| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | பொது தனியன்கள் || (இப்புவியில் அரங்கேசற்கு ஈடளித்தான் வாழியே என்று மணவாள மாமுனிகளின் பெருமை பேசுகிறது. ஸ்ரீமணவாள மாமுனிகள் திருவரங்கம் பெரிய கோயிலில் ஸ்ரீரங்கநாதர் முன்பே திருவாய்மொழியின் சிறந்த வியாக்கியமான ஈடு முப்பத்தாராயிரப்படியை காலக்ஷேபம் செய்தருளினார். காலக்ஷேப சாற்றுமுறையன்று ஸ்ரீரங்கநாதர் சிறுபிள்ளை வடிவுடன் ஓடிவந்து கை கூப்பி நின்று “ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” என்று தொடங்கும் இந்த தனியனை வெளியிட்டார்) 1 | ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் | யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் || | Sri Sailesha,ஶ்ரீசைலேச - “ஶ்ரீசைலேசர்” என்கிற ஸ்வாமி ஸ்ரீதிருவாய்மொழிப் பிள்ளையின் Dhayapathram,தயாபாத்ரம் - எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும் Theepakyaadhi,தீபக்யாதி - பக்தி, ஞானம், வைராக்யம் போன்ற Gunarnavam,குணார்ணவம் - குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும் Yadhinthira Pravanam,யதீந்திர ப்ரவணம் - யதிராஜரான ஸ்ரீ ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான Vandhe Ramya Jamadaram Munim,வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் - அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன் |
| 0 | பொது தனியன்கள் || (இதில், என் ஆசார்யர் என ஆழ்வான் இராமாநுசரை வைத்துப் பாடியுள்ளார். இதை அநுஸந்திக்கும் ஒவ்வொருவரும் தமக்குப் பஞ்ச சம்ஸ்காரம் அருளிய தத்தம் ஆசார்யரை நினைந்து துதிப்பது க்ரமமாகும்) 2 | லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம் | அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் || | Lakshmi Natha Samarampaam,லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் - மஹாலக்ஷ்மியின் நாதனாகிய நாராயணனைத் தொடக்கமாகவும் Nathayaamuna Madhyamaam,நாதயாமுந மத்யமாம் - நாத முனிகள் ஆளவந்தாரை நடுவாகவும் Asmathaacharya Paryanthaam,அஸ்மதாசார்ய பர்யந்தாம் - என் ஆசார்யனை ஈறாகவும் Vandhe Guruparamparaam,வந்தே குருபரம்பராம் - உடைய குரு பரம்பரையை வணங்குகிறேன் |
| 0 | பொது தனியன்கள் || (அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும், அடியேன் குருவும், கருணைக் கடலேபோல் வடிவெடுத்தவரும் ஆகிய பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்) 3 | யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாயமேநே | அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே || | Yo Nithyam,யோ நித்யம் - எப்பொழுதும் Asyudha,அச்யுத - அச்யுதனின் Padambhuja Yukma Rukma,பதாம்புஜ யுக்ம ருக்ம - பொன் போன்ற இரண்டு திருவடித் தாமரைகளில் Vyamohatas Tathitarani, வ்யாமோஹதஸ் ததிதராணி - எப்பொழுதும் வைத்திருக்கும் பக்தியினாலே உலகில் உள்ள மற்ற எல்லாப் பொருள்களையும் Thrunaayamene, த்ருணாயமேநே - மிகவும் அற்பமான புல்லுக்கு சமமான Asmath Kuroor,அஸ்மத் குரோர் - அஞ்ஞானத்தை போக்குபவரே குரு Bhagavathosya,பகவதோஸ்ய - ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் உடையை அத்தகைய பகவானும் Dhayaka Sindho,தயைக ஸிந்தோ - கருணைக் கடலேபோல் Ramanujasya Charanau Charanam Prapadye,ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே - ஸ்நந்த்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே ஸ்வாமி திருவடிகளில் சாய்ப்பதே நமக்கு பிராப்யம் |
| 0 | பொது தனியன்கள் || (ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம் எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்) 4 | மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம் ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம் ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா | Maatha, மாதா - உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது,பெருகைக்கு வருந்தி, பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி, பிரசவ வேதனையை அனுபவித்து, அஸூத்திகளையும் மதியாதே, பால்ய தசையிலே ஆதரித்து, பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து, அகல இசையாதே அவன் பிரியத்தையே வேண்டும் - மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை Pitha, பிதா - அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி உத்பாதகனாய் , என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும் Yuvathayas, யுவதயஸ் - இருவரையும் மறந்து விரும்பும், யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை Thanaya, தனயா - அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய், பால்யத்தில் ஸூககரனாய், பக்வ தசையில் ரஷகனாய், ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான, புத் என்னும் நரகத்தை தாண்டுவிப்பவன் – புத்ரனைப் போல் இருக்கை Vibhoothi, விபூதி - விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே, இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை Sarvam, சர்வம் - அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை Yatheva, யதேவ - அவதாரணத்தால்- சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -என்று இருக்கும் ஆழ்வார் நினைவுக்கே Niyamena, நியமேன - என்றும் ஒக்க அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய, ப்ராமாதிகமாகவும் புறம்பு போவது அன்றிக்கே இருக்கை Madanavyanaam, மதநவ்யாநாம் - இவருக்கு முன்பு உள்ளோர்க்கும் பின்பு உள்ளோர்க்கும் -ஸ்ரீ வைஷ்ணவ சந்தானங்களுக்கு அனைவருக்கும் ஆழ்வார் திருவடிகளே சர்வஸ்வம் -என்றதாயிற்று Aathyasya, ஆத்யஸ்ய - வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆசார்யராய் இருக்கை Na Kulapather, ந குலபதேர் - ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே கோத்ர ரிஷிகளும் அவரே என்கை Vakulaabi raamam, வகுளாபி ராமம் - திரு மகிழ மாலையாலே அலங்க்ருதமாய் உள்ளத்தை - மகிழ் அலங்காரமான திருவடிகள் (மகிழ் மாலை மார்பினன் -வகுளாபரணர்) Sri matha, ஸ்ரீ மத - ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே நித்ய சம்யுக்தமாய் இருக்கை Thathangri yugalam, ததங்க்ரி யுகளம் - அது -என்னும் அத்தனை ஒழிய பேசி முடிக்க ஒண்ணாது -என்கை Yugalam, யுகளம் - சேர்த்தியால் வந்த அழகை உடைத்தாய் இருக்கை Pranamaami moorthna, ப்ரணமாமி மூர்த்நா - ஆழ்வார் உடைய திருவடிகளை நினைத்த வாறே நம -என்று நிற்க மாட்டாதே அவர் திருவடிகளிலே தலை சேர்க்கிறார் |
| 0 | பொது தனியன்கள் || நிரவதிக பகவத் பிரேம யுக்தரான ஆழ்வார்கள் பதின்மரையும் அவர்களுக்கு சேஷ பூதரான மதுரகவி யதிவரர்கள் இருவரையும் தாம் நித்ய சேவை பண்ணும் படியை அருளிச் செய்கிறார் 5 | பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத ஸ்ரீ பக்தி சார குலசேகர யோகி வாஹான் பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரணாதோஸ்மி நித்யம் | Bootham, பூதம் - பூதத்தார் (பூதத்தாழ்வார்) Sarasya, சரஸ்ய - பொய்கையார் (பொய்கையாழ்வார்) Mahathahvaya, மஹதாஹ்வய - பேயன் (பேயாழ்வார்) Patta naatha, பட்ட நாத - பட்டர் பிரான் (பெரியாழ்வார்) Sri, ஸ்ரீ - ஆண்டாள் Bhakthi saara, பக்தி சார - பக்திசாரர் (திருமழிசையாழ்வார்) Kulasekara, குலசேகர - ஸ்ரீ குலசேகரப் பெருமாள் (குலசேகராழ்வார்) Yogi vaahaan, யோகி வாஹான் - முனி வாஹரான பாண் பெருமாள் (திருப்பாணாழ்வார்) Bhakthangri renu, பக்தாங்க்ரி ரேணு - தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் Parakaala, பரகால - மருவலர் தமுடல் துணிய வாள் வீசும் பரகாலன் (திருமங்கையாழ்வார்) Yathindra mishraan, யதீந்திர மிஸ்ரான் - எதித்தலை நாதனான எம்பெருமானார் (எதிராசர்), மிஸ்ர சப்தம் பெரியோரைச் சொல்லுகிறதாய் - அத்தாலே சடகோபனை சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவரான மதுரகவிகளை சொல்லுகிறது என்னுதல் (மதுரகவி ஆழ்வார்) Sri math Paraangusa munim, ஸ்ரீ மத் பராங்குச முநிம் - பராங்குசர் (நம்மாழ்வார்) Pranathosmi nithyam, பிரணாதோஸ்மி நித்யம் - நித்யம் பிரணத: அஸ்மி (தினமும் இந்த மகான்கள் உடைய சங்கத்தை வணங்குகிறேன்) |
| 0 | திருப்பல்லாண்டு - தனியன் || (இது தான் திருப்பல்லாண்டுத் தனியனாயிருக்கும் . அந்தத் திருப்பல்லாண்டு பாடுகைக்கடியான பெரியாழ்வார் வைபவத் தைப் பெருக்கப் பேசி , அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது ) 6 | குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான் நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாக்ஷாத் த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி | Guru Mukham,குருமுகம் - ஆசார்ய முகத்தாலே Anaditya,அநதீத்ய - அப்யசிக்காமலே Prah,ப்ராஹ - உபன்யசித்தாரோ Vedhan,வேதான் - வேதங்களை Aseshan,அசேஷான் - சமஸ்தமாகிய Nara Pathi,நர பதி - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால் Parikliptham,பரிக்லிப்தம் - ஏற்படுத்தப்பட்ட Sulkam,சுல்கம் - வித்யா சுல்கத்தை Adhathukama,ஆதாதுகாம - க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய் Svasuram,ஸ்வசுரம் - மாமனாரும் Amara,அமர - தேவதைகளால் Vandhyam,வந்த்யம் - ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும் Ranga Nathasya,ரங்க நாதஸ்ய - ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு Saakshath, ஸாக்ஷாத் - பிரத்யக்ஷமாய் Dwija Kula,த்விஜகுல - ப்ராஹ்மண வம்சத்துக்கு Thilagam,திலகம் - அலங்கார பூதருமாகிய Tham Vishnu Sitham,தம் விஷ்ணு சித்தம் - அந்த பெரியாழ்வாரை Namami,நமாமி - சேவிக்கிறேன் |
| 0 | திருப்பல்லாண்டு - தனியன் || (இதில் ஸ்ரீ வில்லி புத்தூர் பட்டர்பிரானான பெரியாழ்வார் அவதரண ஸ்தலத்தை அனுசந்திப்பார்- திருவடிகளைத் தொழுகையால் உண்டான ப்ரீதியையும்- அவர் செயலைச் சொல்லுகையால் உண்டான விரோதி நிவர்த்தியாதிகளில் த்ருப்தியையும் மனசோடே சொல்லி உலாவுகிறதாய் இருக்கிறது) 7 | மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால் சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள் கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து | Min,மின் - மின்னுதல் (மணிகளால் ஒளி விடுதல்) Ar,ஆர் - நிறைந்த அதிகமான Thadam,தடம் - அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள Mathil,மதிள் - திரு மதிளாலே Soozh,சூழ் - வளைக்கப்பட்ட Villi Puthoor endru,வில்லி புத்தூர் என்று - ஸ்ரீ வில்லி புத்தூர் என்று Oru kaal sonnaar,ஒரு கால் சொன்னார் - ஒரு தரம் உச்சரிதவருடைய Kazhal Kamalam,கழல் கமலம் - திருவடித் தாமரைகளை Soodinom,சூடினோம் - விசேஷ புஷ்பமாக முடித்தோம் Munnal,முன்னாள் - புருஷார்த்தம் வெளியாக காலத்தில் Kizhi,கிழி - பொருள் முடிப்பை Aruthaan endru,அறுத்தான் என்று - அறுத்து வெளி இட்டவர் என்று Uraththom,உரைத்தோம் - சொல்லப் பெற்றோம் ஆகையால் Keezhmai,கீழ்மை - நரகத்தில் Ini,இனி - இனிமேல் Seerum,சேரும் - முன் போல் செல்லுகிற Vazhi,வழி - மார்க்கத்தை Aruththom,அறுத்தோம் - அறப் பண்ணினோம் Nenje,நெஞ்சே - மனசே Vandhu,வந்து - சம்ஸார ரஹீதராய் வந்து |
| 0 | திருப்பல்லாண்டு - தனியன் || (இதில் பிரபந்த வக்தவான பெரியாழ்வார் திருவடிகளில் உபாய ச்வீகாரத்தை -சொல்கிறது) 8 | பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று | Pandiyan,பாண்டியன் - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற பாண்டிய ராஜன் Kondada,கொண்டாட - மேன்மேல் ஏத்த Pattar Piran,பட்டர்பிரான் - ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன் Vandhaan endru,வந்தான் என்று - எழுந்து அருளினான் என்று Eendiya,ஈண்டிய - கூடின அநேகமான Sangam eduthu,சங்கம் எடுத்து - சங்குகளைக் கொண்டு Ootha,ஊத - அநேகர் சப்திக்க Vendia,வேண்டிய - அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய Vedhangal,வேதங்கள் - வேதார்தங்களை Oodhi,ஓதி - தெரியச் சொல்லி Viraindhu,விரைந்து - தாமசியாமல் Kizhi,கிழி - வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை Yaruthaan,யறுத்தான் - அறுத்தவனுடைய Paadhangal,பாதங்கள் - திருவடிகளே Yaamudaiya,யாமுடைய - நாங்கள் ஆஸ்ரயமாக உடைய Patru,பற்று - ஆதாரம் |
| 1 | திருப்பல்லாண்டு || 1 | பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு | பல்லாண்டு, pallaandu - பல(எண்ண முடியாக) வருஷங்கள். இங்கு ஆண்டு மனுஷ்ய லோகத்தில் ஆண்டைக் குறிக்கும் பல்லாண்டு, pallaandu - தேவ வருஷத்தில் எண்ண முடியாக வருஷங்கள் பல்லாயிரத்தாண்டு, pallayiraththaandu - பிரஹ்மாவின் வருஷக் கணக்கில் எண்ண முடியாத வருஷங்கள் பலகோடி நூறாயிரம், palakodi nooraayiram - எண்ண முடியாத பிரஹ்மாக்களுடைய கணக்கில்லாத வருஷங்கள்- அதாவது: கால தத்த்வம் உள்ளவரை மல்லாண்ட, mallanda - மல்-சாணூரன்; முஷ்டிகன் முதலிய மல்லர்களை. ஆண்ட-அடக்கிக் கொன்ற திண்தோள், thinthol - திண்-திடமான ; மஹா பலம் பொருந்திய தோள் -இருத் தோள்களை உடைய மணிவண்ணா, manivanna - மாணிக்கம் போன்ற வர்ணத்தையும் ஸ்வபாவத்தையும் உடையவனே உன், un - உன்னுடைய செவ்வடி, chevvadi - செம்-அடி ; சிவந்த திருவடியின் செவ்விதிருக் காப்பு, chevvi thiruk kaappu - அழகுக்கு குறைவற்ற ரக்ஷை உண்டாக வேணும் . ) |
| 2 | திருப்பல்லாண்டு || 2 | அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே | அடியோமோடும், adiyoomodum - தாஸரான எங்களோடும் நின்னோடும், ninnodum - ஸ்வாமியான உன்னோடும் பிரிவின்றி, pirivinri - பிரிவில்லாமல் இருக்கும் ஸம்பந்தம் ஆயிரம் பல்லாண்டு, aayiram pallaandu - எந்நாளும் நித்யமாய்ச் செல்ல வேண்டும் வடிவாய், vativai - அழகே உருவெடுத்தவளும் ஸர்வாபரணபூஷிதையுமான வலமார்பினில் வாழ்கின்ற, valamaarpinil vaazhginra - வலத்திருமார்பில் நித்யவாஸம் பண்ணுகிற மங்கையும், mangaiyum - நங்கை; ஸ்த்ரீத்வத்தில் பரிபூர்ணமானவள்; நித்ய யௌவனத்தை உடையவள். ('உம்' என்பதினால் பூமி நீளாதேவிகளும் காப்பிடப்படுகிறார்கள்.) பல்லாண்டு, pallaandu - நித்யமாகக் கூடி இருக்கவேண்டும் ('உம்' என்பதினால் பூமி நீளாதேவிகளும் காப்பிடப்படுகிறார்கள்) வடிவார் சோதி, vativar jodhi - பகவானுடைய திவ்யசரீரத்தையும் சூழும் ஒளியையுடைய வலத்துறையும், valathuraiyum - உன் வலது திருக்கையில் நித்ய வாஸம் பண்ணுகிற சுடராழி, sudaraazhi - எதிரிகளை எரிக்கும் சக்கரத்தாழ்வானும் பல்லாண்டு, pallaandu - சாச்வதமாய்ச் சேர்ந்து இருக்கவேண்டும் படை போர் புக்கு, padai por pukku - ஆயுதமாய் போரிலேபுகுந்து முழங்கும், muzhangum - சப்திக்கும் அப்பாஞ்ச சன்னியமும், appaanja sanniyamum - அந்தபாஞ்சு சன்னியம் என்று பெயர் பெற்ற சங்கமும் பல்லாண்டே, pallaandae - அத்யமாய் இருக்கவேண்டும். இருக்கவேண்டும் |
| 3 | திருப்பல்லாண்டு || 3 | வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம் ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை பாழாள் ஆகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே | வாழ் ஆள் - Vaazh Aal - கைங்கர்யமாகிற போகத்துக்கு பட்டு - Pattu - பொருந்தி நின்றீர் - Nindreer - நிலைநின்றவர்களாய் உள்ளீரேல் - Ulleerel - இருப்பீர்க ளானால் வந்து - Vandhu - (விரைவாக) மண்ணும் - Mannum - (திருமுளைத் திருநாளைக்குப்) புழுதிமண் சுமக்கையையும் மணமும் - Manamum - (அந்தக்கலியாணத்திற்கு) அபிமானிகளாய் இருக்கையையும் கொண்மின் - Konmin - ஸ்வீகரியுங்கள் கூழ் - Koozh - சோற்றுக்காக ஆள் பட்டு - Aal Pattu - (பிறர்க்கு) அடிமைப்பட்டு நின்றீர்களை - Nindreergalai - (எங்கும் பரந்து) நிற்கும் உங்களை எங்கள் - Engal - (அநந்யப்ரயோஜனரான) எங்களுடைய குழுவினில் - Kuzhuvinil - கூட்டத்திலே புகுதல் ஒட்டோம் - Puguthal Ottom - சேரவிடமாட்டோம் நாங்கள், Naangal - நாங்களோவெனில் ஏழ் ஆள் காலும், Ezh Aal Kaalum - முன்னேழ் பின்னேழ் நடுவேழாகிய இருபத்தொரு தலைமுறைகளிலும் பழிப்பு இலோம், Pazhippu Ilom - (ஒருவித மான) குற்றமும் இல்லாதவர்கள் இராக்கதர், Iraakkathar - (ராவணன் முதலிய) ராக்ஷஸர்கள் வாழ், Vaazh - வாழ்ந்துவந்த இலங்கை, Ilankai - லங்கையானது பாழ் ஆள் ஆக, Paazh Aal Aaga - பாழடைந்த ஆளை உடையதாம்படி படை, Padai - யுத்தத்திலே பொருதானுக்கு, Poruthaanukku - (அன்று) சண்டை செய்தருளிய எம்பிரானுக்கு பல்லாண்டு கூறுதும், Pallaandu Koordhum - (இன்றிருந்து) திருப்பல்லாண்டு பாடுமவர்களாயிருக்கிறோம். |
| 4 | திருப்பல்லாண்டு || 4 | ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே | ஏடு, Aedu - பொல்லாங்கான நிலத்தில், Nilathil - நிலமாகிய மயானத்தில் இடுவதன் முன்னம், Idhuvadhan Munnam - (உங்களைச் ) சேர்ப்பதற்கு முன் வந்து, Vandhu - (உங்கள் திரளிலிருந்து ) வந்து எங்கள் குழாம், Engal Kuzhaam - எங்கள் கோஷ்டியிலே புகுந்து, Pugundhu - ப்ரவேசித்து கூடும் மனம் உடையீர்கள், Koodum Manam Udaieergal - கூடுவோம் என்னும் நினைவுள்ளவர்களாகில் வரம்பு ஒழி வந்து, Varambu Ozi Vandhu - (ஆத்மான மாவை மட்டும் அனுபவிப்பது என்னும் ) வரம்பை விட்டு வந்து ஒல்லை, Ollai - விரைவாக கூடுமினோ, Koodumino - (எங்கள் கோஷ்டியில்) கூடுங்கள் நாடும், Naadum - நாட்டுப்புறங்களிலுள்ள ஸாமாந்யரும் நகரமும், Nagaramum - நகரத்திலுள்ள அறிவாளிகளும் நன்கு அறிய, Nangu Ariya - நன்றாக அறியும்படி நமோ நாராயணாய என்று, Namo Naaraayanaaya Endru - திருமந்திரத்தை அனுஸந்தித்து பாடும், Paadum - ( ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் ) பாடக்கூடிய மனம் உடை, Manam Udaie - நினைவுள்ள பத்தர் உள்ளீர், Pathar Ullireergal - பக்தியை உடையவர்களாகில் வந்து பல்லாண்டு கூறுமினே, Vandhu Pallaandu Kooremine - வந்து திருப்பல்லாண்டு பாடுங்கள் |
| 5 | திருப்பல்லாண்டு || 5 | அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் தனக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது ஆயிர நாமம் சொல்லிப் பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல் லாயிரத்தாண்டு என்மினே | அண்டக் குலத்துக்கு, Andak Kulathukku - அண்டங்களின் ஸமூஹத்துக்கு அதிபதி ஆகி, Adhipathi Aagi - நியமிப்பவனாகி அசுரர், Asurar - அஸுரர்களும் இராக்கதரை, Iraakkatharai - ராக்ஷஸர்களுமாகிற இண்டக் குலத்தை, Indak Kulathai - நெருக்கின கூட்டத்தை எடுத்து, Eduthu - திரட்டி களைந்த, Kalaindha - ஒழித்த இருடீகேசன் தனக்கு, Irudeekesan Thaankku - இந்திரியங்களுக்கு அதிபதியான எம்பெருமானுக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர், Thondak Kulathil - அடிமை செய்பவர்கள் குலத்திலே உள்ளீர், Ullireer - உள்ளவர்களான வந்து, Vandhu - எங்கள் கோஷ்டிக்கு வந்து அடி, Adi - அச்சுதனுடைய திருவடிகளை தொழுது, Thozhudhu - ஸேவித்து ஆயிர நாமம் , Ayira Naamam - அவனுடைய ஆயிரம் பெயர்களையும் சொல்லி, solli - வாயாரச்சொல்லி பண்டைக் குலத்தை, Pandai Kulathai - புருஷோத்தமனிடம் சென்று மற்றொரு பலனைப் பெற்று அகலுபவர்களாயிருந்த பழைய ஜன்மத்தை தவிர்ந்து, Thavirndhu - நீக்கி பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே, Pallaandu Pallaayiraththaandu Enmine - பலகால் மங்களாசாஸனம் செய்யுங்கள் |
| 6 | திருப்பல்லாண்டு || 6 | எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு வோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே | எந்தை, Endhai - நானும் என் தகப்பனும் இருவர் தந்தை தந்தை தந்தை, Thandhai Thandhai Thandhai - என்று ஒரு மூவர் தம் மூத்தப்பன், Tham Moothappan - அவனுக்குத் தந்தையும் பாட்டனுமாகிய ஏழ் படி கால் தொடங்கி, Ezh Padi Kaal Thodangi - ஏழு தலைமுறைகள் தொடங்கி வந்து, Vandhu - மங்களாசாஸநம் பண்ணத்தக்க ஸமயங்கங்களிலே வந்து வழி வழி, Vazhi Vazhi - முறை முறையாக ஆட்செய்கின்றோம்,Aatcheikinrom - அடிமை செய்கிறோம் திருவோணத் திருவிழவில், Thiruvonath Thiruvizhavil - திருவோணமென்கிற திருநாளிலே அந்தியம் போதில், Andhiyam Pothil - (அஸுரருடைய பலம் வளரும்) அந்திவேளையிலே அரியுருவாகி, Ariyuruvagi - நரஸிம் ஹரூபத்தை உடையவனாய் அரியை , Ariyai - (தன் அடியவனான ப்ரஹ்லாதனுக்கு) சத்துருவான இரணியனை அழித்தவனை, Azhithavannai - உருவழித்தவனுக்கு பந்தனை தீர, Pandhanai Theera - (அவனை ஸம் ஹரித்ததினால் உண்டான) ஆயாஸம் தீரும்படியாக பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதும், Pallaandu Pallaayiraththaandendru Paaduthum - காலதத்வமுள்ள வரையில் மங்களாசாஸநம் செய்வோம் |
| 7 | திருப்பல்லாண்டு || 7 | தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே | தீயில், Theeyil - அக்னி/ஸூரியன் முதலிய பொருள்களைக் காட்டிலும் பொலிகின்ற, Polikindra - மிகவும் விளங்குகிற செம்சுடர், Semsudar - சிவந்த ஒளியை உடையவனாய் ஆழி, Aazhi - வட்டமாக திகழ், Thigazh - பிரகாசிக்கிற திருச் சக்கரத்தின் கோயில், Thiru Chakkarathin Koyil - ஸ்ரீஸுதர்சநாழ்வானுடைய இருப்பிடத் தின் பொறியாலே, Poriyale - சிந்தத்தாலே ஒற்றுண்டு நின்று, Ottrundu Nindru - அடையாளம் செய்யப்பட்டவராய் நின்று குடிகுடி, Kudikudi - தலைமுறை தலைமுறையாக ஆட்செய்கின்றோம், Aatcheikinrom - அடிமை செய்வதற்காக வந்தோம் மாயப் பொரு படை, Maaya Poru Padai - வஞ்சனையாகப் போர் செய்யும் ஸேனையை உடைய வாணனை, Vaananai - பாணாஸுரனுடைய ஆயிரம் தோளும், Ayiram Tholum - ஆயிரம் தோள்களிலிருந்தும் பொழி குருதி பாய, Pozhi Kuruthi Paaya - பொழியாநின்றுள்ள ரத்த வெள்ளம் பாயும்படியாக சுழற்றிய, Suzhatriya - சுழற்றப்பெற்ற ஆழி, Aazhi - திருவாழி யாழ்வானை வல்லானுக்கு, Vallaanukku - ஏந்தி நிற்க வல்லவனுக்கு பல்லாண்டு கூறுதுமே, Pallaandu Koordhume - திருப்பல்லாண்டு பாடுகிறோம் |
| 8 | திருப்பல்லாண்டு || 8 | நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே | நெய் இடை, Nei Idai - நெய்யின் நடுவிலிருக்கும் நல்லது ஓர் சோறும், Nalladhu Or Sorum - பாவசுத்தியுடன் இடப்பட்டதாய்(ஒப்பற்ற சுவையை உடையதான ப்ரஸாதத்தையும்) நியதமும், Niyadhamum - எப்போதும் அத்தாணிச் சேவகமும், Athaanich Sevakamum - பிரிவில்லாத ஸேவையையும் கை, Kai - (எம்பெருமான் தன்) திருக்கையாலே இட்ட அடைக்காயும், Adaikkaayum - வெற்றிலைப் பாக்கையும் கழுத்துக்குப் பூணொடு, Kazhuthukkup Poonodu - கழுத்துக்கு ஆபரணமான குண்டலத்தையும் காதுக்குக் குண்டலமும், Kaadhukkuk Kundalamum - காதுக்கு ஆபரணமான குண்டலத்தையும் மெய்யிட, Meyyida - உடம்பிலே பூசத்தக்க நல்லது ஓர் சாந்தமும், Nalladhu Or Saanthamum - பரிமளம் நிறைந்த ஒப்பற்ற சந்தனமும் தந்து, Thandhu - கொடுத்து என்னை, Ennai - (மிகவும் நிஹீனனான) என்னை வெள் உயிர் ஆக்கவல்ல, Vel Uyir Aakkavalla - சுத்த ஸ்வபாவனாக ஆக்கவல்ல பை உடை, Pai Udai - படங்களை உடைய நாகம், Naagam - ஸர்ப்பத்துக்கு பகை, Pagai - விரோதியான கருடனை கொடியானுக்கு, Kodiyaanukku - கொடியாக உடையவனுக்கு பல்லாண்டு கூறுவன், Pallaandu Kooruvan - மங்களாசாஸனம் பண்ணக்கடவேன் |
| 9 | திருப்பல்லாண்டு || 9 | உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு வோணத் திருவிழவில் படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே | உடுத்து, Uduthu - திருவரையில் உடுத்து களைந்த, Kalaindha - கழித்த நின், Nin - (ஸ்வாமியான) உன்னுடைய பீதக ஆடை, Peethaka Aadai - திருப்பீதாம் பரத்தை உடுத்து, Uduthu - உடுத்தும் கலத்தது, Kalathadhu - (நீ அமுது செய்த) கலத்தில் மிகுந் திருப்பதை உண்டு, Undu - உண்டும் சூடிக்களைந்தன, Soodikkalaindana - (உன்னால்) சூட்டிக்கொள்ளப்பட்டு களையப்பட்டதும் தொடுத்த, Thodutha - (உன்னுடைய அடியாரான எங்களால் ) தொடுக்கப்பட்டதுமான துழாய் மலர், Thuzhaai Malar - திருத்துழாய் மலர்களை சூடும், Soodum - சூட்டிக்கொள்ளும் இத்தொண்டர்களோம், Iththondarkalom - இப்படிப்பட்ட அடியார்களாயிருக்கிறோம் நாங்கள் விடுத்த, Vidutha - ஏவின திசைக் கருமம், Thisai Karumam - திக்கிலுள்ள காரியங்களை திருத்தி, Thiruththi - நன்றாகச்செய்து திருவோணத் திருவிழவில், Thiruvonath Thiruvizhavil - திருவோண மென்னும் திருநாளிலே படுத்த, Padutha - படுக்கப்பட்டு பை, Pai - (அதனாலே ) பணைத்த படங்களையுடைய நாக அணை, Naaga Anai - திருவனந்தாழ் வானாகிற படுக்கையிலே பள்ளி கொண்டானுக்கு, Palli Kondaanukku - திருக்கண் வளர்ந்தருளுகிற உனக்கு பல்லாண்டு கூறுதும், Pallaandu Koorudhum - திருப்பல்லாண்டு பாடுவோம் |
| 10 | திருப்பல்லாண்டு || 10 | எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி யோம் என்று எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் செந்நாள் தோற்றித் திரு மதுரையிற் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே | எம்பெருமான், Emperumaan - எங்களுக்கு ஸ்வாமியானவனே ! உன் தனக்கு, Un Thanakku - (ஸர்வசேஷியான) உனக்கு அடியோமென்று, Adiyomendru - அடிமைப்பட்டவர்கள் நாங்கள் என்று எழுத்துப்பட்ட, Ezuthuppatta - அடிமை ஓலை எழுதிக்கொடுத்த எந்நாள், Ennnaal - நாள் எதுவோ அந்தாளே, Andhaale - அந்த நாளே அடியோங்கள், Adiyongal - சேஷபூதர்களான எங்களுடைய அடி, Adi - அடிமைப்பட்ட குடில், Kudil - தாய் வீட்டிலுள்ள புத்ரபௌத்ராதிகளெல்லாம் வீடு பெற்று, Veetu Petru - கைவல்யமோக்ஷத்திலிருந்து விடுதலை பெற்று உய்ந்தது, Uyindhadhu - உஜ்ஜீவித்தது செம் நாள், Sem Naal - அழகியதான திருநாளிலே தோற்றி, Thorri - திருவவதாரம் செய்து திரு மதுரையுள், Thiru Madhuraiyul - அழகிய வட மதுரையில் சிலை குனித்து, Silai Kunithu - (கம்ஸனுடைய ஆயுதசாலையில்) வில்லை முறித்து ஐந்தலைய, Aindhalaiya - ஐந்து தலைகளை உடையதாய் பை, Pai - பாந்த படங்களையுமுடையதான நாகம், Naagam - காளியனென்னும் நாகத்தின் தலை, Talai - தலையின் மேல் பாய்ந்தவனே, Paaindhavane - ஏறிக் குதித்தருளிள ஸர்வேச்வரனே ! உன்னை, Unnai - உனக்கு பல்லாண்டு கூறுதும், Pallandu Koorudhum - மங்களாசாஸனம் பண்ணக்கடவோம் |
| 11 | திருப்பல்லாண்டு || 11 | அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன் செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன் நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவி பல் வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே | அல்வழக்கு, Alvazhakku - தவறான வழக்குகளில் ஒன்றும் இல்லா, Ondrum Illa - சிறிதும் இல்லாதவராய் அணி, Ani - (ஸம்ஸாரத்துக்கு) ஆபரணமான கோட்டியர், Kottiyar - திருக்கோட்டியூரிலுள்ளவர்களுக்கு கோன், Kon - தலைவராய் அபிமான துங்கன், Abimaana Thungan - நான் எம்பெருமானுக்கு அடியேன் என்னும் அபிமானத்தில் உயர்ந்தவராயுள்ள செல்வனைப்போல், Selvanai Pol - செல்வநம்பியைப்போல திருமாலே, Thirumale - லஷ்மீநாதனே ! நானும், Naanum - அடியேனும் உனக்கு, Unakku - ஸ்வாமியான உனக்கு பழ அடியேன், Pazha Adiyen - பழமையான அடிமையாயிருக்கிறேன் நல் வகையால், Nal Vagaiyaal - அழகிய வகையில் நமோ நாராயணா என்று, Namo Narayana Endru - திருமந்திரத்தை அனுஸந்தித்து நாமம் பல, Naamam Pala - உன்னுடைய பல திருநாமங்களையும் பரவி, Paravi - க்ரமமில்லாமல் சொல்லி பல்வகையாலும் பவித்திரனே, Palvakaiyaalum Pavithirane - (ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலிய) எல்லாவற்றாலும் பாபத்தைப் போக்குபவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுவன், Unnaip Pallandu Kooruvan - உனக்கு மங்களாசாஸனம் செய்வேன் |
| 12 | திருப்பல்லாண்டு || 12 | பல்லாண்டு என்று பவித்திரனைப் பர மேட்டியைச் சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே | பல்லாண்டு என்று, Pallandu Endru - நித்யமாய் மங்கள முண்டாகவேண்டும் என்று பவித்திரனை, Pavithiranai - (இயற்கையாகவே) பரிசுத்தனாய் பரமேட்டியை, Paramettiyai - மேலான ஸ்தானமான வைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பவனாய் சார்ங்கம் என்னும், Saarngam Ennum - சார்ங்கமென்று திருநாமத்தை உடைய வில், Vil - வில்லை ஆண்டான் தன்னை, Aandaan Thannai - ஆளும் எம்பெருமானைக் குறித்து வில்லிபுத்தூர், Villiputhoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த விட்டுசித்தன், Vittu Chithan - விஷ்ணுசித்தன் என்ற திருநாமத்தையுடைய பெரியாழ்வார் விரும்பிய, Virumbiya - விருப்பத்துடன் அருளிச்செய்த சொல், Sol - ஸ்ரீஸூக்தியை நல் ஆண்டு என்று, Nal Aandu Endru - (பல்லாண்டு பாடத்தக்க) நல்ல காலம் (நேர்படுவதே!) என்று நவின்று உரைப்பார், Navinru Uraippar - இடைவிடாமல் சொல்லுமவர்கள் நமோ நாராயணாய், Namo Narayanaaya - திருமந்திரத்தை அனுஸந்தித்து பல்லாண்டும், Pallandum - கணக்கற்ற காலங்கள் பரமாத்மனை, Paramaathmanai - பரமாத்மா நாராயணனை சூழ்ந்து இருந்து, Soozhnthu Irundhu - சுற்றிலும் இருந்து ஏத்துவர் பல்லாண்டே, Ethuvar Pallande - பல்லாண்டு பாடுவார்கள் |
| 0 | திருப்பள்ளியெழுச்சி - தனியன் || (தமேவ மத்வா) 19 | तमेव मत्वा परवासुदेव रङ्गेशयं राजत्रदर्हणीयम् । प्रावोधिक योऽकृत सूक्तिमालां भक्ताङ्किरेणुं भगवन्तमीडे ॥ தமேவ மத்வா பராஸுதேவம் ரங்கேயம் ராஜவதர்ஹணீயம் | ப்ராபோதிகீம் யோ≤க்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே || | Ya, ய: - யாவரொரு ஆழ்வார் Rajavath, ராஜவத் - அரசனைப் போல் Arhaniyam, அர்ஹணீயம் - பூஜிக்கத்தக்கவராய் Rangesayam, ரங்கேஸயம் - திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்பவரான பெரியபெருமாளை Thamparavasudevam eva, தம்பரவாஸுதேவம் ஏவ - அப்படிப்பட்ட ஸாக்ஷாத் பரவாஸுதேவனாகவே Madhva, மத்வா - ப்ரதிபத்திபண்ணி Prabodhikeem, ப்ராபோதிகீம் - திருப்பள்ளியுணர்த்துமதான Sookthimalam, ஸூக்திமாலாம் - பாமாலையை Akrutha, அக்ருத - அருளிச்செய்தாரோ Tham, தம் - அப்படிப்பட்ட Bhagavantham, பகவந்தம் - ஞானம் முதலிய குணங்கள் Bhakthangrirenum, பக்தாங்க்ரிரேணும் - அமைந்த தொண்டரடிப்பொடியாழ் வாரை Eede, ஈடே - துதிக்கின்றேன் |
| 0 | திருப்பள்ளியெழுச்சி - தனியன் || (மண்டங் குடியென்பர்) 20 | மண்டங் குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த் தொண்ட ரடிப்பொடி தொன்னகரம்-வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி யுணர்த்தும் பிரானுதித்த வூர் | Vandu, வண்டு - வண்டுகளானவை Thinartha, திணர்த்த - நெருங்கிப் படிந்திருக்கப் பெற்ற Vayal, வயல் - கழனிகள் சூழ்ந்த Then, தென் - அழகிய Arangathu, அரங்கத்து - திருவரங்கத்தில் (கண்வளர்ந்தருள்கிற) Ammanai, அம்மானை - பெரிய பெருமாளை Palli unarthum, பள்ளி உணர்த்தும் - திருப்பள்ளியுணர்த்துமவராய் Piran, பிரான் - பரமோபகாரகராய் Thondaradipodi, தொண்டரடிப்பொடி - தொண்டரடிப் பொடி என்னுந் திருநாமமுடையரான ஆழ்வார் Udhitha oor, உதித்த ஊர் - திருவவதரித்த திவ்ய தேசமானது Maa maraiyor, மா மறையோர் - சிறந்த வைதிகர் கள் Manniya, மன்னிய - பொருந்தி வாழத்தகுந்த Seer, சீர் - சீர்மையையுடைய Mandangkudi, மண்டங்குடி - திருமண்டங்குடி என்கிற Thol nagaram, தொல் நகரம் - அநாதியான நகரமாகும் Enbar, என்பர் - என்று பெரியோர் கூறுவர் |
| 917 | திருப்பள்ளியெழுச்சி || 1 | கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய் மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும் அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | அரங்கத்து அம்மா, arangathu amma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! கதிரவன், Kathiravan - ஸூர்யனானவன் குண திசை, Guna Thisai - கிழக்குத் திக்கிலே சிகரம், Sikaram - (உதய கிரியின்) கொடு முடியிலே வந்து அணைந்தான், Vandhu Andhaan - வந்து கூடினான் கன இருள், Kana Irul - (இரவில்) அடர்ந்திருந்த இருளானது அகன்றது, Agandrathu - நீங்கி யொழிந்தது அம், Am - அழகிய காலைப் பொழுது ஆய், Kaalaip Pozhudhu Aay - காலைப் பொழுது வர மா மலர் எல்லாம், Maa Malar Ellaam - சிறந்து புஷ்பங்களெல்லாம் விரிந்து, Virindhu - விகாஸமடைய மது ஒழுகின, Madhu Ozhugina - தேன் வெள்ளமிடா நின்றன வானவர், Vaanavar - தேவர்களும் அரசர்கள், Arasarkal - ராஜாக்களும் வந்து வந்து, Vandhu Vandhu - ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து ஈண்டி, Eenti - திரண்டு எதிர் திசை, Edhir Thisai - திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே நிறைந்தனர், Niraindhanar - நிறைந்து நின்றார்கள் இவரொடும் புகுந்த, Ivarodum Pugundhu - இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய) இரு களிறு ஈட்டமும், Iru Kaliru Ettamum - பெரிய ஆண் யானைத் திரள்களும் பிடியொடு, Pidiyodu - பெண் யானைத் திரள்களும் முரசும், Murasum - பேரி வாத்யங்களும் அதிர்தலில், Adirthalil - சப்திக்கும் போது எங்கும், Engum - எத் திசையும் அலை, Alai - அலை யெறியா நின்ற கடல் போன்று உளது, Kadal Pondru Ulathu - ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது பள்ளி எழுந்தருளாய், Palli Elundharulaaye - (ஆதலால்) திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 918 | திருப்பள்ளியெழுச்சி || 2 | கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம் ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | ஈன் பணி நனைந்த, een pani nanaindha - (மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த தம், tham - தங்களுடைய இரு சிறகு, iru siragu - அழகிய இறகுகளை உதறி, udhari - உதறிக் கொண்டு எழுந்தன, ezhundhana - உறக்கம் விட்டெழுந்தன; விழுங்கிய, vizhungiya - (தன் காலை) விழுங்கின முதலையின், mudhalaiyin - முதலையினுடைய பிலம்புரை, pilampurai - பாழி போன்ற பேழ் வாய், pezh vaai - பெரிய வாயிலுள்ள வெள் எயிறு உற, vel eyiru uru - வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற அதன், adhan - அம் முதலையினுடைய விடத்தினுக்கு, vidathinukku - பல விஷத்திற்கு அனுங்கி அழுங்கிய, anungi azhungiya - மிகவும் நோவுபட்ட ஆனையின், aanaiyin - கஜேந்திராழ்வரனுடைய அரு துயர், aru thuyar - பெரிய துக்கத்தை கெடுத்த, kedutha - போக்கி யருளின அரங்கத்தம்மா, arangathamma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாய், palli ezhundharulai - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் குண திசை மாருதம், Guna Thisai Marutham - கீழ் காற்றானது கொழு கொடி, kozhu kodi - செழுமை தங்கிய கொடியை யுடைத்தான முல்லையின், mullaiyin - முல்லைச் செடியிலுண்டான கொழு மலர், Kozhu Malar - அழகிய மலர்களை அணலி, anali - அளைந்து கொண்டு இதுவோ, idhuvo - இதோ கூர்ந்தது, koorndhadhu - வீசா நின்றது; மலர் அணை, malar anai - புஷ்ப சயநத்திலே பள்ளி கொள், palli kol - உறங்குகின்ற அன்னம், annam - ஹம்ஸங்களானவை |
| 919 | திருப்பள்ளியெழுச்சி || 3 | சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின் மடல் இடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | சூழ் திசை எல்லாம், soozh thisai ellaam - கண்டவிடமெங்கும் சுடர் ஒளி, sudar oli - சூர்ய கிரணங்களானவை பரந்தன, paranthana - பரவி விட்டன; துன்னிய, thunniya - (ஆகாசத்தில்) நெருங்கிய தாரகை, thaaragai - நஷத்திரங்களினுடைய மின் ஒளி, min oli - மிக்க தேஜஸ்ஸானது சுருங்கி, surungi - குறைவுபட்டது மன்றி படர் ஒளி, padar oli - மிக்க ஒளியையுடைய பனி மதி இவன், pani madhi ivan - இக் குளிர்ந்த சந்திரனும் பசுத்தனன், pasuthanan - ஒளி மழுங்கினான்; பாய் இருள், paai irul - பரந்த இருட்டானது அகன்றது, aganradhu - நீங்கிற்று; வைகறை மாருதம் இது, vaikarai maarutham idhu - இந்த விடியற் காற்றானது பை, pai - பசுமை தங்கிய பொழில், pozhil - சோலைகளிலுள்ள கமுகின், kamugin - பாக்கு மரங்களினுடைய மடலிடை கீறி, madalidai keer'i - மடலைக் கீற வண் பாளைகள் நாற, van paalai kal naara - அழகிய பாளைகளானவை பரிமளிக்க (அப்பரிமளத்தை முகந்து கொண்டு) கூர்ந்தது, koorndhadhu - வீசுகின்றது; அடல், adal - பெருத்த மிடுக்கை யுடைத்தாய் ஒளி திகழ் தரு, oli thigazh tharu - தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள திகிரி, thigiri - திருவாழி யாழ்வானை அம் தட கை, am thada kai - அழகிய பெரிய திருக் கையிலே யுடைய அரங்கத்தம்மா, arangathamma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாய், palli ezhundharulai - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 920 | திருப்பள்ளியெழுச்சி || 4 | மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும் ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | மேடு இன மேதிகள், medu ina medhigal - உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை தளை விடும், thalai vidum - (மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற ஆயர்கள், aayargal - இடையர் (ஊதுகிற) வேய்ங்குழல் ஒசையும், veyngkuzhal osaiyum - புல்லாங்குழலின் நாதமும் விடை, vidai - எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள) மணி, mani - மணிகளினுடைய குரலும், kuralum - ஓசையும் (ஆகிய) ஈட்டிய, eettiya - இவ் விரண்டும் கூடின த்வநியானது திசை பரந்தன, thisai paranthana - திக்குக்களெங்கும் பரவி விட்டது; வயலுள், vayalul - கழனிகளிலுள்ள சுரும்பு இனம், surumbu inam - வண்டுகளின் திரள் இரிந்தன, irindhana - ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின; இலங்கையர் குலத்தை, ilangaiyar kulathai - ராக்ஷஸ வர்க்கத்தை வாட்டிய, vaattiya - உருவழித்த வரி இலை, vari ilai - அழகிய சார்ங்கத்தை யுடைய வானவர் ஏறெ, vaanavar aere - தேவாதி தேவனே! மா முனி, maa muni - விச்வாமித்ர மஹர்ஷியினுடைய வேள்வியை, velviyai - யாகத்தை காத்து, kaathu - நிறைவேற்றுவித்து அவபிரதம் ஆட்டிய, avapradham aattiya - அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின அடு திறள், adu thirul - (விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய் அயோத்தி எம் அரசே, ayodhi em arase - அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே! அரங்கத்தம்மா, arangathamma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாய், palli ezhundharulai - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 921 | திருப்பள்ளியெழுச்சி || 5 | புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய் போயிற்று கங்குல் புகுந்தது புலரி கலந்தது குண திசை கனை கடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே | பூ, poo - பூத்திரா நின்றுள்ள பொழில்களின் வாய், pozhilkalin vaai - சோலைகளிலுள்ள புட்களும், pudkalum - பறவைகளும் புலம்பின, pulambina - (உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன; போயிற்று, poiyitru - கழிந்தது; புலரி, pulari - ப்ராத: காலமானது புகுந்தது, pugundhadhu - வந்தது; குண திசை, guna thisai - கீழ்த் திசையிலே கனை, kanai - கோஷஞ்செய்கிற கடல், kadal - கடலினுடைய அரவம், aravam - ஒசையானது கலந்தது, kalanthadhu - வியாபித்தது; களி, kali - தேனைப் பருகிப் களிக்கின்ற வண்டு, vandu - வண்டுகளானவை மிழற்றிய, mizhatrrya - சப்தியா நிற்கிற கலம்பகன் புனைந்த, kalambakan punaindha - பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட அம், am - அழகிய அலங்கல் தொடையல் கொண்டு, alankal todaiyal kondu - அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு அமரர்கள், amarargal - தேவர்கள் அடி இணை பணிவான், adi inai panivaan - தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக புகுந்தனர், pugundhanar - வந்து நின்றனர்; ஆதலில், aadhalil - ஆகையாலே அம்மா, amma - ஸர்வ ஸ்வாமிந்! இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில், ilangaiyar kon vazhipadu sei koyil - லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே எம்பெருமான்!, emperumaan - அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே, palli ezhuntharulaye - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 922 | திருப்பள்ளியெழுச்சி || 6 | இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ இறையவர் பதினொரும் விடையரும் இவரோ மருவிய மயிலினன் அறு முகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி புரவியோடு ஆடலும் பாடலும் தேரும் குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | மணி, mani - விலக்ஷணமாய் நெடு, netu - பெரிதான தேரோடும், theroadum - தேரோடுகூட இரவியர், iraviyar - பன்னிரண்டு ஆதித்யர்களும் இறையவர், iraiyavar - ஜகத்துக்கு நிர்வாஹகர்களான பதினொரு விடையரும், padhinoaru vidaiyarum - ஏகாதச ருத்ரர்களும் மருவிய, maruviya - பொருந்திய மயிலினன், mayilinan - மயில் வாகனத்தை யுடைய அறுமுகன், arumugan - ஸுப்ரஹ்மண்யனும் மருதரும், marudharum - மருத் கணங்களான ஒன்பதின்மரும் வசுக்களும், vasukkalum - அஷ்ட வஸுக்களும் வந்து வந்து, vandhu vandhu - ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து ஈண்டி, eenti - நெருங்கி நிற்க புரவியோடு தேரும், puraviyodu therum - (இவர்களுடைய வாஹநமான) குதிரைகண் பூண்ட ரதங்களும் பாடலும் ஆடலும், paadalum aadalum - பாட்டும் கூத்துமாய் குமர தண்டம் புகுந்து, kumara thandam pugundhu - தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து ஈண்டிய வெள்ளம், eendhiya vellam - நெருங்கி யிருக்கிற திரளானது அரு வரை அனைய, aru varai anaiya - பெரிய மலை போன்ற கோயில், koyil - கோயிலில் நின் முன், nin mun - தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;) அரங்கத்தமா, arangathama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளி யெழுந்தருளாயே, palli ezhuntharulaye - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 923 | திருப்பள்ளியெழுச்சி || 7 | அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன் கோயிலின் வாசல் சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான் அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | எம்பெருமான், emperumaan - எமக்கு ஸ்வாமியான உன் கோயிலின் வாசல், un koyilin vaasal - தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே இந்திரன் தானும், indiran thaanum - தேவேந்திரனும் ஆனையும், aaniyum - (தேவேந்திரனின் வாஹனமான) ஐராவத யானையும் வந்து, vandhu - வந்திருப்பது மன்றி அந்தரத்து அமரர்கள், andarathu amargal - அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும் கூட்டங்கள், kootangal - தேவர்களுடைய பரிவாரங்களும் அரு தவம் முனிவரும், aru thavam munivarum - மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும் மருதரும், marudharum - மருத் கணங்களும் இயக்கரும், iyakkarum - யக்ஷர்களும் சுந்தரர் நெருக்க, sundharar nerukka - கந்தர்வர் நெருக்கவும் விச்சாதார் நூக்க, vichaadhaar nookka - வித்யாதரர்கள் தள்ளவும் திருவடி தொழுவான் மயங்கினர், Thiruvadi thozhuvan mayanginar - (தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர் அந்தரம், antharam - ஆகாசமும் பார், paar - பூமியும் இடம் இல்லை, idam illai - அவகாசமற்றிரா நின்றது அரங்கத்தமா, arangathama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளியெழுந்தருளாய், palli ezhuntharulay - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 924 | திருப்பள்ளியெழுச்சி || 8 | வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர் தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | வழங்க, vazhang - தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக வம்பு அவிழ், vampu avizh - பரிமளம் மிகுந்த வாயுறை, vaayurai - அறுகம் புல்லும் மா, maa - சிறந்த நிதி, nithi - சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு) வானவர், vaanavar - தேவர்களும் கபிலை, kapilai - காமதேநுவும் ஓண், oan - ஓளி பொருந்திய கண்ணாடி முதலா, kannadi mudhala - கண்ணாடி முதலாக எம்பெருமான், emperumaan - ஸ்வாமியான தேவரீர் காண்டற்கு, kaandarku - கண்டருளுகைக்கு ஏற்பன ஆயின, yerpan aayina - தகுதியாயுள்ளவையான படிமைக்கலம், padimaikkalam - உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு நல் முனிவர், nal munivar - மஹர்ஷிகளும் தும்புரு நாரதர், thumpuru naarathar - தும்புரு நாதர்களும் புகுந்தனர் ,pugundhanar - வந்து நின்றார்கள் இரவியும், iraviyum - சூரியனும் துலங்கு ஒளி, thulangu oli - (சூரியனது) மிக்க தேஜஸ்ஸை பரப்பி, parappi - எங்கும் பரவச் செய்து கொண்டு தோன்றினன், thondrinan - உதயமானான்; இருள், irul - இருளானது அம்பரதலத்தில் நின்று, ambarathalathil nindru - ஆகாசத்தினின்றும் போய் அகல்கின்றது, poi agal kingradhu - நீங்கிப் போயிற்று; அரங்கத்தம்மா, arangathamama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளியெழுந்தருளாய், palliyezhundharulaay - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 925 | திருப்பள்ளியெழுச்சி || 9 | ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம் மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே | ஏதம் இல், yedham il - குற்றமற்ற தண்ணுமை, thannumai - சிறுபறையும் எக்கம், ekkam - ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும் மத்தளி, maththali - மத்தளமும் யாழ், yaal - வீணையும் குழல், kulal - புல்லாங்குழல்களுமாய் திசை, thisai - திக்குக்களெங்கும் முழவமோடு, muzhavamodu - இவற்றின் முழக்கத்தோடு இசை கெழுமி கீதங்கள் பாடினர், isai kelumi keethangal paadinarr - இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான கின்னரர், kinnarar - கின்னார்களும் கருடர், karudar - கருடர்களும் கெந்தருவரும், kendharuvarum - கந்தர்வர்களும் இவர், ivar - இதோ மற்றுள்ளவர்களும் மா தவர், maa thavar - மஹர்ஷிகளும் வானவர், vaanavar - தேவர்களும் சாரணர், saaranar - சாரணர்களும் இயக்கர், iyakkar - யக்ஷர்களும் சித்தரும், sidharum - ஸித்தர்களும் திருவடி தொழுவான், thiruvadi thozhuvan - (தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக கங்குலும் எல்லாம், kangulum ellaam - இரவெல்லாம் மயங்கினர், mayanginar - (நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்; ஆதலில், aadhali - ஆகையாலே அவர்க்கு, avarkku - அவர்களுக்கு நாள் ஒலக்கம் அருள, naal olakam arul - பகலோலக்க மருளுகைக்காக அரங்கத்தம்மா, arangathamama - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே! பள்ளியெழுந்தருளாய், palliyezhundharulaay - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும் |
| 926 | திருப்பள்ளியெழுச்சி || 10 | கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா! தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே | புனல் சூழ், punal soozh - திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட அரங்கா, Arangaa - ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே! கடி, kadi - பரிமளமுடைய கமலம் மலர்கள், Kamalam Malar - தாமரைப் பூக்களானவை மலர்ந்தன, Malarndhana - (நன்றாக) மலர்ந்து விட்டன; கதிரவன், Kathiravan - (தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன் கனை கடல், Kanai Kadal - கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே முளைத்தனன், Mulaidhanan - உதய கிரிலே வந்து தோன்றினான்; துடி இடையார், Thudi Idaiyar - உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர் சுரி குழல், Suri Kuzhal - (தமது) சுருண்ட மயிர் முடியை பிழிந்து உதறி, Pizhindhu Udari - (நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு துகில் உடுத்து, Thugil Uduthu - (தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு ஏறினர், Aerinar - கரையேறி விட்டார்கள்; தொடை ஒத்த, Todai Ottha - ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற துளவமும், Thulavamum - திருத் துழாய் மாலையும் கூடையும், Koodaiyum - பூக் குடலையும் பொலிந்து தோன்றிய, Polindhu Thondriya - விளங்கா நிற்கப் பெற்ற தோள், Thol - தோளை யுடைய தொண்டரடிப்பொடி யென்னும், Thondaradippodi Yennum - ‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய அடியனை, Adiyanai - தாஸனை அளியன் என்று அருளி, Aliyan Endru Aruli - ‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி உன் அடியார்க்கு, Un Adiyarku - தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு ஆள் படுத்தாய், Aal Paduthaai - ஆளாக்க வேணும் பள்ளி எழுந்தருளாய், Palli ezhuntharulay - திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும் |
| 0 | திருப்பாவை- தனியன் || ஸ்ரீ நீளா தேவியின் அவதாரமான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்களாகிற மலைச்சாரலிலே சயனித்துக் கொண்டிருப்பவனும், தான் சூடிக்களைந்த மாலையாலே விலங்கிடப்பட்டுள்ளவனுமான கண்ணன் எம்பெருமானைத் திருப்பள்ளியுணர்த்தி வேதங்களின் இறுதிப்பகுதியான வேதாந்தங்களிலே தெளிவாகக் காட்டப்பட்டுள்ள தன்னுடையதான பாரதந்த்ரியத்தை (எம்பெருமானுக்கே ஆட்பட்டு இருக்கும் தன்மையை) அறிவிப்பவளாய், நிர்பந்தமாகச் சென்று அவனை அனுபவிப்பவளான ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு இந்த நமஸ்காரமானது காலம் உள்ளவரை ஆகவேண்டும். 9 | நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ | ஸ்வோசிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத்க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: || | Neelaathunga sthanagirithati suptham, நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தம் - நப்பின்னைப் பிராட்டியின் உயர்ந்த திருமுலைத் தடங்களாகிற மலைச்சாரலில் கண்வளர்ந்தருளுமவனை Svochishtaayaam, ஸ்வோச்சிஷ்டாயாம் - தன்னால் சூடிக் களையப்பட்ட Sraji, ஸ்ரஜி - மாலையிலே Nigalitham, நிகளிதம் - விலங்கிடப்பட்டவனுமான Krishnam, க்ருஷ்ணம் - கண்ணபிரானை Udhpodhya, உத்போத்ய - திருப்பள்ளி யுணர்த்தி Sruthi satha siras sitham, ஸ்ருதி சத சிரஸ் சித்தம் - பற்பல வேதங்களின் தலையான பாகங்களாலே தேறின (வேதாந்த ஸித்தமான) Svam, ஸ்வம் - தன்னுடையதான Paararthyam, பாரார்த்யம் - பாரதந்த்ரியத்தை (எம்பெருமானுக்கே ஆட்பட்டு இருக்கும் தன்மையை) Adyaapayanthi, அத்யாபயந்தீ - அறிவியா நின்றவளாய் Yaa palaathkruthya, யா பலாத்க்ருத்ய - எவள் அந்த பலத்தைக் கொண்டு கண்ணனை Pungthe, புங்க்தே - (அக்கண்ணபிரானை) அநுபவிக்கிறாளோ Godha thasyai, கோதா தஸ்யை - அப்படிப்பட்ட பெருமையை யுடையளான ஆண்டாளின்பொருட்டு Booyo Booya Eava, பூயோபூய ஏவ - காலதத்துவ முள்ளதனையும் Idham idham Nama, இதம் இதம் நம: - இந்த இந்த நமஸ்காரமானது Asthu, அஸ்து - ஆயிடுக |
| 0 | திருப்பாவை- தனியன் || அன்னங்கள் உலாவும் வயல்களையுடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை என்னும் ப்ரபந்தத்தை அருளிச்செய்து, அதை இனிய இசையுடன் பாடி ஸ்ரீரங்கநாதனுக்கு அழகிய பாமாலையாக ஸமர்ப்பித்தாள். பூக்களால் ஆன மாலையையும் தான் முதலில் சூடி பின்பு அந்த எம்பெருமானுக்கு அதை ஸமர்ப்பித்தாள். அப்படிப்பட்ட பெருமையை உடைய ஆண்டாள் நாச்சியாரைப் பாடு 10 | அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக்கொடுத்தாளைச் சொல்லு | Soodi, சூடி - (தான் முந்துறக் குழலிற்) சூடி Koduthaalai, கொடுத்தாளை - (பிறகு ரங்கநாதனுக்கு) ஸமர்ப்பித்தவளுமான கோதையை Sol, சொல் - அநுஸந்திக்கக் கடவை Annam vayal, அன்னம் வயல் - ஹம்ஸங்கள் (உலாவுகின்ற) வயல்களையுடைய Pudhuvai, புதுவை - ஸ்ரீவில்லிபுத்தூரில் (திருவவதரித்த) Andal, ஆண்டாள் - ஆண்டாள்' என்னுந் திருநாமத்தை யுடையளும் Pannu, பன்னு - ஆராய்ந்து அருளிச்செய்யப்பட்ட Thirupavai pal pathiyam, திருப்பாவை பல் பதியம் - திருப்பாவையென்னும் பல பாசுரங்களை In isaiyaal, இன் இசையால் - இனிய இசையுடன் Paadi, பாடி - பாடி (அவற்றை) Arangarku, அரங்கற்கு - ஸ்ரீரங்கநாதனுக்கு Nal paa maalai, நல் பா மாலை - விலக்ஷணமான பாமாலையாக Koduthaal, கொடுத்தாள் - ஸமர்ப்பித்தவளும் Poomaalai, பூமாலை - (செண்பகம் முதலிய) பூக்களினாலாகிய மாலையை |
| 0 | திருப்பாவை- தனியன் || பூக்களால் ஆன மாலையைத் தான் சூடிப் பின்பு எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்த ஒளி விடும் கொடியைப் போன்றவளே! பலகாலமாக அனுஷ்டிக்கப்படும் பாவை நோன்பைத் திருப்பாவை மூலமாக அருளிச்செய்த, திருக்கைகளில் வளையல்களை அணிந்திருப்பவளே! நீ மன்மதனைக் குறித்து “என்னைத் திருவேங்கடமுடையானுக்கு ஆட்படுத்த வேண்டும்” என்று கூறியதை, நாங்கள் அவனிடத்திலே கூற வேண்டாதபடி நீயே எங்களுக்கு அருள்புரிவாயாக. 11 | சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை பாடியருள வல்ல பல்வளையாய் – நாடி நீ வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு | Soodik kodutha, சூடிக் கொடுத்த - (பூமாலையைத் திருக்குழலிற்)சூடி (அதனை எம்பெருமானுக்கு) ஸமர்ப்பித்த Sudar kodiye, சுடர் கொடியே - தேஜோ மயமான கொடிபோன்றவளே! Thol paavai, தொல் பாவை - அநாதி ஆசார ஸித்தமான நோன்பை Paadi, பாடி - (திருப்பாவை முகமாகக்) கூறி Arula valla, அருள வல்ல - (அடியார்திறத்துக்) கருணைபுரிய வல்லவளும் Pal valaiyaai, பல் வளையாய் - பல வளைகளை அணிந்துள்ளவளுமான கோதாய்! Nee, நீ - நீ Naadi, நாடி - (மன்மதனை) நாடி Ennai Vengadavar ku vidhi endra I maatram, என்னை வேங்கடவற்கு விதி என்ற இ மாற்றம் - ("காமதேவா! நீ என்னைத் திருவேங்கடமுடையானுக்கு வாழ்க்கைப் படுத்தவேணும்'' )என்று (காமனைக் குறித்துக்) கூறிய கூற்றை Naam kadavaa vannam, நாம் கடவா வண்ணம் - யாம் மீறாதொழியுமாறு Nalku, நல்கு - அருள்புரிவாயாக |
| 474 | திருப்பாவை || 1 | மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் | சீர் மல்கும், Seer Malgum - செல்வம் நிறைந்துள்ள ஆய்ப்பாடி, Aaypadi - திருவாய்ப்பாடியில் செல்வம் சிறுமீர்காள், Selvam Sirumeerkaal - கைங்கர்ய ஸம்பத்தையும் இளம் பருவத்தையுமுடைய பெண்காள் நேர் இழையீர், Ner Izhaiyeer - விலக்ஷணமான பூஷணங்களை அணிந்துள்ளவர்களே மார்கழி திங்கள், Maargazhi Thingal - (மாதங்களிற் சிறந்த) மார்கழி மாஸமும் மதி நிறைந்த நல் நாள், Mathi Niraindha Nal Naal - பூர்ண சந்திரோதயத்தை யுடைய (சுக்கில பக்ஷத்திய) நல்ல நாளும் (நமக்கு வாய்த்திரா நின்றன.) கூர் வேல், Koor Vel - கூர்மை பொருந்திய வேலாயுதத்தை யுடையவனும் கொடு தொழிலன், Kodu Thozhilan - (கண்ண பிரானுக்குத் தீங்கு செய்யவரும் க்ஷுத்ர ஜந்துக்கள் பக்கலிலுஞ் சீறிக் கொடுமைத் தொழிலைப் புரியுமவனுமான நந்தகோபன், Nandhagopan - நந்தகோபனுக்கு குமரன், Kumaran - பிள்ளையாய்ப் பிறந்தவனும் ஏர் ஆர்ந்த கண்ணி, Aer Aarndha Kanni - அழகு நிறைந்த கண்களை யுடையளான அசோதை, Yasodhai - யசோதைப் பிராட்டிக்கு இள சிங்கம், Ila Singam - சிங்கக் குட்டி போலிருப்பவனும் கார் மேனி, Kaar Meni - காளமேகத்தோடொத்த திருமேனியையும் செம் கண், Sem Kan - செந்தாமரைப் பூப்போன்ற திருக் கண்களையும் கதிர் மதியம் போல் முகத்தான், Kathir Mathiyam Pol Mugathaan - ஸூர்யனையும் சந்திரனையும் போன்ற திரு முகத்தையுமுடையனுமான நாராயணணே, Naaraayanane - ஸ்ரீமந் நாராயணன் தானே நமக்கே, Namakkae - (‘அவனால் பேறு’ என்றிருக்கிற) நமக்கே பறை, Parai - பறையை தருவான், Tharuvaan - கொடுக்குமவனாயிற் நின்றான் ஆல், Aal - ஆதலால் பாரோர், Paaror - இவ் வுலகத்தவர்கள் புகழ, Pugazha - கொண்டாடும்படி படிந்து, Padindhu - (இந்நோன்பிலே)ஊன்றி நீர் ஆட போதுவீர், Neer Aada Podhuveer - நீராட வர விருப்பமுடையீர்களே ! போதுமின், Podhumin - வாருங்கள் ஏல் ஓர் எம்பாவாய், Ael Or Empaavaai - ஏல் ஓர் எம்பாவாய். |
| 475 | திருப்பாவை || 2 | வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரம னடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய் | வையத்து, Vaiyathu - இப் பூமண்டலத்தில் வாழ்வீர்காள், Vaazhveerkal - வாழ்ந்திரா நின்றுள்ளவர்களே நாமும், Naamum - (எம்பெருமானாலேயே பேறு என்ற அத்யவஸாய முடைய) நாமும் உய்யும் ஆறு எண்ணி, Uyyum Aaru Enni - உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து பால் கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி, Paal Kadalul Paiya Thuyindra Paraman Adi Paadi - திருப்பாற்கடலில் அவதாநத்துடன் கண் வளர்ந்தருளா நின்ற பரமபுருஷனுடைய திருவடிகட்கு மங்களாசாஸணம் பண்ணி ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி, Aiyamum Pichaiyum Aandhanaiyum Kai Kaatti - (ஆசார்யாதிகளுக்கு இடு கையாகிற) ஐயத்தையும் (ஆர்த்தர்கட்கு இடுகையாகிற) பிக்ஷையையும் சக்தியுள்ளவளவும் இட்டு உகந்து, Ugandhu - மகிழ்ந்து ஈம் பாவைக்கு செய்யும், Eem Paavaikku Seiyum - நமது நோன்புக்கு (அங்கமாகச்) செய்ய வேண்டிய கிரிசைகள், Kirisaikal - க்ரியைகளை கேளீர், Keleer - காது கொடுத்துக் கேளுங்கள் நாம், Naam - நோன்பு நோற்கத் தொடங்கின நாம் நெய் உண்ணோம், Nei Unnom - நெய் உண்ணக் கடவோமல்லோம் பால் உண்ணோம், Paal Unnom - பாலை உண்ணக் கடவோமல்லோம் நாட்காலே நீர் ஆடி, Naatkaale Neer Aadi - விடியற் காலத்திலேயே ஸ்நாநஞ்செய்து விட்டு மை இட்டு எழுதோம், Mai Ittu Ezhudhom - (கண்ணில்) மையிட்டு அலங்காரம் பண்ணக் கடவோமல்லோம் மலர் இட்டு முடியோம், Malar Ittu Mudiyom - (குழலிற்) பூ வைத்து முடிக்கக் கடவோமல்லோம் செய்யாதன, Seiyaadhana - (மேலைத் தலைவர்கள்) செய்யாதவற்றை செய்யோம், Seyyom - செய்யக் கடவோமல்லோம் தீ குறளை, Thee Kuralai - கொடிய கோட் சொற்களை சென்று ஓதோம், Sendru Othom - (எம்பெருமானிடத்துச்) சென்று கூறக் கடவோமல்லோம் ஏல் ஓர் எம்பாவாய், Ael Or Empaavay - ஏல் ஓர் எம்பாவாய் |
| 476 | திருப்பாவை || 3 | ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். | ஓங்கி, Oongi - (மஹாபலி வார்த்த நீர் கையில் விழுந்தவாறே) ஆகாசத்தளவும் வளர்ந்து உலகு, Ulagu - (மூன்று) லோகங்களையும் அளந்த, Alandhu - (திருவடிகளாலே தாவி) அளந்து கொண்ட உத்தமன், Uththaman - புருஷோத்தமனுடைய பேர், Per - திருநாமங்களை நாங்கள், Naangal - (பிரயோஜநாந்தரத்தை விரும்பாத) நாங்கள் பாடி, Paadi - (ப்ரீதிக்குப் போக்கு வீடாகப்) பாடி நம் பாவைக்கு சாற்றி, Nam Paavaikku Saatri - நம் நோன்புக்கென்று சங்கற்பித்துக் கொண்டு நீர் ஆடினால், Neer Aadinaal - நீராடினால் நாடு எல்லாம், Naadu Ellaam - தேசமெங்கும் தீங்கு இன்றி, Theengu Indri - (அதிவிருஷ்டி அநாவ்ருஷ்டி ஆகிற) தீங்கு ஒன்றுமுமில்லாமல் திங்கள் மும்மாரி பெய்து, Thingal Mummari Peydhu - மாதந்தோறும் மூன்று தரம் மழை பெய்ய (அதனால்) ஓங்கு பெரு செந் நெல் ஊடு, Oongu Peru Sen Nel Oodu - ஆகாசத்தளவும் வளர்ந்து பெருத்துள்ள செந்நெற் பயிர்களின் நடுவே கயல் உகள, Kayal Ugala - மீன்கள் துள்ள பூ, Poo - அழகிய குவளை போதில், Kuvalai Podhil - நெய்தல் மலரில் பொறிவண்டு, Porivandu - மிக்க புகரையுடைய வண்டுகளானவை கண் படுப்ப, Kan Paduppu - உறங்க புக்கு, Pukku - (மாட்டுத்தொழுவிற) புகுந்து தேங்காதே இருந்து, Thengaathe Irundhu - சலியாமல் பொருந்தி யிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க, Seertha Mulai Patri Vaanga - (பசுக்களின்) பருத்த முலைகளை (இரு கையாலும்) பிடித்து வலிக்க வள்ளல், Vallal - (எல்லார்க்கும் கட்டி அடிக்கலாம்படி விதேயமா யிருக்கை யாகிற) உதார ஸ்வபாவமுடைய பெரும் பசுக்கள், Perum Pasukkal - பெரிய பசுக்களானவை நீங்காத செல்வம் நிறைந்து, Neengaadha Selvam Niraindhu - நீங்காத ஸம்பத்து நிறையும்படி குடம் நிறைக்கும், Kudam Niraikkum - (பால் வெள்ளத்தாலே) குடங்களை நிறைக்கும் ஏல் ஓர எம் பாவாய், Ael Or Em Paavay - ஏல் ஓர எம் பாவாய் |
| 477 | திருப்பாவை || 4 | ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல் ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில் ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். | ஆழி மழை கண்ணா, Aazhi Mazhai Kanna - மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான பர்ஜந்யனே! நீ, Nee - நீ கை, Kai - (உன்னுடைய) கொடையில் ஒன்றும், Ondrum - ஒன்றையும் கரவேல், Karavel - ஒளியா தொழியவேணும் (நீ செய்ய வேண்டிய பணி என்ன வென்றால்) ஆழியுள் புக்கு, Aazhiyul Pukku - கடலினுட் புகுந்து முகந்து கொடு, Mugandhu Kodu - (அங்குள்ள நீரை) மொண்டு கொடு ஆர்த்து, Aarthu - கர்ஜனை பண்ணி (பேரொலி செய்து) ஏறி, Eri - (ஆகாயத்தே) ஏறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து, Oozhi Mudhalvan Uruvam Pol Mei Karuthu - காலம் முதலிய ஸகல பதார்தத்ங்களுக்குங் காரண பூதனான எம் பெருமானுடைய திருமேனி போல் (உனது) உடம்பிற் கருமை பெற்று பாழி அம் தோள் உடை பற்பநாபன் கையில், Paazi Am Thol Udai Parpanaban Kaiyil - பெருமையும் அழகும் கொருந்திய தோள்களை யுடையவனும் நாபிக் கமல முடையனுமான எம் பெருமானுடைய கையில் (வலப் பக்கத்திலுள்ள) ஆழி போல் மின்னி, Aazhi Pol Minni - திருவாழி யாழ்வானைப் போல் ஒளி மல்கி வலம்புரி போல் நின்று அதிர்ந்து, Valampuri Pol Nindru Adhirndhu - (இடப் பக்கத்திலுள்ள) பாஞ்ச ஜந்யாழ்வானைப் போல் நிலை நின்று முழங்கி சார்ங்கம் உதைத்த, Saarngam Udaitha - ஸ்ரீ சார்ங்கத்தாலே தவளப்பட்ட சரம் மழை போல், Saram Mazhai Pol - பாண வர்ஷம் போல் வாழ, Vaazha - (உலகத்தாரனைவரும்) வாழும்படியாகவும் நாங்களும், Naangalum - கண்ண பிரானோட்டைக் கலவிக்கு நோன்பு நோற்கிற) நாங்களும் மகிழ்ந்து, Magizhndhu - ஸந்தோஷித்து மார்கழி நீராட, Maargazhi Neeraada - மார்கழி நீராட்டம் செய்யும் படியாகவும் உலகினில், Ulaginil - இல் வுலகத்தில் தாழாதே, Thaalaathe - தாமதம் செய்யாமல் (சடக்கென) பெய்திடாய், Peydidaay - மழை பொழியக் கடவை ஏல் ஓர் எம் பாவாய் !, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய் ! |
| 478 | திருப்பாவை || 5 | மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத் தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். | மாயனை, Maayanai - மாயச் செயல்களை யுடையவனும் மன்னு வடமதுரை மைந்தனை, Mannu Vadamadurai Maindhanai - (பகவத் ஸம்பந்தம்) நித்யமாகப் பெற்றுள்ள வட மதுரைக்குத் தலைவனும் தூய பெரு நீர், Thooya Peru Neer - பரிசுத்தமாய் ஆழம் மிக்கிருக்கிற தீர்த்தத்தை யுடைய யமுனை துறைவனை, Yamunai Thuravani - யமுனை யாற்றங்கரையை நிரூபகமாக வுடையயவனும் ஆயர் குலத்தினில் தோன்றும், Aayar Kulathinil Thondrum - இடைக் குலத்தில் விளங்கா நின்றுள்ள அணி விளக்கை, Aani Vilakkai - மங்கள தீபம் போன்றவனும் தாயை குடல் விளக்கஞ்செய்த, Thai Kudal Vilakkanjeydha - தாயாகிய தேவகி பிராட்டியின் வயிற்றை விளங்கச் செய்தவனுமான தாமோதரனை, Dhamodharanai - கண்ண பிரானை நாம், Naam - (அடிச்சியோமாகிய) நாம் தூயோம் ஆய் வந்து, Thuyoam Aay Vandhu - பரி சுத்தி யுள்ளவர்களாய்க் கிட்டி தூ மலர்கள் தூய், Thoo Malarkal Thoo - நல்ல மலர்களைத் தூவி தொழுது, Thozhudhu - வணங்கி வாயினால் பாடி, Vaayinaal Paadi - வாயாரப் பாடி மனத்தினால் சிந்திக்க, Manathinaal Sindikka - நெஞ்சார தியானம் பண்ண (அதன் பிறகு) போய பிழையும், Poya Pizhaiyum - (சேஷ சேஷிபாவ ஜ்ஞான முண்டாவதற்கு) முன்பு கழிந்த பாவங்களும் புகு தருவான் நின்றனவும், Pugu Tharuvaan Nindranavum - பின்பு (தன்னை அறியாமல்) வரக் கூடிய பாவங்களும் தீயினில் தூசு ஆகும், Theeyinil Doosu Aagum - நெருப்பிலிட்ட பஞ்சு போலே உருமாய்ந்து போம் (ஆன பின்பு) செப்பு, Seppu - அவ் வெம்பெருமான் திரு நாமங்களைச் சொல் ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய்! |
| 479 | திருப்பாவை || 6 | புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். | புள்ளும், Pullum - பறவைகளும் சிலம்பின காண், Silambina Kaan - (இரை தேடுகைக்காக எழுந்து) ஆரவாரங்கள் செய்யா நின்றன காண் புள் அரையன், Pul Araiyan - பறவைத் தலைவனான பெரிய திருவடிக்கு கோ, Ko - ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய இல்லில், Illil - ஸந்நிதியிலே வெள்ளை, Vellai - வெண்மை நிறமுடையதும் விளி, Vili - (அனைவரையும்) அழையா நிற்பதுமான சங்கின், Sangin - சங்கினுடைய பேர் அரவம், Paer Aravam - பேரொலியையும் கேட்டிலையோ, Keatilaiyo - செவிப்படுத்துகின்றலையோ? பிள்ளாய், Pillai - (பகவத் விஷய ரஸ மறியப் பெறாத) பெண்ணெ! எழுந்திராய், Ezhundhirai - (சடக்கென) எழுந்திரு பேய் முலை நஞ்சு, Pey Mulai Nanchu - பூனையின் முலையில் (தடவிக் கிடந்த) விஷத்தை உண்டு, Undu - (அவளது ஆவியுடன் அமுது செய்து கள்ளம் சகடம், Kallam Sagadam - வஞ்சனை பொருந்திய (அஸுரா விஷ்டமான) சகடமானது கலக்கு அழிய, Kalakku Azhiya - கட்டுக் குலையும்படி கால், Kaal - திருவடியை ஒச்சி, Ochi - ஓங்கச் செய்தவனும் வெள்ளத்து, Vellathu - திருப்பாற்கடலில் அரவில், Aravil - திருவனந்தாழ்வான் மீது துயில் அமர்ந்த, Thuyil Amarndha - திருக்கண் வளர்ந்தருளின வித்தினை, Vithinai - ஐகத் காரண பூதனுமான எம்பெருமானை முனிவர்களும், Munivargalum - மநந சீலரான ரிஷிகளும் யோகிகளும், Yogigalum - யோகப் பயிற்சியில் ஊன்றினவர்களும் உள்ளத்து கொண்டு, Ullathu Kondu - (தமது) ஹ்ருதயத்தில் அமர்த்திக் கொண்டு மெள்ள எழுந்து, Mella Ezhundhu - (ஹ்ருதயஸ்தனான அவ்வெம்பெருமான் அசையாதபடி) ஸாவதாநமாக எழுந்து அரி என்ற , Ari Endra - ‘ஹரிர் ஹரிர் என்ற பேர் அரவம்,Paer Aravam - பேரொலியானது உள்ளம் புகுந்து, Ullam Pugundhu - (எமது) நெஞ்சிற் புகுந்து குளிர்ந்து, Kulirndhu - குளிர்ந்தது ஏல் ஓர் எம் பாவாய், Ael Or Em Paavay - ஏல் ஓர் எம் பாவாய் |
| 480 | திருப்பாவை || 7 | கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய். | ஆய்ச்சியர், Aaychiyar - இடைப் பெண்கள் காசும், Kaasum - (கழுத்தில் அணிந்துள்ள) அச்சுத் தாலியும் பிறப்பும், Pirappum - ஆமைத் தாலியும் கலகலப்பு, Kalakalappu - கலகலவென்று சப்திக்கும் படியாக கைபேர்த்து, Kaiperthu - கைகளை அசைத்து மத்தினால், Maththinaal - மத்தாலே ஓசை படுத்த, Osai Padutha - ஓசை படுத்தின தயிர் அரவம், Thayir Aravam - தயிரின் ஒலியையும் கேட்டிலையோ, Keatilaiyo - கேட்க வில்லையோ? நாயகப் பெண் பிள்ளாய், Nayakap Pen Pillai - பெண்களுக்கெல்லாம் தலைமையாயிருப்பவளே நாராயணன் மூர்த்தி கேசவனை, Naaraayanan Moorthi Kesavanai - ஸ்ரீமந் நாராயண அவதாரமான கண்ண பிரானை பாடவும், Paadavum - (நாங்கள்) பாடா நிற்கச் செய்தேயும் நீ, Nee - நீ கேட்டே, Keate - (அப் பாட்டைக்) கேட்டு வைத்தும் கிடத்தியோ, Kitathiyo - (இங்ஙனே) உறங்குவாயோ? தேசம் உடையாய், Desam Udayaay - மிக்க தேஜஸ்ஸை யுடையவளே! திற, Thira - (நீயே எழுந்து வந்து கதவைத்) திற ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய்! பேய் பெண்ணே, Pey Pennae - மதி கெட்ட பெண்ணே! எங்கும், Engum - எல்லா விடங்களிலும் ஆனைச் சாத்தன், Aanaich Sathan - பரத்வாஜ பக்ஷிகளானவை கலந்து, Kalandhu - (ஒன்றோடொன்று) ஸம்ஸ்லேக்ஷித்து கீசுகீசு என்று, Keesukeesu Endru - கீச்சு கீச்சு என்று பேசின, Pesina - பேசிய பேச்சு அரவம், Pechu Aravam - பேச்சினுடைய ஆரவாரத்தை கேட்டிலையோ, Keatilaiyo - (இன்னும் நீ) கேட்கவில்லையோ? வாசம், Vaasam - பரிமள வஸ்துக்களினால் நறு, Naru - மணம் கமழா நின்றுள்ள குழல், Kuzhal - கூந்தலை யுடைய |
| 481 | திருப்பாவை || 8 | கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். | கோதுகலம் உடைய பாவாய், Kodhukalam Udaya Paavay - கிருஷ்ணனாலே மிகவும் விரும்பத் தக்க பதுமை போன்றவளே! கீழ் வானம், Keezh Vaanam - கீழ் திசைப் பக்கத்து ஆகாசமானது வெள்ளென்று, Vellendru - வெளுத்தது (அன்றியும்) எருமை, Erumai - எருமைகளானவை மேய்வான், Maeyvaan - (பனிப் புல்) மேய்கைக்காக சிறுவீடு, Siruveedu - சிறு தோட்டங்களில் பரந்தன, Paranadhan - சென்று புக்கன போவான் போகின்றார், Povaan Pogindraar - (திருவேங்கட யாத்திரை போலே) போகையையே பிரயோஜனமாகக் கொண்டு போகின்ற மிக்குள்ள பிள்ளைகளும், Mikkulla Pillaigalum - மற்றமுள்ள எல்லாப் பெண் பிள்ளைகளையும் போகாமல் காத்து, Pogaamal Kaathu - போக ஒட்டாமல் தடுத்து உன்னை கூவுவான், Unnai Koovuvaan - உன்னை அழைத்தர் பொருட்டு வந்து நின்றோம், Vandhu Nindroom - உன் மாளிகை வாசலில் வந்திரா நின்றோம் எழுந்திராய், Ezhundhirai - (எங்களுடன் கூடுவதற்காக) எழுந்திரு பாடி, Paadi - (கண்ண பிரானுடைய குணங்களைப்) பாடி பறை கொண்டு, Parai Kondu - (அவனிடத்துப்) பறையைப் பெற்று மா வாய் பிளந்தானை, Maa Vaai Pilanthaanai - குதிரை யுருவமெடுத்து வந்த கேசி யென்னுமசுரனுடய வாயைக் கீண்டெறிந்தவனும் மல்லரை மாட்டிய, Malarai Maattiya - மல்லர்களை மாளச் செய்தவனுமான தேவாதி தேவனை, Thevaadhi Thevani - அத் தேவ தேவனை நாம் சென்று சேவித்தால், Naam Sendru Sevithaal - நாம் அணுகி அடி பணிந்தால் (அவன்) ஆராய்ந்து, Aaraayndhu - (நமது குறைகளை) ஆராய்ந்து ஆ ஆ என்று அருளும், Aa Aa Endru Arulum - ஐயோ! என்று இரங்கி யருள்வன் ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய் ! |
| 482 | திருப்பாவை || 9 | தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய். | தூ மணி மாடத்து, Thoo Mani Maadathu - பரிசுத்தமான மாணிக்கங்கள் அழுத்திச் சமைத்த மாளிகையில் சுற்றும், Sutrum - நாற் புறமும் விளக்கு எரிய, Vilakku Eriya - விளக்குகள் எரியவும் தூபம் கமழ, Thoopam Kamazha - (அகில் முதலியவற்றின்) வாசனைப் புகைகள் மணம் வீசவும் துயில் அணை மேல் கண் வளரும், Thuyil Anai Mel Kan Valarum - மென்மையான படுக்கையின் மீது நித்திரை செய்யா நின்ற மாமான் மகளே, Maamaan Magale - அம்மான் பெண்ணே! முணி கதவம், Muni Kadhavam - மாணிக்கக் கதவினுடைய தாள், Thaal - தாழ்ப்பாளை திறவாய், Thiravaay - திறந்திடுவாயாக மாமீர், Maameer - அம்மாமீ! அவளை, Avalai - (உள்ளே உறங்குகிற) உன் மகளை எழுப்பீரோ, Ezhuppiro - எழுப்ப மாட்டீரோ? உன் மகள், Un Magal - உன் மகளானவள் ஊமையோ, Oomaiyo - வாய்ப் புலன் இல்லாதவளோ? அன்றி, Andri - அல்லாமற் போனால் செவிடோ, Sevido - செவிப் புலன் இல்லாதவனோ? (அன்றி) அனந்தலோ, Ananthalo - பேருறக்க முடையவளாயிருக்கின்றாளோ? (அன்றி) பெரு துயில், Peru Thuyil - பெரிய படுக்கையில் ஏமப்பட்டாளோ, Emapattalo - காவலிடப்பட்டாளோ? (அன்றி) மந்திரம்பட்டாளோ, Manthirampattalo - மந்திர வாதத்தினால் கட்டுப் படுத்தப் பட்டானோ? மா மாயன், Maa Maayan - அளவிறந்த ஆச்சரியச் செய்கைகளை யுடையவனே! மாதவன், Maadhavan - திருமகள் கேழ்வனே! வைகுந்தன், Vaigundhan - ஸ்ரீ வைகுண்டநாதனே! என்று என்று, Endru Endru - என்று பலகால் சொல்லி நாமம் பலவும், Naamam Palavum - (எம்பெருமானுடைய) திரு நாமங்கள் பலவற்றையும் நவின்று, Navindru - (வாயாரக்) கற்றோம் ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய்! |
| 483 | திருப்பாவை || 10 | நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். | நோற்று, Nottru - நோன்பு நோற்று சுவர்க்கம் புகுகின்ற, Suwarkkam Pugukindra - ஸுகாநுபவம் பண்ணா நின்ற அம்மனாய், Ammaanai - அம்மே! வாசல் திறவாதார், Vaasal Thiravaadhaar - வாசற்கதவைத் திறவாதவர்கள் மாற்றமும் தாராரோ, Maatramum Thaararo - ஒருவாய்ச் சொல்லுங் கொடுக்க மாட்டாரோ? நாற்றத் துழாய் முடி, Naatrat Thuzhaay Mudi - நறு நாற்றம் வீசா நின்றுள்ள திருத் துழாய் மாலையை அணிந்துள்ள திரு முடியையுடைய நாராயணன், Naaraayanan - நாராயணனும் நம்மால் போற்ற பறை தரும், Nammaal Potra Parai Tharum - நம்மால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றுப் புருஷார்த்தங்களைத் தந்தருள்பவனும் புண்ணியனால், Punnianaal - தர்மமே வடிவு கொண்டு வந்தாற் போன்றவனுமான இராமபிரானால் பண்டு ஒரு நாள், Pandu Oru Naal - முன் ஒரு காலத்திலே கூற்றத்தின் வாய் வீழ்ந்த, Kootratthin Vaai Veezhndha - யமன் வாயில் (இரையாக) விழுந்தொழிந்த கும்பகரணனும், Kumbakaranum - கும்பகர்ணனும் தோற்று, thottru - தோல்வி யடைந்து பெருந்துயில், perunthuyil - (தனது) பேருறக்கத்தை உனக்கே தான் தந்தானோ, unakke thaan thandhaano - உனக்கே தான் கொடுத்து விட்டானோ? ஆற்ற அனந்தல் உடையாய், aatra anandhal udaiyaay - மிகவும் உறக்கமுடையவளே! அரும் கலமே, arum kalame - பெறுதற்கரிய ஆபரணம் போன்றவளே! தேற்றம் ஆய் வந்து திற, thettram aay vandhu thira - தெளிந்து வந்து (கதவைத்) திறந்திடு ஏல் ஓர் எம் பாவாய், ael oar em paavaayo - ஏல் ஓர் எம் பாவாய் |
| 484 | திருப்பாவை || 11 | கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். | கன்று கறவை, kanru karavai - கன்றாகிய பசுக்களின்னுடைய பல கணங்கள், pala kanangal - பல திரள்களை கறந்து, karandhu - கறப்பவர்களும் செற்றார், setraar - சத்துருக்களினுடைய திறல் அழிய, thiral azhiya - வலி அழியும்படி சென்று, sendru - (தாமே படையெடுத்துச்)சென்று செரு செய்யும், seru seyyum - போர் செய்யுமவர்களும் குற்றம் ஒன்று இல்லாத, kutrram ondru illaadha - ஒருவகைக் குற்றமும் அற்றவர்களுமான கோவலர் தம், kovalar tham - கோபாலர்களுடைய (குடியிற் பிறந்த) பொன் கொடியே, pon kodiyae - பொன் கொடி போன்றவளே! புற்று அரவு அல் குல் புனமயிலே, putru aravu al kul punamayile - புற்றிலிருக்கிற பாம்பின் படம் போன்ற அல்குலையும் காட்டில் (இஷ்டப்படி திரிகிற) மயின் போன்ற சாயலையுமுடையவளே! செல்வம் பெண்டாட்டி, selvam pendatti - செல்வமுள்ள பெண் பிள்ளாய்! போதராய், podharaayo - (எழுந்து) வருவாயாக சுற்றத்து தோழிமார் எல்லாரும், sutratthu thozhimaar ellaarum - பந்து வர்க்கத்திற் சேர்ந்தவர்களும் தோழிமார்களுமாகிய எல்லாரும் வந்து, vandhu - (திரண்டு) வந்து நின் முற்றம் புகுந்து, ninn mutram pogundhu - உனது (திரு மாளிகையின்) முற்றத் தேறப் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட, mugil vannan paer paada - கார் மேக வண்ணனான கண்ணபிரானுடைய திருநாமங்களைப் பாடச் செய்தேயும் நீ , nee - (பேருறக்கமுடைய) நீ சிற்றாது, sirtradhu - சலியாமலும் பேசாது, pesadhu - (ஒன்றும்) பேசாமலும் உறங்கும் பொருள் எற்றுற்கு, urangum porul etrurku - உறங்குவது என்ன பிரயோஜனத்திற்காகவோ? (அறியோம்) ஏல் ஓர் எம் பாவாய், ael oar em paavaayo - ஏல் ஓர் எம் பாவாய் |
| 485 | திருப்பாவை || 12 | கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். | இள கன்று எருமை, ila kanru erumai - இளங்கன்றுகளையுடைய எருமைகளானவை கனைத்து , kanaithu - (பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக் கொண்டு கன்றுக்கு இரங்கி,kanruku irangi - (தன்) கன்றின் மீது இரக்கமுற்று நினைத்து, ninaithu - (கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்) முலை வழியே நின்று பால் சோர, mulai vazhiye nindru paal soora - முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக(அப்பெருக்கினால்) இல்லம், Illam - வீட்டை நனைத்து, nanaithu - (முழுவதும்) ஈரமாக்கி சேறு ஆக்கும் நல் செல்வன் , seru aakkum nal selvvan - சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த செல்வத்தை யுடையவனுடைய தங்காய் , thangai - தங்கையானவளே! பனி, Pani - பனியானது தலை வீழ, thalai veezha - எங்கள் தலையிலே விழும்படி நின் வாசல் கடை பற்றி, nin vaasal kadai patri - உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு சினத்தினால் , sinathinaal - (பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால் தென் இலங்கை கோமானை, then Ilangai komanai - தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை செற்ற - கொன்றொழித்தவனும் மனத்துக்கு இனியானை - சிந்தனை இனியனுமான இராம பிரானை பாடவும், padavum - நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும் நீ, Ni - நீ வாய் திறவாய், Vaai thiravai - வாய்திறந்து பேசுகிறாயில்லை இனித் தான், iniththaan - எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும் எழுந்திராய், Ezhundhirai - எழுந்திரு ஈது என்ன பேர் உறக்கம், Eedhu enna Per Urakkam - இஃது என்ன ஓயாத தூக்கம்? அனைத்து இல்லத்தாரும் , anaitthu illathaarum - (இச்சேரியிலுள்ள) எல்லா வீட்டுக் காரர்களாலும் அறிந்து, arindhu - (நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிறவிது) அறியப்பட்டதாயிற்று |
| 486 | திருப்பாவை || 13 | புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்து நீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். | புள்ளின் வாய் கீண்டானை , pullin vaai keenndaanai - பறவை யுருவம் பூண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை , pollaa arakkanai killi kalainthaanai - கொடியனான இராவணனை முடித்து (அரக்கர் குலத்தை வேரோடு) களைந்தொழித்தவனுமான எம்பெருமானுடைய கீர்த்திமை பாடி போய், keerthimai paadi poi - லீர சரிதங்களைப் பாடிக் கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும், pillaigal ellaarum - எல்லாப் பெண்பிள்ளைகளும் பாவைக் களம் புக்கார், paavai kalam pukaar - நோன்பு நோற்பதற்காகக் குறிக்கப்பட்ட இடத்திற்புகுந்தனர் வெள்ளி எழுந்து, velli ezundhu - சுக்ரோதயமாகி வியாழம் உறங்கிற்று, viyaazham urangitru - ப்ருஹஸ்பதி அஸ்தமித்தான்(அன்றியும்) புள்ளும், pullum - பறவைகளும் சிலம்பின, silambina - (இறை தேடப் போன இடங்களில்) ஆரவாரஞ்செய்தன போது அரி கண்ணினாய், podhu ari kanninaai - புஷ்பத்தின் அழகைக் கொள்ளை கொள்ளா நின்ற கண்ணை யுடையவளே பாவாய், paavaai - பதுமை போன்றவளே! நீ, nee - நீ நல் நாள், nal naal - கிருஷ்ணனும் நாமும் கூடு கைக்கு வாய்த்த காலமாகிய இந்த நல்ல நாளில் கள்ளம் தவிர்ந்து, kallam thavirndhu - (கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதங்களைத் தனியே நினைத்துக் கிடக்கையாகிற) கபடத்தை விட்டு கலந்து, kalanthu - எங்களுடன் கூடி குள்ளக் குளிர குடைந்து நீர் ஆடாதே, kullak kullira kudaindhu neer aadaadhe - உடமபு வவ்வலிடும்படி குளத்திற் படிந்து ஸ்நானம் பண்ணாமல் பள்ளி கிடத்தி யோ, palli kidathiyo - படுக்கையிற் கிடந்துறங்கா நின்றாயோ? ஆல், aal - ஆச்சரியம்! |
| 487 | திருப்பாவை || 14 | உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். | உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள், ungal puzhaikkadai toattathu vaaviyul - உங்கள் (வீட்டுப்) புழைக்கடைத் தோட்டத்திலிருக்கிற தடாகத்திலுள்ள செங் கழுநீர், seng kazhuneer - செங்கழுநீர்ப் பூக்களானவை வாய் நெகிழ்ந்து, vaai nekizhndhu - விகஸிக்க ஆம்பல் வாய் கூம்பின, aambal vaai koompina - ஆம்பல் மலர்களின் வாய் மூடிப் போயின (அன்றியும்) செங்கல் பொடி கூறை வெண் பல் தவத்தவர், sengal podi koorai ven pal thavaththavar - காவிப் பொடியில் (தோய்த்த) வஸ்திரங்களையும் வெளுத்த பற்களையுமுடையராய் தபஸ்விகளாயிருந்துள்ள ஸந்நியாஸிகள் தங்கள் திருக் கோயில் சங்கு இடுவான், thangal thiruk koyil sangu iduvaan - தமது திருக் கோயில்களைத் திறவு கோலிட்டுத் திறக்கைக்காக போகின்றார், pogindraar - போகா நின்றனர் எங்களை, engalai - எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய், munnam ezuppvaan vaai pesum nangaai - முந்தி வந்து எழுப்புவதாகச் சொல்லிப் போன நங்கையே! நாணாதாய், naanaadhaay - (‘சொன்னபடி எழுப்ப வில்லையே!’ என்னும்) வெட்கமுமில்லாதவளே நா உடையாய், na udaiyaay - (இனிய பேச்சுக் பேசவல்ல) நாவைப் படைத்தவளே! சங்கொடு சக்கரம் ஏந்தும் தட கையன், sangodu chakkaram aendhum thada kaiyan - சங்கையும் சக்கரத்தையும் தரியா நின்றுள்ள விசாலமான திருக் கைகளை யுடையவனும் பங்கயக் கண்ணனை, pangayak kannanai - தாமரைபோற் கண்ணனுமான கண்ண பிரானை பாட, Paada - பாடுகைக்கு எழுந்திராய், ezunthiraai - எழுந்திரு ஏல் ஓர் எம் பாவாய்!, ael oar em paavaay - ஏல் ஓர் எம் பாவாய்! |
| 488 | திருப்பாவை || 15 | எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கொள் வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய். | இளம் கிளியே, Ilam kiliye - இளமை தங்கிய கிளி போன்றுள்ளவளே! எல்லே, Elle - (இஃது) என்னே! இன்னம், Innam - இத்தனை பெண் பிள்ளைகள் திறண்டுவந்த பின்பும் உறங்குதியோ, Urangudhiyo - தூங்குகின்றாயோ? (என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க;) நங்கைமீர், Nangaimeer - பெண்காள்! போதர்கின்றேன், Podhargindrein - (இதோ) புறப்பட்டு வருகிறேன் சில் என்று அழையேல்மின், Sil endru azhaiyelmin - சிலுகு சிலுகென்று அழையாதேயுங்கள் (என்று உறங்குகிறவள் விடைசொல்ல) இளங்கிளியே ! வல்லை, Vallai - (நீ வார்த்தை சொல்லுவதில்) வல்லமை யுடையவள் உன் கட்டுரைகள், Un katturaigal - உனது கடுமையான சொற்களையும் உன் வாய், Un vai - உன் வாயையும் பண்டே, Pandae - நெடு நாளாகவே அறிதும், Arithum - நாங்கள் அறிவோம் (என்று உணர்த்த வந்தவர்கள் சொல்ல) நீங்கள் வல்லீர்கள், Neengal vallirkal - இப்படிச் சொல்லுகிற) நீங்கள் தான் (பேச்சில்) வல்லமை யுமையீர்(அன்றேல்) நானே தான் ஆயிடுக, Naane thaan aiduga - (நீங்கள் செல்லுகிறபடி) நான் தான் (வல்லவளாய்) ஆகக் கடவேன் (உங்களுக்கு நான் செய்ய வேண்டுவதென்? என்று உள்ளுறங்குமவள் கேட்க நீ, Nee - நீ ஒல்லை, Ollai - சீக்கிரமாக போதாய், Podhay - எழுந்து வா உனக்கு, Unakku - (தனியே) உனக்கு மட்டும் வேறு என்ன உடையை, Veru enna udaiyai - (நீ) வேறு என்ன (அதிசயத்தை) உடையையாயிரா நின்றாய்? என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க எல்லாரும், Ellarum - (வர வேண்டியவர்கள்) எல்லாரும் போந்தாரோ, Pontharo - வந்தனரோ? (என்று உறங்குமவள் கேட்க) போந்தார், Pondhar - (எல்லோரும்) வந்தனர் போந்து எண்ணிக்கை கொள், Pondhu ennikai kol - (நீ எழுந்துவந்து) எண்ணிப் பார்த்துக் கொள் (என்று உணர்த்த வந்தவர்கள் கூற)(என்னை ஏதுக்காக வரச் சொல்லுகிறீர்களென்று உறங்குமவள் கேட்க) வல் ஆனை, Val aanai - (குவலயாபீட மென்னும்) வலிய யானையை கொன்றானை, Konraanai - கொன்றொழித்தவனும் மாற்றாரை, Maatraarai - சத்ருக்களான கம்ஸாதிகளை மாற்று அழிக்க வல்லானை, Maatru azhikka vallaanai - மிடுக்கு அழிந்தவர்களாகச் செய்தருள வல்லவனும் மாயனை, Maayanai - அற்புதனுமான கண்ணபிரானை பாட, Paada - பாடுகைக்காக(ஒல்லை நீ போதாய் என்றழைக்கிறார்கள்) ஏல் ஓர் எம்பாவாய், El or empavaay - ஏல் ஓர் எம்பாவாய் |
| 489 | திருப்பாவை || 16 | நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய் | நாயகன் ஆய் கின்ற, Naayagan ai kindra - (எமக்கு) ஸ்வாமியாயிருக்கிற நந்தகோபனுடைய, Nandhagopanudaiya - நந்தகோபருடைய கோயில், Koyil - திரு மாளிகையை காப்பானே, Kaappaane - காக்குமவனே! கொடி, Kodi - த்வஜபடங்கள் தோன்றும், Thondrum - விளங்கா நிற்கப்பெற்ற தோரணம் வாசல், Thoranam vaasal - தோரண வாசலை காப்பானே, Kaappaane - காக்குமவனே! மணி, Mani - அழகிய கதவம், Kadavam - கதவினுடைய தாள், Thaal - தாழ்ப்பாளை திறவாய், Thiravai - திறக்க வேணும்’ ஆயர் சிறுமி யரோ முக்கு, Aayar sirumi yaro mukku - இளமை தங்கிய இடைப் பெண்களாகிய எமக்கு மாயன், Maayan - ஆச்சர்யச் செயல்களை யுடையவனும் மணிவண்ணன், Manivannan - நீலமணி போன்ற திரு நிறத்தை யுடையவனுமான கண்ண பிரான் நென்னலே, Nennale - நேற்றே அறை பறை வாய் நேர்ந்தான, Arai parai vaai nerndhaana - ஒலி செய்யும் பறைளைத் தருவதாக வாக்களித்தான்’ துயில் எழ, Thuyil ezha - (அவ் வெம்பெருமான்) துயிலினின்றும் எழுந்திருக்கும்படி பாடுவான், Paaduvaan - பாடுகைக்காக தூயோம் ஆய், Thuyom ai - பரிசுத்தைகளாய் வந்தோம், Vandom - (அடியோம்) வந்திருக்கின்றோம்’ அம்மா, Amma - ஸ்வாமி! முன்னம்முன்னம், Munnammunnam - முதல் முதலிலே வாயால், vaayaal - (உமது) வாயினால் மாற்றாதே, maattraadhe - மறுக்காதொழிய வேணும்’ (அன்றியும்) நேசம் நிலை கதவம், nesam nilai kadhavam - கண்ண பிரான் பக்கலில்) பரிவுற்றிருக்கும் நிலைமையையுடைய கதவை நீ, nee - நீயே நீக்கு, neekku - நீக்க வேணும் |
| 490 | திருப்பாவை || 17 | அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய் | அம்பரமே, ambaramae - வஸ்த்ரங்களையே தண்ணீரே, thanneerae - தீர்த்தத்தையே சோறே, soarae - சோற்றையே அறம் செய்யும், aram seyyum - தருமமாக அளிக்கின்ற எம்பெருமான் நந்தகோபாலா, emberumaan Nandhagopaalaa - எமக்கு ஸ்வாமியான நந்த கோபரே! எழுந்திராய், elundhiray - எழுந்திருக்க வேணும். கொம்பு அனார்க்கு எல்லாம், kombu anaarkku ellaam - வஞ்சிக் கொம்பு போன்ற மாதர்களுக்கெல்லாம் கொழுந்தே, kozhundhe - முதன்மை யானவளே! குலம் விளக்கே, kulam vilakkae - (இக்) குலத்திற்கு (மங்கள) தீபமாயிருப்பவளே எம்பெருமாட்டி, emberumaatti - எமக்குத் தலைவியானவளே! அசோதாய், yasodhaay - யசோதைப் பிராட்டியே! அறிவுறாய், arivuray - உணர்ந்தெழு’ அம்பாம் ஊடு அறுத்து, ambaam oodu aruthu - ஆகாசத்தை இடைவெளி யாக்கிக் கொண்டு ஓங்கி, oongi - உயர வளர்ந்து உலகு அளந்த, ulagu alandha - எல்லா) உலகங்களையும் அளந்தருளின உம்பர்கோமானே, umbarangomaanae - தேவாதி தேவனே! உறங்காது, urangadhu - இனிக்) கண்வளர்ந்தருளாமல் எழுந்திராய், elundhiray - எழுந்திருக்க வேணும் செம்பொன் கழல் அடி, sempon kazhal adi - சிவந்த பொன்னாற் செய்த வீரக் கழலை அணிந்துள்ள திருவடியை யடைய செல்வா, selva - சீமானே! பலதேவா!, paladheva! - பல தேவனே! உம்பியும் நீயும், umbiyum neeyum - உன் தம்பியாகிய கண்ணனும் நீயும் உறங்கேல், urangel - உறங்காதொழிய வேணும்’ |
| 491 | திருப்பாவை || 18 | உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடைதிறவாய் வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச் செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். | அழைத்தன காண், azhaithana kaan - கூவா நின்றனகாண்’ (அன்றியும்) மாதவி பந்தல் மேல், maadhavi pandhal mel - குருக்கத்திக் கொடிகளாலாகிய பந்தலின் மேல் (உறங்குகிற) குயில் இனங்கள், kuyil inangal - குயிற் கூட்டங்கள் பல்கால், palkaal - பல தடவை கூவின காண், koovina kaan - கூவா நின்றன காண்’ ஓடாத, odaadha - (போர்க் களத்தில் முதுகு காட்டி) ஓடாத பந்து ஆர்விரலி, pandhu aarvirali - பந்து பொருந்திய விரலை யுடையவளே!(க்ருஷ்ணனோடு விளையாடு கைக்கு உபகரணமான) பந்து உன் மைத்துனன் பேர் பாட, un maiththunan per paada - உனது கணவனான கண்ண பிரானுடைய திரு நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக சீர் ஆர் வளை ஒலிப்ப வந்து, seer aar valai olippa vandhu - சீர்மை பொருந்திய (உன்) கை வளைகள் ஒலிக்கும் படி (நடந்து) வந்து செந்தாமரை கையால், sendhaamarai kaiyaal - செந்தாமரைப் பூப் போன்ற (உன்) கையினால் மகிழ்ந்து திறவாய், magizhndhu thiravaay - (எங்கள் மீது) மகிழ்ச்சி கொண்டு (தாழ்ப்பாளைத் திறந்திடு’) ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம் பாவாய் உந்து மத களிற்றன், undhu math kalitran - (தன்னால் வென்று) தள்ளப்படுகின்ற மத யானைகளை யுடையவனும் தோள் வலியன், thol valiyan - புஜ பலத்தை யுடையவனுமான நந்தகோபாலன், Nandhagopalan - நந்த கோபானுக்கு மருமகளே, marumagale - மருமகளானவளே! நப்பின்னாய், nappinnaay - ஓ! நப்பின்னைப் பிராட்டியே! கந்தம் கமழும் குழலீ, kandham kamazhum kuzhali - பரிமளம் வீசா நின்றுள்ள கூந்தலுடையவளே கடை திறவாய், kadai thiravaay - தாழ்ப்பாளைத் திறந்திடு கோழி, kozhi - கோழிகளானவை எங்கும் வந்து, engum vandhu - எல்லா விடங்களிலும் பரவி |
| 492 | திருப்பாவை || 19 | குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய் மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய் | குத்து விளக்கு, kuthu vilakku - நிலை விளக்குளானவை எரிய, eriya - (நாற்புரமும்) எரியா நிற்க கோடு கால் கட்டில் மேல், kodu kaal kattil mel - யானைத் தந்தங்களினாற் செய்த கால்களை யுடைய கட்டிலிலே மெத்தென்ற, methendru - மெத்தென்றிருக்குமதாயும் பஞ்ச சயனத்தின் மேல் ஏறி, panja sayanathin mel aeri - (அழகு குளிர்த்தி மென்மை பரிமளம் வெண்மை என்னும்) ஐந்து குணங்களையுடைய துமான படுக்கையின் மீதேறி கொத்து அலர் பூ குழல், kothu alar poo kuzhal - கொத்துக் கொத்தாக அலர்கின்ற பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான நப்பின்னை, nappinnai - நப்பின்னைப் பிராட்டியினுடைய கொங்கை, kongai - திருமுலைத் தடங்களை மேல் வைத்து, mel vaithu - தன் மேல் வைத்துக் கொண்டு கிடந்த, kidandha - பள்ளி கொள்கின்ற மலர் மார்பா, malar maarbaa - அகன்ற திருமார்பை யுடைய பிரானே! வாய் திறவாய், vaai thiravaay - வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் மை தட கண்ணினாய், mai thada kanninaay - மையிட்டு அலங்கரிக்கப் பெற்றதும் விசாலமுமான கண்ணை யுடைய நப்பினாய்! நீ, nee - நீ உன் மணாளனை, un manaalanai - உனக்குக் கணவனான கண்ண பிரானை எத்தனை போதும், eththanai podhum - ஒரு நொடிப் பொழுதும் துயில் எழ ஒட்டாய், thuyil ezh odaay - படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒட்டுகிறாயில்லை;’ எத்தனையேலும், eththanaiyaelum - க்ஷண காலமும் பிரிவு ஆற்ற கில்லாய், pirivu aattra killaay - (அவளைப்) பிரிந்து தரித்திருக்க மாட்டுகிறாயில்லை;’ ஆல், aal - ஆ! ஆ!!. தகவு அன்று, thagavu andru - நீ இப்படி இருப்பது உனக்குத்) தகுதியானது’ தத்துவம், thathuvam - (இஃது) உண்மை ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம் பாவாய் |
| 493 | திருப்பாவை || 20 | முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய் செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய் செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய் உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய் | முப்பத்து மூவர் அமரர்க்கு, muppathu moovar amararkku - முப்பத்து முக் கோடி தேவர்கட்கு முன் சென்று, mun sendru - (துன்பம் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி கப்பம், kappam - (அவர்களுடைய) நடுக்கத்தை தவிர்க்கும், tharikkum - நீக்கி யருள வல்ல கலியே, kaliyae - மிடுக்கை யுடைய கண்ண பிரானே! வெப்பம், veppam - (பயமாகிற) ஜ்வரத்தை கொடுக்கும், kodukkum - கொடுக்க வல்ல விமலா, vimalaa - பரி சுத்த ஸ்வபாவனே! துயில் எழாய், thuyil ezhay - படுக்கையினின்றும் எழுந்தருள் ’செப்பு அன்ன, 'seppu anna - பொற் கலசம் போன்ற மென் முலை, men mulai - விரஹம் பொறாத முலைகளையும் செம் வாய், sem vaai - சிவந்த வாயையும் சிறு மருங்குல், siru marungul - நுண்ணிதான இடையையுமுடைய நப்பின்னை நங்காய், nappinnai nangaay - நப்பின்னைப் பிராட்டியே! திருவே, thiruvae - ஸ்ரீ மஹா லக்ஷ்மியே! ’துயில் எழாய், 'thuyil ezhay - படுக்கையினின்றும் எழுந்தருள் செப்பம் உடையாய், seppam udaiyaay - (ஆஸ்ரித ரக்ஷணத்தில்) ருஜுவாயிருக்குந் தமையை யுடையவனே திறல் உடையாய், thiral udaiyaay - பகைவர் மண்ணுன்னும் படியான வலிமை யுடையவனே! செற்றார்க்கு, serrarkku - சத்துருக்களுக்கு (துயிலெழுந்த பின்பு.) உக்கமும், ukkamum - (நோன்புக்கு உபகரணமான) ஆலவட்டத்தையும் (விசிறியையும்) தட்டொளியும், tattoliyum - கண்ணாடியையும் உன் மணாளனை, un manaalanai - உனக்கு வல்லபனான கண்ணபிரானையும் தந்து, tandhu - கொடுத்து எம்மை, emmai - (விரஹத்தால் மெலிந்த) எங்களை இப்போதே, ippodae - இந்த க்ஷணத்திலேயே நீராட்டு, neeraattu - நீராட்டக் கடவாய்’ ஏல் ஓர் எம்பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய் |
| 494 | திருப்பாவை || 21 | ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண் ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். | ஏற்ற கலங்கள், etra kalangal - (கரந்த பாலை) ஏற்றுக் கொண்ட கலங்களானவை எதிர் பொங்கி, edhir pongi - எதிரே பொங்கி மீது அளிப்ப, meedhu alippa - மேலே வழியும்படியாக மாற்றாத, maatradha - இடை விடாமல் பால் சொரியும், paal soriyum - பாலைச் சுரக்கின்ற வள்ளல், vallal - (பெண்களும் பேதைகளும் அணைத்துக் கொள்ளும்படி) நற்சீலத்தை யுடைய பெரு பசுக்கள், peru pasukkal - பெரிய பசுக்களை ஆற்ற படைத்தான், aatra padaithaan - விசேஷமாகப் படைத்துள்ள நந்த கோபர்க்குப் பிள்ளை யானவனே! அறிவுறாய், arivuray - திருப் பள்ளி யுணர வேணும்’ ஊற்றம் உடையாய், ootram udaiyaay - அடியாரைக் காப்பதில் ஸ்ரத்தை யுடையவனே! பெரியாய், periyaai - பெருமை பொருந்தியவனே! உலகினில், ulaginil - (இவ்) வுலகத்திலே தோற்றம் ஆய் நின்ற, thoatram aay ninra - ஆவிர்பவித்த சுடரே, sudarae - தேஜோ ரூபியானவனே! துயில் எழாய் மாற்றார், maatraar - சத்ருக்கள் உனக்கு வலி தொலைந்து, unakku vali tholaindhu - உன் விஷயத்தில் (தங்களுடைய) வலி மாண்டு (உபயோகமற்ற வலிவை யுடையராய்.) உன் வாசல் கண், un vaasal kan - உன் மாளிகை வாசலில் ஆற்றாது வந்து, aattraadhu vandhu - கதி யற்று வந்து உன் அடி பணியும் ஆ போலே, un adi paniyum aa polae - உன் திருவடிகளில் சரணாகதி பண்ணிக் கிடப்பது போல் யாம், yaam - நாங்கள் புகழ்ந்து, pugazhndhu - (உன்னைத்) துதித்து போற்றி, potri - (உனக்கு) மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு வந்தோம், vandhom - (உன் திரு மாளிகை வாசலில்) வந்து சேர்ந்தோம்’ ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய் |
| 495 | திருப்பாவை || 22 | ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண் ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். | அம் கண் மா ஞாலத்து அரசர், am kan maa nyaalathu arasar - அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்) அபிமான பங்கம் ஆய் வந்து, abimaana pangam aay vandhu - (தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே, nin pallik kattil keezhe - உன் சிங்காசனத்தின் கீழ் சங்கம் இருப்பார் போல், sangam iruppaar pol - திரள் திரளாக இருப்பது போலே வந்து, vandhu - நாங்களும் உன் இருப்பிடத்தேற விடை கொண்டு தலைப் பெய்தோம், thalai petrom - கிட்டினோம் கிங்கிணி வாய்ச் செய்த, kingini vaai seidha - கிண்கிணியின் வாய்ப் போலிரா நின்ற (பாதிவிக ஸிதமான) தாமரைப் பூ போலே, thaamarai poo polae - செந்தாமரைப் பூப்போன்ற செம் கண், sem kan - சிவந்த திருக் கண்கள் சிறுச்சிறிது, siru siridhu - கொஞ்சங்கொஞ்சமாக எம் மேல், em mel - எங்கள் மேலே விழியாவோ, vizhiyaavo - விழிக்க மாட்டாவோ? திங்களும், thingalum - சந்திரனும் ஆதித்யனும், aadityanum - ஸுர்யனும் எழுந்தால் போல், ezhundhaal pol - உதித்தாற் போல அம் கண் இரண்டும் கொண்டு, am kan irandum kondu - அழகிய திருக் கண்களிரண்டினாலும் எங்கள் மேல் நோக்குதிஏல், engal mel nokkudhiyael - எங்களைக் கடாக்ஷித்தருள் வாயாகில் எங்கள் மேல் சாபம், engal mel saabam - எங்கள் பக்கலிலுள்ள பாபம் இழிந்து, izhindhu - கழிந்துவிடும் ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய் |
| 496 | திருப்பாவை || 23 | மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் | மாரி, maari - மழைகாலத்தில் மலை முழஞ்சில், malai muzhanjil - மலையிலுள்ள குஹைகளில் மன்னி கிடந்து, manni kidandhu - (பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து உறங்கும், urangum - உறங்கா நின்ற சீரிய சிங்கம், seeriya singam - (வீர்யமாகிற) சீர்மையை யுடைய சிங்கமானது அறிவுற்று, arivurru - உணர்ந்தெழுந்து தீ விழித்து, thee vizhithu - நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து வேரி மயிர், vaeri mayir - (ஜாதிக்கு உரிய) பரிமள முள்ள உளைமயிர்களானவை பொங்க, ponga - சிலும்பும்படி எப்பாடும், epaadum - நாற் புறங்களிலும் பேர்ந்து, perndhu - புடை பெயர்ந்து (அசைந்து) உதறி, udhari - (சரிரத்தை) உதறி மூரி நிமிர்ந்து, moori nimirthu - சோம்பல் முறித்து முழங்கி, muzhangi - கர்ஜனை பண்ணி புறப்பட்டு போதரும் ஆ போலே, purappattu podharum aa polae - வெளிப் புறப்பட்டு வருவது போல பூவை பூ வண்ணா, poovai poo vanna - காயம் பூப்போன்ற உறத்தை யுடைய பிரானே! நீ, nee - நீ உன் கோயில் நின்று, un koyil ninru - உன்னுடைய திருக்கோயிலினின்றும் இங்ஙனே போந்தருளி, ingganae poandharuli - இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி உன் கோயில் நின்று, un koyil ninru - அழகிய ஸந்நிவேசத்தை யுடைய கோப்பு உடைய, koppu udaiya - அழகிய ஸந்நிவேசத்தை யுடைய சீரிய, seeriya - லோகோத்தரமான சிங்காசனத்து, singaasanathu - எழுந்தருளியிருந்து யாம் வந்த காரியம், yaam vandha kaariyam - நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை ஆராய்ந்து, aaraaindhu - விசாரித்து அருள், arul - கிருபை செய்ய வேணும்’ ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய் |
| 497 | திருப்பாவை || 24 | அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் | அன்று, anru - (இந்திரன் முதலானவர்கள் மஹாபலியால் நலிவு பட்ட) அன்று அக்காலத்தில் இவ்உலகம், ivulagam - இந்த லோகங்களை அளந்தாய், alandhaay - (இரண்டடியால்) அளந்தருளினவனே! அடி, adi - (உன்னுடைய அத்) திருவடிகள் போற்றி, potri - பல்லாண்டு பல்லாண்டு வாழ்க அங்கு, angu - பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில் கன்று, kanru - கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை) குணிலா, gunila - எறிதடியா(க்கொண்டு) எறிந்தாய், erindhaay - (கபித்தாஸுரன் மீது) எறிந்தருளினவனே கழல், kazhal - (உன்னுடைய) திருவடிகள் போற்றி! குன்று, kunru - கோவர்த்தன கிரியை குடையா, kudaiyaa - குடையாக எடுத்தாய், eduthaay - தூக்கினவனே; குணம், kunam - (உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி) குணங்கள் போற்றி! வென்று, vendru - (பகைவரை) ஜபித்து பகை, pagai - த்வேஷத்தை சென்று, sendru - எழுந்தருளி தென் இலங்கை, then ilangai - (அவனுடைய பட்டணமாகிய) அழகிய லங்காபுரியை செற்றாய், serrai - அழித்தருளினவனே! திறல், thiral - (உன்னுடைய) மிடுக்கு போற்றி, potri - பல்லாண்டு வாழ்க சகடம் பொன்ற, sagadam pondru - சகடாஸுரன் முடியும்படி உதைத்தாய், udhaithaay - (அச்சகடத்தை) உதைத் தருளினவனே! புகழ், pugazh - (உன்னுடைய) கீர்த்தியானது போற்றி! கெடுக்கும், kedukkum - அழிக்கின்ற நின் கையில் வேல் போற்றி, nin kaiyil vael potri - உனது திருக் கையிலுள்ள வேல் வாழ்க’ என்று என்று, endru endru - என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு உன் சேவகமே, un saevagamae - உன்னுடைய வீர்யங்களையே ஏத்தி, aeththi - புகழ்ந்து கொண்டு யாம், yaam - அடியோம் இன்று, indru - இப்போது பறை கொள்வான் வந்தோம், parai kolvaan vandhom - பறை கொள்வதற்காக (உன்னிடம்) வினை கொண்டோம் இரங்கு, irangu - கிருபை பண்ணி யருள் ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய் |
| 498 | திருப்பாவை || 25 | ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் | ஒருத்தி, oruththi - தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு மகன் ஆய், magan aay - பிள்ளையாய் பிறந்து, pirandhu - அவதரித்து ஓர் இரவில், oru iravil - (அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில் (திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து) ஒருத்தி, oruththi - யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தி யினுடைய மகன் ஆய், magan aay - பிள்ளையாக ஒளித்து வளர, oli thuu valar - ஏகாந்தமாக வளருங் காலத்தில் தான், thaan - தான் (கம்ஸன்) தரிக்கிலான் ஆகி, tharikkilaan aagi - (அங்ஙனம் வளர்வதைப்) பொறாதவனாய் தீங்கு நினைந்த, theengu ninaindh - (இவனை எப்படியாகிலும் கொல்ல வேணும் என்று) தீங்கை நினைத்த கஞ்சன், kanjan - கம்ஸனுடைய கருத்தை, karuthai - எண்ணத்தை பிழைப்பித்து, pizhaippithu - வீணாக்கி வயிற்றில், vayitril - (அக் கஞ்சனுடைய) வயிற்றில்; நெருப்பு என்ன நின்ற, neruppu enna nindra - ‘நெருப்பு’ என்னும்படி நின்ற நெடு மாலே, nedu maale - ஸர்வாதிகனான எம்பெருமானே! உன்னை, unnai - உன்னிடத்தில் அருத்தித்து வந்தோம், arutthithu vandhom - (புருஷார்த்தத்தை) யாசியா நின்று கொண்டு வந்தோம்; பறை தருதி ஆகில், parai taruthi aagil - எங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில் திரு தக்க செல்வமும் , thiru thakka selvamum - பிராட்டி விரும்பத் தக்க ஸம்பத்தையும் சேவகமும், sevakamum - வீர்யத்தையும் யாம் பாடி , yaam paadi - நாங்கள் பாடி , வருத்தமும் தீர்ந்து, varuthamum theerndhu - உன்னைப் பிரிந்து படுகிற துயரம் நீங்கி மகிழ்ந்து, Magizhndhu - மகிழ்ந்திடுவோம்; ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம்பாவாய் |
| 499 | திருப்பாவை || 26 | மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் | மாலே, maale - (அடியார் பக்கலில்) வியாமோஹ முடையவனே! மணிவண்ணா, maṇivanna - நீல மணி போன்ற வடிவை உடையவனே! ஆலின் இலையாய், aalin ilaiyaay - (ப்ரளய காலத்தில்) ஆலந்தளிரில் பள்ளி கொள்பவனே! மார்கழி நீராடுவனான், maargazhi neeraduvanaan - மார்கழி நீராட்டத்திற்காக மேலையார், melaaiyaar - உத்தம புருஷர்கள் செய்வனகள், seyvangaḷ - அநுட்டிக்கும் முறைமைகளில் வேண்டுவன, venduvana - வேண்டியவற்றை கேட்டி ஏல், ketti ael - கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்) ஞாலத்தை எல்லாம், nyaalathai ellaam - பூமியடங்கலும் நடுங்க, nadunga - நடுங்கும்படி முரல்வன, muralvana - ஒலி செய்யக் கடவனவும் பால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன, paal anna vaṇṇathu unpaanja sanniyame poalvana - பால் போன்ற நிறமுடையதான உன்னுடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை ஒத்திருப்பனவுமான சங்கங்கள், sangangal - சங்கங்களையும் போய் பாடு உடையன, poi paadu udaiyana - மிகவும் இடமுடையனவும் சாலப் பெரு, saalap peru - மிகவும் பெரியனவுமான பறை, parai - பறைகளையும் பல்லாண்டு இசைப்பார், pallandu isaippar - திருப்பல்லாண்டு பாடுமவர்களையும் கோலம் விளக்கு, kolam vilakku - மங்கள தீபங்களையும் கொடி, kodi - த்வஜங்களையும் விதானம், vidaanam - மேற்கட்டிகளையும் அருள், arul - ப்ரஸாதித்தருள வேணும்; ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம் பாவாய் |
| 500 | திருப்பாவை || 27 | கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். | கூடாரை, koodaarai - தன் அடி பணியாதவர்களை வெல்லும் சீர், vellum seer - வெல்லுகின்ற குணங்களை யுடைய கோவிந்தா, govindhaa - கண்ண பிரானே! உன் தன்னை, un thannai - உன்னை பாடி, paadi - (வாயாரப்)பாடி பறை கொண்டு, parai kondhu - (உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் பெற்று யாம் பெறு சம்மானம், yaam peru sammaanam - (பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது நாடு புகழும் பரிசினால், naadu pugazhum parisinaal - நாட்டார் புகழும்படியாக சூடகம், soodagam - (கையிலணியும் ஆபரணமான) சூடகங்களும் தோள் வளை, thol valai - தோள்வளைகளும் தோடு, thodu - (காதுக்கிடும் ஆபரணமான) தோடும் செவிப் பூ, sevi poo - கர்ணப் பூவும் பாடகம், paadagam - பாதகடகமும் என்றனையப் பல் கலனும், endranaiya pal kalenum - என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும் (உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப்பட) யாம் நன்றாக அணிவோம் ஆடை, aadai - சேலைகளை உடுப்போம், uduppom - (நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்; அதன் பின்னே, adhan pinne - அதற்குப் பின்பு பால் சோறு, paal soru - பாற் சோறானது (க்ஷிராந்நம்) மூட, mooda - மறையும் படியாக நெய் பெய்து, nei peythu - நெய் பரிமாறி முழங்கை வழி, muzhangai vazhi - முழங்கையால் வழியும் படியாக (உண்டு) கூடி, koodi - (நீயும் நாங்களுமாகக்) கூடியிருந்து குளிர்ந்து, kulirndhu - குளிர வேணும்: ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம்பாவாய் |
| 501 | திருப்பாவை || 28 | கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய். | பறை தாராய், parai thaaraay - பறை தந்தருளவேணும்; எல் ஓர் எம் பாவாய், el or em paavai - எல் ஓர் எம்பாவாய் குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!, kuraiyu ondruum illaadha govindhaa! - உனக்கொரு குறையுண்டாகிலன்றோ எங்களுக்கொரு குறையுண்டாவது என்ற கருத்தைக் காட்டும் யாம், yaam - நாங்கள் கறவைகள் பின் சென்று, karavaigal pin sendru - பசுக்களின் பின்னே போய் கானம் சேந்து, gaanam sendhu - காடு சேர்ந்து உண்போம், unbom - சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும் அறிவு ஒன்றும் இல்லாத, arivu ondruum illaadha - சிறிதளவும் அறிவில்லாத ஆண் குலத்து, aan kulathu - இடைக் குலத்தில் உன் தன்னை, un thannai - உன்னை பிறவி பெறும்தனை புண்ணியம் உடையோம், piravi perumthannai punniyam udaiyom - (ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம் இறைவா, iraiva - ஸ்வாமியான கண்ண பிரானே உன் தன்னோகி உறவு, un thannogi uravu - உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது, ingu thamakku ozhikka ozhiyadhu - இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது அறியாத பிள்ளைகளோம், ariyadha pillai kaalom - (லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள் உன் தன்னை, un thannai - உன்னை அன்பினால், anbinal - ப்ரீதியினாலே சிறு பேர் அழைத்தனவும், siru per azhaithanavum - சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும் நீ, nee - (ஆச்ரித வத்ஸலனான) நீ சீறி அருளாதே, seeri arulaadhe - கோபித்தருளாமல் |
| 502 | திருப்பாவை || 29 | சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் | கோவிந்தா, govindhaa - கண்ண பிரானே! சிற்றம் சிறுகாலை, sitram sirukalai - விடி காலத்திலே வந்து, vandhu - (இவ் விடத்தேற) வந்து உன்னை சேவித்து, unnai sevithu - உன்னைத் தண்டனிட்டு உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள், un pon thaamarai adi potrum porul - உனது அழகிய திருவடித் தாமரைகளை மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை கேளாய், kelaay - கேட்டருள வேணும்; பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ, perum meydhu unnum kulathil pirandha nee - பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ எங்களை, engalai - எங்களிடத்தில் குற்றேவல், kutraeval - அந்தரங்க கைங்கரியத்தை கொள்ளாமல் போகாது, kollaamal pogadhu - திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது; இற்றை பறை கொள்வான் அன்று காண், itrai parai kolvaan andru kaan - இன்று (கொடுக்கப்படுகிற இப்) பறையைப் பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்; எற்றைக்கும், ettraikum - காலமுள்ளவளவும் ஏழ் ஏழ் பிறவிக்கும், ez ez piravigkum - (உன்னுடைய) எவ் வவதாரங்களிலும் உன் தன்னோடு, un thannodu - உன்னோடு உற்றோமே ஆவோம், utrome aavom - உறவு உடையவர்களாகக் கடவோம்; உனக்கே, unakke - உனக்கு மாத்திரமே நாம், naam - நாங்கள் ஆள் செய்வோம், aal seyvom - அடிமை செய்யக் கடவோம்; எம், em - எங்களுடைய மற்றை காமங்கள், matrai kaamangal - இதர விஷய விருப்பங்களை மாற்று, maartru - தவிர்க்கருள வேணும்; ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம் பாவாய் |
| 503 | திருப்பாவை || 30 | வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் | வங்கம் கடல், vangam kadal - கப்பல்களை யுடைய (திருப்பாற்) கடலை கடைந்த, kadaindha - (தேவர்களுக்காகக்) கடைந்த ஸ்ரீ ய:பதியான கேசவனை, kaesavanai - கண்ண பிரானை திங்கள் திரு முகத்து சே இழையார், thingal thiru mukathu se izhaiyaar - சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள் சென்று, sendru - அடைந்து இறைஞ்சி, iraainji - வணங்கி அங்கு, angu - அத் திருவாய்ப் பாடியில் பறைகொண்ட ஆ ஆற்றை, paraikonda aa aatrai - (தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை. அணி புதுவை, aṇi pudhuvai - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திரு வவதரித்த) பை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான், pai kamalam thaṇ theriyal pattar piraan - பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான குளிர்ந்த மாலையை யுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான) கோதை, ko̱thai - ஆண்டாள் சொன்ன, sonna - அருளிச் செய்த சங்கம் தமிழ் மாலை முப்பதும், saṅkam tamizh mālai muppathum - திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ் மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும் தப்பாமே, thappaame - தப்பாமல் இங்கு, ingu - இந் நிலத்தில் இ பரிசு, i parisu - இவ் வண்ணமே உரைப்பார், uraippaar - ஓதுமவர்கள் ஈர் இரண்டு மால் வரை தோள், eer irandu maal varai thol - பெரிய மலை போன்ற நான்கு திருத் தோள்களை யுடையவனும் செம்கண் திருமுகத்து, semkan tirumugathu - சிவந்த திருக் கண்களை யுடைய திரு முகத்தை யுடையவனும் செல்வம், selvam - ஐஸ்வர்யத்தை யுடையனும் திருமாலால், thirumaalaal - ஸ்ரீ ய:பதியுமான எம்பெருமானாலே எங்கும், engum - எவ்விடத்தும் திருஅருள் பெற்று, thiruarul petru - (அவனுடைய) க்ருபையைப் பெற்று இன்புறுவர், inpurvar - ப்ரஹ்ம ஆனந்த சாலிகளாக ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம்பாவாய் |
| 152 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 1 | வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணென இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 -4-1 | வெண்ணெய் அளைந்த, Vennai alaindha - வெண்ணெ யளைந்ததனாலான குணுங்கும், Kunungum - மொச்சை நாற்றத்தையும் விளையாடு புழுதியும், Vilaiyaadu puzhudhiyum - விளையாடுவதினாற் படிந்த புழுதியையும் கொண்டு, Kondu - (உடம்பிற்) கொண்டிருந்து (அதனால்) இவ் விரா, Iv vira - இன்றை இரவில் தேய்த்து கிடக்க, Theithu kidakka - (உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட) உன்னை, Unnai - உன்னை திண்ணென, Thinnaena - நிச்சயமாக நான் ஒட்டேன், Naan ottaen - நான் ஸம்மதிக்க மாட்டேன் எண்ணெய், Ennai - (தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும் புளி பழம், Puli pazham - புளிப் பழத்தையும் கொண்டு, Kondu - ஸித்தமாக வைத்துக் கொண்டு இங்கு, Ingu - இங்கே எத்தனை போதும், Ethanai podhum - எவ்வளவு காலமாக (வெகு காலமாக) இருந்தேன், Irundhaen - (உன் வரவை எதிர்பார்த்து) இரா நின்றேன் நண்ணல் அரிய பிரானே, Nannal ariya pirane - (ஒருவராலும ஸ்வ யத்நத்தால்) கிட்டக் கூடாத ஸ்வாமியே நாரணா, Naaraana - நாராயணனே நீராட, Neeraada - நீராடுவதற்கு வாராய், Vaaraay - வர வேணும் |
| 153 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 2 | கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால் தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 | நின்ற, Nindra - நிலையாய் நின்ற மராமரம், Maramaram - (ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே கன்றுகள், Kanrugal - பசுவின் கன்றுகள் ஓட, Oda - வெருண்டோடும்படி செவியில், Seviyil - (அக் கன்றுகளின்) காதில் கட்டெறும்பு பிடித்து இட்டால், Katterumbu pidithu ittaal - கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால் தென்றி, Thenri - (அதனால் அக் கன்றுகள் வெருண்டு)சிதறிப் போய் கெடும் ஆகில், Kedum aagil - (கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால் (பின்பு நீ) வெண்ணெய், Vennai - வெண்ணையை திரட்டி, Thiratti - திரட்டி விழுங்குமா, Vizhungumaa - விழுங்கும்படியை காண்பன், Kaanban - பார்ப்பேன்(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி) இன்று, Indru - இந்த நாள் நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த திரு ஓணம், Thiru onam - ஸ்ரவண நஷத்ரமாகும் (ஆகையால்) நீ, Nee - நீ நீர் ஆட வேண்டும், Neer aada vendum - நீராடுவதற்கு வர வேணும் எம்பிரான் ஓடாதே வாராய், Embiraan odaathe vaaraay - எம்பிரான் ஓடாதே வாராய் |
| 154 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 3 | பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் காய்ச்சின நீரோடு நெல்லிக் கடாரத்தில் பூரித்து வைத்தேன் வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சனமாட நீ வாராய் -2 4-3 | பேய்ச்சி, Peycchi - பூதனையினுடைய முலை, Mulai - முலையை (அவளுடைய உயிரோடும்) உண்ண, Unna - (நீ) உண்டு விட கண்டு, Kandu - (அதைப்) பார்த்தும் பின்னையும் என் நெஞ்சம் நில்லாது, Pinnaiyum en nenjam nillaadhu - (நான் அஞ்சி ஓட வேண்டி யிருக்க ஆய்ச்சியர் எல்லாரும், Aaychiyar ellaarum - இடைச்சிகள் எல்லாரும் கூடி, Koodi - ஒன்று கூடி அழைக்கவும், Azhaikkavum - கூப்பாடு போட்டுக் கதறவும் நான், Naan - (உன் மேல் அன்பு கொண்ட) நான் முலை தந்தேன், Mulai thandhaen - முலை (உண்ணக்) கொடுத்தேன் நெல்லியொடு, Nelliyodu - நெல்லியை யிட்டு காய்ச்சின, Kaaychina - காய்ச்சின நீர், Neer - வெந்நீரை கடாரத்தில், Kadaarathil - சருவத்தில் பூரித்து வைத்தேன், Poorithu vaithaen - நிறைத்து வைத்திருக்கிறேன் வாய்த்த, Vaaytha - பொருந்திய புகழ், Pugazh - யசஸ்ஸையும் மணி, Mani - நீல மணி போன்ற வண்ணா, Vanna - நிறத்தையுமுடைய கண்ணனே! மஞ்சனம் ஆட, Manjanam aada - நீராட நீ வாராய், Nee vaaraay - நீ வர வேணும் |
| 155 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 4 | கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும் அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 | கஞ்சன், Kanchan - கம்ஸனுடைய புணர்ப்பினில், Punarpinil - கபடமான ஆலோசனையினாலே வந்த, Vandha - (நலிவதாக) வந்த கடிய, Kadiya - (அஸுரா வேசத்தாலே) க்ரூரமான சகடம், Sakadam - சகடத்தை உதைத்து, Udaithu - (திருவடிகளால்) உதைத்து முறித்து விட்டு வஞ்சகம், Vanjakam - வஞ்சனை யுள்ள பேய் மகள், Pei Magal - பூதனை யானவள் துஞ்ச, Thunja - முடியும்படி முலை, Mulai - (அவளுடைய) முலையிலே வாய் வைத்த, Vai Vaitha - வாயை வைத்த பிரானே, Pirane - உபகாரகனே! மஞ்சளும், Manjalum - (உன் மேனி நிறம் பெறும்படி சாத்துவதற்கு உரிய)மஞ்சளையும் செங்கழுநீரின் வாசிகையும், Sengazhuneerin Vaasikaiyum - (நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும் நாறு சாந்தும், Naaru Saandhum - பரிமளிதமான சந்தநத்தையும் அஞ்சனமும், Anjanamum - (கண்களிலிடும்) மையையும் கொண்டு வைத்தேன், Kondu Vaithen - கொண்டு வைத்தேன் அழகனே! நீராட வாராய், Azhagane! Neeraada Vaaraay - அழகனே! நீராட வாராய் |
| 156 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 5 | அப்பம் கலந்த சிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உருதியேல் நம்பீ செப்பிள மென் முலையாளர்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர் சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் நீ இங்கே வாராய் -2 4-5 | நம்பி, Nambi - (பால சாபலத்தால்) பூர்ணனே! செப்பு, Seppu - பொற் கலசம் போன்ற இள மெல் முலையார்கள், Ila mel mulaiyaargal - இளமையான மெல்லிய முலையை யுடைய மாதர்கள் சிறுபுறம் பேசி, Sirupuram pesi - (உன் மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி சிரிப்பர், Sirippar - பரிஹஸிப்பார்கள் (அன்றியும்) பாலில், Paalil - பாலிலே அக்காரம், Akkaaram - வெல்லக் கட்டியை கலந்து, Kalandhu - சேர்த்துப் (பிசைந்து) அப்பம், Appam - அப்பத்தையும் கலந்த, Kalandha - (அப்படியே) சேர்ந்த சிற்றுண்டி, Sitrundi - சிற்றுண்டியையும் சொப்பட, Soppada - நன்றாக நான் சுட்டு வைத்தேன், Naan suttu vaithen - நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதி ஏல், Thinnal uruthi ael - (நீ அவற்றை) தின்ன விரும்பினாயாகில் சொப்பட, Soppada - நன்றாக நீர் ஆட வேண்டும், Neer aada vendum - நீராட வேண்டும் பிரான், Piran - ஸ்வாமியே! சோத்தம், Soththam - உனக்கு ஓரஞ்சலி இங்கே வாராய், Inge vaaray - இங்கே வாராய் |
| 157 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 6 | எண்ணைய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக் கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடல் ஓத நீர் போலே வண்ணம் அழகியபிரானே மஞ்சனமாட நீ வாராய் – 2-4 6 | எண்ணெய் குடத்தை, Ennai kudathai - எண்ணெய் நிறைந்த குடத்தை உருட்டி, Urutti - உருட்டிவிட்டு இள பிள்ளை, Ila pillai - (உறங்குகிற) சிறு குழந்தைகளை கிள்ளி, Killi - கையால் வெடுககெனக் கிள்ளி எழுப்பி, Ezhuppi - (தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து கண்ணை, Kannaai - கண் இமையை புரட்டி விழித்து, Puratti vizhithu - தலை கீழாக மாற்றி (அப் பூச்சி காட்டி) விழித்து கழை கண்டு, Kazhai kandu - பொறுக்க முடியாத தீம்புகளை செய்யும், Seyyum - செய்து வருகிற பிரானே, Pirane - ஸ்வதந்த்ரனே! கனிகள், Kanigal - (நில்ல) பழங்களை உண்ண, Unna - (நீ) உண்ணும்படி தருவன், Tharuvan - (உனக்குக்) கொடுப்பேன் ஒலி, Oli - கோஷியா நின்ற கடல், Kadal - கடலினுடைய ஓதம், Otham - அலைகளை யுடைய நீர் போலே, Neer pole - ஜலம் போலே வண்ணம் அழகிய, Vannam azhagiya - திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற நம்பீ, Nambi - உத்தம புருஷனே! மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |
| 158 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 7 | கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் எம்பிரானே சிறந்த நல் தாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய் – 2-4 7 | எம்பிரானே, Embiraane - எம்பிரானே! கறந்த, Karandha - (அந்தந்த காலங்களில்) கறந்த நல் பாலும், Nal paalum - நல்ல பாலையும் தயிரும், Thayirum - தயிரையும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய், Kadainthu uri mel vaitha vennai - (தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும் பிறந்ததுவே முதல் ஆக, Pirandhadhuve mudhal aaga - (நீ) பிறந்தவன்று தொடங்கி பெற்று அறியேன், Pertru ariyen - கண்டறியேன் சிறந்த நல் தாய், Sirandha nal thay - (எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்(பிள்ளை மேல் குற்றம் உண்டானாலும் மறைக்கக் கடவ நல் சிறந்த தாயார் ) அலர் தூற்றும், Alar thootrum - பழி சொல்லுகின்றாளே என்பதனால், Enpathaanal - என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால் பிறர் முன்னே, Pirar munne - அயலா ரெதிரில் மறந்தும், Maranthum - ப்ராமாதிகமாகவும் உரை ஆட மாட்டேன், Urai aada maatten - (உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |
| 159 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 8 | கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும் நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள் நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 | கன்றினை, Kanrinai - கன்றினுடைய வால், Vaal - வாலிலே ஓலை கட்டி, Olai katti - ஓலையைக் கட்டி கனிகள், Kanigal - பழங்கள் (அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்ல வந்த ஒரு கன்றை எறி குணிலாகக் கொண்டு அஸுராவேசமுள்ள விளா மரத்தின் பழங்கள்) உதிர, Udhira - (கீழே) உதிர்ந்து விழும்படி எறிந்து, Erindhu - வீசி பின், Pin - பின்பு ஓடி தொடர்ந்து, Odi thodarndhu - ஓடிப் போய் ஓர் பாம்பை, Or paambai - (காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை பிடித்துக் கொண்டு, Pidithuk kondu - பிடித்துக் கொண்டு ஆட்டினாய் போலும், Aattinaay polum - ஆட்டினவனோ தான் (நீ) நம்பி, Nambi - ஒன்றிலும் குறைவில்லாதவனே! நின் திறத்தேன் அல்லேன், Nin thirathen allen - (நான்) உன் விஷய மொன்றையு மறியாத வளாயிரா நின்றேன் (அது கிடக்கட்டும்) நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த நல் திரு நாள், Nal thiru naal - திரு நிஷத்திரமாகும் (இந் நாள்) (ஆகையால்) நீ நின்று நீர் ஆட வேண்டும், Nee nindru neer aada vendum - நீ நின்று நீர் ஆட வேண்டும் நாரணா ஓடாதே வாராய், Naarana odaathe vaaraay - நாரணா ஓடாதே வாராய் |
| 160 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 9 | பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும் மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் -2 4-9 | பூணி, Pooni - பசுக்கள் கட்டிய தொழுவினில், Thozhuvinil - கொட்டகையிலே புக்கு, Pukku - நுழைந்து புழுதி அளைந்த, Puzhuthi alaindha - புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த பொன் மேனி, Pon meni - (உனது) அழகிய உடம்பை காண, Kaana - பார்ப்பதற்கு பெரிதும், Perithum - மிகவும் உகப்பன், Ugappan - (நான்) விரும்புவேன் ஆகிலும், Aagilum - ஆனாலும் கண்டார், Kandaar - (உன்னைப்) பார்ப்பவர்கள் பழிப்பர், Pazhippar - ‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள் எத்தனையும் நாண் இலாதாய், Yethanaiyum naan ilaadhaay - (அன்றியும்) சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே! நப்பின்னை, Nappinnai - நப்பின்னையானவள் காணில், Kaanil - நீ இப்படியிருப்பதைக் கண்டால் சிரிக்கும், Sirikkum - சிரிப்பாள் என் மாணிக்கமே!, En maanikkame! - (என்) மணியே! மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |
| 182 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 1 | ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய் கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத் தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் 2-7-1 | தேனில், Thenil - தேனைக் காட்டிலும் இனிய, Iniya - போக்யனாயிருக்கிற பிரானே, Pirane - ப்ரபுவே! பற்றாதார் எல்லாம், Patraadhaar ellaam - பகைவரெல்லாரும் சிரிப்ப, Sirippa - பரிஹஸிக்கும்படி பானையில் பாலை பருகி, Paanaiyil paalai parugi - (கறந்த) பானையிலே யுள்ள பச்சைப் பாலைக் குடித்து (பின்பு) உன், Un - உன்னுடைய கரிய, Kariya - ஸ்யாமமான திருமேனி, Thirumeni - அழகிய திருமேனி வாட, Vaada - வாடும்படி கானகம் எல்லாம் திரிந்து, Kaanagam ellaam thirindhu - காட்டிடம் முழுதும் திரிந்து கொண்டு ஆநிரை, Aanirai - பசுக்களின் திரளை மேய்க்க, Meikkha - மேய்ப்பதற்கு நீ போதி, Nee pothi - ஸூ குமாரமான நீ போகிறாய்; அரு மருந்து ஆவது, Aru marundhu aavadhu - (நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை சம்சாரிகளுக்கு சம்சாரம் போக்கவும் நித்யர்களுக்கு போகம் அனுபவிக்க மருந்து அறியாய், Ariyaai - அறிகிறாயில்லை; செண்பகம் பூ, Senbagam poo - (இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு) செண்பகப் பூவை சூட்ட, Soota - (நான்) சூட்டும்படி வாராய், Vaaraay - வருவாயாக |
| 183 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 2 | கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய் உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2-7-2 | கண்கள், Kangal - கண்களானவை உன்னை கண்டால், Unnai kandaal - உன்னைப் பார்த்தால் கரு உடை மேகங்கள், Karu udai mekangal - கர்ப்பத்தை யுடைய (நீர் கொண்ட) மேகங்களை கண்டால், Kandaal - பார்த்தால் (அதை) ஒக்கும், Okkum - ஒத்துக் குளிர்கின்ற உரு உடையாய், Uru udayaai - வடிவை யுடையவனே! உலகு ஏழும், Ulagu ezhum - ஏழுலகங்களும் உண்டாக, Undaaga - ஸத்தை பெறும்படி வந்து பிறந்தாய், Vandhu pirandhaai - திருவவதரித்தவனே! திரு உடையாள், Thiru udayaal - (உன்னை) ஸம்பத்தாக வுடைய பிராட்டிக்கு மணவாளா, Manavaala - நாயகனே! திரு அரங்கத்தே, Thiru arangatthae - கோயிலிலே கிடந்தாய், Kidandhai - பள்ளி கொண்டிருப்பவனே! மணம், Manam - வாஸனை மருவி கமழ்கின்ற, Maruvi kamazhkindra - நீங்காமலிருந்து பரிமளிக்கிற மல்லிகைப் பூ, Mallikai poo - மல்லிகைப் பூவை சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |
| 184 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 3 | மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய் பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7-3 | மச்சொடு மாளிகை ஏறி, Machodu maalikai eri - நடு நலையிலும் மேல் நிலையிலும் ஏறிப் போய் மாதர்கள் தம் இடம் புக்கு, Maadhargal tham idam pukku - பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து கச்சொடு, Kachodu - (அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும் பட்டை, Pattai - பட்டாடைகளையும் கிழித்து, Kizhithu - கிழித்து விட்டு காம்பு துகில் அவை, Kaambu thugil avai - (மற்றும் அப் பெண்கள் உடுத்துள்ள) கரை கட்டின சேலையையும் கீறி, Keeri - கிழித்துப் போட்டு நிச்சலும், Nichalum - (இப்படியே) ப்ரதி நித்யம் தீமைகள், Theemaigal - துஷ்ட சேஷ்டைகளை செய்வாய், Seyvaai - செய்பவனே! நீள் திருவேங்கடத்து, Neel thiruvenkatathu - உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற எந்தாய், Endhaay - ஸ்வாமியே! பச்சை, Pachai - பசு நிறமுள்ள தமனகத்தோடு, Thamanakathodu - மருக்கொழுந்தையும் பாதிரிப்பூ, Paathirippoo - பாதிரிப்பூவையும் சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |
| 185 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 4 | தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2-7-4 | புருவம், Puruvam - புருவங்களையும் கரு குழல், Karu kuzhal - கரு நிறமான கூந்தலையும் நெற்றி, Nettri - (இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு பொலிந்த, Polindha - விளங்குகின்ற முகில் கன்று போலே, Mugil kanru pole - மேகக் கன்று போலே உருவம் அழகிய, Uruvam azhagiya - வடிவமழகிய நம்பி, Nambi - சிறந்தோனே! (நீ) தெருவின் கண் நின்று, Theruvin kan nindru - தெருவிலே நின்று கொண்டு இள ஆய்ச்சி மார்களை, Ila aaychi maargalai - இடைச் சிறுமிகளை தீமை செய்யாதே, Theemai seyaadhe - தீம்பு செய்யாமலிரு; மருவும், Maruvum - மருவையும் தமனகமும், Thamanakamum - தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின) சீர் மாலை, Seer maalai - அழகிய மாலைகள் மணம் கமழ்கின்ற, Manam kamazhgindra - வாஸனை வீசுகின்றன; இவை, Ivai - இவற்றை உகந்து, Ugandhu - மகிழ்ச்சி கொண்டு சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |
| 186 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 5 | புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் 2-7-5 | புள்ளினை, Pullinai - பகாஸுரனை வாய் பிளந்திட்டாய், Vai pilandhittai - வாய் கிழித்துப் பொகட்டவனே! பொரு, Poru - யுத்தோந்முகமான கரியின், Kariyin - குவலயாபீடத்தின் கொம்பு, Kombu - கொம்பை ஒசித்தாய், Osithaai - பறித்தவனே! கள்ளம் அரக்கியை மூக்கொடு, Kallam arakkiyai mookodu - வஞ்சனை யுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பணகையின் மூக்கையும் காவலனை, Kaavalanai - (அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய தலை, Thalai - தலையையும் கொண்டாய், Kondai - அறுத்தவனே! நீ, Nee - (இப்படிப்பட்ட) நீ வெண்ணெய், Vennai - வெண்ணெயை அள்ளி விழுங்க, Alli vizhungu - வாரி விழுங்க அஞ்சாது, Anjaadhu - சிறிதும் பயப்படாமல் அடியேன், Adiyen - (‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான் அடித்தேன், Adithen - அடித்தேன்; (அப் பிழையைப் பொறுத்து) தெள்ளிய, Thelliya - தெளிவான நீரில், Neeril - நீரிலே எழுந்த, Ezundha - உண்டான செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீரை சூட்டவாராய், Sootavaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |
| 187 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 6 | எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய் தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூ சூட்ட வாராய் -2-7-6 | நம்பி, Nambi - சிறந்தோனே!(நப்பின்னையை மணம் புணர்வதற்காக) எருதுகளோடு, Erudhugalodu - ஏழு ரிஷபங்களுடன் பொருதி, Poruthi - போர் செய்யா நின்றாய்; ஏதும், Yedhum - எதிலும் (ஒன்றிலும்) உலோபாய் காண், Ulopaai kaan - விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;(தேகம் பிராணன் பேணாமல் கருதிய, Karuthiya - (கம்ஸன் உன் மேல் செய்ய) நினைத்த தீமைகள், Theemaigal - தீம்புகளை செய்த, Seydha - (நீ அவன் மேற்) செய்து கம்ஸனை, Kamsanai - அந்தக் கம்ஸனை கால் கொடு, Kaal kodu - காலினால் (காலைக் கொண்டு) பாய்ந்தாய், Paainthaai - பாய்ந்தவனே! தெருவின் கண், Theruvin kan - தெருவிலே(அக்ரூரர் மூலமா யழைக்கப் பட்டுக் கம்ஸனரண்மனைக்குப் போம் போது) தீமைகள் செய்து, Theemaigal seydhu - தீமைகளைச் செய்து கொண்டு போய் சிக்கென, Sikkenna - வலிமையாக மல்லர்களோடு, Mallarkalodu - (சாணூர முஷ்டிகரென்னும்) மல்லர்களுடனே பொருது வருகின்ற, Poruthu varugindra - போர் செய்து வந்த பொன்னே, Ponne - பொன் போலருமையானவனே! புன்னைப் பூ சூட்ட வாராய், Punnai poo sootta vaaraay - புன்னைப் பூ சூட்ட வாராய் |
| 188 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 7 | குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய் குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -2-7-7 | குடங்கள், Kudangal - பல குடங்களை எடுத்து, Eduthu - தூக்கி ஏற விட்டு, Eera vittu - உயர்வெறிந்து கூத்து ஆட, Koothu aada - (இப்படி) குடக் கூத்தை யாடுவதற்கு வல்ல, Valla - ஸாமர்த்தியமுடைய எம் கோவே, Em kove - எம்முடைய தலைவனே மடம் கொள், Madam kol - மடப்பமென்ற குணத்தை யுடைய மதி முகத்தாரை, Mathi mugatharai - சந்த்ரன் போன்ற முகத்தை யுடைய பெண்களை மால் செய்ய வல்ல, Maal seiya valla - மயக்க வல்ல என் மைந்தா, En maindha - எனது புத்திரனே! முன், Mun - நரஸிம்ஹாவதாரத்திலே இரணியன் நெஞ்சை, Iraniyan nenjai - ஹிரண்யாஸுரனுடைய மார்பை இடந்திட்டு, Idandhittu - (திரு வுகிரால்) ஊன்ற வைத்து இரு பிளவு ஆக, Iru pilavu aaga - இரண்டு பிளவாகப் போம்படி தீண்டாய், Theendai - பிளந்தவனே! குடந்தை, Kudanthai - திருக் குடந்தையில் கிடந்த, Kidandha - பள்ளி கொள்ளுகிற எம் கோவே, Em kove - எமது தலைவனே! குருக்கத்திப் பூ சூட்டவாராய், Kurukkathi poo sootta vaaraay - குருக்கத்திப் பூ சூட்டவாராய் |
| 189 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 8 | சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7-8 | வல்லாய், Vallaai - வல்லவனாய் அவனை, Avanai - அந்த மாலிகனை நீ, Nee - நீ சாம் ஆறு எண்ணி, Saam aaru enni - செத்து போம் வழியையும் ஆலோசித்து சக்கரத்தால், Sakkarathal - சக்ராயுதத்தினால் தலை கொண்டாய், Thalai kondai - தலையையுமறுத்தாய்; ஆம் ஆறு, Aam aaru - நடத்த வேண்டியவைகளை அறியும், Ariyum - அறிய வல்ல பிரானே, Piraane - ப்ரபுவே! அணி, Ani - அழகிய அரங்கத்தே, Arangathey - கோயிலிலே கிடந்தாய், Kidandhaai - பள்ளி கொண்டிருப்பவனே! ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய், Emaatram ennai thavirthaai - இது தன்னாலே இறே இவர் ஏமாற்றத்தைப் பெரிய பெருமாள் தவிர்த்து அருளிற்றும் இருவாட்சி பூ சூட்ட வாராய், Iruvaatchi poo sootta vaaraai - இருவாட்சி பூ சூட்ட வாராய் சீ மாலிகன் அவனோடு, See maligan avanodu - மாலிகன் என்ற பெயரை யுடையவனோடு தோழமை கொள்ளவும், Thozhamai kollavum - ஸ்நேஹம் செய்து கொள்ளுதற்கும் |
| 190 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 9 | அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய் தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய் கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் -2-7-9 | அத்தாணியுள், Atthaaniyul - அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி) அமர்ர்கள், Amarrgal - தேவர்கள் சூழ, Soozha - சூழ்ந்திருக்க அங்கு, Angu - அவர்கள் நடுவில் அண்டத்து, Andhathu - பரம பதத்தில் இருத்தாய், Iruththaay - வீற்றிருப்பவனே! தொண்டர்கள், Thondargal - அடியார்களுடைய நெஞ்சில், Nenjil - ஹ்ருதயத்தில் உறைவாய், Uraivaai - வஸிப்பவனே! தூ மலரான், Thoo malaran - பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு மணவாளா, Manavaalaa - கொழுநனே! உலகினை ஏழும், Ulaginaai yezhum - (பிரளய காலத்தில்) ஏழு உலகங்களையும் உண்டிட்டு, Undittu - உண்டு விட்டு ஓர் ஆல் இலையில், Or aal ilaiyil - ஒராவிலையில் துயில் கொண்டாய், Thuyil kondai - யோக நித்திரையைக் கொண்டவனே! நான், Naan - நான் உன்னை கண்டு, Unnai kandu - (நீ பூச் குடியதைப்) பார்த்து உகக்க, Ugakka - மகிழும்படி கருமுகைப் பூ சூட்ட வாராய், Karumukai poo sootta vaaraai - கருமுகைப் பூவை சூட்டவாராய் |
| 191 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 10 | செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம்மாலை பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே 2-7-10 | செண்பகம், Senbakam - செண்பகப் பூவும் மல்லிகையோடு, Mallikaiyodu - மல்லிகைப் பூவும் செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீர்ப் பூவும் இருவாட்சி, Iruvaatchi - இருவாட்சிப் பூவும் எண் பகர், En pakar - (இன்ன தின்னதென்று) (ஆகிய) எண்ணிச் சொல்லப் படுகிற பூவும், Poovum - மலர்களை யெல்லாம் கொணர்ந்தேன், Konarendhen - கொண்டு வந்தேன்; இன்று, Indru - இப்போது இவை சூட்ட , Ivai sootta - இப் பூக்களைச் சூட்டும்படி வா, va - வருவாயாக என்று, Endru - என்று பகர் மண் கொண்டானை, Pakar man kondanai - பகர்ந்த மண்ணைக் கொண்டவனை (தன்னது என்று சாஸ்திரம் பகர்ந்த லோகத்தை அன்றோ இரந்து கொண்டான் ) ஆய்ச்சி, Aaychi - யசோதை மகிழ்ந்து, Magizhndhu - மகிழ்ச்சி கொண்டு உரை செய்த, Urai seytha - சொல்லியவற்றை எண் பகர் வில்லிபுத்தூர், En pakar villiputhoor - ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கோன், Kon - நிர்வாஹகரான பட்டர் பிரான், Pattar piraan - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த இம்மாலை, Immaalai - இந்தச் சொல்மாலையும் பத்தே, Patthe - ஒருபத்தே! |
| 192 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 1 | இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் வந்து நின்றார் சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய் அந்தியம்போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய் – 2-8 1- | சந்திரன், chandiran - சந்த்ரனானவன் மாளிகை சேரும், maaligai serum - வீடுகளின் மேல் நிலையிலே சேரப் பெற்ற சதுரர்கள் வெள்ளறை, sathurargal vellarai - மங்களா ஸாஸன ஸமர்த்தர்கள் வஸிக்கின்ற திரு வெள்ளறையிலே நின்றாய், nindrai - நின்றவனே! அழகனே, azhagane - அழகு உடையவனே! இந்திரனோடு, indiranodu - இந்திரனும் பிரமன், piraman - ப்ரஹ்மாவும் ஈசன், eesan - ருத்ரனும் இமையவர், imaiyavar - மற்றுமுள்ள தேவர்களும் எல்லாம், ellam - (ஆகிய) யாவரும் மா மந்திரம் மலர் கொண்டு, maa manthiram malar kondru - சிறந்த மந்த்ர புஷ்பங்களைக் கொண்டு உவர் ஆய் வந்து, uvar aay vandhu - (மிக்க ஸமீபமாவும் மிக்க தூரமாகவு மல்லாமல்) நடுவிடத்தி லிருப்பவராக வந்து மறைந்து நின்றார், marainthu nindraar - மறைந்து நின்றார்கள் இது, idhu - இக் காலம் அம், am - அழகிய அந்தி போது ஆகும், andhi podhu aagum - ஸாயம் ஸந்த்யா காலமாகும் காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆகையால்) (நான் உனக்கு ரக்ஷையாக) திருவந்திக் காப்பிடும்படி வருவாயாக |
| 193 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 2 | கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம் நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய் மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள் திருவெள்ளறை நின்றாய் நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் -2 8-2 | மதிள், madhil - மதிளரணை யுடைய திரு வெள்ளறை, thiru vellarai - திரு வெள்ளறையிலே நின்றாய், nindrai - நின்றருளினவனே! மேல், mel - (என்) மேல் ஒன்றும், ondruum - துன்பமும் நேசம் இலாதாய், naesam ilaadhaay - அன்பில்லாதவனே! உன்னை கூவி, unnai koovi - உன்னைக் கூவிக் கொண்டு நின்றொழிந்தேன் (அதனால்), nindrozhinthen (adhanal) - நின்று விட்டேன் பசு எல்லாம், pasu ellam - பசுக்களெல்லாம் கன்றுகள் இல்லம் புகுந்து, kanrugall illam pugundhu - கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து கதறுகின்ற, kadharukindra - முலை கடுப்பாலே கத்துகின்றன; அந்தி போது, andhi podhu - அந்தி வேளையில் மன்றில், manril - நாற் சந்தியில் நில்வேல், nilvael - நில்லாதே; என் தன் சொல்லு, en than sollu - என்னுடைய வார்த்தை நன்று கண்டாய், nanru kandaay - (உனக்கு) நல்லதாகுங்கிடாய் நான் உன்னை காப்பு இட வாராய், naan unnai kaappu ida vaaraay - இப்போது இது சொல்வது சடக்கென (நீ) காப்பிட வருவதற்காக |
| 194 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 3 | செப்போது மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய் முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய் இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 3 | போய், poi - (பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்) அப்பாற்போய் அடிசிலும், adisilum - சோற்றையும் உண்டிலை, undilai - உண்ணாமலிருந்திட்டாய் இப்போது, ippodhu - இந்த மையத்திலே நான் ஒன்றும் செய்யேன், naan ondruum seyyen - நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன் எம்பிரான் காப்பிட வாராய், empiraan kaappida vaaraay - எம்பிரான் காப்பிட வாராய் ஆள்வாய், aalvai - என்னை ஆளப் பிறந்தவனே! முப்போதும், muppothum - மூன்று காலத்திலும் வானவர், vaanavar - தேவர்கள் ஏத்தும், eththum - ஸ்தோத்திரஞ்செய்கின்ற முனிவர்கள் வெள்ளறை, munivargal vellarai - (உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திரு வெள்ளறையிலே நின்றாய், nindrai - நிற்பவனே! (நீ) செப்போது, seppodhu - பொற் கலசங்களை (உவமையாகச்) சொல்லத் தகுந்த மெல் முலையார்கள், mel mulaiyaarkal - மெல்லிய முலையை யுடைய ஸ்திகள் சிறு சோறும், siru sorum - (விளையாட்டாகச் செய்த) மணற் சோற்றையும் (சிறு) இல்லும், (siru) illum - மணல் வீட்டையும் சிதைத்திட்டு, sidhaidittu - அழித்து விட்டு (நிற்க) அப்போது, appodhu - அக் காலத்தில் நான், naan - நான் உரப்ப, urappu - கோபித்துச் சொல்ல |
| 195 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 4 | கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய் வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் 2-8 4 | கண்ணனே, kannane - ஸ்ரீக்ருஷ்ணனே! வெள்ளறை நின்றாய்!, vellarai nindrai! - புண்டரீகாக்ஷன் தானே இவன் கண்டாரோடே, kandaarode - கண்டவரோடெல்லாம் தீமை செய்வாய், theemai seivaay - தீம்பு செய்பவனே! வண்ணம், vannam - திருமேனி நிறம் வேலை அது, velai adhu - கடலின் நிறத்தை ஒப்பாய், oppaay - ஒத்திருக்கப் பெற்றவனே! வள்ளலே, vallale - உதாரனே! எண் அரு, en aru - எண்ணுவதற்கு அருமையான (மிகப் பல) பிள்ளைகள் இவர், pillaigal ivar - இப் பிள்ளைகள் வந்திட்டு, vandhittu - வந்திருந்து மணல் கொடு, manal kodu - மணலைக் கொண்டு வந்து கண்ணில் தூவி, kannil thoovi - கண்ணில் தூவி விட்டு காலினால் பாய்ந்தனை, kaalinaal paaindhanai - (அதனோடு நில்லாமல்) காலினாலும் உதைத்தாய்; என்று என்று, endru endru - என்று பலதரஞ்சொல்லி (நீ செய்யுந்தீம்பைக் குறித்து) முறைப்படுகின்றார், muraippaduginraar - முறையிடா நின்றார்கள் காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆதலால் அங்கே போவதை விட்டு) காப்பு இட வாராய் |
| 196 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 5 | பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய் நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக் காப்பிட வாராய் -2 8-5 | இ ஊரில், i ooril - (பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே தீமைகள் செய்வார், theemaigal seivaar - தீம்புகளைச் செய்பவர்களாகிய பிள்ளைகள், pillaigal - சிறுவர்கள் பல் ஆயிரவர், pal aayiravar - அனேக ஆயிரக் கணக்கானவர்கள்; எல்லாம், ellam - அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம் உன் மேல் அன்றி , un mel andri - உன் மேலல்லாமல் போகாது, pogaadhu - (வேறொருவர் மேலும்) ஏறாது; எம்பிரான்! நீ இங்கே வாராய், empiraan! nee inge vaaraay - (இப்படியிருப்பதால் அங்கே போகாமல்) எம்பிரான்! நீ இங்கே வாராய்; நல்லார்கள் வெள்ளறை நின்றாய், nallaargal vellarai nindraay - நல்லவர்கள் வாழ்கிற வெள்ளறை(யில்) நின்றாய்! ஞானம் சுடரே, gyaanam sudare - ஞான வொளியை யுடையவனே! உன் மேனி, un meni - உன் திருமேனியை சொல் ஆர் நின்று ஏத்தி, sol ar nindru aethi - சொல் நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து வாழ்த்தி சொப்பட காப்பு இட வாராய், vaazhthi soppada kaappu ida vaaraay - மங்களாசாஸநஞ்செய்து நன்றாக காப்பு இட வாராய் |
| 197 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 6 | கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய் அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2- 8-6 | மஞ்சு தவழ், manju thavazh - மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற மணி மாடம், mani maadam - ரத்ந மயமான வீடுகளையும் மதிள் திருவெள்ளறை, madhil thiru vellarai - மதிளையுமுடைய திருவெள்ளறை(யில்) நின்றாய்! கஞ்சன், kanjan - கம்ஸனானவன் நின் மேல், nin mel - உன் மேலே கறுக்கொண்டு, karukkondu - கோபங்கொண்டு கரு நிறம், karu niram - கரு நிறத்தையும் செம் மயிர், sem mayir - செம் பட்ட மயிரையுமுடைய பேயை, peyai - பூதனையை வஞ்சிப்பதற்கு, vanjippatharku - (உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு விடுத்தான், Vidutthaan - அனுப்பினான் என்பது, Enbadhu - என்பதான ஓர் வார்த்தையும் , Or vaarthaiyum - ஒரு சொல்லும் உண்டு, undu - கேட்டிருப்பதுண்டு நீ அங்கு நிற்க, Nee Angu Nirka - (ஆதலால்) நீ அவ்விடத்திலே நிற்பதற்கு அஞ்சுவன், Anjuvan - நான் அஞ்சா நின்றேன் அழகனே! காப்பு இட வாராய், Azhagane! Kaappu Ida Vaaraay - அழகனே! காப்பு இட வாராய் |
| 198 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 7 | கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய் பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய் -2 -8-7 | கள்ளம், Kallam - வஞ்சனை யுடைய சகடும், Sagadum - சகடாஸுரனையும் மருதும், Marudhum - யமளார்ஜுநங்களையும் கலக்கு அழிய, Kalakku Azhiya - (வடிவம்) கட்டுக் குலைந்தழியும்படி உதை செய்த, Udhai Seydha - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய பிள்ளை அரசே, Pillai Arase - பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே! நீ, Nee - நீ பேயை, Peyai - பூதனையினுடைய முலை பிடித்து உண்ட பின்னை, Mulai pidithu unda pinnai - தாயாகவே நினைத்து முலையைப் பிடித்து (வாய் வைத்து) உண்ட பின்பு உள்ள ஆறு, Ulla aaru - உள்ள படி ஒன்றும் அறியேன், Ondrum ariyen - ஒன்றுமறிகிறேனில்லை; ஒளி உடை வெள்ளறை நின்றாய், Oli udai vellarai nindrai - ஒளி உடை வெள்ளறை நின்றாய்! இது, Idhu - இப்போது பள்ளி கொள் போது ஆகும், Palli kol podhu aagum - படுத்து உறங்குகிற வேளையாகும்; பரமனே!, Paramane! - அழகாலே மேம்பட்டவனே காப்பு இட வாராய் |
| 199 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 8 | இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் கும்பக் களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே செம் பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய் – 2-8 -8 | இன்பம் அதனை, Inbam adhanai - உன் குண சேஷ்டிதங்களால்) பரமாநந்தத்தை உயர்த்தாய், Uyarthaai - (எனக்கு) மேன் மேலுண்டாக்கினவனே! தொல்லை இன்பத்து இறுதி கண்டவள் அன்றோ இமையவர்க்கு, Imaiyavarkku - தேவர்க்கு என்றும், Endrum - எந்நாளும் அரியாய், Ariyaai - அருமையானவனே! கும்பம், Kumbam - மஸ்தகத்தையுடைய களிறு, KaLiru - குவலயாபீடத்தை அட்ட, Atta - கொன்ற கோவே, Koode - ஸ்வாமியே! கொடு, Kodu - கொடுமை தங்கிய கஞ்சன், Kanjan - கம்ஸனுடைய நெஞ்சினில், Nenjil - மநஸ்ஸிலே கூற்றே, Kootre - யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே! செம் பொன் மதிள் வெள்ளறையாய்!, Sem pon madhil vellaraiyaay! - செம் பொன் மதிள் வெள்ளறையாய்! செல்லத்தினால் வளர், Sellathinaal valar - செல்வச் செருக்கோடு வளர்கின்ற பிள்ளாய், Pillay - குழந்தாய்! அங்கு, Angu - நீ இருக்கிறவிடத்தில் கம்பம், Kambam - (கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்க வல்ல கபாலி காண், Kabali kaan - துர்க்கையாகும்; கடிது ஓடி காப்பு இட வாராய், Kadidhu odi kaappu ida vaaraay - (ஆகையால் அங்கு நில்லாமல்) மிகவும் விரைந்தோடி காப்பு இட வாராய் |
| 200 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 9 | இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார் தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லு கொள்ளாய் சில நாள் திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய் உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9 | இருக்கொடு, Irukodu - (புருஷ ஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக் கொண்டு நீர், Neer - தீர்த்தத்தை சங்கில், Sangil - சங்கத்திலே கொண்டிட்டு, Kondittu - கொணர்ந்து எழில், Ezhil - விலக்ஷணரான மறையோர், Maraaiyor - ப்ராஹ்மணர் (உனக்கு ரக்ஷையிடுவதற்கு) வந்து நின்றார், Vandhu nindraar - வந்து நிற்கிறார்கள்; நம்பி, Nambi - தீம்பு நிறைந்தவனே! சந்தி நின்று, Sandhi nindru - நாற்சந்தியிலே நின்று தருக்கேல், Tharukkael - செருக்கித் திரியாதே சில நாள், Sil naal - சில காலம் தாய் சொல்லு, Thai sollu - தாய் வார்த்தையை கொள்ளாய், Kollaay - கேட்பாயாக; தேசு உடை வெள்ளறை நின்றாய், Desu udai vellarai nindraay - தேஜஸ்ஸை உடைய வெள்ளறை நின்றாய்! இன்று, Indru - இப்போது நான், Naan - நான் திரு காப்பு, Thiru kaappu - அழகிய ரக்ஷையை உன்னை சாத்த, Unnai saathu - உனக்கு இடுதற்காக உருகாட்டும் அந்திவிளக்கு, Urukaatum andhivilakku - உன் திருமேனி வடிவத்தைக் காட்டுகின்ற அந்தி விளக்கை ஏற்றுகேன் வாராய், Etruken vaaraay - ஏற்றுவேன் (இதைக்காண) கடுக வருவாயாக |
| 201 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 10 | போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம் வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2- 8-10 | மாதர்க்கு உயர்ந்த, Maadharkku uyarntha - ஸ்திரீகளுள் சிறந்த அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டி மகன் தன்னை, Magan thannai - தன் புத்ரனான கண்ணனை காப்பு இட்ட, Kaappu itta - ரக்ஷை யிட அழைத்த மாற்றம், Maatram - வார்த்தையை போது அமர், Pothu amar - தாமரைப் பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய செல்வக் கொழுந்து, Selva kozhundhu - செல்வத்திற்கு உரியவளாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி புணர், Punar - ஸம்ச்லேஷிக்கப் பெற்ற திரு வெள்ளறையானை, Thiru vellaraiyaanai - திரு வெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி வேதப் பயன், Vedha payan - (எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே) வேத தாத்பர்யமாக கொள்ள வல்ல, Kolla valla - அறிய வல்ல விட்டு சித்தன், Vittu chithan - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த மாலை, Maalai - பாமாலையினுடைய பாதம் பயன், Paadham payan - ஓரடி கற்றதனாலாகிய பயனை; நாலாம் அடியில் சொன்ன காப்பிடுதலை கொள்ள வல்ல, Kolla valla - அடைய வல்ல பக்தர் உள்ளார், Bakthar ullaar - பக்தராக உள்ளவரது வினை, Vinai - வினைகளெல்லாம் போம், Poom - கழிந்து விடும் |
| 463 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 1 | சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 | புரிந்திருந்தேன், Purindhiruthen - (ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன் இனி, Ini - இப்படியான பின்பு திருக் குறிப்பு, Thirukkurippu - திரு வுள்ளக் கருத்து என், En - எதுவாயிருக்கின்றது? சென்னி ஓங்கு, Chenni ongu - கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற தண், Than - குளிர்ந்த திருவேங்கடம், Thiruvengadam - திருவேங்கட மலையை உடையாய், Udayai - (இருப்பிடமாக) உடையவனே! உலகு தன்னை, Ulagu thannai - உலகத்தவர்களை வாழ, Vaazha - வாழ்விப்பதற்காக நின்ற, Nindru - எழுந்தருளி யிராநின்ற நம்பீ, Nambi - (கல்யாண குணங்களால்) நிறைந்தவனே! தாமோதரா, Thamodhara - தாமோதரனே! சதிரா, Sathira - (அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே! என்னையும், Yennaiyum - எனது ஆத்துமாவுக்கும் என் உடைமையையும், En udaimaiyaiyum - என் உடைமையான சரீரத்திற்கும் உன், Un - உன்னுடைய சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு, Sakara pori otrik kondu - ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து நின், Nin - உன்னுடைய அருளே, Arule - கருணையே |
| 464 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 2 | பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால் அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 | பறவை ஏறு, Paravai eru - பெரிய திருவடி மேல் ஏறுமவனான பரம் புருடா, Param puruda - புருஷோத்தமனே! நீ, Nee - (ஸர்வ ரக்ஷகனான) நீ என்னை, Ennai - (வேறு கதி யற்ற) என்னை கைக் கொண்ட பின், Kaikonda pin - ஆட் படுத்திக் கொண்ட பிறகு பிறவி என்னும் கடலும், Piravi ennum kadalum - ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும் வற்றி, Vatri - வறண்டு போய் (அதனால்) பெரும் பதம் ஆகின்றது, Perum padham agindradhu - பெரிய தரம் பெற்றதாகிறது இறவு செய்யும், Iravu seiyum - (இவ்வாத்துமாவை) முடிக்கிற பாவக்காடு, Pavakkaadu - பாப ஸமூஹமானது தீக் கொளீஇ, Thee koli - நெருப்புப் பட்டு வேகின்றது, Vegindradhu - வெந்திட்டது அறிவை என்னும், Arivai enum - ஞானமாகிற அமுதம் ஆறு, Amudham aaru - அம்ருத நதியானது தலைப் பற்றி வாய்க் கொண்டது, Thalaipatri vaaikondadhu - மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது |
| 465 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 3 | எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார் நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம் சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 | எம் மனா, Em mana - எமக்குத் தலைவனே!;தாய் ; மன்னன் என் குல தெய்வமே, En kuladeivame - என் குடிக்குப் பரதேவதை யானவனே! என்னுடைய நாயகனே, Ennudaiya naayagane - எனக்கு நாதனானவனே! நின்னுளேன் ஆய், Ninnulen ai - உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய் நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும், Naatil ulla ella paavangalum - உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்;நாடு சாஸ்திரம் என்றுமாம் சும்மெனாதே, Summenaathe - மூச்சு விடவும் மாட்டாமல் பெற்ற நன்மை, Petra nanmai - பெற்ற நன்மையை இ உலகினில், I ulaginil - இந்த உலகத்திலுள்ள ஆர் பெறுவார், Aar peruvaar - மற்று யார் தான் பெறுவர்? நம்மன் போல, Namman pol - பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து) வீழ்ந்து அமுக்கும், Veezhndhu amukkum - கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள கை விட்டு, Kai vittu - ஸவாஸநமாக விட்டிட்டு ஓடி, Odi - ஓடிப் போய் தூறுகள், Thoorugal - புதர்களில் பாய்ந்தன, Paaindhana - ஒளிந்து கொண்டன |
| 466 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 4 | கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல் உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன் கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4 | தட வரை, Tada varai - பெரிய மலை போன்ற தோள், Thol - தோள்களை யுடையவனும் சக்கரபாணீ, Sakkarapani - திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே! சார்ங்கம் வில், Saarngam vil - சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட சேவகனே, Sevakane - வீரனே! கடல், Kadal - திருப் பாற் கடலை கடைந்து, Kadainthu - (மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து அமுதம் கொண்டு, Amudham kondu - (அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து கலசத்தை, Kalasathai - கலசத்தில் நிறைந்த ஆ போல், Niraindha aa pol - (நீ) நிறைந்தது போல உடல் உருகி, Udal urugi - (அடியேன்)உடல் உருகப் பெற்ற வாய் திறந்து, Vaai thirandhu - வாயைத் திறந்து கொண்டு உன்னை, Unnai - (ஆராவமுதாகிய) உன்னை மடுத்து நிறைந்துக் கொண்டேன், Maduthu niraindhukonden - உட் கொண்டு தேக்கிக் கொண்டேன் கொடுமை செய்யும், Kodumai seiyum - (இனி) கொடிய தண்டங்களை நடத்துமவனான கூற்றமும், Kootramum - யமனும் என் கோல் ஆடி, En kol aadi - எனது செங்கோல் செல்லுமிடங்களில் குறுகப் பெரு, Kuruga peru - அணுக வல்லவனல்லன் |
| 467 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 5 | பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன் உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5 | என் அப்பா, En appa - எனக்குத் தந்தையானவனே! என் இருடீகேசா, En irudeekesa - எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே! என் உயிர், En uyir - என் ஆத்மாவை காவலனே, Kaavalane - (அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே! பொன்னை, Ponnai - ஸுவர்ணத்தை நிறம் ஏழ, Niram ezha - நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக) உரைகல் மீது கொண்டு, Uraikal meedhu kondu - உரைக் கல்லில் இட்டு உரைத்தால் போல், Uraithaal pol - உரைப்பது போல உன்னை, Unnai - (பரம போக்யனான) உன்னை என் நா அகம் பால் கொண்டு, En na agam paal kondu - என் நாவினுட்கொண்டு மாற்று இன்றி, Maatru indri - மாற்று அழியும்படி உரைத்துக் கொண்டேன், Uraithu konden - பேசிக்கொண்டு நின்றேன் உன்னை, Unnai - (யோகி கட்கும் அரியனான) உன்னை என்னுள் , Ennul - என் நெஞ்சினுள் கொண்டு வைத்தேன், kondu veithen - அமைத்தேன் என்னையும், Ennaiyum - (நீசனான) அடியேனையும் உன்னில் இட்டேன், Unnil itten - உனக்குச் சேஷப் படுத்தினேன் |
| 468 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 6 | உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 | மன், Man - (துஷ்ட) க்ஷத்திரியர்கள் அடங்க, Adanga - அழியும்படி மழு, Mazhu - மழு என்னும் ஆயுதத்தை வலம் கை கொண்ட, Valam kai konda - வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள இராமன், Raman - பரசு ராமனாய்த் திரு வவதரித்த விராம நம்பீ, Virama nambi - குண பூர்த்தியை யுடையவனே உன்னுடைய, Unnudaiya - உன்னுடைய விக்கிரமம், Vikkiramam - வீரச் செயல்களில் ஒன்று ஒழியாமல், Ondru ozhiyaamal - ஒன்று தப்பாமல் எல்லாம், Ellaam - எல்லாவற்றையும் என்னுடைய, Ennudaiya - என்னுடைய நெஞ்சகம் பால், Nenjagam paal - நெஞ்சினுள்ளே சுவர் வழி எழுதிக் கொண்டேன், Suvar vazhi ezhuthi konden - சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;பிரகாசிக்கும் படி கொண்டேன் எம் பெருமான், Em perumaan - எமக்குத் தலைவனே!எனக்கு உபகாரகன் ஆனவனே (கோபமும் உத்தேச்யம் -நமது விரோதி பாஹுள்யத்தைப் போக்கி அருளியதால்) என்னிடை வந்து, Ennidai vandhu - என் பக்கலில் எழுந்தருளி இனி , Ini - இனி மேல் போகின்றது, pogindrathu - போவதானது எங்கு, engu - வேறு எவ்விடத்தைக் குறித்து? |
| 469 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 7 | பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல் திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய் மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 | பருப்பதத்து, Paruppadhathu - மகா மேரு பர்வதத்தில் கயல், Kayal - (தனது) மகர த்வஜத்தை பொறித்த, Poritha - நாட்டின் பாண்டியர் குல பதி போல், Pandiyar kula pathi pol - பாண்டிய வம்சத்து அரசனைப் போல் திருப் பொலிந்து, Thiru polindhu - அழகு விளங்கா நின்றுள்ள சே அடி, Se adi - செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை என் சென்னியின் மேல், En chenniyin mel - என் தலையின் மீது பொறித்தாய் என்று, Porithaai endru - (அடையாளமாக) வாட்டி யருளினவனே! என்றும் மருப்பு ஒசித்தாய் என்று, Maruppu osithaai endru - (குவலயாபீடத்தின்) கொம்பை முறித்தவனே என்றும் மல், Mal - மல்லரை அடர்ந்தாய் என்று, Adarndhaai endru - நிரஸித்தவனே! என்றும் உன் வாசகமே, Un vaasagame - (இவ்வாறான) உனது செயல்களுக்கு வாசகமான திரு நாமத்தின் அநு ஸந்தாநத்தினாலேயே உருப் பொலிந்த நாவினேனை, Uru polindha naavinenai - தழும்பேறின நாக்கை யுடைய அடியேனை உனக்கு, Unakku - உனக்கு உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - அநந்யார்ஹ சேஷனாக ஆக்கிக் கொண்டாயே |
| 470 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 8 | அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான் நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8 | நேமி, Nemi - திருவாழி யாழ்வானை யுடைய நெடியவனே, Nediyaavane - ஸர்வாதிகனே! எம் பிரான், Em piran - எனக்குப் பரமோபகராகனானவனே! அனந்தன் பாலும், Anandhan paalum - திருவனந்தாழ்வானிடத்திலும் கருடன் பாலும், Garudan paalum - பெரிய திருவடியினிடத்திலும் ஐதுநொய்தாக வைத்து, Aidhu noithaaga vaithu - (அன்பை) மிகவும் அற்பமாக வைத்து என் மனம் தன் உள்ளே, En manam than ulle - எனது ஹருதயத்தினுள்ளே வந்து வைகி, Vandhu vaigi - வந்து பொருந்தி வாழச் செய்தாய், Vaazha seidhaai - (என்னை) வாழ்வித்தருளினாய் என் உள்ளே, En ulle - (இப்படி வாழ்வித்த உன்னை)என் நெஞ்சில் நினைந்து நின்று, Ninaindhu nindru - அநுஸந்தித்துக் கொண்டு நெக்கு, Nekku - (அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று கண்கள் அகம்பு ஒழுக, Kangal agambu ozhuga - கண்களினின்றும் நீர் பெருகும்படி நினைத்து இருந்தே, Ninaithu irundhe - (நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே சிரமம் தீர்த்தேன், Siramam theerthen - இளைப்பாறப் பெற்றேன் |
| 471 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 9 | பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 | பனி, Pani - குளிர்ந்த கடலில், Kadalil - திருப்பாற் கடலில் பள்ளி கோளை, Palli kolai - பள்ளி கொள்ளுதலை பழக விட்டு, Pazhaga vittu - பழகியதாக விட்டு (மறந்து விட்டு) (பிறிவு உளவு என்று அன்றோ ஸூ கம் உள்ளது; சேர்ந்தே இருந்தால் மறதிக்கு இடம் இருக்குமே: குகன் இடம் பெருமாள்) ஓடி வந்து, Odi vandhu - (அங்கு நின்றும்) ஓடி வந்து என், En - என்னுடைய மனம் கடலில், Manam kadalil - ஹ்ருதயமாகிற கடலில் வாழ வல்ல, Vaazha valla - வாழ வல்லவனும் மாயம் , Maayam - ஆச்சரிய சக்தியை யுடையவனும் மணாள, Manaala - (பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும் நம்பீ, Nambi - குண பூர்ணனுமான எம்பெருமானே! தனி கடல் என்று, Thani kadal endru - ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும் தனி சுடர் என்று, Thani sudar endru - ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும் தனி உலகு என்று, Thani ulagu endru - ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இவை) உனக்கு இடம் ஆய் இருக்க, Unakku idam aai irukka - உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு) என்னை, Ennai - (மிகவும் நீசனான) அடியேனை உனக்கு, Unakku - உனக்கு உரித்து ஆக்கினையே, Uritthu aakkinaiye - உரிய வாஸஸ் ஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!) |
| 472 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 10 | தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 | தடவரை வாய், Tadavarai vaai - பெரிய பர்வதத்தில் மிளிர்ந்து மின்னும், Milirndhu minnum - மிகவும் விளங்கா நின்றுள்ள தவளம் நெடு கொடி போல், Thavalam nedu kodi pol - பரிசுத்தமான பெரியதொரு கொடி போல சுடர் ஒளி ஆய், Sudar oli aai - மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய் என் நெஞ்சின் உள்ளே, En nenjin ulle - எனது ஹ்ருதயத்தினுள் தோன்றும், Thondrum - விளங்கா நின்றுள்ள சோதி நம்பீ, Jodhi nambi - ஒளியினால் நிரம்பியவனே! வட தடமும், Vada thadamum - வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும் வைகுந்தமும், Vaigundhamum - ஸ்ரீவைகுண்டமும் மதிள், Madhil - மதில்களை யுடைய துவராபதியும், Thuvara pathiyum - த்வாரகையும் (ஆகிற) இட வகைகளை, Ida vagaigalai - இடங்களை யெல்லாம் இகழ்ந்திட்டு, Igazhindittu - உபேஷித்து விட்டு என் பால், En paal - என்னிடத்தில் இடவகை கொண்டனையே, ida vagai kondanaiye - வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!) |
| 473 | பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 11 | வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 | வேயர் தங்கள், Veyar thangal - வேயர் வைதிகர்களுடைய குலத்து, Kulathu - வம்சத்து (வைதிகர் குலம்) உதித்த, udhitha - அவதரித்த விட்டு சித்தன், Vittu Chithan - பெரியாழ்வாருடைய மனத்து, Manathu - ஹ்ருதயத்தில் கோயில் கொண்ட, kovil konda - திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற கோவலனை, Kovalanai - கோபாலனும் கொழு குளிர் முகில் வண்ணனை, kozhu kulir mugil vannanai - கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும் ஆயரேற்றை, Aayarerrai - இடையர்களுக்குத் தலைவனும் அமரர் கோவை, Amarr kovai - நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும் அந்தணர், Andhanar - சனகர் முதலிய ப்ரஹ்ம மஹரிஷிகளுக்கு அமுதத்தினை, Amudhathinai - அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை பாட வல்லார் தாம், Paada vallaar thaam - (இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள் சாயைப் போல, Saayai pola - நிழல் போல அணுக்கர்களே, Anukkargale - (எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள் |
| 0 | அமலனாதிபிரான்- தனியன் || வடதிருக்காவேரி மற்றும் தென்திருக்காவேரி ஆகிய இரண்டுக்கும் நடுவே சயனித்துக்கொண்டிருக்கும் ஹரியான பெரிய பெருமாளைத் திருவடி தொடக்கமாக திருமுடி ஈறாக அனுபவித்து மகிழ்ந்த உள்ளத்தை உடையவரும், அந்தப் பெரிய பெருமாளைத் தவிர மற்ற விஷயங்களைக் காணமாட்டேன் என்று அறுதியிட்டவரும், லோக ஸாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டவருமான திருப்பாணாழ்வாரை நான் வணங்குகிறேன். 21 | ஆபாத சூட மநுபூய ஹரிம் ஸயாநம் மத்யே கவேரது ஹிதுர் முதிதாந்தராத்மா | அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் யோநிஸ்சிகாய மநவை முநிவாஹநம் தம் || | Ya:, ய: - யாவரொரு திருப்பாணாழ்வார் Kaverathu hithu:, கவேரது ஹிது: - திருக்காவிரியின் Madhye, மத்யே - நடுவில் Sayaanam, ஸயாநம் - திருக்கண் வளர்ந்தருளுகிற Harim, ஹரிம் - ஸ்ரீரங்கநாதரை Aapaatha soodam, ஆபாத சூடம் - திருவடி தொடங்கித் திருமுடியளவாக Anubooya, அநுபூய - அநுபவித்து Mudhi thantharathma, முதி தாந்தராத்மா - உகந்தவராய் Nayanayo: Vishyaantharaanaam Adhrashtruthaam, நயநயோ: விஷயாந்தராணாம் அத்ரஷ்ட்ருதாம் - (தமது) திருக்கண்கள் (அப்பெருமானைத் தவிர) மற்றொன்றையும் காணமாட்டாமையை Nischikaya, நிஸ்சிகாய - அறுதியிட்டருளினாரோ Tham, தம் - அப்படிப்பட்ட Munivaahanam, முநிவாஹநம் - லோக ஸாரங்க மஹாமுநியை வாஹநமாகக் கொண்ட திருப்பாணாழ்வாரை Manavai, மநவை - சிந்திக்கக்கடவேன் |
| 0 | அமலனாதிபிரான்- தனியன் || லோக ஸாரங்க முனிவராலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வரப்பட்டு, பெரிய பெருமாள் ஸந்நிதியில் தனியே புகுந்தவரும், பெரிய பெருமாள் காட்டிக் கொடுத்த திருவடித் தாமரைகள், அழகிய ஆடை, திருநாபி, மிகவும் இனியதான திருவயிறு, திருமார்வு, கழுத்து, சிவந்த வாய், அப்போதலர்ந்த தாமரை போன்ற கண்கள், திருமேனி ஆகியவற்றைக் கண்டவரும், எம்பெருமானைப் பாடுவதே வாழ்ச்சியாகக் கொண்டிருந்தவருமான திருப்பாணாழ்வார் திருவடிகளைக் கொண்டாடினோம் 22 | காட்டவே கண்ட பாதகமல நல்லாடையுந்தி தேட்டரு முதரபந்தந் திருமார்வு கண்டஞ் செவ்வாய் வாட்டமில் கண்கள்மேனி முனியேறித் தனிபுகுந்து பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள் பரவினோமே | Muni eri, முனி ஏறி - லோகஸாரங்கமுனியின் (தோளின்மேல்) ஏறி Thani pugundhu, தனி புகுந்து - தனியே உள்ளே புகுந்து Kaatave kanda, காட்டவே கண்ட - (எம்பெருமான்) காண்பித்தபடியே கண்டு ஸேவிக்கப்பட்ட Paadha Kamalam, பாத கமலம் - திருவடித் தாமரைகளும் Nal aadai, நல் ஆடை - சிறந்த திருப்பீதாம்பரமும் Undhi, உந்தி - திருநாபியும் Thetarum, தேட்டரும் - கிடைத்தற்கு அரிதான UdharaBandham, உதரபந்தம் - பொன்அரைநாணும் Thirumaarvu, திருமார்வு - பிராட்டி வாழ்கிற மார்பும் Kandam, கண்டம் - திருக்கழுத்தும் Sevvaai, செவ்வாய் - சிவந்த வாயும் Vaattam il, வாட்டம் இல் - சோர்வுஇல்லாத Kangal, கண்கள் - திருக்கண்களும் (ஆகிய இவற்றோடு கூடிய) Meni, மேனி - திருமேனியை Paattinaal kandu vaazhum, பாட்டினால் கண்டு வாழும் - பாசுரங்களின் அநுஸந்தானத்தோடேகூட ஸேவித்து ஆனந்தித்த Paanar, பாணர் - திருப்பாணாழ்வாருடைய Thaal, தாள் - திருவடிகளை Paravinome, பரவினோமே - துதிக்கப்பெற்றோம் |
| 927 | அமலனாதிபிரான் || 1 | அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே | அமலன், Amalan - பரிசுத்தனாய் ஆதி, Adhi - ஜகத்கார பூதனாய் பிரான், Piran - உபகாரகனாய் என்னை, Ennai - (இழி குலத்தவனான) என்னை அடியார்க்கு, Adiyarku - (தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு ஆள்படுத்த, Aalpadutha - ஆட்படுத்துகையாலே வந்த விமலன், Vimalan - சிறந்த புகரை யுடையனாய் விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து (ஆஸ்ரிதர்கட்காக) விரை ஆர் பொழில், Virai Ar Pol - பரிமளம் மிக்க சோலைகளை யுடைய வேங்கடவன், Vengadavan - திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய் நிமலன், Nimalan - ஆஸ்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று;ஆஸ்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய் நின்மலன், Ninmalan - அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய் நீதி வானவன், Neethi Vanavan - சேஷ சேஷி முறை வழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய் நீள் மதிள், Neel Mathil - உயர்ந்த மதிள்களை யுடைய அரங்கத்து, Arangathu - கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற) அம்மான், Ammaan - ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய திரு கமல பாதம், Thiru Kamala Padham - திருவடித் தாமரைகளானவை வந்து, Vandhu - தானே வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே, En Kannin Ullan Okkindrathe - என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே |
| 928 | அமலனாதிபிரான் || 2 | உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச் சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே | உவந்த உள்ளத்தன் ஆய், Uvandha Ullathaan Aay - மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு உலகம் அளந்து, Ulakam Alanthu - மூவுலகங்களையும் அளந்து அண்டம் உற, Andam Ur - அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி நிவந்த, Nivandha - உயர்த்தியை அடைந்த நீள் முடியன், Neel Mudian - பெரிய திருமுடியை யுடையவனாய் அன்று, Andru - முற்காலத்தில் நேர்ந்த, Neerndha - எதிர்த்து வந்த நிசரசரரை, Nisarasararai - ராக்ஷஸர்களை கவர்ந்த, Kavarntha - உயிர் வாங்கின வெம் கணை, Vem Ganai - கொடிய அம்புகளை யுடைய காகுத்தன், Kaakuthan - இராம பிரானாய் கடி ஆர், Kadi Ar - மணம் மிக்க பொழில், Pol - சோலைகளை யுடைய அரங்கத்து, Arangathu - ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான அம்மான், Ammaan - எம்பிரானுடைய அரை, Arai - திருவரையில் (சாத்திய) சிவந்த ஆடையின் மேல், sivandha Aadiyin Mel - பீதாம்பரத்தின் மேல் என சிந்தனை சென்றது, Ena Sindhanai Sendradhu - என்னுடைய நினைவானது ஆம் பதிந்ததாம் |
| 929 | அமலனாதிபிரான் || 3 | மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் அந்தி போல் நிறத் தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி மேல தன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே | மந்தி, Mandhi - குரங்குகளானவை பாய், Pai - (ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப் பெற்ற வடவேங்கடம் மா மலை, Vadavengadam Ma Malai - வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே வானவர்கள், Vaanavarkal - நித்ய ஸூரிகள் சந்தி செய்ய நின்றான், Sandhi Seyya Nindraan - பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய் அரங்கத்து, Arangathu - கோயிலிலே அரவு இன் அணையான், Aravu in Anaiyaan - திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை யுடையனான அழகிய மணவாளனுடைய அந்தி போல் நிறத்து ஆடையும், Andhi pol nirathu aadiyum - செவ் வானம் போன்ற நிறத்தையுடைய திருப் பீதாம்பரமும் அதன் மேல், Adhan mel - அப் பீதாம்பரத்தின் மேலே அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ, Ayanaai padaithadhu oru ezhil undhimeladhu andro - பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகை யுடைய திருநாபிக் கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ அடியேன் உள்ளத்து இன் உயிரே, Adiyen ullathu in uyire - என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்ம ஸ்வரூபம். |
| 930 | அமலனாதிபிரான் || 4 | சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன் மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே | சதுரம், Sadhuram - நாற்சதுரமாய் மா, Maa - உயர்ந்திருக்கிற மதிள்சூழ், Mathilsoozh - மதிள்களாலே சூழப்பட்ட இலங்கைக்கு, Ilangaikku - லங்கா நகரத்திற்கு இறைவன், Iraivan - நாதனான இராவணனை ஓட்டி, Ootti - (முதல் நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து (மறுநாட்போரில்) தலை பத்து, Thalai Pathu - (அவனது) தலைபத்தும் உதிர, Udhira - (பனங்காய்போல்) உதிரும்படி ஓர், Or - ஒப்பற்ற வெம் கணை, Vem Ganai - கூர்மையான அஸ்த்ரத்தை உய்த்தவன், Uyththavan - ப்ரயோகித்தவனும் ஓதம் வண்ணன், Otham Vannan - கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும் வண்டு, Vantu - வண்டுகளானவை மதுரமா, Madhurama - மதுரமாக பாட, Paada - இசைபாட(அதற்குத் தகுதியாக) மா மயில் ஆடு, Maa Mayil Aadu - சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற அரங்கத்து அம்மான், Arangathu Ammaan - திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய திரு வயிறு உதர பந்தம், Thiru Vayiru Udara Bandham - திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது என் உள்ளத்துள் நின்று, En Ullathul Nindru - என் நெஞ்சினுள் நிலைத்து நின்று உலாகின்றது, Ulaaginradhu - உலாவுகின்றது |
| 931 | அமலனாதிபிரான் || 5 | பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான் கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே | பாரம் ஆய, Paaram Aaya - பொறுக்க முடியாத சுமையாயிராநின்ற பழ வினை, Pala Vinai - அநாதியான பாபங்களின் பற்று அறுத்து, Patru Aruthu - சம்பந்தத்தைத் தொலைத்து என்னை, Ennai - (அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை தன் வாரம் ஆக்கி வைத்தான், Than Vaaram Aakki Vaithaan - தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்) வைத்தது அன்றி, Vaithadhu Andri - இப்படி செய்து வைத்ததுமல்லாமல் என்னுள் புகுந்தான், Ennul Pugundhaan - என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான் (இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக நான்) கோரம் மா தவம், (Ippadippatta Paagiyaththaip Perutharku Uruppaaga Naan) Koram Maa Thavam - உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை செய்தனன் கொல், Seydhanan Kol - (முற் பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ? அறியேன், Ariyen - அறிகிறேனில்லை; அரங்கத்து அம்மான், Arangathu Ammaan - ஸ்ரீ ரங்கநாதனுடைய திரு ஆரம், Thiru Aaram - பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான மார்பு அது அன்றோ, Maarp Adhu Andro - அத் திரு மார்பன்றோ அடியேனை, Adiyenai - தாஸனான என்னை ஆள் கொண்டது, Aal Kondadhu - அடிமைப் படுத்திக் கொண்டது |
| 932 | அமலனாதிபிரான் || 6 | துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே | துண்டம், Thundam - ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான) வெண் பிறையன், Ven Piraiyan - வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய துயர், Thuyar - (பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை தீர்த்தவன், Theerthavan - போக்கினவனும் அம் சிறைய வண்டு, Am Siraiya Vantu - அழகிய சிறகை யுடைய வண்டுகள் வாழ், Vaazh - வாழ்தற்கிடமான பொழில் சூழ், Pozhil Soozh - சோலைகள் சூழப் பெற்ற அரங்கம் நகர், Arangam Nagar - திருவரங்கப் பெரு நகரிலே மேய, Mae, Meya - பொருந்தி யிரா நின்ற அப்பன், Appan - ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய அண்டர், Andar - அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும் அண்டம், Andam - அண்டங்களையும் பகிரண்டம், Pakirandam - அண்டாவரணங்களையும் ஒரு மா நிலம், Oru Maa Nilam - ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும் எழு மால் வரை, Ezh Maal Varai - ஏழு குல பர்வதங்களையும் முற்றும், Muttrum - சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும் உண்ட, Undu - அமுது செய்த கண்டம் கண்டீர், Gandam Kandeer - திருக் கழுத்துக் கிடீர் அடியேனை, Adiyenai - தாஸனான என்னை உய்யக் கொண்டது, Uyyak Kondadhu - உஜ்ஜீவிப்பித்தது |
| 933 | அமலனாதிபிரான் || 7 | கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல் மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம் ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார் செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே | கையின், Kaiyin - திருக் கைகளில் ஆர், Aar - பொருந்தியிருக்கிற சுரி சங்கு, Suri Sangu - சுரியையுடைய திருச்சங்கையும் அனல் ஆழியர், Anal Aazhiyar - தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய் நீள் வரை போல், Neel Varai Pol - பெரியதொரு மலை போன்ற மெய்யனார், Meyyanar - திருமேனியை யுடையராய் துளபம் விரை ஆர், Thulabam Virai Aar - திருத்துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்) கமழ், Kamazh - பரிமளியா நின்றுள்ள நீள்முடி, Neelmudi - உயர்ந்த திருவபிஷேகத்தை யுடையராய் எம் ஐயனார், Em Aiyanar - எமக்கு ஸ்வாமியாய் அணி அரங்கனார், Ani Aranganar - அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய் அரவு இன் அணை மிசை மேய, Aravu In Anai Misai May - திருவனந்தாழ்வானாகிற இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய மாயனார், Maayanar - ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய செய்ய வாய், Seyya Vai - சிவந்த திருப்பவளமானது என்னை, Ennai - என்னுடைய சிந்தை, Sindhai - நெஞ்சை கவர்ந்தது, Kavarnthadhu - கொள்ளை கொண்டது; ஐயோ, Aiyo - (ஆநந்தாதிசயக் குறிப்பு.) |
| 934 | அமலனாதிபிரான் || 8 | பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக் கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே | பரியன் ஆகி, Pariyan Aagi - மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க் கொண்டு வந்த, Vandhu - (ப்ரஹ்லாதனை நலிய) வந்த அவுணன், Avunan - அஸூரனான இரணியனுடைய உடல், Udal - சரீரத்தை கீண்ட, Keendu - கிழித்துப் பொகட்டவனும் அமரர்க்கு, Amararku - பிரமன் முதலிய தேவர்கட்கும் அரிய, Ariya - அணுக முடியாதவனும் ஆதி, Adhi - ஜகத் காரண பூதனும் பிரான், Piran - மஹோபகாரகனும் அரங்கத்து, Arangathu - கோயிலில் எழுந்தருளியிருக்கிற அமலன், Amalan - பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய முகத்து, Mugathu - திருமுக மண்டலத்தில் கரிய ஆகி, Kariya Aagi - கறுத்த நிறமுடையவையாய் புடை பரந்து, Putai Parandhu - விசாலங்களாய் மிளிர்ந்து, Milarndhu - பிரகாசமுடையவையாய் செவ்வரி ஓடி, Sevvary Oodi - செவ்வரி படர்ந்திருப்பனவாய் நீண்ட, Neendu - (காதுவரை) நீண்டிருப்பவனாய் பெரிய ஆய, Periya Aaya - பெருமை பொருந்தியவையுமான அக் கண்கள், Ak Kangal - அந்தத் திருக்கண்களானவை என்னை, Ennai - அடியேனை பேதைமை செய்தன, Paedhaimai Seydhan - உந்மத்தனாகச் செய்துவிட்டன |
| 935 | அமலனாதிபிரான் || 9 | ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய் ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான் கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில் நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே | மா, Maa - பெரிதான ஆல மரத்தின் , Aala Marathin - ஆல மரத்தினுடைய இலை மேல், Iai Mel - (சிறிய) இலையிலே ஒரு பாலகன் ஆய், Oru Paalakan Aay - ஒரு சிறு பிள்ளையாகி ஞாலம் ஏழும் உண்டான், Gnalam Yezhum Undaan - ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும் அரங்கத்து, Arangathu - கோயிலிலே அரவு இன் அணையான், Aravu In Anaiyaan - திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய கோலம், Kolam - அழகிய மா, Maa - சிறந்த மணி ஆரமும், Maani Aramum - ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும் முத்து தாமமும், Muthu Thaamamum - முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்) முடிவு இல்லது, Mudivu Illadhu - எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும் ஓர் எழில், Oru Yezhil - ஒப்பற்ற அழகை யுடையதும் நீலம், Neelam - கரு நெய்தல் மலர் போன்றதுமான மேனி, Meni - திருமேனி யானது என் நெஞ்சினை, En Nenjinai - எனது நெஞ்சினுடைய நிறை, Nirai - அடக்கத்தை கொண்டது, Kondadhu - கொள்ளை கொண்டு போயிற்று; ஐயோ!, Aiyo! - இதற்கென் செய்வேன்? என்கிறார். |
| 0 | கண்ணிநுண்சிறுத்தாம்பு - தனியன் || 38 | १. अविदितविषयान्तरः शठारेरुपनिषदामुपगानमात्रभोगः । अपि च गुणवशात्तदेकशेषी मधुरकविहृदये ममाविरस्तु ॥ 1. அவிதிதவிஷயாந்தரச்டாரே ருபநிஷதாமுயகாநமாத்ரபோக : | அபிச குணவமாத்ததேகஜீே மதுரகவிர்ஹ்ருதயே மமாவிரஸ்து || | அவிதிதவிஷயாந்தர: , Avithithavishayandhara - நம்மாழ்வாரைத் தவிர வேறொரு விஷயத்தையுமறியாதவரும் |
| 0 | கண்ணிநுண்சிறுத்தாம்பு - தனியன் || 38 | १. अविदितविषयान्तरः शठारेरुपनिषदामुपगानमात्रभोगः । अपि च गुणवशात्तदेकशेषी मधुरकविहृदये ममाविरस्तु ॥ 1. அவிதிதவிஷயாந்தரச்டாரே ருபநிஷதாமுயகாநமாத்ரபோக : | அபிச குணவமாத்ததேகஜீே மதுரகவிர்ஹ்ருதயே மமாவிரஸ்து || | சடாரே: , Chadare - நம்மாழ்வாருடைய (திவ்ய ஸூக்திகளாகிய) உபநிஷதாம் , Upanishatham - திவ்யப்ரபந்தங்களை உபகாநமாத்ர போக: , Upaganamadhra Boga - இசைபாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும் குணவாதபிச , Gunavadhapicha - குணமடியாகவும் ததேகளே , Thadhekale - அந்த நம்மாழ்வாரொருவரையே தமக்கு ரோஷியாகக்கொண்டவருமான மதுரகவி , Madhurakavi - மதுரகவியாழ்வார் மம ஹ்ருதயே , Mama Hrudhaye - என் நெஞ்சில் ஆவிரஸ்து , Aavirasthu - ஆவிர்ப்பவிக்கக்கடவர் |
| 0 | கண்ணிநுண்சிறுத்தாம்பு - தனியன் || 39 | வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள் வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை ஆள்வார் அவரே அரண் | வேறு ஒன்றும் நான் அறியேன் , Veru Ondrum Naan Ariyen - நம்மாழ்வார் தவிர வேறொரு பொருளும் நான் அறியமாட்டேன் வேதம் தமிழ் செய்த , Vedham Tamil Seidha - வேதார்த்தங்களைத் தமிழாக அருளிச்செய்த மாறன் , Maaran - மாறனென்னும் நாமத்தையுடையவரும் வண் குருகூர் ஏறு , Van Kurugoor Eru - அழகிய திருக்குருகூர் நகர்க்குத்தலைவருமான சடகோபன் , Sadagopan - நம்மாழ்வார் எங்கள் வாழ்வு ஆம் என்று , Engal Vaazhvu Aam Endru - எமக்கு உஜ்ஜீவநராவர் என்று ஏத்தும் , Ethum - தோத்திரஞ் செய்தருளின மதுரகவியார் , Madhurakaviyar - மதுரகவியாழ்வார் எம்மை ஆள்வார் , Emmai Aalvar - நம்மை ஆள்பவர் அவரே , avare - அந்த மதுரகவிகளே அரண் , Aran - (ப்ரபந்நகுலத்துக்கு) காவலாயிருப்பவர் |
| 937 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 1 | கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணி யபெரு மாயன்என் னப்பனில் நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால் அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. | கண்ணி, Kanni - (உடம்பிலே உறுத்தும்படி பல) முடிகளையுடைத்தாய் நுண், Nun - (உடம்பிலே அழுந்தும்படி நுட்பமாய் சிறு, Siru - (நீளம்போராதபடி) சிறியதாயிருக்கிற தாம்பினால், Thaambinaal - கயிற்றினால் கட்டுண்ண பண்ணிய, Kattunna Panniya - யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட பெருமாயன், Perumayan - விசேஷ ஆச்சரிய சக்தியையுடையனாய் என் அப்பனில், En Appanil - எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனைவிட்டு நண்ணி, Nanni - (ஆழ்வாரைக்) கிட்டி ஆச்ரயித்து தென் குருகூர் நம்பி என்றக்கால், Then Kurugoor Nambi Endrakkal - தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு நிர்வாஹகாரன ஆழ்வார் என்று (அவரது திரு நாமத்தைச்) சொன்னால் அண்ணிக்கும், Annikkum - பரமபோக்யமாயிருக்கும் இனிதாயிருக்கும் என் நாவுக்கே, En Naavukke - என் ஒருவனுடைய நாவுக்கே அமுது ஊறும், Amudhu Oorum - அம்ருதம் ஊறா நிற்கும் |
| 938 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 2 | நாவினால் நவிற்றின்ப மெய்தினேன் மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே தேவுமற்றறியேன் குருகூர் நம்பி பாவினின்னிசை பாடித்திரிவனே | இன் இசை, In Isai - இனிய இசையையே பாடி, Paadi - பாடிக்கொண்டு திரிவன், Thirivan - திரியக்கடவேன் நாவினால், Naavinaal - நாக்கினால் நவிற்றி, Navitri - (ஆழ்வாரை) ஸ்தோத்திரம் பண்ணி இன்பம் எய்தினேன், Inbam Eydhinen - ஆநத்தத்தைப் பெற்றேன் அவன், Avan - அவ்வாழ்வாருடைய பொன் அடி, Pon Adi - அழகிய திருவடிகளை மேவினேன், Mevinen - ஆச்ரயிக்கப்பெற்றேன் மெய்ம்மையே, Meimmaiye - இது ஸத்தியமே மற்று தேவு அறியேன், Matru Thevu Ariyen - (ஆழ்வாரையொழிய) வேறொரு தெய்வத்தை அறியமாட்டேன் குருகூர் நம்பி, Kurugoor Nambi - திருநகரிக்கு நிர்வாஹகரான அவ்வாழ்வாருடைய பாலின், Paalin - அருளிச்செயல்களின் |
| 939 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 3 | திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக்காண்பன்நான் பெரிய வண் குருகூர்நகர் நம்பிக்கா ஹரியனாபடியேன்பெற்ற நன்மையே | திரிதந்தாகிலும், Thiridhandaagilum - (ஆழ்வாரை விட்டு) மீண்டாகிலும் தேவபிரானுடை, Devapiraanudaiya - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய கரிய, Kariya - (நீலமேகம்போற்) கறுத்ததாய் கோலம், Kolam - அழகியதான திருவுரு, Thiruvuru - பிராட்டியோடு கூடிய திவ்ய ரூபத்தை நான் காண்பன், Naan Kaanpan - நான் ஸேவிப்பேன் பெரியவண் குருகூர்நகர் நம்பிக்கு, Periyavan Kurugoor Naga Nambikku - பெருமையும் ஒளதார்யமுமுடைய ஆழ்வார்க்கு உரிய ஆள் ஆய், Uriya Aal Aay - அந்ந்யார்ஹ சேஷ பூதனாயிருந்து வைத்து அடியேன் பெற்ற நன்மை, Adiyen Petra Nanmai - அடியேன் பெற்றபேறு இது காணீர் |
| 940 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 4 | நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவரா தலில் அன்னையாயத்தனா யென்னையாண்டிடும் தன்மையான் சடகோபனென் நம்பியே | நன்மையால் மிக்க, Nanmaiyal Mikka - நற்குணத்தால் மேன்மை பெற்றவர்களாய் நால்மறை ஆளர்கள், Naalmarai Aalargal - நான்கு வேதங்களிலும் வல்லவர்களான வைதிகர்கள் புன்மை ஆக கருதுவர் ஆதலில், Punmai Aaga Karuthuvar Aadhalil - (என்னை) அடியேனை தாழ்வே ஒரு வடிவு கொண்ட தென்றெண்ணி உபேக்ஷித்திருப்பெரென்பதுவே காரணமாக அன்னை ஆய், Annai Aay - மாதாவாயும் அத்தன் ஆய், Athan Aay - பிதாவாயும் என்னை ஆண்டிடும் தன்மையான், Ennai Aanditum Thanmaiyaan - அடியேனைக் கைக்கொண்டருளுமியல் வினரான சடகோபன், Sadagopan - நம்மாழ்வார் என் நம்பி, En Nambi - எனக்குத் தலைவர் |
| 941 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 5 | நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெல்லாம் செம் பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக் கன்பனாய் அடி யேன் சதிர்த் தேனின்றே | அடியேன், Adiyen - (இன்று அடியேன் என்று சொல்லும்படி திருந்தின) நான் முன் எலாம், Mun Elaam - (ஆழ்வாருடைய விஷயீகாரம் பெறுவதற்கு) முன்பெல்லாம் பிறர், Pirar - அயலாருடைய நல் பொருள் தன்னையும், Nal Porul Thannaiyum - நல்ல பொருள்களை நம்பினேன், Nambinen - ஆசைப் பட்டுக் கிடந்தேன் மடவாரையும், Madavaaraiyum - பிறருடைய ஸ்த்ரீகளையும் நம்பினேன், Nambinen - விரும்பிப் போந்தேன் இன்று, Indru - இப்போதோ வென்றால் செம் பொன் மாடம், Sem Pon Maadam - செவ்விய பொன்னாற் சமைந்த மாடங்களை யுடைய திரு குருகூர் நம்பிக்கு, Thiru Kurugoor Nambikku - திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்கு அன்பன் ஆய், Anban Aay - பக்தனாகப் பெற்று சதிர்த்தேன், Sathirthen - சதிரையுடையேனானேன் (சமத்தனாய் விட்டேன்) |
| 942 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 6 | இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான் நின்று தன் புகழேத்த வருளினான் குன்ற மாடத் திருக் குருகூர்நம்பி என்றுமென்னை யிகழ்விலன் காண்மினே | இன்று தொட்டும், Indru Thottum - இன்று முதலாக எழுமையும், Ezhumaiyum - மேலுள்ள காலமெல்லாம் நின்று, Nindru - (நான்) அத்யவஸாயம் நிலைக்கப் பெற்று தன் புகழ், Than Pugazh - தம்முடைய (ஆழ்வாருடைய) திருப்புகழ்களை ஏத்த, Eetha - துதிக்கும்படி எம் பிரான் அருளினான், Em Piraan Arulinan - எம் ஸ்வாமியான ஆழ்வார் க்ருபை பண்ணினார் குன்றம் மாடம், Kunram Maadam - மலை போன்ற மாடங்களையுடைய திருகுருகூர் நம்பி, Thiru Kurugoor Nambi - திருநகரிக்குத் தலைவரான அவ்வாழ்வார் என்றும், Endrum - (இனி) எக்காலத்திலும் என்னை, Ennai - என் விஷயத்தில் இகழ்வு இவன், Igazhvu Ivan - அநாதரமுடையவராகஇருக்க மாட்டார் காண்மின், Kaanmin - (இதனை அநுபவத்தில்) கண்டு கொள்ளுங்கள் |
| 943 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 7 | கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான் பண்டை வல்வினை பாற்றி யருளினான் எண்டிசையு மறிய வியம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோப னருளையே | பிரான், Piraan - பரமோபகாரகராய் காரி மாறன், Kaari Maaran - பொற் காரியார் திருக்குமாரரான நம்மாழ்வார் என்னை, Ennai - (தமது பெருமை அறியாத) என்னை கண்டு, Kandu - கடாக்ஷத்து கொண்டு, Kondu - கைக்கொண்டு பண்டைவல்வினை, Pandai Valvinai - அநாதியாய்ப் பிரபலமாயிருந்த பாபங்களை பாற்றி அருளினான், Paatri Arulinan - அழிந்து போம்படி போக்கடித் தருளினார் (ஆதலால்) ஒண் தமிழ் சடகோபன் அருளையே, (Aadhalal) On Thamizh Sadagopan Arulaiye - அழகிய தமிழ்க் கவிகளுக்கு இருப்பிடமான அவ்வாழ்வாருடைய அருளையே எண் திசையும், En Thisaiyum - எட்டுத்திக்கிலுள்ளவர்களும் அறிய, Ariya - அறியும்படி இயம்புகேன், Iyampuken - சொல்லக்கடவேன் |
| 944 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 8 | அருள்கொண்டாடு மடியவரின்புற அருளினானவ் வருமறையின் பொருள் அருள் கொண்டாயிர மின் தமிழ்ப்பாடினான் அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே | அடியவர், Adiyavar - பக்தர்கள் இன்புற, Inpura - ஆநந்திக்கும்படி அ அரு மறையின் பொருள், A Aru Maraiyin Porul - அந்த அருமையான வேதத்தின் உட்பொருள்களை அருளினான், Arulinan - அருளிச்செய்தவராயும் அருள் கொண்டு, Arul Kondu - பரமக்ருபையாலே இன் தமிழ், In Thamizh - இனிய தமிழ்ப்பாஷையிலே அமைந்த ஆயிரம், Aayiram - திருவாய்மொழியாயிரத்தை பாடினான், Paadinan - பாடினவருமான ஆழ்வாருடைய அருள் கண்டீர், Arul Kandir - க்ருபை ஒன்று மாத்திர மன்றோ இ உலகினில், I Ulaginil - இந்த லோகத்திலே மிக்கது, Mikkaadu - அதிசயித்திருக்கிறது பெரியதாயிருக்கிறது |
| 945 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 9 | மிக்கவேதியர் வேதத்தினுட் பொருள் நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான் தக்கசீர்ச் சடகோபனென்னம்பிக்காள் புக்க காதலடிமைப் பயனன்றே | மிக்க வேதியர் வேதத்தின், Mikka Vethiyar Vethathin - சிறந்த வைதிகர்களால் ஓதப்படுகின்ற வேதத்தினுடைய உள் பொருள், Ul Porul - உள்ளுரை பொருளானது நிற்க, Nirka - நிலை நிற்கும்படி பாடி, Paadi - திருவாய்மொழியைப் பாடி என் நெஞ்சுள், En Nenjul - என்னுடைய ஹ்ருதயத்திலே நிறுத்தினான், Niruthinaan - (அந்த வேதார்த்தங்களை அல்லது திருவாய்மொழியை) ஸ்ப்ரதிஷ்டிதமாக்கி யருளினார் ( ஆழ்வார்) தக்க சீர், Dakka Seer - தகுதியான குணங்களையுடையராய் சடகோபன், Sadagopan - சடகோபனென்ற திருநாமத்தை யுடையரான என் நம்பிக்கு, En Nambikku - (அந்த) ஆழ்வார் விவயத்திலே ஆள் புக்க, Aal Pukka - அடிமை செய்வதற்கு உறுப்பான காதல், Kaadhal - ஆசையானது அன்றே, Andrae - அந்த க்ஷணத்திலேயே அடிமைப் பயன், Adimai Payan - (ஆழ்வார் திருவடிகளில்) கைங்கரியம் செய்வதையே பயனாகவுடைத்தாய்த்து |
| 946 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 10 | பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல்நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர்நம்பி முயல்கின்றேனுன்றன் மொய்கழற்கன்பையே | பயன் அன்று ஆகிலும், Payan Andru Agilum - (பிறர் திருந்துவதால்) தமக்கொரு பயனில்லாமற் போனாலும் பாங்கு அலர் ஆகிலும், Paangu Alar Agilum - (அவர்கள் திருந்துகைக்குப்) பாங்காக அமையாமற் போனாலும் செயல், Seyal - தமது அநுஷ்டாகத்தாலே நன்றாக திருத்தி, Nandraaga Thiruthi - நன்றாக சிக்ஷித்து பணி கொள்வான், Pani Kolvaaan - (அவர்களை) ஆட்கொள்வதற்காக குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் - குயில்களானவை நின்று ஆரவாரஞ் செய்யப் பெற்ற சோலைகளாலே சூழப்பட்ட திருநகரியிலே (எழுந்தருளியிருக்கிற) நம்பி!, Nambi! - ஆழ்வாரே! உன் தன், Un Than - தேவரீருடைய மொய் கழற்கு, Moi Kazharkku - சிறந்த திருவடிகளில் அன்பையே, Anbaiye - அன்பு உண்டாவதைக் குறித்தே முயல்கின்றேன், Muyalkindren - முயற்சி செய்கின்றேன் |
| 947 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || 11 | அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம் அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்னசொல் நம்புவார்ப்பதி வைகுந்தம் காண்மினே | அன்பன் தன்னை, Anban Thannai - ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானை அடைந்தவர்கட்கு எல்லாம், Adainthavarkatku Ellam - ஆச்ரயித்தவர்களான ஸகல பாகவதர் பக்கலிலும் அன்பன், Anban - பக்தியை யுடையரான தென் குருகூர் நகர் நம்பிக்கு, Then Kurugoor Nagar Nambikku - நம்மாழ்வர் விஷயத்திலே அன்பன் ஆய், Anban Ai - பக்தனாயிருந்து கொண்டு மதுரகவி சொன்ன சொல், Madhurakavi Sonna Sol - மதுரகவி அருளிச் செய்த இத் திவ்வியப் பிரபந்தத்தை நம்புவார், Nambuvaar - (தங்களுக்குத் தஞ்சமாகக்) விச்வஸித் திருப்பவர்களுக்கு பதி, Pathi - வாஸஸ்தாநமாவது வைகுந்தம் காண்மின், Vaikundam Kaanmin - பரம பதமாம் |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (பக்தாம்ருதம்) 40 | பக்தாம்ருதம் விச்வ ஜநாநு மோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம் ஸஹஸ்ர ஸாகோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம் த்ராவிட வேதஸாகரம் | Bhaktha amrutham, பக்த அம்ருதம் - தொண்டர்கட்கு அமுதமா யிருப்பதும் Vishwa jana anumodhanam, விச்வ ஜந அநுமோதநம் - ஸகல ஜனங்களையும் ஆனந்திக்கச் செய்வதும் Sarva arthatham, ஸர்வ அர்த்ததம் - ஸமஸ்த புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும் Sahasra saaga Upanishad samagamam, ஸஹஸ்ர சாக உபநிஷத் ஸமாகமம் - ஆயிரக்கணக்கான சாகைகளையுடைய உபநிஷத்துக்களின் திரட்சியாயிருப்பதும் Sri Sadagopa vaangmayam, ஸ்ரீ சடகோப வாங்மயம் - நம்மாழ்வாருடைய ஸ்ரீஸுக்தி மயமுமான Draavida vedha saagaram, த்ராவிட வேத ஸாகரம் - தமிழ் வேதக் கடலை Aham, அஹம் - அடியேன் Namami, நமாமி - ஸேவிக்கிறேன் |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (திருவழுதி நாடென்றும்) 41 | திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும் மருவினிய வண் பொருநலென்றும் - அருமறைகள் அந்தாதி செய்தானடியிணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து | Nenje, நெஞ்சே - மனமே! Thiru vazhuthi naadu endrum, திரு வழுதி நாடு என்றும் - திருவழுதி நாடென்கிற தேசத்தை அநுஸந்தித்தும் Then kurugoor endrum, தென் குருகூர் என்றும் - அழகிய திருக்குருகூரென்கிற திவ்யதேசத்தை அநுஸந்தித்தும் Maruva iniya van porunal endrum, மருவ இனிய வண் பொருநல் என்றும் - ஆசைப்படும்படி போக்யமாய் அழகியதான தாமிரபர்ணியாற்றை அநுஸந்தித்தும் Aru maraigal, அரு மறைகள் - அருமையான வேதங்களை Anthadhi seidhan, அந்தாதி செய்தான் - அந்தாதித் தொடையான திருவாய்மொழி முகத்தாலே பாடின ஆழ்வாருடைய Adi inaiye, அடி இணையே - உபய பாதங்களையே epozhudhum, எப்பொழுதும் - இடைவிடாமல் Thelinthu, தெளிந்து - தெளிவுடனே Sindhiyaai, சிந்தியாய் - சிந்தை செய்யக்கடவை |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (மனத்தாலும் வாயாலும்) 42 | மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரையல்லா திறைஞ்சேன் - தனத்தாலும் ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று | Manathalum, மனத்தாலும் - நெஞ்சினாலும் Vayalum, வாயாலும் - வாக்கினாலும் Van kurugoor penum, வண் குருகூர் பேணும் - திருநகரியை ஆதரிக்கின்ற Inathaarai allaadhu, இனத்தாரை அல்லாது - கோஷ்டியில் சேர்ந்தவர்களைத் தவிர (மற்றையோர்களை) Irainjen, இறைஞ்சேன் - வணங்கமாட்டேன் Dhanathalum, தனத்தாலும் - செல்வத்தினாலும் Yedhum kuraivu ilen, ஏதும் குறைவு இலேன் - எவ்விதமான குறையுமுடையேனல்லேன் (எதனாலென்னில்) Endhai Sadagopan, எந்தை சடகோபன் - அஸ்மத் ஸ்வாமியான நம்மாழ்வாருடைய Paadhangal, பாதங்கள் - திருவடிகள் Yaamudaiya, யாமுடைய - நம்முடைய Patru, பற்று - ஆதாரமாயிராநின்றது |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (ஏய்ந்த பெருங் கீர்த்தி) 43 | ஏய்ந்த பெருங் கீர்த்தி யிராமானுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் - ஆய்ந்த பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராதவுள்ளம் பெற. | Aayndha, ஆய்ந்த - குற்றங் கலசாதம் Peru seer, பெரு சீர் - சிறந்த திருக்குணங்களினால் Aar, ஆர் - பரிபூர்ணரான Sadagopan, சடகோபன் - நம்மாழ்வார் (அருளிச் செய்த) Senthamizh vedham, செந்தமிழ் வேதம் - செவ்விய தமிழ் வேதத்தை Tharikkum, தரிக்கும் - தாங்கிக்கொள்ளவல்லதாய் Peradha, பேராத - வேறொன்றில் செல்லமாட்டாததான Ullam, உள்ளம் - நெஞ்சை Pera, பெற - பெறும் பொருட்டு Eayndha peru keerthi Ramanusa muni than, ஏய்ந்த பெரு கீர்த்தி இராமாநுச முனி தன் - தகுதியான பெரும்புகழையுடைய எம்பெருமானது Vaayndha padham malar, வாய்ந்த பாதம் மலர் - பொருத்தமான திருவடித் தாமரைகளை Vanangugindren, வணங்குகின்றேன் - வணங்குகின்றேன் |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (வான் திகழும்) 44 | வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத் தாய் இராமாநுசன் | Vaan thigazhum Solai, வான் திகழும் சோலை - ஆகாசத்தளவும் ஒங்கி விளங்குகின்ற சோலைகளையும் Madil, மதிள் - ஸப்த ப்ராகாரங்களையும் உடைத்தான Arangar, அரங்கர் - திருவரங்கத்தில் பள்ளி கொண்ட எம்பெருமானுடைய Van pugazh mel aandra, வண் புகழ் மேல் ஆன்ற - திருக்கல்யாண குண விஷயமாக அமைந்த Tamizh maraigal aayiramum, தமிழ் மறைகள் ஆயிரமும் - தமிழ் வேதமான ஆயிரம் பாசுரங்களையும் Eendra mudhal thai, ஈன்ற முதல் தாய் - பெற்ற முக்கியமான மாதா Sadagopan, சடகோபன் - நம்மாழ்வாராவர் Moimpaal, மொய்ம்பால் - மிடுக்குடனே Valartha, வளர்த்த - அதனை வளர்த்த Idham thai, இதம் தாய் - ஹிதமான மாதா Ramanusan, இராமாநுசன் - எம்பெருமானாராவர் |
| 0 | திருவாய்மொழி - தனியன் || (மிக்க விறை) 45 | மிக்க விறை நிலையும் மெய்யாமுயிர் நிலையும் தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும் ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன் யாழினிசை வேதத் தியல் | Kurugaiyar kon, குருகையர் கோன் - திருநகரியிலுள்ளார்க்குத் தலைவரான ஆழ்வார் (அருளிச்செய்த) Yaazhin isai vedhathu iyal, யாழின் இசை வேதத்து இயல் - வீணாகானம்போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள் Mikka irai nilaiyum, மிக்க இறை நிலையும் - ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானுடைய ஸ்வரூபத்தையும் Meyaam uyir nilaiyum, மெய்யாம் உயிர் நிலையும் - நித்யனான ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும் Thakka neriyum, தக்க நெறியும் - ஸ்வரூபாநுரூபமான உபாயத்தின் ஸ்வரூபத்தையும் Thadai aagi thokku iyalum oozh vinaiyum, தடை ஆகி தொக்கு இயலும் ஊழ் வினையும் - (பகவத்ப்ராப்திக்குப்) பிரதிபந்தகமாகிச் சேர்ந்து கிடக்கிற முன்னை வினைகளாகிற விரோதி ஸ்வரூபத்தையும் Vaazh vinaiyum, வாழ்வினையும் - வாழ்வாகிற பரம புருஷார்த்த ஸ்வரூபத்தையும் Oodhum, ஓதும் - கூறுவன |
| 2675 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (இதில், மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.) 1 | உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1 | என் மனனே, En manane - எனது மனமே! உயர்வு அற, Uyarvu ara - (தன்னைப் பார்க்கிலும்) உயர்த்தி இல்லதாபடி உயர், Uyar - உயர்ந்த நலம், Nalam - (ஆனந்தம் முதலிய) கல்யாண குணங்களை. உடையவன், Udayavan - (சுயமாக) உடையனானவன் யவனவன், Yavanavan - யாவனொருவனோ மயர்வு அற, Mayarvu ara - அஜ்ஞானம் நசிக்கும்படி மதி நலம், Mathi nalam - ஞானத்தையும் பக்தியையும் அருளினன், Arulinan - (அடியேனுக்குக்) கிருபை பண்ணினவன் யவனவன், Yavanavan - யாவனொருவனோ. அயர்வு அறும், Ayarvu arum - மறப்பு இல்லாத அமரர்கள், Amaragal - நித்ய ஸூரிகளுக்கு அதிபதி யவன், Adhipathi yavan - ஸ்வாமி யாவனொருவனோ அவன், Avan - அந்த எம்பெருமானது துயர் அறு சுடர் அடி, Thuyar aru sudar adi - துயர் அறப் பெற்ற சோதி மயமான திருவடிகளை தொழுது, Thozhudhu - வணங்கி எழு, Ezhu - நீ கடைத்தேறக் கடவை. |
| 2676 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (எம்பெருமான் இவ்வாழ்வாரை வசப்படுத்திக் கொண்டது தனது திருக் கல்யாண குணங்களைக் காட்டி யாதலால் அக் குணங்களிலே முற்படி இழிந்து பேசினார். அக்குணங்கள் ஸ்வரூபத்தைப் பற்றி நிற்குமே யொழிய நிராச்ரயமாய் நில்லாது; ஆகவே அக் குணங்களுக்கு ஆச்ரயமான ஸ்வரூபத்தை அவள் அவன் என்று கீழ்ப்பாட்டிலேயே ப்ரஸ்தாவித்தார். அந்த திவ்ய ஸ்வரூபமானது சித்து அசித்து என்கிற இரண்டு தத்துவங்களிற் காட்டிலும் விலக்ஷணமாயிருக்கிற படியை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.) 2 | மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன் இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2 | மனனகம், Mananakam - மனத்திலே யிருக்கிற மலம் அற, Malam ara - (காமம் கோபம் முதலிய) தீக்குணங்கள் கழியக் கழிய (அதனால்) மலர், Malar - மலர்ந்ததாகி மிசை எழ தரும், Misai ezha tharum - மேலே மேலே விருத்தி யடைகிற மனன் உணர்வு, Manan unarvu - மாநஸ ஜ்ஞான மென்கிற யோக வுணர்ச்சியால் அளவிலன், Alavilan - அளவிடப்படாதவனும் பொறி உணர்வு, Pori unarvu - (மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும்) வெளியிந்திரியங்களின் ஞானத்தினால் அளவிடப்படாத’வனுமாய் இனன், Inan - இப்படிப்பட்டவனும் முழு உணர் நலம், Muzhu unar nalam - பரிபூர்ண ஞானானந்த ஸ்வரூபியும் எதிர் நிகழ் கழிவினும், Edhir nigazh kazhivinum - எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகாலம் என்ற மூன்று காலங்களிலும் இனன் இலன், Inan ilan - ஒப்பு இல்லாதவனும் மிகுநரை இலன், Migunarai ilan - மேற்பட்டவரில்லாதவனுமா யிருப்பவன் என் நன் உயிர், En nan uyir - எனக்கு நல்ல ஆத்மா. |
| 2677 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (கல்யாண குணமுடைமையையும் நித்ய விபூதி யாட்சியையும் திவ்ய மங்கள் விக்ரஹ முடைமையையும் முதற் பாட்டிலே அநுஸந்தித்து, அவற்றிக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தின் வைலக்ஷண்யத்தை இரண்டாம் பாட்டிலே அருளிச் செய்து, அவற்றோடே சேர்த்து ஒரு கோர்வையாக அநுபவிக்கத் தக்கதான லீலா விபூதி யுடைமையை இப் பாட்டிலே அருளிச் செய்கிறார்.) 3 | இலனது உடையனிது என நினைவரியவன் நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன் புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3 | அது இலன் (என), Adhu ilan (Ena) - அந்தப் பொருள் (தனக்கு) இல்லாதவனென்றும் இது உடையன் என, Idhu udaiyan ena - இந்தப் பொருளை யுடையவன் என்றும் நினைவு அரியவன், Ninaivu ariyavan - நினைப்பதற்கு அருமைப் பட்டவனாகியும் நிலன் இடை, Nilan idai - பூமி முதலான (கீழ்) உலகங்களிலும் விசும்பிடை, Visumbidai - ஆகாசம் முதலான (மேல்) உலகங்களிலும் (உள்ள) உருவினன், Uruvinan - ரூபியான அசேநப் பொருள்களை யுடையவனாகியும் அருவினன், Aruvinan - ரூபியல்லாத சேதனர்களை யுடையவனாகியும் புலனொடு, Pulanodu - விஷயமாகிற பொருள்களோடு (கலந்து நின்றாலும்) புலன் அலன், Pulan alan - (தான்) புலன்களுக்கு விஷயமாகாதவனாகியும் ஒழிவு இலன் பரந்த, Ozhivu ilan parandha - எபபொழுதும் எங்கம் வியாபித்திருக்கிற அ நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே, A nalan udai oruvanai nanuginam naame - முன் சொன்ன கல்யாண குணங்களை யுடைய ஒப்பற்ற எம்பெருமானை நாம் கிட்டப் பெற்றோம். |
| 2678 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (பன்னீராயிரப்படி - அநந்தரம் மூன்று பாட்டுக்களாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப -ஸ்திதி -ப்ரவ்ருத்த்யாதிகள் பகவத் அதீனங்கள் என்கிறார் – அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூபமும் தத் அதீனம் என்று சாமாநாதி கரண்யத்தால் அருளிச் செய்கிறார்.) 4 | நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4 | நாம், Naam - நாம் முதலான தன்மைப் பொருள்களும் அவன் இவன் உவன், Avan ivan uvan - அவன் இவன் உவன் என்கிற ஆண் பால் சுட்டுப் பொருள்களும் அவள் இவள் உவள், Aval ival uval - அவள் இவள் உவள் என்னும் பெண் பால் சுட்டுப் பொருள்களும் எவள், Eval - எவள் என்கிற பெண் பால் வினாப் பொருளும் தாம், Thaam - தாம் என்னும் பன்மைப் பொதுப் பொருளும் அவர் இவர் உவர், Avar Ivar Uvar - அவர் இவர் உவர் என்னும் பலர் பால் சுட்டுப் பொருள்களும் அது இது உது, Athu idhu udhu - அது இது உது என்னும் ஒன்றன் பால் சுட்டுப் பொருள்களும் எது, Edhu - எது என்னும் ஒன்றன் பால் வினாப் பொருளும் வீம் அவை, Veem avai - நசிக்குந் தன்மையுள்ள பொருள்களும் இவை உவை அவை, Ivai uvai avai - இவை உவை அவை என்னும் பலவின் பால் சுட்டுப் பொருள்களும் நலம் அவை, Nalam avai - நல்ல வஸ்துக்களும் தீங்கு அவை, Theenghu avai - கெட்ட வஸ்துக்களும் ஆம் அவை, Aam avai - எதிர் காலப் பொருள்களும் ஆய அவை, Aaya avai - இறந்த காலப் பொருள்களும் ஆய் நின்ற, Aay nindra - ஆகி நின்ற எல்லாப் பொருள்களும் அவரே, Avare - அந்த ஊர்வேச்வரனேயாம் |
| 2679 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –கர்மங்களுக்கு ஆராத்ய ஸ்வரூபம் பகவத் அதீனம் என்று சொல்லுகிறது.) 5 | அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள் அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5 | அவர் அவர், Avar avar - அந்தந்த அதிகாரிகள் தம தமது, Tham thamadhu - தங்கள் தங்களுடைய அறிவு, Arivu - ஞானத்தாலே அறி, Ari - அறியப் படுகிற வகை வகை, Vagai vagai - பல பல படிகளாலே அவரவர், Avar avar - அந்தந்த தெய்வங்களை இறையவர் என, Iraiyavar ena - ஸ்வாமிகளென்றெண்ணி அடி அடைவர் தன், Adi adaivar than - ஆச்ரயிப்பர்கள்; அவரவர் இறையவர், Avar avar iraiyavar - அந்தந்த அதிகாரிகளால் தொழப்படுகிற தெய்வங்கள் குறைவு இலர், Kuraivu ilar - அவரவர்கள் விரும்பின பலன்களைக் கொடுப்பதில் குறையற்றனவே; (எதனாலே என்னில்) இறையவர், Iraiyavar - ஸர்வ ஸ்வாமியான ஸ்ரீமந் நாராயணன் அவரவர், Avaravar - அந்தந்த அதிகாரிகள் விதி வழி, Vidhi vazhi - தங்கள் தங்கள் அத்ருஷ்டாநுஸாரமாக அடைய, Adaiya - பலன் பெறும்படியாக நின்றனர், Nindranar - அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக எழுந்தருளி யுள்ளான். (அதனாலே காண்மின்.) |
| 2680 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (லீலாவிபூதியின் ஸ்வரூபமும் ரக்ஷணமும் எம்பெருமானுடைய அதீநமென்பது கீழிரண்டு பாசுரங்களில் அருளிச்செய்யப்பட்டது; அதனுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனுடைய அதீநமே யென்கிறது இப்பாட்டில். இதில் முதலடியில் ப்ரவ்ருத்திகளைச் சொல்லுகிறது; இரண்டாமடியில் நிவ்ருத்திகளைச் சொல்லுகிறது.) 6 | நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர் என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6 | நின்றனர், Nindranar - நிற்பவர்கள் இருந்தனர், Irundhanar - இருப்பவர்கள் கிடந்தனர், Kidandhanar - கிடப்பவர்கள் திரிந்தனர், Thirindhanar - திரிபவர்கள் (ஆக இப்படிப் பட்டவர்களினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதலாகிற ப்ரவ்ருத்திகளெல்லாம் அப் பெருமானுடைய அதீநமே) நின்றிலர், Nindrilnar - நில்லாதவர்கள் இருந்திலர், Irundhilar - இராதவர்கள் கிடந்திலர், Kidandhilar - கிடவாதவர்கள் திரிந்திலர், Thirindilar - திரியாதவர்கள் (ஆக இப்படிப் பட்டவர்களினுடைய நில்லாமை இராமை கிடவாமை திரியாமை யாகிற நிவ்ருத்திகளெல்லாமும் அப் பெருமானுடைய அதீநமே.) என்றும், Endrum - எப்போதும் ஓர் இயல்வினர் என் நினைவு அரியவர், Or iyalvinar en ninaivu ariyavar - ஒரே விதமான இயற்கையை யுடையவரென்று நினைக்க முடியாதவரும் (அவரே) (அவர் தாம் யாவரென்னில்;) என்றும், Endrum - எப்போதும் ஓர் இயல்வொடு நின்ற, Or iyalvodu nindra - ஒரே விதமான இயற்கையோடு கூடி யிருக்கின்றவராய் எம் திடர், Em thidar - திடமான பிரமாணத்தினால் ஸித்தாமன நம்முடையவர். |
| 2681 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (பன்னீராயிரப்படி -அநந்தரம் இந்த சாமாநாதி கரண்யம் சரீராத்மா பாவ சம்பந்த நிபந்தநம்-என்கிறார்.) 7 | திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும் உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7 | அவை அவை தொறும், Avai avai thorum - அந்தந்த பதார்த்தங்களெல்லாவற்றிலும் உடல் மிசை உயிர் என், Udal misai uyir en - சரீரத்தில் ஆத்மா வியாபிப்பதுபோல கரந்து, Karandhu - மறைந்து எங்கும் பரந்து, Engum parandhu - உள்ளிலும் வெளியிலும் வியாபித்து இவைமிசை, Ivai misai - ஆகிய இவற்றை ஆதாரமாகக் கொண்டு படர் பொருள் முழுவதும் ஆய், Padar porul muzhuvadhum aay - படர்ந்த பதார்த்தங்கள் யாவும் தானம்படி அவற்றுக்கு உபாதாநமாய் (அவற்றை உண்டாக்கி) சுடர்மிகு சுருதியுள் உளன், Sudarmigu suruthiyul ulan - தேசு பொலிந்த வேதத்தில் உள்ளவனான எம்பெருமான் இவை உண்ட சுரன், Ivai unda suran - (ஸம் ஹார காலத்தில்) இவற்றையெல்லாம் தன் பக்கலிலே யாக்கிக் கொள்ளும் தேவனாவான். திடம், Thidam - உறுதியான விசும்பு, Visumbu - ஆகாசமென்ன எரி, Eri - அக்நியென்ன வளி, Vali - வாயுவென்ன நீர், Neer - ஜலமென்ன நிலம், Nilam - பூமியென்ன |
| 2682 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஒன்பதினாயிரப்படி -இப் பாட்டில் இப்படி ஸ்ருதி சித்தனான சர்வேஸ்வரன் ஆகிறான் சிருஷ்டி சம்ஹார கர்த்தாக்களாக பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளிலே ஒருவன் ஆனாலோ என்று சொல்லுகிற குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள்.) 8 | சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன் புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8 | சுரர் அறிவு அரு நிலை, Surar arivu aru nilai - (பிரமன் முதலிய) தேவர்களுக்கும் அறிவொண்ணாத நிலைமையை உடைத்தான் விண் முதல் முழுவதும், Vin mudhal muzhuvadhum - மூல ப்ரக்ருதி முதலாகவுள்ள ஸகல வஸ்துக்களுக்கும் வரன் முதல் ஆய், Varan mudhal aay - சிறநத் காரண பூதனாய் (அவற்றை யெல்லாம் படைத்தவனாயும்) அவை முழுது உண்ட, Avai muzhudhu unda - அவற்றை யெல்லாம் (பிரளய காலத்தில்) திரு வயிற்றிலே வைத்து நோக்குபவனாயுமுள்ள பரபரன், Paraparan - பரம் புருஷன் அரன் என, Aran ena - ருத்ர மூர்த்தியின் உருவத்தைத் தரித்தவனாகி ஒரு மூன்று புரம் எரித்து, Oru moondru puram erithu - இணை யில்லாத திரி புரங்களை எரித்தும் உலகு அழித்து, Ulagu azhithu - உலகங்களை அழித்தல் செய்தும் அயன் என, Ayan ena - நான் முகக் கடவுள் என்னும் படியாக நின்று அமரர்க்கு, Amararku - தேவர்களுக்கு அறிவு இயந்தும், Arivu iyandhum - ஞானத்தைக் கொடுத்தும் அலகு அமைத்து, Alagu amaithu - உலகங்களைப் படைத்தல் செய்தும் உளன், Ulan - அவர்களுக்குள்ளே ஆத்மா வாயிருக்குமவன் |
| 2683 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி -அநந்தரம் ஈஸ்வர தத்துவத்தை இசையாதே வேத பாஹ்யரில் பிரதம கண்யராய்-சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார் .) 9 | உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் உளன் என இலன் என விவை குணமுடைமையில் உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9 | உளன் எனில், Ulan enil - ஈச்வரனுண்டென்று (வைதிகர்கள் சொல்லுகிறாப் போலே) சொன்னாலும் உளன் அலன் எனில், Ulan alan enil - ஈச்வரனில்லை யென்று (நாஸ்திகர்களின் படியே) சொன்னாலும் உளன், Ulan - ஈச்வரனுண்டென்பதாகவே தேறும்; அவன் உருவம் அவன் அருவம், Avan uruvam avan aruvam - அப் பெருமானுக்கு ஸ்தூல சரீரங்களும் ஸூக்ஷ்ம சரீரங்களுமாம்; இரு தகைமையோடு, Iru thagaimaiyodu - இரண்டு தன்மையோடும் (அதாவது ரூபியும் அரூபியுமான ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரபஞ்சங்களை வடிவாகக் கொண்டு) உளன் என இலன் என், Ulan ena ilan en - உளனென்றும் இலனென்றுஞ் சொல்லப் படுகிற இவை குணம் உடைமையின், Ivai gunam udaimaiyin - அஸ்தித்வ நாஸ்தித்வங்களை ப்ரகாரமாக வுடையனாகுந் தன்மையினாலே இவ்வுருவுகள் இவ்வருவுகள், Ivvuruvugal ivvaruvugal - உருவமுடையனவாயும் உருவமில்லாதனவாயு மிருக்கின்ற உலகப் பொருள்கள் யாவும் ஒழிவு இலன் பரந்து உளன், Ozhivu ilan parandhu ulan - எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலுமுள்ளவனாகவே ஸித்திப்பன் |
| 2684 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) ((பரந்தண்பரவையுள்) பரத்துவத்தைப் பேசுவதான இப் பதிகத்தில் ஸ்ரீமந்நாராயணனுக்கே பரத்வமுள்ளதாக ஸ்தாபித்தல் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலுள்ளது. அந்த நாராயணத் திருநாமத்தை மேற்பதிகங்களிலே ஸ்பஷ்டமாகப் பேசியருளுகிற ஆழ்வார் இந்தப் பதிகத்திலே ஒருவாறு மறைத்தே காட்டினார்.) 10 | பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக் கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10 | பரந்த, Parandha - எங்கும் வியாபித்த தண் பரவையுள், Than paravaiyul - குளிர்ந்த கடலினுள் நீர் தொறும், Neer thorum - ஜல பரமாணு தோறும் பரந்த அண்டம், Parandha andam - விஸ்தாரமான இவ் வண்டத்தி லிருக்குமா போலே இது என பரத்து உளன், Idu ena parathu ulan - நெருக்குண்ணாமல் இருப்பவனாய் (இப்படி) நிலம், Nilam - பூமியிலும் விசும்பு, Visumbu - மேலுலகங்களிலும் ஒழிவு அற, Ozhivu ara - ஒன்றொழியாமே கரந்த சில் இடம் தொறும், Karandha sil idam thorum - அதி ஸூக்ஷ்மமாய் அற்பமான இடங்கள் தோறும் இடம், Idam - அவ் வவ் விடஙக்ளிலே திகழ், Thigazh - விளங்கா நின்ற பொருள் தொறும், Porul thorum - ஆத்ம வஸ்துக்கள் தோறும் கரந்து, Karandhu - (வ்யாப்ய வஸ்துக்களும் அறியாதபடி) மறைந்து எங்கும் பரந்து உளன், Engum parandhu ulan - எல்லா விடங்களிலும் வியாபித்திரா நின்றான் (யாவரெனில்;) இவை உண்ட கரன், Ivai unda karan - இவ் வஸ்துக்களை ஸம்ஹார தசையிலும் தனக்குள்ளே யடக்கி, தான் ஸ்திரமாயிருக்கு மெம் பெருமான். |
| 2685 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (இப் பதிகம் கற்பார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிறது இது இவை பத்தும்வீடே யென்றது இப்பத்துப் பாசுரமும் வீடாகிய மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைத் தரவல்லது என்றபடி.) 11 | கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல் நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11 | கரம், Karam - திடமான விசும்பு, Visumbu - ஆகாசமென்ன எரி, Eri - அக்னியென்ன வளி, Vali - வாயுவென்ன நீர், Neer - ஜலமென்ன நிலம், Nilam - பூமியென்ன (ஆகிய) இவை மிசை, Ivai misai - இவற்றின் மீதுள்ள (இவற்றிற்கு ஸ்வபாவங்களாயுள்ள) வரன், Varan - சிறந்த நவில், Navil - சப்தமென்ன திறல், Thiral - (கொளுத்தும்) சக்தி யென்ன வலி, Vali - (எதையும் தூக்க வல்ல) பலமென்ன அளி, Ali - குளிர்ச்சி யென்ன பொறை, Porai - எதையும் பொறுத்துக் கொண்டிருப்பதாகிற க்ஷமையென்ன ஆய் நின்ற, Aay ninra - ஆகிய இத் தருமங்களெல்லாம் தன் வசமாயிருக்கப் பெற்ற பரன், Paran - ஸர்வேச்வரனுடைய அடிமேல், Adimel - திருவடி விஷயமாக குருகூர் சடகோபன் சொல், Kurukoor Sadagopan Sol - திருநகரியில் திருவவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த நிரல் நிறை, Niral nirai - சப்த பூர்த்தியும் அர்த்த பூர்த்தியுங்கொண்ட ஆயிரத்து, Ayirathu - ஆயிரம் பாசுரங்களிலே இவை பத்தும், Ivai pathum - இப் பத்துப் பாசுரமும் வீடு, Veedu - மோஷ பிராபகம். |
| 2686 | திருவாய்மொழி || 1-2 வீடுமின் (எம்பெருமானைத் தவிர்ந்த மற்றெல்லா விஷயங்களையும் விட்டு எம்பெருமானது திருவடிகளிலே ஆத்மாவை ஸமர்ப்பியுங்கோளென்கிறார்.) 1 | வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1 | முற்றவும், mutravum - (பஜந விரோதியான ஸாத்ய ஸாதனங்கள்) எல்லாவற்றையும் விடுமின், vidumin - விட்டுவிடுங்கள்; வீடு செய்து, veeduu seidu - அப்படிவிட்டு உம் உயி, um uyi - உங்களுடை ஆத்ம ஸ்துவை வீடு உடையான் இடை, Veedu, Vidu udayan idai - மோக்ஷ நிர்வாஹகனான ஸ்வாமியிடத்திலே வீடு செய்ய மின், Veedu, Vidu seyya min - ஸமர்ப்பியுங்கள். |
| 2687 | திருவாய்மொழி || எம்பெருமானைத் தவிர்த்த மற்ற விஷயங்களை விட்டு அவன் பக்கலிலே ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணப் பாருங்கொள் என்றார் கீழ்ப்பாட்டில்; அதுகேட்டவர்கள் ‘இது எங்ஙனே ஸாத்யமாகும்? நெடுநாளான வாஸநை பண்ணித் தொடர்ந்துவருகிற விஷயங்களை விட முடியுமோ? என்ன அவற்றின் குற்றங்குறைகளைக் காணவே நன்கு விடலாமென்கிறார் இப்பாட்டில். 2 | மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2 | உயிர் மன்னு, uyir mannu - ஆத்மா பொருந்தி வர்த்திக்கிற ஆக்கைகள், akkaigal - சரீரங்கள் மின்னின், minnin - மின்னலைக் காட்டிலும் நிலையில், nilayil - நிலையுடையன வல்ல; என்னும் இடத்து, ennum itattu,idathu - என்று சொல்லுமளவில் நீரே, neere - நீங்களே இறை, irai - சிறிது உன்னுமின், unnumin - ஆராய்ச்சி பண்ணிக் பாருங்கள். |
| 2688 | திருவாய்மொழி || விட வேண்டிய வஸ்துக்கள் பலபல கிடப்பதால் அவற்றையெல்லாம் தனித்தனியே எடுத்துரைத்தல் பெரும்பாடாகுமாதலால் விட வேண்டியவற்றைச் சுரங்க அருளிச்செய்கிறாரிதில். 3 | நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3 | நீர் நுமது என்ற இவை, neer numathuendra ivai - அஹங்கார மமகாரங்களாகிற இவற்றை வேர் முதல் மாய்த்து, veer mudhal maathu - (ருசி வாஸநைகளாகிற) பக்க வேரோடே முதலறுத்து இறை, irai - ஸ்வாமியை சேர்மின், sermin - அடையுங்கள்; உயிர்க்கும், uyirkkum - ஆத்மாவுக்கு அதன் நேர், adan ner - அதனோடு ஒத்து நிறை இல், nirai il - பூர்த்தி இல்லை |
| 2689 | திருவாய்மொழி || விட வேண்டிய விஷயத்தின் தோஷ மிகுதியை இரண்டாம் பாட்டிலருளிச் செய்தார்; பற்ற வேண்டிய பகவத் விஷயத்தின் நன்மை மிகுதியை இப் பாட்டிலருளிச் செய்கிறார் 4 | இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-2-4 | அவன் உரு, avan uru - அந்தப் பெருமானுடைய ஸ்வரூபமானது, இல்லதும் அல்லது, illathum allathu - விகாராஸ்பதமாகையாலே அஸத்து என்னப்படுமதான அசேதநத்தின்படியை யுடையது மன்று உள்ளதும் அல்லது, ullathum allathu - ஸத்து என்னப்படுபவனான ஜீவாத்மாவின் படியையுடையது மன்று; எல்லை இல், ellai il - எல்லை யில்லாத அ நலம், a nalam - அப்படிப்படட் ஆநந்த ஸ்வரூபியாயிருக்கும்; (ஆதலால்) பற்று அற்று புல்கு, patru atru pulku - ஹேய விஷய ஸங்கத்தை விட்டு-(அப்பெருமானை) ஆச்ரயிக்க |
| 2690 | திருவாய்மொழி || எம்பெருமானை பற்றுதற்கு இடையூறாகக் கைவல்ய மோக்ஷத்தில் நகையுண்டாகக் கூடியதாதலால் அந்த இடையூதன்னை விலக்கிக் கொள்ளுமாறு உபதேசித்தருளுகிறாரிப்பாட்டில். உலகத்தில் அவரவர்களது ருசியின்படி விருப்பங்கள் பலவகைப்படும். இஹ லோகத்திற்குப் பரிபூர்ண ஐச்வரியத்தையே சிலர் விரும்புவர்; தேவேந்திர பட்டத்தில் விருப்பமுள்ளவர்வகள் இவ்வுலகச் செல்வங்களிற் கண்வையார். நான்முகக் கடவுளது பதவியை விரும்புமவர் இந்திரபதவியிற் கண்வையார். ஆத்மாநுபவமாகிற கைவல்ய மோக்ஷத்தில் விருப்ப முடையார் கீழ்ச்சொன்னவற்றிற் கண்வையார் *உயர்வறவுயர்நலமுடையனாய் அயர்வறுமமரர்களதிபதியாய் *திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டனாக எம்பெருமானிடத்திலே பற்றுடையார் இவை யித்தனையிலும் கண் வையார். ஆகவே கைவல்ய மோக்ஷத்தில் கண்வைக்க வேண்டாமென்று நியமிக்கிறது இதில். 5 | அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர் செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5 | பற்று அற்றது எனில், patru atradhu enil - விஷயாந்தர ஸங்கம் அற்றொழிந்தது என்னுமளவிலேயே உயிர், uyir - ஆத்துமா வீடு உற்றது, veetu urratu - மோக்ஷத்தைப் பெற்றானாவன்; (கைவல்ய மோக்ஷமுண்டாகும்;) அது, adu - அந்தக் கைவல்ய மோக்ஷத்தை செற்று, setru - வெறுத்து மன்ன உறில், manna uril - நிலை நிற்கும்படி பகவத் விஷயத்தைக் கிட்டப் பார்க்கில் அற்று, atru - (ஆச்ரயிக்கும் போதே) எம்பெருமானுக்கென்றே அற்றுத் தீர்ந்து இறை பற்று, irai patru - அந்த எம்பெருமானை பற்றுக |
| 2691 | திருவாய்மொழி || ஆழ்வீர்! புறம்புள்ளவற்றைவிட்டுப் பரமபுருஷனைப் பற்றும்படி உபதேசிக்கிறீர்; அவன்தான் ஸர்வேச்வரனன்றோ? நமக்கு அவன் முகந்தருவானோவென்று ஸம்ஸாரிகள் சங்கிப்பதாகக் கொண்டு, எம்பெருமானை அப்படி நினைக்கலாமோ? ஈச்வரத்வம் வந்தேறி யென்னும்படி ஸௌசீல்யமே வடிவாயிருப்பவனன்றோ அவன் என்று ஸமாதாநம் பண்ணுகிறாரிதில். 6 | பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6 | ஈசனும், eesanum - எம்பெருமானும் பற்றிலன், patrilan - ஆச்ரிதர்களோடு பொருந்தி யிருப்பதையே இயல்வாக உடையனாய் முற்றவும், mutravum - தாரகம் போஷகம் போக்யம் என்னும்படியான ஸகல ஸ்துவுமாகவும் நின்றனன், nindranan - இரா நின்றான்: (ஒலோகமே!) பற்றிலை ஆய், patrilai aai - எம்பெருமானோடு பொருந்தி யிருப்பதையே இயல்வாகவுடைத்தாய் அவன், avan - அப் பெருமானுடைய முற்றில், mutril - ஸகல கைங்கரியங்களிலும் அடங்கு, adangu - அந்வயிப்பது. |
| 2692 | திருவாய்மொழி || கீழ்ப்பாட்டில், எம்பெருமான் அடியார்களோடு புரையேறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவனென்றார்; அவன் அப்படியிருந்தாலும், உண்மையில் அளவிடமுடியாத உபயவிபூதிச் செல்வத்தையுடையவனாயிருக்கையாலும் நாம் மிகப் புல்லியராயிருக்கையாலும் அவனோடு நமக்குச் சேர்த்தி எளிதாயிராதே; கடலிலே புகுந்த ஒரு துரும்பானது அலைமேல் அலையாகத் தள்ளுண்டுவந்து கரையில் சேருகிறார்போலே அப்பெருமானது ஐச்வரிய அலைகள் நம்மைத் தள்ளிவிடமாட்டாவோ? அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான் யானார்” என்று பின்வாங்கப் பண்ணுமே! என்று ஒரு சங்கையுண்டானக, அதற்குப் பரிஹார மருளுகிறார்போலும் இப்பாசுரத்தினால்: 7 | அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7 | அடங்கு எழில், adangu ezhil - முற்றிலும் அழகியதான சம்பத்து அடங்க, sampathu adanga - (எம்பெருமானுடைய) விபூதியை எல்லாம் கண்டு, kandu - பார்த்து அடங்க, adanga - அதெல்லாம் ஈசனஃது, eesanadhu,eesanakdhu - எம்பெருமானுடையதான எழில் என்று, ezil endru - ஸம்பத்து என்று துணிந்து உள்ளே, ulle - அந்தப் பகவத் விபூதிக்குள்ளேயே அடங்கு, adangu - சொருகிப் போவது |
| 2693 | திருவாய்மொழி || என்ன உபகரணங்களைக்கொண்டு எம்பெருமானுக்கு அடிமை செய்வது? என்ன. புதிதாக ஸம்பாதிக்கவேண்டாமல் ஏற்கனவே அமைந்திருந்துள்ள மனமொழி மெய்கள் மூன்றையும் ‘இவை எம்பெருமானுக்கு அடிமைசெய்வதற்குறுப்பாகவே கண்டவை’ என்று அனுஸந்தித்து, புறம்பண்டான விஷயங்ளில் நின்றும் மீட்டு எம்பெருமான் பக்கலிலே ஊன்றவைப்பதென்கிறாரிப்பாட்டில். 8 | உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8 | உள்ளம், ullam - நெஞ்சு என்றும் உரை, urai - வாக்கு என்றும் செயல், seyal - உடல் என்றம் உள்ள, ulla - ஏற்கெனவே யுள்ள இம் மூன்றையும், im moondruyum - இந்த மூன்று உறுப்புக்களையும் உள்ளி, ulli - ஆராய்ந்து பார்த்து கெடுத்து, keduthu - அவற்றிற்குள்ள விஷயாந்தரப் பற்றைத் தவிர்த்து இறை உள்ளில், irai ullil - எம்பெருமான் பக்கலிலே ஒடுங்கு, odungu - அந்வயிப்பது. |
| 2694 | திருவாய்மொழி || ஸ்ரீ ஆறாயிரப்படி - இப்படி அவன் பக்கலிலே கரணங்களை ஒடுங்கப் பண்ணவே பகவத் கைங்கர்ய பிரதிபந்தகங்கள் எல்லாம் போம் – பின்னையும் இவ் வர்த்தமான சரீரம் போந்தனையும் பார்த்திரு அத்தனையே விளம்பம் உள்ளது -என்கிறார் 9 | ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம் விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9 | அவன் கண், avan kan - அந்த எம்பெருமான் பக்கலிலே ஒடுங்க, odunga - அந்வயிக்கவே எல்லாம் ஒடுங்கலும், ellam odungalum - (ஆத்மாவை) ஒடுங்கப் பண்ணுவதான அவித்யை முதலானவை யெல்லாம் விடும், vidum - விட்டு நீங்கும்: பின்னும் , pinnum - அதற்குப் பிறகு ஆக்கை விடும் பொழுது, akkai vidum pozhuthu - சரீரம் தொலையும் நாளை எண், en - எதிர்பார்த்திருப்பது. |
| 2695 | திருவாய்மொழி || ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - சாரார்த்தமாக திருமந்த்ரத்தை அருளிச் செய்து -இத்தாலே யாவச் சரீர பாதம் எம்பெருமானை ஆஸ்ரயுங்கோள் -என்கிறார் 10 | எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10 | எண் பெருக்கு, en perukku - எண்ணிக்கை பெருகிக் கொண்டே யிருக்கும்படி அளவிறந்த அ நலத்து, a nalathu - அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்களை யுடைய ஒண் பொருள், on porul - சிறந்த பொருளாகிய ஜீவாத்ம வர்க்கத்தையும் ஈறு இல, iru il - முடிவில்லாத வண் புகழ், van pukaḻ,pughal - திருக் கல்யாண குணங்களையும் உடையனான நாரணன், naranaṉ - நாராயணனுடைய திண் கழல், tin kaḻal - (அடியாரை ஒருநாளும்) கைவிட கில்லாத திருவடிகளை சேர், cer, ser - ஆச்ரயிப்பது. |
| 2696 | திருவாய்மொழி || ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் எம்பெருமானுடைய குணங்களைத் தொடுத்த ஆயிரம் திருவாய் மொழியும் ஆராய்ந்து சொல்லப் பட்டன இவை என்கிறார் 11 | சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11 | சேர் தடம், ser tadam - செறிந்த தடாகங்களை யுடைய தென் சுருகூர் சடகோபன் சொல், then kurugoor,kurugur sadagopan sol - திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த சீர் தொடை, seer thodai - கவி யுறுப்புக்களெல்லாம் நன்கு அமையப் பெற்ற ஆயிரத்து, ayirattu - ஆயிரத்தினுள்ளே இ பத்து, i pattu - இப்பத்துப் பாசுரமும் ஓர்த்த, orta,ortha - ஆராய்ந்து சொல்லப்பட்டது. |
| 2886 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ பன்னீராயிரப்படி –திருமலையில் காட்டிலும் அத்தோடு சேர்ந்த திருப்பதியை அனுபவிக்கையே பரம பிரயோஜனம் -என்கிறார்) 1 | கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1 | kilar oli,கிளர் ஒளி - மேன்மேலுங் கொழுந்து விட்டுக் கிளர்கின்ற ஞானவொளியையுடைய ilamai,இளமை - இளம்பிராயம் ketuvatan munnam,கெடுவதன் முன்னம் - அழிவதற்குள்ளே valar oli,வளர் ஒளி - குன்றாத தேஜஸ்ஸையுடையனான mayon,மாயோன் - எம்பெருமான் maruviya,மருவிய - நித்யஸந்நதானம் பண்ணியிருக்கிற kovil,கோவில் - ஆலயமாய் valar ilapolil cul,வளர் இளபொழில் சூழ் - வளர்கின்ற இளஞ்சோலைகளால் சூழப்பட்டதான maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ்சோலை மலையை talarvu ilar aki,தளர்வு இலர் ஆகி - தளர்ச்சி யில்லாதவராகி carvate,சார்வதே - அடைவதுதான் catir,சதிர் - ஸ்பரூபாநரூபம் |
| 2887 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -திருமலை தான் வேணுமோ -அத்தோடு சேர்ந்த திருப்பதியை பரம பிரயோஜனம் என்கிறார்) 2 | சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில் மதி தவழ் குடுமி மாலிரும் சோலை பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2 | catir,சதிர் - அழகு பொருந்திய ila matavar,இள மடவார் - இளம் பருவத்துப்பெண்களிடத்து talcciyai,தாழ்ச்சியை - ஆழய்காற்படுவதை matiyatu,மதியாது - ஒரு பொருளாக நினையாமல் atirkural cankattu,அதிர்குரல் சங்கத்து - முழங்குகின்ற ஓகையையுடைய சங்கு ஒலிக்கப்பெற்ற alakar tam koyil,அழகர் தம் கோயில் - அழகருடைய ஆலயமாய் mati taval kutumi,மதி தவழ் குடுமி - சந்திரன் உலாவப்பெற்ற சிகரத்தை யுடைத்தான maliruncolai;,மாலிருஞ்சோலை; - மாலிருஞ் சோலையாகிற pati atu,பதி அது - அந்தத் திருப்பதியை etti,ஏத்தி - துதித்து eluvate,எழுவதே - உய்வதே payan,பயன் - புருஷார்த்தம் |
| 2888 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலையைத் தொழவேணுமென்பதுகூட அவசியமன்று,திருமலையோடு ஸம்பந்தமுள்ள (அதன் அருகிலுள்ள) ஒரு மலையைத் தொழுதாலும் போதும், என்கிறது இப்பாட்டு.) 3 | பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3 | nence,நெஞ்சே - மனமே!, puyal malai vannar,புயல் மழை வண்ணர் - வர்ஷாகாலத்து மேகம் போன்ற திருநிறத்தையுடைய பெருமான் purintu,புரிந்து - விரும்பி urai,உறை - நித்யவாஸம் செய்கிற koyil,கோயில் - ஸந்நிதியாய், mayalmiku polil cul,மயல்மிகு பொழில் சூழ் - (கண்டவர்களை) மயக்குகிற சக்திமிகுந்த சோலைகளால் சூழப்பட்ட malirun colai,மாலிருஞ் சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய ayal,அயல் - அருகிலுள்ள malai,மலை - மலையை ataivatu atu,அடைவது அது - அடைவதும் கருமமே ஸ்ரீஉத்தேச்யந்தான் payan alla ceytu,பயன் அல்ல செய்து - நிஷ்பலமான காரியங்களைச் செய்வதனால் payan illai,பயன் இல்லை - லாபமில்லை |
| 2889 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி-கர்ம பந்தத்தைப் போக்கி ஆஸ்ரிதர் ஆனவர்கள் அடிமை செய்து வாழ்கைக்கு ஈடாம் படி சர்வேஸ்வரன் வர்த்தித்து அருளுகிற திரு மலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசமான படி என்கிறார்) 4 | கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே பெருமலை எடுத்தான் பீடுறை கோயில் வருமழை தவழும் மாலிரும் சோலை திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4 | karumam,கருமம் - கருமங்களாகிற van pacam,வன் பாசம் - வலிய பாசங்களை kalittu,கழித்து - கழற்றி ulaniru,உழனீறு - அடிமை செய்து திரிந்து uyyave,உய்யவே - உஜ்ஜீவிக்கும் பொருட்டே peru malai etuttan,பெரு மலை எடுத்தான் - கோவர்த்தன உத்தாரணம் செய்தருளியவனான எம்பெருமான் pitu urai,பீடு உறை - தனது பெருமையெல்லாம்விளங்க நித்யவாஸம் பண்ணுமிடமான koyil,கோயில் - ஸந்நிதியாய் varu malai tavalum,வரு மழை தவழும் - மழை பெய்ய வருகிற மேகங்கள் தவழ்கின்ற maliruncolai,மாலிருஞ்சோலை - மாலிருஞ்சோலை tirumalai atuve,திருமலை அதுவே - எம்பெருமான் ஸந்நிதி பண்ணியிருக்கிற திருமலையை ataivatu,அடைவது - சேர்வது tiram,திறம் - உசிதம் |
| 2890 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி-திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு என்கிறார்) 5 | திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது அற முயலாழிப் படையவன் கோயில் மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை புறமலை சாரப் போவது கிறியே –2-10-5 | tiram utai,திறம் உடை - பலவகைப்பட்ட valattal,வலத்தால் - வலிமையைக் கொண்டு tivinai,தீவினை - பாவங்களை perukkatu,பெருக்காது - மிகையாகச் செய்யாமல் aram muyal ali pataiyavan koyil,அறம் முயல் ஆழி படையவன் கோயில் - ஆச்ரித ரக்ஷண தருமத்திலே முயல்கின்ற திருவாழியை ஆயுதமாகவுடைய பெருமானது கோயிலாய். maru il,மறு இல் - அழுக்கற்ற van cuaina cul,வண் சுஐன சூழ் - வளமான களைகளால் சூழப்பட்ட maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய puram malai,புறம் மலை - பக்கத்திலுள்ள தொருமலையை cara,சார - கிட்டுமாறு povatu,போவது - போவதானது kiri,கிறி - நல்ல உபாயம். |
| 2891 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலைக்குப் போகிற மார்க்கமுண்டே, அதனைச் சிந்திப்பது தானும் போது மென்கிறார்.) 6 | கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில் மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6 | kilmai ceyyate,கீழ்மை செய்யாதே - இழிவான செயல்களைச் செய்யாமல் kiri ena,கிறி என - (இப்போது நான் சொல்லுகிறதை) நல்ல வுபாயமென்று நினையுங்கோள் uri amar,உறி அமர் - உறிகளிலே அமைத்துவைத்த வெண்ணெயை untavan,உண்டவன் - அமுது செய்த கண்ணபிரானுடைய koyil,கோயில் - ஆலயமாய் mariyotu pinaicer,மறியோடு பிணைசேர் - தம் குட்டிகளோடுகூட மான்பேடைகள் சேர்ந்து வாழப்பெற்ற maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையினுடைய neri,நெறி - வழியிலே pata,பட - செல்லவேணுமென்கிற atuve,அதுவே - அந்த நினைவு ஒன்றையே ninaivatu,நினைவது - நினைப்பது nalam,நலம் - நல்லது. |
| 2892 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஆறாயிரப்படி- இதுவே ப்ராப்யம் என்று நினையுங்கள் -வேறு ஒன்றை ப்ராப்யமாக நினையாதே – நிலமுன மிடந்தான் என்றைக்கும் தனக்கு கோயிலாகக் கொண்ட பரம புருஷ நிர்மல ஞான ஜனகமான திருமலையை அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு வலம் செய்து மருவுங்கள்-இதுவே பரம ப்ராப்யம் -என்கிறார்) 7 | நலமென நினைமின் நரகழுந்தாதே நிலமுன மிடந்தான் நீடுறை கோயில் மலமறு மதி சேர் மாலிரும் சோலை வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7 | narakaluntate,நரகழுந்தாதே - நரகத்தில் அழுந்த நினையாமல் nalam enaninaimin,நலம் எனநினைமின் - (இவ்வுபதேசத்தை) நன்மை யென்று நெஞ்சிற் கொள்ளுங்கள்; (அதாவது) munam,முனம் - முற்காலத்தில் nilam,நிலம் - பூமியை itantan,இடந்தான் - வராஹ ரூபியாகி இடந்தெடுத்துவந்த பெருமான் koyil,கோயில் - நித்யவாஸம் பண்ணுகிற ஸந்நிதியாய், malam aru mati cer,மலம் அறு மதி சேர் - களங்கமற்ற சந்திரன் சேருமிடமான malirun colai,மாலிருஞ் சோலை - திருமலையை valam murai eyti, வலம் முறை எய்தி - அநுகூலமானமுறையிலே கிட்டி maruvutale,மருவுதலே - பொருந்துவதே valam,வலம் - உறுதியானது |
| 2893 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருமலையைச் சென்று நிரந்தரமாக வலம் செய்கையே வழக்கு என்கிறார்) 8 | வலம் செய்து வைகல் வலம் கழியாதே வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8 | valam ceytu,வலம் செய்து - (சரணங்களுக்கு) வலிமை யுண்டாக்கிக் கொண்டு எப்போதும் vaikal,வைகல் - எப்போதும் valam kaliya,வலம் கழியா - அந்த வலிமையை வீணாகப் பாழ்படுத்தாமல் valam ceyyum,வலம் செய்யும் - (நமக்கு) நன்மையையே செய்தருளாநின்ற ayan,ஆயன் - கோபால கிருஷ்ணனான mayavan,மாயவன் - மாயவனுடைய koyil,கோயில் - கோயிலாகி vanor valam ceyyum,வானோர் வலம் செய்யும் - நித்ய ஸூரிகளும் வந்து பிரதக்ஷிணம் செய்யுமிடமான maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலை விஷயத்தில் valam ceytu,வலம் செய்து - பிரதக்ஷிணம் முதலிய அநுகூல வ்ருத்திகளைச்செய்து nalum,நாளும் - நாடோறும் maruvutal,மருவுதல் - பொருந்தியிருப்பது valakku,வழக்கு - யுக்தம் |
| 2894 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலையைத் தொழவேணுமென்கிற திண்ணிய அத்யவஸாயங் கொள்ளு மத்தனையே போதுமென்கிறார்.) 9 | வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில் மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9 | cutu,சூது - சிறந்த வுபாயம் val vinai,வல் வினை - கொடிய பாவங்களிலே mulkatu,மூழ்காது - அழுந்தாமல் valakkena ninaimin,வழக்கென நினைமின் - (இவ்வுபதேசத்தை) நியாயமென்று கொள்ளுங்கள்; alam koti,அழம் கொடி - பேய்ச்சியாகிற pennai,பெண்ணை - பூதனையை attan,அட்டான் - முடித்தருளின பெருமான் amar,அமர் - எழுந்தருளியிருக்கிற peru koyil,பெரு கோயில் - பெரிய ஸந்நிதியாய் mala kaliru inam cer,மழ களிறு இனம் சேர் - இளமைதங்கிய யானைக் கூட்டங்கள் சேருகிற maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையை tola karutuvatu,தொழ கருதுவது - வணங்க வேணுமென்று எண்ணுவதில் tunivate,துணிவதே - திடமான அத்யவஸாயங் கொள்வதே |
| 2895 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –பல படிகளாலும் திருமலையே பரம ப்ராப்யம் என்று உபக்ரமித்த படியே உபசம்ஹரிக்கிறார்) 10 | சூதென்று களவும் சூதும் செய்யாதே வேத முன் விரித்தான் விரும்பிய கோயில் மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10 | cutu enru,சூது என்று - உபாயமென்றெண்ணி kalavum,களவும் - களவையும் cutum,சூதும் - சூதையும் ceyyate,செய்யாதே - செய்ய நினைக்காமல் mun,முன் - முற்காலத்தில் vetam,வேதம் - வேதங்களை virittan,விரித்தான் - (கீதை முதலியவற்றால்) விவரித்தருளின பெருமான் virumpiyakovil,விரும்பியகோவில் - விரும்பி யெழுந்தருளி யிருக்குமிடமான கோயிலாய் matu uru mayil cer,மாது உறு மயில் சேர் - பேடையோடு கூடின ஆண் மயில்கள் சேர்ந்து வாழப்பெற்ற maliruncolai,மாலிருஞ்சோலை - மாலிருஞ்சோலை யென்கிற potu avil malai,போது அவிழ் மலை - புஷ்பங்கள் விகஸிக்கிற திருமலையில் pukuvate,புகுவதே - சென்று சேர்வதே porul,பொருள் - புருஷார்த்தம் |
| 2896 | திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றாரை திரு வாய் மொழி தானே ஜென்மத்தை முடித்து அழகர் திருவடிகளில் சேர்க்கும் என்கிறார் ) 11 | பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11 | porul enru,பொருள் என்று - (ஒருநாளாகிலும்) பிரயோஜனப்படுமென்று i ulakam,இ உலகம் - இவ்வுலகங்களை pataittavan,படைத்தவன் - ஸ்ருஷ்டித்த பெருமானுடைய pukal mel,புகழ் மேல் - திருக்கல்யாண குணங்களில் marul il,மருள் இல் - அஜ்ஞான மில்லாத van kurukur van catakopan,வண் குருகூர் வண் சடகோபன் - வண் குருகூர் வண் சடகோபன் terul kolla,தெருள் கொள்ள - (சேதநர்க்குத்) தெளிந்த ஞானமுண்டாகுமாறு conna,சொன்ன - அருளிச் செய்த or ayirattul,ஓர் ஆயிரத்துள் - ஆயிரம் பாசுரங்களுள் ippattu,இப்பத்து - இப்பதிகம் mutittu,முடித்து - ஸம்ஸார பந்தத்தைப் போக்கி arul utaiyavan tal,அருள் உடையவன் தாள் - பரமதயாளுவான எம்பெருமானது திருவடிகளில் anaivikkum,அணைவிக்கும் - சேர்விக்கும் |
| 2919 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 1 | ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் தெழி குரல் அருவித் திருவேங் கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1 | தெழி குரல் அருவி, Thezhi kural aruvi - கம்பீரமான ஓசையையுடைய அருவிகள் பொருந்தின திருவேங்கடத்து, Thiruvengadathu - திருவேங்கடமலையில் எழில் கொள், Ezhil kol - நிறம்பெற்ற எந்தை தந்தை தந்தைக்கு, Endhai thandhai thandhaikku - எமது குலநாதனான பெருமானுக்கு, நாம், Naam - அடியோம் ஒழிவு இல், Ozhivu il - ஓய்வில்லாத காலம் எல்லாம், Kaalam ellaam - காலம் முழுவதும் உடன் ஆய், Udan aay - கூடவே யிருந்து மன்னி, Manni - ஸகல அவஸ்தைகளிலும் பிரியாது நின்று வழு இலா, Valu ila - குற்றமற்ற அடிமை, Adimai - கைங்கரியங்களை செய்ய வேண்டும், Seyya vendum - பண்ணக்கடவோம். |
| 2920 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 2 | எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2 | வானவர், Vaanavar - நித்யஸூரிகள் வானவர் கோனொடும், Vaanavar koanodum - தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட சிந்து, Sindhu - தூவின பூ, Poo - புஷ்பங்கள் மகிழும், Magilum - செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில் அந்தம் இல் புகழ், Antham il pugazh - முடிவில்லாத புகழையுடையவனும் கார் எழில், Kaar ezil - நீலநிறத்தழகுடையனுமான அண்ணல், Annal - எம்பெருமான் எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை, Endhai thandhai thandhai thandhaikkum mundhai - எம்குலநாதன் |
| 2921 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 3 | அண்ணல் மாயன் அணிகொள் செந் தாமரைக் கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம் தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே. –3-3-3 | அணிக்கொள், Anikkol - அழகுபொருந்திய செம் தாமரை கண்ணன், Sem thamarai kannan - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும் செம் கனிவாய், Sem kanivai - சிவந்த கனிபோன்ற அதரத்தையுடையவனும் கருமாணிக்கம், Karumaanikkam - நீலரத்னம்போல் திருமேனி விளக்கத்தை யுடையவனும் தென் நிறை சுனை நீர், Then nirai sunai neer - தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில் எண் இல் தொல் புகழ், Enum il thol pugazh - எண்ணிறந்த நித்திய கல்யாண குணங்களையுடையவனும் வானவர் ஈசன், Vaanavar Eesan - நித்யஸூரிகட்குத் தலைவனுமான எம்பெருமான் அண்ணல், Annal - நமக்கு ஸ்வாமியும் மாயன், Maayan - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனுமானவன் |
| 2922 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 4 | ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திரு வேங்கடத் தானுக்கு? நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4 | வானவர்க்கு, Vaanavarkku - நித்யஸூரிகளுக்கு ஈசன், Eesan - தலைவன் என்பன், Enban - என்று சொல்லுவேன் என்றால், Endraal - இப்படிச் சொன்னால் நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் எண் கண், Neesanen niraivu ondrum ilen en kan - கடைகெட்டவனும் குணபூர்த்தியற்றவனுமான என் விஷயத்தில் பாசம் வைத்த, Paasam vaitha - ஆசாபாசத்தை வைத்தருளினின்ற பரம் சுடர்சோதிக்கு, Param sudarsothikku - நிரவதிக ஜ்யோதிர்மய தின் மங்கள விக்ரஹயுக்தனான திருவேங்கடத்தானுக்கு, Thiruvengadathaanukku - திருவேங்கட முடையானுக்கு அது தேசமோ, Athu dhesamo - நான் சொன்னது ஒரு பெருமையோ? |
| 2923 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 5 | சோதி ஆகி,எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ, வேதியர் முழு வேதத்து அமுதத்தைத் தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5 | வேதியர் முழு வேதத்து அமுதத்தை , Vethiyar muzhu vedathu amudhathai - வைதிகர்களால் ஓதப்படுகிற ஸகல வேதங்களிலும் பரம போக்யனாக ப்ரதிபாதிக்கப்படுபவனும் தீது இல் சீர் , Theethu il seer - தீது ஒன்றுமில்லாத திருக்குணங்களை யுடையனுமான திருவேங்கடத்தானை , Thiruvengadathaannai - திருமலையப்பனைக் குறித்து சோதி ஆகி , Sothi aagi - சோதிமயமான திருமேனியையுடையனாய் ஆதி , Aadhi - ஸகலஜகத்காரணபூதனான (எல்லா உலகும் தொழும் உலகத்தவர்களெல்லாராலும் தொழப்படுபவனாய்) மூர்த்தி , Moorthi - ஸர்வேச்வரன் (இவன்) என்றால் , Endraal - என்று நான் சொன்னால் (அது) அளவு ஆகுமோ , Alavu aagumo - ஒரு பெருமை யாகுமோ? |
| 2924 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 6 | வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார், வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6 | வேங்கடத்து , Vengadathu - திருமலையிலே உறைவார்க்கு , Uraivaarkku - நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு நம எனல் ஆம் கடமை அது , Nama enal aam kadamai adhu - நமர் என்று சொல்லுவதாகிற அந்தக் கடமையை சுமந்தார்கட்கு , Sumanthaarkku - வஹிக்கின்றவர்களுக்கு கடங்கள் , Kadangal - அனுபவித்தே தீர்க்கவேண்டிய (பூர்க்ருத) பாபங்களும் மேல்வினை , Melvinai - (ப்ரக்ருதிவாஸநையாலே) இனி விளையக்கூடிய பாவங்களம் (ஆகிய) முற்றவும் , Mutravum - ஸகலபாபங்களும் வேம் , Vem - வெந்துபோயினவென்னும் அழிந்து விடும்: (இப்படி பாவங்கள் தொலையலே) தங்கட்கு நல்லனாவே , Thangatku nallanaave - தாங்கள் அடியவர்களான தாங்கள் ; தங்கள் ஸ்வரூபத்திற்குத் தகுதியானவற்றையே (ஸகங்கரியங்களையே) செய்வார் , Seivaar - செய்யப் பெறுவர்கள். |
| 2925 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 7 | சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு. அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேங்கடம் நங்கட்குச் சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே.–3-3-7 | மா , Maa - சிறந்த மலர் , Malar - புஷ்பங்களையும் நீர் , Neer - தீர்த்தத்தையும் சுடர் , Sudar - தீபத்தையும் தூபம் , Thoobam - தூபத்தையும் சுமந்துகொண்டு , Sumandhukondu - ஏந்திக்கொண்டு வானவர் , Vaanavar - தேவர்கள் வானவர் கோ னொடும் , Vaanavar konodum - தங்கள் தலைவனோடுகூட அமர்ந்து நமன்று , Amarndu namandru - அநந்யப்ரயோஜநராய் வணங்கி எழும் , Ezhum - உஜ்ஜீவிக்குமிடமான திருவேங்கடம் , Thiruvengadam - திருவேங்கடமென்கிற தடம் குன்றமே பெரிய திருமலையே நங்கட்கு , Nangatku - நமக்கு சமன் கொள் வீடு , Saman kol veedu - பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை தரும் , Tharum - அளிக்கும். |
| 2926 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 8 | குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன் சென்று சேர் திரு வேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.–3-3-8 | குன்றம் ஏந்தி , Kundram endhi - (கோவர்த்தன) மலையைக் குடையாகத் தாங்கிநின்று குளிர் மழை , Kulir mazhai - குளிர்ந்தபெருமழையை காத்தவன் , Kaathavan - தடுத்தவனும் அன்று , Andru - முன்பொரு காலத்தில் ஞாலம் அளந்த பிரான் , Nyaalam alandha piran - உலகங்களையளந்த பிரபுவுமாகிய பரன் , Paran - எம்பெருமான் சென்று சேர் , Sendru ser - வந்து சேர்ந்தவிடமான திருவேங்கட மாமலை ஒன்றமே , Thiruvengata maamalai ondrame - திருமலையொன்றை மாத்திரமே தொழ , Thozha - தொழப்பெறில் நம் வினை , Nam vinai - நமது வினைகள் யாவும் ஓயும் , Ooyum - தொலைந்திடும். |
| 2927 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 9 | ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள்மலராம் அடித் தாமரை வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9 | திருவேங்கடத்து ஆயன் தாமரை நாள் மலர் ஆம் , Thiruvengadathu Aayan Thamarai Naal Malar Aam - திருமலையில் வாழ்கிற ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதலர்ந்த செந்தாமரைப்பூப்போன்ற ஓயும் மூப்பு , Ooyum Moopu - ஓய்வை விளைவிக்கின்ற கிழந்தனமென்ன பிறப்பு , Pirappu - பிறவியென்ன இறப்பு , Irappu - மரணமென்ன அடி , Adi - திருவடிகளை வாய் உள்ளும் , Vaai ullum - வாக்கினுள்ளும் மனத்துள்ளும் , Manathullum - நெஞ்சினுள்ளும் வைப்பார்கட்கு , Vaipparkatku - வைத்துக் கொள்பவர்களுக்கு பிணி , Pini - வியாதியென்ன (ஆகிய இவை) வீயும் ஆறு , Veeyum aaru - தொலையும் வகை செய்வான் , Seyvaan - செய்தருள்வன். |
| 2928 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 10 | வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று, எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10 | வைத்த, vaitha - (பாகவதர்களே!) (உங்களுக்குச்) சங்கற்பித்துவைத்த நாள், naal - ஆயுட்காலத்தினுடைய வரை, varai - அளவான எல்லை, ellai - எல்லையானது குறுகி, kurugi - அணுகி எய்த்து இளைப்பதன் முன்னம், eithu ilaipathan munnam - (அதனால் நீங்கள்) மிகவும் தளர்ச்சியடைவதற்கு முன்னே சென்று, sendru - (திருமலையை நோக்கிச் சென்று) பைத்த பாம்பு அணையான், paitha paambu anaiyaan - படமெடுத்த ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்ட பெருமானது திருவேங்கடம், thiruvengadam - (அத்) திருமலையில் மொய்த்த சோலை , Moitha solai - நெருங்கின சோலைகளும் மொய் பூ தடம் , Moi poo Thadam - நெருங்கின புஷ்கரிணிகளுமுள்ள தாழ்வர் , Thaazhvar - திருத்தாழ்வரையை அடைமின் , Adaimin - அடையுங்கள் |
| 2929 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 11 | தாள் பரப்பி மண் தாவிய ஈசனை, நீள் பொழில் குரு கூர்ச் சட கோபன் சொல், கேழில் ஆயிரத்திப் பத்தும் வல்லவர், வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.–3-3-11 | தாள் பரப்பி, thaal parappi - திருவடியை விரித்து மண் தாவிய, man thaaviya - பூமியெல்லாம் அளந்து கொண்ட ஈசனை, eesanai - எம்பெருமானைக் குறித்து நீள் பொழில், neel pozhil - உயர்ந்த சோலைகளையுடைய குருகூர் சடகோபன், kurugoor sadagopan - ஆழ்வார் சொல், sol - அருளிச்செய்த கேழ் இல், kezh il - ஒப்பற்றதான ஆயிரத்து, aayirathu - ஆயிரத்தில் இப் பத்தும், ip pathum - இத்திருவாய்மொழியை வல்லவர், vallavar - ஓதவல்லவர்கள் ஞாலம் புகழ, nyaalam pugazha - உலகம் யாவும் கொண்டாடும் படி வாழ்வு எய்தி, vaazhvu eidhi - வாழ்ச்சிபெற்று வாழ்வர், vaazhvar - (அந்த வாழ்ச்சி ஒருநாளும் குன்றாமே) விளங்குவர். |
| 3106 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 1 | ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள் நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1 | தேவும், thevum - தேவர்களும் உலகும், ulagum - அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும் உயிரும், uyirum - மனிதர் முதலிய பிராணிகளும் மற்றும் யாதும், matrum yaadhum - மற்றுமுள்ள எல்லாமும் ஒன்றும் இல்லா அன்று, ondrum illa andru - சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே நான்முகன் தன்னொடு, naanmugan thannodu - பிரமனையும் தேவர், thevar - தேவதைகளையும் உலகு, ulagu - உலகங்களையும் உயிர், uyir - பிராணிகளையும் படைத்தான், padaithaan - படைத்தவனும் நின்ற, nindra - சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான ஆதி பிரான், aadhi piraan - ஆதிநாதனென்றும் எம்பெருமான் குன்றம் போல் மணிமாடம் நீடு, kunram pol manimaadam needu - மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்திருக்கப்பெற்ற திருகுருகூர் அதனுள், thirugurukoor adhanul - திருநகரியிலே நிற்க, nirka - காட்சிதந்து கொண்டிருக்கும் போது மற்றைதெய்வம், matraidheivam - வேறுதெய்வங்களை நாடுதிர் ஏ, naaduthir ae - தேடியோடுகின்றீர்களே. |
| 3107 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 2 | நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில், மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப் பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2 | பல் உலகீர், pal ulageer - பலவகைப்பட்ட உலகர்களே! நீர், neer - நீங்கள் நாடி, naadi - தேடி வணங்கும், vanangum - வணங்கும்படியாகவுள்ள உம்மையும், ummaiyum - உங்களையும் முன் படைத்தான், mun padaithaan - முன்னம் படைத்தவனும் வீடு இல் சீர், veedu il seer - நித்யஸித்தங்களான திருக்குணங்களிலுண்டான புகழ், pugazh - புகழையுடையனுமான ஆதி பிரான் அவன் மேவி உறைகோயில், aadhi piraan avan mevi uraikoyil - ஆதிநாதன் விரும்பி யெழுந்தருளியிருக்குமிடமான மாடம் மாளிகை சூழ்ந்து அழகு ஆய திரு குருகூர் அதனை, maadam maaligai soozhndhu azhagu aaya thiru kurukoor adhanai - மாடமாளிகைகளால் சூழப்பட்டு அழகு வாய்ந்த திருநகரியை பாடி ஆடி, paadi aadi - பாடுதலும் ஆடுதலும் செய்து கொண்டு பரவி, paravi - துதித்து பரந்து செல்மின்கள், parandhu selminkal - எல்லாவிடத்திலும் பரவி நடவுங்கள். |
| 3108 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 3 | பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக் கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர் சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள் பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3 | பரந்த, parandha - விஸ்தீர்ணமான தெய்வமும், dheivamum - தேவதாவர்க்கங்களையும் பல் உலகம், pal ulagam - (அவர்களுக்குப்) பல உலகங்களையும் படைத்து, padaithu - ஸ்ருஷ்டித்தும் அன்று, andru - பிரளயம் வந்த காலத்திலே எல்லாவற்றையும் ஒரு சேர விழுங்கி கரந்து, karandhu - உள்ளே யொளித்து வைத்தும் உமிழ்ந்து, umizhndhu - பிறகு வெளிப்படுத்தியும் கடந்து, kadanthu - (மஹாபலிடத்தில் தானம் பெற்று) அளந்து கொண்டும் இடந்தது, idandhadhu - (மஹாவராஹமாய்) இடந்தெடுத்தும் ஆக இப்படிச்செய்த காரியங்களை கண்டும், kandum - பிரமாணங்களாலே கண்டறிந்து வைத்தும் தெளிய கில்லீர், theliya killeer - தெளியமாட்டாத பல் உலகீர், pal ulageer - பலவகைபட்ட உலகத்தவர்களே! அமரர், amarar - தேவர்கள் சிரங்களால் வணங்கும், sirangalaal vanangum - தலையால் வணங்கப் பெற்ற திருகுருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற பரன், paran - பரம புருஷனுக்கு திறம் அன்றி, thiram andri - பிரகாரமாயல்லது மற்று, matru - வேறு ஸ்வதந்திரமாயிருப்பதொரு தெய்வம் இல்லை, dheivam illai - தேவதை கிடையாது பேசுமின், pesumin - அப்படிப்பட்ட தேவதையொன்று உண்டாகில் சொல்லுங்கள். |
| 3109 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 4 | பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின் தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள் ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4 | பேசநின்ற, pesanindra - உங்களால் பரதெய்வமாகப் பேசப்படுகின்ற சிவனுக்கும், sivanukkum - ருத்ரனுக்கும் பிரமன் தனக்கும், Biraman thanakkum - (அவனது தந்தையான) பிரமனுக்கும் பிறர்க்கும், pirarkkum - மற்றுமுள்ள தேவதைகளுக்கும் நாயகன் அவனே, naayagan avane - தலைவன் ஸ்ரீமந்நாராயணனே என்னுமிடத்தை கபாலம் நல் மோக்கக்து, kabalam nal mokkakthu - கபாலமோக்ஷக்கதையினால் கண்டுகொண்மின், kandu konmin - தெரிந்துகொள்ளுங்கள் தேசம், dhesam - தேஜஸ்ஸுபொருந்திய மா, maa - சிறந்த மதிள் சூழ்ந்து, madhil soozhndhu - மதில்களால் சூழப்பட்டு அழகு ஆய, azhagu aaya - அழகு பெற்றதான திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற ஈசன் பால், eesan paal - ஸர்வேச்வரன் விஷயத்திலே ஓர் அவம் பறைதல், or avam paraidhal - தப்பான பேச்சுக்களைப் பேசுவது இலிங்கியர்க்கு, ilingiyarkku - லிங்கப்பிரமாண வாதிகளுக்கு என் ஆவது, en aavathu - என்னபலனைத்தரும்! |
| 3110 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 5 | இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான் மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5 | இலிங்கத்து இட்ட புராணத்தீரும், ilingathu itta puranatheerum - லிங்கமாஹாத்மிய விஷயமாகக் கல்பிக்கப்பட்ட புராணத்தைப் பற்றினவர்களாயும் சமணரும், samanarum - ஜைநர்களாயும் சாக்கியரும், saakiyarum - பௌநர்களாயும் வலிந்து வாது, valindhu vaadhu - விதண்டாவாதம் செய்பவர்களாயுமிருக்கிற நீங்களாகவும் மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான், matrum num dheivamum aaginindraan - தேவதாந்தரங்களாகவும் (இப்படி ஸர்வசரீரகனான) பொலிந்து நின்ற பிரான், polindhu nindra piran - பொலிந்து நின்ற பிரானென்கிற எம்பெருமானை, செந்நெல், sennel - செந்நெற்பயிர்களானவை மலிந்து, malindhu - ஸம்ருத்திபெற்று கவிரி வீசும், kaviri veesum - சாமரை வீசப்பெற்ற திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே கண்டீர், kandeer - ஸேவியுங்கோள் ஒன்றும், ondrum - எள்ளளவும் பொய் இல்லை, poi illai - அஸத்யமில்லை, போற்றுமின், potrumin - துதியுங்கோள் |
| 3111 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 6 | போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே; சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள் ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6 | மற்று ஓர் தெய்வம், matru or dheivam - வேறோரு தேவதையை போற்றி பேண, potri pena - துதிக்கு ஆதரிக்கும்படியாக புறத்து இட்டு, purathu ittu - வேறுபடுத்தி உம்மை, ummai - உங்களை இன்னே, inne - இப்போதுநீங்களிருக்கிற விதமாக தேற்றி வைத்தது, thettri vaithadhu - தேவதாந்தரங்களை நம்பும்படியாக (எம்பெருமான்) செய்து வைத்ததானது எல்லீரும், elleerum - எல்லாரும் (எதற்காகவென்றால்) வீடு பெற்றால், veedu petraal - முக்தியுடைந்தால் உலகு இல்லை என்றே, ulagu illai endrae - புண்யபாண விஷயமான சாஸ்த்ர மரியாதை குலைந்துபோகுமென்கிற காரணத்தாலேயாகும்; சேற்றில், setril - சேற்றுநிலத்தில் செந்நெல், sennel - செந்நெற்பயிர்களும் கமலம், kamalam - தாமரையும் ஓங்கி, oongi - ஓங்கி வளரப்பெற்ற திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற ஆற்றல் வல்லவன், aatral vallavan - பரமசக்தியுக்தனான பெருமானுடைய மாயம் கண்டீர், maayam kandeer - மாயையேயாமத்தனை; அது, Adhu - மாயையென்பதை அறிந்து, arindhu - தெரிந்துகொண்டு அறிந்து, arindhu - அது தப்பும் வழி அவன் திருவடிகளைப்பற்றுவதே’ என்றும் தெரிந்துகொண்டு ஓடுமின, oodumin - திருவடியே சென்று சேரப் பாருங்கள். |
| 3112 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 7 | ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்; கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள் ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7 | ஏத்த நின்ற, eatha nindra - துதிக்கும்படி நின்ற திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற ஆடு புள்கொடி ஆதி மூர்த்திக்கு, aadu pulkodi aadhi moorthikku - ஆடுங்கருளக்கொடியுடைய ஆதிநாதப் பெருமாளுக்கு அடிமை புகுவது, adimai puguvadhu - அடியராயிருந்த தகுதி ஓடி ஓடி, oodi oodi - ஸம்ஸார சக்ரத்தில் ஓடியோடி பலபிறப்பும் பிறந்து, palapirappum pirandhu - பலபல யோனிகளிலே பிறந்து பல் படி கால், pal padi kaal - வம்ச பரம்பரையாக மற்று ஓர் தெய்வம் வழி ஏறி, mattru or dheivam vazhi eri - தேவதாந்தரங்களை அந்தந்த நூல்களிலே சொல்லியிருக்கிறபடி பாடி ஆடி பணிந்து, paadi aadi panindhu - பலபடியாக வழிபட்டு கண்டீர், kandeer - பலன் கைபுகுந்தமை கண்டீர்களே; வானவர், vaanavar - தேவர்கள் கூடி, koodi - திரண்டு |
| 3113 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 8 | புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே; கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள் மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8 | அடிமையினால், adimaiyinaal - அடிமைசெய்து புக்கு, pukku - உள்புகுந்து தன்னை கண்ட, thannai kanda - தன்னைக்காணப்பெற்ற மார்க்கண்டேயனவனை, markkandeyanavannai - மார்க்கண்டேயனென்று ப்ரஸித்த னானவனை அன்று, andru - அக்காலத்தில் நக்கபிரான், nakkapiraan - திகம்பரச்சாமியான ருத்ரன் உய்யக்கொண்டதும், uyyakkondadhum - ரகூஷித்ததும் நாராயணன் அருளே, naarayanan arule - நாராயணனுடைய வெண்ணிறமாக அலர்கின்ற தட தாழை, thada thaazhai - பெரியதாழைகளை வேலி, veli - வேலியாகவுடைய திருகுருகூர் அதனுள், thirukurukoor adhanul - திருநகரியிலே மிக்க, mikka - மேம்பாடுடைய ஆதி பிரான் நிற்க, aadhi piraan nirka - ஆதிநாதப்பெருமாளிருக்க மற்ற எ தெய்வம், matra e dheivam - வேறு எந்த தேவதைகளை விளம்புதிர், vilambuthir - பேசுகிறீர்கள்? |
| 3114 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 9 | விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால் அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9 | விளம்பும், vilambum - கண்டபடி சொல்லுவது தவிரப் பொருட்பொருத்தம் சிறிதுமில்லாதவைகளான ஆறு சமயமும், aaru samayamum - ஆறுவகைப்பட்ட பாஹ்ய மதங்களும் அவை ஆகிய, avai aagiya - அந்த பாஹ்யமதங்கட்குப் பரியாயமான மற்றும், matrum - குத்ருஷ்டி மதங்களும் தன் பால், than paal - தன் விஷயத்திலே அளந்து காண்டற்கு அரியன் ஆகிய, alandhu kaandaṟku ariyan aagiya - எல்லை காணவொண்ணாதனாயிருக்கிற ஆதி பிரான், aadhi piraan - ஸகலஜகத காரணபூதனான ஸர்வேச்வரன் அழகும், azhagum - நித்யவாஸம் பண்ணுமிடமாய் வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய, valam kol than panai soozhnthu azhagu aaya - வளம் மிக்க குளிர்ந்த நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான திருகுருகூர் அதனை, thirukurukoor adhanai - திருநகரியை உம்மை, ummai - உங்களை உய்யக் கொண்டு போகுறில், uyya kondu pokuril - உஜ்ஜிவிப்பித்துக்கொண்டு நடக்க வேண்டியிருந்தீர்களாகில் உளம் கொள் ஞானத்து, uḷam kol nyaanathu - அந்தரங்க ஞானத்துக்குள்ளே வைம்மின், vaimmin - வைத்துச் சிந்தனை செய்யுங்கள். |
| 3115 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 10 | உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள் குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10 | எத்தேவும், Ethevum - எல்லாத் தேவதைகளும் எ உலகங்களும், E ulagangalum - எல்லாவுலகங்களும் மற்றும், Matrum - மற்றுமுண்டான சேதநர தேசனங்களுமாகிய இத்தனையும், Ithanaiyum - இவையடங்கலும் தன் பால், Than paal - தன்னுடையதான மறு இல் மூர்த்தியோடு ஒத்து, maru il Moorthiyodu othu - நிஷ்கலங்கமான அஸாதாரண விக்ரஹம்போன்று (ஸகல விதத்தாலும் விதேயங்களாகியென்றபடி) நின்ற வண்ணம் நிற்க, Nindra vannam nirka - குறையற நிற்குமிருப்பிலே செறுவில், Seruvil - விளை நிலங்களில் செந்நெல், Sennel - செந்நெற்பயிர்களும் கரும்பொடு, Karumpodu - கருப்பஞ்சோலைகளும் ஓங்கு, Oongu - வளரும்படியான திருகுருகூர் அதனுள், Thirukurukoor adhanul - திருநகரியிலே குறிய மாண் உரு ஆகிய, Kuriya maan uru aagiya - வாமநப்ரஹ்மசாரி வேஷமெடுத்தவனும் நீள் குடக் கூத்தனுக்கு, Neel kuda koothanukku - (க்ருஷடணனாய்ப்) பெரிய குடக் கூத்தாடினவனுமான பெருமானுக்கு ஆள் செய்வதே உறுவதாவது, Aal seivadhe uruvathavadhu - அடிமை செய்வதே உற்றதாம் |
| 3116 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 11 | ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான், நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11 | ஆள் செய்து, Aal seidhu - (உபதேச முகத்தாலே ஸம்ஸாரிகளைத் திருத்திப்பணிகொள்ளுகையாகிற) கைங்கரியத்தைப் பண்ணி ஆழி பிரானை சேர்ந்தவன், Aazhi piraanai serndhavan - ஆழியங்கையனான பெருமானை அடைந்தவரும் வண் குருகூர் நகரான், Van Kurukoor nagaraan - திருநகரிக்குத் தலைவரும் நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன், Naal kamazh magizh maalai maarbinan - பரிமளம் மாறாதமாலையைத் திருமார்பிலே அணிந்தவருமான மாறன் சடகோபன், Maaran Sadagopan - ஆழ்வார் வேட்கையால், Vetkaiyaal - ஆதரத்தோடு சொன்ன பாடல் ஆயிரத்துள், Sonna paadal aayirathul - ஆயிரம்பாட்டினுள்ளே இ பத்தும், I pathum - இப்பதிகத்தை வல்லார், Vallar - ஓதவல்லவர்களுக்கு மீட்சி இன்றி, Meetchi indri - மீண்டும் திரும்பிதலில்லாத வைகுந்தம் மாநகர் மற்றது, Vaigundham maanagar mattrathu - ஸ்ரீ வைகுண்டமஹாநகரமாகிய அவ்விடம் கையது, Kaiyadhu - கரஸ்தம். |
| 3194 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 1 | ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே! சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1 | ஆரா அமுதே,ara amuthe - எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தியிறவாத அமுதமாகிய எம்மானே,emmane - எம்பெருமானே! அடியேன் உடலம்,adiyen udalam - என்னுடைய சரீரமானது நின்பால்,ninpaal - உன் திறத்தில் அன்பு ஆய் ஏ,anbu aay e - அன்புதானே வடிவெடுத்ததாகி நீர் ஆய் அலைந்து,neer aay alainthu - நீர்ப்பண்டமாக உருகி வியாகுலப்பட்டு கரைய,karaiya - கரையும்படியாக உருக்குகின்ற நெடுமாலே,urukkukindra netumale - உருகப்பண்ணாநிற்கிற ஸர்வேச்வரனே! சீர் ஆர் செந்நெல்,seer ar sennel - சீர்மைமிக்க செந்நெற்பயிர்கள் சவரி வீசும்,savari veesum - சாமரம்போல் வீசப்பெற்று செழுநீர்,sezhuneer - செழுமைதங்கிய தீர்த்தங்களையுடைத்தான திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே ஏர் ஆர் கோலம் திகழ,er ar kolam thigazha - அழகு பொருந்திய திருமேனி விளங்க கிடந்தாய்,kitandhai - சாய்ந்தருளினாய் (அவ்வழகை) கண்டேன்,kanden - ஸேவிக்கப் பெற்றேன் |
| 3195 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 2 | எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே! செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2 | எம்மானே,emmane - எல்லாவிதத்திலும் மஹானானவனே! என் வெள்ளை மூர்த்தி,en vellai moorthi - என்னை ஈடுபடுத்திக்கொண்ட பரிசுத்த ஸ்வரூபனே! என்னை ஆள்வானே,ennai aalvane - என்னை அடிமை கொள்பவனே! வேண்டும் ஆற்றால்,vendum aatral - திருவுள்ளமானபடியே எம் மா உருவும் ஆவாய்,em ma uruvum aavay - எப்படிப்ப்ட அவதார விக்ரஹங்களையும் பரிக்ரஹிப்பவனே! மா செம் கமலம்,ma sem kamalam - பெரிய செந்தாமரைகள் செழுநீர் மிசை,cezhuneer misai - அழகிய நீரினிடத்து கண்,kan - கண்டவிடமெங்கும் மலரும்,malarum - மலரப்பெற்ற திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே அ மா மலர்,a ma malar - அப்படிப்பட்ட சிந்த மலர்போன்ற திருக்கண்கள் துயில்பவனே! தான் என் செய்கேன்,than en seykayn - நான் என்ன பண்ணுலேன்! (இவ்வழகு கண்டு என்னால் தரிக்கப்போகிறதில்லையே’ |
| 3196 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 3 | என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள் செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3 | நான் என் செய்கேன்,naan en seykayn - அடியேன் என்ன செய்வேன்! களைகண் யாரே,kalai kan yaare - ரக்ஷகராவார் யாவர்! என்னை என் செய்கின்றாய்,ennai en seykinraay - என்னை என்ன செய்வதாக இருக்கிறாய்? உன்னால் அல்லால்,unnal allaal - உன்னைத் தவிர்த்து யாவராலும்,yaavaraalum - வேறு ஒருவிதமான உபாயத்தாலும் குறை ஒன்றும் வேண்டேன்,kurai onrum venden - சிறிதும் அபேக்ஷையடையேனல்லேன் கன் ஆர் மதில் சூழ் குடந்தை கிடந்தாய்,kan ar madil soozh kudandhai kitandhay - வேலைப்பாடு பொருந்திய மதிள்சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே! அடியேன்,adiyen - அடியேனுடைய அரு,aru - ஆத்மாவானது வாழ்நாள்,vaalnaal - வாழும் காலத்தில் செல் நாள் எ நாள்,sel naal e naal - கழிகின்ற நாள்கள் எத்தனைநாளோ அ நான்,a naan - அந்த நாள்களெல்லாம் உன் தாய் பிடித்தே,un thay pitithey - உனது திருவடிகளைப் பற்றிக்கொண்டே செல,cel - நடக்கும்படி காண்,kaan - நடாக்ஷித்தருளவேணும். |
| 3197 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 4 | செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்! உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி! நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான் அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4 | செல காண்கிற்பார்,cel kaankirpar - மேலே மேலே காணவல்லவர்கள் காணும் அளவும்,kaanum alavum - எவ்வளவு காண்பர்பளோ அவ்வளவும் செல்லும் கீர்த்தியாய்,cellum keertiyay - வளர்ந்துசெல்கின்ற திருக்குணங்களையுடையவனே! கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே! நான் உன்னை காண்பான் அலப்பு ஆய்,naan unnai kaanpaan alappu aay - என் உன்னைக்காண வேண்டி அமைந்து உலப்பு இலானே,ulappu ilaane - அந்தத் திருக்குணங்கட்கு முடிவு இல்லாதவனே! எல்லா உலகும் உடைய,ella ulagum udaiya - எல்லாவுலகங்களுக்கும் ஸ்வாமியான ஒரு மூர்த்தி,oru moorthi - ஒப்பற்ற தலைவனே! நலத்தால் மிக்கார் குடந்தை,nalathaal mikkar kudandai - பக்திமிகுந்தவர்கள் வாழ்கின்ற திருக்குடந்தையிலே ஆகாசத்தை நோக்கி,aakaasathai nokki - (நீ வருதற்குரிய) வானத்தைப்பார்த்து அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவதும் தொழுவதும் செய்யாநின்றேன். |
| 3198 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 5 | அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன் தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா! தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5 | செழு ஒண் பழனம்,sezu on palanam - செழுமைதங்கிய நீர்நிலங்களையுடைய குடந்தை கிடந்தாய்,kudandai kitandhay - திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே! செம் தாமரை கண்ணா,sem thaamarai kannaa - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனே! அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவேன் தொழுவேன்; ஆடி காண் பன்,aadi kaan pan - கடனம் செய்து பார்ப்பேன்; பாடி அலற்றுவன்,Paadi alattruvan - வாயாரப்பாடிப் பிரலாபனம் செய்வேன்; தழு வல்வினையால்,thazhu valvinaiyaal - என்னைத் தழுவிக்கொண்டிருக்கிற வலிய பாவத்தினாலே பக்கம் நோக்கி,pakkam nokki - (எந்தப்பக்கமாக நீவருகிறாயோவென்று) பக்கந்தோறும் பார்த்து (எங்கும் வரக்காணாமையாலே) காணி கவிழ்ந்து இருப்பன் தொழுவனேனை,kaani kavilnthu iruppan thozhuvane'nai - வெட்கப்பட்டுத் தலைகவிழ்ந்திருப்பேன்; உன தாள் சேரும் வகையே,un thaal serum vakaiye - உன் திருவடியடையமாறு சூழ் கண்டாய்,soozh kandai - உபாயசிந்தை பண்ணவேணும். |
| 3199 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 6 | சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும் ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன் வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே! யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6 | வாழ் தொல் புகழார் குடந்தை,vaal thol pugazhaar kudandhai - விளங்குகின்ற அகாதியான புகழையுடையார் வர்த்திக்கிற திருக்குடந்தையிலே கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே! வானோர் கோமானே,vaanoor komaane - நித்யஸூரிகாதனே! யாழின் இசையே,yaazhin isaiye - வீணாகானம்போலே பரம் போக்யனானவனே! அமுதே,amuthe - அமிருதம் போன்றவனே! அறிவின் பயனே,arivin payane - அறிவுக்கும் பலனானவனே! அரி ஏறே,Ari ere - சிங்கமும் கஇடபமும் போன்று சிறந்தவனே! உன் அடி சேரும் ஊழ் கண்டு இருந்தே,un adi serum ooz kandu irunthe - நான் உனது திருவடிகளையடையும்படியான முறைமையைக் கண்டிருந்தும் தூரா குழி தூர்த்து,thura kuzhi thuruthu - ஒருநாளும் தூர்க்கவொண்ணாத இந்திரியக்குழிகளை நிறைத்துக்கொண்டு எனை நாள்,enai naal - எத்தனை காலம் அகன்று இருப்பன்,agandru iruppan - உன்னைவிட்டுப் பிரிந்திருப்பேன்! எளன் தொல்லை வினையை அறுத்து,elan tollai vinaiyai aruthu - (இப்படி அகன்றிருக்கைக்குக்காரணமான) எனது அநாதி பாபங்களைத் தொலைத்து சூழ் கண்டாய்,soozh kandai - என்னை ஸ்வீகரித்தருள வேணும். |
| 3200 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 7 | அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே! எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே! தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7 | அரி ஏறே,Ari ere - சிறந்த சிங்கமே! ஏன்,en - நான் அனுபவித்தற்குரிய அம் பொன் சுடரே,am pon sudare - அழகிய பொன்போன்ற ஒளியுருவனே! செம் கண் கரு முகிலே,sem kan karu mugile - சிவந்த கண்களையுடைய காளமேகம் போன்றவனே! எரி ஏய் பவளம் குன்றே,eri aye pavalam kunre - நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலைபோன்றவனே! நால் தோள் எந்தாய்,nal thol endhay - சதுர்ப்புஜ ஸ்வாமியே! உனது அருகே,unathu aruke - உனது கிருபையினாலர் என்னை பீரியா அடிமை கொண்டாய்,ennai peeriya adimai kondai - என்னை அத்தாணிச் சேவகங் கொண்டவனே! குடந்தை திருமாலே,kudandai thirumale - திருக்குடந்தையில் வாழும் திருமாலே! இனி தரியேன்,ini thariyane - இனிமேல் தரித்திருக்ககில்லேன்! உன் சரணம் தந்து,un sarannam thandu - உனது திருவடிகளைக் கொடுத்தருளி என் சன்மம் களையாய்,en sanmam kalaiyaay - எனது சரீரத்தொடர்பைத் தவிர்த்தருளவேணும். |
| 3201 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 8 | களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன் வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா! தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8 | வளைவாய் நேமிபடையாய்,valaivay nemipadaiyaay - வளைந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையவனே! குடந்தை கிடந்த,kudandai kitandha - திருக்குடந்தையிலே சயனித்தருள்கின்ற மா மாயா,ma maaya - மஹாச்சர்யரூபனே! துன்பம் களைவாய்,thunbam kalivaay - எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி களைமா தொழிவாய்,kalaimaa thozhivaay - களையாவிட்டாலும் சரி களைகண் மற்று இலேன்,kalaikan matru ilen - வேறு சரணமுடையேனல்லேன்; உடலும் தளரா,udalum thalarā - உடல் தளர்ந்து எனது ஆவி,enathu aavi - என் உயிரானது சரிந்து பொம் போது,sarindhu pom podhu - நிலைகுலைந்து உத்க்ரமணமடையும்போது இளையாது,ilaiyathu - மெலியாமல் உன் தான்,un thaan - உன் திருவடிகளையே ஒருங்க பிடிந்து போது,orungga pitinthu pothu - ஒருமிக்கப் பிடித்துப் போகும்படி நீயே இசை,neeye isai - நீயே திருவுள்ளம்பற்ற வேணும். |
| 3202 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 9 | இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே! அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி! திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9 | என்னை,ennai - நெடுநாள் விமுகனாயிருன்னத வென்னை இசைவித்து,isaivithu - அடிமைக்கு இசையும்படி செய்து உன் தாள் இணை கீழ்,un thaal inai keel - உனது உபயபாதங்களின் கீழே இருந்தும் அம்மானே,irundhum ammaane - தங்கும்படி செய்தருளின ஸ்வாமியே! அசைவு இல் அமரர் தலைவர்,asaivu il amarar thalaivar - நித்யஸூரிகளுக்குள் தலைவரான அநந்தகருடவிஷ்வக்ஸேனர்களுக்கும் தலைவா,thalaiva - முதல்வனே! ஆதி பெரு மூர்த்தி,aadhi peru moorthi - ஸகலஜகத்காரணபூசமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே! திசை வில் வீசும் செழுமா மனிகள் சேரும்,disai vil veesum sezuma maniḵaḷ cerum - எங்கம் ஒளிவீசுகின்ற மிகச்சிறந்த ரத்னங்கள் சேருமிடமான திரு குடந்தை,tiru kutantai - திக்குடந்தையிலே அசைவு இல்,asaivu il - ஓய்வில்லாதபடி (அவதாரம்) உலகம் பரவ,ulagam parava - உலகமெல்லாம் துதிக்கும் படி கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே! காண வாராய்,kaana vaaraay - நான்கண்டு அநுபவிக்கும்படி வரவேணும் |
| 3203 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 10 | வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்! ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்! தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10 | வாரா,vaara - திருவுருவத்தோடு வாராமல் அரு ஆய் வரும்,aru aay varum - அரூபியாய் உள்ளேவந்து தோன்றுகின்ற என் மாயா,en maaya - என் மாயவனே! மாயா மூர்த்தியார்,maaya moorthiyaar - ஒருநாளும் அழியாத திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவனே! ஆரா அமுது ஆய்,ara amuthu aay - எவ்வளவு அனுபவித்தாலும் திருப்திபிறவாத அமிருதமாய்க் கொண்டு அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,adiyen aavi agame tittipai - என் உள்ளுக்குள்ளே தித்தித்திருக்குமவனே! தீரா வினைகள் தீர,teera vingal teera - தொலையாத பாவங்களும் தொலையும்படியாக என்னை ஆண்டாய்,ennai aandaay - அடியேனை ஆண்டருளினவனே! திரு குடந்தை ஊரா,tiru kutantai oora - திருக்குடந்தைப்பதியோளே! அடியேன்,adiyen - அடியேன் உனக்கு ஆள்பட்டும்,unakku aalpattum - உனக்கு அடிமைப்பட்டும் இன்னம் உழல்வேனோ,innam uzhalveno - இன்னமும் கிலேப்படுவேனோ! |
| 3204 | திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 11 | உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11 | உழலை என் பின் பேய்ச்சி,uzhalai en pin peyschi - உழல்தடிபோன்ற எலும்புகளையுடைளான பூதனையினுடைய முலை ஊடு,mulai oodu - முலை வழியாக அவள் உயிரை உண்டான்,aval uyirai undaan - அவளது உயிரை முடித்த பெருமானுடைய கழல்கள் அவையே,kazalkal avaiye - திருவடிகளையே சரண் ஆக கொண்ட,saran aka konda - சரணமாகப்பற்றின குகூர் சடகோபன்,kukoor sadagopan - ஆழ்வார் குழலின் மலிய,kulalin maliya - குழலோசையித் காட்டிலும் இனிதாக சொன்ன,sonna - அருளிச்செய்த ஓர் ஆயிரத்துள்,or aayirattu - ஒப்பற்ற ஆயிரத்தினுள்ளே இ பத்தும்,i pattum - இப்பதிகத்தை மழலை தீர,malalai teera - தமது அறியாமை தொலையும்படி வல்லார்,vallaar - அதிகரிக்கவல்லவர்கள் மான் ஏய் நோக்கியர்க்கு,maan aay nokkiyarkku - மான்போன்ற நோக்கையுடைய திவ்யாப்ஸரன்ஸுக்களுக்கு காமர்,kaamar - ஆதரிக்கத்தக்கவராவர். |
| 3348 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 1 | கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்; ‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்; ‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்; செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1 | செம் கயல் பாய் நீர் திரு அரங்கத்தாய், Sem kayal paay neer thiru arangaththai - அழகிய மீன்கள் துள்ளி திருக்காவேரி சயனித்த தருள்பவனே! கங்குலும் பகலும், Kangulum pagalum - இரவும் பகலும் கண் துயில் அறியாள், Kan thuyil ariyaal - கண்ணுறங்கப் பெறுகின்றிலள்; கண்ண நீர் கைகளால் இறைக்கும், Kanna neer kaigalaal iraikkum - கண்ணீரைக் கைகளாலே இறைக்க வேண்டும்படி தாரை தாரையாய்ப் பெருகவிடாநின்றாள்; சங்கு சக்கரங்கள், Sangu chakkarangal - திருவாழி திருச்சங்குகள் இதோ ஸேவை ஸாதிக்கின்றன என்று கை கூப்பும், Endru kai kooppum - என்று சொல்லி அஞ்ஜலி பண்ணி நின்றாள்; தாமரை கண் என்றே தளரும், Thaamarai kan endrae thalarum - (என்னைக் காடக்ஷித்த) தாமரைக் கண்களன்றோ இவை! என்று சொல்லித் தளர்கன்றாள்; உன்னைவிட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும், Unnaivittu engganae tharikken endrum - (பிரானே) உன்னைவிட்டுப் பிரிந்து தரிக்கவும் முடியுமோ? என்கின்றாள்; இரு நிலம், Iru nilam - விஸ்தீர்ணமான பூதலத்தை கை துழவிருக்கும், Kai thuzhavirukkum - கைகளாலே துழாவாநின்றாள் (ஸ்ரீ ரங்காநாதனே!) இவள் திறந்து, Ival thirandhu - இப் பெண்பிள்ளை விஷயத்தில் என் செய்கின்றாய், En seikindraai - ஏது செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறாய்? |
| 3349 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 2 | என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும் என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும் முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும் முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2 | என் தாமரை கண்ணா, En thamarai kanna - என்னை யீடுபடுத்திக் கொண்ட செந்தாமரைக் கண்ணனே! என் செய்கின்றாய் என்னும், En seikindraai ennnum - என்னை என் செய்வதாக விருக்கிறாய்? என்று சொல்லுகின்றாய்; கண் நீர் மல்க இருக்கும், Kan neer malga irukkum - கண்ணீர் ததும்பநின்று ஸ்தப்தையாயிருக்கின்றாள்; எறி நீர் திரு அரங்கத்தாய், Eri neer thiru arangaththaai - அலையெறிகின்ற திருக்காவேரி சூழந்த திருவரங்கந்தில் துயில்பவனே! என் செய்கேன் என்னும், En seiken ennum - (உன்னைப் பெறுதற்கு) என்ன செய்வேன்? என்கிறாள்; வெவ்வு யிர்த்து உயிர்த்து, Vevvu yirthu uyirthu - வெப்பமாகப் பலகாலும் பெரு மூச்சு விட்டு உருகும், Urugum - கரைகின்றாள்; முன் செய்த வினையே, Mun seitha vinaiye - முற்பிறவிகளிலே நான் பண்ணி வைத்த கருமமே! முகப்படாய் என்னும், Mugappadaai ennum - என் கண்முன்னே வந்து நில் பார்ப்போம் என்கிறாள்; முகில் வண்ணா, Mugil vanna - காளமேகவண்ணனான எம்பெருமானே! இது தகவோ என்னும், Idhu thagavo ennum - இதுதானோ உன்னுடைய க்ருபைக்கு லக்ஷ்ணம்! என்கிறாள்; இவ்உலகம், Ivulagam - இந்த ப்ரபஞ்சங்களை யெல்லாம் முன் செய்து , Mun seithu - முற்காலத்தில் ஸ்ருஷ்டித்து உண்டு உமிழ்ந்து ,undu umizhndhu - (காலவிசேஷங்களிலே) உண்பதும் உமிழ்வதும் செய்து அளந்தாய், Alaandhaai - அளப்பதும் செய்து பல முகமாக ரக்ஷித்தருளும் பெருமானே! இவட்கு, Ivatku - இங்ஙனே துடிக்கிற எபெண் பிள்ளைக்கு முடிகின்றது என் கொலோ, mudikindradhu en kolo - இந்தப் பரிதாபமெல்லாம்) என்னாய் முடியப்போகிறதோ? |
| 3350 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 3 | வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும் ‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்; ‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்; திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3 | இறையும் வட்கு இலள், Iraiyum vatku ilal - சிறிதும் வெட்கமில்லா தவளாகி மணிவண்ணா என்னும், Manivanna ennum - நீல மணிவண்ணனே! என்று கூப்பிடா நின்றாள்! வானமே நோக்கும், Vaaname nokkum - (யானைக்கு உதவவந்தாப்போல நமக்கும் உதவ வரக்கூடு மென்று வானத்தையே நோக்குகின்றாள்; மையாக்கும், Maiyaakkum - (எதிர்பார்த்தபடி வந்து தோன்றக் காணாமையினால்) மோஹமடைகின்றாள்; உட்கு உடை அசுரர், Utku udai asurar - வலிமையுடையவர் களான அசுரர்களினுடைய உயிர் எல்லாம் உண்ட, Uyir ellaam undu - பிராணன்களை யெல்லாம் கவர்ந்த ஒருவனே என்னும், Oruvane ennum - அத்விதீயனே! என்கின்றாள்; உள் உருகும், Ul urugum - உள்ளம் நீர்ப்பண்டமாய் உருகப் பெறுகின்றாள்; கட்கு இலீ, Katku ilee - கண்களுக்கு விஷயமாக மாட்டாதவனே! காகுத்தா கண்ணனே, Kaakutha kannane - ஸ்ரீ ராம க்ருஷ்ணாவதாரங்கள் செய்து எல்லார் கண்ணுக்கும் விஷயங்மானவனே! உன்னை காணும் ஆறு அருளாய் என்னும், Unnai kaanum aaru arulaai ennum - உன்னை நான் கண்ணா ரக்காணும் விதம் அருளவேணுமென்கின்றாள்; திண்கொடி மதிள்சூழ் திரு அரங்கக் தாய், Thin kodi madhil soozh thiru arangaththaai - திடமான கொடிகள் விளங்கும் மதிள்களாலே சூழப்பட்ட திருவரங்கத்தில் துயிலும் பெருமானே! இவள் திறந்து, Ival thirandhu - இப் பெண்பிள்ளை விஷயமாக என்செய்திட்டாய், En seithitaai - நீ செய்தது என்னே! |
| 3351 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 4 | இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்; ‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்; ‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்; ‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்; சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4 | இடக்கால் இட்டகையள் ஆய் இருக்கும், Idakkal ittakaiyal aai irukkum - (சில சமயங்களிலே) கையும் காலும் இட்டது இட்டபடியேயிராநின்றாள்; எழுந்து உலாம், Ezhundhu ulam - எழுந்து உலாவுகின்றாள்; மயங்கும், Mayangum - மயங்கா நின்றாள்; கை கூப்பும், Kai kooppum - (அப்படி மயங்கின தசையிலும்) கைகூப்புதல் தவிர் கின்றிலள்; காதல் கட்டமே என்றுடமே என்று மூர்ச்சிக்கும், Kaadal kattame endrudame endru moorchikkum - (பகவத் விஷயத்திலே) காதலைத் தாங்குவது வெகு கஷ்டமென்று சொல்லி மூர்ச்சை யடைகின்றாள்; கடல்வண்ணா கடியை காண் என்னும், Kadal vanna kadiyai kaan ennnum - கடல் வண்ணனே! என் விஷயத்தில் நீ கடுமை கொண்டிருக்கின்றாயே! என்கிறாள்; வட்டம் வாய் நேமி வலம் கையா என்னும், Vattam vaai nemi valam kaiya ennnum - வட்டமான விளிம்பையுடைய திருவாழியை வலத்திரக்கையிலுடையவனெ! என்கிறாள்; வந்திடாய் என்று என்றே மயங்கும், Vandhidai endru endre mayangum - வாராய் வாராய் என்று பலகாலுமழைத்தும் வரக்காணாது மயங்கு கின்றாள்; சிட்டனே!, Sittane! - பரமபவித்திரனே! செழு நீர் திரு அரங்கத்தாய், Sezhuneer thiru arangkaththaai - நீர்வளம் பொருந்திய கோயிலிலே கண்வளர்ந்திரளுமவனே! இவள் திறத்து, Ival thiraththu - இப்பெண்பிள்ளை விஷயமாக என்சிந்தித் தாய், Ensindhithaai - நீ சிந்தித்திருப்பது என்ன? |
| 3352 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 5 | சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்; வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்; ‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே! சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5 | அந்தி போது, Andhi podhu - மாலைபொழுதிலே அவுணன் உடல் இடந்தானே, Avunan udal idandhaane - (நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி) இரணியனது உடலைப் பிளந்தவனே! அலை கடல் கடைந்த ஆர் அமுதே, Alai kadal kadaindha aar amudhe - அலையெறிகின்றகடலை (த்தேவர்களுக்காக)க் கடைந்தா ஆராவமுதமே! சந்தித்து உன் சரணமே சாலீவது வலித்த தையலே மையல் செய்தானே, Sandhithu un saraname saaleevadhu valitha thaiyale maiyal seithaane - உன்னோடே கலந்து உன் திருவடிகளிலேயே லயிக்கவேணுமென்கிற திடமானஅத்யவ ஸாயங்கொண்ட இப்பெண்பிள்ளையை மதிகெடுத்தவனே! சிந்திக்கும், Sindhikkum - (ஏற்கனவே விதிவசமாக நேர்ந்திருந்த கலவியைப் பற்றிச்) சிந்தனை செய்கின்றாள்; திசைக்கும், Thisaikkum - அறிவு அழியா நின்றாள்; தேறும், Therum - (திடீரென்று) தெளிவு பெறுகின்றாள் கைகூப்பும், Kaikooppum - அஞ்சலி பண்ணாநின்றாள்; திரு அரங்கத்து உள்ளாய் என்னும், Thiru arangathu ullaai ennum - கோயிலிலே கண்வளர்ந்;தருளுமவனே! என்கிறாள்; வந்திக்கும், Vandhikkum - தலைவணங்கா நின்றாள்; ஆங்கே, Aange - அவ்வளவிலே மழை கண் நீர் மல்க, Mazhai kan neer malga - கண்ணீர் தாரை தாரையாகப் பெருகநின்று வந்திடாய் என்று என்றே மயங்கும், Vandhidaai endru endre mayangum - (எம்பெருமானே!) வாராய் வாராய் என்று பலகாலுஞ் சொல்லி (வரக்காணாது) மோஹிக்கின்றாள். |
| 3353 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 6 | ‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்; ‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்; ‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்; பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6 | என்னை மையல் செய்து, Ennai maiyal seidhu - என்னை வியாமோஹப்படுத்தி மனம் கவர்ந்தானே யென்னும், Manam kavarndhaane ennum - மனதைக் கொள்ளை கொண்டவனே! என்கிறோள்; மா மாயனே என்னும், Maa maayane ennum - மிகப் பெரிய மாயங்களை யுடையவனே! என்கிறாள்; செய்யவாய் மணியே என்னும், Seyyaavaai maniye ennum - சிவந்த அதரசோபையை உடையயையாக் கொண்டு நீலமணி போன்றவனே; என்கிறாள்; தண் புனல் சூழ் திருஅரங்கத் துள்ளாய் என்னும், Than punal soozh thiru arangath thullaai ennum - குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்த கோயிலில் கண்வளர்ந்தருள் பவனே! என்கிறாள்; வெய்யவான் தண்டு சங்கு சக்கரம்வில் ஏந்தும், Veyyaavaan thandu sangu sakkaram vil endhum - (ஆச்ரித விரோதி விஷயத்தில்) வெப்பமே வடிவெடுத்த பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கிற விண்ணோர் முதல் என்னும், Vinnor mudhal ennum - நிதயஸூரிநாதனே! என்கிறாள்; பை கொள் பாம்பு அணையாய், Pai kol paambu anaiyaai - படமெடுத்த ஆதிசேஷன் மீது சயனித்தருள்பவனே! இவள் திறத்து, Ival thiraththu - இப்பெண்பிள்ளை விஷயமாக பாவியேன் செயல் பாலது , Paaviyen seyal paaladhu - பாவியேனான நான்செய்யக் கூடியது இருந்தால் அதை அருளாய், Arulaai - அருளிச்செய்யவேணும் |
| 3354 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 7 | ‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே! கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்; ‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்; கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7 | என்னுடை கோமளம் கொழுந்து, Ennudaiya komalam kolundhu - மிக மெல்லியலாளான என்மகள் பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் என்னும், Paala thunbangal inbangal padaitthaai ennum - அவ்வவ்விடங்களுக்குத் தகுதியாக இன்பங்களையும் துன்பங்களையும் படைத்கவனே! என்கிறாள்: பற்று இலார் பற்ற நின்றானே என்னும், Patru ilaar patra nindraane ennum - அசரண்ய சரண்யனே! என்கிறாள்; கால சக்கரத்தாய் என்னும், Kaala sakkaraththaai ennum - காலசக்ரத்திற்கு நிர்வாஹகனானவனே! என்கிறாள்; கடல் இடம் கொண்ட கடல் வண்ணா என்னும், Kadal idam konda kadal vanna ennum - திருப்பாற் கடலை இடமாகக் கொண்ட கடல்; வண்ணனே! என்கிறாள்; கண்ணனே என்னும், Kannane ennum - ஸ்ரீகிருஷ்ணா என்கிறாள்; சேல் கொள்தண் புனல் சூழ் திருஅரங்கத் தாய் என்னும், Sel kolthan punal soozh thiru arangath thaai ennum - மீன்கள் நிரம்பிய குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்தா கோயிலில் வாற்பவனே! என்கிறாள்; என்தர்த்தானே என்னும், Entharthaane ennum - என்னைப் பவித்திரனாக ஆக்குமவனே! என்கிறாள்; கோலம் மாமழை கண்பனி மல்க் இருக்கும், Kolam maamazhai kanpani malga irukkum - அழகு பொருந்திப் பெருத்துக குளிர்ந்த கண்கள் நீர்பெருகநிற்கின்றாள். |
| 3355 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 8 | கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்; அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்; ‘அஞ்சன வண்ணனே!’ என்னும்; எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்; ‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்; செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்! என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8 | வானவர்கட்கு கொழுந்து என்னும், Vaanavargatku kozhundhu ennum - நித்ய ஸூரிகளுக்குத் தலையானவனே! என்கிறாள்; குன்று ஏந்தி, Kunru endhi - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்று கோ நிரை காத்தவன் என்னும், Ko nirai kaathavan ennum - பசுக்களின் கூட்டத்தைக் காத்திருளினவனே! என்கிறாள்; ஆழும், Aazhum - கண்ணுங் கண்ணீருமாயிருக்கின்றான்; தொழும், Thozhum - அஞ்ஜலி பண்ணா நின்றான்; ஆவி அனல் வெவ்வுயிர்க்கும், Aavi anal vevvuyirkkum - ஆத்மாவஸ்து கொளுந்தும்படி வெப்பமாகப் பெருமூச்சுவிடாநின்றாள்; அஞ்சனம் வண்ணனே என்னும், Anjanam vannane ennum - அஞ்சனனேமனியனே! என்கிறாள்! மேல் எழுந்து நோக்கி, Mel ezundhu nokki - (இக் கூக்குரலைக்கேட்டு நினைத்து) மேலே தலையெடுத்துப் பார்த்து இமைப்பு இலள் இருக்கும், Imaippu illal irukkum - இமையாத கண்ணினளாய் இருக்கின்றாள்; எங்ஙனே நோக்கு கேன் என்னும், Engane nokku ken ennum - எந்த பிரகாரத்தாலே உன்னைக் காண்பேன்? என்கின்றாள்; செழு தடம் புனல் சூழ்திரு அரங்கத் தாய், Sezhu thadam punal soozh thiru arangath thaai - மிகச் சிறந்த தீர்த்தம் கண் வளாந்தருளுமவனே! என் திருமகட்கு, En thiru magatku - பிராட்டியோ டொத்து என் பெண்மகள் விஷயத்திலே என் செய்கேன், En seiken - எதைச் செய்வனே? |
| 3356 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 9 | என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்; ‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்; ‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்; தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9 | என் திருமகள் சேர்மார்பனே என்னும், En thirumagal sermaarbane ennum - எனக்குப் புருஷகார பூதையான பிராட்டி சோந்த திருமார்பை யுடையவனே! என்கிறாள்; என்னுடை ஆவியே என்னும், Ennudai aaviyae ennum - எனக்கு உயிராயிருப்ப வனே! என்கிறாள்; நின் திருஎயிற்றால் இடந்து நீ கொண்ட , Nin thiru eyirraal idandhu nee konda - உனது கோரப் பற்களாலே இடந்து ஏற்றுக்கொண்ட நிலம் மகள் கேள்வனே என்னும், Nilam Magal kelvanae ennum - பூமிப்பிராட்டிக்கு நாயகனே! என்கிறாள்; அன்று , Andru - முன் பொருகால் உரு ஏழும் , uru ezhum - இடிபோன்ற குரலையுடையரிஷபங்களேழையும் தழுவி, thazhuvi - மதமொழித்து நீ கொண்ட, nee konda - மணந்து கொண்ட ஆய் மகள், aai magal - நப்பின்னைப் பிராட்டிக்கு ப்ரியனே! என்கிறாள்; தென் திருஅரங்கம் கோயில் கொண்டானே, Then thiru arangam koyil kondane - ஸ்ரீ ரங்கநாதனே! இவள் தனக்கு, Ival thanakku - இவளுக்கு முடிவு தெளிகிலேன், mudivu thelikilen - ஆர்த்தி முடியுமாறு அறிகின்றிலேன். |
| 3357 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 10 | ‘முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்; ‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்; ‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்; அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10 | இவள் , Ival - இப்பெண்பிள்ளையானவள், தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்னும், thanakku mudivu ondru arikilen ennum - தனது ஆர்த்திக்கு முடிவு ஒன்றும் தெரியவில்லையே! என்கிறாள்; கடி கமழ் கொன்றை சடையனே என்னும், Kadi kamazh kondrai sadaiyane ennum - பரிமளம் மிக்க கொன்றைமாலையைச் சடையிலணித்த சிவனுக்கு அந்தர்யாமியே என்கிறாள்; நான்முகக்கடவுளே என்னும், Naanmuga kadavulae ennum - தன்னோடொத்த வடிவுடையரான நித்ய ஸூரிகளுக்கு நாதனே! என்கிறாள்; வண் திருஅரங்கனே என்னும், Van thiru arangane ennum - ஸ்ரீ ரங்கநாதனே! என்கிறாள்: அடி அடையாதாள் போல் இவள், Adi adaiyaadhal pol ival - திருவடிகளைக் கிட்டமாட்டாள் போலும் என்னும்படி யிருந்த விவள் முகில் வண்ணன் அடி், Mugil vannan adi - மேகவண்ணனான அவனது திருவடிகளை அணுகி அடைந்தனள், anugi adaindhanal - கிட்டியடையப்பெற்றாள். |
| 3358 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 11 | முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல் துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன் முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11 | முகில் வண்ணன் அடியை அடைந்து, Mugil vannan adiyai adaindhu - மேகவண்ணனான் எம்பெருமானுடைய திருவடிகளை யடைந்து அருள் சூடி உயந்தவன், Arul soodi uyandhavan - அவனுடைய திருவருளைத் தலைக்கொண்டு உஜ்ஜீவிததவரும், மொய் புனல் பொருநல், Moi punal porunal - உத்தமதீர்த்தனான தாமிரப்ரணியினுடைய துகில் வண்ணம் தூ நீர் சேர்ப்பன், Thugil vannam thoo neer serppan - துகிலின் நிறம்போலே பரிசுத்தமான ஜலத்தின் கரையிலே சேர்ந்திருப்பவரும் வண் பொழில் சூழ் வண் குருகூர், Van pozhil soozh van kurukoor - வளம்மிக்க சோலைகள் சூழந்த திருநகரிக்குத் தலைவருமான் முகில் வண்ணன் அடிமேல் சொன்ன, Mukil vannan adimel sonna - மேகவணணனான எம்பெருமானது திருவடிகளை நோக்தியருளிச் செய்த சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார், Sol maalai aayirathu ippathum vallaar - சொல் தொடையான ஆயிரத்தினுள் இப்பதிகத்தை ஒதவல்லவர்கள் முகில் வண்ணம் வானத்து, Mukil vannam vaanathu - முகில் வண்ணனுடைய நிழலீட்டாலே முகில் வண்ணமாயிருக்கின்ற பரமபதத்திலே இமையவர் சூழ, imaiyavar soozha - நித்தியசூரிகள் புடைசூழ பேர் இன்பம் வெள்ளத்தே, Per inbam vellathe - ப்ரஹமானந்த ப்ரவாஹித்தில் இருப்பர், iruppar - மூழ்கியிருக்கப்பெறுவர்கள். |
| 3370 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 1 | ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1 | aazhi ezha,ஆழி எழ - திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும் sangum villum ezha,சங்கும் வில்லும் எழ - பாஞ்சஜந்யமும் சார்ங்கமும் தோன்றவும் thandum vaalum ezha,தண்டும் வாளும் எழ - கதையும் நந்தகமும் தோன்றவும் thisai vaazhi ezha,திசை வாழி எழ - திசைகள் தோறும் மங்களாசாஸன கோஷம் கிளம்புவும் andam mozhai ezha,அண்டம் மோழைஎழ - (உயரவளர்ந்தபடியாலே) அண்டகபாலம் பிளந்து ஆவரணஜலம் குமிழி கிளம்பும் படியாகவும் mudi paadham ezha,முடி பாதம் எழ - (வளர்ந்த விரைவாலே) திருமுடியும் திருவடியும் ஒக்கக்கிளம்பும் படியாகவும் oozhi ezha,ஊழி எழ - மாவலியால் துன்பப் பட்டகாலம் போய்) நல்லகாலம் வந்து தோற்றும்படியாகவும் appan,அப்பன் - ஸர்வேச்வரன் ulagam kondaa aaru eyy,உலகம் கொண்ட ஆறு ஏ - (திரிவிக்கிரமனாய்) உலகங்களையளந்து கொண்டபடி என்னே!. |
| 3371 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 2 | ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2 | appan,அப்பன் - ஸர்வேச்வரன் saaru pada,சாறு பட - (தேவர்களுக்கு) மஹோத்ஸவமுண்டாம்படியாக amudham konda nanru,அமுதம் கொண்ட நான்று - (கடல் கடைந்து) அமுதங்கொண்ட காலத்திலே. aaru,ஆறு - கடலிலே சென்று சேர்வதற்காக வந்து கொண்டிருந்த) ஆறுகளானவை malaikku edhiruthu oadum oli,மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி - தங்கள் பிறப்பிடமான மலைகளையே நோக்கித் திரும்பியோடுகிறஓலியும். aravu ooru sulaay,அரவு ஊறு சுலாய் - வாஸீகியென்கிற பாம்பினுடம்பைச் சுற்றி malai theykkum oli,மலை தேய்க்கும் ஓலி - மந்தர மலையிலே தேய்க்கிற (ஓலியும் kadal maaru sulandru,கடல் மாறு சுழன்று - கடலானது இடம் வலமாக மாறிச் சுழன்று alaikkindra oli,அழைக்கின்ற ஒலி - கோஷிக்கிற கோஷமும் உண்டாயின. |
| 3372 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 3 | நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும் நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும் நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3 | appan,அப்பன் - ஸர்வேச்வரன் oondri idandhu eittril kondan naal,ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாள் - (பிராளயங்கதையான பூமியைக்) குத்தியிடந்தெடுத்து எயிற்றின் மேலே கொண்ட காலத்தில் ezhu mannum,ஏழ் மண்ணும் - ஏழு தீவுகளான பூமி பேதங்களானவை naantril,நான்றில - நழுவாதவையாய் thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன; pinnum,பின்னும் - மேலும் ezhu malai,ஏழ் மலை - ஸப்த குலாசங்களும்) naantril,நான்றில - சலியாதவையாகி thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன; pinnum,பின்னும் - மேலும் ezhu kadal,ஏழ் கடல் - ஸப்த ஸாகரங்களும் naanaril,நானறில - உடைந்தொழுகாதவையாய் thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன. eyy,ஏ - ஆச்சரியம் |
| 3373 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 4 | நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும் கோளும் எழ எரி காலும் எழ மலை தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன் ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4 | naal ezvum,நாள் எழவும் - காலவ்யவஸ்தைபேரும் படியாகவும் nilam neer ezvum,நிலம் நீர் எழவும் - நிலமும் நீரும் நிலை குலைந்து போகவும் vinnum koalum ezhu,விண்ணும் கோளும் எழ - ஆகாசமும் க்ரஹங்களும் நிலை குலைத்து போகவும் eri kaalum ezhu,எரி காலும் எழ - நெருப்பும் காற்றும் நிலைகுலைந்து போகவும் malai thaal ezvum,மலை தாள் எழவும் - மலைகள் அடிபெயர்ந்து போகவும் sudarthaanum ezhu,சுடர்தானும் எழ - நக்ஷ்த்திரம் முதலிய சுடர்ப்பொருள்கள் நிலை குலையவும் appan,அப்பன் - ஸர்வேச்வரன் ooli ezhu ulagam unda oon,ஊளி எழ உலகம் உண்ட ஊண் - ஆரவரமுண்டாம்படி உலகங்களை உண்டருளின உணவு என்ன ஆச்சரியம்! |
| 3374 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 5 | ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள் ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன் காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5 | nadungum oli vinnull,நடுங்கும் ஒலி விண்ணுள் - நடுங்குகிற சத்தமும் விண்ணுலகத்திலே aen udai devar,ஏண் உடை தேவர் - மதிப்பராக எண்ணப்பட்ட தேவர்கள் velippatta oli,வெளிப்பட்ட ஒலி - (யுத்த விநோதம் காண்கைக்காக) வெளிப் பட்ட ஓசையும் ஆயின appan,அப்பன் - ஆச்ரிதபக்ஷ்பாதியான கண்ணபிரான் kaanudai bharatham kai arai pothu,காணுடை பாரதம் கை அறை போழ்து - ஆச்சரியமான பாரதயுத்தத்தை அணிவகுத்த போது, oon udai mallar thadarndha oli,ஊண் உடை மல்லர் ததர்ந்த ஒலி - வலியை யூட்டும் உணவுகளைக்கொண்ட பெருமிடுக்கரான மல்லர்கள் (த்வந்த்வயுத்தம் பண்ணி, நேரிந்து விழுகிற ஒசையும் mannar,மன்னர் - அரசர்களினுடைய aan udai senai,ஆண் உடை சேனை - வீர புருஷர்களை யுடைத்தான சேனைகளானவை |
| 3375 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 6 | போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா மலை கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6 | pozhndhu melindha,போழ்ந்து மெலிந்த - போதுபோனவாறே pun chekkaril,புன் செக்கரில் - செக்கர் வானமிடுகிற வளவிலே vaan thisai,வான் திசை - ஆகாசமும் திக்குக்களும் soolum ezundhu,சூழும் எழுந்து - சூழக்கிளம்பி udhiram punal aa,உதிரம் புனல் ஆ - ரத்த வெள்ளமாம்படி appan,அப்பன் - ஆச்ரிதபக்ஷ்பாதியான நரஸிம்ஹமூர்த்தி aazh thuyar seydhu,ஆழ் துயர் செய்து - அளவிறந்த துன்பத்தை விளைந்து asurai kollum aaru,அசுரை கொல்லும் ஆறு - இரணியாசுரனைக் கொன்ற விதமானது malai keelthu pilandha singam otthadhu,மலை கீழ்து பிளந்த சிங்கம் ஒத்தது - ஒரு மலையைக் கீழேயிட்டு அதன் மேலேயிருந்து அம்மலையைக்கீண்ட சிங்கம் போன்றிருந்தது. aal,ஆல் - ஆச்சரியம். |
| 3376 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 7 | மாறு நிரைத் திரைக் குஞ்ச ரங்களின் நூறு பிணம் மலை போற் புரளக் கடல் ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7 | appan,அப்பன் - ஸ்வாமியான ஸ்ரீராமபிரான் ilangai neeru pada setra ner,இலங்கை நீறு பட செற்ற நேர் - லங்காபுரி பஸ்மமாம்படி த்வம்ஸம் பண்ணின நேர்த்தி (எங்ஙனேயிருந்ததென்றால்) maruniraittu iraikkum sarangaL,மாறுநிரைத்துஇரைக்கும் சரங்கள் - எதிரெதி;ராக நிரைக்கப்பட்டு சப்திக்கிற சரங்களாலே inam nooru pinam,இனம் நூறு பிணம் - இனமினமாய் நூறு நூறான ராக்ஷ்ஸப்பிணங்களானவை malai pol purala,மலை போல் புரள - மலை மலையாகப் புரண்டு விழவும் kadal,கடல் - கடலானது udhiram punal aa aaru maṭuthu,உதிரம் புனல் ஆ ஆறு மடுத்து - ரக்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே எதிர்த்தோடும்படியாகவுமிருந்தது |
| 3377 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 8 | நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும் நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8 | appan,அப்பன் - ஸ்வாமியான கண்ண பிரான் ner sari vaanan,நேர் சரி வாணன் - முதுகுகாட்டியொடின பாணாஸுரனுடைய thinthol konda anru,திண்தோள் கொண்ட அன்று - திண்ணிய தோள்களைத்துணித்து வென்றி கொண்ட அக்காலத்திலே kozhi kodi kondaan,கோழி கொடி கொண்டான் - மயிலைக் கொடியாகக் கொண்ட ஸீப்ரமணியன் ner sarindhaan,நேர் சரிந்தான் - எதிர்நில்லாமல் சாய்ந்துபோனான்; pinnum,பின்னும் - அதற்குமேலே eriyum analon,எரியும் அனலோன் - ஜ்வலித்துக்கொண்டிருந்த அக்நியும் ner sarindhaan,நேர் சரிந்தான் - எதிர் நில்லாமல் சரிந்தான்; pinnum,பின்னும் - அதற்குமேலும் mukkan mooruthi,முக்கண் மூர்த்தி - முக்கண்ணனான சிவ பிரானும் ner sarindhaan kandeer,நேர் சரிந்தான் கண்டீர் - அப்படியே முதுகிட்டுப்போனான கிடீர். |
| 3378 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 9 | அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9 | appan,அப்பன் - ஸ்வாமியான ஸாவேச்வரன் முந்துற் முன்னம் anru,அன்று - அந்தவொரு க்ஷ்ணத்திலேயாம்; man neer eri kaal vin,மண் நீர் எரி கால் விண் - பஞ்ச பூதங்ககளையும் malai mudhal,மலை முதல் - மலைகள் முதலானவற்றையும் seydhadhum,செய்ததும் - படைத்ததும் anru,அன்று - அந்த க்ஷ்ணத்திலேயாம்; sudar irandu,சுடர் இரண்டு - சந்திரன் ஸுர்யன் ஆகிய இரண்டு சுடர்ப்பொருள்களையும் piravum,பிறவும் - மற்றுமுள்ள நக்ஷ்த்ராதிதேஜஸ் பதார்த்தங்களையும் ulagam seydhadhum,உலகம் செய்ததும் - உலகங்களைப்படைத்ததும், seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும் anru,அன்று - அந்த க்ஷணத்திலேயாம் pinnum,பின்னும் - அதுக்குமேலே mazhai,மழை - மேகங்களையும் uyir,உயிர் - மழையினால்பிழைக்கும் உயிர்களையும் thevum,தேவும் - மழைக்குக் கடவர்களான தேவர்களையும் matrum,மற்றும் - மற்றுமுள்ள திர்யக் ஸ்தாவரங்களையும் seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும் |
| 3379 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 10 | மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன் தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10 | meynirai,மேய்நிரை - மேய்கிற பசுக்களானவை keel puga,கீழ் புக - கீழே யொதுங்கும்படியாகவும் maa purala,மா புரள - (கீழது மேலதாக மலையைப் பிடிக்கையாலே மலையிலுள்ள) மிருசங்கள் புரண்டுவிழும் படியாகவும் sunaivaa nirai neer,சுனைவாய் நிறை நீர் - சுனைகளினுடைய வாயளவும் நிறைந்த நீரானது pilirisoriya,பிளிறி சொரிய - பெரிய ஆரவாரத்தோடு சொரியும் படியாகவும் inam aanirai paadi ange oadungga,இனம் ஆநிரை பாடி அங்கே ஓடுங்க - மிகவும் ஸம்ருத்தமான திருவாய்ப்பாடியானது அங்கே அடங்கும்படியாகவும் appan,அப்பன் - கண்ணபிரான் thee mazhai kaathu,தீ மழை காத்து - விநாச ஹேதுவான மழையைத் தடுக்க kunṟam eduthaan,குன்றம் எடுத்தான் - கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கினான் |
| 3380 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 11 | குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும் ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல் நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11 | kunram edutha piran,குன்றம் எடுத்த பிரான் - கோவர்த்தன மலையையெடுத்த கண்ணபிரானுடைய adiyarodum,அடியாரொடும் - அடியார்களோடு கூட ondri nindra,ஒன்றி நின்ற - ஒருமைப்பட்டிராநின்ற sadagopan,சடகோபன் - நம்மாழ்வாருடைய urai seyal,உரை செயல் - அருளிச்செயலாய் or aayirathu nanri punaintha,ஓர் ஆயிரத்துள் நன்றி புனைந்த - ஆயிரத்தினுள்ளே நலம் மிக்கதான ivai pathum,இவை பத்தும் - இத்திருவாய்மொழி mevi karparkku,மேவி கற்பார்க்கு - தன்னை விரும்பிக் கற்குமவர்களுக்கு venri tharum,வென்றி தரும் - பலவகையான விஜயத்தையுங் கொடுக்கும் |
| 3546 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவத கைங்கர்யமாகிற பெருஞ்செல்வம் கிடைக்கப் பெற்றால் மூவுலகாளுஞ் செல்வமும் இத்தோடொவ்வாதென்று இதன் பரம போக்யதையைப் பேசுகிறார்.) 1 | நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால் கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால் விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே–8-10-1 | nedu maarku,நெடு மாற்கு - ஸர்வேச்வரனுக்கு adimai seyaveen pol,அடிமை செயவேன்போல் - அடிமை செய்பவன் போலவிருந்து avanai karutha,அவனை கருத - அப்பெருமானை நினைத்தவளவிலே thee kadhigal mutrum,தீ கதிகள் முற்றும் - (என்னிடத்திலிருந்த) தீவினைகளெல்லாம் vanjithu,வஞ்சித்து - வஞ்சனை செய்து (என்னோடு சொல்லாமலே) tadumaarru atra,தடுமாற்று அற்ற - நிச்சயமாக tavirndha sadhir ninaitthaal,தவிர்ந்த சதிர் நினைத்தால் - என்னைவிட்டு நீங்கிப் போனபடியை ஆராயந்து பார்த்தால் viyal moo ulagu perinum,வியல் மூ உலகு பெறினும் - விஷ்தாரமான மூவுலகையும் பேறாகப் பெற நேர்ந்தாலுங்கூட (அதை உபேக்ஷித்து avan adiyaar adiye koodum idhu allaal,அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் - பாகவதர்களின் திருவடிகளையே அடைவது தவிர kodu maavinyen,கொடு மாவினையென் - பெரும் அந்த பாவியாகிய நான் veetum aaru enpathu en,வீடும் ஆறு என்பது என் - (அந்த பாகவத சேஷத்தவ்தை) விடுவதென்று ஒன்று உண்டோ? antho,அந்தோ - இதை நான் சொல்லவும் வேணுமோ? |
| 3547 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஐச்வர்ய கைவல்யங்களிரண்டுங் கூடினாலும் நான் பெற்ற பாகவத சேஷத்வமாகிற புருஷார்த்த்த்தோடு ஒவ்வாதென்கிறார்.) 2 | வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும் புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ் சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2 | viyal moo ulagu perinum,வியல் மூ உலகு பெறினும் - விபுலத்ரிலோக ஸாம்ராஜ்யத்தைப்பெற்றாலும், poi,போய் - அதற்கும் மேலான thaane thaane aanalum,தானே தானே ஆனாலும் - தன்னைத் தானே யநுபவிக்கையாகிற கைவல்ய மோக்ஷம் பெற்றாலும் puyal megham pol thirumeni ammaan,புயல் மேகம் போல் திருமேனி அம்மான் - மழைகாலத்து மேகம் போன்ற திருமேனி வாய்ந்த எம்பெருமானுடைய punai poo kazhal adikeel,புனை பூ கழல் அடிகீழ் - சாத்தின புஷ்பங்களையும் வீரக்கழலையுமுடைத்தான திருவடி வாரத்திலே sayame,சயமே - ஸ்வயம் பிரயோஜநமாக adimai thalai nindraar,அடிமை தலை நின்றார் - கைங்கர்யத்தின் மேலெல்லை யிலே நிலை நின்றவர்களுடைய thiru thal vanangi,திரு தாள் வணங்கி - திருவடிகளைத் தொழுது immaye,இம்மையே - இஹலோகத்திலேயே yaan perthadhu,யான் பெற்றது - நான் அடைந்த்து payane inbam,பயனே இன்பம் - புருஷார்த்தமான சுகமே paaviyaenukku,பாவியேனுக்கு - பாவியான வெனக்கு urumo,உறுமோ - (கீழ்ச்சொன்ன ஐச்வர்ய கைவல்யங்கள்) இப்பேற்றுக்கு ஒக்குமோ? |
| 3548 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஐச்வர்ய கைவல்யங்களிற் காட்டிலும் விலக்ஷணமான பகவல்லாபமுண்டானாலும் இங்கேயிருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்கையோடொவ்வாது என்கிறாப்பாட்டில்.) 3 | உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3 | Siru maa manisar aai,சிறு மா மனிசர் ஆய் - வடிவில் சிறுத்து அறிவில் பெருத்தவர்களாயிருந்து கொண்டு Ennai aandaar,என்னை ஆண்டார் - என்னை யீடுபடுத்திக் கொண்டவர்களான Avan adiyaar,அவன் அடியார் - பாகவதர்கள் Inge thiriya,இங்கே திரிய - இந்நிலவுலகில் இருக்க Andri,அன்றி - அன்னவர்களுக்கு அடிமை பூண்டிருப்பது தவிர Iv vulagam moonrum udan niraiya siru maa meni nimirnth,இவ் வுலகம் மூன்றும் உடன் நிறைய சிறு மா மேனி நிமிர்ந்த - இம்மூவுலகங்களும் ஏக காலத்தில் இடமடையும் படி தனது சிறிய பெரிய திருமேனியை வளரச்செய்த Sem thamarai kan enn thirukkuralan,செம்தாமரை கண் எண் திருகுறளன் - புண்டரீகாக்ஷனாய் எனக்கினியனான ஸ்ரீவாமநனுடைய Naru maa virai naal malar adikeel puguthal paaviyaenukku urumo,நறு மா விரை நாள் மலர் அடிகீழ் புகுதல் பாவியேனுக்கு உறுமோ - மிக்க பரிமளம் வாய்ந்த திருவடித்தாமரைகளிலே சென்று சேர்தல் எனக்குத் தகுமோ? |
| 3549 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவத சேஷத்வத்திலே யிடுபட்டவர்கள் பகவச் சேஷவத்திலே நிற்கலாகாதென்று சிலர் நினைப்பதுண்டு, அதுதவறு பகவானுடைய முகோல்லாஸத்திற்காக பாகவதர்களையுகப்பதுபோல அந்த பாகவதர்களின் முகோல்லாஸத்திற்காகப் பகவானை யுகப்பதும் ப்ராப்தமே) 4 | இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான் பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய் அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4 | Mun,முன் - முன்பொரு காலத்திலே Iru maanilam undu umizhndha,இரு மாநிலம் உண்டு உமிழ்ந்த - மிகப்பெரிய பூமியை யெல்லாம் தனது திருவயிற்றிலே வைத்து நோக்கிப் பிறகு வெளிப்படுத்தின Koalatha,கோலத்த - அழகு வாய்ந்த Sem pavalam vaai,செம் பவளம்வாய் - சிவந்த பவழம் போன்ற அதரத்தையுடைய Senthaamarai kan en ammaan,செம் தாமரை கண் என் அம்மான் - புண்டரீகாக்ஷனான எம்பெருமான் Pongu ezh pugazhkal,பொங்கு ஏழ் புகழ்கள் - பொங்கிக் கிளர்கின்ற தனது திருக்குணங்களானவை Vaaya aai,வாய ஆய் - என் வாக்குக்கு விஷயமாகவும் Pulan kol vadivu,புலன் கொள் வடிவு - மநோஹமான தனது வடிவு En manathu aai,என் மனத்த்து ஆய் - என் மனத்திலுள்ளதாகவும் Angu aay malarkal,அங்கு ஏய் மலர்கள் - அத்தலைக்கு ஏற்ற புஷ்பங்கள் Kaiya aai,கைய ஆய் - என் கையிலுள்ளனவாகவும் பெற்று Vazhipattu oada arulil,வழிபட்டு ஓட அருளில் - பாகவதர்கள் செய்யும் கைங்கரிய மார்கத்திலே நானும் உடன்பட்டு நடக்கும்படியாக அருளாமாகில் Inge thirindhaerku,இங்கே திரிந்தேற்கு - (திருநாடு செல்ல விரும்பாதே) இந்த விபூதியிலேயே இப்படி திரிவேனான எனக்கு Izukkuthu en,இழுக்குற்று என் - என்னதாழ்வு? |
| 3550 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (எம்பெருமானுடைய திருநாட்டிலே பேரின்பம் நுகர்ந்திருக்கப் பெற்றாலும் அத்தோடே கீழ்ச்சிசொன்ன ஐச்வர்யாதிகளெல்லாம் சேரக்கூடினாலும் இங்கே பாகவதர்களுக்கு உகப்பாகத் திருவாய்மொழிபாடி ரஸிக்குமதோடொக்குமோ வென்கிறார்) 5 | வழி பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ் சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும் இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5 | Vazhipattu oadu arul petru,வழிபட்டு ஓட அருள் பெற்று - நித்ய கைங்கரியம் பண்ணும்படியாக அவனது திருவருளைப் பெற்று Maayan,மாயன் - ஆச்சர்ய விபூதி யுக்தனான அந்த ஸர்வேச்வரனுடைய Koalam malar adi keezh,கோலம் மலர் அடி கீழ் - அழகிய திருவடித் தாமரைகளின் கீழே Kazhipattu oadum sudar sothi vellathu,கழிபட்டு ஓடும் சுடர் சோதி வெள்ளத்து - சுழித்து ஓடுகிற சுடர்ச்சோதி வெள்ள மென்னும்படியான பரம பத்த்திலே Inputru irundhaalum,இன்புற்று இருந்தாலும் - ஆனந்த வாழ்ச்சியாக இருக்கப்பெற்றாலும் Muzhudhum,முழுதும் - கீழ்ச்சொன்ன ஐச்வர்ய கைவல்யாதிகள் எல்லாம் கூடினாலும் Izhi pattu oadum udalil pirandhu,இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து - தாழ்ச்சியின் மிக எல்லையில் நிற்பதான சரீரத்திலே பிறந்து Katru,கற்று - தன்னுடைய குணங்களை நான் அப்யளித்து Mozhipattu oadum kali amudham,மொழிபட்டு ஓடும் களி அமுதம் - அவ்வநுபவத்தா லுண்டான ப்ரீதிசொல்லாய் ப்ரவஹிக்கிற கவியாகிற அம்ருத்த்தை Nukaruchchi urumo,நுகர்ச்சி உறுமோ - பாகவதர்களோடு கூடியநுபவித்து ரஸிக்கைக்கு ஒக்குமோ? (ஒவ்வாது) |
| 3551 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (கீழ்ப்பாட்டுக்கு சேஷபூதமாகவே இப்பாட்டுமருளிச் செய்யப்படுகிறது. எம்பெருமானுடைய ஒப்பில்லாத விலக்ஷணமான புகழைத் திருவாய்மொழியாலே நுகருமதுக்கு விபுவான அவன்றன்னுடைய ஆனந்தமும் ஒவ்வாதென்கிறார்) 6 | நுகர்ச்சி உறுமோ மூ வுலகின் வீடு பேறு தன் கேழ் இல் புகர்ச் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான் நிகரச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன் பெரிய தனி மாப் புகழே–8-10-6 | than kel il,தன் கேழ் இல் - தனக்கு ஒப்பின்றியே யிருப்பதாய் Pugar,புகர் - புகரை யுடைத்தாய் Semmukatha,செம்முகத்த - சீற்றத்தாலே சிவந்த முகத்தையுடைத்தான Kiliru,களிறு - (குவலயாபீட மென்கிற) யானையை Atta,அட்ட - கொன்று முடித்தவனும் Pon azhi kai,பொன் ஆழி கை - அழகிய திருவாழி மோதிர மணிந்த திருக்கையை யுடையவனும் En ammaal,என் அம்மாள் - எனக்கு ஸ்வாமியும் Nikar sem pangi,நிகர் செம் பங்கி - தங்கள் ஜாதிக்குத் தகுதி யாகச் சிவந்த செம் பட்ட) மயிர்களையும் Eri vizhikal,எரி விழிகள் - அக்நி சக்ரம் போன்ற கண்களையுமுடயராய் Neenda,நீண்ட - பருத்த வடிவு படைத்தவர்களான Asurar,அசுரர் - அசுரர்களினுடைய Uyir ellam,உயிர் எல்லாம் - பிராணன்களை யெல்லாம் Thakarthu undu,தகர்த்து உண்டு - பிடித்த வாங்கி Uzalum,உழலும் - இதுவே தொழிலாக ஸஞ்சரிக்கிற Pul,புள் - கருடனுக்கு Pakan,பாகன் - நியாமகனுமான எம்பெருமானுடைய Periya tani maa pugal nukaruchchi urumo moo ulagin veedu paeru,பெரிய தனி மா புகழ் நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு - பெரிய ஒப்பற்ற கல்யாண குண ராசியை அநுபவிக்கையோடு ஒக்குமோ ஸர்வேச்ரத்வம். |
| 3552 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஸ்வயம்புருஷார்த்த மாக்க் கொள்ளும் பகவதநுபவம் வேண்டா, பாகவத ப்ரீதிரூபமான பகவதநுபவத்தைப் பண்ணிக்கொண்டு அந்த பகாவதர்களோடு கூடி வாழ்கையெ நமக்கு நாளும வாய்க்கவேணுமென்கிறார்.) 7 | தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார் நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7 | Tani maa pugal e yennjanrum nirkumpadi ay,தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படி ஆய் - ஒப்பில்லாத சிறந்த புகழே காலமுள்ளதனையும் வேதாந்த ப்ரஸித்தமாய் நிற்கும்படியாக Taan tonri,தான் தோன்றி - தானோ (படைப்புக் கடவுளாக) ஆவிர்ப்பவித்து Muni,முனி - (ஸ்ருஷ்டிக்காக) ஸங்கல்பிக்கிற Maa piram,மா பிரம்ம் - பரப்ரஹ்ம்மாகிற Mudhal vithu ay,முதல் வித்து ஆய் - பரமநாரணமாய் Ulakam moonrum,உலகம் மூன்றும் - லோகங்களை யெல்லாம் Mulaippitha,முளைப்பித்த - உண்டாக்கின Tani maa teyvam,தனி மா தெய்வம் - ஒப்பற்ற பர தேவதையினுடைய Thalira adi keizhl,தளிர அடி கீழ் - தளிர்போன்ற திருவடியின் கீழே Puguthal anri,புகுதல் அன்றி - புகுகையைத் தவிர்த்து Avan adiyar,அவன் அடியார் - ஸ்ரீவைஷ்யவர்களுடைய Nani maa kalavi inbame,நனி மா கலவி இன்பமே - மிகச் சிறந்த்தான ஸம்ச்லேஷ ஸுகமே Nankatkku nalum vayntha,நங்கட்கு நாளும் வாய்ந்த - நமக்கு எப்போதும் வாய்க்க வேணும் |
| 3553 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவதர்களின் திரள்களைக் கண்டு கொண்டிருந்தாலே போதுமே யென்கிறாரிப்பாட்டில்.) 8 | நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர்க் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8 | Nalir neer kadalai padaittu,நளிர் நீர் கடலை படைத்து - குளிர்ந்த நீரையுடைய கடலை யுண்டாக்கி Saman ilaadha,சமன் இலாத - ஒப்பில்லாத Than pala thaalum tholum mudikulum,தன் பல தாளும் தோளும் முடிகளும் - தன்னுடைய பல திருவடிகளையும் திருத்தோகளையும் திருமுடிகளையும் Parappi,பரப்பி - பரப்பிக்கொண்டு Neelum padar poo,நீளும் படர் பூ - நீண்டு படர்ந்த புஷ்பங்களையும் Karppagam kaavum,கற்பகம் காவும் - கற்பகச் சோலையையும் Nirai pal naayitrin kolum udaiya,நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய - நிறைந்த பல ஆதித்ய தேஜஸ்ஸையு முடைத்தான Mani malai pol,மணி மலை போல் - மாணிக்கமலை போலே Kidanthaan,கிடந்தான் - கண்வளர்ந்தருளின பெருமானுடைய Thamarkal,தமர்கள் - பக்தர்களோ டுண்டான Kootam,கூட்டம் - சேர்த்தியானது Nangadku naalum vaaykka,நங்கட்கு நாளும் வாய்க்க - எமக்கு எப்போதும் உண்டாகவேணும். |
| 3554 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (மணவாளமாமுனிகள் யதிராஜவிம்சதியில் ஈத்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ யஸ் த்த்தாஸதைகரஸதா அவிரதா ம்மாஸ்து * என்று பாகவத சேஷத்வ காஷ்டையிலே தாம் நிற்கவேணுமென்று பாரித்தாரே, அந்தப் பாரிப்புக்கு இந்தப் பாசுரம் நிதானமாயிருக்கும்.) 9 | தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன் குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9 | Tamarkal kootam,தமர்கள் கூட்டம் - பக்த வர்க்கங்களுக்கு வருகின்ற Val vinaiyai,வல் வினையை - வலிய விரோதிகளை Naasam seyyum sadhir,நாசம் செய்யும் சதிர் - போக்கும்படியான திறமையுடைய Moorthi,மூர்த்தி - ஸ்வாமியாய் Amar kol,அமர் கொள் - போர் செய்யக் கிளர்கின்ற aazhi sangu vaalvil thandu aadhi,ஆழி சங்கு வாள்வில் தண்டு ஆதி - பஞ்சாயுதங்கள் முதலிய Pal padaiyan,பல் படையன் - திவ்யாயுத வர்க்கத்டை யுடையனாய் Kumaran,குமரன் - நித்ய்யுவாவாய் Kolam ainganai vel thadai,கொலம் ஐங்கணை வேள் தாதை - அழகிற் சிறந்த பஞ்சபாணனான மன்மதனுக்குத் தந்தையான் எம்பெருமானுடைய Kodu il adiyar tam,கோது இல் அடியார் தம் - கோதற்ற அடியார்க்கு Tamarkal tamarkal tamarkal aam sadhir,தமர்கள் தமர்கள் தமர்கள் ஆம் சதிர் - அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே Tamiyerkku vaaykka,தமியேற்கு வாய்க்க - துணையற்றி அடியேனுக்கு வாய்க்கவேணும் |
| 3555 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (எம்பெருமானுக்கு அடியரானாருடைய ஸம்பந்தி ஸம்பந்திகளென்று போருகிற பரம்பரையின் எல்லையில் அடிமைசெய்து நடக்கையாகிற கோட்பாடு என்னளவிலே நிற்காமல் என்னுடைய பரம்பரையிலும் வாய்க்கவேணு மென்கிறார்) 10 | வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்- பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான் நீக்கமில்லா வடியார்தம் அடியார் அடியார் அடியார் எம்கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10 | Maa kaayaa poo kol meni,மா காயா பூகொள் மேனி - அழகிய காயாம்பூநிறத்தைக் கொண்ட திருமேனியையும் Naanku thol,நான்கு தோள் - நான்கு தோள்களையும் Pon aazhi kai,பொன் ஆழி கை - அழகிய திருவாழியேந்திய கையையும் உடைய Em ammaan,எம் அம்மான் - எம்பெருமானுடைய Neekkam illaa,நீக்கம் இல்லா - பிரிவு இல்லாத Adiyar tam,அடியார் தம் - அடியார்களுக்கு Adiyar adiyar adiyar,அடியார் அடியார் அடியார் - சரமாவதிதாஸ பூதர்கள் Em kookal,எம் கோக்ள் - எமக்கு ஸ்வாமிகள் Avargge,அவர்க்கே - அன்னவர்களுக்கே Kudikal aay chellum,குடிகள் ஆய் செல்லும் - சேஷவ்ருத்தி பண்ணுங்குலமாயச் செல்லும்படியான Nalla kodpaadu,நல்ல கோட்பாடு - திடமான அத்யவஸாயமானது Oozi oozii oozii thooru,ஊழி ஊழி ஊழி தோறு - எஞ்ஞான்றும் Tamiyerkku,தமியேற்கு - அடியேனுக்கு உண்டாக வேணும் |
| 3556 | திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் இதிற்சொன்ன பாகவத சேஷத்வத்தைப் பெற்று ஸகுடும்பமாக வாழப் பெறுவரென்று பயனுரைத்த தலைக் கட்டுகிறார்.) 11 | நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன் சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11 | Nalla kootpaadu,நல்ல கோட்பாடு - நல்ல கட்டளைப்பாடுடைய Ulagangal moonru in ulloam,உலகங்கள் மூன்றின் உள்ளும் - மூவுலகங்களினுள்ளும் Thaan niraintha,தான் நிறைந்த - வியாபீத்த Alli kamalam kannanai,அல்லி கமலம் கண்ணனை - விகஸித்த தாமரைப் பூப்போன்ற கண்களையுடைய பெருமான் விஷயமாக Am than kurukoor sadagopan sollappatta aayirathul,அம் தண் குருகூர் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள் - ஆழ்வாரா வருளிச் செய்யப்பட்ட ஆயிரத்தினுள் Ivaaiyum pattum vallaarkal,இவையும் பத்தும் வல்லார்கள் - இவை பத்தையும் ஓதவல்லவர்கள் Konda pentir makkale,கொண்ட பெண்டிர் மக்களே - ஸ குடும்பமாக Nalla pathal,நல்ல பத்த்தால் - பாகவத சேஷ்த்வ பர்யந்தமான சிறப்புடனே Manai vaazhvaar,மனை வாழ்வார் - க்ருஹஸ்தர்களாக வாழப்பெறுவர்கள். |
| 3656 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (வடதளசயனனான மஹோபகாரகன் திருவடிகளிலே ப்ரேமத்தோடு பணிந்து அநவாத கைங்கரியம் பண்ணுங்கோளென்று, இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற ஆச்ரயணத்தைச் சுருக்கமாகவருளிச் செய்கிறார்.) 1 | மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக் காலை மாலை கமல மலர் இட்டு நீர் வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1 | Velai modhum madhil sul,வேலை மோதும் மதில் சூழ் - கடலலை மோதப் பெற்ற மதிளாலே சூழப்பட்ட Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருப்பவனும் Aalin mel,ஆலின் மேல் - ஜலத்தின் மீது Aal amarnthaan,ஆல் அமர்ந்தான் - ஆலிலையில் கண் வள்ர்ந்தவமான Maalai,மாலை - ஸர்வேச்வரனை Kanni,கண்ணி - கிட்டி Adi inaigal,அடி இணைகள் - அவனது உபயபாதங்களையும் Kaalai maalai,காலை மாலை - இரவும் பகலும் Kamalam malar ittu,கமலம் மலர் இட்டு - தாமரைப்பூக்களை ஸமர்ப்பித்து Neer,நீர் - (அன்பர்களே!) நீங்கள் Vinai keda,வினை கெட - (உங்களுடைய) பாவம் தொலையும்படி Thozhudhu ezumin,தொழுது எழுமின் - வணங்கி உஜ்ஜீவியுங்கள் |
| 3657 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (“கள்ளவிழும் மலரிட்டு இறைஞ்சுமின் “என்று அருளிச் செய்கையாலே இன்ன மலரென்று ஒரு நிர்ப்பந்தமில்லை யென்பது காட்டப்படும். கீழ்ப்பாட்டில் “கமல மலரிட்டு ” என்றது– கமல மலரேயாக வேணுமென்றும் அதுபோன் சிறந்த மலரேயாக வேணுமென்றும் காட்டினபடியன்று என்பதை இப்பாட்டில் தெளியவைத்தாராயிற்று..) 2 | கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின் நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2 | Thondare,தொண்டரே - எம்பெருமானிடத்து ஆசையுள்ளவர்களே Neer,நீர் - நீங்கள் Kal avizhum malar,கள் அவிழும் மலர் - தேனொழுகுகின்ற புஷ்பங்களைப் பணிமாறி Iraijin,இறைஞ்சுமின் - வணங்குங்கள் Nalli serum,நள்ளி சேரும் - பெண் நண்டுகள் களித்த வாழப்பெற்ற கழனிகள் சூழ்ந்த Vayal sul kidankin,வயல் சூழ் கிடங்கின் - அகழ்களைப் பக்கங்களிலே யுடையதும்புடை Velli aaynth madhin soo zh,வெள்ளி ஏய்ந்த மதின் சூழ் - சுக்கிரனைத் தொட்டுக் கொண்டிருக்கிற மதிள்களாலே சூழப்பட்டதமான Thiru Kannapuram,திரு கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தை Ullli,உள்ளி - சிந்தனை செய்து கொண்டு Naalum,நாளும் - நாடோறும் Thozhudhu ezumin,தொழுது எழுமின் - வணங்கி உஜ்ஜீவியுங்கள் |
| 3658 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (திருக்கண்ணபுரத்திலே நின்றருளினவன் உபயவிபூதி நாதனாயிற்று; தொண்டர்களே உங்கள் துக்கங்கெட அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு ஆச்ரயியுங்கோளென்கிறார்) 3 | தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய் விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3 | Thondar,தொண்டர் - தொண்டர்களே Vantu paadum pozhi soo zh,வண்டு பாடும் பொழிழ் சூழ் - வண்டுகள் பாடுமிடமான் சோலைகளாலே சூழப்பட்ட Thiru Kannapurathu,திரு கண்ணபுரத்து - திருக் கண்ணபுரத்தி வெழுந்தருளியிருக்கிற Andam vaanan amarar perumaa nai,அண்டம் வாணன் அமரர் பெருமானை - அகிலாண்ட கோடி ப்ரஹ மாண்டநாயகனான எம்பெருமானை Thum tham thuyar poka,தும் தம் துயர் போக - உங்களுடைய துக்கம் தொலையும்படி Neer aegam aay,நீர் ஏகம் ஆய் - நீங்கள் அநந்ய ப்ரயோஜநர்களாய் Vindu vaadaa malar ittu,விண்டு வாடா மலர் இட்டு - மலர்ந்து வாடாத (அப்போதலர்ந்த) பூக்களைப் பணிமாறி Neer iraijumeen,நீர் இறைஞ்சுமீன் - நீங்களே தொழுங்கள் |
| 3659 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (ஆச்ரயிக்குமளவில் நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயியுங்கொள்; அவளுடைய புருணகாரபலத்தாலே பேறு தப்பாதென்கிறார்.) 4 | மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத் தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம் தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4 | Maanai nokki mada pinai than kaelvanai,மானை நோக்கி மட பின்னை தன் கேள்வனை - மானை யொத்த கண்பார்வையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு நாதனும் Kaenai,கேணை - தேன்போல் இனியனுமான எம்பெருமானை Vaadaa malar ittu neer iraijchamin,வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சமின் - அப்போதலர்ந்த செவ்விப் பூக்களையிட்டு நீங்கள் தொழுங்கள் Vaanai undhum madhil soo zh,வானை உந்தும் மதிள் சூழ் - ஆகாசத்தை யளாவியிருக்கின்ற மதிகளாலே சூழப்பட்ட Thiru Kannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தை Nayanda perumaan thaane,நயந்த பெருமான் தான் - விரும்பியிருக்கின்ற சௌரிப்பெருமானே Saran aagum,சரண் ஆகும் - ரக்ஷகராவர் |
| 3660 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (கீழ்ச்சொன்னபடி பக்தி யோகத்தால் அவனை யாம்யிக்க அதிகாரிகளல்லாமல் தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினவர்களுக்கு எ ம்பெருமான் எல்லாப்படியானும் தக்ஷகனாய் தேஹாவஸானத்திலே அவர்களை இந்த ப்ரக்ருதியில் நின்றும் விடுவித்துத் திருநாட்டிலே கொண்டுபோய் வைத்தருள்லனென்கிறார்.) 5 | சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத் தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5 | Thanathaal adai tharukku,தனதாள் அடை ந்தார்க்கு - தனது திருவடிகளை உடைந்தவர்களுக்கு Charanam ellaam aagum,சரணம் எல்லாம் ஆகும் - ஸகலவித ரக்ஷசனுமாய் Maranam aanal,மரணம் ஆனால் - இந்த தேஹம் விட்டு நீங்கினவுடனே Vaikundam kodukkum,வைகுந்தம் கொடுக்கும் - பரமபதமளிக்கும் பெருமானுமாய்பிரான் Thiru Kannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரமாகிற Kaan,காண் - ஷேத்திரத்தை Aalan,ஆளன் - ஆள்பவனுமான எம்பெருமான் Anbu aagum,அன்பு ஆகும் - அன்புதானே வடிவெடுத்தவனாயிருப்பன் |
| 3661 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( தன தாளடைந்தார்க்கெல்லாம் அன்பனாகும்= “அநாலோசித விசேஷாசேஷ லோகசரண்ய!” என்று எம்பெருமானாரருளிச் செய்வதை இங்கு அநுஸந்திப்பது. தனது திருவடிகளையுடைந்தாரில் இன்னாரினையாசென்று வாசி பாராதே வஸிஷ்ட சண்டாள விபாகமற எல்லார்க்குமொக்க ஸ்நேஹிக்குமவன் எம்பெருமான் என்று ஆழ்வானருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம்.) 6 | அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான் நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6 | Thana thaal adainthaarkku ellaam,தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - தனது திருவடிகளைப்பற்றினாரெல்லார்க்கும் Anban aagum,அன்பன் ஆகும் - அன்பு செய்பவனாய் Sempon aagathu avunan udal keentavan,செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கிண்டவன் - சிவந்த பொன்போன்ற அடம்பையுடைய இரணியாசுரனது உடைலைக் கீண்டவனாய் Naan pon eyndha madhil sooal,நான் பொன் எய்ந்த மதிள் சூழ் - நல்ல பொன்னாலே யமைத்த மதிளாலே சூழப்பட்ட Thiru Kannapurathu Anban,திரு கண்ணபுரத்து அன்பன் - திருக்கண்ணபுரத்திலே விருப்பமுடையவனான எம்பெருமான் Thana meyyarkku,தன மெய்யர்க்கு - தன் திறத்திலே உண்மையாக ஸ்நேஹிக்குமவர்களுக்கு Naalum meyyan,நாளும் மெய்யன் - எப்போதும் உண்மையான ஸ்நேஹமுடையவன் |
| 3662 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( இப்படி மெய்யர்க்கே மெய்யனாயும் பொய்யர்க்கே பொய்யனாயுமிருக்கு மிருப்பைத் திருக்கண்ணபுரத்திலே காட்டிக் கொண்டு வர்த்திக்கும் பெருமான் , ஆகத்து அணைப்பார்கட்கு அணியன் தன்னை ஹருதயத்திலே வைப்பார்க்குக் கையாளாயிருப்பன்.) 7 | மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம் செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே –9-10-7 | Seiyilvaalai ugalum Thiru Kannapurathu Aiyan,செய்யில்வாளை உகளும் திரு கண்ணபுரத்து ஐயன் - கழனிகளில் வாளை மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற திருக்கண்ண புரத்திலே யெழுந்தருளி யிருப்பவனான எம்பெருமான் Aagathu anaip paarkatku,ஆகத்து அணைப் பார்கட்கு - தங்கள் மனத்தில் ஊன்றவைத்துக் கொள்பவர்களுக்கு Virumbi thozhu vaarkku ellaam,விரும்பி தொழு வார்க்கு எல்லாம் - தன்னையே புருஷார்த்தமாக ஆசைப்பட்டு தொழுமவர்களெல்லார்க்கும் Meyyan aagum,மெய்யன் ஆகும் - மெய்யன்பனாய் Purame thozhuvaarkku ellaam,புறமே தொழுவார்க்கு எல்லாம் - பிரயோஜநாந்தாங்களுக்காக மேலெழுத் தொழுமவர்களுக்கெல்லாம் Poyyan aagum,பொய்யன் ஆகும் - தன்னை உள்ளபடி காட்டமாட்டாதவனாய் |
| 3663 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( மணியும் பொன்னுமிழக்கப் பெற்ற மதிலாளே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே, திருநாட்டிலிருக்கும் படியில் ஒன்றுங்குறையாதே யெழுந் தருளியிருக்கும் சௌரிப் பெருமாளுடைய திருவடிகளையே உபாயமும் உபேயமுமாகப் பற்றுங்கள் என்றாராயிற்று) 8 | அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம் பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8 | Thana thaal adainthaarkku ellaam,தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - தன் திருவடிகளைப் பணிந்தவர் களெல்லார்க்கும் Aniyan aagum,அணியன் ஆகும் - அந்தரங்கனா யிருப்பன் Piniyum saaraa,பிணியும் சாரா - வியாதி முதலானவைகளும் அணுகமாட்டா Piravi keduthu aalum,பிறவி கெடுத்து ஆளும் - ஸம்ஸார ஸங்கத்தை யறுத்து அடிமை கொள்வன் Mani pon aayndha madhil soo'l,மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் - ரத்னங்களும் பொன்களும் பொருந்தின மதிளாலே சூழப்பட்ட Thirukkannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தி யெழுந்தருளிளிருக்கிற Paramaetti than paatham,பரமேட்டி தன் பாதம் - பரம புருஷனுடைய திருவடிகளை |
| 3664 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (பிறர்க்கு உபதேசஞ்செய்வது கிடக்க, தாம் முன்னம் அவனையாச்ரயித்துக் குறை தீர்ந்தபடியைப் பேசிக்களிக்கிறார்) 9 | பாதம் நாளும் பணியத் தணியும் பிணி ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9 | Vedham nvaar virumbum,வேதம் நாவர் விரும்பும் - வைதிகர்கள் விரும்பி வர்த்திக்குமிடமான Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்ததருளியிருக்கிற Aadiyaanai,ஆதியானை - முழுமுதற்கடவுளான எம்பெருமானை Adainthaarkku,அடைந்தார்க்கு - ஆச்ரயித்தவர்களுக்கு Allal illai,அல்லல் இல்லை - துக்கமொன்று மில்லையாகும் Naalum paadham paniya,நாளும் பாதம் பணிய - (அப்பெருமானுடைய) திருவடிகளை எப்போதும் ஸேவிக்கு மளவில் Pini thaniyum,பிணி தணியும் - நோய்கள் அறும் Ekam saaraa,ஏகம்சாரா - பாவங்கள் சேரமாட்டா Ini,இனி - இப்படியான பின்பு En kurai,என் குறை - என்ன குறையுண்டு? (ஒரு குறையுமில்லை) |
| 3665 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (பத்தியையோ ப்ரபத்திலேயோ அனுஷ்டிக்க சக்தரல்லாதவர்கள் திருக்கண்ணபுரமென்று சொன்னவளவிலே ஸமஸ்ததுக்கங்களும் போமென்கிறார்) 10 | இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை அல்லி மாதர் அமரும் திரு மார்பினன் கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10 | Allal illai,அல்லல் இல்லை - துக்கங்கள் தொலையும் எனக்கு இனி என் குறை Alli maadhar amarum thirumaarpavan,அல்லி மாதர் அமரும் திருமார்ப்பவன் - தாரையாளான பெரிய பிராட்டியாரு ருதையும் திருமார்பையுடைய பெருமான் Nallil aayndha madhil sul,நல்லில் ஏய்ந்த மதிள் சூழ் - கற்பணிமிக்க மதிளாலே சூழப்பட்ட Thiru Kannapuram solla,திரு கண்ணபுரம் சொல்ல - திருக்கண்ணபுரம் என்று சொன்ன வளவில் Naalum,நாளும் - ஒரு நாளும் Thuyarpaadu saara,துயர்பாடு சாரா - துக்கம் அணுகாது |
| 3666 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( பலனுரைத்துத் தலைக்கட்டவேண்டிய இப்பாசுரத்தில் “இப்பத்தும் பாடி பணிமிளவன்தாள்களே” என்று உபநெசரூபமாகவே யருளிச்செய்தாரெனினும் இதுவும் பயனுரைப்பதாகவே தலைக்கட்டும்) 11 | பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர் மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல் பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11 | Vinai patru,வினை பற்று - துக்க ஸம்பந்தம் Paadu saara,பாடு சாரா - அருகில் கிட்டாதபடி Ara venduveer,அற வேண்டுவீர் - அது கொலையவேணு மென்றிருப்பவர்களே Maadam needu GuruKoor,மாடம் நீடு குருகூர் - மாடமாளிகைகள் உயர்ந்த திருநகரியிலே அவதிர்த்த Sadagopan,சடகோபன் - ஆழ்வார் Sol,சொல் - அருளிச்செய்த thamizh aayiraththul ippattum,தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் - தமிழ் பாடல் ஆன ஆயிரத்துள் இப் பத்தும் – Paadi,பாடி - வாயாரப்பாடி Aadi,ஆடி - அதற்குச் சேர நர்த்தன்ம் பண்ணி Avan thaalgalae panimin,அவன் தாள்களே பணிமின் - அப்பெருமானுடைய திருவடிகளையே தொழுங்கள் |
| 3755 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (திருநாட்டுக்குப் புறப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்ட உகப்பின் மிகுதியினால் ஸ்தாவரஜங்கமங்களுக்குண்டான வேறுபாட்டை யருளிச்செய்கிறார். தமக்கான பேறுதன்னை இங்ஙனே அசலிட்டுச் சொல்லுகிறபடி) 1 | சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1 | En appan, என் அப்பன் - அஸ்மத் ஸ்வாமியாய் Vaazhpuhal,வாழ்புகழ் - நித்ய கீர்த்தியுக்தனான Naaranaan,நாரணன் - ஸ்ரீமந் நாராயணனுடைய Thamarai,தமரை - அடியார்களை Kandu ukanthu,கண்டு உகந்து - வரக்கண்டு களித்து Soozh visumpu,சூழ் விசும்பு - எங்கும்பரந்த ஆகாசத்திலே Animugil,அணிமுகில் - அழகிய மேகங்கள் Thooriyam muzhakin,தூரியம் முழக்கின - வாத்ய கோஷம் செய்தன போன்றிருந்தன; Aal kadal,ஆழ் கடல் - ஆழமான கடல்கள் Alai thirai,அலை திரை - அலைந்து வருகிற திரைகளை Kai eduthu,கை எடுத்து - கையாகக் கொண்டு Aadina,ஆடின - கூத்தாடின; Ezhu pozhilum,ஏழ் பொழிலும் - ஸப்த த்வீபங்களும் Vazham aandhiya,வளம் ஏந்திய - உபஹாரங்களைக் கையேந்தின. |
| 3756 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மேலுண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை யருளிச்செய்கிறாரிதில்;) 2 | நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில் நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2 | Naaranaan thamarai kandu,நாரணன் தமரை கண்டு - பாகவதர்களைக் கண்டு Nal neer mugil,நல் நீர் முகில் - நல்ல தீர்த்தம் நிறைந்த மேகமானது Ukanthu,உகந்து - மகிழ்ந்து Uyar vinnil,உயர் விண்ணில் - உயர்ந்த ஆகாசத்திலே Pooranam pon kudam poorthadhu,பூரணம் பொன் குடம் பூர்த்தது - பூர்ண கும்பம் நிறைத்து வைத்தாற்போன்;றிருந்தது; Neer ani kadalgal,நீர் அணி கடல்கள் - நீரை வஹிக்கிற கடல்களானவை Nindru aarthina,நின்று ஆர்த்தின - நிலைநின்று கோஷித்தன Ulaku,உலகு - அந்தந்த லோகங்களிலுள்ளார் Engum thozhudhunar,எங்கும் தொழுதுனர் - எங்கும் தொழுதுகொண்டிருந்தார்கள் Netuvarai thoranam niraitthu,நெடுவரை தோரணம் நிரைத்து - பெரியமலைகளைத் தோரணங்களாக ஒழுங்குபடுத்தி. |
| 3757 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (ஆதிவாஹிக லோகங்களென்று சிலவுண்டு; வழிநடத்துகிறவர்களாமவர்கள்; அவர்கள் எதிரே வந்து பூமார் பொழிந்து கொண்டாடும்படியை யருளிச்செய்கிறார்) 3 | தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள் வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3 | Andru,அன்று - முன்பொருகால் Bhoomi alandhavan thamar munne,பூமி அளந்தவன் தமர் முன்னே - பூமியை அளந்துகொண்ட பகவானது அடியார்களின் ஸன்னிதியிலே Doobam,தூபம் - தூபம் ஸமரிப்பிப்பதோடு Nal malar mazhai,நல் மலர்மழை - நன்றான புஷ்பவர்ஷத்தைப் பொழிகின்றவர்களாய்க்கொண்டு Ulakargal,உலகர்கள் - அந்தந்தலோகங்களிலுள்ளவர்கள் Thozhudhanar,தொழுதனர் - தொழுதார்கள்; Munivargal,முனிவர்கள் - ஆங்காங்குள்ளமுனிவர்கள் (தாங்கள் மௌனமாயிருக்கும் விரதத்தை தவிர்ந்து) Vaikundharkku,வைகுந்தர்க்கு - ஸ்ரீ வைகுண்டத்தை நோக்கிப் போமவர்களுக்கு Vazhi idhu endru,வழி இது என்று - இதுதான் வழி என்று சொல்லி Edhire vandhu,எதிரே வந்து - அபிமுகர்களாக வந்து Ezumin endru,எழுமின் என்று - எழுந்தருளவேணும் எழுந்தருளவேணுமென்று எச்சாரிக்கையிட்டு irumarungu isaithanar,இருமருங்கு இசைத்தனர் - இருபக்கங்களிலும் சொன்னார்கள் |
| 3758 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மேலுலகங்களில் தேவர்கள், இவர்கள் போகிற வழிகளிலே தங்குகைக்குத் தோப்புகள் சமைத்தும் வாத்யகோஷம் முதலானவற்றைப் பண்ணியும் கொண்டாடும்படியைக் கூறுகிறார்) 4 | எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4 | Madhu vir thuzhai mudi,,மது விர் துழாய் முடி, - தேன் பெருகுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலேயுடைய Madhavan,மாதவன் - திருமாலினது Thamarkku,தமர்க்கு - அடியாரான பாகவதர்களுக்கு தேவர்கள் Edhiri edhiri,எதிர் எதிர் - இவர்கள் போகிற வழிக்கு முன்னே Irubu idam vaguthanar,இருப்பு இடம் வகுத்தனர் - தங்குமிடங்களைச் சமைத்தார்கள் Kathiravar,கதிரவர் - த்வாதசாதித்யர்களும் Avar avar,அவர் அவர் - மற்றுமுள்ளவர்களும் ஆதி வாஹிக கணங்களெல்லாம் Kai nirai kaattinar,கை நிரை காட்டினர் - பார்த்தருளீர் பார்த்தருளீர்!! என்று கைகாட்டிக் கொண்டேசென்றார்கள் Athir kural,அதிர் குரல் - அதிருகிற முழக்கத்தையுடைய Murasangal,முரசங்கள் - போரிகளானவை Alaikadal muzhakku otta,அலைகடல் முழக்கு ஒத்த - அலையெறிகின்ற ஸமுத்ரகாரிஜனை போன்றிருந்தனர். |
| 3759 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (வாசலில் வானவரென்ரது அர்ச்சிராதி மார்க்கத்திலே தலைநின்ற வருண இந்த்ர ப்ரஜாபதிகளை, அவர்கள் மதவன்தமரென்று கொண்டாடினார்களம். இவர்கள் பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயித்த அந்தப்புரபரிகர பூதர்களென்று சொல்லிக் கொண்டாடினார்களாம்) 5 | மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5 | Vaanavar,வானவர் - வருணன் இந்திரன் பிரஜாபதி ஆகிய தேவர்கள் Vaasalil,வாசலில் - தம்தம் ஸ்தானங்களின் வாசல்களிலே வந்து Maadhavan thamar endru,மாதவன் தமர் என்று - இவர்கள் பரமபாகவதர்கள்‘ என்று சொல்லி ஆதரித்து Pothumin,போதுமின் - இங்ஙனே எழுந்தருளுங்கள்! Emathu idam puguthuga,எமது இடம் புகுதுக - எங்களது அதிகார ஸ்தலங்களிலே பிரவேசியுங்கள் Endralum,என்றலும் - என்று சொன்னவாறே Vedam nal vaayavar,வேதம் நல் வாயவர் - (மேலுலகங்களிலே) வைதிகராயுள்ளவர்கள் Velvi ulmaduthu,வேள்வி உள்மடுத்து - தாங்கள் செய்த தேவபூஜைகளின் பலன்களை ஸமர்பிக்க Kinnarar gerudargal,கின்னரர் கெருடர்கள் - கின்னர்ர்களும், கருடர்களும் Keedhangal paadinar,கீதங்கள் பாடினர் - கீதங்களைப் பாடினார்கள் |
| 3760 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினபடியை யருளிச்செய்கிறார்.) 6 | வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6 | Velvi ul matuthalum,வேள்வி உள் மடுத்தலும் - வைதிகர்கள் தம்தம் தேவ பூஜா பலன்களை ஸமரிப்பித்தவளவிலே Virai kamizh,விரை கமிழ - பரிமளம் மிக்க Narupukai,நறுபுகை - ஸீகந்த தூபங்களானவை Engum kalanthu,எங்கும் கலந்து - எங்கும் வியாபிக்க Kaalangal valam puri,காளங்கள் வலம் புரி - திருச்சின்னங்களையும் சங்கு களையும் Isaithanar,இசைத்தனர் - ஊதினார்கள் Vaal on kan madanthaiyar,வாள் ஒண் கண் மடந்தையர் - ஒளிமிக்க கண்களையுடைய தேவஸ்த்ர்கள் Aazhiyaan thamar,ஆழியான் தமர் - “திருவாழியை யேந்திய எம்பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களே! Vaanagam aan mingal endru,வானகம் ஆண் மின்கள் என்று - இந்த ஸ்வர்க்காதிபதங்களை ஆளுங்கோள்” என்று சொல்லி Magizhnthu vaazhthinar,மகிழ்ந்து வாழ்த்தினர் - ப்ரீதியுடன் வாழ்த்தினார்கள் |
| 3761 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மருத் கணங்களும் வஸீகணங்களும் தங்களுடைய எல்லைக்கு அப்பாலும் தொடர்ந்துவந்து தோத்திரம் செய்யும்படி சொல்லுகிறது) 7 | மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7 | Todukadal kidantha,தொடுகடல் கிடந்த - அகாதமான கடலிலே திருக்கண் வளர்ந்தருளின் Em Keshavan,எம் கேசவன் - எம்பெருமானாய் Kilar oli mani mudi,கிளர் ஒளி மணி முடி - கிளர்ந்தவொளியையுடைய ரத்னகிர்டத்தையணிந்த வனாய்க்கொண்டு Kudanthai,குடந்தை - திருக்குடத்தையிலே கண் வளர்ந்தருளுகிற Em Kovalan,எம் கோவலன் - எமது கோபாலனுக்கு Kudi adiyarkku,குடி அடியார்க்கு - குலங்குலமாக அடிமைப்பட்டவர்கள் விஷயத்திலே Madanthaiyar vaazhththalum,மடந்தையர் வாழ்த்தலும் - அப்ஸலஸ்ஸீக்கள் பல்லாண்டு பாடினவளவிலே Marutharum vasukkalum,மருதரும் வசுக்களும் - மருந்துக்களும் அஷ்டவசுக்களும் Engum todarndhu,எங்கும் தொடர்ந்து - போமிடமெங்கும் தொடர்ந்துவந்து Thothiram sollinar,தோத்திரம் சொல்லினர் - பல்லாண்டு பாடினார்கள் |
| 3762 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால் பரமபதத்திற்குப் புறம்பாக நீத்ய ஸூரிகள் இவர்களை எதிரிகொள்ளும்படி சொல்லுகிறது இப்பாட்டில்) 8 | குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8 | Ivar govindan thanukku kudi adiyar endru,இவர் கோவிந்தன் தனக்கு குடி அடியார் என்று - இவர்கள் பகவார்க்குக் குலங்குலமாக அடியவர்கள் என்று சொல்லி Mudi udai vaanavar,முடி உடை வானவர் - சேஷத்வத்துக்குச் சூடின முடியையுடைய நித்ய ஸூரிகள் Murai murai,முறை முறை - சிரமம் தப்பாமல் Edhirigolla,எதிரிகொள்ள - ‘ஸ்வாகதம்’ என்று சொல்லி யெதிரிகொண்டழைக்க Vadivu udai Maadhavan Vaikundam puga,வடிவு உடை மாதவன் வைகுந்தம் புக - அழகிய வடிவு படைத்த எம்பெருமானுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே பிரவேசிக்கைக்குறுப்பான Kodi ani netumadil,கொடி அணி நெடுமதிள் - அலங்ற்ரமாக வெடுத்துக் கட்டின கொடிகளையுடைய உயர்ந்த மதிளை யுடைத்தான Gopuram kuruginar,கோபுரம்குறுகினர் - தலைவாசலில் புகுந்தார்கள். |
| 3763 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (அங்குள்ள நித்யஸூரிகள் இவர்களைக் கண்டு ‘இப்படி பரமபதத்திலே வருவதே இதென்ன பாக்யம்! இதென்ன பாக்யம்!!’ என்று வியந்து மகிழ்ந்தனரென்கிறதிப்பாட்டில்) 9 | வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9 | Vaikundam pukudhalum,வைகுந்தம் புகுதலும் - ஸ்ரீ வைகுண்டத்திலே சென்று புகுந்தவளவிலே Vaasalil vaanavar,வாசலில் வானவர் - திருவாசல்காக்கும் முதலிகளானவர்கள் Vaikundan thamar emar,வைகுந்தன் தமர் எமர் - “ஸ்ரீவைகுண்ட நாதனுடையார்கள் எங்களுடைய ஸ்வாமிகள் (ஆகையாலே) Emadhu idam pukuthu endru viyathanar,எமது இடம் புகுது என்று வியத்தனர் - எங்களதிகாரத்திலே புக வேணும்” என்றுசொல்லி உகந்தார்கள்; Vaikundathu,வைகுந்தத்து - அவ்விடத்திலே Amararum munivarum,அமரரும் முனிவரும் - கைங்கரிய நிஷ்டராயும் குணாநுபவ நிஷ்டராயுமுள்ளவர்கள் Mannavar Vaikundam puguvadhu vidhiye (endru) viyandhanar,மண்ணவர் வைகுந்தம புகுவது விதியே (என்று) வியந்தனர் - “லீலாவிபூதியி லிருந்தவர்கள் நித்ய விபூதியேற வருவது மஹா பாக்யமே!” என்று சொல்லி உகந்தார்கள். |
| 3764 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மண்ணவர் விண்ணவராகப் பெற்றது நம்முடைய பரமபாக்கியமன்றோவென்று மீண்டும் சிலர்சொல்லத் தொடங்கினர்) 10 | விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10 | Vidhi vakai puguṉnar endru,விதி வகை புகுந்னர் என்று - “நம்முடையபாக்யாநுகுணமாக இவர்கள் இவ்விடம் வந்து சேர்ந்தார்கள்” என்று சொல்லி Nalvethiyar,நல்வேதியர் - நல்ல வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்ட நித்ய ஸூரிகள் Pathiyinil,பதியினில் - தம்தம்திவ்யஸ்தானங்களிலே Panginil,பாங்கினில் - உபசாரங்களுடனே pathangal kazhuvinar,பாதங்கள் கழுவினர் - வந்தவர்களது திருவடிகளை விளக்கினார்கள் Nidhiyum,நிதியும் - ஸ்ரீவைஷ்ணவர்க்குநிதியான திருவடி நிலைகளையும் Nal sunnamum,நல் சுண்ணமும் - ஸ்ரீசூர்ணத்தையும் Nirai kudam,நிறை குடம் - பூரண கும்பங்களையும் Vilakkamum,விளக்கமும் - மங்கள தீபங்களையும் Madhi mugam madandhaiyar,மதி முகம் மடந்தையர் - சந்திரன்போன்ற முகத்தை யுடையவர்களான பாரிசார்கைகள் Vandhu yendhinar,வந்து ஏந்தினர் - ஏந்திக்கொண்டு எதிரே வந்தார்கள் |
| 3765 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (இப்பதிகம் வல்லார், நித்ய விபூதியிலே பகவத் குணாநுபவம் பண்ணி அதிலே யீடுபட்டு அதுக்கவ்வாருகு கால்வாங்க மாட்டாதே யிருப்பாரோ டொப்பர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறாராயிற்று. கீழ்ப் பாசுரங்களில் சொல்லிற்றை யெல்லாம் ஸங்க்ரஹமாக அநுபாஷிக்கிறாராயிற்று) 11 | வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11 | Avar vandhu edhir kolla,அவர் வந்து எதிர் கொள்ள - அந்த பெருமாளும் பிராட்டியும் வந்து எதிரிகொள்ள Mamani mandapathu,மாமணி மண்ட பத்து - திருமாமணி மண்டபத்திலே Antham il perinpathu,அந்தம் இல் பேர் இன்பத்து - முடிவில்லாத மஹானந் தத்தை யுடைய Adiyarodu,அடியரோடு - பரம்பாகவதர்களோடே கூடி Kotthu alarpoliz kurukur sadagopan,கொத்து அலர்பொழில் குரு கூர் சடகோபன் - பூங்கொத்து அலருகிற சோர்லைகளை யுடைத்தான திருநகாரிக்குத் தலைவரான ஆழ்வார் Sol,சொல் - அருளிச்செய்த Sandhangalḷ ayirathu,சந்தங்;கள் ஆயிரத்து - வேதரூபமான ஆயிரம் பாசுரங்களில் Ivai,இவை - இப்பத்துப் பாசுரங்களை Vallar,வல்லார் - ஒதவல்லவர்கள் Munivare,முனிவரே - பகவத்குணங்களை மனனம் பண்ணும் முனிவராவர் |
| 3766 | திருவாய்மொழி || 10-10 முனியே (நிர்ஹேதுகமாக வடிவழகைக் காட்டி என்னை யீடுபடுத்திவைத்து உன்னையொழியச் செல்லாதபடி பண்ணிவைத்து இப்படி ஸம்ஸாரத்திலே இன்னமும் தள்ளி வைப்பது தகுதியன்று என்கிறார்.) 1 | முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1 | முனியே, Muniye - படைக்கும் வகையை மனனம் பண்ணுமவனே! நான்முகனே, Naanmugane - நான்முகனுக்கு அந்தரியாமியாயிருக்குமவனே! முக்கண் அப்பா, Mukkan appa - ஸம்ஹாரக் கடவுளான ருத்ரனுக்கு அந்தரியாமியானவனே! கனிவாய் தாமரை கண், Kanivaai thaamarai kan - கனிந்த அநரத்தையும் தாமரைபோன்ற திருக்கண்களையுமுடைய என் பொல்லா கருமாணிக்கமே, En polla karu maanikkame - துளையாத கருமாணிக்கம் போன்ற திருவுருவத்தை எனக்கு அநுபவிப்பித்தவனே! என் கள்வா, En kalva - என்னை வஞ்சித்து ஈடுபடுத்திக் கொண்டவனே! தனியேன் ஆர் உயிரே, Thaniyen aar uyire - என்னொருவனுக்குப் பாரி பூர்ண ப்ராணனானவனே என் தலை மிசை ஆய் வந்திட்டு, En thalai misai aai vandhittu - என் தலைமேலே வந்து சேர்ந்தாயான பின்பு இனி நான் போகல் ஒட்டேன், Ini naan pogal otten - இனி யொருநாளும் உன்னை அகன்றுபோக இசையமாட்டேன்: என்னை , Ennai - ஆர்த்தி மிகுந்த என்னை ஒன்றும் மாயம் செய்யேல், ondrum maayam seiyel - ஒரு படியாலும் வஞ்சிக்கலாகாது. |
| 3767 | திருவாய்மொழி || 10-10 முனியே (தம் காரியம் செய்தல்லது நிற்க வொண்ணாதபடி ஆணையிடுகிறாரிப்பாட்டில். ஒன்றும் மாயம் செய்யேலென்னையே என்று கீழ்ப்பாட்டில் சொன்னவுடனே எம்பெருமான் வந்து அபயமளிக்க வேணுமே, அது செய்யக் காணாமையாலே மீண்டும் மாயஞ்செய்யேலென்னை யென்கிறார்) 2 | மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய் நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2 | என்னை மாயம் செய்யேல், ennai maayam seiyel - என் திறத்தில் வஞ்சனை பண்ணா தொழியவேணும்; உன் திருமார் வத்து மாலை, Un thirumaar vathu maalai - உன்னுடையதிருமார் விலேசாத்திய மாலை போன்றவளாய் நங்கை, Nangai - ஸகல குணபாரிபூர்ணையாய் வாசம் செய்; பூ குழலாள், Vaasam sey; poo kuzhalaal - பரிமளம் மிக்க கூந்தலையுடையவளான திரு ஆணை, Thiru aannai - பெரியபிராட்டியாணை: நின் ஆணை, Nin aannai - உன் ஆணை நேசம் செய்து, Nesam seydhu - தானாகவே ஸ்நேஹித்து உன்னோடு, Unodu - உன்னோடே என்னை, Ennai - நீசனான என்னை உயிர் வேறு அன்றி, Uyir veru andri - ஆத்மபேத மில்லாமல் ஒன்று ஆகவே, Ondru aagave - ஏக வஸ்துவாகவே கூசம் செய்யாது, Koosam seiyaadhu - எனது தண்மையைப் பார்த்துக் கூசாமல் கொண்டாய், Kondai - அடியேபிடித்து அங்கீகாரித்தருளினாய்; என்னை வந்து கூவி கொள்ளாய் ennai vandhu koovi kollai - (ஆனபின்பு) இனி உபேகூஷியாதே என்னைத் திருவடி சேர்த்துக் கொள்ளவேணும். |
| 3768 | திருவாய்மொழி || 10-10 முனியே (தாஹித்தவன் தாஹ சாந்தி பிறக்கும் அளவும் தண்ணீர் தண்ணீர் -என்னுமா போலே மீண்டும்– கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ-என்கிறார்) 3 | கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம் நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3 | மேவி தொழும், mevi thozhum - விரும்பித் தொழுகின்ற பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம், Biraman sivan indiran aadhiku ellaam - பிரமன் சிவன் இந்திரன் முதலானார்க்கும் முதல், mudhal - மூலநாரணமான நாவி கமலம், naavi kamalam - திருநாபிக்கமலத்திற்கு கிழங்கே, kizhange - இருப்பிடமானவனே! ளும்பர்அந்ததுவே, lumbar andhadhuve - அவர்களிஎம் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் பரம ப்ராப்யனானவனே! ஆவிக்கு, aavikku - ஆத்மாவுக்கு ஒர் பற்று கொம்பு, or patru kombu - ஓர் கொள்கொம்பு நின் அலால், nin alaal - உன்னைத் தவிர யான் அற்கின்றிலேன், yaan arkinrilen - நான் காண்கின்றிலேன்; (ஆதலால்) அந்தோ! வந்து கூவிக்கொள்ளாய். |
| 3769 | திருவாய்மொழி || 10-10 முனியே (ஸர்வநிர்வாஹகனான நீயே என் காரியத்தையும் நிர்வஹிக்கவேண்டியிருக்க, என் காரியம் நானே பண்ணிக் கொள்வேனாகப் பார்த்திருக்கிறாயாகில் என்னைக் கைவிட்டபடியன்றோ வென்கிறார்.) 4 | உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4 | உம்பர்அம் தண் பாழேயோ, umparam than paazheyo - மூல ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனானவனே! அதனுள் மிசை நீயேயோ, adhanul misai neeyeyo - அந்தப்ரக்ருதிக்குள்ளே நிற்கிற ஆத்ம தத்வத்துக்கு நிர்வாஹகனானவனே! அம்பரம் நல்சோதி அதனுள் பிரமன் அரண் நீ, ambaram nalsothi adhanul biraman aran nee - ஆகாசம் முதலானவற்றுக்கும் அண்டத்துக்குள்ளேயிருக்கிற பிரமன் சிவன் முதலான வர்களுக்கும் நிர்வாஹன் நீ; உம்பரும் , umbarum - மேலான தேவர்களையும் யாதவரும்,yaathavarum - மநுஷ்யாதி ஸகலசேதநரையும் படைத்த முனிவன் அவன் நீ, padhaitha munivan avan nee - அவரவர்களது கருமங்களை மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ; எம் பரம் சாதிக்கல் உற்று, em param saadhikkal utru - (இப்படியாயிருக்க) என் சாரியம் நீயே செய்வதாக ஏறிட்டுக்கொண்டு என்னை போர விட்டிட்டாயே, enai pora vittitaaye - (இவ்வளவும் வர நிறுத்தி) என்னை இங்கேயே பொகட்டுவைத்தாயே. |
| 3770 | திருவாய்மொழி || 10-10 முனியே (ஸர்வரகூஷகனாள நீ உபேகூஷித்தால் என்காரியம் நான் செய்யவோ? பிறர் செய்யவோ? நாளும் செய்;ய முடியாமல் பிறரும் செய்ய முடியாதபடி. யன்றோவிருப்பது; இனி முடிந்தேனத்தனையன்றோவென்கிறார்.) 5 | போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என் தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5 | இரும்பு, irumbu - காய்ச்சின இரும்பானது தீர உண்ட, theera unda - தன் காய்ச்சல் தீரும்படி உண்ட நீர் அது போல, neer athu pola - நீர் போல என் ஆர் உயிரை ஆர பருக, en aar uyirai aara paruka - என் ஆத்மாவின் விடாயெல்லாம் தீரப் பருகுகைக்கு எனக்கு ஆரா அமுது ஆனாயே, enakku ara amuthu anaaye - எனக்கு ஆராவமூதமா யிருக்கின்றாயே; நீ என்னை போர விட்டிட்டு, nee ennai pora vittittu - (இப்படியிருக்க) நீ என்னை அநாதாரித்து புறம் போக்கல் உற்றால், puram pokkal utraal - உபேகூஷித்துப் பொருட்டால் பின்னை, pinai - ஸர்வ சக்தியான நீயுமிப்படி கைவிட்டபின்பு யான், yaan - அசக்தனான நான் ஆரை கொண்டு, aarai kondu - எந்த உபாயத்தைக் கொண்டு எத்தை, yethai - எந்த புருஷார்த்தத்தை (ஸாதிப்பேன்!) அந்தோ, andho - ஜயோ! எனது என்பது என், enathu enbadhu en - என்னுடையதென்கைக்கு என்ன இருக்கிறது. யான் என்பது னுள், yaan enbadhu nul - நான் என்கைக்கு ஒரு ஸ்வதந்த்ர கர்த்தாவுண்டோ? |
| 3771 | திருவாய்மொழி || 10-10 முனியே (பெரிய பிராட்டியார்டத்திற்போலே என்னிடத்திலும் மிகுந்த அபிநிவேசம் கொண்டவனாய் எனது உடலிலுமுயிர்லும் அதிகமான விருப்பத்தைப் பண்ணி புஜித்த நீ இனி யென்னை யுபேஷியாதே விரைவில் விஷயீகரித்தருளாயென்கிறார்) 6 | எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய் உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6 | புணம் க்ற்யா நிறத்த, punam kryaa niraththa - தன்னிலத்தில் அலர்ந்த காயாம்பூப் போன்ற நிறத்தை யுடையையாய் புண்டாரிகம் கண் செம் கனி வாய், puntaarikam kan sem kani vaai - தாமரைபோன்ற திருக்கண்ணையும் சிவந்த திருப்பவளத்தையுமுடையையான உனக்கு, unakku - உனக்கு ஏற்கும், erkum - ஏற்றிருக்கின்ற கோலம், kolam - வடிவு படைத்தவளான மலர்பாவைக்கு, malar paavaikku - பெரிய பிராட்டிக்கு அன்பா, anbaa - அன்பனே! என் அன்பே, en anbe - என் விஷயத்தில் அன்பு தானே வடிவெடுத்தாற் போன்றிருப்பவனே! எனக்கு ஆரா அமுது ஆய், enakku aara amudhu aay - எனக்குப் பரம போக்யனாய் எனது ஆவியை இன் உயிரை, enadhu aaviyai in uyirai - என்னுடைய ஹேயமான ப்ரக்ருதியையும் விலகூஷணனான ஆத்மாவையும் மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய், manakku aaraamai manni undittai - இதயத்துக்கு த்ருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்: இனி உண்டொழியாய், ini undozhiyaai - குறையும் புஜித்தேயாக வேணும். |
| 3772 | திருவாய்மொழி || 10-10 முனியே (பிரளயார்ணவத்திலே மூழ்கியிருந்த ஸ்ரீ பூமிப்பிராட்டியை யெடுத்து அவளோடே கலந்தாப்போலேயும், கடலைக்கடைந்து பிராட்டியோடே ஸம்ச்லேஷித்தாப்போலேயும் பிராட்டி பாரிக்ரஹமானவென்னை ஸம்ஸார ஸாகரத்தில் நின்று மெடுத்து என் பக்கலிலே மிகவும் வியாமோஹங் கொண்டிருக்கிறவுன்னைப் பெற்றுவைத்து இனித் தப்பவிடுவனோவென்கிறார்) 7 | கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7 | கோலம் மலர்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ, kolam malarpaavaikku anbu aagiya en anbeyo - பெரிய பிராட்டியார்க்கு உகப்பானவத்தாலே அவள் பாரிக்ரஹமான என் பக்கலிலே அன்புசெய்யுமவனே! நீலம் வரை, neelam varai - நீலமணி மலை யொன்று இரண்டு பிறை கவ்வி, irandu pirai kavvi - இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்தது ஒப்ப, nimirndhadhu oppa - எழுந்திருந்தாற் போலே கோலம் வராகம் ஒன்று ஆய், kolam varaagam ondru aai - எழுந்திருந்தாற் போலே விலகூஷணமான அத்விதீய மஹா வராஹமாய் நிலம், nilam - பூமியை கோடு இடை கொண்ட, kodu idai konda - எயிற்றிலே கொண்டெடுத்த எந்தாய், endhaai - எம்பெருமானே! நீலம் கடல் உடைந்தாய், neelam kadal udaindhaai - உனது திருமேனி நிழலிட்டாலே நீலமான கடலைக் கடைந்து அமுத மளித்தவனே! உன்னை பெற்று, unnaai petru - உன்னைப் புகலாகப் பெற்று வைத்து இனி போக்குவனோ, ini pokkuvano - கைபுகுந்த பின்பு நழுவ விடுவேனோ! |
| 3773 | திருவாய்மொழி || 10-10 முனியே (மிகவும் விஸஜாதீயனாயிருந்த எனக்கு மிகவும் தாரகனான வுன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ? உயிரைவிட்டு உடல் தாரிக்கவற்றோ வென்கிறார்.) 8 | பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய் முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8 | உயிர் ஆய், uyir aay - கர்ம வச்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய் பயன் அவை ஆய், payan avai aay - கருமபலனான ஸீக துக்கங்களைக் கொடுப்பவனாய்க் கொண்டு இம் மூவுலகும் முற்ற பெருதூறு ஆய், im moovulagum mutra peruthooru aay - இந்த மூவுலக மெல்லாமாகிற பெரிய தூற்றை யுண்டாக்கினவனாய் தூற்றில் புக்கு, thootril pukku - இந்தத் தூறு தன்னுள்ளே புகுந்து முற்ற கரந்து ஒளித்தாய், mutra karandhu oliththai - ஒருபடியாலு மறிய வொண்ணாதபடி மறைந்து நிற்குமவனாய் என் முதல் தனி வித்தே ஓ, en mudhal thani vithe o - எனக்கு உன்னைக் கிட்டுகைக்கு மூல ஸீக்ருதமாயிருப்பவனே! என் தனிபேர் உயிரை உன்னை , en thaniper uyirai unnai - எனக்கு அஸாதாரண தாரகனான வுன்னை பெற்று இனி போக்குவனோ , petru ini pokkuvano - பெற்று வைத்து இனி விடுவேனோ! |
| 3774 | திருவாய்மொழி || 10-10 முனியே (நான் ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பைக் கண்டீர் ஆகில் இனி மற்ற அபேக்ஷிதம் என் என்னில் எனக்கு அதுவே அமையாது – நீ ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பே அன்றியே இவற்றோடு ஒரு கலப்பு இன்றியே திரு நாட்டிலே நீயாய் இருக்கும் இருப்பைக் காண வேணும் என்கிறார் ) 9 | முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம் முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய் முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9 | முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம், muzhu moo ulagu aadhikku ellaam - மூவுலகு தொடக்கமான எல்லாவற்றுக்கும் முதல் தனி வித்தே ஓ, mudhal thani vithe o - முவகைக் காரணமுமானவனே! அங்கும் இங்கும் முழு முற்று உறு, angum ingum muzhu mutru uru - எங்கும் ஸமஸ்த பதார்ததிருப்பதாய் முதல் தனி, mudhal thani - அத்விதீய காரணமாய் வாழ், vaazh - போதமோகூஷங்களாகிற வாழ்ச்சிக்கு பாழ் ஆய், paazh aay - விளை நிலமான முல ப்ரக்ருதிக்கு நியாமகனாய் முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து ஒயர்ந்த முடிவு இலீ ஓ, mudhal thani soozhndhu agandru aazhndhu oyarndha mudivu ilee o - பு;ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு நியாமகமாய் ஒப்பற்றதாய் தர்ம பூதஜ்ஞானத்தாலே எங்கும் வியாபித்ததாய் நித்யமான ஆத்மவர்க்கத்துக்கு நியாமகனானவனே! முதல் தனி உன்னை, mudhal thani unnai - முதல்வனாயும் அத்விதீயனாயுமிருக்கிற உன்னை உன்னை, unnai - அஸாதரணனானஷன வுன்ளை நான் என்னை நாள் வந்து கூடுவன், naan ennai naal vandhu kooduvan - நான் எந்நாள் வந்து கூடக் கடவேன்! |
| 3775 | திருவாய்மொழி || 10-10 முனியே (பெரியபிராட்டியா ராணையிட்டுத தடுத்தப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட ஆழ்வாருடைய காரியம் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி யாயிற்று எம்பெருமாளுக்கு; அதனால் இவர் பிரார்த்தித்தபடியே பாரிபூர்ணனாய்க் கொண்டு வந்து ஸமச்லேஷித்தருளினான்; அதுகண்டு என்னுடைய அபாரிமிதமான விடாயெல்லாம் தீரவந்து என்னோடே கலந்தாய்; என்னுடைய மநோரதமும் ஒருபடி நிறைவேறப்பெற்றேன்’ என்று போரின்பம் பொலிய விண்ணப்பஞ் செய்கிறார்.) 10 | சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10 | என் அவா, En Avaa - என் அபிநிலேசமானது அற, Ara - தீரும்படியாக சூழ்ந்தாயே, Soozhndhaye - வந்து ஸம்ச்லேஷித்தாயே! சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த, Soozhndhu Agandru Aazhndhu Uyarndha - பத்து திக்கிலும் வ்யாப்தமாய் முடிவு இல், Mudivu il - நித்யமாயிருக்கிற பெரு பாழே ஓ, Peru Paazhe O - ப்ரக்ருதி தத்வத்துக்கு நியாமகனாய் நிற்கிறவனே! சூழ்ந்து, Soozhndhu - (தர்மபூத ஜ்ஞானத்தாலே, அதையும் வியாபித்து அதனில் பெரிய, Adhanil Periya - அதற்காட்டிலும் பெரியதாய் பரம், Param - மேற்பட்டதாய் நல்மலர்சோதீ ஒ, Nal Malarsodhi O - வகஸ்வர தேஜோரூபமான ஆத்ம வஸ்துவுக்கும் ஆத்மாவானவனே! சூழ்ந்து, Soozhndhu - கீழ்ச் சொன்ன இரண்டு தத்வங்களையும் வியாபித்து அகற்றுக்கும் நிர்வாஹகமாய் சுடர் ஞானம் இன்பமே ஓ, Sudar Gnanam Inbame O - ஙை;கல்ப பமாய் ஸூகரூபமான ஞானத்தை யுடையவனே! சூழ்ந்து, Soozhndhu - அந்த தத்வத்ரயத்தையும் வளைத்துக்கொண்டு அதனில் பெரிய, Adhanil Periya - அதிலும் மிகப் பெரிதான |
| 3776 | திருவாய்மொழி || 10-10 முனியே (பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி தசைகளென்று மூன்றுண்டே; சூழ்விசும்பணி முகிலுக்கு முன்வரையில் பரபக்தி தசையாய்ச் சென்றது. சூழ்விசும்பணி முகில் திருவாய் மொழியானது பரஜ்ஞான தசையிற் சென்றது. முனியே நான்முகனே யென்கிற இத்திருவாய் மொழியானது பரமபக்தி தசையிற் சென்றது. பரமபக்திக்கே ‘முடிந்த அவா’ என்று பெயர். இப்படிப்பட்ட பரமபக்தி பேசுவித்த இப்பதிகம் வல்லவர்கள் இவ்விருள் தருமா ஞாலத்திற் பிறந்து வைத்தே ‘நித்ய ஸூரிகளேயிவர்கள் என்னும்படியான பெருமையோடே பொலிவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல் அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11 | அவா அற, Ava Ara - அடியேனுடைய அபிநி வேசம் தீரும்படி சூழ், Soozh - ஸம்ச்லேஷிப்பவனாய் அர்யை, Aryai - இப்படி தாபத்தை ஹாரிப்பவனாகையாலே ஹாரியென்று திருநாமம் பெற்றவானாய் அயனை, Ayanai - பிரமனுக்கு அந்தரியாமியாய் அரணை, Aranai - ருத்ரனுக்கு அந்தரியாமியாய்யிருக்கிற எம்பெருமானை அலற்றி, Alatri - கூப்பிட்டு அவா அற்று வீடு பெற்ற, Ava Attru Veedu Petra - ஆசை தீர்ந்து வீடு பெற்ற வாரன குருகூர் சடகோ பன், Kurukoor Sadagoban - நம்மாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்ததாய் அவாவில், Avaavil - பக்தியினா லுண்டானதான அந்தா திகளால், Antha thigalaal - அந்தாதித் தொடையான பாசுரங்களால் நிறைந்த இவை ஆயிரமும், Ivai Aayiramum - இவ்வாயிரத்தினுள்ளே முடிந்த அவாவில், Mudintha Avavil - பரம பக்தியாலே பிறந்ததான அந்தாதி, Anthaathi - அந்தாதியான இப்பத்து, Ippathu - இப்பதிகத்தை அறிந்தார், Arindhaar - அறியக் கற்குமவர்கள் பிறந்தே உயர்ந்தார், Pirandhe Uyarndhar - ஸம்ஸாரத்தில் பிறந்தருக்கச் செய்தேயும் உயர்ந்த வர்களாவர் |