| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 45 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 2 | உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்; உடையாய் அழேல் அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!–1-3-2 | உலகம் அளந்தானே! தாலேலோ!,Ulagam alandhaane! Thaalelo! - தாலேலோ |
| 90 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 5 | முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவது போல் பன்னி யுலகம் பரவி யோவாப் புகழ்ப் பலதே வனென்னும் தன் நம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ–1-7-5 | உலகம்,Ulagam - லோகமெல்லாங்கூடி |
| 300 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4 | ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான் பெருமகளாய்க் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறம் செய்யுங் கொலோ–3-8-4 | ஒரு மகள் தன்னை உடையேன்-,Oru Magal Thannai Udaiyen - ஒரே மகளை உடையளாகிய நான் உலகம் நிறைந்த புகழால்,Ulagam Niraindha Pugazhal - உலகமெங்கும் பரவின கீர்த்தியோடு. திரு மகள் போல,Thiru Magal Pola - பெரிய பிராட்டியாரைப் போல் வளர்த்தேன்,Valarththen - சீராட்டி வளர்த்தேன்; செம் கண் மால்,Sem Kan Maal - (இப்படி வளர்ந்த இவளை) செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன் தான்,Thaan - தானே (ஸாக்ஷாத்தாக பந்து) கொண்டு போனான்,Kondu Ponaan - (நானறியாமல்) கொண்டு போனான்; பெரு மகளாய் குடி வாழ்ந்து,Peru Magalaai Kudi Vazhndhu - (போனால் போகட்டும்;) (இடைச்சேரியில்) ப்ரதாந ஸ்த்ரீயாய்க் குடி வாழ்க்கை வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை,Perum Pillai Petra Asothai - பெருமை தங்கிய பிள்ளையைப் பெற்றவளான யசோதைப் பிராட்டியானவள் மருமகளை,Marumagalai - (தன்) மருமகளான என் மகளை கண்டு உகந்து,Kandu Ugandhu - கண்டு மகிழ்ந்து மணாட்டுப் புறம் செய்யும் கொல் ஓ,Manattup Puram Seyyum Kol O - மணவாட்டிக்குச் செய்யக் கடவதான சீர்மைகளைச் செய்வளோ? |
| 365 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 6 | பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால் ஏதமொன்று மிலாத வண் கையினார்கள் வாழ்திருக் கோட்டியூர் நாதனை நரசிங்கனை நவின் றேத்துவார் களுழக்கிய பாத தூளி படுதலால் இவ் வுலகம் பாக்கியம் செய்ததே–4-4-6 | இ உலகம்,I Ulagam - இந்த லோகமானது |
| 421 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (பத்தாம் பாட்டு – சர்வ நிர்வாஹகனாய் -ஸ்ரீயபதி யானவன் சரசமாக கண் வளர்ந்து அருளுகிற தேசம் இது -என்கிறார்.) 10 | செரு ஆளும் புள் ஆளன் மண் ஆளன் செரு செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன் மறை யாளன் ஓடாத படை ஆளன் விழுக்கை ஆளன் இரவாளன் பகலாளன் என்னை ஆளன் ஏழுலகப் பெரும் புரவாளன் திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே –4-9-10 | ஏழ் உலகம்பெரு புரவு ஆனன்,Ezh Ulagamperu Puravu Aanam - ஸப்தலோகங்களாகிய பெரிய ஸுஷேத்திரங்களை ஆளுமவனும் |
| 462 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 10 | சென்றுலகம் குடைந்தாடும் சுனைத் திரு மாலிருஞ் சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர் பட விண்ணப்பஞ்செய் பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன் ஒன்றினோ டொன்பதும் பாட வல்லார் உலகமளந்தான் தமரே–5-3-10 | உலகம்,Ulagam - உலகத்தாரெல்லாரும் உலகம் அளந்தான் தமர்,Ulagam Alandhaan Thamar - திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர் |
| 497 | திருப்பாவை || 24 | அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் | அன்று, anru - (இந்திரன் முதலானவர்கள் மஹாபலியால் நலிவு பட்ட) அன்று அக்காலத்தில் இவ்உலகம், ivulagam - இந்த லோகங்களை அளந்தாய், alandhaay - (இரண்டடியால்) அளந்தருளினவனே! அடி, adi - (உன்னுடைய அத்) திருவடிகள் போற்றி, potri - பல்லாண்டு பல்லாண்டு வாழ்க அங்கு, angu - பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில் கன்று, kanru - கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை) குணிலா, gunila - எறிதடியா(க்கொண்டு) எறிந்தாய், erindhaay - (கபித்தாஸுரன் மீது) எறிந்தருளினவனே கழல், kazhal - (உன்னுடைய) திருவடிகள் போற்றி! குன்று, kunru - கோவர்த்தன கிரியை குடையா, kudaiyaa - குடையாக எடுத்தாய், eduthaay - தூக்கினவனே; குணம், kunam - (உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி) குணங்கள் போற்றி! வென்று, vendru - (பகைவரை) ஜபித்து பகை, pagai - த்வேஷத்தை சென்று, sendru - எழுந்தருளி தென் இலங்கை, then ilangai - (அவனுடைய பட்டணமாகிய) அழகிய லங்காபுரியை செற்றாய், serrai - அழித்தருளினவனே! திறல், thiral - (உன்னுடைய) மிடுக்கு போற்றி, potri - பல்லாண்டு வாழ்க சகடம் பொன்ற, sagadam pondru - சகடாஸுரன் முடியும்படி உதைத்தாய், udhaithaay - (அச்சகடத்தை) உதைத் தருளினவனே! புகழ், pugazh - (உன்னுடைய) கீர்த்தியானது போற்றி! கெடுக்கும், kedukkum - அழிக்கின்ற நின் கையில் வேல் போற்றி, nin kaiyil vael potri - உனது திருக் கையிலுள்ள வேல் வாழ்க’ என்று என்று, endru endru - என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு உன் சேவகமே, un saevagamae - உன்னுடைய வீர்யங்களையே ஏத்தி, aeththi - புகழ்ந்து கொண்டு யாம், yaam - அடியோம் இன்று, indru - இப்போது பறை கொள்வான் வந்தோம், parai kolvaan vandhom - பறை கொள்வதற்காக (உன்னிடம்) வினை கொண்டோம் இரங்கு, irangu - கிருபை பண்ணி யருள் ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய் |
| 554 | நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 10 | அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் | அன்று, Andru - மஹாபலி கொழுத்திருந்த அக் காலத்தில் உலகம் அளந்தானை, Ulagam Alanthaanai - மூவுலகங்களையும் அளந்து கொண்டவனான எம்பெருமான் விஷயத்திலே உகந்து, Uganthu - நான் கைங்கர்யத்தை ஆசைப்பட அவன், Avan - அவ் வெம்பெருமான் அடிமைக் கண், Adimai Kan - (அந்த) கைங்கரியத்திலே வலி செய்ய, Vali Seiya - வஞ்சனை பண்ண (அதற்கு நான் நோவு பட்டிருக்கிற சமயத்திலே) தென்றலும், Thendralum - தென்றல் காற்றும் திங்களும், Thingalum - பூர்ண சந்திரனும் என்னை, Ennai - என்னை ஊடு அறுத்து நலியும் முறைமை, Oodu Aruthu Naliyum Muraimai - உள்ளே பிளந்து கொண்டு புகுந்து ஹிம்ஸிக்கும் நியாயத்தை அறியேன், Ariyen - அறிகின்றிலேன் குயிலே!, Kuyile! - ஓ குயிலே! நீயும், Neeyum - (என்னுடைய க்ஷேமத்தை விரும்புமனான) நீயும் என்றும், Endrum - எந்நாளும் இக் காவில், Ik Kaavil - இந்தக் சோலையிலே இருந்து இருந்து, Irundhu Irundhu - இடைவிடாமலிருந்துகொண்டு என்னை, Ennai - (ஏற்கனவே மெலிந்திருக்கிற) என்னை ததைத்தாதே, Thadhaithaathe - ஹிம்ஸியாமலிரு இன்று, Indru - இன்றைக்கு நாராயணனை வர கூவாயேல், Narayananai Vara Koovayel - ஸ்ரீமந்நாராயணன் இங்கே வரும்படி அவனை நீ கூவாமற் போனாயாகில் இங்குத்தை நின்றும், Inguthai Nindrum - இந்தச் சோலையிலிருந்து துரப்பன், Thurappan - உன்னைத் துரத்தி விடுவேன் |
| 906 | திருமாலை || நீர்மையால் சேர்த்துக் கொண்டான் என்கிறார் 35 | தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே | anru,அன்று - அக் காலத்தில் (த்ரிவிக்ரமாவதாரத்தில்) ulagam ellaam thaavi,உலகம் எல்லாம் தாவி - எல்லா உலகங்களையும் கடந்து thalai vilaak kondu endhaay,தலை விளாக் கொண்ட எந்தாய் - (திருவடியினால்) வியாபரித்த எமது ஸ்வாமியே! sengkanmaale,செங்கண்மாலே - சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலே! aaviye,ஆவியே - (எனது உயிர் தரித்திருப்பதற்குக் காரணமான) பஞ்ச ப்ராண வாயுவானவனே! amudhe,அமுதே - அம்ருதம் போன்றவனே! en than aar uyir anaiya,என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் - (என்னை நல் வழியிற் செல்வித்த எனது அருமையான ஆத்மாவைப் போன்ற எனது தலைவனே! paaviyene,பாவியேன் - பாவியாகி யான் sikkena,சிக்கென - உறுதியாக (எப்போதும் விடாமல்) unnai allaal seviyene,உன்னை அல்லால் சேவியேன் - உன்னைத் தவிர (மற்றையோரை) வணங்க மாட்டேன்; unnai allaal paaviyene,உன்னை அல்லால் பாவியேன் - (உன்னையல்லாது வேறொருவரை) நினைக்கவும் மாட்டேன் paaviyene,பாவியேனே - நான் பாவியனேயாவேன் |
| 928 | அமலனாதிபிரான் || 2 | உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச் சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே | உலகம் அளந்து, Ulakam Alanthu - மூவுலகங்களையும் அளந்து |
| 2058 | திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருக் கோவலூரைத் தொழுகைக்காகத் திருவுள்ளத்தை யழைத்தார்; அவ்விடத்து எம்பெருமான் வஸிஷ்ட சண்டான விபாகமின்றி எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த ஸர்வ ஸ்தானத்தோடே வந்து நிற்கையாலே அதை அநுஸந்தித்து அநுபவத்தை மறந்து அஞ்சத் தொடங்கினார். அஸ்தானத்திலும் பய சங்கை பண்ணுகை யன்றோ ஆழ்வார்களின் பணி. எம்பெருமானுடைய ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதி குணங்களை அநுஸந்தித்தவாறே இவ் விலக்ஷண வஸ்துவுக்கு என்ன அவத்யம் வருகிறதோவென்று வயிறு பிடிக்க வேண்டும்படியாயிற்று. ஸ்ரீவிபீஷணாழ்வான் அநுகூலனாய் வந்து சரணம் புகா நிற்கச் செய்தேயும் ஸுக்ரீவ மஹாராஜர் தம்முடைய கனத்த ப்ரேமத்தினால் கலங்கி அபாயசங்கை பண்ணினபோது பெருமாள் தம் தோள் வலியைக் காட்டி அச்சந் தவிர்த்தாப் போலே பிரகிருதத்திலும் திருக் கோவலூராயனார் தம் மிடுக்கையும் காவலுறைப்பையும் தேசத்தினுடைய அரணுடைமையையும் ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுக்க, அவற்றையெல்லாங்கண்டு தெளிந்த ஆழ்வார் அச்சங்கெட்டு “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருவுள்ளத்தைத் தட்டி யெழுப்புகிறார். 7 | வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு, வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய, கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி, பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. - 7 | உலகம் ஆண்டு,Ulagam Aandu - (ஸ்ரீராமபிரனாய்) உலகங்களைத் திருக் குணங்களா லீடுபடுத்தியும் |
| 2059 | திரு நெடும் தாண்டகம் || பல திருப்பதிகளையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார். 8 | நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும் காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணி னேனே. - 8 | உலகம் ஏத்தும் காரகத்தாய்,Ulagam Eaeththum Kaaragaththaai - உலகமெல்லாம் துதிக்கும்படி யான திருக்காரகயத்திலுள்ளவனே; |
| 2061 | திரு நெடும் தாண்டகம் || எம்பெருமானே! பலபடிகளாலும் உன்னைச் சொல்லிக் கதறுவதொழியப் பிறிதொன்றுமறியேன் என்கிறார்- 10 | பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்ட னேன்நான், என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் என்னறிவ னேழையேன், உலக மேத்தும் தென்னானாய் வடவானாய் குடபா லானாய் குணபால தாயினாய் இமையோர்க் கென்றும் முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலா னாயே. - 10 | உலகம் ஏத்தும்,Ulagam Yeththum - உலகமடங்கலும் துதிக்கத்தக்க தென் திருமாலிருஞ்சோலை மலையில் நின்றயானை போன்றவனே! |
| 2079 | திரு நெடும் தாண்டகம் || இப்பாட்டில் எல்லை கடந்த ப்ரணய ரோஷத்தை வெளியிடும் முகத்தால் தன்னுடைய ஆற்றாமையின் கனத்தை வெளியிட்டவாறு. இனிப் பெற்றல்லது தரிக்க வொண்ணாத படியான ‘முடிந்தவவா‘ என்கிற பரமபக்தி முதிர்ந்தமை சொன்னபடி. 28 | தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால், மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன் பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி, என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே. - 28 | உலகம் மூன்றி னையும் திரிந்து,Ulagam Moonrinaiyum Thirindhu - (த்ரி விக்கிரமாவதார காலத்தில்) மூவுலகங்களையும் வியாபித்தவரும் |
| 2771 | திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் முதலான பீபிலிகா பர்யந்தமாக ஸகல ஜகத்தையும் படைத்தருளின கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளே புகுந்தருளினான்) 9 | கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9 | உலகம்,ulagam - உலகங்களையும்; |
| 2896 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றாரை திரு வாய் மொழி தானே ஜென்மத்தை முடித்து அழகர் திருவடிகளில் சேர்க்கும் என்கிறார் ) 11 | பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11 | i ulakam,இ உலகம் - இவ்வுலகங்களை |
| 2899 | திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (ஆழ்வீர்! உலகர் ஒட்டுரைத்துக் பேசுவதெல்லாம் எனக்கு நிறக்கோடாக முடிகின்றதே யன்றிப் புகழ்ச்சியாக ஆகின்றதில்லை யென்கிறீர்; *மயர்வற மதிநலமருளப் பெற்ற நீர் அழகாகப் பேசலாமன்றோ; எனக்கு நிறக்கோடாகாதபடிக்கு நீர் பேசலாமே என்ன; என்னாலுமாகாதென்கிறார்.) 3 | பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3 | படர் உலகம் படைத்த,Patar ulagam padaita - விசாலமான உலகங்களைப் படைத்த |
| 2916 | திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஸ்ரீகிருஷ்ணனாயும் ஸ்ரீவாமநனாயும் அவதரித்து உலகுக்குப் பண்ணின அநுக்ரஹத்திற்குத் தப்பின நான் இனி யுன்னைப் பெறுதற்கு வழியுண்டோவென்று க்லேசந்தோற்றப் பேசுகிறார்.) 9 | கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன் மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம் தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9 | கொடு வினை,Kodu vinai - கொடிய பாவங்களுக்குப் பிறப்பிடமாகிய தூற்றுள் நின்று,Thoottrul ninru - நுழைந்தால் வெளிப்பட முடி(யாத) புதர் போன்ற ஸம்ஸாரத்தில் அகப்பட்டு நின்று பல காலம்,Pala kaalam - அநேக காலம் வழி திகைத்து,Vali thigaiththu - வழி தெரியாமல் சுழன்று அலமருகின்றேன்,Alamarugindren - வருந்திக் கிடக்கின்ற பாவியேன்,Paaviyen - மஹாபாபியான நான் அன்று,Andru - முன்பொருகால் மேவி,Mevi - திருவள்ளமுவந்து ஆநிரை,Aa nirai - பசுக்கூடட்ங்களை காத்தவன்,Kaaththavan - ரக்ஷித்தவனும் உலகம் எல்லாம் தாவிய,Ulagam ellaam thaaviya - (த்ரிவிக்ரமனாய்) உலகங்களையெல்லாம் அளந்தவனுமாகிய அம்மானை,Ammaanai - ஸ்வாமியை இனி,Ini - இனி கூவி கூவி,Koovi koovi - பலகாலும் கூப்பிட்டு எங்கு,Engu - எங்கே தலைப்பெய்வன்,Thalaippeivan - கிட்டுவேன்? |
| 2937 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (இந்தவுலகில் பிரதானரான சிவனையும் பிரமனையும் எம்பெருமான் தான் உடைமையாகப் பற்றிருத்தலை ஆழ்வார் இந்தப் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.) 8 | ஒளி மணி வண்ணன் என்கோ! ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர் மதிச் சடையன் என்கோ! நான் முகக் கடவுள் என்கோ! அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே.–3-4-8 | அளி மகிழ்ந்து,Ali magizhndhu - உயிர்களைப் பாதுகாத்தலை விரும்பி உலகம் எல்லாம்,Ulagam ellaam - எல்லா உலகங்களையும் படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டித்து அவை,Avai - அவ்வுலகங்களெல்லாம் ஏத்த நின்ற,Yetha ninra - (தன்னைத்) துதிக்கும்படி நிற்கின்றவனும் களி மலர் துன்வன்,Kaliyumalar thunvan - தேனையும் பூவையுமுடைய திருத்துழாய் மாலையை யணிந்தவனும் எம்மான்,Emmaan - எமக்குத் தலைவனும் மாயனை,Maayanai - மாயங்களையுடையவனுமாகிய கண்ணனை,Kannanai - கண்ணபிரானை ஒளி மணிவண்ணன் என்கோ,Oli mani vannan enko - ப்ரகாசமுள்ள மாணிக்கம்போன்ற வடிவையுடையவனென்பேனோ? ஒருவன் என்று,Oruvan endru - ஒப்பற்ற கடவுள் என்று ஏத்த நின்ற,Yetha ninra - (தன்னுடைய அடியவர் யாவரும்) துதிக்கும்படி நின்ற நளிர்மதி சடையன் என்கோ,Nalirmathi sadaiyan enko - குளிர்ந்த பிறைச்சந்திரனைத் தனது சடைமுடியிலேயுடைய ருத்திரன் என்பேனோ? நான்முகன் கடவுள் என்கோ,Naanmugan kadavul enko - பிரமதேவனெப்பேனோ? |
| 2994 | திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (தன்னைத் துதிப்பதற்கென்றே கரணகளேபரங்களைக் கொடுத்தருளினவனான எம்பெருமான் திறத்திலே கவிபாடப்பெற்ற வெனக்கு மற்றொருவரைக் கவிபாடுதல் ஏலாது என்கிறார்.) 10 | நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச் சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி, ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10 | பல நாள்,Palanaal - அநேக காலம் நின்று நின்று,Nindru nindru - இருந்து உய்க்கும்,Uykkum - சேதுநனைத் தன் வசத்திலே யாக்குகின்ற இ உடல்,eUdal - இந்த சரீரத்தை நீங்கி போய்,Neengi poi - விட்டொழிந்து போய் சென்று சென்று ஆகிலும்,Sendru sendru aagilum - இப்படியே பல பல ஜனன மரணங்கள் நடந்தபின்பாகிலும் (ஏதேனுமொரு காலத்தில்) கண்டு,Kandu - தன்னைக் கண்டு சன்மம்,Sanmam - பிறவியை கழிப்பான்,Kazhipaan - கழிக்கக்கூடுமென்று எண்ணி,Enni - திருவுள்ளம் பற்றி ஒன்றி ஒன்றி,Ondri ondri - (ஒருகாலும் சோம்பிக் கைவிடாமல்) மேன்மேலும் ஊக்கங்கொண்டு உலகம் படைத்தான்,Ulagam padaithaan - உலகங்களைப் படைத்து வருகின்ற எம்பெருமானுடைய கவி ஆயினேற்கு,Kavi aayineerku - கவியாக அமைந்த எனக்கு இனி என்றும் என்றும்,eni endrum endrum - இனி எந்நாளும் மற்று ஒருவர் கவி,Matru oruvar kavi - வேறொருவரைக் கவிபாடுதல் ஏற்குமே,Earkume - தகுமோ? (தகாது) |
| 3101 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஆழ்வீர்! உம்மை நானழைத்துக்கொள்வதென்று ஒன்றுண்டோ? பேறு உம்மதான பின்பு நீர்தாமே முயற்சிசெய்து வந்து சேரக்கட வீரத்தனை” என்று எம்பெருமான் திருவுள்ளமானதாகக் கொண்டு, ஸகல பதார்த்தங்களும் நீயிட்ட வழக்கான பின்பு நீயே யுன்னைக் கிட்டும் வழி பார்த்தருள வேணமென்கிறார்.) 7 | ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால் நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக் கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7 | இ உலகத்து,I ulagathu - இந்த லோகத்தில் நிற்பனவும்,Nir panavum - ஸ்தாவரப் பொருள்களும் திரிவனவும்,Thirivanavum - ஜங்கமப் பொருள்களும் நீயே ஆய்,Neeye aay - நீயாகவே யிருந்து மற்று ஒரு பொருளும் இன்றி,Matru oru porulum indri - நீயல்லாத பொருள் வேறொன்றுமில்லாதபடி நீ நின்றமையால்,Ne ninradamaiyal - நீயிருப்பதனாலே நோய் மூப்பு பிறப்பு இறப்பு பிணி என்ற இவை ஒழிய,Noy moopu pirappu irappu pini enra ivai ozhiya - மனோவியாதி, கிழத்தனம், ஜனனமரணங்கள், சரீரபீடைகள் எனப்படுகிற இவை தொலையும்படி அடியேனை,Adiyenai - அடியனான வென்னை கூயே கொள்,Kuye kol - அழைத்துக் கொண்டருள வேணும்; கொடு உலகம்,Kodu ulagam - கொடிய இவ்வுலகத்தை காட்டேல்,Kaattele - இனிமேலும் காட்டவேண்டா. |
| 3108 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 3 | பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக் கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர் சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள் பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3 | பல் உலகம், pal ulagam - (அவர்களுக்குப்) பல உலகங்களையும் |
| 3143 | திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நான் சொல்லுகிறபடியே குணவாளன் அன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குண ஹீனன் ஆனாலும் என் நெஞ்சம் அவனை அல்லது அறியாது -உனக்கு அதில் ஒரு பலம் இல்லை என்கிறாள்.) 5 | கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே! துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5 | உலகம் கொண்ட அடியன்,Ulagam kondu adiyan - உலகம் முழுவதையும் தன்னதேயாம்படியளந்து கொண்ட திருவடியை யுடையவன்; |
| 3202 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 9 | இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே! அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி! திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9 | என்னை,ennai - நெடுநாள் விமுகனாயிருன்னத வென்னை இசைவித்து,isaivithu - அடிமைக்கு இசையும்படி செய்து உன் தாள் இணை கீழ்,un thaal inai keel - உனது உபயபாதங்களின் கீழே இருந்தும் அம்மானே,irundhum ammaane - தங்கும்படி செய்தருளின ஸ்வாமியே! அசைவு இல் அமரர் தலைவர்,asaivu il amarar thalaivar - நித்யஸூரிகளுக்குள் தலைவரான அநந்தகருடவிஷ்வக்ஸேனர்களுக்கும் தலைவா,thalaiva - முதல்வனே! ஆதி பெரு மூர்த்தி,aadhi peru moorthi - ஸகலஜகத்காரணபூசமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே! திசை வில் வீசும் செழுமா மனிகள் சேரும்,disai vil veesum sezuma maniḵaḷ cerum - எங்கம் ஒளிவீசுகின்ற மிகச்சிறந்த ரத்னங்கள் சேருமிடமான திரு குடந்தை,tiru kutantai - திக்குடந்தையிலே அசைவு இல்,asaivu il - ஓய்வில்லாதபடி (அவதாரம்) உலகம் பரவ,ulagam parava - உலகமெல்லாம் துதிக்கும் படி கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே! காண வாராய்,kaana vaaraay - நான்கண்டு அநுபவிக்கும்படி வரவேணும் |
| 3221 | திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (நின்றது மிருந்ததும் கிடந்ததும் இன்ன இன்ன விடங்களிலே யென்று வகுத்துக் கூறாமையாலே ஆசாரியர்கள் பலபடியும் ஈடுபட்டு நிர்வஹிப்பார்கள்.) 6 | நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண் சுடரே!–5-10-6 | உலகம் உண்ட ஒண் சுடரே,Ulagam unda on sudare - உலகங்களை அமுதுசெய்த ஒளியுவனே! |
| 3256 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் அநு கூல பிரதிகூல விஷயங்களான ஸ்வபாவங்களை யுடைய சர்வேஸ்வரனாய் – ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணன் எனக்கு அசாதாரணமான புகலிடம் என்கிறார்.) 8 | வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த் தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும் தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8 | சுரர்க்கு வன் சரண் ஆய்,Surarkku van saran aai - தேவர்களுக்குச் சிறந்த புகலிடமாய் அசுரர்க்கு வெம்கூற்றமும் ஆய்,Asurarkku vemkooRRamum aai - அஸுரர்களுக்கு வலிய மிருத்யுவாய் உலகம் தன் சரண் நிழல் கீழ் வைத்தும்வையாதும்,Ulagam than saran nizhal keezh vaithumvaiyaadhum - உலகத்தைத் தன் திருவடிச் சரயையிலே ஒதுக்கியும் ஒதுக்காமலும் (இருந்துகொண்டு) தென் திசைக்கு சரண் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்,Then dhisaiyukku saran tiru vinnagar serndha piraan - தென்திசைக்குள்ளே புகலிடமான திருவண்ணகரிலே தங்கியுள்ள பெருமான் என்சரண்,En saran - எனக்கு சரண்யன் என் கண்ணன்,En kannan - எனக்கு விதேயன் என்னை ஆளுடை என் அப்பன்,Ennai aaludai en appan - என்னை அடிமைகொண்ட மஹோபகாரகன். |
| 3321 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (பிரானே! எல்லாம் உன்னுடைய ஸங்கல்பாயத்தமாயிருக்க, எனக்கு அருள் செய்வதுதானோ மிகை என்கிறார்.) 7 | உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ! அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.–6-9-7 | உலகம் ஆய்,Ulagam aay - அந்தக கருமங்களை யனுஷ்டிப்பவர்கள் ஸ்வரூபியாயும் |
| 3325 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (இத் திருவாய்மொழியானது தன்னோடு அந்வயமுடையாரை ஸர்வரக்ஷகனான எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷ பூதராக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11 | தெரித்தல் நினைதல் எண்ணல் ஆகா,Teriththal ninaiththal ennall aakaa - சாஸ்த்ரஜ்ஞானத்தாலும் மனனத்தாலும் த்யானத்தாலும் பரிச்சேகதிக்க முடியாத திரு மாலுக்கு,Thiru Maalukku - ஸ்ரீமந்நாராயணனுக்கு தொண்டர் தொண்டர்,Thondar thondar - உரிய அநந்யார்ஹ சேஷ பூதர்களான பக்த பக்தர்களுக்கு தொண்டன்,Thondan - பக்தரான சடகோபன்,Sadagopan - நம்மாழ்வார் தெரிய சொன்ன,Theriyat sonna - விசதமாக அருளிச்செய்த ஓர் ஆயிரத்துள்,Oor aayiraththul - விலக்ஷணமான ஆயிரத்தினுள்ளே இ பத்தும்,ePaththum - இந்தத் திருவாமொழி (தன்னைக் கற்குமவர்களை) உலகம் உண்டாதற்கு,Ulagam undaatharku - உலக முண்டவனான எம்பெருமான் விஷயத்திலே உரிய தொண்டர் ஆக்கும்,Uriya thondar aakum - அநந்யார்ஹ சேஷ பூதாரக்கும். |
| 3326 | திருவாய்மொழி || 6-10–உலகம் 1 | உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே! நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே! திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே! குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1 | ulagam unda peru vaaya,உலகம் உண்ட பெரு வாயா - (பிரளய காலத்தில்) உலகங்களையெல்லாம் அமுது செய்த பெருவாயையுடையவனே! ulappu il keerthi ammaane,உலப்பு இல் கீர்த்தி அம்மானே - முடிவில்லாத புகழுடைய பெருமானே nilavum sudar soozi oli moorthi,நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி - அப்ராக்ருத தேஜோமயமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே! nediaay,நெடியாய் - மிகப்பெரியோனே! adiyen aar uyire,அடியேன் ஆர் உயிரே - அடியேனுக்குப் பரிபூர்ண ப்ராணபூதனே! ulagukku thilatham aay nindra,உலகுக்கு திலதம் ஆய் நின்ற - உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலையிலே விளங்குகின்ற emperumane,எம்பெருமானே - அஸ்மத்ஸ்வாமியே! kulam tol adiyen,குலம் தொல் அடியேன் - குலபரம்பரையாக உனக்கு அடிமைப் பட்டிருப்பவனான அடியேன் una paadham,உன பாதம் - உனது திருவடிகளை koodum aaru,கூடும் ஆறு - வந்து சேறும்படியை kooraay,கூறாய் - அருளிச் செய்யவேணும். |
| 3327 | திருவாய்மொழி || 6-10–உலகம் 2 | கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம் சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே! சேறார் சுனைத் தாமரை செந் தீ மலரும் திருவேங் கடத்தானே! ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2- | kodu valla asurar kulam ellaam,கொடு வல்ல அசுரர் குலம் எல்லாம் - மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம் kooru aay,கூறு ஆய் - பலபல கண்டங்களாகி neeru aay,நீறு ஆய் - சாம்பலாகி nilan aagi,நிலன் ஆகி - தரைப்பட்டிருக்கச் செய்தேயும் seeraa,சீறா - பின்னையும் சீறி eriyum,எறியும் - ஜ்வலியா நிற்கிற thiru nemi valavaa,திரு நேமி வலவா - திருவாழியாழ்வானை வலவருகிலே ஏந்தியிருப்பவனே! theyvam komaane,தெய்வம் கோமானே - நித்ய ஸூரிநாதனே! seeru aar sunai,சேறு ஆர் சுனை - சேறு நிரம்பிய கனைகளிலே thaamarai,தாமரை - செந்தாமரை மலர்கள் sem thee malarum,செம் தீ மலரும் - சிவந்த தீப்போன்ற நிறத்தையுடைத்தாய்க் கொண்டு மலரும்படியுள்ள thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - அளவுபடாத அன்பையுடையேனான நான் un adi ser vannam,உன் அடி சேர் வண்ணம் - உன் திருவடிகளைச் சேறும்படி arulaay,அருளாய் - அருள்புரிய வேணும். |
| 3328 | திருவாய்மொழி || 6-10–உலகம் 3 | வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே! எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே! தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே! அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3 | vannam arul kol,வண்ணம் அருள் கொள் - அருளே வடிவெடுத்த வண்ணமாய் ani paegam vannaa,அணி பேகம் வண்ணா - அழகிய மேகம்போன்ற நிறத்தை யுடையவனே! maayam ammaane,மாயம் அம்மானே - ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே! ennam pugundhu thithikkum amudhae,எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே - நெஞ்சுக்குள்ளே புகுந்து ரஸிக்கும் அமிருதமானவனே! imaiyor adhipathiye,இமையோர் அதிபதியே - தேவாதிதேவனே! thel nal aruvi,தெள் நல் அருவி - தெளிந்தழகிய அருவிகள் mani pon muthu,மணி பொன் முத்து - மணிகளையும் பொன்களையும் முத்துக்களையும் alaikkum,அலைக்கும் - கொழிக்குமிடமான thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையிலே விளங்குபவனே! annale,அண்ணலே - ஸ்வாமியே! un adi so,உன் அடி சோ - உன் திருவடிகளில் வந்து சேரும்படி adiyerkku,அடியேற்கு - அடியேன் விஷயத்திலே aa aa ennaay,ஆ ஆ என்னாய் - ஐயோ வென்றிரங்கியருள வேணும். |
| 3329 | திருவாய்மொழி || 6-10–உலகம் 4 | ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல் தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா! தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே! பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4 | aa aa ennaadhu,ஆ ஆ என்னாது - இரக்கமில்லாமல் ulagathai alaikkum asurar,உலகத்தை அலைக்கும் - உலகத்தவர்களை ஹிம்ஸிப்பவர்களான asurar,அசுரர் - ஆஸுரப்ரக்ருதிகளினுடைய vaazhnal mel,வாழ்நாள் மேல் - ஆயுளை முடிப்பதற்காக thee vai vaali,தீ வாய் வாளி - நெருப்பை உமிழ்கிற அம்புகளை mazhai pozhindha silaiyaa,மழை பொழிந்த சிலையா - மழைபோலே வர்ஷித்த சார்ங்க வில்லையுடையவனே! thiru maa magal kaelva,திரு மா மகள் கேள்வா - திருமகள் கொழுநனே! theva,தேவா - தேவனே! surargal munikanangal virumbum,சுரர்கள் முனிகணங்கள் விரும்பும் - தேவர்களும் முனிவர்களும் திரள் திரளாக ஆதரிக்கும் படியான thiru vengadathaaney,திரு வேங்கடத்தானே - திருமலையில் எழுந்தருளியிருப்பவனே! poo aar kazhalgal,பூ ஆர் கழல்கள் - (உனது) புஷ்பங்கள் நிறைந்த திருவடிகளை aru vinaiyen,அரு வினையேன் - மஹாபாபியான நான் porundhum aaru,பொருந்தும் ஆறு - கிட்டும்படி punaraay,புணராய் - கற்பித்தருளவேணும் |
| 3330 | திருவாய்மொழி || 6-10–உலகம் 5 | புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ! புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ! திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே! திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5 | anru,அன்று - ராமாவதாரத்திலே punaraa nindra maram ezh,புணரா நின்ற மரம் ஏழ் - ஒன்றொடொன்று பிணைந்திருந்த ஸப்த ஸாலவ்ருக்ஷங்களை eydha,எய்த - துளைபடுத்தின oru vil valavaa o,ஒரு வில் வலவா ஓ - ஓ தனிவீரனே! punar ey nindra maram irandin naduve,புணர் எய் நின்ற மர ம் இரண்டின் நடுவே - சேர்ந்தி பொருத்தி நின்ற இரட்டை மருத மரங்களினிடையே pon,போன் - தவழ்ந்து சென்ற mudhalvaa o,முதல்வா ஓ - ஓ மூலபுருஷனே! thinar aar megham ena,திணர் ஆர் மேகம் என - தின்மை மிக்க மேகங்களென்னும்படி kaliru serum,களிறு சேரும் - யானைகள் சேருமிடமான thiruvengadath thaane,திருவேங்கடத் தானே - திருமலையிலெழுந்தருளி யிருப்பவனே thinar aar saangathu,திணர் ஆர் சார்ங்கத்து - திண்மைமிக்க ஸ்ரீசார்ங்க வில்லையுடைய una paadham,உன பாதம் - உனது திருவடிகளை adiyen saervadhu ennaal,அடியேன் சேர்வது எந்நாள் - அடியேன் அணுகப் பெறுவது என்றைக்கோ? |
| 3331 | திருவாய்மொழி || 6-10–உலகம் 6 | எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய் மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே! மெய்ந் நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6 | man alandha thaamaraigal inai,மண் அளந்த தாமரைகள் இணை - உலகமளந்த உபயபாதங்களை naam kaanpadharku ennaal endru,நாம் காண்பதற்கு எந்நாள் என்று - நான் காண்பதற்குரிய நாள் எந்த நாளென்று imaiyor gal,இமையோர்கள் - நித்யஸூரிகள் ennaalum nindru etti,எந்நாளும் நின்று ஏத்தி - நிரந்தரமாக நின்று துதித்து eirainji,இறைஞ்சி - வணங்கி enam enam aay,இனம் இனம் ஆய் - திரள் திரளாக mei naa manathaal,மெய் நா மனத்தால் - த்ரிகரணங்களாலும் vazhipaadu seyyum,வழிபாடு செய்யும் - ஆராதனை செய்யுமிடமான thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் எழுந்தருளியிருப்பவனே! adiyen naan,அடியேன் நான் - அடியேனாகிய நான் mei eydhi,மெய் எய்தி - (கனவுபோலன்றிக்கே) மெய்யாகவே யடைந்து un adikkaL mevuvadhu,உன் அடிக்கள் மேவுவது - உன் திருவடிகளிலே பொருந்துவது ennaal,எந்நாள் - என்றைக்கோ? |
| 3332 | திருவாய்மொழி || 6-10–உலகம் 7 | அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே! கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே! செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே! நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7 | adiyen mevi amarkindra amudhae,அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - அடியேன் கிட்டி யநுபவிக்கும்படியான அமிருதமே! emaiyor adhipathiye,இமையோர் அதிபதியே - தேவாதி தேவனே! adu pul kodi aa udaiyaane,அடு புள் கொடி ஆ உடையானே - (பகைவரைப்) பொசுக்கவல்ல கருடனைக் கொடியாகவுடையவனே! kolam kanivai perumaane,கோலம் கனிவாய் பெருமானே - அழகிய கனிபோன்ற அதரத்தையுடைய பெருமானே! chedi aar vinaigal theer marundhae,செடி ஆர் வினைகள் தீர் மருந்தே - செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவனே! un paadham kaana,உன பாதம் காண - உனது திருவடிகளைக் காண்கைக்கு noolaadhu,நோலாது - நான் ஒரு நோன்பும் அனுஷ்டியாமலிந்தும் (நோற்றவர்கள் பலன் தாழ்த்தால்படுமாபோலே) nodi aar pozhudhum,நொடி ஆர் பொழுதும் - ஒரு க்ஷண மாத்திரமும் aatren,ஆற்றேன் - தரித்திருக்கமாட்டாமல் துடிக்கின்றேன் |
| 3333 | திருவாய்மொழி || 6-10–உலகம் 8 | நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின் நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே! மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8 | nun unarvin,நுண் உணர்வின் - (ஸர்வஜ்ஞனாகையாலே) நுட்பமான உணர்வையுடையனான neelaar kandathu ammaanum,நீலார் கண்டத்து அம்மானும் - சிவபிரானும் nirai naanmuganum,நிறை நான்முகனும் - (ஞானசக்திகளால்) நிறைந்த பிரமனும் indiranum,இந்திரனும் - தேவேந்திரனும் un paadham kaana voodhu aatrennudru,உன பாதம் காண வோது ஆற்றேன் என்று - “உன் திருவடிகளைக் காண்கைக்கு ஸாதாரநானுஷ்டானம் பண்ணாதேயிருந்து ஆற்ற மாட்டுகின்றிலேன்“ என்று சொல்லிக் கொண்டு sael ey kannar palar soozhu,சேல் எய் கண்ணார் பலர் சூழ - கய் கண்ணிகளான தங்கள் மனைவிமார்கள் பலரோடுங் கூடிவந்து virumbum,விரும்பும் - விரும்பிப்பணியுமிடமான maal aay mayakki vandhaay poalae,மால் ஆய் மயக்கி வந்தாய் போலே - மயக்கிக்கொண்டு வந்தாப்போலே adiyen pal varai,அடியேன் பால் வராய் - அடியேன் திறந்தும் வந்து தோற்றவேணும். |
| 3334 | திருவாய்மொழி || 6-10–உலகம் 9 | வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே! செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே! சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே! அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9 | vandhai poalae vaaraadhai,வந்தாய் போலே வாராதாய் - கைக்கு எட்டினாற்போலேயிருந்து எட்டாதவனே! vaaraadhai pol varuvaane,வாராதாய் போல் வருவானே - எட்டாதவன் போலிருந்து எட்டி நிற்பவனே! sen thamarai kan,செம் தாமரை கண் - செந்தாமரைபோன்ற திருக்கண்களையும் sem kani vaay,செம் கனி வாய் - செங்கனி போன்ற திருப்பவளத்தையும் naal thol,நால் தோள் - நான்கு திருத்தோள்களையுமுடைய amudhae,அமுதே - பரமபோக்யனே! enadhu uyire,எனது உயிரே - எனக்கு உயிரானவனே! sindhaamanigal pagar,சிந்தாமணிகள் பகர் - சிறந்த ரத்னங்களின் ஒளியான allai pagal sei,அல்லை பகல் செய் - இரவையும் பகலாக்குமிடமானது thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே! antho,அந்தோ - ஐயோ! una paadham,உன பாதம் - உனது திருவடிகளே adiyen,அடியேன் - அடிமைச்சுவடறிந்த நான் iraiyum akala killeen,இறையும் அகல கில்லேன் - ஒரு க்ஷணகாலமும் பிரிந்திருக்க வல்லேனல்லேன் |
| 3335 | திருவாய்மொழி || 6-10–உலகம் 10 | அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா! நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே! நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10 | alar mel mangai,அலர் மேல் மங்கை - பூவில் வாழ்மகளான பெரிய பிராட்டியார் iraiyum akala killeen endru,இறையும் அகல கில்லேன் என்று - ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு urai maarpa,உறை மார்பா - நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வையுடையவனே! nigar il pugazhai,நிகர் இல் புகழாய் - ஒப்பற்றதான புகழை யுடைய வனே! ulagam moonru udaiyaa,உலகம் மூன்று உடையாய் - சேதநாசேதங்களுக்கும் ஸ்வாமியே! ennai aal,என்னை ஆள் - நீசனே என்னையுமடிமை கொள்பவனே! vaane,வானே - பவனே! amarar,அமரர் - தேவர்களும் muni kanangal,முனி கணங்கள் - மஹர்ஷி ஸமூஹங்களும் virumbum,விரும்பும் - விரும்பிவந்து பணியுமிடமான thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே! pugal ondru illa adiyen,புகல் ஒன்று இல்லா அடியேன் - அநந்யகதியான நான் un adi keel,உன் அடி கீழ் - உனது திருவடி வாரத்திலே amarndhu pugundhaen,அமர்ந்து புகுந்தேன் - மிகப் பொருத்தமாக அந்வயித்துவிட்டேன் |
| 3336 | திருவாய்மொழி || 6-10–உலகம் 11 | அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும் படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும் பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11 | adiyeeir,அடியீர் - அடியவர்களே! adi keel amarndhu pugundhu vaazhmin endru endru,அடி கீழ் அமர்ந்து புகுந்து வாழ்மின் என்று என்று - நம்முடைய திருவடிகளின் கீழே புகுந்திருந்து உஜ்ஜீவித்துப் போருங்கள்“ என்று அநவாதமும் காட்டிக்கொடுத்து, arul kodukkum,அருள் கொடுக்கும் - க்ருபை பண்ணுகிறவனும் padi kel ella perumaanai,படி கேழ் இல்லா பெருமானை - சீர் நிலங்களை பெருமை வாய்ந்தவனுமான ஸர்வேச்வரனைக்குறித்து mudipaan sonna,முடிப்பான் சொன்ன - ஸம்ஸாரத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த aayirathu,ஆயிரத்து - ஆயிரத்தினுள்ளும் thiruvengadathukku ivaipaththum,திருவேங்கடத்துக்கு இவைபத்தும் - திருவேங்கடமலை விஷயமான இத்திருவாய்மொழியை pidithaar pidithaar,பிடித்தார்பிடித்தார் - ஸாக்ஷாத்தாகவும் பரம்பரையாகவும் அவலம்பித்தவர்கள் periya vaanul,பெரிய வானுள் - பாமாகாசமென்கிற பரமபதத்திலே veettrindhu nilaavular,வீற்றிருந்து நிலாவுலர் - நிலை நின்று வீற்றிருப்பர்கள். |
| 3337 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பிரானே! உன் திருவடிகளையே சரணமாகப்பற்றின வென்னை இந்திரியங்களை யிட்டு நலியப் பார்க்கிறாயே! இது தகுதியோ? என்கிறார்.) 1 | உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1 | உலகம் மூன்று உடை,Ulagam moonru udai - மூவுலகங்களையும் சேஷமாசவுடையனுமான |
| 3349 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 2 | என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும் என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும் முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும் முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2 | இவ்உலகம், Ivulagam - இந்த ப்ரபஞ்சங்களை யெல்லாம் |
| 3370 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 1 | ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1 | ulagam kondaa aaru eyy,உலகம் கொண்ட ஆறு ஏ - (திரிவிக்கிரமனாய்) உலகங்களையளந்து கொண்டபடி என்னே!. |
| 3373 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 4 | நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும் கோளும் எழ எரி காலும் எழ மலை தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன் ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4 | naal ezvum,நாள் எழவும் - காலவ்யவஸ்தைபேரும் படியாகவும் nilam neer ezvum,நிலம் நீர் எழவும் - நிலமும் நீரும் நிலை குலைந்து போகவும் vinnum koalum ezhu,விண்ணும் கோளும் எழ - ஆகாசமும் க்ரஹங்களும் நிலை குலைத்து போகவும் eri kaalum ezhu,எரி காலும் எழ - நெருப்பும் காற்றும் நிலைகுலைந்து போகவும் malai thaal ezvum,மலை தாள் எழவும் - மலைகள் அடிபெயர்ந்து போகவும் sudarthaanum ezhu,சுடர்தானும் எழ - நக்ஷ்த்திரம் முதலிய சுடர்ப்பொருள்கள் நிலை குலையவும் appan,அப்பன் - ஸர்வேச்வரன் ooli ezhu ulagam unda oon,ஊளி எழ உலகம் உண்ட ஊண் - ஆரவரமுண்டாம்படி உலகங்களை உண்டருளின உணவு என்ன ஆச்சரியம்! |
| 3378 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 9 | அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9 | appan,அப்பன் - ஸ்வாமியான ஸாவேச்வரன் முந்துற் முன்னம் anru,அன்று - அந்தவொரு க்ஷ்ணத்திலேயாம்; man neer eri kaal vin,மண் நீர் எரி கால் விண் - பஞ்ச பூதங்ககளையும் malai mudhal,மலை முதல் - மலைகள் முதலானவற்றையும் seydhadhum,செய்ததும் - படைத்ததும் anru,அன்று - அந்த க்ஷ்ணத்திலேயாம்; sudar irandu,சுடர் இரண்டு - சந்திரன் ஸுர்யன் ஆகிய இரண்டு சுடர்ப்பொருள்களையும் piravum,பிறவும் - மற்றுமுள்ள நக்ஷ்த்ராதிதேஜஸ் பதார்த்தங்களையும் ulagam seydhadhum,உலகம் செய்ததும் - உலகங்களைப்படைத்ததும், seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும் anru,அன்று - அந்த க்ஷணத்திலேயாம் pinnum,பின்னும் - அதுக்குமேலே mazhai,மழை - மேகங்களையும் uyir,உயிர் - மழையினால்பிழைக்கும் உயிர்களையும் thevum,தேவும் - மழைக்குக் கடவர்களான தேவர்களையும் matrum,மற்றும் - மற்றுமுள்ள திர்யக் ஸ்தாவரங்களையும் seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும் |
| 3396 | திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) ( லௌகிக விஷயங்களிலே கைகழிந்திருக்கிற என் ஆக்மா உன்னை எங்ஙனே கிட்டக்கடவதென்கிறார். ஈடு;- “பலன் உம்மதான பின்பு நீரும் சிறிது யத்நம் பண்ணவேணுங்காணுமென்ன: நீ ஸ்ருஷ்டித்த லோகங்களில் விஷயங்கள் தோறும் அகப்பட்டுக்கிடக்கிற நான் உன்னைப் பெறுகைக்கு ஒருஸாதனத்தை யநுஷ்டித்துவந்து பெறுகையென்று ஒன்றுண்டோ வென்கிறார்.) 5 | என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே! உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5 | உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும்,Unnutai undhi malar ulagam avai moondrum - உனது திருநாபியிலே மலர்ந்த மூவுலகங்களிலுமுள்ள விஷயங்களெல்லாவற்றலும் |
| 3440 | திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையினுடைய சம்ருத்தமான புகழை பாட நம்முடைய சகல துக்கங்களும் நீங்கும் என்கிறார்.) 5 | மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப் பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும் மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5 | உலகம் மலி புகழ்,Ulagam mali pugazh - உலகமெங்கும் நிறைந்த திவ்ய கீர்த்திகளை |
| 3447 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (பிரிவில் தரித்திருக்க வொண்ணாதபடி பரம போக்யதை வாய்ந்திருக்கிற நீ உன்னை நான் காணும்படி. அருள்புரியவேணு மென்கிறார். இப்பாட்டில்.) 1 | தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1 | மேவிய ன்று உலகம் அவை,Meviya ntru ulagam avai - பொருந்திய மூவுலகங்களுமாம் |
| 3552 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஸ்வயம்புருஷார்த்த மாக்க் கொள்ளும் பகவதநுபவம் வேண்டா, பாகவத ப்ரீதிரூபமான பகவதநுபவத்தைப் பண்ணிக்கொண்டு அந்த பகாவதர்களோடு கூடி வாழ்கையெ நமக்கு நாளும வாய்க்கவேணுமென்கிறார்.) 7 | தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார் நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7 | Tani maa pugal e yennjanrum nirkumpadi ay,தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படி ஆய் - ஒப்பில்லாத சிறந்த புகழே காலமுள்ளதனையும் வேதாந்த ப்ரஸித்தமாய் நிற்கும்படியாக Taan tonri,தான் தோன்றி - தானோ (படைப்புக் கடவுளாக) ஆவிர்ப்பவித்து Muni,முனி - (ஸ்ருஷ்டிக்காக) ஸங்கல்பிக்கிற Maa piram,மா பிரம்ம் - பரப்ரஹ்ம்மாகிற Mudhal vithu ay,முதல் வித்து ஆய் - பரமநாரணமாய் Ulakam moonrum,உலகம் மூன்றும் - லோகங்களை யெல்லாம் Mulaippitha,முளைப்பித்த - உண்டாக்கின Tani maa teyvam,தனி மா தெய்வம் - ஒப்பற்ற பர தேவதையினுடைய Thalira adi keizhl,தளிர அடி கீழ் - தளிர்போன்ற திருவடியின் கீழே Puguthal anri,புகுதல் அன்றி - புகுகையைத் தவிர்த்து Avan adiyar,அவன் அடியார் - ஸ்ரீவைஷ்யவர்களுடைய Nani maa kalavi inbame,நனி மா கலவி இன்பமே - மிகச் சிறந்த்தான ஸம்ச்லேஷ ஸுகமே Nankatkku nalum vayntha,நங்கட்கு நாளும் வாய்ந்த - நமக்கு எப்போதும் வாய்க்க வேணும் |
| 3571 | திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ஆஸ்ரித அர்த்தமாகக் கிடந்தது இருந்து நின்று என்னை அடிமை கொண்ட தர்ச நீயமான வடிவோடே கூட நான் காணும்படி வர வேணும் -என்கிறார்.) 4 | புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப் பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4 | புளிங்குடி கிடந்து,Pulungudi kidanthu - திருப்புளிங்குடியிலே சயனித்தும் வாருண மங்கை இருந்து,Vaaruna mangai irundhu - வாகுரை மங்கையிலே வீற்றிருந்தும் வைகுந்தத்துள் நின்று,Vaikundaththul ninru - ஸ்ரீவைகுண்டத்திலே நின்றும் தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய்,Thulindha en sindhai aagam kazhiyaadhe ennai aalvaai - என் சிந்தையைத் தெளிவித்து அங்கே விட்டுக் பிரியாதேயிருந்து என்னை யாளுமவனே எனக்கு அருளி,Enakku aruli - எண் திறத்திலே க்ருபை பண்ணி நரிள்ந்த சீர்,Narilnda seer - (உனது) குளிர்ந்த திருக்குணத்தை பற்றி உலகம் மூன்று உடன் வியப்ப,Ulagam moondru udan viyappa - மூவுங்கும் ஒருமித்து ஆச்சரியப் படும்படியாகவும் நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப,Naangal koothadi ninru aarp - நாங்களும் கூத்தாடிக் கோளாஹலம் செய்யும்படியாகவும் பளிங்கு நீர்,Palingu neer - தெளிந்த நீரையுடைத்தான மூகிலின்,Mookilin - காளமேகத்திலே பவளம் போல்,Pavalam pol - பவளக்கொடி படர்ந்தாற்போலே கனிவாய் சிவப்பு,Kanivai sivappu - கனிந்த திருவதரம் சிவந்து தோன்று மழகை |
| 3578 | திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் எம்பெருமானுடைய திருவடிகளை நிரந்தரம் சிந்திக்கப் பெறுதலேயாம் என்று தலைக்கட்டியருளுகிறார்.) 11 | கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11 | மூன்று உலகம் அளந்தான் அடி இணை,Moondru ulagam alandhaan adi inai - திரி விக்கிரமனுடைய பாதங்களை |
| 3582 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (நித்ய ஸுரிகளுக்குப் பரம போக்யனாயிருந்து வைத்து அங்கு நின்றும் போந்து க்ருஷ்ணனாயவதரித்து நம்மையும் நித்யஸுரிகள் நடுவே கொண்டு வைக்குமவனாயிருக்கிற எம்பெருமானை ஒருவாறு கிட்டப்பெற்றோம், நெஞ்சே அவனை விடாதேகொள் என்று தம்திருவுள்ளத்தை நோக்கி யருளிச்செய்கிற பாசுரமிது.) 4 | மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம் தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4 | விண் உலகம் தருமதேவனை,Vin ulagam dharumadhevanai - பரமபத போகத்தைத் தரவானான பெருமானை |
| 3599 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தாம் உஜ்ஜீவிக்கப்பெற்ற படியைப் பேரானந்தம் பொலியப் பேசுகிறார்.) 10 | அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10 | இவன் அடியான் என்று,Evan adiyaan endru - இச்சடகோபன் நமக்கு அடிமைப்பட்டவன் என்று கொண்டு எனக்கு ஆர் அருள் செய்யும் செடியானை,Enakku aar arul seyyum chediyanaai - என் விஷயத்தில் பேரருள் புரியும் ஸர்வேச்வரனாய் நிறை புகழ் அம்சிறை புள்ளின் கொடியானை,Nirai pugazh amsirai pullin kodiyanaai - நிறைந்த புகழோடுகூடி அழகிய சிறகையுடைய கருடனைக் கொடியாகவுடையனாய் குன்றாமல் உலகம் அளந்த அடியானை,Kunraamal ulagam alandha adiyaanai - ஒன்றுவிடாமல் உலகம் முழுவதையுமளந்து கொண்ட திருவடியையுடையனாயிருக்கு மெம்பெருமானை அடியேன் அடைந்து உய்ந்த ஆறே,Adiyaen adaindhu uyndha aare - அடியேன் கிட்டி உஜ்ஜீவிக்கப் பெற்ற விதம் என்னே! |
| 3724 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இப்பாட்டும் நெஞ்சோடே கொண்டாடிச் சொல்லுகிறது. நம்முடைய பேற்றுக்கு அவன் விரையும்படியாயிற்றே! இப்படியாகுமென்று நாம் கனவிலாவது எண்ணினதுண்டோ? நாமெண்ணினதொன்று, நிகழ்ந்தது மற்றொன்றாயிற்றே! இதுவென்! என்று வியக்கிறார்.) 3 | நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3 | இன்று விதிவகையே விண் உலகம் தருவான் ஆய்,Inru vidhi vagaiyae vin ulagam tharuvaan aay - இப்போது நமது நியமனப் படியே திருநாடு தருபவனாகி |