோதை யானவள்
மதுரம் முலை ஊட்டி,Madhuram mulai ootti - இனிய முலைப் பாலை ஊட்டி,
வஞ்சித்து வைத்து,Vanchiththu vaiththu - (மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறிய வொண்ணாதபடி) ஏமாத்தி
பதறப் படாமே,Patharappadaame - தன் எண்ணம் தப்பாதபடி
பழ தாம்பால்,Pazha thaambaal - பழகின கயிற்றாலே
ஆர்த்த,Aartha - கட்டி வைத்த
உதரம் இருந்த ஆ காணீரே,Utharam irundha aa kaanire - வயிறு இருந்தபடியை காணீர்!
ஒளி வளையீர் வந்து காணீரே,Oli valaiyeer vandhu kaanire - ஒளி மிக்க வளையை யுடைய பெண்காள்! வந்து காணீர்!!
32ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 10
பெருமா வுரலில் பிணிப் புண்டிருந்து அங்கு
இருமா மருதம் இறுத்த இப் பிள்ளை
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்பு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே–1-2-10
பெரு மா உரலில்,Peru maa uralil - மிகப்பெரிய உரலோடு
பிணிப்புண்டு,Pinippundu - கட்டுண்டிருந்து இருந்து
அங்கு,Angu - அந்த நிலைமையிலே
இரு மா மருதம்,Eru maa marutham - இரண்டு பெரிய மருத மரங்களை
இறுத்த,Eruththa - முறித்தருளின
இ பிள்ளை,E pillai - இக் கண்ண பிரானுடைய,
குரு மா,Guru maa - மிகவும் சிறந்த
மணி பூண்,Mani poon - கௌஸ்துபாபரணமானது
குலாவி திகழும்,Kulaavi thigazhum - அசைந்து விளங்கா நின்றுள்ள
திருமார்வு இருந்த ஆ காணீரே,Thirumaarvu irundha aa kaanire - திருமார்வு இருந்த ஆ காணீர்!
சே இழையீர் வந்து காணீரே,Se izhaiyeer vandhu kaanire - செவ்விய ஆபரணங்களை யுடைய பெண்காள் வந்து காணீர்!
33ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 11
நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே-1-2-11
நாள்கள்,Naalgal - (கண்ணன் பிறந்த பின்பு சென்ற) நாட்கள்
ஓர்நாலு ஐந்து திங்கள் அளவிலே,Ornaalu aindhu thingal alavile - ஒரு நாலைந்து மாதத்தளவிலே
தாளை நிமிர்ந்து,Thaalai nimirndhu - காலைத் தூக்கி
சகடத்தை,Sakataththai - சகடாஸுரனை
சாடிப்போய்,Saadippoy - உதைத்துவிட்டு,
வாள் கொள்,Vaal kol - ஒளிகொண்டதாய்
வளை,Valai - வளைந்திராநின்றுள்ள
எயிறு,Eyiru - கோரப்பற்களையுடைய பூதனையினது
ஆர் உயிர்,Aar uyir - அரிய உயிரை
வவ்வினான்,Vavvinan - முடித்த கண்ணனுடைய
தோள்கள் இருந்த ஆ காணீரே,Tholgal irundha aa kaanire - தோள்கள் இருந்த ஆ காணீர்!
சுரி குழலீர் வந்து காணீரே,Suri kuzhalir vandhu kaanire - சுருண்ட கேசத்தையுடைய பெண்காள்! வந்து காணீர்!!
34ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 12
மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே–1-2-12
மை,Mai - மையணிந்த
தட,Thada - பெரிய
கண்ணி,Kanni - கண்களையுடைய
அசோதை,Asodhai - யசோதைப்பிராட்டியாலே
வளர்க்கின்ற,Valarkkinra - வளர்க்கப்படுகின்றவனாய்
தலைசெய்,Thalaisei - உயர்ந்த க்ஷேத்ரத்திலே (அலர்ந்த)
நீலம் நிறம்,Neelam niram - கருநெய்தல் பூவினது போன்ற நிறத்தையுடையவான
சிறுபிள்ளை,Sirupillai - (இந்த) பாலக்ருஷ்ணனுடைய
நெய்,Ney - கூர்மைபொருந்திய
தலை,Thalai - நுதியையுடைய
நேமியும்,Nemiyum - திருவாழியும்
சங்கும்,Sangum - திருச்சங்கும்
நிலாவிய,Nilaviya - அமைந்திராநின்றுள்ள
கைத்தலங்கள் வந்து காணீரே,Kaithalangal vandhu kaanire - உள்ளங்கைகளை வந்து காணீர்!
கனம்,Kanam - பொன்னால்செய்த
குழையீர் வந்து காணீரே,Kuzhaiyeer vandhu kaanire - காதணிகளையுடைய பெண்காள்! வந்து காணீர்!!
35ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 13
வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே–1-2-13
வண்டு அமர்,Vandhu amar - வண்டுகள் படிந்திருக்கிற
பூ குழல்,Poo kuzhal - பூ அணிந்த குழலையுடையளான
ஆய்ச்சி,Aaychchi - யசோதைப் பிராட்டியானவள்
மகனாக கொண்டு,Maganaaga kondu - (தன்) புத்ரனாக ஸ்வீகரித்து
வளர்க்கின்ற,Valarkkinra - வளர்க்கப் பெற்றவனாய்
கோவலர்,Kovalar - ஸ்ரீநந்தகோபருடைய
குட்டற்கு,Kuttarku - பிள்ளையான கண்ணபிரானுடைய,
அண்டமும்,Andamum - அண்டங்களையும்
நாடும்,Naadum - (அவற்றினுள்ளே கிடக்கிற) சேதநாசேதநங்களையும்
அடங்க,Adanga - முழுதும்
விழுங்கிய,Vizhungiya - (ப்ரளயகாலத்தில்) கபளீகரித்த
கண்டம் இருந்த ஆ,Kandam irundha a - கழுத்திருந்தபடியை
36ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 14
எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச்
செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-14
ஆய்ச்சியர்,Aaychchiyar - இடைப்பெண்கள்
தொண்டை,Thondai - ‘‘கொவ்வைக்கனி போன்ற
வாய்,Vaai - அதரத்தையுடைய
எம் சிங்கம்,Em singam - எமது சிங்கக்குருவே!
வா என்று,Vaa endru - (எம்பக்கல்) வா’’ என்று
எடுத்துக் கொண்டு,Eduththuk kondu - (இடுப்பில்) எடுத்துக்கொண்டு
அம் தொண்டை,Am thondai - அழகிய கொவ்வைபோன்ற
வாய்,Vaai - (கண்ணனுடைய) அதரத்தில்
அமுது,Amudhu - (ஊறுகிற) அம்ருதத்தை
ஆதரித்து,Aadhariththu - விரும்பி,
தம்,Tham - தங்களுடைய
தொண்டை வாயால்,Thondai vaayaal - கோவை வாயை
தருக்கி,Tharukki - (கண்ணன் வாயோடே நெருக்கி)
பருகும்,Parugum - பாகம் பண்ணப்பெற்ற
இ செம் தொண்டை வாய் வந்து காணீரே,E sem thondai vaai vandhu kaaneere - இந்தச் சிவந்த கோவை வாயை வந்து காணீர்!
சேயிழையீர்! வந்து காணீரே,Seeyizhaiyeer! Vandhu kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்!
37ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 15
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே–1-2-15
அசோதை,Asothai - யசோதைப்பிராட்டி
நோக்கி,Nookki - (கண்ணபிரான்திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி) பார்த்து ஆராய்ந்து
நுணுக்கிய,Nunikkiya - அரைத்த
மஞ்சளால்,Manjalal - மஞ்சட்காப்பாலே,
நாக்கு வழித்து,Naakku vazhiththu - நாக்கு வழித்து
நீராட்டும்,Neeraattum - ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற
இ நம்பிக்கு,I nambikku - இக்கண்ணபிரானுடைய
வாக்கும்,Vaakkum - திருவாக்கும்
நயனமும்,Nayanamum - திருக்கண்களும்
வாயும்,Vaayum - அதரஸ்புரணமும்
முறுவலும்,Muruvalum - புன்சிரிப்பும்
மூக்கும் இருந்த ஆ காணீரே ,Mookkum irundha aa kaaneere - மூக்குமிருந்தபடியை காணீர்!
மொய்குழலீர் காணீரே,Moikuzhaleer kaaneere - செறிந்தகுழலையுடைய பெண்காள்! வந்து காணீர்!
38ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 16
விண் கொளமரர்கள் வேதனை தீர முன்
மண் கொள் வசுதேவர் தம் மக னாய் வந்து
திண் கொளசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே–1-2-16
விண் கொள்,Vin kol - ஸ்வர்க்காதிலோகங்களை இருப்பிடமாகக் கொண்ட
அமரர்கள்,Amararagal - தேவதைகளுடைய
வேதனை தீர,Vedhanai theera - துன்பங்கள் தீரும்படி
முன்,Mun - முன்னே
மண்கொள்,Man kol - பூமியை இருப்பிடமாகக் கொண்ட
வசுதேவர் தம்,Vasudevar tham - வஸுதேவர்க்கு
மகனாய் வந்து,Maganaai vandhu - பிள்ளையாய் வந்து பிறந்து
திண்கொள்,Thin kol - வலிமைகொண்ட
அசுரர்,Asurar - அஸுரர்கள்
தேய,Theya - க்ஷயிக்கும்படி
வளர்கின்றான்,Valar kindraan - வளராநின்ற கண்ணனுடைய
கண்கள் இருந்த ஆ வந்து காணீரே,Kangal irundha aa vandhu kaaneere - கண்கள் இருந்த ஆ காணீர்!
கனம் வளையீர் வந்து காணீரே,Kanam valaiyeer vandhu kaaneere - கநக கங்கணத்தை யுடைய பெண்காள் வந்து காணீர்!!
39ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 17
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே–1-2-17
பருவம்,Paruvam - வயது
நிரம்பாமே,Nirambaame - முதிருவதற்கு முன்னமே
பார்எல்லாம்,Paar ellaam - பூமியிலுள்ளார் எல்லாரும்
உய்ய,Uyyya - உஜ்ஜீவிக்கும்படியாக
திருவின் வடிவு ஒக்கும்,Thiruvin vadivu okkum - பிராட்டியின் வடிவுபோன்ற வடிவையுடையளான
தேவகி,Devagi - தேவகிப்பிராட்டியாலே
பெற்ற,Pettra - பெறப்பட்டவனாய்
உருவு கரிய,Uruvu kariya - உருவால் கறுத்ததாய்
ஒளி,Oli - உஜ்ஜவலமான
மணி,Mani - மணி போன்ற
வண்ணன்,Vannan - வடிவையுடையனான கண்ணபிரானுடைய
புருவம் இருந்த ஆ வந்து காணீரே,Pruvam irundha aa vandhu kaaneere - புருவம் இருந்த ஆ காணீர்
பூண் முலையீர் வந்து காணீரே,Poon mulaiyeer vandhu kaaneere - ஆபரணம் பூண்ட முலையையுடைய பெண்காள்! வந்து காணீர்!!
40ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 18
மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-18
மண்ணும்,Mannum - பூமியையும்
மலையும்,Malayum - மலைகளையும்
கடலும்,Kadalum - கடல்களையும்
உலகு எழும்,Ulagu ezhum - ஸப்தலோகங்களையும்
உண்ணுந்திறந்து,Unnundhirandhu - திருவயிற்றிலே வைக்கிறவளவில்
மகிழ்ந்து,Magizndhu - உகந்து
உண்ணும்,Unnum - திருவயிற்றிலே வைத்த
பிள்ளைக்கு,Pillaiyukku - (இக்) கண்ணபிரானுடையதான
எழில் வண்ணம் கொள்,Ezhil vannan kol - அழகிய நிறங்கொண்ட
மகரம் குழை இவை,Magaram kuzai ivai - இம்மகர குண்டலங்களின்
திண்ணம் இருந்த காணீரே ,Thinnam irundha kaaneere - திண்மை இருந்தபடியை காணீர்
சேயிழையீர்! காணீரே,Seyizhaiyeer! Kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்!!
41ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 19
மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-18
மண்ணும்,Mannum - பூமியையும்
மலையும்,Malayum - மலைகளையும்
கடலும்,Kadalum - கடல்களையும்
உலகு எழும்,Ulagu ezhum - ஸப்தலோகங்களையும்
உண்ணுந்திறந்து,Unnundhirandhu - திருவயிற்றிலே வைக்கிறவளவில்
மகிழ்ந்து,Magizhndhu - உகந்து
உண்ணும்,Unnum - திருவயிற்றிலே வைத்த
பிள்ளைக்கு,Pillaiyukku - (இக்) கண்ணபிரானுடையதான
எழில் வண்ணம் கொள்,Ezhil vannan kol - அழகிய நிறங்கொண்ட
மகரம் குழை இவை,Magaram kuzai ivai - இம்மகர குண்டலங்களின்
திண்ணம் இருந்த காணீரே,Thinnam irundha kaaneere - திண்மை இருந்தபடியை காணீர்
சேயிழையீர்! காணீரே,Seyizhaiyeer! Kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்!!
42ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 20
அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கு மார்ப்ப
மழகன் றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20
அழகிய,Azhagiya - அழகியதும்
பைம் பொன்னின்,Paim ponnin - பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான
கோல்,Kol - மாடு மேய்க்குங் கோலை
அம் கை,Am kai - அழகிய கையிலே
கொண்டு,Kondu - பிடித்துக் கொண்டு
கழல்கள்,Kazhagal - (கால்களிலுள்ள) வீரக் கழல்களும்
சதங்கை,Sathangai - சதங்கைகளும்
கலந்து,Kalanndhu - தன்னிலே சேர்ந்து
எங்கும் ஆர்ப்ப,Engum aarpa - போமிடமெல்லா மொலிக்க
மழ,Mazha - இளமை பொருந்திய
கன்று இனங்கன்,Kanru inankan - கன்றுகளின் திரள்களை
மறித்து,Mariththu - (கை கழியப் போகாமல் மடக்கி)
திரிவான்,Thirivaan - திரியுமவனான கண்ணபிரானுடைய
குழல்கள் இருந்தவா காணீரே,Kuzhalgal irundhavaa kaaneere - திருக் குழல்களானவை இருந்த ஆ காணீர்!
குவி முலையீர் வந்து காணீரே,Kuvi mulaiyeer vandhu kaaneere - குவி முலையீர்! வந்து காணீர்!!
43ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 21
சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தைத் தென் புதுவைப் பட்டன்
விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே–1-2-21
சுரும்பு ஆர்,Surumbu aar - வண்டுகள் படிந்து நிறைந்த
குழலி,Kuzhali - கூந்தலை யுடையளான
அசோதை,Asodhai - யசோதைப் பிராட்டியால்
முன்,Mun - க்ருஷ்ணாவதார ஸமயத்திலே
சொன்ன,Sonnan - சொல்லப்பட்ட
திருப்பாத கேசத்தை,Thirupaadha kesaththai - பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை
தென் புதுவை பட்டன்,Then puduvai pattan - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார்
விருப்பால்,Viruppaal - மிக்க ஆதரத்தோடு
உரைத்த,Uraiththa - அருளிச்செய்த
இருபதோடுஒன்றும்,Irupathodunonrum - இவ்விருபத்தொரு பாட்டுக்களையும்
உரைப்பார் தாம்,Uraipaar thaam - ஓதுமவர்கள்
போய்,Poy - (இம் மண்டலத்தைக் கடந்து) போய்
வைகுந்தத்து,Vaikunthaththu - ஸ்ரீவைகுண்டத்திலே
ஒன்றுவர்,Ondruvar - பொருந்தப் பெறுவார்கள்