| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 339 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 2 | வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை எல்லா விடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டொலி செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே–4-2-2 | தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை |
| 344 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 7 | மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன் மலை கொன்னவில் கூர் வேற் கோன் நெடு மாறன் தென் கூடற்கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-7 | தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை |
| 345 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 8 | குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச் சிறு கால் நெறியே போக்கு விக்கும் செல்வன் பொன் மலை அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறு காலைப் பாடும் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-8 | தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை |
| 346 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 9 | சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள் அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாயொப்பான் சிந்தும் புறவில் தென் திரு மாலிருஞ் சோலையே–4-2-9 | தென் திருமாலிருஞ்சோலை.,Then Thirumaalirunjolai - தென் திருமாலிருஞ்சோலை |
| 350 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 2 | கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை நஞ்சுமிழ் நாகமெழுந் தணவி நளிர் மா மதியை செஞ்சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே–4-3-2 | திருமாலிருஞ்சோலை அதே.,Thirumaalirunjolai Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |
| 353 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 5 | பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசு பாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் அலங் காரன் மலை குலமலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை நிலமலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-5 | திருமாலிருஞ்சோலை அதே.,Thirumaaliruncholai Adhe - திருமாலிருஞ்சோலை அதே. |
| 356 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 8 | எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த அரையனமரும் மலை அமரரொடு கோனும் சென்று திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-8 | திருமாலிருஞ்சோலை மலை அதே,Thirumaaliruncholai Malai Adhe - திருமாலிருஞ்சோலை மலை அதே |
| 453 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 1 | துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே மக்க ளறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் திரு மாலிருஞ்சோலை யெந்தாய்–5-3-1 | திருமாலிருஞ்சோலை எந்தாய்,Thirumaalirunjcholai Endhaai - (எல்லார்க்கும் எளியவனும்படி) திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே! |
| 454 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 2 | வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உந்த னிந்திர ஞாலங்களால் ஒளித்திடில் நின் திரு வாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீ வினை தீர்க்கலுற்று தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-2 | திருமாலிருஞ்சோலை,Thirumaalirunjcholai - திருமாலிருஞ்சோலையில் |
| 456 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 4 | காதம் பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீருமில்லை உன் பாத நிழலல்லால் மற்றோரு யிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று பேதஞ்செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-4 | திருமாலிருஞ்சோலை எந்தாய்!,Thirumaalirunjcholai Endhaai - திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே! |
| 457 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 5 | காலுமெழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் மேலு மெழா மயிர்க் கூச்சுமறா என தோள்களும் வீழ் வொழியா மாலுகளா நிற்கும் என் மனனே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன் சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-5 | திருமாலிருஞ்சோலை,Thirumaalirunjcholai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) |
| 458 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 6 | எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப் பிறவி யென்னும் நோய்க்கு மருந்தறிவாரு மில்லை மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத் திருத்தி உங் கோயிற் கடைப் புகப் பெய் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-6 | திருமாலிருஞ்சோலை எந்தாய்!,Thirumaalirunjcholai Endhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே! |
| 460 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 8 | அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன் இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச் சக்கரமதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-9 | திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!,Thirumaalirunjcholai Eaendhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே! |
| 461 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 9 | அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன் இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச் சக்கரமதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-9 | திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!,Thirumaalirunjcholai Eaendhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே! |
| 462 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 10 | சென்றுலகம் குடைந்தாடும் சுனைத் திரு மாலிருஞ் சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர் பட விண்ணப்பஞ்செய் பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன் ஒன்றினோ டொன்பதும் பாட வல்லார் உலகமளந்தான் தமரே–5-3-10 | திருமாலிருஞ்சோலை தன்னுள்,Thirumaalirunjcholai Thannul - திருமாலிருஞ்சோலை மலையில் |
| 3735 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமாளுக்கு மேன்மேலும் தம்பக்கலுண்டான அபிநிவேசம் எல்லையற்றிருக்கும்படியை யருளிச் செய்கிறார்.) 3 | என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர் தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான் இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3 | தென்னன் திருமாலிருஞ்சோலை,Thennan thirumaalirunj solai - தென்னரசன் கொண்டாடும் திருமாலிருஞ்சோலை மலை நிற்கிற |
| 3736 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமாளுக்குத் தம்மிடத்திலுண்டான வியாமோஹாதிசயத்தைச் சொல்லி;க்கொண்டுவந்த ஆழ்வார் இப்பாட்டில் அப்பெருமாளுக்குத் திருமாலிருஞ் சோலைமலையிலுண்டானவொரு வியாமோஹத்தைப் பேசுகிறார்.) 4 | என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய் நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4 | தென்கொள்திசைக்கு நிலதம்ஆய் நின்ற திருமாலிருஞ்சோலை,Thenkolthisaikku nilatham aay nindra thirumaalirunj solai - தெற்குத் திக்குக்குத் திலகமாயிராநின்ற திருமாலிருஞ்டசோலையாகிற |
| 3741 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (இப்பாட்டில் பெரும்பாகம் ஆழ்வார் தம் திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுவதாகவும் சிறுபாகம் எம்பெருமானை நோக்கிச் செல்லுவதாகவும் பன்னீராயிரப்பn தவிர்ந்த மற்ற வியாக்கியானங்களிலெல்லா முள்ளது. பன்னிராயிரப்படியில் மாத்திரம் பாட்டு முழுவதும் திருவுள்ளத்தையே நோக்கிச் சொல்லுவதாகவுள்ளது.) 9 | ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும் ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9 | அம் தண் திருமாலிருஞ்சோலை,Am than thirumaalirunj solai - அழகிய குளிர்ந்த திருமலையை |
| 3744 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (எம்பெருமான் இத்தலையில் ஸ்வல்ப வ்யாஜமாத்ரமே கொண்டு விஷயீகாரிக்கும்னென்று அவருடைய நிர்ஹேது கவிஷயீகார வைபவத்தை யருளிச் செய்கிறார்.) 1 | திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால் திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே–10-8-1 | திருமாலிருஞ் சோலை மலை என்றேன் என்ன,Thirumaalirunch cholai malai endren enna - திருமாலிருஞ் சோலையென்று சொன்னே னென்பதையே நிமித்தமாகக் கொண்டு திருமால்வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான்,Thirumaalvandhu en nenju niraiya pugundhaan - எம்பெருமான் வந்து என்னெஞ்சினுள்ளே நிறையப் புகுத்தான்; திருமால் சென்று சர்வு இடம்,Thirumaal sendru sarvu idam - இப்படிப்பட்ட எம்பெருமான் சென்று வாழுமிடம் (எது வென்றால்) குரு மாமணி உந்து புனல்,Guru maamani undhu punal - மிகச்சிறந்த மாணிக்கங்களைக் கொழிக்கின்ற பொன்னி,Ponni - காவிரி யாற்றினுடைய தென்பால்,Thenpaal - தென்பக்கத்திலுள்ளதான் தென் திருப்பேர்,Then thiruper - அழகிய திருப்பேர் நகராம். |
| 3745 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (இதுக்கு முன்பு தான் ஸர்வேச்வரனாயிருந்தும் என்னோடு கலக்கப் பெறாமையினாலே குறைவாளானாயிருந்தவன் நிர்ஹேதுகமாக என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து பூர்ணனானானனென்கிறார்.) 2 | பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2 | பேரே உறைகின்ற பிரான்,Pere uraikindra piraan - திருப்பேர் நகாரில் நித்திய வாஸம் பண்ணு மெம்பெருமான் இன்று வந்து பேரேன் என்று,Inru vandhu peren endru - இன்று தானே விரும்பி வந்து இனிப் பேரமாட்டேனென்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்,En nenju niraiya pugundhaan - என்னெஞ்சிலே தான் பாரிபூற்ணனாம்படி புகுந்தான்; ஏழ்காரி ஏழ்கடல் ஏழ் மலை உலகு உண்டும்,Ezhkaari ezh kadal ezh malai ulagu undum - (ஆகவே) ஏழேழான மேகங்களும் கடல்களும் மலைகளுஞ் சூழ்ந்த உலகங்களை யெல்லாமமுது செய்தும் ஆரா வயிற்றானை,Aaraa vayitranai - நிறையாத திருவயிற்றையுடைய அப்பெருமானை அடங்க பிடித்தேன்,Adanga pidithen - பரிபூர்ண விஷயீகாரம செய்தானாகப் பண்ணிக் கொண்டேன். |
| 3746 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (எம்பெருமான் நிர்வேஹதுகமாகத் தம்மோடே வந்து கலந்தபடியைச் சிந்தித்து இவன் திருவடி எனக்கு இப்படி எளிதானவாறு என்னே என்று வியக்கிறார்.) 3 | பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3 | கொடி கோபுரம் மாடங்கள் சூழ் திரு பேரான்,Kodi kopuram maadangal soozh thiru peraan - கொடிகளையுடைய கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப்பட்ட திருப்பேர் நகரை உறைவிடமாகவுடைய பெருமானுடைய அடி சேர்வது,Adi servadhu - திருவடிகளை சேருகையாயானது எனக்கு எளிது ஆயின ஆறு,Enakku ezhidu aayina aaru - எனக்கு எளிதான விதம் என்னே! பிடித்தேன்,Pidiththen - அவன் திருவடிகளைப் பிடிக்கப் பெற்றேன்; பிறவி கெடுத்தேன்,Piravi keduththen - (அது அடியாக) ஸம்ஸாரம் தொலையப் பெற்றேன்; பிணி சாரேன்,Pini saarein - பிணிகள் வந்து அணுகாவகை பெற்றேன்; மனை வாழ்க்கையுள்,Manai vaazhkaiyul - ஸம்ஸாரத்தில் நிற்பது ஒர் மாயையை,Nirpadhu or maayaiyai - நிற்கையாகிற அஜ்ஞானத்தை மடித்தேன்,Madiththen - நிவ்ருத்தமாக்கிக் கொண்டேன். |
| 3747 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (தமக்குத் திருநாட்டைக் கொடுத்தருள்பவனாயிராநின்ற எம்பெருமானுடைய படியை யநுஸந்தித்துத் தாம் களிக்குமபடியைப் பேசுகிறார்.) 4 | எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக் களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன் கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான் தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4 | கிளி தாவிய,Kili thaaviya - கிளிகள் தாவம்படி செறிந்த சோலைகள் சூழ்,Solaigal soozh - சோலைகளாலே சூழப்பட்ட திரு பேரான்,Thiru peraan - திருப் பேர்நகாரில் வாழுமெம்பெருமான், தெளிது ஆகிய,Thelidu aagiya - தெளிந்த நிலமான சேண் விசும்பு,Sen visumbu - பரமாகாச மென்னும் திருநாட்டை தருவான்,Tharuvaan - தருபவனாயிராநின்றான் (ஆனது பற்றி) என் கண்கள்,En kangal - (விடாய்த்த) எனது கண்கள் எளிது அயின ஆறு என்று களிப்ப,Ezhidu aayina aaru endru kalippa - இந்த எளிமைக்கு ஈடுபட்டுக் களித்ததாக களிது ஆகிய சிந்தையன் ஆய்களிக்கின்றேன்,Kalidu aagiya sindhaiyan aaykalikkindren - பரமானந்த சாலியான நெஞ்சையுடையேனாயினேன். |
| 3748 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (திருப்பேர் நகரான் எனக்குத் திருநாடு தருவதாகச் சபதம் செய்து விரோதிகளையும் போக்கியருளிச் னென்கிறார்.) 5 | வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5 | தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரான்,Then yey pozhi then thirupper nagaraan - வண்டுகள் செறிந்த சோலைகளையுடைய திருப்பேர் நகாரிலுறையும் பெருமான் எனக்கு வானே தருவான்,Enakku vaane tharuvaan - எனக்கு (இன்று) திருநாடு தந்தருள்பவனாய் ஸங்கல்பித்துக்கொண்டு என்னோடு ஒட்டி,Ennodu otti - என்னோடே ப்ரததிஜ்ஞை பண்ணி ஊன் ஏய் குரம்பை இதனாள்,Oon yey kurambai idhanaal - மாம்ஸளமான இந்த சாரிரத்தினுள்ளே இன்று தானே புகுந்து,Indru thaane pugundhu - இன்று தானே வந்து புகுந்து தடுமாற்றம் வினைகள் தவிர்த்தான்,Thadumaadram vinaigal thavirthaan - தன்னைத் பிரிந்து தடுமாறு கைக்கூடியான புண்யபாவங்களைப் போக்கி யருளினான். |
| 3749 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (எம்பெருமான் தமக்கு இருப்பிடமான கோயில்கள் பலவுண்டாயிருக்க ஒர்டமில்லாதாரைப் போலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்து க்ருத க்ருதயனானானென்கிறார்.) 6 | திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6 | திருப் பேர் நகரான்,Thirup per nagaraan - திருப்பேர் நகாரிலே வர்த்திப்பவானாய் திருமாலிருஞ் சோலை பொருப்பே உறைகின்ற பிரான்,Thirumaalirun cholai poruppe uraiginra piraan - திருமாலிருஞ்சோலை மலையிலே நித்யவாஸம் பண்ணுமவனால் இப்பா பரமபோக்யமான பல தலங்களையுடையனான எம்பெருமான் இன்று வந்து,Endru vandhu - இன்று என்பாலெழுந்தருளி இருப்பேன் என்று,Eruppein endru - ளும்மிடத்திலேயே யிருக்கக் கடவேனேன்று சொல்லி என் நெஞ்சு நிறைய புகுந்தான்,En nenju niraiya pugundhaan - என்னுள்ளம் பூர்ணமாகும் படி புகுந்தான்; விருப்பே பெற்று,Viruppe petru - அவருடைய அபிமானத்தைப் பெற்று அமுதம் உண்டுகளித்தேன்,Amudham undugaliththen - அம்ரதபானம் பண்ணிக் களித்வனாயினேன். |
| 3750 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (கீழ்பாட்டில் களித்தேனே யென்று களிப்பை ப்ரஸ்தாவித்தார்; அக்களிப்பை ஆர அமரப் பேசுகிறாரிப்பாட்டில்.) 7 | உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான் கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே–10-8-7 | வண்டு களிக்கும் பொழில் சூழ்,Vandu kalikkum pozhi soozh - வண்டுகள் மதுவைப் பருகிக் களிக்கும்படியான சோலைகளாலே சூழப்பட்ட திரு பேரான்,Thiru peraan - திரப்பேர் நகாரில் வாழுமெம்பெருமான் கண்டு களிப்ப,Kandu kalippa - தன்னை நான் அநவரதம் கண்டு களிக்குமாறு கண்ணுள் நின்று அகலான்,Kannul ninru agalaan - என்கண்ணுக்கு இலக்காகி விட்டுப்பிரியாதிரா நின்றான் உண்டு களித்அதற்கு,Undu kalidhu atharkku - இப்படிப்பட்ட அநுபவம் பெற்றமகிழ்ந்த எனக்கு உம்பர் என் குறை,Umbar en kurai - மேலுலகத்திலே சென்று அநுபவிக்கவேணுமென்கிற குறை யொன்று உண்டோ? மேலைத் தொண்டு உகளித்து,Melai thondu ugaliththu - மேலான கைங்காரிய ரஸம்அதிசயித்து அந்தி தொழும் சொல்லு பெற்றேன்,Andhi thozhum sollu petren - அதினுடைய சரமதசையிலே நம: என்று சொல்லுகிற சொல்லைச் சொல்லவும் பெற்றேன். |
| 3751 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (பரமபோக்யனான திருப்பேர் நகரான் என்பக்கலிலே வ்யாமோஹமே வடிவெடுத்தவனாய் ஒருநாளும் விட்டு நீங்கமாட்டாதரனாய் என்னெஞ்சிலே வந்து புகுந்தானென்கிறார்.) 8 | கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன் எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான் திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8 | கண்ணுள் நின்று அகலான்,Kannul ninru agalaan - என் கண்ணைவிட்டு அதலாதிருக்கின்றான்; கருத்தின் கண் பெரியன்,Karuththin kan periyan - என்னைத் திருநாட்டுக்குக் கொண்டு போவதில் விசேஷமான பாரிப்பு உடையனாயிராநின்றான்; எண்ணில் நுண்பொருள் தானே,Ennil nunporul thaane - எண்ணப்புகுந்தால் எண்ணமுடியாத மிகவும் சூகூஷ்மமான ஸ்வாவமுடையவனே; ஏழ் இசையின் சுவை,Ezhu isaiyin suvai - ஸப்தஸ்வரங்களின் ரஸமே வடிவெடுத்தவன்; வண்ணம் நல்மணிமாடங்கள்,Vannam nalmanimadangal - பலவகைப்பட்ட சிறந்த ரத்னங்களழுத்தின மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகாரிலுறையும் பெருமான் இன்று என் மனத்து செறிந்து புகுந்தான்,Indru en manaththu serindhu pugundhaan - இன்று என்னெஞ்சிலே திடமாகப் புகுந்தான் திண்ணம்,Thinnam - இது ஸத்தியம் |
| 3752 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (இப்பதிகத்திற்கு இதுதான் உயிரான பாட்டு. அடியனை இன்று இவ்வளவாக விஷயீகாரிக்கைக்கும் முன்பு நெடுநாள் உபேகூஷித்திருந்ததற்கும் காரணமருளிச்செய்யவேணுமென்று தமக்குண்டான ஜிஜ்ஞாஸையை வெளியிடுகிறாராயிற்று.) 9 | இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9 | என்னை இன்று பொருள் ஆக்கி,Ennai inru porul aaki - அநாதிகாலம் உபேகூஷிக்கப்படி;டிந்தவென்னை இன்று ஒரு வஸ்துவாகக் கொண்டு தன்னை என்னுள் வைத்தான்,Thannai ennul vaithaan - பரம போக்யனன தன்னைமஹேயமான என்னெஞ்சிலே தானே கொண்டு வைத்தான்; அன்று என்னை புறம்போக புணர்த்தது,Andru ennai purampoga punarthathu - (இன்று இப்படிச் செய்தவனானவிவன்) அநாதிகாலம் நான்கை கழிந்துபோம்படி என்னை உபேகூஷித்திட்டுவைத்தது என்செய்வான்,En seivaan - எதற்காக? குன்று என்ன திகழ்மாகங்கள்,Kunru enna thigazhmaagangal - குன்றுகளிவை யென்னலாம்ப விளங்குகின்ற மாடங்களினால் சூழப்பட்ட திருபேரான்,Thiruperaan - திருப்பேர் நகர்க்குத் தலைவனான எம்பெருமான் ஒன்று,Ondru - இத்தனைநாள்கை விட்டிருந்ததற்குத் ஹேது சொல்லுவதோ, இன்று கைக்கொண்டவதற்கு ஹேது சொல்லுவNற் இரண்டி லொன்றை எனக்கு அருள் செய்ய,Enakku arul seiya - எனக்கு அருளிச்செய்;ய வேணுமென்று உண்ர்த்தல் உற்றேன்,Unarththal utren - விஞ்ஞாபிக்கின்றேன். |
| 3753 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (கீழ்பாட்டில் எம்பெருமானை மடிபித்துக் கேள்விகேட்டார் ஆழ்வார்; அதற்குத் தான் சொல்லலாவதொரு ஹேது காணாமையாலே கவிழ்தலை யிட்டு வாய் மூடியிருந்து ‘உமக்கு மேல்செய்ய வேண்டுவது என்? சொல்லிக்காணீர்’ என்ன; அதற்குச் சொல்லுகிறது இப்பாட்டு.) 10 | உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10 | எத்தாய்,Eththaai - எம்பெருமானே! உற்றேன்,Uttren - (உனது திருவடிகளைக்) கிட்டப்பெற்றேன்; உகந்து பணி செய்து,Ugandhu pani seidhu - திருவாய்மொழி பாடுகையாகிற கைங்காரியத்தை ப்ரீதியோடே செய்து உன் பாதம் பெற்றேன்,Un paadham petren - உன்திருவடிகளை அணுகினவானனேன்; ஈதே இன்னம் வேண்டுவது,Eedhe innam venduvadhu - இவ்வநுபவமே நித்யாபே கூஷதம்; கற்றார்,Katrar - குரு முகமாகக் கற்றவர்களாயும் மறைவாணர்கள்,Maraivaanargal - வேதங்களைக் கொண்டு வாழ்பவர்களாயுமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்,Vaal - வாழுமிடமான திருப்பேர் நகாரிலே உறையும் திருப்பொராற்கு அற்றார்,Thiruporaarku atrar - பெருமாளுக்கு அற்றுத் தீர்த்தவர்களான் அடியார் தமக்கு,Adiyaar thamakku - பாகவதர்களுக்கு அல்லல் நில்லா,Allal nillaa - அநுபவ விரோதிகள் நில்லாது போம், |
| 3754 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பரமபத ஸாம்ராஜ்யமே பலனென்றருளிச் செய்கிறார்.) 11 | நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல் நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11 | அல்லல் நில்லா,Allal nillaa - துக்கங்களானவை தானே விட்டுப் போகுமிடமாய் நீள் வயல் சூழ்,Neel vayal soozh - பெருத்த வயல்களாலே சூழ்ப்பட்டதான திருப்பேர் மேல்,Thirupper mel - திருப்பேர் நகர் விஷயமாக நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்,Nallaar palarvaal kurukoorch sadagopan - நல்லார் நவில் குருகூர் நகரரான ஆழ்வாருடையதான சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்,Sol aar tamizh aayiraththul ivai paththum vallaar - தமிழிச்சொல் நிரம்பிய ஆயிரத்தினுள் இப்பதிகத்தைக் கற்கவல்லவர்களான தொண்டர் ஆள்வது,Thondar aalvadhu - பாகவதர் களானவர்கள் ஆளுமிடம் சூழ்பொன் விசும்பு.,Soozh pon visumbu - பரமபதமாகும் |