திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| தனியன் 30 | மூன்றாம் திருவந்தாதி - தனியன் || (சீராரும்மாட) (மநஸ்ஸே ! ஸம்பத்தினால் நிறைந்தும் மண்டபங்களையுடையதுமான திருக்கோவலூரென்கிற திவ்யதேசத்திற்குள் ஜலத்தினால் நிறைந்து கறுத்திருக்கிற மேகம் போன்ற திருமேனியையுடைய ஸர்வேஸ்வரனை அநுபவிக்கத் தொடங்கி ஆராய்ந்து திருக்கண்டேனென்று தொடக்கமான திருவந்தாதியை அருளிச் செய்த ஸ்ரீமானான பேயாழ்வாருடைய திருவடிகளை ஆசைப்பட்டு சொல்லுகிடாய்) | குருகை காவலப்பன் சீராரும்மாடத் திருக்கோவலூரதனுள்
காரார்கருமுகிலைக் காணப்புக்கு - ஓராத்
திருக்கண்டேனென்றுரைத்த சீரான்கழலே
உரைக்கண்டாய்நெஞ்சே யுகந்து | பதவுரை Show / HideNenje, நெஞ்சே - எனது நெஞ்சமே! Seer aarum maadam, சீர் ஆரும் மாடம் - அழகு பொருந்திய மாடங்களையுடைய Thirukkovalur adhanul, திருக்கோவலூர் அதனுள் - திருக்கோவலூரில் ஓர் இடைகழியில் Kaar aar karu mugilai, கார் ஆர் கரு முகிலை - கார்காலத்துக் கரிய மேகம் போன்ற எம்பெருமானை Kaanapukku, காண புக்கு - ஸேவிக்கப் புகுந்து Oraa, ஓரா - நெஞ்சென்னும் உட்கண்ணாலே அநுஸந்தித்து Thirukkanden endru uraitha, திருக்கண்டேன் என்று உரைத்த - திருக் கண்டேன்' என்று தொடங்கி நூறுபாசுரம் அருளிச்செய்த Seeraan, சீரான் - சீர்மை பொருந்திய பேயாழ்வாருடைய Kazhale, கழலே - திருவடிகளையே Ugandhu urai kandai, உகந்து உரைக்கண்டாய் - மகிழ்ந்து பேசு |
| 2282 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – எம்பெருமான் கடல் கடைய தேவர்கள் நடு நின்றால் போலே முன்புற்றை ஆழ்வார்கள் பிரசாததத்தாலே கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் – அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் – 1 | திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழு
மருக்கனணிநிறமுங் கண்டேன்* செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்*
என்னாழி வண்ணன்பா லின்று | பதவுரை Show / Hideஇன்று, Indru - எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம்பெற்ற இப்பொது என் ஆழி வண்ணன் பால், En Aazhi Vannan Paal - கடல்வண்ணனான எம்பெருமானிடத்திலே திரு, Thiru - பெரிய பிராட்டியாரை கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன், பொன் மேனி, Pon Meeni - அழகிய திருமேனியையும் கண்டேன், Kandeen - ஸேவிக்கப் பெற்றேன் திகழும், Thigazhum - விளங்குகின்ற அருக்கன், Arukkan - ஸூர்யன்போன்று அணி, Ani - உஜ்வலமான நிறமும், Niramum - ப்ரகாசத்தையும் கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன் செரு, Seru - யுத்த பூமியிலே கிளரும், Kilarum - பராக்ரமங்காட்டுகின்ற பொன் ஆழி, Pon Aazhi - அழகிய திருவாழியையும் கை, Kai - திருக்கையில் கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன் புரி சங்கம், Puri Sangam - வலம்புரிச்சங்கையும் (மற்றொரு திருக்கையிலே) கண்டேன், Kandeen - ஸேவிக்கப்பெற்றேன். |
| 2283 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ———— அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போய்த்து என்கிறார் – கைங்கர்யமே யாத்ரையாம் படி யாயிற்று – அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் – 2 | இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,
பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், – அன்று
திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம். | பதவுரை Show / Hideபொன் தோய், Pon Thoy - பொன்மயமான பூஷணங்கள் சேரப்பெற்றதும் வரை, Varai - மலைபோன்றது மான மார்பில், Marbil - திருமார்பில் (சாத்தப்பட்டிருந்த) பூத்துழாய், Poothuzhai - திருத்துழாயை அன்று, Andru - கடல்கடைந்த வக்காலத்தில் திரு, Thiru - பெரியபிராட்டியார் கண்டு கொண்ட, Kandu Konda - அநுபவிக்கும்படியாக பெற்ற திருமாலை, Thirumalai - லக்ஷமீநாதனே! என் மனம், En Manam - அடியேனுடைய மனமானது உன்னை, Unnai - உன்னிடத்தே மருக்கண்டு கொண்டு, Marukkandu Konda - பொருத்தப்பெற்றதனால் இன்றே, Indre - இன்று கழல், Kazhal - உனது திருவடிகளை கண்டேன், Kandeen - கண்டு அநுபவிக்கப் பெற்றேன், ஏழ்பிறப்பும், Ezhipirappum - ஜந்மப்ரம்பரைகளையெல்லாம் அறுத்தேன், Arutthen - (இனிமேல் தொடராதபடி) ஒழித்திட்டேன் |
| 2284 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழ் இவருடைய மனஸ்ஸூ அங்கே மறுவின படி சொல்லிற்று அவன் இவருடைய மனசை அல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மருவினபடி சொல்லிற்று – அவன் இவருடைய மனசை யல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் – இப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவிக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே அபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் – 3 | மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், – சினத்துச்
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,
வருநரகம் தீர்க்கும் மருந்து. | பதவுரை Show / Hideமாகடல் நீர் உள்ளான், Makadal Neer Ullan - பெரிய திருப்பாற்கடல் நீரிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும் மலராள் தனத்து உள்ளான், Malaral Thanathu Ullan - பிராட்டியின் திருமுலைத்தடத்திலே அடங்கிக் கிடப்பவனும் தண் துழாய் மார்பன், Than Thuzhai Marban - குளிர்ந்த திருத்துழாயைத் திருமார்பிலணிந்தவனும், செருநர், Serunar - சத்துருக்கனானவர்கள் உக, Uga - அழியும்படி சினத்து, Sinatthu - சீற்றத்தினாலே செற்று, Settru - த்வம்ஸம்பண்ணி உகந்த, Ugandha - மகிழ்ந்தவனும் தேங்கு ஓதம் வண்ணம், Thengu Otham Vannam - தேங்கின கடல் போன்ற வடிவையுடையவனும் வரு நாகம் தீர்க்கும் மருந்து, Varu Naagam Theerkum Marundhu - தப்பாமல் நேரக்கூடிய ஸம்ஸாரமாகிற நாகத்தைப் போக்கவல்ல மருந்து போன்றவனுமான ஸர்வேச்வான் மனத்து உள்ளான், Manaththu Ullaan - என்மனத்திலே வந்து சேர்ந்துவிட்டான் |
| 2285 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – சர்வ ரஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகங்கள் என்கிறார் – கீழ் –தமக்குச் செய்த படி சொன்னார் – இதில் பொதுவான ரஷையைச் சொல்லுகிறது –அது ஸ்வஜன ரஷணம் – சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் – 4 | மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே, – பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி. | பதவுரை Show / Hideதிருந்திய, Thirundhiya - இவனே பரமபுருஷனென்று தெளிவாகக் கண்டு கொள்வதற்குக் காரணமான செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருகண்களையுடைய மால், Maal - ஸர்வேச்வரனாயும் ஆங்கே, Aange - உலகத்தைக் காத்தருள்வதாகிய அக்காரியமொன்றிலேயே நின்று பொருந்திய, Ninru Porundhiya - நிலைநின்று பொருந்தினவனாயும் உலகம், Ulagam - உலகங்களை உண்டு, Undu - பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாயும் அன்று, Andru - முன்பொரு காலத்தில் நீர் ஏற்று, Neer Aetru - (மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்று மூ அடியால் உலகம் தாயோன், Moo Adiyaal Ulagam Thaayon - மூவடியாலே உலகங்களை யெல்லாம் தாவியளந்தவனாயுமுள்ள எம்பெருமானுடைய அடி தானே, Adi Thane - திருவடிகளே மருந்தும், Marundhum - மருந்துபோலே ஸம்ஸாரவியாதியைத் தொலைப்பனவாயும் பொருளும், Porulum - பணம்போலே வேண்டியவற்றைப் பெறுவிப்பனவாயும் அமுதமும், Amudhamum - அமிருதம்போலே போக்யமாயுமிருக்கின்றன. |
| 2286 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்துத்தமானவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் – அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே இனி அழகை அனுபவிப்போம் என்கை- அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது –அலமாப்பாலே இறே- அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது பேச ஒண்ணாது – திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆனவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் – 5 | அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், – முடிவண்ணம்
ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே
ஆராழி கொண்டாற் கழகு. | பதவுரை Show / Hideஅன்று உலகம் தாயோன், Andru Ulagam Thaayon - முன்பு உலகங்களைத் தாலியளந்த பெருமானுடைய அடி வண்ணம், Adi Vannam - திருவடிகளின் நிறம் தாமரை, Thamarai - தாமரைப்போலே சிவந்திராநின்றது படி வண்ணம், Padi Vannam - திருமேனியின் நிறம் பார் கடல் நீர் வண்ணம், Paar Kadal Neer Vannam - பூமயைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுதுதுக் குளிர்திராநின்றது. முடி வண்ணம், Mudi Vannam - கிரீடத்தினுடைய நிறம் ஓர் ஆழி வெய்யோன், Oru Aazhi Veyyon - ஒற்றைச்சக்கர முடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது, ஒளியும், Oliyum - (அப்பெருமானுடைய) தேஜஸ்ஸும் அஃது அன்றே, Azhthu Andrae - அந்த ஸூர்யப்ரகாசம் போன்றதே யன்றோ ஆர் ஆழி கொண்டாற்கு அழகு, Aar Aazhi Kondaarku Azhagu - அழகு பொருந்திய திருவாழியைக் கையில் கொண்டுள்ள பெருமானுடைய அழகு இப்படிப்பட்டதாயிராநின்றது. |
| 2287 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் – கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் 6 | அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,
அழகன்றே யண்டம் கடத்தல், – அழகன்றே
அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ,
கங்கைநீர் கான்ற கழல். | பதவுரை Show / Hideஆழியாற்கு, Aazhiyaarku - திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு ஆழி நீர் வண்ணம், Aazhi Neer Vannam - கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது அழகு அன்றே, Azhagu Andrae - மிகவுமழகிய நிறமன்றோ, அண்டம் கடத்தல், Andam Kadaththal - மேலுலகங்களை அளந்து கொண்டது அழகு அன்றே, Azhagu Andrae - அழகன்றோ அங்கை, Angai - உள்ளங்கையிலே நீர் ஏற்றாற்கு, Neer Aetrarku - மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு அலர் மேலான், Alar Melan - பிரமன் கால் கழுவ, Kaal Kazhuva - திருவடிகளை விளக்க, (அப்போது) கங்கை நீர், Gangai Neer - கங்காதீர்த்தத்தை கான்ற, Kaandru - வெளிப்படுத்திய கழல், Kazhal - அத்திருவடி அழகு அன்றே, Azhagu Andrae - அழகன்றோ |
| 2288 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அழகு இப்படி குறைவற்ற பின்பு நாமும் இப்படி அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தை அழைக்கிறார் – இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாளும் படி வாராய் என்கிறார் – 7 | கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை,
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், – எழிலளந்தங்
கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,
நண்ணற் கரியானை நாம். | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenchae - ஓ மனமே! கார் கடல் நீர், Kaar Kadal Neer - கறுத்த கடலின் நீரோட கூடின வேலை, Vela - கரையையுடைத்தான பொழில், Pozhil - பூமியை அளந்த, Alandha - அளந்து கொண்டவனும் புள் ஊர்தி, Pul Oorthi - கருடனை வாஹநமாக வுடையவனும் செல்வன், Selvan - ஐச்வரிய முடையவனும் எழில் அளந்து எண்ணற்கு அரியானை, Ezhil Alandhu Ennaarku Ariyanai - அழகை எல்லைகண்டு நினைப்பதற்கும் முடியாதவனும் எப்பொருட்கும் சேயானை, Epporutkum Seyaanai - எல்லா வஸ்துக்களுக்கும் நெடுந்தூரத்திலிருப்பவனும் நண்ணற்கு அரியானை, Nannarku Ariyaanai - (யார்க்கும் தம் முயற்சியாலே) கிட்ட முடியாதவனாயிருப்பவனுமான எம்பெருமானுடைய கழல், Kazhal - திருவடிகளை நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம், வா, Vaa - நீயும் உடன் படுவாயாக. |
| 2289 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – எல்லா இந்த்ரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் – எல்லா இந்திரியங்களும் அவனை அனுசந்திக்க வேணும் என்கிறார் – எல்லா இந்திரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் – 8 | நாமம் பலசொல்லி நாராய ணாவென்று,
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. – வா,மருவி
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,
கண்ணனையே காண்கநங் கண். | பதவுரை Show / Hideநல் நெஞ்சே, Nal Nenjee - நல்ல மனமே! நாராயணா என்று பல நாமம் சொல்லி, Naarayana Enru Pala Naamam Solli - நாராயணன் முதலாகவுள்ள பல திருநாமங்களைச் சொல்லி அம் கையால், Am Kaiyhaal - அழகியகையினாலே நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் தொழுவோம் மருவி வா, Maruvi Vaa - இதற்கு நீயும் உடன்பட்டுவர மண் உலகம், Man Ulagam - பூமி முதலிய லோகங்களை உண்டு உமிழ்ந்த, Undu Umizhndha - ஒருகால் உள்ளே அடக்கிவைத்துப் பிறகு வெளிப்படுத்தினவனும் வண்டு அளையும் தண் துழாய், Vandu Alaiyum Than Thuzhai - வண்டுகள் படித்து ஒலிசெய்யபெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனுமான கண்ணனையே, Kannaniye - கண்ணபிரானையே நம் கண், Nam Kan - நமது கண்கள் காண்க, Kaanng - கண்டு களித்திடுக |
| 2290 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – காண்க நம் கண் என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார் – காண்க நம் கண் -என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார் 9 | கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,
மண்ணளந்த பாதமும் மற்றவையே,- எண்ணில்
கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,
திருமா மணிவண்ணன் தேசு. | பதவுரை Show / Hideகரு மாமுகில் வண்ணன், Karum Maamugil Vannan - கரிய பெரிய மேகம் போன்ற வடிவையுடையவனும் கார் கடல் நீர் வண்ணன், Kaar Kadal Neer Vannan - கரியகடல் நீரின் நிறம்போன்ற நிறமுடையவனும் திரு மா மணி வண்ணன், Thiru Maa Mani Vannan - அழகிய நீலமணி போன்றவனுமான எம்பெருமானுடைய தேசு, Desu - அழகை எண்ணில், Ennil - ஆராய்ந்து நோக்குமளவில், கண்ணும், Kannum - திருக்கண்ணும் கமலம், Kamalum - தாமரைப்பூப்போன்றவை கைத் தலமும், Kait Thalum - திருக்கைத்தலங்களும் கமலயே, Kamalaye - அத்தாமரைப் பூப்போன்றவையே மண் அளந்த பரதமும், Man Alandha Bharathamum - உலகளந்த திருவடிகளும் அவையே, Avaiye - அத்தாமரைப் பூப்போன்றவையே. |
| 2291 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது –யோக்யராய்ப் பேச வேணுமே – ஆனால் சிறிது நன்மை தேடிக் கொண்டு வந்து புகுர வேண்டாவோ என்ன நீங்கள் மேல் விழுந்து அனுபவிக்க -எல்லா நன்மையையும் தன்னடையே உண்டாம் என்கிறார் அங்குள்ள நன்மையே பேசிப் போம் இத்தனையோ-நமக்கும் சில பேறு உண்டாவோ -என்ன நாம் அவனுடைய திருநாமம் சொல்லி உபக்ரமிக்க எல்லா சம்பத்துக்களும் தங்கள் ஸ்வரூபம் பெருகைக்குத் தாமே வந்தடையும் என்கிறார் – அங்குள்ள அழகைப் பேசிப் போம் அத்தனையோ-நமக்கும் சில பேறுகள் வேண்டாவோ -என்னில் – நாம் அவனுடைய திரு நாமங்களைச் சொல்ல உபக்ரமிக்க -எல்லா சம்பத்துக்களும் தங்களுடைய ஸ்வரூபம் பெறுகைக்காகத் தானே வந்து அடையும் என்கிறது – இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது அதுக்கு ஈடான நன்மைகள் வேண்டாவோ -என்ன மேல் விழுந்து அனுபவிக்கவே எல்லா நன்மைகளும் தன்னடையே உண்டாம் -என்கிறார் – 10 | தேசும் திறலும் திருவும் உருவமும்,
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் – பேசில்
வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,
நலம்புரிந்து சென்றடையும் நன்கு. | பதவுரை Show / Hideவலம் புரிந்த வான் சங்கம் கொண்டான், Valam Purindha Vaan Sangam Kondaaan - வலது பக்கத்தில் சுழித்திருக்கிற சிறந்த சங்கை ஏந்தியுள்ள பெருமானுடைய பேர் ஓத, Per Oodha - திருநாமங்களை அப்யஸிக்க வேணுமென்று பேசில், Pesil - சொன்னமாத்திரத்தில் தேசும், Desum - தேஜஸ்ஸும் திறலும், Thiralum - பராக்ரமமும் திருவும், Thiruvum - செல்வமும் உருவமும், Uruvamum - அழகிய ரூபமும் மாசு இல் குடி பிறப்பும், Maasu Il Kudi Pirappum - குற்றமற்ற நற்குலமும் மற்றவையும், Matravaiyum - மற்றுமுள்ள நன்மைகளும் நலம் புரிந்து நன்குசென்று அடையும், Nalam Purinthu Nankusendru Adayum - தாமே ஆசைப்பட்டு நன்றாக வந்து சேரும். |
| 2292 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கூரிதான அறிவை உடையார்க்கு அல்லது போக்கி அவனை அறிந்ததாய்த்தலைக் கட்ட ஒண்ணாது கிடீர் -என்கிறார் அவன் திருநாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை –அல்லாதார்க்கு துர்ஜ்ஞேயன் –என்கிறார் – அவன் திரு நாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை -அல்லாதார்க்கு துர்ஜ்ஜேயன்-என்கிறது – கூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் – 11 | நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும்
பொங்கோ தருவிப் புனல்வண்ணன், – சங்கோதப்
பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப்பார்
நூற்கடலான் நுண்ணறிவி னான். | பதவுரை Show / Hideநன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான், Nangku Oodhum Naal Vedathu Ullaan - நன்றாக ஓதப்படுகிற நான்கு வேதங்களாலும் பிரதி பாதிக்கப்படுபவனும் நறவு இரியும், Naravu Irikum - தேன் தோற்கும்படியான போக்யதையை யுடையதாய் பொங்கு ஓதம் அருவி புனல், Pongu Oodham Aruvi Punal - கடல் போலவும் அருவிநீர் போலவுமுள்ளதான வண்ணன், Vannaan - திருமேனியை யுடையவனும் சங்கு ஓதம் பால் கடலான், Sangu Oodham Paal Kadalaan - சங்குகளோடே கூடின அலைகளை யுடைத்தான திருப்பாற்கடலில் கண்வளர்த்தருள்பவனும் பாம்பு அணையின் மேலான், Paambu Anaithin Melan - சேஷ சயனத்தின் மேல் துயில்பவனும் பயின்று உரைப்பார் நூல் கடலான், Payinru Uraippaar Nool Kadalaan - ஓதியுணர்த்துகின்ற வைதிகர்களின் கடல்போன்ற சாஸ்த்ரங்களால் பிரதபாதிக்கப்படுபவனுமான எம்பெருமான் நுண் அறிவினான், Nun Arivinaan - (தம் முயற்சியாலே அறிவார்க்கு) அறிய முடியாதவன். |
| 2293 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆகில் இவனை ஒருவராலும் அறிந்து கண்டதாய் விட ஒண்ணாதோ என்னில் நான் சொல்லுகிற வழியாலே காண்பாருக்குக் காணலாம் -என்கிறார் – இப் பாட்டிலும் அறிய வரிது என்னுமத்தை உபபாதிக்கிறார் – ஒருத்தருக்கும் அறியப் போகாதோ என்னில் -இப்படி அறிவிற்கு அறியலாம் என்கிறது – ஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில் நாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் – 12 | அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,
செறிவென்னும் திண்கதவம் செம்மி, – மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் படி. | பதவுரை Show / Hideமறை, Marai - வேதத்தை என்றும், Endrum - இடைவிடாது நன்கு ஓதி, Nangu Othi - நன்றாக அத்யயநம் பண்ணி அறிவு என்னும், Arivu Ennum - ஜ்ஞாநமாகிற தாள் கொளுவி, Thaal Koluvi - தாழ்ப்பாளையிட்டு ஐம்புலனும், Aimpulanum - பஞ்சேந்திரயங்களையும் தம்மில் செறிவு என்னும், Thammil Serivu Ennum - (வெளிச்சொல்லாமல்) உள்ளே அடக்கிவைப்பதாகிற. திண் கதவம் செம்மி, Thin Kathavam Semmi - திடமான கதவையடைத்து நன்கு உணர்வார், Nangu Unarvaar - நன்றாக தியானிக்குமவர்கள் பைங்கோதம் வண்ணன்படி, Paingotham Vannampadi - அழகிய கடலின் நிறம்போன்ற நிறமுடையனான எம்பெருமானது தன்மைகளை நாள்தோறும், Naalthorum - தினந்தோறும் காண்பர், Kaanbar - ஸாக்ஷித்தகரிப்பான் |
| 2294 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழ் இரண்டு பாட்டாலும் அருமை சொல்லிற்று – இதில்-அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை என்கிறார் – அன்றிக்கே இப்படி அரியனாய் இருந்து உள்ளவனுடைய சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் – இப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே கொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்- 13 | படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,
அடிவட்டத் தாலளப்ப நீண்ட – முடிவட்டம்,
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,
மாகாய மாய்நின்ற மாற்கு. | பதவுரை Show / Hideபண்டு, Pandhu - முன்னொரு காலத்தில், உலகம் நீர் ஏற்று, Ulagam Neer Aetru - பூமி தானம் வாங்கிக்கொண்டு தாமரை படிவட்டம், Thamarai Padivattam - தாமரை மலர்ந்தாற் போலே வட்ட வடிவமாயிருக்கிற பூமியை அடி வட்டத்தால் அளப்ப, Adi Vattathaal Alappa - திருவடியினால் அளப்பதற்காக மா காயம் ஆய் நின்றமாற்கு, Maa Kaayam Aay Nindramarku - பெரிய திருமேனியாய் (த்ரிவிக்ரமனாய்) வளர்ந்து நின்ற எம்பெருமானுடைய, நீண்ட முடி வட்டம், Neenda Mudi Vattam - நீண்ட திருவபிஷேகமானது ஆகாயம் ஊடு அறுத்து, Aakaayam Oodu Aruththu - மேலுலகங்களின் வழியாகச் சென்று அண்டம் போய் நீண்டதே, Andam Poi Neendadhe - அண்ட கடாஹத்தளவாக வளர்ந்த்தே! இஃது என்ன ஆச்சரியம்! |
| 2295 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அறிவென்னும் தாள் கொளுவி -என்கிற பாட்டில் படியே இந்த்ரிய ஜெயம் பண்ணுகை அரிதாய் இருந்ததீ- பிரத்யஷத்தால் அல்லது இந்த்ரிய ஜெயம் பண்ண ஒண்ணாது ஆனால்-எங்களுக்கும் இவனைக் கண்டு அனுபவிக்கலாமாவதொரு வழி இல்லையோ என்னில் அசக்தர் ஆனாருக்கும் இழக்க வேண்டாத உபாயம் சொல்லுகிறது – அவ்வருமையால் வரும் குறை தீர ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் அவன் திருவடிகளை யாஸ்ரயித்து எளிதாகக் காணலாம் -என்கிறார் மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19- மெய்ம்மையே காண்கிற்பார் -திருக் குறும் தாண்டகம் -18-என்னக் கடவது இறே ஸ்ரீ எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து விஷயங்களை அகற்றுகைக்கு ஸ்ரீ உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து – அறிவு என்னும் தாள் கொளுவி-என்கிற பாட்டில் சொல்லுகிற படியே இந்திரிய ஜெயம் பண்ணி அறிகை அரிதாய் இருந்ததீ அசக்தர் இழக்கும் அத்தனையோ என்னில் -இழக்க வேண்டாத உபாயம் சொல்கிறது – கீழே ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி -என்று -இந்திரிய ஜெயம் பண்ணுகை -அரிது இந்திரிய ஜெயம் பண்ணினார்க்கு அல்லது அவனைக் காண முடியாது -கண்டால் அல்லது இந்திரியங்களை ஜெயிக்க முடியாது ஆன பின்பு அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸ்ரீ திருமலையிலே வந்து ஸூலபன் ஆனான் -ஆனபின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம் -என்கிறார் – 14 | மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,
நூற்பால் மனம்வைக்க நொய்விதாம்,- நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பணிந்து. | பதவுரை Show / Hideநாற்பால வேதத்தான், Naarpaala Vedaththaan - நான்கு வகைப்பட்ட வேதங்களாலே பிரதி பாதிக்கப்படுபவனும் வேங்கடத் தான், Venkatat Than - திருமலையிலே நிற்கும் ஸௌலப்யமுடையவனும் விண்ணோர் முடி தோயும் பாதத்தான், Vinnor Mudi Thoyum Paadaththaan - நிதயஸூரிகளின் கிரீடம் உறையும் படியான திருவடிகளையுடையவனுமான எம்பெருமானுடைய பாதம், Patham - திருவடிகளை பணிந்து, Panindhu - ஆச்ரயித்து மால் பால், Maal Paal - அந்த ஸர்வேச்வரனிடத்திலே மனம் சுழிப்ப, Manam Suzhippa - நெஞ்சு பொருந்த (அதனாலே) மங்கையர் தோள் கைவிட்டு, Mangaiyar Thol Kaivittu - ஸ்த்ரீகளின் தோளோடே அணையவேணு மென்கிற காமத்தைக் கைவிட்டு நூல் பால், Nool Paal - (வேதம் முதலிய) சாஸ்திரங்களிலே மனம் வைக்க, Manam Vaikka - மனம் செலுத்துவதற்கு நொய்விது ஆம், Noyvidhu Aam - எளிதாகும். |
| 2296 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பெரியனான ஸ்ரீ சர்வேஸ்வரனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளர்ந்து அருளக் கண்டேன் இத்தனை என்கிறார் அவன் தன்னாலே ஸ்வயம் வரிக்கப் பட்ட எனக்கு இத் துக்கம் ஒன்றும் இல்லை இறே என்கிறது – இவருக்கு அவன் தானே யோகாப்யாசம் பண்ணி வந்தபடி- அவனாலே ஸ்வயம் பட்டவனுக்கு துக்கம் ஒன்றும் இல்லை இறே -என்கிறது – இப்படி அரியனானவனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன- நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளரக் கண்டேன் என்கிறார் 15 | பணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத,
பணிந்த பணிமணிக ளாலே – அணிந்து,அங்
கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்
மனந்த னணைக்கிடக்கும் வந்து. | பதவுரை Show / Hideபணிந்து உயர்ந்த, Panindhu Uyarndha - தாழ்ந்தும் எறியும் வீசுகின்றவையான பௌவம் படுதிரைகள், Pauvam Paduthiraigal - கடலிலுண்டான அலைகளானவை மோத, Modha - நாலு பக்கமும் அடிக்க, பணிந்த, Panindha - (அத்திவலைகள் திருமேனியில் படாதபடி குடை பிடித்தாற்போலே) கவிந்திருக்கிற பணம், Panam - படங்களிலுண்டான மணிகளாலே, Manigalale - மாணிக்கங்களினாலே அணிந்த, Anindha - அலங்கரிக்கப்பட்டிருக்கிற அனந்தன், Ananthan - திருவனந்தாழ்வானாகிற அணை, Anai - திருப்பள்ளி மெத்தையிலே கிடக்கும், Kidakkum - திருக்கண் வளர்ந்தருளாகிற அம்மான், Ammaan - ஸர்வேச்வரன் (அந்தப் படுக்கையிற் பொருந்தாதே) அங்கு, Angu - அங்கு நின்றும் அடியோன்தன், Adiyonthan - அடியேனுடைய மனம் அணை, Manam Anai - மனமாகிற படுக்கையில் கிடக்கும், Kidakkum - சயனித்திரா நின்றான் |
| 2297 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் – மனந்தன் அணைக் கிடக்கும் -என்றாரே-இப்படி வந்து கிடைக்கைக்கு அடி ஸ்ரீ பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் – இப்படி வந்து தங்குகைக்கு அடி ஸ்ரீ பிராட்டியோடே இருக்கை என்கிறார் – ஸ்ரீ திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது ஸ்ரீ திருவல்லிக் கேணியிலே வந்து தங்கினான் -என்கிறார் – 16 | வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக் காம், – எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணியான் சென்று. | பதவுரை Show / Hideஒரு அல்லி தாமரையாள், Oru Alli Thamaraiyal - அழகிய இதழ்களையுடைய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பிராட்டி சென்று ஒன்றிய சீர் மார்பன், Senru Onriya Seer Marban - வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும் வந்து உதைத்த வெண்திரைகள் செம் பவளம் வெண் முத்தம், Vandu Uthaitha Venthiraihal Sem Pavalam Ven Muththam - வந்து வீசுகின்ற வெளுத்த அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும் அந்த விளக்கும் அணி விளக்குஆம், Andha Vilakkum Ani Vilakkuam - ஸ்ந்தியாகாலத்தை விளக்குகின்ற மங்களதீபங்களாக ஆகப்பெற்ற திருவல்லிக்கேணியான், Thiruvallikeniyaan - திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான் எந்தை, Endhai - எனக்கு ஸ்வாமி |
| 2298 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் பக்கல் வ்யாமுக்தன் என்று அறிவதொரு நாள் உண்டானால் அதுக்கு முன்பு உள்ள காலத்தோடு மேல் வரக் கடவ காலத்தோடு வாசி அற எல்லாம் ஸ பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் – அவளோடு கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டு இல்லை -இனி என்னுடைய வாக்கானது அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக – இப்படிப்பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனை நம் பக்கல் வியாமுக்தன் என்று அறிவதொரு நாள் யுண்டானால் இதுக்கு முன்பும் பின்பும் உள்ள காலம் எல்லாம் ச பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் – 17 | சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,
என்றநா ளெந்நாளும் நாளாகும், – என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,
மறவாது வாழ்த்துகவென் வாய். | பதவுரை Show / Hideஎன்றும் இறவாத எந்தை, Endrum Iravadha Endhai - ஒருநாளுமழவில்லாதவனான எம்பெருமானுடைய இணை அடிக்கே, Inai Adikke - உபயபாதங்களுக்கே ஆள் அய், Aal Ayi - ஆட்பட்டு மறவாது, Maravaadhu - மறவாமல் என்வாய் வாழ்த்துக, Envaai Vazhththuga - என்வாய் வாழ்த்த வேணும், (இங்ஙனேயாகில்) சென்ற நாள், Senru Naal - கீழ்க்கழிந்த காலங்களும் செல்லாத, Selladha - இனிமேல் வரப்போகிற நாள்களும் செங்கண் மால், எங்கள் மால் என்ற நாள், Sengkan Maal Engal Maal Endra Naal - ‘புண்டரீகாக்ஷன் நம்மிடத்து வியாமோஹ முடையனாயிருக்கிறான்‘ என்று சொல்லப்பெற்ற நிகழ்காலமுமாகிய எந்நாளும், Ennaalum - எல்லாக்காலங்களும் நாள் ஆகும், Naal Aakum - நல்லகாலமேயாகும். |
| 2299 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு உன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே யாத்ரையாய் இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி பண்ணி யருள வேணும் -என்கிறார் – உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –என்கிறார் – மறவாது என்றும் நான் நினைத்தால் லாபம் உண்டோ –நீ அஞ்சாது இருக்க அருள் என்கிறார் – உன்னுடைமையை ஒன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் – கால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து தத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் – 18 | வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே, – தாவியநின் எஞ்சா
இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள். | பதவுரை Show / Hideவாமனன் ஆய், Vaamanan Aayi - வாமநரூபியாகி மாவலி பால், Mavali Paal - மஹாபலியினிடத்தில் (சென்று) வா மொழிந்து, Vaa Mozhinthu - (மதுரமான சில) வாய்மொழிகளைச் சொல்லி மூ அடி மண், Moo Adi Mann - மூவடிநிலத்தை (இரந்து பெற்று) அளந்து கொண்ட, Alanthu Konda - அதை அளந்து கொண்ட நெடு மாலே, Nedu Maale - ஸர்வேச்வரனே! எஞசா, Enjasa - கருங்குதலின்றி தாலிய, Thaliya - ஸர்வவ்யாபியான நின் இணை அடிக்கே, Nin Inai Adikke - உனது உபய பாதங்களுக்கே ஏழ் பிறப்பும், Ezha Pirappum - எல்லா பிறவிகளிலும் ஆள் ஆகி, Aal Aagi - நான் ஆட்பட்டவனாகி அஞ்சாது இருக்க, Anjaadhu Irukka - பயங்கெட்டிருக்கும் படி நீ அருள், Nee Arul - நீ கிருபைபண்ணவேணும். |
| 2300 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அஞ்சாது இருக்க அருள் என்றார் அநந்தரம்-திரு உள்ளமானது நாம் அவனை இப்படி அருள் என்று நிர்பந்தித்தால் அவன் முன் நின்று அருளுகைக்கு வேண்டும் யோக்யதை நம் பக்கலிலே உண்டாயோ – அன்றிக்கே – அவன் தான் செய்ய வல்லானோ -என்று நெஞ்சு பிற்காலிக்க-அவை ஒன்றும் இல்லை காண்- யோக்யராய் இருப்பாருக்கு முன்னே அயோக்யரான நமக்குத் தன் அகடிதகட நா சாமர்த்யத்தாலே அருளும் நீ பயப்பட வேண்டா என்கிறார் – அருள் என்னும் காட்டில் அருளுமோ என்று திரு உள்ளம் விசாரிக்க -நமக்கு அருளாது ஒழியுமோ -என்கிறார் – அஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷித்தல் அன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க அவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே -நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் – 19 | அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,
முந்தையராய் நிற்பார்க்கு முன். | பதவுரை Show / Hideஇருளாத சிந்தையர் ஆய், Irulaadha Sindhaiyar Aayi - அஜ்ஞானவிருள் சேராத நெஞ்சையுடையாய்க் கொண்டு சே அடிக்கே, Sae Adikke - திருவடிகளுக்கு செம் மலர் தூய், Sem Malar Thoo - நல்ல புஷ்பங்களை ஸமர்ப்பித்து கை தொழுது, Kai Thozhudhu - அஞ்ஜலிபண்ணி முந்தையர் ஆய் நிற்பார்க்கு, Mundhaiyar Aayi Nirpaarkku - ‘நான் முன்னே நான் முன்னே‘ என்று நிற்கும் பக்தர்களுக்கு, முன் அன்று, Mun Andru - முன்பொருகாலத்தில் தெருளாத பிள்ளை ஆய், Therulaadha Pillai Aayi - அறியாத சிறு குழந்தையாய் ஆல் இலைமேல் சேர்ந்தான், Aal Ilaimeel Serndhaan - ஆலந்தளிரில் சயனித்த பெருமான் அருளாது ஒழியுமே, Arulaadhu Ozhiyume - கிருபைபண்ணாமற்போவனோ? |
| 2301 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் தன்னை அபேஷித்தார்க்குத் தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது என்கிறார் – சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே – உன் படியை நீயே சொல்ல வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானைக் கேட்கிறார் – அவன் தன்னை அபேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் என்கிறார் – 20 | முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக
மீரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே? – என்னே
திருமாலே செங்க ணெடியானே, எங்கள்
பெருமானே நீயிதனைப் பேசு. | பதவுரை Show / Hideமுன், Mun - முன்பொரு காலத்தில் உலகம், Ulagam - உலகங்களை யெல்லாம் உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்திருந்து உமிழ்ந்தாய்க்கு, Umizhndhaaykku - பிறகு வெளிப்படுத்தின உனக்கு அவ்வுலகம், Avvulagam - அந்த வுலகங்களை பின், Pin - பின்பொருகாலத்தில் ஈர் அடியால், Eer Adiyaal - இரண்டு திருவடிகளாலே அளந்து கோடல், Alandhu Koadal - அளந்து கொள்வதானது பெரிது ஒன்றே, Peridhu Ondre - பெரியவொரு காரியமாகுமோ? திருமாலே, Thirumaale - திருமகள்நாதனே! செம் கண் நெடியானே, Sem Kan Nediyanae - சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வாதிகளே! எங்கள் பெருமானே, Engal Perumane - எமக்கு ஸ்வாமியானவனே! நீ இதனை பேசு, Nee Idhanai Pesu - நீ இதை (எனக்குத் தெரிய)ச் சொல்லவேணும், என்னே, Ennae - இஃது என்னோ? |
| 2302 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவனை ஒருவரால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் – கீழ்த் திரு வுலகு அளந்த அருளின இடம் ப்ரஸ்திதமான வாறே அப்படி வரையாதே பரிமாறும் ஸ்ரீ கிருஷ்ணாவ தாரத்தைச் சொல்லுகிறார் – கீழ் திரு உலகு அளந்து அருளின இடம் ப்ரஸ்த்துதம் ஆகையால் அப்படி வரையாதே பரிமாறும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிறார் – அவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் – 21 | பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே
வாச மலர்த்துழாய் மாலையான், – தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு. | பதவுரை Show / Hideவாசம் மலர் துழாய் மாலையான், Vaasam Malar Thuzhai Maalaiyaan - மணம்மிக்க புஷ்பங்களோடு கூடின திருத்துழாய் மாலையை அணிந்தவனும் தேச உடைய சக்கரத்தான், Desa Udaiya Chakkaraththaan - தேஜ்ஸ்ஸையுடைய திருவாழியை ஏந்தினவனும் சங்கினான், Sanginaan - ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும் சார்ங்கத்தான், Saarngakthaan - சார்ங்கவில்லையுடையவனும் பொங்கு அரவம் வக்கரனை கொன்றான், Pongu Aravam Vakkaranai Konraan - மிக்க ஆரவாரமுடையனாய் வந்த தந்தவக்த்ரனைக் கொண்றொழித்தவனுமான எம்பெருமாளுடைய வடிவு, Vadivu - ஸ்வரூப ஸ்வபாவங்கள் (எப்படிப்பட்டவை யென்னில்) பேசுவர், Pesuvar - பேசுகின்றார்களோ அவ்வளவே, Avvalave - அவ்வளவேயாம். |
| 2303 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றாரே – அநந்தரம் திரு வுள்ளத்தைக் குறித்து நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் என்கிறார் – அவன் படி பரிச்சேதிக்கப் போகாத பின்பு அவன் தானே காட்டக் காண் என்கிறார் – ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் – 22 | வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்
கடியார் மலர்தூவிக் காணும் – படியானை,
செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,
மெய்ம்மையே காண விரும்பு. | பதவுரை Show / Hideநெஞ்சமே, Nenjamai - ஓ மனமே! வானவர்கள், Vaanavargal - நித்யஸூரிகள் வடிவு ஆர், Vadivu Aar - அழகு பொருந்திய முடி, Mudi - கிரீடங்களை கோட்டி, Kotti - தாழ்த்தி கடி ஆர் மலர், Kadi Aar Malar - மணம் பொருந்திய புஷ்பங்களை நாளும், Naalum - நாள்தோறும் காணும் படியானை, Kaanum Padiyanaai - ஸேவிக்கப்பெற்ற திருமேனியையுடையனான எம்பெருமானை செம்மையால், Semmaiyaal - முறைப்படியே உள் உருகி, Ul Urugi - உருக்கங்கொண்டு செவ்வனே, Sevvane - ருஜுவான வழியாலே மெய்ம்மெயே, Meimmaiye - உள்ளபடியே காண, Kaana - ஸேவிப்பதற்கு விரும்பு, Virumbu - ஆசைப்படு |
| 2304 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – மெய்ம்மையைக் காண விரும்பு -என்றாரே –அந்த உபதேசம் கடுகப் பலித்துக் கொடு நின்றதாய் இருந்தது – தான் சொன்னபடியே திருவுள்ளம் விரும்புகிற படி – இவருடைய நெஞ்சாகில் இங்கனே இருக்க வேண்டாவோ உபதேசம் பலித்த படி சொல்கிறது – காண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன் திருவடிகளிலே பிச்சேறி விழுகிற படி யைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார் – 23 | விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,
மனம்துழாய் மாலாய் வரும். | பதவுரை Show / Hideவண்தார், Vanthaar - அழகிய மாலையிலே அம் சிறைய சுரும்பு, Am Siraiya Surumbu - அழகிய சிறகுகளையுடைய வண்டுகள் துளையில் சென்று ஊத, Thulaiyil Senru Oodha - ரஸநாடியிலே படிந்துஊத (அதனால்) அரும்பும், Arumbum - அரும்புகள் உண்டாகப்பெற்ற புனம் துழாய் மாலையான், Punam Thuzhaai Maalaiyaan - நல்ல திருத்துழாய் மாலையை அணிந்தவனான எம்பெருமானுடைய விரும்பி விண்மண் அளந்த பொன் அம்கழற்கே, Virumbi Vinman Alandha Pon Amkazharkke - ஆசைப்பட்டு விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையுமளந்த மிகவழகிய திருவடிகள் விஷயத்திலேயே மனம், Manam - எனது மனமானது துழாய், Thuzhaai - அவகாஹித்து மால் ஆய் வரும், Maal Aay Varum - மயங்கிக் கிடக்கின்றது. |
| 2305 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அபி நிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று ஏறி மறிந்து இராதே -நெஞ்சே அவனை மேலே விழுந்து ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் – ஆசை பிறந்த பின்பு இனி விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார் என்கிறார் – ஆசை பிறந்த பின்பு விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார்- அபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே- நெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் – 24 | வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,
நெருங்குதீ நீருருவு மானான், – பொருந்தும் சுடராழி
யொன்றுடையான் சூழ்கழலே, நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது. | பதவுரை Show / Hideஆழி நெஞ்சே, Aazhi Nenjae - கம்பீரமான மனமே! இரு நிலனும், Iru Nilanum - விசாலமான பூமியும் மால் விசும்பும், Maal Visumbum - அளவிறந்த ஆகாசமும் காற்றும், Kaatrum - வாயுவும் நெருங்கு தீ, Nerungu Thee - செறிந்த தேஜஸ்ஸும் நீர் உருவும் ஆனான், Niir Uruvum Aanan - ஜலதத்துவமும் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் அந்தர்யாமியானவனும் பொருந்தும் சுடர் ஆழி ஒன்று உடையான், Porundum Sudar Aazhi Ondru Udaiyaan - பொருந்திய ஒரு சுடர்ச்சக்கரத்தை யுடையவனுமான எம்பெருமானுடைய சூழ் கழலே, Soozh Kazhale - அடியாரை அகப்படுத்திக்கொள்ளுகிற திருவடிகளையே வருங்கால் நாளும், Varungaal Naalum - மேலுள்ள காலமெல்லாம் தொழுது, Thozhudhu - வணங்கி தொடர், Thodar - (அவனையே) பின்பற்றியிரு. |
| 2306 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் திரு உள்ளமானது திமிர்த்துத் தன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து இருந்தாப் போலே இருந்தது – அத்தைப் பார்த்து நீ இங்கே கிட்டி ஆஸ்ரயித்தால் உனக்கு வருவதொரு குறை இல்லை காண் என்கிறார் – நான் சொல்லுகிறது தப்புண்டோ என்கிறார் – அவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து அவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் – 25 | தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,
முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, – விழுதுண்ட
வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து. | பதவுரை Show / Hideதூ நீர் உலகம், Thoo Neer Ulagam - நிர்மலமான நீரையுடைய கடலோடு கூடின உலகங்களை முழுது, Muzhuthu - முழுவதும் உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்தவனாயும் மொய் குழலாள் ஆய்ச்சி, Moyi Kuzhalal Aaychchi - அழகிய கூந்தலையுடையளான யசோதையினுடைய விழுது, Vizhudhu - வெண்ணெயை உண்ட வாயானை, Unda Vaayaanai - அமுதுசெய்த வாயையுடையவனாயும் மால் விடை ஏழ் செற்றானை, Maal Vidai Ezh Setraanai - கொழுத்த ரிஷபங்களேழையும் முடித்தவனாயும் வானவர்க்கும் சேயானை, Vaanavarkkum Seyaanai - பிரமன் முதலிய தேவர்களுக்கும் எட்டாதவனாயுமுள்ள எம்பெருமானே நெஞ்சே, Nenchae - நெஞ்சமே! சிறந்து, Siranthu - சிறப்புற தொழுதால், Thozhudhaal - வணங்கினால் பழுது உண்டே, Pazhudhu Undae - குற்ற மேதேனுமுண்டோ? |
| 2307 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிக் கிட்டி ஆஸ்ரயிக்கத் தம் திரு உள்ளத்தை அவன் உகந்து அருளின நிலங்களில் காட்டில் விரும்பின படியை அருளிச் செய்கிறார் – ஸ்ரீ கோயில்களில் இருக்கிறது இசைந்தார் நெஞ்சிலே புகவிறே – அங்கன் இன்றிக்கே யசோதை பிராட்டி வெண்ணெயை விழுங்கும் காட்டில் நாம் பெற்றது ஏன் என்னில் ஸ்ரீ உகந்து அருளின தேசங்களிலே நமக்காக வந்து ஸூலபனானான் என்கிறார் -என்னவுமாம் தொழுதால் பழுதுண்டே என்றாரே இவர் இப்படிச் சொல்ல அவன் பேசாது இரானே – இப்படி கிட்டி ஆஸ்ரயித்த தம் திரு உள்ளத்தை உகந்து அருளின நிலங்களில் காட்டிலும் அவன் விரும்பின படியை யருளிச் செய்கிறார் – 26 | சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், – உறைந்ததுவும்,
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,
தாம்கடவார் தண்டுழா யார். | பதவுரை Show / Hideதண் துழாயார் தாம், Than Thuzhaayaar Thaam - குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமான் கடவார், Kadavaar - ஒருநாளும் விட்டு நீங்காதவனாய்க்கொண்டு உறைந்ததுவும், Uraindhathuvum - நித்யவாஸம் பண்ணுமிடங்கள் (எவையென்றால்) சிறந்த என் சிந்தையும், Sirantha En Sindhaiyum - சிறந்ததான என்னுடைய நெஞ்சமும் செம் கண் அரவும், Sem Kan Aravum - சிவந்த கண்களையுடைய திருவனந்தாழ்வானும் நிறைந்த சீர், Niraindha Seer - நிறைந்த செல்வத்தையுடைய நீள், Neel - பெரிய கச்சியுள்ளும், Kachiyullum - கச்சித்திருப்பதியும் வேங்கடமும், Vengadhamum - திருமலையும் வெஃகாவும், Veghavum - திருவெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே, Velukkai Paadiyume - திருவேளுக்கைத் திருப்பதியுமாம். |
| 2308 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் ஆரானும் ஒருவர் பாபபலம் புஜித்தார் உண்டு என்று இதுக்கு முன்பு எங்கேனும் கேட்டு அறிவதுண்டோ என்கிறது – ஒருவன் பாபபலம் புஜிய நின்று உள்ளவனை கெடுவாய் நீ ஒரு காலும் பகவத் சமாஸ்ரயணம் பண்ணிற்று இல்லையோ –என்பார் உண்டு இத்தனை இறே – கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ க்லேச நாசன -ஸ்ரீ விஷ்ணு தர்மம் கெடுவாய் நீ நல்ல வழி போய்த்திலை யாகாதே -உன்னை நீ கெடுத்துக் கொள்வதே – மித்ரா மௌபிகம் கர்த்தும் ராம ஸ்த்தானம் பரீப்சதா வதம் ச அநிச்சதா கோரம் த்வயா சௌ புருஷர்ஷப -சுந்தர -21-19- என்னக் கடவது இறே அனர்த்தத்தை வேண்டுவத்தைப் பண்ணிப் பரிகாரத்தில் இழிந்திலை யாகாதே – அவன் படி இதுவான பின்பு -அவனை ஆஸ்ரயித்தும் தங்கள் பண்ணின பாபத்தின் பலம் புஜிப்பார் யுண்டோ என்கிறார் – இப்படிப்பட்ட அவனை ஆஸ்ரயித்தவர்களில் யாரேனும் ஒருத்தர் -தங்கள் பண்ணின பாப பலம் புஜித்தார்களாகக் கேட்டு அறிவது யுண்டோ -என்கிறார் – 27 | ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,
காரே மலிந்த கருங் கடலை,- நேரே
கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து. | பதவுரை Show / Hideகார் மலிந்த கரு கடலே, Kaar Malintha Karu Kadaley - மேகங்கள் நிறைந்த பெரிய கடலை நேரே கடைந்தானை, Nere Kadaindhaanai - தானே முன்னின்று கடைந்தவனும் நாரணனை, Naaranai - ஸகல ஜகத்காரண பூதனும் நீரு அணை மேல் பள்ளி அடைந்தானை, Neeru Anai Mel Palli Adaindhaanai - திருப்பாற்கடலில் (ஆதிசேஷனாகிற) சயனத்தின்மேல் பள்ளிக்கொண்டிருப்பவனுமான எம்பெருமானை நாளும் அடைந்து, Naalum Adaindhu - நாடோறும் பணிந்து (இருக்குமவர்கள்) துயர் உழந்தார், Thuyar Uzhandhaar - துக்கங்களுக்கு மூலமான பாபங்களைப் பண்ணினவர்களாயிருந்தாலும் துன்பு உற்றார் ஆர், Thunbu Utraar Aar - துக்கங்களை அநுபவித்தவர்கள் யார்? (ஒருவருமில்லை) (அப்படிப்பட்டவர்கள்) ஆண்டையார், Aandaiyaar - எங்கிருக்கிறார்கள்? (எங்குமில்லை) |
| 2309 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு புஜிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் – கீழ்-ஸ்ரீ வேங்கடமும் ஸ்ரீ வெக்காவும் ஸ்ரீ வேளுக்கைப் பாடியும் -என்ற பிரசங்கத்தாலே ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் – இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் – 28 | அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று
மிடைந்தது பாரத வெம்போர், – உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்
பேய்ச்சிபா லுண்ட பிரான். | பதவுரை Show / Hideவான் எயிறு, Vaan Eiyiru - வான்போன்ற பற்களையுடையளான பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய பால், Paal - முலைப்பாலை உண்ட, Unda - உண்டு அவளை முடித்தவனான பிரான், Piraan - ஸ்வாமியானவன் அடைந்தது, Adaindhathu - பள்ளிக்கொண்டது அரவு அணை மேல், Aravu Anai Mel - சேஷசயனத்தின் மேலாம் அன்று, Andru - முன்னொரு காலத்தில் ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக மிடைந்தது, Midaindhathu - நெருங்க நடத்தினது வெம் பாரதம் போர், Vem Bharatham Por - கடுமையான பாரதயுத்தமாம், உடைந்ததுவும், Udaindhathuvum - அஞ்சி நின்றதும் ஆய்ச்சிபால், Aaychipaal - இடைச்சியான யசோதைப் பிராட்டியினிடத்துண்டான மத்துக்கே, Maththukke - மத்துக்காகவாம், அம்மனே, Ammane - அந்தோ! |
| 2310 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ யசோதைப் பிராட்டி ப்ரஸ்துதை யானவாறே அவளுடைய ச்நேஹத்தையும் குணங்களையும் சொல்லி அவளும் ஒருத்தியே -என்று கொண்டாடுகிறார் – கீழே உடைத்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கு-என்றாரே அச்சத்துக்கு இவன் பால் ஒப்பு இல்லாதாப் போலே ஸ்நேஹத்துக்கும் ஸ்ரீ யசோதைப் பிராட்டிக்கு ஒப்பில்லை – என்கிறது – கீழே-மிடைந்தது பாரத வெம்போர் -என்று ஆஸ்ரிதர்க்காக அவன் தன்னை அழிய மாறின படியைச் சொன்னாரே இதில் அவனுக்காக இவள் தன்னை அழிய மாறின படி சொல்லுகிறது – அச்சம் கெடுகை ஸ்த்ரீத்வம் அழிய மாறுகை–ஸ்த்ரீத்வ பிரயுக்தம் இறே அச்சம் – அச்சத்துக்கு இவனுக்கு ஒப்பு இல்லாதாப் போலே ஸ்நேஹத்துக்கு ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு ஒப்பு இல்லை -என்கிறார் – ப்ரஸ்துதையான ஸ்ரீ யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் – 29 | பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த
இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,
தெருளா மொழியானைச் சேர்ந்து. | பதவுரை Show / Hideபேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய பால், Paal - முலைப்பாலை உண்ட, Unda - அமுதுசெய்த பெருமானை, Perumaanai - ஸ்வாமியானவனும் வாய்ந்த இருள் ஆர் திருமேனி, Vaindha Irul Aar Thirumeni - அமைந்த இருள்போன்ற திருமேனியை யுடையவனும் இனம் பவளம் செம்வாய், Inam Pavalam Semvaai - அழகிய பழம் போற்சிவந்த அதரத்தை யுடையவனும் தெருளா மொழியானை, Therula Mozhiyanaai - உருத்தெரியாத மழைலைச் சொற்களைச் சொல்லும் சிறு குழந்தையுமான கண்ணபிரானை சேர்ந்து, Serndhu - கிட்டி ஆய்ச்சி, Aaychi - யசோதையானவன் பேர்ந்து எடுத்து, Perndhu Eduthu - வாரியெடுத்தணைத்து கொண்டு அஞ்சாதே, Anjaadhe - சிறிதும் பயப்படாமல் முலை கொடுத்தான், Mulai Koduththaan - தன் முலையை உண்ணக் கொடுத்தான். |
| 2311 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் சந்நிஹிதன் ஆகையாலே அவள் ஸ்நேஹித்தாள் – இப்போது நமக்கு அவன் சந்நிஹிதன் அன்றே என்னில் அவன் சந்நிஹிதனான இடங்களைச் சொல்லுகிறார் – ஒரு கால விசேஷத்திலே ஒருத்திக்கு எளியனான இந்நிலை எல்லார்க்கும் உண்டாம்படி ஸ்ரீ கோயில்கள் எங்கும் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் – அவன் சந்நிஹிதன் ஆகையால் ஸ்நேஹித்தாள்-இப்போது நமக்கு சந்நிஹிதன் அன்றே என்னில் அவன் சந்நிஹிதனான இடங்கள் சொல்லுகிறார் – அன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி ஸ்ரீ கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் – 30 | சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, – வாய்ந்த
மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,
இறைபாடி யாய இவை. | பதவுரை Show / Hideகடல், Kadal - திருப்பாற் கடலென்ன குடந்தை, Kudandhai - திருக்குடந்தை யென்ன வேங்கடம், Vengadam - திருமலையென்ன நேர்ந்த என் சிந்தை, Nerndha En Sindhai - நேர்பட்ட எனது ஹ்ருதயமென்ன நிறை விசும்பும், Nirai Visumbum - பரம்பின பரமபதமென்ன வாய்ந்த மறை, Vaindha Marai - அமைந்த வேதமென்ன பாடகம், Paadagam - திருப்பாடகமென்ன அனந்தன், Ananthan - ஆதிசேஸனென்ன ஆய இவை, Aaya Ivai - ஆசிய இவையெல்லாம் வண் துழாய் கண்ணி, Van Thuzhai Kanni - அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள திருமால் சேர்ந்த, Thirumaal Serndha - எம்பெருமான் நித்யவாஸம் பண்ணப்பெற்ற இறபாடி, Irabaadi - ராஜதானிகளாம். |
| 2312 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவ்வோ இடங்களிலே நிற்கிறவன் தான் ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணுமவனுமாய் ஸூசீலனுமாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் கீழ்ச் சொன்ன ஸ்ரீ திருப்பதிகள் நெஞ்சை அனுவர்த்திக்கிற படி – இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும் புறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார் 31 | இவையவன் கோயில் இரணியன தாகம்,
அவைசெய் தரியுருவ மானான், – செவிதெரியா
நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்
பாகத்தான் பாற்கடலு ளான். | பதவுரை Show / Hideஇரணியனது, Iraniyanadhu - ஹிரண்யாஸுரனுடைய ஆகம், Aagam - மார்பை அவைசெய்து, Avaiseithu - இருபிஸவாக்க அரி உருவம் ஆனான், Ari Uruvam Aanaan - நரசிங்கமாகத் தோன்றினவனும் செவி தெரியா நாகத்தான், Sevi Theriyah Naagaththaan - கண்ணையே செவியாகவுடையனாகையாலே தனிப்பட செவி தெரியாமலிருக்கிற ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனும் நால் வேதத்து உள்ளான், Naal Vedaththul Laan - நான்கு வேதங்களுக்கும் பொருளாயிருப்பனும் நறவு என்றான் பாகத்தான், Naravu Endraan Paagaththaan - தேன்போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனான ருத்ரனைத் திருமேனியின் ஒரு பாகத்திலே உடையவனும் பாற்கடலுளான், Paar Kadalulaan - திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனுமான அவன், Avan - அப்பெருமானுடைய கோயில் இவை, Koil Ivai - கோயில் கீழ்ப்பாட்டில் சொன்ன திருப்பதிகளாம். |
| 2313 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி சீலவானான இவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –என்கிறார் – இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார் 32 | பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,
நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல், – பாற்பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,
குருந்தொசித்த கோபா லகன். | பதவுரை Show / Hideகுருந்து, Kurundhu - குருந்த மாத்தை ஒசித்த, Osiththa - முறித்தொழித்த கோபாலகன், Kopalagan - கண்ணபிரான் பால் கடலும், Paal Kadalum - திருப்பாற் கடலையும் பாம்பும், Paambum - திருவனந்தாழ்வானையும் பனி விசும்பும், Pani Visumbum - (ஸம்ஸாராதாபங்கள் தட்டாமல்) குளிர்ந்திருக்கிற பரமபதத்தையும் நூல் கடலும், Nool Kadalum - கடல்போன்ற சாஸ்த்ரங்களையும் துண் நூல தாமரை மேல்பால்பட்டிருந்தார் மனமும், Thun Nool Thaamarai Melpaalpatthirundhaar Manamum - ஸூக்ஷமமான சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்பட்ட ஹ்ருதய கமலத்திலே கரணங்களெல்லாம் ஊன்றியிருக்கும்படி யோகத்தில் நிலைநின்ற யோகிகளினுடைய நெஞ்சையும் இடம் ஆக கொண்டான், Idam Aaga Kondonaan - வாஸஸ்தானமாகக் கொண்டிருக்கிறான். |
| 2314 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி இருக்கிறவன் அபேஷித்தார் அபேஷித்தது எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் – இவனுடைய உடைமை எல்லாம் பரார்த்தம் என்கிறது – இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் – 33 | பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்
மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, – மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்
அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று. | பதவுரை Show / Hideமேல் ஒரு நாள், Mel Oru Naal - முன்னொரு காலத்தில் பாலகன் ஆய், Palagan Aay - சிறு குழந்தை வடிவமுடையனாகி ஆல் இலை மேல், Aal Ilai Mel - ஆலந்தளிரிலே உலகு எல்லாம், Ulaku Ellam - உலகங்களையெல்லா பைய, Paiya - மெல்ல மெய்ம்மெயே, Meimmaiye - உண்மையாகவே உண்டவனே, Undavaney - அமுதுசெய்து கிடந்தவனே! மாலவனே, Malavaney - ஸர்வாதிகளே! நீ, Nee - இப்படிப்பட்ட நீ, அன்று, Andru - அன்றொருநாள் மந்தரத்தால், Mandharaththal - மந்தரமலையைக்கொண்டு மா நீர கடல் கடைந்து, Maa Neera Kadal Kadaindhu - மிக்க நீரையுடைய கடலைக் கடைந்து வான் அமுதம், Vaan Amudham - திவ்யமான அமிருதத்தை அந்தரத்தார்க்கு, Andharaththarkku - தேவர்களுக்கு ஈந்தாய், Eendhai - அளித்தாய். |
| 2315 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ காஞ்சி புரத்திலே பல ஸ்ரீ திருப்பதிகளிலே-நிற்பது-இருப்பது-கிடப்பதான இவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்து இதுக்கடி பண்டு திரு உலகு அளந்து அருளின ஸ்ரமத்தாலே வந்தது ஓன்று அன்றோ என்று கொண்டு அஞ்சுகிறார் – அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் – அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் -என்று தம்முடைய நெஞ்சைக் குறித்துச் சொல்கிறார் – ஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு திரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் – 34 | அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், – அன்று
கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண். | பதவுரை Show / Hideநெஞ்சமே, Nenjamai - மனமே! அன்று, Andru - முன்பொரு காலத்தில் நின்று, Ninru - நின்றுகொண்டே இவ்வுலகம், Ivvalugam - இவ்வுலகங்களையெல்லாம் அளந்த, Alandha - அளந்ததனாலுண்டான அசவே கொல், Asave Kol - சிரமத்தினாலேயோ வேளுங்கை, Velaungai - திருவேளுக்கையிலே இருந்து, Irundhu - வீற்றிருந்து நீள் நகர் வாய், Neel Nagar Vaai - (திருவெஃகா வென்கிற) சிறந்த திருப்பதியில் அன்று, Andru - ஒரு காலத்தில் கிடந்தானை கேடு இல் சீரானை, Kedu Il Seeranaai - ஒரு காலு மழிவில்லாத திருக்குணங்களையுடையவனும் முன், Mun - முன்னொருகால் கம்ஸனை கடந்தானை, Kadandhaanai - கொண்டுறொழித்தவனுமான பெருமானை காண், Kaan - ஸேவி |
| 2316 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நெஞ்சமே காண் என்று உபதேசித்தாரே கீழே –அதடியாக மற்றைக் கரணங்கள்-இவர் தம்மை ப்ரேரிக்கத் தொடங்கிற்றன- மனஸ் சஹ காரத்தோடேயாய் இருக்கும் இறே -அல்லாத இந்த்ரியங்களுக்கும் அனுபவம் – இந்த்ரியங்கள் தான் முற்பட்டு இவர் மூட்டும் அளவாய்த்து – நெஞ்சமே காண் என்று உபதேசித்தார் கீழ் -இந்திரியங்கள் தாம் முற்பட்டு இவரை மூட்டுமளவாயிற்று -என்கிறது – நெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள் தாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் – 35 | காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு
பூண்டார் அகலத்தான் பொன்மேனி, – பாண்கண்
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்
கழல்பாடி யாம்தொழுதும் கை. | பதவுரை Show / Hideகண்கள், Kankal - என்னுடைய கண்களானவை கதிர் இலகு, Kathir Ilaku - ஒளிவிளங்கா நின்றுள்ள பூண், Poon - திவாபணங்களையும் தார், Thaar - மாலையையும் அகலத்தான், Akalaththaan - திருமார்விலே உடையனான எம்பெருமானுடைய பொன்மேணி, Ponmeeni - அழகிய திருமேனியை காண் காண் என விரும்பும், Kaan Kaan En Virumbum - காணவேணுங் காணவேணுமென்று ஆசைப்படாநின்றன. வண்டு, Vandu - வண்டுகளானவை பாடி, Paadi - இசைப்பாடிக்கொண்டு அறையும், Araiym - ஒலிசெய்யப்பெற்ற தொங்கலான், Thongalaan - மாலையை யுடையனான அப்பெருமானுடைய தொழில், Thozhil - சேஷ்டிதங்களை பாண் கண் பாடி, Paan Kan Paadi - ராகத்திலே அமைத்துப்பாடி யாம், Yaam - நாம் கை, Kai - கைகளினாலே செம் பொன் கழல் தொழுதும், Sem Pon Kazhal Thozhudum - சிவந்த பொன்போல் சிறந்த (அவனுடைய) திருவடிகளை வணங்குவோம் |
| 2317 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – யாம் தொழுதும் என்றாரே –மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் – யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் – 36 | கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,
வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய
படைபரவ பாழி பனி நீ ருலகம்,
அடியளந்த மாயன் அவற்கு. | பதவுரை Show / Hideபனி நீர் உலகம், Pani Neer Ulagam - குளிர்ந்த நீரையுடைய கடல்சூழ்ந்த உலகங்களை அடி, Adi - தனது திருவடியினாலே அளந்த, Alandha - அளந்துகொண்ட மாயர் அவர்க்கு, Maayar Avarkku - ஆச்சரியச் செய்கையை யுடையரான அப்பெருமாளுக்கு கனல் ஆழி, Kanal Aazhi - திக்ஷ்ணமான சக்கரமும் கார் கடல் வாய் வெண் சங்கம், Kaar Kadal Vaai Ven Sangam - கருங்கடலில் தோன்றின வெளுத்த சங்கும் வெண்ண, Venn - வெவ்விதான கதை, Kathai - கதையும் சார்ங்கம், Saarnggam - சார்ங்கமும் வெம் சுடர்வாள், Vem Sudarvaal - வெவ்விய சுடரையுடைய நந்தகவாளும் ஆகிய செய்ய படை, Seyya Padai - அழகிய இவ்வாயுதங்கள் கைய, Kaiya - திருக்கையிலுள்ள, பரவை, Paravai - கடலானது பாழி, Paazhi - படுக்கையாயிருக்கின்றது. |
| 2318 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்டவன் திருவடிகளிலே நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன் இங்கனே இருந்துள்ள நான் அவனை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே அவன் தானே என்னை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணா நின்றான் என்கிறார் – நாம் அடிமையில் அந்வயிக்க ஸுபரியைப் போலே அநேகம் வடிவு கொண்டு புஜிக்க ஆசைப்படா நின்றான் -என்கிறது – இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் – 37 | அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,
உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,
திகழும் திருமார்வன் தான். | பதவுரை Show / Hideஉவர்க்கும் கரு கடல் நீர் உள்ளான், Uvarkkum Karu Kadal Neer Ullaan - உப்புக்கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய் துவர்க்கும் பவளம் வாய் பூ மகளும், Thuvarkkum Pavalam Vaai Poo Magalum - சிவந்த பவளம் போன்ற வாயை யுடையளான பிராட்டியும் பல் மணி பூண், Pal Mani Poon - பலவகையான ரத்னங்களழுத்தின திருவாபரணங்களும் ஆரம், Aaram - ஹாரங்களும் திகழும், Thigazhum - விளங்கப்பெற்ற திருமார்வன் தான், Thirumaarvan Thaan - திருமார்பையுடையனான எம்பிரான் அகத்தான் புறத்தான், Agaththaan Puraththaan - உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான். அவற்கு, Avarukku - அப்படிப்பட்ட பெருமானுக்கு அடிமை பட்டேன், Adimai Patten - ஆட்பட்டவனானேன். |
| 2319 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி என்னை வந்து விரும்பினவன் தான் சால எளியான் ஒருவனோ-ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் என்கிறார் – இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் – 38 | தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,
தானே தவவுருவும் தாரகையும், – தானே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இறை. | பதவுரை Show / Hideஎவ் உருவும், Ev Uruvum - எல்லாப் பொருள்களும் தன் உருவே, Than Uruve - அவன்றனக்கு சரீரமாகவேயிருக்கும், தவம் உருவும், Thavam Uruvum - தபஸ்ஸுபண்ணிப் புண்யசரீரமுடையராயிருக்கிற பிரமன் முதலானவர்களும் தாரகையும், Thaarakaiyum - நக்ஷத்ரங்களும் தானே, Thaaney - அவன்றன் வடிவாகவேயிருக்கும், எரி சுடரும், Eri Sudarum - ஜ்வலிக்கின்ற அக்நியும் மால் வரையும், Maal Varaiyum - பெரிய குலபர்வதங்களும் எண் திசையும், En Thisaikum - எட்டு திக்குகளும் அண்டத்து, Andathu - மேலுலகிலுள்ள இரு சுடரும், Iru Sudarum - சந்த்ரஸூர்யர்களும் தானே ஆய இறை, Thane Aaya Irai - தனக்கு ப்ரகாரமாயிருக்கப்பெற்ற எம்பெருமான் தனக்கு தானே உவமன், Thanakku Thane Uvaman - (ஒப்பற்றனாகையாலே) தனக்குத் தானே உபமானமாயிருப்பவன். |
| 2320 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி ஜகதாகாரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திரு மலையிலே புகுந்து சந்நிஹிதனாய்ப் பின்பு என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் என்கிறார் – இப்படி ஜெகதாகாரனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்- பின்பு எண் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் – 39 | இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன். | பதவுரை Show / Hideஇறை ஆய், Irai Aay - ஸர்வஸ்வாமியாய் நிலன் ஆகி, Nilan Aagi - பூமிக்கு அந்தர்யாமியாய் எண் திசையும் தான் ஆய், En Thisaiyum Thaan Aay - எட்டு திக்குக்களிலுமுண்டான ஸகல வஸ்துக்களையும் தனக்கு ப்ரகாரமாகவுடையனாய் மறை அய், Marai Aiy - வேதங்களுக்கு ப்ரவர்த்தகனாய் மறைபொருள் ஆய், Maraiporul Aay - அந்த வேதங்களின் பொருளாயிருப்பவனாய் வான் ஆய், Vaan Aay - நித்ய விபூதி நிர்வாஹகனாய் பிறை வாய்ந்த, Pirai Vaayndha - சந்திரபதத்தைக் கிட்டியிருப்பதும் வெள்ளம் அருவி, Vellam Aruvi - மிக்க ஜலத்தையுடைய அருவிகளினுடைய விளங்கு ஒலி, Vilangu Oli - விளங்குகின்ற கோஷத்தையுடைத்தான் நீர், Neer - நீரையுடையதுமான வேங்கடத்தான், Vengadaththaan - திருவேங்கட மாலையில் வாழ்பவனான எம்பெருமான் உள்ளத்தின் உள்ளே உளன், Ullaththin Ullae Ulan - என்னெஞ்சினுள்ளே இருக்கின்றான் |
| 2321 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் – இப்படி சர்வாதிகனானவன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் – 40 | உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங் கருவி வேங்கடத்தான்,
மண்ணெடுங்கத் தானளந்த மன். | பதவுரை Show / Hideநல் நெஞ்சே, Nal Nenjee - எனக்குப் பாங்கான மனமே! விண் ஒடுங்க, Vin Odunga - மேலுலகங்களெல்லாம் ஒரு முலையில் ஒதங்கும்படி கோடு, Kodu - சிகரங்கள் உயரும், Uyarium - உயர்ந்தோங்கி யிருக்கப்பெற்றதும் வீங்கு அருவி, Veengu Aruvi - நிறைந்த அருவிகளையுடையதுமான வேங்கடத் தான், Venkatat Than - திருமலையில் எழுந்தருளியிருப்பவனும் மண், Man - பூமிப் பரப்பெல்லாம் ஒடுங்க, Odunga - (திருவடியின் ஒரு பாகத்திலே) ஒருங்கிப் போம்படி தான் அளந்த, Thaan Alandha - தான் அளந்து கொண்டவனுமான மன், Man - ஸ்வாமியானவன் உளன் கண்டாய், Ulan Kandaai - (நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண், உத்தமன், Uththaman - புருஷோத்தமனான அப்பெருமான் என்றும் உளன் கண்டாய், Endrum Ulan Kandaai - எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷைகொண்டு) இருக்கிறான்காண், உள்ளுவார் உள்ளத்து, Ulluvaar Ullaththu - ஆஸ்திகர்களுடைய மனத்திலே உளன் கண்டாய், Ulan Kandaai - நித்யவாஸம் பண்ணுமவன்காண் |
| 2322 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – திரு வுலகு அளந்து அருளின இடம் ப்ராப்தமாய்த் திரியட்டும் அவ்விடம் தன்னிலே அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் – மண் ஒடுங்கத் தான் அளந்த என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் – 41 | மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,
துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, – மின்னை
உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும்
குடையாக ஆகாத்த கோ. | பதவுரை Show / Hideகுன்றம் குடை ஆக, Kuntram Kudai Aaga - கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு ஆகாத்த கோ, Aagatha Ko - பசுக்களைக் காப்பாற்றின ஸ்வாமியானவன், அன்று, Andru - முன்பொருகாலத்தில், மன்னு மணி முடி, Mannu Mani Mudi - பொருந்தின ரத்னங்களையுடைய கிரீடம்! நீண்டு, Neendu - ஓங்கி வளர்ந்து அண்டம் போய், Andam Poi - அண்ட பித்தையைச் சென்றுகிட்ட, எண் திசையும், En Thisaikum - எட்டு திக்குக்களையும் துன்னு பொழியில் அனைத்தும், Thunnu Pozhiyil Anaiththum - (பிராணிகள்) நெருங்கிக் கிடக்கிற பூமண்டலம் முழுவதையும் சூழ், Sool - வியாபித்த கழலே, Kazhale - திருவடியினாலேயே மின்னை உடை ஆக கொண்டு உலகு அளந்தான், Minnai Udai Aaga Kondu Ulaku Alandhaan - மின்னலைப் பீதாம்பரமாக அணிந்துக்கொண்டு உலகங்களை யளந்தான். |
| 2323 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஒரு நாடாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு நோக்கினான் என்கிற பிரசங்கத்தாலே ஒரூருக்காக வந்த விரோதங்களைப் போக்கி அங்கு உள்ளாரை நோக்கின படி சொல்லுகிறார் ஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில் ஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் – 42 | கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம். | பதவுரை Show / Hideகோவலன் ஆய், Kovalana Aay - இடையனாய்ப் பிறந்து ஆநிரைகள், Aaniraigal - பசுக்கூட்டங்களை மேய்த்து, Meeyththu - புல்லுந் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு சென்று) மேய்த்தவனாயும் குழல் ஊதி, Kuzhal Oothi - புல்லாங்குழலை ஊதினவனாயும் மா, Maa - குதிரை வடிவு கொண்டு நலியவந்த கேசி யென்னுமசுரனை வலன் ஆய் கீண்ட, Valan Aay Keenda - ஸமர்த்தனாய்க் கொண்டு கிழித்தவனாயும் மணி வண்ணன், Mani Vannan - நீலமணி போன்ற வடிவையுடையனாயும் மேலி அரி உருவம் ஆகி, Maeli Ari Uruvam Aagi - பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு இரணியனது ஆகம், Iraniyanathu Aagam - இரணியாஸுரனுடைய முரட்டுடலை உகிரால், Ukiral - நகங்களினால் கீண்டான், Keendaan - கிழிந்தவனாயுமுள்ள பெருமானுடைய சினம், Sinam - சீற்றத்தை தெரி, Theri - (நெஞ்சமே!) தெரித்துகொள். |
| 2324 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆஸ்ரிதரான ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் ஒருவனையும் நோக்கின அளவேயோ ஆபத்து கரை புரண்டால் எல்லாரையும் தன் பக்கலிலே வைத்து நோக்குவான் ஒருவன் கிடீர் என்கிறார் – அவன் சங்கல்பத்திலே யன்றோ லோகம் கிடக்கிறது என்கிறார் – அவன் சங்கல்பத்தாலே அன்றோ இந்த லோகம் கிடக்கிறது என்கிறார் – இப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் – 43 | சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,
புனமேய பூமி யதனை, – தனமாகப் பேரகலத்
துள்ளொடுக்கும் பேரார மார்வனார்,
ஓரகலத் துள்ள துலகு. | பதவுரை Show / Hideசினம் மா மதம், Sinam Maa Matham - கோபத்தையும் மிகுந்த மதத்தையுமுடைய களிற்றின், Kalittrin - (குவலயாபீட மென்கிற) யானையினுடைய திண்மருப்பை, Thinmaruppai - திடமான தந்தத்தை சாய்த்து, Saaytthu - முறித்துத்தள்ளினவனும் புனம் மேய, Punam Maeya - நல்ல நிலங்களோடு கூடின பூமி அதனை, Boomi Adhanai - பூமியை தனம் ஆக, Dhanam Aaga - நிதியாக நினைத்துக் கொண்டு பேர் அகலத்துள் ஒடுக்கும், Pera Akalaththul Odukkum - சிறிய திருவயிற்றினுள் அடக்கிக் காத்தவனும் பேர் ஆரம் மார்வனார், Pera Aaram Maarvanar - சிறந்த ஹாரஙகள் பூண்ட திருமார்பை யுடையனுமான எம்பெருமானுடைய ஓர் அகலத்து, Oru Akalathu - ஸங்கல்பரூபமான ஜ்ஞானத்தின் உலகு உள்ளது, Ulaku Ulladhu - உலகமெல்லாம் உள்ளது. |
| 2325 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நெஞ்சே உபய விபூதி யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆச்ரயிக்கப் பார் என்கிறார் – நெஞ்சே -உபய விபூதி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் – 44 | உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்
அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,
பூரித்தென் நெஞ்சே புரி. | பதவுரை Show / Hideஎன் நெஞ்சே, En Nenchae - எனது மனமே! உலகமும், Ulagamum - உலகங்களும் ஊழியும், Oozhiyum - ஸம்ஹாரகாலமும் ஆழியும், Aazhiym - கடல்களும் ஒண் கேழ் அவர் கதிரும், On Kezh Avan Kathirum - அழகிய நிறத்தையும் பரம்பின கிரணங்களையுமுடைய சந்திர ஸூர்கயர்களும் செம் தீயும், Sem Theeyum - சிவந்த நிறத்தை யுடைத்தான் அக்நியும் ஆவான், Aavaan - ஆகிய இப்பொருள்களெல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி நிற்பவனும், பல கதிர்கள் பாரித்த, Pala Kathirgal Paariththa - பல கிரணங்களைப் புறப்பட விடுகின்ற பை பொன் முடியான், Pai Pon Mudhiyaan - அழகிய பொன்முடியை யுடையவனுமான எம்பெருமானுடைய அடி இணைக்கே, Adi Inaikkai - உபயபாதங்களக்கே பூரித்து புரி, Pooriththu Puri - பரிபூரணமாக விருப்பங்கொள்ளு. |
| 2326 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று ஸ்ரீ பரம பதத்தைக் கலவிருக்கையாக உடையவன் என்று ப்ரஸ்துதமான வாறே அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் – அவன் நமக்கு ஸூலபனோ என்னில் – அக்குறைகள் தீர நமக்காக வன்றோ ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனாய் ஸூலபன் ஆயத்து -என்கிறார் – பல கதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் –என்று பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் நமக்கு ஸூலபனாமோ என்னில் -நமக்காக வன்றோ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆயிற்று -என்கிறார் – இப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூ லபன் ஆனான் என்கிறார் – 45 | புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,
திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர் வெண்கோட்டு
முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்
மண்கோட்டுக் கொண்டான் மலை. | பதவுரை Show / Hideமதம் வேழம், Madham Vezham - மத்த கஜமானது மா பிடியோடு, Maa Pidiyodu - சிறந்த தன்பேடையோடு புரிந்து, Purindhu - கலவிசெய்து ஊடி, Oodi - பிரணய கலஹம்பண்ணி திரிந்து, Thirinthu - (அதனால் பேடையைத் துறந்து) இங்குமங்குந்திரிந்து சினத்தால் பொருது வெண்கோடு, Sinaththaal Porudhu Venkodu - கோபத்தினால் கரைபொருது வெளுத்த கொம்புகளினின்று விரிந்த சீர் முத்து, Virindha Seer Muthu - சிறந்த முத்துக்களை உதிர்க்கும், Uthirkkum - வெளிவிடப்பெற்ற வேங்கடமே, Venkatame - திருமலையே மேல் ஒருநாள், Mel Orunaal - முன்னொருநாளில் (வராஹ ரூபியாய்) மண், Man - பூமியை கோடு, Kodu - கோரப்பல்லின்மீது கொண்டான், Kondaan - எடுத்துக்கொண்டுவந்த பெருமானுடைய மலை, Malai - திருமலையாம். |
| 2327 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவன் பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும் செய்து தலைக் கட்டுமவன் கிடீர் என்கிறார் – ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும் அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் கிடீர் -என்கிறார் – 46 | மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்
டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,
பிண்டமாய் நின்ற பிரன். | பதவுரை Show / Hideபிண்டம் ஆய் நின்ற பிரான், Pindham Aayi Nindra Piraan - (ஜகத்துக்கு) மூலகாரணமாக நின்ற எம்பெருமான், அன்று, Andru - முன்பொருகாலத்தில், முகடு மலை, Mugadu Malai - சிகரத்தையுடைத்தான மந்தரமலையை மேல் வைத்து, Mel Vaiththu - (கூர்மரூபியான தன்னுடைய முதுகின்மேலே) வைத்து வாசுகியை சுற்றி, Vaasugiyai Sutrri - (அதிலே) வாஸுகிநாகத்தைக் கடைகயிறாக)ச் சுற்றி தலை முகடு, Thalai Mugadu - அதன் தலைப்பாகத்தை தான் ஒரு கைபற்றி, Thaan Oru Kaipatri - தான் ஒரு கையாலே பற்றிக்கொண்டு அலைநீர், Alainir - அலையின் திவலைகள் அண்டம் முகடு போய் தெறிப்ப, Andam Mukadu Poi Therippa - அண்டத்தின் மேற்சென்று தெறிக்கும்படியாக கடல் கடைந்தான், Kadal Kadaindhan - கடலைக்கடைந்தான். |
| 2328 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர் நம்முடைய விரோதிகளைப் போக்கி நம்மை அடிமை கொள்ளுவான் என்கிறார் – தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுவான் -என்கிறார் – 47 | நின்ற பெருமானே நீரேற்று, உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா, – அன்று
துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ. | பதவுரை Show / Hideநீர் ஏற்று நின்ற பெருமானே, Neer Aetru Nindra Perumane - (மாவலிபக்கல்) உதகதானம் வாங்கிக்கொண்டு நின்ற பெருமானே! உலகு எல்லாம் சென்ற பெருமானை, Ulaku Ellam Senra Perumai - எல்லா வுலகங்களையும் வியாபித்த பெருமானே! செம் கண்ணா, Sem Kannaa - செந்தாமரைக்கண்ணனே! அன்று, Andru - முன்பொரு காலத்தில் துரகம், Duragam - குதிரைவடிவுகொண்டு நலியவந்த கேசினென்னுமசுரனுடைய வாய், Vaai - வாயை கீண்ட, Keenda - கீண்டொழித்தவனே! துழாய் முடியாய், Thuzhai Mudiyai - திருத்துழாயணிந்த திருமுடியை யுடையவனே! நங்கள், Nangal - எங்களுடைய நரகம் வாய், Naragam Vaai - நரகமார்க்கத்தை கீண்டாயும் நீ, Keendayum Nee - அழித்தவனும் நீயேயன்றோ? |
| 2329 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ-என்ன பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் – நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ என்ன -பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் – 48 | நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் – நீயன்றே
மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,
தேவா சுரம்பொருதாய் செற்று? | பதவுரை Show / Hideநீர் ஏற்று, Neer Aetru - (மாவலிபக்கல்) உதகதானம் வாங்கி உலகம், Ulagam - உலகங்களை அடி அளந்தாய் நீ அன்றே, Adi Alandhai Nee Andrae - திருவடியாலளந்தவன் நீயன்றோ? நின்று, Ninru - ரக்ஷிப்பதில் நிலைத்து நின்று பசுக்கூட்டங்களை மேய்த்தாய நீ அன்றே, Meyththay Nee Andrae - மேய்த்தவனும் நீயன்றோ? மா, Maa - குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னு மசுரனுடைய வாய் உரம், Vaai Uram - வாயின் வலிமையை பிளந்து, Pilandu - ஒழித்தவனும் மா மருதின் ஊடுபோய், Maa Maruthin Oodupoi - பெரிய இரட்டை மருத மாங்கனினிடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளினவனும் தேவாசுரம், Devaasuram - தேவரஸுர யுத்தத்திலே செற்று, Settru - (அசுரர்கள்) அழியச்செய்து பொருதாய் நீ அன்றே, Porudhai Nee Andrae - போர் செய்தவனும் நீயன்றோ? |
| 2330 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இன்னும் இவ்வளவேயோ-அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரம் என்கிறார் – இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள் அநேகம் அன்றோ -என்கிறார் – 49 | செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் – முற்றல்
முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்,
மூரிச்சுரியேறு சங்கினாய். சூழ்ந்து. | பதவுரை Show / Hideபின்னைக்காய், Pinnaikkai - நப்பின்னைப் பிராட்டிக்காக, முற்றல் முரி, Muttral Muri - முதிர்ந்த வலிமையையுடைய எற்றின், Etrin - ரிஷபங்களினுடைய முன் நின்று, Mun Nindru - எதிரில் (அஞ்சாதே) நின்று சூழ்ந்து, Sozhndhu - (அவற்றைச் சொல்லும் வகையை) ஆலோசித்து மொய்ம்பு ஒழித்தாய், Moymbu Ozhiththai - (அவற்றின்) மிடுக்கை ஒழித்தவனே! மூரி, Moori - பெரிதாய் சுரி ஏறு, Suri Aeru - (உள்ளே) சுழித்தலை யுடைத்தாயுமிருக்கிற சங்கினாய், Sanginai - சங்கைத் திருக்கையிலேந்தி யுள்ளவனே! (இப்படியிருக்கிற நீ) செற்றதுவும், Settrathuvum - கைகூசாமல் முடித்துப் போட்டதும் சேரா இரணியனை, Sera Iraniyanai - உன்னைச் சேர்த்துவாழமாட்டாத ஹிரண்யா ஸுரனை சென்று, Sendru - (மஹாபலிக்கலில்) சென்று ஏற்று, Aetru - யாசித்து பெற்றதும், Pettradhum - பெற்றுக் கொண்டதும் மா நிலம், Maa Nilam - பெரிய பூமியை. |
| 2331 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணின வியாபாரங்களுக்கு ஓர் அவதி இல்லை என்றதே -கீழே – அது எங்கே கண்டோம் -என்னில் ஓர் ஆனைக்காக பீஷ்மாதிகள் பக்கலிலும் சீறாத சீற்றத்தை ஒரு நீர்ப் புழுவின் மேலே பண்ணிற்றிலனோ -என்று ஆஸ்ரித பஷ பாதத்தை யருளிச் செய்கிறார் – ஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி அவனை பக் ஷபதித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் – 50 | சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,
தாழ்ந்த அருவித் தடவரைவாய், – ஆழ்ந்த
மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,
அணிநீல வண்ணத் தவன். | பதவுரை Show / Hideசூழ்ந்த, Sozhndha - நிறையச்சாத்தப்பெற்றுள்ள துழாய் அலங்கல், Thuzhai Alangal - திருத்துழாய் மாலையாலே சோதி, Sothi - புகர் பெற்ற மணி முடி, Mani Mudi - மணிமயமான கிரீடத்தை யுடையனாயும் அணி நீலம வண்ணத்தவன், Ani Neelam Vannaththavan - அழகிய நீலநிறத்தையுடையனாயுமிருக்கிற மால், Maal - ஸர்வேச்வரன், தாழ்ந்த அருவி தடவரை வாய், Thazhntha Aruvi Thadavarai Vaai - பூமியளவும் தாழ்ந்து பெருகுகின்ற அருகிகளையுடைய பெரிய மலையின் கணுள்ள ஆழ்ந்த மணி நீர் சுனை, Aazhntha Mani Neer Sunai - ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான் பொய்கையிலே வளர்ந்த, Valarntha - (சாபத்தினால்) வளர்ந்துகொண்டிருந்த மா முதலை, Maa Muthalai - பெரிய முதலையை கொன்றான், Konraan - முடித்தொழித்தான். |
| 2332 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர் நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான் என்கிறார் – ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி ஸ்ரீ பரம பதத்திலே செல்ல நடத்துவான் அவனே என்கிறார் – சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷ பாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது முதலாக விச் செயல்கள் – இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர் நமக்கு எல்லாம் உபய பூதன் ஆவான் -என்கிறார் 51 | அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,
அவனே யணிமருதம் சாய்த்தான், – அவனே
கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்,
இலங்கா புரமெரித்தான் எய்து. | பதவுரை Show / Hideஅரு வரையால், Aru Varaiyaal - ஒருவரால் அசைக்கவும் முடியாததான கோவர்த்தன மலையினால் ஆநிரைகள், Aaniraigal - பசுக்கூட்டங்கள் காத்தான், Kaaththaan - ரக்ஷித்தருளினவன் அவனே கண்டீர், Avane Kandheer - அப்பெருமானை யாவன், அணி மருதம், Ani Marudham - அழகாக நின்றுகொண்டிருந்த இரட்டை மருதமரங்களை சாய்த்தான், Saayththaan - முறித்துத்தள்ளினவனும் அவனே கண்டீர், Avane Kandheer - அப்பெருமானே யாவன், எய்து, Eydhu - அம்புகளைப் பிரயோகித்து இலங்காபுரம், Ilangapuram - லங்காபட்டணத்தை எரித்தான், Eriththaan - எரியவிட்டவனான அவனே, Avane - அப்பெருமானே கலங்கா பெருநகரம், Kalangaa Perunagaram - ஒருவகைக் கலக்கமுமில்லாத பரமபதத்தை காட்டுவான், Kaattuvaan - காட்டித்தருவான். |
| 2333 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழே ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப் பேசுகிறார் – கீழே ஸ்ரீ கலங்கா பெரு நகரம் காட்டுவான் -என்றாரே ருசி உடையாருக்கு ஸ்ரீ பரமபதம் கொடுக்கும் அத்தனையோ என்னில் –ருசி பிறப்பிப்பானும் அவனே – என்கிறது – கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் – 52 | எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்,
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், – எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம்கைக் கொண்டான் முயன்று. | பதவுரை Show / Hideஇராமன் ஆய், Iraaman Aay - ஸ்ரீராமனாகத் திருவவதரித்து மராமரம் ஏழும், Maraamaram Ezhum - ஸப்தஸால உருஷங்களையும் எய்தான், Eyththaan - அம்பு செலுத்தித் துளைத்தான், ஏந்து இழைக்கு ஆய், Ainthu Izaikku Aay - தரிக்கப்பட்ட ஆபரணங்களையுடைய பிராட்டிக்காக அ மான் மறிய, A Maan Mariya - அப்படிப்பட்ட மாரீசமாயா மிருகக்குட்டியை எய்தான், Eyththaan - பின்சென்றான், எய்த்துவும், Eyththuvum - அம்புகளைச் செலுத்தினதும் தென் இலங்கை கோன் வீழ, Then Ilangai Kon Veezha - தென்னிலங்கைக்கு அரசனான இராவணன் முடியும்படியாகவாம், முன், Mun - முன்பொரு காலத்திலே குறள் உரு ஆய், Kurall Uru Aay - வாமன ரூபியாய் சென்று, Sendru - மாவலியிடத்திற் சென்று முயன்று, Muyandru - (வடிவழகு காட்டுதல், மழலைச் சொற்களைச் சொல்லுதல் முதலிய) முயற்சிகளைச் செய்து நிலம் கைக் கொண்டான், Nilam Kaik Kondaaan - பூமியைக் கைப்பற்றினான். |
| 2334 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமன்னோடு போலியான ஸ்ரீ வடதள சாயியை அனுபவிக்கிறார் – ஸ்ரீ எம்பெருமான் படி இதுவான பின்பு மேல் வீழ்ந்து அனுபவி -என்கிறார் – துர்க் கடங்களை கடிப்பிக்க வல்லவன் என்கிறார் – ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான ஸ்ரீ வட தள சாயியை ஆஸ்ரயி என்று தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் – 53 | முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை,
இயன்றமரத் தாலிலையின் மேலால், – பயின்றங்கோர்
மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்,
தண்ணலங்கல் மாலையான் தாள். | பதவுரை Show / Hideமூரி வேலை, Moori Vela - பழையதான நீரை யுடைத்தான ஸமுத்தர்திலே ஆலமரத்து இலையின் மேலால், Alamarathu Ilaiyin Melal - ஆலமரத்தின் இலைமீது பயின்று, Payinru - நெடுங்காலம் சாய்ந்திருந்தது அங்கு, Angu - அங்கே மண், Man - பூமியினுடைய நலம், Nalam - நன்மையை கொள், Kol - அபஹரித்த வெள்ளத்து, Vellathu - பிரளய வெள்ளத்திலே ஓர் மாயம் குழவி ஆய், Or Maayam Kuzhavi Aay - ஆச்சரியமான ஒரு குழந்தையாய் தண் அலங்கல் மாலையான், Than Alankal Maalaiyaan - குளிர்ந்து அசைகின்ற மாலையை யுடையவனான எம்பெருமானுடைய தான், Thaan - திருவடிகளை நெஞ்சே, Nenchae - நெஞ்சமே! முயன்று தொழு, Muyanru Thozhu - உத்ஸாஹங்கொண்டு வணங்கு. |
| 2335 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ வடதள சாயி வ்ருத்தாந்தத் தோடு சேரச் சொல்லலாம் படியான ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் – ஸ்ரீ வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் – 54 | தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி, கீளா
மருதிடைபோய்க் கேழலாய், – மீளாது
மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,
பெண்ணகலம் காதல் பெரிது. | பதவுரை Show / Hideசகடம், Sakadam - சகடாஸுரனை தாளால், Thaalal - திருவடியாலே உதைத்து, Udaithu - உதைத் தொழித்தவனாயும் பகடு, Pagadu - (குவலயாபீட மென்கிற) யானையை உந்தி, Undhi - உதைத்துத் தள்ளினவனாயும் மருது இடைபோய், Maruthu Idaipoy - மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று சீனா, Cheena - (அம்மரங்களை) முறிந்துவிழச் செய்தவனாயும் கேழல் ஆய், Kezhal Aay - வராஹரூபியாய்க் கொண்டு மீளாது, Meelaadhu - காரியம் தலைக்கட்டாமல் திரும்பி வருவதில்லையென்று ஸங்கல்பித்துக் கொண்டு சென்று அகலம் மண்கீண்ட, Agalam Mankeenda - அகன்ற பூமியை (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்தவனாயும் ஓர் மாது உகந்த மார்வற்கு, Or Maathu Ugandha Maarvarku - ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை விரும்பியிருக்கின்ற திருமார்பையுடையவனாயுமுள்ள எம்பெருமானுக்கு பெண் அகலம், Pen Agalam - பூமிப்பிராட்டியினுடைய திருமேனியில் காதல், Kaadhal - ஆசையானது பெரிது, Peridhu - கரை புரண்டிருப்பது. |
| 2336 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் இப்படி வத்சலனாய் உள்ளவன் உடைய அழகை அனுபவிக்கிறார் – இப்படி ஸ்ரீ பூமிப பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் – 55 | பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு,
கரிய முகிலிடைமின் போல, – தெரியுங்கால்
பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன்
நீணெடுங்கண் காட்டும் நிறம். | பதவுரை Show / Hideபெரியவரை மார்வில், Periyavarai Marvil - பெரிய மலைபோன்ற திருமார்பிலே பேர் ஆரம்பூண்டு, Per Arambundhu - பெரிய ஹாரத்தை அணிந்துகொண்டு திரியுங்கால், Thiriyungkal - உலாவினால் கரிய முகிலிடை மின் போல, Kariya Mukilidai Min Pola - காளமேகத்திலே மின்னல் மின்னினாற் போன்றிருக்கும்! மற்று, Mattru - அன்றியும், அவன் தன், Avan Than - அப்பெருமானுடைய நீள் நெடு கண், Neel Nedu Kan - நீண்டு பரந்த திருக்கண்களினுடைய நிறம், Niram - நிறத்தை பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே காட்டும், Paan Odunga Vandu Arayum Pangkayame Kaattum - பாட்டென்று பேர் பெற்றவையெல்லாம் ஒடுங்கும் படியாக (அதிமதுரமாக) வண்டுகள் இருந்து பாடப்பெற்ற தாமரைப்பூவே காட்டித்தரும். |
| 2337 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவித்துப் போமித்தனை போக்கி இன்ன படிப் பட்டு இருக்கும் என்று கொண்டு நம்மால் பரிச்சேதிக்கப் போகாது கிடீர் என்கிறார் – பிரயோஜ்னத்திலே சொல்லில் சொல்லும் அத்தனை – என்னுடைய ஸ்ரீ ஸ்வாமியினுடைய ரூபத்தை இன்னபடி இருக்கும் என்று சொல்லப் போகாது – பிரயோஜகத்தை சொல்லும் அத்தனை என்கிறார் – இவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய நம்மால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் – 56 | நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,
இறையுருவம் யாமறியோ மெண்ணில், – நிறைவுடைய
நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,
பூமங்கை கேள்வன் பொலிவு. | பதவுரை Show / Hideஇறை, Irai - ஸர்வேச்வரனுடைய உருவம், Uruvam - திவ்யமங்கள விக்ரஹமானது நிறம், Niram - நிறத்தால் வெளுத்திருக்குமோ (அல்லது) செய்து, Seithu - சிவந்திருக்குமோ, (அல்லது) பசிது, Pasithu - பச்சென்றிருக்குமோ, (அல்லது) கரிது, Karithu - கறுத்திருக்குமோ, என்று, Endru - எவ்வண்ணமா யிருக்குமென்று எண்ணில், Ennil - ஆராயுமிடத்தில் யாம் அறியோம், Yaam Ariyom - நாம் அறியமாட்டோம் (இது நிற்க) நிறைவு உடைய, Niraivu Udaiya - ஜ்ஞான சக்திகளில் பூர்த்தியை உடையவளான நா மங்கை தானும், Na Mangai Thanum - ஸரஸ்வதீ தேவியும் பூ மங்கை கேள்வன், Poo Mangai Kelvan - பூவிற்பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய பொலிவு, Polivu - பூர்த்தியை நலம் புகழ வல்லனே, Nalam Pugazha Vallanai - நன்றாகப் புகழ சக்தி யுடையவனோ |
| 2338 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்ட பெருமையை யுடையவனை அனுசந்திக்கும் இதுவே கிடாய் நமக்கு உத்க்ருஷ்டமாகை ஆகிறது என்கிறார் – ஸ்ரீ கருடத்வஜனுமாய் ஸ்ரீ யபதியும் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் – முடியாது என்று பேசாது இராதே அவனை ஆஸ்ரயிக்கில் எல்லாரும் மேலாவது என்கிறார் – ஸ்ரீ கருட வாஹனனுடைய திருவடிகளை ஆஸ்ரயி என்கிறது – ஏவம் விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் – 57 | பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து திருவிருந்த மார்வன், – பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல் கண்டாய் தெளி. | பதவுரை Show / Hideதிரு, Thiru - பிராட்டியானவள், பொலிந்து இருண்ட கார், Polinthu Irunda Kaar - செறிந்து இருளையுடைத்தான கார் காலத்திலுண்டான வானில், Vaanil - மேகத்தில் மின்னே போல் தோன்றி, Minne Pol Thondri - மின்னல் போல் பிரகாசித்து மலிந்து இருந்த மார்வன், Malinthu Irundha Marvan - பொருந்தி யிருக்கப்பெற்ற திருமார்பை யுடையனாய் பொலிந்த கருடன் மேல் கொண்ட, Polintha Karudan Mel Konda - விளங்குகின்ற கருடனால் மேற்றகொள்ளப்பட்டவனான கரியான், Kariyan - கருநிறப் பெருமானுடைய கழலே, Kazhale - திருவடிகளே தெருள்தன் மேல், Therulthan Mel - ஜ்ஞாநத்திற்கு மேற்பட்டதான பக்திக்கு விஷயமென்று தெளி கண்டாய், Theli Kandaai - (நெஞ்சே!) தெளிந்திரு |
| 2339 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே காண வேணுமே -என்ன காணலாம் படி ஸ்ரீதிரு மலையிலே நின்றான் என்கிறார் – அஸ்மின் மயா சார்த்தம் -என்று பிராட்டி செய்த செயலை ஸ்ரீ திருமலையில் திர்யக்குகளும் அனுவர்த்தியா நின்றது என்கிறார் – இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் – 58 | தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,
அளிந்த கடுவனையே நோக்கி, – விளங்கிய
வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்
மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு. | பதவுரை Show / Hideதெளிந்த, Thelindha - ஸ்வச்சமாயிருக்கிற சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி, Silaadhalaththin Mel Irundha Manthi - கற்பாறையின் மீது இருக்கும் பெண் குரங்கானது. அளித்த கடுவனை நோக்கி, Alitha Kaduvana Nokki - ஸ்நேஹமுள்ள ஆண் குரங்கை நோக்கி விளங்கிய வெண் மதியம் தான் என்றும் வேங்கடம், Vilangiya Ven Mathiyam Thaan Endrum Vengadam - ‘விளங்குகின்ற வெளுத்த சந்திரன் (ப்பிடித்துக்) கொடு‘ என்ற சொல்லும்படிரு யிருக்கிற திருவேங்கடம் மேல் ஒருநாள், Mel Orunaal - பண்டொரு காலத்தில் மண், Man - பூமியை மதியின், Mathiyin - தனது புத்தி சாதுரியத்தினால் கொண்டு, Kondhu - (மாவலியிடத்தில் பெற்றுக்கொண்டு) உகந்தான், Uganthaan - திருவுள்ள முவந்த ஸர்வேச்வான் வாழ்வு, Vaazhvu - வாழுமிடம் |
| 2340 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழ் ஸ்ரீ கரியான் கழலே தெருள் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் – அப்படிப் பட்ட திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவிக்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத் என்று வ்யுத்புத்தி பண்ணினேன் – ஸ்ரீ கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி- திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் – 59 | வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,
தாழும் அருவிபோல் தார்கிடப்ப, – சூழும்
திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்
பெருமான் அடிசேரப் பெற்று. | பதவுரை Show / Hideமை போல் நெடு வரை வாய், Mai Pol Nedu Varai Vaai - மைபோன் றிருண்டு பெரிதான மலையிடத்திலே தாழும், Thaalum - இருபக்கமும் தாழ விழிந்து பாய்கின்ற அருவி போல், Aruvi Pol - அருவிபோலே தார் கிடப்ப, Thaar Kidappa - மாலை சாத்தப்பட்டிருக்க, (அதிலே யீடுபட்டு) சூழும், Soolum - ஒருக்ஷணமும் விட்டுப்பிரியாமல் வளைத்துக் கொண்டிருக்கிற திரு, Thiru - பிராட்டியை யுடையவனும் மா மணி வண்ணன், Maa Mani Vannan - நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும் செம் கண்மால், Sem Kanmaal - செந்தாமரை போன்ற திருக்கண்களையுடைய பெரியோனுமான எங்கள் பெருமான், Engal Perumaan - எம்பெருமானுடைய அடி, Adi - திருவடிகளை சேர பெற்று, Sera Petru - அஞகப் பெற்றதனால் வாழும் வகை அறிந்தேன், Vazhum Vagai Arindhen - உஜ்ஜீவிக்கும் வழி தெரிந்தவனானேன். |
| 2341 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – உமக்கு வாழ்விலே அந்யமாகில் பிரதி பந்தகம் போனால் அன்றோ வாழலாவது – விரோதி செய்த படி என் என்ன அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது என்கிறார் – பிரதிபந்தகங்கள் போனால் அன்றோ வாழும் படி யாவது என்னில் – அவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கும் என்கிறது – உமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன- அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது -என்கிறார் – 60 | பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,
முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, – கற்றுக்
குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்
பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு. | பதவுரை Show / Hideபெற்றம், Petram - பசுக்களை முற்ற காத்து, Mutra Kaathu - ஒன்று தப்பாமல் ரக்ஷித்தவனாயும் பிணை மருதம் ஊடு போய், Pinai Marudham Oodu Poi - இரட்டை மருத மாங்களிடையே சென்றவனாயும் பேய் முலை உண்டு, Pei Mulai Undu - பூதனையின் முலையை உண்டவனாயும் மா சகடம் உதைத்து, Maa Sakadam Uthaithu - பெரிய சகடத்தை உதைத் தொழித்தவனாயும் கன்று குணிலை கொண்டு, Kandru Gunilai Kondo - கன்றாகிய எறிதடியைக் கொண்டு விளங்கனிக்கு எறிந்தான், Vilanganikku Erindhaan - விளாம்பழத்தின் மீது எறிந்தவனாயுமுள்ள எம்பெருமான் பண்டு, Pandhu - முன்பொரு காலத்தில் வெற்றி பணிலம், Vetri Panilam - ஜயசீலமான சங்கை வாய் வைத்து, Vaai Vaiththu - வாயிலே வைத்து ஊதி உகந்தான், Uganthaan - மகிழ்ந்தான் |
| 2342 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – பிரதி பந்தகங்கள் போக்கும் அளவேயோ – ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் சம்சாரத்திலே உகந்து அருளின ஸ்ரீ திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாக கொள்ளுகிறது – இப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலங்களிலும் காட்டில் தம்முடைய திரு உள்ளத்தை மிகவும் ஆதரியா நின்றான் என்னும் தாத்பர்யம் தோற்ற அருளிச் செய்கிறார் – பிரதிபந்தகங்களைப் போக்கும் அளவேயோ -ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் -சம்சாரத்திலே உகந்து அருளின ஸ்ரீ திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளுகிறது ஆஸ்ரித அர்த்தமாக வன்றோ -என்கிறார் – பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் – 61 | பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், – வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண் ணகர். | பதவுரை Show / Hideவைகுந்தம், Vaikundham - பரமபதத்தை கொண்டு, Kondhu - இருப்பிடமாகக் கொண்டு அங்கு, Angu - அவ்விடத்திலே உறைவாற்கு, Uraivaarku - வாஸம்பண்ணு மெம்பெருமானுக்கு பால் கடல், Paal Kadal - திருப்பாற்கடலும் வேங்கடம், Vengadam - திருமலையும் வண்டு வளம் கிளரும் நீள் சோலை, Vandu Valam Kilarum Neel Solai - வண்டுகளின் திரள்மிக்கிருக்கிற பரந்தசோலைகளை யுடைத்தாய் வண், Van - அழகியதாய் பூ, Poo - போக்யமான கடிகை, Kadikai - திருக்கடிகைக் குன்றும் இள குமரன் தன் விண்ணகர், Ila Kumaran Than Vinnagar - நித்ய்யுவாவான அவனுடைய தன்னதான திருவிண்ணகரும் (ஆகிய இத்திருப்பதிகளெல்லாம்) பண்டு எல்லாம், Pandhu Ellam - என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பெல்லாம் கோயில் போல், Koyil Pol - கோயில்களாக இருந்தன போலும். (இப்போதோவென்னில், என்னெஞ்ச மொன்றே அவனுக்குக் கோயிலாயிருக்கிறது என்பது உள்ளுறை). |
| 2343 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆஸ்ரித ரஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் என்கிறார் – கேவலம் சம்சாரத்தில் வந்து நின்ற மாதரமோ – ஸ்ரீ பரம பதத்திருப்பும் மனிச்சுக்கவாய் அத்தாட்சியோடே கூடி இருப்பது உகந்து அருளின தேசத்திலே அன்றோ என்கிறார் – கேவலம் சம்சாரத்தில் நின்ற மாத்ரமேயோ -ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு மனிச்சுக்காய்-தாழ்ச்சியோடே கூட இருப்பது உகந்து அருளின தேசங்களில் அன்றோ என்கிறார் – ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் – 62 | விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,
மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. | பதவுரை Show / Hideவிண்ணகரம், Vinnakaram - திருவிண்ணகரமும் வெஃகா, Vegha - திருவெஃகாவும் விரி திரை நீர் வேங்கடம், Viri Thirai Neer Vengadam - விரிந்து துலையெறிகிற நீர்வம் பொருந்திய திருமலையும் மண் நகரம், Man Nagaram - பூமிலுண்டான வைகுந்தமாநகர்போன்ற மா மாடம் வேளுக்கை, Maa Maadam Velukkai - பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும் மண் அகத்த தென் குடந்தை, Man Agatha Then Kudanthai - பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும் தேன் ஆர் திரு அரங்கம், Then Aar Thiru Arangam - தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்கமாநகரும் தென் கோட்டி, Then Kotti - தென் திருக்கோட்டியூரும் (ஆகிய இத்திருப்பதிகள்) தன் குடங்கை, Than Kudangai - தனது உள்ளங்கையாலே நீர் எற்றான், Neer Etran - (மாவலிபக்கல்) உதகதானம் பெற்ற பெருமான் தாழ்வு, Thazhvu - தங்குமிடங்களாம். |
| 2344 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இந்த தேசங்களிலே வந்து சந்நிஹிதனான அவன் தான் சால சீலவானாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் – தாழ்வுக்கு எல்லையான சௌசீல்யம் – சாதக வேஷத்தையும் சித்தமான வேஷத்தையும் ஒக்க தரிப்பதே – என்கிறார் – ஸித்தமான வேஷத்தையும்-சாதகமான வேஷத்தையும் -ஓக்க தரிப்பதே -இது ஒரு சீலவத்தையே -என்கிறார் – இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் – 63 | தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,- சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவு மொன்றாய் இசைந்து. | பதவுரை Show / Hideதாழ் சடையும், Thazh Sadayum - தாழக் கட்டின ஜடையும் நீள் முடியும், Neel Mudiyum - நீண்ட திருவபிஷேகமும் ஒண் மழுவும், On Mazhuvum - அழகிய மழுவென்னுமாயுதமும் சக்கரமும், Chakkaramum - திருவாழியாழ்வானும் சூழ் அரவும், Sool Aravum - சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும் பொன் நாணும், Pon Naanum - பொன் னரைநாணுமாய்க்கொண்டு இரண்டு உருவும், Irandu Uruvum - ஒன்றுக்கொன்று சேராச் சேர்த்தியாயிருக்கிற இரண்டு வடிவும் சூழும் திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு, Soolum Thirandu Aruvi Paayum Thiru Malai Mel Endhaikku - நாற்புறமும் திரள்திரளாக அருவிகள் பெருகப் பெற்ற திருமலைமேலுள்ள அப்பனுக்கு ஒன்று ஆய் இசைந்து தோன்றும், Onru Aay Isainthu Thonrum - ஒரு வடிவமாய் அமைந்துவிளங்கா நின்றது ஆல், Aal - ஆச்சரியம்! |
| 2345 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவன் தான் –பிரயோஜனாந்தர பரராய் தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத் தன்னை அழித்துத் கார்யம் செய்து கொடுப்பான் -என்று அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்- பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார் 64 | இசைந்த அரவமும் வெற்பும் கடலும்,
பசைந்தங் கமுது படுப்ப, – அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்,
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு. | பதவுரை Show / Hideஇசைந்த, Isainthu - கடைகயிறாகக் கொள்வதற்குத் தகுதியான அரவமும், Aravamum - வாஸுகிநாகமும் (இசைந்த), Isainthu - மத்தாக நாட்டுவதற்குத் தகுதியான வெற்பும், Verpum - மந்தரபர்வதமும் (இசைந்த), Isainthu - தாழியாக்குவதற்குத் தகுதியான கடலும், Kadalum - கடலும் (ஆகிய இம்மூன்றையும்) பசைந்து, Pasainthu - ஒன்றோடொன்று ஸம்பந்தப் படுத்தி அங்கு, Angu - அந்தக்கடலிலே அமுது, Amuthu - அம்ருதமானது படுப்ப, Paduppa - உண்டாம்படி அசைந்து, Asainthu - அலைச்சல்பட்டு கடைந்த வருத்தமோ, Kadaindha Varuththamo - கடைந்த்தனா லுண்டான ஆயாஸத்தினாலோ கச்சி, Kacchi - காஞ்சீபுரத்திலுள்ள வெஃகாவில், Veghavil - திருவெஃகாவில் கிடந்து, Kidandhu - சயனித்துக் கொண்டும் அங்கு, Angu - அக்காஞ்சீபுரத்தல் (திருப்பாடகத்தில்) இருந்து, Irundhu - வீற்றிருந்தும் (கிருவூரகத்தில்) நின்றதுவும், Nindrathuvum - நின்று கொண்டும் இருப்பது? |
| 2346 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அம்ருத மதனம் பண்ணின ஆயாசமே யன்றிக்கே மற்றுள்ள அவதாரங்களிலும் ஆயாச ஹேதுவான வியாபாரங்களை யருளிச் செய்கிறார் – அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் – 65 | அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,
மங்க இரணியன தாகத்தை,- பொங்கி
அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. | பதவுரை Show / Hideஅங்கற்கு, Angarku - பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு இடர் இன்றி, Idar Inri - ஒருதுன்பமும் வராதபடி அந்தி பொழுத்தது, Andhi Pozhuththathu - ஸாயங்காலத்தில் இரணியனது, Iraniyanadhu - ஹரண்யனுடைய ஆகத்தை, Aagaththai - மார்வை மங்க, Mang - அழிந்து போம்படியாக அரிஉருவம் ஆய் பொங்கி, Ariuruvam Aayi Pongi - நரஸிம்ஹருபியாய்க்கிளர்ந்து பிறந்த, Pirandha - கிழித்தொழிந்த அம்மான், Ammaan - அவனே காய்ந்து, Kaayndhu - சீறி கரி உருவம், Kari Uruvam - கறுத்தவுருவத்தை யுடைத்தாயிருந்த குவலயா பீடத்தினுடைய கொம்பு, Kombu - தந்தத்தை ஒசித்தான், Osiththaan - முறித்துப் போட்டான் |
| 2347 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – தானொரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்னுமது ஓர் ஏற்றமோ – கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் – உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணுகை ஓர் ஏற்றமோ அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் – உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணினது ஓர் ஏற்றமோ -அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் – தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ -கண் வளர்ந்து அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் – 66 | காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள்,
ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, – வாய்ந்த
மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்,
அதுகே டவர்க்கிறுதி ஆங்கே. | பதவுரை Show / Hideகாய்ந்து, Kaayndhu - சீறி இருளை மாற்றி, Irulai Maatri - இருளைப் போக்கி கதிர் இலகு, Kathir Ilaku - ஒளிவிடாநின்றுள்ள மா மணிகள், Maa Manigal - சிறந்த ரத்னங்கள் ஏய்ந்த, Eyndha - பொருத்தியிருக்கிற பணம், Panam - (தன்னுடைய) படங்களினுடைய கதிர்மேல், Kathirmeel - ஒளிக்குமேலே (திருவனந்தாழ்வான்) வெவ்வுயிர்ப்ப, Veppuyirppa - பெருமூச்சுவிட, வாய்ந்த, Vaayndha - கிட்டின மது கைடபரும், Madhu Kaidaparum - மதுகைடபர்கள் வயிறு உருகி மாண்டார், Vayiru Urugi Maandhaar - குடலழுகி முடிந்து போனார்கள் அவர்க்கு, Avarkku - அந்த மதுகைடபர் களைப்போலே பிரதிகூலராய் பருமவர்களுக்கு ஆங்கு, Aangu - அவ்வண்ணாமாகவே அது இறுதி கேடு, Adhu Irudhi Kaedu - அப்படிப்பட்ட ப்ராண விநாசமான கேடே (பலிக்கும்) |
| 2348 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அங்கு கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபி கமலமானது -ஆழ்வார்கள் -இருவர் உடைய சேர்த்தியையும் கண்டு-அலருவது-மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் – ஹிரண்யனும் பட்டு மதுகைடபர்களும் முடிந்த பின்பு கண் வளர்ந்து அருளுகிற போதை அழகை அனுபவிக்கிறார் – ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் – அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் – 67 | ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்,
ஓங்கு கமலத்தி னொண்போது, – ஆங்கைத்
திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில்
பகரு மதியென்றும் பார்த்து. | பதவுரை Show / Hideமால், Maal - ஸர்வேச்வரனுடைய உந்தி வாய், Undhi Vaai - திருநாபியிலே ஓங்கு, Ongu - உயரவளர்ந்த ஒண் கமலத்தின் போது, On Kamalaththin Podhu - அழகிய தாமரைப் பூவானது கை, Kai - அவனுடைய வலத்திருக்கையில் ஆம், Aam - உண்டான திகிரி, Thigiri - திருவாழியை சுடர் என்றும், Sudar Endrum - ஸூர்யனென்றும் (கை ஆம்), Kai Aam - இடத்திருக்கையிலுள்ள வெண் சங்கம், Ven Sangam - வெளுத்த சங்கை வானில் பகரும் மதி என்றும், Vaanil Pakarum Mathi Endrum - ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும் பார்த்து, Paartthu - நினைத்துக்கொண்டு ஆங்கு, Aangu - எக்காலத்திலே மலரும் குவியும், Malarum Kuviyum - மலர்வதும் மூடிக்கொள்வதுமாயிரா நின்றது. |
| 2349 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது ஸ்ரீ திருப்பாற் கடல் ஏறப் போக வேண்டா ஸ்ரீ திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர் என்கிறார் – இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக ஸ்ரீ திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா – ஸ்ரீ திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார் 68 | பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர்
கடுவனெனப் பேர்ந்து, – கார்த்த
களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்
விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு. | பதவுரை Show / Hideசுனை நீர், Sunai Neer - திருமலைச் சுனையின் நீரிலே பார்த்த, Paarttha - கவிந்து பார்த்த கடுவன், Kadhuvan - குரங்கானது நிழல் கண்டு, Nizhal Kandu - நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக்கண்டு பேர்த்து ஓர் கடுவன் என, Perthu Oru Kadhuvan Enna - (தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து பேர்ந்து, Perndhu - அவ்விடம் விட்டு நீங்கி (மறுபடியும் சாபல்யத்தாலே) கார்த்த கனங்கனிக்கு கை நீட்டும், Kaartha Kanangkanikku Kai Neettum - கரிய களாப்பழத்தைப் பறித்துத்தா வென்று கை நீட்டப்பெற்ற வேங்கடமே, Venkatame - திருவேங்கடந்தான் மேல் நாள், Mel Naal - முன்பொருகாலத்தில் விள கனிக்கு, Vila Kanikku - (அஸுராவேசங்கொண்ட) விளாம்பழங்கள் உதிர்வதற்காக கன்று எறிந்தான், Kandru Erindhaan - வத்ஸாஸுரனை (எறிகுணிலாகக் கொண்டு) வீசியெறிந்த பெருமானுடைய வெற்பு, Verppu - திருமலை. |
| 2350 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக இப்பாட்டை அன்யாப தேசமாக நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு – அதாகிறது-ஆழ்வாரான அவஸ்தை போய் பகவத் விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு பிராட்டி அவஸ்தையைப் பஜித்து அவளுடைய பாசுரத்தையும் செயல்களையும் திருத் தாயார் சொல்லுகிறாள்- ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் – இப்படிப் பட்ட ஸ்ரீ திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் -அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் – 69 | வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க்
கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற
நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்,
பூண்டநா ளெல்லாம் புகும். | பதவுரை Show / Hideவெற்பு என்று, Verppu Endru - ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும் வேங்கடம், Vengadam - திருமலையைப் பற்றி பாடும், Paadum - பாடுகின்றான், கற்பு என்று, Karppu Endru - குலமரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று வியன் துழாய், Viyan Thuzhai - விலக்ஷணமான திருத்துழாயை கரு குழல் மேல், Karuk Kuzhal Mel - (தனது) கரிய கூந்தலில் சூடும், Soodum - அணிந்து கொள்ளுகிறாள். மல், Mal - மல்லர்களை பொன்ற, Pondra - பொடிபடுத்தின நீண்ட தோள், Neenda Thol - நீண்ட திருத்தோள்களையுடைய மால், Maal - ஸர்வேச்வான் கிடந்த, Kidandha - சயனித்திருக்கப்பெற்ற நீள் கடல், Neel Kadal - பாந்த திருப்பாற்கடலிலே நீராடுவான், Neeraaduvaan - தீர்த்தமாடுவதற்காக பூண்ட நாள் எல்லாம், Poonda Naal Ellam - விடிந்த விடிவுகள் தோறும் புகும், Pugum - புறப்படுகிறான். |
| 2351 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆகில் இப்படி ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை யுண்டாக்கிக் கொள்ள வேண்டாவோ -என்னில் அது வேண்டா-திர்யக்குகளுக்கும் புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் -என்கிறார் – இனி-ஆஸ்ரயணம் தன்னிலும் ஒரு நியதி இல்லை – செய்தது எல்லாம் நியதியாம் அத்தனை – என்கிறது – அனுகூலர் உடைய தேக யாத்ரை எல்லாம் தன் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக் கொள்ளும் -என்கிறது – ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன அது வேண்டா திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் – 70 | புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி
உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்
விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,
கண்டு வணங்கும் களிறு. | பதவுரை Show / Hideகளிறு, Kaliru - (திருமலையிலுள்ள) யானையானது புகு மதத்தால் வாய் பூசி, Pugu Mathathaal Vaai Poosi - மண்டையில் நின்றும் கபோலங்களில் நின்றும் வாயிலே புகுகின்ற மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து ஆகமனம் பண்ணி கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால், Keel Thaazhnthu Aruvi Ugu Mathathaal - மேலிருந்து கீழ்வரையில் அருவி போலே வந்து பெருகுகிற மத ஜலத்தாலே கால் கழுவி, Kaal Kazhuvi - கால்களை சுத்தி செய்துகொண்டு கையால், Kaiyaal - துதிக்கையால் மிகு மதம் தேன், Migu Matham Then - மிகுந்த மதத்தை யுண்டுபண்ணக் கூடிய தேனை யுடையதும் விண்ட, Vindha - மலர்ந்ததுமான மலர்கொண்டு, Malar Kondo - புஷ்பத்தைக்கொண்டு விறல் வேங்கடவனையே, Viral Vengadavanaiye - பெருமிடுக்கனான திருமலையப்பனையே கண்டு வணங்கும், Kandu Vanangum - ஸேவித்து வணங்குகின்றது. |
| 2352 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படித் திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபமான ஸ்ரீ திருவேங்கடமுடையான் வர்த்திக்கிற ஸ்ரீ திருமலை வ்ருத்தாந்தாத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் – விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நின்று அருளின ஸ்ரீ திருமலை வ்ருத்தாந்தத்தை அனுபவித்து இனியர் ஆகிறார் – 71 | களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி,
ஒளிறு மருப்பொசிகை யாளி, – பிளிறி
விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள்
குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று. | பதவுரை Show / Hideகளிறு, Kaliru - யானையானது கை எடுத்து ஓடி, Kai Eduthu Odi - தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாயோடி முகில், Mukil - (மதயானை போலெழுந்து) மேகங்களை குத்த, Kuththa - (எதிரியானை யென்று நினைத்துக்) குத்த யாளி, Yaali - (இதைக் கண்ட) யாளியானது ஒளிறு மருப்பு, Oliru Maruppu - (அந்தயானை யினுடைய) விளங்குகின்ற கொம்பை ஓசி, Oosi - முறிக்கிற கை, Kai - கையை யுடைத்தாய்க் கொண்டு பிளிறி விழ கொன்று, Piliri Vizha Konru - (அந்தயானை) வாய்விட்டலறிக் கொண்டு விழும்படி (அதனைக்) கொன்று நின்று அதிரும், Ninru Adhirum - அங்கேயே நின்றுகொண்டு பெருமுழக்கம் செய்யப்பெற்ற வேங்கடமே, Venkatame - திருவேங்கடமே மேல் நாள், Mel Naal - முன்பொருகாலத்தில் குழ கன்று கொண்டு, Kuzha Kanru Kondu - இளங்கன்றை (எறிகுணிலாகக்) கொண்டு எறிந்தான், Erindhaan - (விளங்கனிமீது) எறிந்த பிரானுடைய குன்று, Kunru - திருமலையாம். |
| 2353 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திருமலையிலே கிடீர் -என்கிறார் – 72 | குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வ ளைக்கை,
சென்று விளையாடும் தீங்கழைபோய், – வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே,
மேலை இளங்குமரர் கோமான் இடம். | பதவுரை Show / Hideகுன்று ஒன்றினான, Kunru Onrinaan - அத்திருமலை யொன்று தவிர வேறொரிடமும் அறியாதிருக்கிற குற மகளிர், Kura Magalir - குறத்திகள் கோல் வளை கை, Kol Vazhakai - அழகிய வளைகளணிந்த கைகளினாலே சென்று, Sendru - மேலேறி விளையாடும், Vilaiyaadum - விளையாடா நிற்கப் பெற தீம் கழை, Theem Kazhai - அழகிய மூங்கில்கள் போய், Poi - சந்திர மண்டலத்தளவும் போய் வென்று, Vendru - ராஹுவைத்தகர்த்து, விளங்கு மதிகோள் விடுக்கும், Vilangu Mathikoal Vidukkum - விளங்காநின்ற சந்திரனுடைய கிரஹணத்தை விடுவிக்கப்பெற்ற வேங்கடமே, Venkatame - திருமலையே மேலே, Mele - மேலுலகத்திலுள்ள இன குமரர் கோமான், Ina Kumarar Koomaan - நித்யயுவாக்களான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான பெருமானுடைய இடம், Idam - திவ்யதேசமாம். |
| 2354 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவனுடைய திருவடிகளை ஏத்தும் இதுவே கிடீர் வாக் இந்த்ரியத்தால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் – ஸ்ரீ திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் – 73 | இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி,
வடமுக வேங்கடத்து மன்னும், – குடம்நயந்த
கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே,
நாத்தன்னா லுள்ள நலம். | பதவுரை Show / Hideஏழ் பூண்ட, Ezhu Poond - ஏழு குதிரைகளைப் பூண்ட இரவி தேர், Iravi Ther - ஸூர்யனுடைய தேரை இடம் வலம், Idam Valam - (மேருவுக்கு) இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் ஒட்டி, Otti - (அந்தர்யாமியா யிருந்து கொண்டு) நடத்துகிறவனும் வட முகம் வேங்கடத்து மன்னும், Vada Mugam Vengadathu Mannum - வடதிசையின் கணுள்ள திருவேங்கடத்தில் நித்யவாஸம் பண்ணுமவனும் குடம் நயந்த கூத்தன் ஆய் நின்றான், Kudam Nayandha Koothan Aayi Nindraan - ஆசையோடு குடக்கூத்தாடின கண்ணபிரான் போன்று நிற்பவனுமான பெருமானுடைய குரை கழல் கூறுவதே, Kurai Kazhal Koovuvadhe - ஆபரண வொலி பொருந்திய திருவடிகளே ஏத்துவதே நா தன்னால் உள்ள நலம், Naa Thannal Ulla Nalam - நாவினால் கொள்ளக் கூடிய பிரயோஜனம். |
| 2355 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் பக்கல் ஸ்நேஹம் உடையாரில் ஸ்ரீ யசோதைப் பிராட்டிதனைப் பரிவர் இல்லை கிடீர் என்கிறார் – நமக்கு ஸ்ரீ எம்பெருமான் பக்கலிலே வலிய மூட்ட வேண்டி இருக்கும் – இவருக்கு வெளிச் சிறப்பு கார்யகரமாகாதே கலக்கமே கார்யகரமாய்த்து-என்கிறார் – அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் ஸ்ரீ யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் – 74 | நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,
நிலமே புரண்டு போய் வீழ , – சலமேதான்
வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,
தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து. | பதவுரை Show / Hideசலமே, Salame - கபடமாகவே நஞ்சு, Nanju - விஷத்தை ஊட்டு, Oottu - உண்பிக்க வந்த வன் பேய், Van Pei - கொடிய பூதனையானவன் நிலமே, Nilame - பூமியிலே புரண்டு போய் வீழ, Purandu Poi Veezh - (பிணமாய்) மறிந்துபோய் விழும்படியாகக் தான் சலமே, Thaan Salame - தானும் கபடமாகவே வெம் கொங்கை, Vem Kongai - (அவளது) வெவ்விய முலையை உண்டானை, Undaanai - அமுது செய்த கண்ணபிரானை ஆய்ச்சி, Aaychi - யசோதையானவள் மீட்டு, Meetu - (அப்பூதனைபக்கலில் நின்றும்) மீட்டு ஊட்டுவன், Oottuvan - (தனது முலைப்பாலை) உண்பிப்பதற்காக சார்ந்து, Saarndhu - அணுகிச் சென்று தன் கொங்கை, Than Kongai - தனது முலையை வாய் வைத்தான், Vaai Vaiththaan - அவனது வாயிலே உண்ணக் கொடுத்தாள், நலமே வலிதுகொல், Nalame Valithukol - இந்த ப்ரேமம் எவ்வளவு கனத்தது! |
| 2356 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணன் தனக்கு வாசஸ் ஸ்தானமாக விரும்பி இருக்கும் ஸ்ரீ திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் – இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் – 75 | சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, – சேர்ந்து
சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன்
புனவேங்கை நாறும் பொருப்பு. | பதவுரை Show / Hideதடாவிய, Thadaaviya - பரப்பையுடைத்தான கோடு, Kodu - சகரங்களினுடைய உச்சி வாய், Uchi Vaai - உச்சயிலே அகடு தேய்ப்ப, Akadu Theyppa - கீழ்வயிறு உராயும்படியாக சார்ந்து, Saarndhu - கிட்டி ஊர்ந்து இயங்கும், Oorndhu Iyankum - மெல்ல ஸஞ்சரிக்கின்ற வண் மதியின், Van Mathiyin - அழகிய சந்திரனிடத்துள்ள ஒண் முயலை, On Muyalai - அழகிய முயலை, சினம் வேங்கை, Sinam Vengai - கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது சேர்ந்து, Serndhu - கிட்டி பார்க்கும், Paarkkum - (அதைப் பிடித்துக் கொள்ளவும்விட்டுப் போகவும் மாட்டாமல்) எப்போதும் பார்த்தபடியே நிற்கப் பெற்ற ஆயன், Aayan - கண்ணபிரானுடையதாய் புனம் வேங்கை நாறும், Punam Vengai Naarum - தன்னிலத்தில் வளர்ந்து செழிப்புற்ற வேங்கைமரங்கள் கமழப் பெற்றதான பொருப்பு, Poruppu - மலை |
| 2357 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – உகந்து அருளின நிலங்களில் இங்கே சந்நிஹிதன் ஆனபின்பு இனி -அவ்வோ விடங்களில் முகம் காட்டிப் பிழைத்துப் போம் இத்தனை -போக்கி தம் தம் உடம்புகளை நோவ வருத்தி துக்கப் பட வேண்டா கிடீர் – புருஷார்த்த லாபம் வேண்டி இருப்பார்க்கு – என்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரன் சம்சாரத்தில் புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நிற்க நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா –என்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான் நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் – உடம்பை ஒறுத்து -துஷகரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா – ஸ்ரீ வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும் தன்னடையே விட்டுப் போம் என்கிறார் – 76 | பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து. | பதவுரை Show / Hideநீர், Neer - நீங்கள் பொருப்பு இடையே, Poruppu Idaiye - மலைகளின் நடுவே நின்றும், Nindrum - நின்று கொண்டும் புனல், Punal - நீர்நிலைகளிலே குளித்தும், Kuliththum - முழுகிக்கொண்டும் ஐந்து நெருப்பு இடையே, Ainthu Neruppu Idaiye - பசுசாக்கி மத்யத்திலே நிற்கவும், Nirkavum - நின்றுகொண்டும் தவஞ்செய்ய வேண்டா, Venda - வேண்டியதில்லை, விருப்பு உடைய, Viruppu Udaya - (எல்லாராலும்) விரும்பத்தக்கதாயிருக்கின்ற வெஃகா, Vegha - திருவெஃகாவில் சேர்ந்தானை, Serndhaanai - வந்து கண் வளர்த்தருளும் பெருமானை மெய், Mei - மெய்யாக (அந்நய ப்ரயோஜநமாக) மலர் தூய்கை தொழுதால், Malar Thuykai Thozhudhal - புஷ்பங்களைப் பணிமாறி வணங்கப் பெற்றால் தீ வினைகள், Thee Vinaigal - துஷ்கருமங்களெல்லாம் ஆய்ந்து, Aayndhu - (நமக்கு இவ்விடம் வாஸயோக்யமன்று என்று) நிரூபித்தறிந்து அஃகாவே, Aghakaave - சுருங்கிப்போக மாட்டாவோ? (அகன்றோடிப் போய்விடுமென்கை) |
| 2358 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழே-ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய பாபங்கள் எல்லாம் போம் என்றார் – இதில்-அளவில்லாதார்க்கே யன்று – பேரளுவு உடையரானவர்களுக்கும் விழுக்காடு அறியாதே தங்களை முடியச் சூழ்த்துக் கொள்ளும் அன்று அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு நோக்குவான் அவனே -என்கிறார் – அவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் – இதில் நாமே யல்ல ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் – அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் – கீழ் ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது- இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது – பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல் தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால் ஏற்கவே அவ்வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரேசகம் என்கிறார் – 77 | ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன்
நன்குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன், – ஏய்ந்த
முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த
அடிப்போது நங்கட் கரண். | பதவுரை Show / Hideஆய்ந்த, Aayndha - ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட அரு மறையான், Aru Maraiyaan - அருமையான வேதங்களையுடையனான நான் முகத்தோன், Naan Mugaththon - சதுர்முக ப்ரஹ்மாவினுடைய நன் குறங்கில், Nan Kurangil - அழகிய மடியிலே வாய்ந்த, Vaayndha - நேர்பட்ட குழவி ஆய், Kuzhavi Aay - இனங்குழந்தையாயிருந்துகொண்டு வாள் அரக்கன், Vaal Arakkan - இராவணனுடைய போது ஏய்ந்த, Podhu Aayndha - புஷ்பமாலை பொருந்தின முடி, Mudi - தலைகளை மூன்று ஏழ் என்று எண்ணினான், Moondru Azh Enru Enninraan - பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய அடி போது, Adi Podhu - திருவடித்தாமரைகள் நங்கட்கு, Nangadku - நமக்கு ஆர்ந்த அரண், Aarntha Aran - குறையற்ற சரணம். |
| 2359 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நெஞ்சே விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நமக்கு ரஷகனாம் –ஆன பின்பு அவனையே புகலாக அனுசந்திக்கப் பார் என்கிறார் – அவன் சர்வ ரஷகன் ஆகிலும் நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில் கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன வேண்டா -என்கிறார் – அவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய கொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது – அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆனபின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார் 78 | அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,
முரனாள் வலம்சுழிந் த மொய்ம்பன், – சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே,
ஓதுகதி மாயனையே ஓர்த்து. | பதவுரை Show / Hideஆழி, Aazhi - திருவாழியாழ்வானை வலவன், Valavan - வலத்திருக்கையிலுடையவனும் முரன், Muran - முராஸுரனுடைய நாள், Naal - ஆயுளையும் வலம், Valam - வலிமையையும் சுழித்த, Suzhiththa - போக்கின மொய்ம்பன், Moympan - மிடுக்கையுடையவனுமான பெருமான் சரண் ஆம் ஏல், Saran Aam Ael - ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில் கதி ஏது நிலை எது பிறப்பு எது என்னாதே, Kathi Aethu Nilai Ethu Pirappu Ethu Ennaadhe - (நம்முடைய) ஞானமென்ன!, ஆசார மென்ன! ஜன்ம மென்ன! என்று (இவற்றின் தாழ்வுகளைப் பார்த்து உபேக்ஷியாமல் நமக்கு என்றும் அரண் ஆம், Namakku Endrum Aran Aam - நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், (ஓநெஞ்சமே) ஓர்த்து, Oorththu - இதை நன்றாக அறிந்து கொண்டு மாயனையே, Maayanaiye - ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை யுடையனான அப்பெருமானையே கதி, Kathi - உபாயமாக ஓது, Othu - அநுஸந்தித்துக் கொண்டிரு. |
| 2360 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ என்னில் – அவனை அனுசந்தித்து – சப்தாதி விஷயங்களிலே அநாதரம் பிறக்கச் சடக்கென்னப் போக்கலாம் -என்கிறார் – நாட்டார் நான் சொல்லப் போகிற படிகளைச் செய்தார்கள் ஆகில் ஜென்மங்களைப் போக்கலாம் கிடீர் என்கிறார் – அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில் அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது – அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில் அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் – 79 | ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், – கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,
நிரையார மார்வனையே நின்று. | பதவுரை Show / Hideகார்த்த, Kaartha - பசுமையான நிறமுள்ளதாய் விரை ஆர், Virai Ar - பரிமளம் நிரம்பியதான நறு துழாய், Naru Thuzhai - செவ்வித்திருத்துழாய் மாலையையுடையவனும் வீங்கு ஓதம் மேனி, Veengu Otham Meeni - பொங்குங்கடல் போன்ற திருமேனியை யுடையவனும் நிரை ஆரம் மார்வனையே, Nirai Aaram Maarvanaiye - ஒழுங்கான ஹாரங்களணிந்த திருமார்பை யுடையவனுமான பெருமானையே நின்று, Ninru - நெஞ்சு நிலைத்து நின்று ஓர்த்த மனத்தர் ஆய், Oorththa Manaththar Aay - அநுஸந்திக்கின்ற மனமுடையாய் ஐந்து அடக்கி, Aindhu Adakki - பஞ்சேந்திரியங்களையும் வென்று ஆராய்ந்து, Aaraindhu - ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து பேர்த்தால், Paerththal - ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக்கொண்டால் பிறப்பு ஏழும், Pirappu Ezhum - ஒன்றின்பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை போக்கலாம், Pokkalam - தொலைத்துவிடலாம். |
| 2361 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவ்விஷயத்தில் தமக்கு முன்னே தம் திரு உள்ளமானது பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – உபதேச நிரபேஷமாக என்னுடைய நெஞ்சானது அவனுடைய விரோதி நிரசன ஸ்வ பாவத்தை அனுசந்தித்து இந்த்ரிய ஜெயம் பண்ணி சம்சாரத்தைப் போக்கி அனுசந்திக்க முயலா நின்றது – என்கிறார் – நம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது – அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் – பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம் அவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – 80 | நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,
ஒன்றியவீ ரைஞ்ஞா றுடன்துணிய – வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,
நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு. | பதவுரை Show / Hideநின்று, Ninru - (கூசாமல்) முன்னே வந்து நின்று எதிர் ஆய, Edhir Aaya - எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும் நிரைமணி தேர், Niraimani Ther - ஒழுங்காக அழுத்தின மணிகளையுடைய தேரின்மேலேறி யுள்ளவனுமான வாணன், Vaanan - பாணாஸுரனுடைய ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள், Onraya Eer Ainnuru Thol - அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும் துணிய, Thuniya - அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து வென்று, Vendru - வெற்றி பெற்று இலங்கும், Ilankum - விளங்குகின்ற ஆர்படு, Aarbadhu - கூர்மையையுடைய வான், Vaan - திவ்யமான நேமி, Nemi - திருவாழியாழ்வானை யுடையவனாய் அரவு அணையான், Aravu Anaiyaan - சேஷசாயியான எம்பெருமானுடைய சே அடிக்கே, Sae Adikke - திருவடிகளிலே நெஞ்சு தான், Nenjhu Thaan - (எனது) நெஞ்சு தானே முயலும், Muyalum - உத்ஸாஹப் படுகின்றது. |
| 2362 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழே-சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு ஸ்ரீ பகவத் விஷயத்திலே ப்ரவணமாய்த்து என்று கொண்டாடினார் – விஷயத்தைப் பார்த்தவாறே-முதலடி இட்டிலராய் இருந்தார் – அவன் துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து இவனை இம் மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு ஹேது என்னோ -என்கிறார் இத்தால்-தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி தமக்கு அவ் விஷயத்தில் உண்டான ப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் – அவன் பெருமை பார்த்த போது அறிவொன்றும் இல்லையாத் தோன்றும் புறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் – கீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு ஸ்ரீ பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று கொண்டாடினார் -விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது – 81 | நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ,
ஓராது நிற்ப துணர்வு. | பதவுரை Show / Hideஎன் நெஞ்சமே, En Nenjhame - எனது மனமே!, நெஞ்சால் நினைப்பு அரியன் எலும், Nenjhal Ninaippu Ariyan Elum - (எம்பெருமான்) நெஞ்சாலும் நினைக்க முடியாத பெருமை வாய்ந்தவனே யாயினும் (அவனுடைய பெருமையை நினையாமல் ஸௌலப்யத்தையே நினைத்து) நிலைப்பெற்று, Nilaiyeptru - காலூன்றி நின்று பேசாய், Pesai - அவனைப் பேசப்பார் நினைக்குங் கால், Ninaikkung Kaal - நாம் ஒருகால் நினைத்தாலும் நெஞ்சத்து, Nenchatthu - நெஞ்சுதன்னிலே பேராது நிற்கும், Peraadhu Nirkum - விட்டுநீங்காமல் நிலைத்து நிற்கின்ற பெருமானை, Perumaanai - எம்பெருமானை உணர்வு, Unarvu - நமது நெஞ்சானது ஓராது நிற்பது என்கொலோ, Oraadhu Nirpadhu Enkolo - அநுஸந்தியாமல் வானாவிருப்பது ஏனோ? |
| 2363 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இது தன்னை நாம் இன்னாதாகிறது என் – அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய் நிரதிசய போக்யனுமான பின்பு இனி யவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த் தலை கட்ட விரகு உண்டோ என்கிறார் – இம் மனசை இன்னாதாகிறது என் -ஒருவருக்கும் ஒருவகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய் நிரதிசய போக்யனுமாய் இருந்த பின்பு இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத் தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் – 82 | உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரிய னுண்மை, – இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
எங்கணைந்து காண்டும் இனி. | பதவுரை Show / Hideஉணரில், Unaril - (அப்பெருமானை நாமாக) அறியப்பார்த்தாலும் உணர்வு அரியன், Unarvu Ariyan - (அவன்) அறியக் கூடாதவன் (அவன்தானே) உள்ளம் புகுந்து புணரிலும், Ullam Pugundhu Punarilum - நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும் உண்மை காண்பு அரியன், Unmai Kaanbu Ariyan - உள்ளபடி அறியக் கூடாதவன் இனி, Ini - இப்படியான பின்பு இணர் அணைய, Inar Anaiya - பூங்கொத்துகள் தாழும்படியாக கொங்கு, Kongu - தேனிலே வண்டு, Vandu - வண்டுகள் அணைந்து, Anaindhu - வந்துகிட்டி (மதுவைப்பருகி) அறையும், Araiym - ரீங்காரம் செய்யப்பெற்ற தன், Than - குளிர்ந்த துழாய், Thuzhaai - திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான கோமானை, Komanai - அப்பெருமானை எங்கு, Engu - எவ்விடத்தில் அணைந்து, Anaindhu - கிட்டி காண்டும், Kaandum - காணக்கடவோம். |
| 2364 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – அவன் ஒருக்காலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும் அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் – இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் -அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம் என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் – 83 | இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்,
இனியவன் காண்பரிய னேலும், – இனியவன்
கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்,
உள்ளத்தி னுள்ளே யுளன். | பதவுரை Show / Hideஇனி, Ini - இப்போது அவன், Avan - ‘அந்தஸர்வேச்வரன் மாயன், Maayan - மாயைக்காரன்‘ என, En - என்று உரைப்பர் எனும், Uraippar Enum - சொல்லுவார்களே யாகிலும், இனி, Ini - இப்போது அவன், Avan - அப்பெருமான் காண்பு அரியன் எலும், Kaanbu Ariyan Elum - கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும் கன்னத்தாள், Kannaththaal - க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று) மண் கொண்டு, Man Konda - பூமிதானம் வாங்கி விண் கடந்த பை கழலான் அவன், Vin Kadandha Pai Kazhalan Avan - ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான் இனி, Ini - இப்போது உள்ளத்தன் உள்ளே உள்ள, Ullaththan Ullae Ulla - எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான் (இந்த பரமலாபமே போது மென்கை) |
| 2365 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – வேதைக சமதி கம்யனாய் உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாது – கண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை என்கிறார் – வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும் கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் – 84 | உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்
துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், – உளனாய
வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே,
கண்டா ருகப்பர் கவி. | பதவுரை Show / Hideநால் மறையின், Naal Maraiyin - நான்கு வேதங்களினுடைய உள் பொருள், Ul Porul - உள்ளுறை பொருளாக உளனாயவனை, Ulanayavanai - இருக்கின்ற எம்பெருமானை தேர்ந்து, Therndhu - (ஜ்ஞாநயோகத்தாலே) ஆராய்ந்து உள்ளத்து உளன் ஆக, Ullathu Ulan Aaga - நெஞ்சிலே பொருந்தியிருப்பவனாக உணர்வர் ஏலும், Unarvar Aelum - (சில ஞானிகள்) அறிய வல்லாரென்றாலும், வண் தாமரை, Van Thamarai - அழகிய தாமரைப் பூப்போன்ற நெடு கண், Nedu Kan - நீண்ட தீருக்கண் களையுடைய மாயவன், Maayavan - ஆச்சர்யபூதனாக உளனாபவனை, Ulanapavanai - இருக்கின்ற அப்பெருமானை கண்டார் யாவரே, Kandaar Yaavare - கண்டு அநுபவிக்கப்பெற்றார் யாவர்? (ஒருவருமில்லை) கவி உகப்பர், Kavi Ugappar - தோத்திரக் கவிகளை உகந்து வாயாற் சொல்லிக்கொண்டு போது போக்குவர்களத்தனை. |
| 2366 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஒருத்தரால் அறியப் போகாதாகில்-வாழ்த்துவார் பலராக –திருவாய் மொழி -3-1-7-என்னும்படியே பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினால் அறியப் போமோ-என்னில் எல்லாரும் அடையத் திரண்டு தந்தாமுடைய கரண சக்திகளைக் கொண்டு அவனை ஸ்தோத்ரம் பண்ண வென்று புக்கால் பின்னையும் அவர்கள் நின்ற நிலைக்கு இவ்வருகாய் அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் – ஒருத்தரால் அறியப் போகாதாகில் -வாழ்த்துவர் பலராக என்னும் படியே பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினாலும் அறியவும் ஏத்தவும் போமோ -என்னில் ஒண்ணாது என்கிறார் – நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித் தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும் அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் – 85 | கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,
செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், – புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே, – பின்னைக்காய்
ஏற்றுயிரை அட்டான் எழில். | பதவுரை Show / Hideகவியினார், Kaviyinaar - தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க்கொண்டு கை புனைந்து, Kai Punaindhu - அஜ்ஞலிபண்ணி கண், Kan - தமது கண்கள் ஆர் கழல் போய், Aar Kazhal Poi - (அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சோப்பெற்று செவியின் ஆர் கேள்வியர் ஆய், Seviyin Aar Kelviyir Aay - காது நிறைந்த கேள்விகளையுடையராய்க் கொண்டு சேர்ந்தார், Serndhaar - வந்து பணிந்தவர்களான புவியினார், Puviyinaar - பூமியிலுள்ளா ரெல்லாரும் போற்றி உரைக்க, Pothri Uraikka - (ஒன்று கூடிப்) போற்றி யுரைத்தாலும், பின்னைக்காய் எது உயிரை அட்டான் எழில் பொலியுமே, Pinnaikkai Edhu Uyirai Attaan Ezhil Poliyume - நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களினுயிரை மாய்ந்த பெருமானுடைய அழகு சிறப்புறச் சொல்லப்பட்ட தாகுமோ? |
| 2367 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது –உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது – ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும் விட ஒண்ணாத படி ஸ்ப்ருஹநீயமாய் இருக்கும் அது காண வேணும் என்று இருப்பாருக்கு மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் – சம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு – அதாகிறது அவன் வடிவுக்கு போலியான பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம் என்கிறார் – ஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது -உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது – அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும் அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார் 86 | எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத்
தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், – எழில் கொண்ட
நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல,
கார்வானம் காட்டும் கலந்து. | பதவுரை Show / Hideஎழில் கொண்ட, Ezil Konda - அழகையுடைத்தாய் நீர், Neer - நீர்நறைந்ததான மேகம் தான், Megam Thaan - மேகமானது எழில் கொண்ட மின் கொடி எடுத்து, Ezil Konda Min Kodi Eduthu - அழகிய மின்னற்கொடி படாப்பெற்று வேகம் தொழில் கொண்டு, Vegam Thozhil Kondu - வேகமாகத் திரிதலாகிற வியாபாரத்தைச் செய்யப்பெற்ற முழங்கி தோன்றும், Muzhangi Thondrum - கர்ஜித்துக்கொண்டு விளங்குதற்கிடமான கார் வானம், Kaar Vaanam - கார் காலத்து ஆகாசமானது அன்ன நெடுமால் நிறம்போல கலந்து காட்டும், Anna Nedumaal Nirampola Kalandhu Kaattum - அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருநிறத்தை அநுகரித்திராநின்றது. |
| 2368 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – பின்னையும் வடிவு அழகு தன்னை உபமான முகத்தாலே இழிந்து அனுபவிக்கிறார் – ஸ்ரீ எம்பெருமானுடைய ஸ்வா பாவிகமான வடிவு அழகை மரகத மணி காட்டும் – ஒப்பனையால் வந்த வடிவு அழகை சந்த்யா காலத்திலேயே மேகம் காட்டும் என்கிறார் – பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார் அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார் 87 | கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின்மேனி
மலர்ந்து மரகதமே காட்டும், – நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
அந்திவான் காட்டும் அது. | பதவுரை Show / Hideமணி கலந்து, Mani Kalandhu - ஸ்ரீகௌஸ்துப மணியோடுகூடி இமைக்கும், Imaykkum - விளங்காநின்ற கண்ணா, Kannaa - கண்ணபிரானே! மாதகம், Maadhagam - மரதகரத்னமானது மலர்ந்து, Malarndhu - ஒளிப்பரப்பை யுடைத்தாய்க் கொண்டு நின் மேனி காட்டும், Nin Meeni Kaattum - உனது திருமேனியை ஒத்திராநின்றது, நலம் திகழும், Nalam Thigazhum - அழகாக விளங்குகின்ற கொந்தின் வாய், Kondhin Vaai - கொத்துகளிலே வண்டு அறையும், Vandu Araiym - வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்ற தண் துழாய், Than Thuzhai - திருத்துழாய் மாலையணிந்த கோமானை, Komanai - ஸர்வேச்வரனாகிய உன்னை அந்தி வரன் அது காட்டும், Andhi Varan Adhu Kaattum - ஸந்தியாகாலத்து ஆகாசமானது ஒத்திராநின்றது. |
| 2369 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி இருக்கிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை ஆராய்ந்து சம்சயியாதே சர்வ சமாஸ்ரயநீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் – உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் – உங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் – இதர விஷயங்களில் உள்மனம் புறமானங்களை ஆராய்ந்து சம்சயியாதே சர்வ ஸமாச்ரயணீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் – 88 | அதுநன் றிதுதீதென் றையப் படாதே,
மதுநின்ற தண்டுழாய் மார்வன், – பொதுநின்ற
பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து. | பதவுரை Show / Hideஅது நன்று இது தீது என்று ஐயம் படாதே, Adhu Nandru Ithu Theethu Endru Aiyam Padaadhe - ‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல் மது நின்ற தன் துழாய் மார்வன், Madhu Nindra Than Thuzhai Maarvan - தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய பொது நின்ற, Podhu Nindra - ஸர்வஜந ஸாதாரணமான பொன் அம்கழலே, Pon Amkalale - விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே தொழுமின், Thozhumin - தொழுங்கோள், (அப்படி தொழுதால்) முன்னம், Munnam - முந்துறவே முழு வினைகள், Muzhu Vinaigal - ஸம்ஸ்த பாபங்களும் முடிந்து, Mudinthu - உருமாய்ந்து கழலும், Kazhalum - விட்டு நீங்கும். |
| 2370 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி சர்வ சமாஸ்ரயநீயன் ஆனவனைக் கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திருமலையிலே கிடீர் -என்கிறார் – ஸ்ரீ திருமலையில்-குறவரோடு-மூங்கிலோடு-ஸ்ரீ திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறபடி – ஸ்ரீ திருமலையிலே குறவரோடு -ஸ்ரீ திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேசியமாய் இருக்கிறபடி – இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திரு மலையிலே கிடீர் என்கிறார் – 89 | முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம்
படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, – தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே,மேலொருநாள்
தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு. | பதவுரை Show / Hideமுடிந்த பொழுதில் சூற வாணர், Mudintha Pozhudhil Soora Vaanar - மரணமடையும் நிலைமையிலுள்ள கிழவர்களான குறவர்கள் எனம் படிந்து உழு சால், Enam Padinthu Uzhu Saal - காட்டுப்பன்றிகள் (தங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர்பறிந்து விழும்படி) படிந்து உழுதசால்களிலே பை தினைகள் வித்த, Pai Thinaihal Vitha - புதிய தினைவிதைகளை விதைக்க தடிந்து, Thadinthu - அறுத்துப்போட்ட பின்பும் எழுந்த, Ezhunth - (நிலவளத்தினால்) ஓங்கிவளர்ந்த வேய்ங்கழை, Veyngazhai - மூங்கில் தடிகளானவை போய், Poi - மேலேசென்று விண் திறக்கும், Vin Thirakkum - ஆகாசத்தை யளாவப்பெற்ற வேங்கடம், Vengadam - திருவேங்கடம் மேல் ஒருநாள், Mel Orunaal - முன்பொருநாள் தீம் குழல், Theem Kuzhal - மதுரமான புல்லாங்கிழலை வாய் வைத்தான், Vaai Vaiththaan - தருப்பவளத்தில் வைத்து ஊதின கண்ணபிரானுடைய சிலம்பு, Silambu - திருமலையாம். |
| 2371 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேச்யமான விடத்தில் அதிலே நின்றவன் உத்தேச்யனாகச் சொல்ல வேண்டா விறே – ஸ்ரீ திருமலையிலே நின்று அருளினவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணும் படியை அருளிச் செய்கிறார் – இவன் பண்ணினானான அதுக்கோர் அவகாசம் காண்கிறிலீ கோளீ என்கிறார் – ஸ்ரீ திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில் அதில் நின்றவன் உத்தேச்யமாக சொல்ல வேண்டா இறே என்கிறார் – ஸ்ரீ திருமலையில் மூங்கில்களோ பாதி ஸ்ரீ திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார் 90 | சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா
றலம்பிய சேவடிபோய், அண்டம் – புலம்பியதோள்
எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ,
வண்டுழாய் மாலளந்த மண். | பதவுரை Show / Hideசிலம்பும், Silambum - (திருவடிகளில் சாத்தின) நூபுரங்களும் செறி கழலும், Seri Kazhalum - செறிவாக அணிந்த வீரத்தண்டைகளும் சென்று இசைப்ப, Sendru Isaippa - எங்கும் ஒலிக்க விண் ஆறு, Vin Aaru - ஆகாசகங்கையிலே அலம்பிய, Alambiya - விளக்கப்பட்ட கே அடி, Ke Adi - திருவடிகளானவை அண்டம் போய், Andam Poi - அண்டபித்தியளவும் நீண்டு போனபோது, புலம்பிய, Pulampiya - (அனைவராலும்) துதிக்கத் தக்க தோள், Thol - திருத்தோள்கள் எண் திசையும் சூழ, En Thichaiyum Soozha - எட்டுத் திசைகளையும் வியாபிக்க இடம் போதாது, Idam Podhathu - இடம் போராவில்லை, கண் துழாய் மால், Kan Thuzhai Maal - அழகிய திருத்துழாய் மாலையணிந்த எம்பெருமான் அளந்த, Alandha - அளந்துகொண்ட மண், Man - பூமியானது என் கொல், En Kol - (சிறியதே போலும்) |
| 2372 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ எம்பெருமானுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்கிறார் அவனுடைய அபரிச்சேத்யதைக்கு ஓர் அவதி காண ஒண்ணாதா போலே கிடீர் அவன் சரித்ரம் தானும் ஒருவரால் ஓர் அவதி காண ஒண்ணாத படி என்கிறார் – சாமானியேன ஜகத்தை யுண்டும் பிரதிகூலருடைய பிராணனையும் அனுகூலர் ஸ்பர்சித்த த்ரவ்யத்தையும் யுண்டும் பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் – அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் – 91 | மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி – கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,
வயிற்றினோ டாற்றா மகன். | பதவுரை Show / Hideவயிற்றினோடு ஆற்ற மகன், Vayittrinodu Aatra Magan - வயிற்றைக் கொண்டு ஆறியிருக்க மாட்டாத (கண்ணனாகிற) பிள்ளையானவன் மண் உண்டும், Man Undum - (பிரளயத்தில்) உலகங்களை யெல்லாம் அமுது செய்தும்) பேய்ச்சி, Peychchi - பூதனையினது முலை, Mulai - (நஞ்சு தீற்றின) முலையை உண்டும், Undum - அமுது செய்தும் ஆற்றதாய், Aatrathai - த்ருப்தி பெறாதவனாய் வெண்ணெய், Vennai - வெண்ணெயை விழுங்க, Vizhunga - (களவு செய்து) விழுங்கின வளவிலே ஆய்ச்சி, Aaychi - யசோதைப்பிராட்டி வெகுண்டு, Vegundu - கோபங்கொண்டு கண்ணி கயிற்றினால், Kannni Kayittrinai - பல முடிச்சுகளை யுடைய தாம்பினால் கட்ட, Katta - உரைக்கக்கட்டிப் போட, தான், Thaan - ஸர்வசந்தனான தான் கட்டுண்டு இருந்தான், Kattundu Irundhaan - (அதற்கொரு பரிஹாரம் செய்து கொள்ளமாட்டாமல்) கட்டுண்டிருந்தான் |
| 2373 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமானை நெஞ்சே பூரணமாக நினை -என்கிறார் – அவன் சிறைப் பட்டான் ஒருவன் என்று இராதே நம் சிறையை வெட்டி விட வல்லான் ஒருவன் என்று புத்தி பண்ணு -என்கிறார் – ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் — 92 | மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,
மகனா மவன்மகன்றன் காதல் – மகனை
சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே
நிறைசெய்தென் நெஞ்சே. நினை. | பதவுரை Show / Hideஎன் நெஞ்சே, En Nenchae - எம் மனமே! ஒருவற்கு மகன் அல்லாத, Oruvarukku Magan Alladha - (கருமமடியாக) ஒருவனுக்கு மகனாகப்பிறந்தத் தகாத (ஸர்வலோக பிதாவான) மா மேனி, Maa Meeni - சிறந்த திருமேனியையுடைய மாயன், Maayan - ஆச்சர்யபூதனாய் மகன் ஆமவன், Magan Aamavan - (வஸுதேவர்க்குப்) பிள்ளையாகப் பிறந்தவனாய் மகன் தன், Mahan Than - தனது மகனான பிரத்யும்நனுடைய காதல் மகனை, Kaadhal Mahanai - இஷ்ட குமாரனான ஆநிருத்தாழ்வானை சிறை செய்த, Sirai Seidha - சிறையிலேவைத்த வாணன், Vaanan - பாணாஸுரனுடைய தோள், Thol - தோள்களாயிரத்தையும செற்றான், Setraan - அறுத்தொழித்தவனான பெருமானுடைய கழலே, Kazhale - திருவடிகளையே நிறை செய்து, Nirai Seidhu - பூர்த்தியாக நினை, Ninai - சிந்தை செய்வாயாக |
| 2374 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி இருக்கிற ஸ்ரீ எம்பெருமான் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்திலே ஒருவரும் அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை – ஆனாலும்-நெஞ்சே நீ யவனை உன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் – இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும் நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் – 93 | நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,
அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், – கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,
உள்ளத்தே வைநெஞ்சே உய்த்து. | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenchae - ஓமனமே! நீண்ட, Neenda - (முன்பு உலகங்களை அளப்பதற்காக) வளர்ந்து திருமால், Thirumaal - ச்ரிய பதியானவனும் கனைத்து உலவு வௌளத்து, Kanaiththu Ulavu Voulathu - கோஷித்துக் கொண்டு எங்கும் பரந்த பிரளய வெள்ளத்திலே ஒர்பிள்ளை ஆய் அனைத்து உலகும் உள்ஒதுக்கி, Orpillai Aayi Anaiththu Ulagum Ulodukki - ஒப்பற்ற சிறு குழந்தையாய் அனைத்து உலகும, Anaiththu Ulagum - உலகங்களை யெல்லாம் உள் ஒடுக்கி, Ul Odduki - திருவயிற்றினுள்ளே அடக்கி ஆல் மேல், Aal Mael - ஆலந்தளிரின் மேலே மெள்ள துயின்றானை, Mella Thuyinraanaai - மெள்ள சயனித்துக்கொண்டவனுமான பெருமானை உய்த்து, Uyuthu - சாரணாக அநுஸந்தித்து உள்ளத்தே வை,, Ullaththae Vai - தியானிக்கக் கடவாய் உலகில், Ulagil - இவ்வுலகில் நினைத்து, Ninaiththu - (அப்பெருமானை) அநுஸந்தித்து ஆர் தெளிவார், Aar Thelivaar - தெளிவுபெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை) |
| 2375 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி -வையம் தகளி-தொடங்கி-இவ்வளவும் வரத் தாம் பெற்ற பேற்றைச் சொல்லுகிறார் – கீழில் பாட்டில்-நெஞ்சே உள்ளத்தே வை -என்றார் – இப் பாட்டில் – தாம் அவனை அனுசந்தி என்ற அளவிலே அத்யபி நிவேசத்தோடே கூட ஸ்ரீ எம்பெருமான் உள்ளே புகுந்து தம் பக்கல் வ்யாமுக்தன் ஆனபடியை அருளிச் செய்கிறார் – இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் – 94 | உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், – மெத்தெனவே
நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,
பொன்றாமை மாயன் புகுந்து, | பதவுரை Show / Hideஉய்ந்து உணர்வு என்னும், Uyinthu Unarvu Ennum - விவேக வுண்ச்சியாகிற ஒளி கொள் விளக்கு, Oli Kol Vilakku - உஜ்வலமான தீபத்தை ஏற்றி, Aetri - ஏற்றி அவனை நாடி வைத்து, Avanai Naadi Vaiththu - அவ்வெம்பெருமானைத் தேடிப்பிடித்து வலைப்படுத்தேன், Valaipadutthen - ஸ்வாதீனப்படுத்திக்கொண்டேன் மாயன், Maayan - அப்பெருமான் பொன்றாமை, Ponraamai - குறைவின்றி என் நெஞ்சத்து, En Nenchatthu - என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்து, Pugundhu - வந்துசேர்ந்து மெத்தென, Meththena - மெதுவாக நின்றான், Nindraan - (முதலில்) நின்றான் இருந்தான், Irundhaan - (பிறகு) வீற்றிருந்தான், கிடந்தான், Kidandhaan - (அதன் பிறகு) பள்ளிகொண்டருளினான். |
| 2376 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் – நெஞ்சே-இப்படி உபகாரகனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளிலே வணங்கி-அவனை வாழ்த்து என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் – தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் – தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லா நின்று கொண்டு -நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் – 95 | புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்
இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து. | பதவுரை Show / Hideஅந்தி புகுந்து, Andhi Pugundhu - ஸாயங்காலமானது வந்துசேர்ந்து இலங்கும் பொழுதத்து, Ilankum Pozhudhatthu - விளங்கும் ஸமயத்திலே அரி ஆய், Ari Aay - நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவ்வதரித்து, இகழ்ந்த இரணியனது ஆகம், Ikazhndha Iraniyanathu Aagam - நிந்தித்துக்கொண்டிருந்த ஹிரண்யா ஸுரனது சரீரத்தை சுகிர்ந்து, Sukirndhu - பலகூறாக வகிர்ந்து எங்கும் சிந்த, Engum Sintha - (ரத்தம்) எங்கும் சிந்தும்படியாக பிளந்த, Pilandha - பிளந்தொழித்த திருமால், Thirumaal - எம்பெருமானுடைய திருஅடியே, Thiruvadie - திருவடிகளையே என்நெஞ்சமே, Ennenjamai - எனது மனமே! வந்தித்து வாழ்த்து, Vandhithu Vazhththu - தலையார வணங்கி வாயாக வாழ்த்து |
| 2377 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நித்ய ஸூரிகள் உடைய பரிமாற்றமும் பொறாதே ஸுகுமார்யத்தை உடையவன் -என்கிறது – அன்றிக்கே – அளவுடையாரான ப்ரஹ்மாதிகளும் அவன் திருவடிகளிலே வணங்கித் தங்கள் அபேஷிதம் பெறுவது -என்கிறார் மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -11 -என்னக் கடவது இறே – நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது – நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார் 96 | வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, – கேழ்த்த
அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,
அடித்தா மரையாம் அலர். | பதவுரை Show / Hideகேழ்த்த அடி, Kezhththa Adi - பெருத்த தாளையுடைய தாமரை மலர் மேல், Thamarai Malar Mel - தாமரைப்பூவிற் பிறந்த மங்கை, Mangai - பெரிய பிராட்டிக்கு மணாளன், Manalaln - வல்லபனான எம்பெருமானுடைய அடி ஆம் தாமரை அலர், Adi Aam Thamarai Alar - திருவடிகளாகிற தாமரைப் பூக்களை வானோர், Vaanor - தேவர் வாழ்த்திய வாயர் ஆய், Vazhththiya Vayaar Aay - வாயால் வாழ்த்துகின்ற வராய்க்கொண்டு மணி மகுடம், Mani Makudam - மணிகளழுத்தின மகுடத்தை தாழ்த்தி, Thazhththi - தாழவிட்டு வணங்க, Vananga - வணங்குவதனால் தழும்பு ஆமே, Thazhumpu Aame - (அத்திருவடிகள்) தழும்பேறிக் கிடக்கின்றனவே. |
| 2378 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழில் படியாய்-ஸ்ரீயபதியாய்-அயர்வறும் அமரரர்கள் அதிபதி யாகையாலே அவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெரும் அத்தனை -அல்லது ஸ்வ யத்னத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது -என்கிறார் – அயர்வறும் அமரரர்கள் பரிமாறும் நிலம் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று என்கிறார் – இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் – 97 | அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,
மலரெடுத்த மாமேனி மாயன், – அலரெடுத்த
வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்
கெண்ணத்தா னாமோ இமை. | பதவுரை Show / Hideஅலர் எடுத்த உத்தியான், Alar Eduththa Uththiyaan - தாமரைப்பூ ஓங்கி யிருக்கப்பெற்ற திருநாபியை யுடையவனும் எழிலாய மலர் எடுத்த, Ezhilaaya Malar Eduththa - அழகிய காயம் பூப்போன்ற மா மேனி, Maa Meeni - சரிய திருமேனியை உடையனுமான மாயன், Maayan - எம்பெருமான் அவர் எடுத்த வண்ணத் தான், Avar Eduththa Vannath Thaan - காஞ்சிமலர்போன்ற நிறத்தை யுடையனான இந்திரனென்ன மா மலரான், Maa Malaran - தாமரைப்பூவிற் பிறந்த பிரமனென்ன வார் சடையான், Vaar Sadayaan - நீண்ட ஜடையை யுடையனான சிவனென்ன என்ற இவர்கட்கு, Endra Ivangadku - ஆகிய இத்தேவர்கட்கு இமை, Imai - சற்றேனும் எண்ணத்தான் ஆமோ, Ennaththaan Aamo - நெஞ்சால் நினைக்கவுங் கூடியவனோ |
| 2379 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – தன்னை ஆஸ்ரயித்தவர்கள் உடைய விரோதிகளைப் போக்குமவன் என்கிறார் – நம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சம்சார நிவ்ருத்தியைப் பண்ணித் தருவான் ஸ்ரீ எம்பெருமான் என்றபடி – தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் – 98 | இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,
அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், – நமஞ்சூழ்
நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. | பதவுரை Show / Hideஇமம் சூழ் மலையும், Imam Soozh Malarum - பனியாலே சூழப்பட்டிருகிற இமயமலையையும் இரு விசும்பும், Iru Visumbum - பெரிய ஆகாயத்தையும் காற்றும், Kaatrum - வாயுவையும் அமம் சூழ்ந்து, Amam Soozhnthu - (பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து அற விளங்கி தோன்றும், Aru Vilangi Thondrum - மிகவும் விளங்கிக் கண்ணெதிரே வந்து தோன்றின துரகத்தை, Duragathai - குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னுமசுரனை தொட்டு, Thottu - திருக்கையால் பற்றி வாய் பிளந்தான், Vaai Pilandhaan - (அவனது) வாயைக் கிழிந்துப்போட்ட பெருமான் நம்மை, Nammai - நம்மை நமன் சூழ் நரகத்து நணுகாமல் கரப்பான், Naman Soozh Narakaththu Nanugamal Karappaan - யமனைத் தலைவனாகக்கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன் |
| 2380 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே நமக்கு பரம பிராப்யம் என்கிறார் – ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வபாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் – 99 | தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, – குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள்முதலே நங்கட்குச் சார்வு. | பதவுரை Show / Hideதொட்ட, Thotta - ஏந்தின படை எட்டும், Padai Ettum - எட்டு திவ்யாயுதங்களாலும் தோலாத, Tholaadha - தோல்வியடையாத வென்றியான், Vendriyaan - ஜயசீலனும் அட்டபுய காத்தான், Attapuy Kaaththaan - கச்சித் திருவட்டபுயகரத் திருப்பதியிலுள்ளவனும் அந்நான்று, Annanru - முன்பொருகாலத்தில் குட்டத்து, Kuttaththu - நீர்ப் பொய்கையிலே கோள் முதலை துஞ்ச, Kol Muthalai Thunja - மிடுக்குடைய முதலை முடியும்படியாக குறித்து எறிந்த சக்கரத்தான், Kuriththu Erintha Chakkaraththaan - இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியையுடைய பெருமானது தாள் முதலே, Thaal Mudhale - பாதமூலமே நங்கட்கு, Nangadku - எங்களுக்கு சார்வு, Saarvu - பரமப்ராப்யம் |
| 2381 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ எம்பெருமான் புகலிடமாவது ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு என்கிறார் – ஸ்ரீ எம்பெருமான் ஆபாஸ்ரயமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் – 100 | சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், – காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,
தேனமரும் பூமேல் திரு. | பதவுரை Show / Hideசக்கரத்தான், Chakkaraththaan - திருவாழியைக் கையிலே உடையவனும் தண் துழாய் தார் வாழ், Than Thuzhai Thaar Vaal - குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற வரை மார்பன் தான், Varai Maarban Thaan - மலைபோன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால் முயங்கும், Muyankum - ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய் கார் ஆர்ந்த வான், Kar Arnta Van - மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே அமரும், Amarum - நிலைத்து நிற்கக் கூடியதான மின், Min - மின்னல்போல இமைக்கும், Imaykkum - விளங்குகின்றவளாய் வண் தாமரை, Van Thamarai - அழகிய தாமரைப் பூப்போன்ற நெடு, Netu - நீண்ட கண், Kan - திருக்கண்களை யுடையளாய் தேன் அமரும் பூமேல், Ten Amarum Pumel - தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான திரு, Thiru - பெரிய பிராட்டியார் நமக்கு என்றும் சார்வு, Namakku Enrum Carvu - நமக்கு எப்போதும் சரணம். |