திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: ramayanam (537 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3திருப்பல்லாண்டு || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –அவதாரிகை --கீழ் இரண்டு பாட்டாலே தாம் திருப்பல்லாண்டு பாடினார் இனிமேல் தம்முடைய மங்களா சாசனத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே சதுர்விதா பஜந்தே மாம் -என்கிறபடியே -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்திகள் மூவரையும் கூட்டிக் கொள்வாராக நினைத்து -அதில் மங்களா சாசனத்துக்கு பகவத் ப்ராப்தி காமர்-ப்ரத்யாசன்னர் ஆகையாலே அவர்களை அழைக்கிறார் -ஏகஸ் சாது ந புஞ்ஜீத -என்கிற-ந்யாயத்தாலே -இம் மங்களா சாசன ரசம் எல்லாரும் புஜிக்க வேணும் என்கிற நினைவாலே-அழைக்கிறார் என்றுமாம் அவர்களோடே கூட மங்களா சாசனம் பண்ணுகை தமக்கு தாரகம் ஆகையாலும் என்றுமாம் – அடியார்கள் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -என்றும் – அடியார்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும் கண்ணாலே காண்கையும் -அத் திரளிலே புகுருகையும் -இவை எல்லாம் உத்தேச்யமாய் இ றே இருப்பது- 3
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம் ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை பாழாள் ஆகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
பதவுரை Show / Hide
வாழ் ஆள் - Vaazh Aal - கைங்கர்யமாகிற போகத்துக்கு
பட்டு - Pattu - பொருந்தி
நின்றீர் - Nindreer - நிலைநின்றவர்களாய்
உள்ளீரேல் - Ulleerel - இருப்பீர்க ளானால்
வந்து - Vandhu - (விரைவாக)
மண்ணும் - Mannum - (திருமுளைத் திருநாளைக்குப்) புழுதிமண் சுமக்கையையும்
மணமும் - Manamum - (அந்தக்கலியாணத்திற்கு) அபிமானிகளாய் இருக்கையையும்
கொண்மின் - Konmin - ஸ்வீகரியுங்கள்
கூழ் - Koozh - சோற்றுக்காக
ஆள் பட்டு - Aal Pattu - (பிறர்க்கு) அடிமைப்பட்டு
நின்றீர்களை - Nindreergalai - (எங்கும் பரந்து) நிற்கும் உங்களை
எங்கள் - Engal - (அநந்யப்ரயோஜனரான) எங்களுடைய
குழுவினில் - Kuzhuvinil - கூட்டத்திலே
புகுதல் ஒட்டோம் - Puguthal Ottom - சேரவிடமாட்டோம்
நாங்கள், Naangal - நாங்களோவெனில்
ஏழ் ஆள் காலும், Ezh Aal Kaalum - முன்னேழ் பின்னேழ் நடுவேழாகிய இருபத்தொரு தலைமுறைகளிலும்
பழிப்பு இலோம், Pazhippu Ilom - (ஒருவித மான) குற்றமும் இல்லாதவர்கள்
இராக்கதர், Iraakkathar - (ராவணன் முதலிய) ராக்ஷஸர்கள்
வாழ், Vaazh - வாழ்ந்துவந்த
இலங்கை, Ilankai - லங்கையானது
பாழ் ஆள் ஆக, Paazh Aal Aaga - பாழடைந்த ஆளை உடையதாம்படி
படை, Padai - யுத்தத்திலே
பொருதானுக்கு, Poruthaanukku - (அன்று) சண்டை செய்தருளிய எம்பிரானுக்கு
பல்லாண்டு கூறுதும், Pallaandu Koordhum - (இன்றிருந்து) திருப்பல்லாண்டு பாடுமவர்களாயிருக்கிறோம்.
23பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 1
சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே –1-2-1
பதவுரை Show / Hide
சீதம்,Seetham - குளிர்ந்திரா நின்றுள்ள
கடல்,Kadal - திருப்பாற்கடலிலே
உன் அமுது அன்ன,Un amuthu anna - உள்ளமுதாகப் பிறந்த பிராட்டியோடொத்த
தேவகி,Devaki - தேவகிப் பிராட்டியால்
கோதை குழலான் அசோதைக்கு போத்தந்த,Kothai kuzhalan asothai ku pothantha - பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட கேச பாசத்தை யுடைய யசோதைப் பிராட்டிக்குப் போகவிடப்பட்டவனாய்
பேதை,Pethai - அறிவின்மையை யுடையனாய்
குழவி,Kuzhavi - சிசுவான கண்ணபிரான்
பிடித்து,Pidithu - (தன் கைகளால்) பிடித்து
சுவைத்து,Suvaithu - ருசி பார்த்து
உண்ணும்,Unnum - திருப்பவளத்தில் வைத்து புஜியா நின்றுள்ள
பாதம் கமலங்கள்,Paatham kamalangal - திருவடித் தாமரைகளை.
காணீர்,Kanneer - வந்து காணுங்கோள்.
பவளம்,Pavalam - பவளம் போல் சிவந்த
வாயீர்,Vaayir - அதரத்தையுடைய பெண் காள்! வந்து காணீர்!
25பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 3
பணைத் தோளிள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்தார உண்டு கிடந்த இப் பிள்ளை இணைக் காலில் வெள்ளித் தளை நின்றிலங்கும் கணைக் கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3
பதவுரை Show / Hide
பணை,Panai - மூங்கில்போன்ற
தோள்,Thol - தோள்களை யுடையளாய்
இள,Ila - இளமைப் பருவத்தை யுடையளான
ஆய்ச்சி,Aaychi - யசோதையினுடைய
பால் பாய்ந்த,Paal paayndha - பால் சொரிகிற
கொங்கை,Kongai - முலையை
அணைத்து,Anaiththu - (திருக்கையால்) அணைத்துக்கொண்டு
ஆர,Aara - வயிறு நிரம்ப
உண்டு,Undu - (பாலை) அமுது செய்து
கிடந்த,Kidandha - (களித்துக்) கிடக்கின்ற
இ பிள்ளை,I pillai - இந்தக் கண்ண பிரானுடைய
இணை,Inai - சேர்த்தி யழகு அமைந்த
காலில்,Kaalil - திருவடிகளில்
வெள்ளி தளை நின்று,Velli thalai nindru - வெள்ளித் தண்டை நின்று
இலங்கும்,Ilangum - விளங்கா நிற்கிற
கணைக்கால் இருந்த ஆ,Kanaikkaal irundha aah - கணைக்காலிருந்தபடியை காணீர்!
காரிகையீர்,Kaarigaiyer - அழகுடைய பெண்காள் வந்து காணீர்!!
72பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 9
பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும் பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக் கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே –1-5-9
பதவுரை Show / Hide
மறை,Marai - வேதத்தினுடைய
ஏலும்,Ealum - தகுதியான
பொருளே,Porule - அர்த்தமானவனே!
பாலொடு,Paalodu - பாலோடே கூட
நெய்,Ney - நெய்யும்
தயிர்,Thayir - தயிரும்
ஒண் சாந்தொடு,Onn saanthodu - அழகிய சந்தநமும்
செண்பகமும்,Senbagamum - செண்பகம் முதலிய மலர்களும்
பங்கயம்,Pangayam - தாமரைப் பூவும்
நல்ல,Nalla - உத்தமமான
கருப்பூரமும்,Karuppooramum - பச்சைக் கர்ப்பூரமுமாகிய இலை
நாறி வர,Naari vara - கலந்து பரிமளிக்க
கோலம்,Kolam - அழகிய
நறு பவளம்,Naru pavalam - நற் பவளம் போல்
செம்,Sem - அழகியதாய்
துவர்,Thuvar - சிவந்திருக்கிற
வாயின் இடை,Vaayin idai - திருவதரத்தினுள்ளே
கோமளம்,Komalam - இளையதான
வெள்ளி முளை போல்,Velli mulai pol - வெள்ளி முளை போலே
சில பல்,Sila pal - சில திரு முத்துக்கள்
இலக,Ilaga - விளங்க
நீலம் நிறத்து,Neelam nirathu - நீல நிறத்தை யுடைத்தாய்
அழகு ஆர்,Azhagu aar - அழகு நிறைந்திரா நின்ற
ஐம்படையின் நடுவே,Aimbadaiyin naduve - பஞ்சாயுதத்தின் நடுவே
நின்,Nin - உன்னுடைய
கனி,Kani - கொவ்வைக் கனி போன்ற
வாய்,Vaai - அதரத்தில் ஊறுகின்ற
அமுதம்,Amudham - அம்ருத ஜலமானது
இற்று முறிந்து விழ,Itru murinthu vizha - இற்றிற்று விழ
ஆடுக-.,Aaduga - ஆடுக-.
75பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 1
மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல் ஆணிப் பொன் னால் செய்த ஆய் பொன்னுடை மணி பேணிப் பவள வாய் முத்திலங்க பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி–1-6-1
பதவுரை Show / Hide
ஆணிப் பொன்னால் செய்த,Aanip Ponnal Seytha - மாற்றுயர்ந்த பொன்னால் செய்த
ஆய்,Aay - (வேலைப் பாட்டிற் குறைவில்லாதபடி) ஆராய்ந்து செய்த
பொன் மணி,Pon Mani - பொன் மணிக் கோவையை
உடைய,Udaiya - உடைய
மருங்கின் மேல்,Marungin Mel - இடுப்பின் மேலே
மாணிக்கம் கிண்கிணி,Manikkam Kinkini - (உள்ளே) மாணிக்கத்தை யிட்ட அரைச் சதங்கை
ஆர்ப்ப,Aarppa - ஒலி செய்யவும்
பவளம்,Pavalam - பவழம் போன்ற
வாய்,Vaai - வாயிலே
முத்து,Muthu - முத்துப் போன்ற பற்கள்
இலங்க,Ilanga - விளங்கவும்
பண்டு,Pandu - முற்காலத்திலேயே
காணி,Kaani - பூமியை
கொண்ட,Konda - (புவிச் சக்ரவர்த்தியினிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
கைகளால்,Kaigalal - திருக் கைகளாலே
பேணி,Peni - விரும்பி
சப்பாணி,Sappani - சப்பாணி கொட்டி யருள வேணும்;
கரு,Karu - கரு நிறமான
குழல்,Kuzhal - கூந்தலை யுடைய
குட்டனே,Kuttane - பிள்ளாய்!
சப்பாணி,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.
77பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 3
பன் மணி முத்து இன் பவளம் பதித்தன்ன என் மணி வண்ணன் இலங்கு பொற் றோட்டின் மேல் நின் மணி வாய் முத் திலங்க நின்னம்மை தன் அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி–1-6-3
பதவுரை Show / Hide
என்,En - என்னுடைய
மணிவண்ணன்,ManiVannan - நீல மணி போன்ற நிறமுடையவனே!
பல்,Pal - பலவகைப் பட்ட
மணி,Mani - சதகங்களையும்
முத்து,Muthu - முத்துக்களையும்
இன் பவளம்,In Pavalam - இனிய பவழத்தையும்
பதித்த,Pathitha - அழுத்திச் செய்யப் பட்டதும்
அன்ன,Anna - அப்படிப்பட்டதுமான (அழகியதுமான)
இலங்கு,Ilangu - விளங்குகின்ற
பொன் தோட்டின் மேல்,Pon Thottin Mel - பொன்னாற் செய்த தோடென்னும் காதணியினழகுக்கு மேலே
நின் மணி வாய் முத்து,Nin Mani Vaai Muthu - உன்னுடைய அழகிய வாயிலே முத்துப் போன்ற பற்கள்
இலங்க,Ilanga - விளங்கும்படி (சிரித்துக் கொண்டு)
நின் அம்மை தன்,Nin Ammaithan - உன் தாயினுடைய
அம்மணி மேல்,Ammani Mel - இடையிலிருந்து
கொட்டாய் சப்பாணி,Kottai Sappani - சப்பாணி கொட்டாய்-;
ஆழி,Aazhi - திருவாழி மோதிரத்தை
அம் கையனே,Am Kaiyane - அழகிய கையிலுடையவனே!
சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.
82பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 8
குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீள் நீரிலங்கை அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங் கையனே சப்பாணி–1-6-8
பதவுரை Show / Hide
குரை,Kurai - கோக்ஷியா நின்ற
கடல் தன்னை,Kadal Thannai - ஸமுத்ரத்தை
நெருக்கி,Nerukki - (இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து
குரங்கு,Kurangu - குரங்குகளினுடைய
இனத்தாலே,Inaththaalai - கூட்டங்களைக் கொண்டு
அணை கட்டி,Anai Katti - ஸேதுவைக் கட்டி முடித்து
நீள் நீர்,Neel Neer - பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட
இலங்கை,Ilangai - லங்கையிலுள்ள
அரக்கர்,Arakkar - ராக்ஷஸர்களெல்லாம்
அலிய,Aliya - அழிந்து போம்படி
அடு கணையாலே,Adu Kanaiyaale - கொல்லும் தன்மையை யுடைய அம்புகளைக் கொண்டு
நெருக்கிய,Nerukkiya - நெருங்கப் போர் செய்த
கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும்.
நேமி,Nemi - திருவாழி ஆழ்வானை
அம் கையனே,Am Kaiyane - அழகிய கையிலேந்தினவனே!
சப்பாணி-.,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.
127பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-முதல்திருமொழி - மெச்சூது) (பூச்சிகாட்டி விளையாடுதல்.) (கலித்தாழிசை) 10
வல்லாளிலங்கை மலங்கச் சரந்துரந்த வில்லாளனை விட்டு சித்தன் விரித்த சொல்லார்ந்த அப் பூச்சிப் பாடல் இவை பத்தும் வல்லார் போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே–2-1-10
பதவுரை Show / Hide
வல்லாள்,Vallal - பலசாலிகளான வீரர்களை யுடைய
இலங்கை,Ilangai - லங்கையானது
மலங்க,Malanga - பாழாம்படி
சரம் துரந்த,Saram thuranda - அம்பைச் செலுத்திய
வில் ஆளனை,Vil alanai - வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி
விட்டு சித்தன்,Vittu sithan - பெரியாழ்வார்
விரித்த,Viritha - பரக்க கூறிய
சொல் ஆர்ந்த,Sol arndha - சொல் நிரம்பிய
அப் பூச்சி பாடல் இவை பத்தும்,Appuchi paadal ivai pathum - அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்,Vallar - கற்க வல்லவர்
போய்,Poi - (அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய்
வைகுந்தம்,Vaikundam - ஸ்ரீவைகுண்டத்திலே
மன்னி இருப்பர்,Manni iruppar - நித்ய வாஸம் பண்ணப் பெறுவர்.
173பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 2
கொங்குங் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் சங்கம் பிடிக்கும் தடக் கைக்குத் தக்க நல் அங்க முடையதோர் கோல் கொண்டு வா அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா–2-6-2
பதவுரை Show / Hide
கொங்கு,Kongu - வாஸனை பொருந்திய
குடந்தையும்,Kudanthaiyum - திருக் குடந்தையிலும்
கோட்டி ஊரும்,Kotti Uurum - திருக் கோட்டியூரிலும்
பேரும்,Perum - திருப்பேர் நகரிலும்
எங்கும்,Engum - மற்றுமுள்ள திருப்பதிகளிலுமெல்லாம்
திரிந்து,Thirindhu - ஸஞ்சரித்து
விளையாடும்,Vilaiyaadum - விளையாடுகின்ற
என் மகன்,En Magan - என் பிள்ளையினுடைய
சங்கம் பிடிக்கும் தடக்கைக்கு,Sangam Pidikkum Thadakkaikku - பாஞ்ச ஜந்யம் தரிக்கிற பெரிய திருக்கைக்கு
தக்க,Thakka - தகுந்ததான
நல் அங்கம் உடையது,Nal Angam Udaiyathu - நல்ல வடிவை யுடையதாகிய
ஓர் கோல் கொண்டு வா,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா
அரக்கு வழித்தது,Arakku Vazhithathu - (நல்ல நிறமுண்டாம்படி) அரக்குப் பூசியதாகிய
ஓர் கோல் கொண்டுவா,Or Kol Konduva - ஒரு கோலை கொண்டு வா
178பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 7
பொன் திகழ் சித்திர கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா மணி வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-7
பதவுரை Show / Hide
(அக்காக்காய்!),Akkakkai - காக்கையே!
பொன்,Pon - அழகியதாய்
திகழ்,Thigal - விளங்குகின்ற
சித்திர கூடம் பொருப்பினில்,Chithira Koodam Poruppinil - சித்ர கூட மலைச் சாரலில் (பிராட்டி மடியிலே தலை வைத்துக் கொண்டு ஸ்ரீராமனாகிய தான் கண் வளர்ந்தருளும் போது)
வடிவில்,Vadivil - (பிராட்டியின்) திரு மேனியில்
உற்ற,Utra - பதிந்த
ஒரு கண்ணும்,Oru Kannum - (உனது இரண்டு கண்களில்) ஒரு கண்ணை மாத்திரம்
கொண்ட,Konda - பறித்துக் கொண்ட
அ கற்றை குழவன்,A Kattrai Kuzhavan - அந்தத் தொகுதியான கூந்தலை யுடையவன்
கடியன்,Kadiyan - க்ரூரன்;
உன்னை,Unnai - (ஆதலால், அவன் தனக்கு இஷ்டமானதை உடனே செய்யாமலிருத்தற்காக) உன்னை (ச்சீறி)
மற்றை கண்,Matrai Kann - (உனது) மற்றொரு கண்ணையும்
கொள்ளாமே,Kollamae - பறித்துக் கொள்ளாதபடி
விரைந்து,Viraindhu - ஓடிப் போய்
ஓர் கோல் கொண்டு வா;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா
மணிவண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா.,Manivannan Nambikku Or Kol Kondu Va - மணிவண்ணன் நம்பிக்கு ஒரு கோலை கொண்டு வா
179பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 8
மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ தன்னிக ரொன்றில்லாச் சிலை கால் வளைத்திட்ட மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா வேலை யடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா–2-6-8
பதவுரை Show / Hide
மின்,Min - மின்னல் போன்ற (ஸூக்ஷ்மமான)
இடை,Idai - இடையை யுடைய
சீதை பொருட்டா,Seethai Porutraa - ஸீதையை மீட்டுக் கொணர்வதற்காக
இலங்கையர் மன்னன்,Ilangaiyar Mannan - லங்கையிலுள்ளார்க்குத் தலைவனான ராவணனுடைய
மணி முடி பத்தும்,Mani Mudi Paththum - ரத்ந கிரீடமணிந்த தலைகள் பத்தும்
உடன் வீழ,Udan Veezha - ஒரு சேர அற்று விழும்படி
தன்னிகர் ஒன்று இல்லா,Thannigar Ondru Illaa - தனக்கு ‘உபமாநமானதொன்று மில்லாத (உயர்ந்த)
சிலை,Silai - வில்லை
கால் வளைத்து இட்ட,Kaal Valaithu Itta - கால் வளையும் படி பண்ணி ப்ரயோகித்த
மின்னும் முடியற்கு,Minnum Mudiyarkku - விளங்கா நின்ற கிரீடத்தை அணிந்தவனுக்கு
வேலை அடைத்தாற்கு,Velai Adaiththaarkku - ஸமுத்ரத்தில் ஸேது கட்டினவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா-,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா
180பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து - ஆறாம் திருமொழி - வேலிக்கோல்) (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) (கலித்தாழிசை) 9
தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னிலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா–2-6-9
பதவுரை Show / Hide
தென் இலங்கை,Then Ilangai - அழகிய லங்கைக்கு
மன்னன்,Mannan - அரசனாகிய ராவணனுடைய
சிரம்,Siram - தலைகளையும்
தோள்,Thol - தோள்களையும்
துணி செய்து,Thuni Seidhu - (அம்பினால்) துணித்துப் போகட்டு
மின் இலங்கு,Min Ilangu - ஒளி வீசுகின்ற
பூண்,Poon - ஆபரணங்களை அணிந்த
விபீடணன் நம்பிக்கு,Vibheethanan Nambikku - விபீஷணாழ்வானுக்கு
என் இலங்கு நாமத்து அளவும்,En Ilangu Naamaththu Alavum - என் பெயர் ப்ரகாசிக்குமளவும்
அரசு,Arasu - ராஜ்யம் (நடக்கக் கடவது)
என்ற,Endra - என்று அருள் செய்து
மின் இலங்கு ஆரற்கு,Min Ilangu Aararkku - மின்னல்போல் விளங்குகின்ற ஹாரத்தை யுடையவனுக்கு
ஓர் கோல் கொண்டு வா-;,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா
வேங்கடம்,Vengadam - திருமலையில்
வாணற்கு,Vaanarkku - வாழ்ந்தருளுமவனுக்கு
ஓர் கோல் கொண்டுவா-.,Or Kol Kondu Va - ஒரு கோலை கொண்டு வா
186பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - கொக்கின் வாயைக் கீண்டொழித்தவனே! நீ எது செய்தாலும் உன்னுடைய வல்லமையைக் கண்டு நான் வெறுமனே யிருக்க வேண்டியதாயிருந்தும் நீ வெண்ணெணை வாரி உட்கொண்டதைக் கண்டு ‘இவன் இப்படியே வேறு வீடுகளிற் போய்ச் செய்தால் பழி வருமே’ என்று நினைத்து அஞ்சாமல் அடித்து விட்டேன்; அவஸரப் பட்டு நான் செய்தவிதைப் பொறுத்துச் செங்கழுநீர்ப்பூச் சூடவா என்கிறாள். புஷ்பம் மேலே பட்டாலும் வாடும்படியான உன்னுடைய ஸௌகுமார்யத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதாயிருக்க அப்படி அஞ்சாமல் அடித்ததைப் பொறுத்துப் பூச்சூட வரவேணுமென்பதாகவுங் கொள்ளலாம். அடியேன் = ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீரத்திலீடுபட்டுச் சொல்லுகிற சொல்:” மரபுவழுவமைதி; அடித்த பின்பு அநுதாபங்கொண்டு அடியேன் என்றாளெனினுமாம். 5
புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் 2-7-5
பதவுரை Show / Hide
புள்ளினை, Pullinai - பகாஸுரனை
வாய் பிளந்திட்டாய், Vai pilandhittai - வாய் கிழித்துப் பொகட்டவனே!
பொரு, Poru - யுத்தோந்முகமான
கரியின், Kariyin - குவலயாபீடத்தின்
கொம்பு, Kombu - கொம்பை
ஒசித்தாய், Osithaai - பறித்தவனே!
கள்ளம் அரக்கியை மூக்கொடு, Kallam arakkiyai mookodu - வஞ்சனை யுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பணகையின் மூக்கையும்
காவலனை, Kaavalanai - (அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய
தலை, Thalai - தலையையும்
கொண்டாய், Kondai - அறுத்தவனே!
நீ, Nee - (இப்படிப்பட்ட) நீ
வெண்ணெய், Vennai - வெண்ணெயை
அள்ளி விழுங்க, Alli vizhungu - வாரி விழுங்க
அஞ்சாது, Anjaadhu - சிறிதும் பயப்படாமல்
அடியேன், Adiyen - (‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான்
அடித்தேன், Adithen - அடித்தேன்; (அப் பிழையைப் பொறுத்து)
தெள்ளிய, Thelliya - தெளிவான
நீரில், Neeril - நீரிலே
எழுந்த, Ezundha - உண்டான
செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீரை
சூட்டவாராய், Sootavaaraay - (நான்) சூட்டும்படி வாராய்
203பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பீ வருக இங்கே அரிய னிவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசல கத்தார் பரிபவம் பேசத் தரிக்க கில்லேன் பாவியேனுக்கு இங்கே போத ராயே–2-9-2
பதவுரை Show / Hide
இங்கே,Enge - இவ்விடத்திலே
வருக வருக வருக,Varuga Varuga Varuga - சடக்கென வருவாயாக;
வாமன நம்பீ! இங்கே வருக-;,Vamana Nambi Inge Varuga - வாமன நம்பீ! இவ்விடத்திலே வருவாயாக;
கரிய குழல்,Kariya Kuzhal - கரு நிறமான கூந்தலையும்
செய்ய வாய்,Seyya Vaai - செந் நிறமான வாயையும்
முகத்து,Mugaththu - (ஒப்பற்ற) முகத்தையு முடைய
காகுத்த நம்பீ,Kaaguththa Nambi - இராம மூர்த்தி!
இங்கே வருக-;,Inge Varuga - இவ்விடத்திலே வருவாயாக
நங்காய்,Nangai - (என்று கண்ணனையழைத்து, தன் பிள்ளைமேல் குற்றம்சொன்னவளை நோக்கி யசோதை) குண பூர்ணை யானவளே!
இவன்,Ivan - இந்தப் பிள்ளை
எனக்கு,Enakku - எனக்கு
இன்று,Indru - இப்போது
அரியன்,Ariyan - அருமையானவனாயிற்றே;
அஞ்சனம்,Anjanam - (என்று சொல்லி மீண்டும் கண்ணனை நோக்கி) மை போன்ற
வண்ணா,Vanna - வடிவு படைத்தவனே!
அசல் அகத்தார்,Asal Agaththar - அசல் வீட்டுக்காரர்கள்
பரிபவம் பேச,Paripavam Pes - (உன்மேல்) அவமாந கரமான சொற்களைச் சொன்னால்
தரிக்க கில்லேன்,Tharikka Killen - பொறுக்க வல்லேனல்லேன்;
பாவியேனுக்கு,Paaviyeenukku - (இப்படி பரிபவங்களைக் கேட்கும்படியான) பாவத்தைப் பண்ணின எனக்கு
இங்கே போதராய்,Inge Potharai - (இவ் வருத்தந் தீர) இங்கே வாராய் (என்று யசோதை கண்ணனையழைக்கிறாள்.)
212பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி) (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 11
வண்டுகளித்திரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென்ன ரங்கன் பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான் விட்டு சித்தன் பாடல் கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலனவே–2-9-11
பதவுரை Show / Hide
வண்டு,Vandu - வண்டுகளானவை
களித்து,Kaliththu - (தேனைப் பருகிக்) களித்து
இரைக்கும்,Eraikkum - ஆரவாரங்கள் செய்யப் பெற்ற
பொழில்,Pozhil - சோலைகளாலும்
வரு,Varu - (அச் சோலைகளுக்காகப் பெருகி) வாரா நின்றுள்ள
புனல்,Punal - நீரை யுடைத்தான
காவிரி,Kaaviri - காவேரீ நதியான
சூழ்,Soozh - சூழப் பெற்று
தென்,Then - அழகிய
அரங்கன் அவன்,Arangan Avan - திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிற வைபவத்தை யுடையவனான அப் பெருமான்
பண்டு,Pandu - (விபவமாகிய) முற் காலத்தில்
செய்த,Seidha - செய்த
கிரீடை எல்லாம்,Kireedai Ellaam - லீலா சேஷ்டிதங்களெல்லாவற்றையும் (விசேஷமாகக் கொண்டு)
விட்டு சித்தன் பட்டர்பிரான் பாடல்,Vittu Siththan Pattarpiraan Paadal - விஷ்ணுவை நெஞ்சிற் கொண்டவராய் பிராஹ்மணோத்தமரான பெரியாழ்வார் (பாடின) பாடலாகிய
இவை கொண்டு,Ivai Kondu - இப் பாட்டுக்களை (அநு சந்தேயமாகக் ) கொண்டு
பாடி,Paadi - (இப் பாசுரங்களை)பாடி
குனிக்க வல்லார்,Kunikka Vallaar - (அதனால் பக்தி மீதூர்ந்து உடம்பு இவ் விடத்தில் இராமல் விகாரமடைந்து) கூத்தாட வல்லவர்களாய்
கோவிந்தன் தன் அடியார்கள் ஆகி,Govindhan Than Adiyaargal Aagi - கண்ண பிரானுக்கு அடியவர்களாய்
என் திசைக்கும்,En Disaiyukkum - எட்டு திக்குகளிலும் (உள்ள இருள் நீங்கும்படி)
விளக்கு ஆகி நிற்பார்,Vilakku Aagi Nrirpaar - (அத் திக்குகளுக்கு) விளக்காக நிற்கும் அவர்களுடைய
இணை யடி,Inai Yadi - திருவடிவிணை களானவை
என் தலை மேலான,En Thalai Melaana - என்னுடைய முடியின் மேல் வீற்றிருக்கத் தக்கவை
248பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக் குட்டச் செங்கண் மாலே சிற்றாடையும் சிறுப் பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்துப் போய் கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்–3-3-5
பதவுரை Show / Hide
முன்,Mun - (பாரதப் போர் செய்த) முற் காலத்தில்
பற்றார்,Patraar - (உனது உயிர் போன்ற பாண்டவர்களுக்குப்) பகைவரான துரியோதனாதியர்
நடுங்கும்,Nadungum - நடுங்கும்படி
பாஞ்ச சன்னியத்தை,Paancha Sanniyaththai - சங்கத்தை
போர் ஏறே,Por Eare - போர் செய்யலுற்ற காளை போன்ற கண்ணபிரானே!-எனக்கு விதேயனாய்
சிறு ஆயர் சிங்கமே,Siru Aayar Singame - சிறிய இடைப் பிள்ளைகளுள் சிங்கக் குட்டி போன்றுள்ளவனே!
சீதை,Seethai - ஸீதாப் பிராட்டிக்கு
மணாளா,Manaalaa - வல்லபனானவனே!
சிறு குட்டன்,Siru Kuttan - சிறு பிள்ளையாயிருப்பவனே!
செம் கண் மாலே,Sem Kan Maale - (இப்படியிருக்கச் செய்தேயும்) செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடைய ஸர்வேச்வரனாக விளங்குமவனே!
நீ;,Nee - நீ;
சிறு ஆடையும்,Siru Aadaiyum - (உன் பருவத்துக்குத் தக்க) சிறிய திருப்பரிவட்டமும்
சிறு பத்திரமும் இவை,Siru Paththiramum Ivai - குற்றுடை வாளுமாகிற இவற்றை
கட்டிலின் மேல் வைத்து போய்,Kattilin Mel Vaithu Poi - (காட்டுக்குப் போகையிலுள்ள விரைவாலே) (கண் வளர்ந்தருளின) கட்டிலின் மேலே வைத்து மறந்து போய்
கன்று ஆயரோடு,Kanru Aayarodhu - கன்று மேய்க்கிற இடைப் பிள்ளைகளுடனே
கன்றுகள் மேய்த்து,Kanrugal Meithu - கன்றுகளை மேய்த்து விட்டு
கலந்து உடன்,Kalandhu Udan - (மீண்டு மாலைப் பொழுதிலே) (அந்த தன்னேராயிரம் பிள்ளைகளோடே) கூடிக் கலந்து
வந்தாய் போலும்,Vandhai Poolum - (வீட்டுக்கு) வந்தாயன்றோ?.
259பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6
சிந்துர மிலங்கத் தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும் அந்தர முழவத் தண் தழைக் காவின் கீழ் வருமாயரோடு உடன் வளை கோல் வீச அந்தமொன் றில்லாத ஆயப் பிள்ளை அறிந்தறிந்து இவ் வீதி போதுமாகில் பந்து கொண்டானென்று வளைத்து வைத்துப் பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ–3-4-6
பதவுரை Show / Hide
தோழீ,Thozhi - வாராய் தோழீ!
தன்,Than - தன்னுடைய
திருநெற்றி மேல்,Thirunettri Mel - திரு நெற்றியில்
சிந்துரம்,Sindhuram - சிந்தூரமும்
திருத்திய,Thiruthhiya - (அதன் மேல்) ப்ரகாசமாகச் சாத்தின
கோறம்பும்,Korambum - திலகப் பொட்டும்
திரு குழலும்,Thiru Kuzhalum - (அதுக்குப் பரபாகமான) திருக் குழற் கற்றையும்
இலங்க,Elanga - விளங்கவும்
அந்தரம்,Antharam - ஆகாசமடங்கலும்
முழவம்,Muzhavam - மத்தளங்களின் ஓசையினால் நிறையவும்
தழை,Thazhai - பீலிக் குடைகளாகிற
தண்,Than - குளிர்ந்த
காவின் கீழ்,Kaavin Keezh - சோலையின் கீழே
வரும்,Varum - (தன்னோடு) வருகின்ற
ஆயரோடு உடன்,Aayarodu Udan - இடைப் பிள்ளைகளோடு கூட
வளை கோல் வீச,Valai Kol Veesa - வளைந்த தடிகளை வீசிக் கொண்டு
ஒன்றும் அந்தம் இல்லாத,Ondrum Antham Illadha - (அலங்கார விசேஷங்களில்) ஒவ்வொன்றே எல்லை காண ஒண்ணாத
ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரான்
அறிந்து அறிந்து,Arindhu Arindhu - தன் தன்மையையும் என் தன்மையையும் அறிந்து வைத்தும்
இ வீதி,E Veedhi - இத் தெரு வழியே
போதும் ஆகில்,Podhum Aagil - வருவானாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து,Panthu Kondaan Endru Valaithu Vaithu - (அவனை) ‘ (எங்கள்) பந்தை வலியப் பிடுங்கிக் கொண்டு போனவனன்றோ இவன்’ என்று (முறையிட்டு) வழி மடக்கி
பவளம் வாய்,Pavalam Vaai - (அவனுடைய) பவளம் போன்ற அதரத்தையும்
முறுவலும்,Muruvallum - புன் சிரிப்பையும்
காண்போம்,Kaanbom - நாம் கண்டு அநுபவிப்போம்.
266பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3
அம்மைத் தடங்கண் மட வாய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி எம்மைச் சரணேன்று கொள்ளென்றிரப்ப இலங்காழிக் கை யெந்தை எடுத்த மலை தம்மைச் சரணென்ற தம் பாவையரைப் புன மேய்கின்ற மானினம் காண்மினென்று கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-3
பதவுரை Show / Hide
அம்,Am - அழகிய
மை,Mai - மை அணிந்த
தட,Thada - விசாலமான
கண்,Kann - கண்களையும்
மடம்,Madam - ‘மடப்பம்’ என்ற குணத்தை யுமுடைய
ஆய்ச்சியரும்,Aaychiyarum - இடைச்சிகளும்
ஆன் ஆயரும்,Aan Aayarum - கோபாலர்களும்
ஆநிரையும் ,Aanirayum - பசுக்கூட்டமும்ட்டமும்
அலறி,Alari - (மழையின் கனத்தால்) கதறிக் கூப்பிட்டு
எம்மை சரண் என்று கொள் என்று,Emmai Saran Endru Kol Endru - (‘எம்பிரானே! நீ) எமக்கு ரக்ஷகனாயிருக்குந் தன்மையை எற்றுக் கொள்ள வேணும்’ என்று
இரப்ப,Irappa - பிரார்த்திக்க,
இலங்கு,Ilangu - (அவ்வேண்டுகோளின்படியே) விளங்கா நின்ற
ஆழி,Aazhi - திருவாழி ஆழ்வானை
கை,Kai - கையிலே உடையனாய்
எந்தை,Endhai - எமக்கு ஸ்வாமியான கண்ணபிரான்
எடுத்த,Edutha - (அவற்றை ரக்ஷிப்பதற்காக) எடுத்த
மலை,Malai - மலையாவது (எது என்னில்?);
கொம்மை புயம்,Kommai Puyam - பருத்த புஜங்களை யுடைய
குன்றர்,Kunrar - குறவர்கள்,
தம்மை,Thammai - தங்களை
சரண் என்ற,Saran Endra - சரணமென்று பற்றியிருக்கிற
தம் பாவையரை,Tham Paavaiyarai - தங்கள் பெண்களை (கொல்லையிலே வியாபரிக்கிற அப்பெண்களின் கண்களைக் கண்டு இவை மான்பேடைகள் என்று ப்ரமித்து)
புனம் மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று,Punam Meikindra Maan Inam Kaanmin Endru - ‘(நம்முடைய) கொல்லையை மேய்ந்து அழிக்கின்ற மான் கூட்டங்களைப் பாருங்கோள்’ என்று (ஒருவர்க்கொருவர் காட்டி)
சிலை,Silai - (அவற்றின்மேல் அம்புகளை விடுவதாக) (தமது) வில்லை
குனிக்கும்,Kunikkum - வளையா நின்றுள்ள
269பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6
செப்பா டுடைய திருமாலவன் தன் செந்தாமரைக் கை விரலைந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை எப்பாடும் பரந்திழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ குப்பாயமென நின்று காட்சி தரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-6
பதவுரை Show / Hide
செப்பாடு உடைய,Seppaadu Udaiya - செவ்வைக் குணத்தை யுடையனாய்
திருமால் அவன்,Thirumaal Avan - ச்ரியஃபதியான அக்கண்ணபிரான்
தன்,Than - தன்னுடைய
செம் தாமரை கை,Sem Thaamarai Kai - செந்தாமரை மலர் போன்ற திருக்கையிலுள்ள
விரல் ஐந்தினையும்,Viral Aindhinaiyum - ஐந்து விரல்களையும்
கப்பு ஆக மடுத்து,Kappu Aaga Maduthu - (மலையாகிற குடைக்குக் காம்படியிலுண்டான) கிளைக் கொம்புகளாக அமைத்து
மணி நெடு தோள்,Mani Nedu Thol - அழகிய நீண்ட திருத் தோள்களை
காம்பு ஆக கொடுத்து,Kaambu Aaga Koduthu - (அந்த மலைக் குடைக்குத் தாங்கு) காம்பாகக் கொடுத்து
கவித்த மலை,Kavitha Malai - தலை கீழாகக் கவித்த மலையாவது
எப்பாடும்,Eppaaduum - எல்லாப் பக்கங்களிலும்
பரந்து இழி,Parandhu Izhi - பரவிப் பெருகா நின்ற
தெள்ளருவி,Thellaruvi - தெளிந்த சுனை நீரருவிகளானவை
இலங்கு மணி முத்துவடம் பிறழ,Ilangu Mani Muthuvadam Pirazha - விளங்கா நின்ற அழகிய முக்தாஹரம் போலத் தனித் தனியே ப்ரகாசிக்க
குப்பாயம் என நின்று,Kuppayam Ena Nindru - (கண்ண பிரானுக்கு இது ஒரு) முத்துச் சட்டையென்று சொல்லும்படியாக
காட்சி தரும்,Kaatchi Tharum - காணப்படப் பெற்ற
கோவர்,Kovar - குடையே-.
270பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7
படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரலைந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தட வரை தான் அடங்கச் சென்று இலங்கையை யீடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-7
பதவுரை Show / Hide
படங்கள் பலவும் உடை,Padangal Palavum Udai - பல படங்களை யுடைய
பாம்பு அரையன்,Paambu Araiyan - ஆதிசேஷன்
படர் பூமியை,Padar Bhoomiyai - பரம்பின பூமியை
தாங்கி கிடப்பவன் போல்,Thaangi Kidappavan Pol - (தன் தலைகளினால்) தாங்கிக் கொண்டிருப்பது போல,
தாமோதரன்,Thaamodharan - கண்ணபிரான்
தடங்கை,Thadangkai - (தனது) பெரிய திருக் கைகளிலுள்ள
விரல் ஐந்தும்,Viral Aindhum - ஐந்து விரல்களையும்
மலர வைத்து,Malar Vaithu - மலர்த்தி (விரித்து)
தாங்கு,Thaangu - (அவற்றாலே) தாங்கப் பெற்ற
தடவரை,Thadavarai - பெரிய மலையாவது;
மந்திகள்,Mandhigal - பெண் குரங்குகளானவை,
இலங்கையை சென்று,Ilangaiyai Sendru - லங்காநகரத் தேறப்போய்
அடங்க,Adanga - அவ்வூர் முழுவதையும்
ஈடு அழித்த,Eedu Azhitha - சீர்கெடும்படி பங்கப்படுத்தின
அனுமன்,Anuman - சிறிய திருவடியினுடைய
புகழ்,Pugazh - கீர்த்தியை
பாடி,Paadi - பாடிக் கொண்டு
தம் குட்டன்களை,Tham Kuttanagalai - தமது (குரங்குக்) குட்டிகளை
குடங்கைக் கொண்டு,Kudangai Kondu - கைத்தலத்தில் படுக்க வைத்துக் கொண்டு
கண் வளர்த்தும்,Kann Valarthum - (சீராட்டி) உறங்கப் பெற்ற
கோவர்,Kovar - குடையே-.
272பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9
வன் பேய் முலை யுண்ட தோர் வாயுடையன் வன் தூணென நின்றதோர் வன் பரத்தை தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தட வரை தான் முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை கொம்பேற்றி யிருந்து குதி பயிற்றும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே–3-5-9
பதவுரை Show / Hide
வன் பேய்,Van Pey - கல் நெஞ்சளான பூதனையினுடைய
முலை,Mulai - (விஷந்தடவின) முலையை
உண்டது ஓர் வாய் உடையன்,Undathu Or Vaai Udaiyan - (உறிஞ்சி) உண்ட வாயை யுடையனான
தாமோதரன்,Thaamodharan - கண்ணபிரான்
தன் பேர்,Than Per - (கோவர்த்தநன் என்ற) தனது திருநாமத்தை
இட்டுக் கொண்டு,Ettuk Kondu - (மலைக்கு) இட்டு,
வல்பரத்தை நின்றது ஓர் வன் தூண் என,Valparathai Nindrathu Or Van Thoon Ena - பலிஷ்டமானதொரு பாரத்தைத் தாங்கிக் கொண்டுநின்ற ஒரு வலிய தூணைப் போல நின்று
தரணி தன்னில்,Tharani Thannil - இந்நிலவுலகத்தில்
தான் தாங்கு,Thaan Thaangu - (உள்ளவர்கள் காணும்படி) தான் தாங்கிக் கொண்டு நின்ற
தடவரை,Thadavari - பெரிய மலையாவது;
முசு கணங்கள்,Musu Kanangal - முசு என்ற சாதிக் குரங்குகளின் திரள்கள்
முன்பே,Munbe - (தம் குட்டிகளுக்கு) ஏற்கனவே
வழி காட்ட,Vali Kaata - ஒருகிளையில் நின்றும் மற்றொரு கிளையில் பாயும் வழியைக் காட்டுகைக்காக
தம்முடை குட்டன்களை,Thammudai Kuttanagalai - தம்தம் குட்டிகளை
முதுகில் பெய்து,Mudugil Peithu - (தம் தம்) முதுகிலே கட்டிக் கொண்டு போய்
கொம்பு,Kombu - மரக் கொம்பிலே
ஏற்றி யிருந்து,Etri Irundhu - ஏற்றி வைத்து
குதி பயிற்றும்,Kuthi Payitrum - அக்கொம்பில் நின்றும் மற்றொரு கொம்பில் குதித்தலைப் பழக்குவியா நிற்கப் பெற்ற
கோவர்,Kovar - குடையே-.
308பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 2
என் வில் வலி கண்டு போவென்று எதிர் வந்தான் தன் வில்லி னோடும் தவத்தை எதிர் வாங்கி முன் வில் வலித்து முது பெண்ணுயிருண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற தாசரதி தன்மையைப் பாடிப் பற–3-9-2
பதவுரை Show / Hide
எதிர் வந்தான் தன்,Ethir Vandhaan Than - எதிர்த்து வந்த பரசு ராமனுடைய
வில்லினோடு,Villinodu - வில்லையும்
தவத்தையும்,Thavaththaiyum - தபஸ்ஸையும்
எதிர்,Ethir - அவன் கண்ணெதிரில்
வாங்கி,Vaangi - அழித்தருளினவனும்
முன்,Mun - இதற்கு முன்னே
வில் வலித்து,Vil valiththu - வில்லை வளைத்து
முது பெண்,Muthu pen - (பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த தாடமையினுடைய
உயிர்,Uyir - உயிரை
உண்டான் ,Undaan - உண்டான்
வில்லின்,Villin - (தன் முடித்தருளினவனுமான இராமபிரானுடைய) வில்லினது
வன்மையை,Vanmaiyai - வலிவை பாடிப் பற
தாசரதி,Dasarathi - சக்ரவர்த்தித் திருமகனுடைய
தன்மையை,Thanmaiyai - ஸ்வபாவத்தை பாடிப் பற
310பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 4
மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்ற மிலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற–3-9-4
பதவுரை Show / Hide
மாற்று தாய்,Maatru thaai - தாயானவள்
சென்று,Sendru - சென்று.
வனமே போகு என்றிட,Vaname poga endrida - ‘நீ காட்டுக்கே போ’ என்று நியமிக்க
ஈற்றுத்தாய்,Eetru thaai - பெற்ற தாயாகிய கௌஸல்வை யானவள்
பின் தொடர்ந்து,Pin thodarnthu - (தன்னைப்) பின் தொடர்ந்து வந்து
எம்பிரான்,Empiraan - “என் நாயனே! (உன்னைப் பிரிந்து எப்படி தரித்திருப்பேன்”)
என்று அழ,Endru azha - என்று கதறி அழ
கூற்று தாய் சொல்ல,Kootru thaai solla - யமனைப்போல் கொடியளான கைகேயியின் சொல்லைக் கொண்டு
கொடிய வனம் போன,Kodiya vanam pona - கொடிய காட்டுக்கு எழுந்தருளின
சீற்றம் இலாதானை,Seetram ilaathaanai - சீற்றமற்ற இராம பிரானை
பாடிப் பற,Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற

சீதை மணாளனை,Seethai manaalanai - ஸீதைக்கு வல்லபனானவனை
பாடிப் பற, Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற
312பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 6
முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டு உன் அடியேற் கருளென்று அவன் பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடி நிலை யீந்தானைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற–3-9-6
பதவுரை Show / Hide
முடி ஒன்றி,Mudi Ondri - திருமுடி சூடி
மூ உலகங்களும்,Moo Ulagangalum - பூமி, சுவர்க்கம், பாதாளம் என்ற மூன்று லோகங்களையும்
ஆண்டு,Aandu - பரி பாலித்துக் கொண்டு
உன் அடியேற்கு அருள் என்று,Un Adiyerku Arul Endru - தேவருடைய தாஸனான எனக்கு க்ருபை பண்ண வேணும் என்று வேண்டிக் கொண்டு
அவன் பின் தொடர்ந்த,Avan Pin Thodarndha - பெருமான் பின்னே தொடர்ந்து வந்த
படி இல் குணத்து பரதன் நம்பிக்கு,Padi Il Gunathu Barathan Nambikku - ஒப்பற்ற குணங்களை யுடையனான ஸ்ரீபரதாழ்வானுக்கு
அன்று,Andru - அக் காலத்திலே
அடி நிலை,Adi Nilai - ஸ்ரீபாதுகைகளை
ஈந்தானை,Einthaanaai - அளித்தருளின இராமபிரானை
பாடிப் பற,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற

அயோத்தியர்,Ayoththiyar - அயோத்தியையிலுள்ளவர்களுக்கு
கோமானை,Komaanaai - அரசனானவனை, பாடிப்பற
314பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 8
தார்க்கு இளந் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடைச் சூர்ப்ப ணகாவைச் செவி யொடு மூக்கு அவ ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக் கரசனைப் பாடிப் பற–3-9-8
பதவுரை Show / Hide
தார்க்கு,Tharkku - மாலை யிட்டு ராஜ்யம் நிர்வஹிக்கைக்கு
இளந்,Ilann - (தகுந்திராத) இனம் பருவத்தை யுடையவனான
தம்பிக்கு,Thambikku - பரதாழ்வானுக்கு
அரசு ஈந்து,Arasu Eindhu - (அடி சூடுகையாகிற) அரசைக் கொடுத்து,
நூற்றவள்,Noorrthaval - (இராமனைக் காட்டுக்குச் செலுத்தக் கடவோம் என்று) எண்ணம் கொண்ட கைகேயியினுடைய
சொல் கொண்டு,Sol Kondu - சொல்லை ஏற்றுக் கொண்டு
தண்டகம்,Thandhagam - தண்ட காரண்யத்துக்கு
போகி,Poagi - எழுந்தருளி (அவ்விடத்தில்)
நுடங்கு இடை,Nutangu Idai - துவண்ட இடையை உடையனான
சூர்ப்பண சாவை,Soorppana Saavai - சூர்ப்பணகையினுடைய
செவியொடு மூக்கு,Seviyodu Mookku - காதையும் மூக்கையும்
அவன் ஆர்க்க அரித்தானை,Avan Aarkka Ariththaanai - அவன் கதறும்படி அறுத்த இராம பிரானை
பாடிப் பற;,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற,Ayoththikku Arasanai Paadip Para - அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற
316பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 10
காரார் கடலை யடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன் முடி ஒன்பதோ டொன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீளரசீந்த ஆரா வமுதனைப் பாடிப் பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற–3-9-10
பதவுரை Show / Hide
கார் ஆர் கடலை,Kaar Aar Kadalai - கருமை பொருந்திய கடலை
அடைத்திட்டு,Adaiththittu - (மலைகளினால்) அடைத்து விட்டு (ஸேது கட்டி)
இலங்கை,Ilangai - (அர்த்த ஸேது வழியாக) லங்கையிலிருந்து
புக்கு,Pukku - (அவ்விடத்தில்)
ஒராதான்,Oraathaan - (தன் வீரப்பாட்டை) மதியாத ராவணனுடைய
பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்,Pon Mudi Onpathodu Onraiyum - அழகிய தலைகள் பத்தையும்
நேரா,Naeraa - அறுத்துப் போகட்டு
அவன் தம்பிக்கே,Avan Thambikke - அவனது தம்பியான ஸ்ரீலிபீஷணாழ்வானுக்கே
நீள் அரசு ஈந்த,Neel Arasu Eindha - நெடுங்காலம் நடக்கும்படியான ஆதி ராஜ்யத்தை அளித்தருளின்
ஆரா அமுதனை,Aaraa Amudhanai - எவ்வளவு உண்டாலும் திருப்தியைத் தாராத அம்ருதம் போல் இனியனான இராமபிரானை
பாடிப்பற;,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற
அயோத்தியர்,Ayoththiyar - அயோத்தியிலுள்ளார்க்கு வேந்தனை அரசனானவனை பாடிப் பற
317பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 11
நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறந்த ஒளி யிழையார்கள் சொல் செந்தமிழ்த் தென் புதுவை விட்டு சித்தன் சொல் ஐந்தினோ டைந்தும் வல்லார்க்கு அல்ல லில்லையே–3-9-11
பதவுரை Show / Hide
நந்தன மதலையை,Nandhana Madhalaiyai - நந்த கோபான் குமாரனான கண்ண பிரானையும்
காகுத்தனை,Kaaguththanai - இராம பிரானையும்
நவின்று,Navindru - (ஒருவர்க்கொருவர் எதிரியாய் நின்று) சொல்லி
உந்தி பறந்து,Undhi Parandhu - உந்தி பறக்கையாகிற லீலா ரஸங்கொண்டாடின
ஒளி இழையார்கள்,Oli Izaiyaargal - அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப் பெண்கள் இருவருடைய
சொல்,Sol - சொல்லி
செம்தமிழ்,Semthamizh - அழகிய தமிழ் பாஷையாலே
தென் புதுமை விட்டு சித்தன் சொல்,Then Puthumai Vittu Siththan Sol - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த
ஐந்தினோடு ஐந்தும்,Aindhinodu Aindhum - க்ருஷ்ணாவதார விஷயமான ஐந்தும், ராமாவதார விஷயமான ஐந்துமாகிய இப் பத்துப் பாசுரங்கனை
வல்லார்க்கு அல்லல் இல்லை,Vallarkku Allal Illai - துன்பமொன்று மில்லையாம்.
318பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 1
நெறிந்த கருங் குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம் செறிந்த மணி முடிச் சனகன் சிலை யிறுத்து நினைக் கொணர்ந்தது அறிந்து அரசு களை கட்ட அருந்தவத்தோன் இடை விலங்க செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓரடையாளம்–3-10-1
பதவுரை Show / Hide
நெறிந்த கருங்குழல்,Nerindha Karunguzhal - நெறிப்புக் கொண்ட கரிய கூந்தலை யுடையவளும்
மடவாய்,Madavaai - மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ!
நின் அடியேன்,Nin Adiyen - உமது அடியவனான என்னுடைய
விண்ணப்பம்,Vinnappam - விஜ்ஞாபகம் (ஒன்றைக் கேட்டருள வேணும்):
செறிந்த,Serindha - நெருங்கின
மணி,Mani - ரத்நங்களை யுடைய
முடி,Mudi - கிரீடத்தை அணிந்த
சனகன்,Sanagan - ஜநக மஹாராஜன் (கந்யா சுல்யமாக ஏற்படுத்தின)
சிலை,Silai - ருத்ர தநுஸ்ஸை
இறுத்து,Iruththu - முறித்து
நினை,Nina - உம்மை (பிராட்டியை)
கொணர்ந்தது,Konarnthathu - மணம் புரிந்து கொண்டதை
அறிந்து,Arindhu - தெரிந்து கொண்டு
அரசு களை கட்ட,Arasu Kalai Katta - (துஷ்ட) ராஜாக்களை (ப்பயிருக்கு)க்களை களைவது போலழித்த
அருந் தவத்தோன்,Arun Thavaththon - அரிய தவத்தை யுடைய பரசுராமன்
இடை விலங்க,Idai - நடு வழியில் தடுக்க
செறிந்த சிலை கொடு,Nadu Vazhiyil Thadukka - (தனக்குத்) தகுந்த (அப்பரசுராமன் கையிலிருந்த விஷ்ணு) தநுஸ்ஸை வாங்கிக் கொண்டு
தவத்தை,Thavaththai - (அப் பரசுராமனுடைய) தபஸ்ஸை
சிதைத்ததும்,Sithaiththadhum - அழித்ததும்
ஓர் அடையாளம்,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.
319பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 2
அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மட மானே எல்லியம் போதினி திருத்தல் இருந்ததோரிட வகையில் மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்–3-10-2
பதவுரை Show / Hide
அல்லி,Alli - அகவிதழ்களை யுடைய
அம் பூ,Am Poo - அழகிய பூக்களால் தொடுக்கப் பட்ட
மலர்க் கோதாய்,Malark Kothai - பூமாலை போன்றவளே!
அடி பணிந்தேன்,Adi Panindhen - (உமது) திருவடிகளில் வணங்கிய நான்
விண்ணப்பம்,Vinnappam - விஜ்ஞாபநமொன்றை
சொல்லு கேன்,Sollu Kaen - (உம்மிடத்தில்) சொல்லுவேன்;
துணை மலர் கண்,Thunai Malar Kan - ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர் போன்ற கண்களையும்
மடம்,Madam - மடப்பத்தையு முடைய
மானே,Maanae - மான் போன்றவளே!
கேட்டருளாய்,Kaettarulai - (அதைத்) திருச் செவி சாத்த வேணும்;
அம் எல்லி போது,Am Elli Podhu - அழகிய இராத்திரி வேளையில்
இனிது இருத்தல்,Inidhu Iruththal - இனிமையான இருப்பாக
இருந்தது,Irundhathu - இருந்ததான
ஒர் இடம் வகையில்,Or Idam Vagaiyil - ஓரிடத்தில்
மல்லிகை,Malligai - மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட
மா மாலை கொண்டு,Maa Maalai Kondu - சிறந்த மாலையினால்
ஆர்த்ததும்,Aarththadhum - (நீர் இராம பிரானைக்) கட்டியதும்
ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.
320பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 3
கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3
பதவுரை Show / Hide
கைகேசி,Kaikaesi - கைகேயியானவள்
கலக்கிய மா மனத்தனன் ஆய்,Kalakkiya Maa Manaththanan Aay - (மந்தாரையினாள்) கலக்கப்பட்ட சிறந்த மனத்தை யுடையவளாய்
வரம் வேண்ட,Varam Venda - (தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த) வரங்களின் பயனைக் கேட்க
மலக்கிய,Malakkiya - (அக் கைகேயியின் வார்த்தையால்) கலக்கமடைந்த
மா மனத்தனன் ஆய்,Maa Manaththanan Aay - சிறந்த மனத்தை யுடையவனாய்
மன்னவனும்,Mannavanum - தசரத சக்ரவர்த்தியும்
மறாது,Maraadhu - மறுத்துச் சொல்ல முடியாமல்
ஒழிய,Oliya - வெறுமனே கிடக்க,
குலம் குமரா,Kulam Kumaraa - (அந்த ஸந்தர்ப்பத்தில் கைகேயியானவள்,) “உயர் குலத்திற்பிறந்த குமாரனே)
காடு உறைய,Kaadu Uraiya - காட்டிலே (பதினான்கு வருஷம்) வஸிக்கும்படி
போ என்று,Poa Endru - போய் வா” என்று சொல்லி
விடை கொடுப்ப,Vidai Koduppa - விடை கொடுத்தனுப்ப
அங்கு,Angu - அக் காட்டிலே
இலக்குமணன் தன்னொடும்,Ilakkuamanan Thannodum - லக்ஷ்மணனோடு கூட
ஏகியது,Eagiyathu - (இராமபிரான்) சென்றடைந்ததும்
ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.
321பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 4
வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம் தேரணிந்த அயோத்தியர் கோன் பெருந்தேவீ கேட்டருளாய் கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமையைக் கொண்டதும் ஓரடையாளம்–3-10-4
பதவுரை Show / Hide
வார் அணிந்த,Vaar Anindha - கச்சை அணிந்த
முலை,Mulai - முலையையும்
மடவாய்,Madavaai - மடப்பத்தையுமுடைய பிராட்டீ!
வைதேவீ,Vaithevi - விதேஹ வம்சத்திற் பிறந்தவனே!
விண்ணப்பம்,Vinnappam - ஒரு விஜ்ஞாபகம்;
தேர் அணிந்த,Ther Anindha - தேர்களாலே அலங்காரமான
அயோத்தியர் கோன்,Ayoththiyar Kon - அயோத்தியிலுள்ளார்க்கு அரசனாதற்கு உரிய இராமபிரானது
பெருந்தேவீ,Perundhevi - பெருமைக்குத் தகுந்த தேவியே!
கேட்டருளாய்,Kaettarulai - அவ் விண்ணப்பத்தைக் கேட்டருளவேணும்;
கூர் அணிந்த,Koor Anindha - கூர்மை பொருந்திய வேலாயுதத்தில் வல்லவனாகிய
குகனோடும்,Guganodum - குஹப் பெருமாளோடு கூட
கங்கை தன்னில்,Gangai Thannil - கங்கை கரையிலே
சீர் அணிந்த தோழமை,Seer Anindha Thozhamai - சிறப்புப் பொருந்திய ஸ்நேஹத்தை
கொண்டதும்,Kondadhum - பெற்றதும்
ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.
322பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 5
மானமரு மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து தேனமரும் பொழிற் சாரல் சித்திர கூடத்து இருப்ப பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓரடையாளம்-3-10-5
பதவுரை Show / Hide
மான் அமரும்,Maan Amarum - மானை யொத்த
மென் நோக்கி,Men Nookki - மென்மையான கண்களை யுடையவளான
பால் மொழியாய்,Paal Mozhiyaai - பால் போல் இனியபேச்சை யுடையவளே!
விண்ணப்பம்;,Vinnappam - ஒரு விஜ்ஞாபகம்;
கான் அமரும்,Kaan Amarum - காட்டில் பொருந்திய
கல் அதர் போய்,Kal Adhar Poi - கல் நிறைந்த வழியிலேயே
காடு உறைந்த காலத்து,Kaadu Uraindha Kaalaththu - காட்டில் வஸித்த போது
தேன் அமரும் பொழில்,Then Amarum Pozhil - வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய
சாரல்,Saaral - தாழ்வரையோடு கூடிய
சித்திர கூடத்து,Siththira Koodaththu - சித்திர கூட பர்வதத்தில்
இருப்ப,Irup - நீங்கள் இருக்கையில்
பரதன் நம்பி,Barathan Nambi - பரதாழ்வான்
பணிந்ததும்,Panindhadum - வந்து வணங்கியதும்
ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.
323பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 6
சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓரடையாளம்–3-10-6
பதவுரை Show / Hide
சித்திரக்கூடத்து ,Siththirak Koodaththu - சித்திரகூட பர்வதத்தில்
இருப்ப,Irup - நீங்களிருவரும் ரஸாநுபவம் பண்ணிக் கொண்டிருக்கையில்
சிறு காக்கை,Siru Kaakkai - சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜயந்தன்
முலை தீண்ட,Mulai Theenda - (உமது) திரு முலைத் தடத்தைத் தீண்ட
அத்திரமே கொண்டு,Aththiramae Kondu - (அதனாற் சீற்றமுற்ற ஸ்ரீராமன்) ப்ரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்து
எறிய,Eriya - பிரயோகிக்க,
அனைத்து உலகும்,Anaiththu Ulagum - (அக் காகம் அதற்குத் தப்புவதற்காக) உலகங்களிலெல்லாம்
திரிந்து ஓடி,Thirindhu Oadi - திரிந்து ஓடிப் போய்
வித்தகனே,Viththagane - (தப்ப முடியாமையால் மீண்டு இராமபிரானையே அடைந்து) “ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
இராமா,Raamaa - ஸ்ரீ ராமனே!
ஓ,O - ஓ !!
நின் அபயம்,Nin Abayam - (யான்) உன்னுடைய அடைக்கலம்”
என்று அழைப்ப,Endru Azhaippa - என்று கூப்பிட
அத்திரமே,Aththiramae - (உயிரைக் கவர வேணுமென்று விட்ட அந்த) அஸ்த்ரமே
அதன் கண்ணை,Adhan Kannai - அந்தக் காகத்தின் ஒரு கண்ணை மாத்திரம்
அறுத்ததும்,Aruththadhum - அறுத்து விட்டதும் ஓர் அடையாளம்
324பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 7
மின்னொத்த நுண்ணிடையாய் மெய் யடியேன் விண்ணப்பம் பொன்னொத்த மானொன்று புகுந்து இனிது விளையாட நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓரடையாளம்–3-10-7
பதவுரை Show / Hide
மின் ஒத்த,Min Oththa - மின்னலைப் போன்ற
நுண் இடையாய்,Nun Idaiyaai - மெல்லிய இடையை யுடையவளே!
மெய் அடியேன்,Mei Adiyen - உண்மையான பக்தனாகிய எனது
விண்ணப்பம்,Vinnappam - விண்ணப்பத்தை (க் கேட்டருள வேணும்;)
பொன் ஒத்த,Pon Oththa - பொன் நிறத்தை ஒத்த (நிறமுடைய)
மான் ஒன்று,Maan Ondru - (மாரீசனாகிய) ஒருமான்
புகுந்து,Pugundhu - (பஞ்சவடியில் நீரிருக்கும் ஆச்ரமத்தருகில் வந்து
இனிது விளையாட,Inidhu Vilaiyaada - அழகாக விளையாடா நிற்க,
நின் அன்பின் வழி நின்று,Nin Anbin Vazi Nindru - (அதை மாயமான் என்று இளையபெருமாள் விலக்கவும்) உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று
சிலை பிடித்து,Silai Pitiththu - வில்லை யெடுத்துக் கொண்டு
எம்பிரான்,Empiraan - இராமபிரான்
ஏக,Eaga - அம்மானைப் பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து) எழுந்தருள,
பின்னே,Pinnae - பிறகு
அங்கு,Angu - அவ் விடத்தில்
இலக்குமணன்,Ilakkuamanan - இளைய பெருமாளும்
பிரிந்ததும்,Pirindhadhum - பிரிந்ததுவும் ஓர் அடையாளம்
325பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 8
மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம் ஒத்த புகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத் தேட அத் தகு சீரயோத்தியர் கோன் அடையாள மிவை மொழிந்தான் இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே-3-10-8
பதவுரை Show / Hide
மை தகு,Mai Thagu - மைபோல் விளங்குகிற
மா மலர்,Maa Malar - சிறந்த புஷ்பங்களை அணிவதற்கு உரிய
குழலாய்,Kuzhalaai - கூந்தலை யுடையவளே!
வைதேவி,Vaithevi - வைதேஹியே!
ஒத்த புகழ்,Oththa Pugazh - “பெருமாளோடு இன்பத் துன்பங்களை) ஒத்திருக்கப் பெற்றவன்” என்ற கீர்த்தியை யுடைய
வானரர் கோன் உடனிருந்து,Vaanarar Kon Udanirundhu - (இராமபிரானோடு) கூட இருந்து
நினை தேட,Ninaith Theda - உம்மை தேடும்படி (ஆள் விடுகையில் என்னிடத்து விசேக்ஷமாக அபிமானிக்க)
அத் தகு சீர்,Ath Thagu Seer - (பிரிந்த) அந்த நிலைக்குத் தகுதியான குணமுள்ள
அயோத்தியர் கோன்,Ayoththiyar Kon - அயோத்தியிலுள்ளார்க்குத் தலைவைரான பெருமாள்
அடையாளம் இவை,Adaiyaalam Ivai - இவ் வடையாளங்களை
மொழிந்தான்,Mozhindhaan - (என்னிடத்திற்) சொல்லி யருளினான்;
அடையாளம்,Adaiyaalam - (ஆதலால்) (யான் சொன்ன) அடையாளங்கள்
இத் தகையால்,Ith Thagaiyaal - இவ்வழியால் (வந்தன); (அன்றியும்)
ஈது,Eedhu - இதுவானது
அவன்,Avan - அவ்விராம பிரானுடைய
கை மோதிரம்,Kai Modhiram - திருக்கையிலணிந்து கொள்ளும் மோதிரமாகும்.
326பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 9
திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெருஞ் சபை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல் வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9
பதவுரை Show / Hide
திக்கு,Thikku - திக்குகளிலே
நிறை,Nirai - நிறைந்த
புகழ் ஆனன்,Pugazh Aanan - கீர்த்தியை யுடையவனான ஜநக ராஜனுடைய
தீ வேள்வி,Thee Velvi - அக்நிகளைக் கொண்டு செய்யும் யாகததில்
சென்ற,Sendra - (விஸ்வாமித்திரருடன்) போன
மிக்க பெருசபை நடுவே,Mikka Perusabai Naduvae - மிகவும் பெரிய ஸபையின் நடுவில்
வில்லிறுத்தான்,Villiruththaan - ருத்ர தநுஸ்ஸை முறித்த இராமபிரானுடைய
மோதிரம்,Modhiram - மோதிரத்தை
கண்டு,Kandu - பார்த்து
மலர் குழலாள்,Malar Kuzhalaal - பூச்சூடிய கூந்தலை யுடையவளான
சீதையும்,Seethaiyum - ஸுதாப் பிராட்டியும்,
அனுமான்,Anumaan - ‘வாராய் ஹனுமானே!
அடையாளம் ?,Adaiyaalam - (நீ சொன்ன) அடையாளங்களெல்லாம்
ஒக்கும்,Okkum - ஒத்திரா நின்றுள்ளவையே
என்று,Endru - என்று (திருவடியை நோக்கிச்) சொல்லி (அந்தத் திருவாழியை)
உச்சி மேல் வைத்துக் கொண்டு,Uchchi Mael Vaiththuk Kondu - தன் தலையின் மீது வைத்துக் கொண்டு
உகந்தான்,Ugandhaan - மகிழ்ந்தான்
327பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 10
வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம் பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார் ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.–3-10-10
பதவுரை Show / Hide
வார் ஆரும்,Vaar Aarum - கச்சு அணிந்திருக்கைக்கு உரிய
முலை,Mulai - முலையையும்
மடலாள்,Madalaal - மடப்பத்தை யுமுடையவளான
வைதேவிதனை,Vaithevidhanai - ஸீதா பிராட்டியை
கண்டு,Kandu - பார்த்து
சீர் ஆரும்,Seer Aarum - சக்தியை யுடையவனான
திறல்,Thiral - சிறிய திருவடி
தெரிந்து,Therindhu - (பெருமாளிடத்தில் தான்) அறிந்து கொண்டு.
உரைந்து,Uraindhu - (பின்பு பிராட்டியிடத்திற்) சொன்ன
அடையாளம்,Adaiyaalam - அடையாளங்களை (க் கூறுவதான)
பார் ஆளும் புகழ்,Paar Aazhum Pugazh - பூமி யெங்கும் பரவின கீர்த்தியை யுடையராய்
புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
பட்டர்பிரான் பாடல்,Pattarpiraan Paadal - பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை
வல்லார்,Vallaar - ஓத வல்லார்கள்
ஏர் ஆரும் வைகுந்தத்து,Er Aarum Vaikunthaththu - வல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீவைகுண்டததில்
இமையவரோடு,Imaiyavarodu - நித்ய ஸூரிகளோடு
இருப்பார்,Irupaar - கோவையா யிருக்கப் பெறுவார்கள்.
328பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 1
கதிராயிர மிரவி கலந் தெரித்தா லொத்த நீள் முடியன் எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் அதிரும் கழற் பொரு தோள் இரணிய னாகம் பிளந்து அரியாய் உதிரமளைந் தகையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர்–4-1-1
பதவுரை Show / Hide
கதிர்,Kathir - (எண்ணிறந்த) கிரணங்களை யுடைய
ஆயிரம் இரவி,Aayiram Iravi - ஆயிரம் ஆதித்யர்கள்
தறித்தால் ஒத்தத,Thariththaal Oththadha - ஜ்வலித்தாற்போல் (மிகவும் பளபளவா நின்றுள்ள)
நீள் முடியன்,Neel Mudiyan - நீண்ட திருவபிஷேகத்தை உடையவனுமான
இராமன்,Raaman - இராமபிரான்
இருக்கும் இடம்,Irukkum Idam - எழுந்தருளியிருக்குமிடத்தை
நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில் (அவ்விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;)
அதிரும்,Athirum - (கல கல் என்று) ஒலி செய்யா நின்றுள்ள
கழல்,Kazhal - வீரக் கழலையும்
பொரு தோள்,Poru Thol - போர் செய்யப் பதைக்கிற தோள்களையுமுடைய
இரணியன்,Iraniyan - ஹிரண்யாஸுரனுடைய
ஆகம்,Aagam - மார்பை
அரி ஆய்,Ari Aay - நரஸிம்ஹ ருபியாய்க் கொண்டு
பிளந்து,Pilandhu - கீண்டு
உதிரம் அளைந்து,Uthiram Alainthu - (அதனாலுண்டான) ரத்தத்தை அளைந்த
கையோடு,Kaiyodu - கைகளோடு கூடி
இருந்தானை,Irundhaanai - (சீற்றந்தோற்ற) எழுந்தருளியிருந்த நிலைமையில் (அவனை)
உள்ள ஆ உண்டார் உளர்,Ulla Aa Undaar Ular - உள்ள அவனை ஸேவித்தவர்கள் இருக்கின்றனர்.
329பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 2
நாந்தகம் சங்கு தண்டு நாணொலிச் சார்ங்கம் திருச் சக்கரம் ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க வேந்தர் தலைவஞ் சனகராசன் தன் வேள்வியில் கண்டாருளர்–4-1-2
பதவுரை Show / Hide
நாந்தகம்,Naandhagam - நந்தகம் என்னும் வாளையும்
சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்ச ஐன்யத்தையும்
தண்டு,Thandu - கௌமோதகி என்னும் கதையையும்
நாண் ஒலி,Naan Oli - நாண் கோஷத்தை யுடைய
சார்ங்கம்,Saarngam - ஸ்ரீசார்ங்க ததுஸ்னையும்
திரு சக்கரம்,Thiru Chakkaram - திருவாழி யாழ்வானையும்
ஏந்து பெருமை இராமன்,Aendhu Perumai Raman - (திருக்கைகளில்) ஏந்தும்படியான பெருமையை யுடைய இராமபிரான்
இருக்கும் இடம் நாடுதிரேல்,Irukkum Idam Naadhuthireel - எழுந்தருளியிருக்குமிடத்தை தேடுகிறீர்களாகில் (அவ்விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;)
காந்தன் முகிழ் விரல் சீதைக்கு ஆகி,Gaanthan Mughil Viral Seethaaikku Aagi - செங்காந்தளம்பு போன்ற விரல்களையுடைய பிராட்டிக்காக
வேந்தர் தலைவன்,Vaendhar Thalaivan - ராஜாதிராஜனான
சனகராசன் தன்,Sanagaraasan Than - ஜனக சக்கரவர்த்தியினுடைய
வேள்வியில்,Velviyil - யஜ்ஞ வாடத்திலே
சென்று,Sendru - எழுந்தருளி
கடு சிலை,Kadu Silai - வலிய வில்லை
இறுக்க கண்டார் உளர்,Irukka Kandaar Ular - முறிக்கக் கண்டவர்கள் இருக்கின்றனர்.
330பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 3
கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொரு தழிய சிலையால் மராமர மெய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தட வரை கொண்டடைப்ப அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்–4-1-3
பதவுரை Show / Hide
கொலை யானை,Kolai Yaanai - கொலை செய்வதையே இயல்பாக வுடைய (குவலய பீடமென்னும் யானையினுடைய
கொம்பு,Kombu - தந்தங்களை
பறித்து,Pariththu - பறித்துக் கொண்டவனும்,
கூடலர்,Koodalar - (ஜகஸ்தாதத்திலுள்ள ராக்ஷஸர்களாகிய) சத்துருக்களுடைய
சேனை,Saenai - சேனையானது
அழிய,Azhiya - அழியும்படி
பொருது,Porudhu - போர் செய்தவனும்,
சிலையால்,Silaiyaal - வில்லாலே
மராமரம்,Maraamaram - ஸப்த ஸால வ்ருக்ஷங்களை
மெய்த,Meidha - எய்தவனுமான
தேவனை,Thevanai - எம்பிரானை
சிக்கன நாடுதிரேல்,Sikkana Naadhuthireel - த்ருடாத்யவஸாயத்தோடு தேடுகிறீர்களாகில்,
குரங்கு இனம்,Kurangu Inam - (அவனிருக்குமிடஞ் சொல்லுகிறேன்;) வாநர ஸேனையானது
தடவரை,Thadavarai - பெரிய மலைகளை
தலையால்,Thalaiyaal - (தமது) தலைகளினால்
தாங்கிக் கொண்டு சென்று,Thaangik Kondu Sendru - சுமந்து கொண்டு போய்
அடைப்ப,Adaippa - கடலின் நடுவே அணையாக) அடைக்க
அலை ஆர் கடல் கரை,Alai Aar Kadal Karai - அலையெறிகிற கடற்கரையிலே
வீற்றிருந்தானை,Veetrirundhaanai - எழுந்தருளியிருந்த இராமபிரானை
அங்குத்தை கண்டார் உளர்,Anguththai - அந்த ஸந்நிவேசத்தில் கண்டார் உளர்
334பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 7
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையன் உள்ள விடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடுரைக்கேன் வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கை செய்யக் கண்டாருளர்–4-1-7
பதவுரை Show / Hide
வெள்ளை,Vellai - வெண்மை நிறமுடையதும்
விளி,Vili - (அநுபவ கைங்கரியங்களில் ருசியுடையீர்! வாருங்கள் என்று, தன் த்வநியால்) அழைப்பது போன்றுள்ளதுமான
சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
வெம் சுடர்,Vem Sudar - தீக்ஷ்ணமான ஜ்யோதிஸ்ஸை யுடைய
திருச் சக்கரம்,Thiruch Chakkaram - திருவாழி யாழ்வாளையும்
ஏந்து கையன்,Aendhu Kaiyan - தரியா நின்றுள்ள திருக்கைகளையுடைய எம்பெருமான்
உள்ள இடம்,Ulla Idam - எழுத்தருளி யிருக்குமிடத்தை
வினவில்,Vinavil - கேட்கிறீர்களாகில்
உமக்கு,Umakku - (கேட்கிற) உங்களுக்கு
இறை சுவடு உரைக்கேன்,Irai Suvadu Uraikkaen - சிறிது அடையாளம் சொல்லுகிறேன்,
வம்மின்,Vammin - வாருங்கள்;
வெள்ளைப் புரவி,Vellaip Puravi - வெள்ளைக் குதிரகைள் பூண்டிருப்பதும்
குரங்குகொடி,Kurangukodi - குரங்காகிற வெற்றிக் கொடியை உடையதுமான
தேர்மிசை,Thermisai - (அர்ஜுனனுடைய) தேரின் மேலே
முன்பு நின்று ,Munbu Nindru - (ஸாரதியாய்) முன்னே நின்று
படை,Padai - ஸைந்யத்துக்கு
கள்ளம் துணை ஆகி,Kallam Thunai Aagi - க்ருத்ரிமத் துணையாயிருந்து
பாரதம்,Bhaaratham - பாரத யுத்தத்தை
கை செய்ய கண்டார் உளர்,Kai Seiyya Kandaar Ular - அணி வகுத்து நடத்தும் போது கண்டார் உளர்
338பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 1
அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்களாடும் சீர் சிலம்பாறு பாயும் தென் திரு மாலிருஞ் சோலையே-4-2-1
பதவுரை Show / Hide
தெய்வம் மகளிர்கள்,Deivam Magalirgala - தேவ ஸ்திரீகள்
சிலம்பு ஆர்க்க ,Silambu Aarka - (நமது) பாதச் சிலம்புகள் ஒலிக்கும் படி
வந்து ,Vandhu - (பூலோகத்தில்) வந்து
ஆடும் சீர்,Aadu Seer - நீராடும்படியான பெருமையை யுடைய
சிலம்பு ஆறு,Silambu Aaru - நூபுர கங்கையானது
பாயும்,Paayum - (இடைவிடாமல்) பெருகப் பெற்றுள்ள
தென் திருமாலிருஞ் சோலை,Then Thirumaalirun Cholai - அழகிய திருமாலிருஞ் சோலையானது,
அலம்பா,Alampaa - பிராணிகளை அலையச் செய்தும்
வெருட்டா,Veruttaa - பயப்படுத்தியும்
கொன்று,Konru - உயிர்க் கொலை செய்தும்
திரியும்,Thiriyum - திரிந்து கொண்டிருந்த
அரக்கரை,Arakkarai - ராக்ஷஸர்களை
குலம் பாழ் படுத்து,Kulam Paazh Paduthu - ஸ குடும்பமாகப் பாழாக்கி
குலம் விளக்கு ஆய் நின்றகோன்,Kulam Vilakku Aay Nintragon - (இக்ஷ்வாகு வம்சத்துக்கு விளக்காய் நின்ற பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமான)
மலை,Malai - திருமலையாம்.
339பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 2
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை எல்லா விடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டொலி செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே–4-2-2
பதவுரை Show / Hide
பல்லாண்டு ஒலி,Pallandu Oli - மங்களசான கோஷமானது
எல்லா இடத்திலும்,Ella Idathilum - எல்லா யிடங்களிலும்
எங்கும்,Engum - திருமலையின் பரப்பெங்கும்
பரந்து செல்லா நிற்கும் சீர்,Parandhu Sella Nirkum Seer - பரவிச் செல்லும் படியான பெருமையை யுடைய
தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை
வல் ஆளன்,Val Aalan - வலிய ஆண்மையை யுடையவனும்
வாள்,Vaal - (சிவனிடத்துப் பெற்ற) வாளை யுடையவனுமான
அரக்கன்,Arakkan - ராவணனுடைய
தோளும் முடியும்,Tholum Mudiyum - தோள்களும், தலைகளும்
தங்கை,Thangai - (அவனது) தங்கையாகிய சூர்ப்பணகையினது
பொல்லாத மூக்கும்,Pollaadha Mookkum - கொடிய மூக்கும்
போக்குவித்தான்,Pookkuvithaan - அறுப்புண்டு போம்படி பண்ணின எம்பெருமான்
பொருந்தும்,Porundhum - பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடமான
மலை,Malai - திருமலையாம்.
355பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 7
கனங் குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழு வேற்றுவித்த எழில் தோள் எம்பிரான் மலை கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலமெல்லாம் இனம் குழு வாடும் மலை எழில் மாலிருஞ் சோலையதே–4-3-7
பதவுரை Show / Hide
கனம்,Kanam - ஸ்வர்ண மயமான
குழையாள் பொருட்டா,Kuzhaiyaal Porutaa - காதணியை யுடையாளான
கணை,Kanai - அம்புகளை
பாரித்து,Paariththu - பிரயோகித்து
அரக்கர்கள் இனம்,Arakkargal Inam - ராஷஸ குலத்தை
கழு ஏற்றுவித்து,Kazhuertruviththu - குலத்தின் மேல் ஏற்றின வனும்
எழில் தோள்?,Ezil Thol - அழகிய தோள்களை யுடையவனுமான
இராமன்,Raaman - இராமபிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை,Malai - மலையான
கனம்,Kanam - பொன்களை
கொழி,Kozhi - கொழித்துக் கொண்டு வருகின்ற
தெள் அருவி,TheL Aruvi - தெளிந்த அருவிகளிலே
இனக்குழு,Inakuzhu - அறிஞர்கள் எல்லாம்
அகல் ஞாலமெல்லாம்,Agal Gnaalam Ellam - விசாலமான பூமியிலுள்ளா ரெல்லாரும்
வந்து சூழ்ந்த,Vandhu Soozhntha - வந்து சூழ்ந்து கொண்டு
ஆடும்,Aadum - நீராடப் பெற்ற
எழில்,Ezil - அழகிய
மாலிருஞ் சோலையிலே அதே,Maaliruncholaiyile Adhe - திருமாலிருஞ்சோலை அதே.
356பெரியாழ்வார் திருமொழி || மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு) 8
எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த அரையனமரும் மலை அமரரொடு கோனும் சென்று திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ் சோலையதே–4-3-8
பதவுரை Show / Hide
எரி,Eri - நெருப்பை
சிதறும்,Sitharum - சொரியா நின்றுள்ள
சரத்தால்,Saraththaal - அம்புகளினால்
இலங்கையினை,Ilangkaiyinai - இலங்கைக் காரனான ராவணனை
தன்னுடைய,Thannudaiya - தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து,Vari Silai Vaa yil Peydhu - நீண்ட வில்லின் வாயிலே புகுரச் செய்து
காய் நோட்டம்,Kaai Nottam - (அவனுடைய) வாக்கின் அநீதியை
தவிர்த்து,Thavirthu - குலைத்து
உகந்த,Ugantha - (தான் வெற்றி பெற்றமையாலே) மகிழ்ந்தருளின
அரையன்,Araiyan - ஸ்வாமியான இராமபிரான்
அமரும்,Amarum - எழுந்தருளி யிருக்கிற
மலை,Malai - மலையாவது:
அமரரொடு,Amararodu - தேவர்களோடு கூட
கோனும்,Konum - (அவர்களுக்கு) தலைவனான இந்திரனும்
திரி,Thiri - (இரவும் பகலும்) திரியா நின்ற
சுடர்,Sudar - சந்த்ர ஸூர்யர்களும்
சென்று,Sendru - வந்து
சூழூம்,Soozhoom - பிரதக்ஷிணம் பண்ணப் பெற்ற
திருமாலிருஞ்சோலை மலை அதே,Thirumaaliruncholai Malai Adhe - திருமாலிருஞ்சோலை மலை அதே
370பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 11
சீதநீர் புடை சூழ் செழுங்கழனி யுடைத் திருக் கோட்டியூர் ஆதியானடியாரையும் அடிமை யின்றித் திரிவாரையும் கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக் காளரே–4-4-11
பதவுரை Show / Hide
சீதம் நீர்,Seetham Neer - குளிர்ந்த நீராலே
படை சூழ்,Padai Soozh - சுற்றும் சூழப் பெற்ற
செழு,Sezhu - செழுமை தங்கிய
கழனி உடை,Kazhani Udai - கழனிகளை யுடைய
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
ஆதியான்,Aadhiyaan - எம்பெருமானுக்கு
அடியாரையும்,Adiyaaraiyum - அடிமை செய்யும் பாகவதர்களையும்
அடிமை இன்றி,Adimai Inri - அடிமை செய்யாமல்
திரிவாரையும்,Thirivaaraiyum - திரிகின்ற பாவிகளையும் குறித்து,
கோதில்,Kothil - குற்றமற்றவரும்
பட்டர் பிரான்,Pattar Piraan - அந்தணர்கட்குத் தலைவரும்
குளிர,Kulira - குளிர்ந்த
புதுவை,Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மண்,Man - நிர்வாஹருமான
விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார்
சொல்,Sol - அருளிச் செய்த இப் பாசுரங்களை
ஏதும் இன்றி,Eaathum Inri - பழுதில்லாதபடி
உரைப்பவர்,Uraippavar - ஓதுமவர்கள்
இருடீகேசனுக்கு,Irudheekesanukku - எம்பெருமானுக்கு
ஆளர்,Aalar - ஆட் செய்யப் பெறுவர்
391பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் தாசரதி போய் எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட எம் புருடோத்தம னிருக்கை கங்கை கங்கை யென்ற வாசகத்தாலே கடு வினை களைந்திட கிற்கும் கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்ட மென்னும் கடி நகரே–4-7-1
பதவுரை Show / Hide
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே,Gangai Gangai Endra Vaasagaththaaley - கங்கை கங்கை என்ற சப்த்த்தைச் சொல்லுவதனால் என்ற வாசகத்தைச் சொல்லுவதாகும்.
கடு வினை,Kadu Vinai - கடுமையான பாவங்களை
களைந்திட கிற்கும்,Kalaindhida Kirkkum - ஒழிக்கவல்ல
கரை மேல்,Karai Mel - கரையிலே
கை தொழ நின்ற,Kai Thozha Nindra - (பக்தர்கள்) கை கூப்பித் தொழும் படியாக நின்ற
கண்டம் என்றும்,Kandam Endrum - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய
கடி நகர்,Kadi Nagar - சிறந்த நகரமானது (எதுவென்னில்,
தங்கையை,Thangaiyai - (இராவணனுடைய ) தங்கையாகிய சூர்ப்பணகையினுடைய
மூக்கும்,Mookkum - மூக்கையும்
தமையனை,Thamaiyanai - அவளுடைய தமையனான ராவணனுடைய
தலையும்,Thalaiyum - தலையையும்
எங்கும்,Engum - நாட்டெங்கும்
தன் புகழ்,Than Pugazh - தன்னுடைய கீர்த்தியே யாம்படி
இருந்து,Erundhu - பதினோராயிரம் ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து
அரசு ஆண்ட,Arasu Aanda - ராஜ்ய பரிபாலகஞ் செய்தருளினவனும்
எம்,Em - எமக்குத் தலைவனுமான
தாசரதி,Daasarathi - இராமபிரானுமாகிய
எம் புருடோத்தமன்,Em Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமாளுடைய
எமது இருக்கை,Emadhu Irukkai - வாஸஸ்தாநமாம்.
399பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9
வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இட முடை வதரி யிட வகை யுடைய எம் புருடோத்தம னிருக்கை தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-9
பதவுரை Show / Hide
தட வரை,Thada Varai - (மந்தரம் முதலிய) பெரிய மலைகளானவை
அதிர,Athira - சலிக்கும் படியாகவும்
காணி,Kaani - பூமியானது
விண்டு இடிய,Vindu Idiya - பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும்
தலைப் பற்றி,Thalaip Patri - (மரங்களினுடைய) தலை யாவுஞ் செல்லக் கிளம்பி
கரை,Karai - கரையிலுள்ள
மரம்,Maram - மரங்களை
சாடி,Saadi - மோதி முறித்தும்
இடம் உடை,Edam Udai - இடமுடையத்தான் (விசாலமான)
கடல்,Kadal - (ஒன்றாலுங் கலங்காத) கடலுங்கூட
கலங்க,Kalanga - கலக்கும்படி
கடுத்து,Kaduthu - வேகங்கொண்டு
இழி,Ezhi - இழியா நின்றுள்ள
கங்கை,Gangai - கங்கா தீரத்திலுள்ள
கண்டம் என்னும் படி நகர்;,Kandam Ennum Padi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது
வட திசை,Vada Thisai - வடக்கிலுள்ள
மதுரை,Mathurai - ஸ்ரீ மதுரையும்
சாளக்கிராமம்,Saalakkiraamam - ஸ்ரீ ஸாளக்ராமமும்
வைகுந்தம்,Vaikuntham - ஸ்ரீவைகுண்டமும்
துவரை,Thuvaarai - ஸ்ரீத்வாரகையும்
அயோத்தி,Ayoththi - திருவயோத்தையும்
இடம் உடை,Edam Udai - இடமுடைத்தான (விசாலமான)
வதரி,Vathari - ஸ்ரீ பதரிகாஸ்ரமுமாகிற இவற்றை
இடவகை உடைய,Edavagai Udaiya - வாஸஸ்தானமாக வுடையனான
எம் புருடோத்தமன் இருக்கை,Em Purudhoaththaman Irukkai - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம்.
405பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 4
கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர் தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4
பதவுரை Show / Hide
கூன்,Koon - கூனைவுடைய
தொழுத்தை,Thozhuththai - வேலைக்காரியாகிய மந்தரை யானவள்
சிதகு,Sithagu - (ஸ்ரீராமபட்டாபிஷேக மஹோத்வசத்துக்கு விநாசகமான தீய சொற்களை
உரைப்ப,Uraippa - சொல்ல (அச் சொற்களை அங்கீகரித்துக் காட்டுக்கு எழுந்தருளச் சொன்ன)
கொடியவள்,Kodiaval - மஹா க்ரூரையான கைகேயியினுடைய
வாய்,Vaai - வாயிலுண்டான
கடிய சொல்லைக் கேட்டு,Kadiya Sollai Kaettu - கடினமான சொல்லைக் கேட்டு
ஈன்று எடுத்து தாயாரையும்,Eenru Eduththu Thaayaraiyum - (தன்னைப்) பெற்று வளர்த்த தாயான ஸ்ரீகௌஸலையாரையும்
இராச்சியமும்,Iraachchiyamum - ராஜ்யத்தையும்
ஆங்கு ஒழிய,Aangu Ozhia - கைவிட்டு
தொழத்தை,Thozhaththai - அடிமைப் பெண்
தாயார்,Thaayaar - பூஜையிற்பன்மை
கண்டகர்,Kandhagar - முள்ளைப் போன்றவர்
கான் தொடுத்த நெறி போகி,Kaan Thoduththa Neri Pogi - காடுகள் அடர்ந்திரா நின்றுள்ள வழியே (ஸ்ரீதண்டகாரணியத்திற்கு) எழுந்தருளி
கண்டகரை,Kandhagarai - (முனிவர்களுக்கு) முள் போலப் பாதகராயிருந்த (ஜநஸ்தாந வாசிகளான ராக்ஷஸரை
களைந்தான்,Kalaindhaan - நிரஸித்தருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்,Oor - திருப்பதி யாவது
தேன் தொடுத்த மலர்,Then Thoduththa Malar - தேன் மாறாத மலர்களை யுடைய
சோலை,Solai - சோலைகளை யுடைத்தான
திரு அரங்கம் என்பது.,Thiru Arangam Enpathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம்.
406பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 5
பெரு வரங்களவை பற்றிப் பிழகுடைய இராவணனை உருவரங்கப் பொருதழித்து இவ் வுலகினைக் கண் பெறுத்தானூர் குருவரும்பக் கோங்கலரக் குயில் கூவும் குளிர் பொழில் சூழ் திருவரங்க மென்பதுவே என் திருமால் சேர்விடமே–4-8-5
பதவுரை Show / Hide
குரவு,Kuravu - குரவ மரங்களானவை
அரும்ப,Arumba - அரும்பு விடா நிற்க
கோங்கு,Kongu - கோங்கு மரங்களானவை
அலரா,Alaraa - அலரா நிற்க.
குயில்,Kuyil - குயில்களானவை
கூவும்,Koovum - (களித்துக்) கூவும்படியான
குளிர் பொழில் சூழ்,Kulir Pozhil Soozh - குளிர்ந்த சோலைகளாலே சூழப் பெற்ற
திரு அரங்கம் என்பது,Thiru Arangam Enpathu - திருவரங்கமென்னும் திருப்பதியானது;
பெரு வரங்களவை ,Peru Varangalavai - பெருமை பொருந்திய வரங்களை
பற்றி,Patri - பலமாகக் கொண்டு
பிழக்கு உடைய,Pizhakku Udaiya - (தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாக வுடைய
இராவணனை,Eraavananai - இராவணனுடைய
உரு,Uru - உடலானது
மங்க,Mangga - சிந்நபிந்நமாம்படி
பொருது அழித்து,Porudhu Azhiththu - போர் செய்து (அவனைத்) தொலைத்த
இ உலகினை,E Ulaginai - இந்த லோகத்தை
கண் பெறுத்தான்,Kan Peruththaan - காத்தருளினவனும்
என்,En - எனக்குத் தலைவனும்
திருமால்,Thirumaal - ச்ரிய: பதியுமான எம்பெருமான்
சேர்வு இடம்,Saarvu Idam - சேருமிடாகிய
ஊர்,Oor - திருப்பதியாம்
411பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 10
பரு வரங்களவை பற்றிப் படையாலித் தெழுந்தானை செரு வரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதி மேல் திருவரங்கத் தமிழ் மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு இருவரங்க மெரித்தானை ஏத்த வல்லா ரடியோமே-4-8-10
பதவுரை Show / Hide
பருவரங்கள் அளை பற்றி,Paruvarangal Alai Patri - பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற பெரிய வரங்களைப் பலமாகக் கொண்டு
படை ஆலித்து எழுந்தானை,Padai Aaliththu Ezhundhaanai - யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப் புறப்பட்ட இராவணனை
செரு,Seru - யுத்தத்திலே
அரங்க,Aranga - ஒழியும்படி
பொருது,Porudhu - போர் செய்து
அழித்த,Azhiththa - ஒழித்தருளின
திருவாளன்,Thiruvaalan - (வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய
திருப்பதி மேல்,Thiruppathi Mel - (திருவரங்கமென்னும்) திருப்பதி விஷமாக
விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார்
விரித்தன,Viriththana - அருளிச் செய்த
திரு அரங்கம் தமிழ் மாலை கொண்டு,Thiru Arangam Tamil Maalai Kondu - (பாட்டுத் தோறு ம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய தமிழ் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையுங்கொண்டு.
இருவர் அங்கம் மெரித்தானை,Iruvar Angam Meriththaanai - (மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத் (திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை
ஏத்தவல்லார்,Eaththavallaar - துதிக்க வல்லவர்களுக்கு
அடியோம்,Adiyom - அடிமை செய்யக்கடவோம்.
412பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (முதல் பாட்டு மீண்ட எழுந்து அருளுமதுக்கு விஸ்வாசமாக ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு திருவடி நிலைகளை கொடுத்து போய் – தேவர்களுக்கு விரோதியான ராவணாதிகளை நிரசித்து -மீண்டு வந்து லோகத்தை ஆண்டு அருளினவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார்.) 1
மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ செரு உடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில் திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே –4-9-1
பதவுரை Show / Hide
தம்பிக்கு,Thambikku - சித்திர கூடத்தில் வந்த ப்ரபத்தி பண்ணின) பரதாழ்வானுக்கு
மரவடியை ,Maravadiyai - (மலய) பர்வதத்திலுள்ள ஸ்ரீபாதுகைகளை
வான் பணயம் வைத்து,Vaan Panayam Vaiththu - நன்றாக நம்புசைக்கு உரிய அடாக அளித்து
வானோர் வாழ,Vaanor Vaazha - தேவர்கள் வாழும்படி
போய்,Poy - (சித்திரக் கூடத்தைவிட்டு அவ்வருகே ) எழுந்தருளி
செருஉடைய திசை கருமம்,Seru Udaiya Thisai Karumam - யுத்தத்துக்கு உரிய தெற்குத்திக்கில் செல்ல வேண்டிய காரியங்களை
திருத்தி,Thiruththi - குறையறச்செய்து முடித்துவிட்டு
வந்து,Vanthu - (பிராட்டியுடன் அயோத்திக்கு) எழுந்தருளி
உலகு ஆண்ட,Ulagu Aanda - ராஜ்யபரிபாலநம் செய்தருளின
திருமால்,Thirumaal - ச்சரியபதி (எழுந்தருளியிருக்கிற)
கோயில்,Koyil - கோயிலாவது;
திரு அடி தன்,Thiru Adi Than - ஸர்வஸ்வாமியான் பெரிய பெருமாளுடைய
திரு உருவும்,Thiru Uruvum - திருமேனி நிறத்தையும்
திரு மங்கை,Thiru Mangai - பெரிய பிராட்டியருடைய
மலர் கண்ணும்,Malar Kannum - மலர்ந்த திருக்கண்ணனின் நிறத்தையும்
காட்டி நின்ற,Kaatti Nindra - பிரகாசிப்பியா நின்ற
உரு உடைய,Uru Udaiya - அழகு பொருந்திய
நீலம் மலர்,Neelam Malar - கறாநெய்தற் பூக்களானவை
காற்று ஆட்ட சலிக்கும்,Kaatru Aatta Salikkum - காற்று அசைக்க அசைக்க கொண்டிருக்கப்பெற்ற
ஒளி,Oli - ஒளிபொருந்திய
அரங்கம்,Arangam - திருவரங்கம்
413பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (இரண்டாம் பாட்டு – புருஷகார பூதையான பிராட்டி தானே சிதகுரைக்கிலும் -அவளோடு மறுதலித்து நின்று ஆஸ்ரிதரை ரஷித்து அருளும் ஸ்ரீ பெரிய பெருமாள் குணத்தை அருளிச் செய்து -இப்படி இருக்கிற இவர்க்கு ஒழிய வேறு ஒருவர்க்கு ஆளாவாரோ என்கிறார்.) 2
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே –4-9-2
பதவுரை Show / Hide
தன் அடியார் திறத்தகத்து,Than Adiyaar Thiraththagathu - தன்னுடைய (எம்பெருமானுடைய) அடியவர்கள் விஷயத்தில்
தாமரையாள் ஆகிலும்,Thaamaraiyaal Aagilum - (புருஷகாரம் பண்ணக்கடவளான) பெரியபிராட்டியார்தாமே
சிதகு,Sithagu - குற்றங்களை
உரைக்கும் என்,Uraikkum En - கணக்கிட்டுச் சொல்லத் தொடங்கினாலும்
என் அடியார்,En Adiyaar - “எனக்கு அடிமைப்பட்டவர்கள்
அது,Adhu - அக்குற்றங்களை
செய்யார்,Seiyaar - செய்யமாட்டார்கள்;
செய்தார் என்,Seithaar En - (செய்தகுற்றத்தைப் பொறுப்பதற்கு எம்பெருமானுண்டு என்று சிலவற்றைச் செய்தார்களாயினும்
நன்றி செய்தார் என்பர்,Nandri Seithaar Enbar - (அவர்கள்) நன்மையையே செய்தார்களத்தனை” என்று சொல்லா நிற்பவரும்,
மன் உடைய,Man Udaiya - ஐச்வரியம் பொருந்திய
விபீடணற்கா,Vibeedanarkaa - விபீஷணாழ்வானுக்காக
மதிள் இலங்கை திசை நோக்கி,Mathil Ilangai Thisai Nookki - மதிளையுடைய லங்கையின் முகமாக
மலர்கண் வைத்த,Malarkan Vaitha - மலர்ந்த திருக்கண்களை வைத்தருளினவனும்
என்னுடைய,Ennudaiya - எனக்கு ஸ்வாமியுமான
திரு அரங்கற்கு அன்றியும்,Thiru Arangarku Andriyum - பெரிய பெருமாளையொழிய
மற்று ஒருவர்க்கு,Matru Oruvarkku - வேறொருவர்க்கு
ஆள் ஆவரே,Aal Aavare - ஆட்படுவோர் ஆரேனுமண்டோ.
420பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஒன்பதாம் பாட்டு – தசாவதாரமாய் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணுமவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது என்கிறார்.) 9
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில் சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே –4-9-9
பதவுரை Show / Hide
தேவு உடைய,Thevu Udaiya - தேஜஸ்ஸையுடைய
மீனம் ஆய்,Meenam Aay - மத்ஸ்யமாயும்
ஆமை ஆய்,Aamai Aay - கூர்மமாயும்
எனம் ஆய்,Enam Aay - வராஹமாயும்
அரி ஆய்,Ari Aay - நரஸிம்ஹமாயும்
குறள் ஆய்,Kural Aay - வாமனாயும்
மூ உருவின் இராமன் ஆய்,Moo Uruvin Iraaman Aay - பரசுராமனாயும், தசரதராமனாயும், பலராமனாயும்,
கண்ணன் ஆய்,Kannan Aay - ஸ்ரீகிருஷ்ணனாயும்
கற்கி ஆய்,Karki Aay - கல்கியாயும் (திருவலதாரங்களெடுத்து)
முடிப்பான்,Mudippaan - (விரோதிகளை) ஒழிக்கவல்ல எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
கோயில்,Koyil - கோயிலாவது;
பெடை அன்னம்,Pedai Annam - அன்னப்பேடையான
சேவலொடு,Sevalodu - (தனமு) புருஷஹம்ஸத்தோடு கூடுகிற
செம் கமலம் மலர் ஏறி,Sem Kamalam Malar Eri - செந்தாமரைப் பூவின் மேலேறி
ஊசல் ஆடி,Oosal Aadi - (அம்மலரை அசைத்து ஊசலாடி
பூ அணை மேல்,Poo Anai Mel - புஷ்ப சயகத்தின்
துதைந்து,Thudhaindhu - (ஒன்றோடொன்று புணருகையாகிற) நெருக்கத்தைச் செய்து
எழு,Ezh - (அதனால்) கிளர்ந்த
செம்பொடி ஆடி,Sempodi Aadi - (கண்ணமாகிற) சிவந்த பொடியில் மூழ்கி
விளையாடும்,Vilaiyaadum - விளையாடா நிற்கப்பெற்ற
புனல்,Punal - நீர்வளத்தை யுடைய
அரங்கம்,Arangam - திருவரங்க நகராம்.
428பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6
தண்ணென வில்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர் மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமு மாகி நின்றாய் எண்ணலாம் போதே உன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் அண்ணலே நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-6
பதவுரை Show / Hide
மண்ணொடு,Mannodu - பூமியும்
நீரும்,Neerum - ஜலமும்
எரியும்,Eriyum - தேஜஸ்ஸும்
காலும்,Kaalum - வாயுவும்
ஆகாசமும்,Aakaasamum - ஆகாசமும் (ஆகிய பஞ்ச பூதங்களும்)
மற்றும் ஆகி நின்றாய்,Matrum Aagi Nindraai - மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய் நின்றவனே!
அண்ணலே,Annaley - ஸர்வ ஸ்வாமி யானவனே!
அரக்கத்து அரவணைப் பள்ளியானே;,Arakkaththu Aravanaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
நமன் தமர்கள்,Naman Thamargal - யம கிங்கரர்கள்
தண்ணென வில்லை,Thannena Villai - இரக்க மற்றவர்களாய்க் கொண்டு
சால,Saala - மிகவும்
கொடுமைகள்,Kodumaigal - கொடிய சிஷைகளை
செய்யா நிற்பர்,Seiyaa Nirpar - பண்ணுவர்கள்;
எண்ணலாம் போதே,Ennalaam Podhae - (அப்படிப்பட்ட சிஷைகளுக்கு ஆளாகா தொழியும்படி.) அநுஸந்கைக்கு உரிய காலத்திலேயே
உன் நாமம் எல்லாம்,Un Naamam Ellaam - உன்னுடைய திருநாமங்களை யெல்லாம்.
எண்ணினேன்,Enninaen - அநுஸந்தித்தேன் (ஆதலால்)
என்னை,Ennai - அடியேனை
நீ,Nee - நீ
குறிக் கொண்டு,Kurik Kondu - நினைவுள்ளத்தில் கொண்டு
என்றும்,Endrum - எப்போதும்
காக்க வேண்டும்,Kaakka Vendum - காத்தருள வேணும்
468பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ்ப்பாட்டில், “உன்னைக் கொண் டென்னுள் வைத்தேன்” என்றார்; இப்பாட்டில், வைத்த ப்ரகாரத்தைச் சொல்லுகிறார். முதற் பாட்டில் “மல்லாண்ட திண்டோன் மணிவண்ணா” என்று தொடங்கினமையால், அந்த மல்ல வதம் முதலிய சிறுச் சேவகங்களை யெல்லாம் என் நெஞ்சில் நன்கு அமைத்தேன் என்கிறாரென்க. “உன்னுடைய விக்கிரமம் எல்லாம்” என்னுமளவே போதுமாயிருக்க, “ஒன்றொழியாமல்” என்று விசேஷித்துக் கூறினமைக்குக் கருத்து என்னவெனில்; வியாஸர், வான்மீகி முதலிய முனிவர்கட்கும் விஷயமாகாத விக்கிரமங்கள் தமக்கு விஷயமானபடியைக் குறித்தவாறு; கீழ் இரண்டாம் பந்தில் ஏழாந்திருமொழியில் “சீமாலிக னவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ பெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்” என்றருளிச் செய்த விருத்தாந்தமும், மூன்றாம்பத்தில் பத்தாந்திருமொழியில், “எல்லியம்போ தினிதிருத்த லிருந்தோ ரிடவகையில், மல்லிகைமா மாலை கொண்டங்கார்த்தது மோரடையானம்” என்றருளிச்செய்த விருத்தாந்தமும் மற்ற முனிவர்கட்கன்றி இவ்வாழ்வார் ஒருவர் தமக்கே ஞானவிஷய மாயினவாறு காண்க. விக்கிரம் – வினா : என்ற வடசொற்றிரிபு. (சுவர் வழி எழுதிக்கொண்டேன்) சுவரில் சித்திரமெழுதினால் அது கண்ணுக்குத் தோற்றுவது போல, உன் விக்கிரமங்களாகிற சித்திரங்களை எனது நெஞ்சென்னுஞ் சுவரில் அமைத்து விளக்கிக்கொண்டே னென்றபடி. ஆழ்வார் எம்பெருமானால் மயர்வற மதிநல மருளப்பெற்றமையால், அவனுடைய விக்கிரமங்க ளனைத்தையும் குறையறக்கண்டு அநுபவித்தன ரென்றுணர்க. “மண் நடுங்க” என்றும் ஓதுவர். எம்பெருமானே! நீ பரசுராமனா யவதரித்தபோது “இருபத்தோர்கா லாசுகளைகட்ட, வென்றி நீண்மழுவா” என்றபடி க்ஷத்ரிய குல மடங்கலும் பாழ்பட்டவாறு போல, உனது விக்கிரமங்களை ஸாக்ஷத்கரிக்கப்பெற்ற என்னுடைய ஊழ்வினைகளடங்கலும் பாழ்த்துப்போயின என்பது மூன்றாமடியின் உட்கருத்து. ஆழ்வார் திருவுள்ளத்தில் குடியிருந்து நாம் செய்ய வேண்டிய காரியம் செய்து தலைக்கட்டினமையால் இனி இங்கு நின்றும் பெயர்ந்து செல்வோம் என்ற எம்பெருமான் கருதியதாகக் கொண்டு, அங்ஙனம் போகவொண்ணாதென்று வளைத்துத் தடுக்கிறார். நான்காமடியால் “மன்னஞ்சு வாயிரந்தோள் மழுவில் துணிந்த மைந்தா, என்நெஞ்சத்திலிருந்து இங்கினிப் போய்ப் பிறரொருவர். என்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்து வைத்தேன்” என்று தடுத்தாரிறே திருமங்கையாழ்வாரும். போகின்றது- தொழிற்பெயர். “ஆக, இப்பாட்டால், அவள் வந்து புகுந்த ப்ரகாரத்தையும், அவன் போனால் தாம் முடியும்படியான அவஸ்தை பிறந்தபடியையும், அவனுக்குப் போக்கின்றிக்கே நிற்கிற நிலையையும் நிர்ஹேதுகமாக விஷயிகரித்து ப்ரகாரத்தையுஞ் சொல்லுகிறது” என்ற வியாக்கியானவாக்கிய மறியத்தக்கது. 6
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6
பதவுரை Show / Hide
மன், Man - (துஷ்ட) க்ஷத்திரியர்கள்
அடங்க, Adanga - அழியும்படி
மழு, Mazhu - மழு என்னும் ஆயுதத்தை
வலம் கை கொண்ட, Valam kai konda - வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள
இராமன், Raman - பரசு ராமனாய்த் திரு வவதரித்த
விராம நம்பீ, Virama nambi - குண பூர்த்தியை யுடையவனே
உன்னுடைய, Unnudaiya - உன்னுடைய
விக்கிரமம், Vikkiramam - வீரச் செயல்களில்
ஒன்று ஒழியாமல், Ondru ozhiyaamal - ஒன்று தப்பாமல்
எல்லாம், Ellaam - எல்லாவற்றையும்
என்னுடைய, Ennudaiya - என்னுடைய
நெஞ்சகம் பால், Nenjagam paal - நெஞ்சினுள்ளே
சுவர் வழி எழுதிக் கொண்டேன், Suvar vazhi ezhuthi konden - சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;பிரகாசிக்கும் படி கொண்டேன்
எம் பெருமான், Em perumaan - எமக்குத் தலைவனே!எனக்கு உபகாரகன் ஆனவனே (கோபமும் உத்தேச்யம் -நமது விரோதி பாஹுள்யத்தைப் போக்கி அருளியதால்)
என்னிடை வந்து, Ennidai vandhu - என் பக்கலில் எழுந்தருளி
இனி , Ini - இனி மேல்
போகின்றது, pogindrathu - போவதானது
எங்கு, engu - வேறு எவ்விடத்தைக் குறித்து?
483திருப்பாவை || ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய மஹாநுபாவரை உணர்த்துதல், இப் பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்– 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
பதவுரை Show / Hide
நோற்று, Nottru - நோன்பு நோற்று
சுவர்க்கம் புகுகின்ற, Suwarkkam Pugukindra - ஸுகாநுபவம் பண்ணா நின்ற
அம்மனாய், Ammaanai - அம்மே!
வாசல் திறவாதார், Vaasal Thiravaadhaar - வாசற்கதவைத் திறவாதவர்கள்
மாற்றமும் தாராரோ, Maatramum Thaararo - ஒருவாய்ச் சொல்லுங் கொடுக்க மாட்டாரோ?
நாற்றத் துழாய் முடி, Naatrat Thuzhaay Mudi - நறு நாற்றம் வீசா நின்றுள்ள திருத் துழாய் மாலையை அணிந்துள்ள திரு முடியையுடைய
நாராயணன், Naaraayanan - நாராயணனும்
நம்மால் போற்ற பறை தரும், Nammaal Potra Parai Tharum - நம்மால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றுப் புருஷார்த்தங்களைத் தந்தருள்பவனும்
புண்ணியனால், Punnianaal - தர்மமே வடிவு கொண்டு வந்தாற் போன்றவனுமான இராமபிரானால்
பண்டு ஒரு நாள், Pandu Oru Naal - முன் ஒரு காலத்திலே
கூற்றத்தின் வாய் வீழ்ந்த, Kootratthin Vaai Veezhndha - யமன் வாயில் (இரையாக) விழுந்தொழிந்த
கும்பகரணனும், Kumbakaranum - கும்பகர்ணனும்
தோற்று, thottru - தோல்வி யடைந்து
பெருந்துயில், perunthuyil - (தனது) பேருறக்கத்தை
உனக்கே தான் தந்தானோ, unakke thaan thandhaano - உனக்கே தான் கொடுத்து விட்டானோ?
ஆற்ற அனந்தல் உடையாய், aatra anandhal udaiyaay - மிகவும் உறக்கமுடையவளே!
அரும் கலமே, arum kalame - பெறுதற்கரிய ஆபரணம் போன்றவளே!
தேற்றம் ஆய் வந்து திற, thettram aay vandhu thira - தெளிந்து வந்து (கதவைத்) திறந்திடு
ஏல் ஓர் எம் பாவாய், ael oar em paavaayo - ஏல் ஓர் எம் பாவாய்
485திருப்பாவை || நாட்டிலிருந்து போதோடு காட்டிலிருந்த போதோடு வாசியற பெருமாளைப் பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளைப் போன்று, கண்ண பிரானை யன்றி மற்றொருவரையும் அறியாமல் என்று மொக்க அவனையே பின் தொடர்ந்து அவன் பக்கலில் மிகவும் பரிவு பூண்டிருப்பா னொருவனுடைய தங்கையாய்ச் சீர்மை பெற்றிருப்பாளொரு ஆய்ப் பெண்ணை உணர்த்தும் பாசுரம், இது 12
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
பதவுரை Show / Hide
இள கன்று எருமை, ila kanru erumai - இளங்கன்றுகளையுடைய எருமைகளானவை
கனைத்து , kanaithu - (பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக் கொண்டு
கன்றுக்கு இரங்கி,kanruku irangi - (தன்) கன்றின் மீது இரக்கமுற்று
நினைத்து, ninaithu - (கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்)
முலை வழியே நின்று பால் சோர, mulai vazhiye nindru paal soora - முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக(அப்பெருக்கினால்)
இல்லம், Illam - வீட்டை
நனைத்து, nanaithu - (முழுவதும்) ஈரமாக்கி
சேறு ஆக்கும் நல் செல்வன் , seru aakkum nal selvvan - சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த செல்வத்தை யுடையவனுடைய
தங்காய் , thangai - தங்கையானவளே!
பனி, Pani - பனியானது
தலை வீழ, thalai veezha - எங்கள் தலையிலே விழும்படி
நின் வாசல் கடை பற்றி, nin vaasal kadai patri - உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு
சினத்தினால் , sinathinaal - (பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால்
தென் இலங்கை கோமானை, then Ilangai komanai - தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை
செற்ற - கொன்றொழித்தவனும்
மனத்துக்கு இனியானை - சிந்தனை இனியனுமான இராம பிரானை
பாடவும், padavum - நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும்
நீ, Ni - நீ
வாய் திறவாய், Vaai thiravai - வாய்திறந்து பேசுகிறாயில்லை
இனித் தான், iniththaan - எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும்
எழுந்திராய், Ezhundhirai - எழுந்திரு
ஈது என்ன பேர் உறக்கம், Eedhu enna Per Urakkam - இஃது என்ன ஓயாத தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும் , anaitthu illathaarum - (இச்சேரியிலுள்ள) எல்லா வீட்டுக் காரர்களாலும்
அறிந்து, arindhu - (நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிறவிது) அறியப்பட்டதாயிற்று
486திருப்பாவை || கண்ணபிரான் பிறந்து வளருமூரான் திருவாய்ப்பாடியிலே அவனையே பாட வேண்டியிருக்க அவனை விட்டுத் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற இராமனைப் பாடுவதும், அவனை மனத்துக்கினியானென்பதும் க்ருஷ்ண பக்தர்களுக்கு அஸஹ்யமாகையாலே ஒரு பெரிய கிளர்ச்சி தோன்றியது. உடனே சில பெரியார்கள் புகுந்து கண்ணனும் இராமனும் ஒரு திருமூர்த்தியே யென்கிற தத்துவத்தை விளக்கி ஸமாதானம் பண்ண, பிறகு ஒருவாறு தேறி அவ்விரண்டு திருமூர்த்திகளையும் சேர்த்து ஆனந்தமாகப் பாடுகிறார்கள் 13
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்து நீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
பதவுரை Show / Hide
புள்ளின் வாய் கீண்டானை , pullin vaai keenndaanai - பறவை யுருவம் பூண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும்
பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை , pollaa arakkanai killi kalainthaanai - கொடியனான இராவணனை முடித்து
(அரக்கர் குலத்தை வேரோடு) களைந்தொழித்தவனுமான எம்பெருமானுடைய

கீர்த்திமை பாடி போய், keerthimai paadi poi - லீர சரிதங்களைப் பாடிக் கொண்டு சென்று
பிள்ளைகள் எல்லாரும், pillaigal ellaarum - எல்லாப் பெண்பிள்ளைகளும்
பாவைக் களம் புக்கார், paavai kalam pukaar - நோன்பு நோற்பதற்காகக் குறிக்கப்பட்ட இடத்திற்புகுந்தனர்
வெள்ளி எழுந்து, velli ezundhu - சுக்ரோதயமாகி
வியாழம் உறங்கிற்று, viyaazham urangitru - ப்ருஹஸ்பதி அஸ்தமித்தான்(அன்றியும்)
புள்ளும், pullum - பறவைகளும்
சிலம்பின, silambina - (இறை தேடப் போன இடங்களில்) ஆரவாரஞ்செய்தன
போது அரி கண்ணினாய், podhu ari kanninaai - புஷ்பத்தின் அழகைக் கொள்ளை கொள்ளா நின்ற கண்ணை யுடையவளே
பாவாய், paavaai - பதுமை போன்றவளே!
நீ, nee - நீ
நல் நாள், nal naal - கிருஷ்ணனும் நாமும் கூடு கைக்கு வாய்த்த காலமாகிய இந்த நல்ல நாளில்
கள்ளம் தவிர்ந்து, kallam thavirndhu - (கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதங்களைத் தனியே நினைத்துக் கிடக்கையாகிற) கபடத்தை விட்டு
கலந்து, kalanthu - எங்களுடன் கூடி
குள்ளக் குளிர குடைந்து நீர் ஆடாதே, kullak kullira kudaindhu neer aadaadhe - உடமபு வவ்வலிடும்படி குளத்திற் படிந்து ஸ்நானம் பண்ணாமல்
பள்ளி கிடத்தி யோ, palli kidathiyo - படுக்கையிற் கிடந்துறங்கா நின்றாயோ?
ஆல், aal - ஆச்சரியம்!
497திருப்பாவை || பாரதப் போரில் அர்ஜுநன் ‘இரண்டு சேனைகளின் நடுவே தேரைக் கொண்டுபோய் நிறுத்து’ என்ன, அங்ஙனமே செய்த கண்ணபிரான் பெண்களின் வேண்டுகோளை மறுக்க மாட்டாதானாதலால் அவர்களின் பிரார்த்தனைக்கு இசைந்து, ‘பெண்காள்! இதோ புறப்பட்டு வருகிறேன்’ என்று சொல்லித் திருப்பள்ளியறையில் நின்றும் திவ்ய ஸிம்ஹாஸனத்தளவும் வரத்தொடங்க, அதனைக் கண்ட ஆய்ச்சிகள், பண்டு தண்டகாரணிய வாசிகளான முனிவர் ‘இராமபிரானைக் கண்டவுடனே ராஷஸரால் நமக்கு நேரும் பரிபவங்களைச் சொல்லி முறையிட வேணும்’ என்று பாரித்திருந்தவர், இராமபிரானைக் கண்டவாறே ராக்ஷஸ பரிபவங்களை மறந்து மங்களா சாஸநம் பண்ணத்தொடங்கினாற்போல, இவர்களும் தங்கள் மநோர தங்களையெல்லாம் மறந்து ‘இத்திருவடிகளைக் கொண்டோ இவனை நாம் நடக்கச் சொல்லுவது!’ என வருந்தி அத் திருவடிகளை யெடுத்து முடிமேற் புனைந்து கண்களில் ஒற்றிக் கொண்டு, பண்டு உலகளந்தருளினவற்றையும் சகட முதைத்தவாற்றையும் நினைந்து வயிறெரிந்து இத் திருவடிகட்கு ஒரு தீங்கும் நேரா தொழியவேணுமென்று மங்களாசாஸஞ் செய்வதாய்ச் செல்லும் பாசுரம், இது– 24
அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
பதவுரை Show / Hide
அன்று, anru - (இந்திரன் முதலானவர்கள் மஹாபலியால் நலிவு பட்ட) அன்று அக்காலத்தில்
இவ்உலகம், ivulagam - இந்த லோகங்களை
அளந்தாய், alandhaay - (இரண்டடியால்) அளந்தருளினவனே!
அடி, adi - (உன்னுடைய அத்) திருவடிகள்
போற்றி, potri - பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
அங்கு, angu - பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில்
கன்று, kanru - கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை)
குணிலா, gunila - எறிதடியா(க்கொண்டு)
எறிந்தாய், erindhaay - (கபித்தாஸுரன் மீது) எறிந்தருளினவனே
கழல், kazhal - (உன்னுடைய) திருவடிகள் போற்றி!
குன்று, kunru - கோவர்த்தன கிரியை
குடையா, kudaiyaa - குடையாக
எடுத்தாய், eduthaay - தூக்கினவனே;
குணம், kunam - (உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி) குணங்கள் போற்றி!
வென்று, vendru - (பகைவரை) ஜபித்து
பகை, pagai - த்வேஷத்தை
சென்று, sendru - எழுந்தருளி
தென் இலங்கை, then ilangai - (அவனுடைய பட்டணமாகிய) அழகிய லங்காபுரியை
செற்றாய், serrai - அழித்தருளினவனே!
திறல், thiral - (உன்னுடைய) மிடுக்கு
போற்றி, potri - பல்லாண்டு வாழ்க
சகடம் பொன்ற, sagadam pondru - சகடாஸுரன் முடியும்படி
உதைத்தாய், udhaithaay - (அச்சகடத்தை) உதைத் தருளினவனே!
புகழ், pugazh - (உன்னுடைய) கீர்த்தியானது போற்றி!
கெடுக்கும், kedukkum - அழிக்கின்ற
நின் கையில் வேல் போற்றி, nin kaiyil vael potri - உனது திருக் கையிலுள்ள வேல் வாழ்க’
என்று என்று, endru endru - என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
உன் சேவகமே, un saevagamae - உன்னுடைய வீர்யங்களையே
ஏத்தி, aeththi - புகழ்ந்து கொண்டு
யாம், yaam - அடியோம்
இன்று, indru - இப்போது
பறை கொள்வான் வந்தோம், parai kolvaan vandhom - பறை கொள்வதற்காக (உன்னிடம்) வினை கொண்டோம்
இரங்கு, irangu - கிருபை பண்ணி யருள்
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய்
519நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 6
முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும் சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது கற்றிலோம் கடலை யடைத்தரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா எம்மை வாதியேல்
பதவுரை Show / Hide
கடலை அடைத்து, Kadalai Adaithu - ஸேது பந்தம் பண்ணி
அரக்கர் குலங்களை முற்றவும், Arakkar Kulangalai Mutravum - ராக்ஷஸருடைய குலங்களை முழுதும்
செற்று, Setru - களைந்தொழித்து
இலங்கையை, Ilangaiyai - லங்கையை
பூசல் ஆக்கிய, Pusal Aakkiya - அமர்க்களப் படுத்தின
சேவகா, Sevaka - வீரப்பாடு உடையவனே!
முற்றிலாத பிள்ளைகளோம், Mutrilatha Pillaigalom - முற்றாத இளம் பிள்ளைகளாய்
முலை போந்திலாதோமை, Mulai Pondhilaathomai - முலையும் கிளரப் பெறாத வெங்களை
நாள் தோறும், Naal Thorum - நாள் தோறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு, Sitril Mel Ittu Kondu - சிற்றில் விஷயமாக ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு
நீ சிறிது உண்டு, Nee Siridhu Undu - நீ செய்யுஞ் செய்திகள் சில உள
அது திண்ணன நாம் கற்றிலோம், Athu Thinnana Naam Katrilom - நீ செய்யுஞ் செய்திகள் சில உள
எம்மை வாதியேல், Emmai Vaadhiyel - எங்களை (நீ) துன்பப்படுத்த வேண்டா
526நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 3
எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார் பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம் பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே
பதவுரை Show / Hide
வில்லால், Villaal - வில்லாலே
இலங்கை, Ilangai - லங்கையை
அழித்தாய், Azhithaai - நாசஞ் செய்தருளினவனே!
எல்லே, Elle - என்னே!
ஈது என்ன இளமை, Eethu enna ilamai - இது என்ன பிள்ளைத்தனம்!
எம் அனைமார், Em anaimaar - எங்களுடைய தாய்மார்கள்
காணில், Kaanil - கண்டால்
ஒட்டார், Ottaar - (மறுபடியும் எங்களை வீட்டின் வழி வர) ஒட்டார்கள்
ஈது, Eethu - (நீயொவென்றால்) கண்டாரடங்கலும் ஏசும்படி எங்களை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கிற இது
பொல்லாங்கு என்று, Pollaangu endru - பொல்லாத காரியமென்று
கருதாய், Karuthaai - நினைக்கிறாயில்லை
பூ குருந்து, Poo kurundhu - புஷ்பித்திரா நின்ற குருந்த மரத்தின் மேல்
ஏறி இருத்தி, Eri iruthi - ஏறி யிரா நின்றாய்
நீ வேண்டியது எல்லாம், Nee vendiyadhu ellaam - நீ அபேஷிக்கு மவற்றை யடங்கலும்
தருவோம், Tharuvom - கொடுக்கிறோம்
பல்லாரும், Pallaarum - (ஊரிலுள்ள) பலரும்
காணோமே, Kaanome - காணாதபடி
போவோம், Povom - போகிறோம்
பட்டை, Pattai - (எங்களுடைய) பட்டுச் சேலைகளை
பணித்தருளாய், Panitharulaai - தந்தருள வேணும்
527நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 4
பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில் அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய் இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்
பதவுரை Show / Hide
இலங்கை அழித்த பிரானே!, Ilangai azhitha pirane! - இலங்கை அழித்த பிரானே!
பலர் குடைந்து ஆடும் சுனையில், Palar kudainthu aadum sunaiyil - பல பெண்கள் படிந்து நீராடும் இப் பொய்கையின் கரையில்
கண்ண நீர்கள், Kanna neergal - கண்ணீர்த் தாரைகள்
அரக்க நில்லா, Arakka nilla - அடக்கினாலும் நிற்க மாட்டாதவைகளாய்
அலமருகின்ற, Alamarugindra - ஆ தளும்புகிறபடியை
எங்கும், Engum - நாற் புறத்திலும்
பரக்க விழித்து, Parakka vizhithu - நன்றாக விழித்து
நோக்கி பாராய், Nokki paaraai - உற்று நோக்கு
ஒன்றும் இரக்கம் இலாதாய், Ondrum irakkam ilaadhaai - கொஞ்சங்கூட தயவு இல்லாதவனே!
குரங்கு அரசு ஆவது அறிந்தோம், Kurangu arasu aavadhu arindhom - நீ மரமேற வல்லார்க்குள் தலைவன் என்பதை அறிந்து கொண்டோம்
குருந்திடை கூறை பணியாய், Kurundhidai koorai paniyaai - (ஆன பின்பு) குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும்
547நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 3
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன் காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய்
பதவுரை Show / Hide
போது அலர் காவில், Pothu Alar Kaavil - சிறந்த பூக்கள் அலர்கின்ற சோலையிலே
புது மணம், Pudhu Manam - புதிதான பரிமளமானது
நாற, Naara - வீச
பொறி வண்டின், Pori Vandin - அழகிய வண்டினுடைய
காமரம், Kaamaram - காமரம் என்கிற பண்ணை
கேட்டு, Kettu - கேட்டுக் கொண்டு
உன் காதலியோடு உடன் வாழ் குயிலே, Un Kaadhaliyodu Udan Vaazh Kuyile - உன் பேடையோடு கூட வாழ்கிற குயிலே!
மாதலி, Maadhali - மாதலியானவன்
தேர் முன்பு, Ther Munbu - (இராவணனுடைய) தேரின் முன்னே
கோல் கொள்ள, Kol Kolla - கோலைக் கொண்டு தன் தேரை நடத்த
மாயன் இராவணன் மேல், Maayan Iraavanan Mel - மாயாவியான ராவணன் மேலே
சரம் மாரி, Saram Maari - பாண வர்ஷத்தை
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த, Thaai Thalai Attru Attru Veezha Thodutha - (அவ்விராவணனுடைய ப்ரதானமான தலை (பலகால்) அற்று அற்று விழும்படி ப்ரயோகித்த
தலைவன், thalaivan - எம்பெருமானுடைய
வரவு, Varavu - வரவை
எங்கும், Engum - ஒரு திக்கிலும்
காணேன், Kaanen - காண்கிறேனில்லை (ஆதலால்)
என், En - என்னுடைய அநுபவத்துக்கு யோக்யனாய்
கரு மாணிக்கம், Karu Maanikam - நீல ரத்நம் போன்ற திருமேனியை யுடையனான அவ் வெம்பெருமான்
வர, Vara - இங்கே வரும்படியாக
கூவாய், Koovai - நீ கூவ வேணும்
584நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 8
கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப் போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே
பதவுரை Show / Hide
கார் காலத்து, Kaar Kaalathu - வர்ஷ காலத்திலே
வேங்கடத்து எழுகின்ற, Vengadathu Ezhuginra - திருமலையிலே வந்து தோற்றா நின்ற
கார் முகில்காள், Kaar Mugilkaal - காள மேகங்களே!
போர் காலத்து, Por Kaalathu - யுத்த ஸமயத்திலே
எழுந்தருளி, Ezhundharuli - (போர் களத்தில்) எழுந்தருளி
பொருதவனார், Poruthavanar - போர் செய்து வெற்றி பெற்ற இராம பிரானுடைய
பேர், Per - திரு நாமங்களை
சொல்லி, Solli - ஸங்கீர்த்தநம் பண்ணி
நீர் காலத்து எருக்கில் அம் பழ இலை போல் வீழ்வேனை, Neer Kaalathu Erukkil Am Pazha Ilai Pol Veezhvenai - மழைகாலத்தில் எருக்கம் பழுப்புக்கள் அற்று விழுவது போல் ஒசிந்து விழுகின்ற எனக்கு
வார் காலத்து ஒரு நாள், Vaar Kaalathu Oru Naal - நெடுகிச் செல்லுகிற காலத்திலே ஒரு நாளாகிலும்
தம் வாசகம் தந்தருளாரே, Tham Vasagam Thandharulare - தம்முடைய ஒரு வார்த்தையை அருளா தொழிவரோ?
600நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 4
முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம் கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே
பதவுரை Show / Hide
முல்லைப் பிராட்டி!, Mullai Piratti - அம்மா! முல்லைக் கொடியே!
ஆழி நங்காய்!, Aazhi Nangaai - கம்பீரமான இயல்வை யுடையாய்!
நீ, Ne - நீ
உன் முறுவல்கள் கொண்டு, Un muruvalgal kondu - (எம்பெருமானது முறுவல் போன்ற) உனது விகாஸத்தாலே
எம்மை, Emmai - என் விஷயத்திலே
அல்லல் விளைவியேல், Allal vilaiviyel - வருத்தத்தை உண்டாக்க வேண்டா
உன் அடைக்கலம், Un adaikalam - (இதற்காக) உன்னைச் சரணமடைகிறேன்
கொல்லை அரக்கியை, Kollai arakkiyai - வரம்பு கடந்தவளான சூர்ப்பணகையை
மூக்கு அரிந்திட்ட, Mooku arindhitta - மூக்கறுத்துத் துரத்தின
குமரனார், Kumaranaar - சக்ரவர்த்தி திருமகனாருடைய
சொல்லும், Sollum - வார்த்தையே
பொய் ஆனால், Poi aanal - பொய்யாய் விட்டால்
நான் பிறந்தமையும் பொய் அன்று, Naan pirandhamaiyum poi andru - நான் பெரியாழ்வார் வயிற்றில் பிறந்ததும் பொய்யாகக் கடவதன்றோ
613நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 7
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம் திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார் எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே
பதவுரை Show / Hide
திண் ஆர் மதிள் சூழ, Thin Ar Mathil Soozha - (மஹா ப்ரளயத்துக்கும் அழியாதபடி) திண்மை பொருந்திய மதிள்களாலே சூழப்பட்ட
திரு அரங்கம், Thiru Arangam - கோயிலிலே எழுந்தருளியிருக்கிற
செல்வனார், Selvanaar - ச்ரிய யதியான பெருமாள் (ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த போது)
பெண் ஆக்கை, Pen Aakkai - சீதையென்சிற வொரு பெண்ணின் சரீரத்தில் ஆசைக்குக் கட்டுப்பட்டு
உண்ணாது, Unnaadhu - உண்ணாமலும்
உறங்காது, Urankaadhu - உறங்காமலும் (வருந்தி)
ஒலி கடலை, Oli Kadalai - (திரைக் கிளப்பத்தாலே) கோஷிக்கின்ற கடலை
ஊடு அறுத்து, Oodu Aruthu - இடையறும்படி பண்ணி (அணை கட்டி)
தாம் உற்ற, Thaam Utra - (இப்படி) தாம் அடைந்த
பேது எல்லாம், Pedhu Ellaam - பைத்தியத்தை யெல்லாம்
எண்ணாது, Ennaadhu - மறந்து போய் (இப்போது)
தம்முடைய, Thammudaiya - தம்முடைய
நன்மைகளே, Nanmaikale - பெருமைகளையே
எண்ணுவர்,Ennuvar - எண்ணா நின்றார்
638நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 2
அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
பதவுரை Show / Hide
அனுங்க, Anunga - நான் வருந்தும்படியாக
என்னை பிரிவு செய்து, Ennai Pirivu Seydhu - என்னைப் பிரிய விட்டுப் போய்
ஆயர்பாடி, Aayarpaadi - திருவாய்ப் பாடியை
கவர்ந்து, Kavarnthu - ஆக்ரமித்து
உண்ணும், Unnum - அநுபவிக்கின்றவனாய்
குணுங்கு நாளி, Kunungu Naali - வெண்ணெய் மொச்ச நாள்ளம் நாறுமவனாய்
குட்டேற்றை, Kutetrai - இளைய ரிஷபம் போன்றவனான
கோவர்த்தனனை, Govardhananai - கண்ண பிரானை
கண்டீரே, Kandire - கண்டீரே
மின் மேகம், Min Megam - மின்னலும் மேகமும்
கலந்தால் போல், Kalanthaal Pol - ஒன்றோடொன்று சேர்ந்தாற்போலே
வனமாலை மினுங்க நின்று, Vanamaalai Minunga Nindru - (கறுத்த திருமேனியிலே மின்னல் போன்ற) வனமாலை திகழப் பெற்று
கணங்களோடு, Kanangalodu - (தோழன்மாருடைய) கூட்டங்களோடு கூட
விளையாட, Vilaiyaada - விளையாடா நிற்க
விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம்
660பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 3
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய் மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர் ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே
பதவுரை Show / Hide
ஏறு அடர்த்ததும், Eru Adarththadhum - (நப்பின்னைக்காக) ஏழு ரிஷபங்களை வலியடக்கியதும்
ஏனம் ஆய் நிலம் கிண்டதும், Enam Aayi Nilam Kintadhum - வராஹ ரூபியாய் பூமியைக் கோட்டாற் குத்தி யெடுத்ததும்
முன் இராமன் ஆய், Mun Iraman Aayi - முன்பு சக்ரவர்த்தி திருமகனாய்ப் பிறந்து
மாறு அடர்த்ததும், Maru Adarththadhum - சத்ரு ராக்ஷஸர்களைக் கிழங்கெடுத்ததும்
மண் அளந்ததும், Man Alandhadum - (த்ரிவிக்ரமனாய்) உலகளந்ததும் (ஆகிய இந்த சரிதங்களை)
சொல்லி பாடி, Solli Paadi - வாயாற் சொல்லி வாய் விட்டுப் பாடி
வண் பேர் பொன்னி ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு, Van Peer Ponni Aaru Pol Varum Kanna Neer Kondu - ஔதார்யத்தையும் பெருமையை யுடைய
அரங்கன் கோயில் திரு முற்றம், Arangan Koyil Thiru Muttram - நம் பெருமாள் ஸந்நதி உள் திரு முற்றத்தை
சேறு செய் தொண்டர், Seru Sei Thondar - சேறாக்குகிற பாகவதர்களின்
சே அடி செழு சேறு, Sae Adi Sezhu Seru - திருவடிகளால் துகை யுண்ட அழகிய சேற்றை
என் சென்னிக்கு அணிவன், En Chennikku Anivan - என்னுடைய நெற்றிக்கு திலகமாகக் கொள்வேன்
கண்ண நீர், Kanna Neer - ஆறாம் வேற்றுமை யுருபு
677பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 1
ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல் கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே
பதவுரை Show / Hide
ஆன் ஏறு ஏழ் வென்றான், Aan Eru Ezhu Vendran - நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளை ஜயித்தவனான எம்பெருமானுக்கு
அடிமை திறம் அல்லால், Adimai Thiram Allaal - கைங்கரியம் செய்வதையே நான் வேண்டுவதல்லாமல்
ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி, Oon Eru Selvaththu Udal Piravi - நாளுக்கு நாள் மாம்சம் வளர்ந்து தடிப்பதாகிற செல்வத்தை யுடைய இம் மனிதவுடம்பெடுத்துப் பிறத்தலை
யான் வேண்டேன், Yaan Vaendein - (விவேகம் பெற்ற) நான் (இனி) விரும்ப மாட்டேன்; (அன்றியும்,)
கூன் ஏறு சங்கம், Koon Eru Sangam - வளைந்திருக்கிற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை
இடத்தான் தன், Idaththaan Than - இடத் திருக் கையிலே யுடையனான எம்பெருமானுடைய
வேங்கடத்து, Vengadaththu - திருவேங்கட மலையில்
கோனேரி வாழும், Konerii Vaalum - திருக் கோனேரி என்கிற ஸ்வாமி புஷ்கரிணியில் வாழ்கிற
குருகு ஆய் பிறப்பேன், Kurugu Aay Pirappen - நாரை யாகவாவது பிறக்கக் கடவேன்.
அடிமைத் திறமாவது, Adimai Thiramavathu - திருவடி திருவனந்தாழ்வான் இளைய பெருமாள் முதலானவர்கள் போலப்
கோன் ஏரி, Kon Aeri - ஸ்வாமி புஷ்கரிணி.
ஊன்,ஆண், கோன் என்பவற்றில், ன், Oon Aan Kon Enbavatril N - சாரியை,
குருகு என்ற சொல், Kurugu Endra Sol - அன்னம் க்ரௌஞ்சம் என்ற நீர் வாழ் பறவைகளைக் குறிப்பதாகவும்.
695பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 8
தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல் மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா ! உன் புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே !
பதவுரை Show / Hide
மிக்கு இலங்கு, Mikku Ilangu - மிகுதியாய் விளங்குகிற
முகில், Mugil - காளமேகம் போன்ற
நிறத்தாய், Niraththai - கரிய திருநிற முடையவனே!
புண்ணியனே, Punniyane - புண்ய ஸ்வரூபியா யுள்ளவனே!
தொக்கு இலங்குயாறு எல்லாம், Thokku Ilanguyaaru Ellam - (ஜல ப்ரவாஹம்) திரண்டு விளங்குகிற நதிகளெல்லாம்
பரந்து ஓடி, Parandhu Oodi - (கண்டவிடமெங்கும்) பரவியோடி (முடிவில்)
தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத, Thodu Kadale Pukku Andri Puram Nirka Maattadha - ஆழ்ந்த கடலிலே சென்று சேர்ந்தல்லது மற்றோரிடத்தே புகுந்து நிற்க மாட்டா;
அவை போல், Avai Pol - அவ்வாறுகள் போல,
புக்கு இலங்கு, Pukku Ilangu - (என் நெஞ்சினுள்ளே) புகுந்து விளங்குகிற
சீர் அல்லால், Seer Allaal - (உனது) கல்யாண குணங்கள் தவிர (மற்றோரிடத்தில்)
புக்கிலன், Pukkilan - ஆழ்ந்திடேன்.
706பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 9
மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க மயில் தழை பீலி சூடி பொங்கிள வாடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய் எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழலின் இன் இசை போதராதே
பதவுரை Show / Hide
மங்கலம், Mangalam - மங்களகரமாய்
நல், Nal - விலகூஷணமான
வனமாலை, Vanamalai - வனமாலையானது
மார்பில், Marbil - மார்விலே
இலங்க, Ilanga - பிரகாசிக்க
மயில் தழைப்பீலி, Mayil Thazhaippili - மயிலிறகுகளே
சூடி, Soodi - சூடிக் கொண்டும்
பொங்கு இள ஆடை, Pongu Ila Aadai - பளபளவென்ற மெல்லிய ஆடையை
அரையில் சாத்தி, Araiil Saathi - அரையிலே சாத்திக் கொண்டும்
பூ கொத்து, Poo Kothu - பூங்கொத்துக்களை
காதில், Kaadhil - காதிலே
புணரப் பெய்து, Punarap Peythu - மிகவும் பொருந்த அணிந்து கொண்டும்
கொங்கு நறு குழலார்களோடு, Kongu Naru Kuzhalarkalodu - தேன் மணம் கமழ்கின்ற கூந்தலை யுடைய பெண்களோடு
குழைந்து, Kuzhaindhu - ஸம்ச்லெஷித்து (அத்தாலுண்டான ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாக)
குழல், Kuzhal - புல்லாங் குழலை
இனிது ஊதி வந்தாய், Inidhu Oothi Vandhai - போக்யமாக ஊதிக் கொண்டு வந்தாய்;
ஒரு நாள், Oru Naal - ஒரு நாளாகிலும்
எங்களுக்கே, Engalukke - எங்களுக்காக
வந்து ஊத, Vandhu Ootha - வந்து ஊதும்படி
உன் குழலின் இசை, Un Kuzhalin Isai - உனது குழலின் இசையானது
போதராது, Potharathu - வர மாட்டாது காண்.
719பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 1
மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே! தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர் கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே! என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ
பதவுரை Show / Hide
மன்னு புகழ், Mannu Pugazh - நிலை நின்ற புகழை யுடைய
கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினுடைய்
மணி வயிறு, Mani Vayiru - அழகிய வயிற்றிலே
வாய்த்தவனே, Vaiththavane - பிள்ளையாகத் திருவவதரித்தவனே!
தென் இலங்கை கோன், Then Ilangai Kon - தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய
முடிகள், Mudigal - பத்துத் தலைகளையும்
சிந்துவித்தாய், Sindhuviththai - சிதறப் பண்ணினவனே!
செம் பொன் சேர், Sem Pon Ser - செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய்
கன்னி, Kanni - அழிவில்லாததாய்
நல், Nal - விலக்ஷணமாய்
மா, Maa - பெரிதான
மதில், Madhil - திருமதிளாலே
புடை சூழ், Pudai Soozh - நாற் புறமும் சூழப்பட்ட
கணபுரத்து, Kanapurathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே, En Karumanie - நீல ரத்நம் போன்ற எம்பெருமானே!
என்னுடைய இன் அமுதே, Ennudaiya In Amudhe - எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே!
இராகவனே!, Irakavaney - ஸ்ரீராமனே!
தாலேலோ, Thaleloo - (உனக்குத்) தாலாட்டு
கணபுரம், Kanapuram - கண்ணபுரம் என்பதன் தொகுத்தல்,
தாலேலோ, Thaleloo - வளர்பிள்ளைத் தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்காகச் சீராட்டித் தாலாட்டுதல்;
தால், Thal - நாக்கு; தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத் தமிழில்
720பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 2
புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே! திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்! கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே ! எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ
பதவுரை Show / Hide
புண்டரிகம் மலர் அதன் மேல், Pundarikam Malar Athan Mel - (திருநாபியில் அலர்ந்த) தாமரைப் பூவின் மேல் (பிரமனைத் தோற்றுவித்து அவன் முகமாக)
புவனி எல்லாம் படைத்தவனே, Puvani Ellam Padaithavaney - உலகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தவனே!
திண் திறலாள் தாடகை தன், Thin Thiralal Thadakai Than - த்ருடமான பலத்தை யுடையளான தாடகையினுடைய
உரம் உருவ, Uram Uruva - மார்வைத் துளைக்கும் படியாக
சிலை வளைத்தாய், Silai Valaiththai - வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே!
கண்டவர், Kandavar - ஸேவித்தவர்கள்
தம் மனம் வழங்கும், Tham Manam Vazhangu - தங்கள் மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குத் தகுந்த
எண் திசையும், En Thisaiyum - எட்டுத் திக்கிலுள்ளவர்களையும்
ஆள் உடையாய், Aal Udaiyaay - அடிமை கொண்டருளுபவனே!
இராகவனே! தாலேலோ, Irakavane Thalelo - ஸ்ரீராமனே! (உனக்குத்) தாலாட்டு
721பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 3
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் ! தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ ! கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !
பதவுரை Show / Hide
கொங்குமலி கரு குழலாள், Kongumali Karu Kuzhalal - பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலை யுடையளான
கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினுடைய
குலம் மதலாய், Kulam Mathalaiy - சிறந்த பிள்ளையானவனே!
தங்கு பெருபுகழ் சனகன், Thangu Perupugazh Sanakan - பொருந்திய மஹா கீர்த்தியை யுடைய ஜநக மஹாராஜனுக்கு
திரு மருகா, Thiru Maruga - மாப்பிள்ளை யானவனே!
தாசரதீ, Dasarathe - சக்ரவர்த்தி திருமகனே!
கங்கையிலும், Gangaiyilum - கங்கா நதியிற் காட்டிலும்
மலி தீர்த்தம், Mali Theertham - சிறப்பு மிக்க தீர்த்தங்களை யுடைய
கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
எங்கள் குலம், Engal Kulam - எங்கள் ராஜ வம்சத்துக் கெல்லாம்
இன் அமுதே, In Amude - போக்யமான அமுதம் போன்றவனே!
எங்கள் குலத்து இன்னமுதே, Engal Kulaththu Innamude - ஸ்ரீராமன் ராஜவம்ஸத்திற் பிறந்தாற்போல
722பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 4
தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன் மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே! ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ
பதவுரை Show / Hide
தாமரை மேல், Thamarai Mel - (திருநாபிக்) கமலத்திலே
அயன் அவனை படைத்தவனே, Ayan Avanai Padaiththavane - பிரமனை உண்டாக்கினவனே!
தயரதன் தன் மாமதலாய், Thayaradhan Than Mamathalaiy - தசரதனுடைய மூத்த குமாரனே!
மைதிலி தன் மணவாளா, Maithili Than Manavala - பிராட்டிக்கு வல்லபனே!
வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுகளின் கூட்டங்கள்
காமரங்கள் இசை பாடும், Kamarangkal Isai Padum - காமரமென்னும் இசையைப் பாடப் பெற்ற
கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
ஏ மருவும் சிலை வலவா, E Maruvum Silai Valava - அம்புகள் பொருந்திய (ஸ்ரீசார்ங்கமென்னும்) வில்லை ஆள வல்லவனே
“ஏமருவுஞ்சிலை” = ஏ, Emaruvunchilai E - எய்கையிலே, மருவும் – மூட்டாநின்ற, சிலை – வில் என்றும் பொருளாகலாம்.
வெகு சாதுரியமாய் அடக்கி ஆளத்தக்க வில், Vegu Sadhuriyamaiy Adakki Aalaththakka Vil - என்றவாறு
723பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 5
பாராளும் படர் செல்வம் பாரத நம்பிக்கே அருளி ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே ! தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ
பதவுரை Show / Hide
பார் ஆளும் படர் செல்வம், Paar Aalum Padar Selvam - பூமி முழுவதையும் ஆட்சி புரிகையாகிற பெரிய ராஜ்ய ஸம்பத்தை
பரதன் நம்பிக்கே, Barathan Nambikke - ஸ்ரீ பரதாழ்வானுக்கே
அருளி, Aruli - நியமித்து விட்டு
ஆரா அன்பு இளையவனோடு, Aaraa Anbu Ilaiyavanodu - பரிபூர்ணமான பக்திப் பெருங்காதலை யுடைய இளைய பெருமாளுடன் கூட
அரு கானம் அடைந்தவனே, Aru Kaanam Adaindavaney - (புகுவதற்கு) அருமையான காட்டைக் குறித்து எழுந்தருளினவனே!
சீர் ஆளும் வரை மார்பா, Seer Aalum Varai Maarbaa - வீர லெக்ஷ்மிக்கு இருப்பிடமாய் மலை போன்ற திரு மார்பை யுடையவனே!
தார் ஆளும் நீள் முடி, Thaar Aalum Neel Mudi - மாலையோடு கூடின சிறந்த திரு முடியை யுடையவனே!
724பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 6
சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே! அற்றவர்கட்க்கு அரு மருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே! கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே! சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ
பதவுரை Show / Hide
சுற்றம் எல்லாம் பின் தொடர, Sutram Ellam Pin Thodara - எல்லா உறவினரும் பின்னே தொடர்ந்து வர
தொல் கானம் அடைந்தவனே, Thol Kaanam Adaindavaney - புராதநமான தண்டகாரண்யத்துக் கெழுந்தருளினவனே!
அற்றவர்கட்கு, Attravarkadku - உனக்கே அற்றுத் தீர்ந்த பரம பக்தர்களுக்கு
அரு மருந்தே, Aru Marundhe - ஸம்ஸார ரோகத்தைத் (தணிக்க) அருமையான மருந்து போன்றவனே!
அயோத்தி நகர்க்கு அதிபதியே, Ayodhya Nagarkku Adhipathiye - அயோத்யா நகரத்திற்கு அரசனே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து, Kattravargal Thaam Vaalum Kanapurathu - ஞானிகள் வாழ்தற்கு இடமான திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே, En Karumanie - நீலமணி போலழகிய எம்பெருமானே!
சிற்றவை தன், Sitravai Than - சிறிய தாயாராகிய கைகேயியினுடைய
சொல் கொண்ட சீராமா, Sol Konda Seerama - சொல்லை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமமே!
அது கேட்ட இராமபிரான், Adhu Ketta Irambiraan - “ஸீதே! நான் பிராணனை விட்டாலும் விடுவேன்; லக்ஷ்மணனையும் உன்னையும் விட்டாலும் விடுவேன்;
725பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 7
ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே! வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே! காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே! ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பு மஹாப்ரளயம் வந்த போது
ஆலின் இலை, Aalin Ilai - ஓர் ஆலந்தளிரிலே
பாலகன் ஆய், Paalagan Aayi - குழந்தை வடிவாய்க் கொண்டு
உலகம் உண்டவனே, Ulagam Undavaney - லோகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கினவனே!
வாலியை கொன்று, Vaalaiyai Konru - வாலியைக் கொலை செய்து
இளைய வானரத்துக்கு, Ilaiya Vaanarathukku - அவனது தம்பியான ஸுகரீவனுக்கு
அரசு அளித்தவனே, Arasu Alithavane - ராஜ்யத்தைக் கொடுத்தவனே!
காலில் மணி, Kaalil Mani - கால்வாய்களிலுள்ள ரத்நங்களை
கரை அலைக்கும், Karai Alaikkum - கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற
கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தளி யிருக்கிற
ஆலி நகர்க்கு, Aali Nagarkku - திருவாலி திருநகரிக்கு
அதிபதியே, Adhipathiye - தலைவனே!
அயோத்திமனே, Ayothimane - அயோத்தி நகர்க்கு அரசனே!
726பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 8
மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே! அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே! கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே! சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ
பதவுரை Show / Hide
மலை அதனால் அணை கட்டி, Malai Adhanal Anaik Katti - மலைகளைக் கொண்டு ஸேது பந்தனம் பண்ணி
மதிள் இலங்கை அழித்தவனே, Mathil Ilangai Azhithavane - அரணை யுடைத்தான லங்காபுரியைப் பாழ்படுத்தினவனே
அலை கடலை கடைந்து, Alai Kadalai Kadaindhu - அலை யெறிகின்ற திருப்பாற்கடலைக் கடைந்து
அமரர்க்கு, Amararukku - தேவர்களுக்கு
அமுது, Amuthu - அம்ருதத்தை
அருளிச் செய்தவனே, Arulich Seithavane - கொடுத்தருளினவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து, Kalai Valavar Thaam Vaalum Kanapuraththu - ஸகல சாஸ்த்ரங்களையும் அறிந்தவர்கள் வாழ்கிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
சிலைவலவா, Silaivalavaa - (ஸ்ரீ சார்ங்கமென்னும்) வில்லைச் செலுத்த வல்லவனே!
சேவகனே, Sevagane - வீரனே!
727பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 9
தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்! வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே! களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே! இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ
பதவுரை Show / Hide
தளை அவிழும் நறு குஞ்சி, Thalai Avizhum Naru Kunji - கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியை யுடையனான
தயரதன் தன், Thayaradhan Than - தசரத சக்ரவாத்தியினுடைய
குலம் மதலாய், Kulam Mathalaiy - சிறந்த திருக்குமாரனே!
ஒரு சிலை வளைய, Oru Silai Valaiya - ஒப்பற்ற வில்லானது வளைய
அதனால், Adhanal - அந்த வில்லாலே
களை கழுநீர், Kalai Kazhunir - களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர்கள்
மருங்கு அலரும் கணபுரத்து, Marungu Alarum Kanapurathu - சுற்றிலும் மலரப் பெற்ற திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
இளையவர்கட்கு, Ilaiyavarkadku - இளையவர்கள் விஷயத்திலே
அருள் உடையாய், Arul Udaiyai - கருணை பொருந்தியவனே!
729பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 11
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன் தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே
பதவுரை Show / Hide
என் காகுத்தன் தன் அடி மேல், En Kaakuththan Than Adi Mel - என் ஸ்வாமியான இராமபிரான் விஷயமாக
தாலேலோ என்று உரைத்த, Thalelo Endru Uraitha - (கௌஸல்யை) தாலாட்டிச் சொன்ன பாசுரங்களை (உட்கொண்டு)
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன், Kol Navilum Vel Valavan Kudai Kulashekaran - கொலைத் தொழில் புரிகின்ற வேலாயுதத்தைச் செலுத்த
கன்னி நல் மா மதிள் புடை சூழ் கண புரத்து, Kanni Nal Maa Mathil Pudai Soozh Kanapurathu - சாச்வதமான சிறந்த அழகிய மதிள்கள் நாற்புறமும் சூழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே
சொன்ன, Sonna - அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ் மாலை பத்தும், Panniya Nool Tamil Maalai Paththum - பரம்பியதாய் ஸலக்ஷணமாய்த் தமிழ்ப் பாமாலை ஆகிய இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallaar - அதிகரிக்க வல்லவர்கள்
730பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 1
வன் தாள் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு வென்றாள் எம்மி ராமாவோ! உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன் மகனே! உன்னை நானே
பதவுரை Show / Hide
எம் இராமாவோ, Em Iraamavo - ஓ எமது இராமனே!
வளம் நகரம், Valam Nagaram - அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும்
வல் தாளின் இணை வணங்கி தொழுது ஏத்த, Val Thaalin Inai Vanangi Thozhudhu Aetha - (சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்)
மன்னன் ஆவான் நின்றாயை, Mannan Aavaan Nindraaiyai - அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும்
அரி அணை மேல் இருந்தாயை, Ari Anai Mel Irundhaaiyai - சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை
நெடுங்கானம் படர போகு என்றாள், Nedungaanam Padara Pogu Endraal - பெரிய காட்டிற்கு செல்லுதற்கு (இந்நகர் விட்டு நீங்கிப்) போ என்று (கைகேயி) கூறினாள்
நல் மகனே, Nal Maganae - நல்ல குமாரனே!
நான், Naan - நான்
உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு, Unai Bayandha Kaikesi Than Sol Kaettu - உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக் கேட்டு
நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன், Nandraaga Unnai Naanilaththai Aalviththen - நன்றாக! உன்னை நிலவுலகத்தை ஆளும்படி செய்தேன்.
போகு, Pogu - என்றாள் = போகென்றாள் என்று புணரத்தக்கது,
இராமாவோ, Iraamavo - ஒகாரம் மிக்கது, புலம்பல் விளியாகலின் புலம்பின் ஓவும் ஆகும் என்றார்.
731பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 2
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை வேண்டாதே விரைந்து ,வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வானமே மேவி நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?
பதவுரை Show / Hide
வெவ் வாயேன் வெவ் உரை கேட்டு, Veve Vaayaan Veve Urai Kaettu - கொடிய வாயை யுடையேனை என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு
இரு நிலத்தை வேண்டாதே, Iru Nilaththai Vendaadhe - பெரிய நிலவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டிட்டு
விரைந்து, Viraindhu - சீக்கிரமாக
வென்றி மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து, Vendri Mai Vaaya Kaliru Ozhindhu Ther Ozhindhu Maa Ozhindhu - வெற்றியை விளைப்பதான
வனமே மேவி, Vaname Mevi - காட்டையே சேர்ந்து
நெய் வாய வேல் நெடு கண் நேரிழையும், Ney Vaaya Veel Nedhu Kann Nerizhaiyum - நெய்ப்பூசிய நுனியையுடைய வேலாயுதம் போன்ற
இளங்கோவும், Ilankovum - இளைய பெருமாளும்
பின்பு போக, Pinbu Poga - உடன் தொடர்ந்து வர
எவ்வாறு நடந்தனை, Evvaaru Nadandhanai - எங்ஙனம் நடந்து சென்றாயோ!
எம் பெருமான், Em Perumaan - எமது ஐயனே!
என் செய்கேன், En Seigkaen - நான் என் செய்வேன்!
737பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 8
பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே
பதவுரை Show / Hide
கைகேசீ, Kaikeesi - கைகேயியே
பொன் பெற்றார் எழில் வேதம் புதல்வனையும், Pon Pettraar Ezhil Vedham Puthalvanaiyum - கல்விச் செல்வத்தைப் பெற்றவர்களான உபாத்தியாயரின்
தம்பியையும், Thambiyaiyum - (அவனது) தம்பியான லக்ஷ்மணனையும்
பூவை போலும், Poovai Polum - (பேச்சின் இனிமையிற் கொஞ்சுகிற) கிளி போன்றவளும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல்என் மருகியையும், Min Patraa Nun Marungul Mel Iyalen Marugiyaiyum - மின்னலும் ஈடாகமாட்டாத நுண்ணிய இடையையும்
வனத்தில் போக்கி, Vanathil Pookki - காட்டுக்குப் போகச்செய்து
நின் பற்று ஆம் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு, Nin Pattru Aam Nin Magan Mel Pazhi Vilaittittu - உனது அன்புக்கு இடமான உன் மகனான பரதன்
என்னையும் நீள் வானில் போக்க, Ennaiyum Neel Vaanil Pookka - (புத்ர விரஹத்தால்) என்னையும் தூரத்திலுள்ள மேலுலகத்திற்குச் செலுத்துதலினால்
என் பெற்றாய், En Pettraai - நீ என்ன பயனடைந்தாய்!
இரு நிலத்தில், Iru Nilathil - பெரிய இவ்வுலகத்தில்
இனிது ஆக, Inidhu Aaga - சுகமாக
இருக்கின்றாயே, Irukkindraaye - வாழ்கின்றாயே
மருகி, Marugi - மகன் மனைவி (இதன் ஆண்பால்-மருகன்) என் பெற்றாய் = இவ்வளவு கொடுமைகளை ஒருங்கே செய்தற்கு
740பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 11
ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல் தன்னை கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே
பதவுரை Show / Hide
ஏர் ஆர்ந்த, Aer Aarntha - அழகு நிறைந்த
கரு, Karuthu - கரு நிறமுடைய
நெடுமால், Nedumaal - மஹா விஷ்ணு
இராமன் ஆய், Iraman Aayi - ஸ்ரீ ராமனாகத் திருவவதரித்து
வனம் புக்க, Vanam Pukka - காட்டுக்குச் சென்றதான
அதனுக்கு, Adhanukku - அச் செயலை
ஆற்றா, Aartra - பொறுக்க மாட்டாமல்
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் புலம்பிய, Thaar Aarntha Thada Varai Thol Thayaratthan Pulampiya - வெற்றி மாலை பொருந்திய பெரிய மாலை போன்ற
அப் புலம்பல் தன்னை, Ap Pulampal Thannai - அக் கதறல்களை,
கூர் ஆர்ந்த, Koora Aarntha - கூர்மை மிக்க
வேல் வலவன், Vel Valavan - வேற்படையின் தொழிலில் வல்லவரும
கோழியர் கோன், Kozhiyar Kon - உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும்
குடை, Kudai - கொற்றக்குடையை உடையவருமான
குலசேகரன், Kulashekaran - குலசேகராழ்வார்
சொல் செய்த, Sol Seitha - அருளிச் செய்த
சீர் ஆர்ந்த, Seer Aarntha - சிறப்பு மிக்க
தமிழ் மாலை இவை, Tamil Maalai Ivai - தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallaar - கற்க வல்லவர்கள்
தீ நெறிக்கண், Thee Nerikkan - கொடிய வழி யொன்றிலும்
செல்லார், Sellaar - சென்று சேர மாட்டார்கள். (தான், தாம்–அசைகள்)
741பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 1
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ? கண் குளிர காணும் நாளே
பதவுரை Show / Hide
அம் கண், Am Kan - அழகிய இடத்தை யுடையதும்
நெடு மதிள், Nedu Mathil - உயர்ந்த மதிள்களினால்
புடை சூழ், Pudai Soozh - நாற்புறமும் சூழப்பட்டதும்
அயோத்தி என்னும், Ayothi Ennum - அயோத்யா என்று ப்ரஸித்தமுமான
அணி நகரத்து, Ani Nagaratthu - அழகிய நகரத்திலே
உலகு அனைத்தும், Ulaku Anaithum - ஸகல லோகங்களையும்
விளக்கும் சோதி, Vilakkum Sothi - விளங்கச் செய்கிற தனது ஒளியின் அம்சத்தாலே
வெம் கதிரோன் குலத்துக்கு, Vem Kathiron Kulaththukku - ஸூர்ய வம்சத்துக்கு (விளக்க முண்டாம்படி)
ஓர் விளக்கு ஆய் தோன்றி, Oru Vilakku Aay Thonri - ஒப்பற்தொரு விளக்கு போல (அதில்) வந்து அவதரித்து
விண் முழுதும், Vin Muzhudhum - தேவர்களெல்லாரையும்
உயக் கொண்ட, Uyak Konda - துன்பந்தீர்ந்து வாழச்செய்த
வீரன் தன்னை, Veeran Thannai - மஹாவீரனும்
செம் கண், Sem Kan - சிவந்த திருக்கண்களையுடைய
நெடு கரு முகிலை, Nedu Karu Mukilai - பெரிய காளமேகம் போன்ற வடிவ முடையவனும்
இராமன் தன்னை, Iraman Thannai - ஸ்ரீராமனென்னும் திருநாமமுடையவனும்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள், Thillai Nagar Thiru Chithra Koodam Thannul - தில்லை நகரத்திலுள்ள திருச்சித்திர கூடத்தில் (எழுந்தருளியிருக்கிற)
எங்கள் தனி முதல்வனை, Engal Thani Muthalvanai - எமக்கு ஒப்பற்ற காரணமாகிறவனும்
எம் பெருமான் தன்னை, Em Perumaan Thannai - எமக்குத் தலைவனுமான பரமனை
கண் குளிர காணும் நாள், Kan Kulira Kaanum Naal - கண்கள் குளிரும்படி ஸேவிக்கும் நாள்
என்று கொல் ஓ, Endru Kol O - எந்நாளோ!
742பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 2
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின் செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே
பதவுரை Show / Hide
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி, Vandhu Edhirntha Thaadagai Than Uraththai Keerii - செருக்கிவந்து எதிரிட்ட தாடகையினுடைய மார்பைப் பிளந்து
வரு குருதி பொழிதர, Varu Kuruthi Pozhithara - ரத்தம் வெளிவந்து சொரியம் படி
வல் கணை ஒன்று ஏவி, Val Kanai Ondru Aevii - வலிய ஒப்பற்றதோர் அம்பைச் செலுத்தி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து, Manthiram Kol Marai Munivan Vellvi Kaaththu - எல்லா மந்திரங்களையும் தம்மிடத்திலே கொண்ட
வல் அரக்கர், Val Arakkar - (அந்த யாகத்துக்கு இடையூறு செய்த ஸுபாஹூ முதலிய) வலிய ராக்ஷஸர்களுடைய
உயிர் கண்ட, Uyir Kanda - உயிரைக் கொள்ளை கொண்ட
மைந்தன், Maindhan - மிடுக்கை யுடையவன் (யாரென்னில்)
செம் தளிர்வாய் மலர், Sem Thalirvaai Malar - சிவந்த தளிர்களின் நடுவே மலர்ந்த புஷ்பங்களை யுடையதும்
நகை சேர், Nagai Seer - (காண்பவர்) மகிழும்படியான அழகு பொருந்தினதும்
செழு, Sezhu - செழுமையை யுடையதுமான
தண், Than - குளிர்ந்த
சோலை, Solai - சோலைகளை யுடைய
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த, Andhanargal Oru Moovaayiravar Aetha - ப்ரர்மணர் மூவராயிரம் பேர் (திரண்டு துதிக்க)
அணி மணி ஆசனத்து இருந்த, Ani Mani Aasanaththu Irundha - அழகிய ரத்நஸிம்ஹாஸநத்திலே வீற்றிருந்த
அம்மான் தானே, Ammaan Thaaney - ஸர்வேச்வரனே யாவன்;
காண்மின், Kaanmin - அறியுங்கள்.
743பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 3
செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த் தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே
பதவுரை Show / Hide
செவ்வரி நல் கரு நெடு கண், Sevvari Nal Karu Nedhu Kan - (உத்தம லக்ஷ்ணமான) சிவந்த ரேகைகள் படர்ந்த அழகிய கருமையான நீண்ட கண்களை யுடைய
சீதைக்கு ஆக, Seethaikku Aaga - வநிதையை மணம் புரிதற் பொருட்டு
சினம் விடையோன், Sinam Vidaiyon - கோபத்தை யுடைய ரிஷபத்தை வாஹநமாக வுடையனான சிவபிரானுடைய
சிலை இறுத்து, Silai Iruththu - வில்லை முறித்து (பின்பு மிதிலா புரியினின்று மீளும் வழியில்)
மழுவாள் ஏந்தி, Mazhuvaal Aendi - கோடாலியாகிய ஆயுதத்தை ஏந்தியவனான பரசுராமனுடைய
வெவ் வரி நல் சிலை, Veve Vari Nal Silai - பயங்கரமான கட்டமைந்த சிறந்த வில்லை
வாங்கி, Vaangi - கையிற்கொண்டு (வளைத்து)
வென்றி கொண்டு, Vendri Kondu - (அவனை) வென்று
வேல் வேந்தர் பகை தடித்த, Vel Vendar Pagai Thaditha - (தான் அவதரித்த ஜாதியிற்பிறந்த) வேற்படையை யுடைய க்ஷத்ரியர்களுக்குப் பகையைத் தீர்த்த
வீரன் தன்னை, Veeran Thannai - மஹா வீரனான
தெவ்வர், Thevvar - பகைவர்கள்
அஞ்சு, Anju - (கண்டமாத்திரத்திலே, கடக்க வொண்ணா தென்று) அஞ்சும் படியான
நெடு புரிசை, Nedu Purisai - உயர்ந்த மதிளையும்
உயர்ந்த பாங்கர், Uyarntha Paankar - ஓங்கிய (அட்டாலை யென்னும்) மதிற்பக்கத் திடத்தையுமுடைய (எழுந்தருளியிருக்கிற)
எவ்வரு வெம் சிலை தடகை இராமன் தன்னை, Evvaru Vem Silai Thadakai Raaman Thannai - (வேறொருவரால்) அடக்கியாளுதற்கு அரியதும் (பகைவர்க்குப்)
இறைஞ்சுவார், Iraichuvar - வணங்குகிற அடியார்களுடைய
இணை அடியே, Inai Adiye - இரண்டு திருவடிகளையே
இறைஞ்சினேன், Iraichinena - வணங்கினேன்.
ஏ, Ae - அம்பு தொடுப்பதற்கு உரிய வரி – நீண்ட என்று கஷ்டப்பட்டு பொருள் கொள்ளலாமாயினும்,
ஏவு, Aevu - ஏவுதல்,அடக்கியாளுதல்; (முதனிலைத் தொழிற்பெயர்) அரு-ஒண்ணாத; எனவே, அடக்கியாள முடியாத என்றதாயிற்று.
744பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 4
தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே
பதவுரை Show / Hide
தொத்து அலர் பூ சுரி குழல், Thoththu Alar Poo Suri Kuzhal - கொத்துக் கொத்தாக மலர்ந்த புஷ்பங்களைச் சூடிய நுனி சுருண்ட கூந்தலை யுடைய
கைகேசி, Kaikesi - கைகேயியினது
சொல்லால், Sollaal - சொல்லின்படி
தொல் நகரம் துறந்து, Thol Nagaram Thurandhu - தொன்று தொட்டுப் பரம்பரையாய் வருகிற ராஜ்யத்தைக் கை விட்டு
துறை கங்கை தன்னை, Thurai Gangai Thannai - கங்கையின் துறையை
பத்தி உடை குகன் கடத்த, Pathi Udai Kugan Kadatha - மஹா பக்தனான குஹப் பெருமான் புணை செலுத்தி யுதவ; (கடந்து)
வனம் போய் புக்கு, Vanam Poi Pukku - காட்டிற்போய்ச் சேர்ந்து
பரதனுக்கு, Barathanukku - (அங்கு வந்த) பரதாழ்வானுக்கு
பாதுகமும் அரசும் ஈந்து, Pathugamum Arasum Eendu - (தனது) மரவடியையும் ராஜ்யத்தையுங் கொடுத்து
சித்திர கூடத்து இருந்தான் தன்னை, Siththira Koodaththu Irundhaan Thannai - சித்ரகூட பர்வதத்தி லெழுந்தருளி யிருந்த ஸ்ரீராமபிராணை
இன்று, Indru - இப்பொழுது (பிற்காலத்தில்)
கண் குளிர காண பெற்ற, Kan Kulira Kaana Petra - கண் குளிரும்படி ஸேவிக்கப் பெற்ற
இரு நிலத்தார்க்கு, Iru Nilaththaar Kku - பெரிய (சிறந்த) பூலோகத்திலுள்ளவர்களுக்கு
இமையவர், Imayavar - நித்யஸூரிகளும்
எத்தனையும் நேர் ஒவ்வார், Ethanaiyum Neer Ovar - சிறிதும் ஸமமாக மாட்டார்கள். (தாம் ஏ–ஈற்றசைகள், தோற்றமுமாம்)
745பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 5
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்து தரணி தானே
பதவுரை Show / Hide
வலி வணக்கு, Vali Vanakku - (எதிரிகளுடைய) வலிமையைத் தோற்பிக்கின்ற
வரை நெடு தோள், Varai Nedu Thol - மலை போன்ற பெரிய தோள்களை யுடைய
விராதை, Virathai - விராதனென்னும் இராக்ஷஸனை
கொன்று, Kondru - கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த, Van Tamil Maa Muni Kodutha - சிறந்த தமிழ்ப பாஷைக்கு உரியவரான அகஸ்திய முனிவர் கொடுத்த
வரி வில் வாங்கி, Vari Vil Vaangi - கட்டமைந்த வில்லை பெற்று
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி, Kalai Vanakku Nookku Arakki Mookkai Neekki - மானின் பார்வையைத் தோற்பிக்கும் யடியான பார்வை யழகை
கானோடு தூடணன் தன் உயிரை வாங்கி, Kaanodu Thoodanthan Than Uyirai Vaangi - கரன் தூஷணன் என்னும் அரக்கர்களின் உயிரை (அவர்களுடம்பினின்று) கவர்ந்து
மான், Maan - மாரீசனாகிய மாயா ம்ருகமானது
மறிய, Mariya - அழியும்படி
சிலை வணக்கி எய்தான் தன்னை, Silai Vanakki Eydhaan Thannai - தனது வில்லை வளைத்து அம்புகளை எய்தவனான இராமபிரானை
தலை வணங்கி கை கூப்பி ஏத்த வல்லார், Thalai Vanangi Kai Koopi Aetha Vallar - தலை வணங்கி அஞ்ஜலி பண்ணித் துதிக்கவல்ல அடியார்கள்
திரிதலால், Thirithalaal - (தன்மீது) ஸஞ்சரிக்கப் பெறுதலால்
தரணி, Tharani - பூமியானது
தவம் உடைத்து, Thavam Udaithu - பாக்கியமுடையது (தான், ஏ -ஈற்றசைகள், தேற்றமுமாம்)
இங்கே மூக்கு என்றது, Inge Mookku Endrathu - மற்றும் அறுபட்ட அவயவங்களுக்கும் உபலக்ஷணம்.
746பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 6
தன மருவு வைதேகி பிரியல் உற்று தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி வன மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே
பதவுரை Show / Hide
தனம் மருவு, Thanam Maruvu - (தான் விரும்புஞ்) செல்வமாகப் பொருந்திய
வைதேகி பிரியல் உற்று, Vaidhegi Piriyal Utru - பிராட்டி பிரியப் பெற்று
தளர்வு எய்தி, Thalarvu Eydhi - (அதனால்) வருத்தமடைந்து
சடாயுவை, Sadaayuvai - ஜடாயுவென்னும் கழுகரசை
வைகுந்தத்து ஏற்றி, Vaikundhathu Aetri - பரமபதத்திற் செலுத்தி
வனம் மருவு, Vanam Maruvu - (வாலிக்கு அஞ்சிக்) காட்டில் மறைந்து வசிக்கிற
கவி அரசன், Kavi Arasan - வாநர ராஜனான சுக்ரீவனுடன்
காதல் கொண்டு, Kaadhal Kondo - ஸ்நேஹஞ் செய்து கொண்டு
இலங்கை நகர், Ilankai Nagar - இலங்காபுரியை
அரக்கர் கோமான் சினம் அடங்க, Arakkar Koman Sinam Adanga - (அதற்குத் தலைவனாகிய) ராக்ஷஸராஜானான ராவணனுடைய செருக்கு ஒழியும்படி
மாருதியால் சுடுவித்தானை, Maarudhiyaal Suduvithaanai - அனுமானைக் கொண்டு எரிப்பித்தவனும்
இனிது அமர்ந்த, Inidhu Amarntha - இனிமையாய் எழுந்தருளியிருக்கிற
அம்மானை, Ammanai - ஸர்வேச்வரனுமான
இராமன் தன்னை, Iraman Thannai - இராமபிரானை
ஏத்துவார், Aeththuvaar - துதிக்கின்ற அடியார்களுடைய
இணை அடியே, Inai Adiye - உபய பாதத்தையே
எத்தினேன், Eththinain - துதிக்குந் தன்மையேன் (யான்.)
747பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 7
குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே
பதவுரை Show / Hide
குரை கடலை, Kurai Kadal - கோஷிக்கின்ற கடலை
அடல் அம்பால், Adal Ampaal - தீக்ஷ்ணமான அம்பைக் கொண்டு
மறுக எய்து, Maruga Eythu - கலங்கும்படி எய்யத் தொடங்கி
குலை கட்டி, Kulai Katti - (அதில்) அணை கட்டி
அதனால், Adhanal - அந்த அணை வழியாக
மறு கரையை ஏறி, Maru Karaiyai Eri - (கடல் கடந்து) அக்கரை சேர்ந்து
எரி நெடு வேல் அரக்கரொடும், Eri Nedhu Vel Arakkarodum - (சத்துருக்களை) எரிக்கின்ற நீண்ட வேற்படையை யுடைய இராக்கதர்களும்
இலங்கை வேந்தன், Ilankai Vendan - இலங்கைக்கு அரசனான இராவணனும் ஆகிய அனைவர்களுடைய
இன் உயிர் கொண்டு, In Uyir Kondu - இனிய உயிரைக் கவர்ந்து (கொன்று)
அவன் தம்பிக்கு, Avan Thambikku - அவ்விராவணனது தம்பியான விபீஷணனுக்கு
அரசும் இந்து, Arasum Hindu - ராஜ்யத்தைக் கொடுத்து
திருமகளோடு, Thirumagalodu - லக்ஷ்மியின் அவதாரமான பிராட்டியுடனே
இனிது அமர்ந்த, Inidhu Amarntha - இனிமையாகச் சேர்ந்த
செல்வன் தன்னை, Selvan Thannai - எல்லா வகைச் செல்வங்களுமுடையவனும்
அரசு அமர்ந்தான், Arasu Amarnthaan - தனது மேன்மை தோன்ற எழுந்தருளி யிருப்பவனுமான
அடி சூடும், Adi Soodum - இராமபிரானது திருவடிகளைத் தலைமேற் கொள்ளுதலாகிற
அரசை அல்லால், Arasai Allal - அரசாட்சியைப் பெற விரும்புவேனே யன்றி
மற்று அரசு, Mattru Arasu - அதற்கு மாறாக ஸ்வாதந்திரியம் பாராட்டுகிற அரசாட்சியை
அரசு ஆக எண்ணேன், Arasu Aaga Ennen - ஒரு பொருளாக மதிக்க மாட்டேன்.
748பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 8
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே
பதவுரை Show / Hide
அம் நெடு பொன் மணி மாடம், Am Nedhu Pon Mani Maadam - அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங்களையுங் கொண்டு
அயோத்தி, Ayodhya - அயோத்யா நகரத்துக்கு
எய்தி, Eythi - மீண்டு வந்து
அரசு எய்தி, Arasu Eythi - அரசாட்சியை அடைந்து
தான் முன் கொன்றான் தன், Thaan Mun Konraan Than - தன்னால் முன்பு கொல்லப்பட்டவனான இராவணனுடைய
பெரு தொல் கதை, Peru Thol Kadhai - பெரிய பூர்வ வ்ருத்தாந்தங்களை யெல்லாம்
அகத்தியன் வாய் கேட்டு, Akathiyan Vaai Kaettu - அகஸ்திய மகாமுனிவன் வாயாற் சொல்லக் கேட்டு
மிதிலை செல்வி, Mithilai Selvi - மிதிலா நகரத்தில் தோன்றிய பிராட்டி
உலகு உய்ய, Ulaku Uyya - உலக முழுவதும் வாழும்படி
திரு வயிறு வாய்த்த, Thiru Vayiru Vaayththa - பெற்ற
மக்கள், Makkal - தன் பிள்ளைகளான குசலவர்களுடைய
செம் பவளம் திரள் வாய், Sem Pavalam Thiral Vaai - சிவந்த பவழத்துண்டு போன்ற வாயினால்
தன் சரிதை, Than Sarithai - தனது சரித்திரமான ஸ்ரீராமாயணத்தை
கேட்டான், Kaettaan - கேட்டருளினவனான (எழுந்தருளியிருக்கிற)
எம் பெருமான் தன், Em Perumaan Than - எமது தலைவனுடைய
சரிதை, Sarithai - சரித்திரத்தை
செவியால் கண்ணால், பருகுவோம், Seviyal Kannal Paruguvom - காதினாற்கேட்டு (அப்பெருமானைக்) கண்ணால் ஸேவிக்கப் பெறுவோம்யாம் (அதுவேயன்றி)
இன் அமுதம், In Amudham - இனிய தேவாம்ருதத்தையும்
மதியோம், Madhiyom - ஒரு பொருளாக நன்கு மதிக்க மாட்டோம்
அன்றே, Andrae - அல்லவா! (ஈற்றசை, தோற்றமுமாம்)
அமுதம், Amudham - அமுதத்தை, ஒன்று – ஒரு பொருளாக மதியோம் என்றவாறு.
749பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 9
செறி தவ சம்புகன் தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட திறல் விளங்கும் இலகுமனை பிரிந்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் உறைவானை மறவாத வுள்ளம் தன்னை வுடையோம் மற்று உறு துயர் அடையோம் அன்றே
பதவுரை Show / Hide
செறி தவம், Serri Thavam - மிக்க தபஸ்ஸை யுடையனான
சம்புகன் தன்னை, Sambugan Thannai - (சூத்ரசாதியனான) சம்புகனை
சென்று, கொன்று, Sendru Konru - (அவனிருக்கு மிடந்தேடிச்) சென்று தலையறுத்து
செழுமறை யோன் உயிர் மீட்டு, Sezhumarai Yon Uyir Meettu - சிறந்த ப்ராஹ்மண குமாரனுடைய உயிரை மீட்டுக் கொடுத்து
தவத்தோன் ஈந்த, Thavaththon Eentha - அகஸ்திய மா முனிவன் கொடுத்த
நிறைமணி பூண் அணியும் கொண்டு, Niraimani Poon Aniyum Konda - பெருவிலையுள்ள ரத்நஹாரமான ஆபரணத்தையும் சாத்தியருளி
இலவணன் தன்னை, Ilavanan Thannai - லவணாஸுரனை
தம்பியால், Thambiyal - சத்ருக்நனைக் கொண்டு
வான் ஏற்றி, Vaan Aetri - வீர ஸ்வர்க்கத்திற் குடியேற்று வித்து
முனிவன் வேண்ட, Munivan Venda - துர்வாஸமுனிவனது சாபத்தால்
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான் தன்னை, Thiral Vilangum Ilakkumanai Pirindhan Thannai - பலபராக்கிரமம் விளங்கப் பெற்ற லக்ஷ்மணனை துறந்தவனும்
உறைவானை, Uraivaanai - நித்யவாஸம் பண்ணுகிறவனுமான இராமபிரானை
மறவாத உள்ளம் தன்னை உடையோம், Maravaadha Ullam Thannai Udaiyom - மறவாமல் எப்பொழுதும் தியானிக்கிற மனத்தையுடைய நாம்
மற்று உறு துயரம் அடையோம், Mattru Uru Thuyaram Adayom - இனி (எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோ மென்று வருந்துன்பத்தை அடையமாட்டோம்) (அன்று, எ – ஈற்றசை)
750பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 10
அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே
பதவுரை Show / Hide
அன்று, Anru - (தன்னடிச்சோதிக்கு எழுந்தருள்கிற) அந்நாளில்
சர அசரங்களை, Sara Asarangalai - (அயோத்யாபுரியிலுள்ள) ஜங்கமும் தாவரமுமான எல்லா வுயிர்களையும்
வைகுந்தத்து ஏற்றி, Vaikundhathu Aetri - பரமபதத்துக்குப் போகச் செய்து
அடல் அரவம் பகை ஏறி, Adal Aravam Pagai Aeri - வலிமையை யுடைய பாம்புகளுக்குப் பகையான கருடன் மேல் ஏறிக் கொண்டு
அசுரர் தம்மை வென்று, Asurar Thammai Vendru - அசுரர்களை ஜயித்து
இலங்கும் அணி நெடு தோள் நான்கும் தோன்ற, Ilangum Ani Nedu Thol Naangum Thondra - (அந்த ஜயலக்ஷ்மி) விளங்கப் பெற்ற அழகிய
விண் முழுதும், Vin Muzhudhum - பரமபதத்திலுள்ளாரெல்லாரும்
எதிர் வர, Edhir Vara - எதிர் கொண்டு உபசரிக்கும்படி
தன் தாமம் மேவி சென்று, Than Thaamam Mevi Sendru - தமது ஸ்தாநமான அப் பரம பதத்திலே போய்ப் புக்கு
இனிது வீற்றிருந்த, Inidhu Veetirundha - (தன் மேன்மை யெல்லாம் தோன்றும்படி) இனிமையாகத் (திவ்ய ஸிம்ஹாஸநத்தில்) எழுந்தருளியிருந்த
அம்மான் தன்னை தில்லை நகர் திரு சித்ரகூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி, Ammaan Thannai Thillai Nagar Thiru Chithrakoodam Thannul Endrum Nindraan Avan Ivan Endru Aethi - ஸர்வேச்வரனை (அந்த இருப்பில் ஒன்றுங் குறையாமல் அவ்வாறே) தில்லைச் சித்ரக்கூடத்தில் எந்நாளும் (நமக்காக)
தொண்டீர் நீர், Thondir Neer - அவனுக்கு அடியவர்களான நீங்கள்
நாளும் எப்பொழுதும், Naalum Eppozhudhum - தினந்தோறும் எப்பொழுதும்
இறைஞ்சு மின், Irainthu Min - வணங்கி உஜ்ஜீவியுங்கள் (ஏ – இசைநிறை.)
751பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 11
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே
பதவுரை Show / Hide
திறல் விளங்கும், Thiral Vilangum - பல பராக்கிரமம் விளங்கப் பெற்ற
மாருதியோடு, Marudiyodu - அனுமானுடனே
அமர்ந்தான் தன்னை, Amarnthaan Thannai - நித்யவாஸம் பண்ணுகிற எம் பெருமானைக் குறித்து
எல்லை இல்சீர் தயரதன் தன் மகன் ஆய் தோன்றிற்று அது முதல் ஆ தன் உலகம் புக்கது ஈறு ஆ, Ellai Ilseer Thayaratthan Than Magan Aayi Thonrihtru Adhu Muthal Aa Than Ulagam Pukkadhu Eeru Aa - அழிவில்லாத (ஸ்ரீராமாயணத்தை முழுதையும் ஸங்க்ரஹமாக அமைத்து)
கொல் இயலும் படை தானை கொற்றம் ஒள்வாள் கோழியர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த, Kol Iyallum Padai Thaanai Kotrham Olvaal Kozhiyer Kon Kudai Kulashekaran Sol Seitha - (பகைவர்களைக்) கொல்லுதல்
நல் இயல், Nal Iyall - சிறந்த இயற்றமிழிலக் கணத்துக்கு இசைந்த
இன் தமிழ் மாலை பத்தும், In Tamil Maalai Paththum - இனிய தமிழ்ப் பிரபந்த ரூபமான இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallaar - கற்று வல்லவர்கள்
நலம் திகழ, Nalam Thigazha - பரமபதத்தில் விளங்குகிற
நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணனுடைய
அடிகீழ் நண்ணுவார், Adikeezh Nannuvaar - திருவடிகளிற் சேரப் பெறுவார்கள்.
769ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 18
விடத்த வயோராயிரம் ஈராயிரம் கண் வெந் தழல் விடுத்து விள்விலாத போக மிக்க சோதி தொக்க சீர் தொடுத்து மேல் விதாநமாய பௌவ நீர் அராவணைப் படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே
பதவுரை Show / Hide
வேலை வண்ணனே, Vela Vannane - கருங்கடல் வண்ணனான எம்பெருமானே!
விடத்த, Vidath - விஷத்தையுடைத்தான
ஒரு ஆயிரம் வாய், Oru Aayiram Vaai - ஓராயிரம் வாய்களினின்றும்
இரு ஆயிரம் கண், Iru Aayiram Kan - ஈராயிரம் கண்களினின்றும்
வெம் தழல், Vem Thazhal - வெவ்விய தழலை
விடுத்து, Viduthu - புறப்படவிட்டுக்கொண்டு,
வீழ்வு இலாத போகம், Veelvu Iladha Pogam - ஒரு காலும் விச்சேதமில்லாத பகவநறுபவத்தையுடையனாய்
மிக்க சோதி, Mikka Sothi - மிகுந்த ஜ்யோதிஸ்ஸையுடையனாய்
விதானம் ஆய், Vidhanam Aay - மேற்கட்டிபோன்ற படங்களினுடைய
மேல், Mel - மேற்புறத்திலே
தொக்க, Thokka - திரள்திரளாயிருக்கிற
சீர், Seer - அழகை
தொடுத்து, Thoduthu - தொடுத்து
பௌவம் நீர், Pauvam Neer - ஸமுத்ரஜலத்திலே
படுத்த, Padutha - படுக்கையாக அமைந்த
அரா அணை பாயல் பள்ளி கொள்ளது, Ara Anai Paayal Palli Kollathu - திருவனந்தாழ்வானாகிய சயகத்திலே பள்ளிகொண்டருளும் தன்னை
என் சொல், En Sol - எத்திறம்!
772ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 21
அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ் மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய் நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார் குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே
பதவுரை Show / Hide
குரங்கை, Kurangai - வானரப்படைகளை
ஆள் உகந்த எந்தை !, Aal Ugandha Endhai - உகந்த ஆட்கொண்ட நாயனே!
அரங்கனே, Aranganey - ஸ்ரீஅரங்கநாதனே!
அன்று, Andru - (துர்வாஸ மஹர்ஷியின் சாபத்தினாலே தேவர்கள் செல்வமிழந்து வருந்தி உன்னைச் சரணம் பற்றி நின்ற) அன்று
தரங்கம் நீர் கலங்க, Tharangam Neer Kalanga - அலைகளையுடைய ஸமுத்ரமானது கலங்கவும்
மா நிலம் குலங்க, Maa Nilam Kulanga - பெரிய பூமியானது குலுங்கவும்
மாகணம் நெருங்க கலாய், Makanam Nerunga Kalai - வாஸுகி யென்னும் நாகத்தை அழுந்தச் சுற்றி
நீ கடைந்த, Nee Kadaindha - (கடலை) நீ கடைந்தருளின காலத்திலே
நின்ற, Nindra - அருகே நின்று கொண்டிருந்த
சூரர், Soorar - மிக்க பராக்ரமசாலிகளென்று பேர்பெற்ற தேவாஸுர ப்ரப்ருதிகள்.
என் செய்தார், En Seithaar - என்ன  காரியம் செய்தார்கள்
இது, Idhu - இவ்விஷயத்தை
வேறு, Veru - விசேஷித்து
தேற, Theera - நான் தெரிந்து கொள்ளும்படி
கூறு, Kooru - அருளிச் செய்யவேணும்.
779ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 28
படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர் படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய் மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப் படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே
பதவுரை Show / Hide
பௌவம் நீர், Pauvam Neer - (அண்டங்களுக்குக் காரணமான) ஏகார்ணவத்தை
படைத்து, Padaiththu - ஸ்ருஷ்டித்து
படைத்த, Padaitha - (பிறகு, அண்டப்ரஹ்மஸ்ருஷ்டி பூர்வமாக) ஸ்ருஷ்டிக்கப்பட்ட
பார், Paar - பூமியை
இடந்து, Idandhu - (ஸ்ரீவராஹமூர்த்தியாய் அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவித்தெடுத்து
அளந்து, Alandhu - (த்ரிவிக்ரமனாய்) அளந்து
உண்டு, Undu - (ப்ரளயகாலத்தில்) திருவயிற்றில் வைத்து நோக்கி
உமிழ்ந்து, Umizhndhu - (ப்ரளயங்கழிந்த பின்பு) வெளிப்படுத்தியும்.
பௌவம் நீர், Pauvam Neer - (இலங்கைக்கு அழகான) கடலை
அடைத்து, Adaiththu - ஸேதுகட்டித் தூர்த்து.
முன் அதில் கிடந்து, Mun Athil Kidandhu - முன்பொருகால் அக்கடலிற் கண்வளர்ந்தருளி
கடைந்த, Kadaindha - (ஒருகால் அமுதமெடுப்பதற்காக அதனைக்) கடைந்தருளின
பெற்றிபோய்!, Petri Poy - (இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளையுடையவனே!
மிடைத்த, Midaiththu - செருக்கி வந்த
மாலி, Maali - மாலி என்றகிற ராக்ஷஸனென்ன
விலங்கு மான் மாலி, Vilangu Maan Maali - அதிக்ஷுத்ரனான ஸுமாலியென்னும் ராக்ஷஸனென்ன இவர்கள்
காலன் ஊர் புக, Kaalan Oor Puga - யமலோகம் போய்ச் சேரும்படியாக
படைக்கலம் விடுத்த, Padaikalam Vidutha - ஆயுதங்களை ப்ரயோகித்தருளின
பல் படை தடகை மாயனே!, Pal Padai Thadakai Maayane - பலவகைப்பட்ட திவ்யாயுதங்களை விசாலமான திருக்கையிலே  யுடையனான பெருமானே! (உன்னையார் மதிக்கவல்லர்? என்று கீழ்ப்பாட்டின் க்ரியைக் கூட்டிக்கொள்வது)
783ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 32
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே
பதவுரை Show / Hide
குரங்கு இனம் படைகொடு, Kurangu Inam Padaikodu - வாநகர்களின் திரளான சேனையைத் துணைகொண்டு
குரை கடலின் மீது போய், Kurai Kadalin Meedhu Poi - கோஷிக்கின்ற கடலில் (அணைகட்டி) எழுந்தருளி
அங்கு, Angu - அவ்விலங்கையிலுள்ள
அரக்கர், Arakkar - ராவணாதி ராக்ஷஸர்கள்
அரங்க, Aranga - அழியும்படி
வெம் சரம், Vem Saram - தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த, Durandha - அவர்கள் மேல் பிரயோகித்த
ஆதி, Ati - வீரர்களில் தலைவன்
நீ, Ni - (எம்பெருமானே;) நீயே காண்க;
இரக்க, Irakka - நீ வாமநனாய்ச் சென்று யாசிக்க
மண்கொடுத்தவற்கு, Mankoduththavarku - உனக்கு மூவடி நிலம் தானங் கொடுத்த மஹாபலிக்கு
இருக்க, Irukka - குடியிருப்பதற்கு
ஒன்றும் இன்றியே, Ondrum Indriye - ஒருசாண்நிலமும் மிகாதபடி
பரக்க வைத்து, Parakka Vaiththu - (திருவடியை) மிகவும் விஸ்தாரமாக வைத்து
அளந்து கொண்ட, Alandhu Konda - (மூவுலகங்களையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்ட
பற்பபரதன் அல்லையே, Parappabharathan Allaiye - தாமரைபோன்ற திருவடிகளையுடைய பெருமானும் நீயே காண்.
784ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 33
மின் நிறத்து எயிறு அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய் நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப் பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே
பதவுரை Show / Hide
மின் நிறத்து எயிறு அரக்கன், Min Niraththu Eyyiru Arakkan - மின்னல் நிறத்தையொத்த பற்களையுடையனான இராவணன்
வீழ, Veela - மாளும்படி
வெம் சரம், Vem Saram - கொடிய அம்புகளை
துரந்து, Durandhu - அவன் மேல் பிரயோகித்து (அவனை முடித்தருளி)
பின்னவற்கு, Pinnavarku - அவனது தம்பியான விபீடணனுக்கு
அருள் புரிந்து, Arul Purinthu - க்ருபை செய்தருளி
அரசு அளித்த, Arasu Aliththa - பட்டாபிஷேகம் செய்து வைத்த
பெற்றியோய்!, Pettriyoyi - பெருமானே!
நல் சிறத்து, Nal Sirathu - நல்ல நிறத்தையுடையவளாய்
ஓர் இன் சொல், Oru In Sol - ஒப்பற்ற மதுரமான வாக்கையுடையவளாய்
ஏழை, Ezhaik - உன்பக்கல் சாபல்யமுடையவளான
பின்னை, Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு
கேள்வி, Kelvi - நாயகனானவனே!
மன்னு சீர், Mannu Seer - நித்யளித்த கல்யாண குணங்களையுடையனாய்
பொன் நிறந்த வண்ணன் ஆய, Pon Nirandha Vannan Aaya - பொன்போன்ற திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனான
புண்டரீகன் அல்லையே, Pundareekan Allaiye - புண்டரீகாக்ஷனென்பவன்  நீயே காண்
790ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 39
வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும் வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே
பதவுரை Show / Hide
வெற்பு எடுத்து, Verpu Eduthu - மந்தர பர்வதத்தைக்கொண்டு
வேலை நீர், Velai Neer - கடல் நீரை
கலக்கினாய், Kalakkinaai - கலங்கச் செய்தாய்
அது அன்றியும், Adhu Anriyum - அதுவு மல்லாமல்
வெற்பு எடுத்து, Verpu Eduthu - மலைகளைக்கொண்டு
வேலை நீர், Velai Neer - (தெற்குக்) கடலிலே
வரம்பு கட்டி, Varambu Katti - திருவணையைக்கட்டி
வேலைசூழ், Velaisool - கடலாலே (அகழாகச்) சூழப்பட்டதாயும்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ், Verpu Edutha Inji Soozh - மலையான மதினாலே சூழப்பட்டதாயுமுள்ள
இலங்கை, Ilankai - லங்கையினுடைய
கட்டு, Kattu - அரணை
அழித்த, Azitha - அழியச் செய்த
நீ, Ni - தேவரீர்
வெற்பு எடுத்து, Verpu Eduthu - கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்து
மாரி காத்த, Maari Kaatha - மழையைத் தடுத்த
மேகம் வண்ணன் அல்லையே, Megam Vannan Allaiye - காளமேக நிபச்யாமரன்றோ!
802ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 51
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம் பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல் அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே
பதவுரை Show / Hide
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன், Sarangalai Thurandhu Vil Valaiththu Ilangai Mannavan -
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம், Siralgal Paththaruththu Uthirththu Selvar Mannu Ponnidam -
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல், Parandhu Ponnirandhu Nundhi Vandhalaikkum Vaar Punal -
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே, Arangam Enbar Naanmugath Thayan Panindha Koyilile -
805ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 54
இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன் மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம் குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே
பதவுரை Show / Hide
இலை தலை, Ilai Thalai - இலைபோன்ற நுனியையுடைய
சரம், Saram - அம்புகளை
துரந்து, Durandhu - பிரயோகித்து
இலங்கை, Ilankai - எல்லையினுடைய
கட்டு, Kattu - அரண்களை
அழித்தவன், Azhiththavan - அழியச்செய்த இராமபிரான்;
மலைத்தலை, Malai Thalai - (ஸஹ்யமென்னும்) மலையிலே
பிறந்து, Pirandhu - பிறந்து
இழிந்து, Izhindhu - அங்கு நின்றும் ப்ரவஹித்து
வந்து, Vandhu - நெடுக ஓடிவந்து
சந்தனம், Sandhanam - சந்தன மரங்களை
நுந்து, Nundhu - (போர்த்துத்) தள்ளாநின்றதாயும்,
குலைத்து, Kulaittu - (குங்குமப்படர்கொடியை சிதிலப்படுத்தி
அலைத்து, Alaiththu - அலசி
இறுத்து, Iruththu - முறிக்க
எறிந்த, Erindha - (அக்கொடிகள் தம்மிலிருந்து) வெளிப்படுத்தின
குங்குமம் குழம்பினோடு, Kungumam Kuzhambinodu - குங்குமத் துகள்களினாலாய குழம்புடனேகூட
அலைத்து ஒழுகு காவிரி, Alaiththu Ozhugu Kaaviri - அலைமோதிக்கொண்டு பெருகா நின்றதாயுமுள்ள திருக்காவேரியுடைய
அரங்கம், Arangam - கோயிலிலே
மேய, Meya - எழுந்தருளியிருக்கிற
அண்ணன், Annan - ஸ்வாமியாவர்.
807ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 56
இலங்கை மன்னன் ஐந் தொடு ஐந்து பைந்தலை நிலத் துகக் கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார் வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற்காலத்தில்
இலங்கை மன்னன், Ilankai Mannan - இராவணனுடைய
ஐந்தொடு ஐந்து, Aindodu Aindhu - பத்தாகிய
பை தலை, Pai Thalai - வலிய தலைகள்
நீலத்து உலக, Neelathu Ulaga - பூமியிலே விழுந்தொழியவும்
கலங்க, Kalanga - (அவ்வரக்கன் அஞ்சிக்) கலங்கவும்
சென்று, Sendru - இலங்கையிற் புகுந்து
கொன்று, Konru - (அவனைக் கூட்டத்தோடு) கொலை செய்து
வென்றி கொண்ட, Vendri Konda - விஜயம் பெற்ற
வீரனே, Veerane - மஹாவீரனே!
விலக்கு நூலர், Vilakku Noolar - உடம்பிலே யஜ்ஞோபவீதத்தையுடையவரும்
வேதம் நாவர், Vedham Navar - வேதங்களை நாக்கின் நுனியிலோ உடையரும்
நீதி ஆன கேள்வி யார், Neethi Aana Kelpvi Yaar - (நல்லாசிரியர் பக்கலிலே) ஸாரமான அர்த்தங்களைக் கேட்டுணர்ந்தவர்களுமான வைதிகர்கள்.
வலம் கொள, Valam Kola - வழிபாடுகள் செய்யும்படியாக
குடந்தையுள், Kudandhaiyul - திருக்குடந்தையிலே
கிடந்த, Kidandha - திருக்கண் வளர்ந்தருளா நின்ற
மாலும் அல்லையே, Maalum Allaiye - ஸர்வேச்வரனும் நீயன்றோ
808ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 57
சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான் கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர் பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே
பதவுரை Show / Hide
சங்கு தங்கு முன் கை நங்கை, Sangu Thangu Mun Kai Nangai - (நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய
கொங்கை, Kongai - திருமுலைத்தடத்திலே
தங்கல் உற்றவன், Thangal Utravan - விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய)
அங்கம், Angam - சரீரமானது
மங்க, Manga - மாளவேணுமென்று
அன்று சென்று, Andru Senru - முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி
அடர்ந்து, Adarnthu - அவ்வூரை ஆக்ரமித்து
எறிந்த, Erindha - (அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய்.
ஆழியான், Azhiyan - கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான்
கொஞ்கு தங்குவார் குழல், Konju Thanguvar Kuzhal - நீண்ட கூந்தலையுடையவர்களான
மடந்தையார், Madandaiyar - திவ்யஸுந்தரிகள்
குடந்தை, Kudanthai - அவகாஹிக்கப்பெற்ற
நீர், Neer - தீர்த்தமானது
பொங்கு, Pongu - வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற
தண் குடந்தையுள், Than Kudanthaiyul - குளிர்ந்த திருக்குடந்தையிலே
கிடந்த, Kidandha - பள்ளிகொண்டிராநின்ற
புண்டரீகன், Pundareekan - ஸுந்தராங்கன்.
827ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 76
புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே
பதவுரை Show / Hide
புல், Pul - க்ஷுத்ரங்களான
புலன் வழி, Pulan Vazhi - சப்தாதிவிஷயங்களிலே இந்திரியங்கள் ஓடுவதற்குரிய வழியை
அடைத்து, Adaiththu - அடைத்து
அரக்கு இலச்சினை செய்து, Arakku Ilachchinai Seidhu - (விஷயமார்ந்த த்வாரத்திலே) அரக்கு முத்திரையிட்டு
நன் புலன் வழி திறந்து, Nan Pulan Vazhi Thirandhu - ஸத்விஷய மார்க்கத்தைத் திறந்து விட்டு
ஞானம், Gnanam - ஞானமாகிய
நல்சுடர், Nalsudar - விலக்ஷமான ப்ரபையை
கொளீ இ, Kolii I - கொளுத்தி (ஞானத்தை நன்கு பிரகாசிக்கச் செய்து)
என்பு இல், Enbu Il - எலும்பு வீடாகிய சரீரம்
என்கி, Enki - சிதிலமாகி
நெஞ்சு உருகி, Nenju Urugi - நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உள் கனிந்து, Ul Kaninthu - நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உன் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி, Un Kaninthu Ezhunthathu Oor Anbil Andri - பரிபக்குவமாய்க் கிளர்ந்த யிலக்ஷணமானதொரு ப்ரேம முண்டானலல்லது
ஆழியானை, Aazhiyaanai - திருவாழியைக் கையிலேந்தின பெருமானை
829ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 78
சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய் நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே
பதவுரை Show / Hide
நீர், Neer - திருப்பாற்கடலிலே
அரா அணை, Ara Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
கிடந்த, Kidandha - கண் வளர்ந்தருள்கிற
நின்மலன், Ninmalan - அகில ஹேயப்ரத்யநீகனான எம்பெருமானுடைய
நலம் கழல், Nalam Kazhal - நன்மைபொருந்திய திருவடிகளை
ஆர்வமோடு, Aarvamodu - அன்புடன்
இறைஞ்சி நின்று, Irainji Nindru - அச்ரயித்து
சோர்வு இல்லாத காதலால், Soarvu Illadha Kaadhalal - விஷயாந்தரப்பற்றினால் தளராத காதலோடு
துடக்கு அது மனத்தர் ஆய், Thudakku Adhu Manaththar Aay - விச்சேதமில்லாமல் ஏகாந்ரமான மனமுடையவர்களாய்
வாரம் ஆக, Vaaram Aaga - இதுவே நமக்குத் தஞ்சம் என்கிற அத்யவஸாயத்தோடு
ஓதுவார்கள், Othuvargal - அநுஸந்திக்குமவர்கள்
வானம் ஆன, Vaanam Aana - பரமபதத்தை ஆள்வதற்கு
வல்லர், Vallar - ஸமர்த்தராவர்.
832ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 81
கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய் மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம் அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ
பதவுரை Show / Hide
கடைந்த, Kadaindha - (கூர்மாவதாரத்திலே) கடையப்பட்ட
பால் கடல், Paal Kadal - திருப்பாற்கடலிலே
கிடந்து, Kidandhu - கண்வளர்ந்தருளியும்
காலநேமியை, Kaalanemiyai - காலநேமியென்னுமசுரனை
கடிந்து, Kadinthu - ஒழித்தருளியும்
உடைந்த, Udaindha - நடுங்கிக் கிடந்த
உதவ, Udhava - உபகாரம் செய்ய
இராமன் ஆய் வந்து, Iraman Aayi Vandu - இராமபிரானாய் வந்து தோன்றி
மிடத்தை, Midathai - ஒன்றொடொன்றாகப் பிணைந்து கிடந்த
ஏழ் மரங்களும், Ezha Marangalum - ஸப்தஸால வ்ருக்ஷங்களையும்
அடங்க, Adanga - ஏழேழாகவுள்ள ஸப்தகுலபாவதாதிகளான மற்றவற்றையும்
எய்து, Eythu - பாணத்தாலே துளைபடுத்தி
வேங்கடம் அடைந்த, Vengadam Adaindha - திருவேற்கடமலையிலே எழுந்தருளியிருப்பவான
மால, Maal - எம்பெருமானுடைய
பாதமே, Paadame - திருவடிகளையே
நாளும், Naalum - நாள்தோறும்
அடைந்து, Adaindhu - ஆச்ரயித்து
உய்ம்மின், Uymin - உஜ்ஜிவியுங்கள்
833ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 82
எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய் முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின் பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே
பதவுரை Show / Hide
எத்திறத்தும் ஒத்து நின்று, Eththiraththum Othu Nindru - எந்த ஜாதியில் அவதரித்தாலும் ஸஜாதீயன் என்ற காரணத்தால் சேதநா சேதநங்களோடு ஒத்திருக்கச் செய்தேயும்
உயர்ந்து உயர்ந்த பெற்றியோய், Uyarnthu Uyarntha Pettriyoy - (குணவிசேஷத்தால்) மேன்மேலுமுயர்ந்த ப்ரபாவத்தையுடையோனே!
மூத்திறத்து மூரி நீர், Mooththiraththu Moori Neer - திருப்பாற்கடலிலே
அரா அணை துயின்ற, Ara Anai Thuyinra - சேஷசயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்கின்ற
நின், Nin - தேவரீர் விஷயத்திலே
பத்து உறுத்த சிந்தையோடு நின்று, Paththu Uruththa Sindhaiyodu Nindru - பக்தி அழுந்தின நெஞ்சோடு கூடியிருந்து
பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம், Paasam Vittavarkku Eththiraththum Inbam - விஷயாந்தரப் பற்றுக்களை விட்டவர்கட்கு ஸர்வவித ஸுகமும்
இங்கும், Ingum - இவ்வுலகத்திலும்
அங்கம், Angam - அவ்வுலகத்திலும்
ஆகும், Aagum - எளிதாம்.
பாட்டு, Paatu - பின்பிறக்கவைத்தனன் கொல்.
836ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 85
நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில் வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம் மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே
பதவுரை Show / Hide
நஞ்சு அரா அணை, Nanju Ara Anai - (ஆச்ரித விரோதிகள்மேல்) விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வானாகிற சயனத்திலே
கிடந்த, Kidandha - திருக்கண் வளர்ந்தருள்கிற
நாத, Naadha - ஸ்வேச்வரனே!
பாத போதினில், Paadha Podhinil - (உன்னுடைய) திருவடித் தாமரைகளிலே
வைத்த, Vaitha - (இப்போது) வைக்கப்பட்டுள்ள
சிந்தை, Sindhai - மகஸ்ஸை
வாங்குவித்து, Vaanguviththu - அதில் நின்றும் திருப்பி
நீங்குவிக்க, Neenguvikka - வேறு விஷயங்களில் போக்க
நீ, Ni - ஸ்வதந்த்ரனான நீ
இனம், Inam - இன்னமும்
மெய்த்தன், Meiththan - மெய்யாகவே
வல்லை ஆதல், Vallai Aathal - ஸமர்த்தனாயிருக்கிறாய் என்பதை
அறிந்தனன், Arindhanan - அறிந்திருக்கிறேன்
மாயனே!, Mayane - ஆச்சரியசக்தியுக்தனே!
என்னை, Ennai - அடியேனை
நின் மாயமே உய்ந்து, Nin Maayame Uyndhu - உன்னுடைய மாயச்செயலையே கடத்தி
மயக்கினில், Mayakkinil - ப்ராக்ருத பாசங்களிலே (வைத்து)
மயக்கல், Mayakkal - மயக்கவேண்டா
840ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 89
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர் மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம் சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே
பதவுரை Show / Hide
முன், Mun - முற்காலத்தில்
பார் மிகுந்த பரம், Paar Mikuntha Param - பூமியிலே அதிமாகவுண்டான சுமையாகிய துஷ்டவர்க்கத்தை
ஒழிச்சுவான், Ozhichchuvaan - ஒழிப்பதற்காக
அருச்சுனன்  தேர் மிகுத்து, Aruchchunan Ther Mikuththu - அர்ஜுனனுடைய தேரை நன்றாக நடத்தி
மாயம், Maayam - (பகலை இரவாக்குகை முதலான) ஆச்சரியச் செயல்களை
ஆக்கி நின்று, Aakki Nindru - உண்டாக்கி
கொன்று, Konru - (எதிரிகளைக்) கொன்று
வெள்ளிசேர் மாரதர்க்கு, Velliseer Maaratharkku - ஐயம்பெறுவதாக நினைத்திருந்த மஹாரதர்களான துர்யோதநாதிகளுக்கு
வான் கொடுத்து, Vaan Koduthu - வீரஸ்வர்க்கத்தைக் கொடுத்து
வையம், Vaiyam - பூமண்டலத்தை
ஐவர் பாலது ஆம், Aivar Paalathu Aam - பஞ்சபாண்டவர்களுடையதாக அக்குவித்த
சீர் மிகுந்த, Seer Mikuntha - புகழ் மிகுந்த
நின் அலால், Nin Alaal - உன்னைத்தவிர
ஓர் தெய்வம், Or Deivam - மற்றொரு தெய்வத்தை
நான் மதிப்பனே, Naan Mathippane - நான் ஆதரிப்பேனோ!
841ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 90
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே
பதவுரை Show / Hide
புனித, Punitha - பரிசுத்தமான
எம் ஈசனே, Em Eesane - எம்பெருமானே!
குலங்கள் ஆய ஈர் இரண்டில், Kulangal Aaya Eer Irandil - (ப்ராஹங்மணாதி) நான்கு வர்ணங்களுக்குள்
பிறந்திலேன், Pirandhileen - நான் பிறக்கவில்லை
கலங்கள் ஆய நல்கலைகள் காலிலும், Kalangal Aaya Nalkalaigal Kaalilum - (சேதநர்க்கு) நன்மையைக் காட்டுவதான நல்ல நான்கு வேதங்களிலும்
நவின்றிலேன், Navinrilen - பயிற்சி செய்யவில்லை;
புலன்கள் ஐந்தும், Pulangkal Aindhum - பஞ்சேந்திரியங்களையும்
வென்றிலேன், Vendrilen - ஜயிக்கவில்லை.
பொறியிலேன், Poriyilen - பச்தாகி விஷயங்களில் அகப்பட்டிருக்கிறேன்; (ஆனபின்பு)
நின், Nin - உன்னுடைய
இலங்கு பாதம் அன்றி, Ilangu Paatham Andri - ஒளிமிக்க திருவடிகளைத் தவிர
மற்று ஓர் பற்று இலேன், Mattru Oru Patru Ilen - வேறொரு ஆச்ரயத்தை யுடையேனல்லேன்
842ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 91
பண்ணுலாவு மென் மொழி படைத்தடம் காணாள் பொருட்டு எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் கண்ணலாலோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன் எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே
பதவுரை Show / Hide
பண் உலாவும் மென்மொழி, Pan Ulaavum Menmozhi - (குறிஞ்சி காந்தாரம் காமரம் முதலிய) ராகங்கள் விளங்குகின்ற இனிய பேச்சை யுடையவளும்
படை தடம்கணாள் பொருட்டு, Padai Thadamkanal Poruttu - வாள் போன்று பெரிய கண்களையுடையவளுமான பிராட்டிக்காக
எண் இலா அரக்கரை, En Ilaa Arakkarai - கணக்கிலாத ராக்ஷஸரை
நெருப்பினால், Neruppinal - அம்புகளின் தீயினால்
நெருக்கினாய், Nerukkinaai - தொலைத்தருளினவனே!
கண் அலால், Kan Alaal - (எனக்கு நீ) நிர்வாஹகனேயொழிய
ஓர் கண் இலேன், Oru Kan Ilen - வேறொரு நிர்வாஹகனே காணுடையேனல்லேன்;
கலந்த சுற்றும்மற்று இலேன், Kalanda Suttum Mattru Ilen - நெஞ்சு பொருந்தின உறவும் வேறில்லை;
எண் இலாத மாய!, En Ilaadha Maaya - அநந்தமான ஆச்சரிய சக்தியையுடையவனே!
நின்னை, Ninnai - உன்னை
என்றும், Endrum - எக்காலத்திலும்
என்னுள் நீக்கல், Ennul Neekkal - என்னைவிட்டுப் ப்ரிக்கவே கூடாது.
843ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 92
விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார் கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர் படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே
பதவுரை Show / Hide
வேலை நீர், Velai Neer - ஜலதத்துவமாகிய கடலை
படைத்து, Padaiththu - (முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும்
அடைத்து, Adaiththu - (ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்;
அதில் கிடந்து, Adhil Kidandhu - (தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும்
முன், Mun - முன்னொருகாலத்திலே
கநைடபுது, Kanaitaputhu - (தேவதைகளுக்காக அதைக்) கடைந்தும் (இப்படியெல்லாம் செய்தது மல்லாமல்)
ஏழ்விடை குலங்கள், Ezhuvidai Kulangal - நாநாவர்ணமான ஏழு ரிஷபங்களையும்
அடர்ந்து, Adarnthu - கொழுப்படக்கி
வென்றிவேல் மண்மாதரர், Vendiveel Manmatharar - ஜயசீலமான வேல்போன்ற கண்ககளையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடைய
கடி கலந்த, Kadi Kalanda - பரிமளம் மிக்க திருத்தோளோடே
புணர்ந்த, Punarndha - ஸம்ச்லேஷித்த
காலி ஆய, Kaali Aaya - கோபாலகிருஷ்ணனே!
நின் தனக்கு, Nin Thanakku - உன் பக்கலிலே
அடைக்கலம் புகுந்த என்னை, Adaikalam Pugundha Ennai - சரணம் புகுந்த என்னை நோக்கி
அஞ்சல் என்ன வேண்டும், Anjal Enna Vendum - “பயப்படாதே” என்றொரு வார்த்தை யருளிச்செய்ய வேணும்.
844ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 93
சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே
பதவுரை Show / Hide
கரும்பு இருந்த கட்டியே, Karumbu Irundha Kattiye - கருப்பங் கட்டிபோலே பரம போக்யனாயிருந்தவனே!
கடல் கிடந்த கண்ணனே, Kadal Kidandha Kannane - திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளும் ஸுலபனே!
இரும்பு, Irumbu - இரும்புபோல் வலிய ராக்ஷஸசரீரங்கள்
அரங்க, Aranga - அழியும்படி
வெம்சரம், Vemsaram - தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த, Durandha - பிரயோகித்த
வில், Vil - ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே!
இராமனே, Iramane - இராமபிரானே!
அரங்கம் வாணனே, Arangam Vaanane - கோயிலில் வாழ்பவனே
கரும்பு, Karumbu - வண்டுகளானவை
அரங்கு, Arangu - படிந்திருக்கபெற்ற
தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய்
துதைத்து, Thuthaithu - நெருங்கி
அலர்ந்த, Alarntha - விசுஸித்திருக்கப்பெற்ற
பாதமே, Paadame - (உனது) திருவடிகளையே
விரும்பி நின்று, Virumbi Nindru - ஸ்வயம்ப்ரயோஜகமாக ஆசைப்பட்டு
இறைஞ்சு வேற்கு, Irainthu Vearku - தொழுகின்ற அடியேன் பக்கல்
இரங்கு, Irangu - க்ருபைபண்ணியருள்.
845ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 94
ஊனின் மேய வாவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ ஆனில் மேய ஐந்தும் நீ யவற்றின் நின்ற தூய்மை நீ வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே
பதவுரை Show / Hide
இராமனே, Iramane - இராமபிரானே!
ஊனில் மேய ஆவி நீ, Oonil Meya Aavi Nee - சரீரத்திலே பொருந்தியிருக்கின்ற பிராணன் நீயிட்ட வழக்கு
உற்றமோடு உணர்ச்சி நீ, Utramoadu Unarchi Nee - ஜ்ஞாநமும் அஜ்ஞானமும் நீ விட்ட வழக்கு.
ஆனில் மேய ஐந்தும் நீ, Aanil Meya Aindhum Nee - பசுக்களிடத்து உண்டான பஞ்சகவ்யமும் நீ;
அவற்றுள் நின்ற தூய்மை நீ, Avatrul Nindra Thuymai Nee - அப்பஞ்ச கவ்யங்களுக்குள்ள பரிசுத்தியும் நீ ஸங்கல்பித்தது;
வானினோடு மண்ணும் நீ, Vaaninodu Mannum Nee - நித்ய விபூதி லீலா விபூதியென்ற உபய விபூதியும் நீயிட்ட வழக்கும்
வளம் கடல் பயனும் நீ, Valam Kadal Payanum Nee - அழகிய ஸமுத்திரத்திலுண்டான (அம்ருதம் ரத்னம் முலான) பிரயோஜனங்களும் நீ;
யானும் நீ, Yaanum Nee - அடியேனு“ உன் அதீகன்;
அது அன்றி, Adhu Andri - இப்படி பலவாறு பிரித்துச் சொல்வதல்லாமல்
எம்பிரானும் நீ, Embiranum Nee - ஸர்வேச்வரனும் நீ காண்.
846ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 95
அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி யாசையாம் யவை துடக்கு அறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற வென்னை நீ விடக்கருதி மெய் செயாதே மிக்கோர் யாசை யாக்கிலும் கடல் கிடந்த நின்னலாலோர் கண் இலேன் எம் அண்ணலே
பதவுரை Show / Hide
எம் அண்ணலே!, Em Annale - எம்பெருமானே!
அடக்க அரு, Adakka Aru - அடக்க முடியாத
ஐந்து புலன்கள், Aindhu Pulankal - பஞ்சேந்திரியங்களை
அடக்கி, Adakki - பட்டிமேயாதபடி நியமித்து
ஆசை அரும் அவை, Aasai Arum Avai - விஷயந்தரப் பற்றுக்களை
துடக்கு அறுத்து வந்து, Thudakku Aruththu Vandu - ஸவாஸகமாகத் தொல்லைத்து விட்டு வந்து
நின் தொழில் கண், Nin Thozhil Kan - உன் கைங்கரியத்திலே
நின்ற, Nindra - நிஷ்டனாயிருக்கிற
என்னை, Ennai - அடையேனே
விட கருதி, Vida Karuthi - உபேக்ஷிக்கத் திருவள்ளம்பற்றி
மெய் செயாது, Mei Seyadhu - என் உஜ்ஜீவநார்த்தமான க்ருஷியை மெய்யாக நடத்தாமல்
மிக்க ஓர் ஆசை ஆக்கிலும், Mikka Oru Aasai Aakilum - விஷயாந்தரப்ராவண்யத்தை அதிகரிப்பித்தாலும்
கடல் கிடந்த நின் அலால், Kadal Kidandha Nin Alal - க்ஷீரஸாகர சாயியான உன்னையல்லது
ஓர் கண் இலேன், Oru Kan Ilen - வேறொரு ஸ்வாமியையுடைய னல்லேன்.
847ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 96
வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய் வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் பொருந்துமாறு திருந்த நீ வரம் செய் புண்டரீகனே
பதவுரை Show / Hide
வரம்பு இலாத மாய, Varambu Iladha Maaya - அளவிறந்த ஸ்வரூபத்தையுடைய பிரகிருதிதத்துவத்தை ஸ்வாதீகமாகவுடையவனே
மாய!, Maaya - ஆச்சரியசக்தியுக்தனே!
வையம் எழும், Vaiyam Ezhum - ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி)
மெய்ம்மையே, Meimmaiye - மெய்யாகவே
வரம்பு இல் ஊழி, Varambu Il Oozhi - பலபல கற்பகங்கள் வரையிலும்
ஏத்திலும், Aeththilum - தோத்திரம் பண்ணினாலும்
வரம்பு இலாத கீர்த்தியாய், Varambu Ilaadha Keerthiyaai - எல்லைகாண முடியாத புகழையுடையோனே!
புண்டரீகனே, Pundareekane - புண்டரீகாக்ஷனே! (அடியேன்)
வரம்பு இலாயா, Varambu Ilaayaa - முடிவில்லாமல் நேரக்கூடியவனான
பல் பிறப்பு, Pal Pirappu - பற்பல ஜன்மங்களை
அறுத்து, Aruththu - இன்றோடு முடித்துவிட்டு
நின் கழல் வந்து, Nin Kazhal Vandu - உனது திருவடிகளைக் கிட்டி
பொருந்தும் ஆ, Porundum Aa - அவற்றிலேயே ஸக்தனாயிருக்கும்படி
திருந்த, Thirundha - நன்றாக
நீ வரம் செய், Nee Varam Sei - அநுக்ரஹித்தருள வேணும்
867ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 116
மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன் கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே
பதவுரை Show / Hide
மாறு செய்த, Maaru Seitha - எதிரிட்ட
வாள் அரசர்கள், Vaal Arasarkal - ஆயுதபாணியான இராவணனுடைய
நாள் உவப்ப, Naal Uvappa - வாழ்நாள் முடியும்படியாக
அன்று, Andru - முற்காலத்து
இலங்கை, Ilankai - லங்காபுரியை
சென்று, Sendru - அடைந்து
நீறு செய்து, Neeru Seidhu - நீறாக்கி
கொன்று, Konru - அவனைக் கொன்று
வெற்றி கெணண்ட, Vettri Kenanda - ஜயம்பெற்ற
வீரனார், Veeranaar - மஹாவீரரான பெருமாள்
என்னை, Ennai - அடியேனை
தம்முள் வேறு  செய்து வைத்திடாமையால், Thammul Veru Seidhu Vaithidamaiyaal - தம்மில் வேறுபடுத்தி வைக்காமையினால் (என்னை அந்தரங்க பூதனாகக் கொண்டருளினபடியால் ) (இனி)
நமன், Naman - யமனானவன்
கூறுசெய்து கொண்டு, Koora Seidhu Kondu - (என்னை அம்பெருமானிடத்தினின்றும்) பிரித்து
இறந்த குற்றம், Iranda Kutram - நான் செய்து கழித்த பாவங்களை
என்ன வல்லனே, Enna Vallanai - நெஞ்சாலும் நினைக்கக் கடவனோ.
878திருமாலை || (முமுஷுக்களாக ப்ரமித்து இருக்கிற பாஹ்ய மதஸ்தரைக் குறித்து ஆஸ்ரியத் தக்க தைவத்தை உபதேசிக்கிறார்) 7
புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான் தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
பதவுரை Show / Hide
kalai,கலை - சாஸ்திரங்களை
ara katra maandhar,அற கற்ற மாந்தர் - நன்றாக ஓதின மனிதர்
pulai aram aagi nindra,புலை அறம் ஆகி நின்ற - நீச தர்மமாயிராநின்ற
puthodu samanam,புத்தொடு சமணம் - பௌத்த மதம் க்ஷபண மதம் முதலிய
ellaam,எல்லாம் - எல்லா மதங்களையம்
kaanparo,காண்பரோ - நெஞ்சாலே தான் ஆராய்வார்களோ?
ketparo,கேட்பரோ - காது கொடுத்துத் தான் கேட்பார்களோ?
(அது நிற்க)

thalai arupundum,தலை அறுப்புண்டும் - என் தலையானது அறுக்கப் பட்டாலும்
saageen,சாகேன் - நான் சாக மாட்டேன்;
sathiyam,சத்தியம் - இது சத்தியம் ;
aiya,ஐயா - ஸ்வாமிகளே!
kaanmin,காண்மின் - (ப்ரத்யக்ஷமாகக் காட்டுகிறேன்) பாருங்கள்;
silaiyinaal,சிலையினால் - வில்லாலே
ilangai setra,இலங்கை செற்ற - இலங்கையை நாசஞ்செய்த
devane,தேவனே - எம்பெருமானே
devan aavan,தேவன் ஆவான் - ஸர்வேஸ்வரனெனப்படுவான்
882திருமாலை || (திருவரங்கம் என்னப் பெறாதவர்கள் கர்ப்ப நிர் பாக்யர் -என்கிறார்) 11
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச் செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே
பதவுரை Show / Hide
oru villaal,ஒரு வில்லால் - சார்ங்கம் என்கிற ஒரு வில்லாலே
oongu munneer adaittu,ஓங்கு முந்நீர் அடைத்து - கொந்தளிக்கின்ற கடலை அணை கட்டி
ulangal uyya,உலகங்கள் உய்ய - லோகமெல்லாம் வாழும்படி
seruvile,செருவிலே - போர்க் களத்திலே
arakkar konai,அரக்கர் கோனை - இராவணனை
setra,செற்ற - முடித்தருளின
nam sevaganar,நம் சேவகனார் - நமக்குத் தலைவரும் மஹா வீரருமான பெருமாள்
maruyia,மருவிய - பொருந்தி வாழ்வதற்கு இடமான
periya koyil,பெரிய கோயில் - பெருமை தங்கிய கோயிலாவது
madhil thiruarangam,மதிள் திரு அரங்கம் - ஸப்த ப்ராகாரங்கள் சூழ்ந்த ஸ்ரீ ரங்க க்ஷேத்ரம்
ennaa,என்னா - என்று சொல்ல மாட்டாத
karuvile thiru ilaadheer,கருவிலே திரு இலாதீர் - கர்ப்ப நிர்ப் பாக்யர்களே!
kaalathai,காலத்தை - (பகவதநுபவத்துக்காகக் கண்ட) காலத்தை
kazhikkinreer,கழிக்கின்றீர் - பாழே போக்குகிறீர்களே!
915திருமாலை || (பிரமன் முதலியோருக்கும் அரிதான பேற்றை ஒரு திர்யக் ஜந்துவுக்கு அருள் செய்தமையைக் கூறுகிறார்) 44
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே
பதவுரை Show / Hide
pen ulam chatiyinanum,பெண் உலாம் சடையினானும் - கங்கா நதி உலாவுகின்ற சடையை யுடையனான சிவனும்
piramanum,பிரமனும் - நான் முகக் கடவுளும்
unnai kanban,உன்னைக் காண்பான் - உன்னைக் காண்பதற்காக
en ila uli uli,எண் இலா ஊழி ஊழி - எண்ண முடியாத நெடுங்காலமாக
thavam seithar,தவம் செய்தார் - தவம் புரிந்தவர்களாய் (அவ் வளவிலும் காணப் பெறாமையாலே)
velki nirpa,வெள்கி நிற்ப - வெட்கமடைந்து கவிழ்தலை யிட்டிருக்க
anru,அன்று - அக் காலத்திலே
aanai kuu,ஆனைக்கு - (முதலை வாயிலகப்பட்ட) ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்காக
vantu,வந்து - (மடுவின் கரையில்) எழுந்தருளி
vin ulaar viyappa arulai eentha,விண் உளார் வியப்ப அருளை ஈந்த - நித்ய ஸூரிகளும் ஆச்சிரியப்படும்படி பரம க்ருபையைச் செய்தருளிய
kannarai,கண்ணறாய் - (என்னிடத்து அருள் செய்யாமையாலே) தயவில்லாதவனே!
unnai,உன்னை - உன்னை
kalai kana,களை கணா - தஞ்சமாக
karutum aaru enno,கருதும் ஆறு என்னோ - நினைக்கலாகுமோ?
920திருப்பள்ளியெழுச்சி || (ஸ்ரீ நஞ்சீயர் ) - சக்ரவர்த்தித் திருமகனா யவதரித் தருளி விரோதி, நிரஸந பூர்வகமாக ஆஸ்ரித ஸம் ரக்ஷணம் பண்ணி யருளினால் போலே த்வத் அநுபவ விரோதியைப் போக்கி அநுபவி(ப்பி?)க்கத் திருப்பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறார். 4
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும் ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
பதவுரை Show / Hide
மேடு இன மேதிகள், medu ina medhigal - உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும், thalai vidum - (மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள், aayargal - இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும், veyngkuzhal osaiyum - புல்லாங்குழலின் நாதமும்
விடை, vidai - எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி, mani - மணிகளினுடைய
குரலும், kuralum - ஓசையும் (ஆகிய)
ஈட்டிய, eettiya - இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன, thisai paranthana - திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள், vayalul - கழனிகளிலுள்ள
சுரும்பு இனம், surumbu inam - வண்டுகளின் திரள்
இரிந்தன, irindhana - ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை, ilangaiyar kulathai - ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய, vaattiya - உருவழித்த
வரி இலை, vari ilai - அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ, vaanavar aere - தேவாதி தேவனே!
மா முனி, maa muni - விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை, velviyai - யாகத்தை
காத்து, kaathu - நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய, avapradham aattiya - அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள், adu thirul - (விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே, ayodhi em arase - அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தம்மா, arangathamma - திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
பள்ளி எழுந்தருளாய், palli ezhundharulai - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்
921திருப்பள்ளியெழுச்சி || (ஸ்ரீ நஞ்சீயர் ) - முன்னில் பாட்டிலே- “’வயலுளிரிந்தன சுரும்பினம்” என்றது; இப் பாட்டிலே -போது வைகினால் உணரக் கடவதான பக்ஷிகளுமுணர்ந்தன என்கிறது. முன்னில் பாட்டில் உணர்ந்த வற்றுக்கும் இப் பாட்டிலுணர்ந்த வற்றுக்கும் பாகவத் ப்ரவணர்க்கும் ஸம்ஸாரி களுக்குமுள்ள வாசி போருங் காணும்.-வயலிலுள்ளவை போலன்றிறே; சோலையாய் அதிலே பூம் பொழிலா யிருக்கச் செய்தே உணருகிறன விறே. போது- வைகின -படி. 5
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய் போயிற்று கங்குல் புகுந்தது புலரி கலந்தது குண திசை கனை கடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே
பதவுரை Show / Hide
பூ, poo - பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய், pozhilkalin vaai - சோலைகளிலுள்ள
புட்களும், pudkalum - பறவைகளும்
புலம்பின, pulambina - (உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று, poiyitru - கழிந்தது;
புலரி, pulari - ப்ராத: காலமானது
புகுந்தது, pugundhadhu - வந்தது;
குண திசை, guna thisai - கீழ்த் திசையிலே
கனை, kanai - கோஷஞ்செய்கிற
கடல், kadal - கடலினுடைய
அரவம், aravam - ஒசையானது
கலந்தது, kalanthadhu - வியாபித்தது;
களி, kali - தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு, vandu - வண்டுகளானவை
மிழற்றிய, mizhatrrya - சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த, kalambakan punaindha - பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம், am - அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு, alankal todaiyal kondu - அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள், amarargal - தேவர்கள்
அடி இணை பணிவான், adi inai panivaan - தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர், pugundhanar - வந்து நின்றனர்;
ஆதலில், aadhalil - ஆகையாலே
அம்மா, amma - ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில், ilangaiyar kon vazhipadu sei koyil - லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
எம்பெருமான்!, emperumaan - அஸ்மத் ஸ்வாமியே!
பள்ளி எழுந்தருளாயே, palli ezhuntharulaye - திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்
928அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — முதல் பாட்டில் அவன் தொடர்ந்து வந்த படி சொன்னார் இப்பாட்டில் தாம் மேல் விழுந்த படி சொல்லுகிறார். 2
உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச் சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே
பதவுரை Show / Hide
உவந்த உள்ளத்தன் ஆய், Uvandha Ullathaan Aay - மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு
உலகம் அளந்து, Ulakam Alanthu - மூவுலகங்களையும் அளந்து
அண்டம் உற, Andam Ur - அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி
நிவந்த, Nivandha - உயர்த்தியை அடைந்த
நீள் முடியன், Neel Mudian - பெரிய திருமுடியை யுடையவனாய்
அன்று, Andru - முற்காலத்தில்
நேர்ந்த, Neerndha - எதிர்த்து வந்த
நிசரசரரை, Nisarasararai - ராக்ஷஸர்களை
கவர்ந்த, Kavarntha - உயிர் வாங்கின
வெம் கணை, Vem Ganai - கொடிய அம்புகளை யுடைய
காகுத்தன், Kaakuthan - இராம பிரானாய்
கடி ஆர், Kadi Ar - மணம் மிக்க
பொழில், Pol - சோலைகளை யுடைய
அரங்கத்து, Arangathu - ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான
அம்மான், Ammaan - எம்பிரானுடைய
அரை, Arai - திருவரையில் (சாத்திய)
சிவந்த ஆடையின் மேல், sivandha Aadiyin Mel - பீதாம்பரத்தின் மேல்
என சிந்தனை சென்றது, Ena Sindhanai Sendradhu - என்னுடைய நினைவானது ஆம் பதிந்ததாம்
929அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — திருப் பீதாம்பரத்தின் அழகு திரு நாபீ கமலத்திலே வீசிற்று. 3
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் அந்தி போல் நிறத் தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி மேல தன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே
பதவுரை Show / Hide
மந்தி, Mandhi - குரங்குகளானவை
பாய், Pai - (ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப் பெற்ற
வடவேங்கடம் மா மலை, Vadavengadam Ma Malai - வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே
வானவர்கள், Vaanavarkal - நித்ய ஸூரிகள்
சந்தி செய்ய நின்றான், Sandhi Seyya Nindraan - பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய்
அரங்கத்து, Arangathu - கோயிலிலே
அரவு இன் அணையான், Aravu in Anaiyaan - திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை யுடையனான அழகிய மணவாளனுடைய
அந்தி போல் நிறத்து ஆடையும், Andhi pol nirathu aadiyum - செவ் வானம் போன்ற நிறத்தையுடைய திருப் பீதாம்பரமும்
அதன் மேல், Adhan mel - அப் பீதாம்பரத்தின் மேலே
அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ, Ayanaai padaithadhu oru ezhil undhimeladhu andro - பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகை யுடைய திருநாபிக் கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ
அடியேன் உள்ளத்து இன் உயிரே, Adiyen ullathu in uyire - என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்ம ஸ்வரூபம்.
930அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்- 4
சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன் மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே
பதவுரை Show / Hide
சதுரம், Sadhuram - நாற்சதுரமாய்
மா, Maa - உயர்ந்திருக்கிற
மதிள்சூழ், Mathilsoozh - மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு, Ilangaikku - லங்கா நகரத்திற்கு
இறைவன், Iraivan - நாதனான இராவணனை
ஓட்டி, Ootti - (முதல் நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து (மறுநாட்போரில்)
தலை பத்து, Thalai Pathu - (அவனது) தலைபத்தும்
உதிர, Udhira - (பனங்காய்போல்) உதிரும்படி
ஓர், Or - ஒப்பற்ற
வெம் கணை, Vem Ganai - கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன், Uyththavan - ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன், Otham Vannan - கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும்
வண்டு, Vantu - வண்டுகளானவை
மதுரமா, Madhurama - மதுரமாக
பாட, Paada - இசைபாட(அதற்குத் தகுதியாக)
மா மயில் ஆடு, Maa Mayil Aadu - சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான், Arangathu Ammaan - திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதர பந்தம், Thiru Vayiru Udara Bandham - திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று, En Ullathul Nindru - என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது, Ulaaginradhu - உலாவுகின்றது
953பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமந்திரத்தின் அர்த்தத்தை ஒருபடி அநு ஸந்திப்பதாயிருக்கும் இப்பாட்டு. மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண என்று ஸுபாலோபநிஷத்திலே சொன்ன அர்த்தத்தை அநுஸந்திக்கிறார். எனக்குப் பல உபகாரங்கள் பண்ணினவனும், எனக்குத் தந்தையும், எனக்கு எல்லா உறவுமுறையும், விரோதிகளைப் போக்கி என்னை ஆண்டவனும், என்னுடைய ஜீவித ஸர்வஸ்வமும், ஸங்கல்பத்தாலல்லாமல் சரமாரி பொழிந்து ராக்ஷஸவர்க்கங்களைக் கிழங்கெடுத்தவனுமான ஸர்வஸ்வாமி எழுந்தருளியிருக்கிற பரமபோக்யமான தஞ்சைமாமணிக்கோயிலைத் தொழுது ‘ஸர்வவித பந் துவும் அவனே” என்கிற அர்த்தத்துக்கு வாசகமான திருநாமத்தைக் காணப் பெற்றேன் என்றாராயிற்று.) 6
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள் அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த வெம் மண்ணல் வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6
பதவுரை Show / Hide
நம்பிகாள், Nambikaal - பகவத் குணாநுபவத்தால் நிறைந்திருக்கின்ற பாகவதர்களே!
எம்பிரான், Embiraan - எமக்கு உபகாரகனும்
எந்தை, Enthai - எமக்குத் தந்தையும்
என்னுடைய சுற்றம், Ennudaiya sutram - எனக்கு ஸகலவித பந்துவும்
எனக்கு அரசு, Enakku arasu - என்னை ஆண்டவனும்
என்னுடைய வாழ்நாள், Ennudaiya vaazhnaal - என்னுடைய ப்ராண பூதனும்
அரக்கர் வெருக்கொள அம்பினால், Arakkar verukkola ambinaal - ராக்ஷஸர் அஞ்சும்படியாக அம்புகளினால்
நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல், Nerukki avar uyir sekutha em annal - தகர்த்து அவர்களது உயிரைமுடித்த அஸ்மத்ஸ்வாமியுமான ஸர்வேச்ரனுடைய
வம்பு உலாம் சோலை, Vambu ulaam solai - பரிமளம் வீசுகின்ற சோலைகளையும்
மாமதிள், Maamadhil - பெரிய மதிள்களையும் உடைத்தான
தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி, Thanjai maa manikkoyile vanangi - தஞ்சை மாமணிக் கோயிலையே ஸேவித்து
நான் உய்ய, Naan uyya - (உங்களைப் போலே) நானும் உஜ்ஜீவிக்கும் படியாக
நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன், Narayana enum naamam kandu konden - நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன்
958பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாலியை வதை செய்தருளின பெருமான் இனிதாக எழுந்தருளியிருக்குமிடமான இமயமலையினுள் பரம போக்யமாக அமைந்துள்ள திருப்பிரிதியைச் சென்று சேருமாறு நெஞ்சை நோக்கிக் கூறுகின்றார்.) 1
வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள் ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி பீலி மா மயில் நடம் செய்யும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-1
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
அன்று, Anru - ஸ்ரீராமாவதாரத்தில், சுக்ரீவன் சரணம் புகுந்தவன்று
வாலி, Vaali - வாலி என்னும் பெயரையுடையவனாய்
மா, Maa - மிக்க
வலம், Valam - பலம் பொருந்திய
ஒருவனது, Oruvanathu - ஒப்பற்றவனுடைய
உடல், Udal - சரீரம்
கெட, Keda - சிதறும்படி
வரி, Vari - அழகிய
சிலை, Silai - சார்ங்கம் (வில்)
வளைவித்து, Valaivithu - சரங்கள் பாயும் படி வளைத்து, (இன்று)
ஏலம், Elam - பரிமளம், வாசனை
நாறு, Naaru - வீசுகின்ற
தண், Than - குளிர்ந்து
தடம், Thadam - பரந்த
பொழில், Pozhil - தோட்டங்களிலே
இடம்பெற இருந்த, Idampera irundha - விசாலமாக ஸர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கிற
நல் இமயத்துள், Nal Imayathul - விலக்ஷனமான இமாச்சலத்திலே
ஆலி மா முகில், Aali maa mugil - சிறு துளிகள் தெரிக்கிற பெரிய மேகங்கள்
அதிர்தர, Athirthara - அதிர முழங்கிக்கொண்டு
பீலி மா மயில், Peeli maa mayil - கணமான தோகையுடைய பெரிய மயில்களானவை
அருவரை, Aruvarai - தாவி ஏற வலிதான மலைகளிலே
அகடு உற, Agadu ura - கீழ் வயிறு தழுவும்படியாக
முகடு ஏறி, Mugadu eri - அவற்றின் சிகரங்களிலே ஏறி
நடம் செய்யும், Nadam seiyum - ஆடா நிற்பதாய்
தடம் சுனை, Thadam sunai - பரந்த சுனைகளுடைய
பிருதி, Pirudhi - திருப்பிருதி என்கிற திவ்யதேசத்தை
சென்று அடை , Sendru adai - சென்று சேர்ந்திடு
959பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸுக்ரீவ மஹாராஜருடைய துயரைத் தொலைத்த விருத்தாந்தத்தைக் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார். அந்த ஸுக்ரீவனுடைய படைத் துணையால் இராமபிரான் தன் துயரைத் தொலைத்துக் கொண்ட விருத்தாந்தத்தை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.) 2
கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி இலங்கை மா நகர் பொடி செய்தவடிகள் தாம் இருந்த நல்லிமயத்து விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூர பிலம் கொள் வாள் எயிற்று அரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே –1-2-2
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
மா கடல், Maa kadal - மஹா ஸமுத்தரமானது
கலக்க, Kalakka - கலங்கும்படி
அரி குலம் பணி செய்ய, Ari kulam pani seiya - வானர ஸமூஹம் கைங்கரியம் பண்ண
அரு வரை, Aru varai - அசைக்க முடியாத பெரிய மலைகளைக் கொண்டு
அணை கட்டி, Anai katti - ஸேது கட்டி
மா இலங்கை நகர், Maa Ilangai nagar - பெரிய லங்காபுரியை
பொடி செய்த, Podi seitha - பொடிபடுத்திய
அடிகள் தாம், Adigal thaam - ஸர்வஸ்வாமி
இருந்த, Irundha - எழுந்தருளியிருக்கப்பெற்ற
நல் இமயத்து, Nal Imayathu - நல்ல ஹிமவானில்
விலங்கல் போல்வன விறல், Vilangal polvana viral - மலை போன்றவையாய் மிருக்கையுடையவையாய்
இரு சினத்தன, Iru sinathana - மிக்க கோபத்தை யுடையவையான
வேழங்கள், Vezhangal - யானைகள்
துயர்கூர, Thuyarkoora - துன்பப்படும்படியாக
பிலம் கொள், Bilam kol - குகைகளை இருப்பிடமாகக் கொண்டிருக்கிற
வாள் எயிறு, Vaal eyiru - வாள் போன்ற பற்களையுடைய
அரி அவை, Ari avai - சிங்கங்களானவை
திரிதரு, Thiritharu - திரியுமிடமாகிய
பிரிதி, Pirithi - திருப்பிரிதியை
சென்றுஅடை, Sendru adai - சென்று சேர்ந்திடு
962பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவதாரங்களுக்கு அடியாகத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறபடியை அநுஸந்தித்துப் பேசுகிறார் இதில்.) 5
கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-5
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
கனை கழல் தொழுது ஏத்த, Kanai kazhal thozhuthu etha - (ஆபரணங்கள் பூண்டதனால்) ஒலிசெய்கின்ற திருவடிகளை
அமரர்கள், Amarargal - தேவர்கள்
தொழுது ஏத்த, Thozhuthu etha - ஸேவித்துத் துதிக்கும்படியாக
கரை செய் மா கடல் கிடந்தவன், Karai sei maa kadal kidanthavan - தனக்குத்தானே கரை செய்து கொண்டிருக்கிற பெரிய கடலிலே (க்ஷீரஸாகரத்தில்) பள்ளி கொண்ட பெருமான்
அரை செய் மேகலை அலர் மகளவளொடும் அமர்ந்த, Arai sei megalai alar magalavalodum amarndha - திருவரையிலே சாந்தப்பட்ட மேகலையை யுடையளான பெரிய பிராட்டியோடு கூட எழுந்தருளியிருக்கப்பெற்ற
நல் இமயத்து, Nal imayathu - நல்ல இமயமலையின் கண்
வரைசெய் மா களிறு, Varaisei maa kaliru - மலைபோற் பெரிய ஆண் யானைகளானவை
இள வெதிர், Ila vethir - இளமூங்கிலைகளுடைய
வளர் மூளை, Valar moolai - ஓங்கி வளர்ந்த முளைகளை(பிடுங்கி)
அளை மிகு தேன் தோய்த்து, Alai migu then thoiththu - முழைஞ்சுகளிலே மிகுதியாகவுள்ள தேனிலே தோய்த்து
பிரசம் வாரி, Pirasam vaari - (அந்த) தேன்வெள்ளத்தை
தன் இள பிடிக்கு, Than ila pidikku - தனது இளையபேடைக்கு
அருள் செயும், Arul seiyum - கொடுக்குமிடமான
பிரிதி, Pridhi - திருப்பரிதியை
சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக
968பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முற்றமுத்து.) சரீரத்துக்கு எவ்வளவு கிழத்தனம் வரக்கூடுமோ அவ்வள வும் வந்து, நடந்து செல்லமாட்டாமல் ஒரு கோலைக் கையிலே அவலம்ப மாகப் பிடித்துக்கொண்டு முதுகு கூனிட்டுப் போகவே முன்னடியை நோக்கி வளைந்து, முறிந்துபோன காலைக்கொண்டு நடக்கமுடியாதது போல ஓரடி யும் எடுத்து வைக்கமாட்டாமல் தடுமாறி, தடி பிடித்துக்கொண்டும் நடக்க மாட்டாமல் திடீரென்று தரையிலே விழுந்திருந்துகொண்டு பெருமூச்சு விட்டு இப்படியாக ச்ரமப்படுகிற காலம் வந்துவிட்டால் பதரிகாச்ர மயாத்ரையை நெஞ்சால் நினைக்கவும் முடியாதே; ஆகையால் அப்படிப்பட்ட கெட்ட நிலைமை வருவதற்கு முன்னே ஸ்ரீபதரியைச் சென்று வணங்குவோம் வாருங்க ளென்று அன்பர்களை அழைக்கிறார் போலும். 1
முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1
பதவுரை Show / Hide
முற்ற மூத்து, Mutra Moothu - பூர்த்தியாகக் கிழத்தனமடைந்து
கோல் துணை ஆ, Kol Thunai Aa - ஊன்றுகோலை ஸஹாயமாகக் கொண்டு கூன் முதுகிட்டு
முன் அடி நோக்கி வளைந்து, Mun Adi Nookki Valaindhu - முன்காலைக் கவிழ்ந்து நோக்குமாபோலே
இற்ற கால்போல் தள்ளி, Itra Kaalpol Thalli - முறிந்த கால்போலே தடுமாறி
மெள்ள இருந்து, Mella Irundhu - மஹாப்ரயாஸத்தோடே உட்கார்ந்து
இளையா முன், Ilaiyaa Mun - இவ்விதமாகக் கஷ்டங்களையடைவதற்கு முன்னே,
பெற்ற தாய்போல் வந்த, Petra Thaaypol Vanda - பெற்ற தாயான யசோதையின் வடிவுகொண்டு (தன்னைக் கொல்ல) வந்த
பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய
பெரு முலை ஊடு, Peru Mulai Oodu - பெரிய முலையின் வழியாக
உயிரை, Uyirai - அவளது உயிரை
வற்ற வாங்கி உண்டவாயன், Vattu Vaangi Undavayan - நிச்சேஷமாக உறிஞ்சி உண்ட திருப்பவளத்தை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்.
969பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) [முதுகுபற்றி.)கிழத்தனத்தில் நாலடி நடந்தாலும் பலஹீனத் தால் முதுகு நோகும்; ஒருகையாலே முதுகைப்பிடித்துக்கொள்ள வேண்டிய தாகும் ; முன் பக்கமாக வளைந்து விழாமைக்காக ஒரு தடியை ஊன்றிக்கொள்ள வேண்டியதாகும்; 2
முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி இது வென்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசாமுன் மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2
பதவுரை Show / Hide
கை தலத்தால், Kai Thalathaal - ஒரு கையாலே
முதுகு பற்றி, Mudhugu Patri - முதுகைப் பிடித்துக்கொண்டும்
முன் ஒரு கோல் ஊன்றி, Mun Oru Kol Oonri - (மற்றொருகையாலே) முன்னே ஒரு கொம்பை ஊன்றிக் கொண்டும்
விதிர்விதிர்த்து, Vithirvithirthu - (உடல்) நடுங்கியும்
கண் சுழன்று, Kan Suzhndru - (லொக்குலொக்கென்ற) பெரிய த்வநியைக்கொண்டு இருமியும்
இளையவர், Ilaiyavar - இளம்பெண்கள் (மோவாய்த் கட்டையில் கையை வைத்துக்கொண்டு)
அப்பர் மூத்த ஆறு இது என் என்று ஏசா முன், Appar Mootha Aaru Ithu En Endru Aesa Mun - “இந்தப் பெரியவர் கிழத்தன மடைந்த விது என்ன விசித்திரம்!” என்று சொல்லிப் பரிஹஸிப்பதற்கு முன்னே,
மது உண் வண்டு, Madhu Un Vandu - பூவில் தேனைப் பருகுகின்ற வண்டுகள்
பண்கள் பாடும், Pangkal Paadum - இசை பாடப்பெற்ற
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்
974பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உலகில் விசித்திரமானதொன்றைப் பார்க்கும்போ தும் விகாரமானதொன்றை பார்க்கும்போதும் கண்கூசி அப்பப்ப! என்று மெய் சிலிர்த்துக் கூறுவது வழக்கம். கிழவர்கள் தண்டுகாலாவூன்றியூன்றித் தள்ளி நடந்துகொண்டு, தாம் நெடுநாள் பழகின மின்னிடை மடவார் வீதியேறச் சென்றவாறே அளவு கடந்த கிழத் தன விகாரங்களைக்கண்டு அந்த மாதர்கள் ‘அப்பப்ப!’ என்று தங்களுக்குள்ளே அதிசயித்து, ‘உலகில் எல்லாரும் கிழத் தனமடைவதுண்டு; இதென்னடோயப்பா! ‘இப்படிப்பட்ட கிழத்தனம் எங்குங் கண்டதில்லை. மிகவும் பொல்லாத கிழத்தனமாயிருக்கின்றதே இது;’ என்று சொல்லிச் சிரிப்பர்கள் ; அவ்வளவோடு நில்லாமல் அண்டைவீட்டுக் காரிகளை யழைத்து ‘உங்கள் எஜமானர் வந்திருக்கிற அழகைப்பாருங்கள் ‘ என்று காட்டியும் சிரிப்பர்கள் ; அப்படிப்பட்ட பரிஹாஸங்களுக்கு ஆளாவ தற்கு முன்னே வதரி வணங்குதல் நன்று.) 7
பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத் திரளை ஒப்ப ஐக்கள் போத வுந்த உந்தமர் காண்மின் என்று செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம் வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே –1-3-7
பதவுரை Show / Hide
சீத் திரளை ஒப்ப, Seeth Thiralai Oppa - சீயின் திரட்சிபோல
ஐக்கள், Aikkal - கோழையானது
போத உந்த, Podha Unda - மிகவும் அதிகரிக்க, (அந்த நிலைமையைக் கண்டு)
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம், Seppu Ner Men Kongai Nallaar Thaam - செப்புப் போன்ற மெல்லிய முலைகளையுடைய மங்கைமார்கள்
பப்ப அப்பர்மூத்த ஆறு பாழ்ப்பது, Pappa Apparumootha Aaru Paazhppadhu - “அப்பப்ப! இந்த சாமியார் கிழத்தன மடைந்த விதம் மிகவும் பொல்லாது” (என்று தங்களில் சொல்லிக்கொண்டும்)
உம் தமர் காண்மின் என்று, Um Thamar Kaanmin Endru - “அடீ!உங்களோடு உறவுள்ள ஐயங்காரைப் பாருங்கள்” என்று(அயற்பெண்களோடே ஏளனமாகச் சொல்லியும்)
சிரியாத முன்னம், Siriyaadha Munnam - சிரிப்பதற்கு முன்னமே-,
நங்கள் வைப்பும் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதும், Nangal Vaippum Vaalvum Aanaan Vadhari Vanangudhum - நமக்கு நிதி போன்றவனும் நம்மை வாழ்விப்பவனுமான எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம்.
978பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீதேவி பூதேவிகட்காக அரிய பெரிய காரியஞ்செய்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்குமிடம் ஸ்ரீபதரிகாச்ரமம் என்கிறார்.) 1
ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன் தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1
பதவுரை Show / Hide
முன் அன்று, Mun Anru - முன்னொரு காலத்தில்
இணை அடி, Inai Adi - (தனது) உபய பாதங்களைத்
இமையவர் வணங்க, Imaiyavar Vananga - தேவர்கள் வந்து வணங்குமாறு
ஏனம் ஆகி, Enam Aagi - மஹாவராஹரூபியாகி
இரு நிலம் இடந்து, Iru Nilam Idanthu - விசாலமான பூ மண்டலத்தைக் கோட்டு நுனியாற் குத்தி யெடுத்தவனாயும்,
தானவன் ஆகம், Thanavan Aagam - இராவணணுடைய சரீரமானது
தரணியில் புரள, Tharaniyil Purala - பூமியிலே (செத்துப்) புரளும்படி
தடசிலை குனித்த, Thadasilai Kunitha - பெரிய வில்லை வளைத்தவனாயுமிருக்கிற
என் தலைவன், En Thalaivan - அஸ்மத் ஸ்வாமி
வானவர், Vaanavar - தேவர்கள்,
தேன் அமர் சோலை கற்பகம் பயந்த, Then Amar Solai Karppagam Payantha - தேன் நிறைந்த நந்தனவனத் திலேயுள்ள கல்ப வ்ருக்ஷங்கள் கொடுத்த
தெய்வம் நல் நறு மலர், Deivam Nal Naru Malar - திவ்யமாய் நல்ல மணம் மிக்க பூக்களை
கொணர்ந்து, Konarnthu - கொண்டு வந்து ஸமர்ப்பித்து
வணங்கும், Vanangum - வணங்குமிடமாய்
கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரையிலுள்ள தான
வதரி ஆச்சிரமத்து, Vadhari Aachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.——
980பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருவரால் அழிக்க வொண்ணாத லங்கா புரியும் அதற்கும் அகழாகி ரக்ஷகமாயிருந்த தெற்கு ஸமுத்ரமும், இராவணனும், அவனுக்குத் துணையாயிருந்த ராக்ஷஸஜாதியடங்கலும் நாசமடையும்படி தனது கொடுமையான பராக்கிரமத்தைச் செலுத்திக் காரியஞ்செய்த ராஜாதி ராஜன் எழுந்தருளியிருக்குமிடம் வதரியாச்சிரமம்.) 3
இலங்கையும் கடலும் அடலருந்திப் பின் இரு நிதிக் கிறைவனும் அரக்கர் குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும்  சுடர் சுழன்ற விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி யென விரிந்து வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-3
பதவுரை Show / Hide
முன், Mun - ஸ்ரீராமாவதாரத்தில்
இலங்கையும், Ilankaiyum - லங்காபுரியென்ன
கடலும், Kadalum - (அதற்கு அகழான) தெற்கு ஸமுத்ரமென்ன
அடல் அருதுப்பின் இரு நிதிக்கு இறைவனும், Adal Aruthuppin Iru Nidhikku Iraivanum - ஒருவராலும் வெல்ல முடியாத பலத்தையுடையனாய்ப் பெரிய நிதிகளுக்கு ஸ்வாமியான ராவணனென்ன
அரக்கர் குலங்களும் கெட, Arakkar Kulangalum Keda - ராக்ஷஸஜாதியென்ன ஆகிய இவையெல்லாம் ஒழியும்படியாக
கொடுதொழில் புரிந்த கொற்றவன், Koduthozhil Purindha Kotravan - கடுமையான காரியங்களைச் செய்தருளின மஹாப்ரபு (எவ்விடத்திலுள்ளா னென்றால்)
கொழு சுடர் சுழன்ற விலங்கவில் உரிஞ்சி, Kozhu Sudar Suzhandra Vilangavil Urinji - ஸூர்யன் சுழன்று வரப்பெற்ற (மேரு) மலை வரைக்கும் சென்று முட்டி
மேல் நின்ற விசும்பில், Mel Nindra Visumbil - மேலேயிருக்கிற ஆகாசத்திலே
வெண் கொடி துகில் என விரிந்து, Ven Kodi Thugil Ena Virinthu - வெளுத்த த்வஜபடமென்ன லாம்படி பரந்து
வலந்தரும், Valantharum - (வேகத்தாலே) மிடுக்கையுடையதும்
மணி நீர், Mani Neer - அழகிய தீர்த்தத்தை யுடையதுமான
கங்கையின், Gangaiyin - கங்கைநதியினுடைய
கரை மேல், Karai Mel - கரையின்மேலுள்ள
வதரியாச்சிராமத்து, Vathariyachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.
982பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப்பாட்டில் “ அணிமலர்க்குழலாராம் பையர் துகிலும் ஆரமும் வாரிவந்து ” என்ற சொற்போக்கில் கண்ணபிரானுடைய திருவிளையாடல் ஆழ்வார்க்கு நினைவுக்கு வாவே, மற்றொரு க்ருஷ்ண சேஷ் டித்த்தை ஸ்மரித்துப்பேசுகிறார் இதில்) 5
பேய் இடைக்கிருந்து வந்த மற்றவள் பெரு முலை சுவைத்திட பெற்ற தாய் இடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த வென் தலைவன் சேய் முகட்டுச்சி யண்டமும் சுமந்த செம் பொன் செய் விலங்கலில் இலங்கு வாய் முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-5
பதவுரை Show / Hide
வந்த, Vandha - (யசோதையின் வேஷங்கொண்டு)வந்தவளான
பேய், Pei - பூதனையினுடைய
இடைக்கு இருந்து, Idaikku Irundhu - இடுப்பிலேயிருந்துகொண்டு
அவள்தன், Avalthan - அப்பேய்மகளுடைய
பெரு முலை, Peru Mulai - பெரிய முலையை
சுவைத்திட, Suvaiththida - ருசிபார்த்து உண்ண
பெற்ற தாய், Petra Thaai - (அதைக்கண்ட) யசோதையானவள்
இடைக்கு இருத்தல்அஞ்சுவன் என்று தளர்ந்திட, Idaikku Iruththal Anjuvan Endru Thalarndhida - (‘நான் இனி இவனை) இடுப்பிலே எடுத்துக் கொள்ள அஞ்சுகிறேன்’ என்று சொல்லிக் கூசும்படியாக
வளர்ந்த, Valarntha - வளர்ந்தவனான
எம் தலைவன், Em Thalaivan - அஸ்மத் ஸ்வாமி
சேய் முகடு உச்சி, Seyy Mugadu Uchi - உயர்ந்த கொடுமுடியின் உச்சியிலே
அண்டம் சுமந்த, Andam Sumandha - அண்டத்தைச் சுமக்கிற
செம் பொன் செய்விலங்கலில், Sem Pon Seyvilangalil - மேரு பர்வதத்திலே
இலங்கு, Ilangu - விளங்குகின்ற
வாய்முகடு, Vaay Mugadu - விசாலமான சிகரத்தில் நின்றும்
முன் இழிந்த, Mun Izhintha - ப்ரவஹிக்கின்ற
கங்கையின், Gangaiyin - கங்கைநதியினுடைய
கரை மேல், Karai Mel - கரைமீதுள்ள
வதரியாச்சிராமத்து, Vathariyachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.
985பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மாரீசனாகிற மாயமான் மேலே அம்பு எய்து அதனை முடித்தவனும், பரமபக்தனான ப்ரஹ்லாதனுக்குக் கொடுமையியற்றி மஹாத்ரோஹியான ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்தொழித்தவனும், பிரமனால் சிவனுக்கு நேர்ந்த ப்ரஹ்மஹத்திசாபத்தைத் தொலைத்தருளினவனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.) 8
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன் ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத் தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-8
பதவுரை Show / Hide
ஒருகால், Orukal - (பஞ்சவடியில் எழுந்தருளியிருந்த) ஒரு ஸமயத்தில்
மான் முனிந்து, Maan Muninthu - மாரிசமாயமானின் மேற் சீறி
வரி சிலை வளைத்த மன்னவன், Vari Silai Valaitha Mannavan - அழகிய வில்லை (அந்த மான் மேலே) வளைத்தெறிந்த செருக்கனாயும்
பொன் நிறத்து உரவோன், Pon Nirathu Uravon - பொன்போன்ற நிறத்தையுடைய ஹிரண்யனென்னுமொரு பலிஷ்டனுடைய
ஊன் முனிந்து, Oon Muninthu - உடலை ஒழித்து விடுவதாகச் சீற்றங்கொண்டு
அவனது உடல் இரு பிளவு ஆ, Avanathu Udal Iru Pilavu Aa - அவ்வசுரனுடைய சரீரம் இரண்டு பிளவாம்படி
உகிர் நுதி மடுத்து, Ukir Nuthi Maduthu - நகங்களின் நுனியை (அவ்வுடலில்) அழுத்தினவனாயும்,
அயன் தான் அரனை முனிந்து, Ayan Thaan Aranai Muninthu - நான்முகக் கடவுள் சிவன் மேல் சீறி
இட்ட, Itta - (அவனுக்குக்) கொடுத்த
வெம் திறல் சாபம் தவிர்த்தவன், Vem Thiral Saapam Thavirnthavan - மிகவும் க்ரூரமான சாபத்தைப் போக்கினவனாயுமுள்ள எம் பெருமான் (எங்குள்ளானெனில்;)
தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த, Thavam Purinthu Uyarndha Maa Muni Konarntha - தபஸ்விகளில் தலைவரான பகீரதர் கொண்டுவந்த
கங்கையின் கரைமேல், Gangaiyin Karameel - கங்கையின் கரைமீதுள்ள
வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலுளன்.
988பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கலையுங்கரியும்.) நெஞ்சே! நீ ஸ்ரீஸாளக்ராமமென்னும் திவ்ய தேசத்தை அடைந்திடு. 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் –1-5-1
பதவுரை Show / Hide
கலையும் கரியும் பரிமாவும், Kalaiyum Kariyum Parimavum - மான்களும் யானைகளும் குதிரைகளுமாகிய மிருகங்கள்
திரியும் கானம் கடந்துபோய், Thiriyum Kaanam Kadandupoy - திரியுமிடமான காட்டைத் தாண்டிச்சென்று
சிலையும் கணையும் துணை ஆக, Silaiyum Kanaiyum Thunai Aaga - வில்லும் அம்பும் துணையாகக்கொண்டு
வென்றி செருகளத்து சென்றான், Vendri Serugalathu Senraan - (தனக்கு) வெற்றியை விளைக்கவல்ல போர்க்களத்திலே எழுந்தருளினவனும்,
அலை நீர், Alai Neer - அலைக்கின்ற நீரையுடைய கடலிலே
மலை கொண்டு, Malai Kondu - மலைகளாலே
அணை கட்டி, Anai Katti - ஸேது கட்டி
மதிள் நீர் இலங்கை, Mathil Neer Ilangai - மதிலையும் ஸமுத்ரத்தையும் காப்பாக உடைத்தான இலங்கையிலுள்ள
வாள் அரக்கர் தலைவன், Vaal Arakkar Thalaivan - வாளை ஆயதமாகக் கொண்ட இராவணனுடைய
பத்து தலை, Paththu Thalai - பத்துத்தலைகளையும்
அறுத்து உகந்தான், Aruththu Ugandhaan - அறுத்துத்தள்ளி (ஆச்ரித விரோதி தொலைந்தானென்று) திருவுள்ள முகந்தவனுமான எம்பெருமானுடைய திவ்ய தேசமாகிய
சாளக்கிராமம், Saalakkiraamam - ஸ்ரீஸாளக்ராமத்தை
நெஞ்சே அடை, Nenjee Adai - மனமே!, சென்று சேர்.
989பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சே! சாளக்கிராமத்தைச் சென்று சேர்; அத்திவ்யதேசம் யாருடையது? —) 2
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான் இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-2
பதவுரை Show / Hide
கடம் சூழ் கரியும், Kadham Soozh Kariyum - மதஜலத்தையுடைய யானைகளும்
பரிமாவும், Parimavum - குதிரைகளும்
ஒலி மா தேரும், Oli Maa Therum - ஒலியையுடைய மஹாரதங்களும்
காலாளும், Kaalalum - காலாட்களும்
உடன் சூழ்ந்து, Udan Soozhndhu - ஒன்றாகத் திரண்டு
எழுந்த, Ezhundha - கிளர்ந்து தோற்றின
கடி இலங்கை, Kadi Ilangai - அரணையுடைத்தான லங்கை
பொடி ஆ, Podi Aa - பொடிபடும்படியாக,
வடி வாய், Vadi Vaai - கூர்மையான வாயையுடைய
சரம், Charam - அம்புகளை
துரந்தான், Durandhaan - பிரயோகித்தவனான இராமபிரான் (எழுந்தருளியிருக்குமிடமான)
இரு விசும்பில் இமையோர், Iru Visumbil Imaiyoor - விசாலமான ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்கள்
இடம் எங்கும் சூழ்ந்துவணங்க, Idam Engum Soozhnthuvanang - பூமியெங்கும் வந்துபரவி ஆச்ரயிக்கத்தக்கதாய்
மணம் கமழும் தடம் சூழ்ந்து, Manam Kamazhum Thadam Soozhndhu - புஷ்பவாஸனைகள் வீசுகின்ற தடாகங்களாலே சூழப்பட்டு
எங்கும் அழகுஆய, Engum Azhagu Aa - எல்லாப்பக்கங்களிலும் அழகையுடைத்தாயிருக்கிற
990பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும், பிண்டமாய்விரிந்த பிறங்கொளியனலும் பெருகிய புனலொடு நிலனும், கொண்டல் மாருதமும் குரைகடலேழும் ஏழுமாமலைகளும் விசும்பும், அண்டமுந்தானாய் நின்ற வெம்பெருமான் -(பெரிய திருமொழி 5-7-1) என்னுமா போலே ஜகத்ஸ்வரூபியாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார் ஒன்றரையடிக ளால்.) 3
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும் நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே –1-5-3
பதவுரை Show / Hide
உலவு திரையும், Ulavuthiraiyum - உலாவுகின்ற அலைகளையுடைய கடலும்
குலம் வரையும், Kulam Varaiyum - குலபர்வதங்களும்
ஊழி முதலா எண்திக்கும், Oozhi Muthalaa Enthikkum - காலம் முதலாகவுள்ள ஸகலபதார் த்தங்களும் எட்டுத்திசைகளும்
நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான், Nilavum Sudarum Irulum Aay Nindraan - சந்திரனும் ஸூர்யனும் இருட்டும் ஆகிய இப்பொருள்களுக்கெல்லாம் அந்தர்யாமியாயிருப்பவனும்
வென்றி விறல், Vendri Viral - வெற்றியையும் மிடுக்கையுமுடைய
ஆழி வலவன், Aazhi Valavan - திருவாழியை வலத் திருக்கையிலே யுடையவனும்
வானோர் தம் பெருமான், Vaanoor Tham Perumaan - தேவாதிதேவனும்
மருவா அரக்கர்க்கு, Maruvaa Arakkarkku - (தன்னை) ஆச்ரயியாத ராக்ஷஸர்கள் விஷயத்தில்
எஞ்ஞான்றும் சலவன், Enjnjaanrum Salavan - எப்போதும் நன்மை செய்யாதவனுமாகிய எம்பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமாய்)
சலம் சூழ்ந்து அழகு ஆய, Salam Soozhndhu Azhagu Aay - நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான
991பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (‘ஊரகம்’ என்கிற சொல் ஊர் என்று விகாரப்பட்டதாகக்கொண்டு ஊரகமென்கிற திவ்ய தேசத்தைத் தனக்கு இருப்பிடமாகவுடையவன் என்று பொருளுரைப்பது ஒருவழி.) 4
ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-4
பதவுரை Show / Hide
ஊரான், Ooraan - திருவூரகமென்னும் திவ்யதேசத்தை இருப்பிடமாகவுடையவனும்
குடைந்தை உத்தமன், Kudaindhai Uththaman - திருக்குடைந்தையிலே எழுந்தருளியிருக்கிற புருஷோத்தமனும்,
ஒருகால், Orukaal - முன்னொரு காலத்தில்
சிலை இருகால் வளையதேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான், Silai Irukaal Valaiyathera Arakkar Ther Vellam Setraan - வில்லினுடைய இரண்டு நுனிகளையும் வளைத்து அவிவேகிகளான ராக்ஷஸர்களுடைய சேனைத் தொகையைச் சிதைத்தவனும்
வற்றா வருபுனல் சூழ் பேரான், Vatraa Varupunal Soozh Peraan - ஒருநாளும் வற்றாமல் மேன்மேலும் பெருகி வருகின்ற காவிரிநீர் சூழ்ந்த திருப்பேர்நகரில் கண்வளர்ந்தருள்பவனும்
பேர்ஆயிரம் உடையான், Peraayiram Udaiyaan - ஸஹஸ்ரநாமங்களை யுடையவனும்
பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான், Pirangu Sirai Vandu Araikindra Thaaran - நெருங்கி யிருக்கிற சிறகுகளை யுடைய வண்டுகள் ஆரவாரிக்கின்ற (திருத்துழாய்) மாலையையுடை யவனுமான எம்பெருமான்
தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம், Tharaa Vayal Soozhntha Saalakkiraamam - தாரா என்னும் நீர்ப்பறவைகள் நிறைந்திருக்கிற வயல்களாலே சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்தை
992பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அடுத்தார்த்தெழுந்தாளவள். பிலவாய் விட்டலற அவள் மூக்கை அயில் வாளால் விடுத்தான் என்று! சூர்ப்பணகையின் மூக்கறுத்தமை சொல்லுகிறது.) 5
அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால் விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன் கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத் தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-5
பதவுரை Show / Hide
அடுத்து ஆர்த்து எழுந்தாள், Aduthu Aarthu Ezhundhaal - மேல் விழுந்து வந்துகிட்டி ஆரவாரஞ்செய்து கிளர்ந்தவளான சூர்ப்பணகை.
பிலம் வாய் விட்டு அலற, Pilaam Vaai Vittu Alara - பிலம்போன்ற வாயைத்திறந்து கொண்டு கதறும்படியாக
அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான், Aval Mookku Ayil Vaalal Viduththaan - அவளுடைய மூக்கை கூர்மையான வாளாலே (இளையவனைக் கொண்டு) அறுத்தவனும்
விளங்கு சுடர் ஆழி, Vilangu Sudar Aazhi - பிரகாசிக்கின்ற ஒளியையுடைய திருவாழியையுடையவனும்
விண்னோர் பெருமான், Vinnor Perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை நண்ணார்முன் இனம் நிரைக்காகல் ஒன்று ஏந்திதடுத்தான், Kaduthu Aarthu Ezhundha Peru Mazhaiyai Nannaarmun Inam Niraikkaakal Ondru Aendhidaththaan - வேகத்துடன் ஆரவாரஞ்செய்துகொண்டு கிளர்ந்து வந்த  கனத்த மழையை எதிரிகளான இந்திராதிகளின் கண்ணெதிரில் பசுக்கூட்டங்களை ரக்ஷிப்பதற்காக, (கோவர்த்தனமென்கிற) ஒரு மலையை ஏந்தித்தடுத்தவனுமான எம்பெருமான்(எழுந்தருளியிருக்கிற)
தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம், Thadam Soozhndhu Azhagaaya Saalakkiraamam - தடாகங்களால் சூழப்பெற்று அழகாயிருக்கிற ஸாளக்ராமத்தை
995பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெந்தாரென்பும்.) சிவபிரானுடைய ஆபரணங்களையும் அலங் காரங்களையும் பேசுகிறார். 8
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில் தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-8
பதவுரை Show / Hide
வெந்தார் என்பும், Venthaar Enbum - செத்து வெந்துபோன ப்ரேதங்களின் எலும்புகளையும்
சுடு நீறும், Sudu Neerum - சுட்ட சாம்பலையும்
மெய்யில் பூசி, Meiyyil Poosi - சரீரத்தில் தரித்துக்கொண்டு
சந்து ஆர் ஓர் தலைகையகத்து கொண்டு, Sandhu Aar Oor Thalaikayakththu Kondu - சந்துகள் நிறைந்த ஒரு மண்டையோட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு
உலகு ஏழும் திரியும், Ulagu Ezhum Thiriyum - எல்லாவுலகங்களிலும் திரிந்தவனான
பெரியோன் தான், Periyoon Thaan - பரமசிவன்
சென்று, Senru - கிட்டவந்து
என் எந்தாய் சாபம் தீர் என்ன, En Endhai Saapam Theer Enna - ‘என் ஸ்வாமீ!, (எனக்கு நேர்ந்திருக்கிற) சாபத்தை நீக்கியருள வேணும்’  என்று பிரார்த்திக்க,
திருமார்பில் இலங்கு அமுதம் நீர் தந்தான், Thirumaarbil Ilangu Amudham Neer Thandhaan - தனது திருமார்பில் விளங்குகின்ற அம்ருத ஜலத்தை  அளித்தவனான எம்பெருமான்
சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம், Sandhu Aar Pozhil Soozhntha Saalakkiraamam - சந்தனமரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஸாளக்ராமத்தை
998பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (ஸ்ரீ நைமிசாரண்யத் தெம்பெருமான் திருவடிகளிலே பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புகுகிறார் இத்திருமொழியில். பகவானிடத்தில் சரணாகதி செய்யுமிடத்து அவனுடைய மேன்மைகளையும் தன்னுடைய தாழ்வுகளையும் வெளியிட்டுக்கொண்டே செய்ய வேணுமென்று விதியிருப்பதாலும், ஆர்த்தியின் கனத்தாலே தம்முடைய தோஷங்களெல்லாம் நினைவுக்கு வந்தே தீருமாகையாலும், இவ்வாழ்வார் தாமும் தம்முடைய குற்றங்குறைகளை யெல்லாம் விரிவாகப் பேசிக்கொண்டு சரணாகதி பண்ணுகிறார்.) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) 1
வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான், ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்! –1-6-1
பதவுரை Show / Hide
நைமிசாரணியத்துள் எந்தாய், Naimisaaraniyaththul Endhaai - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமீ!,
பேதையேன், Paethaiyen - அறிவு கெட்டவனான அடியேன்,
வாள் நிலா முறவல், Vaal Nila Muraval - ஒளி பொருந்திய புண் சிரிப்பையும்
சிறு நுதல், Siru Nuthal - சிறிய நெற்றியையும்
பெரு தோள், Peru Thol - பெரிய தோளையும் உடையரான
மாதரார், Maatharaar - பெண்களினுடைய
வனம் முலையே, Vanam Mulaiye - அழகிய முலைகளையே
பயன், Payan - பரம புருஷார்த்தமாக
பேணினேன், Paeninaen - (நெடுநாள் வரை) ஆதரித்திருந்தேன்;
அதனை, Adhanai - அப்படி ஆதரித்திருந்த நிலைமையை
பிழை என கருதி, Pizhai Ena Karuthi - தப்பென்று நினைத்து
பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன், Piravi Noi Aruppaan Aen Ileen Irundhen - ஸம்ஸாரமாகிற வியாதியை அறுத்துக்கொள்ள எண்ண மில்லாதவனாகவே இருந்திட்டேன்;
எண்ணினேன், Enninaen - ஸ்வரூபத்தை ஆராயத்தொடங்கினேன்;
எண்ணி, Enni - ஆராயவே,
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன், Ilaiyavar Kalaviyin Thiraththai Naaninaen - விசயாந்தர போகங்களைக் காறியுமிழ்ந்தேன்;
வந்து உன் திரு அடி அடைந்தேன், Vandhu Un Thiru Adi Adaindhen - இன்று உன் திருவடிகளை வந்து பணிந்தேன்.
1013பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சீற்றத்தாலே அக்நிஜ்வாலைபோலே ஜ்வலிக்கிற சிவந்த கண்ணையும் ஒளிவிடாநின்ற பெரிய வாயையும் கோரப்பற்களையும் கண்டு “அப்பப்ப! இதென்ன உரு!” என்று பயப்பட்டு தேவர்கள் அங்கு மிங்கும் கால் தடுமாறிச் சிதறி ஓடும்படியாக நரசிங்கவுருக்கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.) 6
எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம் நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே –1-7-6
பதவுரை Show / Hide
எரிந்த, Erintha - (சீற்றத்தாலே) ஜ்வலிக்கின்ற
பை கண், Pai Kan - பசுமைதங்கிய கண்களோடும்
இலங்கு பேழ்வாய் எயிற்றொடு, Ilangu Pezhvai Eiyir Thodu - விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடியிருக்கிற
இது, Idhu - இந்த நரசிங்கத் திருக்கோலமானது
எவ்வுரு என்று, Evuru Endru - என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி
வானோர், Vaanor - தேவர்கள்
இரிந்து கலங்கி ஓட, Irinthu Kalangi Oda - அங்குமிங்கும் சிதறிக் கால் தடுமாறி ஓடும்படியாக
இருந்த, Irundha - எழுந்தருளியிருந்த
அம்மானது இடம், Ammaanathu Idam - ஸர்வேசரனுடைய இடமாவது:-
உழுவை, Uzhuvai - புலிகளானவை
நெரிந்த வேயின் முழையுள் நின்று, Nerindha Veyin Muzhaiyul Nindru - நெருக்கமான மூங்கிற் புதர்களினின்றும்
நீள் நெறி வாய், Neel Nerai Vaai - பெரிய வழியிலே (வந்து)
திரிந்த ஆனை சுவடு பார்க்கும், Thirindha Aanai Suvadu Paarkkum - காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தைஆராய்ந்து பார்க்குமிடமான
1038பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மிகப் பெரிய கடலையே அகழாகவுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய சரீரம் இருபிளவாகப் பிளவுறும்படியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே! என்று ஸ்ரீராமபிரானாக விளிக்கின்றார் திருவேங்கடமுடையானை;) 1
கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய் விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய அண்ணா வடியேன் இடரைக் களையாயே –1-10-1
பதவுரை Show / Hide
கண் ஆர் கடல் சூழ், Kan Aar Kadal Soozh - விசாலமான கடலாலே சூழப்பட்ட
இலங்ககைக்கு இறைவன் தன், Ilankakaikku Iraivan Than - லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய
திண்ஆகம் பிளக்க, Thinagham Pilakka - திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக
சரம், Saram - அம்புகளை
செல உய்த்தாய், Sela Uyththai - செலுத்தினவனே!
விண்ணோர் தொழும், Vinnor Thozhum - (பிரமன் முதலிய) தேவர்கள் வந்து ஸேவிக்கப் பெற்ற
வேங்கடம் மாமலை, Vengadam Mamalai - திருமலையிலே
மேய அண்ணா, Meya Annan - எழுந்தருளி யிருக்கிற பெருமானே!
அடியேன் இடரை களையாய், Adiyen Idarai Kalaiyai - என் துன்பங்களை நீக்கியருள வேணும்.
1039பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புற்றானது என்றைக்கும் துஷ்ட ஸர்ப்பங்கள் மாறாதே உறையுமிடமாக இருப்பதுபோல இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததாதலால் அவர்களையும் தொலைத்தபடி சொல்லுகிறது இப்பாட்டில்.) 2
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய் விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே –1-10-2
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற்காலத்தில்
இலங்கை பதிக்கு, Ilankai Pathikku - லங்காபுரிக்கு
இறை ஆய, Irai Aaya - அரசர்களாயிருந்த
அரக்கரவர், Arakkaravar - (மாலிமுதலிய) ராக்ஷஸர்கள்
குலம்கெட்டு மாள, Kulamkettu Maala - கும்பலோடே சிதறியோடி முடியும்படியாக
கொடி, Kodi - (தனக்கு) த்வஜமான
புள், Pul - பெரிய திருவடியை
திரித்தாய், Thiriththai - ஸஞ்சரிப்பித்தவனே!,
விலங்கல் குடுமி, Vilankal Kudumi - (மேலே ஸஞ்சரீக்கிற சந்திர ஸூர்யர்கள்) விலங்கிப் போகவேண்டும்படியான (உயர்த்திபொருந்திய) சிகரத்தையுடைய
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையிலே
மேய, Meya - மேவியிருப்பவனாய்
துளபம், Thulabam - திருத்துழாயினாலாகிய
அலங்கல், Alangal - மாலையை
முடியாய், Mudiyaai - திருமுடியிலே அணிந்துள்ளவனே!
அருளாய், Arulai - (அடியேன் மீது) க்ருபை பண்ணியருள வேணும்.
1040பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மற்ற பேர்களை ரக்ஷிக்க நான் சக்தனாயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரக்ஷித்தல் எனக்கு எளிதன்றே; இஃது அருமையான காரியமாயிற்றே!’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக;) 3
நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய் சீரார் திருவேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே –1-10-3
பதவுரை Show / Hide
நீர் ஆர் கடலும், Neer Aar Kadhalum - நீர் நிரம்பியிருக்கிற கடலையும்
நிலனும், Nilanum - பூமியையும்
முழுது, Muzhuthu - மற்றுமுள்ள எல்லாவற்றையும் (பிரளயம் கொள்ளாதபடி)
உண்டு, Undu - அமுது செய்து
ஏர், Aer - அழகியதும்
இள, Ila - இளையதுமான
ஆலந்தளிர் மேல், Aalanthazhirk Mel - ஆலந்தளிரின் மேலே
துயில், Thuyil - திருக்கண்வளர்ந்தருளின
எந்தாய், Endhai - ஸ்வாமியே!,
சீர் ஆர், Seer Aar - சிறப்புப் பொருந்திய
திருவேங்கடம் மா மலை மேய, Thiruveengadam Maa Malai Maeya - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற
ஆரா அமுதே, Aaraa Amudhe - ஆராவமுதமான எம்பெருமானே!
அடியேற்கு அருளாய், Adiyeerkku Arulai - அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.
1058பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச – இவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர், நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான், வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-1
பதவுரை Show / Hide
காசை ஆடை, Kaasai Aadai - காஷாய வஸ்த்ரத்தினால்
மூடி, Moodi - உடம்பை மறைத்துக்கொண்டு
ஓடி, Oodi - (பஞ்சவடிக்கு) ஓடிவந்து
காதல் செய்தானவன், Kaadhal Seithaanavan - (பிராட்டியிடத்தில்) ஆசை கொண்டவனான இராவணனுடைய
ஊர், Oor - ஊராகிய இலங்கையானது
நாசம் ஆக நம்ப வல்ல, Naasam Aaga Namba Valla - நாசமாகும்படி ஸங்கல்பித்த
நம்பி, Nambi - பரிபூர்ண சக்தியையுடையவனும்
நம்பெருமான், Namberumaan - நமக்கு ஸ்வாமியும்
வேயின் அன்னதோள் மடவார், Veiyin Annathol Madavaar - மூங்கிலோடு ஒத்த தோள்களையுடைய இடைச்சியர்
இவன் வெண்ணெய் உண்டான் என்று ஏச நின்ற எம்பெருமான, Ivan Vennai Undaan Endru Aesa Nindra Emperumaan - ‘இவன் வெண்ணெய் திருடி உண்டவன்’ என்று சொல்லிப்பரிஹஸிக்கும்படி நின்றவனுமான எம்பெருமான்
எவ்வுள் கிடந்தான், Evval Kidanthaan - திருவெவ்வுளூரில் திருக்கண் வளர்ந்தருளா நின்றான்.
1059பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரியட்டும் ஸ்ரீ ராமாவதாரம் அனுவர்த்தித்த படி –-அவன் வந்து -சாய்ந்தான்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன், பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள, எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-2
பதவுரை Show / Hide
தையலாள்மேல், Thaiyalalmael - அழகிற் சிறந்த பிராட்டி விஷயத்திலே (- (எவ்வுள் கிடந்தானே-.))
காதல்செய்த, Kaadhalseitha - காமம் கொண்ட
தானவன், Thaanavan - ஆஸூரப்ருக்ருதியாய்
வாள், Vaal - வாளாயுதத்தை யுடையவனான
அரக்கன், Arakkan - இராவணனுடைய
பொய் இலாத பொன் முடிகள், Poi Iladha Pon Mudigal - மெய்யான பொன்முடிகள்
ஒன்பதோடு ஒன்றும், Onpathodu Ondrum - பத்தையும்
அன்று அங்கு செய்த வெம்போர் தன்னில், Andru Angu Seitha Vembor Thannil - முன்பு ராமாவதாரத்திலே கடற்கரையில் செய்த கோரமான யுத்தத்திலே
ஓர் செம் சரத்தால் உருள எய்த எந்தை எம் பெருமான், Oru Sem Sarathaal Urula Eytha Endhai Em Perumaan - ஒப்பற்ற சிவந்த பாணத்தினாலே  உருட்டின எம் பெருமான்
1060பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே – இது புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று- பூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம் என்று சாய்ந்தான் ஆயிற்று –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து,அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார், இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே. –2-2-3
பதவுரை Show / Hide
முன், Mun - ஸ்ரீராமாவதாரத்திலே (- (எவ்வுள்  கிடந்தான்-.))
வானரத்தின் வாயில், Vaanaraththin Vaayil - சிறிய திருவடி மூலமாக
ஓர் தூது மொழிந்து, Oru Thoodhu Mozhinthu - (பிராட்டிக்குத்) தூது சொல்லியனுப்பி (பிறகு)
அரக்கன், Arakkan - இராவணனுடைய
மன் ஊர்தன்னை, Man Oorthannai - சிறந்த லங்காபுரியை
வாளியினால், Vaalaiyin Aal - ஓர் அம்பினாலே
மாள முனிந்து, Maala Muninthu - மாண்டுபோகும்படி சீறிமுடித்து,
பின், Pin - பின் பொருகாலத்தில்
ஆதி மன்னர்க்கு, Aadhi Mannarkku - ராஜாதிராஜர்களான பாண்டவர்களுக்கு
ஓர் தூது ஆகி, Oru Thoodhu Aagi - விலக்ஷணனான தூதனாய்,
பெரு நிலத்தார் இன்னார் தூதன்  என நின்றானவனே, Peru Nilaththaar Innar Thoodhan En Nindraanavaney - பெரிய இப்பூமியிலுள்ளாரெல்லாரும் இவன் இன்னாருடைய தூதன் என்று சொல்ல அதனால் நிலைபெற்று நின்ற அப்பெருமான்
1074பெரிய திருமொழி || (2-3–விற்பெருவிழவும்) (திருவல்லிக்கேணி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் – இலக்குமனோடு மைதிலியும் தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தி- கண்டு அனுபவித்தார்களோடு –கேட்டார் வாய் கேட்டாரோடு வாசியற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று – அவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை திருவல்லிக்கேணிக் கண்டேனே—என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
பரதனும் தம்பி சத்துருக் கனன்னும் இலக்கும னோடுமை திலியும் இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந் தகனையெம் மானை, குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு குயிலொடு மயில்கள்நின் றால, இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. –2-3-7
பதவுரை Show / Hide
பரதனும், Barathanum - பரதாழ்வானும்
தம்பி சத்துருக்கனனும், Thambi Sathurukkananum - அவனது தம்பியான சத்ருக்நாழ்வானும்
இலக்குமனோடு, Ilakkumanodu - லக்ஷ்மணணும்
மைதிலியும், Maithiliyium - ஸீதாபிராட்டியும்
இரவும் நன்பகலும் துதி செய்ய நின்ற, Iravum Nanpakalum Thudi Seyya Nindra - இடைவிடாது தோத்திரம் பண்ணும்படியாக எழுந்தருளியிருக்கிற
இராவண அந்தகனை எம்மானை, Iravana Andhakanai Emmaanai - ராவண ஸம்ஹாரியான பெருமானை,
குரவமே கமழும் குளிர் பொழிலூடு, Kuravame Kamazhum Kulir Pozhiloodu - குரவமலர்களே பரிமளிக்கின்ற குளிர்ந்த சோலைகளிலே
குயிலொடு மயில்கள் நின்று ஆல, Kuyilodu Mayilgal Nindru Aala - குயில்களும் மயில்களும் ஆரவாரிக்க,
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா, Iraviyin Kathirgal Nuzhaithal Seythu Ariya - ஸூர்ய கிரணங்கள் உள்ளே நுழைந்தறியாத (எப்போதும் நிழல் செய்திருக்கிற)
திரு அல்லிக்கேணி, Thiru Allikeni - திருவல்லிக்கேணியிலே
கண்டேன், Kandein - ஸேவிக்கப்பெற்றேன்.
1082பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவண வதம் பண்ணின அநந்தரம் திருமேனியில் பிறந்த பௌஷ் கல்யம் இருக்கிறபடி – நீலமானது அமர்ந்து இருக்கிற முகில் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன் – அவ் வடிவு அழகாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனுக்கு –மா மலையாவது நீர் மலையே – என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
மாலுங்கட லாரம லைக்குவடிட் அணைகட்டி வரம்புருவமதிசேர் கோலமதி ளாயவி லங்கைகெடப் படைதொட்டொரு காலம ரிலதிர, காலமிது வென்றயன் வாளியினால் கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும், நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-5
பதவுரை Show / Hide
ஒரு கால், Oru Kaal - முன்னொருகாலத்திலே (- (அவ்வளவிலும் இராவணன் சளைக்காமல்) (இடம் மாமலை ஆவது நீர்மலையே-))
மாலும் கடல் ஆர, Maalum Kadal Aara - பெரிய கடல் நிறையும்படி
மலை குவடு இட்டு, Malai Kuvalu Ittu - மலைக் கொடுமுடிகளைக் கொண்டு போட்டு
வரம்பு உருவ, Varambu Uruva - அக்கரையிலே சென்று சேரும்படி
அணை கட்டி, Anai Katti - ஸேது கட்டி,
மதி சேர், Madi Ser - சந்திரன் வரையில் ஓங்கியிருக்கிற
கோலம் மதிளாய, Kolam Madilay - அழகிய மதில்களையுடைத்தான
இலங்கை, Ilankai - லங்காபுரியானது
கெட, Keda - அழியும்படியாக
படை தொட்டு, Padai Thottu - ஆயதங்களைச் செலுத்தி
அமரில் அதிர, Amaril Athira - போர்க்களத்தில் நின்று குமுறின வளவிலே
இதுகாலம் என்று, Idhukalam Endru - இவனை முடிப்பதற்கு இதுவே தக்க ஸமயமென்று கொண்டு
அயன் வாளியினால், Ayan Valiyinal - ப்ரஹ்மாஸ்த்ரத்தாலே
கதிர் நீள் முடி பத்தும் அறுத்து, Kathir Neel Mudi Pathum Aruthu - (கிரீடங்களால்) ஒளிபெற்ற நீண்ட பத்துத் தலைகளையும் அறுத்து
அமரும், Amarum - அயோத்திமாநகரில் பிராட்டியும் தானுமாக வந்து சேர்ந்த
நீலம் முகில் வண்ணன், Neelam Mukil Vannan - காளமேக நிறத்தனான
எமக்கு இறைவற்கு, Emakku Iraivarku - எம்பெருமானுக்கு
1087பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் – அதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் – அன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்–என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல் நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில் கடமாகளி யானைவல்லான் கலியன் ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு, உடனே விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும் எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர், கொடுமாகடல் வையக மாண்டுமதிக் குடைமன்னவ ராயடி கூடுவரே. –2-4-10
பதவுரை Show / Hide
நெடு மால் அவன் மேவிய, Nedu Maal Aavan Meviyai - ஸர்வேச்வரன் நித்யவாஸம் செய்தருளப்பெற்ற (- (ஆல்-அசை.) (பின்பு))
நீர்மலை மேல், Neermalai Mel - திருநீர்மலை விஷயமாக,
நிலவும் புகழ், Nilavum Pugazh - நித்யமான புகழையடையரும்
மங்கையர்கோன், Mangaiyarkon - திருமங்கைநாட்டி லுள்ளார்க்குத் தலைவரும்
அமரில், Amaril - போர்க்களத்திலே
கடம் மா களி யானை வல்லான், Kadham Maa Kali Yaanai Vallaaan - மதத்தாலே மிகவும் களித்த யானையை நடத்தவல்லவருமான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலிசெய், Olisei - அருளிச்செய்த
தமிழ் மாலை, Tamizh Maalai - இத்தமிழ்த்தொடையை
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு
வினை, Vinai - (உள்ள) பாவங்கள்
உடனே, Udane - அப்போதே
விடும், Vidum - அகன்றொழியும்;
வேண்டிடில், Vendidil - அபேக்ஷை யுண்டாகில்
மேல் உலகும், Mel Ulakum - சுவர்க்கம் முதலிய மேலுலகங்களின் அநுபவமும்
எளிது ஆயிடும், Ezhithu Aayidum - ஸூலபமாகும்;
அன்றி, Andri - அதுவுமல்லாமல்,
இலங்கு ஒலி சேர் கொடு மா கடல் வையகம், Ilangu Oli Ser Kodu Maa Kadal Vaiyagam - விளங்காநின்ற கோஷத்தையுடைய வளைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமியை
மதி குடை மன்னவர் ஆய்  ஆண்டு, Mathi Kudai Mannavar Aay Aandu - சந்திரனை யொத்த வெண் கொற்றக்குடையை யுடைய ராஜாக்களாய் அரசாண்டு
அடி கூடுவர், Adi Kooduvar - அவனது திருவடிகளைக் கிட்டப் பெறுவர்கள்.
1092பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை- அந்த க்ருத்ரிமத்தைத் தப்பி என்னை எழுதிக் கொண்டவனை காணப் பெற்றேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப் பாலகனா யாலிலையில் பள்ளியின்பம் ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை, தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப் பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-5
பதவுரை Show / Hide
திரி சகடம், Thiri Sakadam - உருளுகிற சகடமானது (- (கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன்-.))
பாறி, Paari - சின்னபின்னமாகச் சிதறி
வீழ, Veela - விழும்படி
பாய்ந்தானை, Paayndhaanai - திருவடியாலுதைத்தவனும்
பாலகன் ஆய், Paalagan Aay - சிறுபிள்ளையாய்
ஆல் இலையில், Aal Ilaiyil - ஆலந்தளிரிலே
பள்ளி இன்பம் ஏய்ந்தானை, Palli Inbam Aeyndhaanai - திருக்கண்வளர்தலாகிற ஸுகத்தை அநுபவித்தவனும்
இலங்கு ஒளி சேர், Ilangu Oli Seer - மிக்க ஒளியை யுடைத்தான
மணி குன்று அன்ன, Mani Kunru Anna - ரத்னமயமான பர்வதம் போன்றவனும்
மால் வரை, Maal Varai - பெரிய மலைபோன்ற
ஈர் இரண்டு தோள் எம்மான் தன்னை, Eer Irandu Thol Emmaan Thannai - நான்கு திருத்தோள்களையுடைய ஸ்வாமியானவனும்
நிலம் மகள் தோள் தோய்ந்தானை, Nilam Magal Thol Thoyndhaanai - பூமிப்பிராட்டியின் தோளோடே அணைந்தவனும்
தூதின் சென்று, Thoodhin Sendru - (பாண்டவர்களுக்குத்) தூது செய்யுந் தொழிலுடனே (துரியோதனனிடம்) எழுந்தருளி
பொய் அவ் அறை வாய்புக பெய்த, Poi Av Arrai Vaaypuka Peytha - (அத்துரியோதனன்) க்ருத்ரிமமாகச் செய்துவைத்த அந்த நிலவறையி  னுள்ளே நிறுத்தப்பட்டிருந்த
மல்லர், Mallaar - மல்லர்கள்
மங்க, Manga - முடியும்படி
காய்ந்தானை, Kaayndhaanai - சீற்றங்காண்டவனுமான
எம்மானை, Emmaanai - எம்பெருமானை
1094பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய் செவ்வியாருக்கு தான் செவ்வியனாய் பரிமாறும்படியும் துஷ்டர்க்குத் தானும் அப்படி இருக்கும் படியும் காண வேணும் என்று தட்டித் திரிகிற நான் பசித்தவன் ஜீவிக்கப் பெற்ரார் போலே காணப் பெற்றேன் – சாஸ்தரங்களிலே கேட்டு-ஒரு தேச விசேஷத்தால் சென்றால் காண இருக்கை அன்றிக்கே விடாய்த்த இந்நிலத்திலே காணப் பெற்றேன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
பேணாத வலியரக்கர் மெலியவன்று பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை, பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப் பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை, காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே. –2-5-7
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்னொரு காலத்தில், (- (அவ்வரக்கர்களுடைய) (இன்று) (கடி பொழில் சூழ் கடன்மல்லைத்தலசயனத்தே கண்டுகொண்டேன்-.))
பேணாத, Penaadha - (தன்னை ஸர்வேச்வரனாக) மதியாத
வலி அரக்கர், Vali Arakkar - மிடுக்கையுடைய ராக்ஷர்கள்
மெலிய, Meliya - ஒழியும்படி
பெரு வரை தோள் இற நெரித்து, Peru Varai Thol Ir Neriththu - பெரிய மலைபோன்ற தோள்கள் முறியும்படி அழித்தவனும்,
அன்று, Andru - பிரஹ்லாதன் துன்பப்பட்ட அக்காலத்து
அவுணர் கோனை, Avunaar Konai - அசுரர் தலைவனான இரணியனுடைய
பூண் ஆகம் பிளவு எடுத்த, Poon Aagam Pilavu Edutha - ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மார்வைப் பிளந்தொழிந்தவனும்
போர் வல்லோனை, Por Vallonai - யுத்தத்தில்; ஸமர்த்வனானவலனும்
பொரு கடலுள் துயில் அமர்ந்த, Poru Kadalul Thuyil Amarntha - அலை யெறிகின்ற திருப்பாற் கடலிலே திருக்கண்  வளர்ந்தருள்பவனும்
புள் ஊர்தியை, Pul Oorthiyai - கருடப் பறவையை வாஹனமாக வுடையவனும்
பேய் முலை நஞ்சு, Pei Mulai Nanju - பூதனையின் முலையில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக உண்டான் தன்னை, Oon Aaga Undaan Thannai - உணவாகக் கொண்டு அமுது செய்தவனும்
உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை, Ulluvaar Ullaththae Uraikindraanai - தன்னைச் சிந்திப்பவர்களின் நெஞ்சிலே நித்யவாஸம் செய்பவனுமான எம்பெருமானை
காணாது திரி தருவேன், Kaanadhu Thiri Tharuven - (வெகு காலமாக) ஸேவியாமல் அலைந்து கொண்டிருந்த அடியேன்
1095பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து சாய்ந்து அருளுவதே – இது என்ன நீர்மை -என்று எப்போதும் எண்ணப் படுமவன் படபாமுகாக்னி நிறைந்தால் போலே காண வேணும் என்று உறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய உறாவுதல் தீர காணப் பெற்றேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை, தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி, என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-8
பதவுரை Show / Hide
பெண் ஆகி, Pen Aagi - மோஹினி யுருவமெடுத்து (- (கடி பொழில் சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே கண் ஆரக் கண்டுகொண்டேன்-.))
இன் அமுதம் வஞ்சித்தானை, In Amudham Vanchiththaanai - இனிய அமிருத்தை (அசுரர்கள் புஜிக்கவொண்ணாதபடி) வஞ்சித்தவனும்
அன்று, Andru - முன்பொரு காலத்தில்
பிறை எயிறு, Pirai Eiyiru - சந்திரனை யொத்த பற்களையுடைய
அடல் அரிஆய், Adal Ariyaai - பலசாலியான நரஸிம்ஹமுர்த்தியாய்
பெருகினானை,, Peruginanai - வளர்ந்தவனும்,
தண் ஆர்ந்த வார் புனல் சூழ், Than Aarntha Vaar Punal Soozh - குளிர்த்தி பொருந்திப் பெருகுகின்ற ஜலத்தாலே சூழப்பட்ட
மெய்யம் என்னும், Meiyyam Ennum - திருமெய்யமென்கிற
தடவரைமேல், Thadavarai Mel - பெரிய திருமலையின்மீது
பணங்கள் மேவி கிடந்தானை, Panangal Mevi Kidandhaanai - (திருவனந்தாழ்வானுடைய) படங்களின் கீழே பொருந்திப் பள்ளி கொண்டிருப்பவனும்
எண்ணானை, Ennaanai - (யோகிகளால்) சிந்திக்கப்படுமவனும்
எண் இறந்த புகழினானை, En Irandha Pugazhinaanai - கணக்கில்லாத கீர்த்திகளையுடையவனும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை, Ilangu Oli Ser Aravindham Poonru Neenda Kannaanai - மிக்க ஒளியையுடைய தாமரையிதழ்போலே நீண்ட திருக்கண்களையுடையவனுமான எம்பெருமானை
1096பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான வழியைக் கண்டு வைத்தவனை – அப்பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே இக் கண்ணாலே காணப் பெற்றேன் – என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
தொண்டாயர் தாம்பரவு மடியினானைப் படிகடந்த தாளாளற் காளாயுய்தல் விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு, பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும் கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-9
பதவுரை Show / Hide
தொண்டு ஆயார் தாம், Thondu Aayaar Thaam - அடிமைப்பட்டவர்கள் (- (கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன்.))
பரவும், Paravum - துதிக்கப்பெற்ற
அடியினானை, Adiyinanae - திருவடிகளை யுடையவனும்,
படி கடந்த தாள் ஆளற்கு ஆள் ஆய் உய்தல் விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை, Padi Kadanda Thaal Aalarku Aal Aayi Uythal Vintaanai Then Ilangai Arakkar Vendai - பூமியை யளந்த திருவடிகளை யுடையனான தனக்கு ஆட்பட்டு உஜ்ஜீவிப்பது தவிர்ந்தவனான இராவணனை
விலங்கு உண்ண, Vilangu Unna - மிருகங்கள் தின்னும்படி
வலம் கைவாய், Valam Kaivai - வலத்திருக்கையாலே
சரங்கள் ஆண்டு, Sarangkal Aandu - அம்புகளைப்பிரயோகித்தவனும்,
பண்டு ஆய, Pandhu Aaya - நித்யமான
நான்கு வேதங்களும், Naanthu Vedhangalum - நாலு வேதங்களையும்
ஐந்து வேள்விகளும், Ainthu Velvikalum - பஞ்சமஹா யஜ்ஞங்களையும்
கேள்வியோடு, Kelviyodu - ஸ்மிருதிகளையும்
அங்கம் ஆறும், Angam Aarum - ஆறு அங்கங்களையும் (பிரவர்த்திப்பித்தவனுமான எம்பெருமானை
தொண்டனேன், Thondanaen - அடியேன்
1101பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியை அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் ஒருவன் அளவன்றிக்கே என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்- இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார் நமக்காக விறே -என்று நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – எங்கள் குல தெய்வமே- குல தைவதம் தத் பாதாராவிந்தம் –என்னும் அளவல்ல எங்களது-என்கிறார் நான்காம் பாசுரத்தில்) 4
விண்டாரை வென்றாவி விலங்குண்ண, மெல்லியலார் கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக் கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை, கொண்டாடும் நெஞ்சுடையா ரவரெங்கள் குலதெய்வமே. –2-6-4
பதவுரை Show / Hide
விண்டாரை, Vindaarai - சத்துருக்களை ராவணாதி ராக்ஷஸர்களை (- (கடல்மல்லைத்  தலசயனத்து உறைவாரை-;))
வென்று, Vendru - தோற்கடித்து
ஆவி விலங்கு உண்ண, Aavi Vilangu Unna - (அவர்களுடைய) உயிரை (நாய் நரி முதலிய) மிருகங்கள் மேல்விழுந்து முடிக்கும் படியாகவும்,
மெல் இயலார் கொண்டாடும் மல் அகலம், Mel Iyalar Kondadum Mal Akalam - மாதர்கள் கொண்டாடப் பெற்றதும் மிடுக்கையுடையதுமான (அவர்களது) மார்வை
அழல் ஏற, Azhala Eera - அக்நி ஆக்ரமித்து புஜிக்கும் படியாகவும்
வெம் சமத்து, Vem Samathu - பயங்கரமான போர்க்களத்திலே
கண்டாரை, Kandaarai - பார்த்துக்கொண்டிருந்த
கொண்டாடும் நெஞ்சுஉடையாரவர், Kondadum Nenjuudaiyaaravar - புகழ்ந்து பேசும்படியான நெஞ்சுபடைத்த பாகவதர்கள்
எங்கள் குலம் தெய்வம், Engal Kulam Deivam - எங்கள் குலத்துக்குத் தெய்வங்களாவர்.
1111பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏழை-கிடையாதது தூர நின்றால் கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள் இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் – இடவெந்தை –உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும் ஒண்சுடர் துயின்றதால் என்னும், ஆழியும் புலம்பும். அன்றிலு முறங்கா தென்றலும் தீயினிற் கொடிதாம், தோழியோ. என்னும் துணைமுலை யரக்கும் சொல்லுமி னென்செய்கேன் என்னும், ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-4
பதவுரை Show / Hide
நாழிகை ஊழியின் பெரிது என்னும், Nazhigai Oozhiyin Peridhu Ennum - ‘ஒரு நாழிகைப் பொழுதானது ஒரு கல்பத்தைக் காட்டிலும் நெடிது என்கிறாள்; (- (இடவெந்தை எந்தை பிரானே-; (இப்பெண்பிள்ளையானவன்).) (என் நினைத்திருந்தாய்!-.))
ஒண் சுடர் துயின்றது என்னும், On Sudar Thuyinrathu Ennum - ‘ஸூர்யன் செத்துப் போய் விட்டான்’ என்கிறாள்;
தோழி, Thozhi - ‘அடீ ஸகியே!’ (என்று தோழியை அழைத்து அவளிடம் என்ன சொல்லுகிறாளென்னில்;)
ஆழியும் புலம்பும், Azhiyum Pulambum - ‘ஸமுத்ரமோ கோஷதட செய்யாநின்றது;
அன்றிலும் உறங்கா, Andrilum Urangaa - அன்றிற்பறவையோ உறங்குகிறதில்லை;
தென்றலும் தீயினில் கொடிது ஆம், Thendralum Theeyinil Kodidhu Aam - தென் திசைக்காற்றோ நெருப்பைவிட தீக்ஷ்ணமாயிருக்கின்றது
ஓ, O - ஐயோ! (என்ன பண்ணுவேன்)
என்னும், Ennum - என்று சொல்லாநின்றாள்;
துணை முலை அரக்கும், Thunai Mulai Arakkum - ‘இரண்டு முலைகளையும் வேரோடே பிடுங்கி யெறிப வள் போலேயிராநின்றாள்
என் செய்கேன் சொல்லுமின் என்னும், En Seigain Sollumin Ennum - ‘இரண்டு முலைகளையும் வேரோடே பிடுங்கி யெறிபவள் போலேயிராநின்றாள்(இப்படிப்பட்ட கஷ்டங்களுக்கு) என்ன   பரிஹாரம் பண்ணுவேன், சொல்லுங்கள்’ என்று (அடிக்கடி) சொல்லாநின்றாள்;
ஏழை, Ezhaik - மிகவும் சாபல்ய முடையளான
என் பொன்னுக்கு, En Ponnukku - எனது பெண்மகள் விஷயத்திலே
1113பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –என்று மோஹிக்கும்- நம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ என்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்- அணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும் இவளுடைய-வை வர்ண்யமும்-அத்யாவச்யமும்-செல்லாமையும்-வடிவு அழகும் பிறப்பும் இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ- இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே ஸ்ரீ திருவிடவெந்தையில் இருப்பு – உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே – உம்முடைய வைவர்ண்யம் தோற்ற ஸ்ரீ திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர் இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
தன்குடிக் கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயி லிலங்கை, வன்குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தைகேட் டின்புறும் மயங்கும், மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி மென்முலை பொன்பயந் திருந்த, என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-6
பதவுரை Show / Hide
தன் குடிக்கு தக்க ஆ, Than Kudikku Thakka Aa - தனது குலமரியாதைக்குத் தகுந்தபடியை (- (இடவெந்தை எந்தை பிரானே!;) (இப்பெண்பிள்ளையானவள்))
ஏதும் நினையாள், Edhum Ninaial - சிறிதும் ஆராய்கின்றிலள்;
தட கடல், Thada Kadal - பெரிய கடலோடும்
நுடங்கு எயில், Nudangu Eiyil - வளைந்த மதிளோடும் கூடின
இலங்கை, Ilankai - இலங்கையிலிருந்த
வல்குடி, Valkudi - வலிய ராக்ஷஸகுலமானது.
மடங்க, Madanga - அழியும்படி
வாள் அமர்தொலைத்த வார்த்தை கேட்டு, Vaal Amartholaittha Vaarthai Kettu - கொடிய போர்க்களத்திலே ஒழித்த செய்தியைக் கேட்டு
இன்புறும், Inpurom - (ஒரு பிராட்டிக்காக இவ்வளவு காரியம் செய்வதே! என்று) ஈடுபடாநின்றாள்;
மயங்கும், Mayangum - (அப்பிராட்டிக்குப்போல நமக்கும் ஒரு காரியம் செய்வதில்லையே! என்று வருந்தி)  மூர்ச்சிக்கின்றாள்;
மின்கொடி மருங்குல் சுருங்க, Minkodi Marungul Surunga - மின்னலும் வஞ்சிக்கொடியும் போன்ற இடையானது நுடங்கும்படி
மென் முலை, Men Mulai - மெல்லிய முலைகளானவை
மேல் நெருங்கி, Mel Nerungi - மார்பின்மேலே (ஒன்றோடொன்று ) நெருக்கமுற்று
பொன் பயந்திருந்த, Pon Payandhirundha - பசலை நிறமுடைத்தாம்படியிருக்கின்ற
என் கொடி இவளுக்கு, En Kodi Ivalukku - எனது இப்பெண்பிள்ளை திறத்திலே
என் நினைந்திருந்தாய், En Ninaindhirundhai - என்ன செய்வதாகத் திருவுள்ளம்?
1115பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம் தசை இருந்த படியாலே ஸ்ரீ திரு நீர் மலையிலே போய் புக்கே விடுவோம் போலே இருந்ததீ யென்று விலக்க நினைக்கிற தாயாரோடு தோழிமாருக்கு சொல்லுமா போலே சொல்லா நின்றாள் – ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில் நீர் நினைத்து இருக்கிறது என்- என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா லென்னுள்ளம் என்னும், புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும், குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி, இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-8
பதவுரை Show / Hide
அலம் கெழு தடகை ஆயன் வாய் ஆம்பற்கு என் உள்ளம் அழியும் என்னும், Alam Kezhu Thadakai Aayan Vaai Aambarku En Ullam Azhiyum Ennum - ‘கலப்பை விளங்குகின்ற பெரிய திருக்கையை யுடையனான கோபால க்ருசணனுடைய திருப்பவளத்தில வைத்து ஊதுகிற இலைச்சூழலோசைக்கு என்னெஞ்சு அழிகின்றது’ என்கிறாள்; (- (இடவெந்தை எந்தை பிரானே!-;) (என் நினைந்திருந்தாய்!-.))
புலம் கெழு, Pulam Kezhu - மநோஹரமான
பொரு நீர், Poru Neer - அலையெறிகின்ற நீர்ப்பெருக்கையுடைய
புட்குழி, Putkuzhi - திருப்புட்புழி விஷயமாக
பாடும், Paadum - பாட்டுகள் பாடாநின்றாள்;
நீர்மலைக்கு போதுமோ என்னும், Neermalaikku Podhumo Ennum - திருநீர்மலைக்குப் போவோமென்கிறாள்;
குலம் கெழு கொல்லி கோமள வல்லி, Kulam Kezhu Kolli Komala Valli - மிகச்சிறந்த கொல்லி மலையிலுள்ள பாவை போன்றவளும்
கொடி இடை, Kodi Idai - வஞ்சிக்கொடிபோன்ற இடையையுடையவளும்
நெடு மழை கண்ணி, Nedu Mazhai Kanni - பெருமழைபோலே நீர்த்தாரைகள் பெருகப்பெற்ற கண்களை  யுடையவளும்
இலங்கு எழில் தோளிக்கு, Ilangu Ezhil Tholikku - விளங்குகின்ற அழகிய தோள்களையுடையவளுமான இப்பெண்பிள்ளை திறத்திலே
1119பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரத்தைப் பார்த்தவாறே சத்ருக்களும் யேத்தும்படியாய் இருந்தது – சீலத்தைப் பார்த்தவாறே அனுகூலர் அடைய யேத்தும்படியாய் இருந்தது – இவரை இன்னார் என்று நிச்சயிக்க போகிறது இல்லையீ கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன் உன்னை இரந்து வந்தவன் நான் பிறர்க்காக இரந்தவன் அல்லேன் எனக்காக இரந்தவன் என்கிறார்- இரண்டாம் பாசுரத்தில்) 2
வெந்திறல் வீரரில் வீரரொப்பார் வேத முரைத்திமை யோர்வணங்கும், செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும் தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன், வந்து குறளரு வாய்நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த, அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-2
பதவுரை Show / Hide
இமையோர், Imaiyor - தேவர்கள் (- (மாவலி நீர் வார்த்து தத்தம் பண்ணினவாறே) (அட்புயகரத்தேன் என்றார்-.))
வேதம் உரைத்து, Vedham Uraithu - வேத வாக்கியங்களைச் சொல்லி
வணங்கும், Vanangum - வணங்க நின்ற
வெம் திறல் வீர்ரில் வீரர் ஒப்பார் இவர், Vem Thiral Veeril Veerar Oppaar Ivar - மிக்க வலிவுகொண்ட வீரர்களிலுங் காட்டில் மஹாவீரரான இராமபிரானைப் போன்றுள்ள இப்பெரியவர்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர்கொல், Sem Tamil Paaduvaar Thaam Vanangum Thevarkol - அழகிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடின முதலாழ்வார்கள் வணங்கப் பெற்ற திருவேங்கடமுடையானோ?
தெரிக்க மாட்டேன், Therikka Maatten - அறிகின்றிலேன்;
மாவலி வேள்வியில், Mavali Velviyil - மஹாபலியின் யாகபூமியிலே
குறள் உரு ஆய் வந்து, Kural Uru Aay Vandhu - வாமநவுருக் கொண்டுவந்து
நிமிர்ந்து, Nimirndhu - திரிவிக்கிரமனாக வளர்ந்து
மண் அளந்த, Man Alandha - பூமியை அளந்துகொண்ட
அந்தணர் போன்ற இவர் ஆர் கொல் என்ன, Andhanar Ponda Ivar Aar Kol Enna - பிரமசாரியைப் போலுமிரா நின்ற இப்பெரியவர் ஆர்? என்ன,
1120பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யுத்த உன்முகமாய் இருக்கிற குவலயாபீடத்தை முடிக்கும்படியாக நிறத்துக்கு பரபாகமான வெண்மையை உடைய கொம்பை பறித்து இருண்ட மேகம் போலே இருக்கிற இவர் ஆர் தான் என்ன மேல் வார்த்தை – கம்ச ப்ரேரிதமான குவலையா பீடத்தை நிரசித்து கம்சன் படைவீட்டில் பெண்கள் பயத்தைப் போக்கின அவ்வளவே அல்ல உன் பயம் தீர்க்கைகாக வந்து நிற்கிறவன் நான் என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
செம்பொ னிலங்கு வலங்கைவாளி திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள், உம்ப ரிருசுட ராழியோடு கேடக மொண்மலர் பற்றியெற்றே, வெம்பு சினத்தடல் வேழம்வீழ வெண்மருப் பொன்று பறித்து,இருண்ட அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-3
பதவுரை Show / Hide
வலம் கை, Valam Kai - வலத்திருக்கைpயலே (- (அட்டபுயகரத்தேன் என்றார்-.) (எற்றே!–; இது என்ன ஆச்சரீயம்!..))
இலங்கு, Ilangu - விளங்குகின்ற
செம் பொன், Sem Pon - பசும்பொன்னாற் செய்யப்பட்ட
வாளி, Vaali - அம்புகளையும்
திண் சிலை, Thin Silai - திண்ணிதான சார்ங்க வில்லையும்
தண்டொடு, Thandodu - கௌமோதகி யென்னும் கதையையும்
சங்கம், Sangam - ஸ்ரீ பாஞ்சஜந்யத்தையும்
ஒள் வாள், Ol Vaal - அழகிய நந்தவகவாளையும்,
உம்பர், Umbar - (ஆயதங்களெல்லா வற்றினும்) மேற்பட்டு
இரு சுடர், Iru Sudar - மிக்க தேஜஸ்ஸையுடைய
ஆழியோடு, Azhiyodu - திருவாழியாழ்வானையும்
கேடகம், Kedagam - கேடயத்தையும்
ஒண் மலர், On Malai - அழகிய புஷ்பத்தையும்
பற்றி, Patri - தரித்துக்கொண்டு,
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ, Vembu Sinathu Adal Vezham Veel - மிக்க கோபத்தையும் மிடுக்கையுமுடைய குவலய பீடமென்னும்  யானை  முடியும் படியாக
வெண் மருப்பு ஒன்று, Ven Maruppu Ondru - (அவ்யானையினுடைய) வெளுத்த ஒரு கொம்பை
பறித்து, Parithu - பிடுங்கிக் கையிலே கொண்டு
இருண்ட அம்புதம் போன்ற இவர் ஆர் கொல் என்ன, Irunda Ambudham Ponda Ivar Ar Kol Enna - காளமேகத்தை ஒத்திருக்கின்ற இவர் யார்? என்று நான் கேட்க
1135பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சக்கரவர்த்தி திருமகனாய் பூசல் என்றால் அஞ்சக் கடவ குரங்குகளைப் படையாகக் கொண்டு நீரிலே ஆழக் கடவ மலையாலே கடலை அடைத்தான் – எனக்கு ஜனகனாய் உபகாரனானவனுக்கு இடம் – அழகிய மாடங்களாலே சூழப் பட்ட அழகிய பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
குடைத்திறல் மன்னவ னாயொருகால் குரங் கைப்படை யா,மலை யால்கடலை அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி, விடைத்திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச்செரு வேல்வலங் கைப்பிடித்த, படைத்திறல் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-8
பதவுரை Show / Hide
ஒரு கால், Oru Kaal - முன்னொரு காலத்தில், (- (அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி–;) (பல்லவர் கோன்–;) (பணிந்த–;) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.))
குடை திறல் மன்னவன் ஆய், Kudai Thiral Mannavan Aayi - வெண் கொற்றக்குடையையும் பெரு மிடுக்கையுமுடைய சக்ரவர்த்தி திருமகனாய் (அவதரித்து)
குரங்கை, Kurangai - வாநர வீரர்களை
படையா, Padaiya - ஸேனையாகக்கொண்டு
மலையால், Malaiyaal - மலைகளினால்
கடலை, Kadalai - தெற்கு ஸமுத்ரத்தை
அடைத்தவன், Adaiththavan - அணைகட்டி யடைத்தவனான
எந்தை பிரானது, Endai Piraanathu - எம்பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடமாவது,
நென் மெலியில், Nen Meliyil - நென்மெலி யென்னும் நகரத்தில்
விடை திறல், Vidai Thiral - காளையின் வலிவுபோன்ற வலிவையுடையனான
வில்லவன், Villavan - வில்லவனென்கிற அரசன்
வெருவ, Veruva - அஞ்சி நடுங்கும்படி
செரு வேல், Seru Vel - யுத்தத்திற்குக் கருவியான வேற்படையை
வலம் கை பிடித்த, Valam Kai Piditha - வலக்கையிலே பிடித்தவனும்
படை திறல், Padai Thiral - ஆயதங்களை ஆளத்தக்க மிடுக்கை யுடையனுமான
1142பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணனோடு கூட அழியச் செய்த ஸ்வாமி தன்னை-உடையவன் இறே ஷேத்ரத்தில் களை பிடுங்குவார்- ராவண வத அனந்தரத்தில் அத்யயன அனுயாகங்கள் மாறாதாப் போலே யாயிற்று அவன் பட்ட பின்பு ஸ்ரீ திருக் கோவலூரும் – சோலையிலே புக்கு அணைந்த தென்றலானது அந்நீர் நிலத்திலே திவலைகளையும் சோலையில் பரிமளத்தையும் கொண்டு வந்து இவ்வோ இடங்களில் அத்யயனம் பண்ணுபவர்கள் உடைய ஸ்ரமம் ஆறும்படி சிசிரோ உபசாரம் பண்ணும் ஆயிற்று என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள், பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம் பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை, மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும் மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத, சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-5
பதவுரை Show / Hide
கறை வளர், Karai Valar - (ரத்த மாம்ஸங்களின்) கறை ஏறிக்கிடக்கிற (- (திருக்கோவலூரதனுள்–;) (நான் கண்டேன்–.))
வேல், Vel - வேற்படையையுடைய
கரன் முதலா, Karan Muthala - கரன் முதலாக
கவந்தன் வாலி, Kavandan Vaali - கபந்தவனும் வாலியும்
கணை ஒன்றினால் மடிய, Kanai Ondrinhaal Madiya - ஓர்அம்பாலே முடியும்படி (செய்தவனும்)
இலங்கை தன்னுள், Ilankai Thannul - லங்காபுரியிலே
பிறை எயிறு வாள் அரக்கரி, Pirai Eiyiru Vaal Arakkari - பிறைபோன்ற கோரப்பற்களையும் வாள்களையுமுடைய
சேனை எல்லாம், Sennai Ellam - அரக்கரிகளின் சேனைகளையெல்லாம்
பெரு தகையோடு உடன், Peru Thagaiyodu Udan - அவர்களது தலைவனான இராவணனோடு கூடவே
துணித்த, Thuniththa - தொலைத்தொழித்த
பெம்மான் தன்னை, Pemmaan Thannai - பெருமானை,
மாடம் தோறும், Maadam Thoram - ஒவ்வொரு வீடுகளிலும்
மறை வளர, Marai Valara - வேதகோஷம் ஓங்கவும்
புகழ் வளர, Pugazh Valara - (அதனால்) கீர்த்திவளரவும்
ஒண் தொளி, On Tholi - அழகிய வீதிகளிலேயுள்ள
மண்டபம் அனைத்தும், Mandapam Anaithum - மண்டபங்களிலெல்லாம்
வாரம் ஓத, Vaaram Oda - ‘ வாரமோதுகை’ என்கிற அத்யயநத்தை நடத்தவும் பெற்றதாய்
சிறை அணைந்த பொழில் அணைந்த  தென்றல் வீசும், Sirai Anaindha Pozhil Anaindha Thendral Veesum - நீரரண் நெருங்கின சோலைகளோடு உறைந்து வருகின்ற தென்றல் வீசப்பெற்றதான
1152பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே தன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம் அவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு – இடையர் பூத்த கொடி போலே இருக்கிற ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக உபன்னம் தேட்டமான பருவம் ஆயிற்று பதிசம்யோக சுலபம் வய -என்கிறபடியே ஒரு கொள் கொம்பிலே கூட்டில் கிடக்குமவளாய்- இல்லையாகில் தர்மி லோபம் பிறக்குமவளாய் இருக்கை இனம் இனமான ருஷபங்களோடே பொருதவன் உடைய ஸ்ரீ ஸ்தானம்) 5
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே –3-1-5
பதவுரை Show / Hide
மாவலி வேள்வியில் சென்று இரந்து, Maavali Velviyil Sendru Irandhu - மஹாபலியின் யாக பூமியிலே        (மாணியுருவாகிச்) சென்று (மூவடிமண்) யாசித்துப் பெற்று (- (திரு அயிந்திபுரம்-.))
ஆங்கு, Aangu - அவ்விடத்திலேயே
அகல் இடம் அளந்து, Akal Idam Alandhu - பரந்த உலகம் முழுவதையும் அளந்து கொணடவனும்
ஆயர் பூங்கொடிக்கு, Aayar Poongodikku - அழகிய இடைப்பெண்ணான நப்பின்னைப் பிராட்டிக்காக
இனம் விடை, Inam Vidai - ஓரினமான ஏழு ரிஷபங்களையும்
பொருதவன் இடம், Poruthavan Idam - போர்செய்து முடித்த பெருமானுறையும் இடமாவது;
குரங்கு இனம், Kurangu Inam - குரங்குகளின் கூட்டமானது,
பொன்மலர்திகழ், Ponmalar Thigazh - பொன்னிறமான மலர்கள் விளங்காநின்ற
வேங்கை கோங்கு செண்பகம் கொம்பினில், Vengai Kongu Senbagam Kombinil - வேங்கைமரம், கோங்குமரம்,            செண்பக மரம் என்பனவற்றின்  கொம்புகளிலே
குதிகொடு இரைத்து ஓடி, Kudikodu Iraithu Odi - குதித்தல் செய்துகொண்டும் பெரிய ஆரவாரங்கள்   செய்துகொண்டும் இங்குமிங்கும் ஓடிக்கொண்டும்
தேன் கலந்த தண்பலங்கனி நுகரிதரு, Then Kalanda Thanpalangani Nukaritharu - தேன் மிக்க சிறந்த பலாப்பழங்களை               உட்கொள்ளப்பெற்ற
1154பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ என்று அபிமானித்து இருக்கிற பையலுடைய–தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின மிடுக்கனானவான் வர்த்திக்கிற ஸ்தானம்) 7
மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை மன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன் இடம் மணி வரை நீழல் அன்ன மா மலர் அரவிந்தத் தமளியில் பெடையொடும் இனிதமர செந்நெலார் கவரிக்குலை வீசு தண் திருவயிந்திரபுரமே –3-1-7
பதவுரை Show / Hide
மின்னின் நுண் இடை மடம், Minnin Nun Idai Madham - மின்போல் ஸூக்ஷ்மமான இடையையுடையவளும் மடமைக் குணம் வாய்ந்தவளும் (- (தண் திரு அயிந்திபுரம்-.))
கொடி காரணம், Kodi Kaaranam - கொடி போன்றவளுமான பிராட்டிக்காக,
விலங்கலின் மிசை இலங்கை மன்னன், Vilangalin Misai Ilangai Mannan - ஸூவேல மலையின் மீது அமைக்கப் பட்டிருந்த (ஸூரக்ஷிதமான) லங்கா புரிக்கு அரசனான இராவணனுடைய
நீள்முடி பொடி செய்த மைந்தனது இடம், Neelmutti Podi Seitha Maindhanathu Idam - பெரிய முடிகள் பத்தையும் பொடி படுத்தின மிடுக்கையுடைய பெருமானுக்கு இடமாவது;
மணி வரை நீழல், Mani Varai Neezhal - அழகிய மலையின் நிழலிலே
அன்னம் மா அரவிந்தம் மலர்அமளியில் பெடை யொடும் இனிது அமர, Annam Maa Aravindham Malararamalil Pedai Yodum Inidhu Amara - ஹம்ஸங்களானவை பெரிய தாமரைப் பூவாகிய படுக்கையில் தங்கள்  பேடைகளுடனே இனிதாகப் பொருந்தி வாழ்வதற்குப் பாங்காக
செந்நெல் ஆர்குலை கவரி வீசு, Sennel Aarkulai Kavari Veesu - செந்நெல் நிறைந்த குலை சாமரம் வீசப்பெற்ற
1163பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராமணர் உடைய ஹிருதயத்துக்கு ஏற்ற – சிவந்த வாயை உடைத்தான கிளியானது நல்ல ஸ்வரத்தோடே நாலு வேதத்தையும் பாடா நின்றுள்ள ஸ்ரீ தில்லை) 6
நெய் வாயழ்லம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்ந்து இலங்கு மையார் மணி வண்ணன் எண்ணி நுந்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான் அருமா மறை யந்தணர் சிந்தை புக செவ்வாய்க் கிளி நான் மறை பாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-6
பதவுரை Show / Hide
நெய் வாய் அழல் அம்பு துரந்து, Ney Vaai Azhala Amba Thurandhu - கூர்மை பொருந்திய வாயையுடைத்தாய் அக்நியைச் சொரிகின்ற அம்பை பிரயோகித்து (- (தில்லை சேர்மின்கள்-.))
முந்நீர்துணிய, Munnirthuniy - ஸமுத்ரத்தை த்வம்ஸம் செய்ய முயன்று (பின்பு ஸமுத்ரராஜன் அநுகூலித்து வந்தவாறே)
பணி கொண்டு, Pani Kondo - (அவன் மேலே அணை கட்டுகையாகிற) கைங்கரியத்தை அவனால் கொண்டவனாயும்
அணி ஆர்ந்து இலங்கு மை ஆர்மணிவண்ணனை எண்ணி, Ani Aarnthu Ilangu Mai Aarmani Vannanaik Enni - ஆபரணங்கள் நிறைந்து விளங்குகின்ற கருமணி போன்ற வடிவுடைய னாயு மிருக்கிற பெருமானை சிந்தித்து
நும் தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர், Num Tham Manaththae Iruththumpadi Vaazha Valliir - உங்களுடைய  நெஞ்சிலே (அவனை) இருத்தி வாழ நினைத்திருக்கு மன்பர்களே!,
அவ்வாய் இள மங்கையர், Avvai Ila Mangaiyar - அப்படிப்பட்ட வாயையுடைய சிறு பெண்கள்
அரு மா மறை பேசவும், Aru Maa Marai Pesavum - (காதால் கேட்டுக்கேட்டு முகபாடமான) அரிய பெரிய வேதவாக்கியங்களை சொல்லாநிற்க (அப்பெண்களுடனே கூட)
செம் வாய்கிளி அந்தணர் சிந்தை புக நால் மறைபாடு, Sem Vaaykili Andhanar Sindhai Puga Naal Maraipadu - சிவந்த வாயையுடைய கிளிகளானவை பிராஹ்மணர்கட்கும் மநோஹரமாக நான்கு வேதங்களையும் பாடுமிடமான
1173பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் பண்டு எய்ய இலங்கை அழிந்தது-பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக அவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க தேவா விஷ்டமான மலை போலே ஸ்ரீ பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்) 6
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-6
பதவுரை Show / Hide
எய்ய இலங்கை சிதைந்தது, Eyy Ilangai Sithaindhadhu - (அதுவுந் தவிர) “ஒரு அம்பை தொடுத்து விட்ட மாத்திரத்திலே லங்காபுரியானது அழிந்தொழிந்தது (- (சித்திரகூடத்து உள்ளான்-;))
ஆநிரை மலங்க வரும் மழை காப்பான், Aanirai Malanga Varum Mazhai Kaappaan - பசுக்களின் கூட்டம் துன்பமடையும்படியாக  வந்து ஏழுநாள் ஓயாமல் பெய்த மழையை தடுப்பதற்காகவும்
உய்ய, Uyya - (ஆநிரைகள்) பிழைப்பதற்காகவும்
பருவரை தாங்கி காத்தான், Paruvarai Thaangi Kaaththaan - பெரிய கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப் பிடித்து எல்லாரையும் காப்பாற்றினான்.
என்று வையத்து எவரும் ஏத்தி வணங்க, Endru Vaiyaththu Evarum Aethi Vananga - என்று சொல்லி பூமியிலுள்ளாரெல்லாரும் துதித்துத் தொழும் படியாக
அணங்கு எழுமா மலைபோலே தெய்வம் புள் ஏறி வருவான், Anangu Ezhumaa Malaipolae Deivam Pul Aeri Varuvaan - தெய்வாவேசங் கொண்ட ஒரு பெரிய மலைபோலே யிருக்கிற திவ்ய பக்ஷியாகியகருடன் மீதேறிக் கொண்டு எழுந்தருளும் பெருமான்
1184பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்களால் சலிப்பிக்க அரிதான தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனைக் கிட்டி அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்) 7
பொருவில் வலம்புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந்தன போலப் புவி மேல் சிந்த செருவில் வலம்புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி யூடாடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே –3-4-7
பதவுரை Show / Hide
பொருவு இல் வலம்புரி அரக்கன் முடிகள் பத்தும் பத்தும் புற்று மறிந்தன போல புவிமேல சிந்த, Poruvu Il Valampuri Arakkan Mudigal Paththum Paththum Putttru Marindhana Pol Puvimel Sindha - ஒப்பற்ற வலிமையைக் கொண்டுள்ள இராவணனுடைய பத்துத் தலைகளும் புற்று சரியுமாபோலே (எளிதாகக்) கீழே இற்று விழும்படியாக (- (பிறகு அங்கு நின்றும் ) ( பிறகு அங்கு நின்றும் ) (காழி …………..சேர்மின்))
செருவில் வலம்புரி சிலை கைமலை தோள்வேந்தன், Seruvil Valampuri Silai Kaimalai Tholvendhan - யுத்தத்தில் வலிமை காட்டுகிற வில்லை திருக்கையிலேயுடைய மலை போன்ற தோள்களையுடைய சக்ரவர்த்தி திருமகனது
திரு அடி சேர்ந்து உய்கிற்பீர், Thiru Adi Serndhu Uygirbeer - திருவடிகளையடைந்து வாழ விரும்புமன்பர்களே!
வலம்புரி, Valampuri - சங்குகளானவை
திரை எள்கி நீத்து மருவி, Thirai Elgi Neethu Maruvi - ஸமுத்ரத்தை இகழ்ந்து விட்டு நீங்கி (கடலில் நின்றும் வந்து ) (சீர்காழியிலே) வந்து சேர்ந்து
கைதை கழியூடு ஆடி, Kaithai Kazhiyoodu Aadi - தாழைகள் நிறைந்த கழயினுள்ளே திரிந்து
வயல் நண்ணி, Vayal Nanni - கழனிகளைச் சென்று சேர்ந்து
மழை தருநீர்தவழ் கால், Mazhai Tharuneerthavazh Kaal - மழைநீர்வெள்ளம் பெருகி வருகிற வாய்க்கால்கள் மூலமாக
தெருவில் மன்னி, Theruvil Manni - வீதிகளிலே வந்து சேர்ந்து
வலம்புரி தரளம் ஈனும், Valampuri Tharalam Eenum - சங்குகளையும் முத்துக்களையும்  (தெருக்களிலே) பிரஸவிக்கப்பெற்ற
1190பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மநோ ரதத்தாலே நான் கால ஷேபம் பண்ணாத படியாக என் ஹிருதயத்திலே வந்து புகுந்தது இஹ லோகத்திலே எனக்கு விலக்காமைக்கு என்று இருந்தேன்) 3
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி யிராமை என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில் செந்நெல் கூழை வரம் பொரீ இ அரிவார் முகத்தெழு வாளை போய் கரும்பு அந்நல் காடு அணையும் அணி யாலி யம்மானே –3-5-3
பதவுரை Show / Hide
எறி நீர்வளம் செறுவில், Eri Neervalam Seruvil - அலையெறிகின்ற நீர்வளம் பொருந்திய வயல்களிலே (- (அணி ஆலி அம்மானே !–))
செந்நெல் கூழை, Sennel Kuzhai - செந்நெற்பயிர்கள்
வரம்பு ஒரி இ, Varambu Ori I - வரப்புகளின்மேலே சாயவிட்டு
அரிவார்முகத்து, Arivaar Mugaththu - அறுக்கிறவர்களுடைய முகத்திலே
எழு வாளை, Ezhu Vaalai - (அக்கதிர்களில் நின்றும்) குதித்துப்பாய்ந்த மீன்களானவை (அபாயமுள்ள இவ்விடம் இனி நமக்குத் தகாதென்று அவ்விடம் விட்டுப்) புறப்பட்டுப் போய்
அ நல் கரும்பு காடு அணையும், A Nal Karumbu Kaadu Anaiyum - அப்படிப்பட்ட நல்ல கருப்பஞ் சோலைகளிலே சேரப்பெற்ற
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி இராமை, Nennal Poi Varum Endru Endru Enni Iramai - ‘நேற்றுப்போனான், இன்று வருவன் இன்று வருவன்’ என்றிப்படி பாரித்துக்கொண்டு போதுபோக்கவேண்டாதபடி
என் மனத்தே புகுந்தது, En Manaththae Pugundhadhu - (ஸ்திரப்ரதிஷ்டையாக நீ) என் நெஞ்சிலே புகுந்தவிது
இம்மைக்கு என்று இருந்தேன், Immaikku Endru Irundhen - இந்த ஜன்மம் மழுமைக்குனமாம் என்று துணிந்திருக்கிறேன்.
1195பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினாய் அங்கு நின்றும் ஆஸ்ரிதனுக்காக ஸ்ரீ திருக் கடல் மல்லையிலே கண் வளர்ந்து அருளினாய் இவ்வோ இடங்கள் உனக்கு வாசஸ்தானமாய இருக்க என் பக்கல் கிருபை பண்ணி வந்து புகுந்தாய்) 8
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டு போய் இளம் தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே –3-5-8
பதவுரை Show / Hide
இன் இளவண்டு, In Ilavandu - இனிய இள வண்டுகளானவை (- (அவை கொதித்தபடியாலே) (திரு ஆலி அம்மானே!- ;))
கொங்கு செண்பகம் மல்லிகை மலர்புல்கி, Kongu Senbagam Malligai Malarpulki - மணம் மிக்க செண்பகப்பூவையும் தழுவிப்பார்த்து
போய், Poy - அவற்றைவிட்டுப்போய்
இளதெங்கின் நாது அளையும், Ilathengin Naathu Alaiyum - இளைய தென்னை மரங்களின் பாளைகளிலே அளையப்பெற்ற
சங்கு தங்கு தட,கடல் கடல் மல்லையுள் கிடந்தாய், Sangu Thangu Thada Kadal Kadal Mallaiyul Kidandhai - சங்குகள் தங்கிய பெரிய திருப்பாற்கடலிலும் திருக்கடன் மல்லையிலும் (முன்பு) பள்ளி கொண்டிருந்தாய்;
இங்கு அருள் புரிந்து என்னுள் புகுந்தாய், Ingu Arul Purindhu Ennul Pugundhai - இப்போது கருணைகூர்ந்து என்னெஞ்சிலே பிரவேசித்தாய்;
இனி போயினால் அறையோ, Ini Poyinaal Arayyo - இனி நீயே விட்டுப்போக நினைத்தாயாகில் அறையோவறை
1207பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெடுமாலை –தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும் தூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது – இத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை – அவன் சேஷித்வ சூசகமாக திரு ஆழியைப் பிடித்தால் போலே ஆயிற்று இவர் சேஷத்வ சூசகமாக திரு வேலைப் பிடித்த படி -சேவகனுக்கு வேல் நிரூபகம் என்றது ஆயிற்று – சர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு-அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா – இப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று) 10
மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே –3-6-10
பதவுரை Show / Hide
கை இலக்கு வேல் கலியன், Kai Ilakku Vel Kalyan - கையில் விளங்குகின்ற வேலையுடைய திருமங்கையாழ்வார்,
மை இலங்கு கரு குவளை, Mai Ilangu Karu Kuvalai - மைபோல் விளங்குகின்ற கறுத்த குவளை மலர்கள்
மருங்கு அலரும் வயல், Marungu Alarum Vayal - ஸமீபங்களிலே விகஸிக்கப் பெற்ற கழனிகளையுடைய
ஆலி, Aali - திருவாலியிலே இருக்கிற
நெய் இலங்கு சுடர் ஆழி, Ney Ilangu Sudar Aazhi - நெய் பூசப்பட்டு விளங்குகின்றதும் சுடரையுடையதுமான
படையானை, Padaiyaanai - சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டுள்ள
நெடு மாலை, Nedu Maalai - ஸர்வேச்வரனை
கண்டு உரைத்த, Kandu Uraitha - ஸேவித்துக் சொன்ன
தமிழ் மாலை, Tamil Maalai - தமிழ்த் தொடைகளான
இவை ஐ இரண்டும், Ivai Ai Irandum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு
அரு வினைகள், Aru Vinaigal - துஷ்கருமங்கள்
அடையா, Adaiyaa - சேரமாட்டா.
1210பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பட்டர் இப்பாட்டை அருளிச் செய்து-ஒரு ஸ்திரியை விரூபை ஆக்கினவன் உடைய திறம் கேட்கில் அஞ்சுவன் என்கையாலே – இத்தலைக்கு ஒரு ஹானியாய் தோற்றா நின்றது –இது ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்யக் கூடாது இது எங்கனே சேரும்படி -என்று ஸ்ரீ ஆச்சானைக் கேட்க துடிப்பு இருக்க கை வேக வேணுமோ-ஸ்ரீ எம்பெருமானார் தானே அருளிச் செய்து வைத்தார் இறே -என்ன அருளிச் செய்த படி என்ன -என்று கேட்க – முன்பு ஒரு புணர்ந்து விட போக்கிலே பிறந்த பிரமாதத்தை கேட்டு அத்தை நினைத்து இப்பொழுது பயப்படுகிறாள் -என்று அருளிச் செய்தார்) 3
அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய் ! அரக்கர் குலப்பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே பஞ்சிய மெல்லடி எம் பணைத் தோளி பரக்கழிந்து வஞ்சி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-3
பதவுரை Show / Hide
வெம் சொல் நங்காய், Vem Sol Nangkaai - விரும்பத்தக்க வாய் மொழியையுடைய (அயல் வீட்டுப்) பெண்ணே!
அரக்கர் குலம் பாவை தன்னை மூக்கு, Arakkar Kulam Paavai Thannai Mooku - ராக்ஷஸகுலத்துப் பதுமை போன்ற சூர்ப்பணகையினுடைய மூக்கை
வெம் சினம், Vem Sinam - கடுங்கோபத்தாலே
அரிந்த, Arintha - அறுத்தொழித்த
விறலோன், Viralon - மிடுக்கையுடையனான அந்த யௌவந  புருஷனுடைய
திறம், Thiram - தன்மையை
கேட்கில், Kaetkil - கேள்விப்படுமளவில்
மெய்யே அஞ்சுவன், Meyye Anjuvan - உண்மையாக அஞ்சுகிறேன்!
பஞ்சிய மெல் அடி, Panjiy Mel Adi - பஞ்சுபோன்ற மிருதுவான அடியையுடையவனும்
எம் பணை தோளி, Em Panai Tholi - மூங்கில்போன்ற தோள்களை யுடையவளுமான என் மகள்
பாக்க்க்கழிந்து, Paakkazhindhu - பெரும்பழிக்கு இடமாகி (அவனோடு செல்ல, அவ்விருவரும்)
வஞ்சி அம் தண் பணை சூழ், Vanchi Am Than Panai Soozh - வஞ்சிக் கொடிகளாலழகிய குளிர்ந்த நீர் நிலகள் சூழ்ந்த
வயல், Vayal - கழனிகளையுடைய
ஆலி, Aali - திருவாலியிலே
புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேர்ந்திருப்பர்களோ?
1211பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்-இடையனை பிறந்தான் என்று ஆசைப் படுவாராய் ஆசைப்படா நின்றீர் கோள்-எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை – மாதவன் தன் துணையா நடந்தாள்-ஆழம் காலை மிதப் பெற்று புத்தி பண்ணினாள் அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால்-தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்) 4
ஏது அவன் தொல் பிறப்பு ? இளையவன் வளை யூதி மன்னர் தூதுவனாயவனூர் சொல்லுவீர்காள் ! சொலீர் அறியேன் மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ? –3-7-4
பதவுரை Show / Hide
அவன், Avan - (என்மகளைக் கொண்டு போன) அவனுடைய (- (என்மகளோ வென்னில்) (சென்ற இருவரும்))
தொல் பிறப்பு, Thol Pirappu - பழைய ஜன்மம்
ஏது, Aethu - க்ஷத்ரிய ஜன்மமோ? இடைச்சன்மமோ? யாது கொல்?
அறியேன், Ariyen - நானறிகின்றிலேன்;
இளையவன், Ilaiyavan - குமரனாயும்
வளை ஊதி, Valai Oothi - சங்கை ஊதுமவனாயும்
மன்னர் தாதுவனாயவன், Mannar Thadhuvanayavan - பாண்டவர்களுக்காகத் தாதுசென்றவனாயுள்ள அவனுடைய
ஊர், Oor - ஊரையும்
அறியேன், Ariyen - அறிகின்றிலேன்;
சொல்லுவீர், Solluveer - சொல்லத் தெரிந்தவர்களே!
சொல்லீர், Sollir - சொல்லுங்கள்;
மாதவன் தன் துணை ஆ, Madhavan Than Thunai Aa - திருமால் தனக்குத் துணையாகப் பெற்று
நடந்தாள், Nadandhaal - (அவனோடு கூடச்) சென்றாள்;
தடம் சூழ் புறவின், Thadam Soozh Puravin - தடாகங்கள் சூழ்ந்த சோலைகளை யுடையதும்
போது, Podhu - பூக்களிலே
வண்டு ஆடு, Vandu Aadu - வண்டுகள் களித்துக் கூத்தாடப் பெற்ற
செம்மல், Semmal - பெருமைதங்கிய
புனல், Punal - தீர்த்தங்களையுடையதுமான
ஆலி, Aali - திருவாலியிலே
புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேருவர்களோ?
1213பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரதிசய போக்யனுமாய்-சுலபனுமாய்-ரஷகனுமானவன் உடன் கூட-ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது ஸ்ரீ திரு அயோத்யை கோடித்தாற் போலே ஸ்ரீ திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி புகுகிறார்கள் இறே) 6
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ? –3-7-6
பதவுரை Show / Hide
என் துணை என்று எடுத்தேற்கு, En Thunai Endru Eduthetku - ‘இவள் நமக்கு உதவியாயிருப்பள்’ என்று வளர்த்து வந்த என் விஷயத்தில் (- (என் மகளானவள்) (இலங்கைக்குச் சென்று) (இருவரும்) (எழில் ஆலி புகுவர்கொலோ-.))
இறையேனும், Irayeenum - கொஞ்சமாகிலும்
இரங்கிற்றிலன், Irangittrilan - இரக்கங்கொண்டாளில்லை;
தன் துணை ஆய என்தன் தனிகைக்கும், Than Thunai Aay Enthan Thanikaikkum - (இதுவரையில்) தனக்கு உதவியாயிருந்த நான் தனியே யிருப்பதற்காகவும்
இரங்கிற்றிலள், Irangittrilal - இரக்கங் கொண்டாளில்லை;
வானவர்க்கு, Vaanavarkku - தேவர்களுக்கு
வன் துணை ஆய், Van Thunai Aay - சிறந்த துணையாய்
அரங்கத்து உறையும், Arangathu Uraiyum - கோயிலிலே கண் வளர்ந்தருளுகிற
இன் துணைவனொடும் போய், In Thunaivanodum Poy - நல்ல துணைவனான திருமாலோடே சென்று
1214பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே இருவரைக் கை விட்டால்-அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே) 7
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ? –3-7-7
பதவுரை Show / Hide
மின்மையும், Minmaiyum - மின்னற் கொடியையும் (- (அவ்விருவரும்) (புகுவர் கொலோ சென்று சேருவர்களோ?))
வஞ்சியையும், Vanjiyaiyum - வஞ்சிக் கொடியையும்
வென்று, Vendru - தோற்கடித்து
இலங்கும், Ilankum - (மிகவும் ஸூக்ஷ்மமாக)விளங்காநின்ற
இடையாள், Idaiyal - இடையை யுடையளான என் மகள்,
அன்னையும் அத்தனும் என்று, Annaiyum Aththanum Endru - தாய் தகப்பனென்று கூட
அடியோமுக்கு, Adiyomukku - எங்கள் விஷயத்தில்
இரங்கிற்றிலள், Irangittrilal - தயை பண்ணினாளில்லை;
பின்னை தன் காதலன் தன், Pinnai Than Kaadhalan Than - திருமாலினது
பெரு தோள் நலம் பேணினள், Peru Thol Nalam Peeninal - பெருமை தங்கிய தோள்களோடே அணைந்துபெறும் ஸுகத்தையே விரும்பின வளாய்
நடந்து, Nadandhu - (அவனோடு கூட) நடந்து செல்ல,
புன்னையும் அன்னமும் சூழ், Punnaiyum Annanum Soozh - புன்னைப் பொழிலும் அன்னப் பறவைகளும் சூழ்ந்த
புனல், Punal - நீர்வளம் பொருந்திய
ஆலி, Aali - திருவாலியிலே
1221பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மாலி சுமாலி தொடக்கமான ராஷசரை அடைய பண்டு இலங்கையிலே வென்ற ஸ்ரீ சர்வேஸ்வரனே ஸ்ரீ திரு மணி மாட கோயிலிலே வந்து நின்று அருளினான் -நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 4
சிறையார் உவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான் முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி யாறங்கர் ஏழின் இசையோர் மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே ! –3-8-4
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகாலத்தில்,
சிறை ஆர, Sirai Aar - சிறகோடு கூடின
ஒன்று, Ondru - ஒப்பற்ற
உவணம் புன், Uvanam Pun - கருடப்பறவையின் மீது
ஏறி, Eri - ஏறிக்கொண்டெழுந்தருளி
செருயில், Seruyil - யுத்த்த்தில் (எதிர்த்த)
கறை ஆர் நெடுவேல் அரக்கர், Karai Ar Neduveel Arakkar - (ரத்தக) கறை நிரம்பிய பெரிய வேற்படையை யுடைய ராக்ஷஸர்கள்
திசை நான்கும் நான்கும் இரிய, Thisai Naanthum Naanthum Iriya - எட்டுத்திசைகளிலும் (சிலர்) சிதறியோடும்படியாகவும்
மடிய, Madiya - (பலர்) உயிர்மாண்டொழியும் படியாகவும் (செய்து)
கடல் சூழ் இலங்கை, Kadal Soozh Ilangai - கடலால் சூழப்பட்ட லங்காபுரியை
கடந்தான், Kadandhaan - ஒழித்த பெருமானுடைய
இடம் தான், Idam Thaan - இருப்பிடமான
முறையால் வளர்க்கின்ற மூத்தியர், Murayal Valarkkinra Moothiyar - முறைப்படி ஹோமஞ்செய்கிற மூன்று அக்நிகளையுடையாய்
நால் தேவர், Naal Thevar - நான்கு வேதங்களையும் அதிகரித்தவராய்
ஐ வேள்வி, Ai Velvi - பஞ்சமஹாயஜ்ஞங்களை அநுஷ்டிப்பவராய்
ஆறு அங்கர், Aaru Angkar - வேதாங்கங்கள் ஆறையும் பயின்றவராய்
ஏழின் இசையோர், Ezhalin Isaiyor - ஸப்தஸ்வாங்களையும் அறிந்தவரான
மறையோர், Maraiyor - ஸவதிகப்ராஹ்மணர்கள்
வணங்க, Vananga - (நித்யவாஸம்பண்ணிக் கொண்டு) வணங்குவதனால்
புகழ் எய்து நாங்கூர், Pugazh Eydhu Naangoor - புகழ் பெற்றிருக்கின்ற திருநாங்கூரிலே
மணிமாடக்கோயில், Manimadakoyil - என் மனனே வணங்கு.
1223பெரிய திருமொழி || (3-8–நந்தா விளக்கு) (திருநாங்கூர் மணி மாடக் கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூதனையை அப்போதே பிராணன் போம்படி முலை உண்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திருமணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்) 6
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க்கழுதுக்கு இரங்காது அவள் தன் உண்ணா முலை மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் ஓங்கு பைந்தாள் கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து மண் எனது இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே –3-8-6
பதவுரை Show / Hide
பண்ணேர் மொழி ஆய்ச்சரியர் அஞ்ச, Panneer Mozhi Aaychariyar Anja - (பண்ணிசையோடொத்த பேச்சையுடையரான இடைச்சிகள் பயப்படும்படியான வடிவுடையவளாய் (- (மணிமாடக்கோயில் என் மன்னே! வணங்கு–;))
வஞ்சம்  பகுவாய் கழுதுக்கு இரங்காது, Vanjam Pakuvai Kazhuthukku Irangathu - வஞ்சனையையும் பெரிய வாயையு முடையளான (பூதனையென்னும்) பேய்ச்சியினிடத்தில் தான் நோவுபடாமல்
அவள் தன் உண்ணா முலைமற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம், Aval Than Unnaa Mulaimattraval Aaviyodum Udaney Suvaithan Idam - ஆப்பூதனையினது உண்ணத் தகாத முலைப்பாலை அவளுடைய உயிரோடு கூடவே உறிஞ்சியுண்ட பெருமானுடைய இருப்பிடமாய்
ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று, Ongu Pain Thaal Kan Ar Karumpin Kazhai Thinru - உயர்ந்து பசுங்கால்களை யுடையனவாய் கணுக்கள் நிரம்பியவான கரும்புத் தடிகளைத் தின்று
ஐவகி, Aivagi - நகரமாட்டாமல் அங்கேயே தாமஸித்துக்கடந்து (அதன்பிறகு)
கழு நீரின் செழு நீர் தடத்து மூழ்கி, Kazhu Neerin Sezhu Neer Thadathu Moongki - செங்கழுநீர்ப் பூக்களோடு கூடிய அழகிய நீர் நிரம்பிய தடாகத்திலே முழுகி
மண் ஏந்து, Man Aendu - (கொம்புகளில்) மண்ணைத் தாங்கிக்கொண்டிருக்கிற
இள மேதிகள், Ila Methigal - இளைய எருமைகள்
வைகும், Vaikum - (கரையேறாது நீரிலேயே) தாமஸித்திருக்கப்பெற்ற
நாங்கூர், Nangoor - திருநாங்கூரிலே
1231பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று அநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின தோள் வலியை உடையவன் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்) 4
கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக் காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம் செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம் மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-4
பதவுரை Show / Hide
கலை இலக்கும் அகல் அல்குல் அரக்கரி குலக் கொடியை, Kalai Ilakkum Akal Alkul Arakkari Kulak Kodayai - நல்ல சேலை விளங்கப்பெற்ற அகன்ற நிதம்ப ப்ர தேசத்தையுடையளான சூர்ப்பணகையினுடைய (- (மகிழ்ந்து இனிது மருவி உறைகோயில்) (வைகுந்த * * * வணங்கு))
காதொடு மூக்கு உடன் அரிய, Kaadodu Mooku Udan Ariya - காதையும் மூக்கையும் உடனே அறுக்க
அவள் கதறி தலையில், Aval Kathari Thalaiyil - அவ்வரக்கி வாய்விட்டு அலறி தன் தலைமேலே
அங்கை வைத்து, Angai Vaiththu - உள்ளங்கையை வைத்துக் கொண்டு
முலை இலங்கை ஒடி புக செய்த தட தோளன், Mulai Ilangai Odi Puga Seidha Thad Tholan - மலைமேலுள்ள இலங்கையிலே ஓடிப் புகுந்து அழம்படி பண்ணிளன மஹாபாஹுவான பெருமான்
சிலை இலங்க மணி மாடத்து உச்சி மிசை குலம், Silai Ilanga Mani Maadathu Uchi Misai Kulam - ஓளி விளங்குகின்ற ரத்தனங்களிழைத்த மாளிகைகளின் மூடிமேலேயிரக்கிற குலங்கள்
செழு கொண்ர்ல் அகடு இரிய, Sezhu Konral Akadu Iriya - அழகிய மேகங்களினுடைய கீழ்யிவற்றைப் பிளக்க (அதனாலே)
சொரிந்த செழு முத்தம், Sorindha Sezhu Muththam - பெய்த அழகிய முத்துக்கள்
முலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்து நாங்கூர், Mulai Ilangu Maaligai Mael Malivu Eydhu Nangoor - மலைப்போல் விளங்குகின்ற மாளிகைகளின் மேலே குவிந்து கிடக்கப்பெற்ற திருநாகூரில்
1232பெரிய திருமொழி || (3-9–சலங்கொண்ட) (திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்று இலங்கையை பொடி படுத்திய தோள் மிடுக்கை உடைய ஸ்ரீ பிராட்டிக்கு பண்ணின வியாபாரத்தை ஆஸ்ரிதர் எல்லாருக்கும் ஒக்கப் பண்ணினது போலே அவன் பிரீதியோடே வர்த்திக்கிற தேசம் ஆகையாலே கண்டார்க்கு எல்லாம் இனிதாமோபடி இருக்கிற தேசம்) 5
மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும் மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-5
பதவுரை Show / Hide
அன்று மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கு ஆ, Andru Min Anaiya Nun Marungul Melliyarku Aa - முன்பொரு காலத்தில் மின்னல் போன்று நுட்பமான இடையுடைய ஸீதாபிராட்டிக்காக
இலங்கைவேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர, Ilangai Vendan Mudi Orupadhu Thol Irupadhu Poi Uthira - இராவணனுடைய பத்துக் தலைகளும் இருபது தோள்களும் சின்னபின்னமாம்படி
நிகரி இல் தன் சிலை விளைத்து, Nikari Il Than Silai Vilaitthu - ஒப்பற்ற தனது கோதண்ட வில்லை வளையச்செய்து (அம்புகளைச் செலுத்தி)
இலங்கை பொடி செய்த தட தோளன், Ilangai Podi Seidha Thad Tholan - லுங்காபுரியைப் பொடியாகக் கின மஹாவீரன்.
செங்கலொடு, Sengalodu - செந்நெல்லும்
செம் கமலம் சேல் கயல்கள் வாளை செய்கழு நீரோடு மிடைந்து கழனி மிடைந்து, Sem Kamalam Sel Kayalgal Vaalai Seykalzu Neerodu Midaindhu Kazhani Midaindhu - செந்தாமரைப்பூக்களும் மீன் விசேஷங்களும் செங்கழு நீர்பூக்களும் சேர்ந்து கொண்டு
கழனி எங்கும் திகழ்ந்து மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்து நாங்கூர், Kazhani Engum Thigalndhu Mannu Pugazh Vedhiyargal Malivu Eydhu Naangoor - கழனிகளுக்குள்ள விடமெங்கம் விளங்கப்பெற்றிதும் நித்தியமான கீர்த்தியையுடைய வைதிகரிகள் நிறைந்திருக்கப் பெற்றதுமான திருநாகூரில் வைகுந்த * * * வணங்கு
1243பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுக்காக இலங்கைக்கு நிர்வாஹனாய் இருக்கிறவனுடைய பத்துத் தலையும் இருபது தோளும் உதிரும்படியாக – தாளை உடைத்தாய் -நெடிதாய் -திண்ணியதாய் இருக்கிற வில்லை வளைத்த தசரதாத் மகன் -சேய் -பிள்ளை தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்னுமா போலே காணும் இருப்பது – அயர்வறும் அமரர்கள் அதிபதி வர்த்திக்கிற ஸ்தானம்) 6
வாள் நெடுங்கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன் முடி யொருபதும் தோள் இருப்பதும் போய் உதிர தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனிச்சரண் வானவர்க்கரசு கருதுமிடம் தடமார் சேண் இடங்கொள் மலர்க்கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடு மடுத்தரிய உதிர்ந்த செழு முத்தம் வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரு மணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-6
பதவுரை Show / Hide
வாள்நெடு கண் மலர் கூந்தல் மைதிலிக்கா, Vaalnedu Kan Malai Koondhal Maithilikka - வாள்போல் கூர்மையாய் நீண்ட திருக்கண்களையும் பூவணிந்த கூந்தலையுமுடைய ஸீதாபிராட்டியைச் சிறை வைத்த குற்றத்திற்காக (- (அரிமேய விண்ணகரம்             வணங்கு))
இலங்கை மன்னன் ஒருபது முடியும் இருபது தோளும் போய் உதிர, Ilankai Mannan Orupathu Mudiyum Irupathu Tholum Poi Uthira - இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் சிதறிப் போம்படி
தாள் நெடு திண் சிலை வளைத்த தயரதன் சேய், Thaal Neduthin Silai Valaitha Thayaradhan Sei - கதையோடு  கூடி நீண்டு திண்ணிதான வில்லை வளைத்த தசரத புத்திரனும்
என் தன் தனிசரன், En Than Thanisarang - எனக்கு ஒப்பற்ற ரசஷகனும்
வானவாக்கு அரசு, Vaanavaakku Arasu - நித்யஸூரிநாதனுமான பெருமான்
கருதும் இடம், Karudum Idam - திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கும் திவ்யதேசம்:
தடம் ஆர், Thadam Aar - பொய்கைகளில் நிறைந் திருப்பனவும்
சேண இடம் கொள், Sena Idam Kol - ஆகாசமுள்ள விடமெங்கும் ஓங்கி வளர்ந்திருப்பனவுமான
கமலம் மலர், Kamalum Malar - தாமரைப் பூக்களையும்
சேல் கயல்கள் வாளை, Sel Kayalgal Vaalai - சேல் கயல்வாளையென்னும் மீன்களையும்
செந்நெலொபடு மடுத்து, Sennelopadu Maduthu - செந்நெற் பயிர்களோடு சேர்த்துப் பிடித்து
அரிய, Ariya - அறுக்க
உதிர்ந்த செழு முத்தம், Uthirntha Sezhu Mutham - அவற்றினின்று உதிர்ந்த அழகிய முத்துக்களை
வாள் நெடு கண் கடைசியர்கள் வாரும், Vaal Nedukann Kadaiyiyarkal Vaarum - வாள்போன்று நீண்ட கண்களையுடைய கடைச் சாதிப் பெண்கள் வாரித் திரட்டுமிடமான
அணிநாங்கூர், Aninangoor - திருநாங்கூரில்
1245பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமாய் இருக்கிற திருமேனியை உடையவன் பசுக்களை ரஷிக்கைக்காக ஸ்ரீ கோவர்த்தனத்தாலே மழை தடுத்து மன்றிலே ஆயர் அனுபோவ்யமாம் படி குடக் கூத்தாடினவன் கொண்டாடி வர்த்திக்கிற தேசம்) 8
கன்றதனால் விளவெறிந்து கனி யுதிர்த்த காளை காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டித் தொழுதி யொடு மிகப் பயிலும் சோலை அன்று அலர் வாய் மது வுண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-8
பதவுரை Show / Hide
கன்று அதனால் விளவு எறிந்து, Kandru Adhanal Vilavu Erinthu - வத்ஸாஸூரனைக் கொண்டு கபித்தாஸூரன்மேல் வீசியெறிந்து (- (அரிமேய விண்ணகரம்             வணங்கு))
கனி உதிர்த்த காளை, Kani Uthirtha Kaalai - விளாம்பழங்களை உதிரச் செய்த இளையவனும்
காமரு சீர், Kaamaru Seer - விருப்பத்தக்க கல்யாண குணங்களையுடையவனும்
முகில் வண்ணன், Mugil Vannan - காளமேக நிறத்தனும்
முன் காலிகள் காப்பான, Mun Kaaligal Kaappana - முன்பெருங்கால் பசுக்களை (பெருமழையினின்று) காக்கும் பொருட்டு
குன்று அதனால் மழை தடுத்து, Kundru Adhanal Mazhai Thaduthu - கோவர்த்தனமலையினால் மழையைத் தடை செய்தவனும்
குடம் ஆடு கூத்தன், Kudam Aadu Koothan - குடக்கூத் தாடினவனுமான பெருமான்
குலவும் இடம், Kulavum Idam - உவந்திருக்கும் திவ்யதேசம்
கொடி மதிள்கள், Kodi Mathilkal - த்வஜங்கள் பொருந்திய மதிள்களையும்
மாளிகை கோபுரங்கள், Maaligai Koorangal - மாளிகைகளையும் கோபுரங்களையும்
துன்று மணி மண்டபங்கள், Thunru Mani Mandapangal - நெருங்கின மணி மயமான மண்டபங்களையும்
சாலைகள், Saalaihal - தார்ச்சாலைகளையும் உடைத்தாய்
தூ மறையோர் தொக்கு ஈண்டி, Thoo Maraiyore Thokku Eendi - பரிசுத்தரான அந்தணர்கள் கும்பலாகக் கூடியிருக்கும் மிடமாய்
தொழுதியொடுமிக பயிலும் சோலை, Thozhuthiyodumiga Payilum Solai - பறவைகளின் ஒலியோழுடு மிகவுங் கூடியிருக்கின்ற சோலைகளிலே
அன்று அலர்வாய் பது உண்டு, Andru Alarvai Pathu Undu - அப்போதலர்ந்த செவ்விப் பூக்களில் தேனைப் பருகி
அங்கு அளி முரலும் நாங்கூர், Angu Ali Muralam Nangoor - அவ்விடத்தில் வண்டுகள் பாடப் பெற்றதான் திருநாங்கூரிலே
1255பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்) 8
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம் ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள் சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-8
பதவுரை Show / Hide
வார் ஆரும் இளகொங்கை மைதிலியை, Vaar Aarum Ilakongai Maithiliy - கச்சையிட்டுத் தாங்க வேண்டும்படியான இளமுலைகளையுடைய ஸீதாபிராட்டியை (- (நாங்கை தன்னுள்–;) (திருத்தேவனார் தொகையே–.))
மணம் புணர்வான், Manam Punarvan - விவாஹம் செய்து கொள்வதற்காக
கார் ஆர் தின் சிலை இறுத்த, Kaar Aar Thin Silai Irutha - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை முறித்த
தனி காளை, Thani Kaalai - விலக்ஷண யௌவநபுருஷன்
கருதும் இடம், Karudum Idam - திருவள்ளம்பற்றின திவ்யதேசம் (எதுவென்றால்)
ஏர் ஆரும் பெரு செல்வத்து எழில் மறையோர், Aer Aarum Peru Selvaththu Ezhil Maraiyor - அழகு பொருந்திய மிக்க ஐச்வரியத்தை யுடையராய் விலக்ஷண வைதிகர்களான அந்தணர் வாழ்கிற
சீர் ஆரும் மலர் பொழில் சூழ், Seer Aarum Malar Pozhil Soozh - அழகு விஞ்சிய பூக்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட
1258பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து ராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று அந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான ஸ்ரீ விபீஷணனுக்கு கொடுத்து அருளினவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 1
கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே –4-2-1
பதவுரை Show / Hide
கம்பம் மா கடல் அடைத்து, Kambam Maa Kadal Adaiththu - (கண்டபோதே) நடுக்கத்தை விளைப்பதான பெரிய கடலிலே ஸேதுகட்டி
இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும், Ilankaiyukku Man Kathir Mudi Avai Padhum - இலங்கைக்கு அதிபதியான இராவணனுடைய ஒளிவிடுகின்ற தலைகள் பத்தையும்
அம்பினால் அறுத்து, Ambinaal Aruththu - பாணங்களினால் அறுத்து
அவன் தம்பிக்கு அரசு அளித்தவன், Avan Thambikku Arasu Aliththavan - அவ்விராவணன் தம்பியான விபீஷணாழ்வானுக்கு இராஜ்யமளித்த இராமபிரான்
உறை கோயில், Urai Koyil - எழுந்தருளியிருக்குமிடம் எதுவென்றால்,
செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ், Sem Palaa Nirai Senbagam Maadhavi Soothagam Vaalaihal Soozh - பலாமரங்களின் செல்விய வரிசைகளும் செண்பக மரங்களும் குருக்கத்திச் செடிகளும் மாமரங்களும் வாழை மரங்களும் (ஆகிய இவற்றால்) சூழப்பட்டு,
வம்பு உலாம் கமுகு ஓங்கிய, Vambu Ulaam Kamuku Oongiya - பரிமளம் வீசுகின்ற பாக்கு மரங்கள் ஓங்கி வளரப்பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
வண்புரு டோத்தமம், Vanpuru Doththamam - வண்புருஷோத்தம மென்னும் திவ்யதேசமாம்.
1264பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் முடிந்து போகச் செய்தேயும் சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே ருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த ஸ்ரீ நர சிம்ஹம் எல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை கிழித்து தன்னைத் தந்த மகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம்) 7
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை யளையும் வெஞ்சினத் தரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில் இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை வளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே –4-2-7
பதவுரை Show / Hide
ஒண் திறல் பொன் பெயரோன் உளைய, On Thiral Pon Peyaron Ulaiya - பிரஸித்தமான வலிவையுடையனான இரணியனானவன் நோவுபடும்படி (- (வந்து உறை கோயில்;) (வண்புருடோத்தமம்))
தனது உரம்பிளந்து, Thanathu Urampilandu - அவனுடைய மார்பைக் கிழித்து
உதிரத்தை அளையும், Uthirathai Alaiyum - (அவனது உடலில் நின்று இழிந்த) ரத்தத்தை அளைந்த
வென் சினத்து அரி, Ven Sinaththu Ari - உக்ரஸிம்ஹனானவனும்
பரி கீறிய, Pari Keeriyah - குதிரைவடிவு கொண்டுவந்த கேசியென்னும் அசுரனைக் கொன்றவனுமான
அப்பன், Appan - ஸ்வாமி
இளைய மங்கையர், Ilaiya Mangaiyar - சிறுபெண்கள் (நர்த்தனமனாடும்போது உண்டான)
இணை அடி சிலம்பினோடு, Inai Adi Silampinodu - இரண்டுகால்களிலும் அணிந்த தண்டைச் சிலம்பின் ஒலியோடு கூட,
ஏழில்கொள் பந்து அடிப்போர் கை வளையில் நின்று, Ezhalkol Pandhu Adipor Kai Valaiyil Nindru - அழகுபொருந்திய பந்தடிக்கும் சிறுமிகளினுடைய கைவளையல்களினின்று உண்டான
ஓலிமல்பிய நாங்கூர், Olimalpiya Nangoor - ஓசையானது நிறைந்த திருநாங்கூரில்
1266பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக அவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்) 9
இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும் உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில் குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய் மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-9
பதவுரை Show / Hide
இந்து வார் சடை ஈசனை பயந்த, Indhu Vaar Sadai Eesanai Bayandha - சந்திரனோடுகூடி நீண்டிருக்கிற சடைமுடியையுடைய ருத்ரனை ஸ்ருஷ்டித்த (- (உகந்து இனிது உறை கோயில்;) (வண்புருடோத்தமம்))
நான் முகனை, Naan Mughanai - பிரமனை
தன் எழில் ஆரும் உந்திமா மலர்மீமிசை படைத்தவன், Than Ezhil Aarum Undhimaa Malarmimisai Padaiththavan - தன்னுடைய அழகு திருநாபிக் கமலத்திலே பொருந்திய உண்டாக்கின பெருமான்
மந்தி, Mandhi - பெண் குரங்கானது
குந்தி, Kundhi - குந்திக்கொண்டு
வாழையின் கொழு கனி நுகர்ந்து தன் குருளையை தழுவி போய், Vaazhaiyin Kozhu Kani Nukarndhu Than Kurulaiyai Thazhuvi Poi - நல்ல வாழைப் பழங்களை புஜித்து தன்து குட்டியை அணைத்துக் கொண்டு அங்கு நின்றும்போய்
மாம்பணைமேல் வைகும் நாங்கூர், Maambanai Mel Vaikum Naangoor - மாமரக் கிளைகளின் மேல் தங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரில்
1272பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விபவத்தில் நெஞ்சு சென்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்) 5
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத் தாய் மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-5
பதவுரை Show / Hide
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று, Thee Manaththu Arakkar Thiral Azhithavane Endru - ‘தீய நெஞ்சையுடையரான ராக்ஷஸர்களின் உடைய மிடுக்கை நாசம் செய்தவனே!’ என்று சொல்லிக்கொண்டு (- (நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே அடியேன் நான் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்))
சென்று அடைந்தவர் தமக்கு, Sendru Adaindhavar Thamakku - வந்து கிட்டினவர்கள் விஷயத்தில்
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும், Thaai Manaththu Irangi Arulinai Kodukkum - தாய்போலே கரைந்து கிருபை பண்ணுகின்ற
தயரதன் மதலையை, Thayaradhan Mathalaiyai - தசரத புத்ரனானவனும்
காமனை பயந்தான் தன்னை, Kaamanai Bayandhaan Thannai - ப்ரத்யும்நனைப் படைத்தவனுமான பெருமானை
சயம் மே, Sayam Mae - ஜயசப்தங்கள் பொருந்தியிருக்கப் பெற்றதும்
தேன் மலர் பொழில் சூழ், Then Malar Pozhil Soozh - தேன்நிறைந்த புஷ்பங்களையுடைய சோலைகளாலே சூழப்பட்டதுமான
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்
1273பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை நிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய அவர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன்) 6
மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானைச் செல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே –4-3-6
பதவுரை Show / Hide
மல்லை மாமுந்நீர் அதர்பட, Mallai Maamunneer Atharpad - செல்வம் மிக்க பெரிய கடலானது வழியாக அமையும்படி (- (நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே;))
மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை, Malaiyaal Anai Seidhu Magizhndhavan Thannai - மலைகளைக்கொண்டு அணைகட்டி திருவுள்ள முகந்தவனும்,
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க, Kallin Meedhu Iyandra Kadi Mathil Ilangai Kalang - (த்ரிகூடமென்னும்) மலையின் மேலே கட்டப்பட்ட அரணான மதிளை யுடைத்தான இலங்காபுரியானது சிதறிபொழியும்படி
ஓர் வாளி தொட்டனை, Oor Vaalai Thottanai - ஒரு அம்பை பிரயோகித்தவனுமான பெருமாணை
செல்வம் நால்மறையோர், Selvam Naalmaraiyore - சதுர்வேதங்களைச் செல்வமாகவுடைய அந்தணர் வாழ்கிற
அல்லி மாமலராள் தன்னொடும், Alli Maamalaraal Thannodum - பிராட்டியோடு கூட
அடியேன் கண்டுகொண்டு, Adiyen Kandukondu - அடியேன் ஸேவித்து
அல்லல் தீர்ந்தேன், Allal Theerndhen - துன்பங்கள் தொலையப் பெற்றேன்
1278பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ அங்கு சூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்–ஸ்வாபதேசம்- முதலையாலே இடர் பட்ட அளவிலே வந்து உதவிற்று இலன் என்று எனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ ஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்) 1
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர் நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின் சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே –4-4-1
பதவுரை Show / Hide
பள்ளத்து, Pallaththu - தாழ்ந்த நிலத்தில் முளைத்துள்ள
நூறு இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த, Nooru Idazh Kol Aravindham Nuzhaindha - பல இதழ்களையுடைய தாமரைப் பூவிலே பிரவேசித்த
பகு வாய் நண்டின், Pagu Vaai Nandin - விரிந்தவாயை யுடைத்தான நண்டினுடைய
சேறு அளையில், Seru Alaiyil - சேறுமிக்க விளையிலே
இள கமுகின் முது பாளை, Ila Kamugin Muthu Paalai - இளைய பாக்கு மரங்களினுடைய முற்றின பாளையானது
வெண்முத்தம் சிந்து, Venmuththam Sindhu - வெளுத்த முத்துக்களை இறைக்கப்பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
திருத்தெற்றியம்பலத்து, Thiruththetriyampalathu - திருத்தெற்றியம்பலம் என்னுந் திருப்பதியில் எழுந்தருளியுள்ள
என், En - எனக்கு ஸ்வாமியாய்
செம் கண் மால், Sem Kan Maal - செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன் (எப்படிப்பட்டவனென்றால்,)
மாறு அரசர் மணி முடியும் திறலும் தேசும், Maaru Arasar Mani Mudiyum Thiralum Desum - பகைவரான (துரியோதனன் முதலிய) அரசர்களினுடைய மாணிக்கங்களிழைத்த கிரீடங்களும் வலியும் தேஜஸ்ஸும்
அவர்தம் காதலிமார் குழையும், Avardham Kaadhalimaar Kuzhaiyum - அவ்வரசரது மனைவியின் காதணியும்
தந்தை கால்  தளையும், Thandai Kaal Thalaiyum - தன் தகப்பனாரான வஸுதேவருடைய காலிலே இடப்பட்டிருந்த விலங்கும்
உடன் கழல, Udan Kazhala - ஏககாலத்திலே ஒழியும்படியாக
வந்து தோன்றி, Vandhu Thondri - திருவவதரித்தவனாயும்
கதம் நாகம், Kadham Naagam - சீற்றத்தையுடைய கஜேந்திராழ்வானை
காத்து அளித்த, Kaathu Aliththa - ரக்ஷித்தருளினவனாயுமுள்ள
கண்ணர்கண்டீர், Kannarkandheer - கண்ணபிரான் காண்மின்.
1282பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ நப்பின்னை இருவர் உடன் சம்ஸ்லேஷித்த படியை அனுசந்திக்கிறார்- வெளுத்த தந்த பங்க்தியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார்- அவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி) 5
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர் மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-5
பதவுரை Show / Hide
முலை இலங்குநிரை சந்தி மாடம் வீதி, Mulai Ilangunirai Sandhi Maadam Veethi - மலைபோல் விளங்குகின்ற வரிசைவரிசையாக ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற மாடங்களையுடைய தெருக்களிலே (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்துஎன் செங்கண் மால்;))
மடம் மொழியார், Madham Mozhiyaar - இனிய பேச்சையுடைய பெண்களின்
முகத்து, Mugaththu - முகத்திலுள்ள
இரண்டு சிலை, Irandu Silai - இரண்டு விற்கள் போன்ற புருவங்களானவை
விலங்கி, Vilangi - வளைந்து
ஆடவரை மனம் சிறைகொண்டு இருக்கும், Aadavarai Manam Siraiykondu Irukkum - ஆண்பிள்ளைகளின் மனத்தை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டிருக்கப்பெற்ற
கலை இலங்கும், Kalai Ilangum - மேகலை விளங்கப்பெற்ற
அகல் அல்குல், Akal Alkul - அகன்ற நிதம்பத்தையுடையளாய்
கதிர்முத்தவெள் நகையாள், Kathirmuthavell Nagaiyaal - ஒளிபொருந்திய முத்துப் போலே வெளுத்த பற்களையுடையளான
கமலம் பாவை, Kamalam Paavai - பெரியபிராட்டியினுடையவும்
கரு கண் ஆய்ச்சி, Karhu Kan Aaychchi - கறுத்த கண்களையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடையவும்
முலை இலங்கும் ஒளி மணி பூண்வடமும் தேய்ப்ப, Mulai Ilangum Oli Mani Poonvadam Theyppa - தனங்களிலே விளங்குகின்ற அழகிய மணிகளிழைத்துச் செய்யப்பட்ட கண்டிகையும் ஹாரமும் உராய, (அதனால்)
மூவாத, Moovadha - நித்யயௌவனம் மாறாத
வுரை நெடுதோள், Vurai Neduthol - மலைபோன்று நெடிய திருத் தோள்களையுடைய
மூர்த்தி கண்டீர், Moorthi Kandeer - ஸ்வாமி காண்மின்.
1283பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் மற்றும் உள்ள முதலிகளுமாக இப்பாட்டில் சொல்லுகிறது என் -என்று ஸ்ரீ பட்டருக்கு விண்ணப்பம் செய்ய0ஒரு கால் இயலைக் கேளா ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்) 6
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர் மான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு தேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-6
பதவுரை Show / Hide
மான் போலும் மென் நோக்கின், Maan Polum Men Nookkin - மானின் நோக்குப்போன்ற அழகிய நோக்கையுடையராய் (- (நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என்) (செங்கண் மால்–;-))
செய்ய வாயார், Seyya Vaayaar - சிவந்த அதரத்தையுமுடையரான பெண்கள்
மரகதம் போல், Maragatham Pol - மரகதப்பச்சை போலே பசுமையாய்
மடம், Madham - அழகியதான
கிளியை, Kiliyai - கிளிப்பிள்ளையை
கை மேல் கொண்டு, Kai Mel Kondu - தங்கள் கைகளின் மேல்வைத்துக்கொண்டு
தேன் போலும் மெல் மழலை, Then Polum Mel Mazhalai - தேன் போலினியமிருதுவான பேச்சை
புயிற்றும், Puyitrum - கற்பிக்கப்பெற்ற
தரணி ஆளன் தான் போலும் என்றுஎழுந்தான், Tharani Aalan Thaan Polum Endru Ezhunthaan - ‘(இராமனென்கிற ஒரு சிறு மனிசன்) பூமியையெல்லாம் தானே ஆள்பலனாக நினைத்து அஹங்காரப்படுகின்றான்;
அது கண்டு, Adhu Kandu - அதை அறிந்தும்
தரித்து இருப்பான், Thariththu Iruppaan - (அந்த ராமனைத் தண்டியாமல்) பொறுத்திருப்பவன்
அரக்கர் தங்கள் கோன்போலும், Arakkar Thangal Konpolum - ராக்ஷஸர்க்குத் தலைவனாவனோ’
என்று, Endru - என்றிப்படி நினைத்து
எழுந்தான், Ezhunthaan - கிளர்ந்தவனான இராவணனுடைய
குன்றம் அன்ன, Kundram Anna - மலைபோன்ற
இருபது தோள், Irupathu Thol - இருபது தோள்களையும்
உடன், Udan - ஏககாலத்தில்
துணித்த, Thuniththa - அறுத்தொழித்த
ஒருவன் கண்டீர், Oruvan Kandeer - தனிவீரன் காண்மின்.
1284பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே மகா பலி உடையனாய் தான் குறைவாளனாய் இரந்த-என்ன பிள்ளை தான்) 7
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன் மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால் செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-7
பதவுரை Show / Hide
கொங்கு அலர்ந்த, Kongu Alarntha - பரிமளம் பரவாநின்ற (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மால்;))
மலர் குழலார், Malar Kuzhalaar - பூக்களையணிந்த கூந்தலையுடையரான மாதர்களின்
கொங்கை தோய்ந்த, Kongai Thoyntha - தனங்களின் மீது படிந்த
குங்குமத்தின் குழம்பு, Kungumaththin Kuzhambu - குங்குமச்சாறு தன்னை
அளைந்த, Alaindha - அளைந்ததனாலுண்டான
கோலம் தன்னால், Kolam Thannal - அழகினால்
செம், Sem - சிவந்திருக்கிற
கலங்கல், Kalangal - வெள்ளமானது
வெண் மணல் மேல் தவழும், Ven Manal Mel Thavazhum - வெளுத்த மணற்குன்றுகளின் மேல் பரவப்பெற்ற
பொங்கு இலங்கு புரிநூலும் தோலும் தாழ, Pongu Ilangu Purinoolum Tholum Thaazha - மிக விளங்குகின்ற யஜ்ஞோப வீதமும் கிருஷ்ணாஜிநமும் தொங்கப்பெற்ற
பொல்லாத குறள் உரு ஆய், Polladha Kurall Uru Aay - அழகிய வாமநமூர்த்தியாகி
பொருந்தா வாணன், Porundha Vaanan - ஆஸுரப்ரக்ருதியான மஹாபலியினுடைய
மங்கலம் சேர் மறை வேள்வி அதனுள் புக்கு, Mangalam Ser Marai Velvi Adhanul Pukku - மங்களம் பொருந்திய வேத கோஷத்தையுடைய யாக பூமியிலே எழுந்தருளி
குறைமண்அகலம் இரந்த மைந்தன் கண்டீர், Kuraimanagalam Irandha Maindan Kandeer - தனக்கு வேண்டியதான பூமியையாசித்த சிறுககன் காண்மின்
கேளா, Kela - கேட்டு என்றபடி
1285பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர் இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும் சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-8
பதவுரை Show / Hide
இலங்கிய, Ilangiya - (பிரமாணங்களுள் சிறந்ததாக) விளங்குகின்ற (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மால்;))
நால் மறை அனைத்தும், Naal Marai Anaiththum - எல்லா வேதங்களும்
அங்கம் ஆறும், Angam Aarum - (வியாகரணம் முதலிய) ஆறு அங்கங்களும்
ஏழ் இசையும், Ezhu Isaiyum - ஸப்தஸ்வரங்களும்
கேள்விகளும், Kelvigalum - இதிஹாஸ புராணங்களும் (ஆகிய இவை)
எண் திக்கு எங்கும், En Thikku Engum - எட்டுத் திசைகளிலுமெல்லாம்
சிலம்பிய, Silambiya - கோஷம் செய்யப்பெற்றதும்
நல் பெரு செல்வம், Nal Peru Selvam - நல்ல அளவற்ற செல்வம்
திகழும், Thigazhum - விளங்கப்பெற்றதுமான
சிலம்பின் இடை, Silambin Idai - தண்டைச்சிலம்பின் நடுவிலிட்ட
சிறு பரல் போல், Siru Paral Pol - சிறிய பருக்காங்கல்போல
பெரிய மேரு, Periya Meru - பெருத்த மேருமலையானது
திரு குளம்பில், Thiru Kulambil - அழகிய குளம்பிலே
கணகணப்ப, Kanakanappa - கணகணவென்று ஒலிக்கும்படியாகவும்
திரு ஆகாரம் குலுங்க, Thiru Aakaram Kulunga - (திருமார்பில்) பிராட்டியிருக்குமிருப்பு குலுங்கும்படியாகவும்
நிலம் மடந்தைதனை, Nilam Madandhaithanai - பூமிப்பிராட்டியை
இடந்து, Idandhu - கோட்டால் குத்தியெடுத்து
புல்கி, Pulki - தழுவிக்கொண்டு
கோட்டிடை, Kottidai - கோரப் பல்லின்மீது
வைத்து அருளிய –, Vaithu Aruliyah - ஸ்தாபித்துக்கொண்ட
எம் கோமான் கண்டீர், Em Koman Kandir - எம்பெருமான் காண்மின்
1289பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இலங்கையைப் பற்றின ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக பிரதி பஷத்தின் மேலே கண் பாராதே அம்பை விட்ட ஸ்ரீ ஸ்வாமி) 2
கவ்வை வாள் எயிறு வன் பேய்க்கதிர் முலை சுவைத்து இலங்கை மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-2
பதவுரை Show / Hide
கவ்வை, Kavvai - ஆரவாரம்செய்பவளாய் (- (எவ்விடத்துள்ளானென்னில்;)? (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற கூர்மையான பற்களையுடையளாய்
வல் பேய், Val Pei - கல்நெஞ்சளான பூதனையினுடைய
கதிர் முலை, Kathir Mulai - (விஷத்தாலே) புகர் பெற்றிருக்கிற முலையை
சுவைத்து, Suvaiththu - உறிஞ்சி உண்டவனாயும்
இலங்கைவவ்விய, Ilankaiyavviya - லங்காபுரியைப் பற்றின
இடும்பை, Idumpai - (சாக்ஷஸப் பூண்டுகள் நெருங்கியிருத்தலாகிற) கேடானது
தீர, Theera - தொலையும்படியாக
கடுங் கணை, Kadung Kanai - கடுமையான அம்புகளை
துரந்த, Thurandha - (அவ்விலங்கையின் மீது) செலுத்தினவனாயுமுள்ள
எந்தை, Endhai - ஸ்வாமியானவன்
கொவ்வை வாய் மகளிர், Kovvai Vaai Makalir - கொவ்வைக்கனி போன்ற வாயையுடையரான பெண்கள்
கொங்கை, Kongai - (தங்கள்) கொங்கைத் தடத்தினின்று
குங்குமம், Kungumam - குங்குமச்சேறுகளை
கழுவி, Kazhuvi - கழுவ,
போந்த, Pondha - (அவற்றோடு கூடிப்) பெருகுகின்ற
தெய்வம் நீர், Deivam Neer - திவ்யமான தீர்த்தமானது
கமழும், Kamazhum - வாஸனை வீசப்பெற்ற
1291பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து இவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்) 4
தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப் பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத் தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-4
பதவுரை Show / Hide
தாங்க அரு சினத்து, Thanga Aru Sinatthu - (ஒருவராலும்) தாங்கமுடியாத கோபத்தையுடையதும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
வன் தாள், Van Thaal - வலியுள்ள கால்களையுடையதும்
தட கை, Thad Kai - பெரிய துதிக்கையையுடையதுமான
மா, Maa - (குவலயாபீடமென்னும்) யானையினுடைய
மருப்பு வாங்கி, Maruppu Vaangi - தந்தத்தைப் பிடுங்கிப் போட்டவனாயும்
பூ குருந்து ஒசித்து, Poo Kurunthu Osiththu - பூத்த குருந்த மரத்தை முறித் தொழித்தவனாயும்
புள் வாய் பிளந்து, Pul Vaai Pilandhu - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தவனாயும்
எருது அடர்த்த, Eruthu Adarththa - ரிஷபங்களை வலியடக்கினவனாயுமுள்ள
எந்தை, Endhai - எம்பெருமான
மா கனி நுகர்ந்த மந்தி, Maa Kani Nukarntha Mandhi - மாம்பழங்களைப் புஜித்த குரங்கானது
வந்து, Vandhu - (அந்த மாமரத்தினின்றும் வாழை மரத்திலே) வந்து சேர்ந்து
வண்டு இரிய, Vandu Iriya - (அங்கிருந்த) வண்டுகள் சிதறியோடும்படியாக
தீம் வாழை கனி நுகரும், Theem Vaalai Kani Nukarum - இனிய வாழைப் பழங்களைப் புஜிக்கப்பெற்ற
1292பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி தானான படியே யாக்கி விட்ட படி அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி – ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள ஸ்ரீ திரு நாங்கூர்) 5
கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-5
பதவுரை Show / Hide
கருமகள், Karumagal - சண்டாள ஸ்த்ரிபோல் மிகவும் தண்ணியளாய் (- (எவ்விடத்திலுள்ளானெனில்,) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
இலங்கை யாட்டி, Ilankai Yaatti - லங்காபுரிக்கு அதிகாரம் செலுத்துமவளாய்
பிலம் கொள் வாய்த் திறந்து தன்மேல் வருமவள், Pillam Kol Vayth Thirandhu Thanmel Varumaval - குஹைபோன்ற வாயைத் திறந்துகொண்டு தன்மேல் வந்தவளான சூர்ப்பணகையினுடைய
செவியும் மூக்கும், Seviyum Mookkum - காதையும் மூக்கையும்
வாளினால் தடிந்த எந்தை, Vaalinaal Thadindha Endhai - வாட்படையனால் அறுத்தொழிந்த ஸ்வாமி
பெரு மகள், Peru Magal - பெருமைதாங்கிய ஸ்த்ரியாயும்
பேதை, Pethai - (அடியாருடைய குற்றங்களை அறியாதவளாயுமிருக்கிற
மங்கை, Mangai - பூமிப்பிராட்டியும்
திரு மகள், Thiru Magal - பெரிய பிராட்டியும்
தன்னொடும் பிரிவு இலாத, Thannodum Pirivu Iladha - தன்னைவிட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவர்களாய்
மருவும், Maruvum - பொருந்தியிருக்கப்பெற்ற
1301பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராஜத் துரோகத்தைப் பார்த்தால் சம்பந்தம் உள்ள இடம் எங்கும் அழியச் செய்ய வேண்டி இருக்க அவன் தம்பிக்கே கொடுத்தான் ஆய்த்து) 4
முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு அனையவற்கு இளையவற்கே யரசு அளித்து அருளினானே சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்பு தேனுகரு நாங்கைக் கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4
பதவுரை Show / Hide
முனை முகத்து அரக்கண் மாள, Munai Mugaththu Arakkan Maala - யுத்தகளத்திலே இராவணன் முடியும்படியாக (- (காவளந்தண்பாடியாய்!;) (நீயே களைகண்))
பத்து முடிகள் அறுத்து வீழ்த்து, Paththu Mudigal Aruththu Veelththu - (அவனது) பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளி
ஆங்கு, Aangu - அந்த லங்கையிலே
அனையவற்கு இளையவற்கே, Anaiyavarkku Ilaiyavarkke - அப்படிப்பட்ட ராவணனுடைய தம்பியான விபீஷணனுக்கு
அரசு அளித்தருளினானே, Arasu Alitharulinane - ராஜ்யத்தைத் தந்தருளினவனே!,
சுனைகளில் கயல்கள் பாய, Sunaiyil Kayalgal Paaya - நீர்நிலைகளில் கயல்மீன்கள் அஞ்சித் துள்ளயோடும்படியாக
சுரும்பு தேன் நுகரும், Surumbu Then Nukarum - வண்டுகளானவை (ஆரவாரத்துடனே) தேனைப் பருகுமிடமான
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்
கனை கழல், Kanai Kazhal - ஒலிக்கின்ற வீரத்தண்டையை யுடையனாய்க் கொண்டு
1313பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவித்யா கர்மா வாசனா ருசி பகவத் அபசாராதிகள் பிராரப்த கர்மம் இவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே) 6
கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய் நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச் செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே –4-7-6
பதவுரை Show / Hide
கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய், Kallal Kadalai Anai Katti Uganthaa - கண்ட கற்களையுங்கொண்டு கடலிலே சேதுகட்டி மகிழ்ந்தவனே!
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர், Nallaar Palaar Vedhiyar Manniya Naangoor - விலக்ஷணரான பல வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில்
திருவெள்ளக் குளத்து உறைவானே, Thiruvellak Kulaththu Uraivaane - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே!
செல்வா, Selvaa - செல்வனே!
எல்லா இடரும் கெடும் ஆறு அருளாய், Ella Idarum Kedu Aaru Arulai - (எனது) துன்பங்களெல்லாம் தீரும்படி அருள்புரிய வேணும்.
1339பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன் ரஷணத்துக்கு பாங்கான இடம் -என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற கோயில்) 2
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக் கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித் தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-2
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற்காலத்தில்
ஆ நிரை மேய்த்து, Aa Nirai Maeyththu - (கோபாலகிருஷ்ணனாய்ப் பிறந்து) பசக்கூட்டங்களை மேய்த்தவனாயும்
அலை கடல் அடைத்திட்டு, Alai Kadal Adaiththittu - அலையெறிகின்ற கடலிலே அணைகட்டி (இலங்கையிற் சென்று)
அரக்கர்தம் சிரங்களை உருட்டி, Arakkartham Sirangalai Urutti - ராக்ஷஸர்களுடைய தலைகளை அறுத்துத் தள்ளினவனாயும்
கார்நிறை மேகம் கலந்தது, Kaarnirai Megam Kalandhadhu - கார்காலத்தில் திரண்டெழுந்த மேகத்தோடொத்த
ஓர் உருவம், Oru Uruvam - விலக்ஷணமான வடிவையுடையனாயுமிருக்கிற
கண்ணனார், Kannanaar - கண்ணபிரான்
கருதிய கோயில், Karuthiya Koyil - திருவுள்ளமுவந்த திவ்ய தேசம் (எதுவென்றால்)
நிரை பூ, Nirai Poo - வரிசை வரிசையாகப் பூத்திருக்கிற
செருந்தி, Serundhi - ஸுரபுன்னை மரங்களினுடையவும்
முத்து அரும்பி, Muthu Arumbi - முத்துப்போன்ற மொக்குகள் அரும்பியிருக்கிற
புன்னை, Punnai - புன்னை மரங்களினுடையவும்
பொதும்பிடை, Podumpidai - பொந்துகளிலே
1343பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ – என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்) 6
காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில் ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச் செற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –4-10-6
பதவுரை Show / Hide
பூளை காற்று இடை கரந்தன, Pooalai Kaatru Idai Karandhana - பூளைப்பூவானது பெருங்காற்றிலே உருமாய்ந்து ஒழிவதுபோல (- (திருவெள்ளியங்குடி அதுவே–.))
அரக்கர் கடல் சேனை அரந்தை உற, Arakkar Kadal Senai Arandhai Ura - ராக்ஷஸருடைய கடல் போன்ற சேனையானது துன்பமடையும்படியாகவும்
கூற்று இடை செல்ல, Koottu Idai Sella - யமனிடம் சென்று சேரும்படியாகவும்
கொடு கணை துரந்த, Kodu Kanai Thurandha - கொடிய அம்புகளைப் பிரயோகித்த
கோலம் வில் இராமன் தன் கோயில், Kolam Vil Iraman Than Koyil - அழகிய வில்லையுடைய இராமபிரானுடைய ஸந்நிதி (எதுவென்றால்);
ஊற்று இடை நின்ற வாழையின், Ootru Idai Nindra Vaalaiyin - நீரூற்று உள்ள நிலங்களிலே முளைத்திருக்கிற வாழை மரங்களினுடைய
ஊழ்ந்து வீழ்ந்தன கனிகள், Oozhndhu Veelndhana Kanigal - (கனியப்பழுத்து) இற்று உதிர்ந்த பழங்களை
கயல்கள், Kayalgal - கயல் மீன்கள்
மண்டி உண்டு, Mandi Undu - மேல்விழுந்து புஜித்து
சேற்றிடை உகள், Settridai Ugal - சேற்று நிலங்களிலே துள்ளி விளையாடப்பெற்ற
திகழ் வயல் சூழ், Thigazh Vayal Soozh - விளங்குகின்ற கழனிகளால் சூழப்பட்ட
1350பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராட்டி பக்கலிலும் ஆஸ்ரிதர் பக்கலிலும் ஒக்க வ்யாமோஹம் பண்ணுகிறவன் வர்த்திக்கிற தேசம்) 3
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம் காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும் பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-3
பதவுரை Show / Hide
மேவா அரக்கர் தென் இலங்கை வேந்தன் வீய, Meva Arakkar Then Ilankai Vendan Veeya - பகையே இயற்கையான ராக்ஷஸர்கள் நிறைந்த தென்னிலங்காபுரிக்கு அரசனான இராவணன் முடியும்படி (- (புள்ளம் பூதங்குடி –.))
சரம் துரந்த, Charam Durandha - அம்புகளைப் பிரயோகித்தவனும்
மா வாய் பிளந்து, Maa Vaai Pilanthu - குதிரை வடிவுடன் வந்த கேசியென்னு மசுரனுடைய வாயைக் கீண்டொழித்தவனும்
மல் அடர்த்து, Mal Adarthu - மல்லர்களை வென்றவனும்
மருதம் சாய்த்த, Marudham Saayththa - இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவனுமான
மாலது, Maaladhu - எம்பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாவது;-
கா ஆர் தெங்கின் பழம் வீழ, Kaa Aar Thengin Pazham Veela - தோட்டங்களில் நிறைந்திருக்கிற தென்னை மரங்களினின்றும் தேங்காய்கள் (இற்று) கீழே விழுந்ததனாலே
கயல்கள் பாய, Kayalgal Paaya - மீன்களானவை (அஞ்சி) துள்ளி அப்பால் ஓடப் பெற்றதும்
குருகு இரியும், Kurugu Iridum - நாரைகளானவை சிதறியோடப் பெற்றதும்
பூ ஆர் கழனி எழில் ஆரும், Poo Aar Kazhani Ezhil Aarum - தாமரை முதலிய பூக்கள் நிறைந்த கழனிகளினால் அழகு மிக்கதுமான
1351பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள தோள்கள் இருபதையும் துணித்த மிடுக்கை உடைத்தான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்) 4
வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம் கற்பார் புரிசை செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள் பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-4
பதவுரை Show / Hide
வெற்பால் மாரி பழுது ஆக்கி, Verpaal Maari Pazhuthu Aakki - கோவர்த்தன மலையினால் பெருமழையை (தடுத்து) வீணாக்கினவனும் (- (புள்ளம் பூதங்குடி))
விறல் வாள் அரக்கர் தலைவன் தன், Virhal Vaal Arakkar Thalaivan Than - பலிஷ்ட்டனான இராவணனுடைய
வற்பு ஆர் திரள் ஐ நான்கு தோளும் துணித்த, Varpu Aar Thiral Ai Naangu Tholum Thuniththa - திண்மை பொருந்திய திரண்ட இருபது தோள்களையும் அறுத்தொழித்த
வல் வில், Val Vil - வலிய சார்ங்கத்தையுடையவனான
இராமன் இடம், Iraman Idam - இராமபிரான் வாழுமிடமாவது;-
கற்பு ஆர் புரிசை செய் குன்றம், Karpu Aar Purisai Sei Kunram - சிறந்த தேலைப்பாடுகள் பொருந்திய திருமதிள்களாகச் செய்யப்பட்டிருக்கிற மலைகளினாலும்
கவின் ஆர் கூடம், Kavin Aar Koodam - அழகிய க்ருஹங்களினாலும்
மாளிகைகள், Maaligaihal - மாளிகைகளினாலும்
பொற்பு ஆர் மாடம், Porpu Aar Maadam - அழகிய மண்டபங்களினாலும்
எழில் ஆரும், Ezhil Aarum - சோபை பொருந்திய
1374பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் உடைய தலை பத்தையும் சின்னம் பின்னமாய் போம்படி யாக வில்லை வளைத்தவனே – என் பக்கலில் கிருபையை பண்ணி யருள வேணும்) 7
ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-7
பதவுரை Show / Hide
மாறு இல் சோதிய, Maaru Il Sothiya - ஒப்பற்ற ஒளியை யுடையனவாய் (- (திருவெள்ளறை, நின்றானே!;))
மரதகம் பாசு அடை, Maradhagam Paasu Adai - மரதகம் போன்ற பச்சிலைகளை யுடையனவான
தாமரை, Thamarai - தாமரைகளினுடைய
மலர், Malar - பூக்களில் நின்றும்
வார்ந்த தேறல், Vaarndha Therhal - பெருகின மகரந்தத்தை
மாந்தி, Manthi - பானம் பண்ணி
வண்டு, Vandu - வண்டுகள்
இன் இசை முரல், In Isai Murali - இனிய பண்களைப் பாடா நிற்கப்பெற்ற
அரக்கன் தன், Arakkan Than - இராவணனுடைய
நெடு முடி உடை, Nedu Mudi Udai - நீண்ட கிரீடங்களை யணிந்த
ஆறினோடு ஒரு நான்கு சிரம் எல்லாம், Aarinoodu Oru Naangu Siram Ellam - பத்துத்தலைகளும் ஒன்று தப்பாமல்
வேறு வேறு உக, Veeru Veeru Uga - தனித்தனியே அற்று விழும்படி
வில் அது வளைத்தவனே, Vil Adhu Valaithavaney - சார்ங்கத்தை வளைத்து அம்பெய்த பெருமானே!,
எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - என்விஷயத்தில் கிருபை பண்ணு
1381பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் சாய்ந்து அருளுகிற தேசம் என்னா நிற்பார்கள்) 4
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால் துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன் திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-4
பதவுரை Show / Hide
துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து மன் உச்சி திளைக்கும், Thulaikkai Yaanai Maruppum Akilum Konarnthu Man Ucchi Thilaikkum - துதிக்கையையுடைய யானைகளின் தந்தங்களையும் அகில் மரங்களையும் அடித்துக் கொண்டுவந்து முன்னே தள்ளி லீலாரஸமனுபவிக்கின்ற (- (தென் அரங்கம்) (இடம் எனபர்))
செல்வம் புனல் காவிரி சூழ், Selvam Punal Kaaviri Soozh - திவ்யமான தீர்த்தத்தையுடைய காவேரியினால் சூழப்பட்ட
வெம் போர் விளைத்த விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட, Vem Por Vilaittha Viral Vaal Arakkan Nagar Paazhpada - கடுமையான யுத்தத்தை உண்டாக்கின பலிஷ்டனான வாட்படைவல்லனான இராவணனுடைய நகரமாகிய லங்கை பாழாகும்படியாக
வளைத்த வல்வில் தட கையவனுக்கு, Valaitha Valvil Thada Kaiyavanukku - வளைக்கப்பட்ட வலியவில்லைத் தடக்கையிலே உடையவனான பெருமானுக்கு
1382பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வழி கெட அன்றிக்கே நேர் கொடு நேரே அம்பாலே அழியச் செய்த வீர ஸ்ரீ யால் குறை வற்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்) 5
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால் உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற் செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-5
பதவுரை Show / Hide
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும், Umbra Koonum Ulaku Ezhum Vandu Eendi Vanangum - தேவர்களுக்கு நிர்வாஹகனான பிரமனும் ஸப்த லோகங்களும் கிட்டி திரண்டு வணங்கப்பெற்றதாய் (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்))
நல் செம் பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர், Nal Sem Pon Aarum Mathil Soozhndhu Azhagu Aar - நல்ல செம்பொன்னோடு ஒத்த மதிள்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி கதாலன் வான் புக, Vambu Ulaam Koondhal Mandothari Kathaalan Vaan Puga - வாஸனை உலாவுகின்ற கூந்தலை யுடையளான மந்தோதரிக்குக் கணவனான இராவணன் வீர ஸ்வர்க்கமடையும்படியாக
அம்பு தன்னால் முனிந்த அழகன், Ambu Thannal Munintha Azhagan - பாணங்களினால் சீறிக்கொன்றொழித்த வீரச்ரியையுடையனான இராமபிரானது.
1385பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநேக அவதாரங்களைப் பண்ணிக் கொண்டு வந்து ரஷகன் ஆனவன் அவ்வவதார காலங்களிலே பிற் பாடர்க்கும் இழக்க வேண்டாத படி வந்து சந்நிஹிதனான தேசம் கோயில் -என்கிறார்) 8
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த் தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல் தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8
பதவுரை Show / Hide
வானும் மண்ணும் நிறைய புகுந்த ஈண்டி வணங்கும், Vaanum Mannum Niraiya Pugundha Eendi Vanangum - விண்ணுலகத்திலுள்ளாரும் மண்ணுலகத்திலுள்ளாரும் ஏராளமாக வந்து சேர்ந்து ஒன்றாகத்திரண்டு வணங்கப்பெற்றதும், (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்))
நல் தேனும் பாலும் கலந்தன்னவர், Nal Thenum Paalum Kalandannavar - மதுரமான தேனும் பாலும் ஒன்றாகச் சேர்ந்தாற்போலே ஏகரஸராயிருக்கிற பக்தர்கள்
சேர், Ser - சேர்ந்திருக்கப்பெற்றதுமான
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய், Eyanam Meen Aamaiyodu Ariyum Siru Kuralum Aay - வராஹமாகவும் மத்ஸ்ய கூர்மமாகவும் நரஸிம்ஹமாகவும் வாமநனாகவும் திருவவதரித்தவனாய்
தானும் ஆய, Thaanum Aay - ஸ்ரீராமபிரானாகவும் திருவவதரித்தவனான
தரணி தலைவன், Tharani Thalaivan - ஸர்வலோகேச்வரனுடைய
1399பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீஸ்ரீ இந்த லோகங்கள் ஏழையும் தன் வயிற்றிலே வைத்து ரஷிக்கச் செய்தேயும் ஒன்றும் செய்திலனாய் இருக்கையாலே உபகாரம் கொண்டார்க்கு பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டாத படி இருந்தவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 2
பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-2
பதவுரை Show / Hide
பேரானை, Peranai - திருப்பேர் நகரில் உறைபவனும் (- (கண்டது தென் அரங்கத்து))
குறுங்குடி எம் பெருமானை, Kurungudi Em Perumanai - திருக்குறுங்குடியி லெழுந்தருளியிருக்கும் ஸ்வாமி யானவனும்
திருத்தண்காலூரானை, Thiruthankalooranai - திருத்தண்காலில் நித்யவாஸம் பண்ணுமவனும்
கரம்பனூர் உத்தமனை, Karambanoor Uthamanai - திருக்கரம்பனூரில் உத்தமனாய் விளங்குபவனும்,
முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும், Muthu Ilangu Kaar Aar Thin Kadal Ezhum - (உள்ளே) முத்துக்கள் ஒளிவிடாநிற்பனவும் கருநிறம் மிக்கவையும் திடமுள்ளனவுமான ஸப்த ஸமுத்ரங்களையும்
ஏழ் மலை, Ezh Malai - ஸப்த குலாசலங்களையும்
இ ஏழ் உலகு, I Ezh Ulagu - இவ்வேழுலகங்களையும் (பிரளயகாலத்தில்)
உண்டும், Undum - அமுது செய்தும்
ஆராது என்று இருந்தானை, Aarathu Endru Irundhaanai - த்ருப்திபெறாதவனாய் இருந்தவனுமான பெருமானை
1402பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்குத்தை மர்யாதைகளைத் தப்பி-அவ்வருகே பட்டார்க்கு பிராப்யமான ஸ்ரீ பரம பதமுமாய் – அத்தை அவர்கள் பெறுகைக்கு உறுப்பாக-பிராமணர்கள் உடைய யாகங்களிலே மந்திர பூர்வமான ஹவிஸ் ஸூக்களை த்ரேத அக்னி முகத்தாலே புஜிக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 5
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன் ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே பேர் அழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின் ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5
பதவுரை Show / Hide
நீர் ஆய் அழல் ஆய் கெடு நிலன் ஆய் நின்றானை, Neer Aay Azhai Aay Kedu Nilan Aay Nindhiraanai - ஜலஸ்வரூபியாம் அக்நிஸ்வரூபியாயும் விசாலமான பூமிஸ்வரூபியாயும் இருப்பவனும், (- (கண்டது தென் அரங்கத்தே–.))
அன்று, Andru - ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த காலத்து
அரக்கன் ஊர், Arakkan Oor - இராவணனுடைய நகரமான இலங்கையை
கண்டார் பின் காணாமே, Kandaar Pin Kaanamae - முன்பு கண்டவர்கள் பின்பு காணவொண்ணாதபடி
அழலால் உண்டானை, Azhalaal Undaanai - அக்நிக்கு இரையாக்கினவனும்,
பேர் அழல் ஆய், Paar Azhai Aay - பெரியபடபாக்னி ஸ்வரூபியும்
பெரு விசும்பு ஆய், Peru Visumbu Aay - பரமபதத்துக்கு நிர்வாஹகனும்
பின், Pin - அதற்குமேலே,
மறையோர் மந்திரத்தின் ஆர் அழலால் உண்டானை, Maraiyore Mandiraththin Aar Azhalaal Undaanai - வைதிக ப்ராஹ்மணர்களினுடைய மந்த்ரபூதமான ஹவிஸ்ஸை அக்நிமுகத்தாலே அமுதுசெய்பவனுமான பெருமாளை
1412பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டவன் இன்னம் அப்படிக்கொத்த விரோதி வர்க்கம் வந்து கிட்டினால் போக்குகைக்காக இங்கே வந்து சந்நிஹிதன் ஆனவன்) 5
எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம் பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-5
பதவுரை Show / Hide
தானவர், Thaanavar - அசுரர்கள் (- (அரங்கம் மா நகர் அமர்ந்தான்))
நினைந்தால், Ninaindhaal - (இரணியன் பட்ட பாட்டைச் சிந்தித்தார்களாகில்
எங்ஙனே உய்வர், Engganey Uivar - எப்படி உயிர்தரித்திருப்பார்கள்!;
இரணியன், Iraniyan - ஹிரண்யாஸுரனுடைய
பூண் இலங்கு அகலம், Poon Ilangu Akalam - ஆபரணங்கள் விளங்கப்பெற்ற மார்வில் நின்றும்
பொங்கு வெம் குருதி, Pongu Vem Kuruthi - பொங்குகின்ற உஷ்ணமான ரத்தமானது
பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து, Pon Malai Pilanthu Pozhi Tharum Aruvi Othu - மேருமலையைப் பிளந்து கொண்டு வெள்ளமிடுகின்ற அருவி போன்று
இழிய, Izhaiya - பெருகும்படியாக,
வெம் கண், Vem Kan - தீக்ஷ்ணமான கண்களையும்
வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற பற்களையும் உடையதாய்
மா, Maa - பெரிதான
ஓர் வெள்ளி விலங்கல், Oor Velli Vilankal - ஒரு வெள்ளிமலையானது
விண் உற, Vin Ura - ஆகாசத்தைக்கிட்டி
கனல் விழித்து, Kanal Vizhithu - தீவிழிவிழித்து
எழுந்தது அங்ஙனே ஒக்க, Ezhunthathu Anggane Okka - எழுந்தால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்டதான
அரி உரு ஆனான், Ari Uru Aanaan - நரஸிம்ஹாவதாரமெடுத்தவன்
1414பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏதேனுமாக இட்ட தடையைக் கொண்டு ஆழக் கடவ கடல் வழி பட நீரிலே புக்கு அமிழக் கடவ மலைகள் மிதந்து அணையாக -கணக்கு வழக்குப்பட ஒரு வியாபாரம் பண்ண மாட்டாத வானர ஜாதியைக் கொண்டு அடிமை கொண்டு நீர்க் கிளப்பத்தை உடைத்தான கடலை அடைத்தான் –அரங்க மா நகர் அமர்ந்தானே) 7
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால் அரி குலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-7
பதவுரை Show / Hide
சுரி குழல் கனிவாய் திருவினை பிரித்த, Suri Kuzhal Kanivai Thiruvinai Piriththa - சிறந்த கூந்தலையும் கொவ்வைக்கனிபோன்ற அதரத்தையும் உடையளான பிராட்டியை வேறுபடுத்தின (- (கடலைக் கடக்கவேண்டிக் கடலரசனைநோக்கி) (அரங்கம் மா நகர் அமர்ந்தான்–.))
கொடுமையில் கடுவிசை அரக்கன், Kodumaiyil Kadhuvisai Arakkan - கொடுமையில் பெரிய வேகத்தையுடையனான இராவணனுடைய
எரி விழித்து இலங்கு மணிமுடி பொடி செய்து, Eri Vizhithu Ilangu Manimudi Podi Seidhu - அக்நிபோன்று விளங்கின மணிகளழுத்தின கிரீடங்களைப் பொடிபடுத்தி
இலங்கை, Ilankai - லங்காபுரியை
பாழ்படுப்ப, Paazhpaduppa - பாழாக்கி விடவேணுமென்று ஸங்கல்பித்து
வரி சிலை வளைய அடு சரம் துரந்து, Vari Silai Valaiya Adu Saram Thurandhu - அழகிய வில்லை வளைத்துக் கொலையம்புகளைப் பிரயோகித்து, (அவ்வளவிலே)
மறி கடல் நெறிபட, Mari Kadala Neripada - அலைமடிகின்ற கடல் வழிபட்டு அமைந்திட
அரி குலம் பணி கொண்டு அலை கடல் மலையால் அடைத்தான், Ari Kulam Pani Kondu Alai Kadala Malaiyaal Adaiththaan - வாநர ஸமூஹங்கள் கைங்கரியம் செய்யப் பெற்று அலைகடலை மலைகளினால் அணைகட்டின பெருமான்
1415பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய பிரகாசத்துக்கு அடைத்த சாலம் தன்னிலே அநேக ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே இருந்துள்ள புகரை உடைய ஸ்ரீ திரு ஆழியைக் கொண்டு அந்த ஆதித்யனை மறைத்தவன் – இந்த ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே முகக்கலாம் படி அளவு பட்டு இருக்கையாலே தமஸ்ஸூ போம்படியாய் இருக்கும் –- அங்கன் அன்றிக்கே ஸ்ரீ திரு ஆழி ஆழ்வான் தேஜஸ்ஸூ நேர் கொடு நேர் கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி மிக்கு இருக்கையாலே பளபளத்து கண்ணை இருளைப் பண்ணிற்று) 8
ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில் சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடுசரம் துரந்து பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-8
பதவுரை Show / Hide
ஊழி ஆய், Oozhi Aay - காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும நிர்வாஹகனாய் (- (அன்று அங்கு;) (அரங்கம் மா நகர் அமர்ந்தான்))
ஓமத்து உச்சி ஆய், Omaththu Uchi Aay - யஜ்ஞங்களுக்குத் தலைவனாய்
ஒருகால் உடைய தேர் ஒருவன் ஆய், Orukaal Udaiya Ther Oruvan Aay - ஒற்றைச் சக்கரத்தேர் வலவனான ஸூர்யனுக்கு அந்தராத்மாவாய்
உலகில், Ulagil - இவ்வுலகத்திலே,
சூழி மால் யானை, Sozhi Maal Yaanai - முகபடாத்தையுடைத்தாய்ப் பெரிதான ஸ்ரீகஜேந்திரத்தினுடைய
துயர் கெடுத்து, Thuyar Keduthu - துன்பத்தைப் போக்கினவனாய்
அன்று இலங்கை மலங்க அடு சரம் துரந்து, Andru Ilangai Malanga Adu Saram Thurandhu - முன்பொருகால் லங்காபுரியானது பங்கமடையுமாறு கொலையம்புகளைப் பிரயோகித்தவனாய்,
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி, Paazhiyaal Mikka Paarththanukku Aruli - வலிமைமிகுந்த அர்ஜுநனுக்கு அருள்கூர்ந்து
பகலவன் ஒளி கெட, Pagalavan Oli Keda - ஸூர்யன் ஒளிமழுங்கும்படி
பகலே, Pagale - பகற்போதிலேயே
ஆழியால் ஆழியை மறைத்தான், Aazhiyaal Aazhiya Maraitthaan - சக்கராயுதத்தினால் ஸூர்யனை மறைத்தவனான பெருமான்
1418பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தனை குறைவாளனை விஷயீ கரியாது ஒழிகிறது என் –என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது – இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால் இவள் வழியே போவான் ஒருவன் இறே – பிராட்டியை தோழி என்றும்-இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை – சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம் சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடக்குமா போலே சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக – ஸ்ரீ ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது உடையவன் ஆகையாலே-உடைமை தேட்டமாய் அன்றோ-இங்கு வந்து சாய்ந்து அருளிற்று) 1
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1
பதவுரை Show / Hide
ஆழி வண்ண, Aazhi Vanna - கடல்வண்ணனே! (- (அக்குஹனை நோக்கி) (நான் அவற்றில் ஈடுபட்டு))
அணிபொழில் திருஅரங்கத்து அம்மானே, Anipozhil Thiruarangathu Ammanae - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே!
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது, Ezhaik Aethalan Keel Magan Ennaathu - (இவன்) அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியிற் பிறந்தவன்’ என்று (குஹனுடைய தாழ்வுகளைக்) கருதாமல்
இரங்கி, Irangi - (அவன் மீது) கிருபை பண்ணி (அவனை உயிர்த்தோழனாக அங்கீகரித்து)
மற்று, Mattru - அதற்கு மேலே
அவற்கு, Avarukku - அந்தக் குஹப்பெருமான் விஷயத்தில்
இன் அருள் சுரந்து, In Arul Surandhu - இனிமையான கருணை மேன்மேலும் உண்டாகப்பெற்றவனாய்
மாழை மான் மட நோக்கி, Maazhai Maan Mada Nookki - மானின் பார்வைபோன்ற கபடமற்ற கண் பார்வையை உடையளான என் மனைவியாகிய இந்த ஸீதை
உன் தோழி, Un Thozhi - உனக்குத் தோழியாவாள்;
எம்பி, Embi - என் தம்பியான லக்ஷ்மணன்
உம்பி, Umbi - உன் தம்பியாவன்;
என்று, Endru - என்று சொல்லி
ஒழிந்திலை, Ozhinthilai - இவ்வளவோடு நீவிட்டிடாதவனாய்
உகந்து, Ugandhu - மகிழ்ச்சி கொண்டு
நீ எனக்கு தோழன், Nee Enakku Thozhan - ‘நீ எனக்கு நண்பன்
இங்கு ஒழி, Ingu Ozhi - இங்கே நின்றிடுவாயாக’
என்ற, Endra - என்றும் (நீ ஸ்ரீராமாவதாரத்திற்) சொல்லியருளிய
சொற்கள், Sorkkal - வார்த்தைகள்
வந்து, Vandhu - கர்ணபரம்பரையாய் என் கேள்விக்கு வந்து
அடியேன் மனத்து இருந்திட, Adiyen Manaththu Irundhida - அடியேனுடைய நெஞ்சிலே பொருந்தியிருக்க,
நின் அடி இணை அடைந்தேன், Nin Adi Inai Adaindhen - உனது திருவடிகள் இரண்டையும் சரணமாகப் பற்றினேன்
1419பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்ம வ்ருத்தங்களால் குறைய நின்ற ஸ்ரீ குஹப் பெருமாள் பக்கல் பண்ணின விஷயீ காரத்தை என் பக்கலிலே பண்ண வேணும் என்று சரணம் புக்கார் -கீழில் பாட்டில் மனுஷ்ய சஜாதீயத்வம் கிடக்கச் செய்தே வந்த நிகர்ஷம் இறே -கீழ்ச் சொல்லிற்று இங்கு விசஜாதியமான திர்யக்கை அகப்பட-தத்கத நிகர்ஷம் பாராதே விஷயீ கரித்த மாத்ரம் அன்றிக்கே அந்தபுர கைங்கர்யத்திலே ஏவி அடிமை கொண்டால் போலே என் அளவிலும் கைங்கர்யத்தைக் கொள்ள வேணும் -என்கிறார் – இவ்வதிகாரிக்கு விஷயீகார அநந்தரம் கைங்கர்யத்தில் அன்வயிக்கும் அத்தனை போக்கி சாதனத்தில் அன்வயிக்க வேண்டியது இல்லை போலே காணும் இங்கு ஒழி என்கிற இடத்தில் சொல்லிற்று இத்தனை இறே) 2
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2
பதவுரை Show / Hide
வாதம் மா மகன், Vadhama Maa Magan - வாயுதேவனது பெரிய குமாரனான அனுமான் (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!-;) (அடி இணை அடைந்தேன்–.))
மற்று ஓர் சாதி விலங்கு மற்கடம் என்று ஒழிந்திலை, Mattru Oru Saadhi Vilangu Markadham Endru Ozhindilai - வேறு ஜாதியிற் பிறந்தவனென்றும், அதிலும் பகுத்தறிவில்லாத மிருகமென்றும், அதிலும் பலவகைப் பொல்லாங்குகளையுடைய குரங்கென்றும் (அவனது இழி குணங்களைப் பாராட்டி) விட்டிடாதவனாய்
உகந்து, Ugandhu - அவனிடம் அன்புவைத்து
காதல் ஆதரம் கடலினும் பெருக, Kaadhal Aadharam Kadalinum Peruga - அன்பும் ஆசையும் கடலைக் காட்டிலும், அதிகமாக வளர
செய், Sei - (நமக்கு இவன்) செய்த
தகவினக்கு, Thagavinaikku - உபகாரங்களுக்கு
கைம்மாறு இல்லை, Kaimaarru Illai - பிரதியுபகாரம் இல்லை’
என்று, Endru - என்று திருவுள்ளம் பற்றி
கோது இல் வாய் மையினாயொடும் உடனே உண்பன் நான், Kothu Il Vaai Maiyinayodum Udaney Unban Naan - குற்றமற்ற மெய்ம்மொழிகளை யுடையனான உன்னோடு உடனிருந்து உண்பேன்யான்’
என்ற, Endra - என்று (அவ்வனுமானைக் குறித்துக்) கூறியருளின
ஒண் பொருள், On Porul - சிறந்த விஷயம்
எனக்கும் ஆதல் வேண்டும் என்று, Enakkum Aadhai Vendum Endru - எளியனான அடியேன் விஷயத்திலும் உண்டாகவேண்டும் என்றெண்ணி
1428பெரிய திருமொழி || 1
கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன் பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும் செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர் பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே –5-9-1
பதவுரை Show / Hide
ஐக இலங்கு அழி சங்கன், Aika Ilangu Azhi Sangan - திருக்கையிலே விளங்குகின்ற திருவாழி திருச்சங்கையுடையவனும்
கரு முகில் திரு நிறத்தன், Karum Mukil Thiru Niraththan - காளமேகம்போன்ற திருநிறத்தை யுடையவனும்
பொய் இலன், Poi Ilan - (சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ள வைலக்ஷண்யங்களில்) பொய்யில்லாதவனும்
மெய்யன், Meiyyan - (அந்த வைலக்ஷண்யங்களைத் தன்னடியார்கட்கு) மெய்யே காட்டிக் கொடுப்பவனும்
தன் தாள் அடைவர் ஏல் அடிமை ஆக்கும், Than Thaal Adaivar Ael Adimai Aakkum - (யாராவது) தன் திருவடிகளைப் பணிவாராகில் (அவர்களை) நித்ய கைங்கரிய நிஷ்டராக ஆக்கிக் கொள்பவனும்,
அலர் கமலம் ஓங்கு செய், Alar Kamalam Ongu Sei - மலர்ந்த தாமரைகள் உயர்ந்திருக்கப்பெற்ற கழனிகளையும்
செறி பொழில், Serri Pozhil - அடர்ந்த சோலைகளையும் உடைத்தான
தென் திருப்பேர், Then Thiruppaer - தென்திருப்பேர் நகரில்
பை அரசு அணையான், Pai Arasu Anaithyaan - பரந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனமான பெருமானுடையனுமான பெருமானுடைய
நாமம் நான் பரவி உய்ந்த ஆறு ஏ, Naamam Naan Paravi Uyndha Aaru Ae - திருநாமங்களை நான் சொல்லி உஜ்ஜீவித்தபடி என்னே!.
1433பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய அவ் ஊருக்கு கணையம் போலே இருக்கிற தோள்களைத் துணித்தான் ஆய்த்து) 6
விலங்கலால் கடலடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லால் இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புய்ம் துணிந்தான் நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே –5-9-6
பதவுரை Show / Hide
விளங்கு இழை பொருட்டு, Vilangu Izhai Porutthu - விளங்குகின்ற ஆபரணங்களை அணியத்தகுந்தவளான பிராட்டிக்காக (- (இலங்காபுரியிற் புகுந்து) (எழுந்தருளியிருக்கப்பெற்ற),-)
விலங்கலால், Vilankalaal - மலைகளினால்
கடல், Kadal - தெற்குஸமுத்ரத்தை
அடைத்து, Adaiththu - அணை செய்து
இலங்கை மா நகர்க்கு இறைவன், Ilangai Maa Nagarkku Iraivan - (அந்த) அலங்கையென்னும் பெரியபட்டணத்திற்குத் தலைவனான இராவணனுடைய
இருபது புயம், Irupadhu Puyam - இருபதுதோள்களை
வில்லால், Villaal - (தனது) சார்ங்கத்தினால்
துணித்தான், Thuniththaan - அறுத்தொழிந்த பெருமான்
நலம் கொள், Nalam Kol - நல்லொழுக்கமுடையராய்
நால் மறை வல்லார்கள், Naal Marai Vallarhal - நான்கு வேதங்களிலும் வல்லவர்களான அந்தணர்கள்
ஓத்து ஒலி ஏத்த, Ooththu Oli Aetha - வேதகோஷங்களைச் செய்து கொண்டிருக்க
கேட்டு, Kaettu - அவ்வொலியைக் கேட்டு
மலங்கு, Malangu - மீன்களானவை
பாய், Paai - அஞ்சித் துள்ளயோடப் பெற்ற
வயல், Vayal - கழனிகளையுடைத்தான
திரு பேர், Thiru Per - திருப்பேர்நகரை
மருவி நான் வாழ்ந்த ஆறு ஏ, Maruvi Naan Vazhndha Aaru Ae - அடைந்து நான் வாழ்ச்சி பெற்றவிதம் என்னே!.
1443பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெம்மையை உடைத்தாய் நிலம் தன்னையே விறகாகப் பற்றி எரிகிற காட்டிலே உலாவினவர் அப்பிராட்டியோடே புணர்ந்து சமஸ்த கல்யாண குணாத்மகன் வர்த்திக்கிற தேசம்) 6
தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள் வெம்பி யெரி கானக முலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான் கொம்புகுதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழிலார் புறவு சேர் நம்பி உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-6
பதவுரை Show / Hide
முன் நாள், Mun Naal - முன்பொருகால் (- (அதனைக் கேட்டு) (நந்திபுர விண்ணகரம் மனமே! நண்ணு–.))
தாம் ஒருவர், Thaam Oruthar - லோகவிலக்ஷணராகத் திருவவதரித்த ஸ்ரீராமபிரானாகிய ஒருவர்
தம்பியொடு, Thambiyodu - தம்பியான லக்ஷ்மணனும்
தன் காதல் துணைவி, Than Kaadhal Thunaivi - தனது காதலே வடிவெடுத்த பத்னியான ஸீதையும்
துணை ஆக, Thunai Aaga - ஸஹாயமாகக் கூடவர,
வெம்பி எரி கானகம், Vembi Eri Kaanagam - தீக்ஷ்ணமாய்ப் பற்றியெரிகின்ற காட்டிலே
உலாவும் அவர் தாம், Ulaavum Avar Thaam - உலாவினவர்
இனிது மேவு, Inidhu Mevu - போக்யமாகப் பொருந்தி வர்த்திக்கப்பெற்ற
நகர் தான், Nagar Thaan - திவ்ய தேசமாயும்
குயில், Kuyil - குயில்களானவை
கொம்பு, Kombu - கிளைகளில் நின்றும்
குதிகொண்டு, Kudikondru - குதித்து
கூவ, Koova - கூவுதல்செய்ய
மயில் ஆலும், Mayil Aalum - மயில்கள் கூத்தாடப்பெற்ற,
எழில் ஆர், Ezhil Aar - அழகுபொருந்திய
பறவு சேர், Paravu Ser - சோலைகளை யுடையதாயும்
நம்பி, Nambi - ஸகல கல்யாணகுண பூர்ணனான எம்பெருமான்
உறைகின்ற நகர், Uraikindra Nagar - நித்யவாஸம் பண்ணுமிடமாயுமிருக்கிற
1463பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மதிளையும் அரணாகப் போம் படி கடலையும் உடைய இலங்கையை அழியச் செய்த – அந்த வில் கொண்டு வியாபாரிக்க அங்கே வந்து முகம் காட்டப் பெற்றது இல்லை என்ன அந்த பிரதி பஷத்தை அழியச் செய்து அங்கனே போனாயோ-போக்குக் காட்டி இங்கே அன்றோ வந்து புகுந்தது) 6
கல்லா ஐம் புலன்கள் வவை கண்டவாறே செய்யகில்லேன் மல்லா மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-6
பதவுரை Show / Hide
கல்லா, Kallaa - (சாஸ்த்ர நெறியில் நிற்கமாட்டாத) கல்விபயிரா (- (திருவிண்ணகர்மேயவனே!- ;) (நின் அடைந்தேன்-.))
ஐம்புலன்கள் அவை, Aimpulankal Avai - பஞ்சேந்திரியங்களானவை
கண்ட ஆறு, Kanda Aaru - செய்ய நினைத்தவிதமாக
செய்யகில்லேன், Seyyakillein - நான் செய்யமாட்டுகின்றிலேன்;
மல்லர், Mallaiyar - வலிமையுள்ள பெருமானே!,
மல் அமருள், Mal Amarul - மற்போரில்
மல்லர் மாள, Mallaiyar Mal - (சாணூரன் முதலிய) மல்லர்கள் முடியும்படியாக
மல் அடர்த்த, Mal Atartta - (அவர்களுடைய) வலியையழித்த
மல்லா, Malla - மல்தொழில் வல்லவனே!,
மல்லம் அம் சீர், Mallam Am Cir - மிகவும் அழகிய செல் வத்தையுடைத்தாய்
மதிள், Matil - மதிள்களால் சூழப்பட்டதாய்
நீர், Nir - சுற்றிலும் நீர்க்கோட்டையை யுடைத்தான
இலங்கை, Ilankai - லங்காபுரியை
அழித்த, Alitta - நாசம்செய்த
வில்லா, Villa - சார்ங்கத்தையுடையவனே!
1472பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரு மிடுக்கனான ராவணனை அழியச் செய்த வருத்தம் உண்டோ என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சேர விட்டுக் கொள்ளுகைக்கு –எனக்காக வந்து நிற்கிற இடம் ஸ்ரீ திருவிண்ணகர் -என்கிறார்) 5
மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான் வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச் செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே –6-3-5
பதவுரை Show / Hide
வற்றா நீள் கடல் சூழ், Vatraa Neel Kadal Sooz - ஒருநாளும் வற்றாத பெரியகடலால் சூழப்பட்ட
இலங்கை, Ilankai - லங்காபுரியில்
இராவணனை, Iravanai - ராவணனை
செற்றாய், Settrai - கொன்றொழித்தவனே!,
கொற்றவனே, Kotravaney - தேவாதிதேவனே!
மற்று ஓர் தெய்வம் எண்ணேன், Mattru Oru Deivam Ennen - வேறொரு தெய்வத்தை நெஞ்சிலும் நினைப்பேனல்லேன்;
எம்பெருமான், Emperumaan - ஸ்வாமிந்!
உன்னை, Unnai - உன்னை
என் மனத்து வைத்து, En Manaththu Vaiththu - எனது நெஞ்சில் இருத்தி
பெற்றேன், Petren - ஒரு பேறுபெற்றேன்;
பெற்றதுவும், Pettrathuvum - அப்படி நான் பெற்ற பேறாவது
பிறவாமை, Piravaamai - இனிப் பிறப்பில்லாமையே.
1483பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சகல தாபமும் ஆறும்படியான ஜல சம்ருத்தியை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரை நாம் புக்கு ஆஸ்ரயிப்போம் – பொருந்தாத ராவணனை அழியச் செய்து ஸ்ரீ விபீஷணனுக்கு புகலாய் நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைப் போலே நம்முடைய விரோதியை வாசனையோடே போக்குகைக்கு ஈடான பெரு மிடுக்கனானவன் வந்து வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே போய்ப் புகுவோம்) 6
மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன் தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான் நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6
பதவுரை Show / Hide
மின் நேர், Min Ner - மின்னல்போன்ற இடையையுடையரான மாதர் (முன்பு வைத்திருந்த) ப்ரீதியை (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு.-))
மாற்றி இருந்து, Maatri Irundhu - தீவிர்ந்தவர்களாய்க் கொண்டு
நீர், Nir - (கிழவரான) நீங்கள்
இருமி, Irumi - இருமிக்கொண்டு
எம்பால் வந்தது என் என்று, Embaal Vandhadhu En Endru - ‘எங்களிடம் வந்தது ஏதுக்காக!’ என்று
இகழாத முன், Ikazhaadha Mun - திரஸ்கரிப்பதற்கு முன்னே
தொல் நீர் இலங்கை, Thol Neer Ilangai - கடல்சூழ்ந்த லங்காபுரி
மலங்க, Malanga - வியாகுலப்படும்படி
விலங்கு, Vilangu - (அனமானாகிற) வானர வீரனைக்கொண்டு
எரி ஊட்டீனான், Eri Oottinaan - தீமூட்டிவிட்ட பெருமானுடையதாய்
நல் நீர், Nal Neer - நல்ல தீர்த்தங்களையுடைத்தான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1486பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டிக்காக பரிகிரஹித்தான் என்கிற பெருமையை உடைய ஸ்ரீ திரு நறையூரை அவள் பரிகர பூதரான நாம் போய் ஆஸ்ரயிப்போம்) 9
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன் பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம் நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9
பதவுரை Show / Hide
கனி சேர்ந்து, Kani Serndhu - கோவைப்பழத்தோடொத்து (- (தளர்ந்து இளையாத முன்-;) (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு,-))
இலங்கு, Ilangu - விளங்காநின்ற
நல் வாயவர், Nal Vaayavar - அழகிய அதரத்தையுடையரான பெண்கள்
காதன்மை விட்டிட, Kaadhanmai Vittida - (வைத்திருந்த) ப்ரீதியை விட்டொழிக்கும்படியாக
உடலம், Udalam - சரீரமானது
குனி சேர்ந்து, Kuni Serndhu - கூன்வளைந்து
கோவில், Kovil - தடியோடுகூடி
விசும்பில், Visumbil - ஆகாசத்தில்
பால், Paal - பால் போன்று
பனி சேர், Pani Ser - குளிர்ச்சி பொருந்தியவனான
மதி, Madhi - சந்திரனுடைய
கோள், Kol - துன்பத்தை
விடுத்தான், Viduththaan - போக்கின பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாய்
நனி சேர், Nani Ser - பெருமை பொருந்தியதான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
1490பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்தஸ்ரீ தசரதாத்மஜன் வர்த்திக்கிற ஊர்) 3
ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர் மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே –6-5-3
பதவுரை Show / Hide
ஆனை புரவி தேரொடுகாலாள் அணிகொண்ட, Aanaipuravi Therodukalaal Anikonda - யானைகளும் குதிரைகளும் தேர்களும் காலாள்களுமாக அணிவகுக்கப்பட்ட
சேனை தொகையை சாடி, Senaithogaiyai Saadi - சேனைக் கூட்டத்தைச் சிதைத்து
இலங்கை செற்றான், Ilankai Settran - இலங்காபுரியை அழித்த பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்)
மீனை, Meenai - மீன்களை
தழுவி, Thazhuvi - (பிடிப்பதற்காக) இரண்டு கைகளாலும் அணைத்து
வீழ்ந்து, Veelndhu - (பின்பு அவற்றால் தள்ளுண்டவர்களாய்க்)கீழே விழுந்து
எழும், Ezhum - (பின்னும் அவற்றைப் பிடிக்க ஆசையினால்) எழுந்திருக்கிற
மீனவர்க்கு, Meenavarkku - உழவர்களுக்கு
அலமந்து, Alamandhu - அஞ்சி
ஆமை, Aamai - ஆமையானது
நானம் புதலில், Naanam Puthalil - மஞ்சள் புதரிலே
ஒளிக்கும், Olikkum - ஒளிந்துகொள்ளுமிடமான
நறையூர், Naraiyoor - திருநறையூராம்.
1505பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணன் இடைப் பெண்கள் உடைய துகில்களையும் வளைகளையும் வாரிக் கொடு வருகிற வரவோடு வாசி அற –உத்தேச்யமாய் இருக்கிற படியை சொல்லிற்று -கீழ்ப் பாட்டில் – இப்பாட்டில் –ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கும் இருப்போடு ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த செயலோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிற படி சொல்லுகிறது) 8
முருக்கிலங்கு கனித்துவர்வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச் செருக்களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8
பதவுரை Show / Hide
முருக்கு, Murukku - முருக்கம்பூப்போலவும் (- (சோழன், சேர்ந்த கோயில் திருநறையூர்) (மணிமாடம் சேர்மின்கள்-.))
இலங்கு கனி, Ilangu Kani - விளங்குகின்ற (கோலைப்) பழம்போலவும்
துவர், Thuvar - சிவந்திருக்கிற
வாய், Vaai - அதரத்தையுடையளான
பின்னை, Pinnai - நப்பின்னைப்பிராட்டிக்கு
கேள்வன், Kelvan - நாயகனும்,
முன், Mun - முன்பொருகாலத்தில்
மன் எல்லாம், Man Ellam - க்ஷத்ரியர்களெல்லாரும்
அவிய, Aviy - ஒழியும்படியாக
வென்றி செரு களத்து, Vendri Seru Kalathu - வெற்றி தரவல்ல போர்க்களத்திலே
சென்று, Sendru - போய்
செற்றம் வேந்தன், Settram Vendan - மாற்றரசனான கார்த் வீரியார்ஜுனனுடைய
திறல் அழிய, Thiral Azhiya - மிடுக்கு அழியும்படியாக
சிரம் துணித்தான், Siram Thuniththan - (அவனது) தலையைத் துணித்தவனுமான ஸர்வேச்வரனுடைய
திரு அடி, Thiru Adi - திருவடிகளை
நும் சென்னி வைப்பீர், Num Senni Vaippir - உங்கள் தலைகளிலே அணிந்துகொள்ள விருப்பமுடையவர்களே!
இருக்கு, Irukku - வேதத்தில்
இலங்கு திருமொழி, Ilangu Thirumozhi - சிறந்தவையான புருஷஸூக்தம் முதலிய பாகங்களை
வாய், Vaai - வாயிலே உடையவனாய்
ஏண் தோள், Aen Thol - எட்டு புஜங்களையுடையனான
ஈசற்கு, Eesarku - சிவபிரானுக்கு
எழில், Ezhil - அழகிய
எழுபது மாடம், Ezhupathu Maadam - எழுபது ஆலயங்களை
செய்து, Seithu - நிருமணம் செய்வித்து
உலகம் ஆண்ட, Ulagam Aanda - உலகத்தைப் பரிபாலனம் பண்ணின
திரு குலத்து, Thiru Kulathu - உயர்ந்த குலத்திற் பிறந்தவனாய்
வளம், Valam - செல்வம் மிக்கவனான
1522பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வருகிற ஸ்ரீ விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று ஸ்ரீ மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க அவனைக் கை கொள்ளுகை தவிரோம் – என்று ஸ்ரீ பெருமாளும் நிர்பந்திக்க ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது -இது ஒரு படியாலும் தவிரோம் என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-நான் அவனைத் தேடி ஸ்ரீ நறையூரிலே காணப் பெற்றேன்) 5
கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன் வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5
பதவுரை Show / Hide
கல் ஆர் மதிள் சூழ் கடி, Kal Aar Mathil Soozh Kadi - கற்களால் கட்டப்பட்ட மதிள்களால் சூழப்பட்ட (- (நாடி, நறையூரில் கண்டேன்-.))
இலங்கை கார் அரக்கன், Ilankai Kaar Arakkan - அருணுடைத்தான லங்காபுரியிலுள்ள நீசனான ராக்ஷஸராஜனுடைய
வல் ஆகம் கீள, Val Aagam Keela - மிடுக்குடைய சரீரம் தொலையும்படி
வரி வெம் சரம் துரந்த, Vari Vem Saram Thurandha - அழகிய வெவ்விய அம்புகளைப் பிரயோகித்த
வில்லானை, Villaanai - சார்ங்கத்தை யுடையவனும்
செல்வம் விபீடணற்கு, Selvam Vibeedanarku - ஸ்ரீமானான விபீஷணாழ்வானுக்கு
வேறுஆக, Veeraga - விலக்ஷணமாக
நல்லானை, Nallaanai - அன்பனுமான எம்பெருமானை
1529பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜனனி என்று வாசி பார்க்க மாட்டாமையாலே மிக்க பழியைத் தரித்து இருப்பானாய் முன்கை மிடுக்காலே தோன்றின படி நடந்து திரிகிற ராவணன் உடைய தலைகள் சிதறும்படியாக – எதிரிகளை அம்பாய் நலிகை அன்றிக்கே நெருப்பாக சுடுகிற அம்புகளை நடத்தினவன் உடைய) 2
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திரு நறையூர் பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே –6-9-2
பதவுரை Show / Hide
கழி ஆரும், Kazhi Aarum - உப்புக்கழிகளிலே நிரம்பியிருக்கின்ற (- (அடி இணையே, நெஞ்சே! அடை-.))
கனம் சங்கம், Kanam Sangam - கனத்த சங்குகளானவை
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும்
கலந்து, Kalandhu - வந்துசேர்ந்து
நிறைந்து, Niraindhu - வரிசை வரிசையாக இருந்து
ஏறி, Eri - பாய்ந்து
வழி ஆர, Vazhi Aara - வீதிகள் நிறையும்படியாக
முத்து, Muthu - முத்துக்களை
ஈன்று, Eendru - கரந்து
வளம் கொடுக்கும், Valam Kodukkum - (இப்படி) செல்வமளிக்கப்பெற்ற
திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில்,-
பழி ஆரும், Pazhi Aarum - மிகுந்த அபவாதத்தையுடையனாய்
விறல், Viral - பலிஷ்டனான
அரக்கன், Arakkan - இராவணனுடைய
பரு முடிகள் அவை சிதற, Paru Mudigal Avai Sidhara - பருத்த (பத்துத்) தலைகளும் சிதறும்படியாக
அழல் ஆகும், Azhai Aakum - நெருப்புப்போன்ற
சரம், Saram - அம்புகளை
துரந்தான், Durandhaan - பிரயோகித்த பெருமானுடைய
1535பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலை போலே தர்ச நீயமான திரு மணி மாடக் கோயிலின் உள்ள அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நிலையார நின்றான் ஆய்த்து- நிற்கிற போதை அழகைக் கண்டு-இவன் இருத்தல் சாய்ந்து அருளுதல் செய்து இவ் வழகை இழக்க வரில் செய்வது என்-என்று துணுக் துணுக் என்ன வேண்டும்படியாய் இருக்கும் – மலையை ஒக்க ஒக்கத்தை உடையதாய் அழகை உடைய மணி மாடங்கள் மிக உடைய ஸ்ரீ திருநறையூரில் மன்னி நிலையார நின்றான்) 8
குலையார்ந்த பழுக் காயும் பசும் காயும் பாளை முத்தும் தலையார்ந்த விளங்கனியின் தடஞ்சோலைத் திருநறையூர் மலையார்ந்த கோலஞ்சேர் மணி மாடம் மிக மன்னி நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –6-9-8
பதவுரை Show / Hide
குலை ஆர்த்த பழுக்காயும், Kulai Aartha Pazhukkaiyum - குலைகுலையாக நிறைந்து படுத்த காய்களும் (- (தட சோலை திரு நறையூர் -!) (நெஞ்சே! அடை-.))
பசுங்காயும், Pasungaiyum - பழுக்கப்போகிற காய்களும்
பாளை முத்தும், Paalai Muththum - பாளைகளிலுண்டான முத்துக்களும்
தலை ஆர்ந்த, Thalai Aarntha - தலைகளிலே நிறைந்திருக்கப்பெற்ற
இள கமுகின், Ila Kamugin - இளைய பாக்குமரங்களையுடைய
மலை ஆர்த்த கோலம் சேர், Malai Aartha Kolam Ser - மலைபோன்று அழகு பொருந்திய
மணி மாடம், Mani Maadam - மணிமாடக்கோயிலில்
மிக மன்னி, Miga Manni - மிகவும் பொருந்தி
நிலை ஆர நின்றான் தன், Nilai Aara Nindraan Than - ஸ்திரமாக நிற்கும் பெருமானுடைய
நீள் கழலே, Neel Kazhale - நீண்ட திருவடிகளையே
1538பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்கள் இட்ட அரண் அழியும்படியாக குரூரமான ராஷசர் திரண்ட இலங்கையை அழியச் செய்து அத்தால் வந்த வீர ஸ்ரீ யால் குறைவற்றவன் – பரப்பை உடைத்தான பூமியை அடைய இரண்டு அடியாலே அளந்த அத்புத கர்மத்தால் குறைவற்றவன் – கண் வளர்ந்து அருளுகிற போதை அழகாலே பூரணன் ஆனவன் –- சம்சாரிகளாய் குறைவே நிரூபகமாம் படி இருக்கிற நம்முடைய குறைவு தீர்க்கைக்கு அடியான பௌஷ்கல்யத்தை உடையைவன் – அவனுடைய பேர் சொல்லில் -நமோ நாராயணமே) 1
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக் கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1
பதவுரை Show / Hide
குடந்தை மேவி கிடந்த நம்பி, Kudandhai Mevi Kidandha Nambi - திருக்குடந்தையிலே பொருந்திப் பள்ளிகொண்டிருக்கின்ற ஸ்வாமியாயும்
கேழல் ஆய் உலகை இடந்த நம்பி, Kezhal Aayi Ulagai Idantha Nambi - வராஹரூபியாகி பூமியை (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த ஸ்வாமியாயும்
எங்கள் நம்பி, Engal Nambi - எங்களுடைய குறைகளைத் தீர்க்க வல்லவனாயும்
எறிஞர் அரண் அழிய, Erinjir Aran Azhiya - சத்துருக்களினுடைய கோட்டை அழியும்படியாக
கடியார் இலங்கை கடந்த நம்பி, Kadiyaar Ilangai Kadandha Nambi - கடூரமானதன்மையுடைய அரக்கர் வாழும் இலங்கையை நாசஞ்செய்த ஸ்வாமியாயும்
உலகை ஈர் அடியால் நடந்த நம்பி, Ulagai Eer Adiyaal Nadandha Nambi - லோகங்களை இரண்டடியாலே அளந்துகொண்ட ஸ்வாமியாயுமிருக்கிற ஸர்வேச்வரனுடைய
நாமம், Naamam - திருநாமத்தை
சொல்லில், Sollil - சொல்லப்பார்க்கில்
நமோ நாராயணமே, Namo Narayaname - (அது) பெரிய திருமந்திர மாகும்.
1541பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தமையன் பக்கல் த்வேஷம் மிக்கு இருக்குமா போலே யாய்த்து இவன் பக்கல் ராகம் மிக்கு இருக்கும் படி – முதலிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் பரிவை இவன் ஒருவன் பக்கலிலும் பண்ணினவன் உடைய நாமம் சொல்லில் – நமோ நாராயணமே –வாத்சல்யத்துக்கும் வாசகம் இறே) 4
கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள் எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன் வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-4
பதவுரை Show / Hide
கல் ஆர் மதிள் சூழ் கச்சிநகருள், Kal Aar Mathil Soozh Kachinagarul - கருங்கல்லால் கட்டப்பட்ட திருமதிள்களால் சூழப்பட்ட காஞ்சீபுரத்தில் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே -.))
நச்சி, Nachchi - வஸிக்கவிரும்பி
எல்லா உலகும் வணங்க, Ella Ulagum Vananga - லோகமெல்லாம் வணங்குமாறு
பாடகத்துள், Paadakaththul - திருப்பாடமென்னுந் திருப்பதியில்
இருந்த, Irundha - வீற்றிருக்கின்ற
அம்மான், Ammaan - ஸ்வாமியும்,
இலங்கை கோன், Ilankai Kon - லங்காதிபதியான ராவணனுடைய
வல் ஆள் ஆகம், Val Aal Aagam - மிகவும் பலிஷ்டமான சரீரத்தை
வில்லால் முனிந்த, Villal Munintha - வில்லாலே சீறியழித்த
எந்தை, Endhai - ஸ்வாமியும்
விபீடணற்கு நல்லானுடைய, Vipeedanarku Nallaanudaiya - விபீஷணாழ்வான் விஷயத்தில் நன்மை புரிந்தவனுமான எம்பிரானது
1542பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டு மிருத்யு ராஷசரைக் கிட்ட அஞ்சி யாய்த்து இருப்பது – இப்போது பெருமாள் தோளை அண்டை கொண்டு அத்தாலே பொருந்தி புஜியா நிற்கும் ஆய்த்து – இதுவே ஸ்வ பாவமாம் படி பண்ணினவன்உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே) 5
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5
பதவுரை Show / Hide
முன், Mun - முன்பொருகாலத்தில் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.))
குடை ஆம் வரையால், Kudai Aam Varaiyaal - குடையாகக்கொண்ட கோவர்த்தநகிரியினால்
நிரை, Nirai - பசுக்கூட்டங்களை
காத்தபெருமான், Kaathaperumaan - (பெருமழையில் நின்றும்) காத்தருளின பெருமானும்
மருவாத விடை ஏழும் வென்றான், Maruvaadha Vidai Ezhum Vendraan - எதிரிட்ட ஏழு எருதுகளையும் வலியடக்கினவனும்
கோவல் நின்றான், Koval Nindraan - திருக்கோவலூரில் நின்றதிருக் கோலமாயிருப்பவனும்
தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்கையிலிருந்தவர்களாய்
அடையா, Adaiyaa - பணியாதவர்களான
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள்
வீய, Veeya - அழியும்படி
பொருது, Poruthu - போர்புரிந்து
வெம் கூற்றம், Vem Koottram - கொடியமிருத்யுவானவன்
மேவி, Mevi - (அஞ்சாமல்) பொருந்தியிருந்து
நடை ஆ, Nadai Aa - இதுவே காரியமாக
உண்ண கண்டான், Unna Kandan - (இலங்கையைப்) புஜீக்கும்படி செய்தவனுமான பெருமானுடைய
1543பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன் – இனி இது கண்டால் எல்லார்க்கும் சொலத் தட்டில்லை இறே என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப் போருங்கோள் – நமோ நாராயணமே –நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள- ஸ்ரீ ஆழ்வார்கள் கோஷ்டியில் இது ஒழிய வேறு ஒரு திரு நாமம் உண்டாக நினைத்து இருப்பார் இல்லை – உண்டாகில் ஆயிரம் -என்று திரளாக சொல்லும் இத்தனை பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையான் – தேவோ நாம சஹஸ்ரவான் –-பல பசு உடையவன் -என்னுமா போலே ஸ்ருதி வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லும் அன்று ஆய்த்து-இவர்கள் வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லுவது – அந்தர்யாமி ப்ராஹ்மணத்தோடு-காரண வாக்யங்களோடு– இது ஒழிந்தவை ஞான சக்த்யாதிகளைப் போலே – இது ஞான ஆனந்த அமலத் வாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும்) 6
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6
பதவுரை Show / Hide
கானம் எண்கும், Kaanam Enkum - காட்டுக்கரடிகளையும்
குரங்கும், Kurangum - குரங்குகளையும்
முசுவும், Musuvum - ‘முசு’ என்னுஞ்சாதிக் குரங்குகளையும்
படை ஆ, Padai Aa - சேனையாகக்கொண்டு
அடல் அரக்கர், Adal Arakkar - கொடிய ராக்ஷருடைய
மானம், Maanam - செருக்கு
அழித்துநின்ற, Azhiththinira - அழியச்செய்த
வென்றி அம்மான், Vendri Amman - ஜயசீலனான ஸ்வாமியுமான
திருமால், Thirumaal - திருமாலினுடைய.-
எனக்கு, Enakku - எனக்கு
என்றும், Endrum - எப்போதும்
தேனும் பாலும் அமுதும் ஆய, Thenum Paalum Amuthum Aaya - பரமபோக்யமாயிருக்கின்ற
திருநாமம் நமோநாராயணம், Thirunamam Namonaarayanam - திருநாமமாகிய பெரிய திருமந்திரத்தை
நானும் சொன்னேன், Naanum Sonnaen - நானும் உச்சரித்தேன்;
நமரும் உரைமின், Namrum Uraimin - நம்மைச்சேர்ந்தவர்களும் சொல்லுங்கோள்.
1568பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ யத்னத்தால் அன்றிக்கே அவன் காட்டின வழியாலே காணப் பெற்ற அடியேனான நான் – ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூர்ணனை – மனஸ் ஸூ சஹகரிக்க -அத்தாலே கண்ணால் காணும் காட்சி அன்றிக்கே அந்த நெஞ்சு தானே முழு மிடறு செய்து பூரணமாக நெறிபட அனுபவிக்கப் பெற்றேன் – நெஞ்சே அனுபவித்து கண்கள் அனுபவிக்கப் பெற்றது இல்லை -என்கிற குறை கிடவாமை -கண்கள் கண்டு அனுபவிக்க அவற்றுக்கு ஆஸ்ரய பூதனாய் இருக்கிற நானும் – என் கண்கள் களிப்பக் களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேனே -திரு வாய் மொழி -10-8-4- என்கிறபடியே களிக்கப் பெற்றேன்) 1
சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம் மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக் கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே –7-3-1
பதவுரை Show / Hide
சினம் இல், Sinam Il - கோபத்துக்கு இருப்பிடமாய் (- (நறையூர் நின்ற நம்பியை-;))
செம் கண், Sem Kan - சிவந்த கண்களையுடைரான
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள்
உயிர் மாள, Uyir Maala - உயிரிழந்து முடியும்படியாக
செற்ற, Settra - சீறின
வீல்லி என்று, Veelli Endru - வில்லை யுடையவனே! என்று
கற்றவர், Kattravar - அறிவுடையவர்கள்
தம் தம், Tham Tham - தங்கள் தங்களுடைய
மனம் உள் கொண்டு, Manam Ula Kondu - நெஞ்சிலே தியானித்து
என்றும் எப்போதும், Endrum Eppodhum - எக்காலத்திலும் எல்லா நிலைமைகளிலும்
நி்ன்று, Ninru - நிலைநின்று
ஏத்தும், Aethum - தோத்திரம் பண்ணும்படியாகவுள்ளவனும்
மா முனியை, Maa Muniyai - (அடியார்திறத்தில் இன்னமும் என் செய்வோமென்று, நெடிய சிந்தனைகளைச் செய்பவனும்
கனவில், Kanavil - மாநஸாநுபவத்தில்
ஏழ் மரம் எய்த, Ezha Maram Eytha - ஸப்தஸால விருஷங்களை அம்பு எய்து துளைபடுத்தின
மைந்தனை, Mainthanai - மிடுக்குடையவனும்
நனவில் சென்றார்க்கும், Nanavil Senraarkkum - கண்மலரப் பெற்றவர்களான சிறந்த ஞானிகட்கும்
நண்ணற்கு அரியானை, Nannarku Ariyanai - கிட்டக் கூடாதவனுமான
அடியேன் நான், Adiyen Naan - அடியேனாகிய நான்
கனவில், Kanavil - மாநஸாநுபவத்தில்
இன்று கண்டேன், Indru Kandein - இன்று காணப்பெற்றேன்;
கண்டமையால், Kandamaiyala - காணப்பெற்றதனால்
என் கண் இணைகள், En Kan Inaihal - எனது இரண்டு கண்களும்
களிப்ப, Kalippa - ஸந்தோஷிக்க
களித்தேன், Kalitthen - நானும் ஸந்தோஷித்தேன்.
1571பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும் மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது) 4
உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4
பதவுரை Show / Hide
உரங்களால் இயன்ற மன்னர் மாள, Urangalal Iyanra Mannar Maala - மிடுக்கினால் மிகக் துரியோதனாதியரசாகள் தொலையும்படி
பாரதத்து, Bharathaththu - பாரதயுத்தத்திலே
ஐவர்க்கு ஆய் சென்று, Aivarkku Aay Sendru - பஞ்சபாண்டவர்க்குத் துணையாயெழுந்தருளி
இரங்கி, Irangi - (அவர்கள் விஷயத்தில்) மனமிரங்கி
ஒரு தேர் ஊர்ந்து, Oru Ther Oornthu - (அவர்களுடையதான) ஒரு தேரை ஸாரதியாயிருந்து நடத்தி
அவர்க்கு, Avarkku - அப்பாண்டவர்க்கு
இன் அருள் செய்யும் எம்பிரானை, In Arul Seyyum Empranai - பரம கிருபையைச் செய்தருளின ஸ்வாமியும்
வம்பு ஆர் புனல் காவிரி, Vambu Aar Punal Kaviri - புதுமைமிக்க தீர்த்தத்தை யுடைய திருக்காவேரியால் சூழப்பட்ட
அரங்கம், Arangam - திருவரங்கம் பெரியகோயிலை
ஆளி, Aali - ஆள்பவனும்
என் ஆளி, En Aali - என்னையாள்பவனும்
விண் ஆளி, Vin Aali - பரமபதத்துக்குத்தலைவனும்,
ஆழி சூழ், Aazhi Soozh - கடல் சூழ்ந்த
இலங்கை, Ilankai - லங்காபுரியானது
மலங்க, Malanga - வியாகுலமாகும்படி
சென்று, Sendru - அங்கெழுந்தருளி
சரங்கள் ஆண்ட, Sarangkal Aanda - அம்புகளை நடத்தின
தண் தாமரை கண்ணனுக்கு அன்றி, Than Thamarai Kannankku Andri - குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையனுமான திருநறையூர் நம்பிக்கல்லது (மற்றொருவர்க்கு)
என் மனம், En Manam - என் மனமானது
தாழ்ந்து நில்லாது, Thazhndhu Nilladhu - நைச்சியம் வஹித்திருக்க மாட்டாது.
1576பெரிய திருமொழி || (7-3–சினவில்) (திரு நறையூர் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது மங்களா சாசனம் பண்ணாது – பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது – நித்ய சூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன் -சம்சாரியான நான் – பர தந்த்ரனாய் இருக்கையாலே பிரத்யுபகாரம் பண்ணலாவது காண்கிறிலேன் எத்தைச் செய்வேன் சொல்லி கோள்) 9
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ் தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத் தழலே புரை விஞ்ச வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9
பதவுரை Show / Hide
அடியேன், Adiyen - பரதந்திரனான நான்
இதற்கு என் செய்கேன், Idharku En Seigen - (அவன் பண்ணின மஹோபகாரமாகிய) இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்?
உரையீர், Uraiyeer - சொல்லுங்கள்;
என்றும், Endrum - எக்காலமும்
என் மனத்தே, En Manatthae - என்னுள்ளத்திலேயே
இருக்கும், Irukkum - குடியிருப்பதனாலாகிய
புகழ், Pugazh - கீர்த்தியையுடையவனும்
தஞ்சை ஆளியை, Thanjai Aaliyai - தஞ்சை மாமணிக்கோயிலை ஆள்பவனும்
அன்று, Andru - நரஸிம்ஹாவதாரததில்
பொன் பெயரோன், Pon Peyaron - இரணியனுடைய
நெஞ்சம், Nenjam - மார்பை
இடந்தவனை, Idanthavanai - பிளந்தொழித்தவனும்
தழலே புரை, Thazhale Purai - நெருப்புப் போன்றவனாய்
மின் செய், Min Sei - ஒளிவிடுகின்ற
வாள், Vaal - வாட்படையை யுடையவனான
அரக்கன், Arakkan - இராவணனுடைய
நகர், Nagar - நகரமாகிய இலங்கை
பாழ்பட, Paalpada - பாழாகும்படி
சூழ், Sool - அந்நகரியைச் சூழ்ந்து கொண்டு அகழாயிருந்த
கடல், Kadal - கடலை
சிறை வைத்து, Sirai Vaiththu - அணைகட்டினவனும்
இமையோர் தொழும், Imaiyor Thozhum - தேவர்களால் ஆச்ரயிக்கப்படுமவனும்
பொன் செய் மால் வரையை, Pon Sei Maal Varaiyai - விரும்பத்தக்க பெரிய மலைபோன்றவனும்
மணி குன்றினை அன்றி, Mani Kunrinai Andri - நீலமணிமயமான பர்வதம் போன்றவனுமான திருநறையூர் நம்பியைத் தவிர்த்து (மற்றொருவனை நோக்கி)
என் மனம், En Manam - என் மனமானது
போற்றி என்னாது, Pothri Ennaadhu - மங்களாசாஸநம் பண்ணமாட்டாது.
1581பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு – அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன்) 4
தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப் போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும் தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே –7-4-4
பதவுரை Show / Hide
தேர் ஆளும், Ther Aalum - தேர்களை நடத்தவல்லவனாய்
வாள், Vaal - வாட்படையையுடையனான
அரக்கன், Arakkan - இராவணனுடைய
தென் இலங்கை, Then Ilangai - அழகிய லங்காபுரியை
வெம் சமத்து, Vem Samathu - கொடிய போர்க்களத்தில்
பொன்றி வீழ, Pondri Veela - சிதறியழிந்துபோம்படி
போர் ஆளும் சிலை அதனால், Por Aalum Silai Adhanal - போரை நடத்தவல்ல வில்லினால்
பொரு கணைகள், Poru Kanigal - கொடிய அம்புகளை
போக்குவித்தாய், Pokkuviththai - பிரயோகித்தவனே!
என்று, Endru - என்று சொல்லி,
நாளும், Naalum - நாள்தோறும்
தார் ஆளும் வரை மார்பன், Thar Aalum Varai Marban - மாலையை அணிந்தள்ள மலை போன்ற திருமார்பையுடையவனும்
உம்பர் ஆளும், Umbar Aalum - மேலுலகங்களை ஆள்பவனும்
பேராளன், Peraalan - பெருமை பொருந்தினவனுமான
தண் சேறை எம்பெருமான், Than Serai Emperumaan - திருச்சேறைப் பெருமானுடைய
பேர், Per - திருநாமங்களை
ஓதும், Oodhum - ஓதுகின்ற
பெரியோரை, Periyoorai - மஹாத்மாக்களை
ஒருகாலும், Orukaalum - ஒருபோதும்
பிரிகிலேன், Prikileen - பிரியமாட்டேன்.
1590பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த்ராதிகள் உடைய வஜ்ரத்துக்கு அழியாத பையல் தலைகளை மனிச்சுக்கு ஏகாந்தமான மிடுக்காலே அழித்தான் ஆய்த்து) 3
செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும் கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள் அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே –7-5-3
பதவுரை Show / Hide
கொம்பில் ஆர்ந்த, Kombil Aarntha - கிளைகளினால் நிறைந்திருக்கிற
மாதவி மேல், Maadhavi Mel - குருக்கத்தி மரத்தின் மேலே
கோதி, Kothi - (தளிர்களைக்) கீறி
மேய்ந்த, Meyndha - மதுபானம் பண்ணின
வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுத்திரள்கள்
அம்பு அராவும் கண்மடவார், Ambu Aravum Kanmadavaar - அம்புபோன்ற கண்களை உடையரான மாதர்களினுடைய
ஐம்பால், Aimpal - கூந்தலின் மீது
அணையும், Anaiyum - வந்துசேரப் பெற்ற
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூர்,-
செம் பொன் மதில் சூழ், Sem Pon Mathil Soozh - செம்பொன் மயமான மதில்களாலே சூழப்பட்ட
தென் இலங்கைக்கு, Then Ilangaiyku - தென்னிலங்காபுரிக்கு
இறைவன், Iraivan - நாயகனான இராவணனது
சிரங்கள் ஐ இரண்டும், Siralgal Ai Irandum - பத்து தலைகளையும்
உம்பர்வாளிக்கு, Umbarvaaliku - ப்ரஹ்மாஸ்திரத்திற்கு
இலக்கு ஆக, Ilakku Aaga - வக்ஷியமாக்கி
உதிர்த்த, Uthirtha - அறுத்தொழித்த
உரவோன், Uravon - பொருமிடுக்கனான பெருமானுடைய
ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும்.
1593பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம்தன்னது என்னும் இடம் தோற்ற ஸ்மிதம் பண்ணி – தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து-என் அருகே வந்து நின்று அது சாத்மித்தவாறே ஹிருதயத்திலே வந்து புகுந்து இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர்) 6
ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ ஆடல் அரவத் தார்ப்போவா அணியூர் வீதி அழுந்தூரே –7-5-6
பதவுரை Show / Hide
நீடு மாடம், Needu Maadam - (நாட்டப்பட்ட) உயர்ந்த மாடங்களில் (- (அணி ஆர் வீதி அழுந்தூர்))
தனி சூலம், Thani Soolem - ஒப்பற்ற சூலமானது
போழ்க, Pozhga - (மேகத்தின் வயிற்றைக்) கீண்ட வளவிலே
கொண்டல், Kondhal - மேகமானது
துளி தூவ, Thuli Thoova - மழை பொழியப் பெற்றதும்
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா, Aadal Aravathu Aarppu Ovaa - கூத்தாட்டவொலிகளினாலுண்டான கோலாஹலம் ஓயாமலிருக்கப்பெற்றதுமான
ஏடு இலங்கு தாமரை போல், Aedu Ilangu Thaamarai Pol - இதழ்விளங்குகின்ற தாமரைப்பூ மலர்ந்தாலொப்ப
செம் வாய் முறுவல் செய்தருளி, Sem Vaai Muruvai Seitharuliy - சிவந்த திருப்பவளத்தினால் புன்முறுவல் செய்துகொண்டு
மாடு வந்து, Maadu Vandu - என் பக்கலிலே வந்து
என்மனம் புகுந்து நின்றார், Enmanam Pugundhu Nindrar - என்மனத்திலே புகுந்து நின்றபெருமாள்
நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணப்பெற்ற
ஊர் போலும், Oor Polum - திவ்ய தேசமாகும்.
1600பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய விபூதி உக்தனான சம்பத்துக்கு மேலே ஓன்று காணும் –ஸ்ரீ திரு வழுந்தூருக்கு கடவன் ஆனது – அநந்ய கதியான நான் கிட்டப் பெற்று –அசந்நேவ -என்னும் நிலை தவிர்ந்து –உஜ்ஜீவித்து –க்ருதார்த்தனாகப் பெற்றேன்) 3
உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி யழுந்தூர் உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3
பதவுரை Show / Hide
உடையானை, Udaiyanai - ஸர்வஸ்வாமியானவனும் (- (அடியேன் அடைந்து-;-))
ஒலி நீர் உலகங்கள் படைத்தானை, Oli Neer Ulagangal Padaiththaanai - கடல் சூழ்ந்த உலகங்களைப் படைத்தவனும்
அன்று, Andru - பாணாஸுர யுத்தத்தினன்று
விடையான் ஓட, Vidaiyaan Oda - பரமசிவன் தோற்று ஓடும்படி
விறல் ஆழி, Virhal Aazhi - வலிமிக்க திருவாழியை
விசைத்தானை, Visaiththaanai - வேகமாகப் பிரயோகித்தவனும்
அடையார் தென் இலங்கை அழித்தானை, Adaiyaar Then Ilangai Azhiththaanai - பகைவர் நிறைந்திருக்கிற தென்னிலங்கையை அழியச்செய்தவனும்
அணி அழுந்தூர் உடையானை, Ani Azhundhoor Udaiyanai - அழகிய திருவழுந்தூரை இருப்பிடமாக வுடையனுமான பெருமானை
உய்ந்து போனேன், Uyinthu Poneen - உஜ்ஜீவித்து விட்டேன்.
1606பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற – கார் காலத்திலேயே மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை – கண்கள் குளிரக் காணப் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 9
பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர் வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9
பதவுரை Show / Hide
பேரானை, Peraanai - திருப்பேர்நகரில் பள்ளி கொண்டிருப்பவனும (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற-) (கண்டுகொண்டு களித்தேன்-.))
குடந்தை பெருமானை, Kudandhai Perumaanai - திருக்குடந்தையில் தன் பெருமைகளெல்லாந் தோற்ற சயனித் திருப்பவனும்
இலங்கு ஒளி சேர், Ilangu Oli Ser - விளங்குகின்ற காந்தியோடு கூடின
வார் ஆர், Vaar Aar - கச்சுநிறைந்த
வனம் முலையாள், Vanam Mulaiyal - அழகிய முலைகளையுடைளான
மலர்மங்கை, Malar Mangai - பெரிய பிராட்டியார்க்கு
நாயகனை, Nayakanai - வல்லபனும்
ஆரா இன் அமுதை, Aara In Amuthai - எவ்வளவு அநுபவித்தாலும் த்ருப்திபெறமுடியாத இனிய அமுதம் போன்றவனும்
கார் ஆர் கரு முகிலை, Kaar Ar Karu Mukilai - மழை காலத்துக் காளமேகம் போன்றவனுமான பெருமானை
1621பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்டபித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –அந்த பூமிக்கும் அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து- அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே வைத்து அருளின அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் – நிரவதிக சம்பத்தை உடைத்தாய் –சம்சார விபூதிக்கு ஆபரணம் போலே இருக்கிற ஸ்ரீ திரு அழுந்தூரிலே) 4
சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கற்குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம்மீசன் காண்மின் புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4
பதவுரை Show / Hide
பூகம் தொக்க, Pookam Thokka - பாக்கு மரங்கள் நிறைந்துள்ள (- அணி அழுந்தூர் நின்ற உதந்த அமரர் கோ-;  (யாவனென்னில்))
பொழில்கள் தோறும், Pozhilgal Thorum - சோலைகளிலெங்கும்
சிறை புலம்பு வண்டு ஒலிப்ப, Sirai Pulambu Vandu Olippa - சிறகு களையுடையனவாய் ரீங்காரஞ் செய்யுந்தன்மை யனவான வண்டுகள் ஒலிக்கவும்
குயில் கூவ, Kuyil Koova - குயில்கள் கூவவும்
மயில்கள் ஆல, Mayilgal Aala - மயில்கள் கூத்தாடவும்
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து, Alambu Thirai Punal Pudai Soozhndhu - அலைகின்ற அலைகளை யுடைய காவிரியின் நீரானத பக்கங்களிலே சுற்றிப் பாய்தலினால்
அழகு ஆர், Azhagu Aar - அழகு மிக்கிருக்கின்ற
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
செம் கண் ஓர் குன்றம், Sem Kan Or Kuntram - சிவந்த கண்களை யுடையதொரு மலை
சிலம்பு முதல் கலன் அணிந்து, Silambu Mudhal Kalan Anindhu - தண்டை முதலிய ஆபரணங்களைப் பூண்டு
திகழ்ந்தது என, Thigazhnthathu Ena - விளங்குவது போல
திரு உருவம் பன்றி ஆகி, Thiru Uruvam Pandri Aagi - மஹாவராஹரூபியாய்,
இலங்கு புவி மடந்தை தனை, Ilangu Puvi Madanthai Thanai - விளங்குகின்ற பூமிப்பிராட்டியை
இடந்து, Idandhu - (அண்டபித்தியினின்றுங் கோட்டாற்) குத்தியெடுத்து
புல்கி, Pulki - அணைந்து
எயிற்றிடை, Eyirtridai - (தனது) கோரதந்தத்தினிடத்தில்
வைத்து அருளிய, Vaiththu Aruliyah - வைத்தருளினவனான
எம் ஈசன், Em Eesan - எமது தலைவனாவன்.
1624பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கொலை அம்பாலே எய்து அவனை அழித்து விரோதி போக்கப் பெற்றோம் -ஆஸ்ரிதர்களும் குடி இருப்புப் பெற்றார்கள் – என்று அவர்களுக்கு உகவக் கடவ உகப்பை தான் உகந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்) 7
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின் செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-7
பதவுரை Show / Hide
செம் தமிழும், Sem Tamizhum - செவ்விய தமிழ்ப்பாஷையும் (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்;))
வடகடலையும், Vadakadalaikum - ஸம்ஸ்க்ருத பாஷையும்
திகழ்ந்த, Thigalntha - விளங்குகின்ற
நாவர், Navar - நாக்கையுடையவர்களும்
திசை முகனை அனையவர்கள், Thisai Mughanai Anaiyavargal - (தனித்தனி) பிரமனை யொத்தவர்களுமான
செம்மை மிக்க அந்தணர் தம், Semmai Mikka Andhanar Tham - நற்குணங்கள் நிறைந்த ப்ராஹ்மணர்களது
ஆகுதியின் புகை ஆர், Aaguthin Pugai Aar - ஹோம்ஞ்செய்வதனால் தோன்றுகின்ற புகை நிரம்பப்பெற்றுள்ள
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி, Pandhu Anaindha Mel Viralal Seethaikku Aagi - பந்து பொருந்திய மெல்லிய கை விரல்களையுடைய சீதையின் நிமித்தம்
மீது பகலவன் இயங்காத இலங்கை வேந்தன், Meethu Pakalavan Iyangaadha Ilangai Vendan - (தனக்கு நேராக) மேலிடத்திலே (அச்சத்தினால்) ஸூர்யனும் ஸஞ்சரிக்கமாட்டாத இலங்கைக்கு அரசனான இராவணனது.
அந்தம் இல் திண் கரம் சிரங்கள், Andham Il Thin Karam Sirangal - அழிவில்லாத வலிய தோள்களும் தலைகளும்
புரண்டு வீழ, Purandu Veela - (அறுபட்டுக்)கீழ் விழுந்து புரளும்படி
அடு கணையால், Adu Kanaiyaal - கொல்லுந் தன்மையுள்ள அம்பினால்
எய்து, Eydhu - பிரயோகித்து
உகந்த, Ugantha - மகிழ்ந்த
அம்மான், Ammaan - தலைவனாவான்.
1641பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –எனக்கு கைம்முதல் இல்லாத வன்று அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான நிதியானவனை –பொன் போலே ஸ்ப்ருஹநீயம் ஆனவனை – அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை – சென்று நாடி ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே) 4
பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக் காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4
பதவுரை Show / Hide
பேய் முலைத்தலை நஞ்சு உண்ட பிள்ளையாய், Pei Mulaitthalai Nanju Unda Pillaiyaai - பேய்ச்சியாகிய பூதனையுடைய முலையிடத்துண்டான விஷத்தை அமுது செய்த சிறுவனும், (- (சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்-))
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை, Thelliyaar Vanangappadum Devanai - தெளிந்த ஞானிகளால் ஆச்ரயிக்கப்படுகின்ற தெய்வமாயிருப்பவனும்
மாயனை, Maayanai - ஆச்சரியனும்
மதிள் கோவல் இடைகழி மைந்தனை, Mathil Koval Idaikazhi Maindhanai - திருமதிளை யுடைய திருக்கோவலூரிலே இடைகழியிலுறைகின்ற யுவாவானவனும்
அன்றி, Andri - தவிரவும்
அந்தணர், Andhanar - அந்தணர்களினுடைய
சிந்தையுள், Sindhaiyul - மனத்திலேயிருந்து கொண்டு
ஈசனை, Eesanai - அவர்களை நியமிப்பவனும்
இலங்கும் சுடர் சோதியை, Ilankum Sudar Sothiyai - ஒளிபெற்று விளங்குகின்ற பெருஞ் சோதிமயமாயிருப்பவனும்.
எந்தையை, Endhaiyai - எனக்கு ஸ்வாமியம்
எனக்கு எய்ப்பினில் வைப்பினை, Enakku Eyppinil Vaippinai - எனக்குத் தளர்த்தி வருங்காலத்தில் (உதவக் கூடிய) நிதி போன்றவனும்
காசினை, Kaasinai - பொன் போன்றவனும்
மணியை, Maniyai - ரத்னம் போன்றவனுமான எம்பெருமானை
1645பெரிய திருமொழி || (7-10–பெரும் புறக்கடலை) (திரு கண்ணமங்கை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிருபாதிக சேஷியை-தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்- அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை – கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை – ஸ்ரீ கண்ண மங்கையுள் கண்டேனே) 8
வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக் கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-8
பதவுரை Show / Hide
வெம் சினம் களிற்றை, Vem Sinam Kalirrai - கொடிய கோபத்தையுடைய மதயானை போன்றவனும் (- (கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்-.))
விளங்காய் வீழ, Vilangai Veezha - (அஸுரனாவேசித்த) விளாமரத்தின் காய்கள் உதிர்ந்து விழும்படி
கன்று, Kanru - (அஸுரனானவொரு) கன்றை
வீசிய, Veesiya - தூக்கியெறிந்த
ஈசனை, Eesanai - ஸ்வாமியும்
பேய் மகள், Pei Makal - (பூதனையென்னும்) பேய்ச்சியானவள்
துஞ்ச, Thunja - முடியும்படி
நஞ்சு, Nanju - (அவளது முலையில் தடவியிருந்த) விஷத்தை
சுவைத்து உண்ட, Suvaithu Unda - ருசிபார்த்து (உயிருடன்) கவர்ந்த
தோன்றலை, Thonralai - இளமகனும்,
தோன்றல் வாள் அரக்கன் கெட, Thonral Vaal Arakkan Keda - (இலங்கைக்கு) அரசனாய் வாட் படையையுடையனான இராவணன் மாளும்படி
தோன்றிய, Thonriya - திருவவதரித்த
நஞ்சினை, Nanjinai - விஷம்போன்றவனும்,
அமுதத்தினை, Amudhatthinai - (அன்பர்க்கு) ஆராவமுதமாயிருப்பவனும்
நாதனை, Nadhanai - ஸர்வசேஷியாயிருப்பவனும்
நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை, Nachchuvaar Uchi Mael Nirkum Nambiyai - தன்னை ஆசைப்படுமவர்களின் தலைமீது நிற்கின்ற பரி பூர்ணனும்
கஞ்சனை துஞ்ச வஞ்சித்த வஞ்சனை, Kanjanai Thunja Vanchiththa Vanchanai - கம்ஸன் முடியும்படி அவனை வஞ்சித்த வஞ்சகனுமான பெருமானை
1648பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் பெண் பிள்ளை சொல்லக் கடவ இது தனக்கு ரசித்த படியாலே அப்பாசுரத்தை தன் வாயாலேயும் ஒரு கால் பேசி அனுபவிக்கப் பார்க்கிறாள்) 1
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால் மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால் கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ –8-1-1
பதவுரை Show / Hide
சிலை, Silai - (என்றும்) ‘சார்ங்கவில்’ (- (இல்லையாகில் இப்படிப்பட்ட நிலைமை) (இவளுக்கு எப்படி உண்டாகும்!.))
இலங்கு பொன் ஆழி, Ilangu Pon Aazhi - ‘விளங்குகின்றதும் விரும்பத் தக்கதுமான திருவாழி’ (என்றும்)
திண் படை, Thin Padai - ‘வலிமை பொருந்திய வாட்படை’ (என்றும்)
தண்டு, Thandu - ‘கதை’ (என்றும்)
ஒண் சங்கம் என்கின்றாள், On Sangam Enkindraal - ‘அழகிய சங்கு’ என்றும் சொல்லா நின்றாள்,
ஆல்!, Aal - இஃது என்னே!
மற்று, Mattru - இன்னமும்
அவனுக்கு, Avanukku - ‘அப்பெருமானுக்கு
மலை இலங்கு, Malai Ilangu - மலைபோல் விளங்குகின்ற
நான்கு தோளே, Naanthu Thoale - நான்கு திருத்தோள்களும்
எற்றே காண், Ettrae Kaan - எப்படி அழகாயிருக்கின்றன பார்’
என்கின்றாள், Enkindraal - என்று சொல்லுகிறாள்;
முலை இலங்கு, Mulai Ilangu - முலையில் விளங்குகின்ற
பூ பயலை, Poo Payalai - அழகிய பசலை நிறமானது
முன்பு ஓட, Munbu Oda - முன்னே சென்று வழிகாட்ட
அன்பு ஓடி இருக்கின்றாள், Anbu Odi Irukkindraal - அன்பு பின் செல்லப் பெற்றிருக்கின்றாள்;
கலை இலங்கு மொழி ஆளர், Kalai Ilangu Mozhi Aalar - சாஸ்த்ரப் பயிற்சி விளங்குகின்ற வாய்ப் பேச்சை யுடையவர்கள் வாழ்கிற
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
அம்மானை, Ammaanai - சௌரிப்பெருமாளை
கண்டாள் கொல் ஓ, Kandhaal Kol O - ஸேவிக்கப் பெற்றாளோ!
1650பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தனை அதிமாத்ர பிராவாண்யம் ஆகாது காண்- எல்லாம் செய்தாலும் நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்தை நீ கேட்க வேணும் காண் என்று நீங்கள் சொன்னால் -அவனுடைய ஆபரண சோபை கண்களுக்கு முற்படா நின்றது – உங்கள் வார்த்தை செவிப் படுகிற இத்தை நான் கேட்கவோ கண்ணுக்கு இலக்கான அவன் அழகிலே துவக்குண்ணவோ -என்னா நின்றாள் – சேஷித்வ ஸூசகமாய் இருக்கவோ -என்னா நின்றாள்) 3
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால் கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3
பதவுரை Show / Hide
துன்னு, Thunnu - நெருங்கியிருக்கின்ற (- (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ….))
மா மணி, Ma Mani - சிறந்த ரத்னங்களிழைக்கப்பெற்ற
முடி மேல், Mudi Mel - கிரீடத்தின் மீது
துழாய் அலங்கல், Thuzhai Alangkal - திருத்துழாய் மாலை
தோன்றும ஆல் என்கின்றாள் ஆல், Thonrum Aal Enkindraal Aal - விளங்குகின்றதே! என்று சொல்லுகிறாளே!;
மின்னு, Minnu - ஜ்வலிக்கின்ற
மா மணி, Ma Mani - சிறந்த மணிகளழுத்தின
மகர குண்டலங்கள், Makara Kuntalangal - மகரக் குழைகள்
வில் வீசும் என்கின்றாள் ஆல், Vil Veesum Enkindraal Aal - ஒளி வீசுகின்றன என்று சொல்லுகிறாளே! ;
பொன்னின் மா மணி ஆரம், Ponnin Maa Mani Aaram - பொன்னாலே செய்யப்பட்டதும் சிறந்த ரத்னங்களழுத்தப்பட்டதுமான ஹாரமானது
அணி ஆகத்து, Ani Aagathu - அழகிய திருமார்பிலே
இலங்கும் ஆல் என்கின்றாள் ஆல், Ilangum Aal Enkindraal Aal - விளங்கா நின்றதே! என்று சொல்லுகிறாளே! ;
கன்னி மா மதில், Kanni Maa Mathil - அழிவில்லாத பெரிய மதிள்களாலே
புடை சூழ், Pudai Soozh - நாற்புறமும் சூழப்பட்ட
1684பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கையாலே வளைத்து கார்யம் கொள்ளலாம் படி இருக்குமவன் – அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனுக்கும் கூட உத்பாதகன் – மாலையாய் பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய்) 7
வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன் தார் மன்னு தாசரதியாய தட மார்வன் காமன் தன தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான் தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-7
பதவுரை Show / Hide
வாமநன், Vaamanan - வாமநாவதாரஞ் செய்தவனும் (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;) (தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ!-.))
கற்கி, Karkki - கல்கியவதாரம் செய்யப் போகிறவனும்
மது சூதன், Madhu Soothan - மதுவென்னு மசுரனைக் கொன்றவனும்
மாதவன், Madhavan - திருமகள் கொழுநனும்
தார் மன்னு, Thar Mannu - (ரக்ஷகத்வஸூசகமான) மாலை பொருந்திய
தட மார்வன், Thada Marvan - பெரிய திருமார்பையுடையவனும்
தாசரதி ஆய, Dasarathi Aaya - தசரத புத்ரனாகத் திருவவதரித்தவனும்
காமன் தன் தாதை, Kaman Than Thathai - மன்மதனுக்குத் தந்தையுமான
தாமம், Thamam - மாலையிலுள்ள
நறு, Naru - பரிமளம் மிக்க
துழாய், Thuzhai - திருத்துழாயில்
1685பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதிகளுக்கும் மிருத்யு வானவன் – ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே வந்து சந்நிஹிதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய புகரை உடைத்தான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான-தர்ச நீயமான திருத் துழாய் மாலையிலே வந்தூதாய்) 8
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில் சால மலரெல்லாமூதாதே வாளரக்கர் காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல் கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ –8-4-8
பதவுரை Show / Hide
நெடு நீர், Nedu Neer - அதிகமான ஜலத்தையுடைய (- (கோல் தும்பீ!-) (கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;) (கொண்டு ஊதாய்-.))
வயல், Vayal - வயல்களிலுண்டான
நீலம் மலர்கள், Neelam Malargal - நீலோற்பல மலர்களிலும்
மருங்கில், Marungil - சுற்றிலுமுள்ள
மலர் எல்லாம், Malar Ellam - எல்லா மலர்களிலும்
சால, Sala - மிகவும்
ஊதாதே, Oothathe - ஒலிசெய்வது தவிர்த்து
வாள் அரக்கர் காலன், Vaal Arakkar Kalan - வாட்படையையுடைய ராக்ஷஸர்களுக்கு மிருத்யுவான
கதிர் முடி மேல், Kathir Mudi Mael - ஒளி பொருந்திய திருமுடி மீதுள்ள
கோலம், Kolam - அழகிய
நறு, Naru - பரிமளம் மிக்க
துழாய், Thuzhai - திருத்துழாயை
1692பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு அவன் பண்ணின அருளோடு கூட அதினுடைய பல ரூபமான பகலும் போய் நின்றதாயிற்று – அருள் போகவே பகலும் போம் இறே) 5
ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில் ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே –8-5-5
பதவுரை Show / Hide
ஏழு மா மரம், Ezhu Maa Maram - ஸப்தஸால வ்ருக்ஷங்கள்
துளைபட, Thulaipada - (ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காகத்) துளைபடும்படி
சிலை, Silai - வில்லை
வளைத்து, Valaiththu - வளைத்தவனும்,
இலங்கையை, Ilankaiyai - லங்காபுரியை
மலங்குவித்த, Malanguviththa - கலங்கப்பண்ணினவனுமான
ஆழியான், Aazhiyaan - அறுகாழி மோதிரத்தைக் கை யிலேயுடைய இராமபிரான்
நமக்கு அருளிய அருளொடும், Namakku Aruliya Arulodum - நம் விஷயத்திற் பண்ணின கிருபையோடுகூட
பகல் எல்லை கழிகின்றது, Pagal Ellai Kazhikinrathu - பகற்போதும் முடிந்து போகாநின்றது;
ஆல், Aal - அந்தோ! ;
தோழி, Thozhi - வாராய் தோழீ! ;
இதற்கு நாம் என் செய்தும், Idharku Naam En Seiththum - இந்த ஆபத்துக்கு நாம் என்ன பரிஹாரம் செய்யவல்லோம்! ;
துணை இல்லை, Thunai Illai - துணைநிற்பார் ஆருமில்லை;
சுடர், Sudhar - ஸூரியனானவன்
படு, Padu - தான் தோன்றின
முது நீரில், Muthu Neeril - ஸமுத்ரத்தினுள்
ஆழ, Aazha - ஆழ்ந்து மறைந்துபோக,
வாழ்கின்ற ஆவியை அடுவது, Vazhkindra Aaviyai Adhuthal - பிழைத்திருக்க நினைத்திருக்கின்ற பிராணனை முடிப்பதான
ஓர் அந்தி, Oru Andhi - ஒரு ஸாயம்ஸந்த்யாகாலமானது
வந்து அடை கின்றதே, Vandhu Adai Kinrathae - வந்து சேர்கின்றதே!.
1693பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெருப்பை தூவா நின்றுள்ள அம்பை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற வில்லை வளைத்த மிடுக்கன் வருகிறிலன்-இனி ஒரு அபலை இருந்து நோக்கிக் கொள்ளவோ) 6
முரியும் வெண்டிரை முது கயம் தீப்பட முழங்கு அழல் ஏறி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங்கண் துயிலா கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே –8-5-6
பதவுரை Show / Hide
முரியும், Muriyum - கிளர்ந்து அலைகின்ற
வெண் திரை, Ven Thirai - வெளுத்த அலைகளையுடைய
முதுகயம், Muthugaiyam - ஸமுத்ரமானது
தீப்பட, Theepada - தீக்கொளுவியெரியும்படி
முழங்கு அழல் எரி அம்பின், Muzhangu Azhala Eri Ambin - ஒலியுடைய நெருப்பு எரியாநின்றுள்ள அம்புகளையுடைய
வரி கொள் வெம் சிலை, Vari Kol Vem Silai - அழகியதாய்க் கொடிதாயிருந்துள்ளவில்லை
வளைவித்த, Valaivitha - வளையச் செய்த
மைந்தனும், Mainthanum - மஹாவீரனான இராமபிரானும்
வந்திலன், Vandhilan - வரவில்லை;
என் செய்கேன், En Seigain - என்ன பண்ணுவேன்? ;
எரியும், Eriyum - பிரகாசித்துக்கொண்டிருந்த
வெம் கதிர், Vem Kathir - ஸூர்யனும்
துயின்றது, Thuyinrathu - அஸ்தமித்தான்;
பாவியேன், Paviyen - பாவியான என்னுடைய
இணை நெடுங்கண் துயிலா, Inai Nedungkan Thuyila - பெரிய இரண்டு கண்களும் உறங்குகின்றனவில்லை;
ஊழியின், Oozhiyin - கல்ப காலத்திற்காட்டிலும்;
பெரியன, Periyan - பெரியவையாயுள்ள
கரிய நாழிகை, Kariya Naazhigai - இரவு நாழிகைகள்
கழியும் ஆறு அறியேன், Kazhiym Aaru Ariyen - எப்படி கழியப் போகின்றனவோ அறிகின்றிலேன்.
1694பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் முடியவே அவனைக் கிடையாது – அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம் ஆனபின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன்) 7
கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம் மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால் இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடு மாயன் விலங்கல் வேயின தோசையுமாயினி விளைவது ஓன்று அறியேனே –8-5-7
பதவுரை Show / Hide
மா கடல், Maa Kadal - பெரிய கடலானது
கலங்க, Kalanga - கலங்கும்படியாக
கடைந்து, Kadaindhu - (அதனைக்) கடைந்தவனும்
அடைந்து, Adaindhu - (அக்கடலில்) அணை கட்டினவனும்
இலங்கையர் கோனது, Ilankaiyar Konathu - இலங்கையிலுள்ளார்க்கு அரசனான இராவணனுடைய
வரை ஆகம், Varai Aagam - மலைபோன்ற மார்பானது
மலங்க, Malanga - வியாகுலப்படும்படி
வெம் சமத்து, Vem Samathu - கொடியபோரில்
அடு சரம், Adu Saram - கொலையம்புகளை
துரந்த, Thurandha - பிரயோகித்தவனுமான
எம் அடிகளும், Em Adigalum - எமது ஸ்வாமியும்
வாரான், Varaan - வரவில்லை;
ஆல், Aal - அந்தோ! ;
இலங்கு, Ilangu - விளங்காநின்ற
வெம் கதிர், Vem Kathir - கடூரமான கிரணங்களையுடைய
இள மதி அதனொடும், Ila Mathi Adhanodum - இளம் சந்திரனோடு கூட
விடை, Vidai - எருதினுடைய
மணி, Mani - (கழுத்தில் கட்டின மணியின்) ஓசையும்
அடும், Adum - (என்னைக்) கொலை செய்கின்றது;
ஆயன், Aayan - இடையனான கண்ணபிரானிடத்துள்ள
விலங்கல் வேயினது, Vilangal Veiyinathu - மலை மூங்கிற்குழலினுடைய
ஓசையும், Osaiyum - த்வநியும்
ஆய், Aai - உண்டாக,
இனி விளைவது ஒன்று அறியேன், Ini Vilaiyvadhu Ondru Ariyeen - இனி உண்டாகப்போகும் ஆபத்தை ஒன்று மறிகின்றிலேன்.
1698பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் -என்னுமா போலே பிரஜைகளின் உடைய ரஷணத்துக்கு இவர்களும் தாமுமான சேர்த்தி உண்டாக வேணும் என்று பார்த்து வைத்தான் ஆயிற்று – அவனும் நாமும் இவர்களும் சேர வர்திக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் என்று உகந்த ஸ்ரீ திருக் கண்ண புரத்தை தொழுவோம்) 1
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன் வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும் கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1
பதவுரை Show / Hide
தொண்டீர், Thondheer - பகவத் கைங்கரியத்தில் ருசி யுடையீர்காள்! (- (இவர்களுடைய))
உய்யும் வகை, Uyum Vagai - உஜ்ஜீவிக்கும் வழியை
கண்டேன், Kandein - தெரிந்து கொண்டேன்;
முன், Mun - முற்காலத்தில்
துளங்கா அரக்கர், Thulanga Arakkar - ஒருநாளும் கஷ்டப்பட்டறியாத ராக்ஷஸர்கள்
துளங்க, Thulanga - கஷ்டப்படும்படியாக
திண் தோள் நிமிர, Thin Thol Nimira - வலிமை பொருந்திய திருத்தோள்கள் நிமிரவும்
சிலை வளைய, Silai Valaiya - வில்வளையவும்
சிறிதே முனிந்த, Siridhe Munintha - ஸ்வல்பமான சீற்றமே கொண்டவனாய்
திரு மார்பன், Thiru Maarban - லக்ஷ்மியைத் திருமார்பிலே உடையவனாய்,
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை, Vandu Aar Koondhal Malar Mangai - வண்டுகள் படிந்த கூந்தலையுடைய பெரிய பிராட்டியாரென்ன
வடி கண் மடந்தை, Vadi Kan Madanthai - கூர்மை பொருந்திய திருக்கண்களையுடைய பூமிப்பிராட்டியாரென்ன
மா நோக்கம் கண்டான், Maa Nokkam Kandan - சிறந்த கடைக்கண் பார்வையை அனுபவிப்பவனான எம்பெருமான்
கண்டு கொண்டு உகந்த, Kandu Konda Ugantha - (நித்யவாஸத்திற்குப் பாங்கான இடமென்று) திருவுள்ளம் பற்றி மகிழ்ந்து உறையுமிடமான
கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்தை
நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் தோழுவோம்
1699பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அது ஸ்ரீ பிராட்டி பக்கல் ஓரத்தால் செய்த செய்யல் அன்றோ – நாம் அதற்க்கு பிற்பாடர் ஆனோமே -என்ன அது வேண்டா -அவன் விரோதி நிரசன சீலன் -என்கிறார்) 2
பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் போன்ற வன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒழிப்பக் கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-2
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகாலத்தில், (- (கண்ணபுரம், நாம் தொழுதும்-.))
வெம் சமத்து, Vem Samathu - கொடிய போர்க்களத்திலே
பொருத்தா அரக்கர், Poruththa Arakkar - சத்ருக்களான ராக்ஷஸர்கள்
பொன்ற, Pondra - முடியும்படியாக
புள் ஊர்ந்து, Pul Oornthu - கருடப் பறவையை ஏறி நடத்திக் கொண்டெழுந்தருளி
பெரு தோள் மாலி, Peru Thol Maali - வலிய தோள்களையுடையனான மாலியினுடைய
தலை, Thalai - தலையானது
புரள, Purala - (அற்று விழுந்து நிலத்தில்) புரளும் படியாகவும்
பேர்ந்த அரக்கர், Perntha Arakkar - அவனைத் தவிர மற்ற ராக்ஷஸர்கள்
தென் இலங்கை இருந்தார் தம்மை உடன் கொண்டு, Then Ilangai Irundhaar Thammai Udhan Kondo - தென்னிலங்கையிலிருந்து மற்றுமுள்ள ராக்ஷஸர்களையுங் கூட்டிக்கொண்டு
அங்கு, Angu - அவ்விடத்திலிருந்து
எழில் ஆர்பிலத்து, Ezhil Aarbilathu - அழகிய பாதாளத்திலே
புக்கு ஒளிப்ப, Pukku Olippa - புகுந்து மறையும்படியாகவும்
கருந் தாள் சிலை, Karun Thaal Silai - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை
கை கொண்டான், Kai Kondaaan - திருக்கையிலே தரித்தவனான எம்பெருமானுடைய
ஊர், Oor - இருப்பிடமான
1700பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஸ்துதமான ஸ்ரீ ராமாவதாரம் பின்னாட்டின படி சொல்லுகிறது) 3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான் வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-3
பதவுரை Show / Hide
வல்லி இடையாள் பொருட்டாக, Valli Idaiyaal Porutthaga - கொடிபோல் மெல்லிய இடையை யுடையளான ஸீதைக்காக, (- (ஊர், கண்ணபுரம், நாம் தொழுதும்-.))
நீர், Neer - கடலை அகழாகவுடையதாய்
மதிள், Mathil - மதிள்களையுமுடைத்தான
இலங்கையர், Ilangaiyar - லங்காபுரியிலுள்ள அரக்கர்களுக்கு
கோவை, Kovai - தலைவனான இராவணனை
அல்லல் செய்து, Allal Seidhu - துன்பப்படுத்தி
வெம் சமத்துள், Vem Samaththul - வெவ்விய போர்க்களத்திலே
ஆற்றல் மிகுந்த, Aatral Mikuntha - தன்னுடைய மிடுக்கை மிகவும் விளங்கக்காட்டின
ஆற்றலான், Aatralan - மஹா வீரனும்
வல் ஆள் அரக்கர், Val Aal Arakkar - வலிய ஆண்மைத்தனமுடைய ராக்ஷஸர்களின்
குலம், Kulam - குலத்தில் தோன்றிய
பாவை, Pavai - தாடகை யென்னும் அரக்கியை
வாட, Vaada - முடிய (ச் செய்து)
முனி தன், Muni Than - விச்வாமித்ர முனியினுடைய
வேள்வியை, Velviyai - யாகத்தை
கல்வி சிலையால், Kalvi Silaiyaal - தான் கற்றுப் பயின்ற வில்லைக் கொண்டு
காத்தான், Kaaththaan - காத்தருளினவனுமான பெருமானுடைய
1701பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்த ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு வாசஸ் ஸ்தானமான ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே) 4
மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக் கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத் தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-4
பதவுரை Show / Hide
கொடியோன், Kodiyon - கொடியவனான இராவணனுடைய (- (அதற்காக) (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
இலங்கை, Ilankai - லங்காபுரியில்
புகல் உற்று, Pugal Utru - பிரவேசிக்கவேண்டி
மல்லை முந்நீர், Mallai Munnir - செழி்ப்பான கடலானது
அதர் பட, Adhar Pada - வழிபடும்படியாக
வரி வெம் சிலை, Vari Vem Silai - வரிகளை யுடையதாய் வெவ்வியதான வில்லை
கால் விளை வித்து, Kaal Vilai Viththu - வளையச்செய்து
கொல்லை விலங்கு, Kollai Vilangu - காட்டுமிருகங்கள் (வாநரமுதலிகள்)
பணி செய்ய, Pani Seyya - கைங்கரியம் பண்ண
தொல்லை மரங்கள், Thollai Marangal - பழைய மரங்களையும்
புகப் பெய்து, Pugap Peidhu - கடலினுட் புகும்படியாக வெட்டிப்போட்டு
துவலை, Thuvilai - திவலைகள்
நிமிர்ந்து, Nimirndhu - கிளர்ந்து
வான், Vaan - ஆகாசத்திலே
அணவ, Anava - அளாவும்படியாக
கல்லால், Kallal - மலைகளைக் கொண்டு
கடலை, Kadalai - ஸமுத்ரத்தை
அடைத்தான், Adaiththaan - அணைசெய்த எம்பெருமானுடைய
1702பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாதே ரஷிக்கும்-ஸ்வபாவன் -ஆயிற்று) 5
ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச் சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-5
பதவுரை Show / Hide
ஆமை ஆகி, Aamai Aagi - கூர்மரூபியாயும் (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
அரி ஆகி, Ari Aagi - நரஸிம்ஹரூபியாயும்
அன்னம் ஆகி, Annam Aagi - ஹம்ஸரூபியாயும் (அவதரித்தவனும்)
அந்தணர் தம், Andhanar Tham - பிராமணர்களினுடைய
ஓமம் ஆகி, Oomam Aagi - யாகங்களில் ஆராதிக்கப்படுமவனும்
ஊழி ஆகி, Oozhi Aagi - பிரளயகாலத்திலு முள்ளவனும்
நெடு புணரி, Nedu Punari - ஓங்கின அலைகளையுடைத்தான
உவரி, Uvari - கடலினால்
சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்டதும்
சேமம் மதிள் சூழ், Semam Mathil Sozh - காப்பான மதிள்களாலே சூழப்பட்டதுமான
இலங்கை, Ilankai - லங்காபுரிக்கு
கோன், Koon - தலைவனான இராவணனுடைய
சிரமும், Siramum - தலைகளையும்
கரமும், Karumum - தோள்களையும்
துணித்து, Thuniththu - அறுத்தொழித்தவனும்,
முன், Mun - முன்பொருகால்
காமன், Kaaman - மன்மதனை
பயந்தான், Payandhaan - பிள்ளையாகப் பெற்றவனுமான எம்பெருமான்
கருதும், Karudum - திருவுள்ளம் பற்றியிருக்கப்பெற்ற
1703பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனுமாய் – முன் கறுத்து திண்ணியதான தாளை உடைய குவலயா பீடத்தை அநாயாசேன முறித்தானூர்) 6
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கைச் செந்தீ யுண்ணச் சிவந்தொரு நாள் பெருந்தோள் வாணற்க்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன் கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-6
பதவுரை Show / Hide
மட நெஞ்சே, Mada Nenje - ஸாதுவான நெஞ்சே! (- (ஊர், கண்ணபுரம் நாம், தொழுதும்-))
நீ வருந்தாது இரு, Nee Varundhaathu Iru - நீ வருத்தப்படாமலிரு;
நம் மேல், Nam Mel - நம்மிடத்து
வினைகள், Vinaigal - பாவங்களின் பலன் ஒன்றும்
வாரா, Vaaraa - வந்து சேரமாட்டாது; (ஏனென்றால்)
முன், Mun - முன்னே
திருந்தா அரக்கர், Thirundhaa Arakkar - திருந்தாமலிந்த ராக்ஷஸர்களின் ஊராகிய
தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்காபுரியை
செம் தீ உண்ண, Sem Thee Unna - சிவந்த நெருப்பு ஆக்ரமித்து உண்ணும்படியாக
சிவந்து, Sivandhu - சீற்றங்கொண்டவனும்
ஒரு நாள், Oru Naal - மற்றொருகாலத்தில்
பெரு தோள் வாணற்கு, Peru Thol Vaanarku - பெரிய தோள்களையுடைய பாணாஸுரன் விஷயத்தில்
அருள் புரிந்து, Arul Purindhu - (உயிரைக் கவராது விட்டிடுகை யாகிற) கிருபையைச் செய்தருளினவனும்
பின்னை மணாளன் ஆகி, Pinnai Manaalan Aagi - நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனானவனும்
முன், Mun - முன்பொருகால்
கரு தாள், Karuthaal - வலிமையுள்ள கால்களையுடைய
களிறு ஒன்று, Kaliru Ondru - (குவலயாபீடமென்கிற) ஒரு யானையை
ஒசித்தான், Osiththaan - தொலைத்தவனுமான பெருமானுடைய
1704பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் பண்ணின பிராதி கூல்யம் தம்பி அளவாக வந்தேறுவதாக இருக்கச் செய்தேயும் அத்தைப் பாராதே அவன் தம்பிக்கு ராஜ்யத்தை கொடுத்தான் ஆயிற்று –அதுக்கு முன்பு தமையனுடைய வைரத்துக்கு ஹேதுவாய்க் கொண்டு வந்த மாயா மிருகத்தை ஓர் அம்பாலே முடித்தவன்) 7
இலையார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான் அலைநீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன் கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-7
பதவுரை Show / Hide
கொலை ஆர் வேழம், Kolai Ar Vezham - (கஜேந்திராழ்வான்) கொலைத் தொழிலை இயற்கையாக வுடைய யானை (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
இலை ஆர், Ilai Ar - இலைகள் நிரம்பிய
மலர், Malar - மலர்களையுடைத்தான
பூ, Poo - அழகிய
பொய்கை வாய், Poykai Vaai - தடாகத்திலே
முதலை தன்னால், Muthalai Thannal - முதலையினால்
அடர்ப்புண்டு, Adarppundhu - துன்பமடைந்து
கடுக்குற்று, Kadakku Kutral - நடுங்கி
குலைய, Kulaiya - கையோய்ந்து நிற்க,
அதனுக்கு, Adhanukku - அவ்யானைக்கு
அருள் புரிந்தான், Arul Purindhaan - கிருபைபண்ணி யருளினவனும்,
அலை நீர் இலங்கை, Alai Neer Ilangai - கடல் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனான
தசக்ரீவற்கு, Dasakreevarukku - இராவணனுடைய
இளையோற்கு, Ilaiyorukku - தம்பியான விபீஷணனுக்கு
அரசை அருளி, Arasai Aruli - லங்காராஜ்யத்தைக் கொடுத்தருளினவனும்
முன், Mun - அதற்கு முன்பே
கலைமா, Kalaimaa - (மாரீசனாகிற) மானை
சிலையால், Silaigal - ஒரு வில்லாலே
எய்தான், Eydhaan - அம்பெய்து கொன்றவனுமான பெருமானுடைய
தசக்கிரீவன், Dasakreevan - வடசொல் விகாரம்.
1708பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பொய்கைகளாலே நெருங்கி இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம் நமக்கு ஸ்ரீ ஸ்வாமி யானவனுடைய வாசஸ் ஸ்தானம்) 1
வியமுடை விடையின முடைதர மட மகள் குயமிடை தடவரை யகலம துடையவர் நயமுடை நடையன மிளையவர் நடை பயில கயமிடை கண புர மடிகள் தமிடமே –8-7-1
பதவுரை Show / Hide
நயம் உடை நடை, Nayam Udai Nadai - அழகிய நடையையுடைய
அனம், Anam - அன்னப் பறவைகள்
இளையவர், Ilaiyavar - இளம் பெண்களினுடைய
நடை, Nadai - நடையை
பயில், Payil - அப்யஸிக்கப்பெற்றதும்
கயம், Kayam - தடாகங்கள்
மிடை, Midai - நெருங்கியிருக்கப் பெற்றதுமான
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
வியம் உடை விடை இனம், Viyam Udai Vidai Inam - வலிமை பொருந்திய விருஷபங்களின் கூட்டமானது
உடைதர, Udaithara - அழிந்தவளவிலே
மட மகள், Mada Magal - மடமைக் குணமுடைய நப்பின்னைப் பிராட்டியானது
குயம், Kuyam - திருமுலைகள்
மிடை, Midai - நெருங்கியணைப்பெற்ற
தட வரை அகலமது உடையவர், Tada Varai Akalamuthu Udaiyavar - பெரிய மலை போன்ற திருமார்பையுடையவரான
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்யதேசமாம்.
1711பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூவை இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி வர்த்திக்கிற தேசம்) 4
ஏதலர் நகை செய விளைய வரளை வெணெ போது செய்தமரிய புனிதர் நல் விரை மலர் கோதிய மது கரம் குலவிய மலர் மகள் காதல் செய் கண புர மடிகள் தமிடமே –8-7-4
பதவுரை Show / Hide
நல் விரை, Nal Virai - நல்ல பரிமளத்தையுடைய
மலர், Malar - பூக்களை
கோதிய, Kothiya - கொந்தி, அவை அஸார மென்று விட்டு வந்த
மதுகரம், Mathugaram - வண்டுகள்
குலவிய, Kulaviy - சூழ்ந்து பரவப்பெற்ற
மலர், Malar - (தாமரை) மலரில் அவதரித்த
மகள், Magal - பெரிய பிராட்டியார்
காதல் செய், Kaadal Sei - விரும்பப்பெற்ற
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
ஏதலர், Aethalar - பகைவரான சிசுபாலாதிகள்
நகை செய, Nakai Sei - சிரிக்கும் படியாக
இளையவர் அளை வெணெய் போது செய்து, Ilaiyavar Alai Venei Podhu Seidhu - இளமகளிர் கடைந்து வைத்த வெண்ணெயைத் திருத்தியாக அமுது செய்து
அமரிய, Amariya - ஸந்தோஷித்த
புனிதர், Punithar - பவித்திரரான
அடிகள் தம் இடம், Adigal Tham Idam - ஸ்வாமியின் திவ்ய தேசமாம்.
1712பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூசல் செய்து –-த்விதாபஜ்யேயம் -என்று பொருந்தாமையிலே நின்றவர்கள் முடிய – ப்ரஹ்மாதிகளும் கூட கணிசிக்க வரிதான ஊரை) 5
தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ அண்டமொட கலிடமளந்த வரமர் செய்து விண்டவர் பட மதிள லங்கை முன்னெரி யெழக் கண்டவர் கண புரமடி கள் தமிடமே –8-7-5
பதவுரை Show / Hide
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
தொண்டரும், Thondarum - ஸ்ரீ வைஷ்ணவர்களும்
அமரரும், Amararum - பிரமன் முதலிய தேவர்களும்
முனிவரும், Munivarum - யோகிகளும்
தொழுது எழ, Thozhuthu Ezha - வணங்கி உஜ்ஜீவிக்கும்படியாக
அண்டமொடு, Andamodu - மேலுலகங்களையும்
அகல் இடம், Akal Idam - பரம்பிய நிலவுலகங்களையும்
அளந்தவர், Alandhavar - அளந்து கொண்டவரும்
விண்டவர், Vintavar - சத்துருக்கள் அழிந்து போம்படி
அமர் செய்து, Amar Seidhu - யுத்தம் பண்ணி
மதிள் இலங்கை, Mathil Ilangai - மதிளையுடைய இலங்காபுரி
முன், Mun - முன்பொருகால்
எரி எழ, Eri Ezha - தீக்கொளுவி யெரியும்படியாக
கண்டவர், Kandavar - ஸங்கல்பித்தவருமான
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்யதேசமாம்.
1719பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேஜஸ்சை உடைத்தான அம்ருதமானது தோற்றும் அளவும் நீருக்கு இறாயாதாய வடிவை உடைய ஆமையாய்- மலை திரிந்து வரும்படியாக பரப்பை உடைத்தான கடலிலே அதுக்கு தாரக பூதனாய்க் கொண்டு கிடந்த விஸ்மய நீயனை ஸ்ரீ கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே) 2
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய் விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-2
பதவுரை Show / Hide
மலங்கு, Malangu - (உள்ளுக்கிடக்கிற) மீன்சாதிகள் (- (அடியேன் கண்டுகொண்டேன்-))
விலங்கு, Vilangu - தடுமாறும்படியான
நெடுவெள்ளம், Neduvellam - பெரிய வெள்ளம்
மறுக, Maruga - குழம்பும்படியாக
அங்கு, Angu - ஆழமான அவ்விடத்திலே
ஓர் வரை நட்டு, Or Varai Nattu - ஒரு (மந்தர) பர்வதத்தை நாட்டி
இலங்கு சோதி ஆர் அமுதம், Ilangu Sothi Ar Amudham - விளங்குகின்ற தேஜஸ்ஸோடு கூடின அம்ருதமானது
எய்தும் அளவு, Eydhum Alavu - தோன்றும் வரையில்
ஓர் ஆமை ஆய், Or Amai Aayi - ஒப்பற்ற ஆமையா யிருந்துகொண்டு
விலங்கல், Vilangal - அந்த மந்தரமலையானது
திரிய, Thiriya - நாற்புறமும் திரிந்து வரும்படியாக
தட கடலுள், Tada Kadalu - பெரிய அக்கடலிலே
சுமந்து கிடந்த, Sumandhu Kidandha - (அம்மலையைத்) தாங்கிக்கொண்டிருந்த
வித்தகனை, Vithagankalai - ஆச்சரியபூதனான பெருமானை
கலங்கல் முந்நீர் கண்ணபுரத்து, Kalangal Munneer Kannapurathu - கலக்கமுள்ள கடலை அணித்தாக வுடைய திருக்கண்ணபுரத்திலே
1724பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெவ்விய சீற்றத்தை உடைய கடியிலங்கை குடி கொண்டோட யுத்தத்திலே வெவ்விய போரை பண்ணின நம்முடைய ஸ்ரீ ஸ்வாமியை) 7
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும் கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7
பதவுரை Show / Hide
வையம் எல்லாம், Vaiyam Ellam - உலகமெல்லாம் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.-))
உடன் வணங்க, Udan Vananga - ஒருமைப்பட்டு திருவடிகளில் விழுந்துவணங்க
வணங்கா, Vanangaa - தான் ஒருவரையும் வணங்க வேண்டும்படியிராத
மன்னன் ஆய், Mannan Aay - ராஜாதிராஜனாய் (இராமபிரானாய்)
தோன்றி, Thonri - திருவவதரித்து
வெய்ய சீற்றம், Veyya Seetrum - கடுமையான சீற்றத்தையுடையதும்
கடி, Kadi - அரண்களையுடையதுமான
இலங்கை, Ilankai - இலங்காபுரியிலுள்ளவர்கள்
குடி கொண்டு ஓட, Kudi Kondu Oda - குடும்பத்தோடும் (யமலோகத்திற்கு) ஓடிச் செல்லும்படியாக
வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்தில்
வெம் போர் செய்த, Vem Por Seitha - கடுமையான யுத்தத்தை நடத்தின
நம் பரனை, Nam Paranai - எம்பெருமானை,-
செழு, Sezhu - அழகிய
தண், Than - குளிர்ந்த
கானல், Kaanal - நெய்தல் நிலத்தையுடையதும்
மணம் நாறும் கைதை, Manam Naarum Kaithai - பரிமளம்மிக்க தாழைகளை
வேலி, Veli - வேலியாகவுடையதுமான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே
1727பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே கண்டு அடிமை புக்க –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல பாவமானது போம்) 10
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த் தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –8-8-10
பதவுரை Show / Hide
மீனோடு, Meenodu - மத்ஸ்ய ரூபியாயும்
ஆமை, Aamai - கூர்ம ரூபியாயும்
கேழல், Kezhal - வராஹரூபியாயும்
அரி, Ari - நரஸிம்ஹ ரூபியாயும்
குறள் ஆய், Kural Aay - வாமநமூர்த்தியாயும்
முன்னும் இராமன் அய், Munnum Iraaman Ayi - பரசுராம மூர்த்தியாயும்
தான் ஆய், Thaan Aay - ஸாக்ஷாதவதாரமான ஸ்ரீராமபிரானாயும்
பின்னும் இராமன் ஆய், Pinnum Iraaman Aay - பலராமனாயும்
தாமோதரன் ஆய், Thaamodharan Aay - கண்ணபிரானாயும்
கற்கியும் ஆனான் தன்னை, Karkiyum Aanaan Thannai - கல்கியாயும் திருவவதாரஞ் செய்யுமியல் பினனான எம்பெருமானை
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே (ஸேவித்து)
அடியன், Adiyan - சேஷபூதரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி செய், Oli Sei - அருளிச் செய்த
தேன் ஆர் இன் சொல், Then Aar In Sol - தேன் போன்று மதுரமான சொற்களையுடைய
தமிழ் மாலை, Tamizh Maalai - இத்தமிழ்ப்பாசுரங்களை
செப்ப, Seppa - அப்யஸிக்குமளவில்
பாவம், Paavam - பாவங்கள்
நில்லா, Nilla - நிற்கமாட்டாமல் அகன்றொழியும்,
1741பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அக்குணங்கள் எல்லாம் உண்டானாலும் நாம் விரும்பி இருத்தல் -செய்த அன்று -அன்றோ – அது -கார்யகரமாவது என்ன – நஞ்சு தாரகமான உனக்கு ஆகாதது -இல்லை ஸ்ரீ பிராட்டிமார் எனக்கு புருஷகாரம் ஆனபின்பு என் கார்யத்துக்கு குறை உண்டோ -என்கிறார்) 4
பெண்ணானாள் பேரிளம் கொங்கையின் ஆர் அழல் போல் உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான் மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள் கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே –8-10-4
பதவுரை Show / Hide
மண் ஆளா, Mann Aalaa - பூமிப்பிராட்டியை ஆள்பவனே! (- (கண்ணபுரத்துறையம்மானே!- ;))
வாள் நெடு கண்ணி, Vaal Nedu Kanni - ஒளிபொருந்திப் பெருத்த கண்களையுடையவளும்
மது மலராள், Madhu Malaraal - மதுபெருகுகின்ற மலரிற் பிறந்தவளுமான ஸ்ரீ மஹா லக்ஷமிக்கு
கண்ணாளா, Kannala - வல்லபனானவனே!
பெண் ஆனாள், Pen Aanala - பெண்வடிவுகொண்டுவந்த பூதனையினுடைய
பேர் இள கொங்கையின், Per Il Kongaiyin - பெரிதும் இளையதுமான ஸ்தநத்திலுள்ள
ஆர் அழல் போல், Aar Azhai Pol - நெருப்புப்போன்றதான
உண்ணா, Unnaa - உண்ணமுடியாத
நஞ்சு, Nanju - விஷத்தை
உண்டு, Undu - உறிஞ்சியுண்டு
உகந்தாயை, Uganthaayi - திருவுள்ளமுவந்த வுன்னை
நான் உகந்தேன், Naan Uganthen - நான் அடைந்து மகிழப் பெற்றேன்.
1750பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட-ஆகாசமும்-பூமியும் குல பர்வதங்களும் கடலிலே புக்கு அகப்பட –இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் – பெரிய களிப்பை உடைய ஸ்ரீ மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன்) 3
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரியகட்டு ஒளித்தோன் போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –9-1-3
பதவுரை Show / Hide
வாதை வந்து அடர, Vathai Vandu Adara - கஷ்டம்நேர்ந்து அதிகரிக்க (- (திருக்கண்ணங்குடியுள், நின்றானே-.))
வானமும், Vaanamum - ஆகாசமும்
நிலனும், Nilanum - பூமியும்
மலைகளும், Malaigalum - மலைகளும்
அலை கடல், Alai Kadal - மலையெறிகின்ற கடலிலே
குளிப்ப, Kulippa - அழுந்திவிட.
மீது கொண்டு, Meethu Kondo - (இவற்றை யெல்லாம்) தன் மேலே யேறிட்டுக் கொண்டு
உகளும், Ugalum - களிப்புடன் உலாவுகிற
மீன் உரு ஆகி, Meen Uru Aagi - மத்ஸ்ய ரூபியாகி
விரி புனல், Viri Punal - பரம்பின பெருவெள்ள நீரை
வரி அகடு, Vari Akadu - அழகிய (தனது) செலுவிலே
ஒளித்தோன், Oliththon - அடக்கின எம்பெருமான்,
போது, Podhu - உரிய காலத்திலே
அலர், Alar - விகஸிக்கிற
புன்னை, Punnai - புன்னைகளென்ன
மல்லிகை, Mallikai - மல்லிகைகளென்ன
மௌவல், Mauval - முல்லைகளென்ன (இவற்றினுடைய)
புது விரை மது மலர், Puthu Virai Madhu Malar - புதிய பரிமளத்தையும் தேனையுமுடைய பூக்களிலே
அளைந்து, Alaindhu - அளாவி
சீதம் ஒண் தென்றல், Seetham On Thendral - குளிர்ந்த அழகிய தென்றற்காற்று
திசை தொறும், Thisai Thorum - எல்லாப்பக்கங்களிலும்
கமழும், Kamazhum - வாஸனைவீசப்பெற்ற
1754பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணனை –ஆதித்ய கிரணம் போலே கூரிய அம்புகளாலே வர பலத்தாலே பூண் கட்டின முடிகள் ஆனவை பனம் பழம் போலே உதிரும்படி வில்லை வளைத்தவன் – மதுபான மத்தமான வண்டுகள் இனிய இசை பாடா நின்றுள்ள ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான தேசம் ஆயிற்று) 7
வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கை யார் கோனைப் பானுநேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடியுதிர வில் வளைத்தோன் கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத் தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-7
பதவுரை Show / Hide
வலிமையால், Valimaiyaal - (தனது) மிடுக்கினால் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.))
வானுளாரவரை நலியும், Vaanulaaravarai Naliyum - தேவர்களை ஹிம்ஸதித்துக் கொண்டிருந்த
மறிகடல் இலங்கை யார் கோனை, Marikadal Ilangai Yaar Konai - அலைமறியுங் கடல்சூழ்ந்த இலங்கையில் உள்ளவர்களுக்கு அரசனான இராவணனுடைய
பரு முடி, Paru Mudi - பருத்த தலைகள்
பானு நேர் சரத்தால், Paanu Ner Sarathaal - ஸூர்யனோடொத்த (திக்ஷ்ணமான) அம்புகளாலே
பனங்கனி போல, Panangani Poola - பனம்பழம்போல
உதிர, Uthira - அற்றுவிழும்படி
வில் விளைத்தோன், Vil Vilaitthon - சார்ங்கத்தை வளைத்த பெருமான்
கான் உலாம், Kaan Ulaam - காட்டிலே உலாவுகின்ற
மயிலின் கணங்கள், Mayilin Kanangal - மயில் கூட்டங்கள்
நின்று ஆட, Ninru Aada - நின்று கூத்தாடவும்,
கணம் முகில், Kanam Mukil - திரண்ட மேகங்கள்
முரசம் நின்று அதிர, Murasam Ninru Athira - முரஜவாத்தியம் போல நின்று முழங்கவும்,
தேன் உலாம் வரி வண்டு, Then Ulaam Vari Vandu - தேன்களிலே திரிகின்ற அழகிய வண்டுகள்
இன் இசை முரலும், In Isai Muralam - இனிய ராகங்களை ஆலாபிக்கவும் பெற்ற
1757பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை வில்லாலே அக்னி கிளரும்படியாக செற்ற ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானை – ஸ்ரீ ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்தவையாய்–லஷணங்களில் குறை அற்று இருந்துள்ள இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்க்களுக்கு ஸ்ரீ பகவத் தாரித்ர்யம் இல்லை – என்கிறார்) 10
கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடியுள் நின்றானை மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே –9-1-10
பதவுரை Show / Hide
கலை உலா அல்குல், Kalai Ula Alkul - நல்ல ஆடை உலாவுகின்ற இடுப்பையுடையளான
காரிகை திறத்து, Kaarikai Thirathu - அழகிற்சிறந்த ஸீதாபிராட்டிக்காக
கடல் பெரு படையொடும் சென்று, Kadal Peru Padaiyodum Sendru - ஸமுத்திரத்திற் காட்டில பெரிதான (வானர) சேனையோடே எழுந்தருளி
சிலையினால், Silaithinaal - சார்ங்கவில்லாலே
இலங்கை தீ எழ செற்ற, Ilankai Thee Ezh Setra - இலங்கை நெருப்புப்பற்றி யெரியும்படி அழித்தவனும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானை, Thirukkannangudiyul Nindraanai - திருக்கண்ணங்குடியில் எழுந்தருளு யிருப்பவனுமான எம்பெருமான் விஷயமாக;
மலைகுலா மாடம், Malaikula Maadam - மலையென்று கொண்டாடிச் சொல்லத்தக்க மாடங்களை யுடைத்தான
மங்கையர், Mangaiyar - திருமங்கை நாட்டில் உள்ளவர்கட்கு
தலைவன், Thalaivan - தலைவரும்
மானம் வேல், Maanam Veel - சிறந்த வேற்படையை யுடையவருவான
கலியன், Kaliyan - ஆழ்வாருடைய
வாய் ஒலிகள், Vaai Oligal - ஸ்ரீ ஸூக்தியாய்
உலவு, Ulavu - லக்ஷணங்களில் குறையற்றவையான
சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும், Sol Maalai Onpathodu Ondrum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்க்கு, Vallavarkku - ஓதவல்லவர்களுக்கு
நல்குரவு, Nalkuravu - ஏழைமை
இல்லை, Illai - இல்லையாம்.
1758பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மர்மங்களிலே கடாஷியா நின்றார் பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் – நீ பின்னை செய்தது என் என்ன –இப்பார்வைக்கு நானும் கூட்டு என்று பார்க்கிறாளோ -என்று அஞ்சுகின்றேன் – அவன் பார்வையும் அவள் பார்வையும் ஆனதாகிறது – அப்போதை அழகு இருந்த படி காண்) 1
பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம் மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார் அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-1
பதவுரை Show / Hide
தோழீ, Thozhi - வாராய் தோழியே!,
இவர் மேனி, Ivar Meeni - இந்த எம்பெருமானுடைய திருமேனியானது
பொன், Pon - பொன்னாயிருக்கின்றது
மரதகத்தின் பொங்கு இள சோதி, Marathakathin Pongu Ila Sothi - மரதகப்பச்சையின் பரம்பின புதிய தேஜஸ்ஸை யுடைத்தான
அகலத்து, Akalathu - திருமார்பில் (சாத்தப்பட்டுள்ள)
ஆரம், Aaram - ஹாரமானது
மின், Min - மின்னலாயிருக்கிறது
இவர், Ivar - இப்பெரியவர்
வாயில், Vaail - வாயினால்
நல் வேதம் ஓதும் வேதியர், Nal Vedham Oodhum Vethiyar - நல்லவேதத்தை உருச்சொல்லுகிற வைதிகரா யிருக்கின்றார்;
வானவர் ஆவர், Vaanavar Aavar - (மேன்மையில்) தேவர்களோடொப்பர்;  (இவர்)
என்னையும் நோக்கி, Ennaiyum Nookki - என்னையும் உற்றுப் பார்த்து
என் அல்குலும் நோக்கி, En Alkulum Nookki - எனது நிதம்பத்தையும் உற்றுப் பார்த்து
ஏந்து இள கொங்கையும், Aendu Ila Kongaiyum - ஏந்தப்படுகின்ற இளைய முலைகளையும்
நோக்குகின்றார், Nookkiyiraar - உற்றுப்பார்க்கின்றார்;
அன்னை என் நோக்கும் என்று, Annai En Nookkum Endru - தாய் என்ன நினைப்பாளோ வென்று
அஞ்சுகின்றேன், Anjikiren - பயப்படுகிறேன்;
அச்சோ, Achcho - ஆச்சரியம்;
ஒருவர் அழகிய ஆ, Oruthar Azhagiya Aa - ஒரு பெரியவருடைய ஸௌந்தரியத்தை என்ன! சொல்லுவேன்.
1759பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒப்பித்துக் கொண்டு இரா நின்றார் –திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திருக் கையிலே உடையராய் இரா நின்றார் – ஒப்பனை தான் வேண்டாத படி இரா நின்றது திருத் தோள்களை கண்டவாறே – இவ் வழகு நம்மால் பேசப் போகாது-விஸ்மயப்பட்டு விடும் அத்தனை) 2
தோடவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் செஞ்சுடராழியுஞ் சங்குமேந்தி பாடக மெல்லடியார் வணங்கப் பன் மணி முததொடிலங்கு சோதி ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-2
பதவுரை Show / Hide
தோடு அவிழ் நீலம், Thodu Avizh Neelam - இதழ்கள் மலரப்பெற்ற நீலோற்பலங்கள் (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ -.))
மணம் கொடுக்கும், Manam Kodukkum - பரிமளத்தைப் புற்ப்பட விடுகின்றன
சூழ் புனல், Sool Punal - பரந்த தீர்த்தங்களாலே
சூழ், Sool - சூழப்பட்ட
குடந்தை, Kudandhai - திருக்குடந்தையிலே
கிடந்த, Kidandha - திருக்கண்வளர்ந்தருள்கின்ற
சேடர் கொல்என்று, Sedar Kolendru - யௌவன புருஷரோ இவர்! என்று
தெரிக்கமாட்டேன், Therikkamaatten - தெரிந்து கொள்கின்றிலேன்,
செம் சுடர் ஆழியும், Sem Sudar Azhiyum - சிவந்த ஒளியையுடை திருவாழியையும்
சங்கும், Sangum - சங்கையும்
ஏந்தி, Aendi - தரித்துக்கொண்டு,
பாடகம் மெல் அடியார் வணங்க, Paadagam Mel Adiyaar Vananga - பாதகடகம் பூண்ட மெல்லி பாதங்களையுடைய பெண்டிர்களால் வணங்கப்பெற்ற
பல் மணிமுத்தொடு, Pal Manimuththodu - பலவகைப்பட்ட ரத்னங்களோடும் முத்துகளோடும்
இலங்கு சோதி ஆடகம் பூண்ட, Ilangu Sothi Aadagam Poonda - விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய பொன் திருவாபரணங்களை யணிந்துள்ள
ஒரு நான்கு தோளும், Oru Naangu Tholum - விலக்ஷணமான நான்கு திருத்தோள்களுமாய்
1760பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓங்கி இருப்பதாய் பரந்து இருப்பதான மலை விளங்கினாப் போலே செவ்வையை உடைத்தாய் -மிக்க புகரை உடைத்தான – ஆயிரம் தோளையும் உடையராய்-அத் தோள்கள் தோறும் தோள் வந்தியை உடையராய் இரா நின்றார் கீழே நான்கு தோளும் என்னச் செய்தே ஆயிரம் தோள் என்கிறது ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை – ஓர் ஒப்பனை வேணுமோ -அவ்வடிவு அழகு தானே அமையாதோ) 3
வேயிரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம் தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி ஆயிரம் தோளோடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-3
பதவுரை Show / Hide
தோழீ, Thozhi - வாராய்தோழியே!’ (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.))
வேய் இரு சோலை, Veiy Iru Solai - மூங்கில்மயமான பரந்த சோலைகளை யுடைத்தான
விலங்கல், Vilangkal - குன்றுகளாலே
சூழ்ந்த, Soozhndha - சூழப்பட்ட
மெய்யம், Meyyam - திருமெய்ய மலையில் எழுந்தருளியிருக்கிற
மணாளர், Manalar - மணவாளப்பிள்ளையும்
இ வையம் எல்லாம் தாயின, I Vaiyam Ellam Thaayin - இந்த பூமிப்பரப்பையெல்லாம் தாவி அளந்தவருமான
நாயகர் ஆவர், Naayakar Aavar - பரமபுருஷர்போலும் இவர்!
தாமரை கண்கள் இருந்த ஆறு, Thamarai Kangkal Irundha Aaru - தாமரை போன்ற திருக்கண்களிருக்கும் படியை என் சொல்வேன்;!
சேய் இரு குன்றம், Sey Iru Kuntram - ஓங்கியும் பரந்துமிருக்கின்ற மலைகள்
திகழ்ந்தது ஒப்ப, Thigazhnthathu Oppa - விளங்குமாபோலே
செவ்விய ஆகி, Sevviya Aagi - அழகுடையனவாய்
மலர்ந்த சோதி, Malarndha Sothi - பரந்த தேஜஸ்ஸை யுடையனவான
ஆயிரம் தோளொடு, Aayiram Tholodu - ஆயிரம் திருத்தோள்களும்
இலங்கு பூணும், Ilangu Poonum - விளங்குகின்ற திருவாபரணங்களுமாய்
1763பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்டாரை தம் வசமாக்கி தன் காலிலே விழ விட்டுக் கொள்ள அஞ்சன கிரி போலேயுமாய் இரா நின்றார் – வாக்குக்கு அவிஷயமான விஷயத்தில் நான் எத்தைச் சொல்லுவது) 6
வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும் அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-6
பதவுரை Show / Hide
வெம் சினம் வேழம், Vem Sinam Vezham - வெவ்விய சீற்றத்தை யுடைய (குவலயாபீட மென்னும்) யானையினது
மருப்பு, Maruppu - கொம்பை
ஒசித்த, Osiththa - முறித்தொழித்த
வேந்தர் கொல், Vendar Kol - பிரபுவோ இவர்!
ஏந்து இழையார், Aendhu Izhaiyar - தரிக்கப்படும் ஆபரணங்களை யுடையரான பெண்டிருடைய
மனத்தை, Manaththai - நெஞ்சை
தஞ்சு உடையாளர் கொல், Thanju Udaiyalar Kol - தஞ்சமாகவுடையவரோ இவர்!
யான் அறியேன், Yaan Ariyeen - நான் அறிகின்றிலேன்;
தாமரை கண்கள் இருந்த ஆறு, Thamarai Kangkal Irundha Aaru - தாமரைபோன்ற திருக்கண்களிருக்கும்படி என்னே!
முன், Mun - முன்பு
கஞ்சன், Kanjan - கம்ஸன்
அஞ்ச, Anja - பயப்படும்படியாக
கால் விசைத்த, Kaal Visaittha - (தனது) திருத்தாள்களின் வலிமையைக் காட்டின
காளையர் ஆவர், Kaalaivar Aavar - இளையவராக இருக்கின்றார்;
கண்டார் வணங்கும், Kandaar Vanangum - கண்டவர்களெல்லாரும் வணங்குதற்குரியவராய்
அஞ்சனம் மாமலை யேயும் ஒப்பர், Anjanam Maamalai Yeyum Oppar - பெரிய வொரு அஞ்சனமலை போன்றிருப்பவரான
ஒருவர், Oruthar - ஒருபெரியவருடைய
அழகிய ஆ, Azhagiya Aa - ஸௌந்தரியமானது
அச்சோ, Achcho - ஆச்சரியம்!.
1777பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம் அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம் அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம் அதில் இசையை அப்யசிக்கவுமாம் – இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம் – ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது – அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் -துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே இத்தை இங்கே அப்யசிக்க அவர்கள் இங்குத்தை தனிமை தீர அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய் நித்ய விபூதியிலே புக்கு நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்) 10
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப் புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல் கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10
பதவுரை Show / Hide
இலங்கு முத்தும், Ilangu Muthum - விளங்குகின்ற முத்துக்களையும்
பவளம் கொழுந்தும், Pavalam Kozhundum - பவளத்துளிர்களையும்
எழில் தாமரை, Ezhil Thamarai - அழகிய தாமரைகளையு முடைத்தாய்
புலங்கள் முற்றும், Pulangal Mutrum - உள்ள இடங்கள் முழுதும்
பொழில் சூழ்ந்து, Pozhil Soozhndu - சோலைகளால் சூழப்பட்டதாய்
அழகு ஆய, Azhagu Aaya - அழகியதான
புல்லாணி மேல், Pullaani Mael - திருப்புல்லாணிவிஷமாக,
கலங்கல் இல்வா புகழான், Kalangal Ilvaa Pugazhaan - கலக்கமற்ற கீர்த்தியையுடைய வரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச் செய்த
மாலை, Maala - சொல்மாலையாகிய இத்திரு மொழியை
வலங்கொள் தொண்டர்க்கு, Valangol Thondarkku - அதிகரிக்கின்ற பாகவதர்களுக்கு
இடம் ஆவது, Idam Aavadhu - இருப்பிடமாவது (எவ்விடமென்றால்)
பாடு இல்லைகுந்தம், Paadu Illaikundham - ஒரு துன்பமுமில்லாத ஸ்ரீவைகுண்டமே.
1782பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவளுடைய பந்துக்கள் அடைய திரண்டு நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதே அவன் வார்த்தை கேட்டாய் இறே- நாங்கள் சொன்னதுவே மெய்யாய்-அவன் சொன்ன வார்த்தை பொய்யான படி கண்டாயே – இனி நாங்கள் சொன்னத்தை கேட்க வல்லையே என்ன அப்படியே செய்கிறோம் -அவன் பின் போன நெஞ்சை மீட்டால் -என்கிறாள்) 5
வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும் எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும் புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே –9-4-5
பதவுரை Show / Hide
இலங்கை, Ilankai - லங்காபுரியானது
மலங்க, Malanga - நலங்கியழியும்படியாக
வில்லால், Villal - சார்ங்கத்தாலே
சரம், Saram - அம்புகளை
துரந்த, Durandha - பொழிந்த
வல்லாளன் பின், Vallalan Pin - மஹாவீரரான பெருமாள் பின்னே
போன, Pona - சென்ற
நெஞ்சம், Nenjam - மனமானது
வரும் அளவும், Varum Alavum - மீண்டுவருகிறவரையில்,
எல்லாரும், Ellarum - தோழிமார்தாய்மார் முதலிய அனைவரும்
என் தன்னை, En Thannai - என்னை
ஏசிலும், Esilum - பழித்தாலும்
பேசிடினும், Pesidinum - (கண்டித்துச்) சொன்னாலும் (ஒன்றுக்கும் மீளாதபடி)
புல்லாணி எம்பெருமான், Pullani Emperuman - திருப்புல்லாணி யெம்பெருமானுடைய
பொய், Poi - பொய்யுரைகளை
கேட்டு இருந்தேன், Kettu Irundhen - நம்பித்தரித்திருக்கின்றேன்.
1783பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு ஆஸ்வாசத்தை பண்ணக் கடவனானவன் போய்க் கொடு நின்றான்-நலிவார் பெருத்திரா நின்றது அனுபவிக்கலான நிலத்திலே போய்ப் புகப் பெற்றிலோம்-இங்குள்ளவையும் நம்மை விட்டுப் போகா நின்றது -என்கிறாள்) 6
சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான் அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால் செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன் இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே –9-4-6
பதவுரை Show / Hide
சுழன்று இலங்கு வெம் கதிரோன், Suzhandru Ilangu Vem Kathiron - (மேருமலையைச்) சுற்றி வந்துகொண்டு பிரகாசிக்கின்ற ஸூரியன்
தேரோடும் போய் மறைந்தான், Therodum Poi Marainthaan - தனது தேரோடே சென்று அஸ்தமித்தான்;
அம்சுடரோன் தான், Amsudharon Thaan - அழகிய கிரணங்களையுடைய சந்திரனோ வென்றால்
அழன்று கொடிது ஆகி, Azhandru Kodithu Aagi - மிகவும் தீக்ஷ்ணனாய்க் கொண்டு
அடும், Adum - தஹிக்கின்றான்,
ஆல், Aal - அந்தோ!
செழு, Sezhu - செழுமைதங்கிய
தடம், Thadam - தடங்களாலும்
பூ சோலை, Poo Cholai - பூஞ்சோலைகளாலும்
சூழ், Sool - சூழப்பட்ட
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
கைதொழுதேன், Kaithozhuthen - கைதொழுத யான்
என்தன் எழில்நிற மும், Enthan Ezhilnira Mum - எனது அழகிய நிறத்தையும்
சங்கும், Sangum - வளைகளையும்
இழந்திருந்தேன், Izhandhirundhen - இழந்து விட்டேன்
1785பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரபல விரோதிகளை ஆற்றி உகந்தாருக்கு தன்னைக் கொடுக்க கடவனாக ஆசைப் பட்ட நமக்கு நம் விரோதிகளை மாற்றி நமக்கு தன்னை தந்தபடி காண்) 8
தூம்புடைக் கை வேழம் வெருவ மருப்பொசித்த பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப் பூஞ்செருந்திப் பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன் தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெந்தழலே –9-4-8
பதவுரை Show / Hide
தூம்பு உடை கை வேழம், Thoombu Udai Kai Vezham - துளையையுடையத்தான துதிக் கையையுடைய (குவலயாபீடமென்னும்) யானையானது
வெருவ, Veruva - அச்சமுறும்படி
மருப்பு ஒசித்த, Maruppu Osiththa - (அதன்) கொம்புகளை முறித்த
பாம்பின் அணையான், Paampin Anaiyaan - சேஷசாயியான பெருமான்
கைதொழுதேன், Kaithozhuthen - தொழுவதற்கு ஆசைப்பட்டவளான
என் தனக்கு, En Thanakku - எனக்கு
நமக்கு, Namakku - நம் திறத்தில்
அருள் தந்த ஆ, Arul Thanda Aa - அருள் செய்தவிதம் என்னே!;
பூ, Poo - அழகிய
செருந்தி, Serunthi - சுரபுன்னைமரங்கள்
பொன் சொரியும், Pon Soriyum - பொன்போன்ற மலர்களை உதிர்க்குமிடமான
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
தேம்பல் இளபிறையும், Thembal Ilapiraiyum - மிக இளைய சந்திரனும்
ஓர்வெம் தழல், Orvem Thazhal - வெவ்விய நெருப்புப்போலுள்ளான
1797பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் – இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது -உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே) 10
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக் கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக் கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-10
பதவுரை Show / Hide
தென் இலங்கை, Then Ilangai - தென் திசையிலுள்ள இலங்கா புரியானது
மலங்க, Malanga - கலங்கும்படியாக
செற்றவன், Settravan - த்வம்ஸம்பண்ணினவனும்
தேவபிரான், Devapiraan - தேவர்களுக்குப் பிரபுவானவனும்
திரு மாமகனை டிபற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட, Thiru Mamakanai Tipratum En Nenjam Koyil Konda - பெரிய பிராட்டியாரைப் பெற்றுவைத்தும் என் மனதைக் கோயிலாகக்கொண்டுள்ளவனுமான
பேரருளாளன், Perarulalan - பேரருளாளப்பெருமானுடைய
பெருமை, Perumai - பெருமையை
பேச கற்றவன், Pesakattravan - அருளிச் செய்ய வல்லவரும்
காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களை யுடையவருமான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வாருடைய
கண்ணகத்தும், Kannagathum - கண்களினுள்ளும்
மனத்தும், Manathum - நெஞ்சினுள்ளும்
அகலா, Akala - விட்டுநீங்காத
கொற்றவன், Kotravan - ஸர்வேச்வரனாய்
முற்றுலகு ஆளி, Mutrulagu Aali - ஸகலலோகநாதனான பெருமான்
நின்ற, Nindra - நித்யவாஸம்பண்ணப்பெற்ற குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்
1801பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தலைகள் பத்தும் சிதறும்படியாக சென்று அடை மதிள் படுத்தி ராவணன் உடைய நெஞ்சில் திண்மையையும் தோளில் மிடுக்கையும் போக்கின ஆண் பிள்ளை வர்த்திக்கிற ஊர் போலே) 4
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரவும் கரமும் துனித்த வுரவோனூர் போலும் இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம் குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே –9-6-4
பதவுரை Show / Hide
இரவும் பகலும், Iravum Pagalum - எப்போதும்
தேன், Then - வண்டுகள்
ஈன், Een - இனிமையாக
முரல, Mural - ரீங்காரஞ் செய்யப் பெற்றதும்
மன்று எல்லாம், Manru Ellam - வெளிநிலமுழுதும்
குரவின் பூவேதான், Kuravin Poovethaan - குருவம்பூக்களே
மணம் நாறும், Manam Naarum - பரிமளிக்கப்பெற்றதுமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது
முன், Mun - முன்பு (ராமாவதாரத்தில்)
அரக்கன், Arakkan - இராவணனென்னும் ராக்ஷஸனது
சிரம் ஐந்தும் ஐந்தும், Sirama Aindhum Aindhum - பத்துத் தலைகளும்
சிந்த, Sindha - சிதறும்படி
சென்று, Sendru - (இலங்கைக்கு) எழுந்தருளி
உரமும் கரமும், Uramum Karumum - (அவனது) மார்பையும் கைகளையும்
துணித்த, Thuniththa - துணித்தொழித்தவனான
உரவோன், Uravon - பெருமிடுக்குடைய பெருமானுடைய
ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும்.
1802பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன் வர்த்திக்கிற ஊர் போலும் – முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று தாழ்வு செய்து திரிகைக்கு) 5
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர் ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும் மைவைத்திலங்கு கண்ணார் தங்கள் மொழி யொப்பார் கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே –9-6-5
பதவுரை Show / Hide
கொவ்வைக் கனிவாய், Kovvaik Kanivai - கோவைப்பழம்போற் சிவந்த வாயையுடைய
கிள்ளை, Killa - கிளிகளானவை
மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான், Mai Vaiththu Ilangu Kannaar Thangal Mozhi Oppaan - மையிட்டு விளங்குகின்ற கண்களையுடைய பெண்களில் பேச்சுப்போல
பேசும், Pesum - பேசுமிடமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது
அன்று, Andru - முன்பொருகால்
அமரில், Amaril - பாரதயுத்தத்தில்
கவ்வை களிறு மன்னர், Kavvai Kaliru Mannar - பேரொலிகொண்ட யானைகளை யுடையவரான அரசர்கள்
மாள, Maala - மாண்டுபோம்படியாக
ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக
கலி மா தேர், Kali Maa Ther - திண்ணிய பெரியதேரை
உய்த்தான், Uyiththaan - நடத்தின பெருமானுடைய
ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும்
1807பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை அஹ்ருத்யமாகச் சொல்ல புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம்) 10
சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம் கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல் கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –9-6-10
பதவுரை Show / Hide
சிலைபால், Silaihaal - சார்ங்கத்தாலே
இலங்கை, Ilankai - லங்காபுரியை
செற்றான், Setraan - அழித்தவனும்
மற்று, Mattru - அன்றியும்
சினம், Sinam - சிற்றங்கொண்ட
ஓர் வேழம், Oru Vezham - (குவலயாபீடமென்கிற) ஒரு யானையினது
கொலை ஆர், Kolai Aar - கொலைத் தொழில்வல்ல
கொம்பு, Kombu - தந்தங்களை
கொண்டான், Kondaan - முறித்துக் கொண்டவனான பெருமான்
மேய, Meya - நித்யவாஸம் பண்ணுகிற
குறுங்குடி மேல், Kurungkudi Mael - திருக்குறுங்குடி விஷயமாக
கலை ஆர் பனுவல்வல்லான், Kalai Aar Panuvalvallaaan - சாஸ்த்ரோக்த லக்ஷணங்களமைந்த கவிகளைப் பாட வல்லவரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச் செய்த
மாலை, Maala - சொல்மாலையாகிய
நிலை ஆர் பாடல், Nilai Aar Paadal - நிலைநிற்கும் பாசுரமாகிய (வேதரூபமான) இத்திருமொழியை
பாட, Paada - பாடவே
பாவம், Paavam - பாவங்கள்
நில்லா, Nilla - நில்லாமல் ஓடிப்போம்
1822பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சங்கல்ப்பத்தாலே அன்றிக்கே பத்தும் பத்தாக வீர வாசி தோற்ற பூசலிலே பொறுத்த ஸ்ரீ ஸ்வாமிகள் வர்த்திக்கிற தேசம்) 5
வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில் பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன் மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-5
பதவுரை Show / Hide
வணங்கல் இல் அரக்கன், Vanangal Il Arakkan - வணக்கமற்ற இராவணன் (- (மட நெஞ்சே!-) (அடிகள் தம் கோயில்) (மாலிருஞ்சோலை, வணங்குதும் வா-.))
செரு களத்து, Seru Kalathu - போர்க்களத்தில்
அவிய, Aviyam - முடியும்படியாகவும்
மணி முடி ஒருபதும் புளர, Mani Mudi Orupadhum Pulara - (அவனது) மணியணிந்த முடிகள் பத்தும் தரையில் புரளும்படியாகவும்
அவன்தன் கவந்தம், Avanthan Kavantham - அவனுடைய கபந்தம்
அணங்கு எழுந்து, Anangu Ezhundhu - தெய்வாவேசங் கொண்டது பொல
நின்று ஆட, Ninru Aada - நின்று ஆடும்படியாகவும்
அமர் செய்த, Amar Seitha - யுத்தம் பண்ணின
பிணங்களில், Pinangalil - ஒன்றுக்கொன்று பிணங்கியிருப்பதோடு கூடின
நெடு வேய் நுதி, Nedu Vei Nuthi - ஓங்கின மூங்கிலின் நுனி
முகம் கிழிப்ப, Mugam Kizhippa - (மலையுச்சியிலுள்ள தேன் கூட்டின்) வாயைக்கிழிக்க
பிரசம் வந்து இழிதா, Piracham Vandu Izhidha - (அதிலுள்ள) தேனீக்கள் சிதற
பெரு தேன், Peru Then - அதிகமான தேனினுடைய
மணம், Manam - பரிமளம்
கமழ், Kamazh - வீசப்பெற்ற
சாரல், Saaral - பக்கங்களையுடைத்தான
1838பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக நெஞ்சை பிரியாதே இருந்து அடியவர்க்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் – கிளர்ந்து ஸ்ரமஹரமான அருவிகள் நீர் மாறாதே ஒழுகுமா போலே-மேகம் பொன்களையே சிந்த – அத்தாலே மிக்க ஒளியை உடைத்தாய் செந்தாமரைகள் மாறாதே அலர்ந்த ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனவன்) 1
எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான் பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே –9-10-1
பதவுரை Show / Hide
எங்கள் எம் இறை, Engal Em Irai - எமக்கு அஸாதாரண ஸ்வாமியும் (- (எவ்விடத்துள்ளானென்னில்))
எம் பிரான், Em Piraan - எமக்கு உபகாரகனும்
இமை யோர்க்கு நாயகன், Imai Yorkku Naayagan - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
ஏத்து, Aethu - துதிக்கின்ற
அடியவர் தங்கள் தம், Adiyavar Thangal Tham - பக்தர்களினுடைய
மனத்து, Manaththu - நெஞ்சிலே
பிரியாது, Priyaadhu - பிரியாமல் பொருந்தியிருந்து
அருள் புரிவான், Arul Purivaan - (அவர்கட்கு) அருள் செய்பவனுமான எம்பெருமான்
பொங்கு, Pongu - மேன்மேலும் கிளர்கின்ற
தண், Than - குளிர்ந்த
அருவி, Aruvi - அருவிகளானவை
புதம் செய்ய, Pudham Seyya - தாவிப்பாய,
பொன்களே சிதற, Pongkale Chithara - (அவ்வருவிகள் முகமாகப்) பொன்மணிகள் சிந்த
இலங்கு ஒளி, Ilangu Oli - (அதனால்) விளங்குகின்ற ஒளியையுடையதாயும்
செம் கமலம் மலரும், Sem Kamalam Malarum - செந்தாமரைப்பூக்கள் மலரப்பெற்றதாயுமுள்ள
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலெழுந்தருளி யுள்ளான்
1841பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டியோடு ஒக்க ருத்ரனுக்கும் திரு மேனி யிலே இடம் கொடுத்த சீலவான் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 4
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர் கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான் நாறு செண்பக மல்லிகை மலர் புல்லியின் இளவண்டு நன்னறும் தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே –9-10-4
பதவுரை Show / Hide
ஏறு ஏறி, Eru Eri - விருஷயத்தை வாஹனமாகக்கொண்டு ஏறியிருப்பவனும்
இலங்கும் ஒன் மழு பற்றும், Ilankum On Mazhu Patrum - விளங்குகின்ற அழகிய மபுவாயுதத்தைக் கையிலேந்திக் கொண்டிருப்பவனுமான
ஈசற்கு, Eesarku - சிவபிரானுக்கு
இசைந்து, Isainthu - திருவுள்ளமிணங்கி
உடம்பில் ஓர் கூறு, Udamil Oru Kooru - தனது திருமேனியில் ஒரு பாகத்தை இருப்பிடமாகக் கொடுத்தருளினவனும்
குலம், Kulam - சிறந்த
மா மகட்கு, Maa Makadku - பெரியபிராட்டியார்க்கு
இனியான், Iniyaan - போக்யனுமான எம்பெருமான்
இன் இன வண்டு, In Ina Vandu - இனிய இளவண்டுகளானவை
நாறு, Naaru - மணம்மிக்க
செண்பகம், Senbagam - செண்பகப்பூவையும்
மல்லிகை மலர், Mallikai Malar - மல்லிகைப்பூவையும்
புல்கி, Pulki - தழுவி
நல் நறு தேறல், Nal Naru Therhal - நல்லமணமுள்ள தேனிலை
வாய் மடுக்கும், Vai Madukkum - வாய்வைத்துப் பருகுமிடமான
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான்.
1843பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் மிடுக்கை அழித்த ஸ்ரீ தசராத்மாஜன் இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 6
காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான் நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத் தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே –9-10-6
பதவுரை Show / Hide
காவலன், Kavalank - ‘நானே ஜகத்ரக்ஷகன்’ என்று அஹங்காரங்கொண்டிருந்த (- (எவ்விடத்திலுள்ளானென்னில்))
இலங்கைக்கு இறை, Ilangaikku Irai - லங்காதிபதியான இராவணன்
கலங்க, Kalanga - முடியும்படியாக
சரம், Saram - பாணங்களை
அவன், Avaan - அவ்விராவணனுடைய
ஏவலம், Evalam - பாணப்ரயோக ஸாமர்த்தியத்தை
தவிர்த்தான், Thavirthaan - தொலைத்தவனும்
என்னை ஆளுடை, Ennai Aaludai - என்னை அடிமைகொண்டருளினவனுமான
எம்பிரான், Embiraan - எம்பெருமான்
நாவலம் புவி மன்னர், Naavalam Puvi Mannar - ஜம்பூத்வீபத்திலுள்ள அரசர்கள்
மால் இங்கு உறைகின்றது என வந்து, Maal Ingu Uraikindrathu En Vandu - ‘எம்பெருமான் இவ்விடத்தில் நித்யஸந்நிதி பண்ணியிருக்கிறான்’ என்று தெரிந்துவந்து
வணங்க, Vananga - ஆச்ரயிக்க
தேவர், Thevar - பிரமன் முதலிய தேவர்களும்
வந்து இறைஞ்சும், Vandu Irainchum - வந்து வணங்கப்பெற்ற
திருக்கோட்டி யூரான், Thirukkoatti Yooran - திருக்கோட்டியூரிலுள்ளான்.
1858பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராஷசரில் இனி ஆடு போலேக் கூப்பிடக் கடவார் இல்லை -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர் – ஆடு -என்று வெற்றி இந்த ராஷச ஜாதியிலே வெற்றி சொல்லக் கடவார் இல்லை -என்கிறது என்ன இதுவே இறே பொருள் என்று அருளிச் செய்தார் -என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் – தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்துண்டு – அந்த சப்த அநுகாரம் – பொங்கத்தம் பொங்கோ –என்கிற இது) 1
இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர் பரக்க யாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம் குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல்விலி ராமபிரானே அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-1
பதவுரை Show / Hide
எம் கோன், Em Kon - எங்களுக்குத் தலைவனான இராவணன்
இரக்கம் இன்றி, Irakkam Inri - ஈரநெஞ்சு இல்லாமல்
செய்த, Seitha - பண்ணின
தீமை, Theemai - அபசாரமானது
இம்மையே, Immaiye - இப்பிறப்பிலேயே
எமக்கு, Emakku - எங்களுக்கு
எய்திற்று காணீர், Eydhithru Kanneer - பலித்துவிட்டது பாருங்கோள்
இன்று, Indru - இப்போது
யாம், Yaam - நாங்கள்
பார்க்க, Paarka - விரிவாக
உரைத்து என், Uraiththu En - சொல்லுவதனால் என்ன பயன்?
இராவணன் பட்டனன், Iravanan Pattanan - ராவண்ன் மாண்டு போனான்,
இனி, Ini - இனிமேல்
யாவர்க்கு உரைக்கோம், Yaavarkku Uraikkom - யாருக்குச் சொல்லுவோம்
குரங்கு நாயகர்காள், Kurangu Naayakar Kaal - வாநரஸேநாபதிகளே!
இளங்கோவே, Ilankove - இளைய பெருமாளே!
கோல் வல்வில் இராமபிரானே, Kol Valvil Ramapiraney - அழகிய திண்ணிதான சார்ங்கவில்லைக்கொண்ட ஸ்ரீராமபிரானே!
அரக்கர், Arakkar - ராக்ஷஸஜாதியில்
ஆடு அழைப்பார் இல்லை, Aadu Azaippaar Illai - வெற்றியைச் சொல்லிக் கூவுவாரில்லை
நாங்கள், Naangal - (தோற்றொழிந்த) நாங்கள்
அஞ்சினோம், Anjinom - பயப்படுகின்றோம்
தடம் பொங்கத்தம் பொங்கோ, Thadam Pongatham Pongoo - தோற்ற தோல்விக்கு நாங்கள் ஆடுகிற ஆட்டங்காண்மின் என்றவாறு.
1859பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒப்பாய் இருக்கிற தோள் இரண்டையும் ஒரு திரு அபிஷேகத்தையும் உடையராய் இருக்கிற உம்மைக் கண்டு அடியாரான நாங்கள் ஒருவர் இருவர் அன்றிக்கே எல்லாரும் ஒக்க வாழ்ந்தோம் எமக்கு ஜனகன் ஆனவனே –எங்கள் நாதனே –-அஞ்சினோம் என்றாரைக் கொல்லுகை உனக்குப் போருமோ) 2
பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம் சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள் ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-2
பதவுரை Show / Hide
அந்த எம்பெருமான், Andha Emperumaan - ஸ்வாமிந் ஸ்ரீராமபிரானே! (- (அஞ்சினோம், தடம்பொங்கத்தம் பொங்கோ))
நீள், Neel - நீண்ட
பத்து முடியும், Paththu Mudiyum - பத்துதலைகளையும்
அவை இரட்டி, Avai Iratti - அந்தத் தலைகளின் கணக்கில் இரட்டிப்பான கணக்கை யுடையவையாய்
பாழி, Paazhi - வலிமைமிக்கவையான
தோளும், Tholum - (இருபது) தோள்களையும்
படைத்தவன், Padaiththavan - உடையவனான இராவணன்
மங்கையர் பால் சித்தம் வைத்து, Mangaiyar Paal Sittam Vaiththu - ஸ்த்ரீ விஷயத்தில் மனம் செலுத்தி
செல்வம் கெட்டான், Selvam Kettaan - (தனது) செல்வம் அழியப் பெற்றான்
செய்வது ஒன்று அறியா அடியோங்கள், Seivathu Ondru Ariyaa Adiyongal - இனிச் செய்யத் தக்க தொன்று மறிய கில்லாத நாங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும், Oththa Thol Irandum Oru Mudiyum - ஒன்றோடொன்று ஒப்பான இரண்டு திருத்தோள்களையும் ஒரு திருமுடியையுமுடையாய்
ஒருவர் தம் திறத்தோம் அன்றி, Oruvar Tham Thiraththom Andri - அத்விதீயரான தேவரீர் பக்கல் இதற்குமுன்பு ஈடு பட்டவர்களல்லாமையாலே
வாழ்ந்தோம், Vaazhnthom - கெட்டுப்போனோம்
எம்மை கொல்லேல், Emmai Kollel - எங்களைக் கொல்லா தொழிய வேணும்,
1860பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரபதாரரைக் கொல்லாத இஷ்வாகு வம்சத்திலே பிறந்ததுக்கு தலை யன்றோ நீர்-விஷய ப்ரவணராய் கெடக் கடவ இஜ் ஜாதியை எத்தைச் சொல்லுவது-ஸ்வர்க்கத்துக்கு வன்னியம் அறுத்தவன் மகனே உனக்கு இஷ்டரான தேவர்கள் உகந்ததுவே செய்து விட்டாய் – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ) 3
தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி எங்கோமான் கொண்டு போந்து கெட்டான் எமக்கு இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குலவேந்தே பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன் அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-3
பதவுரை Show / Hide
குலம் வேந்தே, Kulam Vendee - (குற்றமற்றவர்களைத் தண்டியாத இக்ஷ்வாகுவின்) வம்சத்துக்குத் தலைவரே! (- (அக்குற்றங்காரணமாக) (ஆகையாலே) (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ.))
தாசரதீ, Thaasarathii - ஸ்ரீராமபிரானே!
தகவு இலி எம்கோமான், Thagavu Ili Emkoman - ஈர்நெஞ்சு இல்லாதவனாய் எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணன்
அன்று, Anru - (நீங்கள் வனத்திலே தாபஸராயிருந்த) அக்காலத்திலே
தண்டகாரணியம் புகுந்து, Thandakaraniyam Pugunthu - தண்டகாரணியத்தில் பிரவேசித்து
தையலை, Thailai - அழகிற்சிறந்த பிராட்டியை
கொண்டு போந்து, Kondhu Ponthu - அபஹரித்து வந்து
எமக்கு, Emakku - எங்களுக்கு
ஓர் குற்றம் இல்லை, Or Kuttram Illai - ஒரு குற்றமும் கிடையாது
கொல்லேல், Kollel - (எங்களைக்) கொல்லா தொழியவேணும்
பெண்டிரால் கெடும், Pendiraal Kedum - ஸ்த்ரீசாபல்யங் காரணமாகக் கெட்டுப்போகின்ற
இக் குடி தன்னை, Ik Kudi Thannai - இந்த ராக்ஷஸஜாதியைப் பற்றி
பேசுகின்றது என், Pesugindrathu En - பேசலாவது என்ன இருக்கிறது?
உன் அண்ட வாணர், Un Anda Vaanar - தேவரீருக்கு இஷ்டரான தேவதைகள்
உகப்பதே, Ugappadhe - ஸந்தோஷிக்கக்கூடிய காரியத்தையே
செய்தாய், Seithai - செய்தருளினீர்,
1861பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –ஸ்ரீ பிராட்டியை கொடு போங்கோள்) 4
எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4
பதவுரை Show / Hide
ஏஞ்சல் இல், Aenjal Il - ஒரு குறைவுமில்லாதவனாய் (- (அப்படி சொல்லியும் அப்பாவி பணிந்து வாழ மாட்டாமையாலே) (அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.))
இலங்கைக்கு இறை, Ilankaiyil Irai - (இந்த) லங்காபுரிக்கு அரசனாய்
எம் கோன் தன்னை, Em Kon Thannai - எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணனை நோக்கி
முன், Mun - முன்பு
எங்கள் கண் முகப்பே, Engal Kan Mugappe - எங்கள் கண்ணெதிரில்
அவன் தம்பியே, Avan Thambiye - அவனுக்குத் தம்பியான விபீஷ்ணாழ்வான்
பணிந்து, Panindhu - விநயமுடன்கைகூப்பிநின்று
நங்கையை அரக்கர் குடிக்கு நஞ்சுதான் என்று சொன்னான், Nangaiyai Arakkar Kudikku Nanjudhaan Endru Sonnaan - ‘இப்பிராட்டி ராக்ஷஸ குலத்துக்கு விஷமாகத் தோன்றியவன் கிடாய்’ என்று சொன்னான்
விஞ்சை வானவர் வேண்டிற்றேபட்டோம், Vinchai Vaanavar Vendirthepattoam - தேவஜாதிகள் ஆசைப்பட்டிருந்தபடியே (நாங்கள்) அனர்த்தப்பட்டோம்
வேரி வார் பொழில் மா மயில் அன்ன, Vaeri Vaar Pozhil Maa Mayil Anna - பரிமளத்தையுடைத்தாய் விசாலமான சோலையில் வளர்ந்த சிறந்தமயில் போன்றவளும்
அஞ்சு அல் ஓதியை, Anju Al Othiyai - (சுருட்சி நீட்சி குளிர்ச்சி அழகு பரிமளம் என்று) ஐந்துவகைப்பட்ட குணங்களையுடையதாய் ராத்ரிபோற் கறுத்திருக்கின்ற கூந்தலையுடையளுமான பிராட்டியை
கொண்டு நடமின், Kondhu Nadamin - கொண்டு போங்கள்
1862பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு மனுஷ்யர்களை அநாதரித்தான்-அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி – அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ) 5
செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர் கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-5
பதவுரை Show / Hide
செம் பொன் நீள் முடி, Sem Pon Neel Mudi - செம்பொன்னாற் செய்யப்பட்ட நீண்ட கிரீடத்தை யுடையனாய் (- (அதுவே நிமித்தமாக) (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ))
எங்கள், Engal - எங்களுக்குத் தலைவனான
இராவணன், Iravanan - ராவணனானவன்
சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து, Seethai Enbathu Oru Deivam Konarnthu - ஸீதையென்கிற ஒரு தெய்வப் பெண்ணைக் கவர்ந்து வந்து
வம்பு உலாம் கடி காவில், Vambu Ulam Kadi Kaavil - புதுமை மாறாத்தும் பரிமளத்தை யுடையதுமான (அசோக)வனத்திலே
சிறை ஆ வைத்ததே, Sirai Aa Vaiththadhe - சிறையிலிருப்பாம்படி வைத்திருந்த இதுதானே
குற்றம் ஆயிற்று, Kutram Aayitru - அபராதமாய்த் தலைக் கட்டிற்றுக்கிடீர்
கும்பனோடு நிகும்பனும் பட்டான், Kumbanodu Nikumbanum Pattaan - கும்பனும் நிகும்பனும் மாண்டொழிந்தனர்
கூற்றம், Kootram - (இராவணன்கையில் முன்பு தோற்றிருந்த) யமனானவன்
மானிடம் ஆய் வந்து தோன்றி, Maanidam Aay Vandhu Thonri - மநுஷ்ய வேஷத்தைப் பூண்டு கொண்டு இங்ஙனே வந்துதோன்றி
எம்மை, Emmai - எங்களை
அம்பினால், Ambinaal - பாணத்தினால்
கொன்றிடு கின்றது, Kondridhu Kindrathu - கொல்லுகின்றான்.
1863பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து – வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே ஸ்ரீ பிராட்டியை விட்டுக் கொடாதே இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ) 6
ஓதமாகடலைக் கடந்தேறி யுயர்கொள் மாக்கடிகாவை யிறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடலிலங்கை மலங்க எரித்துத் தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-6
பதவுரை Show / Hide
ஓதம், Otham - அலைகலையுடைய (- (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ.))
கடந்து ஏறி, Kadandhu Eri - தாண்டி
உயிர்கொள் மா கடி காவை இறுத்து, Uyirkol Maa Kadi Kaavai Irudhu - உயர்த்தியையுடைத்தாய்ப் பெரிதாய் மணம்மிக்கதான அசோகவனத்தை முறித்து
காதல், Kaadhal - (இராவணனுடைய) அன்புக்கு இலக்கான
மக்களும், Makkalum - அக்ஷகுமாரன் முதலிய புத்திரர்களையும்
சுற்றமும், Sutramum - அந்தரங்க சேவகர்களையும்
கொன்று, Konru - கொலை செய்து
கடி இலங்கை மலங்க எரித்து, Kadi Ilangai Malanga Erithu - காவலையுடைத்தான லங்கையானது கலங்கும்படியாகத் தீக்கொளுவி
தூது வந்த, Thoodhu Vanda - (பிராட்டிபக்கல்) தூத சொல்லவந்த
குரங்குக்கே, Kurangukke - அனுமான் கையிலேயே
உங்கள் தோன்றல் தேவியை, Ungal Thondral Deiviyai - உங்கள் ஸ்வாமியான பெருமாளுடைய தேவியான ஸீதையை
விட்டுக் கொடாதே, Vittuk Kodaadhe - ஸமர்ப்பியாமல்
ஆதர், Aadhar - அவிவேகிகளான நாங்கள்
நின்று படுகின்றது அந்தோ, Ninru Padikindrathu Andho - இப்படி துவண்டு நின்று அநர்த்தப்பட வேண்டிற்றாயிற்று ஐயோ!
1864பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அப்ராப்த விஷயத்தில் சாபலத்தை பண்ணுமவனை – நான் இவ்வூர்க்கு அதிபதி -நிர்வாஹகன் என்று இது ஒன்றுமையே நினைத்து இருந்தான் – குற்றம் நின்ற இடத்தே வதம் பண்ணப் பார்த்தருள வேணும் – நாங்கள் அறியாமல் கொலை உண்டோம் ஆகாமல் சொன்னோம் – தடம் பொங்கத்தம் பொங்கோ) 7
தாழமின்றி முந்நீரை யஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல் மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதியின் மனத்தானை ஏழையை இலங்கைக்கு இறை தன்னை எங்களை யொழியக் கொலையவனைச் சூழுமா நினை மா மணி வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-7
பதவுரை Show / Hide
மா மணி வண்ணா, Maa Mani Vanna - நீலமணிநிறத்தனாவ பெருமானே! (- (தடம் பொங்கத்தம் பொங்கோ))
தாழம் இன்றி, Thaalam Inri - காலதாமதமில்லாமல்
முந்நீரை, Munnirai - கடலை
அஞ்ஞான்று, Anjjaantru - அன்றைக்கு
தகைந்ததே கண்டு, Thakainthadhe Kandu - அணைசெய்த்தொன்றையே கண்டு,
வஞ்சி நுண் மருங்குல், Vanchi Nun Marungul - வஞ்சிக்கொடி போன்று நுட்பமான இடையை யுடையளாய்
மாழை மான் மட நோக்கியை, Maazhai Maan Mada Nokkikie - பேதைமைக்குணமுள்ள மானின்பார்வை போன்ற கபட மற்ற கண் பார்வையை யுடையளான ஸீதையை
விட்டு, Vittu - (தேவரீர் ஸந்நிதியிலே) ஸமர்ப்பித்துவிட்டு
இலங்கைக்கு இறை தன்னை அவனை, Ilangaikku Irai Thannai Avanai - அந்த இராவணனை
எங்களை ஒழிய கொலை, Engalai Ozhiy Kolai - எங்களைத் தவிர்த்துக் கொல்லவேணும்
சூழும் ஆ நினை, Soolum Aa Ninai - அடியோங்கள் தேவரிரைச் சூழ்ந்துக்கொண்டு பிரார்த்திக்கிறவிதனைத் திருவுள்ளம் பற்றவேணும்
சொல்லினோம், Sollinom - எங்கள் கோரிக்கையை விண்ணப்பஞ்செய்து கொண்டோம்
1865பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டியை சிறை வைத்த ராவணன் உடைய தப்ப நினைத்த நெஞ்சில் –உறைக்க எய்ய வல்லனாய் அழகிய வடிவையும் திண்ணிய தோளையும் உடைய ஸ்ரீ பெருமாளுக்கு அஞ்சினோம்) 8
மனம் கொண்டேறும் மண்டோதரி முதலா அங்கயல் கண்ணினார்கள் இருப்பத் தனம் கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று புனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த புன்மையாளன் நெஞ்சில் புக வெய்த அனங்கன் அன்ன திண தோள் எம்மிராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-8
பதவுரை Show / Hide
மனம் கொண்டு ஏறும், Manam Kondu Aerum - நெஞ்சைக் கவரும்படியான அழகுடையவர்களான (- (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ))
மண்டோதரி முதலா, Mandothari Muthala - மந்தோதரி முதலான
அம் கயல் கண்ணினார்கள், Am Kayal Kanninargal - அழகிய மீன்போன்ற கண்களையுடையரான மனைவியர் பலர்
இருப்பு, Iruppu - குறையற்றிருக்கச் செய்தேயும்,
தனம் கொள், Thanam Kol - தனக்குச் செல்வமாயிருக்கின்ற
மெல் முலை, Mel Mulai - அவர்களுடைய அழகிய முலைகளிலே
நோக்கம் ஒழிந்து, Nokkam Ozhinthu - கண் செலுத்தாமல்
சில தாபதர் தஞ்சமே என்று, Sila Thapathar Thanjame Endru - (இப்பிராட்டிக்காகப் பரிந்து வரக்கூடியவர்கள்) சில காட்டாள்கள்தானே அவர்கள்சரக்கோ, என்று அவலீலையாக நினைத்துக் கொண்டு
புனம் கொள் மென் மயிலை சிறை வைத்த, Punam Kol Men Mayilai Sirai Vaiththa - காட்டில் தன்னிஷ்டப்படி திரிகின்ற அழகிய மயில் போன்றவளான பிராட்டியைச் சிறையிலே வைத்தவனாய்
புன்மை யாளன், Punmai Yalan - நீசனான இராவணனுடைய
நெஞ்சில், Nenjil - மருமத்திலே
புக, Puga - உறைக்க
எய்த, Eitha - அம்பு செலுத்தியவரும்
அனங்கள் அன்ன, Anangal Anna - மன்மதனைப் போன்ற அழகுடையவரும்
திண் தோள், Thin Thol - வலிமைமிக்க திருத்தோள்களையுடையவருமான
எம் இராமற்கு, Em Iramarukku - எங்களிராமவிரானுக்கு
1866பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகா ராஜர் புருஷகரமாகத் தொழுதோம் – எங்களுக்கு இரங்க வேணும் – எங்கள் நாயகனே – லோகத்துக்கு அடைய பிரகாசனான ஆதித்யன் மகன் அன்றோ நீர் சர்வ நிர்வாககர் அன்றோ – நாங்கள் சொல்லச் செய்தே எங்களைக் கொல்லில் உங்களுக்கு அவத்யமாம் – தடம் பொங்கத்தம் பொங்கோ) 9
புரங்கள் மூன்றுமோர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பில் சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம் இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெங்கதிரோன் சிறுவா குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-9
பதவுரை Show / Hide
ஓர் மாத்திரை போதில், Or Maathirai Podhil - ஒரு கண்ணிமைப்பொழுதில் (- (தடம் பொங்கத்தம் பொங்கோ))
புரங்கள் மூன்றும், Purangal Moondrum - முப்புரங்களையும்
பொங்கு எரிக்கு, Pongu Erikku - அக்நிஜ்வாலைக்கு
இரை கண்டவன், Irai Kandanavan - இரையாக்கின ருத்ரனுடைய
அம்பில், Ambil - அம்புகளிற்காட்டிலும்
சரங்கன், Sarangkan - இந்த ராமபரணங்கள்
கொடிது ஆய், Kodithu Aay - கொடியவைகளாய்
அடுகின்ற, Adhigindra - பொசிக்கின்றன
சாம்பவான், Sambavaan - ஸ்ரீஜாம்பவான்
உடன் நிற்க, Udan Nirka - புருஷகாரமாகக் கூடநிற்க
தொழுதோம், Thozhudhom - வணங்குகின்றோம்
எந்தை பிரானே, Endhai Pirane - எங்கள் நாயகனே!
இலங்கு வெம் கதிரோன்தான் சிறுவர், Ilangu Vem Kathironthan Siruvar - விளங்குகின்ற ஸூர்யனுக்குப் புதல்வனாய்
குரங்குகட்கு அரசே, Kurangukadku Arase - வாநரங்கட்குப் பிரபுவான ஸுக்ரீவனே!
எமக்கு நீ இரங்கு, Emakku Nee Irangu - எங்கள் விஷயத்திலே நீ இரங்கியருளவேணும்
எம்மை கொல்லேல், Emmai Kollel - எங்களைக் கொல்லா தொழியவேணும்
கூறினோம், Koornom - இந்தப் பிரார்த்தனையே அடுத்தடுத்துச் சொல்லுகின்றோம்,
1867பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தொண்டீர் -அந்த ராஷசர்கே கண்ட பாசுரம் அன்று இது-ஜிதந்தே -என்றால் -எல்லாருக்கும் சொல்ல வேணும் இறே- இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் ஸ்ரீ பரம பதம் –அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை – எல்லாரும் அறியச் சொன்னோம்) 10
அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப் பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில் எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-10
பதவுரை Show / Hide
தொண்டீர், Thondir - பகவத் பக்தர்களே!, (- (இது செய்தால்))
அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர, Angu Vaanavarkku Aakulam Theera - தேவலோகத்திலுள்ள தேவதைகளின் மனக்குழப்பம் தீரும்படி
அணி இலங்கை அழித்தவன் தன்னை, Ani Ilangai Azhithavan Thannai - அழகிய லங்காபுரியை அழித்தருளின பெருமான் விஷயமாக,
பொங்குமா வலவன் கலிகன்றி, Pongumaa Valavan Kalikanri - கிளர்த்தியையுடைய ‘ஆடல்மா’ என்னுங் குதிரையை நடத்த வல்லவரான ஆழ்வார்
புகன்ற, Pugandra - அருளிச்செய்த
பொங்கத்தம் கொண்டு, Pongattham Kondo - ‘பொங்கத்தம் பொங்கோ’ என்ற இந்த வெற்றியைப் பாசுரங்களைக் கொண்டு
இ உலகினில், I Ulaginil - இவ்விபூதியிலே
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும்
பாடி நின்று ஆடுமின், Paadi Nindru Aadumin - பாடிக்கொண்டு கூத்தாடுங்கள்,
இம்மையே இடல் இல்லை, Immaye Idal Illai - (உங்கட்கு) இப்பிறவியில் ஒருவகைத்துன்பமு முண்டாகாது,
இறந்தால், Irandhaal - மரணமானபின்பு
தங்கும் ஊர், Thangum Oor - நீங்கள் போய்ச்சேர்ந்து நிலை நிற்குமிடம்
அண்டமே, Andame - பரமபதமேயாம்,
கண்டு கொண்மின், Kandu Konmin - (இதனை அநுபவத்தாலே) கண்டு கொள்ளுங்கள்
சாற்றினோம், Saatrinom - இஃது எல்லாருமறியச்சொன்னோம்
தடம் பொங்கத்தம் பொங்கோ, Thadam Pongatham Pongoo - வெற்றியோ வெற்றி
1868பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சுக்ரீவா ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி ஏத்துவாருக்கு உம்மை ஆஸ்ரயிக்க வேணும் இறே – அவர் இசைந்தாலும் -வத்த்யதாம் -என்று நீர் சொன்னால் உம்மை இசைப்பித்து -ஆனய -என்று உம்மை விட்டு அழைப்பித்துக் கைக் கொள்ள வேண்டுகையாலே – ஸ்ரீ ராஜாவோடு வார்த்தை சொல்லுகிறவர்கள் என்று ஸ்ரீ முதலிகள் கொல்லாதபடி -என்கிறார்கள் – பண்டே சிஷித்து வைத்தவர்கள் போலே ஆடுகின்றோம்-எங்கள் செயல் அறுதியாலே) 1
ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம் சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம் வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1
பதவுரை Show / Hide
இராமன், Iraman - இராமபிரானுடைய
திருநாமம், Thirunamam - திருநாமங்களை
நா தழும்ப, Na Thazhumba - நாக்குத் தடிக்கும்படி
எத்துகின்றோம், Eththukindrom - வாயாரச்சொல்லித் துதிக்கின்றோம்.
நம்பீ சுக்கிரீவா, Nambi Chukkrivaa - ஸுக்ரீவமஹாராஜரே!
சோத்தம், Soththam - இதோ அஞ்ஜலி
உம்மை தொழுகின்றோம், Ummalai Thozhugindrom - உம்மைத் திருவடிகளில் விழுந்து வணங்குகின்றோம்
உங்கள் வானரம், Ungal Vaanaram - நீங்களிட்ட வழக்காயிருக்கின்ற வானரவீரர்கள்
எம்மை கொல்லாமே, Emmai Kollame - எங்களைக் கொல்ல நினையாதபடி
வார்த்தை பேசீர், Vaarthai Pesir - ஒருவார்த்தையருளிச் செய்யவேணும்
கூத்தர் போல, Koothar Pola - கூத்தாடக்கற்றவர்கள் போல
குழமணிதூரம் ஆடுகின்றோம், Kuzhamanithuram Aadugindrom - உங்கள் வெற்றியும் எங்கள் தோல்வியுந்தோற்ற ஆடுகின்றோம்
1869பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை) 2
எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்த்ரஜித் அழிந்தான் நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே கும்பகர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே –10-3-2
பதவுரை Show / Hide
இந்திரசித்து, Indirachithu - இந்த்ரஜித்தானவன் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அரற்றாதே, Embirane Ennai Aalvaai Endru Endru Aratradhe - பகவந் நாமங்களையே சொல்லிக்கோஷம் போடாமல்
அம்பின் வாய் பட்டு, Ambin Vaai Pattu - பாணங்களுக்கு இரையாகி
ஆற்ற கில்லாது, Aattra Killaadhu - தரித்திருக்க மாட்டாமல்
அழிந்தான், Azhindhaan - மாண்டுபோனான்
நம்பி அனுமா!, Nambi Anumaa - சுக்கிரீவா! அங்கதனே! நளனே!
கும்பகரணன், Kumbakaranan - கும்பகர்ணனானவன்
பட்டுப் போனான், Pattup Ponaan - முடிந்துபோனான்
1870பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல-உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் – எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ – கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ) 3
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கருமுகில் போல் நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-3
பதவுரை Show / Hide
ஞாலம் ஆளும், Njaalam Aalum - பூமியை யெல்லாம் ரக்ஷித்தருள்பவராய் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
உங்கள் கோமான், Ungal Gomaan - உங்களுக்கு ஸ்வாமியான ஸ்ரீராமபிரான்
எங்கள் இராவணற்கு, Engal Iraavanarku - எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணனுக்கு
காலன் ஆகி வந்த ஆ கண்டு, Kaalan Aagi Vantha Aa Kandu - ம்ருத்யுவாக வந்தபடியைப் பார்த்து
அஞ்சி, Anji - பயப்பட்டு,
கரு முகில் போல், Karum Mukhil Pola - ;காளமேகம் போன்ற
நீலன் வாழ்க, Neelan Vazhga - நீலன் வாழவேணும்,
சுடேணன் வாழ்க, Sudhenan Vazhga - ஸுஷேணன் வாழவேணும்
அங்கதன் வாழ்க, Angathan Vazhga - அங்கதன் வாழவேணும்
என்று, Endru - என்று ஒவ்வொருவர்க்கும் பல்லாண்டுபாடிக்கொண்டு
கோலம் ஆக, Kolam Aaga - அழகாக
1871பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான வில்லிலே அம்பைத் தொடுத்த ஸ்ரீ பெருமாள் தம்பியார் உடைய குணங்கள் பாடி ஆடுகின்றோம்) 4
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதாரத்தைப் புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரிசிலையால் கணங்கள் யுண்ண வாளியாண்ட காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி யாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-4
பதவுரை Show / Hide
மணங்கள் நாறும் வார் குழலால் மாதர்கள், Manangal Naarum Vaar Kuzhalal Maatharhal - பரிமளம் மிக்க நீண்ட கூந்தளையுடையரான ஸ்த்ரீகள் விஷணத்திலே (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
ஆதரத்தை புணர்ந்த சிந்தை, Aadharaththai Punarndha Sindhai - ஆசையை ஒருபோதும் விடாத நெஞ்சையுடையனாய்
புன்மை யாளன், Punmai Yalan - மிகவும் நீசனான இராவணன்
பொன்ற, Pondra - முடியும்படியாகவும்
கணங்கள் உண்ண, Kangal Unna - பிசாசுகள் ஏறிப் புசிக்கும்படியாகவும்
வரி சிலையால், Vari Silaiyal - அழகிய வில்வழியாக
வாளி ஆண்ட, Vaali Aanda - அம்புகளைப் பிரயோகித்த
காவலனுக்கு, Kaavalanukku - ஸர்வாக்ஷகரான பெருமாளுடைய
இளையோன், Ilaiyoan - திருத்தம்பியாரான லக்ஷ்மணருடைய
குணங்கள் பாடி, Gunangal Paadi - திருக்குணங்களைப் பாடிக்கொண்டு
1872பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீங்கள் தான் எங்களைக் கொல்லுகிறது வெற்றிக்காக இறே – அத்தை உங்களுக்கு நாங்கள் தந்தோம்- நாங்களும் ஆண் பிள்ளைகள் என்று இருக்கிறது -துர்மானத்தாலே இறே- எங்களை நலிகிற துர்மானத்தை வேண்டோம்) 5
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக இன்று தம்மின் எங்கள் வாணாள் எம்பெருமான் தமர்காள் நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே குன்று போலே ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-5
பதவுரை Show / Hide
எம்பெருமான் தமர்காள், Emperumaan Thamarkaal - ஸ்ரீராமபக்தர்களான வாநர வீரர்களே! (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்))
வென்றி தந்தோம், Vendri Thandhom - ஜயத்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டோம்!
மானம் வேண்டாம், Maanam Vendaam - “நாங்களும் ஆண்பிள்ளைகள்” என்று கொண்டிருந்த அஹங்காரத்தைக் கைவிட்டிட்டோம்.
எங்கள் வாழ்நாள், Engal Vaazhnal - எங்களுடைய ஆயுளை
எமக்கு, Emakku - எங்களுக்கு
தானம் ஆக, Dhaanam Aaga - யாசகங் கொடுக்கும் விதமாக
இன்று தம்மின், Indru Thammin - இப்போது கொடுத்து விடுங்கள்,
நீர், Neer - நீங்கள்
எம்மை கொல்லாதே, Emmai Kollaadhe - எங்களைக் கொல்லாமல்
கண்கள் ஆர, Kangal Aara - கண் படைத்த பயன் பெறுமாறு
நின்று காணீர், Ninru Kaanir - நின்று காணுங்கோள்
குன்றுபோல, Kuntrupola - நாங்கள் மலைமலையாக நின்று
1873பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூசல் களத்தில் வெல்ல மாட்டாமை அஞ்சினோம் – பராபி பவ ந சாமர்த்தியம் உடையவன் மகன் அன்றோ – எங்களைக் கொல்ல வேண்டா-கார்யம் கொள்ள அமையும்) 6
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து வெல்ல கில்லாது அஞ்சினோம் காண் வெங்கதிரோன் சிறுவா கொல்ல வேண்டா ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-6
பதவுரை Show / Hide
உங்கள் கோமான், Ungal Gomaan - உங்களுக்குத் தலைவரான ஸ்ரீராமபிரான், (- (வானர முதலிகான்!) (குழமணிதூரம் ஆடுகின்றோம் காண்))
கல்லில், Kallil - மலைகளைக்கொண்டு
முந்நீர், Munnir - கடலை
மாற்றி வந்து, Maatri Vandu - (அணைகட்டித்) தகைந்து
இலங்கை, Ilankai - லங்கையிலுள்ள
காவல், Kaaval - அரண்களையும்
கடந்து, Kadandhu - அதிக்ரமித்து
எம்மை, Emmai - எங்களை
அமர் களத்து, Amar Kalathu - யுத்தபூமியிலே
அல்லல் செய்தான், Allal Seithaan - மிகவும் துன்பங்களுக்கு ஆளாக்கினார்
வெம் கதிரோன் சிறுவர், Vem Kathiron Siruvar - ஸூர்ய புத்திரனான ஸுக்ரீவனே!
வெல்ல கில்லாது, Vella Killaadhu - (உங்களை) ஜயிக்க மாட்டாமல்
அஞ்சினோ, Anjino - பயப்படுகின்றோம்
கொல்ல வேண்டா, Kolla Venda - எங்களைக் கொல்லாதொழிய வேணும்
1874பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய ஸ்ரீ திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய அவன் பக்கலிலே ப்ராவண்யம் –இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை – ஸ்ரீ திருவடியைச் சொன்னோம் ஆனால் ம்ருத்யு சத்ருசராய் இருப்பாரும் விலங்குவர்கள் போலே காணும்) 7
மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர் சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க என்று கூற்றம் அன்னார் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-7
பதவுரை Show / Hide
அரக்கர் உள்ளீர், Arakkar Ullir - ராக்ஷஸஜாதியிற் பிறந்திருக்கின்ற இலங்கையர்காள்!
வம்மின், Vammin - நீங்களும் எங்களோடே வந்து சேருங்கள்,
மாற்றம் ஆவது இத்தனையே, Maatram Aavathu Ithanaiye - (உங்கட்கு நாங்கள்) சொல்லும் வார்த்தை இவ்வளவே,
நும் மேல், Num Mel - உங்கள்மேல்
சீற்றம், Seetram - (ஸ்ரீராம ஸைந்யங்களுக்குண்டான) கோபம்
தீர வேண்டில், Theera Venda - தணிய வேண்டுமாகில்
சேவகம் பேசாதே, Sevagam Pesadhe - (நீங்கள் இனியும்) மிடுக்குச் சொற்களைப் பேசுதல் தவிர்ந்து
தொல் பிறப்பில் ஆற்றல் சான்ற அனுமானை, Thol Pirappil Aatral Sanra Anumaanai - அநாதிகாலமாக மிக்க வலிமையையுடையரான சிறிய திருவடிக்கு
வாழ்க என்று, Vazhga Endru - பல்லாண்டு பாடிக்கொண்டு
கூற்றம் அன்னார் காண, Kootram Annar Kaana - (நமக்கு) ம்ருத்யு போன்ற வானாலீரர்கள் காணும் படியாக
குழமணிதூரம் ஆடீர், Kuzhamanithooram Aadeer - குழமணிதூரக்கூத்தை ஆடுங்கோள்
1875பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அயோத்யைக்கு கடவ ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் –ஸ்யாமமான நிறத்தை உடையவர் காண ஆடி கோள்- ராஜா கூத்துக் காணா நின்றான் என்று உங்களை விடும்படி) 8
கவள யானைப் பாய் புரவி தேரோடு அரக்கர் எல்லாம் துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே தவள மாட நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன் குவளை வண்ணர் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-8
பதவுரை Show / Hide
கவளம் யானை, Kavalam Yaanai - கவளங்கொள்ளுமியல் பினவான யானைகளும்
பாய் புரவி, Paai Puravi - பாய்ந்து வருகிற குதிரைகளும்
தேரோடு, Therodu - தேர்களும் ஆகிய இவையெல்லாவற்றொடுங்கூட
அரக்கர் எல்லாம் துவள, Arakkar Ellam Thuvalla - ராக்ஷஸஜாதியடங்கலும் கஷ்டப்படும்படியாக
வென்ற, Vendra - ஜயித்த
வென்றியாளன் தன் தமர், Vendriyaalan Than Thamar - ஜயசீலரான பெருமாளுடைய கிங்கரர்களான வானரவீரர்கள்
கொல்லாமே, Kollaame - (நம்மை) கொல்லாதபடி,
தவளம் மாடம் நீடு, Thavalam Maadam Needu - வெண்மையான மாடமாளிகை களினால் நீண்டிருக்கிற
அயோத்தி, Ayodhya - அயோத்திமா நகர்க்கு
காவலன் தன், Kaavalan Than - அரசரான தசரதருடைய
சிறுவன், Siruvar - திருக்குமார்ராய்
குவளை வண்ணன், Kuvazhai Vannan - குவளை மலர்போன்ற நிறத்தையுடையரான இராமபிரான்
காண, Kaana - காணும்படியாக
குழமணிதூரம், Kuzhamanithooram - குழமணிதூரக்கூத்து
ஆடீர், Aadeer - ஆடுங்கோள்.
1876பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாங்கள் உஜ்ஜீவிக்கைக்காக-கச்ச அநுஜா நாமி -என்று விட்டடித்தவர் உடைய ஆஞ்ஞையை சிரஸா வஹித்துக் கொண்டு போந்தோம்) 9
ஏடு ஒத்து ஏந்தும் நீண் இலை வேல் எங்கள் இராவணனார் ஓடிப் போனார் நாங்கள் எய்தோம் உய்வதோர் காரணத்தால் சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை துடரேன்மின் கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-9
பதவுரை Show / Hide
ஏடு ஒத்த, Aedu Oththa - பனையோலே விரிந்தாற்போல் அகன்றதாயும் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
நீள், Neel - நீண்டதாயும்
இலை, Ilai - இலையையுடைத்தாயுமிருக்கிற
வேல், Vel - வேற்படையை
ஏந்தும், Aendhum - கையிற்கொண்ட
எங்கள் இராவணனார், Engal Iravananar - எங்கள் பிரபுவான இராவணன்
ஓடி போனார், Odi Poonar - முதுகுகாட்டி ஓடிப்போய் விட்டார்
நாங்கள், Naangal - நாங்களோ
எய்த்தோம், Eyththom - இளைத்தோம்,
உய்வது ஓர் காரணத்தால், Uyvathu Oor Kaaranathaal - (இனி) உஜ்ஜீவிப்பதன் பொருட்டு
உங்கள் கோமான் ஆணை, Ungal Koman Aanai - உங்களுக்கு ஸ்வாமியான பெருமாளுடைய ஆஜ்ஞையை
சூடிப் போந்தோம், Soodip Ponthom - சிரஸாவஹிப்பவர்களாயிருக்கின்றோம்
தொடரேல் மின், Thodareel Min - (எங்களைக் கொல்வதற்குத்) தொடரவேண்டா,
கூடி கூடி, Koodi Koodi - திரள் திரளாகக் குழாங்கூடி
1877பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள் வானர முதலிளைக் குறித்து சொன்ன ஐந்து பாசுரங்கள் பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் – இப்பத்தையும் பாடிக் கொண்டாட-உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை – நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று வேண்டின படி ஆடித் திரியுங்கோள்) 10
வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர் குன்றமன்னார் ஆடியுய்ந்த குழ மணி தூரத்தைக் கன்றி நெய்நீர் நின்ற வேற்கைக் கலியன் ஒலி மாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே –10-3-10
பதவுரை Show / Hide
தொல், Thol - நெடுநாளாக
வென்றி சீர், Vendri Seer - வெற்றியையே இயல்பாக வுடைத்தாயிருந்த
தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்கையில்
வெம் சமத்து, Vem Samathu - வெவ்வியபோர்க்களத்திலே
அன்று, Anru - அப்போது
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்கள்
குன்றம் அன்னார், Kundram Annar - மலைபோன்றவர்களாக
ஆடி உய்ந்த குழமணி தூரத்தை, Aadi Uyndha Kuzhamani Thoorathai - குழமணிதூரக்கூத்தாடி உயிர் தப்பினபடியைக் குறித்து,
கன்றி நெய் நீர் நின்ற வேல் கை, Kandri Ney Neer Nindra Vel Kai - சினக்குறிப்புடன் கூடிய தாய் நெய்யிட்டிருப்பதை நீர்மையாகவுடைத்தாய் நின்ற வேற்படையைக் கையிலுடையரான
கலியன், Kalyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும், Maalaik Ondrum Ondrum Aindhum Moondrum - சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும்
பாடி நின்று, Paadi Nindru - பாடிக்கொண்டு
ஆடுமின், Aadumin - (ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடுங்கோள்
1904பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர் – மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான்) 7
படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-7
பதவுரை Show / Hide
முன நாள், Muna Naal - முன்பொருகாலத்தில் (- (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
இ வையம், I Vaiyam - இவ்வுலகங்களை
படைத்திட்டு, Padaiththittu - (கரண களேபரங்கள் கொடுத்து) ஸ்ருஷ்டித்து
அது, Adhu - அவ்வுலகம்
உய்ய, Uyya - உஜ்ஜீவிப்பதற்குறுப்பாக
பணிந்து, Panindhu - திருவடிகளிலே விழுந்து
ஏத்த வல்லார், Aetha Vallar - அதிக்கவல்லவர்களுடைய
துயர் ஆய எல்லாம், Thuyar Aaya Ellam - துன்பமென்று பேர்பெற்றவற்றையெல்லாம்
துடைத்திட்டு, Thudaiththittu - போக்கி
அவரை, Avarai - அப்படிப்பட்டவர்களை
தனக்கு ஆக்க என்ன, Thanakku Aakka Enna - தனக்கே உரியவராக ஆக்கிக் கொள்ள நீனைத்தவளவிலே
தெளியா, Theliya - அத்திருவுள்ளத்தை ஸஹிக்க மாட்டாமல் கலங்கித் தீங்கிழைத்த
அரக்கர், Arakkar - ராவணாதி ராக்ஷஸர்களுடைய
திறல், Thiral - மிடுக்கு
மிடைத்திட்டு எழுந்த, Midaithittu Ezhuntha - நிபிடமாகத் திரண்ட
குரங்கை, Kurangai - வானரவீரர்களை
படை ஆ, Padai Aa - சேனையாகக்கொண்டு
விம்ம, Vimma - (கடல்) நிரம்பும்படி
விலங்கள், Vilangal - மலைகளை
புக பாய்ச்சி, Puga Paaychchi - பரப்பியிட்டு
கடலை, Kadalai - ஸமுத்ரத்தை
அடைத்திட்டவன் காண்மின், Adaithittavan Kaanmin - தூர்த்தவனான பெருமானன்றோ
1905பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து யுவ ராஜாவாய் ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி இலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக ராவணன் உடைய முடியோடு தோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் – இன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான்) 8
நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர் செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-8
பதவுரை Show / Hide
நெறித்திட்ட, Nerithitta - நெறித்திராநின்ற (- (பிற வனவாஸம் நேர்ந்த பின்பு) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்))
மென், Men - மிருதுவான
கூழை, Koozhai - மயிர்முடியையும்
நல் நேர் இழையோடு, Nal Naer Izhaiyodu - விலக்ஷணமாய் அழகிய ஆபரணங்களையு முடையளான ஸீதையோடு
உடன் ஆய, Udan Aaya - கூடப்பிறந்த
அல் அன்ன, Al Anna - இருண்ட
வில் அதனை, Vil Adhanai - அந்தவில்லை
இறுத்திட்டு, Iruththittu - முறித்துவிட்டு
அவள் இன்பம், Aval Inbam - அவனோடு கலவியால் உண்டாகுமின்பத்தை
அன்போடு, Anbodu - ப்ரீதியுடனே
அணைத்திட்டு, Anaithittu - லபித்து
இள கொற்றவன் ஆய், Ila Kotravan Aay - யுவராஜாவாயிருந்து
துளங்காத, Thulangadha - ஒருவராலும் அசைக்க முடியாத
முந்நீர், Munnir - கடலை
செறித்திட்டு, Serithittu - அணைகட்டி
இலங்கை மலங்க, Ilankai Malanga - லங்கை கலங்கும்படியாக
அரக்கன், Arakkan - இராவணனுடைய
செழு, Sezhu - செழித்த
நீள், Neel - நீண்ட
தோள், Thol - தோள்களும்
தாள், Thal - கால்களும்
துணிய, Thuniya - சிதிலமாகும்படியாக
அறுத்திட்டவன் காண்மின், Aruthittavan Kaanmin - அறுத்தொழித்தவனன்றோ
1932பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண் காண ஒண்ணாத ஆபத்தை பரிஹரித்த நமக்கு இது ஒன்றும் பழியாய்த் தலைக் கட்ட புகுகிறதோ – என்று கொண்டு இருக்கிறாயோ) 1
புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே –10-9-1
பதவுரை Show / Hide
எந்தை பிரானே, Endhai Pirane - எம்பெருமானே!
எங்கள் கள அவிழ்கோதை காதலும், Engal Kala Avizhkothai Kaadhalum - தேனொழுகுகின்ற மயிர் முடியையுடையளான என்மகளின் ஆசையையும்
காரிகை மாதர் கருத்தும், Kaarikai Maathar Karuththum - (அவ்வாசையைப் பழிக்கின்ற) அழகியாருடைய கருத்தையும்
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது, Pillai Than Kaiyil Kinname Okka Pesuvathu - சிறுபிள்ளையின் கையிலுள்ள கிண்ணத்தை உபேக்ஷித்திருக்குமா போலே உபேக்ஷித்திருப்பதானது,
புள் உரு ஆகி, Pul Uru Aagi - (சிறுகுழந்தைகளை அனுங்கச் செய்யவல்ல)பறவையினுருவத்தையுடையவளாகி
நள் இருள், Nal Irul - நடுநிசியிலே
வந்த, Vanda - (முலைகொடுத்துக் கொல்ல) வந்த
பூதனை, Poothanai - பூதனை
மாள, Maala - மாளும்படியாகவும்
இலங்கை, Ilankai - லங்காபுரியை
ஒள் எரி மண்டி உண்ண, Ol Eri Mandi Unna - ஜ்வலிக்கிற அச்நிவியாபித்து புஜிக்கும்படியாகவும்
பணித்த, Paniththa - செய்தற்குறுப்பான
ஊக்கம் அதனை, Ookkam Adhanai - நிடுக்கை
நினைந்தோ, Ninaindho - திருவுள்ளம்பற்றியோ?
1937பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கால் வடிவு அழகைக் காட்டிப் போகிறிலை -என்னுதல்-உருவு வெளிப்பாட்டாலே முன்னே நின்று போகிறிலை -என்னுதல் – எந்தை பிரானே-தன்னடையே பழுத்து நெகிழ்ந்து விழுகிறத்தை எறி மழுவைக் கொண்டு வியாபாரிக்க வேணுமோ) 6
அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனை செருக்கழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று முருக்கிதழ் வாய்ச்சி முன்கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய் எறிக்கிலைக்காக வெறி மழு வோச்சல் என் செய்வது எந்தை பிரானே –10-9-6
பதவுரை Show / Hide
எந்தை பிரானே, Endhai Pirane - எம்பெருமானே!
முன், Mun - முன்பொருகால்
அரக்கியர், Arakkiyar - ராக்ஷஸ ஸ்த்ரீகளினுடைய
ஆகம், Aaham - மார்பு
புல்லென, Pullen - சூன்யமாம்படியாக
அணி மதிள் இலங்கையர் கோனை, Ani Mathil Ilangaiyar Konai - அழகிய மதிள்களையுடைய இலங்காபுரியிலுள்ளார்க்குத் தலைவனான இராவணனை
வில்லால், Villal - ஒரு வில்லாலே
செருக்கு அழித்து, Serukku Azhithu - கொழுப்படக்கி
அமர்ர் பணிய நின்ற, Amarr Panai Nindra - தேவர்கள் வணங்குமாறு நின்ற
சேவகமோ, Sevagamo - பராக்ரமத்தை நினைத்தோ
இன்று செய்த்து, Indru Seiththu - இன்று (இவள் திறத்திலே உபேக்ஷ) செய்வது?
முருக்கு இதழ் வாய்ச்சி, Murukku Idhal Vaaychchi - முருக்கம்பூப்போன்ற அதரத்தையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய
முன் கை, Mun Kai - முன்கையிலுள்ள
வண் சங்கம், Van Sangam - அழகிய வளைகளை
கொண்டு, Kondhu - பறித்துக்கொண்டது மன்றி
முன்னே நின்று போகாய், Munne Nindru Pogaai - உருவெளிப்பாட்டாலே எப்போதும் இவள் கண்ணெதிரே தோன்றிப் புறம் போகிறாயில்லை,
எருக்கு இலைக்கு ஆக, Erukku Ilaikku Aaga - எருக்கிலையை உதிர்ப்பதற்காக
எறி மழு ஓச்சல் என் செய்வது, Eri Mazhu Ochal En Seivathu - வீசுகோடாலியைக் கொண்டு ஓங்கியடிப்பது எதுக்கு?
1952பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பசுக்களும் இடையரும் வர்ஷத்தைப் பரிஹரித்துக் கொள்ளுதல் – ஸ்ரீ பிராட்டி -அதார்மிகனான ராவணன் நஷ்டன் ஆவான் -என்று சபித்து போரும் என்று ஆயிற்று – இவளுக்கு தென்றல் பரிஹரித்துக் கொள்ள ப்ராப்தி உள்ளது) 1
குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான் அரக்கரை வென்ற வில்லியார் வீரமே கொலோ தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகால்
குன்றம் ஒன்று, Kuntram Onru - (கோவர்த்தனமென்கிற) ஒருமலையை
எடுத்து, Eduthu - (குடையாக) உயரவெடுத்து
ஏந்தி, Aendi - (ஏழுநாள் ஓய்வின்றிப்) பிடித்துக் கொண்டிருந்து
மா மழை, Maa Mazhai - (இந்திரன் பெய்வித்த) பெரு மழையில் நின்றும்
காத்த, Kaatha - (அடியார்க்ளைக்) காப்பாற்றி யருளின
அம்மான், Ammaan - ஸ்வாமியும்
அரக்கரை, Arakkarai - ராக்ஷஸாக்ளை
வென்ற, Vendru - கொன்றொழித்த
வில்லியார், Villiyaar - வில்லையுடையருமான பெருமாளுடைய
வீரமே கொலோ, Veerame Kolo - பராக்ரமத்தினாலோ
தென்றல் வந்து தீ வீசும், Thendral Vandu Thee Veesum - தென்றற்காற்று வந்து நெருப்பை வீசுகின்றது!
என் செய்கேன், En Seigken - (இதற்கு) என்ன பண்ணுவேன்!
1957பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்றிலின் உடைய த்வனி எனக்கு பாதகமாகா நின்றது – நான் இதுக்கு எத்தைச் செய்வேன் – நான் இதுக்கு மார்விலே அம்பு ஏற்கவோ) 6
சென்று வார் சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் வீரமே கொலோ முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடரும் என்னையே –11-1-6
பதவுரை Show / Hide
சென்று, Sendru - எதிரிகளிருக்குமிடத்தேறச் சென்று (- (என்னை அடரும் என்னை வருத்துகின்றது!))
வார்சிலை, Vaarcilai - பெரியவில்லை
வளைத்து, Valaiththu - (நானேற்றி) வளையச் செய்து
இலங்கையை, Ilankaiyai - லங்காபுரியை
வென்ற, Vendru - அழித்த
வில்லியார், Villiyaar - வில்வல்லவரான பெருமானுடைய
வீரமே கொலோ, Veerame Kolo - பராக்ரமமடியாகவோ
முன்றில் பெண்ணை     மேல், Munril Pennai Mael - வாசலிலுள்ள பனைமரத்தின் மேலே
முளரி கூட்டகத்து, Mulari Koottakathu - தாமரைப் பூவாலே இயற்றப்பட்ட கூட்டிலே கிடக்கிற
அன்றிலின், Anrilin - அன்றிற்பறவையினுடைய
குரல், Kural - தொனியானது
1972பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் வந்தேறியாயும் ஸ்வா பாவிகமாயும் உண்டான என்னுடைய ஆபரணங்களை இழந்து இருக்கிற இப்போது கிடிகோள்- அவர் ஆஸ்ரித அர்த்தமாக தம்மைத் தாழ விட்டு சாரத்தியம் பண்ணியும் -இரப்பாளனாகவும் – தம்மைப் பேணாதே அம்பு ஏற்றும் பண்ணும் வியாபாரங்கள் அடைய நமக்குப் பலித்த படி இது கிடிகோள்) 1
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ் தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1
பதவுரை Show / Hide
மன் இலங்கு, Man Ilangu - (பல) அரசாகள் விளங்கா நின்ற
பாரதத்து, Bharathaththu - பாரதயுத்தத்திலே
தேர் ஊர்ந்து, Ther Oorndhu - (சாரதியாய் நின்று) தேரை நடத்தினவனாயும்
மாவலியை, Mavalaiya - மஹாபலியை
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து, Pon Ilangu Thin Vilangkil Vaiththu - பொன்மயமாக விளங்குகின்ற திடமான விலங்கிலே பிணைத்தவனாயும்
பொரு கடல் சூழ், Poru Kadal Soozh - அலையெறிகின்ற கடலால் சூழப்பட்ட
தென்இலங்கை, Thenilankai - தென்னிலங்கையினுடைய
ஈடு, Eedu - மதிப்பை
அழித்த, Azhiththa - அழித்தவனாயுமிருக்கிற
தேவற்கு, Thevarku - எம்பெருமானுக்கு
என் இலங்கு சங்கோடு, En Ilangu Sangodu - எனது ஒளிமிக்கவைகளைகளையும்
எழில், Ezil - அழகையும்
தோற்றிருந்தேன், Thotrirundhen - இழந்திரா நின்றேன்
இது காணீர், Idhu Kanneer - இவ்விருப்பைக் காணுங்கோள்
1988பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -ஸ்ரீ பிராட்டி பக்கல் பிச்சாலே இறே இப்படி தம் மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர் நமக்கு ரஷகர்-நமக்கு மேல் ஒரு குறை உண்டோ) 7
இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர் அலை மலி வேற் கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள் சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7
பதவுரை Show / Hide
இலைமலி பள்ளி எய்தி, Ilaimali Palli Eydhi - பர்ணசாலையினருகே வந்து
எழில் சேர், Ezhil Ser - மிக்க அழகையுடையளாய்
ஆலை மலி வேல் கணாளை, Aalai Mali Vel Kanaalai - துன்பப்படுத்துமியல்வு பொருந்திய வேல் போன்ற திருக்கண்களை யுடையளான பிராட்டியை
அகல்விப்ப     தற்கு, Agalvippa Tharku - பிரிப்பதற்காக
இனம் ஆய மான் பின், Inam Aaya Maan Pin - ஸஜாதியமான மான்களின்பின்னே
இதுமாயம் என்ன, Idhumayam Enna - இது ஆச்சரியமான மான் என்று சொல்லும்படியாக
ஓர்உரு ஆய, Oru Uru Aaya - விலக்ஷணமான ரூபத்தை யேறிட்டுக்கொண்டு வந்த
மானை, Maanai - (மாரீசனாகிற) மாயமானை
அமையா, Amayaa - நிரஸித்து
கொலைமலிவு எய்துவித்த     கொடியோன், Kolaimalivu Eythuvitha Kodiyon - பரஹிம்ஸையையே தன்னிடத்துப் பூர்த்தியாகக் கொண்டிருந்தகொடியவனான இராவணனுடைய
இலங்கை, Ilankai - லங்காபுரியானது
பொடி ஆக, Podi Aaga - பொடிபடும்படி
வென்றி அமருள், Vendri Amarul - வெற்றிப்போர்க்களத்திலே
சிலை மலி செம் சரங்கள், Silai Mali Sem Sarangal - வில்லிலே நிறைந்த செவ்வியஅம்புகளை
செல உய்த்த, Sela Uytha - பிரயோகித்த
நங்கள் திருமால், Nangal Thirumaal - எம்பெருமான்
நமக்கு ஓர் அரண், Namakku Oor Aran - நமக்கு ஒப்பற்ற சரண்யன்
1991பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சாலே தரித்தும்-இதுவே யாத்ரையாக யுழலு கிறவர்கள் ஸ்ரீ பரம பதத்தைப் பெற்று அனுபவிப்பார்கள்) 10
கொலை கெழு செம்முகத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல் ஒழி கெழு பாடல் பாடி யுழல் கின்ற தொண்டரவர் ஆள்வர் உம்பர் உலகே –11-4-10
பதவுரை Show / Hide
கொலை கெழு, Kolai Kezhu - கொலை செய்யுமியல்வு விளக்கப் பெற்ற
செம் முகத்த, Sem Mugath - சிவந்த முகத்தையுடையத்தாயக் கொண்டுவந்த
களிறு ஒன்று, Kaliru Ondru - (குவலயாபீடமென்னும்) ஒரு யானையை
கொன்று, Kondru - கொன்றொழித்தவனாயும்
கொடியோன், Kodiyon - கொடியவனான இராவணனுடைய
பொடி ஆ, Podi Aa - பொடியாகும்படி
சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த, Silai Kezhu Sem Sarangal Sel Uytha - வில்லிலுள்ள நெருப்புப் போன்ற அம்புகளைப் பிரயோகித்தவனாயுமுள்ள
நங்கள் திருமாலை, Nangal Thirumalai - எம்பெருமானைக் குறித்து,
வேலை புடை சூழ, Velai Pudai Soozha - கடலாலே சுற்றுஞ் சூழப்பட்டதாய்
கலி கெழு மாடம் வீதி, Kali Kezhu Maadam Veethi - வலிமைமிக்க மாடவீதிகளை யுடையதாய்
வயல், Vayal - கழனிகளையுடைத்தான
மங்கை, Mangai - திருமங்கைநாட்டிலே
மன்னு, Mannu - பொருந்திவாழ்கிற
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
பனுவல், Panoval - ஸ்ரீஸூக்தியாய்
ஒலி கெழு, Oli Kezhu - சொற்கள் சிறந்த
பாடி, Paadi - வாயாரப்பாடி
உழல்கின்ற, Uzhalginra - இதுவே போதுபோக்காய்த் திரிகின்ற
தொண்டர் அவர், Thondar Avar - பாகவதர்கள்
உம்பர் உலகு, Umbar Ulagu - பரமபத்த்தை
ஆள்வர் –, Aalvar - ஆளப்பெறுவர்கள்
1992பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணேடீ — தோழமையால் ஏடீ -என்கிறது ஆதல் – பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே ததிமுகனை குத்தினால் போலேஹர்ஷத்தாலே சொல்லுகிறாள் ஆதல் – இப்படி தன் ஸ்வரூபத்தை அழிய மாறி ஆஸ்ரித ரஷணத்துக்காக கிலேசப் பட்டவன் ஆனால் இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ – அவன் நிரதிசய ஆநந்த பரி பூர்ணனாய் இருக்கிறது நமக்காகவாய் இருந்த பின்பு இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ) 1
மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள் வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே –11-5-1
பதவுரை Show / Hide
ஏ, E - தோழீ! (- (நீ ஏத்திச் சொல்லுகிற புருஷன்) (என்று ஒருத்திசொல்ல) (மற்றொருத்தி அதற்கு மறுமாற்ற முரைக்கிறாள்))
மான் அமரும், Maan Amarum - மானையொத்த
மெல் நோக்கி, Mel Nookki - மென்மையான கண்களை யுடையவளான
கைதேவி, Kaithevi - விதேஹராஜவம்சத்துப் பிறந்தவளான ஸீதையை
இன் துணை ஆ, In Thunai Aa - இனிய துணைவியாகக் கொண்டு
கான் அமரும், Kaan Amarum - காட்டிலே பொருந்திய
போய், Poi - போய்
காடு, Kaadu - காடுகளிலே
உறைந்தான் காண், Uraindhaan Kaan - வாஸம்பண்ணினான் காண்
சாழலே, Saalale - தோழீ!
கான் அமரும் கல் அதர் போய், Kaan Amarum Kal Adhar Poi - காட்டிலே பொருந்திய கல்நிலைந்தவழியே சென்று
காடு, Kaadu - காடுகளிலே
உறைந்த, Uraindha - ஸஞ்சரித்த
பொன் அடிகள், Pon Adigal - திருவடிகளானவை
வானவர் தம், Vaanavar Tham - தேவர்களினுடைய
சென்னி, Sennai - முடியில் (அணியத்தக்க)
மலர் கண்டாய், Malar Kandaai - புஷ்பங்களாயிராநின்றன காண்.
2027பெரிய திருமொழி || (11-8–மாற்றமுள) - (பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பாட்டில் அருளிச் செய்யும் போது இதுவே அமையும் என்னும் படி ஆர்த்தி தோற்ற அருளிச் செய்து அருள்வர் – நான் உன்னை அடையும் படியாக அருள வேணும் – அம்மரத்தின் உலர்ந்த அம்சமும் தன்னிலே ஒன்றிப் பச்ச்சையாம் படி பண்ண வேணும் – அது பின்னை செய்யப் போமோ என்னில் வேர் பறிந்தவையும் புகட்டிடத்தே செவ்வி பெறும்படி பண்ணும் தேசத்தில் அன்றோ நீ வர்த்திக்கிறது முதல் பறிந்ததுக்கு செவ்வி பெறுத்த வல்ல உனக்கு உள்ளத்துக்கு ஒரு பசுமை பண்ண தட்டு என் – தய நீயனான எனக்கு கொள்வர் தேட்டமான உன் அருளை அருள வேணும்) 6
படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம் மடை நின்று அலரும் வயலாலி மணாளா இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே அடைய வருளாய் எனக்கு உன்தன் அருளே –11-8-6
பதவுரை Show / Hide
படை நின்ற, Padai Nindra - உழுபடையாகிய கலப்பையைக்கொண்டு உழும்போது அதில் அகப்பட்டு அழியாமல் தப்பியொதுங்கி நின்ற
பைந்தாமரையோடு, Painthaamaraiyodu - பசுமையான தாமரைக் கொடிகளும்
அணி நீலம், Ani Neelam - அழகிய நீலோற்பலக்கொடிகளும்
மடை நின்று, Madai Nindru - (பின்பு களையாகப்பறித் தெறியப்பட்டு அங்ஙனம் எறியப்பட்ட இடமான) நீர்பாயும் மடையிலேகிடந்து
அலரும், Alarum - மலரப்பெற்ற
வயல், Vayal - கழனிகளை யுடைய
ஆவி, Aavi - திருவாலியென்னுந் திருநகரியிலெழுந்தருளியிருக்கிற
மணாளா, Manala - மணவாளானென்னுந் திருநாம்முடைய எம்பெருமானெ!
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே, Idaiyan Erindha Marame Othu Irame - (ஆடுமாடுகள் எட்டித் தழைமேயலாம்படி) இடையர்கள் (விரைந்து கையிற்கத்தி கொண்டு கிளைகளை வெட்டிச் சாய்க்கப்பெற்ற மரங்கள் போல யான் ஒருபுறம் உலராதபடி.
அடைய, Adaiya - நான் உன்னையடையும்படி
எனக்கு, Enakku - எளியவனான அடியேனுக்கு
உன்தன் அருள், Unthan Arul - உனது கருணையை
அருளாய், Arulai - அருளாய்
2033திருக்குறுந்தாண்டகம் || தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார்; நெஞ்சே! எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை அநுஸந்திக்கப் பார் என்றார்; அப்படியே அது அநுஸந்திக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு ‘நெஞ்சே! நீ அநுஸந்திக்கும் விதம் என்னே!‘ என்று ஈடுபடுகிறார். 2
காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.
பதவுரை Show / Hide
காற்றினை புனலை தீயை, Kaatrinai Punalai Theei - காற்று நீர் தீ முதலான பஞ்ச பூதமயமான ஜகத்தை சரீரமாக வுடையவனும்
கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை, Kadi Mathil Ilangai Settra Aetrinai - அரணாகப் போரும்படியான மதிளை யுடைத்தான இலங்காபுரியை முடித்த காளை போன்றவனும்
இமயம் மேய, Imayam Maeya - இமயமலையில் (திருப்பிரிதியிலே) பொருந்தி வாழ்கிறவனும்
எழில் மணி திரளை, Ezhil Mani Thiralai - அழகிய மணித்திரள் போன்றவனும்
இன்பம் ஆற்றினை, Inbam Aatrinai - (வடிவெடுத்த) ஆனந்த வெள்ளமாயிருப்பவனும்
அமுதம் தன்னை, Amudham Thannai - போனவுயிரை மீட்கவல்ல அமுதம் போன்றவனும்
அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அசுரனுடைய
ஆர் உயிரை, Ar Uyirai - அருமையான உயிரை
உண்ட, Unda - கவர்ந்த
கூற்றினை, Kootrinai - ம்ருத்யுவமான எம்பெருமானை
உள்ளம், Ullam - நெஞ்சமே!
குணம் கொண்டு, Gunam Kondo - திருக்குணங்களை முன்னிட்டு
கூறு, Koora - அநுஸந்திக்கப்பார்; (என்று தாம் சொன்னதும் அப்படியே அநுஸந்தித்த நெஞ்சை நோக்கி)
நீ கூறும் ஆறே, Nee Koorum Aare - நீ அநுஸந்தித்த விதம் என்னே! (என்று ஈடுபடுகிறடி.)
2046திருக்குறுந்தாண்டகம் || எம்பெருமானை நீராட்டுதல் பூச்சூட்டுதல் முதலிய வழிபாடுகளால் நேராக உகப்பித்து உய்ந்தாள் யசோதைப் பிராட்டி; அவள் செய்த படிகளை அநுகரித்துப் பேசி உய்ந்தார் பெரியாழ்வார்; இவ் வாழ்வார் தாமும் அங்ஙனே சில வழிபாடுகள் செய்யப் பெறவேணுமென்று பாரித்து மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும். 15
முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும் அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே
பதவுரை Show / Hide
முன், Mun - முன் பொருகால்
பொலா, Polaa - பொல்லாதவனான
இராவணன் தன், Iraavanan Than - இராவணனுடைய
முது மதிள் இலங்கை, Muthu Mathil Ilangai - வலிய மதிள்களை யுடைத்தான இலங்கா புரியை
வேவித்து, Veviththu - சுடுவித்து
அனுமன், Anuman - சிறிய திருவடி
அன்பினால் வந்து, Anbinhaal Vandu - மகிழ்ச்சியுடனே வந்து
ஆங்கு, Aangu - கிஷ்கிந்தையாலே
அடி இணை பணிய, Adi Inai Paniya - உபய பாதங்களையும் தொழும்படியாக
நின்றாற்கு, Nindraarku - நின்ற பெருமானுக்கு
அடியனேன், Adiyanen - அடியேன்
என்பு எலாம், Enbu Elam - எலும்பெல்லாம்
உருகி, Urugi - உருகி
உக்கிட்டு, Ukkittu - இற்றுப் போய்
என்னுடை, Ennudai - என்னுடைய
நெஞ்சம் என்னும், Nenjam Ennum - நெஞ்சென்று சொல்லப் படுகிற
அன்பினால், Anbinhaal - ஆர்வத்தினால்
ஞானம் நீர் கொண்டு ஆட்டுவன், Nyanam Neer Kondo Aattuvan - ஞானமாகிற தீர்த்தத்தைக் கொண்டு திருமஞ்சனம் செய்வேன்.
2047திருக்குறுந்தாண்டகம் || கீழ்ப்பாட்டிலே திருமஞ்சனம் பண்ணினார்; இப்பாட்டிலே திருமாலை சூட்டுகிறார். முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக் குறிக்கிறார்; “மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்; “மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம். “வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம். “அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் ஸ்ரீ கூர்மாவதாரம். 16
மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம் தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும் தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே
பதவுரை Show / Hide
மாயம், Maayam - மாயச் செய்கையை யுடைய
மான், Maan - மாரீசனாகிற மான்
மாய, Maaya - முடியும்படி
செற்று, Settru - கொன்றவனாயும்
மருது, Maruthu - (இரட்டை) மருத மரங்கள்
இற, Ira - முறிந்து விழும்படி
நடந்து, Nadandhu - நடை கற்றவனாயும்
வையம் தாய், Vaiyam Thaai - (த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யளந்து கொண்டவனாயும்
அப்படி, Appadi - அப்படிப்பட்ட
மா, Maa - பெரிதான
பரவை, Paravai - கடலானது
பொங்க, Ponga - பொங்கும் படியாக
தட வரை, Thada Varai - பெரிதான மந்தர பர்வதத்தை
திரித்து, Thirithu - சுழலச் செய்து (அமுதமெடுத்து)
வானோர்க்கு, Vaanorkku - தேவர்களுக்கு
ஈயும், Eeyum - கொடுத்தவனாயுமுள்ள
மால், Maal - ஆச்ரித வ்யாமோஹ சாலியான
எம் பிரானாருக்கு, Em Piranaarukku - எம்பெருமானுக்கு
சொற்கள் என்னும், Sorkkal Ennum - வாய்மொழிகளாகிற
தூய, Thuya - பரிசுத்தமான
மா மாலை கொண்டு, Maa Maalai Kondu - சிறந்த மாலையைக் கொண்டு
தொண்டனேன், Thondanen - அடியேன்
சூட்டுவேன், Sootuvein - சூட்டுவேன்
2058திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருக் கோவலூரைத் தொழுகைக்காகத் திருவுள்ளத்தை யழைத்தார்; அவ்விடத்து எம்பெருமான் வஸிஷ்ட சண்டான விபாகமின்றி எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த ஸர்வ ஸ்தானத்தோடே வந்து நிற்கையாலே அதை அநுஸந்தித்து அநுபவத்தை மறந்து அஞ்சத் தொடங்கினார். அஸ்தானத்திலும் பய சங்கை பண்ணுகை யன்றோ ஆழ்வார்களின் பணி. எம்பெருமானுடைய ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதி குணங்களை அநுஸந்தித்தவாறே இவ் விலக்ஷண வஸ்துவுக்கு என்ன அவத்யம் வருகிறதோவென்று வயிறு பிடிக்க வேண்டும்படியாயிற்று. ஸ்ரீவிபீஷணாழ்வான் அநுகூலனாய் வந்து சரணம் புகா நிற்கச் செய்தேயும் ஸுக்ரீவ மஹாராஜர் தம்முடைய கனத்த ப்ரேமத்தினால் கலங்கி அபாயசங்கை பண்ணினபோது பெருமாள் தம் தோள் வலியைக் காட்டி அச்சந் தவிர்த்தாப் போலே பிரகிருதத்திலும் திருக் கோவலூராயனார் தம் மிடுக்கையும் காவலுறைப்பையும் தேசத்தினுடைய அரணுடைமையையும் ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுக்க, அவற்றையெல்லாங்கண்டு தெளிந்த ஆழ்வார் அச்சங்கெட்டு “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!” என்று திருவுள்ளத்தைத் தட்டி யெழுப்புகிறார். 7
வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு, வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய, கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி, பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. - 7
பதவுரை Show / Hide
வற்பு உடைய,Varpu Udaiya - மிடுக்குடைய
வரை நெடு தோள்,Varai Nedu Thol - மலைபோன்று உயர்ந்த தோள்களையுடையரான
மன்னர்,Mannar - (கார்த்த வீரியார்ஜீனன் முதலான) அரசர்கள்
மாள,Maala - முடியும்படி
வடிவு ஆய,Vadivu Aaya - அழகியதான
மழு,Mazhu - கோடாலிப்படையை
ஏந்தி,Eaendhi - தரித்து (பரசுராமனாய்த் திருவதரித்தும்)
உலகம் ஆண்டு,Ulagam Aandu - (ஸ்ரீராமபிரனாய்) உலகங்களைத் திருக் குணங்களா லீடுபடுத்தியும்
வெற்பு உடைய,Verpu Udaiya - மலையை உள்ளேயுடைய
நெடு கடலுள்,Nedu Kadalul - பெரிய கடலினுள்ளே
தனி வேல்,Thani Vaal - ஒப்பற்ற வேற்படையை
உய்த்த,Uyththa - செலுத்தின
வேள் முதலா,Vael Mudhalaa - ஸுப்ரஹமண்யன் முதலான தேவதைகளை
வென்றான்,Vendraan - (பாணாஸுரயுத்தத்தில்) தோல்வியடையச் செய்தும் போந்த எம்பெருமான்
ஊர்,Oor - எழுந்தருளியிருக்குமிடமாய்,
விந்தை மேய,Vindhai Maeya - (தவம்புரிவதற்காக) விந்தின மலையிலி் வாழ்ந்தவளாய்
கற்பு உடைய,Karpu Udaiya - அறிவிறசிறந்தவளாய்
மடம்,Madam - பற்றினது விடாமையாகிற குணமுடையனான
கன்னி,Kanni - துர்க்கையானவள்
கடிபொழில் சூழ்,Kadipozhil Soozh - பரிமளத்தையுடைய சோலைகளாலே சூழப்பட்டதாய்
நெடு மறுகில்,Nedu Marugil - விசாலமான திருவீதிகளை யுடைத்தாய்
கமலம் வேலி,Kamalama Vaeli - தாமரைத் தடாகங்களைச் சுற்றிலுமுடைத்தாய்
பொற்பு உடைய மலை அரையன்,Porpu Udaiya Malai Arayan - பராக்ரமசாலிகளான மலயமா நவர்களாலே ஆச்ரயிக்கப்பட்டதான
பூங்கோவலூர்,Poonkovaloor - திருக்கோவலூரை
நெஞ்சே தொழு தும்,Nenjchae Thozhu Dhum - மனமே! தொழுவோம்;
போது,Podhu - வா
2067திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில், கிளிப்பிள்ளை திருநாமங்களைச் சொல்லக் கேட்டு ஆச்வாஸமடைந்து அதனையும் கௌரவித்தபடியைச் சொல்லி நின்றது. அந்த நிலைமை போய்த் தன் வாயாலே திரு நாமத்தைச் சொல்லி அது தன்னை வீணையிலே ஏறிட்டு ஆலாபித்தாள்; அந்த வீணையானது ஸம்ச்லேஷ தசையிலே தன் படிகளையும் அவன் படிகளையும் இட்டு வாசிக்கப் பெறுவதாகையாலே அந்த வீணை முகத்தாலே அவன் வடிவை ஸாக்ஷாத்கரித்து அந்த வீணையை அவனாகவே கொண்டு, அவனோடு ஸம்ச்லேஷிக்குமிடத்திற் பண்ணும் வியாபார விசேஷங்களை இவ் வீணையிலே பண்ணா நின்றாள்; இவள் உணர்ந்தாள் என்னவாய்த் தலைக் கட்டப் புகுகிறதோ வென்று திருத்தாய் இன்னாப்போடே பேசும் பாசுரம் இது. 16
கன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும், கடிபொழில்சூழ் கணபுரத்¦ தன் கனியே என்றும், மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்,வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும், வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும், விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய்என்றும், துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே. - 16
பதவுரை Show / Hide
கன்று மேய்த்து,Kanru Meyththu - கன்றுகளை ரக்ஷித்து
இனிது உகந்த,Inidhu Ugandha - மிகவும் மகிழ்ச்சி கொண்ட
காளாய் என்றும்,Kaalai Endrum - இளையோனே! என்றும்,
கடி பொழில் சூழ்,Kadi Pozhil Soozh - வாஸனைமிக்க சோலைகளாலே சூழப்பட்ட
கணபுரத்து,Kanapurathu - திருக்கண்ணபுரத்திலே (பழுத்த)
என் கனியே என்றும்,En Kaniye Endrum - என்பழமே! என்றும்
மன்று அமர கூத்து ஆடி,Manru Amara Kooththu Aadi - வீதியாரக் குடக்கூத்தாடி
மகிழ்ந்தாய் என்றும்,Magizhndhai Endrum - மகிழ்ந்தவனே! என்றும்
வடதிரு வேங்கடம்,Vadathiru Vengadam - வட திருவேங்கடமலையிலே
மேய மைந்தா என்றும்,Meya Maindha Endrum - பொருந்தி வாழ்கின்ற யுவாவே! என்றும்,
அசுரர் குலம்,Asurar Kulam - அசுரக் கூட்டங்களை
வென்று,Vendru - ஜயித்து
களைந்த,Kalaintha - வேரோடொழித்த
வேந்தே என்றும்,Vende Endrum - வேந்தனே! என்றும்
விரி பொழில் சூழ்,Viri Pozhil Soozh - விரிந்த சோலைகளாலே சூழப்பட்ட
திருநறையூர்,Thirunaraiyur - திருநறையூரிலே
நின்றாய் என்றும்,Nindrai Endrum - நின்றருளுமவனே! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என்துணையே என்றும்,Thunru Kuzhal Karu Nirathu En Thunaie Endrum - அடர்ந்த திருக்குழற் கற்றையையும் கறுத்த திருமேனியையு முடையனாய் எனக்குத் துணையானவனே என்றும் சொல்லி
துணை முலை மேல்,Thunai Mulai Mel - ஒன்றோடொன்றொத்த தனங்களிலே
துளி சோர,Thuli Sora - கண்ணீர்த்துளிகள் பெருகும் படியாக
சோர்கின்றாள்,Sorkindraal - தளர்கின்றாள்
2068திரு நெடும் தாண்டகம் || கீழ்ப் பாட்டில் “துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்ற படியே தன் பெண் பிள்ளை சோர்வுற்றபடியைக் கண்ட திருத்தாயார் ‘இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாகிலும் வழிப்படக் கூடுமோ‘ என்றெண்ணி ‘நங்காய்! நீ இங்ஙனே வாய்விட்டுக் கூப்பிடுகையும் மோஹிக்கையுமாகிற இவை உன்னுடைய பெண்மைக்குத் தகாது, இக்குடிக்கும் இழுக்கு‘ என்று சொல்ல; அப்படி அவள் ஹிதஞ் சொன்னதுவே ஹேதுவாக மேன்மேலும் அதி ப்ரவருத்தியிலே பணைத்த படியைச் சொல்லுகிற பாசுரம் இது. 17
பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு, நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே. - 17
பதவுரை Show / Hide
பொங்கு ஆர் மெல் இள கொங்கை,Ila Kongai - வளர்த்தி மிக்கதாய் மிருதுவாய் இளையதான தனம்
பொன்னே பூப்ப,Ponne Pooppa - வைவர்ணியமடையவும்
பொரு கயல் கண்,Poru Kayal Kan - சண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்கள்
நீர் அரும்ப,Neer Arumba - நீர்த்துளிகள் அரும்பவும்
போந்து நின்று,Pondu Nindru - (வெளியே வந்து) நின்று
செம் கால மடம் புறவம்பெடைக்கு பேசும்சிறு குரலுக்கு,Sem Kaal Madam Puravampedaikku Pesum Siru Kuralukku - சிவந்த கால்களையுடைய இளம்புறாக்கள் தம்பேடைகளோடு சிறுகுரலாகப் பேசுகிறபடிக்கு
உடல் உருகி,Udal Urugi - மெய் கரைந்து
சிந்தித்து,Sindhiththu - (அவன் முறைகெடப்பரிமாறும்படியை) நினைத்து,
ஆங்கே,Aangey - அவ்வளவில்
தண்காலும்,Than Kaalum - திருத்தண்காலையும்
தண் குடந்தை நகரும்,Than Kudandai Nagarum - திருக்குடந்தைப்பதியையும்
பாடி,Paadi - (வாயாரப்) பாடி
தண் கோவலூர்,Than Kovalur - குளிர்ந்த திருக்கோவலூரையும்
பாடி,Paadi - பாடி
ஆட,Aada - கூத்தாட
கேட்டு,Kaettu - அவ்வொலியை நான்கேட்டு,
நங்காய்,Nangai - ‘பெண்ணே!
நம் குடிக்கு,Nam Kudikku - நமது குலத்திற்கு
இது நன்மையோ என்ன,Idhu Nanmaro Enna - வாய்விட்டுக் கூப்பிடுகிறவிது நலந்தானோ? என்று சொல்ல,
நறையூரும்,Naraiyoorum - திருநறையூரையும்
பாடுவாள் நவில் கின்றாள்.,Paaduvaal Navil Kindraal - பாடுவாளாகப் பேசத்தொடங்கினாள்.
2071திரு நெடும் தாண்டகம் || பண்டு ஸ்ரீராமாவதாரத்தில் பிராட்டிக்கு உதவினபடியையும், ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் பேரனுக்கு உதவினபடியையும், வராஹாவதாரத்தில் பூமிப்பிராட்டிக்கு உதவினபடியையும், பிரளயகாலத்தில் உலகங்கட்கெல்லா முதவினபடியையும், த்ரிவிக்ரமாவதாரத்தில் ஸர்வஸ்வதானம் பண்ணினபடியையும் எடுத்தெடுத்துப் பரகாலநாயகி வாய்விட்டுக் கதறுகின்றபடியைத் திருத்தாயார் சொல்லாநின்று கொண்டு, இப்படிப்பட்ட என் மகளை இந்நிலவுலகத்தில் பெரும்பாக்கியம் படைத்தவளென்று சொல்லலாமத்தனையன்றி வேறெதுவும் சொல்லப்போகாதென்று தலைக்கட்டுகிற பாசுரம் இது. 20
தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி, பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே? - 20
பதவுரை Show / Hide
முன்,Mun - முன்பொருகால்
தேர் ஆளும் வாள் அரக்கன்,Ther Aalum Vaal Arakkan - தேர்வீரனும் வாட்படைவல்லவனுமான இராவணனுடைய
செல்வம் மாள,Selvam Maala - ஐச்வரியம் அழியவும்
தென் இலங்கை மலங்க,Then Ilangkai Malanga - (அவனது) தென்னிலங்கா புரி கலங்கவும்
செம் தீ ஓங்கி,Sem Thi Oangi - (அனுமானையிட்டு) சிவந்த நெருப்பாலே கொளுத்தி,
போர் ஆளன்,Por Aalan - (அதுவன்றியும்) போர்புரியுந் தன்மையனாய்
ஆயிரம் தோள்,Aayiram Thol - ஆயிரம்தோள்களை யுடையனான
வாணன்,Vaanan - பாணாஸுரன்
மாள,Maala - பங்கமடையும்படி செய்தற்கு
பொருகடல் அரணை கடந்து,Poru Kadal Aranai Kadandhu - அலையெறிகின்ற கடலாகிற கோட்டையைக் கடந்து
புக்கு,Pukku - பாணபுரத்திற்புகுந்து
மிக்க,Mikka - வீரலக்ஷ்மி மிகப்பெற்றவனும்
பார் ஆளன்,Paar Aalan - பூமிக்குநிர்வாஹகனும்,
பார் இடந்து,Paar Idandhu - (வராஹாவதாரத்தில்) பூமியைக் குத்தியெடுத்தும்
பாரை உண்டு,Paarai Undu - (பிரளயத்தில்) பூமியைத்திரு வயிற்றிலே வைத்தும்
பார் உமிழ்ந்து,Paar Umizhndhu - அப்பூமியைப் பிறகு வெளிப்படுத்தியும்
பார் அளந்து,Paar Alandhu - (த்ரிவிக்ரமாவதாரத்தில்) அப்பூமியை அளந்தும்
பாரை ஆண்ட,Paarai Aanda - (ஆக இப்படியெல்லாம்) இவ்வுலகத்தை ரக்ஷித்தருளின் வனான
பேர் ஆளன்,Per Aalan - பெருமை பொருந்தின எம் பெருமானுடைய
பேர்,Per - திருநாமங்களை
ஓதும்,Oodhum - இடைவிடாமற் சொல்லுகிற
பெண்ணை,Pennai - இப்பெண்பிள்ளையை
மண் மேல்,Man Mael - இந்நிலவுலகத்தில்
பெருந்தவத்தன் என்று அல்லால் பேசலாமே,Perunthavathan Endru Allaal Paesalaamae - பெருமாபாக்கிய முடையவள் என்று சொல்லலாமத்தனை யொழிய வேறு சொல்லப்போமோ?
2072திரு நெடும் தாண்டகம் || இத்திருத்தாண்டகம் மூன்று பத்தாக வகுக்கப்பட்டுள்ளது. முதற்பத்துப் பாசுரங்கள் ஆழ்வார் தாமான தன்மையிலே யிருந்து பேசினவை அதற்குமேல் பத்துப் பாசுரங்களாகிய நடுவிற்பத்து, தாய்பாசுரமாகச் சென்றது. இனி, இதுமுதலான பாசுரங்கள் தலைமகள் பாசுரமாகச் செல்கின்றன. கீழ்ப்பாட்டில், தாயானவள் தான்சொன்ன ஹிதத்தை மகள் கேளாதவளானபடி யாலே இனி இவளை அடக்கியாளுகை முடியாத காரியமென்று நிச்சயித்துப் ‘பேராளன் பேரோதும் பெண்ணைமண்மேற் பெருந்தவத்தளென்றல்லாற் பேசலாமே“ என்று கொண்டாடி உதாஸீநையானாள்; ‘தலைவிக்கு இங்ஙனம் ஆற்றாமை மீதூர்ந்தது நம் க்ருஷி பலித்த படியன்றோ என்று நினைத்து மகிழ்ந்து எம்பெருமானும் உதாஸீநனாய் நின்றான்; இந்த நிலைமையிலே நாமும் உதாஸீநித்திருந்தால் இவளை இழந்தோமாகவேணு மத்தனையென்று எண்ணின உயிர்த்தோழி, கீழ்நடந்த கலவியை நினைப்பூட்டினால் அது கண்டு இவள் ஒருவாறு தரித்திருக்கக் கூடுமென்று பார்த்து ‘அவன் வந்தபடி என்? உன்னோடு கலந்தபடி என்? பின்பு பிரிகிறபோது உனக்குத் தேறுதலாகச் சொல்லிப் போன வார்த்தை ஏதேனுமுண்டோ? சொல்லிக்காணாய்‘ என்ன, அவற்றைத் தோழிக்குச் சொல்லுகிறாள். அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டுவைத்து, கைப்பட்ட பொருளைக் கடலிலே வீசியெறிந்தாற்போலே, ஏதோவேறாக நினைத்து அஞ்சி இழந்தோமோ தோழீ! என்கிறாள். “இப்பாட்டு, சக்ரவர்த்தி திருமகன் தலைமகனாய் ஸ்ரீஜநகராஜன் திருமகள் தலைமகளாக ப்ரவ்ருத்தமாகிறது“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி அறியத்தக்கது. ஆழ்வார்தாம் ஸ்ரீஜநகராஜன் திருமகளான நிலைமையிலே நின்று பேசுகிறாரென்றவாறு. 21
மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட, எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தாரென் முன்னே நின்றார் கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே, அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே. - 21
பதவுரை Show / Hide
மை வண்ணம் நறு குஞ்சி குழல் தாழ,Mai Vannam Naru Kunjchi Kuzhal Thaazha - தறுத்தநிறமுடைத்தாய் மணம் மிக்கதாய் அலகல காயிருந்துள்ள திருக்குழற் கற்றையானது பின்னே அலையவும்
இரு பாடு,Iru Paadu - இருபுறத்திலும்
மகரம்சேர் குழை,Magaram Saer Kuzhai - மகரகுண்டலங்கள்
இலங்கி ஆட,Ilanki Aada - அசைந்துவிளங்கவும்
எய் வண்ணம் வெம்சிலையே துணை ஆ,Ey Vannam Vem Silaiae Thunai Aa - ப்ரயோகித்தலை இயல்வாக வுடைய வெவ்வியவில்லையே துணையாகக் கொண்டு
இங்கே,Ingae - இந்தத் திருமணங்கொல்லையிலே
இருவர் ஆய் வந்தார்,Iruvar Aay Vandhaar - (தாமும் இளையபெருமாளுமாக) இருவராய் வந்து என்னெதிரே நின்றார்;
கை,Kai - (அவருடைய) திருக்கைகள்
தாமரைவண்ணம்,Thamaraivannam - செந்தாமரைப்பூப்போலு மழகுடையன;
வாய்,Vaai - திருப்பவளமும்
கமலம் போலும்,Kamalam Polum - தாமரையொக்கும்;
கண் இணையும்,Kan Inaiyum - திருக்கண்களும்
அரவிந்தம்,Aravindham - அத்தாமரையே
அடியும்,Adiyum - திருவடிகளும்
அஃதே,Aghdhe - அந்நத் தாமரையே;
அவ்வண்ணத்தவர்,Avvannaththavar - அப்படிப்பட்ட அழகு வாய்ந்த அவருடைய
நிலைமை,Nilaimai - நிலைமையை
கண்டும்,Kandum - கண்டுவைத்தும்
தோழீ,Thozhee - தோழியே!
அவரை,Avarai - அவரைக் குறித்து
தேவர் என்று அஞ்சினோம்,Thaevan Endru Anjinom - பரதேவதையென்கிற பிரதிபத்தியாலே பயப்பட்டோமே!
2075திரு நெடும் தாண்டகம் || “புள்ளூருங்கள்வா! நீ போகேலென்பன் என்றாலுமிது நமக்கோர் புலவி தானே“ என்றாள் கீழ்ப்பாட்டில்; அது கேட்ட தோழியானவள், ‘நங்காய்! பெரிய திருவடி வந்து தூக்கிக் கொண்டு போய்விட்டானென்கிறாயே; அந்தப் பெரிய திருவடி தானும் உனக்கு அடங்கினவனல்லனோ? “ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கென்றன்றே ஆவணை யோலை எழுதுவது; ஆகிலும் பணிசெய்வது க்ருஹிணிக்கிறே“ என்ற நியாத்தாலே கணவனுக்கு அடிமைப் பட்டாரெல்லாரும் மனைவியர்க்கும் அடிமைப் பட்டிருத்தல் முறைமை யன்றோ; பகவானுக்கு அடிமைப் பட்டபோதே உனக்கும் அடிமைப் பட்டவனாயன்றோ அக்கருடனிருப்பது; அப்படி விதேயனான அவனை நீ போகேலென்று நியமிக்கக் கூடாதோ?‘ என்று கேட்க; ஆமாம் தோழீ!, அவன் ஒருவனுமேயாகிலன்றோ நியமிக்கலாம்; நித்ய விபூதியிலுள்ளரடங்கலும் வந்து சூழ்ந்துகொண்டார்கள்; அவர் தாமும் முன்புபோலின் றியே இப்போதுண்டான விலக்ஷணமான மேன்மையினாலே எதிர்த்துப் பேச வொண்ணா தபடியாயிருந்தார்; அதனாலே சென்று கிட்டவும் வார்த்தை சொல்லவும் அருமையாயிருந்தது!, என் செய்வேன் என்கிறாள். 24
இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம் இலங்கொலிநீர் பெரும்பெளவம் மண்டி யுண்ட, பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என் பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து புனலரங்க மூரென்று போயி நாரே. - 24
பதவுரை Show / Hide
உலகு உண்ட பெரு வாயர்,Ulagu Unda Peru Vaayar - பிரளயகாலத்தில் உலகங்களை யெல்லாம் அமுதுசெய்த பெரிய திருவாயையுடைய வரும்,
இங்கே வந்து,Inge Vandhu - இவ்விடத்தே வந்து
பொரு கயல்,Poru Kayal - ஒன்றோடொன்று போர்செய்கின்ற கயல் மீன்களைப் போன்ற
என் கண்,En Kan - எனது கண்களிலிருந்து
நீர் அரும்ப,Neer Arumba - நீர்த்துளிகள் துளிக்கும்படி
புலவி தந்து,Pulavi Thandhu - விரஹவேதனையை யுண்டாக்கி,
இலங்கு ஒலி நீர் பெரு பௌவம் மண்டி உண்ட பெரு வயிற்ற கரு முகில் ஒப்பர்,Ilangu Oli Neer Peru Povam Mandi Unda Peru Vaittra Karu Mughil Oppar - விளங்குகின்ற ஓசையை யுடைய நீர்நிறைந்த பெருங்கடலில் ஆழ்ந்து நீரைப் பருகின பெருவயிற்றை யுடைய காளமேகத்தின் நிறத்தை ஒத்தவருமான பெருமாள்
பெருந்தவத்தர் அருதவத்து முனிவர் சூழ,Perunthavaththar Aruthavaththu Munivar Soozha - பரமபக்தியுக்தரான ஸ்ரீவைஷ் ணவர்களும் மஹா தபஸ்லிகளான ரிஷிகளும் சூழ்ந்து நிற்க
ஒரு கையில்,Oru Kaiyil - ஒரு திருக்கையிலே
சங்கு,Sangu - திருச்சங்கையும்
மற்றொரு கை,Matroru Kai - மற்றொரு திருக்கையிலே
ஆழி,Aazhi - திருவாழியையும்
ஏந்தி,Enthi - தரித்துக் கொண்டு
புனல் அரங்கம் ஊர் என்று,Punal Arangam Oor Endru - நீர்வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் என்று சொல்லிவிட்டு
போயினார்,Poyinaar - அகன்றுபோனார்;
இரு கையில்,Iru Kaiyil - (அதுவே காரணமாக) (எனது) இரண்டு கைகளிலும்
சங்கு இவை நில்லா,Sangu Ivai Nillaa - இந்தச் சங்குவளைகள் கழன்றொழிந்தன
எல்லே பாவம்,Elle Paavam - என்ன மஹாபாபமோ!.
2076திரு நெடும் தாண்டகம் || தலைமகன் தன் பக்கலிலுள்ளவை அனைத்தையுங் காட்டி என் பக்கலிலுள்ளவை யெல்லாவற்றையுங் கொள்ளை கொண்டு போயினானென்கிறாள்– 25
மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும், தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கு மகரம்சேர் குழையும் காட்டி என்னலனும் என்னிறையும் என்சிந்தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு, பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலினூடே புனலரங்க மூரென்று போயினாரே. - 25
பதவுரை Show / Hide
மின் இலங்கு திரு உருவும்,Min Ilangu Thiru Uruvum - மின்னல்போலப் பளபளவென்று விளங்குகின்ற திருமேனியும்
பெரிய தோளும்,Periya Tholum - பெரிய திருத்தோள்களும்
கரி முனிந்த கைத் தலமும்,Kari Munintha Kaith Thalamum - குவலயாபீடமென்கிற யானையைச் சீறிப்புடைத்த திருக்கைகளும்
கண்ணும்,Kannum - திருக்கண்களும்
வாயும்,Vaayum - திரு அதரமும்
தன் அலர்ந்த நறு துழாய் மலரின் கீழே,Than Alarntha Naru Thuzhaai Malarin Keezhe - தன்னிலத் திற்காட்டில் செவ்வி பெற்றதாய்ப் பரிமளம் மிக்கதான திருத்துழாய்மாலையின் கீழே
தாழ்ந்து இலங்கு,Thaazhnthu Ilangu - தாழ்ந்து விளங்குகின்ற
மகரம் சேர் குழையும்,Magaram Ser Kuzhaiyum - மகர குண்டலங்களுமாகிற இவற்றை
காட்டி,Kaatti - ஸேவை ஸாதிப்பித்து
என் நலனும்,En Nalanum - என்னுடைய அழகையும்
என் நிறைவும்,En Niraivum - என் அடக்கத்தையும்
என் சிந்தையும்,En Sindhaiyum - என் நெஞ்சையும்
என் வளையும்,En Valaiyum - என் கைவளைகளையும்
கொண்டு,Kondu - அபஹரித்துக் கொண்டதுமன்றி
என்னை ஆளும் கொண்டு,Ennai Aalum Kondu - என்னை அடிமையாக்கிக் கொண்டு,
பொன் அலர்ந்த,Pon Alarntha - பொன் போல் மலர்ந்த
நறு,Naru - பரிமளம் மிக்க
செருந்தி பொழி லின் ஊடே,Serunthi Pozhilin Oodae - ஸுரபுன்னைச் சோலையினிடத் தேயிருந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினார்,Punal Arangam Oor Endru Poyinaar - நீர்வளம் மிக்க திருவரங்கம் தம் மூரென்று சொல்லிப் போய்விட்டார்!.
2079திரு நெடும் தாண்டகம் || இப்பாட்டில் எல்லை கடந்த ப்ரணய ரோஷத்தை வெளியிடும் முகத்தால் தன்னுடைய ஆற்றாமையின் கனத்தை வெளியிட்டவாறு. இனிப் பெற்றல்லது தரிக்க வொண்ணாத படியான ‘முடிந்தவவா‘ என்கிற பரமபக்தி முதிர்ந்தமை சொன்னபடி. 28
தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால், மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன் பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி, என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே. - 28
பதவுரை Show / Hide
தோழீ,Thozhee - வாராய் தோழியே!,
தென் இலங்கை,Then Ilangai - தென்னிலங்கையிலுள்ள
அரண்,Aran - கோட்டைகள்
சிதறி,Sithari - அழிந்து
அவுணன் மாள,Avunan Maala - இராவணனும் முடியும்படியாக
சென்று,Senru - (ஆங்கு) எழுந்தருளி (வெற்றி பெற்றவரும்)
உலகம் மூன்றி னையும் திரிந்து,Ulagam Moonrinaiyum Thirindhu - (த்ரி விக்கிரமாவதார காலத்தில்) மூவுலகங்களையும் வியாபித்தவரும்
மன் இலங்கு,Man Ilangu - அரசர்கள் விளங்காநின்ற
பாரதத்தை மாள,Bharathaththai Maala - பாரதயுத்தம் முடியும்படியாக
ஓர் தேரால் ஊர்ந்த,Or Thaeraal Oorntha - ஒரு தேரைக் கொண்டு நடத்தின
வரை உருவின் மா களிற்றை,Varai Uruvin Maa Kalittrai - மலைபோன்ற உருவங்கொண்ட பெரிய யானை போன்ற பெருமானை,
என் தன்,En Than - என்னுடைய
பொன் இலங்கு முலை குவட்டில்,Pon Ilangu Mulai Kuvattil - பசலைநிறம் படர்ந்த முலைகளாகிற கம்பத்திலே
பூட்டிக்கொண்டு,Pootik Kondu - அணைத்துக்கொண்டு
போகாமை வல் லேன் ஆய்,Pogaamai Vallenaay - அப்பால் போகவொண்ணாதபடி தடுத்து வளைக்க வல்லவளாகி
புலலி எய்தி,Pulali Eythi - அவரைப் பிரிந்துபட்ட கருத்தமெல்லாம் அவரெதிரே பட்டு
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த,Ennil Angam Ellaam Vandhu Inbam Eytha - என்னுடைய எல்லா அவயவங்களும் என்னிடத்தே வந்து சேர்ந்து ஆனந்த மடையும் படியாக
எப்பொழுதும்,Eppozhudhum - எல்லாக்காலத்திலும்
நான்,Naan - நான்
நினைந்து,Ninaindhu - அவரையே சிந்தித்து
உருகி இருப்பேன்,Urugi Iruppean - முடிந்து பிழைப்பேன்.
2080திரு நெடும் தாண்டகம் || கீழ்ப்பாட்டில் ப்ரணயரோஷந் தலையெடுத்து ஒரு நிலை நின்றார்; அதாவது ‘எம்பெருமான் வந்தவாறே அவனுக்கு ஏதொவொரு சிஷை செய்து தாம் முடிந்து பிழைப்பதாகப் பேசினார். அவன் வந்தாலன்றோ அது செய்யலாவது; வரக் காணாமையாலே கதறிக் கூப்பிடுகிறார். விபவாவதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் பேசிக் கதறுகிறார். நம்மாழ்வார்க்கு * முனியேநான் முகனே யென்கிற திருவாய்மொழி போலே யிருக்கிறதாயிற்று இவர்க்கு இப்பாசுரம். 29
அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை, குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து வென்றானை, குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே. - 29
பதவுரை Show / Hide
அன்று,Andru - முன் பொருகாலத்தில்
ஆயர் குலம் மகளுக்கு,Aayar Kulam Magalukku - இடைக்குலத்துச் சிறந்த மகளாக அவதரித்த நப்பினைப் பிராட்டிக்கு
அரையன் தன்னை,Arayan Thannai - நாயகரானவரும்
அலை கடலை கடைந்து,Alai Kadalai Kadaindhu - அலையெறிகின்ற கடலைக் கடைந்தவரும்
அடைத்த அம்மான் தன்னை,Adaitha Ammaan Thannai - (அதில்) அணை கட்டின ஸ்வாமி யானவரும்
குன்றாத வலி,Kunraadha Vali - குறைதலில்லாத மிடுக்கை யுடைய
அரக்கர் கோனை மாள,Arakkar Konai Maala - இராவணன் முடியும்படியாக
கொடும் சிலைவாய்,Kodom Silaivaai - கொடிய வில்லிலே
சரம் துரந்து,Saram Thurandhu - அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து
குலம் களைந்து வென்றானை,Kulam Kalaindhu Vendraanai - அரக்கர் குலங்களை நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரும்
குன்று எடுத்த,Kunru Eduttha - கோவர்த்தனமலையைக் குடையாக எடுத்த
தோளினானை,Tholinaanai - புஜத்தையுடையவரும்
விரி திரை நீர் விண்ணகரம் மருவி,Viri Thirai Neer Vinnagaram Maruvi - பரந்த அலைகளையுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே பொருந்தி
நாளும் நின்றானை,Naalum Ninranaai - எப்போதும் ஸந்நிதிபண்ணி யிருப்பவரும்
தண்குடந்தை,Than Kudanthai - குளிர்ந்த திருக்குடந்தை யிலே
கிடந்த மாலை,Kidandha Maalai - பள்ளிக் கொண்டிருக்கும் ஆச்ரிதவத்ஸலரும்
நெடியானை,Nediyaanaai - ஸர்வோத்தமருமான பெருமானை
நாய் அடியேன்,Naai Adiyen - நாய்போல் நீசனான அடியேன்
நினைந்திட்டேன்,Ninaindhittaen - நினைத்தேன்.
2083முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் சொன்னோம் ஆனோம் – ஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய் இருந்ததோ – அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார் 2
என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது, ஒன்று மதனை யுணரேன் நான், – அன்று தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.
பதவுரை Show / Hide
கடல் கடைந்தது,Kadal Kadaindhathu - (தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது
2083முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) என் சொன்னோம் ஆனோம் – ஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய் இருந்ததோ – அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார் 2
என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது ஒன்றும் அதனை யுணரேன் நான் -அன்று அது அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்
பதவுரை Show / Hide
என்று,Enru - எந்த நாள்?
நீர் ஏற்றது,Neer Aetrathu - (மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப்பெற்றது
எ உலகம்,E Ulagam - எந்த உலகம்?
அதனை,Adhanai - அவற்றை
நான் ஒன்றும் உணரேன்,Naan Ondrum Unaraen - நான் அடியோடு அரிகின்றிலேன்;
அது,Adhu - அந்தக் கடலானது
அன்று,Andru - ஸ்ரீராமாவதார காலத்தில்
அடைத்து,Adaiththu - மலைகளைக்கொண்டு திருவணைகட்டித் தூர்த்து
உடைத்து,Udaiththu - (இராவணனை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவணையை) உடைத்து.
கண்படுத்த,Kanpadutha - எப்போதும் பள்ளிகொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப்பெற்ற
ஆழி,Aazhi - ஸமுத்ரமாம்;
இது,Idhu - (நீரேற்றுப்பெற்ற) இவ்வுலகமானது
நீ,Nee - ஸர்வேச்வரனான உன்னாலே
படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டிக்கப்பட்டும்
இடந்து,Idandhu - (வராஹாவதார காலத்தில் அண்டபித்தியில் நின்று) ஒட்டு விடுவித்தெடுக்கப்பட்டும்
உண்டு,Undu - (பிரளய வெள்ளம் கோத்தபோது) திருவயிற்றிலே வைத்துப் பாதுகாக்கப்பட்டும்
உமிழ்ந்த,Umizhndha - பின்பு வெளிப்படுத்தப்பட்டதுமான
பார்,Paar - பூமியாகும்.
2116முதல் திருவந்தாதி || யசோதைப் பிராட்டி உடைய பக்தியை அனுசந்திக்க அல்லாதார் உடைய பக்தி ப்ராதி கூல்யம் என்னும் படி இருந்தது – அப்படி இருந்ததே ஆகிலும் இனி இது தனக்கு அவனையே கால் கட்டி பொறுப்பித்துக் கொள்ளுகை ஒழிய இல்லை என்று பார்த்து அவனை ஷமை கொள்ளுகிறார் 35
ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால், கூறிய குற்றமாக் கொள்ளல்நீ – தேறி, நெடியோய் அடியடைதற் கன்றே,ஈ ரைந்து முடியான் படைத்த முரண்?
பதவுரை Show / Hide
ஆறிய அன்பு இல், ஆறிய அன்பு இல் - நிரம்பின பக்தியில்லாதவர்களாய்
அடியார், அடியார் - சேஷத்வஜ்ஞாநமாத்திரத்தை யுடையராயிருப்பவர்கள்
தம் ஆர்வத்தால், தம் ஆர்வத்தால் - தங்களுடைய ஸ்நேஹத்தாலே
கூறிய, கூறிய - சொல்லும் வார்த்தைகளை
குற்றம் ஆ, குற்றம் ஆ - குற்றமாக
நீ கொள்ளல், நீ கொள்ளல் - நீ கொள்ளாதே;
ஈர் ஐந்து முடியான், ஈர் ஐந்து முடியான் - (அது ஏனெனில்) பத்துத்தலைகளையுடையனானராவணன்.
படைத்த, படைத்த - புத்திபூர்வகமாகப் பண்ணின
முரண், முரண் - தப்புக்காரியமானது
நெடியோய், நெடியோய் - பெருமை பொருந்திய உன்னுடைய
அடி, Adi - திருவடிகளை
தேறி அடைதற்கு அன்றே, தேறி அடைதற்கு அன்றே - தெளிந்துவந்து (காலக்ரமத்திலே சிசுபாலனாகிக் ) கிட்டுகைக்குக் காரணமாகி விட்டதன்றோ?
2126முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) இப்படி இருக்கிறவனுடைய நீர்மை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நிலம் அன்று கிடீர் என்கிறார் – 45
ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க, நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, – பூமேய மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை, பாதமத்தா லேண்ணினான் பண்பு.
பதவுரை Show / Hide
நல் நெஞ்சே, Nal Nenjee - நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள்பணிந்த, Poo Maeya Maadhavath Thon Thaalpanindha - திருநாபிக் கமலத்திற்பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆச்ரயித்த
வாள் அரக்கன், Vaal Arakkan - கொடிய இராவணனுடைய
நீள் முடியை, Neel Mudiyai - நீண்ட பத்துத்தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு, Paadham Aththal Enninraan Panbu - அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக்காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே, Amararukku Ariya Aame - பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க, Adhu Nirka - அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம், Naam E Ariyikirpom - (எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபாகடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.
2140முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய் விரோதியைப் போக்குகைக்கு வேணுமாகில் தசரதாத் மஜனை சரணம் புகு என்கிறார் – 59
அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம், மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், – நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள் தன்விலங்கை வைத்தான் சரண்.
பதவுரை Show / Hide
அடைந்த, Adaindha - அடியே பிடித்துப் பற்றிக்கிடக்கிற
அரு, Aru - போக்குவதற்கு அருமையான
வினையோடு, Vinaiyodu - பழவினைகளும்
அல்லல், Allal - (அந்தப் பழவினையின் பயனாக வருகின்ற) மனத்துன்பங்களும்
நோய், Noy - சரீரவியாதிகளும்
பாவம், Paavam - இப்போது செய்கிற பாவங்களும்.
மிடந்தவை, Midanthavai - [இப்படிப் பலவகையாக] ஆத்மாவைத் தெரியாத படி] மூடிக் கிடக்கின்றவை
மீண்டு ஒழிய வேண்டில், Meendu Ozhiy Vendid - வாஸனையோடு விட்டு நீங்க வேணுமானால்
முன், Mun - முன்பொருகால்,
நுடங்கு இடையை, Nudangu Idaiya - மெல்லிய இடையையுடையளான பிராட்டியை
இலங்கை வைத்தான், Ilankai Vaiththan - லங்காபுரியில் சிறை வைத்தவனான இராவணனுடைய
முரண் அழிய, Muran Azhiya - மிடுக்கு அழியும்படி
முன் ஒரு நாள், Mun Oru Naal - ஸ்ரீராமனாய்ப்பிறந்தவொருகாலத்து
தன் வில், Than Vil - தன்னுடைய வில்லை
அம்கை, Amkai - அழகிய திருக்கையிலே
வைத்தான், Vaiththan - எடுத்துப் பிடித்தவனான பெருமானே
சரண், Saran - உபாயமாவான்.
2163முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) கடல் கடைந்தவன் பேர் சொல்லும் போது அவனைக் கண்டு சொல்ல வேணுமே அவனை ஆஸ்ரயிக்கும் போது தேவர்கள் ஆஸ்ரயிக்க வேணுமே என்றவர்க்குக் குறை தீரும்படி சர்வ சமாஸ்ரணீயனாய்க் கொண்டு திருமலையிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் – 82
படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந் தொடையலோ டேந்திய தூபம், – இடையிடையின் மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள் மான்மாய எய்தான் வரை.
பதவுரை Show / Hide
மேல் ஒருநாள், Mel Orunaal - முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான், Maan - மாரீசனாகிற மாயமான்
மாய, Maaya - இறந்துவிழும்படி
எய்தான், Eydhaan - அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை, Varai - மலையாவது,
படை ஆரும் வாள் கண்ணார், Padai Aarum Vaal Kannaal - வேலாயுதம் போன்று ஒலி பொருந்திய கண்களையுடைய பெண்கள்
பாரசி நாள், Paarasi Naal - த்வாதசியன்று
பை பூ தொடையலோடு, Pai Poo Thodaiyalodu - பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடுகூட
ஏந்திய, Aendhiya - திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள
தூபம், Thoopam - தூபமானது
இடை இடையில் மீன், Idai Idaiyil Meen - (ஆகாசத்தில்) நடுவே நடுவெ தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள்
மாய, Maaya - மறையும்படி
மாசூணும், Maasoonum - மாசு ஏறும்படி பண்ணாநிற்கிற
வேங்கடமே, Vengadame - திருமலையேயாகும்.
2196இரண்டாம் திருவந்தாதி || ஸ்ரீ வாமன அவதார பிரசங்கத்தாலே -இப்படி இருக்கிற ஆஸ்ரிதருடைய ரஷண அர்த்தமாக கிடீர் -அவன் தன்னை இப்படி அழிய மாறிற்று -என்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலும் ஸ்ரீ ராம அவதாரத்திலும் பட்ட மிறுக்குகளை நினைத்து அதி ஸூகுமாரனான அவனுக்கு இங்கனே பட வேண்டுவதே -என்கிறார் – இவர்கள் தங்கள் உடம்பைப் பேணா- இவர்களுக்காக அவன் தன்னைப் பேணாதே துக்கப் படுவதே -என்று வெறுக்கிறார்- திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதம் ஆகையால்–அல்லாத அவதாரங்களிலும் ஆஸ்ரித அர்த்தமாக மிகைப் பட்ட-இறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் இவர்கள் இப்படி தாங்கள் உடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய -இவர்களுக்காக ஸ்ரீ கிருஷ்ணனாவது -ஸ்ரீ ராமன் ஆவதாகக் கொண்டு அதி ஸூகுமாரமான திரு மேனியோடு அவன் பட்ட மிறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் – 15
திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று பிரிந்தது சீதையைமான் பின்போய், – புரிந்ததுவும் கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின் தண்பள்ளி கொள்வான் றனக்கு.
பதவுரை Show / Hide
வெம் சமத்து, Vem Samathu - கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர்கடவி, Therkadavi - (பார்த்தஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும், Thirindhathum - அலைந்ததும்,
அன்று, Andru - இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய், Maanpin Poi - மா·சனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும், Seethaiyai Pirindhadum - பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண், Kan - தரையிலே
பள்ளி கொள்ள, Palli Kollai - படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும், Purindhathuvum - ஆசைகொண்டதும்
நாகத்தின் தண்பள்ளிகொள்வான் தனக்கு, Naagaththin Thandpallikolvaan Thanakku - திருவனந்தாழ்வான் மேலே குளிரப்பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே, Azhagiyadhe - ஏற்றவையோ?
2206இரண்டாம் திருவந்தாதி || அவன் சர்வ சாதாரணனாய்க் கொண்டு நின்றபடியை சொல்லிற்று கீழ் – இங்கு ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு யுண்டான பஷபாதம் இருக்கும்படி சொல்லுகிறது – உத்பத்தி யாதிகளேயோ -உதபன்னங்கள் ஆனால் பிரதிபந்தங்களைப் போக்குவானும் அவன் என்கிறது – இப்படி சர்வ சாதாரணனாய் நின்று ரஷிக்கும் அளவன்றிக்கே ஆஸ்ரித விஷயத்தில் – அசாதாரணனாய் நின்று பக்ஷபதித்து ரஷிக்கும் படியை அருளிச் செய்கிறார் – 25
சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால், கொன்ற திராவணனைக் கூறுங்கால், – நின்றதுவும் வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம் வாயோங்கு தொல்புகழான் வந்து.
பதவுரை Show / Hide
விண்ணவர் தம்வாய், Vinnavar Thamvaai - தேவர்களின் வாயினால்
ஓங்குதொல் புகழான், Onguthol Pugazhaan - உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழையுடைய எம்பெருமான்
செவ்வே, Chevve - நேராக
சென்றது, Sendradhu - சீறிச்சென்றது
இலங்கை மேல், Ilankai Mael - லங்காபுரியின் மேலாகும்;
தன் சீற்றத்தால், Than Seetrathaal - தனக்கு வந்தேறியான கோபத்தால்
கொன்றது, Kondradhu - ஸம்ஹரித்தது
இராவணனை, Iravanai - ராவணனையாம்;
கூறுங்கால், Kooraingkal - சொல்லுமிடத்து
வந்து நின்றதுவும், Vandhu Nindrathuvum - (சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்கவேணுமென்று கருதி) வந்து
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே, Vey Ongu Than Saaral Vengadame - மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலையுடைய திருவேங்கடமலையேயாம்.
2210இரண்டாம் திருவந்தாதி || மாவாய் பிளந்த என்று ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆனவாறே – அது தன்னிலும் திரியட்டும் கால் தாழ்ந்து சுழி யாறு படுகிறார் – ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலே-அதிலே சுழி யாறு படுகிறார்- மாவாய் பிளந்த மகன் -என்று பிரஸ்துதமான ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் கால் தாழ்ந்து சுழி யாறு பாடுகிறார் – 29
மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை, அகனார வுண்பனென் றுண்டு, – மகனைத்தாய் தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை நீறாக எய்தழித்தாய் நீ.
பதவுரை Show / Hide
தென் இலங்கை, Then Ilangai - அழகிய லங்காபுரி
நீறு ஆக, Neeru Aaga - நீறாகியொழியும்படி
எய்து, Eydhu - அம்புகளைச் செலுத்தி
அழித்தாய், Azhiththaa - முடித்தவனே!
மகன் ஆக கொண்டு எடுத்தாள், Mahan Aaga Kondu Eduththaal - உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவுகாட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய
மாண்பு ஆய கொங்கை, Maanbu Aaya Kongai - அழகான முலையை
அகன் ஆர உண்பன் என்று உண்டு, Akan Aara Unpan Endru Undu - வயிறார உண்ணக்கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து
மகனை, Mahanai - புத்ரனான உன் விஷயத்திலே
தாய், Thaai - உனது தாயாகிய யசோதை
தேறாத வண்ணம், Theeradha Vannam - நம்பிக்கையற்றிருக்கும்படி
திருத்தினாய், Thiruththinai - செய்துவிட்டாய்.
2233இரண்டாம் திருவந்தாதி || திரு உள்ளத்துக்கும் கூட உபதேசிக்க வல்ல தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய அழகையும் ஸ்ரீ பிராட்டி சம்பந்தத்தால் வந்த மிக்க கிருபையையும் சொல்ல இது ஒருவர்க்கும் நிலமல்ல கிடீர் -என்கிறார்- ஸ்ரமஹரமான வடிவை உடையனாய் நீல மேகத்திலே மின்னற் போலே ஸ்ரீ பிராட்டியை திரு மார்பிலே உடையானாய் அவளோட்டை கலவியாலே ஆந்ரு சம்சய பிரதானனான் ஆனபடியை யார் அறிவார் திரு உள்ளத்துக்கு உபதேசிக்க வல்லரான தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய வடிவு அழகையும் ஸ்ரீ பிராட்டி சம்பத்தால் வந்த மிக்க கிருபையையும் அனுசந்தித்து – இது ஒருவர்க்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் 52
நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன், அறம்பெரிய னார தறிவார்? – மறம்புரிந்த வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து , நீளிருக்கைக் குய்த்தான் நெறி.
பதவுரை Show / Hide
நிறம் கரியன், Niram Kariyaan - (காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன், Seyya Nedu Malaraal Maarvan - சிவந்த நிறத்தையுடையளாய்ப் பெரிய தாமரைப்பூவை யிருப்பிடமாக வுடையளான பெரிய பிராட்டியாரைத் திருமார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன், Aram Periyan - அருளில் பெருத்தவன்
மறம் புரிந்தவாள், Maram Purindhavaal - பகைபாராட்டின
அரக்கன் போல்வானை, Arakkan Polvaanai - வாட்கையனான இராவணன் போன்ற மஹாபலியை (இராவனைப் போலவே தலையறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து, Vaanavar Kon Thaanththu - தேவேந்திரனுடைய லோகமானஸ்வர்க்கம்போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள இருக்கைக்கு, Neela Irukkaikku - நீண்டகாலம் வாழும்படியாக
உய்த்தான், Uyithaan - செலுத்தின அப்பெருமானுடைய
நெறி அது, Neri Adhu - அவ்வருள் வகையை
ஆர் அறிவார், Ar Arivaar - யார் தெரிந்து கொள்ளவல்லர்?
2253இரண்டாம் திருவந்தாதி || அளவுடையரான நித்ய ஸூரிகளும் கூட இப்படிப் படுகிற விஷயமான பின்பு எனக்குச் சென்று ஆஸ்ரயிக்கைக்கு யோக்யதை உண்டோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க- அது வேண்டா காண்-திர்யக்குகளும் கூட ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபன் காண் – ஆன பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் – ஸ்ரீ திருமலையில் திர்யக்குகள் ஆஸ்ரயிக்கும் படி சொல்லுகிறது- அளவுடையரான நித்ய ஸூரிகளும் இப்படி படுகிற விஷயத்தை -நமக்குச் சென்று ஆஸ்ரயிக்கப் போமோ -என்று பிற்காலிக்கிற திரு உள்ளத்தைக் குறித்து -திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபனான பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் – 72
போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல, அணிவேங் கடவன்பே ராய்ந்து.
பதவுரை Show / Hide
வானரங்கள், Vaanarangkal - குரங்குகளானவை
போது அறிந்து, Podhu Arindhu - விடியற்கால முணர்ந்து (எழுந்துபோய்)
பூ சுனை புக்கு, Poo Sunai Pukku - புஷ்பித்த நீர்நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும், Aethum - தோத்திரஞ் செய்யாநின்றன
உள்ளம், Ullam - மனமே!
போது, Podhu - (நீயும் அப்படிசெய்ய) வா
அணி வெங்கடவன், Ani Vengadavan - அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர், Per - திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த, Aangu Alarntha - அப்போதே மலர்ந்த
போது, Podhu - புஷ்பங்களை
அரிந்து கொண்டு, Arindhu Kondo - பறித்துக்கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து, Aayndhu - அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல, Vengadan Malar Adikke Sella - அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும், Pothum - புஷ்பங்களையும்
அணி, Ani - ஸமர்ப்பிக்கக்கடவர்
2260இரண்டாம் திருவந்தாதி || ஜகத்தை அளந்து கொண்ட செயலுடைய ஸ்ரீ வாமனனுடைய வ்ருத்தாந்தமானது – தாயார் அபேஷிக்க மறுத்துக் காடேறப் போன ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனுடைய இத் தன்மைக்கு ஒக்கும் -என்கிறார்- திரு உலகு அளந்து அருளின நீர்மை–ஸ்ரீ ராமாவதாரத்தில் குணங்களுக்கு நேர் என்கிறது – ஜகத்தை அளந்து கொண்ட செயலை உடையனான -ஸ்ரீ வாமனனுடைய-வ்ருத்தாந்தமானது -தாயார் அபேக்ஷிக்க மறுத்துக் காடு ஏறப் போன ஸ்ரீ சக்கரவர்த்தித் திரு மகனுடைய இத்தன்மைக்கு ஒக்கும் என்கிறார் 79
பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள் முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் – சொல் நின்ற தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த நீணிலந்தான் அத்தனைக்கும் நேர்.
பதவுரை Show / Hide
தாய், Thaai - மாதாவான கௌஸல்யை
பின் நின்று, Pin Nindru - பின் தொடர்ந்து
இரப்ப, Irappa - (என்னைவிட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான், Kelan - அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணைதோள், Peru Panaitol - சிறந்த முங்கில் போன் திருத்தோள்களையுடையளாய்
சொல் நின்ற, Sol Nindra - தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான், Thol Nalathaan - புஜபலத்தையுடையனும்
நேர் இல்லாதோன்றல், Ner Illaadondral - ஒப்பற்ற ஸ்வாமியுமான இராமபிரானுடைய
மொய் மலராள்தான், Moy Malaraalthaan - அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று, Mun Nindru - முன்னை நின்று
இரப்பாள், Irappaal - (இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும், Aththanaiykkum - (காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர், Avan Alandha Neel Neelam Thaan Ner - அப்பெருமான் மிகப்பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.
2332மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர் நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான் என்கிறார் – ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி ஸ்ரீ பரம பதத்திலே செல்ல நடத்துவான் அவனே என்கிறார் – சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷ பாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது முதலாக விச் செயல்கள் – இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர் நமக்கு எல்லாம் உபய பூதன் ஆவான் -என்கிறார் 51
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான், அவனே யணிமருதம் சாய்த்தான், – அவனே கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர், இலங்கா புரமெரித்தான் எய்து.
பதவுரை Show / Hide
அரு வரையால், Aru Varaiyaal - ஒருவரால் அசைக்கவும் முடியாததான கோவர்த்தன மலையினால்
ஆநிரைகள், Aaniraigal - பசுக்கூட்டங்கள்
காத்தான், Kaaththaan - ரக்ஷித்தருளினவன்
அவனே கண்டீர், Avane Kandheer - அப்பெருமானை யாவன்,
அணி மருதம், Ani Marudham - அழகாக நின்றுகொண்டிருந்த இரட்டை மருதமரங்களை
சாய்த்தான், Saayththaan - முறித்துத்தள்ளினவனும்
அவனே கண்டீர், Avane Kandheer - அப்பெருமானே யாவன்,
எய்து, Eydhu - அம்புகளைப் பிரயோகித்து
இலங்காபுரம், Ilangapuram - லங்காபட்டணத்தை
எரித்தான், Eriththaan - எரியவிட்டவனான
அவனே, Avane - அப்பெருமானே
கலங்கா பெருநகரம், Kalangaa Perunagaram - ஒருவகைக் கலக்கமுமில்லாத பரமபதத்தை
காட்டுவான், Kaattuvaan - காட்டித்தருவான்.
2333மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழே ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப் பேசுகிறார் – கீழே ஸ்ரீ கலங்கா பெரு நகரம் காட்டுவான் -என்றாரே ருசி உடையாருக்கு ஸ்ரீ பரமபதம் கொடுக்கும் அத்தனையோ என்னில் –ருசி பிறப்பிப்பானும் அவனே – என்கிறது – கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் – 52
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய், எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், – எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய் முன்னிலம்கைக் கொண்டான் முயன்று.
பதவுரை Show / Hide
இராமன் ஆய், Iraaman Aay - ஸ்ரீராமனாகத் திருவவதரித்து
மராமரம் ஏழும், Maraamaram Ezhum - ஸப்தஸால உருஷங்களையும்
எய்தான், Eyththaan - அம்பு செலுத்தித் துளைத்தான்,
ஏந்து இழைக்கு ஆய், Ainthu Izaikku Aay - தரிக்கப்பட்ட ஆபரணங்களையுடைய பிராட்டிக்காக
அ மான் மறிய, A Maan Mariya - அப்படிப்பட்ட மாரீசமாயா மிருகக்குட்டியை
எய்தான், Eyththaan - பின்சென்றான்,
எய்த்துவும், Eyththuvum - அம்புகளைச் செலுத்தினதும்
தென் இலங்கை கோன் வீழ, Then Ilangai Kon Veezha - தென்னிலங்கைக்கு அரசனான இராவணன் முடியும்படியாகவாம்,
முன், Mun - முன்பொரு காலத்திலே
குறள் உரு ஆய், Kurall Uru Aay - வாமன ரூபியாய்
சென்று, Sendru - மாவலியிடத்திற் சென்று
முயன்று, Muyandru - (வடிவழகு காட்டுதல், மழலைச் சொற்களைச் சொல்லுதல் முதலிய) முயற்சிகளைச் செய்து
நிலம் கைக் கொண்டான், Nilam Kaik Kondaaan - பூமியைக் கைப்பற்றினான்.
2339மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே காண வேணுமே -என்ன காணலாம் படி ஸ்ரீதிரு மலையிலே நின்றான் என்கிறார் – அஸ்மின் மயா சார்த்தம் -என்று பிராட்டி செய்த செயலை ஸ்ரீ திருமலையில் திர்யக்குகளும் அனுவர்த்தியா நின்றது என்கிறார் – இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் – 58
தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி, அளிந்த கடுவனையே நோக்கி, – விளங்கிய வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள் மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு.
பதவுரை Show / Hide
தெளிந்த, Thelindha - ஸ்வச்சமாயிருக்கிற
சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி, Silaadhalaththin Mel Irundha Manthi - கற்பாறையின் மீது இருக்கும் பெண் குரங்கானது.
அளித்த கடுவனை நோக்கி, Alitha Kaduvana Nokki - ஸ்நேஹமுள்ள ஆண் குரங்கை நோக்கி
விளங்கிய வெண் மதியம் தான் என்றும் வேங்கடம், Vilangiya Ven Mathiyam Thaan Endrum Vengadam - ‘விளங்குகின்ற வெளுத்த சந்திரன் (ப்பிடித்துக்) கொடு‘ என்ற சொல்லும்படிரு யிருக்கிற திருவேங்கடம்
மேல் ஒருநாள், Mel Orunaal - பண்டொரு காலத்தில்
மண், Man - பூமியை
மதியின், Mathiyin - தனது புத்தி சாதுரியத்தினால்
கொண்டு, Kondhu - (மாவலியிடத்தில் பெற்றுக்கொண்டு)
உகந்தான், Uganthaan - திருவுள்ள முவந்த ஸர்வேச்வான்
வாழ்வு, Vaazhvu - வாழுமிடம்
2349மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது ஸ்ரீ திருப்பாற் கடல் ஏறப் போக வேண்டா ஸ்ரீ திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர் என்கிறார் – இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக ஸ்ரீ திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா – ஸ்ரீ திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார் 68
பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து, – கார்த்த களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள் விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.
பதவுரை Show / Hide
சுனை நீர், Sunai Neer - திருமலைச் சுனையின் நீரிலே
பார்த்த, Paarttha - கவிந்து பார்த்த
கடுவன், Kadhuvan - குரங்கானது
நிழல் கண்டு, Nizhal Kandu - நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக்கண்டு
பேர்த்து ஓர் கடுவன் என, Perthu Oru Kadhuvan Enna - (தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து
பேர்ந்து, Perndhu - அவ்விடம் விட்டு நீங்கி (மறுபடியும் சாபல்யத்தாலே)
கார்த்த கனங்கனிக்கு கை நீட்டும், Kaartha Kanangkanikku Kai Neettum - கரிய களாப்பழத்தைப் பறித்துத்தா வென்று கை நீட்டப்பெற்ற
வேங்கடமே, Venkatame - திருவேங்கடந்தான்
மேல் நாள், Mel Naal - முன்பொருகாலத்தில்
விள கனிக்கு, Vila Kanikku - (அஸுராவேசங்கொண்ட) விளாம்பழங்கள் உதிர்வதற்காக
கன்று எறிந்தான், Kandru Erindhaan - வத்ஸாஸுரனை (எறிகுணிலாகக் கொண்டு) வீசியெறிந்த பெருமானுடைய
வெற்பு, Verppu - திருமலை.
2358மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழே-ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய பாபங்கள் எல்லாம் போம் என்றார் – இதில்-அளவில்லாதார்க்கே யன்று – பேரளுவு உடையரானவர்களுக்கும் விழுக்காடு அறியாதே தங்களை முடியச் சூழ்த்துக் கொள்ளும் அன்று அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு நோக்குவான் அவனே -என்கிறார் – அவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் – இதில் நாமே யல்ல ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் – அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் – கீழ் ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது- இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது – பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல் தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால் ஏற்கவே அவ்வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரேசகம் என்கிறார் – 77
ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன், – ஏய்ந்த முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த அடிப்போது நங்கட் கரண்.
பதவுரை Show / Hide
ஆய்ந்த, Aayndha - ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான், Aru Maraiyaan - அருமையான வேதங்களையுடையனான
நான் முகத்தோன், Naan Mugaththon - சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில், Nan Kurangil - அழகிய மடியிலே
வாய்ந்த, Vaayndha - நேர்பட்ட
குழவி ஆய், Kuzhavi Aay - இனங்குழந்தையாயிருந்துகொண்டு
வாள் அரக்கன், Vaal Arakkan - இராவணனுடைய
போது ஏய்ந்த, Podhu Aayndha - புஷ்பமாலை பொருந்தின
முடி, Mudi - தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான், Moondru Azh Enru Enninraan - பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது, Adi Podhu - திருவடித்தாமரைகள்
நங்கட்கு, Nangadku - நமக்கு
ஆர்ந்த அரண், Aarntha Aran - குறையற்ற சரணம்.
2361மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இவ்விஷயத்தில் தமக்கு முன்னே தம் திரு உள்ளமானது பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – உபதேச நிரபேஷமாக என்னுடைய நெஞ்சானது அவனுடைய விரோதி நிரசன ஸ்வ பாவத்தை அனுசந்தித்து இந்த்ரிய ஜெயம் பண்ணி சம்சாரத்தைப் போக்கி அனுசந்திக்க முயலா நின்றது – என்கிறார் – நம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது – அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் – பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம் அவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – 80
நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள், ஒன்றியவீ ரைஞ்ஞா றுடன்துணிய – வென்றிலங்கும் ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே, நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.
பதவுரை Show / Hide
நின்று, Ninru - (கூசாமல்) முன்னே வந்து நின்று
எதிர் ஆய, Edhir Aaya - எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும்
நிரைமணி தேர், Niraimani Ther - ஒழுங்காக அழுத்தின மணிகளையுடைய தேரின்மேலேறி யுள்ளவனுமான
வாணன், Vaanan - பாணாஸுரனுடைய
ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள், Onraya Eer Ainnuru Thol - அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும்
துணிய, Thuniya - அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து
வென்று, Vendru - வெற்றி பெற்று
இலங்கும், Ilankum - விளங்குகின்ற
ஆர்படு, Aarbadhu - கூர்மையையுடைய
வான், Vaan - திவ்யமான
நேமி, Nemi - திருவாழியாழ்வானை யுடையவனாய்
அரவு அணையான், Aravu Anaiyaan - சேஷசாயியான எம்பெருமானுடைய
சே அடிக்கே, Sae Adikke - திருவடிகளிலே
நெஞ்சு தான், Nenjhu Thaan - (எனது) நெஞ்சு தானே
முயலும், Muyalum - உத்ஸாஹப் படுகின்றது.
2376மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் – நெஞ்சே-இப்படி உபகாரகனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளிலே வணங்கி-அவனை வாழ்த்து என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் – தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் – தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லா நின்று கொண்டு -நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் – 95
புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய் இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும் சிந்தப் பிளந்த திருமால் திருவடியே வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து.
பதவுரை Show / Hide
அந்தி புகுந்து, Andhi Pugundhu - ஸாயங்காலமானது வந்துசேர்ந்து
இலங்கும் பொழுதத்து, Ilankum Pozhudhatthu - விளங்கும் ஸமயத்திலே
அரி ஆய், Ari Aay - நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவ்வதரித்து,
இகழ்ந்த இரணியனது ஆகம், Ikazhndha Iraniyanathu Aagam - நிந்தித்துக்கொண்டிருந்த ஹிரண்யா ஸுரனது சரீரத்தை
சுகிர்ந்து, Sukirndhu - பலகூறாக வகிர்ந்து
எங்கும் சிந்த, Engum Sintha - (ரத்தம்) எங்கும் சிந்தும்படியாக
பிளந்த, Pilandha - பிளந்தொழித்த
திருமால், Thirumaal - எம்பெருமானுடைய
திருஅடியே, Thiruvadie - திருவடிகளையே
என்நெஞ்சமே, Ennenjamai - எனது மனமே!
வந்தித்து வாழ்த்து, Vandhithu Vazhththu - தலையார வணங்கி வாயாக வாழ்த்து
2389நான்முகன் திருவந்தாதி || நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க உபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் – உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்– வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் – 8
இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற சிலைகொண்ட செங்கண்மால் சேரா – குலைகொண்ட ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த கூரம்பன் அல்லால் குறை.
பதவுரை Show / Hide
என் நெஞ்சை,En Nenjai - எனது மனமே!
ஈசனை வென்ற,Eesanai Vendra - ருத்ரனை ஜயித்த
சிலைகொண்ட,Silaikonda - வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
செம் கண் மால்,Sem Kan Maal - புண்டரீ காக்ஷனாகிய தன்னை
சேரா,Sera - பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த
குலை கொண்ட ஈரைந் தலையான்,Kulai Konda Eirain Thalaiyaan - கொத்துப்போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய
இலங்கையை,Ilankaiyai - லங்காபுரியை
ஈடு அழித்த,Eedu Azhitha - சீர்கெடுத்த
கூர் அம்பன் அல்லால்,Koora Amban Allaal - கூர்மைதாங்கிய அம்புகளையுடையவனான இராமபிரானைத் தவிர்த்து
குறை,Kurai - விரும்பத்தகுந்த
மற்ற துணை,Mattra Thunai - வேறொரு துணைவன்
இலை,Ilai - நமக்கு இல்லை.
2409நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பிராட்டி யோட்டை சம்ச்லேஷ விரோதிகளைப் போக்குமாப் போலே ஆஸ்ரித விரோதிகளை யுகந்து போக்கும் -என்கிறார்- அவன் லீலை-வாலியைக் கொன்ற ஜயமும்-ராவண வதமும் புத்திஸ்தமான படியிலே இது என்கிறார் – ஒரு முஷ்டியிலே நின்று எய்ய-நெஞ்சு அழியும்படி யாய் இறே இருப்பது இது என்று பிரத்யஷமாதல் -ஈடுபாடு ஆதல்-வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்- 28
இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது, இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, – இதுவிலங்கை தானொடுங்க வில்நுடங்கத் தண்தா ரிராவணனை, ஊனொடுங்க எய்தான் உகப்பு.
பதவுரை Show / Hide
இலங்கை,Ilankai - லங்காபுரியானது
ஈடு அழிய,Eedu Azhiya - சீர்குலையும் படியாக
கட்டிய,Kattiya - (வானர சேனையைத் துணைகொண்டு) கட்டின
சேது,Sethu - திருவணை
இது,Idhu - இதுகாண்மின்,
விலங்கு,Vilangku - திர்யக்யோநியிற் பிறந்தவனான
வாலியை,Vaaliyai - வாலியை
வீழ்த்தது,Veelththathu - முடித்தது
எய்தான்,Eydhaan - அம்புகளைச் செலுத்தின இராமபிரானுடைய
இது,Idhu - இப்போது நடந்த செயல்காண்மின்,
இலங்கை தான்,Ilankai Thaan - லங்காபுரியானது
ஒடுங்க,Odunga - அழியும்படியாகவும்
வில் நுடங்க,Vil Nudanga - சார்ங்கலில் வளையும் படியாகவும்,
தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க,Than Thaar Iraavanai Oon Odunga - (அலங்காரமாகக்) குளிர்ந்த பூமாலையணிந்து கொண்டிருந்த இராவணனுடைய உடல் ஒழியும்படியாகவும்
உகப்பு,Ugappu - விலையான வியாபாரம்
இது,Idhu - இது காண்மின்
2410நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே- தன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார் ஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுடைய வடிவு தேஜோ ரூபமாய் பேர் அழகாய் இருக்கும் -என்கிறார் – மதிக்கில் இவனுடைய திரு மேனியை-ஒன்றால் பரிச்சேதிக்கப் போகாது என்கை – 29
உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே, மகப்புருவன் தானே மதிக்கில், – மிகப்புருவம் ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால் அன்றிக்கொண் டெய்தான் அவன்.
பதவுரை Show / Hide
மிக,Miga - மிகவும்
புருவம் ஒன்றுக் கொன்று ஓசனையான்,Puruvam Ondruk Konru Osanaiyaan - ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காதவழி நீளமிருக்கப் பெற்ற கும்பகாணன்
வீழ,Veel - ஒழியும்படியாக
அன்றிக் கொண்டு,Andrik Kondo - சீறிக்கொண்டு
ஒரு கணையால்,Oru Kanaiyaal - ஒரு பாணத்தினால்
எய்தானவன்,Eydhaanavan - அடித்து முடித்தவனான இராமபிரானை
மதிக்கில்,Mathikkil - சிந்தித்தால்
உகப்பு உருவன் தானே,Ugappu Uruvan Thaane - மநோஹரமான திருமேனியையுடையவன் அவனே
ஒளி உருவன் தானே,Oli Uruvan Thaane - தேஜோமயமான திருமேனியை யுடையவனும் அவனே,
மகப்பு உருவன் தானே,Makappu Uruvan Thaane - மிகவும் ஆச்சரியமான வடிவையுடையவனும் அவனே.
2425நான்முகன் திருவந்தாதி || ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற ஸ்ரீ திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே எல்லாரும் போங்கள் என்கிறார் – குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே -கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்- அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற ஸ்ரீ திருமலையிலே- படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் – 44
கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய், தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி, போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே, போம்குமர ருள்ளீர் புரிந்து.
பதவுரை Show / Hide
குமரர் உள்ளீர்,Kumarar Ullae - கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு,Pandhu - முன்பொருகால்
குடங்கால் மேல்,Kudankaal Mel - மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்,Kondum Vaiththa Kuzhavi Aay - எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்,Poom - அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்,Kumaran - நித்யயுவாவான எம்பெருமான்
நிற்கும்,Nirkkum - நிற்றுமிடமான
தண்டம் அரக்கண்,Thandam Arakkan - தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை,Thalai - பத்துத் தலைகளையும்
தாளால்,Thaalal - திருவடியாலே
எண்ணி,Enni - கீறி எண்ணிக் காட்டிவிட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே,Pozhil Vengadam Malaikke - சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்,Purindupoom - ஆசைகொண்டு செல்லுங்கோள்
2428நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-அவன் விரும்பி ஸ்ரீ திருமலையை அனுபவிக்கிறார் – ஸ்ரமஹரமான வடிவை உடையவனுக்கு-ரஷணத்துக்கு உறுப்பாகையாலே ஸ்ரீ திருமலையை ஊர் என்கிறது – 47
நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் , பொன்மணியும் முத்தமும் பூமரமும், – பன்மணிநீ ரோடு பொருதுருளும் கானமும் வானரமும் வேடு முடைவேங் கடம்.
பதவுரை Show / Hide
ஆளியும்,Aaliyum - யாளிகளும்
கோள் அரியும்,Kool Ariyum - வலிமை தங்கிய சிங்கங்களும்
பொன்,Pon - பொன்களும்
மணியும்,Maniyum - மாணிக்கங்களும்
முத்தமும்,Muthamum - முத்துக்களும்
பூ மரமும்,Poo Maramum - பூத்தமரங்களும்
பல மணி நீரோடு பொருது உருளும் கானமும்,Pala Mani Neerodu Poruthu Urulum Kaanamum - பலவகைப்பட்ட ரத்னங்கள் அருவிகளோடே கலந்து உருண்டு விழப்பெற்ற காடுகளும்
வானரமும்,Vaanaramum - குரங்குகளும்
வேடும்,Vedum - வேடச்சாதியுமாகிற இவற்றை
உடை,Uday - உடையதான
வேங்கடம்,Vengadam - திருமலையானது
நல் மணி வண்ணன் ஊர்,Nal Mani Vannan Oor - நல்ல நீலரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ்தானமாம்
2434நான்முகன் திருவந்தாதி || ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிகஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்- நீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் – இங்கு அபராதம் ஆகையாலே எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை- 53
கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன் அல்லா லொருதெய்வம் யானிலேன், – பொல்லாத தேவரை தேவரல் லாரை, திருவில்லாத் தேவரைத் தேறல்மின் தேவு.
பதவுரை Show / Hide
கல்லாதவர் இலங்கை,Kallaadhavar Ilangai - அறிவுகெட்ட ராக்ஷஸருடையதான இலங்காபுரியை
கட்டு அழித்த,Kattu Azhitha - அரணழித்த
காகுத்தன் அல்லால்,Kaakuththan Allaal - இராமபிரானையல்லது
ஒரு தெய்வம்,Oru Deivam - வேறொரு தெய்வத்தை
யான் இலேன்,Yaan Ileen - நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன்
பொல்லாத தேவரை,Polladha Devarai - கண்கொண்டு காணக்கூடாத தேவதைகளையும்
தேவர் அல்லாரை,Devar Allaarai - (உண்மையில்) தெய்வத் தன்மையற்றவர்களாயும்
திரு இல்லா தேவரை,Thiru Illaa Devarai - பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும்ள்ள சிலரை
தேவு,Devu - தெய்வங்களாக
தேறேல்மின்,Theerelmin - நீங்கள் நினைக்க வேண்டா.
2466நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் திரு நாம சங்கீர்த்தனம் எனக்கு நித்ய கர்ம அனுஷ்டானம் – மற்று வேறு ஒன்றில் நெஞ்சு செலுத்த ஒண்ணாதபடி -ஸ்ரீ எம்பெருமான் என் நெஞ்சுக்குள்ளே உறைகின்றான் காண்மின் -என்கிறார்- எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என்று அழைக்க இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த- 85
தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த, பொழுதெனக்கு மற்றதுவே போதும், – கழிசினத்த வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த, வில்லாளன் நெஞ்சத் துளன்.
பதவுரை Show / Hide
கழி சினத்த,Kazhi Sinath - மிகக்கோபத்தை யுடையவனும்
வல்லாளன்,Vallalan - மிக்க வலிமையுடையவனும்
வானார் கோன்,Vaanar Kon - குரங்குகட்கு அரசனுமாகிய
வாலி,Vaali - வாலியினுடைய
மதன்,Madhan - மதத்தை (கொழுப்பை
அழித்த,Azitha - தொலைத்த
வில் ஆளன்,Vil Aalan - சார்ங்கவில்லை ஆள்பவனான இராமபிரான்
நெஞ்சத்து,Nenjaththu - எனது நெஞசிடத்து
உளன்,Ulan - எழுந்தருளி யிருக்கின்றான்
எனக்கு,Enakku - (அந்த இராமபிரானுடைய திருக்குணங்களில் அகப்பட்ட) எனக்கு
தொழில்,Thozhil - நித்யகருமம்
தொல்லை மால் தன் நாமம் ஏத்த,Thollai Maal Than Naamam Aetha - புராணனான அந்த ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் புகழ்வதாம்
எனக்கு,Enakku - (உலகத்தாரில் வேறு பட்டவனான) எனக்கு
மற்றதுவே,Mattrathuve - கீழ்ச்சொன்ன ஸ்ரீராமநாம ஸங்கீர்த்தனத்தினாலேயே
பொழுது போதும்,Pozhudhu Podhum - போதுபோகும்.
2513திருவிருத்தம் || 36
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
பதவுரை Show / Hide
துழா நெடு சூழ் இருள் என்று, Thuzha Nedhu Soozh Irul Endru - (கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேடவேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு)
எழா நெடு ஊழி எழுந்த, Ezha Nedhu Oozhi Ezuntha - (முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின.
இக்காலத்தும், Ikkaalaththum - இச்சமயத்திலும்
ஈங்கு இவளோ, Eengu Ivalo - இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ
தம் தண் தார் அது பெயர் ஆ, Tham Than Thaar Adhu Peyar Aa - நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக (துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக்கொண்டு)
வழா நெடு துன்பந் தன், Vazha Nedhu Thunban Than - தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன்
என்று, Endru - என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு
இரங்கார், Irangaar - (தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை;
அம்மனோ, Ammanoo - அந்தோ!
இலங்கை, Ilankai - இலங்காபுரியிலுள்ள
குழாம், Kuzhaam - கூட்டமான
நெடுமாடம், Nedumaadam - பெரிய மாளிகைகளை
இடித்த, Iditha - (தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின
பிரனார், Piranar - தலைவருடைய
கொடுமைகளே, Kodumaikaale - கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!.
2554திருவிருத்தம் || 77
திங்களம் பிள்ளை புலம்பத்தன் செங்கோ லரசுபட்ட செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலை,தென் பாலிலங்கை வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா நங்களை மாமைகொள் வான்,வந்து தோன்றி நலிகின்றதே.
பதவுரை Show / Hide
திங்கள், Thingal - பிறைச் சந்திரனாகிய
அம்பிள்ளை, Ambillai - அழகிய தனது இளம்பிள்ளை
புலம்ப, Pulamba - (தந்தையை இழந்து) தனிப்பட
செங்கோல் தன் அரசுபட்ட, Chengol Than Arasupatta - சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய செங்கோள்மையையுடைய தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான
செம் களம், Chem Kalam - செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை
பற்றி, Patri - அடைந்து
நின்று, Ninru - (நீங்கமாட்டாமல் அங்கு) நின்று
என்கு, Enku - வருந்துகிற
புல்மாலை, Pulmalai - சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால்
தென்பால் இலங்கை, Thenpal Ilangai - தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை
வெம் களம்செய்த, Vem Kalamseitha - கொடிய போர்க்களமாகச் செய்த
நம் விண்ணோர் பிரானார், Nam Vinnor Piranar - நமது வோதி தேவனான தலைவனது
துழாய், Thuzhai - திருத்துழாயை
துணை ஆ, Thunai Aa - தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு
நங்ககளை மாமை கொள்வான், Nangagalai Mamaik Kolvvan - நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு
வந்து தோன்றி நலிகின்றது, Vandhu Thondri Nalikinrathu - எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது
2556திருவிருத்தம் || 79
வேதனை வெண்புரி நூலனை, விண்ணோர் பரவநின்ற நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை, ஞாலம்தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும் சீதனை யேதொழு வார்,விண்ணு ளாரிலும் சேரியரே.
பதவுரை Show / Hide
வேதனை, Vedhanai - வேதம் வல்லவனும்
வெள் புரி நூதனை, Vel Puri Noodhanai - சுத்தமான யஜ்னோபவித முடையவனும்
விண்ணோர் பரவ நின்ற சாதனை, Vinnor Parava Nindra Saadhanai - மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்
ஞானலம் விழுங்கும் அநாதனை, Gnaanalam Vizhungum Anaadhanai - (பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி (அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனையுடையனாநாதவனும்
ஞாலம் தத்தும் பாதனை, Gnaalam Thathum Paadhanai - உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்
பால் கடல் பாம்பு அணைமேல், Paal Kadal Paambu Anaimeel - திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல்
பள்ளி கொண்டு அருளும், Palli Konda Arulum - யோக நித்திரை கொண்டருளுகிற
சீதனையே, Seethanaiye - குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே
தொழுவார், Thozhuvaar - இடைவிடாது வணங்கியநுபவிக்கப்பெற்றவர்
விண் உளாரிலும் சீரியர், Vin Ulaarilum Seeriyar - பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர்.
2562திருவிருத்தம் || 85
மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்திரு ளோடுமுட்டி, ஆணிப்பொன் னன்ன சுடர்படு மாலை, உலகளந்த மாணிக்கமே! என்மரகதமே! மற்றொப் பாரையில்லா ஆணிப்பொன்னே,அடி யேனுடை யாவி யடைக்கலமே!
பதவுரை Show / Hide
உலகு அளந்த, Ulaku Alandha - உலகங்களை அளந்து கொண்ட (- (மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால் அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல்போன்று))
மாணிக்கமே, Manikkame - மாணிக்கம்போலச் சிறந்தவனே
என் மரகதமே, En Maragathame - மரகதப்பச்சைப்போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா, Mattru Oppaarai Illaa - தன்னையொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணிபொன்னே, Aaniponne - மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!
மாணிக்கம் கொண்டு குரங்கு, Maanikkam Kondo Kurangu - எறிவு ஒத்த
துணிபொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும், Thunipon Anna Sudar Irulodu Muttapadum - மாற்றுயர்ந்த பொன்போன்ற ஒளியையுடைய ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப்பெற்ற
மாலை, Maalai - மாலைப்பொழுதிலே
அடியேன் அடி ஆவி அடக்கலாமே, Adiyen Adi Aavi Adakkalaame - இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமா உயிர் உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது.
2569திருவிருத்தம் || 92
பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதி  வாய், நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நின்னை விண்ணோர் தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே.
பதவுரை Show / Hide
அரக்கர், Arakkar - ராக்ஷஸர்களுடைய (- (பேண்  நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்திசெய்தலாகிய நற்குணமில்லாத))
முந்நீர பெரு பதி வாய், Munnira Peru Pathi Vaai - கடலாகிய பெரு நீராணையுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர், Neel Nagar - பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய், Neel Eri Vaiththarulai - பெரிய நெருப்பை வைத்து அளித்தருளவேணும்
என்று, Endru - என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை, Ninnai - உன்னை
விண்ணோர், Vinnor - தேவர்கள்
வைகல், Vaikal - நாள்தோறும்
மாலையும் காலையும், Maalaiyum Kaalaiyum - இரண்டு சக்திகளிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர், Thaan Nilam Thoayndhu Thozhuvar - தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்; (அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும்பொருட்டேயன்றி)
நின் மூர்த்தி, Nin Moorthi - உனது வடிவத்தின்
பல் கூற்றில், Pal Kootril - பல  அம்சங்களுள்
ஒன்று, Onru - ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே, Kaanalum Aam Kol Endrae - பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)
2595பெரிய திருவந்தாதி || 11
நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை, வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ, நீரும்நீ யாய்நின்ற நீ.
பதவுரை Show / Hide
ஆழாத பாரும் நீ, Aazhaadha Paarum Nee - (நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு;
நீரும் நீ, Neerum Nee - ஜலதத்வமும்*;
தீயும் நீ, Theeyum Nee - தேஜஸ்தத்வமும் நீ;
காலும் நீ, Kaalum Nee - வாயுதத்வமும் நீ;
வானும் நீ, Vaanum Nee - ஆகாசமும் நீ;
ஆய் நின்ற நீ, Aay Nindra Nee - இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாகவுடைய நீ,
நாழால் அமர் முயன்ற, Naazhaal Amar Muyantra - அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கைவைத்த
வல் அரக்கன், Val Arakkan - கொடிய இராவணனுடைய
இன் உயிரை, In Uyirai - இனிமையான பிராணனை
வாழா வகை, Vaazha Vagai - வாழ்ந்திருக்க ஒட்டாமல்
வலிதல், Valithal - கவர்ந்து கொண்டது
நின்வலியே, Ninvaliye - உனக்கு ஒரு சூரத்தனமோ? அல்ல.
2601பெரிய திருவந்தாதி || 17
சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும் வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய, தாள்வரைவில் லேந்தினார் தாம்.
பதவுரை Show / Hide
எங்கும் சூழ்ந்து, Engum Soozhndhu - நாற்புறங்களிலும் சுற்றிக்கொண்டு
அரக்கன், Arakkan - இராவணனுடைய
வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடிய, Vaal Varaigal Pol Van Thalaigal Thaam Idhiya - ஒளி பொருந்திய, மலைகள் போல் வலிதான தலைகளானவை இற்று விழும்படி
தாள்வரைவில் ஏந்தினார் தாம், Thaalvaraivil Aendhinar Thaam - காலுரத்தை யுடைத்தாய் மலை போன்றதான வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்
சூழ்ந்து, Soozhndhu - (இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு
அடியார் வேண்டின் அக்கால், Adiyaar Veenin Akkal - ‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப்பட வேணும்’ என விரும்பினால்
தோன்றாது விட்டாலும், Thondraathu Vittaalum - ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும்
வாழ்ந்திடுவர், Vaazhnthiduvar - திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தேயிருப்பர்;
பின்னும், Pinnum - எக்காலத்திலும்
தம் வாய் திறவார், Tham Vaai Thiravaar - (பிராட்டிமாரிடத்திலும் இந்த மனக் குறையை) வாய் திறந்து சொல்லிக்கொள்ளமாட்டார்.
2647பெரிய திருவந்தாதி || 63
பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய், வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும், பருச்செவியு மீர்ந்த பரன்.
பதவுரை Show / Hide
பின் துரத்தும் காற்று இழந்த சூல்கொண்டல், Pin Thuraththum Kaatru Izhanda Soolkondal - பின்பற்றித்தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காளமேகமானது (- (எப்படி யிருக்கின்றதென்றால்))
திரு செய்ய நேமியான், Thiru Seyya Nemiyan - அழகிய சிவந்த சக்கரத்தையுடையவனும்,
தீ அரக்கி, Thee Arakki - கொடிய ராக்ஷஹியான சூர்ப்பணகையினது
மூக்கும், Mookkum - மூக்கையும்
பரு செலியும், Paru Seliyum - பருத்தகாதுகளையும்
அன்று, Anru - ஸ்ரீராமாவதாரத்தில்
ஈர்த்த, Eerththa - அறுத்தொழித்தவனுமான
பரன், Paran - ஸ்ரீராமபிரான்
பேர்ந்தும் போய், Pernthum Poi - (அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து, Van Thiraik Kan Vandhu Anaindha Vaimaiththu - பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது.
2648பெரிய திருவந்தாதி || 64
பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில், உரனா லொருமூன்று போதும்,-மரமேழன் றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர் கைதான் தொழாவே கலந்து.
பதவுரை Show / Hide
அன்று, Anru - முற்காலத்தில் (- (அப்படிப்பட்ட விவேகிகளை))
மரம் ஏழ் எய்தானை, Maram Ezhu Eydhaanai - (ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன,
புள்ளின் வாய் சீண்டானை, Pullin Vaai Seendhaanai - பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன இவர்களை நோக்கி
அவன் பரன் ஆம் ஆதல், Avan Paran Aam Aadhala - ‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;) ஸாக்ஷாத் பரமபுருஷரேயாவர்’ என்கிற விஷயத்தை
உõனால், Unnaal - தங்களுடைய மனத்தினாலே
பாவிப்பர் ஆகில், Paavippar Aagil - அநுஸந்திப்பர்களேயானால்
அமரர் கை, Amarar Kai - தேவர்களின் கைகளானவை
கலந்து, Kalandhu - ஒன்றுசேர்ந்து
ஒரு மூன்று போதும், Oru Moondru Podhum - எப்போதும்
தொழாவே, Thozhaave - ஸேவிக்க மாட்டாவோ.
2650பெரிய திருவந்தாதி || 66
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை, மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே! அறிகண்டாய் சொன்னேன் அது.
பதவுரை Show / Hide
நெஞ்சை, Nenjai - ஓ மனமே!
சூடு ஆய நேமியான், Soodu Aaya Nemiyan - (ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியையுடையவனும்
மாட்டே, Maattai - அவன் பக்கத்திலிருந்து கொண்டே
துயர் இழைத்த, Thuyar Izhaittha - துன்பப்படுத்தின
மாயவனை, Maayavanai - ஆச்சர்யனும்
ஈட்ட, Eetta - திரண்ட
வெறிகொண்ட, Verikonda - பரிமளம் மிக்க
தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த
தொல் அரக்கன் இன்உயிரை, Thol Arakkan Inuyirai - வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை.
வேதியனை, Vedhiyai - வைதிகனுமான எம்பெருமானை
அறிகண்டாய், Arikandai - அநுஸந்தித்திரு;
அது சொன்னேன், Adhu Sonnaen - ஒருவர்க்கும் சொல்லவொண்ணாத அப்படிப்பட்ட இவ்விஷயத்தை உனக்குச் சொன்னேன்.
2662பெரிய திருவந்தாதி || 78
துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத் திணைநாளு மின்புடைத்தா மேலும், – கணைநாணில் ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத வூணாக உண்.
பதவுரை Show / Hide
துணை, Thunai - ஸ்நேஹிதர்களும் (- (ஆகிய இவை யெல்லாம்) (நீ அவற்றில் ஆசை கொள்ளாமல்))
நாள், Naal - ஆயுஸ்ஸும்
பெரு கிளையும், Peru Kilaiyum - பிள்ளைகள் பேரன்கனென்கிற பெரிய ஸந்தானமும்
தொல் குணமும், Thol Gunamum - பரம்பரையாக வருகிற நற்குலமும்
சுற்றத்து இணை, Sutraththil Inai - பந்துக்களோடே சேர்ந்திருப்பதும்
நாளும், Naalum - நாள்தோறும்
இன்பு உடைத்து ஆம் எனும், Inbu Udaiththu Aam Ennum - (துக்கத்தை யுண்டு பண்ணாமல்)  ஸந்தோஷத்தையுண்டு பண்ணுவனவென்றே வைத்துக்கொண்õடலும்,
நல்நெஞ்சே, Nalnenje - நல்மனமே!
கணை நாணில் ஒவா தொழில்சார்ங்கன், Kanai Naanil Ovaa Thozhilsaarngan - அம்புகள் நாளில் நின்றும் ஒருகாலும் மாறாதபடி வீரத்தொழில் செய்துகொண்டேயிருக்கிற வில்லையுடையனான இராமபிரானுடைய
தொல் சீரை, Tol Seerai - இயற்கையான நற்குணங்களையே
ஓவாத ஊண் ஆக உண், Ovaadha Oon Aaga Un - நித்யபோக்யமாக அநுபவிக்கக் கடவாய்.
2666பெரிய திருவந்தாதி || 82
தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில் அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை அம்மானை யேத்தா தயர்ந்து.
பதவுரை Show / Hide
தீ வினையேன், Thee Vinaiyen - மஹாபாபியான நான்
தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால், Therintha Unarvu Ondru Inmaiyaal - விவேகவுணர்ச்சி சிறிதுமில்லாமையினாலே
அந்நான்று, Annandru - முன்பொருகாலத்தில்
கரந்த உருவிய அமானை பின் தொடர்ந்து, Karandha Uruviya Amanaipin Thodarndhu - நிஜமான வுருவத்தை மறைத்துக்கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற
ஆழி அம் கை அம்மானை, Aazhi Am Kai Ammanai - அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையிலணிந்திருந்த இராமபிரானை
ஏத்தாது, Eththadhu - தோத்திரம் செய்யாமல்
அயர்த்து, Ayarththu - அறிவுகெட்டு
கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன், Keel Naalgal Ellam Vaanaa Irundhozhindhen - கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன்.
2672திருவெழுகூற்றிருக்கை || கீழ் வாக்கியத்தில் உலகங்களைப் படைத்தமை சொன்னார், படைத்த உலகத்திற்குத் தீங்கு சேருங்காலத்தில் படாதனபட்டு ரக்ஷிக்கிறபடியைச் சொல்லுகிறார் இதில். குளவிக் கூடுபோலே ராக்ஷ்ஸர்களுக்குக் கூடாகிய இலங்கயை நீறுபடுத்தினபடியைச் சொல்லுகிறார். 2
ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,
பதவுரை Show / Hide
ஒரு முறை, Oru Murai - ஸ்ரீராமனாய் அவதரித்த ஒரு காலத்தில்,
இரு சுடர், Iru Sudar - சந்திர ஸூர்யர்கள்
மீதினில் இயங்கா, Meethinil Iyanga - (அச்சத்தினால்) மேலே ஸஞ்சரிக்க வொண்ணாததும்
மும் மதிள், Mum Mathil - நீர்க் கோட்டை, மலைக் கோட்டை வனக் கோட்டை என்கிற மூன்று துர்க்கங்களை யுடையதுமான
இலங்கை, Ilankai - லங்கா புரியை
இரு கால் வளைய, Iru Kaal Valaiya - இரண்டு நுனியும்
ஒரு சிலை, Oru Silai - ஒப்பற்ற சார்ங்க வில்லில்
ஒன்றிய ஈர் எயிறு, Onraya Eer Eiyiru - பொருந்தியதும் இரண்டு பற்களை யுடையதும்
அழல் வாய், Azhai Vay - நெருப்பைக் கக்குகிற வாயை யுடையதுமான
வாளியின், Valiyin - அம்பினால்
அட்டனை, Attanai - நீறாக்கினாய்
2672திருவெழுகூற்றிருக்கை || அம்பாலே காரியம்கொண்டபடியை அருளிச்செய்தார் கீழ், அழகாலே காரியம்கொண்டபடியை அருளிச்செய்கிறார் இதில். 3
மூவடி நானிலம் வேண்டி, முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, ஒருமுறை யீரடி, மூவுல களந்தானை,
பதவுரை Show / Hide
ஒரு முறை, Oru Murai - ஒருகாலத்தில்
முப்புரி நூலொடு, Muppuri Noolodu - யஜ்ஞோபவீதத்தோடு கூட
மான் உரி, Maan Uri - க்ருஷ்ணாஜிநமும்
இலங்கு, Ilangu - விளங்கா நின்ற
மார்வினின், Marvinin - திருமார்பையுடைய
இருபிறப்பு ஒரு மாண்ஆகி, Irupirappu Oru Maanagi - ஒருப்ராஹ்மண ப்ரஹ்மசாரியாகி
நானிலம், Naanilam - பூமியிலே
மூ அடி, Moo Adi - மூன்றடி நிலத்தை
வேண்டி, Vaendi - யாசித்து
ஈர் அடி, Eer Adi - இரண்டு திருவடிகளாலே
மூ உலகு, Moo Ulagu - மூன்று லோகங்களை
அளந்தனை, Alandhanai - அளந்துகொண்டாய்
2673சிறிய திருமடல் || 6
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான் ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர் ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின் ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய் வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய் சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப் போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம் ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும் வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால் நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால் ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்
பதவுரை Show / Hide
இ வையம் ஆரால் அடி அளப்புண்டது, I Vaiyam Aaraal Adi Alappundathu - யாவனொருவனாலே இப்பூமியானது அளக்கப்பட்டதோ.
இலங்கை ஆரால் பொடி பொடி ஆவீழ்ந்தது, Ilangai Aaraal Podi Podi Aaveezhnthathu - இலங்காபுரியானது யாராலே பொடியாக்கப்பட்டு நசித்தொழிந்த்தோ,
ஆராலே கல்மாரி காத்தது, Aaraale Kalmaari Kaaththathu - யாவனொருவனாலே கல்மழையானது தடுக்கப்பட்டதோ,
ஆழி நீர் ஆரால் கடைந்திடப்பட்டது, Aazhi Neer Aaraal Kadaindhidappattathu - கடலானது யாவனொருவனாலே கடையப்பட்டதோ,
அவன், Avan - அக்காரியங்களெல்லாஞ்செய்த ஒரு விலக்ஷண புருஷன்
ஊர் ஆ நிரை மேய்த்து, Oor Aa Nirai Maeyththu - ஊரிலுள்ள பசுக்கூட்டங்களையெல்லாம் மேய்த்தும்
உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும், Ulaku Ellam Undu Umizhndhum - உலகங்களை யெல்லாம் (பிரளய காலத்திலே) அமுது செய்தும் (ஸ்ருஷ்டி காலத்திலே) வெளிப்படுத்தியும்
ஆராத தன்மையன் ஆய், Aaradha Thanmaiyan Aay - (இத்தகைய பல செயல்களாலே தனது திருக்குணங்களை வெளிப்படுத்தினவளவிலும்) த்ருப்தி பெறாமல் (ஸௌலப்ய குணத்தை நன்குவிளக்க வேண்டி)
ஒரு நாள், Oru Naal - ஒருநாளில்
ஆங்கு ஆய்ப்பாடி, Aangu Aayppadi - அந்தத் திருவாய்வ்பாடியிலே
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம்துவர் வாய் வார் ஆர் வனம் முலையாள், Seer Aar Kalai Alkul Seer Adi Semthuvaar Vaai Vaar Aar Vanam Mulaiyaal - அழகிய சேலையை யணிந்த அல்குலை யுடையவளும், அழகிய கால்களையுடையவளும் மிகவுஞ் சிவந்த அதரத்தை யுடையவளும் கச்சணிந்த அழகிய முலைகளை யுடையவளுமான யசோதை
மத்து ஆர பற்றிக்கொண்டு, Mattu Aar Pattrikondru - மத்தை அழுத்தப் பிடித்துக் கொண்டு
ஏர் ஆர் இடைநோவ, Aer Aar Idainova - அழகிய இடுப்பு நோகும்படி
எத்தனார் போதும் ஆய், Ethanaar Podhum Aay - வெகுகாலமாக
சீர் ஆர் தயிர் கடைந்து, Seer Aar Thayir Kadaindhu - சிறந்த தயிரைக் கடைந்து
திரண்ட வெண்ணெய்தனை, Thiranda Vennaythani - (அதில்) திரண்ட வெண்ணையை
வேர் ஆர்றுதல் மடவான், Veer Aarrudhal Madavaan - (கடைந்த ச்ரமத்தாலே) வேர்வைமிக்க நெற்றியையுடைளான அவ் யசோதை
வேறு ஓர் கலத்து இட்டு, Veeru Oru Kalathu Ittu - வேறொரு பாத்திரத்திலே இட்டு
அதனை, Adhanai - அந்த வெண்ணெய்க்கலத்தை
நார் ஆர் உறி ஏற்றி, Naar Aar Uri Aetri - (விரல் கூட நுழைக்க வொண்ணாதபடி) நார் நெருக்கத்தையுடைய உறியின் மேலேற்றி
நன்கு அமையவைத்து, Nangu Amayavaithu - ஸுரக்ஷிதமாம்படி வைத்து விட்டு
போர் ஆர் வேல் கண்மடவாள், Por Aar Vel Kanmadavaal - யுத்தத்திற்கு ஸந்நத்தமான வேல் போன்ற (கூர்மையான) கண்களை யுடையளான அவ் யசோதையானவள்
போம் தனையும், Poom Thanaiyum - வெளியில் போகிறவரைக்கும்
ஓராதவன்போல் பொய் உறக்கம் உறங்கி, Ooraadhavanpool Poi Urakkam Urangi - ஒன்று மறியாதவன் போலே திருட்டுத் தூக்கம் தூங்கி
அறிவு உற்று, Arivu Utru - (அவள் போனவுடனே கண் விழித்தெழுந்து போய்
தார் ஆர் தட தோள்கள உள் அளவும் கைநீட்டி, Thaar Aar Thada Tholgal Ula Alavum Kainneetti - மாலையணிந்த பெரிய திருந்தோள்களைத்தாழின் அடிவரையில் புகவிட்டு
ஆராத வெண்ணெய் விழுங்கி, Aaraadha Vennai Vizhunki - (எவ்வளவு உண்டாலும் திருப்தியைத்) தரமாட்டாத வெண்ணையை அமுது செய்து
அருகு இருந்த, Arugu Irundha - (அந்த வெண்ணெய்த் தாழியின்) பக்கத்தில் இருந்த
மோர் ஆர் குடம், Moar Ar Kudam - மோர் நிறைந்த குடத்தை
உருட்டி, Urutti - (அதில் அநாதரம் தோற்ற) உருட்டி
முன்கிடந்த தானத்தே, Munkidandha Thaanatthae - முன்னே படுத்திருந்த இடத்திலேயே
ஓராதவன் போல், Ooradhavan Pol - ஒரு ஸமாசாரமும் தெரியாதவன்போன்று
கிடந்தானை, Kidandhaanai - படுத்துக்கொண்டிருந்த கண்ணனை
அவளும் வாரா கண்டு, Avalum Vaaraa Kandu - அவ் யசோதையும் வந்து கண்டு
தான் வைத்தது காணாள், Thaan Vaiththathu Kaanal - தான் (உறியிலே சேமித்து) வைத்த வெண்ணையைக் காணாதவளாய்
வயிறு அடித்து, Vayiru Adiththu - (இத்தனையும் தின்றால் சரிக்குமோவென்று) வயிற்றிலே மோதிக்கொண்டு
ஐயர் இவர் அல்லால், Aiyar Ivar Allaal - இந்த மஹாநுபாவர் தவிர
இங்கு புகுதுவார் ஆர் ஆர், Ingu Pugudhuvaar Ar Ar - இங்கே வந்தவர் வேறுயார்? (யாருமில்லை, இவரே தின்றிருக்க வேண்டுமென்று நிச்சயித்து)
இது செய்தீர் நீராம் என்று, Idhu Seidheer Neeraam Endru - ‘இந்தக் காரியம் செய்தவர் நீர்தான்‘ என்று சொல்லி
தீரா வெகுளியள் ஆய், Theeraa Veguliyal Aay - அடங்காத கோபத்தையுடையளாய்
ஓர் நெடு கயிற்றால், Oor Nedu Kayittraal - கையிலகப்பட்டதொருகுறுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண, Ooraarhal Ellaarum Kaan - ஊரிலுள்ளாரனைவரும் (இந்த எளிமையைக்) காணும்படியாக
உரலோடே சிக்கன ஆர்த்து அடிப்ப, Uralodae Chikkan Aarthu Adippa - ஒரு உரலோட அழுத்தக்கட்டி அடிக்க
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான், Aaraa Vayitrinodu Aattraadhhaan - மிகவும் வயிறெரிந்து வருந்தி நிற்பவன்
2673சிறிய திருமடல் || 8
தன் சீதைக்கு நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய் வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
பதவுரை Show / Hide
தன் சீதைக்கு நேர் ஆவன் என்று, Than Seethaikku Neer Aavan Endru - தனது தேவியான பிராட்டியோடே நான் ஸமானமாவேனென்று நினைத்து
ஓர் நிசாசரி வந்தாளை, Oru Nisaasari Vandhaalai - (என்னை மணந்துகொள் என்று சொல்லிக்கொண்டு) ஓடிவந்த சூர்ப்பணகை என்னும் ராக்ஷஸியை
கூர் ஆர்ந்த வாளால், Koora Aarntha Vaalal - கூர்மை பொருந்திய கத்தியினால்
கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து, Kodi Mookkum Kaathu Irandum Eera Viduthu - கொடிபோன்ற மூக்கையும் காதையும் அறுத்துத் துரத்தவிட்டு,
அவட்கு மூத்தோனை, Avadku Moothonai - அவளுடைய தமையனான கரனை
வெம் நரகம் சேரா வகையே சிலை குனித்தான், Vem Naragam Seeraa Vagaivey Silai Kuniththaan - ‘இனி இவன் வேறொரு கொடிய நரகம் போய் வேதனையநுபவிக்க வேண்டியதில்லை‘ யென்னும் படியாக ஸகல நரக வேதனைகளையும் போர்க்களத்திலே அவனுக்குதந்து வில்லை வளைத்துக்கொன்றொழித்தவன்
செம்துவர் வாய், Semthuvaar Vaai - மிகவும் சிவந்த அதரத்தை யுடையவளும்
வார் ஆர்வணம் முலையாள், Vaar Aarvanam Mulaiyaal - கச்சு அணிந்த அழகிய முலையையுடையவளுமான
வைதேவி காரணம் ஆ, Vaidhevi Kaaranam Aa - ஸீதாபிராட்டிக்காக
ஏர் ஆர் தட தோள் இராவணனை, Aer Aar Thada Thol Raavanai - அழகிய பெரிய ‘புஜங்களை யுடையனான இராவண்ணை
சீர் ஆர் ஈர் ஐந்து சிரம் அறுத்து செற்று, Seer Aar Eer Aindhu Siram Aruththu Settru - சிறந்த பத்துத் தலைகளையும் அறுத்துக் கொன்று
உகந்த, Ugantha - (முனிவர்களுடைய விரோதியைத் தீர்த்தோமென்று) திருவுள்ள முகந்த
செம் கண் மால், Sem Kan Maal - புண்டரீகாக்ஷன்
2673சிறிய திருமடல் || 14
மற்று எனக்கு இங்கு ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல் நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன் பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார் ஆரே பொல்லாமை அறிவார்?
பதவுரை Show / Hide
எனக்கு இங்கு ஆராய்வார் மற்று இல்லை, Enakku Ingu Aaraivaar Mattu Illai - என்னைப் பற்றிக் கவலைகொண்டு விசாரிப்பவர்கள் இங்கு யாருமில்லை.
என் ஆவி, En Aavi - எனது ஆத்மவஸ்து
அழல் வாய் மெழுகு போல் நீர் ஆய் உருகும், Azhala Vaai Mezhuvu Pol Neer Aay Urugum - நெருப்பினருகே வைத்த அரக்குப்போல் நீர்பண்டமாக உருகா நின்றது.
நெடுகண்கள் தாம், Nedugankal Thaam - நீண்ட கண்களும்
ஊரார் உறங்கிலும் உறங்கா, Ooraar Urangilum Urangaa - எல்லாரும் உறங்கும் போதிலும் உறங்கமாட்டா,
உத்தமன்தன், Uthamanthan - அப்புருஷோத்தமனுடைய
பேர் ஆயினவே, Per Aayinaave - திருநாமங்களா யுள்ளவற்றையே
பின்னையும், Pinnaim - மேன்மேலும்
பிதற்றுவன், Pithattruvan - வாய்வந்தபடி சொல்லிக் கொண்டிரா நின்றேன்
கார் ஆர் கடல் போலும் காமத்தர்ஆயினார், Kaar Aar Kadal Polum Kaamaththar Aayinaar - அகாதமான கடல் போல அளவு கடந்த காமத்தை யுடையவர்கள்
ஆரே, Aare - ஆர்தான்
பொல்லாமை அறிவார், Pollamaik Arivaar - ஸ்வரூப விரோத மறிவர்கள்?
2674பெரிய திருமடல் || 7
தம் பூவணை மேல் சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் இன்னிள வாடை தடவத் தாம் கண் துயிலும் பொன்னனையார் பின்னும் திரு வுறுக
பதவுரை Show / Hide
தம் பூ அணைமேல், Tham Poo Anaimeel - தங்களுடைய புஷ்பசயனத்தின் மீது
சின்னம் மலர் குழலும், Chinnam Malar Kuzhalum - துகள்களையுடைய புஷ்பங்களையணிந்த கூந்தலையும்
அல்குலும், Alkulum - நிதம்பத்தையும்
மெல் முலையும், Mel Mulaiyum - மெல்லிய முலையையும்
இன் இள வாடை தடவ, In Ila Vaadai Thadava - இனிதாய் இளையதாயுள்ள வாடைக் காற்றானது வந்து தடவ
கண் துயிலும், Kan Thuyilum - (ஆநந்தமாகத்) தூங்குகின்ற
பொன் அளையார்தாம், Ponn Alaiyaartham - ஸ்த்ரீகளானவர்கள்
பின்னும் திரு உறுக, Pinnum Thiru Uruga - மேன்மேலும் மேனியழகு மேலிட்டு விளங்கட்டும்.
2674பெரிய திருமடல் || 8
போர் வேந்தன் தன்னுடைய தாதை பணியாலர சொழிந்து பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள் மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக் கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும் அன்ன நடைய வணங்கு நடந்திலளே——
பதவுரை Show / Hide
போர் வேந்தன், Por Vendan - ரணாசூரனாகிய இராமன்
தன்னுடைய தாதைபணியால், Thannudaiya Thathaipaniyhaal - தன் தகப்பனான சதரதனுடைய சொற்படி.
அரசு ஒழிந்து, Arasu Ozhinthu - ராஜ்யமாள்வதைத்தவிர்ந்து (காட்டுக்குப் புறப்பட்டபோது)
பொன் நகரம், Ponn Nagaram - அழகிய அயோத்யாபுரியிலுள்ளாரடங்கலும்.
பின்னே புலம்ப, Pinne Pulamba - (நீ காட்டுக்குப்போகேல் என்று) பின்னா லழுது கொண்டே வந்தபோதிலும்
வெண்டர், Vendhar - என்னவேணும்
வலம் கொண்டு, Valam Kondu - தான்கொண்ட உறுதியை விடாமுற்கொண்டு
வளம் மன்னும் நாடு கை விட்டு, Valam Mannum Naadu Kai Vittu - செல்வம் மிகுந்த நாட்டை உபக்ஷித்துவிட்டு
மாதிரங்கள் மின் உருவின் வெண்தேர் திரிந்து, Madhirangal Min Uruvin Venther Thirinthu - திக்குகள்தோறும் மின் போன்ற கானலே பரவி யிருக்கப் பெற்றதும்.
வெளிப்பட்டு, Velippattu - எல்லாம் சூந்ய ஸ்தலமாகவுமிருக்கப் பெற்றதும்
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று, Kal Niraindhu Theeindhu Kazhai Udaindhu Kaal Suzhndru - கல்லுகள் நிறைந்து (புல்லுகள்) தீஞ்சு மூங்கில்கள் வெடித்து சுழல்காற்று அடித்துக்கொண்டிருக்கப்பெற்றதும்
திரை வயிறு பேயேதிரிந்து உலவா, Thirai Vayiru Paeyethirinthu Ulavaa - (ஆஹாரமில்லாமையால்) மடிந்த வயிற்றேயுடைய பேய்களே திரிந்துகொண்டிருக்கப்பெற்றதும்
வெம்காணத்தூடு, Vemkaanaththoodu - வெவ்விய காட்டினுள்ளே
கொடு கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம்பால் மேல், Kodu Kathiron Thunnu Veyil Varuththa Vembaal Mel - உஷ்ண கிரணனான ஸூர்யனுடைய வெய்யிலாலே வறுக்கப்பட்ட வெவ்வியபருக்கைக் கற்களின்மேலே (எழுந்தருளின வளவிலே)
வைதேவி என்று உரைக்கும், Vaidhevi Endru Uraikkum - வைதேஹீ என்று சொல்லப்பட்டவளாய்
மன்ன்ன் இராமன் பின், Mannn Raaman Pin - அந்த ஸ்ரீராம மஹாராஜன் பின்னே
பஞ்சு அடியால், Panchu Adiyaal - பஞ்சுபோல் மெல்லிய திருவடிகளாலே
நடந்திலளே, Nadandhilale - தானும் நடந்து செல்லவில்லையா?
2674பெரிய திருமடல் || 18
இது விளைத்த மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள் முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் வண்ணம் போல் அன்ன கடலை மலையிட்டணை கட்டி மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப் பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து தென்னுலக மேற்றுவித்த சேவகனை –
பதவுரை Show / Hide
இது விளைத்த மன்ன்ன், Idhu Vilaittha Mannn - (தென்றல் முதலானவை பாதகமாம்படி) இப்படிப்பட்ட நிலைமையை உண்டு பண்ணின மஹாநுபா பாவனாய்,
நறு துழாய் வாழ் மார்பன், Naru Thuzhai Vaal Maarban - மணம்மிக்க திருத்துழாய் மாலை விளங்குகின்ற திருமார்பை யுடையனாய்,
முன்னம் மாமதி கோள் விடுத்த முகில் வண்ணன், Munnam Maamathi Kol Vidutha Mukil Vannan - முன்னொருகால் சந்திரனுடைய துன்பத்தைப் போக்கின காளமேக வண்ணனாய்,
காயாவின் சின்ன நறு பூ திகழ் வண்ணன், Kaayavin Chinna Naru Poo Thigazh Vannan - “காயா” என்னும் செடியிலுண்டான சிறிய மணம் மிக்க பூப்போல் விளங்குகின்ற நிறத்தை யுடையனாய்,
வண்ணம் போல் அன்ன கடலை, Vannam Pol Anna Kadalai - தன்னுடைய வர்ணம் போன்ற வர்ணத்தையுடைய கடலிலே
மலைஇட்டு, Malaiyittu - மலைகளைக் கொண்டெறிந்து
அணை கட்டி, Anai Katti - ஸேதுவைக்கட்டி (இலங்கைக்கெழுந்தருளி)
மா மண்டு வெம் சமத்து, Maa Mandu Vem Samathu - சதுரங்கபலம் நிறைந்த கொடிய போர்க்களத்தில்
மன்னன் இராவணனை, Mannan Iravanai - ராக்ஷஸ ராஜனான ராவணனுடைய
பொன் முடிவுகள் பத்தும் புரள, Pon Mudivugal Pathum Purala - அழகிய பத்துத்தலைகளும் (பூமியில் விழுந்து) புரளும்படியாக
சரம் துரந்து, Saram Thurandhu - அம்புகளைப் பிரயோகித்து
தென் உலகம் ஏற்றவித்த சேவகனை, Then Ulagam Aetravitha Sevakanai - (அவ்விராவணனை) யமலோகமடைவித்த மஹா சூரகனாய்.
2674பெரிய திருமடல் || 19
ஆயிரக்கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப் பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன் மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை வீரனை
பதவுரை Show / Hide
ஆயிரம் கண் மன்னவன் வானமும், Aayiram Kan Mannavan Vaanamum - ஆயிரங்கண்ணனான இந்திரனுடைய ஸ்வர்க்கலோகத்தையும்
வானவர் தம் பொன் உலகும், Vaanavar Tham Pon Ulagum - (மற்றுமுள்ள) தேவதைகளின் திவ்ய லோகங்களையும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை, Thannudaiya Thol Valiyal Kaikkonda Thanavanai - தனது புஜபலத்தாலே தன் வசமாக்கிக் கொண்ட ஹிரண்யா ஸுரனை
பின், Pin - சிறிது காலம் பொறுத்து
ஓர் அரி உருவம் ஆதி, Oor Ari Uruvam Aadhi - ஒரு நரசிங்கமூர்த்தியாக அவதரித்து
ஏரி விழித்து, Aeri Vizhithu - நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து,
கொல் நலிலும் வெம் சமத்து கொல்லாதே, Kol Nalilum Vem Samathu Kollaadhe - கொடிய போர்க்களதிலே (பகைவரைக்கொல்லுங்கணக்கிலே சடக்கெனக்) கொன்றுவிடாதே
வல்லாளன், Vallalan - மஹாபலசாலியான அவ்வசுரனுடைய
மணி மன்னு குஞ்சிபற்றி வர ஈர்த்து, Mani Mannu Kunjipatri Vara Eerthu - மணிமயமான கிரீடம் பொருந்திய தலைமயிலைப் பிடித்துக் கிட்ட இழுத்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி, Thannudaiya Thaal Mel Kidathi - (அவனைத்) தனது திருவடிகளின் மீது படுக்கவைத்துக் கொண்டு
அவனுடைய பொன் அகலம், Avanudaiya Pon Akalam - அவனது அழகிய மார்பை
வள்  உதிரால் போழ்ந்து, Val Uthiraal Pozhndhu - கூர்மையான நகங்களாலே பிளந்து
புகழ் படைத்த, Pugazh Padaitha - (ஆச்ரிதனான ப்ரஹ்லாதனை ரக்ஷித்தானென்கிற) கீர்த்தியைப் பெற்றவனாய்
மின் இலங்கும் ஆழிபடை தட கை வீரனை, Min Ilangum Aazhipadai Thad Kai Veeranai - மின்போல் விளங்குகின்ற சுக்கராயுத்த்தைத் தடக்கையிலே உடைய மஹாவீரனாய்
2674பெரிய திருமடல் || 30
தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத் துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப் பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து மன்னிய திண் எனவும் –
பதவுரை Show / Hide
தென் இலங்கை யாட்டி, Then Ilangai Yaatti - தென்னிலங்கைக்கு அரசியும்
அரக்கர் குலம் பாவை, Arakkar Kulam Paavai - ராக்ஷஸ குலத்தில் தோன்றிய புதுமை போன்றவளும்
மன்ன்ன் இராவணன் தன் நல் தங்கை, Mannn Raavanan Than Nal Thangai - பிரபுவாகிய ராவணனது அன்புக்குரி தங்கையானவளும்
வாள் எயிறு, Vaal Eiyiru - வாள் போன்றபற்களையுடையளும்
துன்னு சுடு சினத்து, Thunnu Suthu Sinaththu - எப்போதும் (எதிரிகளைச்) சுடக்கடவதான் கோபத்தை யுடையளுமான
சூர்ப்பணகா, Soorppanagaa - சூர்பணகை யென்பவள்
புலர்ந்து எழுந்த காமத்தால், Pularnthu Ezhundha Kaamaththal - அதிகமாக வுண்டான காம நோயினால்
பொன் நிறம் கொண்டு, Pon Niram Kondu - வைவர்ணிய மடைந்து
சோர்வு எய்தி, Soarvu Eydhi - பரவசப்பட்டு (தளர்ந்து)
தன்னை நயந்தானை, Thannai Nayandhaanai - தன்னை ஆசைப்பட அந்த அரக்கியை
தான் முனிந்து, Thaan Muninthu - தான் சீறி
மூக்கு அரிந்து, Mookku Arinthu - மூக்கையறுத்து
மன்னிய திண்ணெனவும், Manniya Thinnenavum - இதையே ஒரு ப்ரதிஷ்டையாகநினைத்துக கொண்டிருப்பதென்ன.
2680திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (லீலாவிபூதியின் ஸ்வரூபமும் ரக்ஷணமும் எம்பெருமானுடைய அதீநமென்பது கீழிரண்டு பாசுரங்களில் அருளிச்செய்யப்பட்டது; அதனுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனுடைய அதீநமே யென்கிறது இப்பாட்டில். இதில் முதலடியில் ப்ரவ்ருத்திகளைச் சொல்லுகிறது; இரண்டாமடியில் நிவ்ருத்திகளைச் சொல்லுகிறது.) 6
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர் என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6
பதவுரை Show / Hide
நின்றனர், Nindranar - நிற்பவர்கள்
இருந்தனர், Irundhanar - இருப்பவர்கள்
கிடந்தனர், Kidandhanar - கிடப்பவர்கள்
திரிந்தனர், Thirindhanar - திரிபவர்கள் (ஆக இப்படிப் பட்டவர்களினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதலாகிற ப்ரவ்ருத்திகளெல்லாம் அப் பெருமானுடைய அதீநமே)
நின்றிலர், Nindrilnar - நில்லாதவர்கள்
இருந்திலர், Irundhilar - இராதவர்கள்
கிடந்திலர், Kidandhilar - கிடவாதவர்கள்
திரிந்திலர், Thirindilar - திரியாதவர்கள் (ஆக இப்படிப் பட்டவர்களினுடைய நில்லாமை இராமை கிடவாமை திரியாமை யாகிற நிவ்ருத்திகளெல்லாமும் அப் பெருமானுடைய அதீநமே.)
என்றும், Endrum - எப்போதும்
ஓர் இயல்வினர் என் நினைவு அரியவர், Or iyalvinar en ninaivu ariyavar - ஒரே விதமான இயற்கையை யுடையவரென்று நினைக்க முடியாதவரும் (அவரே) (அவர் தாம் யாவரென்னில்;)
என்றும், Endrum - எப்போதும்
ஓர் இயல்வொடு நின்ற, Or iyalvodu nindra - ஒரே விதமான இயற்கையோடு கூடி யிருக்கின்றவராய்
எம் திடர், Em thidar - திடமான பிரமாணத்தினால் ஸித்தாமன நம்முடையவர்.
2724திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இப்பாசுரமும் கீழ்ப்பாசுரத்தோடு ஒக்கும். கீழ்ப்பாட்டிலுள்ள ‘நீயருளாய உன் தேனே மலருந் திருப்பாதஞ் சேருமமாறு வினையேனே’ என்பதை இப் பாட்டோடு கூட்டி உரைத்தருளினர். திருக்குருகைப் பிரான்பிள்ளான். ஆதலால் கீழ்ப்பாட்டில் அவதாரிகையே இதற்குமாகும்.) (நைச்சியாநுஸந்தானம்பண்ணி அகன்றது தவிர்ந்து அணுகி அபேக்ஷித்த போதே எம்பெருமான் முகங்காட்டாமையாலே அவனுடைய குண சேஷ்டிதங்கள் நினைவுக்கு வந்து நலிய, திருவுள்ள முடைந்து பேசுகிறார் என்னவுமாம்) 6
வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6
பதவுரை Show / Hide
வினையேன்,Vinaiyaen - பாபியான என்னுடைய
வினை தீர்,Vinai theer - பாபத்தை ஒழிப்பதற்குரிய
மருந்து ஆனாய்,Marundhu aanaay - ஔஷமாயிருப்பவனே!
விண்ணோர் தலைவா,Vinnor thalaiva - நித்யஸூரி நாதனே!
கேசவா,Kesava - கேசவனே!
மனைசேர் ஆயர் குலம் முதலே,Manaicher aayar kulam mudhale - குடிசைகளில் பொருந்திய இடையருடைய குலத்திற்கு முதல்வனானவனே!
மாமாயனே,Maamaayanee - மிகுந்த ஆச்சரிய குணசேஷ்டிதங்களையுடையவனே!
மாதவா,Madhava - மாதவனே!
சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும்,Sinai aye thalaiya mara marangal eyzhum - கிளைகளோடு சேர்ந்து தழைகள் பொருந்திய ஆச்சாமரங்களை÷ழையும் (ஸ்ரீராமாவதாரத்தில்)
எய்தாய்,Eydhaay - (ஓர் அம்பினால்) துளைபடுத்தினவனே!
கிரீதரா,giridhara - ஸ்ரீதரனே!
இனையாய்,Inaiyaay - இப்படிப்பட்ட ஸ்வரூபத்தை யுடைவனே!
இனைய பெயரினாய்,Inaiya peyarinaay - இப்படிப்பட்ட திருநாமங்களை யுடையவனே!
என்று,Endru - என்று சொல்லி
அடியேன் நைவன்,Adiyaen naivan - நான் அழியா நின்றேன்
2736திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (இங்ஙனம் பரம போக்யனான எம்பெருமானுடைய குணங்களை அநுபவித்துக் கொண்டு போது போதுபோக்குவதே ப்ராப்த மென்கிறாரிதில்) 7
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7
பதவுரை Show / Hide
நீள் கடல் சூழ்,Neel Kadal Soozh - நீண்ட கடலினால் சூழப்பட்ட
இலங்கை,Ilangai - லங்கா புரிக்கு
கோன்,kon - தலைவனாயிருந்த இராவணனுடைய
தோள்கள்,Tholgall - இருபது தோள்களுடையும்
தலை,Thalai - பத்துத் தலைகளையும்
துணி செய் தான்,Thuni Sey dhaan - அறுத்தொழித்த ஸ்ரீராமபிரானுடைய
தாள்கள்,Thaalkal - திருவடிகளை
தலையில் வணங்கி,Thalaiyil Vanangi - தலையாலே வணங்கி
நாள் கடலை,Naal Kadalai - காலாமகிய கடலை
கழியின்,Kazhiyin - தாண்டுங்கள்.
2787திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (கடல் பெருமுழக்கஞ் செய்வதும் அலையேறுவது வடிவதுமாயிருப்பதும் அதற்கு இயல்பாயிருக்க, அதனை யறியாதே அதுவும் தம்மைப்போலே எம்பெருமான் திருவடிகளில் நசைவைத்து விரும்பனபடியே லபிக்கப் பெறாமையினாலே தன் காம்பீரிய மெல்லாமிழந்து கரையிலே வருவது கரையேறமாட்டாதே உள்ளே விழுவதாய் எழுத்துஞ் சொல்லும் பொருளும் தெரியாதபடி சத்துகின்ற தாகக்கொண்டு, ஐயோ! நீயும் இராமபிரானது திருக்குணங்களில் அகப்பட்டு நான் படும்பாடு பட்டாயோ என்கிறதாய்ச் செல்லுகிறது இப்பாசுரம்.) 3
காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல் நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால் தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3
பதவுரை Show / Hide
எல்லே !,Elle! - கனைகடலே!
காமுற்ற கை அறவோடு,kaamurrtha kai aravoodu - விரும்பின பொருள் கை கூடப்பெறாத இழவினால்
நீ,nee - நீ
இராபகல் முற்ற,iraabakal muttru - இரவும் பகலுமாகிய எப்போதும்
கண் துயிலாய்,kan thuyilaay - கண்ணுறங்காதாகி
நெஞ்சு,nenju - உள்ளிடமும்
உருகி,urugi - நீராகி
ஏங்குதி,aengudhi - ஏங்குகின்றாய்;
ஆல்,aal - ஆதலால்
தென் இலங்கை,then ilankai - தென்னிலங்காபுரி முழுவதும்
தீ ஊட்டினான்,thee oottinaan - நெருப்புக்கு உணவாக்கின பெருமானுடைய
தாள்,thaal - திருவடிகளை
நயந்த,nayandha - ஆசைப்பட்ட
யாம்,yaam - நாங்கள்
உற்றது,uttrathu - அடைந்த வருத்தத்தை
உற்றாயோ,uttraayo - நீயும் அடைந்தாயோ?
வாழி,vaazhi - (நீ மனத்துன்பம் தீ;ர்ந்து) வாழ்வாயாக.
2812திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (நான் எம்பெருமானைப் பெற்றது இன்றைக்கோ? இவ் வாத்மாவுள்ள போதே பிடித்து எம்பெருமானைப் பெற்றவனல்லேனோ என்கிறார். நெடுநாளாகப் பிரிந்திருந்த பிரிவின் வருத்தம் ஒன்றும் தெரியாதபடி எம்பெருமான் தன்னோடே கலந்ததனாலுண்டான களிப்பு இங்ஙனே பேசுவிக்கின்றது காண்மின்.) 6
சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத் தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே–2-3-6
பதவுரை Show / Hide
சேர்ந்தார்,Serndhaar - பக்தர்களினுடைய
தீ வினைகட்கு,Thee vinaikatku - கொடிய பாவங்களுக்கு
அரு நஞ்சை,Aru nanjai - ஆற்ற வரிதான விஷமாயிருப்பவனும்
திண் மதியை,Thin madhiyai - திடமான அத்யவஸாயத்தை அளித்தருள்பவனும்
நீர்ந்தார் தம் மனத்து பிரியாது,Neerndhaar tham manathu piryaadhu - தனக்கே அற்றுத் தீர்ந்தவர்களான பரமை காந்திகளின் மனத்தை விட்டுப் பிரியாமல்
அவர் உயிரை,Avar uyirai - அவர்களுக்கு உயிராயிருப்பவனும்
சோர்ந்து போகல் கொடா,Soarndhu pogal koda - தன்னைப் பிரிந்து விஷயங்களில் போகக் கொடாத
சுடரை,Sudarai - ஒளி யுருவாக வுள்ளவனும்
அரக்கியை,Arakkiyai - ராக்ஷஸியான சூர்ப்பணகையினது
மூக்கு,Mookku - மூக்கை
ஈர்ந்தாயை,Eerndhaayai - அறுத்தவனுமாகிய வுன்னை
அடியேன்,Adiyaen - நான்
முதல் முன்னமே,Mudhal munname - அநாதி காலமாக
அடைந்தேன்,Adaindhaen - சேரப் பெற்றவன்
2817திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (ஒவ்வொரு பதிகத்திலும் ஈற்றுப் பாசுரத்தில் பயனுரைத்து வருகின்ற ஆழ்வார் இப் பதிகத்திற்குப் பயன் கூறாது, இத்திருவாய்மொழி, பாகவதர் பெருந்திரளாக இருந்து அநுபவிக்கத்தக்கது என்று சொல்லித் தலைக்கட்டுகின்றார். இதற்கொரு பலன் எதிர்பார்க்கவேண்டா; பெரிய கோஷ்டியாக இருந்து இதனை அநுபவிப்பதுதானே ஸ்வயம் ப்ரோயஜனம் என்று தெரிவித்தவாறு. அன்றியே, இத்திருவாய்மொழியைக் கற்கப் பெறில் என்னைப் போல் தனியே யிருந்து துவளாமல் பாகவத கோஷ்டிகளுடன் கூடி அனுபவிக்கும்படியான பெரும்பேறு பெறுவீர்கள் என்று இதனை இத்திருவாய்மொழி கற்கையின் பயனாகவே அருளிச்செய்தாரென்றுங் கொள்ளலாம். ஆடுமின் என்றது ஆடப் பெறுவீர்களாக என்றபடி.) 11
குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக் குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக் குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11
பதவுரை Show / Hide
அடியீர்,Adiyir - பக்தர்களே!
குழாம் கொள்,Kulam kol - கூட்டங்கூட்டமான சேனைகளைக் கொண்ட
பேர்,Per - மிக்க பெருமை பொருந்திய
அரக்கன்,Arakkan - ராக்ஷஸ ராஜனாகிய இராவணனுடைய
குலம்,Kulam - குடும்பம்
வீய,Veeya - தொலையும்படி
முனிந்தவனை,Munindhavanai - சீறி யருளின பெருமான் விஷயமாக
குழாம் கொள் தென்குருகூர்,Kulam kol thenkurukoor - (ஸ்ரீவைஷ்ணவ) கோஷ்டிகளை யுடைத்தான திரு நகரிக்குத் தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
தெரிந்து,Therindhu - ஆராய்ந்து
உரைத்த,Uraitha - அருளிச் செய்த
குழாம் கொள் ஆயிரத்துள்,Kulam kol aayiraththul - பாசுரங்களின் கூட்டம் நிரம்பிய இவ் வாயிரத்தினுள்
இவை பத்தும்,Ivai pattum - இப் பத்துப் பாட்டையும்
உடன்,Udan - பொருளுடனே
பாடி,Paadi - பாடி
குழாங்கள் ஆய்,Kulangaal aay - பெரிய கோஷ்டியாய்
உடன் கூடி நின்று,Udan koodi nindru - ஒரு மிக்கக் கலந்திருந்த
ஆடுமின்,Aadumin - கூத்தாடுங்கள்.
2820திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (பிரானே! நீர் ஜனகராஜன் திருமகள் திறத்திலே செய்த செயல்களை வால்மீகி போல்வார் ஸ்ரீராமாயணாதிகளாக எழுதி வைத்தமையாலன்றோ இப்பெண்பிள்ளை துடியாநின்றாள்; ஒரு பிராட்டிக்கு அத்தனை பாடுபட்டுக் காரியஞ் செய்தவர் நம்மை இப்படித் துடிக்க விட்டிருக்கிறாரே, இது நீதியோ என்று கதறாநின்றாள்- என்கிறாள் திருத்தாய். இன்று இவளை இப்படிக் கைவிட நினைத்த நீர் அன்று உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்து அத்தனை செயல்கள் செய்தது ஏதுக்கு என்கிறாள் என்னவுமாம்.) 3
இரக்க மனத்தோடு எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3
பதவுரை Show / Hide
இரக்கம் மனத்தோடு,Irakkam manathodu - நெகிழ்ச்சியை யுடைய நெஞ்சோடு (கூடிய)
இவள்,eval - இப்பெண்பிள்ளை
எரி அணை,Eri anai - நெருப்போடு ஸம்பந்தப்பட்ட
அரக்கும்,Arakkum - (வன்மையான) அரக்கையும்
மெழுகும்,Melugum - மெழுகையும்
ஒக்கும்,Okkum - ஒத்திருக்கின்றாள்;
இரக்கம் எழீர்,Irakkam ezeer - (இவள் திறத்து) இரக்கம் உண்டாகப் பெறுகின்றிலீர்;
அரக்கன்,Arakkan - இராவணனுடைய
இலங்கை,Ilangai - லங்காபுரியை
செற்றீருக்கு,Setreerukku - (ஒரு பிராட்டிக்காக) த்வம்ஸம் செய்தருளின உமக்கு
இதற்கு,Idharku - இவள் திறத்திலுண்டான உபேக்ஷைக்கு
என் செய்தேன்,En seydhen - என்ன பரிஹாரம் பண்ணுவேன்?
2821திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (மகளே! பதாறாதே எம்பெருமான்ப்ரணயிநிகளுக்குக் காரியம் செய்வது தவறமாட்டார்; ஜனகராஜன் திருமகளுக்காகத் காரியஞ் செய்தருளினாரென்பது வாஸ்தவமே. அப்பிராட்டி எத்தனை மாதம் தனிச் சிறையிலிருந்து துவண்டாள் தெரியுமோ? பத்துமாதம் பொறுத்தன்றோ அவளுக்கும் காட்சிதந்தது; ப்ராப்திகாலம் வர வேண்டாவோ? அ வளுக்குப் போலே உனக்கும் ஒருநாளிலே காட்சி தரத் தடையிராது; *சரைஸ் துஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந” மாம்நயேத் யதிகாகுத்ஸ்த; தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று அப்பிராட்டி ஆறியிருந்தது போலவே நீயும் ஆறியிருப்பதே தகுதி; அவன் இலங்கை செற்றவன் என்பதையே நீ சொல்லிக்கொண்டிரு-என்று நான் (என் மகளைத்) தேற்றினேன்; அவளும் அப்படியே “இலங்கை செற்றவனே!” என்றே சொல்லிக் கொண்டு ஒருவாறு தரித்திருந்தவள் மீண்டும் கதறத் தொடங்கவிட்டாளென்கிறாள் திருத்தாய்.) 4
இலங்கை செற்றவனே யென்னும் பின்னும் வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக் கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4
பதவுரை Show / Hide
இவள்,Ival - இப்பராங்குசநாயகி.
இலங்கை செற்றவனே என்னும்,Ilangai setravane ennum - (என்னோடொத்த ஒருத்திக்காக) லங்காபுரியை யழித்தவனே! என்கிறாள்
பின்னும்,Pinnum - அதற்குமேலும்
வலம் கொள்புற் உயர்த்தாய் என்னும்,Valam kolpur uyarthai ennum - வலிமைமிக்க கருடனைக் கொடியாகக் கொண்டவனே! என்கிறாள்.
உள்ளம் மலங்க,Ullam malang - மனம் சுழலும்படி
வெவ்வுயிர்க்கும்,Vevviyirkkum - உஷ்ணமாக மூச்சுவிடுகின்றாள்;
கண் நீர்,Kan neer - கண்ணீரானது
மிக,Miga - அதிகமானவாறே
கலங்கி,Kalanggi - (அதனால்) அறிவுகலங்கப் பெற்று
நின்று,Nindru - ஸ்தம்பித்து நின்று
கைதொழும்,Kaidhozhum - அஞ்ஜலிபண்ணா நின்றாள்
2827திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (இப்பெண்பிள்ளை திறத்திலே பெரும்பாலும் எல்லாம் ஒடுங்கிப் போயிற்று; இவளுடைய நோக்கு ஒன்றுதான் சேகூஷித்துக் கிடக்கிறது; அஃதொன்றுமாவது குலையாதபடி நீர் நோக்கிக் கொள்ள வேணுமென்று பிரார்த்திக்கின்றாள்.) 10
ஏழை பேதை இராப்பகல் தன் கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –-2-4-10
பதவுரை Show / Hide
கிளர்,Kilar - விஞ்சின
வாழ்வை,Vaazhvai - (இராவணனது) செல்வம்
வேவ,Veva - நீறாகும்படி
இலங்கை,Ilankai - லங்காபுரியை
செற்றீர்,Setreer - அழித்தவரே!
எழை பேதை,Ezhai paedhai - எழையும் பேதையுமான இவள்
இரா பகல்,Iraa pagal - இரவும் பகலும்
தன்,Than - தன்னுடைய
கேழ் இல்,Kael il - ஒப்பற்ற
ஒண் கொண்டாள்,On kondaal - நீரைக்கொண்டாள்;
இவள்,Ival - இவளுடைய
மாழை நோக்கு ஒன்றும்,Maalzai nokku ondrum - இளநோக்கு ஒன்றையுமாவது
வாட்டேன் மின்,Vaatten min - வாடச்செய்யாமல் தளிர்ப்பிக்க வேணும்.
2848திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (முதலிலே உன்னை யறியாதிருந்தலெனக்கு, உன்னையும் உன்னுடைய போக்கியதையையுமறிவித்து, உன்னைவிட்டகன்று உயிராற்றமாட்டாதபடியான நிலைமையையும் விளைவித்த நீ, இனி என்னைவிட்டுப் பிரிந்துபோவது தகுதியோ வென்கிறார்.) 9
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம் மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9
பதவுரை Show / Hide
எந்தாய்,Endhaai - ஸ்வாமியே!
தண் திருவேங்கடத்துள் நின்றாய்,Than Thiruvengadaththul Nindraai - குளிர்ந்த திருவேங்கட மலையிலே நிற்பவனே!
இலங்கை செற்றாய்,Ilankai Setraai - லங்காபுரியை அழித்தவனே!
மராமரம்,Maramaram - மராமரங்களினுடைய
பை தாள் ஏழ்,Pai Thaal Yezh - பருத்த அடிகள் எழும்
உருவ,Uruva - உருவும்படி
ஒரு வாளி கோத்த வில்லா,Oru Vaali Kotha Villa - ஒரு அம்யை தொடுத்த வில்லை யுடையவனே!
கொந்து ஆர்தண் அம் துழாயினாய்,Kondhu Aardhan Am Thuzhaayinaai - கொத்துக்கள் நிறைந்து குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
எம் அமுதே,Em Amudhe - எனக்கு அமுதமர்னவனே!
உன்னை என்னுள்ளே குழைத்த மைந்தா,Unnai Ennulle Kuzhaittha Maindha - என்னோடு ஒரு நீராகக் கலந்த மைந்தளே!
வான் ஏறே,Vaan Erea - நித்யஸூரி நாதனே!
இனி எங்கு போகின்றது,Ini Engu Poagindradhu - இனி என்னைத் தவிர உனககு வேறு போக்கிட முண்டோ?
2855திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (தம்மையும் தம்முடைய ஸம்பந்த ஸம்பந்திகளையும் எம்பெருமான் வைஷ்ணவராக்கினது, வடிவத்தைக் காட்டி யென்கிறார்.) 5
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள் விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5
பதவுரை Show / Hide
விட்டு இலங்கு முடி அம்மான்,Vittu Ilanku Mudi Ammaan - நன்றாக விளங்குகின்ற திரு வபிஷேகத்தை யுடைய ஸ்வாமியான
மதுசூதனன் தனக்கு,Madhusudhanan Thanukku - மதுவைக் கொன்ற பெருமானுக்கு
பாதம் கைகள் கண்கள்,Padham Kaigal Kangal - திருவடிகளும் திருக்கைகளும் திருக்கண்களும்
விட்டு இலங்கு செம் சோதி தாமரை,Vittu Ilanku Sem Sodhi Thaamarai - விரிந்து விளங்குகின்ற சிவந்த சுடரை யுடைய தாமரைப் பூக்களேயாம்
திருஉடம்பு,Thiru Uthampu - திரு மேனியோ வென்றால்.
விட்டு இலங்கு கரும் சுடர் மலையே,Vittu Ilanku Karum Sudar Malaiye - நன்கு விளங்குகின்ற நீலவர்ணப்ரபையை யுடைய மலைபோன்றது;
சீர்சங்கு,Seer Sangku - சிறந்த சங்கானது
விட்டு இலங்கு மதியம்,Vittu Ilanku Mathiyam - மிக விளங்குகின்ற சந்திரனைப் போன்றது;
சக்கரம்,Chakkaram - திருவாழி
பரிதி,Parithi - ஸூர்யனைப்போன்றது;
2860திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (இங்ஙனம் மஹோபகாரகனான எம்பெருமானை ஒருநாளும் விடலாகாதென்று நெஞ்சுக்கு உரைக்கும் முகத்தால். தம்முடைய அத்யவஸாயத்தை வெளியிடுகிறார்) 10
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10
பதவுரை Show / Hide
நெஞ்சே,Nenje - மனமே!
தெருடி ஆகில்,Therudi Aagil - நீ அறிவுடையை யாகில்
இருடீகேசன் என்று,IrudiKesane Endru - ஹ்ருஷீகேசனே யென்றும்
எம்பிரான் என்று,Empiran Endru - எம்பிரானே யென்றும்
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த,Ilankai Arakkar Kulam Murudu Theertha - இலங்கையிலிருந்த ராக்ஷ குலத்திற்கு முருடான ராவணனைத்
பிரான் என்று,Piran Endru - தொலைத்த பிரானே யென்றும்
எம்மான் என்று,Emman Endru - எம்பெருமானே யென்றும்
அமரர் பெம்மான் என்று,Amarar Pemman Endru - நித்யஸூரிநாதனே யென்றும் சொல்லி
வணங்கு,Vanangu - அவனை வணங்கு;
திண்ணம் அறி,Thinnam Ari - இதைத் திடமாக அறிவாயாக;
அறிந்து,Arindhu - அறிந்தபின்
மருடி ஏலும்,Marudi Yelum - (மீண்டும்) சுலங்குவாயாகிலும்
நம்பி பற்பநாபனை,Nambi Parpanabanai - குணபரிபூர்ணனான பத்மநாபனை
விடேல் கண்டாய்,Videl Kandaai - விடாதே கொள்.
2870திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (இவ்விபூதி எம்பெருமானுக்கே அஸாதாரண மென்னுமிடத்திற்குத் தனித்தனியே உபபத்திகள் பலபல வுளவென்கிறார்.) 7
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும் தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7
பதவுரை Show / Hide
கிடந்து,Kidandhu - (கடற்கரையில் வழி வேண்டிக்) கிடந்து
இருந்து,Irundhu - (சித்திரக்கூட கிரியில் இருந்தும்
நின்று,Nindru - (ராவணனை முடித்தபிறகு இலங்கை வாசலில் வீர ஸ்ரீயோடே) நின்றும்.
அளந்து,Alandhu - த்ரிவிக்ரமாவதாரஞ் செய்தும்.
கேழல் ஆய்,Kezhal aay - வராஹ ரூபியாகி
கீழ் புக்கு,Keel pukku - பிரளய வெள்ளத்தின் கீழே புகுந்து
இடந்திடும்,Idandhidum - அண்ட கடாஹத்தினின்றும் பூமியை ஒட்டு விடுவித்தெடுத்தும் (ஆக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்பவனாய்)
தன்னுள்,Thannul - தனக்குள்ளே கரக்கும் (மூவுலகையும்) மறைத்து வைப்பவனாய்
உமிழும்,Ummizhum - பிறகு வெளிப்படுத்துபவனாய்
தட பெரு தோள் ஆர தழுவும்,Thada peru thol aara thazhuvum - மிகப் பெரிய திருத்தோள்கள் நிரம்பும்படி தழுவிக் கொள்பவனாய் (ஆக இப்படிகளாலே
பார் என்னும் மடந்தையை,Paar ennum madandhaiyai - பூமிப்பிராட்டி திறத்திலே
மால்,Maal - ஸர்வேச்வரன்
செய்கின்ற,Seykinra - படுகிற
மால்,Maal - வ்யாமோஹத்தை
ஆர்காண்பார்,Aarkaanpaar - அறியவல்லாரார்?
2884திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (கீழ்ப்பாட்டில் ஆழ்வார்தாம் கீழ்நாட்களில் இருந்த இருப்பைக்கூறி இழவுக்கு மிகவும் அநுபவித்து, இப்போது நல்லபடியாக இருக்கிற இருப்பையும் பேசினார்; அதுகேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! இழந்தநாளைக்கு அநுதபிக்கின்ற உமக்கு, இனி இழவு நேர ப்ரஸக்தி யில்லையே; ஆகவே வாழ்ந்துவிட்டீரன்றோ? இனி நான் செய்ய வேண்டுவது ஒன்றுமில்லையே’ என்றருளிச் செய்ய, பிரானே! அப்படி ஸாதிக்கலாமோ? என்னை வைத்திருக்குமிடம் எதுவென்று ஆராயவேண்டாவோ? இந்ரிநலத்திலே இருக்கின்ற என்னுடைய சித்தஸ்திதியை நம்பலாகுமோ? என்னைத் திருவடிவாரத்தில் சேர்த்துக் கொண்டாலொழிய நான் நிர்ப்பரனாயிரக்க முடியாது’ என்கிற கருத்தை இப்பாசுரத்தில் வெளியிடுகிறார்,) 10
ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10
பதவுரை Show / Hide
ஏழும்,Ezhum - ஏழு காளைகளையும்
வென்று,Vendru - வலியடக்கினவனாயும்
ஏர்கொள் இலங்கையை,Aerkol ilangaiyai - அடகு நிரம்பிய லங்காபுரியை
நீறு செய்த,Neeru seidha - நீறாக்கினவனாயுமுள்ள
நெடும் சுடர் சோதி,Netum sudar sothi - மஹா தேஜஸ்வியான பெருமானே!
என்னை தேறேல்,Ennai therael - என்னை நம்பவேண்டா!
உன் பொன் அடி,Un pon adi - உன்னுடைய திருவடிகளிலே
ஒல்லை,Ollai - விரைவாக
சேர்த்து,Serthu - (என்னைச்) சேர்த்துக் கொண்டு
வேறே போக,Verey poga - விஷயாந்தரங்களில் போகும்படி
எஞ்ஞான்றும;,Yennjaandrum; - ஒரு நாளும்
விடல்,Vidal - விடாதே.
2953திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் நிரூபித்த பரத்வத்தைக் கேட்டவர்கள் ‘இப்படிப்பட்ட பராத்பரனானவனை நாங்கள் ஆச்ரயிக்க எங்ஙனே கூடும்? என்று சங்கிக்க, அப்படிப் பட்டவன் தானே உங்களோடு ஸஜாதீயனாய் சக்ரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்தான் என்ற அவதார வெளிமையை இப்பாட்டில் உணர்த்துகின்றார்.) 2
மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச் சாவம் உள்ளன நீக்குவானைத் தடங் கடற் கிடந்தான் தன்னைத் தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியைப் பாவநாசனைப் பங்கயத் தடங்கண்ணனைப் பரவுமினோ.–3-6-2
பதவுரை Show / Hide
மூவர் ஆகிய மூர்த்தியை,Moovar aagiya moorthiyai - மூவரும் தானே என்னலாம் படி யுள்ளவனாய்
முதல் மூவர்க்கும்,Mudhal moovarkkum - முதல்வராகச் சொல்லப்படுகின்ற அந்த இந்திரன் பிரமனீசன் என்ற மூவர்க்கும்
முதல்வன் தன்னை,Mudhalvan thannai - காரண பூதனாய்
சாவம் உள்ளன நீக்குவாளை,Saavam ullana neekkuvaalai - (அவர்களுக்கு நேரும்) துன்பங்களை யெல்லாம் போக்குபவனாய்
தட கடல்,Thada kadal - விசாலமான திருப்பாற்கடலிலே
கிடந்தான் தன்னை,Kidanthaan thannai - கண்வளர்ந்தருள்பவனாய்
தேவதேவனை,Devadhevanai - தேவாதி தேவனாய்
தென் இலங்கை,Then ilankai - தென்னிலங்கையில்
எரி எழ,Eri ezha - அக்னி தலையெடுக்கும்படி
செற்ற,Setra - பகைவரை அழித்த
வில்லியை,Villiyai - சார்ங்கத்தை யுடையவனாய்
பாவநாசனை,Paavanasanai - பரம பாவநனாய்
பங்கயம் தட கண்ணனை,Pangayam thada kannanai - தாமரை போன்ற பரந்த திருக்கண்களை யுடையவனான எம்பெருமானை
பரவுமின்,Paravumin - புகழ்ந்து பாடுங்கள்.
2959திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (மற்றுள்ளாரும் தம்முடைய பக்ஷத்தை யறிந்து ருசி பண்ணுகைக்காக ‘நான் சக்ரவர்த்தி திருமகனை யல்லது மற்றொருவரை ஆபத் தனமாகப் பற்றி யிரேன்’ என்று தமது உறுதியை வெளியிடுகிறார்.) 8
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய் உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8
பதவுரை Show / Hide
துயரமே தரு,Thuyarame tharu - பரிதாபத்தையே தாக்கடவதான
துன்பம் இன்பம் ஆய்,Thunbam inbam aai - புண்யாபாபரூப கருமங்களுக்கு நியாயமகான்
அவை அல்லன் ஆய்,Avai allan aai - அவற்றுக்குத்தான் வசப்படாதவனாய்
உயர நின்றது ஓர் சோதி ஆய்,Uyara nindradhu or sothi aai - உயர்ந்த நிலமாகிய பரமபதந்தனில் லெழுந்தருளி யிருக்கின்ற விலக்ஷண தேஜோமய விக்ரஹ யுக்தனாய்
உலகு ஏழும்,Ulagu ezhum - எல்லா உலகங்களையும்
உண்டு உமிழ்ந்தான் தன்னை,Undu umizhndhaan thannai - (பிரளயத்தில்) உண்டு (மீண்டும்) வெளிப்படுத்தி ரக்ஷிப்பவனாய்
அயர வாங்கும்,Ayara vaangum - மோஹிக்கும்படி உயிரை அபஹரிக்கின்ற
நமன் தமர்க்கு,Naman thamarkku - யமபடர்களுக்கு
அரு நஞ்சினை,Aru nanjinai - மீட்கமுடியாத விஷமாய்
அச்சுதன் தன்னை,Acchuthan thannai - (தன்னைப் பணிந்தாரை) நழுவ விடாதவனாய்
தயரதற்கு மகன் தன்னை அன்றி,Thayaratharku magan thannai andri - சக்ரவர்த்தி திருமகனான எம்பெருமானை வல்லது
மற்று,Matru - மற்றொரு தெய்வத்தை
தஞ்சம் ஆக இலேன்,Thanjam aaga ilein - சரணமாகவுடையேனல்லேன்.
2975திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (வாக்கானது எம்பெருமானை நோக்கி ‘ஸ்வாமி! நெஞ்சு தேவரீரை நினைக்க அதற்கு அருள் செய்தாப்போலே நானும் தேவரீரை நினைக்க அருள் செய் வேணும்’ என்று அலற்றாநின்றது என்கிறார்.) 2
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச்செற்ற நஞ்சனே! ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2
பதவுரை Show / Hide
என் வாசகம்,En vaasagam - எனது வாக்கானது
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் தஞ்சனே,Nenjamae neel nagar aaga irundha en thanjanae - மனத்தையே பெரிய நகரமாகக் கொண்டு அதிலே தங்கியிருக்கின்ற எனது நற்றுணைவனே!
தண் இலங்கைக்கு இறையை செற்ற நஞ்சனே,Than ilangaiyku iraiai setra nanjanae - தண்ணிதான இலங்காபுரிக்குத் தலைவனாயிருந்த இராவணனைத் தொலைக்கும் விஷயத்தில் நஞ்சானவனே!
ஞானம் கொள்வான் குறள் ஆகிய,Gnanam kolvaan kural aagiya - (மாவலியிடமிருந்து) பூமியைக் கொள்ளும் பொருட்டு வர்மன் மூர்த்தியான
வஞ்சனே,Vanchanae - வஞ்சகனே!
என்னும் எப்போதும்,Ennum eppodhum - என்று எப்போதும் சொல்லா நின்றது
2984திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (இத்திருவாய்மொழியின் இயல்மாத்திரத்தைத் தரித்தவர்கள் ஆரேனுமாகிலும் இதில் ஆஸாஸித்தபடியே அநுபவிக்கையில் தட்டில்லாத பரம போக்யமான திருநாட்டிலே செல்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள்சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல் வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11
பதவுரை Show / Hide
புலம்பு சீர்,Pulambu seer - (அனைவரும்) கொண்டாடுதற்குரிய திருக்குணங்களையுடையனாய்
பூமி அளந்த பெருமானை,Bhoomi alandha perumaanai - பூமியை அளந்தவனான எம் பெருமானைக் குறித்து
நலம் கொள் சீர்,Nalam kol seer - ஞானபக்தி முதலிய சிறப்பு வாய்ந்த
நன் குருகூர் சடகோபன்;,Nan kurugoor Sadagopan - நன் குருகூர் சடகோபன்;
சொல்,Sol - அருளிச்செய்த
வலம் கொண்ட,Valam konda - மிக்க ஆற்றலையுடைய
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களுள்
இவை ஓர் பத்தும்,Ivai or paththum - இப்பத்துப் பாசுரத்தையும்
சொன்னால்,Sonnal - ஓதினால்
யாவரும்,Yaavarum - (இன்னார் இனையார் என்னும் வாசியற) எல்லாரும்
இலங்கு வான்,Ilangu vaan - சோதிமயமான பரமபதத்தை
ஏறுவர்,Yeruvar - ஏறப்பெறுவர்.
2996திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (திவ்யாயுதங்களோடே எம்பெருமான் வந்து அவதரிக்கும்படியை அநுஸந்திக்கப் பெற்றவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார்.) 1
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில் ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில் வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1
பதவுரை Show / Hide
பலபல,Palapala - பலபல வகைப்பட்ட
சன்மம்,Sanmam - அவதாரங்களை
செய்து,Seidhu - பண்ணி
வெளிப்பட்டு,Velippattu - ஸம்ஸாரிகளின் கண்ணுக்கும் புலப்பட்டு
சங்கொடு சக்கரம்,Sangodu sakkaram - சங்கு சக்கரங்களையும்
வில்,Vil - சார்ங்கத்தையும்
ஒண்மை உடைய,Onmai udaiya - ஒளி பொருந்திய
உலக்கை,Ulakkai - முஸலத்தையும்
ஒள் வாள்,Ol vaal - அழகிய கந்தக வாளையும்
தண்டு,Thandu - கௌமோதகி யென்னும் கதையையும்
கொண்டு,Kondu - ஏந்திக்கொண்டு
புள் ஊர்ந்து,Pul oornthu - பக்ஷிராஜனை வாஹனமாகக்கொண்டு
உலகில்,Ulagil - உலகத்திலுள்ள
வன்மை உடைய,Vanmai udaiya - கடினமான மனமுடைய
அரக்கர்,Arakkar - அரக்கர்களும்
அசுரர்,Asurar - அசுரர்களம்
மாள,Maala - மாண்டொழியும்படி
படை பொருத,Padai porudha - ஆயுதப்பிரயோகம் பண்ணிப் போர் செய்து தொலைத்து
நன்மை உடையவன்,Nanmai udaiyavan - நன்மை மிக்கவனான எம்பெருமானுடைய
சீர்,Seer - திருக்குணங்களை
பரவ பெற்ற நான்,Parava petra naan - துதிக்கப்பெற்ற அடியேன்
ஓர் குறையு இலன்,Or kuraiyu ilan - ஒரு குறையுமுடையே னல்லேன்.
3011திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (சிற்றின்பத்தின் நுகர்ச்சியும் அஸ்திரமாதலால் எம்பெருமானுடைய திருநாமத்தைச் சொல்லி வாழுங்களென்கிறார்.) 5
பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார் துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர் மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5
பதவுரை Show / Hide
அம் சீதம் பை பூ பள்ளி,Am seetham pai poo palli - அழகும் குளிர்ச்சியும் விஸ்தாரமுமுள்ள பூம்படுக்கையிலே
திரு அருள் பணிமின் என்னும்,Thiru arul panimin ennum - (மாதர்காள்!) கிருபை பண்ணவேணும்’ என்று பிரார்த்திப்பவர்களாய்
அணி மென் குழலார் இன்பம் கலவி அமுது உண்டார்,Ani men kuzhalar inbam kalavi amudhu undaar - அழகிய மெல்லிய கூந்தலையுடைய மாதர்களின் சிற்றின் பக்கவலியமுதத்தை அனுபவித்தவர்களானவர்கள்
துணி முன்பு நால,Thuni munbu naala - அரைத்துணி (பின் பக்கத்திற்கு எட்டம் போராமல்) முன்புறத்தில்மாத்திரம் தொங்கும்படியான ஏழையையடைந்து
பல் ஏழையர் தாம் இழிப்ப,Pal yezhaiyar thaam izhippa - பல மாதர்கள் இழிவாகக் கூறி யேசும்படி
செல்வர்,Selvar - (பிச்சையெடுக்கப் போவர்கள்;) (ஆதலால்)
மணி மின்னு மேனி,Mani minnu meni - நீலமணிபோல் மின்னுகின்ற திருமேனியையுடைய
நம் மாயவன்,Nam maayavan - எம்பெருமானுடைய
பேர்,Per - திருநாமங்களை
சொல்லி,Solli - ஸங்கீர்த்தனம் பண்ணி
வாழ்மின்,Vazhmin - வாழுங்கள்.
3025திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (ஸீதாபிராட்டிக்காக இலங்கை பாழாளாகப் படைபொருத பெருமானது திருவடிகளில் திருத்துழாயை என்மகள் விரும்பா நின்றாளென்கிறாள்.) 8
கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8
பதவுரை Show / Hide
நங்கைமீர்,nangaimir - பெண்காள்!
கொம்பு போல் சீதை பொருட்டு,kombu pol seethai poruttu - பூங்கொடி போன்ற ஸீதாபிராட்டியின் பொருட்டு
இலங்கை நகர்,ilangai nagar - இலங்காபுரியில்
அம்பு ஏரி,ambu eri - அம்புகளில் நின்றும் கிளம்பும் அக்னியை
உய்த்தவர்,uyithavar - செலுத்தின இராமபிரானுடைய
தாள் இணைமேல்,thaal inaimel - உபயபாதங்களின் மீது
அணி,ani - சாத்தின
வம்பு அவிழ் தண் ஆம் துழாய் மலர்க்கே,vambu avizh thann am thuzhai malarkke - பரிமளப்ரசுரமாய்க் குளிர்ந்தழகிய திருத்துழாயின் மீதே
இவள் நம்பும்,ival nambum - இவள் ஆசைப்படா நின்றாள்;
இதற்கு நான் என் செய்வேன்,itharku naan en seyven - இதற்கு நான் என்ன பரிஹாரம் செய்வது.
3029திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (நப்பின்னைப் பிராட்டி நிமித்தமாக எருதுகளை அடர்க்கும்போதும், ஸீதாபிராட்டி நிமித்தமாக இராவணனை யழிக்கும் போதும் அந்தந்த ஸமங்களிலுண்டான சிரமம் தீரும்படி அடியேன் அவ்வப்போதுகளில் ஸந்நிஹிதனாயிருந்த உபசாரங்கள் செய்யப் பெற்றிலேன்! அப்படியிருந்தும் என்னுடைய ஹ்ருதயத்தையே உனக்குப் பரம போக்யமாகக் கொண்ட விதம் என்னே! என்று ஈடுபடுகிறார்.) 1
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்! பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1
பதவுரை Show / Hide
கோவை வாயாள் பொருட்டு,kovai vaayaal poruttu - கோவைக்கனிபோற் சிவந்த அதரத்தையுடையவளான நப்பின்னைப் பிராட்டி நிமித்தமாக
ஏற்றின்,etrin - எருதுகளினுடைய
எருத்தம்,eruththam - பிடரியை
இறுத்தாய்,iruththai - முறித்தவனே!
மதிள்,madhil - மதிள் சூழ்ந்த
இலங்கை,ilangai - லங்காபுரிக்கு
கோவை,kovai - அரசனான ராவணன்
லீய,leeya - முடியும்படியாக
குனித்தாய்,kuniththai - வளைத்தவனே!
குலம் நல் யானை,kulam nal yaanai - நல்ல ஜாதியிலே பிறந்து அழகியதான குலவயா பீடயானையினுடைய
மருப்பு,maruppu - கொம்பை
ஒசித்தாய்,osiththai - முறித்தொழிந்தவனே!
பூவை லீயா நீர்,poovai leeya neer - புஷ்பத்தை விட்டு நீங்காத தீர்த்தத்தை (புஷ்பத்தையும் தீர்த்தத்தையும் என்றபடி)
தூவி,thoovi - பணிமாறி
போதால்,pothaal - உரிய காலங்களில்
வணங்கேன் ஏலம்,vanangean elam - உன்னைப் பணிந்திலேனாகிலும்
நின்,nin - உன்னுடைய
பூவை லீ ஆம் மேனிக்கு,poovai lee aam menikku - காயாம் பூப்போன்ற திருமேனிக்கு
பூகம் சாந்து,poogam saandhu - சாத்தத் தகுதியான சந்தனம்
என் நெஞ்சமே,en nenjame - எனது நெஞ்சமேயாகும்.
3044திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி - கோமள வான் கன்றைப் புல்கி, -இவை ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்; போம் இள நாகத்தின் பின் போய்,-அத்தைப் புல்கி இவ்விளமையும் மார்த்தவமும் அழகும் எம்பெருமானோடே கலந்த திரு வனந்த வாழ்வானுக்கு அல்லது கூடாது ஆதலால் ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்; அருவினை யாட்டியேன் பெற்ற கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்து என்னாய் விளையும் என்று அறிகிறிலேன் -என்கிறாள்) 5
கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்; போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்; ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5
பதவுரை Show / Hide
கோமளம் வான் கன்றை புல்கி,Komalam vaan kanrai pulgi - இனையபெரிய கன்றுகளைத் தழுவி(இவை)
கோவிந்தன் மேய்த்தன என்னும்,Govindan meyththana ennum - பசுமேய்க்க முடிசூடின கண்ணன் (இனிது உகந்து) மேய்த்தவை என்று கூறுவாள்;
போம் இளம் நாகத்தின் பின் போய்,Poam ilam naagaththin pin poay - இஷ்டப்படி ஓடுகின்ற இளைய நாகத்தின் பின்னே (இதுபோனவிடத்தில் அவனையும் காணலாம் என்று நினைத்துச்) சென்று
அவன் கிடக்கை,Avan kidakkai - அவன் பள்ளிகொள்ளும் படுக்கை
ஈது என்னும்,Eedhu ennum - இது என்று சொல்லுவாள்;
அரு வினையாட்டியேன் பெற்ற,Aru vinaiyaattiyen petra - (அநுபவித்து முடிக்க) அரிய பாபத்தை யுடையேனான நான்பெற்ற
கோமளம் வல்லியை,Komalam valliyai - ம்ருதுஸ்வபாவையாய், கொடிபோன்ற இவளை
மாயோன்,Maayon - எம்பெருமான்
மால் செய்து,Maal seiththu - மயக்கி
செய்கின்ற கூத்து,Seiginra kooththu - பண்ணுகிற இத்தகைய கூத்தாட்டு
ஆம் அளவு,Aam alavu - எவ்வளவில் ஆகும் என்று
ஒன்றும் அறியேன்,Ondrum ariyen - ஒன்றும் அறிகிலேன்.
3060திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (தாம் பாடுகிற கவிகளின் இனிமையைத் தாம் அநுஸந்தித்து, எம்பெருமானுக்கு நல்லராயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றைக் கேட்டால் எங்ஙனே இனியராகிறாரோ வென்கிறார்.) 10
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும் கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10
பதவுரை Show / Hide
உண்டும்,Undum - (ப்ரளயத்திலே) உண்டு வயிற்றிலே வைத்தும்
உமிழ்ந்தும்,Umizhndhum - பிறகு வெளி நாடுகாண உமிழ்ந்தும்
கடந்தும்,Kadandhum - (மற்றொருகால்) அளந்து காற்கீழேயிட்டும்
இடந்தும்,Idandhum - (அவாந்தர ப்ரளப்த்திலே வராஹ ரூபியாய்) இடந்தெடுத்தும்
கிடந்தும்;,Kidandhum; - (ஸ்ரீராமாவதாரத்திலே) கடற்கரையிலே கிடந்தும்
நின்றும்,Ninrum - இராவணவதத்தின் பிறகு தேவர்கட்குக் காட்சி கொடுத்துநின்றும்
கொண்ட கோலத்தொடு,Kondha kola thodu - மீண்டுவந்து பட்டாபிஷேகம் பண்ணின கோலத்தொடே
வீற்றிருந்தும்,Veevirundhum - எழுந்தருளியிருந்தும்
மணம் கூடியும்,Manam koodiyum - பதினோராயிரம் ஆண்டு பூமியை ரக்ஷிக்கையாலே பூமிப்பிராட்டி (விரும்பியணைக்க அவளோடே ஸம்ச்லேஷித்தும்)
கண்ட ஆற்றால்,Kanda aatral - இப்படி ப்ரத்யக்ஷ்மாகக் கண்ட சேடிதங்களால்
உலகு தனதே என,Ulagu thanadhe ena - உலகம் தனக்கே பேஷம் என்று நாடாகச்சொல்லும்படி
நின்றான் தன்னை,Ninran thanai - நின்ற ஸர்வேச்வரன் விஷயத்தில்
வண் தமிழ்,Van Tamil - அழகிய தமிழ்ப்பிரபந்தத்தை
நூற்க,Noorka - தொடுக்கைக்கு
நோற்றேன்,Noottren - புண்ணியம் பண்ணினேன்: (இத்திவ்யப்ரந்தமானது)
அடியார்க்கு,Adiyarku - எம்பெருமானடியார்கட்கு
ளஇன்பம் மாரி,Inbam maari - ஆனந்த மழைபொழியும் மேகமாயிரா நின்றது.
3088திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((தளிர்நிறத்தால்) இராமபிரானுடைய சேஷத்வத்திற்கு உறுப்பல்லாத அறிவு எனக்கு வேண்டாவென்கிறாள்.) 5
தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5
பதவுரை Show / Hide
தளிர் நிறத்தால் குறைவு இல்லா,Thalir nirathaal kuraivu illaa - தளிர்போன்றழகிய நிறத்தால் பரிபூர்ணையாய்
தனி சிறையில் விளிப்புற்ற,Thani siraiyil vilipputra - தனிச்சிறையிருந்ததனால் ப்ரஸித்தி பெற்றவளாய்
கிளி மொழியாள் காரணம்; ஆ,Kili mozhiyal kaaranam; aa - கிளியினதுபோன்ற இனிய மொழியையுடையளான ஸீதா பிராட்டிநிமித்தமாக
கிளர் அரக்கன் நகர் எரித்த,Kilar arakkan nagar eritha - செருக்கனான இராவணனுடைய பட்டணத்தை நெருப்புக்கு இரையாக்கினவனும்
களி மலர்துழாய் அலங்கல் கமழ் முடியன்,Kali malarthuzhai alangai kamazh mudiyan - தேனையடைய மலரோடுகூடின திருத்துழாய் மாலையாலே பரிமளிக்கின்ற திருமுடியையுடையவனும்
கடல் ஞாலத்து,Kadal gnaalathu - கடல்சூழ்ந்த மண்ணுலகில்
அளிமிக்கான்,Alimikkaan - மிகுந்த அன்பையுடையவனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
அறிவினால் குறைவு இலம்,Arivinaal kuraivu ilam - அறிவில் அபேக்ஷை யுடையோமல்லோம்.
3132திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இவ்வுலகத்தில் பலபல காரியங்கள் நடைபெற்றுவந்தாலும் அவையொன்றும் ஆழ்வாருடைய திருக்கண்ணில் படாமே ஒரே ஒரு விஷயந்தான் தமது திருக்கண்களுக்குப் புலப்டுகின்றதாக இதில் அருளிச் செய்கிறார். எங்கு பார்த்தாலும் பாகவத கோஷ்டி யொன்றே ஸேவை ஸாதிக்கின்றதாம் தமக்கு.) 5
செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5
பதவுரை Show / Hide
செய்கின்றது,Seyginradhu - இவர்கள் செய்கிற காரியம்
என் கண்ணுக்கு,Enn Kannuku - நான் பார்க்குமிடத்து
ஒன்றே ஒக்கின்றது,Ondre Okkinradhu - ஒன்றுபோலவே யிரா நின்றது;
இ உலகத்து,E Ulakathu - இவ்விபூதியிலே
வைகுந்தன் பூதங்களே,Vaikunthan Poothangaley - பகவத்பக்தர்களே
மயாத்தினால்,Mayathinal - யதேஷ்டமாக
எங்கும் மன்னி,Engum Manni - எல்லாவிடங்களிலும் நிறைந்து
ஆய்,Aay - இருக்கின்றார்கள்
அரக்கர்,Arakkar - ராக்ஷசர்களாவும்
அசுரர்,Asurar - அசுரர்களாகவும்
பிறந்தீர் உள்ளீர் ஏல்,Pirandheer Ullir El - பிறந்தவர்களாயிருப்பீர்களாகில்
தொண்டீர்,Tondheer - இதரவிஷயங்களிலலே சபவர்களாயிருப்பவர்களே!
கொன்று,Konru - உங்களைக் கொலைசெய்து
ஊழி பெயர்த்திடும்,Uuzhi Peyarthidum - யுகத்தையே மாற்றிவிடுவீர்கள்; (கலியுகத்ததைக் கிருதயகமாகவே ஆக்கிவீடவார்கள்)
உய்யும் வகை இல்லை,Uyyum Vagai Illai - (ஆதலால் உங்களுக்கு) பிழைக்கும் வழிஇல்லை;
ஐயம் ஒள்று இல்லை,Aiyam Olru Illai - (இதில்) சிறிதும் ஸந்தேஹமில்லை.
3152திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (அநிஷ்டங்களைத் தொலைக்க வல்லனான இராமபிரானும் உதவ வருகின்றிலன்; முடியவும் வழி தெரியாமல் திகைக்கின்றேனென்கிறாள்.) 3
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும் ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால் காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால் மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3
பதவுரை Show / Hide
நெஞ்சமே,Nenjame - மனமே!
நீயும்,Neeyum - (எல்லாக் காரியங்களுக்கும் முதற்கருவியான நீயும்
பாங்கு அல்லை காண்,Paangu allai kaan - எனக்கு விதேயமாக இருக்கிறாயில்லை;
நின் இரவும்,Ninn iravum - ஏற்கனவே நீண்டு வருகின்ற ராத்திரியும்
ஓயும் பொழுது இன்றி,Oyum pozhudhu indri - ஓயுங்காலம் இல்லாமல்
ஊழி ஆய்,Uuzhi aay - ஒரு கல்பமாய் கொண்டு
நீண்டது,Neendadhu - வளர்ந்து விட்டது;
ஆல்,Aal - அந்தோ;
காயும்,Kaayum - (விரோதிகளைக்) காய்கின்ற
சுடு சிலை,Sudu silai - கடிய சார்ங்கவில்லையுடைய
என் காகுத்தன்,En Kaaguthan - இராமபிரான்
வாரான்,Vaaraan - வந்து முகம்காட்டுகின்றவன்;
வல்வினையேன்,Valvinaiyene - வலிய பாபத்தையுடையேனான நான்
பெண் பிறந்து,Pen pirandhu - பெண்ணாய்ப்பிறந்து
மாயும் வகை அறியேன்?,Maayum vakai arien - முடியும் வழியை அறிகின்றிலேன்.
3154திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராய்கிறிலர்-அவர்கள் உதவாத போது உதவும் கிருஷ்ணனும் வருகிறிலன் -நான் சப்தாவசேஷை யானேன் என்கிறாள்.) 5
ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும் நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால் கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே.–5-4-5
பதவுரை Show / Hide
அன்னையரும்,Annaiyarum - தாய்மாரும்
தோழியரும்,Thozhiyarum - தோழிமாரும்
நீர் என்னே என்னாதே,Neer enne ennaadhe - ‘இப்படியும் ஒரு நீர்மையுண்டாவதே!’ என்று என் திறத்தில் இரங்காமல்
நீள் இரவும்,Neel iravum - நீண்ட இராமுழுவதும்
துஞ்சவர்,Thunjavar - உறங்காநிற்பர்கள்;
ஆல்,Aal - அந்தோ!;
கார் அன்ன,Kaar anna - மேகத்தையொத்த
மேனி,Meni - திருமேனியையுடைய
நம் கண்ணனும்,Nam kannanum - நமது கண்ணபிரானும்
வாரான்,Vaaraan - வந்து முகம்காட்டுகின்றிலன்;
வல்வினை யென் பின் நின்று,Valvinai yen pin nindru - பெரும்பாவியான நான் முடிந்த பின்பும் நின்று கொண்டு
பேர்,Per - என் பேர்
என்னை மாயாது,Ennai maayadhu - என்னை முடிய வொட்டுகிறதில்லை
என்னை ஆராய்வார் ஆர்,Ennai araayvaar aar - என்னைப் பற்றி சிந்திப்பார் ஆருமில்லையே!
3180திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ பன்னீராயிரப்படி -அநந்தரம் குரூரமான கர்ம பிரகாரங்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னும் என்கிறாள்.) 9
கொடிய வினை யாதும் இலனே என்னும் கொடிய வினை ஆவேனும் யானே என்னும் கொடிய வினை செய்வேனும் யானே என்னும் கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும் கொடியான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ? கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்? கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9
பதவுரை Show / Hide
கொடிய வினை யாதும் இலன் என்னும்,Kodiya vinai yaadhum ilan ennum - (இப்பெண்பிள்ளை) கொடிய கருமங்களின் பற்று சிறிது முடையேனல்லேன் நான் என்கிறாள்;
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்,Kodiya vinai aavenum yaane ennum - அக்கொடியகருமங்களும் எனது நிக்ரஹங்களும் என்கிறாள்;
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்,Kodiya vinai seivenum yaane ennum - ஆச்ரிதவிரோதிகளுக்குக் கொடியபாவங்களை விளைப்பதும் நானே என்கிறாள்;
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்,Kodiya vinai theerpenum yaane ennum - (அடியார்கட்குக்) கொடிய பாவங்களைத் தீர்த்துக் கொடுப்பதும் நானே யென்கிறாள்;
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்,Kodiyan ilangai settraenae ennum - கொடியவனான இராவணனுடைய இலங்காபுரியைத் தொலைத்த்தும் நானே யென்கிறாள்;
கொடிய புள் உடையவன் ஏற கொலோ,Kodiya pul udaiyavan eerakolo - (இவன் இப்படிச் சொல்லுவது) ஆச்ரித விரோதிகளுக்குக் கொடியவனான பெரிய திருவடியை த்வஜமாகவுடைய எம்பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ?
கொடியேன் கொடி என் மகள் கோலங்கள் இவை,Kodiyaan kodi en magal kolangal ivai - கொடியேனான என்னுடைய கொடி போன்ற இம்மகளின் அழகிய சேஷ்டைகளான இவற்றைப் பற்றி
கொடிய உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,Kodiya ulagaththirkku en sollugean - சொல்லு சொல்லென்று ஹிம்ஸிக்கிற உங்களுக்கு என்னவென்று சொல்லுவேன்?.
3184திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவடிகளை நான் பெறும் இடத்தில் பிரதிபந்தகம் உண்டு எனில் அத்தையும் நீயே போக்கி உன் கிருபையால் ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் .) 2
அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே! திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2
பதவுரை Show / Hide
இலங்கை,Ilangai - லங்காபுரியை
செத்த,Seththa - தொலைத்த
அம்மானே,Ammaaney - ஸ்வாமியே!
திங்கள் சேர்,Thingal ser - சந்திரனையும் சேர்ந்திருக்கிற
மணிமாடம்,Manimaadam - மணி மயமான மாடங்களையுடைத்தாய்
நீடு,Needu - விசாலமான திருவீதிகளையுடைந்தாயிருக்கிற
கிரீவரமங்கலம் நகர் உறை,Sreevaramangalam nagar urai - கிரீவரமங்கையிலே நித்யவாஸம் செய்தருளுகிற
சங்கு சக்கரத்தாய்,Sangu sakkaraththaay - சங்கு சக்கரபாணியான ஸர்வேச்வரனே
நான்,Naan - அடியேன்
அங்குற்றேன் அல்லேன் ,Ankutren allean - நித்யஸேவை பண்ணுகிற நித்யஸூரிகளிலே சேர்ந்தவனல்லேன்.
இங்குற்றேன் அல்லேன்,Ingurtren allean - உன்னைக் கனவிலுமறியாத ஸம்ஸாரிகள் படியுமுடையேனல்லேன்
உன்னை காணும் அவாவில் வீழ்ந்து,Unnai kaanum avaavil veezhndhu - உன்னைக் காணவேணுமென்கிற ஆசையில் படிந்தவானி
எங்குற்றேனும் அல்லேன்,Enguttrenum allean - ஒருவர் படியிலும் சேராதவனாயிரா நின்றேன்;
தமியேனுனக்கு,Thamiyean unakku - இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே
அருளாய்,Arulaay - அருள்புரியவேணும்.
3236திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (சில வண்டுகளைக் குறித்துக் கூறுகின்றாள். “எமது தலைவர் பெண் பிறந்தார் காரியமெல்லாம் செய்து தலைக் கட்டி விட்டோமென்றிரப்பர், அப்படி யன்றிக்கே, ரக்ஷ்ய வர்க்கத்திலே நானு மொருத்தி யிருக்கின்றதாகச் சொல்லுங்கோள்“ என்கிறாள்.) 10
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்! தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர் மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10
பதவுரை Show / Hide
வெறி வண்டு இனங்காள்,Veri Vandu Inangkaal - பரிமளம் மிக்க வண்டினங்களே!
உம்மை வேறு கொண்டு,Ummai Veru Kondu - உங்களிடத்திலே விலக்ஷணப்ரதிபத்தி பண்ணி
யான் இரந்தேன்,Yaan Iranthen - அடியேன் ஒன்று
தேறு நீர் பம்பை வடபால் திருவண்வண்டூர்,Theru Neer Pambai Vadapaal Thiru Vanvandur - தெளிந்தநீரையுடைய பம்பையாற்றின் வடபக்கத்திலுள்ள தான திருவண்வண்டுரிலே (எழுந்தருளியிருக்கின்ற)
மாறு இல் போர் அரக்கன்,Maaru Il Por Arakkan - நிகரற்ற யுத்தம் செய்வதில்வல்லவனான இராவணனுடைய
மதிள்,Mathil - மதிள்முதலிய யாவும்
நீறு எழ,Neeru Ezha - பொடிபொடியாம்படி
செற்று,Settru - இலங்கையையழித்து (அதனால்)
உகந்த,Ugandha - திருவுள்ளமுவந்த
எறு சேவகனார்க்கு,Eru Sevakanaarkku - மஹாவீரனான ஸ்ரீராமபிரானிடத்திலே
என்னையும் உள்ள் என்மின்கள்,Ennaiyum Ull Enminkal - ரக்ஷ்யவர்த்திலே நானுமொருத்தி இருப்பதாகச் சொல்லுங்கோள்.
3238திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (இப் பாசுரத்தில் “என்னுடைய பந்துங்கழலும் தந்துபோகு நம்பீ!“ என்றிருக்கையாலே பந்தும் கழலுமாகிற சில லீலோபகரணங்கள் எம்பெருமான் கையில் இருப்பதாகவும் அவற்றைப் பராங்குச நாயகி அபேக்ஷிப்பதாகவும் தெரிகிறது.) 1
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன் மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே! உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்? என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1
பதவுரை Show / Hide
மன்னுடை இலங்கை,Manudai Ilankai - அரசனையுடைத்தா யிருந்த லங்காபுரியினுடைய
அரண்,Aran - கோட்டைகளையெல்லாம்
காய்ந்த,Kaintha - சீறியழித்த
மாயவனே,Maayavane - ஆச்சரியசேஷ்டிதங்களை யுடையவனே
நம்பி,Nambi - ஸகலருணபரிபூரணனே!
நின் அருள் சூடுவார்,Nin Arul Sooduvaar - உனது கிருபையை அநுபவிப்பவர்களான
மின் இடை மடவார்கள் முன்பு,Min Idai Madavaarkal Munbu - மின்னற்கொடிபோன்ற இடையை யுடையவர்களான மாதர்களின் முன்னிலையில்
நான் அது அஞ்சுவன்,Naan Adhu Anjuvan - நான அதைப்பற்றி அஞ்சாநின்றேன், (அவர்கள் உன்னை உபேக்ஷிக்க நேருமென்பதுபற்றி அஞ்சுகின்றே னென்கை)
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்,Unnudaiya Soondaayam Naan Arivan - உன்னுடைய க்ருத்ரிம்மெல்லாம் நானறிவேன்
இனி அது கொண்டு செய்வது என்,Ini Adhu Kondu Seyvadhu En - உனக்கும் எனக்கும் ஸம் பந்தமற்றவின்பு உன்னுடையக்ருத்ரிமத்தால் உனக்கு ஸாத்யமானது என்ன இருக்கிறது?
என்னுடைய பந்தும் கழலும் தந்து,Ennudaiya Bandhum Kazhalum Thandhu - எனது பந்தையும் அம்மானையையும் தீருப்பிக் கொடுத்துவிட்டு
போகு,Pogu - உனக்கு விருப்பமான விடத்தேபோய்ச்சேர்
3290திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் என்மகள் அழகிழந்தாளென்கிறாள். தன்னழகாலே அவனைவசப்படுத்திக் கொள்ள பிறந்தவிவள் அவனழகிலே யீடுபட்டுத் தன்னழகை யிழந்தாளென்று வருந்துகிறாள்.) 9
மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என் பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9
பதவுரை Show / Hide
மாண்பு அமை கோலத்து,Maanpu amai kolaathu - அழகமைந்த வடிவையுடையனான
எம் மாயம் குறளற்கு,Em maayam kuralarku - எம்மையீடுபடுத்திக்கொள்ளும் மாயவாமனமூர்த்தியும்
சேண் சுடர் குன்று அன்ன,Senn sudar kunru anna - உயர்ந்த சோதிமயமான குன்று போன்ற
செம் சுடர் மூர்த்திக்கு,Sem sudar moorthikku - செவ்விய சுடரையுடைய வடிவு கொண்டவனும்
காண் பெருதோற்றத்து,Kaan perudhoatrrathu - அனைத்துலகும் காணப்பர்வத்தையுடைய
என் காகுத்தன் நம்பிக்கு,En kaakuthan nambikku - இராமபிரானுமான பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
என் பூண் புனைமென் முலை,En poon punaimen mulai - ஆபரணங்களையணிந்தமெல்லிய முலைகளை யுடையளான என்மகள்.
தோற்றது பொற்பு,Thoatrrathu porupu - இழந்தது அழகாம்
3293திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (படுக்கைத்தலையிலே மகளைக் காணாத திருத்தாயார் ‘என்மகள் திருக்கோளூர்க்குத்தான் சென்றிருக்கவேணும்‘ என்று அறுதியிட்டுக் கூறுகின்றாள். ஆழ்வாருடைய உண்மையான தன்மை முன்னிரண்டடிகளிற் கூறப்படுகின்றது) 1
உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித் திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1
பதவுரை Show / Hide
உண்ணும் சோறு,Unnum sooru - உண்டு பசீதீர்க்க வேண்டும் படியானசோறும்
பருகும் நீர்,Parukum neer - குடித்து விடாய் தீர்க்க வேண்டும் படியான நீரும்
தின்னும் வெற்றிலையும் எல்லாம்,Thinnum vettrilaiyum ellam - தின்று களிக்கவேண்டும்படியான வெற்றிலையுமாகிய எல்லாப்பொருள்களும்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே,Kannan emperumaan endru endrae - (எனக்கு) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே யென்றுபலகாலும் சொல்லி
கண்கள் நீர்கள் மல்கி,Kangal neergal malgi - கண்ணீர தாரைதாரையாகப் பெருகப்பெற்றிருந்த
என் இள மான்,En ila maan - இளமான் போன்ற என்மகள்
மண்ணினுள்,Manninul - பூமண்டலத்துள்ளே
சீர் வளம் மிக்கவன்,Seer valam mikkavan - சீரும் சிறப்பும் மிகுந்தவனான
அவன்,Avan - அப்பெருமானுடைய
ஊர்,Oor - திவ்யதேசத்தை
வினவி,Vinavi - விசாரித்துக்கொண்டு சென்று
புகும் ஊர்,Pukum oor - சேர்ந்தவிடம்
திருக்கோளூரே,Thirukkoloore - திருக்கோளூராகவே யிருக்க வேணும்
திண்ணம்,Thinnam - இதில் ஸந்தேஹமில்லை
3330திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((புணராநின்ற) ஆழ்வீர்! நீர் இங்ஙனே கிடந்து துடிப்பதேன்? எப்படியும் உம்முடைய விருப்பம் செய்வதாகவே நினைத்திருக்கிறோமென்று திருவேங்கடமுடையான் திருவுள்ளமாக, அது என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளம்? ஒரு நாளிட்டு தரலாகாதோ வென்கிறார்.) 5
புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ! புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ! திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே! திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5
பதவுரை Show / Hide
anru,அன்று - ராமாவதாரத்திலே
punaraa nindra maram ezh,புணரா நின்ற மரம் ஏழ் - ஒன்றொடொன்று பிணைந்திருந்த ஸப்த ஸாலவ்ருக்ஷங்களை
eydha,எய்த - துளைபடுத்தின
oru vil valavaa o,ஒரு வில் வலவா ஓ - ஓ தனிவீரனே!
punar ey nindra maram irandin naduve,புணர் எய் நின்ற மர ம் இரண்டின் நடுவே - சேர்ந்தி பொருத்தி நின்ற இரட்டை மருத மரங்களினிடையே
pon,போன் - தவழ்ந்து சென்ற
mudhalvaa o,முதல்வா ஓ - ஓ மூலபுருஷனே!
thinar aar megham ena,திணர் ஆர் மேகம் என - தின்மை மிக்க மேகங்களென்னும்படி
kaliru serum,களிறு சேரும் - யானைகள் சேருமிடமான
thiruvengadath thaane,திருவேங்கடத் தானே - திருமலையிலெழுந்தருளி யிருப்பவனே
thinar aar saangathu,திணர் ஆர் சார்ங்கத்து - திண்மைமிக்க ஸ்ரீசார்ங்க வில்லையுடைய
una paadham,உன பாதம் - உனது திருவடிகளை
adiyen saervadhu ennaal,அடியேன் சேர்வது எந்நாள் - அடியேன் அணுகப் பெறுவது என்றைக்கோ?
3365திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (நங்காய்! உனக்கு அவன் பக்கலுள்ள ஆசாபாசம் அளவுகடந்திருந்தாலும் அவனே யெழுந்தருளுமளவும் இங்கேயிருக்க ப்ராப்தமேயல்லது அங்குச் செல்லுகை யுக்தமனறென்று தோழி சொல்ல, அதற்கு விடையிறுக்கிறது இப்பாசுரம்.) 7
பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்; ஆரை இனி இங்குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை; ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7
பதவுரை Show / Hide
பேர் எயில் சூழ்,Per eyil sooel - பெரிய மதில்களாலே சூழப்பட்டு
கடல்,Kadal - கடலிடத்தே யுள்ளதான
தென் இலங்கை,Then ilankai - தென்னிலங்காபுரியை
செற்ற,Sera - நீறாக்கி யொழித்த
பிரான்,Piran - எம்பெருமான்
வந்து வீற்றிருந்த,Vandhu veettrirundha - வந்து எழுந்தருளியிருக்குமிடமான
பேர் எயிற்கே,Per eyirke - திருப்பெரெயில் தலத்திற்கே
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது
புக்கு,Pukku - புகுந்து
நாடி,Naadi - அவனைத் தேடி
பேர்த்து எங்கும் வரகாண மாட்டேன்,Perthu engum varakaana maattean - மீண்டு ஒரிடத்திற்கும் வரக்காணேன்:
தோழி –!.,Thozhi –!. - வாராய் தோழியே
இனி இங்கு யாரை உடையம்,Ini ingu yaarai udaiyam - இனி இந்நிலைமையில் யாரைக் துணையாக வுடையோம்?
என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,En nenjam koova vallaarum illai - (என்னை விட்டுப்போன) எனது நெஞ்சை அழைத்துத் தரவல்லாருமில்லை;
இனி,Ini - நெஞ்சம் உதவாதே நீயும் தளர்ந்தபின்பு
ஆரை கொண்டு என்சாதிக் கின்றது,Arai kondu enchaadikindradhu - யாரைத் துணைகொண்டு என்ன பிரயோஜனம் ஸாதிக்கத் தக்கதாயிருக்கின்றது? (ஒன்று மில்லையே.)
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேன்,En nenjam kandadhuvae kandeen - (ஆகையாலே) எனது நெஞ்சு கண்ட விஷயத்தையே நானும் கடைப்படித்தேன்.
3376திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((மாறுநிரைத்தது.) இலங்கையைப் பாழ்படுத்தின விதம் வியந்து கூறப்படுகிறது இதில்.) 7
மாறு நிரைத் திரைக் குஞ்ச ரங்களின் நூறு பிணம் மலை போற் புரளக் கடல் ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7
பதவுரை Show / Hide
appan,அப்பன் - ஸ்வாமியான ஸ்ரீராமபிரான்
ilangai neeru pada setra ner,இலங்கை நீறு பட செற்ற நேர் - லங்காபுரி பஸ்மமாம்படி த்வம்ஸம் பண்ணின நேர்த்தி (எங்ஙனேயிருந்ததென்றால்)
maruniraittu iraikkum sarangaL,மாறுநிரைத்துஇரைக்கும் சரங்கள் - எதிரெதி;ராக நிரைக்கப்பட்டு சப்திக்கிற சரங்களாலே
inam nooru pinam,இனம் நூறு பிணம் - இனமினமாய் நூறு நூறான ராக்ஷ்ஸப்பிணங்களானவை
malai pol purala,மலை போல் புரள - மலை மலையாகப் புரண்டு விழவும்
kadal,கடல் - கடலானது
udhiram punal aa aaru maṭuthu,உதிரம் புனல் ஆ ஆறு மடுத்து - ரக்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே எதிர்த்தோடும்படியாகவுமிருந்தது
3381திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (இராம பிரானுடைய ஒரு விலக்ஷ்ணமான தன்மையை யருளிச் செய்கிறாரிதில்.) 1
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ? புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1
பதவுரை Show / Hide
புல் பா முதல் ஆ,Pul paa mudhal aa - புல்லாகிற பதார்த்தம் முதலாகவும்
புல் எறும்பு ஆதி,Pul erumbu aadhi - மிக அற்பமான எறும்பு முதலாகவும்
நல் பால் அயோத்தியில் வாழும்,Nal paal ayothiyil vaazhum - (ராமகுணங்கள் நடையாடுகிற) நல்ல தேசமான அயோத்யாபுரியில் வாழ்கிற
சராசரம முற்றவும்,Saraasaram mutravum - ஸ்தாவர ஜங்கமங்களானவை யெல்லாவற்றையும்.
ஒன்று இன்றியே,Ondru indriye - ஒருவிதமான ஸாதநாநுஷ்டானமுமில்லாமலிருக்கச் செய்தேயும்
நான் முகனார் பெற்ற நாட்டுளே,Naan muganaar petra naattule - பிரமன் படைத்த இவ்வுலகுக் குள்ளே
நல பாலுக்கு உய்த்தனன்,Nal paalukku uyiththanan - நல்ல ஸ்வபாவத்தையுடைத்தாம் படி பண்ணினான்;
கற்பார்,Karpaar - (ஆதலால்) (உலகில்) கற்க விரும்பு மவர்கள்
இராமபிரானை அல்லாமல் மற்றும் கற்பரோ,iraamapiraanai allaamal matrum karparo - (குணக்கடலாகிய) ஸ்ரீராமனைத் தவிர மற்றொரு வ்யக்தியைக் கற்க நினைப்பர்களோ?
3382திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அங்கு உண்டான சகல சேதனரையும் தன்னை அல்லது அறியாத படி தன் குணத்தால் பந்தித்து அகப்படுத்தி வைத்து -அவர்களை இட்டு வைத்து தானே எழுந்து அருளாதே அவர்களையும் கூடக் கொண்டு திரு நாட்டிலே எழுந்து அருளினான் என்று கீழ் சொன்னதில் காட்டிலும் அதிக குணத்தை அருளிச் செய்கிறார்.) 2
நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ? நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2
பதவுரை Show / Hide
நாட்டில் பிறந்தது,Naattil pirandathu - (தன்வாசியறியாத) இக்கொடிய வுலகத்திலே வந்து பிறந்தது
படாதனபட்டு,Padaadhanapattu - ஸம்ஸாரிகளும் அநுபவியாத கிலேசங்களையநுபவித்து
மனிசர்க்கு ஆ,Manisarkku aa - செய்தநன்றியறியாத மனிசர்களுக்காக
நாட்டை நலியும் அரக்கரை நாடி தடிந்திட்டு,Naattai naliyum arakkarai naadi thandhittu - உலகத்தை ஹிம்ஸிக்கின்ற ராவணாதி ராக்ஷ்ஸர்களை ஆராய்ந்து சென்று கொன்று
நாட்டை அளித்து,Naattai aliththu - (இப்படியாக) நாட்டைரக்ஷித்து
உய்ய செய்து,Uyya seyythu - உஜ்ஜீவனப்படுத்தி
நடந்தமை கேட்டும்,Nadandamai kaettum - பின்பு திருநாட்டுக்கு நடந்த படியைக் கேட்டிருந்தும்
நாட்டில் பிறந்தவர்,Naattil pirandhavar - (அப்பெருமானுடைய திருக்குணங்கள் நடையாடுகிற) நாட்டிலே பிறந்தவர்கள்
நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ,Naaranarkku aal anri aavaro - நாராயணனான அந்த ஸ்ரீராமனுக்கல்லது மற்றொருவர்க்கு ஆட்படுவர்களோ?
3399திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (மாலி மூதலான ப்ரதிகூலவர்க்கத்தை நிரஸித்தருளின ஸர்வேச்வரானைக் காணப்பெறுவோமோ! என்கிறார்.) 8
ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும் ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8
பதவுரை Show / Hide
ஆளியை காண்பரி ஆய்,Aaliyai kaanpari aay - யாளியைக் கண்ட குதிரை போலவும்
அரி காண் நாஜீ ஆய்,Ari kaan Naajee aay - சிங்கத்தைக் கண்ட நாஜீ போலவும்
அரக்கர்,Arakkar - ராக்ஷஸர்கன்
அன்று ஊளையிட்டு,Andru oolaiyittu - அக்காலத்தில் அச்சத்தினாலே கதறிக்கொண்டு
இலங்கை கடந்து,Ilankai kandhu - லங்காபுரியை விட்டு
பிலம் புக்கு ஒளிப்ப,Pilam pukku olibpa - பாதாளத்திலே புகுந்து ஒளிக்கும் படியாக
மீளி அம் புள்ளை கடாய்,Meeli am pullai kadaay - பெருமிடுக்கனாய் அழகியவனான கருடனை நடத்தி
விறல் மாலியை கொன்று,Viral maaliyai kondru - பிரபலனான மாலியைக் கொன்று
பின்னும்,Pinnu - அவ்வளவிலும் விடாதே
ஆள்,Aal - மிகவும் சூரர்களான ஆண் புலிகளை (க்கொன்று)
உயர் குன்றங்கள் செய்து,Uyar kunrangal seydhu - பருப்பருந்த மலைகளாகக் குவித்து
அடர்த்தானையும்,Adarthaanaiyum - அவர்களை யழித்த பெருமானையும்
காண்டும் கொல் ஒ,Kaandum kol o - காணப்பெறுவோமோ?
3400திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (விபீஷண பக்ஷ்பாதத்தாலே ராவண குலத்தை நிச்சேஷமாக முடித்து அவனுக்கு லங்காராஜ்யத்தையுங் கொடுத்துத் தானும் அபிஷிக்தனாய் ராஜ்யம் பண்ணித் தன்னடிச்சோதியேற் வெடுந்தருளின் ஸ்ரீராமபிரானை, அந்த மேன்மையோடே யிருக்கச் செய்தே நாம் காணவல்லோமோ நெஞ்சமே! என்று தமது திருவுள்ளத்தை நோக்கியருளிச் செய்கிறார்.) 9
காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும் ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9
பதவுரை Show / Hide
நெஞ்சமே,Nenjame - மனமே!
கடிய வினையே முயலும்,Kadiya vinaiye muyalum - மிகக் கொடிய பரஹிம்ஸா ரூபமான தீவினைகளிலேயே முயற்சி செய்பவனாய்
ஆண்,Aan - பௌருஷம் மிக்கவனாய்
திறல்,Thiral - வீர சூர பராக்ரமசாலியாய்
மீளி,Meeli - சிங்கம் போன்றவனாய்
மொய்ம்பின்,Moimpin - பெருமிடுக்கையுடையனான
அரக்கன்,Arakkan - இராவணனென்னும் ராக்ஷ்ஸனுடைய
குலத்தை,Kulaththai - குடும்பத்தை
தடிந்து,Tadindhu - தொலைத்திட்டு
மீண்டும்,Meendum - பின்னையும்
அவன் தம் பிக்கே,Avan tham pikke - அவனுடன் பிறந்தவனான விபீஷணழ்வானுக்கே
விங் நீர் இலங்கை அருளி,Ving neer ilankai aruli - கடலிடத்துள்ள லங்காராஜ்யத்தை யருள் செய்து
ஆண்டு,Aandu - அயோதயையி லெழுந்தருளி நெடுங்காலம் அரசு புரிந்து
தன் சோதி புக்க,Than sodhi pukka - தன்னடிச் சோதியான பரமபதத்திலே சென்று சேர்ந்த
அமரர் அரி ஏற்றினை,Amarar ari yattrinai - நித்யஸீரிநாதனான பெருமானை
காண்டும் கொல் ஒ,Kaandum kol o - காணப்பெறுவோமோ
3408திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (அவனுடைய திருமகரகுண்டலங்களும் திருக்காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்.) 6
உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்? பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6
பதவுரை Show / Hide
ஏழையாக்கும்,Ezhaiyaakkum - பெண்டுகளுக்கும்
அசுரர்க்கும் அரக்கர் கட்கும்,Asurarkkum arakkar kadkum - அஸூர ராக்ஷஸர்களுக்கும்
உய்வு இடம் எவ்விடம் என்று இலங்கி,Uyvu idam evvidam endru ilangi - பிழைக்கும் வரது ஏது? என்னும்படி விளங்கிக் கொண்டு
மகரம் தழைக்கும் தளிர்கொல்,Makaram thalaikkum thalir kol - மகரவடிவமாய்த் தழைத்த சில தளிர்களோ?
பை விடம் பாம்பு அணையான்,Pai vidam paampu anaiyaan - படமெடுப்பதும் விஷத்தைக்குவதுமான பாம்பைக் படுக்கை யாகவுடைய பெருமானுடைய
திரு குண்டலம்,Thiru kundalam - திருமகர குண்டலங்களை யுடைய காதுகள் தானே
கைவிடல் ஒன்றும் இன்றி,Kaividal ondrum indri - ஒய்வில்லாமல் நிரந்தரமாக
அடுகின்றன,Adukindran - நலியாநின்றன;
காண்மின்கள்,Kaanmingal - காணுகோள்.
3448திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –என்றும் காண வேணும் என்று மிகவும் நோவு பட்டு இருக்கும் இருப்போ-என் திறத்து செய்து அருள பார்த்திற்று -ஐயோ இங்கனம் படாமே உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார்.) 2
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன் பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே ! பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2
பதவுரை Show / Hide
காணும் ஆறு அருளாய் என்று என்றே,Kaanum aaru arulai endru endre - (உன்னை நான்) காணும் வகை செய்தருளவேணுமென்று பலகாலும் சொல்லிக்கொண்டே
கலங்கி,Kalangi - (ஆசைப்பட்டபடி காணப்பெறாமையாலே) கலக்கங்கொண்டு
கண்ண நீர் அலமா,Kanna neer alamaa - கண்ணீர் பரவாநிற்க,
வினையேன்,Vinaiyen - (காணப்பெறாத) பாவத்தை யுடையேனான நான்
பேணும் ஆறு எல்லாம் பேணி,Penum aaru ellam peni - (தூதுவிடுகை மடலெடுக்கை முதலாக) எதுஎது செய்யலாமென்று நினைத்தேனோ அதுவெல்லாம் செய்தும் (கிடையாமையாலே)
நின் பெயரே பிதற்றும் ஆறு எனக்கு அருள்,Nin peyare pitharrum aaru enakku arul - உனது திருநாமங்களையே பிதற்றிக்கொண்டிருக்கம்படியான விதுலேயன்றோ எனக்கு நீ செய்து கொடுத்தவருள்
அந்தோ,Antho - ஐயோ! (இவ்வளவேயோ நான் பெற்ற பாக்கியம்!)
காகுத்தர்,Kaaguthar - இராமனாய்த் தோன்றி எளியனானவனே!
தொண்டனேன் கற்பகம் கனியே,Thondanen karpagam kaniye - அடியேனக்குக் கல்பவ்ருக்ஷ பலனாகத்தோன்றியிருப்பவனே!
பேணுவார் அமுதே,Penuvar amuthe - ஆசைப்பட்டவர்களுக்கு அமுதம் போன்றவனே!
பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா,Periya than punal soozh peru nilam eduttha peralaa - விசாலமாய்க் குளிர்ந்த பிரளய வெள்ளத்திலே யழுந்தின மஹாபூமியை உயரவெடுத்த மஹாநுபாவனே!
காணும் ஆறு அருளாய்,Kaanum aaru arulai - (உன்னைநான்) காணும்படி க்ருபை பண்ணவேணும்.
3503திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்னிடத்தே வருகைக்கு இடையூறா யுள்ளவற்றையும் தானே தவிர்த்து, திருக்கடித்தானத்திலும் என்னுடைய ஹ்ருதயத்திலும் ஒருங்கே அபிநிவேசத்தைப்பண்ணி என்னுள்ளே யெழுந்தருளியிரா நின்றானென்கிறார்.) 2
திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர் செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2
பதவுரை Show / Hide
அன்று,Andru - முன் பொருகாலத்தில்
செரு கடுத்து,Seru kaduthu - யுத்தத்திலே செருக்கு விஞ்சி
திகைத்த அரக்கரை,Thigaiya arakkarai - ஆரைச் சண்டைக்கிழுக்கலாமென்று திசைத்திருந்த ராக்ஷஸர்கள்
உரு கெட,Uru keda - உருவம் கெடும்படியாக
வாளி வொழிந்த ஒருவன் கண்டீர்,Vaalai vazhindha oruvan kandeer - அம்புகளைப் பொழிந்த மஹா வீரனன்றோ
திருக்கடித்தானமும் என்னுடைய சிங்கையும்,Thirukkadiththaanamum ennudaiya singaiyum - திருக்கடித்தானப்பதியையும் எனது நெஞ்சையும்
ஒருக்கத்து,Orukkaththu - ஒருசேரப்பிடித்து
உள்ளே உறையும் பிரான்,Ullae uraiyum piraan - இரண்டினுள்ளும் வர்த்திக்கிற பெருமான்.
3504திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (இப்பாட்டு தனிப்பட அந்வயிக்கமாட்டாது, கீழிரண்டாம் பாட்டுக்கு சேஷபூதமாகியே அந்வயிக்கும். அப்பாட்டின் பின்னடிகள் “செருக்கடுத்தன்று திகைத்தவர்க்கரை உருக்கெட வாளியொழிந்த வொருவனே” என்றுள்ளது. அப்படி வாளியொழிந்த காலத்தில் சக்ரவர்த்தி திருமகனார் இருந்தவிதம் இப்படிப்பட்ட தென்கிறது இப்பாட்டில். “வாளிபொழிந்தபடி எங்ஙனே யென்ன ஈங்ஙனே யென்கிறார்“ என்பது ஈட்டு அவதாரிகை.) 3
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான் திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை மறவி யுறைகின்ற மாயப்பிரானே–8-6-3
பதவுரை Show / Hide
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று,Oruvar iruvar or moovaer ena ninru - (இலங்கையில் மூல பலத்தை முடிக்குமிடத்து) முதலில் ஒருவனாய், பின்பு இருவராய், பின்னையும் மூவராய்த் தோன்றி நின்று (பின்னையும்)
உருவு காத்து,Uruvu kaathu - ரூபம் இலக்குக் குறிக்க வொண்ணாதபடி இந்திரியத்திற்கு அவிஷயமாகி செருக்குத்தன்சு திகைத்த வரைக்கரை உருக்கெட வாளி யொழிந்த வொருவன்
திரு அமர் மார்வன்,Thiru amar maarvan - லக்ஷிமியைத் திருமார்பிலே யுடையனாய்க் கொண்டு
திருக்கடித்தானத்தை மருவி உறைகின்ற மாயப்பிரான்,Thirukkadiththaanathai maruvi uraiyinra maayappiraan - திருக்கடித்தானத்தே பொருந்தி நித்யவாஸம் பண்ணுகிற ஆச்சர்ய சீலனான எம்பெருமான்
உள்ளுந்தோறும் தித்திப்பான்,Ullundhoarum thiththippaan - நினைக்குந்தோறும் இனியனாகா நின்றான்.
3513திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (நான் அர்த்தியாய்க் கூப்பிட்டழைக்க விடாயெல்லாம் தீரும்படி. தான் அர்த்தியாய் என்னெஞ்சிலே பெறாப்பேறு பெற்றானாகப் புகுந்திராநின்றானென்கிறார்.) 1
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன் கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1
பதவுரை Show / Hide
என்னை,Ennai - அடியனை
வியந்து,Viyandhu - திருவுள்ளமுவந்து
தன் பொன் அடி கீழ் இருத்தும் என்று,Than pon adi keezh iruththum endru - தன் திருவடிகளின் கீழே இருத்தியருள்வானாக வென்று
அருத்தித்து எனைத்தோர் பல நாள்,Aruththiththu enai thoor pala naal - அனேக காலம் நாள்தோறும்
அழைத்தேற்கு,Azhaiththaeerku - அழைத்துக் கூப்பிட்ட வென் விஷயத்தில்
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து,Poruththam udai vaamanan thaan pugundhu - ப்ராவண்யமுடையனான எம்பெருமான் தானே வந்து புகுந்து
என் தன் கருத்தை உற,En than karuththai ura - என்னுடைய கருத்தைத் தானுடையனாய்க்கொண்டு
கண்டு கொண்டு,Kandu kondu - என்னையே பார்த்துக்கொண்டு
வீற்றிருந்தான்,Veetrirundhaan - எழுந்தருளியிரா நின்றான்
3521திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (எம்பெருமான் நிர்ஹேதுகமாகத் தம்மை விஷயீகரித்தமையைக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி ஆழ்வீர்! ஒரு வ்யாஜமாத்ரமுமில்லாமல் எம்பெருமான் விஷயீகரிப்பனோ? ஏதேனுமொரு வ்யாஜ மிருக்குமே, அதைச் சொல்லிக்காணீர், என்று சிலர் கேட்பதாகக் கொண்டு, அவனுடைய விஷயீகாரத்தை விலக்காமையாகிற அனுமதிமாத்திரமே நான் பண்ணினது. இவ்வளவேயென்கிறாரிப்பாட்டில். “மன்னவைத்தேன் மதியாலே“ என்ற ஈற்றடி இப்பாட்டுக்கு உயிரானது. ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் ப்ரகரணத்தில் (110) “மதியால் இசைந்தோமென்னும் அநுமதீச்சைகள் இருத்துவ மென்னாத வென்னை இசைவித்த என்னிசைவினது“ என்ற சூர்ணையின் பொருள் இங்கே அறியத்தக்கது.) 9
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும் வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே–8-7-9
பதவுரை Show / Hide
வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும்,Vayittril kondu nindrozhandhaarum - தாயானவள் வயிற்றிலே வைத்து நோக்குமா போலே ரக்ஷகராகின்ற இந்நிலத்தரசர்களையும்
யவரும்,Yavarum - அவர்களுக்கும் மேலான பிரமன் முதலானாரையும்
வயிற்றில் கொண்டு நின்று,Vayittril kondu nindru - தம்முடைய ஸ்வரூபைக தேசத்திலே கொண்டு நின்று
ஒரு மூ உலகும்,Oru moo ulagum - மூவுலகங்களையும்
தன் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை,Than vayittril kondu nindra vannam nindra maalai - தன்னுடைய வயிற்றிலே கொண்டு அநாயாஸமாக இருக்கின்ற திருமாலை
மதியாலே,Madhiyalae - அவர் தந்த அனுமதியாலே
வயிற்றில் கொண்டு,Vayittril kondu - என்னுள்ளே கொண்டு
மன்ன வைத்தேன்,Manna vaiththen - பேராதபடி வைத்தேன்.
3522திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இப்படி யென்னுள்ளே புகுந்தவனை நான் இனியொரு நாளும் விட்டு வருத்தகில்லேனென்கிறார்.) 10
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும் மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால் பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10
பதவுரை Show / Hide
மொய்த்து ஏய் திரை மோது,Moiththu ey thirai modhu - செறித்து ஏய்த்த அலைகள் மோதப்பெற்ற
தண் பாற்கடலுள்,Than paarkadalul - குளிர்ந்த திருப்பாற்கடலிலே
வைத்து ஏய் சுடர் பாம்பு அணை நம்பரனை,Vaiththu ey sudar paambu anai namparanai - படமெடுத்துத் தகுதியான தேஜஸ்ஸையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய எம்பெருமானை
மதியால்,Madhiyal - அனுமதியாலே
எனது உள்ளத்து அகத்தே,Enathu ullaththu agaththae - என்னெஞ்சிலுள்ளே
வைத்தேன்,Vaiththen - பொருந்த வைத்தேன்,
என்றும் எப்போதும் எய்த்தே ஒழிவேன் அல்லேன்,Endrum eppothum eyththae ozhivaen allaen - இனி யொருநாளும் இளைத்துத் தளரமாட்டேன்
3606திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –அவன் பிரிந்த தசையில் அவன் திரு நாமங்களையும் சொல்லாமைக்கு அன்றோ உன்னை நான் வளர்த்தது – ஆனபின்பு அவன் திரு வடிவு போலே இருக்கும் உன் வடிவைக் காட்டி அதின் மேலே அவன் திரு நாமங்களையும் சொல்லி என்னை நோவு செய்யாதே கொள்ளாய் -என்று தன் கிளியைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 6
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6
பதவுரை Show / Hide
நன்கு எண்ணி,Nangu enni - எனக்கு ஆபத்திலே உதவுவாயென்று நன்மையை நினைத்து
நான் வளர்த்த,Naan valartha - நான் போஷித்து வந்த
சிறு கிளி பை தலே,Siru kili pai thale - சிறிய கிளிக் குட்டியே!
இன் குரல் நீ மிழற்றேல்,In kural nee mizhaarel - இனிய குரலைக் கொண்டு நீ தொனி செய்யாதே (ஏனென்னில்)
நின் செய்ய வாய் ஒக்கும் வாயுன்,Nin seiyya vaai okkum vaayun - உனது சிவந்த வாயையொத்த வாயையுடையவனும்
கண்ணன் கை காலினன்,Kannan kai kaalinan - (உனது கண் கை காலோடொத்த) திருக்கண் திருக்கை திருவடிகளையிடையவனும்
நின் பசும் சாமம் நிறத்தன்,Nin pasum saamam nirathan - உன்னுடைய பசுமை யழியாத சாமநிறம் போன்ற நிறத்தை யுடையனும்
என் ஆர் உயிர்,En ar uyir - என்னுடைய அருமையான உயிர் போன்றவனுமான
காகுத்தன்,Kaaguthan - இராமபிரான்
கூட்டுண்டு நீங்கினான்,Koottundu neenginaan - என்னோடே கலந்துப் பிரிந்தான்
3674திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (வெளியே தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது; அந்தத் தடாகத்தை அடியவர்களே! வந்து தொழுமின் என்றழைக்கிறார்.) 8
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின் உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர் பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8
பதவுரை Show / Hide
உயர் கொள் சோலை,Uyar kol solai - உன்னதமான சோலைகளையும்
தயதரதன் பெற்ற மரகதம் மணி தடத்தினை,Dayadharan petra maragatham mani tadathinai - தசரத சக்ரவர்த்தி பெற்ற மரகத மணித் தடாகம் போன்றவனான எம்பெருமானை,
ஒண் தடம் அணி,On tadam ani - அழகிய தடாகங்களையும்
ஒளி திருமோகூர்,Oli thirumogoor - அலங்காரமாக உடைத்தான அழகிய திருமோகூர்லே,
அடியவர்,Adiyavar - அடியீர்கள்!
ஆயிரம் பெயர்கள் உடைய,Ayiram peyargal udaiya - ஸஹஸ்ர நாமப்ரதிபாத்யனாய் அடைந்து வந்து தொழுமின் வந்து கிட்டித் தொழுங்கோள்;
வல் அரக்கர்,Val arakkar - புக்கு அழுந்த கொடிய ராக்ஷசகர்கள் புகுந்து மடியும்படியாக
துயர் கடிது கெடும்,Thuyar kadidu kedum - கிலேசமெல்லாம் விரைவில் தொலைந்து போம் (அப்படித் தொழுதால்).
3698திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (“அவத்தங்கள் விளையும்’’ என்றதைக் கேட்ட கண்ணபிரான் * அதிஸ்நேஹ, பாபசங்கீ* என்கிறபடியே உங்களுடைய அளவுகடந்த அன்பினால் இப்படி அதிசங்கை யுண்டாகின்றதே யன்றி, உண்மையில் எனக்கு யாதோரவத்யமும் விளையாது; வணாக அஸ்தாநே அங்ஞச வேண்டர் வாளாவிருங்கள்’’ என்று சொல்ல, அப்படியன்று காண்; உள்ளபடி சொல்லுகிறோம் கேளாய் என்கிறார்கள்.) 10
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும் உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால் திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10
பதவுரை Show / Hide
செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே,Sem kani vaai engal aayar deve - சிவந்த கனிபோன்ற அதரத்தையுடைய எங்களாயர் குலக்கொழுந்தே!
உடன் திரிகிலையும் என்றெனறு,Udan thirikilaiyum endrenru - அவனோடுங் கூடித் திரியமாட்டாய் நீ யென்று இதைப் பலகாலும் நினைத்து
வகையர் அசுரர்கள்,Vagayar asurargal - வலிமை மிக்க அசுரர்கள்
கஞ்சன் ஏவ,Kanjan eva - கம்ஸனுடைய ஏவுதலால்
என்னுடை ஆவி ஊடுறவேம்,Ennudai aavi ooduraveem - என்னெஞ்சு உள்உற வேவா நின்றது;
தவத்தவர் மறுக நின்று –உழிதருவர்,Tavathavar maruga nindru –uzhitharuvar - முனிவர்கள் குடல் குழம்பும்படி திரிவர்கள்
அந்தோ என் சொல் கொள்,Antho en sol kol - நீயோ! என் சொல்லைக் கொள்ளாய்;
உனக்கு தனிமையும் பெரிது,Unakku thanimaiyum peridhu - நீயோ மிகவும் துணையற்றிரா நின்றாய்;
திவத்திலும்,Thivathilum - திருநாட்டிலிருப்பதிற் காட்டிலும்
இராமனையும் உவர்த்தலை,Iraamanaiyum uvarthalai - ( உனக்குத் துணைவனான) பலராமனையும் நீ உகவாதவனாய்
பசு நிரை மேய்ப்பு உவத்தி,Pasu nirai meippu uvathi - பகூட்டங்களை மேய்ப்பதையே நீ உகக்கின்றாயே.
3730திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இகழுகைக்கு வேண்டுவனவுண்டான வென்னிடத்தில் சிறிது மிகழ்வின்றியே எப்பொழுதும் பிரியாதே யிராநின்றானே! இது என்ன வியாமோஹமென்று தம்மிலே தாம் வியக்கிறார்.) 9
திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான் இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9
பதவுரை Show / Hide
திகழ்கின்ற திருமார்வில்,Thigazkindra thirumaarvil - விளங்குகின்ற திருமார்பிலே
புள் ஊர்தி,Pul oorthi - பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு
திருமங்கை தன் னோடும்,Thirumangai than nodum - பெரிய பிராட்டியாரோடுங்கூட
போர் அரக்கர் குலம் கெடுத்தான்,Por arakkar kulam keduththaan - போர்லேமுயன்ற ராக்ஷஸர்களின் கூட்டங்களைத் தொலைத்த அப்பெருமான்
திகழ்கின்ற திருமாலார்,Thigazkindra thirumaalar - விளங்குகின்ற லஷிமீநாதன்
சேர்வு இடம்,Saervu idam - நித்யவாஸம் பண்ணுமிடம் என் நெஞ்சத்து எனது நெஞ்சிலே
நண் வாட்டாறு,Nan vaattaaru - குளிர்ந்த திருவாட்டாற்றுப் பதியாம்
இகழ்வு இன்றி எப்பொழுதும் பிரியாள்,Ikazhvu inri eppozhuthum priyaal - வெறுப்பின்றியே ஓகு போதும் பிரியாதேயுளன்
நின்ற புகழ்,Nindra pugazh - நிலைநின்ற புகழையுடைய
3777இராமாநுச நூற்றந்தாதி || 1
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந் துய்ந் தவன் பல் கலையோர் தாம் மன்ன வந்த இராம னுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே
பதவுரை Show / Hide
நெஞ்சே!, Nenje - ஓ மனமே!
பூ மன்னு மாது, Poo Mannu Maathu - தாமரைப் பூவில் பொருத்த முடையளாயிருந்த பிராட்டி
பொருந்திய மார்பன், Porundhiya Maarban - (அப் பூவை விட்டு வந்து) பொருந்துகைக்குறுப்பான போக்யதையை யுடைய  திருமார்பை யுடையனான பெருமானுடைய
புகழ் மலிந்த பா, Pugazh Malintha Paa - திருக் கல்யான குணங்கள் நிறைந்த தமிழ்ப் பாசுரங்களிலே
மன்னு மாறன், Mannu Maaran - ஊற்றமுடையவரான நம்மாழ்வாருடைய
அடி, Adi - திருவடிகளை
பணிந்து, Panindhu - ஆச்ரயித்து
உய்ந்தவன், Uyndhavan - உஜ்ஜீவித்தவரும்
பல் கலையோர் தாம் மன்ன வந்த, Pal Kalaiyore Thaam Mann Vantha - ஓதின மஹான்கள் நிலை பெறும்படி (இவ் வுலகில்) வந்தவதரித்த வருமான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானுடைய
சரணாரவிந்தம், Saranaravindham - திருவடித் தாமரைகளை
நாம் மன்னி வாழ, Naam Manni Vaazha - நாம் ஆச்ரயித்து வாழ்வதற்குறுப்பாக
அவன் நாமங்களே, Avan Naamangalye - அவ் வெம்பெருமானாரது திருநாமங்களையே
சொல்லுவோம், Solluvoam - ஸங்கீர்த்தநம் பண்ணுவோம்
3778இராமாநுச நூற்றந்தாதி || 2
கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற் கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே
பதவுரை Show / Hide
கள் ஆர் பொழில் தென் அரங்கன், Kal Aar Pozhil Then Arangan - தேன் நிறைந்த சோலைகளை யுடைய தென் திருவரங்கத்திலே பள்ளி கொள்ளும் பெருமானுடைய
கமலம் பாதங்கள், Kamalam Paathangal - தாமரை போன்ற திருவடிகளை
நெஞ்சில் கொள்ளா, Nenjin Kollaa - தமது நெஞ்சிலே வையாத
மனிசரை நீங்கி, Manisarai Neengi - மனிதர்களை விட்டொழித்து,
குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன், Kuraiyal Piraan Adi Keezh Villadha Anban - திருமங்கை மன்னனுடைய திருவடிகளிலே என்றும் விட்டு நீங்காத பக்தியை யுடையரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
மிக்க சீலம் அல்லால், Mikka Seelam Allaal - சிறந்த சீல குணத்தைத் தவிர
ஒன்று, Onru - வேறொன்றையும்
என் நெஞ்சு உள்ளாது, En Nenju Ulladhu - எனது நெஞ்சானது நினைக்க மாட்டாது;
எனக்கு உற்ற பேர் இயல்வு, Enakku Utra Peer Iyavvu - எனக்கு ஸித்தித்ததொரு சிறந்த ஸ்வபாவத்திற்கு
ஒன்று அறியேன், Onru Ariyeen - ஒரு காரணத்தையும் அறிகின்றிலேன்.
3779இராமாநுச நூற்றந்தாதி || 3
பேரியல் நெஞ்சே! அடி பணிந் தேனுன்னைப் பேய்ப் பிறவிப் பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொரு வருஞ்சீர் ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்பு செய்யும் சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே
பதவுரை Show / Hide
பேர்இயல் நெஞ்சே!, Peeriyal Nenjee - மிகவும் கம்பீரமான மனமே!
உன்னை அடிபணிந்தேன், Unnai Adhipanindhen - உன்னை வணங்குகின்றேன்; (எதற்காக என்னில்;
பேய் பிறவி, Pei Piravi - ஆஸுரப் பிறப்பை யுடையவர்களான
பூரியரோடு உள்ள சுற்றம், Pooviyarodu Ulla Suttam - நீசர்களோடு (எனக்கு) இருந்த உறவை
புலர்த்தி, Pularthi - போக்கடித்து
பொருவு அரு சீர், Poruvu Aru Seer - ஒப்பற்ற குணங்களை யுடையவரும்
ஆரியன், Aariyan - சிறந்த அநுஷ்டாக முடையவரும்
செம்மை, Semmai - (ஆச்ரிதரோடு) ருஜூவாகப் பரீமாறுந்தன்மை வாய்ந்தவருமான
இராமாநுச முனிக்கு, Iramanusa Munikku - எம்பெருமானார் திறத்தில் அன்பு செய்யும் சீரிய பேறு
உடையார், Udaiyar - பக்தி பண்ணுவதையே  பரம புருஷார்க்தமாக வுடையவர்களான  கூரத்தாழ்வான் போல்வாருடைய
அடிக் கீழ், Adik Keel - திருவடிகளின் கீழே
என்னை, Ennai - (பரம நீசனாயிருந்த) என்னை
சேர்த்ததற்கே, Sertthatharkae - கொண்டு சேர்த்த மஹோபகாரத்திற் காகவே (உன்னை அடி பணிந்தேன்)
3780இராமாநுச நூற்றந்தாதி || 4
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த முன்னைப் பழ வினை வேரறுத்து ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமுமென் சென்னித் தரிக்க வைத்தான் எனக்கேதும் சிதைவில்லையே
பதவுரை Show / Hide
ஊழி முதல்வனையே, Oozhi Muthalvanaiye - காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான எம் பெருமானையே
பன்ன, Panna - (எல்லாரும் விவேகித்து) அநுஸந்திக்கும்படி
பணித்த, Paniththa - (ஸ்ரீபாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
பரன் இராமாநுசன், Paran Iramanusan - ஸர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார்
புவியில், Puviyil - இந்தப் பூமியிலே
என்னை ஒரு பொருள் ஆக்கி, Ennai Oru Porul Aakki - (அபதார்த்தமாய்க் கிடந்த) என்னை ஒரு பதார்த்தமாக்கி
மருள் சுரந்த முன்னை பழை வினை வேர் அறுத்து, Marul Surandha Munnai Pazhai Vinai Veer Aruththu - அஜ்ஞான மூலகங்களாய் மிகவும் அநாதிகளான (எனது) பாவங்களை வேரறநீக்கி
பாதமும், Paadhamum - தமது திருவடிகளையும்
என் சென்னி, En Chenni - எனது தலையிலே
தரிக்க வைத்தான், Tharikka Vaiththaan - நான் உகந்து தரிக்கும் படியாக வைத்தருளினார்; (இவ்வளவு மஹா ப்ரஸாதம் பெற்றோனான பின்பு)
எனக்கு, Enakku - அடியேனுக்கு
ஏதும் சிதைவு இல்லை, Aedhum Sithaivu Illai - எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை.
3781இராமாநுச நூற்றந்தாதி || 5
எனக்குற்ற செல்வம் இராமானுச னென்று இசைய கில்லா மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா இனக் குற்றம் காண கில்லார், பத்தி ஏய்ந்த இயல்வி தென்றே
பதவுரை Show / Hide
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று, Enakku Utra Selvam Iramanusan Endru - ‘நமக்கு ப்ராப்தமான ஸம்பத்து எம்மெருமானாரே’ என்று
இசைய கில்லா, Isaiya Killa - அத்யவஸாயங் கொண்டிருக்க மாட்டாத
மனக் குற்றம் மாந்தர், Manak Kutram Manthar - துஷ்ட ஹ்ருதயர்களான மனிசர்
பழிக்கில், Pazhikkil - (இந்நூலைப்) பழிப்பவர்களானால்
புகழ், Pugazh - (அன்னவர்களுடைய பழிப்பே இதற்குப்) புகழாய் விடும்;
அவன், Avan - அவ்வெம்பெருமானாருடைய
மன்னிய சீர் தனக்கு, Manniya Seer Thanakku - நித்ய ஸித்தமான கல்யாண குணங்களுக்கு
உற்ற, Utra - தகுதியான
அன்பர், Anbar - தகுதியான அன்பை யுடையவர்களான மஹான்கள்
பத்தி ஏய்ந்த இயல் விது என்று, Pathi Aeyndha Iyala Vidhu Endru - இந்நூலானது பக்தியோடு கூடின ப்ரவ்ருத்தியை யுடையதென்று (திருவுள்ளம் பற்றி)
அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா இனம் குற்றம் காணகில்லார், Avan Thirunamagal Saatrum En Paa Inam Kutram Kaanagillaar - அவ்விராமாநுசனுடைய திரு நாமங்களைக் சொல்லுகின்ற என்னுடைய (இந்தப்) பாசுர மாலைகளிலுள்ள குற்றங்களைக் காண மாட்டார்கள்.
3782இராமாநுச நூற்றந்தாதி || 6
இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால் பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால் முயல்கின்றனன் அவன் றன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே
பதவுரை Show / Hide
ஈன் கவிகள், Een Kavigal - விலக்ஷணரான கவிகள்
அன் பால், An Paal - ப்ரீதியினாலே
இயலும் பொருளும், Iyalaum Porulum - சப்தமும் அர்த்தமும்
இசைய, Isaiya - நன்கு பொருந்தும் படியாக
தொடுத்து, Thoduthu - கவனம் பண்ணி பாடல்களிலே
பக்தி இல்லாத, Bhakti Illadha - பக்தியற்றதான
என் பாவி நெஞ்சால், En Paavi Nenjaal - என்னுடைய பாபிஷ்டமான நெஞ்சினாலே
அவன் தன், Avan Than - அவ்வெம்பெருமானாருடைய
மயல், Mayal - வ்யாமோஹம் தலையெடுத்து
வாழ்த்தும் இராமானாசனை பயிலும், Vaazhthum Iraamaanachanaip Payilum - துதிக்கும்படி நின்ற எம்பெருமானாருடைய வருணிக்கின்ற
பெரு கீர்த்தி, Peru Keerthi - அளவற்றகீர்த்திகளை
மொழிந்திட, Mozhindida - பேசுவதாக
மதி இன்மையால் முயல்கின்றன, Mathi Inmaiyaal Muyalginthana - புத்தி யில்லாமையினாலே ப்ரவர்த்திக்கின்றேன்.
3783இராமாநுச நூற்றந்தாதி || 7
மொழியைக் கடக்கும் பெரும் புகழான், வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின் பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி யல்லா வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.
பதவுரை Show / Hide
மொழியை கடக்கும், Mozhiyai Kadakkum - வாய் கொண்டு வருணிக்க முடியாதபடி வாசா மகோசரமான
பெரு புகழான், Peru Pugazhaan - பெரிய புகழை யுடையவரும்
முக் குறும்பு ஆம் வஞ்சக் குழியை கடக்கும், Muk Kurumbu Aam Vanjak Kuzhiyai Kadakkum - கல்விக் செருக்கு, செல்வச் செருக்கு குலச் செருக்கு என்னும் மூவகைக் குறும்புகளாகிற படு குழியைக் கடந்திருப்பவரும்
நம், Nam - நமக்கு நாதருமான
கூரத்து ஆழ்வான், Kooraathu Azhvaan - கூரத்தாழ்வானாடைய
சரண், Saran - திருவடிகளை
கூடிய பின், Koodiya Pin - நான் ஆச்ரயித்த பின்பு
பழியை கடத்தும், Pazhaiyai Kadaththum - ஸர்வபாப நிவர்த்தகரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
புகழ் பாடி, Pugazh Paadi - நற் குணங்களைப் பாடி
அல்லா வழியை கடத்தல், Allaa Vazhaiyai Kadaththal - ஸ்வரூபத்திற்குச் சேராத தீய வழிகளைத் தப்பிப் பிழைக்கையான
எனக்கு, Enakku - அடியேனுக்கு
இனி, Ini - இனி மேலுள்ள கால மெல்லாம்
யாதும் வருத்தம் அன்று, Yaadum Varuththam Andru - ஈஷத்தும் ப்ரயாஸ ஸாத்யமன்று; (எளிதேயாம்)
3784இராமாநுச நூற்றந்தாதி || 8
வருத்தும் புற விருள் மாற்ற, எம் பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்தன் றெரித்த திரு விளக் கைத் தன் திருவுள்ளத்தே இருத்தும் பரமன் இராமானுச னெம் இறையவனே
பதவுரை Show / Hide
வருத்தும், Varuththum - வருத்தத்தை யுண்டு பண்ணக் கூடிய பாஹ்ய விஷயங்களைப் பற்றின அஜ்ஞானமாகிற இருளை
மாற்ற, Maatra - போக்குவதற்காக
எம் பொய்கைப்பிரான், Em Poigai Piraan - நமது குலத் தலைவரான பொய்கை யாழ்வார்
அன்று, Andru - முற் காலத்தில்
மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற திரித்து, Maraiyin Kuruththin Porulaiyum Senthamizh Thannaiyum Kootti Ondra Thiriththu - வேதாந்தங்களிற் பதிந்து கிடக்கும் பொருள்களையும் செந்தமிழ்ச் சொற்களையுங்கூட்டி இரண்டையும் ஒன்று சேர ஒருதிரியாக்கி
எரித்த திரு விளக்கை, Eritha Thiru Vilakkai - ஜ்வலிக்கக் செய்த (முதல் திருவந்தாதி யாகிற) திருவிளக்கை
தன் திரு உள்ளத்தே, Than Thiru Ullaththae - தமது திருவுள்ளத்தே
இருத்தும், Iruththum - வைத்துக் கொண்டிரா நின்ற
பரமன் இராமாநுசன் எம் இறையவன், Paraman Iraamaanusan Em Iraivan - மஹா வைபவசாலியான எம்பெருமானார்
எம் இறையவன், Em Iraivan - நமக்கு ஸ்வாமி
3785இராமாநுச நூற்றந்தாதி || 9
இறைவனைக் காணும் இதயத் திருள் கெட ஞான மென்னும் நிறை விளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத் துறைய வைத் தாளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர் மறையினைக் காத்த இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே
பதவுரை Show / Hide
இறைவனை, Iraivanai - ஸரவ ஸ்வாமியான எம் பெருமானை
காணும், Kaanum - ஸாக்ஷாத் கரிப்பதற்கு உபகரணமான
இதயத்து, Idhayaththu - ஹ்ருயத்திலுள்ள
இருள் கெட, Irul Keda - அஜ்ஞாநமாகிற அந்தகாரமானது நசிக்கும்படியாக
ஞானம் என்னும் நிறை விளக்கு எற்றிய, Gyaanam Ennum Nirai Vilakku Ettriya - ஞானமாகிற பூர்ண தீபத்தை ப்ரகாசிப்பித் தருளி இரண்டாந் திருவந்தாதியை அருளிச்செய்த
பூதத் திருவடி, Puthath Thiruvadi - பூதத்தாழ்வாருடைய
தாள்கள், Thaalgal - திருவடிகளை
நெஞ்சத்து, Nenchatthu - தமது திருவுள்ளத்திலே
உறைய வைத்து, Uray Vaitthu - சாச்வதமாக ஸ்தாபித்து
ஆளும், Aalum - (அவற்றையே) அநுபவிக்கின்ற
இராமானுசன், Iraamanusan - எம்பெருமானாருடைய
புகழ், Pugazh - திவ்ய குணங்களை
ஒதும், Odhum - இடைவிடாது அநுஸந்திக்கின்ற
நல்லோர், Nallor - விலக்ஷண புருஷர்கள் தாம்
இந்த மண் அகத்தே, Indha Mann Agatthae - இப் பூ மண்டலத்திலே
மறையினை, Maraiyinai - வேதங்களை
காத்து, Kaathu - ரக்ஷித்து
மன்ன வைப்பவர், Manna Vaippavar - என்றைக்கும் அழிவில்லாதபடி ப்ரதிஷ்டாபனம் பண்ண வல்லவர்கள்
3786இராமாநுச நூற்றந்தாதி || 10
மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசற் கன்பு பூண்டவர் தாள் சென்னியிற் சூடும் திரு வுடையா ரென்றும் சீரியரே
பதவுரை Show / Hide
மன்னிய, Manniya - ஒருவாரலும் பேர்க்க முடியாத படியாதபடி நிலைத்து நின்ற
பேர் இருள், Pera Irul - (அஜ்ஞாநமாகிற பெருத்த இருளானது
மாண்ட பின், Maanda Pin - முற்பட்ட ஆழ்வார்களிருவரும் ஏற்றின திரு விளக்காலே) நனறாக நீங்கின பின்பு,
கோவலுள் ஆயனை, Kovalul Aayanai - திருக் கோவலூரில் ஆயனாரை
மா மலராள் தன்னொடும், Maa Malaraal Thannodum - பிராட்டியோடு கூட
கண்டமை, Kandamai - தாம் ஸேவித்த படியை
காட்டும், Kaattum - “திருக் கண்டேன்” இத்யாதி ப்ரபந்த முகத்தாலே) வெளியிட்டருளி
தமிழ் தலைவன், Tamizh Thalaivan - தமிழ்க்குத் தலைவரான பேயாழ்வாருடைய
பொன் அடி, Pon Adi - அழகிய திருவடிகளை
போற்றும், Poatrum - புகழுமவரான
இராமாநுசற்கு, Iramanusarukku - எம்பெருமானார் திறத்தில்
அன்பு பூண்டவர், Anbu Poondavar - பக்தியை யுடையவர்களினது
தாள், Thal - திருவடிகளை
சென்னியில் சூடும் திரு உடையார், Chennaiyil Soodum Thiru Udaiyar - சிரோ பூஷணமாகக் கொள்ளுஞ் செல்வ முடையோர் தாம் என்றும் சீரியா என்றைக்கும் ஸ்ரீமான்கள்.
3787இராமாநுச நூற்றந்தாதி || 11
சீரிய நான்மறைச் செம் பொருள் செந் தமிழாலளித்த பாரியலும் புகழ்ப் பாண் பெருமாள்,சரணாம் பதுமத் தாரியல் சென்னி இராமானுசன்றனைச் சார்ந்தவர் தம் காரிய வண்மை, என்னால் சொல் லொணா திக் கடலிடத்தே
பதவுரை Show / Hide
சீரிய நால்மறை செம் பொருள், Seeriya Naalmarai Sem Porul - சிறந்த நால் வேதங்களிலுள்ள செவ்விய பொருள்களை
செம் தமிழால், Sem Tamizhal - அழகிய தமிழ்ப்பாசுரங்களினால்
அளித்த, Alitha - அருளிச் செய்தவரும்
சரணாம் பதுமம் தார் இயல் சென்னி, Saranam Pathumam Thar Iyala Chennai - திருவடிகளாகிற தாமரைப் பூவாலே அலங்கரிக்கப் பட்ட திரு முடியை யுடையரான
இராமாநுசன் தன்னை, Iramanusan Thannai - எம்பெருமானாரை
சார்ந்தவர் தம், Sarnthavar Tham - ஆச்ரயமாகப் பற்றினவர்களுடைய
பார் இயலும் புகழ், Par Iyalaum Pugazh - பூமி யெங்கும் பொருந்தின புகழை யுடையவருமான
பாண் பெருமாள், Pan Perumal - திருப் பாணாழ்வாருடைய
காரியம் வண்மை, Kaariyam Vanmai - அநுஷ்டாந வைலக்ஷண்யமானது
இக் கடல் இடத்து, Ik Kadal Idathu - கடல் சூழ்ந்த இப் பூமியில்
என்னால் சொல்ல ஒணுது, Ennal Solla Onuthu - (இப்படிப்பட்ட வைபவ முடையதென்று) என்னால் சொல்லித் தலைக் கட்ட முடியாதது.
3788இராமாநுச நூற்றந்தாதி || 12
இடங் கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் இணையடிப்போ தடங்கும் இதயத் திராமானுசன்,அம் பொற் பாத மென்றுங் கடங் கொண் டிறைஞ்சும் திரு முனிவர்க் கன்றிக் காதல் செய்யாத் திடங் கொண்ட ஞானியர்க்கே அடியே னன்பு செய்வதுவே
பதவுரை Show / Hide
இடம் கொண்ட கீர்த்தி, Idam Konda Keerthi - பூமி யெங்கும் வியாபித்த கீர்த்தியை யுடையரான
மழிசைக்கு இறைவன், Mazhisaiyukku Iraivan - திரு மழிசைப் பிரானாடைய
இணை அடி போது, Inai Adi Podhu - உபய பாதார விந்தங்கள்
அடங்கும், Adangum - குடி கொண்டிருக்கப் பெற்ற
இதயத்து, Idhayaththu - திரு வுள்ளத்தை யுடையரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாடைய
அம் பொன் பாதம் என்றும், Am Pon Paatham Endrum - மிகவும் அழகிய திருவடிகளை
என்றும், Endrum - எக் காலத்திலும்
கடம் கொண்டு இறைஞ் சும் திரு, Kadham Kondu Irainchum Thiru - இதுவே நமக்கு ஸ்வரூப மென்கிற புத்தியோடே ஆச்ரயிக்கையாகிற செல்வத்தை யுடையரான
முனிவர்க்கு அன்றி, Munivarkku Andri - மஹான்களுக்குத் தவிர மற்றவர்களுக்கு
காதல் செய்யா, Kaadhal Seyyaa - அன்பு பூண்டிரா
திடங் கொண்ட ஞானியாக்கே, Thidang Konda Gnaaniyagke - மிக்க உறுதியை யுடையரான ஞானிகளுக்குத் தான்
அடியேன் அன்பு செய்வது, Adiyean Anbu Seyvathu - அடியேன் பக்தனாயிருப்பேன்
3789இராமாநுச நூற்றந்தாதி || 13
செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் செந்தமிழில் பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீரரங்கத் தையன் கழற்கு அணியும் பரன் தாளன்றி ஆதரியா மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறெனக்கே
பதவுரை Show / Hide
செய்யும், Seyyum - (தொண்டரடிப் பொடி யாழ்வாராகிற தம்மாலே) செய்யப்பட்ட தாய்
பசும் துளவம், Pasum Thulavam - பசுமை தங்கிய திருத் துழாய் மயமாய்
தொழில், Thozhil - வேலைப் பாடுகளை யுடைத்தான
மாலையும், Maalaiyum - பூ மாலைகளையும்
செம் தமிழில், Sem Tamizh Il - அழகிய தமிழ்ப் பாஷையிலே
பெய்யும், Peyyum - உண்டாகப் பட்டதாய்
மறை, Marai - வேதஸத்ருசமான
தமிழ் மாலையும், Tamizh Maalaiyum - திருமாலை திருப்பள்ளியெழுச்சி யென்கிற திவ்ய ப்ரபந்தங்களாகிற சொல் மாலைகளையும்
பேராத சீர் அரங்ககத்து ஐயன் கழற்கு அணியும், Peraadha Seer Arangakathu Ayyan Kazharku Aniyum - நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையரான ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளிலே சாத்தினவமான
பரன், Paran - தொண்டரடிப் பொடி யாழ்வாராகிற பெரியவருடைய
தாள் அன்றி ஆதரியா, Thaal Andri Aadhariya - திருவடிகளைத் தவிர மற்றொன்றையும் விரும்பாத
மெய்யன், Meiyyan - ஸத்யசீலரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
சரணே, Sarane - திருவடிகளே
எனக்கு, Enakku - அடியேனுக்கு
வேறு கதி, Veru Kathi - விலக்ஷணமான ப்ராப்ய வஸ்துவாம்,
3790இராமாநுச நூற்றந்தாதி || 14
கதிக்குப் பதறி வெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம் கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை யற்றேன்,கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் இராமானுச னென்னைச் சோர்விலனே
பதவுரை Show / Hide
கொல்லி காவலன், Kolli Kavalan - குல சேகரப் பெருமாளாலே அருளிச் செய்யப் பட்டதாய்
கலை சொல் பதிக்கும், Kalai Sol Pathikkum - சாஸ்திரச் சொற்கள் அமையப் பெற்றதான பொருமாள் திருமொழிப் பரசுரங்களை
பாடும் பெரியவர், Padum Periyavar - பாடுகின்ற பெரியோர்களது
பாதங்களே, Padangale - திருவடிகளையே
துதிக்கும், Thuthikkum - ஸ்தோத்ரம் செய்பவராய்
பரமன், Paraman - உத்க்ருஷ்டரான
இராமானுசன், Iraamanusan - எம்பெருமானார்
என்னை சோர்விலன், Ennai Sorvilan - என்னை விட்டு நீங்குகிறாரில்லை; (ஆதலால்) ப்ராப்ப லாபத்துக்காக வருந்தி
கதிக்கு பதறி, Kathikku Pathari - அத்யுஷ்ணமான காடுகளிலும் மலைகளிலும்
கடலும், Kadalum - கடல்களிலும் (நின்று கொண்டு)
எல்லாம் கொதிக்க, Ellam Kothikka - எல்லா அவயங்களும்
தவம் செய்யும் கொள்கை, Thavam Seyyum Kolgai - தபஸ்ஸூ பண்ணும் ஸ்வபாவத்தை
அற்றேன், Attren - விட்டொழித்தேன்
3791இராமாநுச நூற்றந்தாதி || 15
சோராத காதல் பெருஞ் சுழிப்பால், சொல்லை மாலை யொன்றும் பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத் திராமானுசன் றன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேன் எனக்கென்ன தாழ்வினியே?
பதவுரை Show / Hide
சோராத காதல் பெரு சுழிப்பால், Soradha Kadhal Peru Suzhippal - ஒரு நாளும் குறைவு படாத ப்ரேமத்தில் பெருஞ்சுழிப் படுகையாலே
தொல்லை மாலை  ஒன்றும் பாராது, Thollai Malai Ondrum Paradhu - நித்யனான எம்பெருமான்  படியைச் சிறிதும் நிரூபியாமல்
அவனை, Avanai - அவ் வெம்பெருமானை  நோக்கி
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன், Pallandu Endru Kappidum Panmaiyan - பல்லாண்டு பல்லாண் டென்று மங்ளாசாஸநம் பண்ணுகையையே நித்ய ஸவபாவமாக வுடையரான பெரியாழ்வாருடைய
தாள் பேராத உள்ளத்து, Thal Peradha Ullaththu - திருவடிகள் விட்டகலாத திருவுள்ளத்தை யுடையரான
இராமாநுசன் தன், Iramanusan Than - எம்பெருமானாருடைய
பிறங்கிய சீர், Pirangiya Seer - மிக்க திருக் குணங்களை
சாரா, Sara - தங்களுக்கு அநுபாவ்யமாகக் கொள்ளாத
மனிசரை, Manisarai - மநுஷ்யர்களை
சேரேன், Seren - பற்ற மாட்டேன்
இனி, Ini - இப்படிப்பட்ட உறுதி பிறந்த பின்பு
எனக்கு என்ன தாழ்வு, Enakku Enna Thalvu - அடியேனுக்கு என்னகுறை?.
3792இராமாநுச நூற்றந்தாதி || 16
தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்து தல முழுதுங் கலியே ஆள்கின்ற நாள் வந்தளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுச னென்னும் மா முனியே
பதவுரை Show / Hide
அரங்கர்மௌலி சூழ்கின்ற மாலையை, Arangarmouli Soozhkindra Maalaiyai - ஸ்ரீ ரங்கநாதனுடைய திரு முடியிலே சாத்தக் கடவதான பூ மாலையை
சூடி கொடுத்தவள், Soodi Koduththavala - தனது திருக் குழலிலே அணிந்து வாஸித மாக்கிக் கொடுத்தவளான ஆண்டாளுடைய
தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல், Thol Arulal Vaazhkindra Vallar - அவ்யாஜமான அருளாலே வாழ்பவரும் உதாரருமான
இராமாநுசன் என்னும் மாமுனி, Iramanusan Ennum Mamuni - ஸ்ரீ ராமாநுஜ முனியானவர் (எப்படிப் பட்டவரென்றால்)
தாழ்வு ஒன்று இல்லா மறை, Thalvu Ondru Illa Marai - ஒரு குறையுமில்லாதிருந்த வேதமானது
தாழ்ந்து, Thazhndu - (குத்ருஷ்டிகளாலே)இழிவு பெற
தலம், Thalam - முழுதும் பூமி யெங்கும்
கலியே ஆள்கின்ற நாள், Kalaiye Aalkindra Naal - கலியே ஸாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலே
வந்து, Vandhu - இங்கே வந்தவதரித்து
அளித்தவன் காண்மின், Aliththavan Kaanmin - (அந்த வேதத்தை உத்தரிப்பித்து உலகத்தை)ரக்ஷித்தருளினவர்.
3793இராமாநுச நூற்றந்தாதி || 17
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் கண்ண மங்கை நின் றானைக் கலை பரவும் தனி யானையைத் தண் டமிழ் செய்த நீலன் றனக் குலகில் இனியானை எங்கள் இராமா னுசனை வந் தெய்தினரே
பதவுரை Show / Hide
கலை பரவும் தனி ஆனையை, Kalai Paravum Thani Aanaiyai - ஸகல சாஸ்த்ரங்களாலும் துதிக்கப் பெற்ற அத்விதீயமான மத்த கஜம் போன்ற
கண்ணமங்கை நின்றானை, Kannamangai Nindraanai - திருக்கண்ண மங்கையிலே நிற்கும் பத்தராவிப் பெருமாளைக் குறித்து
உலகில், Ulagil - இவ்வுலகில்
தண் தமிழ் செய்த, Than Tamil Seitha - ஸம்ஸார தாப ஹரமான திவ்ய ப்ரபந்தத்தைச் செய்தருளின
நீலன் தனக்கு, Neelan Thanakku - திருமங்கையாழ்வார் பக்கல்
இனியானை, Iniyanai - ப்ரேம முடையவராய்
எங்கள், Engal - எங்களுக்குத் தலைவரான
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
வந்து எய்தினர், Vandu Eythinar - வந்து பணிந்த மஹான்கள்
துயரங்கள் முந்திலும் முனியார், Thuyarangkal Mundhilum Muniyar - தாப த்ரயம் செறிந்தாலும் வருத்தப்பட மாட்டார்கள்
இன்பங்கள் மொய்த்திடினும் மனம் கனியார், Inbangkal Moyththidinum Manam Kaniyar - ஸுகங்கள் செறிந்தாலும் களிப்படைய மாட்டார்கள்
3794இராமாநுச நூற்றந்தாதி || 18
எய்தற் கரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற் குலதில் வரும் சட கோபனைச் சிந்தை யுள்ளே பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம் உய்தற் குதவும் இராமானுச னெம் உறு துணையே
பதவுரை Show / Hide
எய்தற்கு அரிய மறைகளை, Eyththarku Ariya Maragalai - அதிகரிக்க முடியாத (அளவற்ற) வேதங்களை
இன் தமிழ் ஆயிரத்தால், In Tamil Aayiraththal - இனிய தமிழாவாகிய ஆயிரம் பாசுரங்களினால்
செய்தற்கு உலகில் வரும், Seiththarku Ulagil Varum - அருளிச் செய்வதற்காக  இவ்வுலகில் வந்துதித்த
சடகோபனை, Sadagopanai - நம்மாழ்வாரை
சிந்தை உள்ளே, Chinthai Ullae - தமது ஹ்ருதயத்தினுள்ளே
பெய்தற்கு இசையும், Peyththarku Isaiyum - த்யானிப்பதற்கு இணங்கின
பெரியவர், Periyavar - ஸ்ரீ மதுரகவிகளுடைய
சீரை, Seerai - ஜ்ஞாநாதி குணங்களை
உயிர்கள்  எல்லாம் உய்தற்கு உதவும், Uyirgal Ellam Uyththarku Uthavum - ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்குமாறு உபகரித்தருளா நிற்கிற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
எம் உறு துணை, Em Uru Thunai - எமக்கு உற்ற துணை
3795இராமாநுச நூற்றந்தாதி || 19
உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே யென்றிந் நீணிலத்தோர் அறி தர நின்ற,இராமானுச னெனக் காரமுதே
பதவுரை Show / Hide
உறுபெரு செல்வமும் தந்தையும் உயர் குருவும், Uruperu Selvamum Thandaiyum Uyar Guruvum - சிறந்த பெரிய ஸம்பத்தும் மாதா பிதாக்களும் ஸதாசார்யனும்
வெறி தரு பூமகள் நாதனும், Veri Tharu Poovagal Nadhanum - மணம் மிக்க பூவைப் பிறப்பிடமாக வுடைய பெரிய பிராட்டியாருக்குக் கொழுநனான ஸர்வேச்வரனும் (ஆகிய எல்லாம்
மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று, Maran Vilangiya Seer Nerai Tharum Sem Tamil Aaraname Endru - நம்மாழ்வார் (தமக்கு) ப்ரகாசித்த பகவத் குணங்களின் அடைவே அருளிச் செய்த செந்தமிழ் வேதமே யென்று
இ நீள் நிலத்தோர் அறிதர நின்ற, I Neel Nilathor Aridhar Nindra - இப் பெரிய வுலகிலுள்ளார் யாவரும் அறியும்படி நின்ற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
எனக்கு, Enakku - அடியேனுக்கு
ஆர் அமுது, Ar Amuthu - பரம போக்யர்
3796இராமாநுச நூற்றந்தாதி || 20
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்,அமுதத் திருவாய் ஈரத் தமிழின் இசை யுணர்ந்தோர் கட்கு இனியவர் தம் சீரைப் பயின்றுய்யும் சீலங் கொள் நாத முனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசனென்றன் மா நிதியே
பதவுரை Show / Hide
ஆரம் பொழில், Aram Pozhil - சந்தனச் சோலைகளை யுடைய
தென் குருகை, Then Kurugai - அழகிய திருக்குருகூரிலே (அவதரித்த)
பிரான், Piran - மஹோபகாரகரான ஆழ்வாருடைய
அமுதம் திருவாய், Amudham Thiruvai - பரம போக்யமான திருப் பவளத்தில் பிறந்த
ஈரம் தமிழன் இசை, Eeram Tamizhan Isai - ஈரச் சொல்லாகிய திருவாய்மொழியின்  இசையை
உணர்ந்தோர்கட்கு, Unarnthorkadku - அறிந்தவர்களுக்கு
இனியவர் தம், Iniyavar Tham - இஷ்டராயிருப்பவர்களுடைய
சீரை, Seerai - குணங்களை
பயின்று, Payinru - அப்யஸித்து
உய்யும் சீலம் கொள், Uyum Seelam Kol - ஸத்தை பெறும் சீலத்தை யுடையரான
நாதமுனியை, Nadhamuniyai - நாத முனிகளை
நெஞ்சால், Nenjal - தம் திருவுள்ளத்தாலே
வாரி பருகும், Vaari Parugum - அபிநிவேசத்தோடு அனுபவிக்கின்ற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
என் தன் மா நிதி, En Than Maa Nidhi - எனக்கு அக்ஷயமான நிதி.
3797இராமாநுச நூற்றந்தாதி || 21
நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றித் துதி கற் றுலகில் துவள்கின்றிலேன், இனித் தூய் நெறி சேர் எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணை யடியாம் கதி பெற் றுடைய இராமானுச னென்னைக் காத்தனனே
பதவுரை Show / Hide
தூய் நெறி சேர், Thuy Neri Ser - பரிசுத்தமான அனுட்டானமுடைய யதிகளுக்கு
இறைவன், Iraivan - தலைவரான
யமுனைத் துறைவன், Yamunai Thuraivan - ஆளவந்தாருடைய
இணை அடி ஆம் கதி, Inai Adi Aam Gathi - உபய பாதங்களாகிற ப்ராப்யத்தை
பெற்று, Petru - பெற்று (அதனாலே)
உடைய, Udaiya - உலகத்தார்க் கெல்லாம் ஸ்வாமியா யிருக்கிற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
என்னை காத்தனன், Ennai Kaaththanan - என்னை ரக்ஷித் தருளினார்; (ஆன பின்பு)
இனி, Ini - இனி மேல்,
நிதியை பொழியும் முகில் என்று, Nithiyai Pozhiyum Mukil Endru - “நிதிகளை வர்ஷிக்கிற மேகமே!” என்று
துதி கற்று, Thuthi Kattru - ஸ்தோத்ரங்களைப் பண்ணிக் கொண்டு
உலகில், Ulagil - இவ்வுலகத்தில்
நீசர் தம், Neesar Tham - நீசராயிருப்பவருடைய
வாசல் பற்றி, Vaasal Patri - வாசலைப் பற்றி நின்று
துவள்கின்றிலேன், Thuvazhkindrileen - வருந்த மாட்டேன்
3798இராமாநுச நூற்றந்தாதி || 22
கார்த்திகை யானும் கரி முகத் தானும் கனலும் முக் கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும் பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை யேத்தும் இராமானுச னென்றன் சேம வைப்பே
பதவுரை Show / Hide
கார்த்திகையானும், Kaarthikayaanum - ஸுப்ரஹமண்யனும்
கரி முகத்தானும், Kari Mukaththaanum - கணபதியும்
கனலும், Kanalum - (அவர்களுக்குத் துணையாய் வந்த) அக்நியும்
முக் கண் மூர்க்தியும், Mook Kan Moorkthiyum - சிவனும்
மோடியும், Modiyum - துர்க்கையும்
வெப்பும், Veppum - ஜ்வரதேவதையும்
முதுகு இட்டு, Mudhuku Ittu - முதுகுகாட்டி ஒடிப்போன பின்பு (அநந்யகதியான பாணாஸுரனானவன்
மூ உலகும் பூத்தவனே என்று போற்றிட, Moo Ulagum Pooththavane Endru Poatrida - “மூன்று உலகங்களையும் திருநாபிக் கமலத்திலே உண்டாக்கினபெருமானே!” (என்னைக்காத்தருள்) என்று போற்ற
வாணன் பிழை பொறுத்த, Vaanan Pizhai Poruththa - (அந்த) பாணாஸுரனுடைய அபராத்தை க்ஷமித்தருளின
தீர்த்தனை, Theerththanai - பாவநனான ஸர்வேச்வரனை
ஏத்தும், Aeththum - நித்யம் துதிக்கின்ற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
என் தன் சேமவைப்பு, En Than Saemavaippu - எனக்கு ஆபத் தநம்.
3799இராமாநுச நூற்றந்தாதி || 23
வைப்பாய வான் பொருள் என்று,நல்லன்பர் மனத் தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில் ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழ்க்கே!
பதவுரை Show / Hide
நல் அன்பர், Nal Anbar - விலக்ஷண பக்தி யுடையவர்கள்
வைப்பு ஆய வான் பொருள் என்று, Vaippu Aaya Vaan Porul Endru - “எம்பெருமானார் தாம் நமக்கு ஆபத் ரக்ஷகமான அக்ஷ தநம்” என்று கொண்டு
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
இரு நிலத்தில், Iru Nilathil - இந்தப் பெரிய வுலகத்திலே
ஒப்பார் இலாத உறு வினையேன், Oppaar Ilaadha Uru Vinaiyen - ஒப்பற்ற மஹா பாபியான அடியேன்
வஞ்சம் நெஞ்சில் வைத்து, Vanjam Nenchil Vaiththu - (என்னுடைய) க்ருத்ரிமமான நெஞ்சிலே  வைத்து
முப்போதும் வாழ்த்துவன், Muppodhum Vazhththuvan - ஸர்வ காலமும் ஏத்தா நின்றேன்;
இது, Idhu - மிகப் பெரிய அவரை நீசனாகிய நான் வாழ்த்துகையாகிற இது
அவன், Avan - அவ் வெம்பெருமானானாருடைய
மொய் புகழ்க்கு, Moy Pugazhkkum - சிறந்த கீர்த்திக்கு
என் ஆம், En Aam - என்னாகுமோ? (அவத்யமமோ?)
3800இராமாநுச நூற்றந்தாதி || 24
மொய்த்த வெந் தீ வினையால் பல்லுடல் தொறும் மூத்து, அதனால் எய்த்தொழிந்தேன் முன நாள்களெல்லாம், இன்று கண்டுயர்ந்தேன் பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக் கைத்த மெய்ஞ் ஞானத்து இராமானுச னென்னும் கார் தன்னையே
பதவுரை Show / Hide
முன நாள்கள் எல்லாம், Muna Naalgal Ellam - கீழ்க் கழிந்த அநாதி காலமெல்லாம்
பல் உடல் தொறும், Pal Udal Thorum - பல பல சரீரங்கள் தோறும்
மொய்த்த வெம் தீ வினையால் மூத்து, Moyththa Vem Thee Vinaiyaal Mooththu - ஆத்மாவை மொய்த்துக் கொண்டிருக்கின்ற அதி க்ரூரமான கர்மத்தாலே கிழத் தனம் வருமளவும் வாஸஞ்செய்து
அதனால், Adhanaal - அத்தாலே
எய்த்து ஒழிந்தேன், Eyththu Ozhindhen - மிக்க பரிதாப மடைந்தேன்;
பொய் தவம் போற்றும் புலைச் சமயங்கள், Poy Thavam Poattrum Pulai Samayangal - கபடமான அநுஷ்டாநங்களை நடத்திப் போருகிற நீச மதஸ்தர்கள்
நிலத்து அவிய, Nilaththu Aviy - இந் நில வுலகத்திலே அற்றொழியும்படி
கைத்த, Kaiththa - நிரஸித்தருளின
மெய் ஞானத்து, Mei Gnanaththu - உண்மை ஞான முடையரான
இராமாநுசன் என்னும் கார் தன்னை, Iraamaanusan Ennum Kaar Thannai - எம்பெருமானாராகிற  காள மேகத்தை
இன்று கண்டு, Indru Kandu - இன்று அடியேன் ஸேவிக்கப் பெற்று
உயர்ந்தேன், Uyarnthen - சிறந்தவனானேன்.
3801இராமாநுச நூற்றந்தாதி || 25
காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில் ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன் சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே
பதவுரை Show / Hide
கார் எய் கருணை இராமாநுச!, Kaar Ey Karunai Iraamaanusa - மேகத்தை யொத்த கருணையை யுடைய எம்பெருமானாரே!
நான், Naan - அடியேன்
அல்வலுக்கு நேரே உறைவு இடம், Alvalukku Neere Uraivu Idam - துக்கங்களுக்கு நேரே வாஸஸ்தானமாயிருப்பவன்;
என்னை, Ennai - இப்படிப்பட்ட அடியேனை
நீ வந்து உற்றபின், Nee Vandu Utrapin - ஸ்வீகரித் தருளின பின்பு
உன் சீரே, Un Seere - தேவரீருடைய கல்யாண குணங்களே
உயிர்க்கு உயிர் ஆய், Uyirkku Uyir Aay - ஆத்மாவுக்கு தாரகமாய்
அடியேற்கு, Adiyeerkku - அடியேனுக்கு
இன்று தித்திக்கும், Indru Thithikkum - இன்று ரஸியா நின்றது;
நின் அருளின் தன்மை, Nin Arulin Thanmai - தேவரீருடைய க்ருபையின் ஸ்வபாவத்தை
இ கடல் இடத்தில், I Kadal Idathil - கடல் சூழ்ந்த இப் பூ மண்டலத்தில்
ஆரே அறிபவர், Aare Aripavar - அறியக் கூடியவர்கள் ஆருமில்லை.
3802இராமாநுச நூற்றந்தாதி || 26
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை, என் செய் வினையாம் மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர் எக் குற்ற வாளர் எது பிறப் பேதியல்வாக நின்றோர் அக் குற்றம் அப் பிறப்பு அவ் வியல்வே நம்மை யாட் கொள்ளுமே
பதவுரை Show / Hide
என் செய்வினை ஆம், En Seivinaik Aam - என்னாலே செய்யப் பட்ட  வினையாகிற
மெய் குற்றம் நீக்கி, Mei Kuttram Neekki - நிலை நின்ற தோஷங்களைப் போக்கி
விளங்கிய, Vilangiya - (இவனுடைய தோஷங்களைப் போக்கப் பெற்றோமே என்னும் மகிழ்ச்சியாலே உஜ்வலரான
மேகத்தை, Megathai - பரம உதாரராய்
திக்கு உற்ற கீர்த்தி, Thikku Utra Keerthi - திசைகள் தோறும் விரிந்த புகழை யுடையரான
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
மேவும், Maevum - பொருந்தி யிருக்கின்ற
நல்லோர், Nallor - விலக்ஷணர்கள்
எக் குற்றவாளர், Ek Kuttravalar - யாதொரு குற்றத்தை யுடையராகவும்
எது பிறப்பு, Edhu Pirappu - யாதொரு ஜன்மத்தையுடையராகவும்
எது இயல்பு ஆக, Edhu Iyalthu Aaga - யாதொரு சரிதையை யுடையவராகவும்
நின்றோர், Ninruor - முன்பு நின்றார்களோ,
அக் குற்றம், Ak Kuttram - அந்தக் குற்றமும்
அப் பிறப்பு, Ap Pirappu - அந்த ஜன்மமும்
அ இயல்வே, A Iyalve - அந்த சரிதையுமே
நம்மை, Nammai - நம்மை
ஆள் கொள்ளும், Aal Kollum - அடிமைப் படுத்திக் கொள்ளவற்று.
3803இராமாநுச நூற்றந்தாதி || 27
கொள்ளக் குறை வற் றிலங்கிக் கொழுந்து விட் டோங்கிய வுன் வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய் வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக் கிழுக்கிதென்று தள்ளுற் றிரங்கும் இராமானுச! என் தனி நெஞ்சமே!
பதவுரை Show / Hide
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!
கொள்ள குறைவு அற்று இலங்கி, Kolla Kuraiyvu Attru Ilangi - கொள்ளக் கொள்ளக் குறையாமல் தானே விளங்கி
கொழுந்துவிட்டு ஓங்கிய, Kozhundhuvittu Ongiyaa - மேன்மேலும் இளகிப் பதித்து வளர்ந்திருப்பதான
உன் வள்ளல் தனத்தினால், Un Vallar Thanatthinaal - தேவரீருடைய ஔதார்ய குணத்தாலே
வல் வினையேன் மனம், Val Vinaiyen Manam - மஹா பாபியான எனது நெஞ்சிலே
நீ புகுந்தாய், Nee Pugundhai - (தேவரீருடைய பெருமை பாராதே) வந்து புகுந்தருளிற்று;
இது, Idhu - (வஸிஷ்டின் சண்டாளர் க்ருஹத்தில் புகுந்தாற் போலே) புகுந்தவிது,
வெள்ளை, Vellai - பரிசுத்தமாய்
சுடர் விடும், Sudar Vidum - பரிசுத்தமாய் விளங்கா நின்றுள்ள
உன் பெரு மேன்மைக்கு, Un Peru Menmaikku - தேவரீருடைய ப்ரபாவத்திற்கு
இழுக்கு என்று, Izhukku Endru - அவத்யாவஹம் என்று
என் தனி நெஞ்சம், En Thani Nenjam - எனது துணையற்ற நெஞ்சானது
தள்ளுற்று இரங்கும், Thallutru Irangum - தளர்ந்து ஈடுபடா நின்றது.
3804இராமாநுச நூற்றந்தாதி || 28
நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க் கரிய இராமா னுசன் புகழ் அன்றி யென் வாய் கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே!
பதவுரை Show / Hide
நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை, Nenjin Kadai Konda Kanjanai - நெஞ்சிலே கல்மிஷத்தை யுடையனா யிருந்த கம்ஸனை
காய்ந்த, Kaayndha - முடித்த
நிமலன், Nimalan - ஹேயப்ரத்ய நீகனாய்,
நங்கள் பஞ்சி திருவடி, Nangal Panji Thiruvadi - ஆச்ரிதர்பக்கல் அபிமாநமுடையளாய் பஞ்சு போல் மெல்லிய திருவடிகளையுடையளான
பின்னை தன் காதலன், Pinnai Than Kaadhalan - நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனான கண்ண பிரானாடைய
பாதம் நண்ணு, Paatham Nannu - திருவடிகளை ஆச்ரயியாத
வஞ்சர்க்கு, Vanjarkku - ஆத்மாபஹாரக் கள்வர்களுக்கு
அரிய, Ariya - துர்லபரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
புகழ் அன்றி, Pugazh Andri - குணங்களை யொழிய (மற்றொன்றை)
என் வாய், En Vaai - என் வாக்கானது
கொஞ்சி பரவகில்லாது, Konji Paravagilladhu - குலாவி ஏத்த மாட்டாது;
இன்று கூடியது வாழ்வு, Indru Koodiyadhu Vazhvu - இன்று (எனக்கு) நேர்ந்த வாழ்ச்சியானது
என்ன, Enna - ஆச்சரியமானது
3805இராமாநுச நூற்றந்தாதி || 29
கூட்டும் விதி யென்று கூடுங்கொலோ,தென் குருகைப் பிரான் பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத், தன் பத்தி யென்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் யுணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டின்ப மெய்திடவே?
பதவுரை Show / Hide
தென் குருகை பிரான், Then Kurugai Piraan - நம்மாழ்வாருடைய
பாட்டு என்னும், Paatu Ennum - பாசுரங்கள் என்று ப்ரஸித்தமாய்
வேதம், Vedham - வேத ரூபமாய்
பசும் தமிழ் தன்னை, Pasum Tamil Thannai - செந்தமிழாயிருக்கின்ற திருவாய் மொழியை
தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த, Than Pathi Ennum Veettin Kan Vaiththa - தம்முடைய பக்தியாகிற மாளிகையிலே ஸ்தாபித்தருளிய
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
புகழ், Pugazh - கல்யாண குணங்களை
மெய் உணர்ந்தோர், Mei Unarnthoor - உள்ளபடி அறிந்திருக்கு மவர்களுடைய
ஈட்டங்கள் தன்னை, Eettangal Thannai - கோஷ்டிகளை
என் நாட்டங்கள் கண்டு, En Naatthangal Kandu - என் கண்களானவை ஸேவித்து
இன்பம் எய்திட, Inbam Eydhida - ஸூகிக்கும் படியாக
கூட்டும் விதி, Kootum Vidhi - அமைக்க வல்ல (அவருடைய) க்ருபையானது
என்று கூடுங்கொல், Endru Koodungol - என்றைக்கு வாய்க்குமோ?
3806இராமாநுச நூற்றந்தாதி || 30
இன்பந் தரு பெரு வீடு வந் தெய்திலென்? எண்ணிறந்த துன்பந் தரு நிர யம் பல சூழிலென்? தொல்லுலகில் மன் பல் லுயிர்கட் கிறையவன் மாயன் என மொழிந்த அன்பன் அனகன் இராமானுச னென்னை ஆண்டனனே
பதவுரை Show / Hide
தொல் உலகில், Thol Ulagil - ‘அநாதியான இவ் வுலகத்தில்
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயின், Man Pal Uyirkadku Irayavan Mayin - நித்யரான எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷியாவன் விஷ்ணுவே’
என மொழிந்த, En Mozhindha - என்று (பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
அன்பன், Anban - பரம காருணிகராய்
அனகன், Anagan - நிர்த் தோஷரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
என்னை ஆண்டனன், Ennai Andanan - என்னை அடிமை கொண்டருளினார்;
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என், Inbam Tharu Peru Veedu Vandu Eydhil En - ஆநந்தாவஹமான மோக்ஷம் வந்து ஸித்தித்தாலெனன?
எண்  இறந்த துன்பம் தரு பல நிரயம் சூழில் என், En Irandha Thunbam Tharu Pala Nirayam Soozhil En - அளவற்ற துக்கங்களைத் தருகிற பல நரகங்கள் வந்து சூழ்ந்து கொண்டால் தான் என்ன?
3807இராமாநுச நூற்றந்தாதி || 31
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் கால மெல்லாம் மனமே! ஈண்டு பல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே காண்டகு தோளண்ணல் தென்னத்தியூரர் கழலிணைக் கீழ்ப் பூண்டவன் பாளன் இராமானுசனைப் பொருந்தினமே
பதவுரை Show / Hide
மனமே, Maname - நெஞ்சே!
நூள் ஆய், Nool Aay - நாள்களாகவும்
திங்கள் ஆய், Thingal Aay - மாதங்களாகவும்
ஆண்டுகள் ஆய், Aandugal Aay - வருஷ்ங்களாகவும்
நிகழ் காலம் எல்லாம், Nigal Kaalam Ellam - நடந்து செல்லுகிற ஸர்வ காலங்களிலும்
ஈண்டு பல் யோனிகள் தோறும், Eendu Pal Yoonigal Thoram - திரண்டு பல்வகைப் பட்ட யோனிகள் தோறும்
உழல்வோம், Uzhalvom - தட்டித் திரிந்த நாம்
இன்று ஒர் எண் இன்றியே, Indru Or En Indriye - இன்று ஒரு நினைவு மில்லாதிருக்கச் செய்தே (அகஸ்மாத்தா)
காண்  தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பு ஆளான் இராமாநுசனை பொருந்தினம், Kaan Thagu Thol Annal Then Aththiyoorar Kazhal Inai Kkeezh Poondha Anbu Aalan Raamanusanai Porundhinam - கண்ணாரக் காணத் தக்க  தோள்களை யுடைய ஸ்வாமியான பேரருளாளனாடைய திரு வடிகளில் அன்பு பூண்ட எம்பெருமானாரைச் சேரப் பெற்றோம் (என்ன பாக்கியம்!,)
3808இராமாநுச நூற்றந்தாதி || 32
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந் தெடுத்தளித்த அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே
பதவுரை Show / Hide
செறு கலியால், Seru Kaliyall - (தரும நெரியைத் திரஸ்கரிக்கின்ற கைலினாலே
வருந்திய, Varundhiya - துக்கப்பட்ட
ஞாலத்தை, Naalaththai - பூமியை
வண்மையினால் வந்து எடுத்து அளித்த, Vanmaiyinaal Vandu Eduthu Aliththa - தமதுநிர்ஹேதுக க்ருபையாலே வந்து உத்தரித்து ரக்ஷித்தவரும்
அரும் அளித்த, Arum Aliththa - சரணுகதியென்கிற அரிய தபஸ்ஸை அநுஷ்டித்தவரும்
எங்கள், Engal - எமக்கு ஸ்வாமியுமான
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
அடைபவர்க்கு, Adaipavarkku - ஆச்ரயிக்கு மவர்களுக்கு
பொருந்திய தேசும், Porundhiya Desum - ஸ்வரூபாது ரூபமான தேஜஸ்ஸூம்
பொறையும், Poraiyum - க்ஷமாகுணமும்
திறலும், Thiralum - ஜிதேந்த்ரியத்வமாகிற பலமும்
புகழும், Pugazhum - கீர்த்தியும்
நல்ல திருந்திய ஞானமும், Nalla Thirundhiya Gnanamum - பரம விலக்ஷணமான அறிவும்
செல்வமும், Selvamum - பக்தியாகி றஸம்பத்தும்
சேரும், Serum - தானே வந்துசேரும்.
3809இராமாநுச நூற்றந்தாதி || 33
அடையார் கமலத் தலர் மகள் கேள்வன் கை யாழி யென்னும் படையொடு நாந்தகமும் படர் தண்டும்,ஒண் சார்ங்க வில்லும் புடையார் புரி சங்கமு மிந்தப் பூதலம் காப்பதற்கென்று இடையே இராமானுச முனி யாயின இந் நிலத்தே
பதவுரை Show / Hide
அடை ஆர் கமலத்து அலர் மகள் கேள்வன், Adai Aar Kamalaththu Alar Magal Kaelvan - தளங்கள் நெருங்கிய தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான எம்பெருமானுடைய
கை ஆழி என்னும் படையோடு, Kai Aazhi Ennum Padaiyodu - திருக் கையிலே (விளங்கா நின்ற திருவாழி யென்கிற திவ்யா யுதத்தோடே
நாந்தகமும், Naanthakamum - நாந்தகவாளும்
படர் தண்டும், Padar Thandum - ரக்ஷணத் தொழிலிலே பரந்திரா  நின்ற கதையும்
ஒண் சார்ங்கம் வில்லும், On Sargngam Villum - அழகிய ஸ்ரீ சார்ங்க மென்கிற வில்லும்
புடை ஆர் புரி சங்கமும், Pudai Aar Puri Sangamum - ஒரு பக்கத்துக்குத் தானே ஆபரணமாகப் போரும் படியான அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யமும் (ஆக இப் பஞ்சாயுதாழ்வார்கள்)இந்த பூதலம் காப்பதற்கு என்று
இந்தப் பூமியை ரக்ஷிக்கைக்காக இந் நிலத்து, Indhap Bhoomiyai Rakshikkaikaga Inth Nilaththu - இப் பூ மண்டலத்திலே இராமாநுச முனி இடையே ஆயின
3810இராமாநுச நூற்றந்தாதி || 34
நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின் நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப் புகழே
பதவுரை Show / Hide
இராமாநுசன் தன், Iramanusan Than - எம்பெருமானாருடைய
நயம் புகழ், Nayam Pugazh - கல்யாணகுணங்களானவை
நிலத்தை செறுத்து உண்ணும் நீசம், Nilaththai Seruththu Unnum Neesam - பூலோகத்தை ஹிம்ஹித்ததுத் தின்கிற நீசனான
கலியை, Kaliyai - கலிபுருஷனாடைய
நினைப்பு அரிய பெலத்தை செறுத்தும், Ninaippu Ariya Pelathai Seruththum - இவ்வளவென்று நினை முடியாதபடி அளவற்றதான பராக்ரமப்தைத் தொலைத்தவளவிலம்
பிறங்கியது இல்லை, Pirangiyathu Illai - பிரகாசிக்கவில்லை;
என் பெய் வினை, En Pey Vinaik - என்னாலே செய்யப்பட்ட பாவங்களை
தென் புலத்தில், Then Pulathil - யமலோகத்தில்
பொறித்த, Poriththa - எழுதிவைத்த
அப் புத்தகம் சும்மை, Ap Puththagam Summaa - அந்த புஸ்தகக் கட்டுகளை
பொறுக்கிய பின், Porukkiya Pin - கொளுத்திவிட்டபின்பு
நலத்தை பொறுத்தது, Nalaththai Poruththathu - விளக்கம் பெற்றன.
3811இராமாநுச நூற்றந்தாதி || 35
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப் புயலே எனக் கவி போற்றி செய்யேன், பொன் னரங்கமென்னில் மயலே பெருகும் இராம னுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் அருவினை என்னை யெவ் வாறின் றடர்ப்பதுவே?
பதவுரை Show / Hide
ஒரு தெய்வம், Oru Deivam - வேறொரு தெய்வத்தை
நயவேன், Nayaven - விரும்பமாட்டேன்
நால் நிலத்தே, Naal Nilaththae - இவ் வுலகில்
சில மானிடத்தை, Sila Maanidaththai - சில நீச மனிதர்களைக் குறித்து
புயலே என, Puyale Enna - ‘மேகம் போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’என்று அதிவாதமாகச்) சொல்லி
கவி போற்றி செய்யேன், Kavi Poattri Seyyen - கவிகள் கட்டி ஸ்தோத்ரம் செய்ய மாட்டேன்;
பொன் அரஙகம் என்னில், Pon Arangakam Ennil - ‘திருவரங்கம்’ என்று சொன்னவாறே
மயல் பெருகும், Mayal Perugum - அளவற்ற வயாமோஹத்தை யடைகின்ற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
மன்னா மா மலர்த் தாள், Mannaa Maa Malarth Thaal - பொருந்திய சிறந்த திருவடித் தாமரைகளை
அயரேன், Ayarein - மறக்க மாட்டேன்;
அயரேன், Ayarein - கொடிய பாவங்கள்
என்னை, Ennai - என்னை
இன்று, Indru - இன்று முதலாக
எவ்வாறு அடர்ப்பது, Evvaru Adarppathu - எப்படி ஆக்ரமிக்கக் கூடும்?
3812இராமாநுச நூற்றந்தாதி || 36
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டளிப்பப், பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திடத்தானு மவ் வொண் பொருள் கொண்டவர் பின் படரும் குணன், எம் இராமானுசன் றன் படி யிதுவே
பதவுரை Show / Hide
அடல் கொண்ட நேமியன், Adal Konda Nemiyan - (ஆச்ரித விரோதிகளை அழிக்கவல்ல) மிடுக்கையுடைய திருவாழியை எந்தினவனாய்
ஆர் உயிர் நாதன், Ar Uyir Nathan - ஸ்கல ஆச்மாக்களுக்கும் சேஷியான எம்பெருமான்
அன்று, Andru - அர்ஜுனனுக்கு ஸாரதியாயிருந்த வக்காலத்தில்
ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப, Aranach Sol Kadal Konda On Porul Kandu Alippa - வேதங்களாகிற கடலில் மறைந்து கிடந்த நல்ல அர்தங்களை ஆராய்ந்து கீதாமூலமாக) உபதேசிக்க
பின்னும், Pinnum - அதற்குப் பின்பும்
காசினியோர், Kasinivor - பூமியிலுள்ளவர்கள்
இடரின் கண் வீழ்ந்திட, Idarin Kan Vizhndhida - ஸம்ஸார துக்கத்தில் அழுந்திக் கிடக்க,
தானாம், Thanam - (எம்பெருமானாராகிற தாமும்
அ ஒன் பொருள் கொண்டு, A On Porul Kondo - (முன்பு ஸர்வேச்வரனருளிச் செய்த) அந்தச் சிறந்த அர்த்தங்களைக் கொண்டு
அவர் பின்படரும் குணன், Avar Pinpadarum Gunam - அந்த ஸர்ஸாரிகளைப்பின் எம்பெருமானாருடைய
வடி இது, Vadi Ithu - ஸ்வபாவம் இது.
3813இராமாநுச நூற்றந்தாதி || 37
படி கொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமா னுசன் குணங் கூறும்,அன்பர் கடி கொண்ட மா மாலர்த் தாள் கலந் துள்ளங் கனியும் நல்லோர் அடி கண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே
பதவுரை Show / Hide
படி கொண்ட கீர்த்தி, Padi Konda Keerthi - உலக மெங்கும் பரந்த புகழை யுடைத்தான
இராமாயணம் என்னும், Iramayanam Ennum - ஸ்ரீ ராமாயண மென்கின்ற
பக்தி வெள்ளம், Bhakti Vellam - பக்தி ஸமுத்திரம்
குடி கொண்ட கோயில், Kudi Konda Koyil - நித்ய வாஸம் பண்ணுகிற திவ்ய ஸ்தாநமாயிருக்கின்ற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
குணம் கூறும் அன்பர், Gunam Kurum Anbar - திருக் குணங்களைப் பேசுகின்ற பக்திமான்களுடைய
கடி  கொண்ட மா மாலர்த் தாள், Kadi Konda Maa Malarth Thal - மணம் மிக்குச் சிறந்த பாதார விந்தங்களில்
உள்ளம் கலந்து, Ullam Kalandu - நெஞ்சு பொருந்தி
கனியும், Kaniyum - ஸ்நேஹித்திருக்கின்ற
நல்லோர், Nallor - மஹாநுபவர்கள்
அடி கண்டு கொண்டு, Adi Kandu Kondo - (இவ்வாதம் வஸ்துவானது உடையவர்க்கு சேஷப்பட்ட தென்கிற) மூலப்பொருளைத் தெரிந்து  கொண்டு
உகந்து, Ugandhu - ஆதரித்து
என்னையும், Ennaiyum - அடியேனையும்
அவர்க்கு, Avarkku - அவ்வெம்பெருமானார்க்கு
ஆள் ஆக்கினர், Aal Aakkinar - ஆட் படுத்தினார்கள்
3814இராமாநுச நூற்றந்தாதி || 38
ஆக்கி யடிமை நிலைப்பித்தனை யென்னை இன்று, அவமே போக்கிப் புறத்திட்ட தென் பொருளா?முன்பு புண்ணியர் தம் வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால், உரையா யிருந்த நுண் பொருளே
பதவுரை Show / Hide
என்னை, Ennai - (நெடுநாளாக அஹங்காரியாய்க்கிடந்த) என்னை
இன்று, Indru - இன்றைக் தினத்தில்
ஆக்கி, Aakki - ஒரு பொருளாக்கி
அடிமை, Adimai - சேஷத்வத்தில்
நிலைப்பித்தனை, Nilaippiththanai - நிலைநிறுவத்தினீர்; (இன்று இப்படி செய்தருளின தேவரீர்)
முன்பு, Munbu - முற்காலமெல்லாம்
அவமே போக்கி, Avame Pokki - வீணாகப் போக்கி
புறந்து இட்டது, Purandhu Ittathu - வெளி விஷயங்சளிலே தள்ளி விட்டு வைத்தது
என் பொருளா, En Porulaa - என்ன நிமித்தாக?
புண்ணியர் தம், Punniyar Tham - (தேவரீரை இடைவிடாது அநுபவிக்கும்) பாக்கிய சாலிகளுடைய
வாக்கில் பிரியா, Vaakkil Priyaa - வாக்கை விட்டுப் பிரியாத
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!
தெரிவு அரிது, Therivu Aridhu - அறிய முடியாததாக நின்றது;
இந்த நுண் பொருள், Indha Nun Porul - இந்த ஸுக்ஷ்மமான விஷயத்தை
உரையாய், Uraiyaai - தேவரீரே அருளிச் செய்ய வேணும்
3815இராமாநுச நூற்றந்தாதி || 39
பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே மருள் கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று ளார் தரமோ? இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே
பதவுரை Show / Hide
பொருள் என்றும், Porul Endrum - த்ரவ்யம் என்று சொல்லிக் கொண்டும்
புதல்வர் என்றும், Puthalvar Endrum - புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டும்
பூமி என்றும், Bhoomi Endrum - க்ஷேத்ரமென்று சொல்லிக் கொண்டும் (அர்த்த புத்திராதிகளையே விரும்பி)
மருள் கொண்டு, Marul Kondu - அறிவு கெட்டு
இளைக்கும் நமக்கு, Ilaiyum Namakku - வருந்திக் கொண்டு கிடக்கிற நமக்கு
இருள் கொண்ட, Irul Konda - அஜ்ஞாநத்தோடு கூடிய க்ரூரமான துக்கங்களை
மாற்றி, Maatri - போக்கடித்து
தன் ஈறு இல் பெரு புகழே தெருளும் தெருள், Than Eeru Il Peru Pugazhe Therulum Therul - தம்முடைய முடிவில்லாத சிறந்த கல்யாண குணங்களையே சிந்திக்கக் கடவதான ஞானத்தை
தந்து, Thandu - அருளித்தருளி
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
செய்யும் சேமங்கள், Seyyum Semangal - செய்கிற க்ஷேமங்களானவை
நெஞ்சே, Nenchae - ஒ மனமே!
மற்று உளார் தரமோ, Mattru Ular Tharamo - மற்ற பேர்களுக்குச் செய்கிற மாதிரியோ (அல்ல; விலக்ஷணம் என்ற படி.)
3816இராமாநுச நூற்றந்தாதி || 40
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற் காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் அறம் பொருள் வீடுதற் கென்றுரைத்தான் வாமனன் சீலன், இராமானுசன் இந்த மண்மிசையே
பதவுரை Show / Hide
சேமம் நல்வீடும், Semam Nalveedu - (அனைவர்க்கும்) க்ஷேம ரூபமான சிறந்த மோக்ஷம்
பொருளும், Porulum - அர்த்தமும்
தருமமும், Dharumamum - தர்மமும்
சீர்ய நல் காமமும், Seerya Nal Kaamamum - மிகவுஞ் சிறந்த காமமும்
என்ற இவை, Endra Ivai - ஆக இப்படி சொல்லப் பட்டுள்ள இவை
நான்கு என்பர், Naanthu Enbar - நான்கு புருஷார்த்தங்கள் என்று (வைதிகர்கள்) கூறுவார்கள்;
நான்கினும், Naanthinum - இந்த நான்கு புருஷார்த்தங்களுள்
காமம், Kaamam - காமமாவது
கண்ணனாக்கே ஆமது, Kannanaakke Aamuthu - எம்பெருமான் விஷயத்திலேயே உண்டாமது;
அறம் பொருள் வீடு, Aram Porul Veedu - தர்ம அர்த்த மோக்ஷங்கள் மூன்றும்
இதற்கு என்று, Idharku Endru - இந்தக் காம புருஷார்த்தததிற்கு சேஷ பூதங்கள் என்று
வாமநன் சீலன் இராமாநுசன், Vamanan Seelan Iraamaanusan - வாமநாவதாரம் செய்த பெருமானொடு ஒத்த சீலத்தை யடையரான எம்பெருமானார்
இந்த மண்மிசை உரைத்தான், Indha Manmichai Uraiththaan - இவ் வுலகத்தில் அருளிச் செய்தார்
3817இராமாநுச நூற்றந்தாதி || 41
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம் அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே
பதவுரை Show / Hide
எங்கள் மாதவனே, Engal Maadhavane - நமக்கு நாதனான திருமால் தானே
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து, Manmichai Yoonigal Thorum Pirandhu - (இப்பூமியிலுள்ள மநுஷ்யாதி) யோனிகள் தோறும் அவதரித்து
கண்உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம், Kanura Nirkilum Kaanagilla Ulagorkal Ellam - எல்லாருடைய கண்ணுக்கும் தன்னை இலக்காக்கிக் கொண்டு நின்ற விடத்திலும் (அவனை நம்முடைய நாதனென்று) காண மாட்டாதிருக்க இவ்வுலகத்தாரெல்லாரும்
அண்ணல் இராமாநுசன வந்து தோன்றிய அப்பொழுதே, Annal Iraamaanuchan Vandhu Thornthiya Appozhudhe - ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானார் இங்கே வந்தவதரித்தவுடனே
நண்ண அரு ஞானம் தலைக் கொண்டு, Nanna Aru Gyaanam Thalaik Kondu - பெறுதற்கரிதான ஞானம் அதிகரிக்கப் பெற்று
நாரணற்கு ஆயினர், Naaranarku Aayinargal - ஸ்ரீமந் நாராயணனுக்கு சேஷப் பட்டனர்.
3818இராமாநுச நூற்றந்தாதி || 42
ஆயிழை யார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்றழுந்தி மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மா மலராள் நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் தூயவன் தீதில் இராமா னுசன் தொல் லருள் சுரந்தே
பதவுரை Show / Hide
மா மலராள் நாயகன், Maa Malaraal Naayagan - லக்ஷ்மீ பதியான
அரங்கன், Arangan - பெரிய பெருமாள்
எல்லா உயிர்கட்கும் நாதன் என்னும், Ella Uyirkadkum Naadhan Ennum - ஸகல ஆத்துமாக்களுக்கும் சேஷி என்று உபதேசிப்பவரும்
தூயவன், Thuyavan - பரம பரிசுத்தரும்
தீது இல், Theethu Il - எவ்வகைக் குற்றமுமில்லாத தவருமான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்;
ஆய் இழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளறு அழுந்திமாயும் என் ஆவியை, Aayi Izhaiyaar Kongai Thangum Akkadhala Alaru Azhundhimayum En Aaviyai - அழகிய ஆபரணங்களணிந்த ஸ்த்ரிகளுடைய கொங்கைத் தடத்தில் தங்கும் ஆசையாகிற சேற்றிலே அழுந்தி) நசித்துப் போகிற என் ஆத்மாவை
தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான், Thol Arul Surandhu Vandhu Indru Eduththaan - இன்று நிர்ஹேதுக க்ருபை பண்ணி வந்து உத்தரித் தருளினார்.
3819இராமாநுச நூற்றந்தாதி || 43
சுரக்கும் திருவும் உணர்வும் சொலப் புகில் வாயமுதம் பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர் உரைக்கின்றனன் உமக்க்கு யான் அறஞ் சீறும் உறு கலியைத் துரக்கும் பெருமை இராமானுசனென்று சொல்லுமினே
பதவுரை Show / Hide
படியில் உள்ளீர், Padiyil Ullir - இப்பூமியிலுள்ளவர்களே!
யான் உமக்கு உரைக்கின்றனன், Yaan Umakku Uraikkindranan - நான் உங்களுக்கு (ஒரு    ஹிதம்) சொல்லுகிறேன்; (என்ன வென்றால்)
அறம் சீறும் உறுகலியை துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லுமின், Aram Seerum Urugalaiyai Thurakkum Perumai Iraamaanuchan Endru Sollumin - தர்ம மார்க்கத்தில் சீற்றமுடையத் தாய் ப்ரபலமான கலியை ஒட்டி விடும் எம்பெருமானாருடைய திரு நாமத்தைச் சொல்லுங்கள்; (அப்படி சொன்னால்)
திருவும், Thiruvum - பக்திப் பெருஞ்செல்வமும்
உணர்வும், Unarvum - ஞானமும்
சுரக்கும், Surakkum - மேன் மேலும் பெருகும்
சோல புகில், Sola Pugil - அந்தத் திருநாமத்தைச் சொல்லத் தொடங்கும் போதே
வாய்  அமுதம் பரக்கும், Vaai Amudham Parakkum - வாக்கிலே அம்ருத ரஸம் வியாபிக்கும்
இரு வினை, Iru Vinai - மஹா பாபங்கள்
பற்று அற ஓடும், Pattru Arai Oodum - அடியோடே போய் விடும்.
3820இராமாநுச நூற்றந்தாதி || 44
சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர் நல்லார் பரவும் இராமா னுசன் திரு நாமம் நம்பிக் கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே
பதவுரை Show / Hide
அகல் இடத்தோர், Akal Idaththoor - விசாலமான இப் பூமியிலுள்ளவர்கள்,
சொல்ஆர் தமிழ் ஒரு மூன்றும், Sola Ar Tamil Oru Moondrum - சொல் நிரம்பிய இயல் இசை நாடகம் என்கிற ஒப்பற்ற முத் தமிழையும்
சுருதிகள் நான்கும், Surudhigal Naanthum - நான்கு வேதங்களையும்
எல்லை இல்லா அறம் நெறி யாவும், Ellai Illaa Aram Nerai Yaavum - கணக்கில்லாத தரும சாஸ்திரங்களையும் மற்றும் எல்லாக் கலைகளையும்
தெரிந்தவன், Therindhavan - அறிந்தவராயும்,
எண் அரு சீர், Enn Aru Seer - எண்ண முடியாத குணங்களையுடையவராயும்
நல்லார் பரவும், Nallaar Paravum - ஸத்துக்களான் துதிக்கப் படுபவராயு மிருக்கிற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய
திருநாமம், Thirunamam - திரு நாமத்தை
நம்பி கல்லார், Nambi Kallaar - (என் வார்த்தையை) நம்பிக் கற்கின்றார்களில்லை;
எதுபேறு என்று காமிப்பரே!, Edhu Peru Endru Kaamipparae - நமக்குப் புருஷார்த்தம் எது? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஐயோ!
3821இராமாநுச நூற்றந்தாதி || 45
பேறொன்று மற்றில்லை நின் சரண் அன்றி,அப்பேறளித்தற் காறொன்று மில்லை மற்றச் சரண் அன்றி,என்றிப்பொருளைத் தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால் கூறும் பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே
பதவுரை Show / Hide
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!
நின் சரண் அன்றி, Nin Saran Andri - தேவரீருடைய திருவடிகளைத் தவிர
மற்று பேறு ஒன்றும் இல்லை, Mattru Peru Ondrum Illai - உபேயம் வேறொன்று மில்லை;
அப் பேறு அளித்தற்கு, Ap Peru Aliththarku - தேவரீர்  திருவடிகளாகிற அந்த உபேயத்தைத் தருவதற்கு
அச் சரண் அன்றி, Ach Saran Andri - அத் திருவடிகள் தவிர
மற்று ஆறு ஒன்றும் இல்லை, Mattru Aaru Ondrum Illai - வேறு உபாயம் ஒன்று மில்லை;
என்ற இப் பொருளை, Endra Ip Porulai - என்கிற இவ் வுண்மைப் பொருளை
3822இராமாநுச நூற்றந்தாதி || 46
கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே மாறன் பணித்த மறை யுணர்ந் தோனை மதியிலியேன் தேறும் படியென் மனம் புதுந்தானைத் திசை யனைத்தும் ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே
பதவுரை Show / Hide
கூறும் சமயங்கள் ஆறும் குலைய, Koorum Samayangkal Aarum Kulaiya - மனம் போன படி சொல்லிக் கொண்டிருக்கிற ஆறு பாஹ்ய மதங்களும் தலைமடங்கும்படி
குவலயத்தே, Kuvalayatthae - இப் பூ மண்டலத்திலே
மாறன் பணித்த மறை, Maan Paniththa Marai - நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதத்தை
உணர்ந்தோனை, Unarnthoonai - கற்று அறிந்தவராயும்
மதியிலியேன் தேறும்படி, Madhiyiliyeen Theerumpadi - ஜ்ஞாநஹீகனான நானும் தெளியும்படியாக
என் மனம் புகுந்தானை, En Manam Pugunthaanai - என் ஹ்ருதயத்தலே வந்து புகுந்தவராயும்
திசை அனைத்தும் ஏறும் குணனை, Thisai Anaiththum Aarum Gunanai - எல்லாத் திக்குக்களிலும் பரவிய திருக் குணங்களை யுடையவராயுமிருக்கிற
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
இறைஞ்சினம், Irainjinam - வணங்கினோம்.
3823இராமாநுச நூற்றந்தாதி || 47
இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத் தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்,என் அரு வினையேன் திறம் செற்றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தை யுள்ளே நிறைந்தொப்பற விருந்தான், எனக்காரும் நிகரில்லையே!
பதவுரை Show / Hide
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று, Irainjappadum Paran Eesan Arangan Enru - ‘எல்லாராலும் வணங்கத்தக்க பரதெய்வம் (எது வென்றால்) ஈசனாகிய ஸ்ரீரங்க நாதனேயாம்’ என்று
இ உலகத்து, I Ulagatthu - இப் பூ மண்டலத்திலே
அறம் செப்பும், Aram Seppum - ஸாக்ஷாத் தாமத்தை அருளிச் செய்யுமவராய்
அண்ணல், Annal - ஸர்வ ஸ்வாமியான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
என் அரு வினையின் திறம் செற்று, En Aru Vinaikkin Thiram Settru - என்னுடைய போக்க முடியாத கர்ம ஸமூஹத்தைப் போக்கி
பகலும் இரவும் விடாது, Pagalum Iravum Vidathu - ஸர்வ காலத்திலும்
என் தன் சிந்தை, En Than Sindhai - என் ஹ்ருதயத்தினாள்ளே
நிறைந்து, Niraindhu - பரிபூர்ணராகி
ஒப்பு அற இருந்தான், Oppu Aru Irundhaan - (இவ்விருப்புக்கு) ஒப்பில்லாதபடி எழுந்தருளி யிருக்கிறார்;
எனக்கு, Enakku - இப்படிப்பட்ட அருளைப் பெற்ற  எனக்கு
ஆரும் நிகர் இல்லை, Aarum Nigar Illai - ஒப்பாவார் ஆருமில்லை.
3824இராமாநுச நூற்றந்தாதி || 48
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப் புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?
பதவுரை Show / Hide
புன்மையிலோர் பருகம் பெருமை இராமாநுச, Punmaiyiloor Parugam Perumai Raamaanusa - மஹான்கள் பேச வேண்டும்படியான பெருமையை யுடைய எம்பெருமானாரே!
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு, Nigar Inri Nindra En Neesathai - என்னுடைய ஒப்பற்ற தாழ்மைக்கு
நின் அருளின் கண் அன்றி, Nin Arulin Kan Andri - தேவரீருடைய க்ருபை யினிடத்தில் தவிர
புகல் ஒன்றும் இல்லை, Pugal Ondrum Illai - வேறு எவ் விடத்திலும் ஒதுங்க இடமில்லை
அருட்கும், Arutkum - தேவரீருடைய அந்த க்ருபைக்கும்
அஃதே புகல், Ahdhe Pugal - (என் போல்வாருடைய) அந்தத் தாழ்மையே சரணம்; (ஆக இவ் வகையாலே)
இருவோமுக்கும் பயன் ஆனபின், Irivomukkum Payan Anapin - அடியேனால் தேவரீருக்குப் பயன், அடியேனுக்குப் பயன் என்று ஸித்தமான பின்பு
இனி, Ini - இனி மேலும்
பழுதே, Pazhudhe - வியர்த்தமான
அகலும் பொருள் என்ன, Akalam Porul Enna - பிரிந்திருக்கைக்குக் காரணம் என்ன?
3825இராமாநுச நூற்றந்தாதி || 49
ஆனது செம்மை அற நெறி பொய்ம்மை அறு சமயம் போனது பொன்றி யிறந்தது வெங் கலி பூங்கமலத் தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத் தானதில் மன்னும் இராமானுசனித் தலத் துதித்தே
பதவுரை Show / Hide
பூ கமலம்  தேன், Poo Kamalam Then - தாமரைப் பூக்களிலுண்டான மகரந்தமானது
நதி பாய், Nadhi Pai - ஆறாகப் பெருகப் பெற்ற
வயல், Vayal - கழனிகளையுடைய
தென் அரங்கன், Then Arangan - ஸ்ரீரங்கத்திலே எழுந்தருளி யிருக்கிற பெரிய பெருமாளுடைய
கழல், Kazhal - திருவடிகளை
சென்னி வைத்து, Sennai Vaiththu - சிரஸா வஹித்துக் கொண்டு
தான் அதில் மன்னும், Thaan Athil Mannum - தாம் அத் திருவடிகளிலேயே  ப்ரவணா யிருக்கிற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
இ தலத்து உதித்து, I Thalathu Uthiththu - இப் பூமியிலே திருவவதரித்ததனால்
செம்மை அறம் நெறி, Semmai Aram Nerii - ருஜூவான தர்ம மார்க்கமானது
ஆனது, Anathu - ஸத்தை பெற்றது;
பொய்ம்மை அறு சமயம், Poymmai Aru Samayam - பொய்யே நிறைந்து கிடக்கிற அறு சமயங்களும்
பொன்றி போனது, Pondri Ponathu - நாசமடைந்தன;
வெம் கலி இறந்தது, Vem Kali Irandhathu - கொடிய கலியுகமும் மாண்டது
3826இராமாநுச நூற்றந்தாதி || 50
உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்ச மஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றமெல்லாம் பதித்த வென் புன் கவிப் பா வினம் பூண்டன பாவு தொல் சீர் எதித் தலை நாதன் இராமானுசன் றன் இணை யடியே
பதவுரை Show / Hide
பரவு தொல் சீர், Paravu Thol Seer - உலகமெங்கும் பரவின நித்ய கலயாண குணங்களை யுடையவரும்
எதி தலை நாதன், Edhi Thalai Nadhan - யதிகளுக்குத் தலையான நாயகருமான
இராமாநுசன் தன், Iramanusan Than - எம்பெருமானாருடைய
இணை அடி, Inai Adi - திருவடி யிணைகள்
உத்தமர் சிந்தையுள் உதிப்பன, Uttamar Sindhaiyul Uthippan - உத்தமாதிகாரிகளுடைய திருவுள்ளங்களிலே ப்ரகாசிப்பவை;
ஒன்னலர் நெஞ்சம், Onnalaar Nenjam - பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சானது
அஞ்சி கொதித்திட, Anji Kothithida - பயப்பட்டுப் பரிதவிக்கும்படி
மாறி நடப்பன், Maari Nadappan - மாறி மாறி யிட்டு நடக்குந் தன்மை யுடையன;
கொள்ளை வன்  குற்றம் எல்லாம் பதித்த, Kollai Van Kuttram Ellam Pathitha - அபாரமான வலிய தோஷங்கள் யாவும் அழுந்திக் கிடக்கிற
என் புன் கவி, En Pun Kavi - என்னுடைய க்ஷுத்ரமான  கவனமாகிய
பா இனம் பூண்டன, Paa Inam Poondana - பாசுரங்களைப் (ஸ்தோத்ரமாகப்) பெற்றுக் கொண்டவை.
3827இராமாநுச நூற்றந்தாதி || 51
அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர் முடியப் பரி நெடுந் தேர் விடுங் கோனை முழுதுணர்ந்த அடியர்க் கமுதம் இராமானுச னென்னை ஆள வந்திப் படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற் காலத்தில்
அடியை தொடர்ந்து, Adiyai Thodarndu - திருவடிகளை அவலம்பித்து
எழும், Ezhum - செருக்கிக் கிளர்ந்த
ஐவீர்கட்கு ஆய், Aivirkadku Aayi - பஞ்ச பாண்டவர்களுக்காக (பக் ஷபாதம் பூண்டு)
பாரதப் போர், Bharatap Por - பாரத யுத்தத்திலே
முடிய, Mudiya - (துரியோதநாதிகள்) மாளும் படியாக
பரி நெடு தேர், Pari Nedu Ther - குதிரை பூண்ட பெரிய தேரை
விடும், Vidum - நடத்தின
கோனை, Konai - ஸர்வேஸ்வரனை
முழுது உணர்ந்த, Muzhuthu Unarntha - (ஸ்வரூப ஸ்வபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத் தெரிந்து கொண்ட
அடியார்க்கு, Adiyarkku - பாகவதர்களுக்கு
அமுதம், Amudham - பரம போக்யமான
இப் படியில், Ip Padiyil - இப் பூ மண்டலத்தில்
வந்து பிறந்தது என்னை ஆள, Vandhu Pirandhadhu Ennai Aala - வந்து அவதரித்தது  (எதற்காக வெனில்) அடியேனை ஆட் கொள்ளுகைக்காகவேயாம்;
3828இராமாநுச நூற்றந்தாதி || 52
பார்த்தான் அறு சம யங்கள் பதைப்ப,இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினே னிடைத் தான் புகுந்து தீர்த்தான் இரு வினை தீர்த் தரங்கன் செய்ய தாளிணையோ டார்த்தான் இவை யெம் இராமா னுசன் செய்யும் அற்புதமே
பதவுரை Show / Hide
அறு சமயங்கள், Aru Samayangkal - (வேத பாஹ்யங்களான) ஆறு சமயங்கள் துடிக்கும் படியாக
பதைப்ப பார்த்தான், Padhaippa Paarthaan - திருக் கண் செலுத்தினார்;
இப் பார் முழுவதும், Ip Paar Muzhuvadhum - இப் பூமண்டலம் முழுவதையும்
புகழ் கொண்டு, Pugazh Kondo - தமது கீர்த்தியினாலே
போர்த்தான், Poorththaan - மூடி விட்டார்;
புன்மையினேனிடை, Punmaiyinenaidai - நீசனான அடியேன் பக்கலிலே
தான் புகுந்து, Thaan Pugundhu - தாமாகவே (நிர்ஹேதுக க்ருபையினால்) வந்து புகுந்து
இரு வினை, Iru Vinai - பெரிய பாவங்களை
தீர்த்தான், Theerththaan - போக்கி யருளினார்;
தீர்த்து, Theerthu - பாவங்களைப் போக்கினது மன்றியில்
அரங்கன், Arangan - ஸ்ரீ ரங்கநாதனுடைய
செய்ய தாள் இணையோடு ஆர்த்தான், Seyya Thaal Inaiyodu Aarththaan - அழகிய திருவடிகளோடே (என்னை)அந்வயிப்பித்தார்;
இவை, Ivai - ஆகிய இக் காரியங்களெல்லாம்
எம் இராமாநுசன் செய்யும் அற்புதம், Em Iraamaanusan Seyyum Arputham - எமக்கு ஸ்வாமியான எம்பெருமானார் செய்தருளின ஆச்சரியச் செயல்களாம்
3829இராமாநுச நூற்றந்தாதி || 53
அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆள வந்த கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய பற் பல் லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும் நற் பொருள் தன்னை, இந் நானிலத்தே வந்து நாட்டினனே
பதவுரை Show / Hide
என்னை ஆள வந்த, Ennai Aala Vandha - என்னை ஆட் கொள்வதற்காக அவதரித்த
கற்பகம், Karppagam - உதாரரும்
கற்றவர் காமூது சீலன், Kattravar Kaamuthu Seelan - ஞானிகள் ஆசைப்படும் படியான சீல குணத்தை யுடையவரும்
அற்புதன், Arputhan - ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையரும்
செம்மை, Semmai - ருஜூவாயிருக்குந் தன்மை பொருந்திய வருமான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்,
கருத அரிய பல் பல் உயிர்களும், Karutha Ariya Pal Pal Uyirgalum - நினைக்கவும் முடியாத படி எண்ணிறந்திருக்கிற ஆத்ம வர்க்கங்களும்
பல் உலகு யாவும், Pal Ulagu Yaavum - அவ் வாத்மாக்களுக்கு இருப் பிடமான) அளவிறந்த எல்லா வுலகங்களும்
பரனது என்னும் நல் பொருள் தன்னை, Paranathu Ennum Nal Porul Thannai - எம்பெருமானுடைய ஸொத்துக்களாம் என்கிற ஸாரர்த்தத்தை
இ நானிலேததே, I Naanilaethathe - இவ் வுலகத்திலே
வந்து, Vandhu - வந்தவதரித்து
நாட்டினன், Naatinann - ஸ்தாபித்தருளினார்.
3830இராமாநுச நூற்றந்தாதி || 54
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் டமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வு கண்டே
பதவுரை Show / Hide
மண் உலகில் ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன், Man Ulavil Eettiya Seelathu Raamaanusan Than - இப் பூலோகத்தில் மேன் மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தை யுடையரான எம்பெருமானாருடைய
இயல்வு, Iyalvu - ஸ்வபாவத்தை
கண்டு, Kandu - பார்த்து,
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன, Naattiya Neesa Samayangal Maandana - (துஷ்ட யுக்திகளாவே) நிலை நிறுத்தப் பட்டிருந்த ஷூத்ர மதங்களெல்லாம் ஒழிந்தன;
நாரணனை காட்டிய, Naaranaiyai Kaattiya - ஸ்ரீமந் நாராயணனைப் பிரதிபாதிக்க
வேதம், Vedham - வேதங்களானவை
களிப்பு உற்றது, Kalippu Utrathu - (நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று) செருக்கடைந்தன;
தென் குருகை வள்ளல், Then Kurugai Vallar - அழகிய திருக்குருகூரில் அவதரித்த உதாரரான ஆழ்வார் (அருளிச்; செய்த)
வாட்டம் இலா, Vaatam Ila - ஒரு குறையுமற்ற
வண் தமிழ் மறை, Van Tamil Marai - சிறந்த தமிழ் வேதமான திருவாய்மொழி
வாழ்ந்தது, Vaazhnthathu - வாழ்வு பெற்றது.
3831இராமாநுச நூற்றந்தாதி || 55
கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசனைத், தொகை யிறந்த பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலை மேவித் தொழும், குடியா மெங்கள் கோக்குலமே
பதவுரை Show / Hide
தொகை இறந்த, Thogai Irandha - கணக்கில்லாத
பண் தரு வேதங்கள், Pan Tharu Vedhangal - ஸ்வர ப்ரதாநங்களான வேதங்கள்
பார்  மேல், Paar Mel - இப் பூமியிலே
நிலவிட, Nilavidha - ஒங்கி வளரும்படி
பார்த்தருளும், Paarttarulum - செய்தருளினவரும்
கொண்டலை, Kondalai - பரம உதாரரும்,
கண்டவர் சிந்தை கவரும், Kandavar Sindhai Kavarum - கணடவர்களின் நெஞ்சைக் கவர்கின்ற
கடி பொழில், Kadi Pozhil - மண மிக்க சோலைகள் சூழ்ந்த
தென் அரங்கன், Then Arangan - தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால்
குலாவும், Kulavum - கொண்டாடப் படுபவருமான
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
மேலி கொழும் குடி, Meli Kozhum Kudi - பொருந்தி ஆச்ரயிக்கிற குலம்
எங்கள் கோக்குலம் ஆம், Engal Kokkulam Aam - எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடிய குலமாம்.
3832இராமாநுச நூற்றந்தாதி || 56
கோக்குல மன்னரை மூவெழுகால், ஒரு கூர்மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும் ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்த பின், என் வாக்குரை யாது, என் மனம் நினை யாதினி மற்றொன்றையே
பதவுரை Show / Hide
கோக்குலம் மன்னரை, Kokkulam Mannarai - க்ஷத்திரிய குலத்து அரசர்களை
மூ எழு கால், Moo Ezhukal - இருபத்தொரு தலைமுறை யளவும்
ஒரு கூர் மழுவால், Oru Koora Mazhuval - கூர்மை பொருந்திய ஒரு மழுவாலே
போக்கிய, Pokkia - (பரசுராமாவதாரத்தில்) தொலைத்தருளின
தேவனை, Devanai - எம்பெருமானை
போற்றம், Pottam - துதிக்கின்ற
புனிதன், Punitan - பரம பரிசுத்தரும்,
புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி, Puvanam Engum Aakkiya Keerthi - உலகமெங்கும் பரவின புகழை யுடையவருமான
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
அடைந்த பின், Adainda Pin - ஆச்ரயித்த பின்பு
இனி, Ini - மேலுள்ள காலமெல்லாம்
மற்று ஒன்றை, Mattru Ondrai - வேறு எந்த விஷயத்தையும்
என் வாக்கு, En Vaakku - எனது வாக்கானது
உரையாது, Uraiyaadhu - சொல்ல மாட்டாது;
என் மனம், En Manam - எனது மனமும்
நினையாது, Ninaiyadhu - நினைக்க மாட்டாது.
3833இராமாநுச நூற்றந்தாதி || 57
மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள் உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே
பதவுரை Show / Hide
மற்று ஒரு பேறு, Mattru Oru Peru - ப்ரயோஜநாந்தரங்களை
மதியாது, Madhiyathu - கணிசியாமல்
அரங்கன் மலர் அடிக்கு, Arangan Malai Adikku - அழகிய மணவாளனாடைய திருவடித் தாமரைகளுக்கு
ஆள் உற்றவரே, Aal Utravarai - அடிமை பட்டவர்களையே
தனக்கு உற்றவர் ஆ, Thanakku Utravar Aa - தமக்கு ஆத்ம பந்துக்களாக
கொள்ளும், Kollum - திருவுள்ளம் பற்றுகிற
உத்தமனை, Uthamanai - உத்தம புருஷராயும்
நல் தவர் போற்றும், Nal Thavar Poattrum - ப்ரபந்நர்களாலே புகழப் பட்டவராயு மிருக்கிற
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
,நானிலத்தே பெற்றனன், Naanilaththae Pettranan - இந்த லோகத்திலே அடியேன் ஆச்ரயிக்கப் பெற்றேன்;
பெற்ற பின், Pettra Pin - ஆச்ரயித்த பின்பு
மற்று ஒரு பேதைமை அறியேன், Mattru Oru Paedhaimai Ariyeen - (வேறு விஷயங்களை விரும்புகை முதலிய) எவ்வித அஜ்ஞான கார்யமும் அறிய மாட்டேன்
3834இராமாநுச நூற்றந்தாதி || 58
பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம் நன்றென் றோதி மற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள் மெய் விட் டாதிப் பரனொடொன்றா மென்று சொல்லுமவ் வல்ல லெல்லாம் வாதில் வென்றான், எம் இராமா னுசன் மெய்ம் மதிக் கடலே
பதவுரை Show / Hide
பேதையர், Paedhaiyar - (வேதத்தைப் பிரமாணமாகக் கொள்ளாத) அவிவேகிகள்
இது வேதப் பொருள் என்ற உன்னி, Idhu Vedhap Porul Endra Unni - நாங்கள் சொல்லுகிற இது தான் வேதத்தின் அர்த்தம்’ என்று நிரூபித்துக் கொண்டு
பிரமம் நன்று என்று ஒதி, Brahmam Nandru Endru Othi - ப்ரப்ரஹமமான எவ்லாவற்றிலும் விலஷணம்’  என்று சொல்லி
மற்று எல்லா உயிரும் அஃது என்று, Mattru Ella Uyirum Ahthu Endru - அந்தப் ப்ரஹ்மந் தவிர மற்ற எல்லா ஜீவ ராசிகளும் அந்த ப்ரஹமமே’ என்று சொல்லி
உயிர்கள் மெய்விட்டு, Uyirgal Meivittu - ‘ஜீவாத்மாக்கள் தேஹத்தை விட்ட பின்பு
ஆதி பரனொடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம், Aadhi Paranodu Onru Aam Endru Sollum Avv Allal Ellam - ஸர்வ காரண பூதுனான பரம புரஷனோடே ஐக்கியத்தை யடைகின்றன’  என்று சொல்லுகின்ற அந்த கோலாஹலங்களையெல்லாம்.
மெய்  மதி கடல், Mei Mathi Kadal - தத்வ ஜ்ஞாநக் கடலாகிய
எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார்
வாதில் வென்றான், Vaathil Vendraan - வாதத்தில் நிரஸித்து வெற்றி பெற்றார்.
3835இராமாநுச நூற்றந்தாதி || 59
கடலள வாய திசை யெட்டி னுள்ளும் கலி யிருளே மிடை தரு காலத் திராமா னுசன், மிக்க நான் மறையின் சுடரொளி யாலவ் விருளைத் துரத்திலனேல் உயிரை உடையவன், நாரணன் என்று அறிவார் இல்லை உற்றுணர்ந்தே
பதவுரை Show / Hide
கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும், Kadal Alavu Aaya Thisai Ettinullum - நான்கு ஸமுத்ரங்களை எல்லா விடங்களிலும்
கலி இருளே மிடை தரு காலத்து, Kali Irule Midai Tharu Kaalathu - கலி புருஷனாகிற அந்த காரமே நெருங்கிக் கிடந்த காலத்தில்
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் (திருவவதரித்து)
நால் மறையின், Naal Maraiyin - நான்கு வேதங்களின்
மிக்க சுடர் ஒளியால், Mikka Sudar Oliyaal - அளவற்ற தேஜஸ்ஸைக் கொண்டு
அவ்விருளை துரந்திலனேல், Avvirulai Thurandhilanel - அந்த கலி தோஷத்தைப் போக்கி யிராமற் போனால்
உயிரை உடையவன் நாரணன் என்று, Uyirai Udaiyavan Narayanan Endru - ‘எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷி ஸ்ரீமந் நாராயணனே என்று
உற்று உணர்ந்து, Utru Unarndhu - யாரும் தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.
3836இராமாநுச நூற்றந்தாதி || 60
உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய் மொழியின்- மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணந் திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே
பதவுரை Show / Hide
குணம் திகழ், Gunam Thigazh - ஆத்ம குணங்களால் விளங்குபவரும்
கொண்டல், Kondal - (ஔதார்யத்தில்) காள மேகத்தை ஒத்த வரும்
எம் குலம் கொழுந்து, Em Kulam Kozhundhu - எங்கள் குலத்துக்குத் தலைவருமான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தொறும், Unarndha Mei Gnaniyar Yogam Thorum - கற்றுணர்ந்த தத்வ  ஞானிகளுடைய கோஷ்டிகளெங்கும்
திருவாய் மொழியின் மணம் தரும் இன் இசை மன்னும் இடம் தொறும், Thiruvai Mozhiyin Manam Tharum In Isai Mannum Idam Thorum - திருவாய் மொழியினுடைய பரிமளம் மிக்க இனிய இசையுள்ள இடங்களெங்கும்
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும், Maa Malaraal Punarndha Pon Marban Porundhum Pathi Thorum - பிராட்டி நித்ய வாஸம் பண்ணுகிற அழகிய மார்பை யுடைய திருமால் எழுந்தருளி யிருக்கிற திவ்ய தேசங்களெங்கும்
புக்கு நிற்கும், Pukku Nirkum - எழுந்தருளி யிருப்பார்.
3837இராமாநுச நூற்றந்தாதி || 61
கொழுந்து விட் டோடிப் படரும் வெங் கோள் வினை யால்,]நிரயத் தழுந்தி யிட் டேனை வந் தாட் கொண்ட பின்னும், அரு முனிவர் தொழுந் தவத்தோனெம் இராமானுசன் தொல் புகழ் சுடர் மிக் கெழுந்தது,அத்தால் நல்லதிசயங் கண்ட திரு நிலமே
பதவுரை Show / Hide
அருமுனிவர் தொழும், Arumunivar Thozhum - அருமையான நிஷ்டையை யுடைய மஹான்களாலே மஹான்களாலே ஸேவிக்கப் பெற்றவராயும்
தவத்தோன், Thavaththon - ப்ரபத்தியாகிற தபஸ்ஸை யுடையவராயு மிருக்கிற
எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானாருடைய
தொல் புகழ், Thol Pugazh - நித்யமான கல்யாண குணங்கள்
கொழுந்து விட்டு ஒடி படரும் வெம்கோள் வினையால், Kozhundhu Vittu Odi Padarum Vemkool Vinaiyaal - மேன் மேலும் அதிகமாகப் பெருகுகின்ற க்ரூரமாய்ப் பரப்லமான துஷ் கர்மத்தாலே
நிரயத்து அழுந்தி யிட்டேனை, Nirayathu Azhundhi Ittena - ஸம்ஸாரமாகிற நரகத்திலே அழுந்திக் கிடந்த என்னை
வந்து ஆள் கொண்ட பின்னும் சுடர் மிக்கு எழுந்தது, Vandhu Aal Kondha Pinnum Sudar Mikku Ezhundhadhu - வந்து ஆட்படுத்திக் கொண்ட பின்பும் ஒளி குன்றாதே  முன்னிலும் விசேஷமாக விளங்கா நின்றன:
அத்தால், Aththal - அதைக் கண்டு
இரு நிலம், Iru Nilam - விசாலமான இப் பூமண்டலம்
நல்ல அதிசயம் கண்டது, Nalla Adhisayam Kandu - மிக்க ஆச்சரியங் கொண்டது.
3838இராமாநுச நூற்றந்தாதி || 62
இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்றி யான் இறையும் வருந்தேன் இனி யெம் இராமானுசன்,மன்னு மா மலர்த்தாள் பொருந்தா நிலை யுடைப் புன்மை யினோர்க் கொன்றும் நன்மை செய்யாப் பெருந் தேவரைப் பரவும், பெரியோர் தம் கழல் பிடித்தே
பதவுரை Show / Hide
எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானாருடைய
மன்னா மா தாள் மலர் பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு, Manna Maa Thaal Malar Porundha Nilai Udai Punmaiyinorkku - சிறந்த திருவடித் தாமரைகளில் சேராத ஸ்வபாவத்தை யுடையவர்களான  நீசர் களுக்கு
ஒன்றும் நன்மை செய்ய, Ondrum Nanmai Seyya - ஒரு விதமான உபகாரமும் செய்யாத
பெரு தேவரை, Peru Devarai - பெரிய பெருமாளை போற்றுகின்ற
பெரியோர் தம், Periyor Tham - ஆழ்வானாகிற மஹானாடைய
சுழல் இன்று பிடித்து, Suzhal Inru Pidithu - திருவடிகளை இன்று ஆச்ரயித்தேனானபின்பு
இரு வினை பாசம் கழற்றி இருந்தேன், Iru Vinai Paasam Kazhatri Irundhen - புண்ணியம் பாவமென்று இரண்டு வகையான கரும பாசங்களினின்று விடுபட்டவனானேன்;
யான், Yaan - இப்படி நிர்மலனாகப் பெற்ற அடியேன்
இனி இறையும் வருந்தேன், Ini Irainum Varunthen - இனி மேல் கொஞ்சங்கூட வருத்தப் பட்ட மாட்டேன்.
3839இராமாநுச நூற்றந்தாதி || 63
பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர் அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச் செடியைத் தொடரும் மருள் செறிந் தோர் சிதைந் தோட வந்திப் படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே!
பதவுரை Show / Hide
அறுசமயம் செடியை தொடரும் மருள் செறிந்தோர், Aru Samayam Chediyai Thodarum Marul Serindhor - பாஹ்யமான ஆறு மதங்களாகிற தூறுகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகம் நிறைந்த மூடர்கள்
சிதைந்து ஒட, Sithaindhu Oda - பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக
வந்து இப்படியை தொடரும், Vandhu Ippadiyai Thodarum - இப் பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீகரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற
மிக்க பண்டிதன், Mikka Pandithan - மஹா பண்டிதரான
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!,
பிடியை தொடரும் களிறு என்னயான், Pidiyai Thodarum Kaliru Ennayaan - யானைப் பேடையைப் பின்பற்றித் திரிகின்ற ஆண் யானை போல
யான், Yaan - அடியேன்
சீர்  பிறங்கிய உன் அடியை தொடரும்படி நல்க வேண்டும், Seer Pirangiya Un Adiyai Thodarum Padi Nalka Vendum - ஸௌந்தரியம் முதலிய குணங்கள் விளங்குகின்ற தேவரீரது திருவடிகளைப் பின் பற்றும்படி கிருபை செய்தருள வேணும்.
3840இராமாநுச நூற்றந்தாதி || 64
பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழுந் தண்ட மேந்திக் குவலயத்தே மண்டி வந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே
பதவுரை Show / Hide
எங்கள் இராமநுச முனி வேழம், Engal Iramanusa Muni Vezham - எங்களுக்கு விதேயமான ஸ்ரீராமாநுஜ முனியாகின்ற மத்த கஜமானது.
மாறன், Maan - நம்மாழ்வார்
பண், Pan - இசைகளாலே
தரு, Tharu - அருளிச் செய்த
பசுந்தமிழ் ஆனந்தம், Pasunthamil Anantham - செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம்
பாய் மதம் ஆய் விண்டிட, Pai Matham Aayi Vintida - பெருகு மத நீராக ஒழுகப் பெற்று
மெய்ம்மை கொண்ட நல் வேதம் கொழு தண்டம் ஏந்தி, Meimmai Konda Nal Vedham Kozhu Thandam Aendhi - ஸத்திய வாதியான நல்ல வேதமாகிற பெரிய தடியைத் தூக்கிக் கொண்டு
குவலயத்தே, Kuvalayatthae - இப் பூமண்டலத்திலே
மணடி வந்து என்றது, Manadi Vandu Endrathu - உங்களுடைய பிழைப்பு
உங்கள் வாழ்வு அற்றது, Ungal Vazhvu Attrathu - உங்களுடைய பிழைப்பு போயிற்று
3841இராமாநுச நூற்றந்தாதி || 65
வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம் தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது, தத்துவ நூல் கூழற்றது குற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந் நாழற்றது,நம் இராமா னுசந் தந்த ஞானத்திலே
பதவுரை Show / Hide
நம் இராமாநுசன், Nam Ramanujan - ஸ்வாமிஎம்பெருமானார்
தந்க ஞானத்தில், Thanka Gnanathil - அருளின ஞானத்தினால் துர்வாதிகளுக்கு வாழ்ச்சி அற்றுப் போயிற்று;
மறையவர் தம் தாழ்வு, Maraiyavar Tham Thalvu - வைதிகர்களுடைய குறை
என்றும் அற்றது, Endrum Attrathu - இனி ஒருநாளும் இல்லாதபடியாயிற்று
தாரணி, Tharani - பூமண்டவமானது
தவம் பெற்றது, Thavam Pettrathu - பாக்கியம் பெற்றது;
தத்துவம் நூல், Thathuvam Nool - தத்வபரமான சாஸ்திரங்கள்
கூழ் அற்றது, Kool Attrathu - ஸந்தேஹமற நிச்சயமான பொருளைத் தெரிவிப்பவையாயின;
குற்றம் எல்லாம்பதித்த குணத்கினர்க்கு, Kuttram Ellam Pathitha Gunathkinarkku - பலவகைக் குற்றங்களும் நிறைந்த ஸ்வபாவத்தையடைய ஜனங்களுக்கு
ஆ நாழ் அற்றது, A Naal Attrathu - அந்தக் குற்றங்கள் தீர்ந்தன;
3842இராமாநுச நூற்றந்தாதி || 66
ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத் தானம் கொடுப்பது தன் தக வென்னும் சரண் கொடுத்தே
பதவுரை Show / Hide
மாதவன், Madhavan - திருமால்
வானம் கொடுப்பது, Vaanam Koduppathu - மோக்ஷம் அளிப்பது
ஞானம்  கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு, Gnanam Kanintha Nalam Kondo Naal Thorum Naipavarkku - ஞானம் பக்தி ரூபமாகப் பரீபக்வமாகி அந்த பக்தியினால் நித்யம் உருகுகிறவர்களுக்கேயாம்;
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமாநுசன், Val Vinaiyen Manathil Eenam Kadintha Ramanujan - மஹா பாபியான எனது ஹ்ருதயத்திலிருந்த கல்மஷங்களைப் போக்கடித்த எம்பெருமானார்
தன்னை எய்தினர்க்கு, Thannai Eydhinarukku - தம்மைப் பற்றினவர்களுக்கு
அத்தானம் கொடுப்பது, Athaanam Koduppathu - அந்த மோக்ஷ ஸ்தானத்தை அளிப்பது
தன் தகவு என்னும் சரன் கொடுத்து, Than Thagavu Ennum Saran Koduthu - தம்முடைய க்ருபையாகிற ஸாதனத்தை (அவர்களுக்குக் கைம் முதலாகக் கொடுத்து (தமது திவ்ய க்ருபையாலே)
3843இராமாநுச நூற்றந்தாதி || 67
சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை- மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த கரணவை யுமக் கன்றென்றி ராமானுச னுயிர்கட்கு அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வா ருயிர்க்கே?
பதவுரை Show / Hide
சரணம் அடைந்த தருமனாக்கு ஆ, Saranam Adaindha Dharumanakku Aa - தன்னைச் சரணம் பற்றின தர்ம புத்ரருக்காக
பண்டு, Pandhu - முற்காலத்திலே
நூற்றுவரை, Noorruvarai - துரியோதனன் முதலிய நூறு பேர்களை
மரணம் அடைவித்த மாயவன், Maranam Adaivitha Maayavan - சாகும்படி செய்த எம்பெருமான்
தன்னை வணங்க வைத்த கரணம் இவை, Thannai Vananga Vaiththa Karanam Ivai - தன்னை வழிபடுவதற்காகவே எற்படுத்தி வைத்த இந்திரியங்களாம் இவை;
உமக்கு அன்று, Umakku Andru - உங்களுக்கு உரிமைப் பட்டவையல்ல;
என்று, Endru - என்று இவ்வாறாக உபதேசித்து
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
உயிர்கட்கு, Uyirkadku - ஆத்மாக்களுக்கு
அரண் அமைத்திலன் எல், Aran Amaiththilan El - ரக்ஷையைக் கற்பித்தில ராகில்
,ஆர் உயிர்க்கு, Ar Uyirku - இந்த அருமையான ஆத்மாக்களுக்கு
மற்று அரண் ஆர், Mattru Aran Ar - வேறு ரஷகராவார் ஆர்? (ஆருமில்லை.)
3844இராமாநுச நூற்றந்தாதி || 68
ஆரெனக் கின்று நிகர்ச் சொல்லில் மாயன் அன்று ஐவரைத் தெய்வத் தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினிற் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே
பதவுரை Show / Hide
மாயன், Maayan - ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடைய எம்பெருமான்
அன்று, Andru - முற் காலத்தில்
ஐயர், Aiyar - பஞ்ச பாண்டவர்களுடைய
தெய்வம் தேரினில், Deivam Therinil - தெய்வத் தன்மை பொருந்திய தேரின் மீது (இருந்து கொண்டு)
செப்பிய, Seppiya - அருளிச் செய்த
கீதையின், Geethaiyin - பகவத் கீதையினுடைய
செம்மை பொருள், Semmai Porul - ஸ்வ ரஸமான அர்த்தத்தை
தெரிய, Theriya - (அனைவரும் எளிதாகத்)தெரிந்து கொள்ளும் படி
பாரினில், Paarinil - இப் பூமிலே
சொன்ன, Sonna - (கீதா பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
பணியும், Paniyum - ஆச்ரயித்திருக்கும்
நல்லோர், Nallor - விலக்ஷண புருஷர்களுடைய
சீரினில், Seerinil - கல்யாண குணங்களிலே
என் ஆவியும் சிந்தையும், En Aaviyum Sindhaiyum - எனது ஆத்மாவும் மநஸ்ஸூம்
சென்று பணிந்தது, Sendru Panindhathu - சென்று சேர்ந்து விட்டன;
சொல்லில், Sollil - சொல்லுமளவில்
இன்று, Indru - இக் காலத்தில்
எனக்கு ஆர் நிகர், Enakku Aar Nigar - எனக்கு ஆர் ஒப்பாவார்?
3845இராமாநுச நூற்றந்தாதி || 69
சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள் அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால் தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து எந்தை இராமானுசன் வந் தெடுத்தனன் இன்றென்னையே
பதவுரை Show / Hide
முன் நாள், Mun Naal - ஸ்ருஷ்டிருக்கு முற் காலத்தில்
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து, Sindhaiyinodu Karanangal Yaavum Sithaindhu - சிந்தையும் இந்திரியங்களு மெல்லாம் அழிந்து
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு, Andham Utru Aazhnthathu Kandu - உப ஸமஹாரத்தை யடைந்து அசேதந ப்ராயமா யிருப்பதைப் பார்த்து
என் தனக்கு, En Thanakku - (அப்படி அசேதந ப்ராயராய்க் கிடந்தவர்களில் ஒருவனான) எனக்கு
அவை, Avai - அந்தக் கரண களேபரங்களை
அன்று, Andru - அக் காலத்தில்
அருளால் தந்த அரங்கனாம், Arulaal Thanda Aranganam - க்ருபையாலே உண்டாக்கின எம்பெருமானாம்
தன்  சரண் தந்திலன், Than Saran Thandhilan - தனது திருவடிகளைக் காட்டிக் கொடுத்து உஜ்ஜீவிப்பிக்க வில்லை;
எந்தை இராமாநுசன், Endhai Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார்
தான் வந்து, Thaan Vandhu - தாமாகவே வந்து
அது தந்து, Adhu Thandhu - அந்தத் திருவடிகளைத் தந்தருளி
இன்று என்னை எடுத்தனன், Indru Ennai Eduththanan - இன்று என்னை ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பித்தார்.
3846இராமாநுச நூற்றந்தாதி || 70
என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல் குணத்த உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி யென்பால் பின்னையும் பார்க்கில் நலமுளதே?உன் பெருங்கருணை தன்னை யென் பார்ப்பர் இராமானுச! உன்னைச் சார்ந்தவரே?
பதவுரை Show / Hide
இராமா நுச, Iraamaa Nucha - எம்பெருமானாரே!
என்னையும் பார்த்து, Ennaiyum Paarthu - (ஒரு குணமில்லாமல் குற்றமே நிறைந்திருக்கிற) என்னையும் நோக்கி
என் இயல்வையும் பார்த்து, En Iyvalvaiyum Paarthu - (இனி மேலும் எவ்வித நன்மையும் ஸம்பாதித்துக் கொள்ள முடியாமலிருக்கிற) என்னுடைய தன்மையையும் நோக்கி
எண இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில், Ena Il Pal Gunaththu Unnaiyum Paarkkil - எண்ணிறந்த பல திருக் குணங்களை யுடைய தேவரீரையும் நோக்கு மனவில்
அருள் செய்வதே நலம், Arul Seivadhai Nalam - ( எப்போதும்) அருள் செய் திருப்பதே நல்லது;
அன்றி, Andri - இதுவொழிய மேலும் ஆராயுமளவில்
என் பால் நலம் உளதே, En Paal Nalam Uladhe - என்னிடத்தில் ஏதாவது நன்மை யுண்டோ? (சிறிதும் இல்லை)
உன்னை சார்ந்தவர், Unnai Sarnthavar - தேவரீரை ஆச்ரயித்தவர்கள்
உன் பெரும் கருணை தன்னை என் பார்ப்பர், Un Perum Karunai Thannai En Paarppar - தேவரீருடைய கிருபையைப் பற்றி என்ன நினைப்பர்கள்?) இளப்பமாக நினையார்களோ.)
3847இராமாநுச நூற்றந்தாதி || 71
சார்ந்த தென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான் மிகவும் கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே தீர்ந்ததென் செய்கை முன் செய்வினை நீ செய் வினையதனால் பேர்ந்தது வண்மை இராமானுச! எம் பெருந்தகையே
பதவுரை Show / Hide
வண்மை, Vanmai - ஔதார்ய முடையரும்
எம், Em - எமக்கு ஸ்வாமியும்
பெரு தகை, Peru Thagai - பெருந் தன்மை யுடையருமான
இராமாநுசா, Iramanuchaa - எம்பெருமானாரே! எனது நெஞ்சு
உன் தாள் இணை கீழ் சார்ந்தது அன்புதான், Un Thaal Inai Keel Sarnthadhu Anbudhaan - தேவரீருடைய உபய பாதங்தளின் கீழ் அமர்ந்து விட்ட பக்தியும்
அத் தாமரை தாள்களுக்கு, Ath Thamarai Thaalgalukku - அந்தத் திருவடித் தாமரைகள் விஷயத்திலேயே
மிகவும் கூர்ந்தது, Mikavum Koornthadhu - மிகவும் அதிகரித்தது.
என் செய்கை, En Seigai - எனது செயலும்
உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது, Un Than Gunangalukke Theerndhadhu - தேவரீருடைய திருக் குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது;
முன் செய் வினை, Mun Sei Vinai - முன்னே செய்த பாவங்களெல்லாம்
நீசெய் வினை அதனால் பேர்ந்தது, Neesei Vinai Adhanal Perndhadhu - தேவரீர் செய்தருளின் (கடாக்ஷமாகிற) காரியத்தாலே தொலைந்து போயின.
3848இராமாநுச நூற்றந்தாதி || 72
கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே உய்த்தனன் தூய மறை நெறி தன்னை,என்றுன்னி யுள்ளம் நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறை புக ழோருடனே வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே
பதவுரை Show / Hide
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
மிக்க வண்மை செய்து, Mikka Vanmai Seidhu - தமது ஒளதார்ய குணத்தை அதிகமாகக் காட்டி,
தீய சமயம கலகரை, Theeya Samayama Kalakarai - தீய மதங்களி லிருந்து கொண்டு கலஹஞ் செய்கிறவர்களை
கைத்தனன், Kaithanain - ஒழித்து விட்டார்;
தூய, Thooja - பரிசுத்தமான
முறை நெறி தன்னை, Murai Nerai Thannai - வேத மார்க்கத்தை
காசினிக்கு உய்த்தனன், Kaasinikku Uyththanain - பூமியிலே ஸ்தாபித்தருளினார்;
என்று உன்னி, Endru Unni - என்று அநுஸந்தித்து
உள்ளம் நெய்த்து, Ullam Neyththu - நெஞ்சு கனிந்து
அவ்வன் போடு இருந்து, Avvan Podu Irundhu - அந்த ப்ரிதியோடே கூடி யிருந்து
ஏத்தும், Aeththum - (அவரை) ஸ்தோத்ரம் பண்ணுகிற
நிறை புகழோரருடனே, Nirai Pugazh Oorarudane - புகழ் நிறைந்த மஹான்களோடே
என்னை வைத்தனன், Ennai Vaiththanain - (என்னையும் ஒருவனாக எண்ணும்படி) என்னை வைத்தருளினார்.
நிறைபுகழோருடனே வைத்தனன்:, Nirai Pugazh Oorudane Vaiththanain - அஸத்தக்களோடே பழகிக் கிடந்த என்னை ஸத்துக்களோட கூட்டி வைத்தார் என்னவுமாம்.
3849இராமாநுச நூற்றந்தாதி || 73
வண்மையினாலுந் தன் மாதக வாலும் மதி புரையும் தண்மையினாலுமித் தாரணி யோர்கட்குத் தான் சரணாய் உண்மை நன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும் திண்மை யல்லா லெனக் கில்லை, மற்றோர் நிலை தேர்ந்திடிலே
பதவுரை Show / Hide
தன் வண்மையினாலும், Than Vanmaiyin Alalum - தம்முடைய ஔதார்ய குணத்தாலும்
மா தகவாலும், Maa Thakavalum - பரம க்ருபையாலும்
மதி புரையும் தண்மையினாலும், Madi Puraiyum Thanmaiyin Alalum - சந்திரனை யொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும்
இத் தரணியோர்கட்கு, Ith Tharaniyorkadku - இப் பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை, Unmai Nal Jnanam Uraitha Raamanusanai - யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தை உபதேசிக்கிற எம்பெருமானாரை
உன்னும் திண்மை அல்லால், Unnum Thinmai Allaal - சிந்கிப்பதாகிற அத்யவஸாய மொன்று தவிர
தேர்ந்திடில், Therndhidil - ஆராயமளவில்
எனக்கு மற்று ஒர் நிலை இல்லை, Enakku Matru Or Nilai Illai - அடியேனுக்கு வேறெரு அத்யவஸாய மில்லை.
3850இராமாநுச நூற்றந்தாதி || 74
தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக் கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்தெம் இராமானுச னவ் வெழில் மறையில் சேரா தவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே
பதவுரை Show / Hide
மறையின்  திறம் தேரார் என்று, Maraiyin Thiram Therar Endru - (இப்பாலிகள்) வேதஞ் சொல்லிகிற வழியை நிரூலித்திகிற தில்லையென்று
தீயவரை, Theeyavarai - பாவிகளை
மாயவன், Maayavan - எம்பெருமான்
குறைப்பது, Kuraippathu - தண்டிப்பது
கூர் ஆழி கொண்டு, Koora Aazhi Kondu - கூர்மையான தனது திருவாழியாலே;
கொண்டல் அனையவண் மை, Kondal Anaiyavan Mai - மேகம்போன்ற ஔதார்யகுண முடையவரும்
ஏர் ஆர் குணத்து, Aer Aar Gunaththu - (மற்றும்) பல நல்லகுணங்களுடையவருமான
எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார்
அ எழில் மறையில் சேராதவரை சிதைப்பது, A Ezhil Maraiyil Seradha Varai Sithaippathu - அந்த சிறந்த வேதத்தில் அந்வயியாதவர்களே பங்கப் படுத்துவது (எப்படி யென்றால்)
3851இராமாநுச நூற்றந்தாதி || 75
செய்த் தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர் கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண் முகப்பே மெய்த் தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின் புகழே மொய்த் தலைக் கும் வந்து இராமா னுச! என்னை முற்று நின்றே
பதவுரை Show / Hide
செய் தலை, Sei Thalai - வயல்களில்
சங்கம், Sangam - சங்குகளானவை
செழு திரு முத்தம், Sezhu Thiru Muththam - அழகிய முத்துக்களை
ஈனும் திரு அரங்கர், Eenum Thiru Arangkar - உண்டாக்கு மிடமான திரு அரங்கமா நகரில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள்
கைத் தலத்து, Kait Thalathu - தமது திருக் கையிலே
ஆழியும் சங்கமும் எந்தி, Aazhiyum Sangamum Endhi - திரு வாழி திருக் கையிலே தரித்துக் கொண்டு
நம் கண் முகப்பே, Nam Kan Mugappe - நமது கண்ணெதிரில்
மொய்த்து, Moydhu - வந்து நெருங்கி
அலைத்து, Alaiththu - புத்தியைக் கெடுத்து
உண்னை விடேன் என்று இருக்கிலும், Unnai Vidaen Endru Irukkilum - உன்னை விட மாட்டேன் என்று இருந்தாலும்
இராமாநுசா, Iramanuchaa - எம்பெருமானரே
நின் புகழே, Nin Pugazhe - தேவரீருடைய திவ்ய குணங்களே
என்னை வந்து முற்றம் மொய்த்து  நின்று, Ennai Vandu Muttram Moydhu Nindru - என் பக்கல் வந்து சூழ்ந்து கொண்டு
அலைக்கும், Alaikkum - ஆகர்ஷிக்கின்றன
3852இராமாநுச நூற்றந்தாதி || 76
நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற் குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும் உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள் என்றனக்கும்அது, இராமானுச! இவை யீந்தருளே.
பதவுரை Show / Hide
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை, Nindra Van Keerthiyum Neel Punalum Nirai - நிலைநின்ற பெரும் புகழும் அதிகமான நீர்ப்பெருக்கும் நிறைந்துள்ள
வேங்கடம் பொன் குன்றமும், Vengadam Pon Kuntrum - திருவேங்கட மென்னும் அழகிய திருமலையும்
வைகுந்தம் நாடும், Vaikundham Naadum - ஸ்ரீ வைகுண்டமாகிய திருநாடும்
குவலிய பால் கடலும், Kuvaliya Paal Kadalum - கொண்டாடத்தக்க திருப்பாற்கடலும்
உன் தனக்கு, Un Thanakku - தேவரீருக்கு
எத்தினை இன்பம் தரும், Eththinai Inbam Tharum - எவ்வளவு ஆநந்த்தை விளைக்குமோ
உன் இணை மலர் தாள், Un Inai Malar Thaal - தேவரீருடைய உபயபாதாரவிந்தங்கள்
என் தனக்கும் அது, En Thanakkum Adhu - எனக்கும் அவ்வளவு ஆநந்தத்தை யுண்டாக்கும்;
இவை, Ivai - இப்படிப்பட்ட திருவடிகளை.
ஈந்தருள், Eendharul - அடியேனுக்குத் தந்தருள வேணும்.
3853இராமாநுச நூற்றந்தாதி || 77
ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப் பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால்,இப்படி யனைத்தும் ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே?
பதவுரை Show / Hide
ஈயாத, Eeyaadha - (இதற்கு முன்பு ஒருவர்க்கும்) அருளாத
இன் அருள், In Arul - விலக்ஷணமான க்ருபையை
ஈந்தனன், Eendhanan - அடியேனுக்குச் செய்தருளின வரும்
எண் இல் மறை குறும்பை, En Il Marai Kurumbai - எண்ணிறந்த      வேத விரோதிமதங்களை
அம்மறை பல்பொருளால் பாய்ந்தனன், Ammairai Palporulaal Paayndhanan - அந்த வேதங்களின் அர்த்தங்களையே கொண்டு கண்டித்தவரும்
கீர்த்தியினால், Keerthiyinaal - தமது கீர்த்தியாலே
இப்படி அனைத்தும் எய்ந்தனன், Ippadi Anaithum Eyndhanan - இப்பூமியெங்கும் வியாபித்தவரும்
என் வினைகளை, En Vinaigalai - எனது கருமங்களை
வேர்பறியகாய்ந்தனன், Verpariyakaayndhanan - வேரோடே அரும் படி போக்கினவரும்
வண்மை, Vanmai - ஔதார்யமே வடிவு கொண்ட வருமான
இராமாநுசற்கு, Iramanusarukku - எம்பெருமானார்க்கு
இனி என் கருத்து, Ini En Karuthu - இன்னமும் (செய்யத்தக்கதாகத்) திருவுள்ளத்தில் ஏதேனா முண்டோ?
3854இராமாநுச நூற்றந்தாதி || 78
கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய வருத்தத்தி னால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில் பொருத்தப் படாது, எம் இராமா னுச! மற்றோர் பொய்ப் பொருளே
பதவுரை Show / Hide
எம் இராமாநுச, Em Iraamaanusa - எம்பெருமானைரை!
நீ, Nee - தேவரீர்
கருத அரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து, Karutha Ariya Varuthaththinaal Mika Vanchiththu - நெஞ்சால் நினைக்க முடியாத பரிச்ரமங்கள் பட்டு என்னை நன்றாக ஏமாத்தி
கருத்தில் புகுந்து, Karuththil Pugundhu - (எனது) நெஞ்சிலே வந்து புகுந்து
உள்ளில் கள்ளம் கழற்றி, Ullil Kallam Kazhatri - உள்ளே யிருந்த ஆத்மாபஹார தோஷத்தைப் போக்கி
திருத்தி, Thiruththi - சிக்ஷித்து
இந்த மண் அகத்தே, Indha Mann Agatthae - இந்த லோகத்திலே
திருமகள் கேள்மனாக்கு, Thirumagal Kaelmanakku - திருமாலுக்கு ஆளாம்படி
ஆக்கிய பின், Aakkiya Pin - பண்ணிண பின்பு
மற்று ஒர் பொய், Mattru Or Poi - (இதற்கு மாறான ) வேறு எந்த தப்பு விஷயமும்
பொருள் என் நெஞ்சில், Porul En Nenjinil - என் மனத்தில்
பொருத்தப் படாது, Poruththap Padadhu - பொருந்த மாட்டாது.
3855இராமாநுச நூற்றந்தாதி || 79
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து,இந்தப் பூதலத்தே மெய்மைப் புரக்கும் இராமா னுசன் நிற்க, வேறு நம்மை உய்யக் கொள வல்ல தெய்வமிங் கியாதென்றுலர்ந் தவமே ஐயப் படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே
பதவுரை Show / Hide
பொய்யை சுரக்கும் பொருளை துரந்து, Poyyai Surakkum Porulai Thurandhu - பொய்யான விஷயத்தையே மேன் மேலும் வெளிப் படுத்துகிற (புற மதத்தவர்களின்) அர்த்தங்களைக் கண்டித்து
இந்த பூதலத்தே, Indha Poodhalatthae - இப் பூமியிலே
மெய்யை புரக்கும், Meiyyai Purakkum - ஸத்யத்தை ரக்ஷிக்கிற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
நிற்க, Nirka - எழுந்தருளி யிருக்கும் போது
வையத்து உள்ளோர், Vaiyaththu Ullor - இப் பூமியிலுள்ளவர்கள்
நம்மை உய்யக் கொள்ள வல்ல, Nammai Uyya Kolla Valla - நம்மை உஜ்ஜீவிக்கச் செய்யக்கூடிய
வேறு தெய்வம் இங்கு யாது என்று, Veeru Deivam Ingu Yaadhu Endru - வேறு எதாவது தேவதை இவ்வுலகில் உண்டோ என்று விசாரித்துக் (கொண்டு)
உலர்ந்து, Ularndhu - மன வருத்தத்தாலே உடம்பு உலர்ந்து
நல் அறிவு இமந்து, Nal Arivu Imandhu - (எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருக்கை யாகிற) நல்ல ஞானம் பெறாமல்
அவமே, Avame - வீணாக
ஐயம் படா நிற்பர், Aiyam Pada Nirpar - ஸம்சயப் படா நின்றார்கள் ஐயா!
3856இராமாநுச நூற்றந்தாதி || 80
நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர்,அவர்க்கே எல்லா விடத்திலும் என்று மெப் போதிலும் எத் தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே
பதவுரை Show / Hide
நல்லார் பரவும் இராமாநுசன், Nallaar Paravum Iraamaanusan - ஸத்துக்களாலே கொண்டாடப்படுகிற எம் பெருமானாருடைய
திரு நாமம், Thiru Naamam - திரு நாமத்தை
நம்ப வல்லார் திறத்தை, Namba Vallar Thirathai - (தங்களுக்குத் தஞ்சமாக நம்பி யிருக்க வல்லவர்களுடைய படிகளே
மறவாதவர்கள் எவர், Maravaathavargal Evar - மறவாமல் எப்போதும் சிந்திப்பவர்கள் யாரோ,
அவர்க்கே, Avarkke - அப்படிப்பட்ட ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே
எல்லா இடத்திலும், Ella Idaththilum - ஸகல தேசங்களிலும்
என்றும், Endrum - ஸகல அவஸ்தைகளிலும்
எத் தொழும்பும், Eth Thozhumbum - ஸகலவித கைங்கரியங்களையும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால், Sollaal Manaththaal Karumaththinaal - மனமொழி மெய்களென்னும் த்ரிகரணங்களாலும்
சோர்வு இன்றியே செய்வன், Soarvu Indriye Seivam - பிரியாதே யிருந்து செய்வேன்.
3857இராமாநுச நூற்றந்தாதி || 81
சோர்வின்றி உன்றன் துணை யடிக் கீழ்த்,தொண்டு பட்டவர் பால் சார்வின்றி நின்ற எனக்கு,அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச! இனி யுன் சீரொன்றிய கருணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே
பதவுரை Show / Hide
உன் தன் துணை அடிகீழ் சோர்வு இன்றி, Un Than Thunai Adikeezh Soarvu Indri - தேவரீருடைய உபய பாதங்களின் கீழே
தொண்டு பட்டவர் பால், Thondu Pattavar Paal - சோராமல் அடிமைப் பட்டவர்கள் விஷயத்தில்
சார்வு இன்றி நின்ற எனக்கு, Saarvu Indri Nindra Enakku - பொருத்த மில்லாமலிருந்த எனக்கு
இன்று, Indru - இன்றைத் தினத்தில்
அரங்கன் செய்ய தான் இணைகள், Arangan Seyya Thaan Ingaigal - பெரிய பெருமாளுடைய சிவந்த திருவடி யிணைகளே
பேர்வு இன்றி பெறுத்தும் இராமா நுசா, Pervu Indri Peruththum Iraamaa Nuchaa - ஒருகாலும் விட்டு நீங்காத படி சிரோ பூஷணமாகத் தந்தருளின எம்பெருனானாரே!
இனி, Ini - இப்படியான பின்பு
தெரிவுறில், Therivuril - ஆராயுமளவில்
உன், Un - தேவரீருடைய
சீர் ஒன்றிய கருணைக்கு, Seer Onriya Karunaikku - சிறந்த திருவருளுக்கு
மாறு இல்லை, Maaru Illai - ஒப்பு இல்லை
3858இராமாநுச நூற்றந்தாதி || 82
தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீ வினையால் உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில் பொருவற்ற கேள்வியனாக்கி நின் றானென்ன புண்ணீயனோ! தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர் முகிலே
பதவுரை Show / Hide
தெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது, Therivu Utra Gyaanam Seriya Peraadhu - தெளிவான ஞானத்தைச் சேரப் பெறாமல்
வெம் தீ வினையால், Vem Thi Vinaiyal - மிகவுங் கொடியதான கருமத்தாலே
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை, Uru Arra Nanattu Ulalkinra Ennai - உபயோக மற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலை யில்லாமல்) திரிகிற என்னை
ஒரு பொழுதில், Oru Polutil - ஒரு க்ஷண காலத்தில்
பொருவு  அற்ற கேள்வியனாக்கி நின்றான், Poruvu Arra Kelviyanaki Ninran - ஒப்பற்ற பஹூச்ருதனாக ஆக்கி யருளினவரும்
தெரிவு உற்ற கீர்த்தி, Terivu Urra Kirtti - ப்ரஸித்தமான புகழை யடையவரும்
சீர் முகில் என்னும், Cir Mukil Ennum - (ஔதார்யத்தில்) சிறந்த மேகமென்னத் தக்க வருமான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
என்ன புண்ணியனோ, Enna Punniyano - என்ன தார்மிகரோ? (ஒப்பற்ற தர்மிஷ்டரென்றபடி.)
3859இராமாநுச நூற்றந்தாதி || 83
சீர் கொண்டு பேரறம் செய்து,நல் வீடு செறிதும் என்னும் பார் கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய கார் கொண்ட வண்மை இராமா னுச! இது கண்டு கொள்ளே
பதவுரை Show / Hide
இராமநுசா, Iramanuca - எம்பெருமானாரே!,
சீர் கொண்டு, Cir Kontu - சமம் தமம் முதலிய குணங்களை யுடையராய்
பேர் அறம் செய்து, Per Aram Seytu - சிறந்த தருமமாகிய சரணாகதி யோகத்தை யநுஷ்டித்து
நல் வீடு செறிதும் என்னும், Nal Vitu Ceritume Ennum - பரம புருஷார்த்தமான மோக்ஷத்தை அடைந்திடுவோம் என்றிருக்கிற
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன், Par Konta Menmaiyar Kuttan Allen - ப்ரஸித்தமான ப்ரபாவத்தை யுடைய  ப்ரபந்நர்களுடைய கோஷ்டியில் நான் சேர்ந்தவனல்லேன்;
உன் பத யுகம் ஆம், Un Pata Yugam Am - தேவரீருடைய உபய பாதங்களாகிற
ஏர் கொண்ட வீட்டை, Er Konta Vittai - பரம விலக்ஷணமான மோக்ஷத்தை
எளிதினில் எய்துவன், Elitinil Eytuvan - ஸுலபமாக அடைந்திடுவேன்;
கார் கொண்ட, Kar Konta - (ஔதார்யத்தில்) மேகத்தை வென்றிருக்கிற தேவரீருடைய
வண்மை இது, Vanmai Ithu - ஔதார்யம் இப்படிப் பட்டது;
கண்டு கொள், Kandu Kol - தேவரீரே இதனைக் கண்டு கொள்ளலாம்.
3860இராமாநுச நூற்றந்தாதி || 84
கண்டு கொண் டேனெம் இராமா னுசன் றன்னை காண்டலுமே தொண்டு கொண் டேன் அவன் தொண்டர் பொற் றாளில் என் தொல்லை வெந் நோய் விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்று உண்டு கொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே
பதவுரை Show / Hide
எம் இராமாநுசன் தன்னை, Em Iramanucan Tannai - ஸ்வாமி எம்பெருமானாரை
இன்று கண்டு கொண்டேன், Inru Kandu Konden - இன்று (உள்ளப்படி தெரிந்து கொண்டேன்;
காண்டலுமே, Kaandalume - இப்படி தெரிந்து கொண்டவளலிலே
அவன் தொண்டர் பொன் தாளில், Avan Thondar Pon Thaalil - அவரது பக்தர்களுடைய அழகியதிருவடிகளில்
தொண்டு கொண்டேன், Thondu Konden - அடிமைப்பட்டேன்; (அதனால்)
என் தொல்லை வெம் நோய், En Thollai Vem Noi - எனது பழைய கொடு வினைகளை
விண்டு கொண்டேன், Vindu Konden - நீக்கிக்கொண்டேன்,
அவன் சீர் வெள்ளம் வாரியை, Avan Seer Vellam Vaariyi - அவருடைய கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலை
வாய் மடுத்து உண்டு கொண்டேன், Vaai Maduthu Undu Konden - வாயார அநுபவிக்கப் பெற்றேன்;
இன்னம் உற்றன, Innam Utrana - இப்படியாக இன்னமும் நான் பெற்ற நன்மை களை
ஒதில், Othil - சொல்லத்தொடங்கினால்
உலப்பு இல்லை, Ulappu Illai - (அதுக்கு) ஒரு முடிவு கிடையாது.
3861இராமாநுச நூற்றந்தாதி || 85
ஓதிய வேதத்தின் உட் பொருளாய், அதன் உச்சி மிக்க சோதியை நாதன் என வெறி யாதுழல் கின்ற தொண்டர் பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும் பெரியோர் பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை
பதவுரை Show / Hide
ஓதிய வேகத்தின் உள் பொருள் ஆய், Othiya Vegathin Ul Porul Aay - அத்யயநம் பண்ணப்படுகிற வேதங்களின்உட்பொருளாயும்
அதன் உச்சி மிக்க சோதியை, Adhan Ucchi Mikka Sothiyai - அந்த வேதங்களின் முடிவாகிய உபநிஷத்துககளிலே மிகவும் விளங்குபவனாயுமிள்ள ஸ்ரீ மந் நாராயணனை
நாதன் என அறியாது, Nadhan Enna Ariyadhu - ஸர்வ சேஷி யென்று தெரிந்து கொள்ளாமல்
உழல்கின்ற தொண்டர், Uzhalginra Thondar - கண்ட விடங்களிலும் அடிமை செய்து திரிகின்ற பாமரர்களுடைய
பேதைமை, Pethaimai - அவிவேகத்தை
தீர்த்த, Theertha - போக்கடித்த
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
தொழும், Thozhum - ஸேவிக்கின்ற
பெரியோர், Periyor - மஹான்களுடைய
பாதம் அல்லால், Paadham Allal - திருவடிகள் தவிர
என் தன் ஆர் உயிர்க்கு, En Than Aar Uyirkkum - எனது அருமையான ஆத்மாவுக்கு
யாது ஒன்றும் பற்று இல்லை, Yadhu Ondrum Patru Illai - வேறு ஏதேனும் புகலிடமில்லை.
3862இராமாநுச நூற்றந்தாதி || 86
பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே உற்றா ரென வுழன் றோடி நை யேனினி, ஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமா னுசனைக் கருது முள்ளம் பெற்றார் எவர், அவ ரெம்மை நின் றாளும் பெரியவரே
பதவுரை Show / Hide
பற்றா மனிசரை பற்றி, Pattra Manisarai Pattri - உபயோக மற்ற மநுஷ்யர்களைப் பற்றி
அப் பற்று விடாது, Ap Pattru Vidathu - அந்தப் பற்றுதலை விடாமல்
அவரே உற்றார் என, Avarae Utraar Ena - அவர்களையே உறவினராகக் கொண்டு
உழன்று, Uzhandru - அவர்கள் பினனே அலைந்து
ஓடி, Odi - அவர்களிட்ட காரியங்களைச் செய்ய ஓடி
இனி நையேன், Ini Naiyen - இனி மேல் துவள மாட்டேன்;
ஒள்ளிய நூல் கற்றார், Olliya Nool Kattraar - சிறந்த சாஸ்த்ரங்களைக் கற்றவர்களாலே
பரவும், Paravum - கொண்டாடப் படுகிற
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
கருதும் உள்ளம் பெற்றார் யவர், Karudum Ullam Pettraar Yavar - அநுசந்திக்கும் படியான நெஞ்சை யுடையோர் யாவரோ,
அவர், Avar - அந்த மஹான்களே
எம்மை, Emmai - நம்மை
நின்று ஆளும் பெரியவர், Ninru Aalum Periyavar - சாஸ்வதமாக அடிமை கொள்ளும் மஹாத்மாக்கள்.
ஒள்ளிய நூல், Olliya Nool - “சுடர்மிகு சுருதி” என்றார் ஆழ்வாரும்.
3863இராமாநுச நூற்றந்தாதி || 87
பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணங்கட் குரிய சொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி இராமா னுசன் மறை தேர்ந்துலகில் புரியு நன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும் கலியே
பதவுரை Show / Hide
பெரியவர் பேசிலும், Periyavar Pesilum - ஞான சக்திகளால் நிறைந்த மஹான்கள் பேசினாலும்
பேதையர் பேசிலும், Pethaiyar Pesilum - ஒன்றுந் தெரியாதவர்கள் பேசினாலும்
தன் குணங்கட்கு உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று, Than Gunangadku Uriya Sol Endrum Udaiyavan Endru Endru - தனது திருக் குணங்களுக்கு ஏற்ற சொற்களை எப்போதும் உடையவரென்று பல காலுஞ் சொல்லி
உணர்வில் மிக்கோர் தெரியும், Unarvil Mikkoor Theriyum - சிறந்த ஞானிகள் அநுஸந்திக்கிற
வண் கீர்த்தி, Van Keerthi - திவ்ய கீர்த்தியை யுடையரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
மறை தேர்ந்து, Marai Therndhu - வேதங்களை ஆராய்ந்து
உலகில், Ulagil - இவ் வுலகத்தில்
புரியும், Puriyum - உபதேசித்தருளின
நல் ஞானம் பொருந்தாதவரை, Nal Nyanam Porundhavarai - நல்ல ஞானத்தில் சேராதவர்களை
கலி பொரும், Kali Porum - கலி புருஷன் பீடிப்பன்.
3864இராமாநுச நூற்றந்தாதி || 88
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான் ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால் வலி மிக்க சீயம் இராமா னுசன் மறை வாதியராம் புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே
பதவுரை Show / Hide
கலி மிக்க, Kali Mikka - நிலவளம் மிகுந்த
செந்நெல் கழனி, Sennel Kazhani - செந்நெல் கழனிகளை யுடைய
குறையல், Kuraiyal - திருக் குறையலூரில் அவதரித்தவராய்
கலை பெருமான், Kalai Perumaan - சாஸ்த்ர மென்னும்படியான திவ்ய ப்ரபந்தகளை யருளிச் செய்த் திரு மங்கை யாழ்வாருடைய
மிக்க ஒலி பாடலை, Mikka Oli Paadalai - அதிசயித்த இசையை யுடைய பெரிய திருமொழியை
உண்டு, Undu - அநுபவித்து
தன் உள்ளம் தடித்து, Than Ullam Thadithu - தமது திருவுள்ளம்
அதனால் வலி மிக்கம், Adhanal Vali Mikkam - அத்தால் மிடுக்கு அதிகரித்த
சீயம், Seeyam - சிங்கம் போன்ற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்,
மறை வாதியராம் புலி மிக்கது என்று இப் புவனத்தில் வந்தமை, Marai Vadhiyaram Puli Mikkadhu Endru Ip Bhuvanathil Vandhamai - வேதத்தில் துர்வாதங்கள் பண்ணுகிற குத்ருஷ்டிகளாகிற புலிகள் அதிகமாய் விட்டன வென்று (அவற்றைத் தண்டிப்பதற்காக ) இவ்வுலகில் அவதரித்த படியை
போற்றுவன், Poattruvan - புகழ்ந்திடக் கடவேன்.
3865இராமாநுச நூற்றந்தாதி || 89
போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ் தெரிந்து சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர் தனக்கோர் ஏற்றமென்றே கொண் டிருக்கிலு மென் மனம் ஏத்தி யன்றி ஆற்றகில்லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே
பதவுரை Show / Hide
போற்ற அரு சீலத்து, Poattr Aru Seelaththu - புகழ்ந்து தலைக் கட்ட முடியாத சீல குணத்தை யுடைய
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே;
நின் புகழ், Nin Pugazh - தேவரீருடைய திருக் குணங்களை
தெரிந்து சாற்றுவனேல், Therinthu Sattruvanel - உணர்ந்து பேசுவேனாகில்
அது, Adhu - (நீசனாகிய நான் ) பேசுகிறவது
தாழ்வு, Thazhvu - (தேவரீருக்கு) அவத்யமாம்;
அது தீரில், Adhu Theeril - அப்படி நான் பேசுவது தவிர்த்தல்
உன் சீர் தனக்கு ஒர் ஏற்றம், Un Seer Thanakku Or Aetram - தேவரீருடைய திருக் குணங்களுக்கு மேன்மையாகும்
என்றே கொண்டு இருக்கிலும், Endrae Kondu Irukkilum - என்று நான் தெரிந்து கொண்டிருந்தாலும்
என் மனம், En Manam - எனது நெஞ்சானது
எத்தி அன்றி, Ethi Andri - (தேவரீருடைய திருக் குணங்களைப்) புகழ்ந்தல்லது
ஆற்ற கில்லாது, Aattra Killaadhu - தரித்திருக்க மாட்டாது;
இதற்கு, Idharku - இவ் விஷயத்திலே
என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவன், En Ninaivai Endrittu Anjuvan - தேவரீர் என்ன நினைக்குமோ வென்று பயப்படுகிறேன்.
3866இராமாநுச நூற்றந்தாதி || 90
நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே எனையாள வந்த இராமா னுசனை இருங் கவிகள் புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந் தொடையல் வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே
பதவுரை Show / Hide
பிறவியை நீக்கும் பிரானை, Piraviyai Neekum Piraanai - ஸம்ஸாரத்தை யொழிக்கும் உபகாரகராயும்
இ நீள் நிலத்தே, I Neel Nilatthae - இப்பெரிய பூமியிலே
எனை ஆள, Enai Aala - என்னை அடிமை கொள்வதற்கே
வந்த, Vanda - அவதரித்தவராயுமுள்ள
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
நினையார், Ninaiyaar - சிந்தியா தவர்களாயும்,
இரு கவிகள் புனையார், Iru Kavigal Punaipaar - (அவர் விஷயமாக) நல்ல பாடல்களையும் பாடாதவர்களாயும்
புனையும் பெரியவர் தாள்களில், Punaikum Periyavar Thaalgalil - (ஏதோ பாக்கியத்தாலே) பாடல்களைப்படுகிற மஹான்களின் திருவடிகளில்
பூ தொடையல்வனை யார், Poo Thodaiyalvani Yaar - புஷ்ப மாலைகளை ஸமர்ப்பியாதவர்சளாயுமுள்ள
மாந்தர், Maanthar - மனிசர்கள்
மருள் சுரந்து, Marul Surandhu - அஜ்ஞானம் அதிகமாகப் பெற்று
பிறப்பில் வருந்துவர், Pirappil Varundhuvar - ஸம்ஸாரத்ததிற் கிடந்து துன்பப்படுவர்கள்.
3867இராமாநுச நூற்றந்தாதி || 91
மருள் சுரந் தாகம வாதியர் கூறும்,அவப் பொருளாம் இருள் சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டிய சீர் அருள் சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் பொருள் சுரந் தான், எம் இராமா னுசன் மிக்க புண்ணியனே
பதவுரை Show / Hide
ஆகமம் வாதியர், Aagamam Vaathiyar - (சிவன் சொன்ன) சைவ ஆகமத்தைப் பிரமாணமாகக் கொண்டு வாதம் பண்ணுகிற பாசுபதர்கள்
மருள் சுரந்து, Marul Surandhu - அஜ்ஞானம் அதிகரிக்கப் பெற்று
கூறும், Koorum - (சிவனுடைய பரத்துவ விஷயமாகச் சொல்லுகிற
அவம் பொருள் ஆம் இருள் சுரந்து, Avam Porul Aam Irul Surandhu - நீசமான அர்த்தங்களாகிற இருள் மேலிட்டு (அதனால்)
எய்த்த, Eyththa - கெட்டுப் போன
உலகு, Ulaku - உலகத்தவர்களுடைய
இருள், Irul - அஜ்ஞாநாந்தகாரமானது
நீங்க, Neenga - போகும்படியாக
தன், Than - தம்முடைய
ஈண்டிய சீர் அருள் சுரந்து, Eendiya Seer Arul Surandhu - விலக்ஷணமான க்ருபையைப் பெருக்கி
எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள், Ella Uyirkadkum Nadhan Arangan Ennum Porul - “எல்லாப் பிராணிகளுக்கும் ஸ்வாமி ஸ்ரீரங்க நாதனே’ என்கிற அர்த்தத்தை
சுரந்தான், Surandhaan - வெளியிட்டவரான
எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார்
மிக்க புண்ணியன், Mikka Punniyan - சிறந்த புண்ணியாத்மா
3868இராமாநுச நூற்றந்தாதி || 92
புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,அடி போற்றி செய்யும் நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன்,செம்மை நூற் புலவர்க் கெண்ணருங் கீர்த்தி இராமா னுச! இன்று நீ புகுந்தென் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே
பதவுரை Show / Hide
செம்மை நூல் புலவர்க்கு, Semmai Nool Pulavarkku - நல்ல சாஸ்த்ரங்களைக் கற்றுக் கவி சொல்ல வல்லவர்களுக்கும்
எண்ண அரு கீர்த்தி இராமாநுச, Enna Aru Keerthi Raamaanusa - அளவிட முடியாத கீர்த்தியை யுடைய
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!,
புண்ணியம் நோன்பு புரிந்தும் இலேன், Punniyam Nonbu Purindhum Ileen - புண்ணியமான ஒருவிரதத்தையும் அடியேன் அநுஷ்டிக்க வில்லை;
அடி போற்றி செய்யும், Adi Poatri Seyyum - தேவரீருடைய திருவடிகளை வாழ்த்துகைக்கு உறுப்பான
நுண் அரு கேள்வி, Nun Aru Kelvi - ஸுக்ஷ்மமாய் அருமையான ஸ்ரவணத்தை
நுவன்றும் இலேன் இன்று, Nuvandrum Ileen Inru - (செய்யவேணு மென்று வாயாலே) சொல்லவுமில்லை (அப்படியிருந்தும்
என், En - இன்று
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும், Kannullum Nenjuullum - அடியேனது கண்ணினுள்ளேயும் நெஞ்சினுள்ளேயும்
புகுந்து நின்ற இக் காரணம் கட்டுரை, Pugundhu Nindra Ik Kaaranam Katturai - புகந்து எழுந்தருளி யிருப்பதற்குக் காரணமருளிச்செய்ய வேணும்.
3869இராமாநுச நூற்றந்தாதி || 93
கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரனல்லனே,என் பெரு வினையைக் கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே
பதவுரை Show / Hide
கிட்டி, Kitti - அடியேன் பக்கல் வந்து நெருங்கி
தன் அருள் என்னும் ஒரு வாள் உருவி, Than Arul Ennum Oru Vaal Uruvi - தம்முடைய கிருபை யாகிற அழகிய வாளை உறையில் நின்றும் கழற்றி (அதனால்)
என் பெருவினையை கிழங்கொடு வெட்டி களைந்த, En Peruvinaiyai Kizhankodu Vetti Kalaindha - எனது மஹா பாபங்களை வேரோடே அறுத்தொழித்த
இராமாநுசன் என்னும் மெய் தவன், Iramanuchan Ennum Meiya Thavan - எம்பெருமானாரென்கிற மா முனிவர் எப்படிப் பட்டவரென்றால்
கயவர், Kayavar - துஷ்டர்களான குத்ருஷ்டிகள்
கட்டம் பொருளை மறை  பொருள் என்று சொல்லும் பெட்டை, Kattam Porulai Marai Porul Endru Sollum Pettai - தப்பான அர்த்தங்களை வேதங்களின் அர்த்தமாகக் கொண்டு சொல்லுகிற பிரட்டுப் பேச்சுகளை
கெடுக்கும் பிரான் அல்லனே, Kedukkum Piraan Allane - கண்டித்தொழித்த மஹா நுபவரமனறோ.
3870இராமாநுச நூற்றந்தாதி || 94
தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப் பிறவிப் பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும் திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட் குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள் மகிழ்ந்தே
பதவுரை Show / Hide
தீது இல் இராமாநுசன், Theethu Il Iramanuchan - எவ்வகைக் குற்றமும் அற்றவரான எம்பெருமானார்
தன்னை சார்ந்தவர்கட்கு, Thannai Sarnthavarkadku - தம்மை வந்து அடைந்த வர்களுக்கு
தவம் தரும், Thavam Tharum - சரணாகதி நிஷ்டையைக் கொடுத்தருள்வர்;
சரியா பிறவி பவம் தரும் தீவினை, Sariya Piravi Bhavam Tharum Theevinai - நிவர்த்திக்க முடியாத ஜந்ம ஸம்ஸாரங்களை உண்டாக்குகின்ற கொடு வினைகளை
பாற்றி தரும், Paatri Tharum - போக்கடித் தருள்வர்;
பரம் தாமம் என்னும் திவம் தரும், Param Thamam Ennum Thivam Tharum - பரமபதமென்று சொல்லப்படுகிற வானுலகத்தை அளிப்பர்; (ஆன பின்பு)
யான், Yaan - அடியேன்
அவன் சீர் அன்றி, Avan Seer Andri - அவ் வெம்பெருமானாருடைய திருக் குணங்களைத் தவிர்த்து
ஒன்றும், Ondrum - வேறொன்றையும்
உள் மகிழ்ந்து உவந்து அருந்தேன், Ul Magizhndhu Uvandu Arundhen - மனக் காதலோடே விரும்பி அநுபவிக்க மாட்டேன்.
3871இராமாநுச நூற்றந்தாதி || 95
உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன் மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே
பதவுரை Show / Hide
உயிர்களுக்கு உள் நின்று, Uyirgalukku Ul Nindru - எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமி யாயிருந்து கொண்டு
உற்றனவே செய்து, Utranave Seidhu - ஹிதமானவற்றையே நடத்திக் கொண்டு
அவர்க்கு, Avarkku - அவ் வாத்மாக்களுக்கு
உயவே பண்ணும் பரனாம், Uyave Pannum Paranaam - உஜ்ஜீவநத்தையே பண்ணிக் கொண்டிருக்கிற எம்பெருமானாம்
பரிவு இலன் ஆம படி, Parivu Ilan Aama Padi - (ஆத்மாக்களிடத்தில் எம்பெருமானாரைப் போல்) ப்ரதி யுடையவனல்லன் என்ன வேண்டும் படியாக
பல் உயிர்க்கும், Pal Uyirkkum - ஸகல ஆத்மாக்களுக்கும்
வீடு அளிப்பான், Veedu Alippaan - மோக்ஷத்தை அருள்வதற்காக
எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானார்
விண்ணின் தலை நின்று, Vinnin Thalai Nindru - ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும்
மண்ணின் தலத்து உதித்து, Mannin Thalathu Uthithu - இப் பூதலத்திலே அவதரித்து
உய் மறை நாலும், Uy Marai Naalum - எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவான நான்கு வேதங்களையும்
வளர்த்தனன், Valarthanan - குறைவின்றி வளரச் செய்ய தருளினார்.
3872இராமாநுச நூற்றந்தாதி || 96
வளரும் பிணி கொண்ட வல் வினையால்,மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத் தலையூன் தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற் குளரெம் இறைவர் இராமானுசன் றன்னை உற்றவரே
பதவுரை Show / Hide
வளரும் பிணி கொண்டவல் வினையால், Valarum Pini Konda Val Vinaiyal - அளவற்ற துன்பங்களை யுண்டாக்க வல்ல கொடிய கருமங்களாலே
மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத் தறியாது, Mikka Nal Vinaiyil Kilarum Thunivu Kidait Thariyadu - மஹா விச்வாஸம் கிடைக்காததனால்
முடை தலை ஊன் தளரும் அளவும், Mudai Thalai Oon Thalarum Alavum - கெட்ட நாற்றங்களுக்கு இருப்பிடமான சரீரம் கட்டுக் குலையும் வரையில்
தரித்தும் விழுந்தும், Thariththum Vizhundhum - ஒருவாறு தரித்திருந்தும் (சப்தாதி விஷயங்களிலே) போய் விழுந்தும்
தனி திரிவேற்கு, Thani Thiriverku - துணை யின்றித் திரிகிற எனக்கு
இறைவர், Iraivar - ஸவாமிகள் (யாரென்றால்,
எம் இராமாநுசன் தன்னை உற்றவர், Em Iramanuchan Thannai Utravar - நம் எம்பெருமானாரை ஆச்ரயித்த மஹான்கள்
உளர், Ular - இருக்கிறார்கள்.
3873இராமாநுச நூற்றந்தாதி || 97
தன்னை யுற்றாட் செய்யும் தன்மையினோர்,மன்னு தாமரைத் தாள் தன்னை யுற் றாட் செய்ய என்னை யுற் றானின்று தன் தகவால் தன்னை யுற் றாரன்றித் தன்மை யுற் றாரில்லை என்றறிந்து தன்னை யுற் றாரை இராமா னுசன் குணம் சாற்றிடுமே
பதவுரை Show / Hide
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாரானவர்,
தன்னை உற்றார் அன்றி தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து, Thannai Utrar Andri Thannai Utrarai Kunam Sarridum Thanmai Utrar Illai Endru Arinthu - தம்மைப் பற்றி யிருப்பாருண்டே யொழிய தம்மைப் பற்றிய யிருப்பவர்களுடைய குண கீர்த்தனம் பண்ணும் ஸ்வ பக்த பக்தர்கள் ஒருவருமில்லை யென்று திருவுள்ளம் பற்றி
என்னை, Ennai - அடியேனை
இன்று, Indru - இன்றைத் தினத்தில்
தன் தகவால், Than Thakaval - தமது அருளாலே
தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர், Thannai Utra Aal Seyyum Thanmaiyinor - தம்மை யடைந்து கைங்கரியம் பண்ணும் ஸ்வபாவ முடையரான ஸ்வ பக்தர்களுடைய
மன்னா தாமரை தாள் தன்னை உற்று ஆள் செய்ய, Manna Thamarai Thal Thannai Utra Aal Seyya - ஒன்றோடொன்று சேர்ந்த திருவடித் தாமரைகளை நான் அடைந்து ஆட் செய்யும்படி
உய்த்தான், Uytthan - வைத்தருளினார்.
3874இராமாநுச நூற்றந்தாதி || 98
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச் சுடுமே யவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில் நடுமே யினி நம் இராமா னுசன்நம்மை நம் வசத்தே விடுமே சரணமென் றால், மனமே! நையல் மேவுதற்கே?
பதவுரை Show / Hide
நம் இராமாநுசன், Nam Ramanujan - நம் எம்பெருமானார்,
சரணம் என்றால், Saranam Endral - உமது திருவடிகளே சரணமென்று நாம் சொல்லி விட்டோ மானால்
இனிய சுவர்க்கத்திலே இடுமே, Iniya Suvarkkaththile Idume - (சிலர்க்கு) இனிதாகத் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே நம்மைக் கொண்டு சேர்த்திடுவரோ?
இன்னம், Innam - அல்லது
நரகில் இட்டு சுடுமே, Naragil Ittu Sudume - நரகத்திலே கொண்டு தள்ளி தஹிக்கச் செய்வரோ?
அவற்றை தொடர்தரு, Avattrai Thodartharu - அந்த ஸ்வர்க்க நகரங்களைத் தொடர்ந்து கிடக்கிற
தொல்லை சுழல் பிறப் பில், Thollai Suzhal Pirap Pil - அநாதியாயும் சுழன்று வருவதாயுமுள்ள ஜன்மத்திலே
நடுமே, Nadume - நிறுத்துவரோ?
இனி, Ini - மேலுள்ள காலங்களில்
நம்மை, Nammai - நம்மை
நம் வசத்தே விடுமே, Nam Vachathae Vidume - நாம் போகிற வழியே விட்டு வைப்பரோ?
மனமே!, Maname - ஒ நெஞ்சே!
மேவுதற்கு, Mevudharakku - பேறு பெறும் விஷயமாக
நையல், Naiyal - நீ கரையவேண்டா.
3875இராமாநுச நூற்றந்தாதி || 99
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும் நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம், எம் இராமா னுச முனி போந்த பின்னே
பதவுரை Show / Hide
தற்கம் சமணரும், Tharkam Samanarum - தர்க்கம் பண்ணுகிற சமணர்களும்
பேய், Pei - பேய் போலே பிடித்த பிடி விடாதே நிற்கிற
சாக்கியர்களும், Saakkiyargalum - பௌத்தர்களும்
தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும், Thaal Sadayoon Sol Katra Sombarum - ருத்ரனாடைய சொல்லாகிய சைவாகமத்தைக் கற்ற தாமஸர்களான சைவர்களும்
சூனிய வாதரும், Sooniya Vadharum - சூந்நியவாதிகளும்
நால் மறையும் நிற்க, Naal Maraiyum Nirka - நான்கு வேதங்களும் விளங்கிக் கொண்டி ருக்கச்செய்தே
குறும்பு செய் நீசரும், Kurumbu Sei Neesarum - (அவற்றுக்குச் சேராத) அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளும்
மாண்டனர், Mandanar - ஒழிந்தார்கள்;
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி, Pon Karppagam Em Ramanuja Muni - சிறந்த கல்ப வ்ருக்ஷம் போலே உதாரான ஸ்வாமி எம்பெருமானார்
நீள் நிலத்தே போந்த பின், Neel Nilatthae Pontha Pin - விசாலமான இப் பூமியிலே திரு வவதரித்த பின்பு.
3876இராமாநுச நூற்றந்தாதி || 100
போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர் ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும் மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே
பதவுரை Show / Hide
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!
என் நெஞ்சு என்னும் பொன் வண்டு, En Nenju Ennum Pon Vandu - எனது நெஞ்சாகிற அழகிய வண்டானது
உனது அடி போதில், Unathu Adi Pothil - தேவரீருடையதிருவடித்தாமரைகளில்
ஒண் சீர் ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி, On Seer Aam Theli Then Undu Amarnthida Vendi - அழகிய குணங்களாகிற தேனைப் பருகி நித்ய வாஸம் பண்ண விரும்பி
நின் பால், Nin Paal - தேவரீரிடந்தில்
போந்தது, Ponthathu - வந்து சேர்ந்தது;
அதுவே, Adhuve - அத் திருக் குணங்களையே
ஈந்திட வேண்டும், Eendhida Vendum - அளித்தருள வேணும்;
இது அன்றி, Idhu Andri - இத் திருக் குணங்களைத் தவிர
ஒன்றும், Ondrum - வேறொன்றையும்
மாந்த கில்லாது, Mantha Killaadhu - (நெஞ்சு) புஜிக்க மாட்டாது;
இனி, Ini - இப்படியான பின்பு
மற்று ஒன்று காட்டி, Mattru Ondru Kaatti - வேறொரு விஷயத்தைக் காட்டி
மயக்கிடேல், Mayakkidhel - மயக்க வேண்டா
3877இராமாநுச நூற்றந்தாதி || 101
மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி உயக் கொண்டு நல்கும் இராமா னுச! என்ற துன்னை யுன்னி நயக்கும் அவர்க்கி திழுக் கென்பர், நல்லவர் என்றும் நைந்தே
பதவுரை Show / Hide
மயக்கும், Mayakkum - “அஜ்ஞானத்தை விளைக்க வல்ல
இரு வினை, Iru Vinai - புண்ய பாப மென்னும் இரு கருமங்களாகிற
வல்லியல், Valliyal - விலங்கில்
பூண்டு, Poondhu - அகப்பட்டுக் கொண்டு
மதி மயங்கி, Madhi Mayangi - அறிவு கெட்டு
துயக்கும், Thuyakkum - ப்ரமிச்கச் செய்கிற
பிறவியியல், Piraviyial - ஸம்ஸாரத்திலே
தோன்றிய என்னை, Thonriya Ennai - சிறந்த அடியேனை
துயர் அகற்றி உய கொண்டு, Thuyar Akattri Uya Kondu - துக்கங்களைப் போக்கி உஜ்ஜீவிக்கச் செய்து
நல்கும், Nalkum - அருள் செய்கின்ற
இராமாநுச, Iraamanusa - எம்பெருமானாரே!
என்றது இது, Endrathu Idhu - என்று தேவரீருடைய பாவநத்வத்தைப் பேசு கையாகிற ஈது
உன்னை உன்னி நைந்து, Unnai Unni Naindhu - தேவரீரை அநுஸந்தித்து உருகி
என்றும் நயக்கு, Endrum Nayakku - எப்போதும் ஆசையுடனிருப்பவர்களுக்கு
இழுக்கு என்பர் நல்லவர், Izhukku Enbar Nallavar - தகாதது என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்.
3878இராமாநுச நூற்றந்தாதி || 102
நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந் தெம் ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அரு வினையேன் கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல் புடை சூழ் வையம் இதனில், உன் வண்மை யென் பாலென் வளர்ந்ததுவே?
பதவுரை Show / Hide
மனம், Manam - எனது நெஞ்சானது
உன் குணங்களை உன்னி, Un Gunangalai Unni - தேவரீருடைய திருக் குணங்களைச் சிந்தித்து
நையும், Naiyum - கரைகின்றது;
என் நா, En Naa - எனது வாக்கானது
இருந்து, Irundhu - நிலை நின்று
எம் ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும், Em Aiyan Raamanusan Endru Azhaikkum - எமக்கு ஸ்வாமியான எம் பெருமானாரே! என்று அழைகின்றது.
அரு வினையேன், Aru Vinaiyen - மஹா பாபியான என்னுடைய
கையும், Kaiyum - கைகளும்
தொழும், Thozhum - அஞ்ஜலி பண்ணு கின்றன;
கண், Kan - கண்களானவை
காண கருதிடும், Kaan Karudidum - (தேவரீரை) ஸேவிக்க ஆசைப்படுகின்றன;
கடல்புடைசூழ் வையம் இதனில், Kadalpudaisuzh Vaiyam Idanil - சுற்றிலும் கடல் சூழப் பெற்ற இப்பூ மண்டலத்தினாள்ளே
உன் வண்மை, Un Vanmai - தேவரீருடைய ஔதார்ய குணம்
என்பால் வளர்ந்தது என், Enpal Valarnthathu En - அடியேன் மீது (இவ்விதமாக) வளர்ந்ததற்குக் காரணம் யாதோ?.
3879இராமாநுச நூற்றந்தாதி || 103
வளர்ந்த வெங் கோப மடங்க லொன் றாய்,அன்று வாளவுணன் கிளர்ந்த பொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய் வினை நோய் களைந்து நன் ஞானம் அளித்தனன் கையிற் கனி யென்னவே
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்னொரு காலத்தில்
வளர்ந்த வெம் கோபம் மடங்கல் ஒன்று ஆய், Valarntha Vem Kobam Madangal Ondru Aay - கடூரமான கோபம் மேலிடப் பெற்ற ஒரு நரசிங்க மூர்த்தியாகி
வாள் அவுணன், Vaal Avunan - வாளை யுடைய ஹிரண்யா ஸுரனது
கிளர்ந்த, Kilarndha - செருக்கினால் நெறித்திருந்த
பொன் ஆகம், Pon Aagam - பொன் போன்ற மார்வை
கிழித்தவன், Kizhiththavan - கிழித்துப் பொகட்டவனான எம்பெருமானுடைய
கீர்த்தி பயிர் எழுந்து, Keerthi Payir Ezhunthu - திருப் புகழ்களாகிற பயிர் வளர்ந்து
விளைந்திடும் சிந்தை, Vilainthidum Sindhai - விளையப் பெற்ற திருவுள்ளத்தை யுடையரான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
என் தன் மெய் வினை நோய் களைந்து, En Than Meiya Vinaik Kalanthu - எனது உடலைப் பற்றி யிருக்கிற வினை நோய்களை யெல்லா மொழித்து
கையில் கனி என்ன, Kaiyil Kani Enna - கையிலங்கு நெல்லிக் கனி போலே ஸுலபமாக
நல் ஞானம் அளித்தனன், Nal Gnanam Aliththan - விலக்ஷணமான ஞானத்தைத் தந்தருளினார்
3880இராமாநுச நூற்றந்தாதி || 104
கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உன்றன் மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத் தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் வருள் நீ செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே!
பதவுரை Show / Hide
செழு கொண்டல், Sezhu Konda - ஔதார்யத்தில்) விலக்ஷணமான மேகம் போன்ற
என் இராமாநுச, En Iramaanusa - எம்பெருமானாரே!
கண்ணனை, Kannana - எம்பெருமானை
கையில் கனி என்ன, Kaiyil Kani Enna - உள்ளங்கை நெல்லிக் கனி போலே
காட்டி தரினாம், Kaatti Tharinaam - காட்டிக் கொடுத்தாலும்
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றியான் வேண்டிலன், Un Than Meiyil Pirangiya Seer Anriyaan Vendilan - தேவரீருடைய திருமேனியில் விளங்குகிற ஸௌந்தரியமும் முதலிய குணங்களைத் தவிர வேறொன்றிலும் நான் கண் வைக்க மாட்டேன்;
நிரயம் தொய்யில், Niraym Thoyyil - ஸம்ஸார நரகக் குழியில்
கிடக்கிலும், Kidakkilum - அழுந்திக் கிடந்தேனாகிலும்
சோதி விண் சேரிலும், Sothi Vin Cherilum - சோதி மயமான பரம பதத்தை அடைந்தேனாகிலும்
இவ் அருள், Iv Arul - (தேவரீருடைய திரு மேனி யழகை அநுபவித்திருக்கைக்கு உறுப்பான) கிருபையை
நீ செய்யில், Nee Seyyil - தேவரீர் செய்தருளினால் தான்
தரிப்பான், Tharippaan - (ஸம்ஸாரத்திலோ மோக்ஷத்திலோ) கால் பாவி நிற்பேன்.
3881இராமாநுச நூற்றந்தாதி || 105
செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக் கீழ் விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன் ஞானி,நல் வேதியர்கள் தொழுந் திருப் பாதன் இராமா னுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே
பதவுரை Show / Hide
செழு திரை பால் கடல், Sezhu Thirai Paal Kadal - அழகிய அலைகளை யுடைய திருப்பாற் கடலில்
கண் துயில், Kan Thuyil - பள்ளி கொண்டிராநின்ற
மாயன், Maayan - ஸர்வேச்வரனாடைய
திரு அடி கீழ், Thiru Adi Keezh - திருவடிகளின் கீழே
விழுந்து இருப்பார், Vizhundu Iruppaar - விழுந்து கிடக்கும் மஹான்களுடைய
நெஞ்சில்  மேவும், Nenjiil Mevum - ஹருதயத்திலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற
நல் ஞானி, Nal Nyaani - சிறந்த ஞானியாயும்
நல்வேதியர்கள் தொழும் திரு பாதன், Nalvedhiyargal Thozhum Thiru Paadhan - நல்ல வைதிகர்களால் ஸேவிக்கப்பட்ட திருவடிகளை யுடையராயுமிருக்கிற
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
தொழும், Thozhum - ஸேவிக்கின்ற
பெரியோர், Periyor - மஹாத்மாக்கள்
எழுந்து இரைத்து ஆடும் இடம், Ezunthu Iraithu Aaduum Idam - உடம்பு இருந்த விடத்தில் இராமல் கிளர்ந்து கோஷித்துக் கொண்டு கூத்தாடும் இடம்
அடியேனுக்கு இருப்பு இடம், Adiyenukku Iruppu Idam - அடியேன் வஸிக்குமிடமாகும்.
3882இராமாநுச நூற்றந்தாதி || 106
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலை யென்னும் பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல் லோர்,அவை தன்னொடு வந் திருப்பிடம் மாயன் இராமா னுசன் மனத் தின்றவன் வந் திருப்பிடம் என்றன் இதயத்துள் ளே தனக் கின்புறவே
பதவுரை Show / Hide
மாயனாக்கு, Maayanakku - ஸர்வேச்வரனுக்கு
இருப்பு இடம், Iruppu Idam - வாஸஸ்தானம் (எவை யென்றால்)
வைகுந்தம், Vaikundham - பரமபதமும்
வேங்கடம், Vengadam - திருவேங்கடமலையும்
மாலிருஞ் சோலை என்னும் பொருப்பு இடம், Malirunj Cholai Ennum Poruppu Idam - திருமாலிருஞ் சோலை யென்கிற திருமலையும் (ஆகிய இவையாம்)
என்பர் கல்லோர், Enbar Kallor - என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்.
மாயன், Maayan - (இவற்றை இருப்பிடமாக வுடைய) ஸர்வேச்வரன்
அவை தன்னொடும், Avai Thannodum - அந்த ஸ்ரீவைகுண்டம் முதலியவற்றோடே கூட வந்து எழுந்தருளி யிருப்பது
வந்து இருப்பிடம், Vandhu Iruppidam - எம்பெருமானாருடைய
இராமாநுசன் மனத்து, Iraamanusan Manathu - திரு வுள்ளத்திலேயாம்;
அவன், Avan - அவ் வெம்பெருமானார் தாம்
இன்று வந்து, Indru Vandhu - இப்போது வந்து
தனக்கு இன்பு உற இருப்பிடம், Thanakku Inbu Ura Iruppidam - தமக்கு ஆநந்தமாக எழுந்தருளி யிருப்பது
என் தன் இதயத்து உள்ளே, En Than Idhayaththu Ullae - அடியேனுடைய ஹ்ருத யத்தினுள்ளேயாம்.
3883இராமாநுச நூற்றந்தாதி || 107
இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும் என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே
பதவுரை Show / Hide
இன்பு உற்ற, Inbu Utra - ஆநந்த பூர்ணரா யெழுந்தருளி யிருக்கிற ஸௌசீல்ய குணமுடைய
சீலத்து இராமாநுசா, Seelaththu Iraamanuchaa - எம்பெருமானாரே!
சொல்லுவது ஒன்று உண்டு, Solluvadhu Ondru Undu - தேவரீரிடத்தில் அடியேன் விஞ்ஞாபிக்க வேண்டியவிஷயம் ஒன்றுண்டு
என்பு உற்ற நோய் உடல் தோறும், Enbu Utra Noi Udal Thoram - எலும்பிலே உறைந்து நலியக் கூடிய வியாதிகளுக்கு இருப்பிடமான சரிரங்களிலெல்லாம்
பிறந்து இறந்து, Pirandhu Irandhu - பிறப்பதும் இறப்பதுமாகி
எண்ண அரிய துன்பு, Enna Ariya Thunbu - எண்ண முடியாத துன்பங்களை யநுபவித்து
உற்ற வீயினாம், Utra Veeyinaam - முடிந்து போனாலும்
என்றும், Endrum - எல்லாக் காலங்களிலும்
எவ் இடத்தும், Ev Idaththum - எல்லா விடங்களிலும்
உன் தொண்டர்கட்கே, Un Thondar Kadtke - தேவரீருடைய பக்தர்கள் விஷயத்திலேயே
அன்பு உற்று இருக்கும், Anbu Utra Irukkum - பக்தனாயிருக்கும் படி
படி என்னை ஆக்கி, Padi Ennai Aakki - அடியேனைச் செய்தருளி
அங்கு, Angu - அந்த பக்தர்களிடத்தில்
ஆள் படுத்து, Aal Paduthu - (அடியேனை) ஆட்படுத்தி யருள வேணும்;
3884இராமாநுச நூற்றந்தாதி || 108
அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும் பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம் தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenchae - ஓ மனமே!
பக்தி எல்லாம் தங்கியது என்ன தழைத்து, Bhakti Ellam Thangiyathu Enna Thazhaithu - பக்தி யெல்லாம் நம்மிடத்திலே குடி கொண்ட தென்று சொல்லும்படியாக வீறு பெற்று,
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ, Pongiya Keerthi Raamanusan Adi Poo - பரந்த புகழை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள்
நம் தலைமிசையே மன்ன, Nam Thalaimisaiye Manna - நமது தலை மேலே நித்ய வாஸம் பண்ணும்படியாக,
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன், Am Kayal Pai Vayal Then Arangan - அழகிய கயல் மீன்கள் பாய்கிற கழனிகள் சூழ்ந்த தென்னரங்கத்தில் உறையும் பெருமானுடைய
அணி ஆகம் மன்னும், Ani Aagam Mannum - அழகிய திருமார்பிலே நித்ய வாஸம் பண்ணுகிறவளாய்
பங்கயம் மா மலர் பாவையை, Pangayam Maa Malar Paavai - சிறந்த தாமரைப் பூவில் பிறந்த பதுமை போன்றவளான ஸ்ரீ மஹாலக்ஷ்மியை
போற்றதும், Poatradhu - வாழ்த்துவோம்.